R3841 – தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R3841 (page 264)

தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்

PRAY WITHOUT CEASING, AND HUMBLY

லூக்கா 18:1-14

“”தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்.” (வசனம் 13)

பல்வேறு கண்ணோட்டங்களிலிருந்து ஜெபம் பற்றின ஒரு பாடத்தை நாம் மீண்டுமாக இங்குப் பார்க்கப் போகிறோம். ஜெபம் பற்றின சில பாடங்களைச் சீஷர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது; இதைக் கர்த்தர் இரண்டு உவமைகள் மூலம் அருளினார். முதலாவது பாடம் விடாப்பிடியாய் உறுதியாகத் தரித்திருத்தல் பற்றியதாகும்; அதாவது அவர்கள் தொடர்ந்து ஜெபம் பண்ண வேண்டும், மற்றும் பதில் தாமதமாகும்போது, சோர்ந்து, மனம் தளர்ந்துப் போகக்கூடாது என்பது பற்றியே முதலாம் பாடமாகும். அவர்கள் தேவனுடைய உண்மையான குணலட்சணத்திலும், தங்களின் விண்ணப்பங்ளைக் கேட்பதற்கும், தங்களுக்குத் தேவையான நன்மைகளை ஏற்ற விதத்தில், ஏற்றவேளையில் கொடுப்பதற்குமான அவருடைய விருப்பத்திலும் நிச்சயத்துடன் காணப்பட வேண்டும். பதில் தாமதமாகுவது என்பது அவர்களுடைய விசுவாசத்தையும், நம்பிக்கையையும் பெருக்கும் விதத்தில் ஆசீர்வாதத்தைக்கொண்டுவருகின்றதாக அமையும்.

அநீதியுள்ள நியாயாதிபதி

மேற்கூறியவைகளை அறிவுறுத்தும் உவமையானது, தேவனுக்கோ, மனுஷனுக்கோ மதிப்புக் கொடுக்காத நியாயாதிபதி ஒருவன் கிழக்குத் திசை நாட்டில் இருந்தான் என்றும், அவன் தன்னுடைய சுயநலமான நோக்கங்களை நிறைவேற்றத்தக்கதாக தெய்வீகக் கட்டளைகளை எதிர்ப்பதற்கும், பொதுவாய் நிலவும் கருத்துக்களை மீறுவதற்கும் துணிந்தவனாகக் காணப்பட்டான் என்றும் தெரிவிக்கின்றது. கிறிஸ்தவ தேசங்களில் காணப்படும் நியாயாதிபதிகள் கனமிக்கவர்களாகவும், நம்பிக்கைக்குப் பாத்திரவான்களாகவும் இருக்கின்றனர் என நாம் நம்புகின்றோம்; இன்னுமாக நியாயாதிபதிகள் இப்படிதான் இருக்க வேண்டுமென்பது சட்டமாக இருக்கின்றது என்றும், இப்படியாக இல்லாமல் இருப்பது அபூர்வம் என்றும் நாம் நம்புகின்றோம்; ஆனால் கிழக்குத் திசை நாடுகளில் எல்லாவற்றிலும் பணியாளர்கள் இலஞ்சம் வாங்க விரும்புவது வழக்கமாக இருந்தது, மற்றும் பணி புரிகின்றவர்கள் தங்களுடைய தனிப்பட்ட நன்மை மற்றும் ஆதாயத்திற்கே பணிபுரிகிறவர்களாய் இருப்பார்கள். முற்காலங்களில், அதாவது கடந்த நூற்றாண்டிற்கு முன்பு வரையிலும், நியாயாதிபதிகள், சட்டங்களை இயற்றுபவர்களாகவும், சட்டங்களை நடைமுறைப்படுத்துபவர்களாகவும் காணப்பட்டு வந்தனர். இன்றைக்கு நாகரிகமடைந்த தேசங்களில், ஜனங்களுடைய நன்மைக்கு ஏதுவாகவும், நீதி கிடைக்கப் பண்ணுவதற்குமென, சட்டம் இயற்றும் துறையும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் துறையும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றது.

உவமையில் இடம்பெறும் அநீதியுள்ள நியாயாதிபதிக்கு முன்பாக தனது வாழ்க்கையில் அநீதிகளையும், அவமரியாதைகளையும் அனுபவித்த விதவை ஒருவள் வந்தாள்; இந்தப் பிரச்சனைகளிலிருந்து நியாயாதிபதி தன்னை விடுவிக்கும்படியாக விரும்பினாள். அவள் ஆஸ்தி உள்ளவளாக இராதபடியினால், அவளால் அவனுக்கு இலஞ்சம் கொடுக்க முடியவில்லை; மேலும் அவளுக்குச் செல்வாக்கு எதுவும் இராததினால் நீதிக்கும், குறை தீர்க்கப்படுவதற்குமான அவளுடைய விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்பட்டது. நீதியை வழங்க வேண்டும் என்ற விருப்பத்தினால் அல்லாமல், தொந்தரவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற சுயநலத்தின் காரணமாக, அவளுடைய விஷயத்தைக் கையில் எடுத்து, அவளுக்கு அவசியமான உதவியையும், நீதியையும் அவன் கொடுப்பதற்கு இறுதியாக முடிவெடுப்பது வரையிலும், அவள் விடாப்பிடியாய்த் தொடர்ந்துக் கொண்டிருந்தாள்.

தேவன் தாமதித்தாலும் அவர் அநீதியுள்ளவர் அல்ல

உவமையானது இந்த அநீதியுள்ள நியாயாதிபதியை, நம்முடைய பரம பிதாவுடன் ஒப்பிட்டுக் கூறி, இவ்வாறாக நம்முடைய பரம பிதாவானவர், அநீதியுள்ள நியாயாதிபதியாக இருக்கின்றார் என்று காண்பிப்பதில்லை. மாறாக இது இருவரையும் வித்தியாசப்படுத்தி, ஒருவேளை அநீதியுள்ள நியாயாதிபதி ஒருவன், சுயநலமான நோக்கங்களுக்காக இறுதியில் விடுதலை கொடுப்பானானால், நீதியுள்ளவராகவும், அன்புள்ளவராகவும், தம்முடைய ஜனங்களின் நன்மைகள் பற்றின அக்கறையுள்ளவராகவும்இருக்கும், நம்முடைய பரம பிதாவானவர், நிச்சயமாய் அவர்களின் ஜெபங்களுக்குச் செவிக்கொடுப்பார் என்ற கருத்தைக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. ஆகையால் ஒருவேளை நம்முடைய கணிப்பில் மிகவும் விடாப்பிடியாகக் கேட்பதற்கும், நம்முடைய உண்மையான ஜெபங்களும் அவசியப்படுவதற்கும் உரிய ஒரு காரியம் நமக்குக் காணப்பட்டு, ஒருவேளை அதற்கான ஜெபங்களுக்கான பதில் உடனடியாக வரவில்லையெனில், நம்மால் தேவனுக்கு இலஞ்சம் கொடுக்க முடியாத காரணத்தினாலோ (அ) அவருக்கு நம்மால் பிரயோஜனம் இல்லை என்பதினாலோ. தேவன் நம்மிடத்தில் அக்கறைக் காண்பித்திடாத அநீதியுள்ள நியாயாதிபதியாக இருக்கின்றார் என்று நாம் முடிவு பண்ண முடியாது; அதேசமயம் நாம் அவரைத் தொந்தரவு பண்ணினாலொழிய, மற்றப்படி அவர் சுயநலத்துடன் அக்கறையற்றவராக இருப்பார் என்றும் நாம் தேவனைப்பற்றி முடிவு பண்ணிவிடக்கூடாது. மாறாக அவரை நம்முடைய அன்புக்குரிய பரம தகப்பன் என்றும், நமக்கு உதவி செய்யமுடியாத அளவுக்கு அவருடைய கரம் குறுகிப்போகவில்லை என்றும், நமக்கான அவருடைய அன்பு குறைவாய் அல்லாமல், பலமாய்க் காணப்படுகின்றது என்றும், தகப்பன் தன்னுடைய பிள்ளைக்கு இரங்குகிறது போன்ற அன்பை உடையவர் என்றும், அவரைக் குறித்து எண்ணி, தேவனுடைய குணலட்சணம் பற்றின நம்முடைய அறிவின் பெலத்திலும், அவருடைய உண்மையின் மீதான நம்பிக்கையிலும், நாம் பொறுமையாய் இருந்து, தேவனை அன்புகூருபவர்களுக்கும், அவருடைய நோக்கத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கும், சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் என்று அறிந்து, நம்முடைய விண்ணப்பங்களின் நிறைவேறுதலை அவருடைய ஞானத்திற்கும், அன்பிற்கும், வல்லமைக்கும் ஒப்புக்கொடுத்து விடுகிறவர்களாய் இருக்க வேண்டும்.

தேவன் காரியத்தில் விசேஷித்த துரிதம் எதையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும், “”தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் [R3841 : page 265] தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?” என்று நமது கர்த்தர் கூறுகின்றார் (லூக்கா 18:7). இறுதியில் நீதியானது ஜெயங்கொள்ளும் என்று, நாம் தேவனிடத்திலும், அவருடைய வாக்குத்தத்தங்களிலும் நம்பிக்கைக்கொள்ள வேண்டும் என்பதே பாடமாக உள்ளது. இந்த நம்பிக்கையானது, ஒருபோதும் சந்தேகிக்காமல், மாறாக காத்திருக்க மாத்திரம் செய்யுமளவுக்கு வாக்குத்தத்தங்களை உறுதியாய்ப் பற்றிப் பிடித்திருக்கும் முற்றும் முழுமையான விசுவாசமாகின்றது. இப்படியாக விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் தேவனிடத்தில் வருபவர்கள், மீண்டும் மீண்டுமாக வருவார்கள், மற்றும் இப்படியாக வரும் ஒவ்வொரு முறையும் புத்துயிர் பெறுகின்றனர், ஏனெனில் இவர்கள் சர்வவல்லவரை மனமாற்றுவதற்குரிய நம்பிக்கையிலோ, நீதியானது என்று (தங்களால்) அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ள அவருடைய திட்டங்களை/ஏற்பாடுகளை, ஏதேனும் மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையிலோ அவரிடத்தில் வருவதில்லை; மாறாக அவருடைய வாக்குத்தத்தங்களை அவர்கள் நம்புவதினாலும், அவருடன் ஐக்கியம் வைத்துக்கொள்வதன் மூலமாக, தங்களின் இருதயங்களை ஆறுதலும், அமைதலும் அடையப் பண்ண விரும்புவதினாலும் அவரிடத்தில் செல்கின்றனர் இன்னுமாக பிதா தாமே நம்மை அன்புகூருகின்றார் என்றும், அவருடையவர்களை அவர் எதிராளியானவனின் பாவத்தின் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்தினின்று விடுவிப்பதற்கு ஏற்றக்காலம் ஒன்றைக்கொண்டுள்ளார் என்றும், தங்களுடைய இருதயங்களுக்கு உறுதிப்படுத்துவதன் மூலமாக, தங்களின் இருதயங்களை ஆறுதலும், அமைதலும் அடையப் பண்ண விரும்புவதினாலும் அவரிடத்தில் செல்கின்றனர். அந்த ஏற்றக்காலம், நீண்ட காலமாய் இருக்கலாம், ஆனால் சரியான விதத்தில் விசுவாசம் செயல்படுத்தப்பட்டால், தாமதத்தின் ஒவ்வொரு அடியிலும், ஈடு இணையற்ற ஆசீர்வாதம் வரும்.

“”சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார்” என்று கூறி இந்த உவமையைக் கர்த்தர் முடிக்கின்றார். அதாவது தம்முடைய ஜனங்களை விடுவிப்பதற்கான காலம் வரும்போது, அவர் மாபெரும் எதிராளியானவனுடனும், இவ்வுலகத்தின் அதிபதியானவனின் தலைமையின் கீழ்சத்தியத்தையும், நீதியையும் எதிர்த்து, ஜீவியத்தின் காரியங்களில் மிக முக்கிய ஸ்தானங்களைப் பிடித்து வைத்துள்ள அநீதியின் இயக்கங்களுடனுமான, தம்முடைய வேலையைச் சீக்கிரத்தில் முடித்துவிடுவார் என்று எடுத்துக்கொள்ளப்படலாம். இல்லையேல் கர்த்தர் தம்முடைய நீதியின் இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு நீண்ட தாமதம் பண்ணமாட்டார் என்ற விதத்திலும் புரிந்துக்கொள்ளப்படலாம். மனிதனுடைய கண்ணோட்டத்திலிருந்து பார்க்கப்படுகையில், நமது கர்த்தர் உலகத்தை மீட்டுக்கொண்டது முதல், அவருடைய இராஜ்யமானது இப்போது ஸ்தாபிக்கப்படுவது வரையிலுமான 18-நூற்றாண்டுகளுக்கு மேலான காலப்பகுதியானது, நீண்ட காலப்பகுதியாகக் காணப்படுகின்றது. “”சீக்கிரமாய்” என்று எந்த விதத்தில் பேசப்பட்டுள்ளது? “”கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம்வருஷம்போலவும்,” என்று நாம் தெரிவிக்கின்றோம். ஆகையால் இக்கண்ணோட்டத்திலிருந்து பார்க்கப்படும்போது, இந்த நீண்ட முழுக்காலப்பகுதியும், இரண்டு நாட்களுக்கும் குறைவானதாகவே இருக்கும். காரியங்களைக் கண்ணோக்குவதில் இங்கு நாம் கர்த்தருடைய கண்ணோட்டத்தையே எடுக்கவேண்டும். இரண்டு கண்ணோட்டங்களையும் வேதவாக்கியங்கள் ஆதரிக்கின்றன. ஆகையால் எந்தக் கண்ணோட்டத்தில் கர்த்தர் பேசியுள்ளார் என்று நாம் விவாதம் செய்ய வேண்டியதில்லை. அநேகமாக நாம் இரண்டு கண்ணோட்டங்களிலும் பார்க்கும் வண்ணமாகவே அவர் பேசியிருந்திருக்க வேண்டும்.

அவர் விசுவாசத்தைக் காண்பாரோ?

உவமையிலிருந்து வேறுபட்டதான வார்த்தைகளை இயேசு இங்குக் குறிப்பிடுகின்றார்; “”ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ?” கர்த்தர் தம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கென இரண்டாம் வருகையில் வரும்போது, உண்மையான விசுவாசமானது முதலாம் வருகையில் காணப்பட்டது போன்று, கடுமையாய்க் குறைவுப்பட்டிருக்கும், கிட்டத்தட்ட இல்லாமலலேயே இருக்கும். அவர் முதலாம் வருகையில் வந்தபோது, காணப்பட்ட நிலைமையானது, “”அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” (யோவான் 1:11). இதுபோலவே இந்த யுகத்தினுடைய முடிவின்போது, நமது கர்த்தர் தம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காக இரண்டாம் வருகையில் வரும்போது, பெயரளவிலான ஆவிக்குரிய இஸ்ரயேலர்களும், பரீட்சித்து, சோதிக்கப்படுவார்கள். மீண்டுமாக அவர் தமக்குச் சொந்தமானவர்களிடத்தில் வருவார், அவர்களோ, அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பார்கள்; மற்றும் அவசியமான விசுவாசத்தை பூமியில் அவரால் காணவும் முடியாது. முதலாம் வருகை தொடர்பாக நாம், “”அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” என்று வாசிக்கின்றோம் (யோவான் 1:12). இதுபோலவே அவருடைய இரண்டாம் வருகையின் போதும், விசுவாசங்கொண்டு, அவரை ஏற்றுக்கொள்பவர்களுக்கு, அவர் விசேஷித்த ஆசீர்வாதத்தை வழங்குவார்.

சுவிசேஷ யுகம் முழுவதிலும் சபையானது, சிறுமந்தையானது, உதவிக்காகவும், விடுதலைக்காகவும் தொடர்ந்து, கர்த்தரை நோக்கிப்பார்க்க வேண்டுமென்று எதிர்ப்பார்க்கப்பட்டாலும், ஆண்டவர் இரண்டாம் வருகையில் வந்து, தம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்கும்போது, முதலாம் உயிர்த்தெழுதல் நடைபெறுவது வரையிலும் அவர்கள் உண்மையில் / நிஜமாய் உதவி செய்யப்படுவதோ அல்லது விடுவிக்கப்படுவதோ இல்லை என்ற கருத்து உவமையின் மூலம் சுட்டிக்காண்பிக்கப்படுகின்றது. இதற்கு இசைவாகவே அப்போஸ்தலர், “”பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்” என்று கூறியுள்ளார் (ரோமர் 12:19). ஆகவேதான் நமது கர்த்தருடைய இரண்டாம் வருகையானது, உலகத்திற்கு உபத்திரவத்தின் காலமாகவும், பழிவாங்குதலின் நாளாகவும், ஜனங்களுடைய தவறுகளைச் சரிப்படுத்தும் நாளாகவும் காணப்படும் என்று வேதவாக்கியங்கள் தெளிவாய்ச் சுட்டிக்காண்பிப்பதை நாம் பார்க்கின்றோம். “”நீதியைச் சரிக்கட்டும் நாள் என் மனதிலிருந்தது; என்னுடையவர்களை மீட்கும் வருஷம் வந்தது.” “”அது கர்த்தர் பழிவாங்கும் நாள், சீயோனுடைய வழக்கினிமித்தம் பதிலளிக்கும் வருஷம்” (ஏசாயா 63:4; 34:8).

நாம் பொறுமையாய் இருக்க வேண்டுமென்றும், நம்மை எதிர்ப்பவர்களைப் பழிவாங்க முற்படாமல், மாறாக நம்முடைய சத்துருக்களை நாம் அன்புகூர்ந்து, நம்மை இழிவாய் நடத்தினவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டுமென்றும், கர்த்தர் கொடுப்பதற்குச் சித்தமாக இருக்கும் விடுதலைகளையே, நாம் கர்த்தரிடத்தில் எதிர்ப்பார்க்க வேண்டுமென்றும், முழுமையான விடுதலை வருவதற்கு நீண்டகாலம் உள்ளது என்பதை நாம் உணர்ந்துக்கொண்டாலும், கிருபையான வாக்குத்தத்தங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட போவதற்கான காலம் வந்துகொண்டிருக்கின்றது என்ற விசுவாசத்தின் மூலமாக நாம் இளைப்பாறுதலும், புத்துணர்வும் கொண்டவர்களாகக் காணப்பட வேண்டும் என்றுமுள்ளவைகளே இவ்வுமையின் மூலமான கர்த்தருடைய ஜனங்களுக்கான படிப்பினையாக இருக்கின்றது. (“”உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது.”)

கர்த்தருடைய வாக்குத்தத்தங்களைக் கொஞ்சமாய் நம்புகின்றவர்கள், அவரைக் கொஞ்சமாய் விசுவாசிக்கின்றவர்கள், அவரிடத்தில் கொஞ்சமாகவே ஜெபம் பண்ணுகிறவர்களாகவும், கொஞ்சமே விசுவாசத்தைச் செயல்படுத்துகின்றவர்களாகவும் இருந்து, இதன் விளைவாகக் கொஞ்சமே சந்தோஷத்தையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்கிறவர்களாகவும் இருப்பார்கள். மாறாக விசுவாசத்தைக்கொண்டவர்களாகவும், தொடர்ந்து கிருபையின் சிங்காசனத்திடத்திற்குச் செல்கின்றவர்களாகவும், கர்த்தருக்கு மதிப்புக் கொடுப்பவர்களாகவும், தங்களுடைய ஜெபங்கள் மற்றும் பிரயாசங்களின் மகிமையான விளைவுகளில் நம்பிக்கைகொண்டவர்களாகவும் இருப்பவர்கள், இப்பொழுதும் மகிழ்ச்சியைப் பெற்றிருப்பார்கள், மற்றும் எதிர்க்காலத்தில் முழுமையான மகிழ்ச்சியையும் பெற்றிருப்பார்கள்.

சுயநீதி கொண்டவர்களின் ஜெபங்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை

பரிசேயர்கள், யூதர்கள் மத்தியில் மிகவும் ஒழுக்கமாய் வாழும் வகுப்பாராய்க் காணப்பட்டார்கள்; இவர்கள் மிகவும் பயபக்தியுள்ளவர்களாகவும், வெளிப்புறத்தில் மிகவும் சரியானவர்களாகவும் காணப்பட்டனர்; ஆனால் உள்ளேயோ, கர்த்தர் நமக்குக் கூறியுள்ள பிரகாரம், தூய்மைக்கு மிகவும் தொலைவில் காணப்பட்டனர். இவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையைப்போல், வெளியில் நன்கு வெள்ளையடிக்கப்பட்டவர்களாகவும், உள்ளே முழுக்க அசுத்தமானவர்களாகவும் காணப்பட்டனர் என்று இவர்களைக் குறித்துக் கடினமான கண்டனம் தெரிவிப்பதற்கு இயேசு மாத்திரமே தகுதியானவராகக் காணப்பட்டார். இதுபோன்ற ஒரு வகுப்பார், இன்று கிறிஸ்தவ மண்டலத்திலும் காணப்படுகின்றனர்; இவர்கள் வெளித்தோற்றத்தில் மிகவும் ஒழுக்கமானவர்களாகவும், சிறு விஷயங்களையும் நன்கு கவனித்துச் செய்பவர்களாகவும், மிகவும் செம்மையானவர்களாகவும் காணப்படுகின்றனர், எனினும் இவர்கள் கர்த்தருக்குப் பிரியமாய் இருப்பதில்லை. இவர்கள் தங்களுடைய நீதியினிமித்தம் பெருமைகொண்டவர்களாய் இருந்து, மற்றச் சிலரைக் காட்டிலும் குறைந்தளவு சீரழிந்தவர்களாய் ஒருவேளை இருப்பினும், தாங்கள் உண்மையான பூரணத்திலிருந்து இன்னமும் தொலைத் தூரத்தில் காணப்படுவதினால், தங்களில் பெருமை பாராட்டிக்கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதை உணர்ந்துகொள்ள தவறிவிடுகின்றவர்களாய் இருக்கின்றனர். ஓரளவுக்கு ஒழுக்கம் கொண்டிருந்தும், தாழ்மையில்லாமல் காணப்படும் மனிதனை விடவும், மிகவும் சீர்க்கெட்டுப்போயிருந்த போதிலுங்கூட, மிகவும் நேர்மையுள்ளவனாகவும், மிகவும் [R3842 : page 265] தாழ்மையுள்ளவனாகவும் காணப்படும்மனிதனையே, தேவன் மிகுந்த அனுதாபத்துடனும், மிகுந்த இரக்கத்துடனும் கண்ணோக்குவார் என்று இந்த உவமை காட்டுகின்றது.

உவமையில், யூதர்களுடைய வழக்கத்தின்படி, இரண்டு மனுஷர்கள் ஜெபம் பண்ணும்படிக்கு ஆலயத்திற்குச் சென்றார்கள்; இதில் ஒருவன் சுயநீதியுள்ள பரிசேயனாக இருந்தான்; இவன் ஒழுக்கமுள்ள மனிதனாகவும், அநேக விதத்தில் நல்ல மனிதனாகவும், அதே வேளையில் தன்னுடைய நீதியின் கிரியைகள் மீது மிகுந்த கவனம் கொண்டவனாகவும், தெய்வீகப் பிரமாணங்களைக் கடமைக்காக கைக்கொண்டு வந்தவனாகவும் இருந்தான். மற்றவன் தாழ்ந்த வகுப்பாரைச் சேர்ந்தவனாகவும், ஒதுக்கப்பட்டவனாகவும், அதிகமான பெலவீனங்களையும், குறைவுகளையும் கொண்டவனாகவும், தனது நிலைமையை உணர்ந்தவனாகவும் இருந்தான். பரிசேயன் அங்குப்போய் நின்று, தனக்குள்ளாக ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான் என்று நமக்குக் கூறப்பட்டுள்ளது; இவனுடைய ஜெபம் கர்த்தரிடம் ஏறிச் செல்லவில்லை போலும்; இவன் தன்குள்ளாக ஜெபம் பண்ணிக்கொண்டதாகவும், இவன் ஜெபம் பண்ணினதை இவனே [R3842 : page 266] கேட்கத் தக்கதாகப் பண்ணினதாகவும், ஜெபத்தில் இவன் தனக்கே பாராட்டுத் தெரிவித்ததாகவும், தன்னுடைய சொந்த மனசாட்சியில் மகிழ்ந்தவனாகவும் கூறப்படுவது சரியே. இவன் பண்ணின ஜெபமானது, பிதா விரும்புகின்ற ஒன்றல்ல, ஏனெனில் பிதா, தம்மை ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொள்கிறவர்களையே நாடுகின்றார். மேலும் தன்னுடைய சொந்த பெலவீனங்களையும், பூரணமின்மைகளையும், குறைவுகளையும் உணர்ந்துக்கொண்டு, இவைகளை ஒப்புக்கொண்டு, இவைகள் மூடப்படுவதற்கென, தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடுகளை நாடுவதையும் செய்யாதவன், சரியான விதத்தில், கர்த்தருக்கு முன்பாக வருவது என்பது கூடாத காரியமாக இருக்கின்றது.

சுயநீதியுள்ளவனின் ஜெபம்

“”தேவனே நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்” என்று பரிசேயன் கூறினான் (லூக்கா 18:11). இப்படியாக உண்மையாய் ஏறெடுக்கப்படும் ஜெபம் என்பது இருதயத்தினுடைய நன்றியைக் குறிப்பதாக இருக்கின்றது. இதற்காக நாம் தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அனைத்துக் கிறிஸ்தவர்களும், தேவனிடத்திலான தங்களின் உறவின் காரணமாகவும், தங்களுடைய பாவம் மூடப்பட்டதின் காரணமாகவும், தாங்கள் ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டதின் காரணமாகவும், தங்களுடைய இருதயத்தில் நடைபெறும் மறுரூபமாகுதலின் வேலை காரணமாகவும், தாங்கள் தங்கள் சக மனிதர்கள் பெரும்பாலானவர்களிடமிருந்து வேறுபட்டவர்களாய் இருப்பதின் காரணமாகவும், கர்த்தருக்கு நன்றி செலுத்த வேண்டியவர்களாய் இருக்கின்றனர். ஆனால் இதனிமித்தம் அவர்கள் பெருமை பாராட்டிக்கொள்வதற்கு எதுவும் இல்லை. ஏனெனில், “”உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?” என்று அப்போஸ்தலர் கூறுகின்றார் (1 கொரிந்தியர் 4:7). ஆகவே இப்படியாக நமக்கும், மற்றவர்களுக்கும் இடையிலான வித்தியாமானது கர்த்தராலும், அவருடைய கிருபையின் கிரியையினாலும் உண்டானது என்றும், இது நம்மால் உண்டாகவில்லை என்றும் உணர்ந்துக்கொள்வது சரியான இருதய நிலையாகும்; மேலும் இப்படியான உணர்ந்துக்கொள்ளுதலைப் பெற்றுக்கொண்டிருப்பவர்கள் அனைவரும், இப்படியான விதத்தில் அவர் நம்மை மற்றவர்களிடத்திலிருந்து வித்தியாசப்படுத்தி வைத்திருக்கும் காரணத்தினாலும், அவருடைய கிருபையினால் நாம் இப்படி வித்தியாசப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் காரணத்தினாலும் அவருக்கு நன்றி ஏறெடுக்கலாம்.

உவமையில் இடம்பெறும் பரிசேயனுடைய பிரச்சனை என்னவெனில், அவன் தனக்குள்ளாக ஜெபம் பண்ணினவனாகவும், தன்னையே பாராட்டிக்கொண்டவனாகவும், இந்த வித்தியாசங்கள் அனைத்திற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துவதுபோன்று நடித்துக்கொண்டவனாகவும் இருந்ததேயாகும். கர்த்தர் தன்னை வித்தியாசப்படுத்தியுள்ளார் என்பதற்காக இவன் கர்த்தருக்கு நன்றி செலுத்தாமல், மாறாக இவன் இந்த வித்தியாசங்களை, தானே ஏற்படுத்தினதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்தியவனாய்க் காணப்பட்டான்; இவன் தன் மாம்சத்தின் சொந்த கிரியைகளிடத்தில் நம்பிக்கைக்கொண்டவனாக இருந்தான்; இத்தகைய காரியம் ஒருபோதும் கர்த்தரினால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை; மேலும் இவன் பரியேசனாக, பாவநிவாரண பலியினால் தரிப்பிக்கப்படும் நீதியைப் புறக்கணிக்கின்றவனாய்க் காணப்பட்டான். இப்படியாகவே, நாமும் ஒருவேளை ஏதாகிலும் விதத்தில் பெருமையடித்துக்கொண்டவர்களாய் இருந்தோமானால், நம்முடைய நிலைமையும் இப்படியாகவே காணப்படும். இப்படிப்பட்ட ஒரு மனுஷன், இப்படிப்பட்ட ஒரு ஜெபத்தை ஏறெடுக்கும்போது இது தேவனிடத்தில் செல்லாது என்றும், இது தன்னைத்தானே போலி புகழ்ச்சிச் செய்வதாக மாத்திரமே இருக்கும் என்றும், இதனால் அவனுக்கு எந்த நன்மையும் இராது என்றும், அறிந்துக்கொள்ளப்பட வேண்டும். நம்மை மற்றவர்களிடத்திலிருந்து வித்தியாசப்படுத்தினவரும், நம்மைத் தம்முடைய வல்லமையினால் காத்துக்கொள்பவரும், கிறிஸ்துவின் நீதி எனும் வஸ்திரத்தினால் நம்மை மூடுகிறவரும், அவருடைய படிப்பினைகளுக்கும், வழிநடத்துதல்களுக்கும் கீழ்ப்படிவதில் நாம் உண்மையாய் இருப்போமானால், நமக்கு வாக்களித்துள்ள கனத்திற்கும், மகிமைக்கும், அழியாமைக்கும் நம்மை ஆயத்தப்படுத்திக்கொண்டுவருபவருமான தேவன், நமக்குப் போதுமானவராய் இருக்கின்றார் என்று நாம் உணர்ந்துக்கொள்ளும்போது, நாம் சரியான மனநிலையில் இருக்கின்றவர்களாய் இருப்போம்.

கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும், தாங்கள் கிருபையின் சிங்காசனத்திற்கு முன்னதாக, தாங்கள் பாவிகளைப் போலும், விபச்சாரக்காரர் போலும், ஆயக்காரரைப் போலும் அல்லது மற்ற மனுஷர்களைப் போலும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்றவர்களாய் இருக்க வேண்டும். இது, “”நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துக் கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது” என்று கர்த்தரால் கூறப்பட்டவைகளுக்கு இசைவாகவே உள்ளது (யோவான் 15:19). இப்படியாக நாம் உலகத்திடமிருந்து பிரிந்திருக்கும் நிலைக்கான ஆதாரங்களை காண்கையில் நாம் சந்தோஷம் அடையலாம், ஆனால் இவைகளைக் குறித்து நாம் பெருமை பாராட்டிக்கொள்ளக்கூடாது; இன்னுமாக இவைகள் நம்மால், அதாவது நம்முடைய முயற்சியினால் உண்டானது என்று உரிமை பாராட்டிக்கொள்ளக்கூடாது. ஏற்கெனவே சொன்னது போன்று, நாம் கர்த்தருடைய கிருபையினால்தான் இப்படியாகவெல்லாம் வித்தியாசப்படுத்தப்பட்டுக் காணப்படுகின்றோம்.

பரிசேயன் பெருமையடித்துக்கொள்ளும் விதமாக, தான் வாரத்திற்கு இரண்டு முறை உபவாசம் பண்ணுவதாகவும், எல்லாவற்றிலும் தசம பாகம் கொடுப்பதாகவும் கூறினான். இவன் உபவாசம் பண்ணும்போது, நியாயப்பிரமாணம் கோரும் காரியங்களைக் காட்டிலும் அதிகமானவைகளை இவன் செய்து வந்தான், ஆகையால், இதற்காக இவன் விசேஷமாய்ப் பாராட்டப்படுவான் என்று எதிர்ப்பார்த்தான் என்பதில் ஐயமில்லை. ஆனால் இப்படியாகக் கர்த்தருடைய கண்ணோட்டத்தில் இருப்பதில்லை; கிரியைகள் ஒருபோதும் நம்மை நீதிமானாக்கிவிட முடியாது. ஒருவேளை நாம் உபவாசித்தாலும், மரிக்குமளவுக்கு உபவாசித்தாலும், இவைகளினால் எந்தப் புண்ணியமும்/தகுதியும் இல்லை; நாம் நம்முடைய பூரணமின்மைகளைச் சரியாக உணர்ந்துக்கொண்டும், இப்பொழுது இயேசுவின்மேல் வைக்கப்படுகிற விசுவாசத்தினால் வழங்கப்படுகிறதும், அன்று யூதர்களுக்கு அவர்களுடைய நிழலான பாவநிவாரணநாளின் பலிகளினால், நிழலாய்த் தரிப்பிக்கப்பட்டதுமான தெய்வீக நீதிமானாக்கப்படுதலைச் சரியாக ஏற்றுக்கொண்டும் காணப்படாத வரையிலும், எந்தக் கிரியைகளுக்கும் மதிப்பிராது. இன்று கர்த்தருடைய ஜனங்கள் உபவாசிப்பதற்கு அநேக காரியங்களைப் பெற்றிருக்கின்றனர். உபவாசம் என்பது சுயத்தை வெறுத்தலாகும்; மேலும் உணவின் விஷயத்தில் சுயத்தை வெறுத்தல் என்பது, தேவனுடைய பார்வையில் மிகவும் மதிக்கத்தக்கதான ஒன்றாய் இராது என்பது நிச்சயமே. கர்த்தருடைய ஜனங்கள் தாங்கள் ஆவிக்குரியவற்றில் போஷிக்கப்படத்தக்கதாகவும், செழிப்படையத்தக்கதாகவும், பலப்படத்தக்கதாகவும், கட்டுப்படுத்துவதற்குரிய, பட்டினிப் போடுவதற்குரிய, குறைப்பதற்குரிய, அநேக மாம்சத்தின் ஆசைகளைக் கொண்டிருக்கின்றனர்.

தசம பாகங்களைக்குறித்துப் பெருமையடித்துக்கொள்ளுதல்

தசம பாகம் கொடுப்பது என்பது சரியான காரியமாக இருக்கின்றது. தேவனுக்கு மதிப்புக் கொடுக்கத்தக்கதாக, மந்தைகள் மற்றும் வயலின் விளைவுகளில் பத்தில் ஒரு பங்கு, அவருடைய ஊழியத்திற்குக் கொடுக்கும்படியாக தேவன் கட்டளையிட்டார்; மேலும் இந்த ஒரு கட்டளைக்கு/ ஏற்பாட்டிற்குக் கீழ்ப்படியும் விஷயத்தில், கர்த்தரே அனைத்து நன்மைகளையும் அருளுபவர் என்று நினைவுக்கூரப்பட்டால், பெருமையடித்துக்கொள்வதற்கு எதுவும் இராது. இப்படியாக தசம பாகம் கொடுப்பதில் பெருமைக்கும், பெருமை அடித்துக்கொள்வதற்கும் இடம் ஏது? இப்படியாகப் பெருமையடித்துக்கொள்வது என்பது, இருயத்தில் சுயதிருப்தியான நிலையையும், புத்திரர் வீட்டாரின் அங்கத்தினர்களாக ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள் அனைவரிடத்தில் எதிர்பார்க்கப்படும், மேலான அர்ப்பணிப்பைப் பண்ணுவதற்கு ஆயத்தமற்ற நிலைமையையும் காண்பிக்கின்றது; அதாவது இயேசுவின் பின்னடியார்கள் ஆகுவதற்கென்று தங்களிடத்திலுள்ள யாவற்றையும் அர்ப்பணம் பண்ணுவதற்கும், பிற்பாடு ஒவ்வொரு பணத்தையும், ஒவ்வொரு தாலந்தையும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தின விதத்தைக் குறித்துக் கணக்கு ஒப்புவிக்கிற உக்கிராணக்காரர்கள் ஆகுவதற்கும் அவசியமான மேலான அர்ப்பணிப்பைப் பண்ணுவதற்கு ஆயத்தமற்ற நிலைமையைச் சுட்டிக்காண்பிக்கின்றது. பரிசுத்தவான்கள் தங்களுடைய சுயத்தை வெறுத்தல் (அ) ஊழியங்கள் குறித்துப் பெருமையடித்துக் கொள்ளத்தக்கதாகக் காணப்படுகின்றார்களா? பரிசுத்தவான்கள் காரியங்களைக் கவனமாய்க் கவனித்து, மிகவும் ஆற்றல் மிக்கவர்கள்கூட, எவ்வளவு சொற்பமானவைகளைத்தான் நிறைவேற்ற முடிகின்றவர்களாய்க் காணப்படுகின்றார்கள் என்று பார்ப்பார்களாக் இப்படியாகப் பார்க்கும்போது, தாங்கள் நிறைவேற்ற வேண்டுமென்று விரும்பினவைகளில், எவ்வளவு சொற்பமானவைகளைத்தான் தாங்கள் கர்த்தருக்குச் செய்ய முடிந்தது என்பதை அநேகர் வெட்கத்தோடே ஒப்புக்கொள்வார்கள்.

தேவனே ! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்

மாபெரும் பயபக்திக்கொண்டிருப்பதாக, தங்களைக் குறித்து அறிக்கைப் பண்ணிக்கொள்ளாதவர்களுக்கு, ஆயக்காரன் எடுத்துக்காட்டாகக் காணப்படுகின்றான். தாழ்மையான மனதையுடைய ஜனங்களாகிய இவர்கள், தாங்கள் தேவனுடைய பூரணமான நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ப வாழவில்லை என்பதை உணர்ந்தவர்களாகவும் பரிசேயர்கள் தங்களால் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து, பிரமாணத்திற்கு ஏற்றபடி வாழமுடியும் என்று கொடுக்கபட்ட உறுதிமொழிகளினிமித்தம் சோர்ந்துப் போனவர்களாகவும் காணப்படுகின்றனர்; இந்த மிகவும் தாழ்மையான மனங்கொண்ட ஜனங்கள் பெரும்பாலும் சோர்ந்த மனப்பான்மையுடையவர்களாகவே காணப்படுகின்றனர்; மேலும் இதனிமித்தமாக இவர்கள் ஜாக்கிரதையற்றவர்களாகவும், பாவ வழியில் போகின்றவர்களாகவும் தவறிப்போய்விட்டனர். உவமையில் ஆயக்காரன் தூர நிற்கின்றான்; அவன் ஆலயத்தின் பரிசுத்த பிரகாரங்களின் அருகாமையில் நெருங்கி வரவில்லை; அவன் கொஞ்சம் தொலைவிலேயே நின்றுகொண்டான். அவன் தேவனுடைய பூரணத்திற்கும், தன்னுடைய சொந்த அபாத்திரமான பூரணமற்ற மற்றும் பாவமுள்ள நிலைக்கும் இடையிலான மாபெரும் வித்தியாசத்தை உணர்ந்தவனாய் இருந்தான். அவன் தன் மார்பில், தன் இருதயத்தில் அடித்துக்கொண்டு, அதாவது அவன் மரணமாகிய தெய்வீக தீர்ப்பை ஏற்றுக்கொண்டது போலும், தான் மரணத்திற்குப் பாத்திரவான் போலும், எனினும் இரக்கம் கேட்பது போலும் மார்பில் அடித்துக்கொண்டு, தேவனே என்மேல் கிருபையாய் இரும், நான் ஒரு பாவி! என்று கூறினான். வெளிப்புறத்தில் அவன் மனித கண்ணோட்டத்தின்படி, ஒழுக்கமற்றவனாகவோ (அ) நல்ல மனுஷனாகவோ இல்லாமல் இருப்பினும், அவனுடைய உள்தோற்றமோ, தேவனுடைய கண்ணோட்டத்தில், இருவரிலும் சிறந்ததாக இருந்தது. [R3842 : page 267] அவன் தன் மீது நம்பிக்கை வைக்கவில்லை: ஆகவே தாழ்மையுடன் கூடிய விசுவாசம் எனும் ஒரே நிபந்தனையின் கீழ் அருளப்படும், தேவனுடைய கிருபையை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த நிலைமையில் காணப்பட்டான். இவர்கள் இரண்டு பேரில் வெளிப்புறத்தில் ஒழுக்கம் குறைந்தவனாகவும், உட்புறத்தில் பிதாவினால் மிகவும் அங்கீகரிக்கத்தக்கதான நிலைமையில் காணப்பட்டவனே, பரியேசனைப் பார்க்கலும் நீதிமானாக்கப்பட்டான் என்று நமது கர்த்தர் சுட்டிக்காட்டினார். இதன் அடிப்படையில் பாடம் கொடுக்கத்தக்கதாக, லூக்கா 18:14-ஆம் வசனத்தினுடைய, பின்பாக வார்த்தைகளைக் கூறினார்.

“”தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான்,
தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்”

தாழ்மை இல்லையெனில், நம்முடைய நிலைமையும், நம்முடைய தகுதிகளும் என்னவாக இருப்பினும், நம்மால் இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது என்று தாழ்மையினுடைய பெரும் அவசியத்தைக் கர்த்தர் வேதவாக்கியங்கள் எங்கும், அடிக்கடி நம்முடைய கவனத்திற்குக்கொண்டு வருகின்றார். இந்த உவமையில் தாழ்மை எனும் பண்பானது ஆயக்காரனிலும்; இப்பண்பு இல்லாத காரியம், பரிசேயனிடத்திலும் சித்தரிக்கப்பட்டுள்ளது. தாழ்மை மனங்கொண்டுள்ளவர்களால் மாத்திரமே, தாங்கள் பாவி என்றும், தாங்கள் தெய்வீகத் தயவிற்கும், அன்பிற்கும் அபாத்திரர்கள் என்றும், கிறிஸ்துவுக்குள் நமக்கு அருளப்பட்டுள்ள நீதிமானாக்கப்படுதலும், மன்னிப்பும் அவசியம் என்றும், ஒப்புக்கொள்வதற்கு ஆயத்தமாய்க் காணப்படுவார்கள். இது மாத்திரமல்லாமல் இப்படியாக தாழ்மை கொண்டிருந்து, கர்த்தரிடத்தில் வந்து, அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், ஒருவேளை தாழ்மை இல்லாமல் போய்விட்டால், கிறிஸ்துவுக்குள்ளாய் இருக்கும் நமக்கான கிருபையான தகுதியும், பறிமுதல் செய்யப்படும். பெருமை என்பது, சுயதிருப்திக்கொள்ளுதலையும், “”என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று கூறின நமது மகிமையான தலை நமக்குப் போதுமானவராய் இருக்கின்றார் என்பதைப் பற்றின புறக்கணித்தலையும் குறிக்கிறதாய் இருக்கும் (யோவான் 15:5).

அந்தோ, தேவனைப்பற்றின கொஞ்சம் அறிவையும், அவருடைய இரட்சிப்பின் திட்டம் பற்றின அறிவையும் உடையவர்கள் அநேகர், தாழ்மை இல்லாததினாலும், தங்களுடைய சொந்த தவறுகளைக் காண்பதற்கும், அவைகளை ஒத்துக்கொள்வதற்கும், தெய்வீகக் கிருபை மற்றும் இரக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் ஆயத்தம் இல்லாமையினாலும், சரியானப் பாதையில் தொடர்;வதற்குத் தடைப்பண்ணப்படுகின்றனர். விசுவாசம் வைத்து, தங்களுடைய பழைய பாவங்களிலிருந்து கழுவப்பட்ட பிற்பாடு, அநேகர் தாழ்மை இல்லாததினால், இறுமாப்பிற்கும், பெருமைக்கும் நேராய் வழிநடத்தப்பட்டுள்ளனர்; இவைகள் எப்படியாகிலும், புதிய சிருஷ்டியாகிய நமக்குப் பாதகத்தையே உண்டு பண்ணுகின்றது; இவைகள் நிச்சயமாய், “”தங்களைத் தாழ்த்திக் கொள்பவர்களை மாத்திரமே உயர்த்தக்கூடிய இராஜ்யத்தில்,” பங்கடைவதற்கான வாய்ப்பினை இழக்கச் செய்து விடும்.