R2757 – கிறிஸ்துவாகிய காந்தம் – நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்’

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R2757 (page 11)

கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'

CHRIST THE MAGNET—“I WILL DRAW ALL MEN.”

யோவான் 12:20-33

“”இயேசுவைக் காண விரும்புகிறோம்.”―வசனம் 21.

நமது கர்த்தர் கழுதையின் மீது ஏறி, எருசலேமுக்கு வந்த பிற்பாடு, ஆலயத்தில் தினந்தோறும் போதித்தவராய் இருந்தார்; அதாவது அவர் கைதுச் செய்து, சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதான அந்தச் சில நாட்களில், இரவில் பெத்தானியாவிற்குச் சென்றவராகவும், ஒவ்வொரு நாள் காலையிலும் ஆலயத்திற்குத் திரும்பி வருபவராகவும் காணப்பட்டார். அப்போதுதான், சில கிரேக்கர்கள் இயேசுவைச் சந்தித்துப் பேச முற்பட்டு, அந்திரேயா மற்றும் பிலிப்பு மூலமாய்த் தங்களுடைய இந்த விருப்பத்தைத் தெரியப்படுத்தினார்கள்; அந்திரேயா மற்றும் பிலிப்பு என்பவர்கள், கிரேக்க மொழி அதிகமாய்ப் பயன்படுத்தப்பட்ட (பெத்சாயிதா எனும்) பட்டணத்திலிருந்து வந்தவர்களாகவும், கிரேக்க பெயர்களைக் கொண்டிருந்தவர்களாகவும் இருந்தபடியினால், அநேகமாய்க்கிரேக்க மொழி பேசுபவர்களாய் இருந்திருக்க வேண்டும். ஆகவே இவர்கள் இருவரும் வந்திருந்த, கிரேக்கர்களின் வாயாகக் காணப்பட்டு, இவர்களுடைய விருப்பத்தைக் கர்த்தருக்குத் தெரிவித்தவர்களாய் இருந்தனர். இப்படியான வேண்டுகோள் விடுக்கப்பட்டதற்கான காரணம், பிறப்பால் யூதர்களாய் இருப்பவர்கள் மாத்திரமே பிரவேசிக்க முடிந்த, ஆலயத்தின் குறிப்பிட்ட பாகங்களில் நமது கர்த்தர் காணப்பட்டார்; மேலும் இந்தக் கிரேக்கர்களாகிய யூதமார்க்கத்தமைந்தவர்கள், புறஜாதியார்களுக்கான பிரகாரப் பகுதியை அல்லாமல் மற்றபடி, பரிசுத்த ஸ்தலத்தை அணுகுவதற்கு அனுமதிக்கப்படாமல் காணப்பட்டனர். ஆகையால் தாங்கள் இயேசுவைச் சந்தித்துப் பேசத்தக்கதாக, இயேசு வெளியே வர வேண்டும் என்ற விதத்தில், இந்தக் கிரேக்கர்கள் வேண்டிக்கொண்டவர்களாய் இருந்தார்கள்.

இவர்கள் கர்த்தரைச் சந்தித்ததற்கான நோக்கம் என்ன என்பது பற்றி நமக்குச் சொல்லப்படவில்லை; இச்சம்பவத்தின் போது, நமது கர்த்தர் பேசினதாகப் பதிவு பண்ணப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகள், கிரேக்கர்களிடம் பேசப்பட்டதாகவும் நாம் எடுத்துக்கொள்வதில்லை, மாறாக சில விஷயங்கள் பதிவுகளில் பதிவு செய்யப்பட்டவில்லை என்றே நாம் எண்ணுகின்றோம். சந்தித்துப் பேச வேண்டும் என்ற விண்ணப்பத்திற்குக் கர்த்தர் இணங்கினார் என்பதில் ஐயமில்லை, ஆயினும் இவர்களுடைய சம்பாஷணையானது சபைக்கு அவசியமாய் இராதபடியினால், அவைகள் பதிவு செய்யப்படவில்லை. முற்காலத்து சபை வரலாற்று ஆசிரியரான இசுபியஸ் (Eusebius) அவர்கள் குறிப்பிட்டுள்ள காரியங்களை இங்குக் குறிப்பிடுவது தவறாய் இராது என்று நாம் எண்ணுகின்றோம்; இவர் குறிப்பிட்டிருப்பதாவது . . . சீரியாவின் எடிசாவின் (Edessa) இராஜா, இயேசு தன்னோடு வந்து வசிக்கவும், இயேசுவுக்கு இராஜரிக வரவேற்புக் கொடுக்கப்படும் என வாக்களித்தும், ஒரு தூதுவரை இயேசுவிடம் அனுப்பி வைத்தார் என்பதுமாகும். இந்தப் பதிவு உண்மையாய் இருந்தாலும், நமக்கு ஆச்சரியம் ஏற்படுவதில்லை, மாறாக இப்படியான தனிப்பட்ட முறையிலான கோரிக்கைகளை கர்த்தர் மறுத்துவிடுவார் என்பதை நாம் அறிவோம், ஏனெனில் சீஷர்களை அனுப்பிவைக்கையில், இயேசு தெளிவாக “”காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்லவென்றார்” (மத்தேயு 15:24).

தேவன் பூமியின் குடிகள் அனைத்திற்கும் ஆசீர்வாதங்கள் வைத்துள்ளார், ஆயினும் அதை வழங்குவதற்கான காலம் இன்னும் வரவில்லை மற்றும் அதை நிறைவேற்றுவதற்கு இது வழியும் அல்ல. அனைத்தும் தெய்வீக ஒழுங்கில், தெய்வீகத் திட்டத்திற்கு ஏற்ப செய்யப்பட வேண்டும்; [R2758 : page 11] உலகத்தின் மீது பொதுவான ஆசீர்வாதங்கள் வருவதற்கு முன்னதாக, தெய்வீகத் திட்டத்தின்படி, ஆபிரகாமின் சந்ததியினுடைய தேர்ந்தெடுப்பு நடைப்பெற வேண்டும்; மற்றும் தெய்வீக ஏற்பாட்டின்படி ஆபிரகாமினுடைய இந்தச் சந்ததியில் அங்கத்தினர் ஆகுவதற்கான அழைப்பு, முதலாவது யூதர்களுக்கே கொடுக்கப்பட வேண்டியுள்ளது. (கலாத்தியர் 3:16-29).

கிரேக்கர்களுடனான உரையாடல் முடிவடைந்த பிற்பாடு, இறுதியில் ஒருவழியாக உலகமானது தங்களுடைய ஆண்டவரை, அவருக்கே உரிய உண்மையான வெளிச்சத்தில் அடையாளம் கண்டுகொள்ளத்தக்கதாக விழித்தெழுந்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதினாலும், இன்னும் சீக்கிரத்திலேயே, உலகம் அவரை மேசியாவென உயர்வான ஸ்தானத்திற்கு உயர்த்தும் என்ற எதிர்ப்பார்ப்பினாலும் அடைந்த பரவசத்தினால், அப்போஸ்தலர்களுடைய இருதயங்கள் வேகமாய் அடித்துக் கொண்டிருக்கும் போதும், அப்போஸ்தலர்கள் தாங்களும் இராஜ்யத்தில் அவருடன்கூட உடன் சுதந்தரர்களாக ஆகப்போகிறார்கள் என்ற நம்பிக்கையில் உயர பறந்து கொண்டிருக்கும் போதும், இயேசு இந்தப் பாடத்தில் பார்க்கப்படும் வசனங்களைக் கூறியுள்ளார். இது சீக்கிரத்தில் தாம் படப்போகின்ற பாடுகளே, எதிர்க்கால மகிமைக்கான அஸ்திபாரமாக இருக்கப்போகின்றது என்பதை அவர்களுக்கு கர்த்தர் வெளிப்படுத்துவதற்கான நல்லதொரு வாய்ப்பாய் இருந்தது. தம்முடைய மரணம் தொடர்பாக அவர்களிடம் தம்மால் ஏற்கெனவே சொல்லப்பட்டக் காரியங்களை அவர்கள் உணர்ந்துக்கொள்ளும்போது, அந்தத் தம்முடைய உண்மையுள்ளவர்களாகிய சிலருக்கு அது எத்தகைய கசப்பான ஏமாற்றமாகவும், இருதயத்திற்கு வேதனையளிக்கின்றதாகவும் இருக்குமெனக் கர்த்தர் நன்கு அறிந்திருந்தார். அவர்களுக்குப் பிற்காலத்தில் உதவிகரமாக இருக்கிறதும், வேறுவழியில் இல்லாமல், விசுவாச கண்களினால் மாத்திரமே பாடுகளின் ஊடாக, முன் தீர்மானித்து வைக்கப்பட்ட மகிமையை, அவர்களைக் காணச்செய்கிறதுமான சில யோசனைகளைக் கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்தார்.

இதை மனதில் கொண்டவராகத்தான் நமது கர்த்தர் “”மனுஷகுமாரன் மகிமைப்படும் படியான வேளை வந்தது” என்று கூறியிருந்திருக்க வேண்டுமென நாம் நம்புகின்றோம் (யோவான் 12:23). இயேசு தம்முடைய பூமிக்குரிய உயர்த்தப்படுதலைத்தான் பேசுவதாக, சீஷர்கள் முதலாவதாக எடுத்துக்கொண்டார்கள்; ஆனால் தம்முடைய மகிமைப்படுதல் சமீபமாய் இருப்பினும், அதற்கு முன்பு மரணம் வரையிலும் தாம் பாடுப்பட வேண்டும் என்ற உண்மையினிடத்திற்கு அவர்களது கவனத்தை இயேசு உடனடியாகக் கொண்டு வந்தார். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தபோது, அவர் அழியாமையிலும், வல்லமையிலும், மகிமையான ஆவிக்குரிய சரீரத்தில் எழுப்பப்பட்டபோது, “”உயிர்ப்பிக்கிற ஆவியான” போதுதான் அவருடைய மகிமைப்படுதல் ஆரம்பமானது (1 கொரிந்தியர் 15:42-45). இந்த மகிமைப்படுதலானது, தம்முடைய விலையேறப்பெற்ற சொந்த இரத்தத்தினால் மீட்டுக்கொள்ளப்பட்டதுமான உலகத்தின் மீது, நியமிக்கப்பட்ட காலத்தில் அவர் இராஜாவாய் இருப்பதற்கான மகா வல்லமையையும், ஆளுகையையும் எடுப்பது வரையிலும், தெய்வீக வல்லமையினுடைய வலது பாரிசத்தில் காத்திருக்கத்தக்கதாகவும், நம்பொருட்டாகவும், அவர் பிதாவின் முன் சென்ற போது, இன்னும் அதிகமாகுகின்றது.

வேளை வந்தது!

வேதாகமத்தில் ஒருநாள் என்பது 24 மணி நேரத்தைக் குறிக்காதது போன்று, “”வேளை வந்தது” எனும் வார்த்தைகளானது 60 நிமிடங்களைக் குறிப்பதாக நாம் புரிந்துக்கொள்ள வேண்டாம், மாறாக ஒரு குறுகிய காலப்பகுதி என்று எடுத்துக்கொள்ளப்படலாம்; உதாரணத்திற்கு “”நோவாவின் நாட்கள்,” “”மோசேயின் நாட்கள்,” “”இயேசுவின் நாட்கள்” முதலானவைகள் ஆகும். ஆகவே இயேசுவின் நாட்கள் என்பதுடன் தொடர்புடைய சம்பவங்கள், அந்த வேளையில் அல்லது கொஞ்சக் காலத்தில் சம்பவிப்பவைகளாக இருந்தன.

இவ்வாறாக தாம் மகிமைப்பட ஆரம்பிக்கப் போவது என்பது மிகவும் தொலைவில் இல்லை என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தின பிற்பாடு, தம்முடைய மரணத்தின் அவசியத்தை மனதில் பதிய வைக்க நமது கர்த்தர் முற்பட்டார்; இதைப் பதிய வைக்கும் வண்ணமாக . . . “”மெய்யாகவே, மெய்யாகவே” என்று கர்த்தர் கூறினார்; அதாவது “”கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால், தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுப்பதைப் போலவே, தெய்வீக ஏற்பாட்டின்படி, என்னுடைய மரணத்தின் மூலமாகவே, என் மகிமைப்படுதல் வர வேண்டுமென்று மெய்யாகவே, மெய்யாகவே, உறுதியாய் உங்களுக்குக் கூறுகின்றேன்” என்ற விதத்தில் இயேசு கூறினார். ஒருவேளை மரிக்க வேண்டாம் என்று கர்த்தர் முடிவெடுத்திருந்தால், அவர் தனித்து (உயிரோடே) இருக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருப்பாரே ஒழிய, நம் பொருட்டாக மரிக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருந்திருக்க மாட்டார். கர்த்தர் ஒருவேளை இப்படியாகச் செய்திருப்பாரானால், நாம் இன்னமும் மீட்கப்படாதவர்களாகவே காணப்படுவோம், மற்றும் அவராலும் பலனைக் கொடுத்திருந்திருக்க முடியாது. ஆனால் அவர் தம்முடைய ஜீவனை அர்ப்பணம் [R2758 : page 12] பண்ணியிருந்தார்; அவர் பிதாவின் சித்தத்திற்கு உடன்பட்டவராக, ஆதாம் மற்றும் அவருடைய சந்ததிக்காகத் தம்மைப் பலிச் செலுத்திட விரும்பி ஈடுபட்டவராகக் காணப்பட்டார்; ஆகையால்தான், இப்பொழுது அவர் தம்முடைய ஜீவனை விரும்பினால், அதை தாம் இழக்கக்கூடும் என்றும், அவர் தம்மைக் காத்துக்கொள்ளத்தக்கதாக நாடுவதற்குப் பதிலாக, மரணம் வரையிலான கீழ்ப்படிதலுக்கான பலனாக பிதா தமக்கு வாக்களித்துள்ள எதிர்க்கால ஜீவனுக்கு முன்பாக, தற்கால ஜீவியத்தை தாம் வெறுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இப்படியாக நாம் புரிந்துக்கொள்ளும்போது, 25-ஆம் வசனம் என்பது நமது கர்த்தருக்கு மாத்திரமே பொருந்தக்கூடிய ஒன்றே ஒழிய, அவருடைய பின்னடியார்களுக்கு அல்ல ஏனெனில் சீஷர்கள் இழந்துப் போகத்தக்கதாக எந்த ஜீவனையும் பெற்றிருக்கவில்லை. அவர்களும் சரி, முழு உலகமும் சரி மரித்துப்போய் இருந்தது மற்றும் தகப்பனாகிய ஆதாமின் மீறுதலினால், மரணத் தீர்ப்பின் கீழ்க்காணப்பட்டது. நமது கர்த்தர் மாத்திரமே ஜீவன் கொண்டிருந்தார், மற்றும் அதை நித்திய ஜீவ காலமாய்க் காத்துக்கொள்ளத்தக்கதாக அதைக் கொடுத்து விட்டு, மற்றொன்றை மாற்றிக்கொள்வதற்கு அல்லது அதை ஒப்புக்கொடுப்பதற்கான உரிமையைக் கர்த்தர் மாத்திரமே கொண்டிருந்தார். இப்படிப்பட்டதான சிலாக்கியங்கள், இயேசு தம்முடைய ஜீவனை அநேகருக்கான ஈடுபலியாகக் கொடுப்பது வரையிலும், அவருடைய சீஷர்களுக்குக் கடந்து வருவதில்லை. ஈடுபலி செலுத்தப்பட்ட பிற்பாடும், அது பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிற்பாடும், (தங்கள் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்ட விசுவாசிகளாகிய) மீட்கப்பட்டவர்கள், கர்த்தருடைய பலிபீடத்தில் அர்ப்பணிப்பதற்கும், மற்றும் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதன் மூலமாக பரலோக ஜீவனுக்காக மாற்றிக்கொடுப்பதற்கும் உரிய, ஜீவனுக்கான உரிமைக்கொண்டவர்களாகக் கருதப்படுவார்கள்.

ஆகையால் தான் 26-ஆம் வசனத்தை கர்த்தர் அவருடைய பின்னடியார்களுக்குக் கூறுகின்றார்; அதாவது அவருக்கு ஊழியஞ்செய்ய விரும்புகின்றவர்களும், அவரோடு காணப்பட விரும்புகின்றவர்களும், அவர் முன்னோடியாய் ஏற்கெனவே கடந்துச் சென்றுக்கொண்டிருக்கும் இந்த அனுபவத்தில் அவரை, அவர்கள் பின் தொடரும்படியாகக் கூறுகின்றார்; அதாவது அர்ப்பணம்பண்ணி, வாக்களிக்கப்பட்டுள்ள பரம மகிமை மற்றும் ஆவியின் ஜீவனோடு, தற்கால ஜீவியத்தை ஒப்பிட்டு, தற்கால ஜீவியத்தை வெறுத்திட வேண்டும்.

இரட்சிக்கப்படுபவர்களில் பல வகுப்பார் காணப்படுகின்றனர், அதாவது ஜெயங்கொள்பவர்கள், திரள்கூட்டத்தினர் மற்றும் சீர்ப்பொருத்தப்படும் மனுக்குலத்தார் எனும் வகுப்பார்கள் காணப்படுகின்றனர் என்பதை கிறிஸ்தவ ஜனங்கள் புரிந்துக்கொள்ள தவறின காரியமானது, அவர்களுக்கு மிகவும் அனுகூலமற்றதாய்க் காணப்படுகின்றது. வாக்களிக்கப்பட்ட எதிர்க்கால ஜீவியத்திற்கு முன்பாக, தற்கால ஜீவியத்தை வெறுத்து, பூமிக்குரிய விஷயங்களில் சுயத்தை வெறுத்து, பலிச் செலுத்துவதன் மூலமாக, இயேசுவின் அடிச்சுவடுகளில் நடப்பதற்கு நாடுபவர்களில் குறுகிய மனமுடைய சிலர், இப்படியாய் இயேசுவின் அடிச்சுவட்டைப் பின்பற்றுகிறவர்கள் மாத்திரமே கர்த்தருடன் காணப்பட முடியும் என்றும், பிதாவினால் கனப்படுத்தப்பட முடியும் (வேறு எவரும் கர்த்தருடன் காணப்பட முடியாது) என்றுமுள்ள எண்ணத்தினால், தங்களுக்கான சந்தோஷத்தையும், ஆறுதலையும், சமாதானத்தையும் இழந்துப்போயிருக்கின்றனர், ஏனெனில் இப்படியாக அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றுகிறவர்கள் சிறு மந்தையினராக (சொற்பமானவர்களாக) இருப்பார்கள் என்று இவர்கள் உணர்ந்துள்ளனர். தெய்வீகத் திட்டத்தைப் பற்றின அறியாமையின் காரணமாக, சிறுமந்தையினரைத் தவிர, மற்றவர்கள் அனைவருக்கும் நித்திய காலமான சித்திரவதைக் கொடுப்பதே தேவனுடைய திட்டமாக இருக்கின்றது என்று இவர்கள் நம்புவதினால், இவர்கள் தேவனை எப்படிப்பட்டவர் என்று புரிந்திருக்கின்றார்களோ, அவ்வாறாகவே இவர்களும் இருக்க முற்பட்டு, இருதயம் கடினப்பட்டுப் போகின்றார்கள். இன்னொரு பக்கத்திலோ, சில பரந்த மனமுடையவர்கள், இயேசுவோடு காணப்படுவதற்கும், தெய்வீக மகிமையை அடைவதற்குமான பாதை மிகவும் இடுக்கமான பாதை என்பதை நம்புவதற்கு மறுத்து, தங்களுடைய நண்பர்களையும், தங்களுடைய குடும்பங்களையும், தங்களுடைய அயலார்களையும் மற்றும் கூடுமானமட்டும் அதிக எண்ணிக்கையிலான புறமதத்தாரையும் உள்ளே கொண்டு வரத்தக்கதாக, இடுக்கமான பாதையை அதிகமதிகமாக அகலமாக்க முயற்சிக்கின்றனர்; இவ்வாறாக இவர்கள் தங்களையும் அறியாமல், படிப்படியாக, சீஷத்துவத்திற்கான கோட்பாடுகளை மற்றவர்களுக்கு மாத்திரமல்லாமல், தங்களுக்கும் குறைத்துக் காட்டுகின்றவர்களாய் இருக்கின்றனர்; இவர்கள் வெளியரங்கமான சடங்காச்சாரங்களிலும், அனுசரிப்புகளிலும், வெற்றுரைகளிலும், நன்னடத்தைகளிலும் அதிகமதிகமாய்த் திருப்திகொள்பவர்களாய் ஆகிப்போய்விடுவார்கள்; மற்றுமாக கர்த்தரோடு காணப்படவும், பிதாவினால் கனப்படுத்தப்படவும், சிலுவையை எடுத்துக்கொண்டு, அவருடைய அடிச்சுவடுகளைப் பின்தொடர வேண்டும் என நமது கர்த்தருடைய வார்த்தைகளுக்கு இசைவாய்த் தாங்கள் முன்பு கொண்டிருந்த கருத்துச் சரியானதல்ல என்றும் எண்ணும் நிலைக்கு வந்திடுவார்கள்.

தெய்வீக வார்த்தைகள் மற்றும் திட்டத்தின் மீது இப்பொழுது பிரகாசித்துக் கொண்டிருக்கின்றதான இந்த அறுவடை காலத்தின் வெளிச்சமானது, கர்த்தருடன் அவருடைய மகிமையில் உடன் சுதந்தரத்தை அடைவதற்காகத் தெரிந்துக்கொள்ளப்பட்ட சபைக்கான அழைப்பின் மேன்மையை மாத்திரம் நமக்குத் தெளிவுப்படுத்தாது; இன்னுமாக எதிர்க்காலத்தில் அந்த மகிமையில் பங்கடையப் போகும் அனைவரும், தற்கால ஜீவியத்தில் அவரோடு கூடப் பாடுபட வேண்டும் என்பதையும், பாவத்திற்கும், சுயத்திற்கும், உலகத்தாருக்கும் சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பதையும், கிறிஸ்து இயேசுவுக்கான புதிய ஜீவனுக்குள்ளாக எழுப்பப்பட்டவர்களாக இப்போது கருதப்பட்டு, பிற்பாடு உண்மையுள்ளவர்களாய்க் காணப்படும் பட்சத்தில், நிஜமாய், முதலாம் உயிர்த்தெழுதலில் எழுப்பப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதையும், நமக்குத் தெளிவாய்க் காட்டுகின்றது. இப்பொழுது அழைக்கப்பட்டவர்களும், குமாரனுடன் உடன் பலிச்செலுத்துபவர்களாக, குமாரனுடன் அவரது மகிமையில் உடன் சுதந்தரர்களாக இருக்கும்படிக்கு, பிதா நோக்கம் கொண்டு இப்பொழுது தெரிந்துக்கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பவர்களும், மனித குடும்பத்தில் ஒரு சிறிய கூட்டத்தினர் என்றும், இந்தப் பரம அழைப்பினைப் பெற்றுக்கொள்ளாத மற்றவர்கள், மகிமையடைந்த இயேசு மற்றும் அவருடைய மகிமையடைந்த சபையாகிய மணவாட்டியின் கீழ், ஆயிர வருட இராஜ்யத்தில், ஏற்றவேளையில் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்றும், இந்த அறுவடை வெளிச்சமானது நமக்குத் தெளிவுப்படுத்துகின்றது.

இந்த வெளிச்சத்தைப் பெற்றுக்கொண்டு, இதை உணர்ந்துகொள்பவர்கள், மற்றவர்களுக்கு வரும் சோர்விலிருந்து தப்புவிக்கப்படுவார்கள். தாங்கள் இப்படியான ஓர் உயர் ஸ்தானத்திற்கென்று அழைக்கப்பட்டிருக்கின்றதான பாதை, மிகவும் இடுக்கமான பாதையாக இருக்கின்றது என்பதிலும், கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டவர்களை மாத்திரமே இப்பாதைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதிலும், தேவனைப் பிரியப்படுத்துவதற்கும், அவருக்கு ஊழியஞ்செய்ய விரும்புபவர்கள் மாத்திரமே இப்பாதைக்குள் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பதிலும், இறுதியில் இக்காலத்திற்குரிய அனுபவங்கள் ஊடாக உண்மையுள்ளவர்களாய்க்கடந்து சென்று, இருதயத்திலும், குணலட்சணத்திலும், தேவனுக்குப் பிரியமான குமாரனுடைய சாயலுக்கு ஒத்த சாயலைக் கொண்டிருப்பவர்கள் மாத்திரமே மகிமையில் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதிலும் விளங்கும் நியாயத்தை இவர்களால் காணமுடிகின்றது. (ரோமர் 8:29)

“”என் ஆத்துமா கலங்குகிறது” . . . என்னுடைய உணர்வுகள் கலங்குகிறது; நான் அமைதியற்று இருக்கிறேன். நான் என்ன சொல்லுவேன். பிதாவே இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ விடுவியும் என்று கேட்பதற்குப் பதிலாக, நான் இதற்காகவே, விரும்பிச் சகித்துக்கொள்ளத்தக்கதாகவே இந்த வேளைக்குள் வந்திருக்கிறேன் என்று நினைவுகூரவே செய்கின்றேன்; பிதாவினுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து என்னுடைய ஜீவனை ஒப்புக்கொடுப்பேன் என்பதாக நான் பண்ணின ஒப்பந்தத்தை வீணாக்கிப் போடாத விதத்தில், ஏதோ ஒருவகையான விடுவித்தலை என்னால் பிதாவிடம் கேட்க முடியும். நான் குற்றவாளியாக, அதாவது என்னுடைய பரம பிதாவுக்கு எதிராக தேவதூஷணம் கூறின மோசமான குற்றவாளியாக நான் அவமானப்படுத்தப்பட்டு, தீர்ப்பளிக்கப்படும் அனுபவங்களிலிருந்து என்னைத் தப்புவிக்கத்தக்கதாக, என் மீது வேறு ஏதோ ஒரு பெரும் துன்பத்தை விழப்பண்ணி, அதன் மூலம் என் மரணம் சம்பவிக்கத்தக்கதாக, என்னால் பிதாவிடம் கேட்க முடியும். மேலும் பிதாவுக்கு எல்லா விஷயங்களிலும் உண்மையையே காண்பித்து வந்த எனக்கு, இத்தகைய சலுகைகளைப் பிதா காண்பிப்பது எனக்கு நியாயமற்றதாகவும் தெரியவில்லை. எனினும் நான் இந்தச் சலுகைகளைக் [R2758 : page 13] கூடக் கேட்பதில்லை. மாறாக நான் என்னுடைய சித்தத்தை முற்றிலுமாகப் பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, என்னுடைய உடன்படிக்கையினுடைய ஆவி மற்றும் எழுத்துகளின் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் விடுபடாத அளவுக்கு அனைத்தையும் செய்வேன். பிதாவின் சித்தம் அனைத்தும் நிறைவேறுவதாக் அதுவே ஞானமுள்ளதும் சிறந்ததுமாய் இருக்கின்றது; ஒருவேளை ஞானமற்றதாகவும், சிறப்பற்றதாகவும் இருக்குமானால், அது பிதாவினுடைய திட்டமாக இருக்காது. பிதாவுக்கு என்னுடைய முழுமையான அர்ப்பணிப்பையும், அவருடைய சித்தத்திற்கான என்னுடைய முற்றும் முழுமையான கீழ்ப்படிதலையும் வெளிப்படுத்துவதற்காக, நிரூபிப்பதற்காகவே நான் இந்த வேளைக்குள் வந்திருக்கின்றேன். பிதாவே நீர் தொடரும்! நான் எதை இழக்க வேண்டியிருப்பினும், பிதாவே உம்முடைய வழியில், உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும்! என்ற விதத்தில் இயேசு கூறினார்.

பின்பு ஒரு சத்தம் உண்டானது; தேவனுடைய சத்தத்தின் விஷயத்தில் எப்போதும் காணப்படுவது போன்று, சிலர் அதைப் புரிந்துக்கொண்டார்கள், ஆனால் மற்றவர்களோ தவறாய்ப் புரிந்துக்கொண்டனர். உலகத்தார் எந்தச் செய்தியையும் கேட்பதில்லை; விசுவாசிகள் அரைக்குறையாய்ச் செய்தியைக் கேட்கின்றனர், ஆனால் பிதாவுக்குப் பூரணமான இசைவுடன் காணப்படும் ஜெநிப்பிக்கப்பட்ட புத்திரர்கள் மாத்திரமே, செய்தியை முழுமையாய்க் கேட்கவும் [R2759 : page 13] செய்கின்றனர் மற்றும் புரிந்துக்கொள்ளவும் செய்கின்றனர். பிதாவிடம் இருந்து வந்த இந்தச் செய்தியினால், நமது கர்த்தர் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை; எனினும் இச்செய்தியானது தமக்கென்று விசேஷமாய் அனுப்பப்படாமல், மாறாக கர்த்தருடைய போதனைகளுக்குத் தேவனும் உறுதியளிக்கின்றார் என்பதைச் சீஷர்கள் கவனித்து, நன்மையடைவதற்கே அளிக்கப்பட்டதாக, கர்த்தர் நமக்கு உறுதியளிக்கின்றார். இப்படியாகக் காதுகளுக்குக் கேட்குமளவில், தேவன் இன்று, தம்முடைய ஜனங்களிடம் பேசுவதில்லை. எனினும் தேவன் தம்முடைய வார்த்தைகள் மூலமாகவும், தம்முடைய வழிநடத்துதல்கள் மூலமாகவும், அதே அழுத்தத்துடன்தான், இப்பொழுதும் நம்மிடம் பேசுபவராக இருக்கின்றார். அன்றுபோல், இன்றும், சிலரே மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாய்க் கேட்டு உணர்ந்து/ஏற்றுக்கொள்ளுபவர்களாகக் காணப்படுகின்றனர். தேவனுடைய வார்த்தைகளைத் தங்கள் கைகளில் பெற்றிருக்கும் சிலர், அதை வெறுமனே இன்னுமொரு புத்தகமாக மாத்திரமே காண்கின்றனர் மற்றும் தேவனுடைய ஜனங்களுடைய காரியங்களிலான அவருடைய வழிநடத்துதல்களையும் உணர்ந்துகொள்ள தவறிவிடுகின்றனர். இன்னும் சிலர் கர்த்தருடைய வார்த்தைகளில் ஒரு செய்தி இருக்கின்றது, அதுவும் நல்ல செய்தியாக இருக்கின்றது என்று கண்டு, வேதாகமத்திற்குப் பயபக்திக் காண்பிக்கின்றனர், மற்றும் அவருடைய வழிநடத்துதலில் தெய்வீகப் பராமரிப்பையும், கிறிஸ்துவின் சரீரம் தொடர்புடைய ஏற்பாடுகளையும் கொஞ்சம் காண்கின்றனர். ஆனால் 18 நூற்றாண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட தலை போன்று, இன்று ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்ட குமாரர்களாகிய கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்கள் மாத்திரமே, பிதாவின் வார்த்தைகளைக் கேட்டு, தெளிவுடனும், புரிந்துக்கொள்ளுதலுடனும் காணப்படுகின்றனர். இவர்கள் தெய்வீக வழிநடத்துதல்களைக் கண்டு, அதில் களிக்கூரவும் உதவப்படுகின்றனர் மற்றும் இவர்களால் “”அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்” என்ற காரியங்களை உணர்ந்துக்கொள்ளவும் உதவப்படுகின்றனர் மற்றும் இவர்கள் அந்த அழைப்பிற்கு இணங்கி, தங்களுடைய அழைப்பையும், தெரிந்துக்கொள்ளுதலையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்கு நாடுகின்றவர்களாய்க் காணப்படுகின்றனர் (ரோமர் 8:24).

இவ்வுலகத்தின் அதிபதியானவன்

“”இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்” (யோவான் 12:31) என்று இயேசு கூறினபோது, அவர் முன்பு, “”வேளை வந்துள்ளது” என்று எந்த அர்த்தத்தில் குறிப்பிட்டாரோ, அப்படியாகவே, “”இப்பொழுது” என்ற வார்த்தையையும் இங்குப் பயன்படுத்தியுள்ளார். 31- ஆம் வசனம் நிறைவேறுவதற்கு இன்னும், இப்பொழுது கொஞ்சக்காலம் காணப்படுகின்றது. இவ்வுலகத்திற்கான நியாயத்தீர்ப்பானது, தராசில் காணப்படுகிறதாகவும், சீக்கிரத்தில் தீர்மானிக்கப்படப் போகிறதாகவும் இருந்தது. முதலாவது பரீட்சை ஏதேனில் நடைப்பெற்றது; தகப்பனாகிய ஆதாமே பரீட்சையில் காணப்பட்டார்; மேலும் அவருடைய அரைக்குள் காணப்பட்ட முழு மனுக்குலமும் ஒரு விதத்தில் பரீட்சையில் காணப்பட்டு, ஆதாமோடு கூடத் தராசில் காணப்பட்டனர். அந்தப் பரீட்சையானது, ஆதாமுக்கும், அவருடைய சந்ததியாருக்கும் அழிவாக முடிவடைந்தது என்பதை நாம் அறிவோம். “”இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று” (ரோமர் 5:12). உலகத்திற்கான அந்த (பரீட்சை மற்றும் தீர்ப்பு) நியாயத்தீர்ப்பானது மரணத்திற்கு ஏதுவானதாய் அமைந்தது, மற்றும் ஆதாம் மூலமாய் வந்த மரணமானது, நமது கர்த்தர் இவ்வார்த்தைகளைப் பேசும் வரைக்கும், 4161 வருடங்கள் ஆளுகை செய்ததாக இருக்கின்றது. ஆனால் இப்போதோ தெய்வீக ஏற்பாட்டின் கீழ், தேவனுடைய கிருபையின் கீழ், தேவனால் அங்கீகரிக்கப்படத்தக்கதாகவும் மற்றும் ஆதாமுக்கும், அவர் சந்ததியாருக்கும் ஜீவனை ஈடுபலியாக ஒப்புக்கொடுக்க விருப்பம் கொண்டுள்ள ஒருவர் ஈடுபலியாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இவர் இப்பொழுது பரீட்சையில் காணப்படுகின்றார், மற்றும் முழு உலகத்தின் வாழ்க்கை முடிவு/விதியானது தராசில் காணப்படுகிறதாகவும், இவருடைய வெற்றியைச் சார்ந்துள்ளதாகவும் காணப்படுகின்றது. ஆகவேதான் நமது கர்த்தர், இப்போது, உலகத்தின் மசளைளை அல்லது பரீட்சையானது, அதன் உச்சக்கட்டத்தில் காணப்பட்டது என்றும், பிதாவின் சித்தத்திற்குத் தாம் உண்மையாய் இருப்பதற்கும், அந்தச் சித்தத்திற்குக் கீழ்ப்படியும் வண்ணமாக தற்கால ஜீவியத்தை வெறுப்பதற்குமான தம்முடைய தீர்மானமே, உலகத்திற்குச் சாதகமான பரீட்சையைத் தீர்மானிக்கக் கூடியதாய் இருக்கின்றது என்று கூறினார்; ஏனெனில் ஆதாமின் மூலமாய் உலகத்திற்கு மரணத்திற்கு ஏதுவான தீர்ப்பு வந்ததுபோல, கிறிஸ்துவின் மூலமாய் உலகத்திற்கு, ஜீவனுக்கு ஏதுவான நீதிமானாக்கப்படுதல் உண்டாகிறது என்று அப்போஸ்தலர் தெரிவித்துள்ளார்; தெய்வீகப் பிரமாணத்தைப் பொறுத்தமட்டில், இயேசு முழு உலகத்திற்கான முழுமையான தண்டனையை ஏற்றுக்கொண்டார்; ஆகையால் மனுக்குலத்தின் உலகத்தை விழிக்கப்பண்ணுவதன் மூலமாக, மனுக்குலத்தைக் கல்லறையினின்று மீட்பதற்கு மாத்திரமல்லாமல், கிருபையினை ஏற்றுக்கொள்பவர்கள் எத்தனை பேரோ, அத்தனை பேர்களையும் ஆயிர வருட யுகத்தின் போதும், அதின் முடிவிலும், பாவம் மற்றும் மரணத்திலிருந்து பூரணத்திற்கும், தேவனுடனான இசைவிற்கும் கொண்டு வருவதன் மூலமாக, முற்றும் முழுமையாய் மீட்பதற்குமான உரிமையையும், வாய்ப்பையும் உடையவராக இயேசு காணப்படுவார். (ரோமர் 5:18-19).

“”இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்” என்ற கர்த்தருடைய வார்த்தைகளும், மேற்கூறிய காரியங்களுக்கு இசைவாக இருக்கின்றது. “”எனக்குப் போய்க்கொண்டிருக்கும் பரீட்சையானது, மரணத்துக்கு ஏதுவான மனுக்குலத்தின் மீதான தெய்வீகத் தீர்ப்பை இரத்துச்செய்துவிடுவது மாத்திரமல்லாமல், அது இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தானுடைய கரங்களிலுள்ள, தற்கால தீமையின் ஆளுகையையும் கவிழ்த்துப் போடுகிறதாகவும் காணப்படும். அவன் புறம்பே தள்ளப்படுவான்; அவன் என்னுடைய ஆயிர வருட இராஜ்யத்தின் காலத்தில் விலங்கிடப்படுவான் அவன் பிற்பாடு அழிக்கப்படுவான்” என்ற விதத்தில் கர்த்தருடைய வார்த்தைகள் காணப்பட்டது. நமது கர்த்தருடைய வெற்றியின் மீது, உலகத்தின் நியாயத்தீர்ப்பும், பாவத்தின் வழியாய் உலகை தற்போது கைப்பற்றி வைத்துள்ளதை அப்புறப்படுத்துவதையும் சார்ந்து இருப்பதினால், இவைகள் அனைத்தும் நிறைவேறித் தீருவதற்குப் பல நூற்றாண்டுகள் தாண்ட வேண்டியிருப்பினும், இவைகளுக்கான காலம் அந்த வேளையிலிருந்து ஆரம்பிப்பதாகக் கர்த்தர் குறிப்பிடுவது சரியானதாகவே உள்ளது; அதாவது சாத்தானைக் கட்டுதல் மற்றும் ஆயிர வருட இராஜ்யத்தின் (கிறிஸ்து மற்றும் மகிமையடைந்த சபை எனும்) கருவிகளால், மனுக்குலத்தை ஆதாமின் தீர்ப்பிலிருந்து விடுவித்துத் தேவனுடைய குமாரர்களுக்குரிய மகிமையான சுதந்தரத்திற்குள், எந்த ஜீவனுக்கான தளத்திலும் நடத்துதல் ஆகியவைகள் அனைத்தும் நிறைவேறித் தீருவதற்குப் பல நூற்றாண்டுகள் கடந்துச் செல்ல வேண்டியிருப்பினும், அவைகளின் ஆரம்பத்தை, அந்த வேளையிலிருந்தெனக் கர்த்தர் குறிப்பிடுகின்றார். அனைத்து மனுஷர்களும் இந்தப் பரம இரக்கங்களையும், சிலாக்கியங்களையும் பயன்படுத்திக்கொள்வார்கள் என்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது; ஆனால் அனைவருக்கும் இதற்கான முழுமையான வாய்ப்புகள் கிடைக்கும்; ஆகவே இரண்டாம் மரணத்தில் மரிப்பவர்கள், தங்களுடைய சொந்த பாவங்களுக்காக மரிப்பார்களே ஒழிய, சுதந்தரித்துக்கொண்ட பெலவீனங்களுக்காக மரிப்பதில்லை. “”பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள். அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்” (எரேமியா 31:29-30). (1 யோவான் 5:16).

கிறிஸ்து எல்லா மனுஷர்களை இழுக்கும்போது – SUB HEADING

“”நான் புமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்” (யோவான் 12:32). இவ்வார்த்தைகளில், இயேசு தாம் இன்ன விதமாய் மரிக்கப்போவதைப் பற்றிக் குறிப்பிடுவதாக, சுவிசேஷத்தைப் பதிவு பண்ணினவர் கூறினாலும், இவ்வார்த்தைகளுக்கு இன்னும் அதிகமான அர்த்தங்கள் உள்ளன. “”ஒருவேளை என்னுடைய உடன்படிக்கைக்கு ஏற்ப, நான் உண்மையாய் ஜீவனைக் கொடுத்தால் மற்றும் பிதா வாக்களித்துள்ள உயர்வான உயர்த்துதலை நான் பரம பிதாவிடமிருந்து பெற்றுக்கொண்டால், அந்த உயர்த்தப்படுதலானது, பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதிப்பதற்கான வல்லமையையும் கொண்டு வருகிறதாய் இருக்கும். முதலாவதாகப் பிதாவின் சித்தம் மற்றும் முன்னேற்பாட்டின்படி, பிதா தாமே என்னிடத்தில் சபையை (அ) மணவாட்டியை இழுத்துக்கொள்வார்; [R2759 : page 14] இவர்களை நான் இழுத்துக்கொள்ளமாட்டேன், மாறாக பிதாவே இதைச் செய்வார்” என்ற விதத்தில் இயேசு கூறினார். “”என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் (தற்காலத்தில்,இடுக்கமான வழியில்) என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன் (உயர்த்துவேன்);” “”தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்” (யோவான் 6:44; சங்கீதம் 46:5).

“”இவர்கள் என்னுடைய சரீரத்தின் அங்கத்தினர்களாகவும், முதலாம் உயிர்த்தெழுதலில் என்னோடு கூடப் பங்காளிகளாகவும் இவ்வாறாக உயர்த்தப்பட்ட பிற்பாடு, நான் என்னுடைய இழுத்துக்கொள்ளும் வேலையை ஆரம்பிப்பேன்; இது பிதா விசேஷித்த ஒரு வகுப்பாரான, இராஜரிக ஆசாரியக்கூட்டத்தாரை இழுத்துக்கொண்டது போன்று இருப்பதில்லை. என்னுடைய இழுத்துக்கொள்ளுதலானது, ஒரு பொதுவான இழுத்துக்கொள்ளுதலாகும். நான் அனைத்து மனுஷர்களையும் இழுத்துக்கொள்வேன். ஆதாமின் மீறுதலினால், அனைவரும் இழந்திட்ட மனித பூரணத்தின் மகிமையான நிலையினிடத்திற்கும், இழந்ததைத் திரும்பப் பெறுவதற்கான உரிமையினிடத்திற்கும் படிப்படியாக, ஜனங்கள் கொண்டு வரப்படுவதற்கு ஏதுவாக, பிதாவின் பிரதிநிதியாகிய என்னிடத்தில் வருவதும், என்னிடத்திலிருந்து கடந்த காலத்தின் பாவங்களுக்கான முழுமையான பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்வதும், நீதியின் அப்படிப்பட்டதான அறிவுரைகளைப் பெற்றுக்கொள்வதும், அப்படிப்பட்டதான சிட்சைகளைப் பெற்றுக்கொள்வதும், அப்படிப்பட்டதான அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதும், அப்படிப்பட்டதான நியாயமான தீர்ப்புகளைப் பெற்றுக்கொள்வதும், உலகளாவிய வாய்ப்பாக இருக்கும். மனிதன் இழந்ததைத் திரும்பக்கொடுத்தலுக்கான இந்த உரிமை என்பது, என்னுடைய பூமிக்குரிய வாழ்க்கையை அருமையானது என்று நான் கருதாமல், அதை நான் மனுஷரை மீட்பதற்காகவும், இந்த உன்னதமான பரலோக நிலைமையை அடையத்தக்கதாகவும், நான் வெறுத்ததன் மூலமாகச் சம்பாதித்துக்கொண்ட உரிமையாக இருக்கின்றது. மேலும் தெய்வீக ஏற்பாட்டின்படி என்னோடு கூட இருப்பவர்களும், பிதாவினால் கனப்படுத்தப்படுபவர்களும், மற்றும் என்னால் என்னுடைய மணவாட்டி என்றும், சகோதர சகோதரி என்றும், உடன் சுதந்தரர்கள் என்றும் அழைக்கப்படக்கூடிய ஊழியர்களும், நானும், பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதிக்கின்றவர்களாய் இருப்போம்.” (வெளிப்படுத்தல் 22:17; ரோமர் 8:17; கலாத்தியர் 3:16,29).