R1951 – இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R1951 (page 57)

இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்

STRIVE TO ENTER IN AT THE STRAIT GATE

லூக்கா 13:22-30

“”ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ?” என்று கேட்கப்பட்டக் கேள்விக்குக் கர்த்தர் நேரடியாக பதில் அளிக்கவில்லை. இராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிப்பதற்கும், இதில் பிரவேசிப்பதற்கென, கேட்கக் காதுள்ளவர்களை வரவேற்பதற்குமான வேளை வந்துள்ளது. இந்தக் காலத்திற்கான அழைப்பானது, ஆயிர வருட இராஜ்யத்தில் கிறிஸ்துவுடன் உடன் சுதந்திரர்கள் ஆகுவதற்கான பரம அழைப்பாய் இருந்தது; அன்று முதல், இன்று வரை இந்த அழைப்பானது தொடர்ந்துக் கொண்டிருக்கின்றது. இந்த யுகத்தில் ஒரேயொரு அழைப்புதான் உள்ளது. “”உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றீர்கள்” (எபேசியர் 4:4). ஆயிர வருட யுகத்தின் போது, இன்னொரு வகுப்பாருக்கு, இன்னொரு அழைப்பைக் கொடுக்க தேவன் சித்தம் கொண்டுள்ளக் காரியமானது, இப்பொழுது நமக்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தருகின்றது, மற்றும் இன்னுமாக தெய்வீகக்குணலட்சணம் மற்றும் ஏற்பாடுகளில் காணப்படும் இசைவையும், சீரான தன்மையையும் நாம் காண உதவுகின்றது; ஆனால் அடுத்த யுகத்தில் இன்னொரு அழைப்பு இருக்கின்றது என்ற காரியமானது, [R1951 : page 58] இப்போதுள்ள அழைப்பையும், நம்பிக்கையையும் எவரும் புறக்கணித்துப் போடத்தக்கதாக ஏவக்கூடாது. அப்போஸ்தலர் கூறுவது போன்று, “”இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால், தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வோம்?”

நமது கர்த்தர் தம்முடைய வேலையைக் குறித்தும், தம்முடைய இராஜ்யத்தைக் குறித்தும், இராஜ்யத்தின் நோக்கத்தைக் குறித்தும் அநேகக் காரியங்களை அப்போஸ்தலர்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளார்; இன்னுமாக அவர், “”இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை (படிப்படியாக) நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” என்று கூறினார் (யோவான் 16:12-13). அப்போஸ்தலர்களுடைய கேள்விகளுக்குக் கர்த்தர் முழுமையாய்ப் பதிலளிப்பது என்பது இன்னும் அநேக கேள்விகளுக்கு, அதாவது அவர்களால் ஜீரணிப்பதற்கு ஆயத்தமாய் இல்லாத பதில்களை உடைய அநேகம் கேள்விகளுக்கு வழிநடத்துவதாக இருந்திருக்கும்; ஆகவேதான் நமது கர்த்தர் ஞானமாய் அவர்களுடைய கேள்விகளைத் தவிர்த்து, அவர்களுக்கான கடமை மற்றும் சரியான போக்கு/பாதைக் குறித்ததானவைகளைக் குறித்து மாத்திரமே பதிலளித்தார். “”இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள் (கடுமையாய் முயற்சியுங்கள்), வீட்டெஜமான் எழுந்து கதவைப் பூட்டினபின்பு அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும், அவர்களாலே கூடாமற்போகும்” என்று கூறினார்.

இந்த உதாரணமானது, பத்துக் கன்னிகைகள் பற்றின உவமையில் காணப்படும் கிழக்ககத்திய கலாச்சாரத்தின்படியான திருமணத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அழைக்கப்பட்டவர்கள் மணவாளனுடன் உள்ளே பிரவேசிக்கத்தக்கதாக, மணவாளன் வருவதற்கு முன்னதாகவே ஆயத்தமாய் இருப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். மணவாளனும், அவருடையவர்களும், கூடே வரும் நண்பர்களும் உள்ளே பிரவேசித்த பின், கதவு பூட்டப்படுகின்றது; கதவுக்கு வெளியே நிற்பவர்கள் அனைவரும் அந்நியர்கள் போலவும், அறியப்படாதவர்கள் போலவும் இத்தருணத்தில் நடத்தப்படுவார்கள். மேலும் (கதவு அடைக்கப்பட்ட பின்) இவர்கள் இல்லாமலேயே, விழா உள்ளே நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்.

கர்த்தருடைய உவமைகள் அனைத்திலும், அவருடைய பின்னடியார்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இராஜ்யமானது, யுகத்தின் முடிவில் கிடைக்கும்; அதாவது பிரபுவானவன், தூரதேசமாகிய பரலோகத்திலிருந்து, தமது இராஜ்யத்தை உரிமையாக்கிக் கொள்வதற்கும் மற்றும் தாம் (பூமியில்) இல்லாதிருந்த காலத்தில் தமக்கு உண்மையாய் இருந்தவர்களோடு, அந்த இராஜ்யத்தின் கனங்களைப் பங்கிட்டுக்கொள்வதற்கும் எனத் திரும்பி வரும்போது இராஜ்யம் கிடைக்கப்பெறும் என்று விவரிக்கப்பட்டுள்ளது (லூக்கா 19:12-27). இன்னும் தம்முடைய உண்மையுள்ள, காத்திருக்கும், நிச்சயிக்கப்பட்ட கன்னிகையை உரிமை கோருவதற்கும், வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குமாக வரும் மணவாளன் என வேறு உருவகங்களிலும் தம்மை அடையாளப்படுத்திக் காண்பிக்கின்றார். ஆகவே தங்களுடைய ஆண்டவர் இன்னவேளையில் வருவார் என்பதை அறியாத காரணத்தினால் அவர்கள் அனைவரும் தொடர்ந்து விழித்திருக்க வேண்டும் என்பதற்காக, தாம் இன்னவேளையில் வருவார் என்று அவர்களுக்கு அவர் திட்டவட்டமான எந்தத் தகவலையும் கொடுக்கவில்லை; எனினும் காத்திருந்து ஆயத்தமாயும், விழிப்பாயும் இருக்கும் அனைவருக்கும், ஏற்றவேளையில் குரல் கொடுக்கப்பட்டு, அவர்கள் திருமணத்திற்குள் பிரவேசிக்கப்பண்ணப்படுவார்கள் என்ற நிச்சயத்தைக் கொடுத்துள்ளார்.

ஆகவே மணவாளனுடைய வருகையும், ஏற்ற நேரத்தில் கதவு அடைக்கப்படுவதும், அழைக்கப்பட்டு, தெரிந்துக்கொள்ளப்பட்டு, உண்மையுள்ளவர்கள் என்று கண்டுகொள்ளப்படும் கிறிஸ்துவின் மணவாட்டியாகிய சபைக்கான முன்தீர்மானிக்கப்பட்ட எண்ணிக்கை நிறைவடையும் [R1952 : page 58] தருணமாகிய, இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய நிறைவும் தொடர்புடையதாய் இருக்கின்றது. அப்போது கிறிஸ்துவுடன் அவருடைய இராஜ்யத்தில் உடன்சுதந்திரராகிய மணவாட்டியின் அங்கம் ஆகுவதற்கான வாய்ப்பு (அ) கதவு என்றென்றும் மூடப்பட்டுவிடும். முன்தீர்மானிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானவர்களும் இருப்பதில்லை, எண்ணிக்கையை விட குறைவானவர்களும் இருப்பதில்லை.

நாம் இந்த யுகத்தினுடைய முடிவில் இப்பொழுது காணப்படுகின்றோம்; மணவாளன்… இராஜா வந்துள்ளார்; புத்தியுள்ள கன்னிகைகள் தங்கள் விளக்குகளைச் சீராக்கி, வேதவாக்கியங்களின் சாட்சியங்களை ஆராய்ந்து, அவருடைய வந்திருத்தலை ஒத்துக்கொண்டவர்களாக முன்னேறி, உறுதியுடன் திருமணத்திற்குப் போய்க்கொண்டிருக்கின்றனர். இந்த வகுப்பாரில் கடைசி அங்கம் உள்ளே சென்ற உடன், கதவு பூட்டப்படும். பிற்பாடு புத்தியில்லாத கன்னிகைகள், அதாவது அரைத்தூக்கம் தூங்கிக்கொண்டிருப்பவர்களாய், கவலைகளின் சுமைகளைச் சுமப்பவர்களாய், வைராக்கியத்தில் குறைவுப்பட்டவர்களாய், ஆனால் கன்னிகைகளாய் இருக்கும் புத்தியில்லாத கன்னிகைகள், தங்களைச் சுறுசுறுப்பாக்கிக்கொள்ள ஆரம்பிப்பார்கள்; இவர்கள் அனுபவம் எனும் விற்கிற இடத்திலிருந்து எண்ணையை வாங்கிக்கொள்வார்கள்; இவர்கள் யுகத்தின் முடிவு வந்துள்ளது என்பதையும், மணவாளன் வந்துள்ளார் என்பதையும், இராஜ்யத்தின் விருந்து ஆரம்பிக்கவிருக்கின்றது என்பதையும் உணர ஆரம்பிப்பார்கள். மப்பும், மந்தாரமும் உண்டாகுவதை கண்டு, திருமணத்திற்குப் போக இவர்கள் துரிதப்படுவார்கள்; ஆனால் இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுவார்கள். பிற்பாடு கிறிஸ்துவுடன் உடன்சுதந்திரம் எனும் பரிசை அடைவதற்காக ஓடுவதன் மூலம், தங்களுடைய அழைப்பையும், தெரிந்துக்கொள்ளுதலையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, இவர்கள் தாங்கள் தவறிவிட்டதை உணர்ந்துக்கொள்வார்கள்.

“”புலம்பலும், அழுகையும், பற்கடிப்பும் அப்பொழுது உண்டாயிருக்கும்;” முன்வைக்கப்பட்டதும், நாடப்பட்டதுமான பரிசானது, அலட்சியமான நாடுகையினால் இழந்துப்போகப்பட்டுவிட்டது என்ற ஏமாற்றம் மாத்திரம் காணப்படாமல், வேறு காரணத்திற்காகவும், சில அழுகையும், வேதனையும் காணப்படும்; இவர்கள் (புத்தியில்லாத கன்னிகைகள்) யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஒரு மகா உபத்திரவக் காலத்தின் மத்தியில், தாங்கள் திடீரெனக் காணப்படுவதை உணர்வார்கள் (தானியேல் 12:1); அது உலகளாவிய ஓர் உபத்திரவமாகக் காணப்படும்; இந்த உபத்திரவத்திலிருந்து, கதவு பூட்டப்படுவதற்கு முன்பாக உள்ளே பிரவேசித்தவர்கள் தவிர, மற்றப்படி எவருக்கும் தப்புவதற்கான வாய்ப்பு இல்லை. லூக்கா 21:36-ஆம் வசனத்தில் இடம்பெறும் வார்த்தைகள் கதவு பூட்டப்படுவதற்கு முன்னதாக உள்ளே பிரவேசித்தவர்களைக் குறித்துப் பேசப்படுகின்றது; “”…இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு…விழித்திருங்கள் என்றார்.”

தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையானவர்கள் முழுமையாய் முத்திரைப் பண்ணப்பட்டு, தங்களுடைய அழைப்பையும், தெரிந்துக்கொள்ளுதலையும் உறுதிப்படுத்திக்கொள்வது வரையிலும் தூதர்கள் நான்கு திசை “”காற்றுகளைப்” பிடித்துவைத்துள்ளனர்; இவர்களின் எண்ணிக்கை நிறைவுபெறும்போது, உலகத்தின் மீதான உபத்திரவம், சூறாவெளியெனச் சடுதியாய் வரும் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம்.

ஆனால் விசுவாச வீட்டாருக்குள் காணப்பட்டும், ஜெயங்கொள்ளாதவர்களாகவும், சோம்பலானவர்களாகவும் காணப்படும் புத்தியில்லாத கன்னிகைகள் எனும் வகுப்பார் மாத்திரம் இராஜ்யத்தின் கதவை அடைக்கப் பெற்றிருப்பவர்களாக இருப்பதில்லை. யூதர்களானாலும், புறஜாதியாரானாலும், இவர்களில் காணப்பட்ட அக்கிரமத்தின் ஊழியக்காரர்கள் அனைவரும் தேவனுடைய இராஜ்யத்தில் (உடன்சுதந்திரர்) பங்கிலிருந்து புறம்பாக்கப்படுவார்கள்.

இந்தச் சொற்பொழிவில், நமது கர்த்தர், பரலேக மணவாளன், தம்முடைய மணவாட்டியுடன் இணைவதைத் தொடரும் மாபெரும் ஆசீர்வாதங்களைக் குறித்துப் பேசவில்லை; எனினும் மற்ற வேதவாக்கியங்கள், இந்த இணைதலைத் தொடர்ந்து சீக்கிரமாய் முழு உலமும் ஆசீர்வதிக்கப்படும் என்று தெரிவிக்கின்றது, ஏனெனில், வெளிப்படுத்தல் 22:17-ஆம் வசனத்தின்படி, “”ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள் கேட்கிறவனும் வா என்பானாக் தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” என்று உள்ளது. புத்தியில்லாத கன்னிகைகளுக்கு என்ன சம்பவிக்கும் என்று இந்த உவமை கூறுவதுமில்லை, ஆனாலும் இவர்கள் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோல, இரட்சிக்கப்படுவார்கள் என்று மற்றொரு வேதவாக்கியம் தெரிவிக்கின்றது (1 கொரிந்தியர் 3:15).