R4608 (page 152)
மத்தேயு 12:22-32, 38-42
“என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.” – மத்தேயு 12:30
சில சமயங்களில் யுத்தங்களில் ஒவ்வொரு மனுஷனும் தனக்காகவே யுத்தம்/போராடுவது போன்று தோன்றும். குழப்பத்தில் யுத்தத்திற்கான அனைத்து வரம்பு எல்லைக்கோடுகள் மறந்துவிடப்படுகின்றன. எனினும், முடிவில் வெற்றிக் கிடைக்கும்போது, யுத்தத்தின் ஆரம்பத்தில் காணப்பட்ட வரம்பு தெளிவாக மீண்டும் பார்க்கப்படலாம். மாபெரும் போதகரைப் பொறுத்தமட்டில், மனுக்குலத்தின் முழுக் குடும்பமானது சத்தியத்திற்கும் மற்றும் தப்பறைக்கும், சரியானதற்கும் மற்றும் தவறானதற்கும், தேவனுக்கும் மற்றும் சாத்தானுக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் யுத்தத்தினுடைய ஏதோ ஒரு பக்கத்தில் காணப்படுகின்றனர். யுத்தத்தின் முடிவு பற்றி எந்தச் சந்தேகமும் இல்லை, தேவனே ஜெயம் அடைவார். தேவனால் எந்த நேரத்திலும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தி, தமது பரிசுத்தவான்களை விடுவித்து, சாத்தானையும் அவன் சாம்ராஜ்யத்தையும் கவிழ்த்துப்போட முடியும் என வேதாகமம் நமக்கு நிச்சயமளிக்கின்றது. ஆனால், இவைகள் தேவனுடைய “ஏற்றவேளையில்” நிறைவேற்றப்படும் என்பதாக தெய்வீக வாக்குத்தத்தங்கள் காணப்படுகின்றது. அதாவது, சபை நிறைவடைந்து முதலாம் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் மாற்றப்பட்ட பிற்பாடு, பூமியின் ஜாதிகளை ஆசீர்வதிப்பதற்கான மேசியாவின் ஆயிரம் வருஷம் அரசாட்சி ஸ்தாபிக்கப்படுவதற்கான காலம் வரும் என்று தெய்வீக வாக்குத்தத்தங்கள் காணப்படுகின்றது.
ஆறாயிரம் வருஷம் காலமான தாமதிப்பும், பாவிகளை மீட்பதற்காகவும், அவர்களை மரணத் தீர்ப்பிலிருந்து விடுவிப்பதற்காகவும், மேசியா மரித்தும் இரண்டாயிரம் வருஷம் காலமான தாமதிப்பும் ஏன்? என்ற கேள்விகள் எழும்பலாம். இந்தப் பத்தொன்பது நூற்றாண்டுகளாக தேவன் தமது சித்தம் தொடர்பான கொஞ்சம் அறிவை வெளிப்படுத்தியுள்ள சிலருடைய விஷயத்தில், அவர்கள் தம்மிடத்திலும், தம்முடைய பிரமாணங்களுக்கும், தம்முடைய பிரதிநிதிகளுக்கும் கொண்டிருக்கும் உண்மையைப் பரிசோதிக்கின்றார் என்பதே பதிலாகும். உண்மையுள்ளவர்களெனத் தங்களைக் குறித்து அறிக்கைப் பண்ணிக்கொள்கின்றவர்கள் மத்தியில், நீதியினுடைய கொள்கைகளை இருதயத்தில் கொண்டிருப்பவர்களைத் தேவன் நாடுகின்றபடியினாலே அவர் பரிசோதிக்கின்றார். இவ்விதமாகக் கர்த்தருடைய முதலாம் வருகையின்போது, சிலர் எப்படிப் பரீட்சிக்கப்பட்டார்கள் என்பதை நம்முடைய இன்றைய பாடம் காட்டுகின்றது. இன்னுமாக, நசரேயனாகிய அவருக்கு என்ன நேர்ந்ததோ, அதுவே அவருடைய அடிச்சுவடுகளை இந்தப் பத்தொன்பது நூற்றாண்டுகளாகப் பின்பற்றி வருகின்ற பின்னடியார்களுக்கும் அனுபவமாக இருக்கும் என நாம் அறிவோம். அடிக்கடி அவர்கள் முகாந்தரம் இல்லாமல் பகைக்கப்பட்டனர்; முகாந்தரமில்லாமல் அவர்கள் பழித்தூற்றப்பட்டார்கள், தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டார்கள், அவதூறாய்ப் பேசப்பட்டார்கள். அதுவும் இப்படியாகச் சிலசமயம் கனமுள்ள ஸ்தானத்தில் காணப்படும் மதத்தில் ஈடுபாடுள்ள உடன் நபர்களாலே நடத்தப்பட்டார்கள். இப்படியான ஒவ்வொரு சூழ்நிலையிலும், யுத்தத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றது. அதாவது, தேவன், சத்தியம், நீதி எனும் பக்கமும் மற்றும் தவறுகள், தப்பறைகள், சாத்தான் எனும் பக்கமும் இருக்கின்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பரிசேயர்களும், வேதபாரகர்களும், நியாயசாஸ்திரிகளும் எவ்வளவு குருட்டுத்தனமாக இயேசுவைப் பகைத்து, அவருக்கு எதிராக சகலவிதமான தீமைகளைப் பேசினார்கள் என்று நாம் பார்க்கையில், இவர்கள் உண்மையில் சாத்தானுடைய பக்கத்தில் காணப்பட்டார்கள் என்று உணர்ந்துக்கொள்கின்றோம். தர்சு பட்டணத்தானாகிய சவுல், ஸ்தேவானைக் கல்லெறிந்து கொன்றதையும், அநேகர் இயேசுவின் பின்னடியார்களைத் துன்புறுத்தியதையும் நாம் பார்க்கையில், இவர்கள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு, அவனுக்கு ஊழியம் புரிகின்றவர்களாக இருந்துள்ளதை நாம் தெளிவாகப் பார்க்கின்றோம். இன்னுமாக, சில தருணங்களில் தாங்கள் தேவனுடைய வேலையைச் செய்கின்றதாக இந்தச் சாத்தானுடைய மற்றும் அநீதியினுடைய ஊழியக்காரர்கள் எண்ணிக்கொண்டனர். ஆகவே, இம்மாதிரியான விஷயங்களில், “தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது” என்ற மாபெரும் போதகருடைய வார்த்தைகளை நினைவில் கொண்டவர்களாக எச்சரிக்கையாய் இருக்கக்கடவோம். “என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.” (மத்தேயு 12:30). அந்தோ, எத்தனை நல்ல ஜனங்கள், அவர்களையும் அறியாமல் மாபெரும் யுத்தத்தில் தவறான பக்கத்தில் அதாவது, தேவன் மற்றும் சத்தியத்திற்கு எதிராக, அறியாமையினால், எதிராளியானவனால் ஏமாற்றப்பட்டு யுத்தம் பண்ணுகிறவர்களாகக் காணப்படுகின்றனர். இந்தப் போராட்டத்தையும், இருளையும் அனுமதிப்பதின் மூலம், தம்முடைய ஜனங்களாக இருக்க அழைத்தவர்களைத் தேவன் நன்கு பரீட்சிக்கின்றார், பரிசோதிக்கின்றார். நாம் எப்பக்கத்தில் காணப்படப்போகின்றோம் என்பது தொடர்பாக நாம் நேரடியாக பரீட்சிக்கப்படுவதோடு கூட, நம்முடைய தாழ்மை தொடர்பாகவும் நாம் மறைமுகமாகப் பரீட்சிக்கப்படுகின்றோம். இருதயத்தில் நேர்மையுள்ளவர்களாக இருந்தும், கண்கள் திறக்கப் பெற்றிருந்துங்கூட, தேவனுக்கு எதிராக யுத்தம் பண்ணும் தவறைச் செய்தவர்களுக்கு, தங்கள் தவறை ஒப்புக்கொள்ளும் விஷயத்திலும், சத்தியத்திற்காக வைராக்கியம் கொள்கின்றவர்களாக மாறும் விஷயத்திலும் தாழ்மைக்கான மாபெரும் பரீட்சை உள்ளது. சரியான பக்கத்தில் காணப்படுகிறவர்களுக்குக்கூட தாழ்மைக்கான பரீட்சை உள்ளது. அதாவது, இவர்கள் தாங்கள் சரியான பக்கத்தில் காணப்படுவதினாலும், ஜெயிப்பதினாலும் மிகைப்படாமல், மாறாக “ஏற்றக்காலத்தில் தேவன் தங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்தக் கரத்தில் அடங்கியிருக்க வேண்டும்.”
சாத்தான், உயர்த்தளத்தில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளபடியால், அவனுக்கும், விழுந்துபோன தூதர்களுக்கும் இருக்கும் தொடர்பினிமித்தம் பேய்களின் அதிபதியென அழைக்கப்படுகின்றான். பரிசேயர்களுடைய இருதயங்களில் காணப்பட்ட தவறான கணிப்பானது ஆண்டவரைச் சாத்தான் என்றும், சாத்தானுடைய வல்லமையினாலேயே அவர் பிசாசுகளைத் துரத்துகின்றார் என ஆண்டவரைக் குற்றம் சாட்ட ஏவிற்று. இவ்விஷயம் குறித்து அவர்களுக்கு அறிவுரைக் கூற கர்த்தர் முற்பட்டார். இன்னும் சாத்தான் தன்னுடைய சொந்த வேலைக்காரர்களுக்கும், கூட்டாளிகளுக்கும் எதிராக கிரியை புரிகின்ற காலம் வரும்போது, அது அவனுடைய சாம்ராஜ்யம் விரைவாக விழப்போகின்றதைக் குறிக்கும் என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்ட முற்பட்டார். இன்னுமாக, அவர்களால் அங்கீகரிக்கப்பட்டும், கனப்படுத்தப்பட்டும் இருக்கும் சிலர் கூடப் பிசாசுகளைத் துரத்துவதாகவும் கர்த்தர் சுட்டிக்காட்டினார். ஒருவேளை தாம் பெயல்செபுலினாலே பிசாசுகளைத் துரத்துகிறவராக இருந்தால், இதே வல்லமையைச் சிலசமயம் செயல்படுத்தியுள்ள அவர்களுடைய நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் குறித்து என்ன முடிவிற்கு வருவார்கள் என்று அவர்களிடம் கர்த்தர் கேட்டார். ஆனால், ஒருவேளை தாம் தேவனுடைய வல்லமையினால்தான் பிசாசுகளைத் துரத்தினார் என்றால், அது தாம் அறிவித்துள்ள பிரகாரம் தேவனுடைய இராஜ்யம் சமீபித்துள்ளதற்கான அறிகுறியாகும் என்றார்.
இப்படியாக, அவர்களது எதிர்ப்பிற்குக் கர்த்தர் பதிலளித்ததின் மூலம், அவர்கள் தமக்கு எதிராக காணப்படுகின்றார்கள் என்றும், தமது வார்த்தைகளை எதிர்க்கின்றார்கள் என்றும், தாம் தேவனுடைய பிரதிநிதியாக இருக்கையில், அவர்கள் இப்படியாகத் தம்மை எதிர்ப்பது என்பது அவர்கள் தேவனை எதிர்ப்பதைக் குறிக்கின்றது என்றும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார். பின்னர், தமக்கு இருக்கும் தேவனுடைய ஆவியை, தேவனுடைய வல்லமையை அவர்கள் பிசாசின் வல்லமையாகக் கூறினதின் மூலம், அவர்களுடைய வார்த்தைகள் தேவதூஷணமாக இருக்கின்றது என்ற உண்மையின் மீது அவர்களது கவனத்தைக் கர்த்தர் கொண்டுவந்தார். ஆயினும், இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்கள் ஏதோ சினம் அடைந்ததால் பேசவில்லை மற்றும் ஒவ்வொரு சாட்சிகளைப் பார்த்த பின்னரும், சாட்சிகளை எதிர்த்தே பேசினார்கள். ஆகவே, அவர்கள் இருதயத்தில் பொல்லாதவர்கள் என்பது தெரிகின்றது. விழுகையின் காரணமாகவும், அறியாமை, மூடநம்பிக்கை போன்றவைகளின் விளைவாக உண்டாகும் சாதாரணமான பாவங்கள் அனைத்தும் தேவனுடைய ஏற்பாட்டின்படி இறுதியில் மன்னிக்கப்படும். ஆனால், வெளிச்சத்திற்கு எதிராகவும், அறிவிற்கு எதிராகவும் செய்யப்படும் துணிகரமான பாவங்கள் தேவனுடைய ஆவிக்கு எதிரான பாவமாகும். இப்படிப்பட்டதான பாவத்திற்கு இந்த யுகத்திலும் (அ) வரவிருக்கின்ற யுகத்திலும், அதாவது சுவிசேஷ யுகத்திலும் (அ) ஆயிரம் வருஷம் யுகத்திலும் எவ்விதமான மன்னிப்பும் இல்லை. [R4608 : page 153] முழுமையான வெளிச்சத்திற்கு எதிராக ஒருவேளை பாவம் செய்யப்பட்டிருக்குமாயின், அதற்கான பலன் (அ) தண்டனை அழிவாக இருக்கும்; அதாவது, இரண்டாம் மரணமாக இருக்கும். ஆனால் இப்படியான பாவத்தை உடையவர்கள் சொற்பமானவர்களாகவே இருப்பார்கள். பெரும்பாலானவர்களுடைய பாவத்தில் துணிகரமும், அறியாமையும் கலந்து காணப்படுகின்றது. இப்படியான சூழ்நிலையில் அறியாமையினால் செய்யப்பட்ட தப்பிதத்தின் பாகம் மன்னிக்கப்படும்; ஆனால் துணிகரமாகச் செய்யப்பட்ட தப்பிதத்தின் பாகமோ மன்னிக்கப்பட முடியாததினால் தண்டிக்கப்பட வேண்டியுள்ளது.
பரிசேயர்களும், வேதபாரகர்களுமே அவருடைய பிரபலத்தினிமித்தம் பொறாமை கொண்டபடியால், அவருடைய போதகங்களையும், அவருடைய அற்புதங்களையும் அவர் மேசியா என்பதற்கான போதுமான ஆதாரங்களாக எடுத்துக்கொள்ளாமல் அவரிடம் அடையாளம் கேட்டார்கள். அவரோ நெடுநாட்களுக்குப் பின்னர் நடக்கப் போகும் ஓர் அடையாளத்தை அவர்களிடம் கூறினார். அதாவது, தாம் கல்லறைக்குள் காணப்படப் போகின்ற காரியமானது, யோனா பெரிய மீனின் வயிற்றில் காணப்பட்ட காரியத்திற்கு ஒத்ததாகும் என்று கூறினார். யோனா பிரசங்கம் பண்ணினதினிமித்தம் நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்; ஆனால் யோனாவிலும் பெரியவருடைய பிரசங்கத்தைக் கேட்டுப் பரிசேயர், வேதபாரகராகிய இவர்கள் மனந்திரும்பாத காரணத்தினால், நியாயத்தீர்ப்பின் நாளில், ஆயிரவருஷ யுகத்தின்போது. அந்நிய தேவனை வணங்கினவர்களாகிய நினிவே பட்டணத்தார், இவர்களைக் காட்டிலும் மேலான சூழ்நிலையில் காணப்படுவார்கள் என்று இவர்களுக்குக் கர்த்தர் உறுதியளித்தார். சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கும்படிக்குச் சேபா நாட்டு ராஜஸ்தீரி வெகுதூரம் பிரயாணம் செய்து வந்தாள்; ஆனால், பரிசேயர்கள், வேதபாரகர்களாகிய இவர்கள் மத்தியில் சாலொமோனிலும் பெரியவர் இருந்தும், இவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவுமில்லை, மற்றும் அவருடைய செய்திக்கும் செவிசாய்க்கவுமில்லை. இவ்விதமாக நாம் குருடர்களாகக் காணப்படாதிருப்போமாக. மாறாக, நம்முடைய முழு இருதயங்களோடு நசரேயனை ஏற்றுக்கொண்டு அவரைப் பின்தொடருவோமாக!