R5510 – கலியான விருந்து

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R5510 (page 233)

கலியான விருந்து

THE WEDDING FEAST

மத்தேயு 22:1-14

“”எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.”―லூக்கா 13:34.

இங்கு நாம் இராஜ்யம் பற்றின இன்னொரு உவமையைப்பார்க்க இருக்கின்றோம். நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ் இஸ்ரயேலுக்கான தேவனுடைய கிருபை மற்றும் அவருடைய வாக்குத்தத்தங்களானது, தேவனுடைய பரிசுத்த ஜாதியாகவும், அதிலும் விசேஷமாகக் கிறிஸ்துவினுடைய வருகையின்போது, இராஜ்யத்தில் மேசியாவுடன் உடன் சுதந்தரர்களாகிய, தெரிந்துக்கொள்ளப்பட்ட சபைக்கான எண்ணிக்கைக்கு, போதுமான எண்ணிக்கையானவர்களாக, இஸ்ரயேலர்கள் காணப்படத்தக்கதாக, அவர்களை ஆயத்தப்படுத்தும்படிக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது என்பதை இந்த நம்முடைய பாடமானது நமக்குக் காண்பித்துத் தருகின்றதாயும் இருக்கின்றது. கபடற்ற உத்தம இஸ்ரயேலர்களாக இருந்தவர்கள் சொற்பமானவர்களாய் மாத்திரமே இருந்தார்கள் என்றும், இவர்கள் இராஜ்ய வகுப்பாரின் எண்ணிக்கைக்குப் போதுமானவர்களாக இல்லை என்றும், இதன் காரணமாகவே உடன் சுதந்தரர்களுக்கான போதுமான எண்ணிக்கை நிறைவடையத்தக்கதாக, இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய அழைப்பானது, புறஜாதியார்கள் மத்தியில் மேசியாவின் இராஜ்யத்திற்கான உடன் சுதந்திரர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றது என்றும் உவமை காட்டுகின்றது.

தேவனுடைய இராஜ்யம் என்று அழைக்கப்படுகின்ற பரலோக இராஜ்யமானது, ஒரு பூமிக்குரிய இராஜ்யமாக இராமல், மாறாக பரலோக இராஜ்யமாக இருக்கப் போகின்றது; இதை ஆளுகை செய்யும் மகிமையடைந்த கிறிஸ்து, பூமிக்குரிய சுபாவமுள்ள இராஜாவாக இராமல், மாறாக திவ்வியச் சுபாவத்தில் காணப்படும் பரலோக ஜீவியாக இருப்பார். தேவனையும், பரலோக ஆளுகையையும், அடையாளப்படுத்தும் இந்த இராஜ்யமானது, பாவத்தை ஒழித்துக்கட்டும்படிக்கு, மனுஷர் மத்தியில் ஸ்தாபிக்கப்படவிருக்கின்றது. இதன் முதலாம் வேலை, “”இவ்வுலகத்தின் அதிபதியான” சாத்தானைக் கட்டுதலாக இருக்கும். பிற்பாடு, அந்தகாரத்தின் கிரியைகள் அனைத்தும் வீழ்த்தப்படும். இந்த வீழ்ச்சி (அ) கவிழ்த்துப் போடுகிற காரியமானது, முதலாவது மகா உபத்திரவக் காலத்தை ஏற்படுத்தும்; பிற்பாடு நீதியின் ஆளுகை முன்னேறி வரும்போது, மேசியாவின் இராஜ்யத்திற்கான ஆசீர்வாதங்களுக்கு, ஒவ்வொரு வடிவிலான சாபமும் இடம் விட்டுக்கொடுத்து விடும்; அதாவது எந்தச் சாபமும், எந்த மரித்தலும், எந்தக் கண்ணீரும், எந்தத் துக்கமும் இல்லாமல் போகுமளவுக்கு/போகும்வரைக்கும் இடம் விட்டுக்கொடுத்துவிடும்.

ஆனால் இந்தப் பரலோக இராஜ்யமானது ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பு, மனுஷர் மத்தியிலிருந்து ஒரு மணவாட்டி வகுப்பார் தெரிந்தெடுக்கப்பட வேண்டும் என்பது தெய்வீக ஏற்பாடு மற்றும் கட்டளையின் ஒரு பாகமாக இருக்கின்றது. இந்த மணவாட்டிகள் பரிசுத்த ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டவர்களாகவும், தேவனுடைய செய்கையாய் இருக்கின்றவர்களாகவும் காணப்படுகின்றார்கள்; மற்றும் இவர்களில் தேவன் வேதவாக்கியங்களின் மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்கள் மூலமாகவும், ஜீவியத்தின் வழிநடத்துதல்கள் மூலமாகவும் தேவன் கிரியை செய்கின்றார். இப்படியாக இவர்கள் மனதில் மறுரூபமாக்கப்பட்டு, இவர்கள் மாம்ச சுபாவத்திலிருந்து, தெய்வீகச் சுபாவத்திற்கு, கண்ணிமைக்கும் நொடிபொழுதில் மாற்றப்படும் மகிமையான உயிர்த்தெழுதலுக்கு ஆயத்தமாக்கப்படுகின்றனர். இப்படியாக இவர்கள் கர்த்தருடைய மணவாட்டி வகுப்பார் மற்றும் அவருடைய இராஜ்யத்தில் உடன் சுதந்தரர் ஆகுவதன் மூலமாக, தங்களுடைய கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பார்கள்.

உவமையைப் பொருத்திப்பார்த்தல்

இயேசுவின் நாட்களில், அவர் தம்முடைய மரணத்தின் மூலமாக ஜீவனுக்கான புதிய வழியைத் திறந்து வைத்து, அவருடைய சீஷர்கள் ஆகுவதற்கும், அவருடைய உடன் சுதந்தரர்கள் ஆகுவதற்கும், அவருடைய மணவாட்டி ஆகுவதற்கும் விரும்புகின்ற யாவருக்கும் அவர் பரிந்துப்பேசுகிறவர் ஆனது முதல் துவங்கி, இந்த இராஜ்ய வகுப்பாருடைய வளர்ச்சிக்காக, உலகம் காத்துக்கொண்டிருக்கின்றது.

நமது கர்த்தருடைய பூமிக்குரிய ஊழியத்தினுடைய காலத்தின் போதான இராஜ்யத்தின் காரியம் குறித்து இன்றைய பாடம் காண்பிக்கின்றது. “”அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் (சிலாக்கியம்) கொடுத்தார்” (யோவான் 1:11-12).

தன்னுடைய குமாரனுக்காக திருமண ஏற்பாடு பண்ணின இராஜா, பிதாவாகிய தேவனாக இருக்கின்றார். உலகத் தோற்றத்திற்கு முன்னதாகவே, கிறிஸ்துவுடன், அவருடைய இராஜ்யத்தில் உடன் சுதந்தரர்கள் என்கிறவர்கள் காணப்பட வேண்டுமென்று பிதாவாகிய தேவன் ஏற்பாடு பண்ணியுள்ளார். இராஜாவின் மகன் உலகத்திற்கு வந்து, தம்முடைய பின்னடியார்களுக்காகவும், தாம் இராஜாவாக இருக்கப் போகின்ற இராஜ்யத்திற்காகவும், ஒருவழியை உண்டு பண்ணுவது வரையிலும், இந்தக் கலியாணம் நடைபெற முடியாது.

சரியான வேளை வந்தபோது, தேவன் கலியாணத்திற்கு அழைக்கப்பட்டவர்களை அழைக்கும்படி, தம்முடைய வேலைக்காரர்களை அனுப்பி வைத்தார், ஆனால் அவர்கள் கலியாணத்திற்கு வரவில்லை. யோவான் ஸ்நானனும், அவருடைய சீஷர்களும், இராஜாவின் மகன், யூதர்களின் மத்தியில் காணப்படுகின்றார் என்ற உண்மைக்கு, யூதர்களுடைய கவனத்தை ஈர்க்கும் இந்த அழைக்கும் வேலையைச் செய்தார்கள். “”யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: …நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்” என்றார். மீண்டுமாக அவர், “”மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்புரணமாயிற்று” (யோவான் 1:26; 3:29). மணவாளனுடைய சத்தத்தைக் கேட்பதில் யோவான் ஸ்நானன் மகிழ்ச்சியடைந்தார். தன்னால் மணவாட்டி வகுப்பாரில் அங்கமாக முடியாத போதிலும், யோவான் ஸ்நானன் மணவாட்டி வகுப்பாருக்கான அழைப்பு வந்துள்ளது என்பதைத் தீர்க்கத்தரிசனமாய் முன்னுரைத்தார்.

செய்தியை அசட்டைப்பண்ணுதல்

மீண்டுமாக ஊழியக்காரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இயேசு, “”நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொளுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள்” என்று யூதர்களிடம் கூறும்படிக்குத் தம்முடைய சீஷர்களை அனுப்பி வைத்தார் (மத்தேயு 22:4).

ஆனால் இயேசு மற்றும் சீஷர்களின் செய்தி ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இல்லை. அந்நாட்களில் காணப்பட்ட மத வல்லுனர்களாகிய பரிசேயர்கள் மற்றும் வேதபாரகர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஜனங்கள் செய்தியை ஒரு பொருட்டாக எண்ணாமல், தங்கள் வழியாய்ப் போனார்கள்; அதாவது ஒருவன் தன்னுடைய வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்திற்கும், இராஜ்யம் தொடர்புடைய இந்தச் செய்தியை நாங்கள் நம்புவதில்லை என்றுகூறி போய்விட்டார்கள். சிலர் இதைக் காட்டிலும் மோசமாக நடந்துக்கொண்டனர். சிலர் வந்திட்ட ஊழியக்காரர்களைப் பிடித்து, அவமானப்படுத்திக் கொன்றுபோட்டார்கள். (நம்பிக்கைக் கொண்டிராத இந்த) விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களால் இயேசு மாத்திரம் கொல்லப்படாமல், மாறாக அவருடைய உண்மையுள்ள சீஷர்களும் கூட மோசமாய் நடத்தப்பட்டு, கொன்றுபோடப்பட்டார்கள்.

பின்னர், மற்றொரு உவமையில் பார்த்தப் பிரகாரமாக தேவன் அந்த இஸ்ரயேல் ஜனங்களிடம் கோபங்கொண்டு தம்முடைய சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைப்பாதகர்களை அழித்து, அவர்களுடைய பட்டணத்தைச் சுட்டெரித்துப் போட்டார். கி.பி. 70-இல் எருசலேமை அழித்துப்போட்ட தீத்து இராயனின் கீழான, உரோம சேனை, தேவனின் அந்தச் சேனையாக இருந்தது; ஏனெனில் [R5510 : page 234] மனிதனுடைய கோபத்தினால் தமது மகிமையை விளங்கப் பண்ணுவதற்கும் தேவனால் முடியும் மற்றும், தாம் விரும்பும் எவரையும் தம்முடைய தூதர்களாக (அ) ஊழியக்காரர்களாக (அ) வேலைக்காரர்களாக அவரால் பயன்படுத்தவும் முடியும்.

கலியாணத்திற்குப் புறஜாதிகள் அழைக்கப்பட்டனர்

இதற்கிடையில், கலியாண ஏற்பாடு பண்ணப்பட்டுள்ளது என்றும், யூத தேசத்தார் இதற்கு விசேஷமாய் அழைக்கப்பட்டாலும், இந்தக் கனத்திற்குப் பாத்திரமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தேவன் தம்முடைய ஊழியக்காரர்களாகிய அப்போஸ்தலர்களுக்கும், இவர்கள் மூலமாய் மற்றவர்களுக்கும் கூறினார். “”ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றார்” (மத்தேயு 22:9). ஆகவே ஊழியக்காரர்கள் புறபட்டு வழிகளிலே போய் தாங்கள் கண்ட யாவரையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள். இப்படியாகக் கலியாண சாலை விருந்தாளிகளால் நிறைந்தது.

வழிச்சந்துகள் என்பது, எங்குமுள்ள உலகத்தாருக்கு அடையாளமாய் இருக்கின்றது. கர்த்தருடைய ஸ்தானாதிபதிகள், இனிமேல் யூதர்களுக்கு மாத்திரம் என்று கட்டுப்பாடு விதிக்கப்படாமல், ஆட்டுக்குட்டியானவரின் பின்னடியார்கள் ஆவதற்கும், இறுதியில் மீட்பருடைய இராஜ்யத்தில் அவருடன் உடன்சுதந்தரர்களாகுவதற்குமெனத் தேவன் இப்பொழுது உலகத்திலிருந்தும், நீதியை விரும்புகின்ற ஒரு சிறு வகுப்பாரை அழைத்துக்கொண்டிருக்கின்றார் என்ற உண்மையை, சகல ஜாதியாருக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும் அறிவிக்க வேண்டியவர்களாய்க் காணப்படுகின்றனர். வழிச்சந்தியிலுள்ள அனைத்து ஜனங்களையும் இடைமறிக்கிறவர்களாக இந்த ஸ்தானாபதிகள் காணப்படாமல், மாறாக அவர்கள் கூடும் இடங்களில், சந்திக்கும் அனைவரிடமும், கலியாண விருந்துக்குக் கதவு திறந்திருக்கும் மாபெரும் சிலாக்கியத்தைப் பரிந்துரைப்பவர்களாக மாத்திரமே இருக்க வேண்டுமென்பது கவனிக்கப்பட வேண்டும்.

இப்படியாக அழைக்கப்படுபவர்களில் அனைவரும் நல்லவர்களாக இருப்பதில்லை; சிலர் பொல்லாதவர்களாகவுங்கூடக் காணப்படுவார்கள். இதைக் குறித்து அப்போஸ்தலர், “”சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துக்கொண்டார்” என்ற வார்த்தைகளில் விவரிக்கின்றார். இப்படியான விதத்திலேயே, தேவன் அந்த வகுப்பாரை உலகத்திலிருந்து தெரிந்துக்கொண்டிருக்கின்றார். அழைக்கப்படுபவர்கள் எவ்வளவு இழிவானவர்களாக இருந்தாலும் சரி, எவ்வளவு அற்பமானவர்களாக இருந்தாலும் சரி, சுபாவத்தில் எவ்வளவு கீழ்த்தரமானவர்களாக இருந்தாலும் சரி, தேவனுடைய கிருபையை ஏற்றுக்கொள்வதற்கு விருப்பம் கொள்ளும் அனைவரும், கிறிஸ்துவின் நீதியாகிய கலியாண வஸ்திரத்தின்மூடுதலினால், கலியாணத்திற்குப் பாத்திரவான்களாக ஆக்கப்படுவார்கள்.

சிலர் இயல்பாகவே எவ்வளவுதான் பாத்திரவான்களாக (அ) நல்லவர்களாக இருந்தாலும் சரி, இவர்களும் இராஜாவின் முன்னிலையில் காணப்படுவதற்கு இன்னமும் பாத்திரமற்றவர்களாகத்தான் காணப்படுகின்றனர். இந்தக் கலியாணத்தில் கலந்துக்கொள்பவர்கள் அனைவரும், கலியாண வஸ்திரம் தரித்திருக்க வேண்டும்; அதாவது கிறிஸ்துவினுடைய நீதியின் புண்ணித்தினால் மூடப்பட்டிருக்க வேண்டும். கலியாண சாலை இப்படியாக விருந்தாளிகளினால் நிறைந்தது, அதாவது இராஜா எண்ணினபடி அனைத்து இடங்களும் நிறைந்தது. இப்படியாகத் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, குறிப்பிட்ட எண்ணிக்கையென நிர்ணயிக்கப்பட்டது என்பதைக் கர்த்தர் சுட்டிக்காண்பிக்கின்றார்; இன்னுமாக நிர்ணயம் பண்ணப்பட்ட எண்ணிக்கை நிறைவடைந்த பிற்பாடு, அழைப்பு நின்றுவிடும் என்றும் கர்த்தர் சுட்டிக்காண்பிக்கின்றார்.

விருந்தாளிகள் உள்ள வந்து பார்த்தல்

யூதர்களுடைய வழக்கத்தின்படி, ஒவ்வொரு கலியாண விருந்தின் போதும், ஒவ்வொரு விருந்தாளியும் அவனுடைய சொந்த வஸ்திரங்களை மூடிக்கொள்ளத்தக்கதாக வெண்மையான கலியாண வஸ்திரங்கள் கொடுக்கப்படுவதுண்டு; சந்தேகத்திற்கு இடமின்றி இவ்வழக்கமானது, தெய்வீக ஞானத்தினால் ஏற்பாடு பண்ணப்பட்டதாகவே இருக்க வேண்டும். இப்படியாகக் கலியாணத்தில் மரியாதை தொடர்புடைய விஷயத்தில், அனைவரும் சரிசமமான நிலைமையில் காணப்பட்டனர், ஏனெனில் அனைவரும் விருந்தளிப்பவரின் விருந்தாளிகளாகக் காணப்படுகின்றனர். ஆகவே கிறிஸ்து மூலமாய் தேவன் அளித்துள்ள மாபெரும் விருந்துக்கு வரும் அனைவரும், மாம்சத்திலுள்ள தங்களுடைய ஏதேனும் சொந்த தகுதியில் வராமல், மாறாக தேவன் தங்களை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக, தங்களிடத்தில் தகுதி இல்லை என்று ஒப்புக்கொண்டு, தாங்கள் இணங்க விரும்பும் இவ்வழைப்பிற்கு, கிறிஸ்துவினுடைய புண்ணியமே தங்களைத் தகுதிப் பண்ணுகிற காரியமாய் இருக்கிறது என்று ஏற்றுக்கொண்டு, வர வேண்டியவர்களாய் இருக்கின்றனர்.

வீட்டிற்குள் பிரவேசிக்கும் போது, ஒவ்வொரு விருந்தாளிக்கும் வஸ்திரம் கொடுக்கப்படுகின்றது, மற்றும் அதை உடனடியாக விருந்தாளிகள் தரித்துக்கொள்வதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். இந்தக் கலியாண வஸ்திரம் தரிக்காமல் காணப்படுவது என்பது, விருந்தை ஏற்பாடு பண்ணியுள்ள எஜமானை அவமதிப்பதற்கான குறிப்பாக இருக்கும். இன்னுமாக கலியாணத்தில் கலியாண வஸ்திரம் தரித்திராதவன் அதைக் கழற்றிக் கொண்டவனாக இருப்பான், ஏனெனில் வஸ்திரம் இல்லாமல் எவரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. இக்காட்சியே நமக்கு உவமையில் கொடுக்கப்பட்டுள்ளது. விருந்தாளி ஒருவன் கலியாண வஸ்திரம் இல்லாமல் அங்குக் காணப்பட்டான்; அவன் தன் வஸ்திரத்தைக் கழற்றிக்கொண்டதன் மூலமாக, தனக்கு விருந்தளித்தவரை அவமதித்தவனாக இருந்தான்; வஸ்திரம் தரித்திருந்தாலே உள்ளே அனுமதிக்கப்படக்கூடிய நிபந்தனையாகிய, அந்த வஸ்திரத்தை அவன் களைந்துப் போட்டவனாகக் காணப்பட்டான்.

“”விருந்தாளிகளைப் பார்க்கும்படி இராஜா உள்ளே பிரவேசித்தபோது” என்ற வார்த்தைகளானது, விருந்திற்குச் சற்றே முன்னதாக நடந்திட்ட பார்வையிடுதலைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. உவமையில் இடம்பெறும் இராஜா, தேவனைக் குறிக்கின்றபடியால், தேவன் ஏதோ ஒரு விதத்தில், உண்மையுள்ளவர்கள் என்று தங்களைக் குறித்து அறிக்கைப் பண்ணி, அதே வேளையில் கிறிஸ்துவினுடைய மரணத்தின் புண்ணியத்தை அவமதிக்கிறவர்களை, தெய்வீக நீதியின் வெளிப்படுத்தல் மூலம் பார்ப்பார்/கவனிப்பார் என்பதாகக் காண்பிக்கப்படுகின்றது. இல்லையேல் இத்தருணத்தில் இராஜா, கிறிஸ்துவுக்கு அடையாளமாகவும் எடுத்துக்கொள்ளப்படலாம்; ஏனெனில் அவர் வரும்போது, அவர் பரம பிதாவினால் வல்லமையினாலும், இராஜரிக அதிகாரத்தினாலும் தரிப்பிக்கப்பட்டவராகக் காணப்படுவார்; இக்காரியமானது நமது கர்த்தரினால், தாலந்துகள் மற்றும் இராத்தல் பற்றின உவமைகளில் குறிப்பிடப்படுகின்றது. ஆகையால் அவருடைய இரண்டாம் வருகையின் போது, அவருடைய உண்மையுள்ள ஊழியர்களெனக் காண்பித்துக்கொண்டிருக்கும் அனைவரையும், அதாவது கலியாண விருந்தை அனுபவிக்க வாஞ்சிக்கும் அனைவரையயும், அவர் பார்வையிடுவாரென அவர்/கர்த்தர் தாமே நமக்குக் கூறியுள்ளார்.

இராஜாவுக்கு முன்னதாகக் கலியாண வஸ்திரம் இல்லாமல் காணப்பட்ட ஒரு மனுஷன், ஒரு வகுப்பாருக்கு அடையாளமாய் இருக்கிறானே ஒழிய, ஒரு தனி நபருக்கு மாத்திரம் அடையாளமாய் இருக்கின்றான் என்று நாம் புரிந்துக்கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட வகுப்பாரை நம்மால் இன்றும் காண முடிகின்றது; அதாவது இவர்கள் தங்களைக் கிறிஸ்துவின் பின்னடியார்கள் என்றும், ஆட்டுக்குட்டியானவரின் கலியாணத்துக்குக் காத்திருக்கிறார்கள் என்றும், தங்களுடைய கர்த்தரின் சந்தோஷத்திற்குள் பிரவேசிக்க எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என்றும் அறிக்கைப் பண்ணுபவர்களாக இருந்து, அதே வேளையில் பிதாவுக்கு முன்பான தங்களுக்கான தகுதியின் விஷயத்தில், தாங்கள் கிறிஸ்துவினுடைய பலியின் புண்ணியத்தை இனி ஒருபோதும் நம்புவதில்லை என்றும் நம்மிடம் தெரிவிக்கின்றவர்களாய் இருக்கின்றனர். இவர்கள் இயேசுவைத் தங்கள் இரட்சகர் இல்லை என்றும், தங்கள் மீட்பர் இல்லை என்றும் மறுதலிக்கின்றார்கள். இயேசுவைத் தங்களுடைய போதகராக மாத்திரமே இவர்கள் கருதுகின்றனர்; மற்றும் இயேசுவினுடைய போதனைகளிலும் பகுதியை மாத்திரமே ஏற்றுக்கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இவர்கள் கிறிஸ்துவின் மணவாட்டியினுடைய அங்கத்தினர் ஆகுவதற்குத் தகுதியற்றவர்களாய் இருக்கின்றார்கள் என்பது, வெளியரங்கமாய்த் தெரிகின்றது. நேர்மையுள்ளவர்களும், உண்மையுள்ளவர்களும் மாத்திரமே, அந்த மணவாட்டி வகுப்பாரின் அங்கத்தினராய் இருப்பார்கள். கிறிஸ்துவின் பலியினுடைய புண்ணியத்தை மறுதலிக்கின்றவர்கள் அனைவரும், இராஜ்யத்தின் வகுப்பார் ஆகுவதற்கு மறுக்கப்படுவார்கள் என்று உவமை காண்பிக்கின்றதாய் இருக்கின்றது. இவர்கள் தாங்கள் எப்படி, “”கலியாண வஸ்திரமில்லாமல்” உள்ளே வந்தார்கள் என்பதைச் சொல்ல முடியாமல் இருந்தார்கள், காரணம் வஸ்திரம் இல்லாமல் இவர்கள் உள்ளே வரவில்லை. ஒருவனுடைய பூரணமின்மையானது, கிறிஸ்துவின் புண்ணியமாகிய, கலியாண வஸ்திரத்தினால் முதலாவதாக மூடப்பெறாமல், கிறிஸ்துவின் மணவாட்டியாகிய சபையினுடைய ஐக்கியத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. கலியாண வஸ்திரத்தைக் கழற்றிப் போட்டவர்கள், புறம்பே தள்ளப்பட்டார்கள். “”அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்” (மத்தேயு 22:13).

புறம்பான இருள்

நம்முடைய மனங்களானது, இருண்ட யுகங்களினுடைய கற்பனைகளினால் நிரம்பியிருந்தபோது இந்த வேத வாக்கியத்தையும் (மத்தேயு 22:13), இதைப் போன்ற மற்ற வேத வாக்கியங்களையும் நாம் வேறு அர்த்தத்தில் வாசிக்கிறவர்களாய்க் காணப்பட்டிருந்தோம். கலியாண வஸ்திரம் இல்லாமல் இருந்த மனுஷன் அடையாளப்படுத்தும் வகுப்பார், நித்தியமான சித்திரவதைக்குள் தள்ளப்பட்டார்கள் என்றும், அங்கு அவர்கள் நித்திய காலமாய்ப் பாடுபடுவார்கள் என்றும் நாம் எண்ணியிருந்தோம். ஆனால் இப்பொழுது, மிகவும் கவனமாய் வேதவாக்கியங்களை ஆராய்ந்துப் பார்க்கும்போது, கலியாணத்திற்கு வந்த இந்த விருந்தாளிகள் அனைவரும், வெளி உலகமாகிய இருளினின்று, கலியாண சாலையின்/அறையின் வெளிச்சத்திற்குள்ளாக வந்தவர்களாய் இருக்கின்றனர்; ஆகவே விருந்தாளிகளில் ஒருவர் வெளிச்சத்திலிருந்து, புறம்பான இருளுக்குத் தள்ளப்படுதல் என்பது, இப்படிப்பட்டவர்களிடமிருந்து, கலியாண சாலை/அறையின் வெளிச்சம் அடையாளப்படுத்தும் அறிவையும், சந்தோஷங்களையும் எடுத்துப்போட்டு விடுகிறதாய் இருக்கும்.

புறம்பான வெளி உலகத்தைப் பொறுத்தமட்டில், அப்போஸ்தலர் யோவான் குறிப்பிடுவது போன்று, முழு உலகமும் இருளில், “”பொல்லாங்கனுக்குள்” காணப்படுகின்றது. மணவாட்டி வகுப்பார் நிறைவடையும்போது, பிற்பாடு வரும் மேசியாவின் இராஜ்யத்தினுடைய ஆசீர்வாதங்களுக்காக, உலகை ஆயத்தம் பண்ணும்படிக்கு, ஒரு மகா உபத்திரவக்காலம் வரும் என்பதையும் நாம் அறிவோம். அந்த உபத்திரவத்தின்போது, இருளில் காணப்படுபவர்களுக்கு அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும், அதாவது அவர்களுடைய தவறான அடிப்படையிலான மனித நம்பிக்கைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் கவிழ்க்கப்படுவது தொடர்புடைய விஷயத்தில் உலகம் ஏமாற்றம், அதிருப்தி, முதலானவைகளை அடையும்.

“”அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர்” (மத்தேயு 22:14) என்று கூறி, நமது கர்த்தர் உவமையை நிறைவு செய்கின்றார். இவ்வசனத்தின் அர்த்தமாக நாம் ஒரு காலத்தில், தெரிந்துக்கொள்ளப்பட்ட சிலர் மாத்திரமே எதிர்க்காலத்தில் தேவனிடமிருந்து கிருபை பெற்றவர்களாகவும், மீதமான மனுக்குலம் அனைவரும் நித்திய காலமாய்ச் சித்திரவதைப் படுத்தப்படுவார்கள் என்று அனுமானித்திருந்த விஷயம், அர்த்தமாய் இருப்பதில்லை; [R5511 : page 235] யூத தேசத்தார் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்; கபடற்ற உத்தம இஸ்ரயேலர்கள் சிலரைத் தவிர, மற்றவர்கள் அழைப்பை ஏற்றுக்கொள்ள தவறிப்போனார்கள். பதினெட்டு நூற்றாண்டுகளாக சுவிசேஷ யுகத்தினுடைய அழைப்பை ஏறக்குறைய அநேகர் கேட்கத்தக்கதாக, செய்தியானது வழிச்சந்துகளில் போய், ஒன்றன்பின் ஒன்றாக, புறஜாதியார் தேசங்களுக்குக் கடந்துப் போனது. எனினும் சிலர் மாத்திரமே அழைப்பை ஏற்றுக்கொண்டு, தெரிந்துக்கொள்ளப்பட்ட நிலைக்கு வந்திருக்கின்றனர். இந்தத் தெரிந்துக்கொள்ளப்பட்ட நிலைக்கு வந்துள்ளவர்கள் மத்தியில், சரிவர உணர்ந்துகொள்ளாத ஒரு வகுப்பார் காணப்படுவார்கள். இவர்கள் புறம்பே தள்ளப்படுவார்கள் (அ) புறக்கணிக்கப்படுவார்கள்.

“”பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்” (லூக்கா 12:32) என்று கூறி, ஆண்டவர் மீண்டும் காரியத்தின் மீது கவனத்தைக் கொண்டு வந்தார். யூதர்களையும், புறஜாதிகளையும் அடக்கியுள்ள சிறுமந்தையினர், தங்கள் உண்மையின் மூலமாகத் தேவனுடைய தெரிந்துக்கொள்ளப்பட்ட ஜனமாக, அவருடைய தெரிந்தெடுக்கப்பட்ட சபையாக, கிறிஸ்துவின் மணவாட்டியாக ஆகுவார்கள். பிற்பாடு ஆதாமின் கீழ்ப்படியாமை மற்றும் விழுகையின் காரணமாக இழந்துப் போகப்பட்ட அனைத்தையும் மற்றும் பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் அனைத்தையும், மனுக்குலம் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான மகிமையான வாய்ப்பினால், மனுக்குலத்தை ஆசீர்வதிப்பதற்கான பரமபிதாவின் பிரதிநிதிகளாக சபை, அவர்களுடைய கர்த்தருடன் காணப்படுவார்கள்.