R2470 – பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R2470 (page 121)

பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை

THE “GOOD CONFESSION” BEFORE PILATE

யோவான் 18:28-40; 1 தீமோத்தேயு 6:13

“”நான் இவரிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.” யோவான் 19:4

யூதேயாவுக்கு ரோம ஆளுநராக இருந்த பிலாத்துவின் கரங்களில், ஜீவன் மற்றும் மரணத்தின் அதிகாரம் இருந்தது. யூத ஆலோசனை சங்கத்தினர், யூதர்களுடைய பிரமாணங்கள் மற்றும் வழக்கத்தின்படி மத வழியில் நாட்டை ஆளுகை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தாலும், மரணத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லாமல் இருந்தது. தேவதூஷணம் பேசுகிறவர்களை (இந்தக் குற்றத்தையே இயேசு மீது செலுத்தினார்கள்) ஸ்தேவானின் விஷயத்தில் கல்லெறிந்து கொன்றது போல, இயேசுவைக் கொல்வதற்கு ஆலோசனை சங்கத்தாருக்கு அதிகாரம் இருந்தாலும், ஜனங்கள் இது அநீதியான தீர்ப்பு எனக் கோபங்கொள்வார்கள் என்று எண்ணி கல்லெறிதலைச் செயல்படுத்தவில்லை. இயேசு தமது போதகத்தினால் பெரிதளவில் செல்வாக்குப் பெற்றிருந்தார் என்று இவர்கள் அறிந்திருந்தபடியால், அவருடைய மரணத்தண்டனையை முடிந்த மட்டும் வெளிப்படையாக எல்லோரும் அறியத்தக்கதாகவும், அவமானப்படுத்தும் விதத்திலும் செயல்படுத்த வேண்டும் என்று விரும்பினார்கள். இப்படிச் செய்வதினால் இயேசுவும், அவருடைய சீஷர்களும் பெருத்த ஏமாற்றம் அடைந்து அவமானம் அடைவார்கள்; மேலும் மதம் மற்றும் அரசியலின் நியாயாதிபதிகளால் குற்றவாளி என்று வெளிப்படையாகத் தீர்க்கப்பட்டு, மரணத்தண்டனை அளிக்கப்பட்டவரின் சீஷன் நான் என்று சொல்ல யாரும் விரும்பமாட்டார்கள். இதுவே அவர்களின் நோக்கமாக இருந்தது. இப்படியாக வளர்ந்து வரும் இந்தப் புதிய மதப்போதகத்தை தடைபண்ண எண்ணினார்கள். தடைபண்ணப்படவில்லையெனில், ஜனங்கள் மீதான தங்களுடைய செல்வாக்குப் போய்விடும் என்று எண்ணினார்கள். இவ்விதமாக இந்தப் பொல்லாத செய்கைக்காரர்கள் தங்களையும் அறியாமல், தேவன் முன்னேற்பாடு பண்ணின பல ஒழுங்குகளைச் செய்து முடித்தார்கள் என்றாலும், தங்களுடைய தீய நோக்கத்திற்காகவே இவைகளை முழுமையாய்ச் செய்து முடித்தார்கள்.

நமது கர்த்தர் இயேசு விடியற்காலை ஐந்து முதல் ஆறு மணியளவில், யூதர்களின் ஆலோசனை சங்கத்தாரால் குற்றஞ்சாட்டப்பட்டு, பின்னர் எவ்வளவு வேகமாக முடியுமோ, அந்த அளவிற்கு வேகமாக ரோம போர்ச்சேவகர்கள் இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கத்தக்கதாக, அவரை விரைவாகப் பிலாத்துவின் விசாரணை அறைக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள். இப்படிச் செய்வதினால் ஜனங்களும் இயேசுவின் விஷயம் தாங்கள் தலையிட முடியாத வண்ணம் கைமீறிப் போய்விட்டது என்று எண்ணுவார்கள் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. பிலாத்து மரணத் தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதிக்க மாட்டார் என்று யூத அதிகாரிகள் நம்பினார்கள். கொடுமைக்குப் பிலாத்துப் பெயர்ப்பெற்றவராய் இருந்தார். பிலாத்துவைக் குறித்துப் பிலோ என்பவர் இப்படியாக எழுதுகின்றார்: அதாவது “”சீரழிக்கும் அவருடைய இயல்பையும், அவருடைய கர்வத்தையும், ஜனங்களை அவமானப்படுத்தும் அவருடைய குணத்தையும், அவருடைய கொடூரங்களையும், விசாரிக்காமல் மற்றும் குற்றந்தீர்க்காமல் ஜனங்களைக் கொலை செய்யும் அவருடைய இயல்பையும், அவருடைய கவலைக்கிடமான தளராத மிருகத்தனத்தையும் வேறு எவரிடமும் பார்க்க முடியாது. அவர் மிகவும் அஞ்சத் தகுந்தவரும், மிகவும் [R2470 : page 122] இரக்கமற்றவரும், மிகவும் பிடிவாதமானவருமான மனுஷனாவார்.”” யூதர்களின் அதிகாரிகள் சில சமயம், பிலாத்துவிடம் இரக்கம் வேண்டினாலும், பயனில்லாமல் போன சம்பவங்கள் உண்டு. ஆகையால் பிலாத்துவிடம் எந்தக் குற்றவாளியைக் கொண்டுவந்தாலும், மரணத்தீர்ப்புக் கொடுக்க [R2471 : page 122] அவர் இணங்கிவிடுவார் என்று பிலாத்துவின் இயல்புகளைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டனர்.

குற்றமற்றவரை அழிக்கும்படிக்குத் தாங்கள் கொலை ஆலோசனை செய்கையில், தாங்கள் தீட்டுப்பட்டுப் பஸ்காவைப் புசிக்க தடைவராதபடி பிலாத்துவின் விசாரணை அறைக்குள் பரிசேயர்கள் பிரவேசிக்காத சம்பவத்தை வாசிக்கையில், இவர்களைக் குறித்து நமது கர்த்தர், “”நீங்கள் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும், அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்”” என்று கூறினது நினைவுக்கு வருகின்றது. எவ்வளவு முரண்பாடுள்ளவர்களாகவும், மாயக்காரர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்! புறஜாதியான பிலாத்துவின் வட்டாரங்களில் சில (பாவத்திற்குரிய அடையாளம்) புளிப்புகள் இருக்கும் என்று பயந்தார்கள், ஆனால் தங்களுக்குள் பிரவேசித்துள்ள உண்மையான பாவத்தின் புளிப்பையும், தங்கள் இருதயங்கள் நன்கு கோபம், கசப்பு, பகை, பொறாமை மற்றும் கலகத்தினால் முழுவதும் நிரம்பியுள்ளதையும் உணராமல் இருந்தார்கள்.
கர்த்தருடைய ஜனங்களுக்கு இதில் எத்துணை பாடங்கள் உள்ளது, ஏனெனில் இந்த இருதய சீர்க்கேடுள்ள சதிகாரர்கள் அவர்களின் நாட்களில் உள்ள வெளிப்புறமான பரிசுத்த ஜனங்கள் ஆவர். இக்காலக்கட்டத்தில் வாழும் நாம், கர்த்தரைச் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்தும் வல்லமையைப் பெற்றிருக்கவில்லை என்றாலும், அவருடைய “”சகோதர சகோதரிகளை” அவமானப்படுத்தி, சிலுவையில் அறையும் ஆற்றல் நம்மிடம் உள்ளது; அதாவது, அவருடைய சரீரத்தின் அங்கங்களைச் சிலுவையில் அறைந்து, அவமானப்படுத்தும் வாய்ப்பு நம்மிடம் உள்ளது. நமது கர்த்தரைச் சிலுவையில் அறைந்திட்ட பரிசேயர் மற்றும் பிரதான ஆசாரியர்களைப் போன்ற வஞ்சிக்கப்பட்ட நிலையில், சிலர் இன்றும் செயல்படுகின்றனர். உண்மைதான் பரிசேயர்கள் தாங்கள் செய்வதை அறியாமல் செய்தார்கள்; “”நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்”” என்று பேதுரு குறிப்பிடுகின்றார் (அப்போஸ்தலர் 3:17). இதைப்போலவே, இன்றும் கிறிஸ்துவின் சரீர அங்கங்களை அவமானப்படுத்துகின்றவர்கள், தாங்கள் செய்வதை அறியாமலேயே செய்கின்றனர். இவர்கள் கர்த்தரினால், குற்றவாளி என்று தீர்க்கப்படுவதற்கு ஏதுவாய் இருக்கின்றனர், அதாவது, “”இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் எந்திரக்கல்… நலமாயிருக்கும்”” (லூக்கா 17:2). ஆகவே ஜீவ ஊற்று புறப்படும் இருதயத்தைக் கவனத்துடன் நாம் ஒவ்வொருவரும் காத்துக் கொள்வோமாக.

பரிசேயரின் இருதயங்கள் சரியான நிலையில் இருந்திருந்தால், நீதி மற்றும் சத்தியத்தின் மீதான அன்பில் நிறைந்திருந்தால், உண்மையுள்ளவைகளையும், ஒழுக்கமுள்ளவைகளையும், நீதியுள்ளவைகளையும், கற்புள்ளவைகளையும், அன்புள்ளவைகளையும், நற்கீர்த்தியுள்ளவைகளையும், புண்ணியம் உள்ளவைகளையும் உணர்ந்து, ஏற்றுக்கொண்டிருந்தால், தேவனுடைய ஆட்டுக்குட்டியானவரைப் புறக்கணித்துச் சிலுவையில் அறையும் தவறைச் செய்திருக்கமாட்டார்கள். இதைப்போல சகோதர சகோதரிகளுக்கான அன்பின் ஆவி யாரிடம் இருக்கின்றதோ, அவர்கள் துன்பம் கொடுக்கும் ஸ்தானத்தை எடுப்பதில்லை; இத்தகையவர்கள் மாத்திரமே சரியான விதத்தில், நிஜமான பஸ்காவைப் புசிக்க முடியும்.

பஸ்கா காலங்களில் யூதர்கள் கைக்கொள்ளும் விநோதமான வழக்கத்தை அறிந்திருந்த ரோம ஆளுநர், விசாரணை அறைக்கு வெளியே தனது ஆசனத்தைக் கொண்டுவந்து அமர்ந்தார். இயேசு விசாரணைக்கு முன்பு நிறுத்தப்பட்டார். பின்புறமாக நின்று அவர் மேலுள்ள குற்றச்சாட்டை யூதர்கள் பிலாத்துவுக்கு அறிவித்தார்கள். சிலுவையில் அறையப்படுவதற்குப் பாத்திரமாக, குற்றவாளியாக இயேசுவை முன் நிறுத்தினாலே போதும், பிலாத்துத் தீர்ப்புக் கொடுத்துவிடுவார் என்று எண்ணினார்கள். குற்றச்சாட்டுகள் சொல்வது கூட அவசியப்படாது என்றே எண்ணினார்கள். ஆதலால்தான், “”இவன் குற்றவாளியாயிராவிட்டால் இவனை உம்மிடத்தில் ஒப்புக் கொடுக்கமாட்டோம்”” என்று பதிலளித்தார்கள் (யோவான் 18:30). பிலாத்து, பரிசேயர்களை மதிப்பதில்லை; ஆகையால், “”இவன் மேல் என்ன குற்றம் சாட்டுகின்றீர்கள்”” என்று பரிசேயர்களிடம் அவர் கேட்ட கேள்வியானது இயேசு, பரிசேயர்களுக்கு எதிராக குற்றம் சாட்ட, இயேசுவுக்குப் வாய்ப்புக் கொடுக்கும்படியாகத்தான் கேட்டார் என்று சிலர் கருதுகின்றனர். பல அனுபவங்கள் பிலாத்துவுக்கு இருந்தபடியால், ஒருவருடைய குணங்களைப் பார்வையிலேயே, தோற்றத்திலேயே கண்டுபிடித்து விடுவார். அவரால் நமது கர்த்தரின் தோற்றத்தில் எவ்விதமான குற்றவாளிக்குரிய அம்சம் இல்லை என்றும், அவருக்கு எதிராக குற்றம் சாட்டுகிறவர்களிடம்தான் குற்றவாளிக்குரிய அம்சம் அதிகம் இருக்கின்றது என்றும் காணமுடிந்தது.

ஆசாரியர்களும், பரிசேயர்களும் எதிர்ப்பார்க்காத வண்ணம் பிலாத்து, இயேசுவை நீங்களே நியாயம் விசாரியுங்கள் என்று திரும்ப ஒப்புக் கொடுத்துவிட்டார். “”இது ஏதோ மத ரீதியான பிரச்சனை, இதில் நான் செய்ய ஒன்றுமில்லை; நீங்கள் இவரைக் கூட்டிக்கொண்டுபோய் உங்களுடைய பிரமாணங்கள் மற்றும் வழக்கத்தின்படி அவரைச் சிறையில் அடைக்கவோ அல்லது அடிக்கவோ அல்லது உங்களுடைய பிரமாணத்தின்படி சரியான தண்டனை வேறு ஏதாகிலும் கொடுங்கள்”” என்றவிதத்தில் பிலாத்துச் சொல்லிவிட்டார். ஆனால் நமது கர்த்தரை மரணத்திற்குள்ளாக்கும் வாஞ்சையினால் தங்களுடைய உண்மையான இருதய நிலையை வெளிப்படுத்தும் விதமாக, “”ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய…அதிகாரமில்லை”” என்று கூறினார்கள் (யோவான் 18:31)

முரட்டுத்தனமானவராகவும், கொடூரமானவராகவும், இரக்கமற்றவராகவும் பிலாத்து இருந்தாலும், சூழ்நிலை என்ன என்று அதாவது, குற்றவாளிகள் குற்றமற்றவரைக் கொல்லப்பார்க்கின்றார்கள் என்று புரிந்துக் கொண்டார். தனிமையில் யோசிக்கவும், இயேசு தம்மைப் பாதுகாப்பதற்காக என்ன சொல்ல போகிறார் என்பதைக் கேட்பதற்கும் பிலாத்து யூதர்களிடமிருந்து, இயேசுவைத் தனித்து விசாரணை அறைக்குள் கொண்டுவந்தார். பிலாத்துவுக்குத் தனது ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில், சமாதானத்தைத் தக்கவைக்க வேண்டியது முதல் கடமையாக இருப்பினும், ஜீவன் மற்றும் மரணம் கொடுக்கும் அதிகாரம் அவர் கரத்தில் இருப்பினும், அவர் யூதர்களின் ஆலோசனை சங்கம் வைக்கும் மனுவைப் புறக்கணிக்கும் அளவுக்கு, நமது கர்த்தரின் தோற்றத்தில் ஏதோ ஒரு தாக்கம் பிலாத்துவிற்கு ஏற்பட்டிருக்க வேண்டும். தனது ஆளுகையின் வட்டாரத்தில் சமாதானம் நிலவ வேண்டுமெனில், அவ்விடத்தின் பிரதான மனுஷர்களோடு இணங்கி செயல்பட வேண்டும். அவ்விடத்தின் பிரதான மனுஷர்களோ, சமாதானத்தைக் குலைக்கும்படியாக ஒருவரின் மரணத்தை விரும்புகின்றனர். பிலாத்து எவ்விதத்திலும் கவனமாய்ச் செயல்பட வேண்டிய முக்கியமான ஸ்தானத்தில் காணப்பட்டார். அவர் ரோம அரசாங்கத்தைப் பிரியப்படுத்த வேண்டும், உள்ளூர் சார்ந்த அதிகாரிகளிடம் ஏற்படும் பிரச்சனைகளையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இப்பொழுது இந்த உள்ளூர் அதிகாரிகள் தங்களுடைய தீமையான திட்டம் தடைப்பட்டால், [R2471 : page 123] பெரிய அளவில் பிரச்சனையை உருவாக்க ஆயத்தமாயிருந்தார்கள். இதே ஜனங்கள் ஆறு வருடங்களுக்குப் பின்பு பிலாத்துவை நீக்கும்படிக்கு, ரோம சக்கரவர்த்திக்கு அநேக குற்றச்சாட்டுகள் அனுப்பினார்கள்.

பிலாத்து இயேசுவுடன் தனித்து இருக்கும்போது, நீ யூதருடைய இராஜாவா? என்று கேள்வி கேட்டார். யூதர்கள் உண்மையில் இம்மாதிரியான குற்றச்சாட்டை இயேசுவுக்கு எதிராக ஏற்படுத்தவில்லை. அவர்கள் கலிலேயனாகிய இயேசுவை, யூதருடைய இராஜா என்று சொல்வதற்கு விருப்பம் கொள்ளவில்லை. மாறாக இயேசுவைத் தீமை செய்கிறவர் என்றும், கலகவாதி என்றும், தேசத்தின் சமாதானத்திற்கு அவர் மரணம் அவசியம் என்றும்தான் குற்றம் சாட்டினார்கள். இயேசு சில நாட்களுக்கு முன்பு கழுதையின் மீது ஏற்றப்பட்டு வந்ததையும், ஜனங்கள் அவரைத் தாவீதின் குமாரன் என்று வாழ்த்தியதையும் குறித்து பிலாத்துக் கேள்விபட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. நீராக என்னைக் குறித்து இப்படிச் சொல்லுகின்றீரா அல்லது மற்றவர்கள் கூறி இதைக் கேட்கின்றீரா என்று இயேசு பிலாத்துவிடம் கேட்டார். “”இந்த விஷயத்தைக் குறித்த சத்தியம் என்னவென்று அறிந்துக் கொள்ளும் விருப்பத்தில் கேட்கின்றீரோ அல்லது கேள்விப்பட்டதை வெறுமனே விசாரிக்கின்றீரோ?” என்ற விதத்தில் இயேசுவின் கேள்வி இருந்தது. அதற்கு நான் யூதனோ? என்று பிலாத்து, பதில் கேள்வி கேட்டார். அதாவது, “”உங்களுடைய யூத நம்பிக்கைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகள் குறித்து எனக்கு என்ன தெரியும்? நான் ஓர் ரோம ஆளுநர். நீர் இராஜாவானல் உம்முடைய சொந்த தேசத்தாரும், பிரதிநிதிகளுமே உம்மை என்னிடத்தில் ஏன் ஒப்புக் கொடுத்துள்ளனர். நீர் என்ன செய்தீர்? நீர் இராஜாவானால், என்ன காரியம் உம்முடைய பிரஜைகளை உமக்கு எதிராக திருப்பிற்று? நீர் சாந்தமாகவும், பணிவாகவும், தாழ்மையாகவும் உம்மைத் தற்காத்துக் கொள்ளாமலும் இருக்கின்றீர். உம்மால் ரோம இராஜ்யத்திற்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட போவதில்லை. உம்முடைய ஜனங்கள் உமக்கு எதிராக கூக்குரலிடுகின்றார்கள். யூதருடைய இராஜாவே, இந்த விநோதமான சூழ்நிலையை எனக்கு விவரியும்” என்ற விதத்தில் கேள்விக் கேட்டார்.

இயேசு தமது இராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல என்றும், இல்லையேல் தம்முடைய ஊழியர்கள் தமக்காக போராடியிருப்பார்கள் என்றும், தற்போது நடக்கும் விஷயங்கள் சம்பவித்திருக்காது என்றும், தாம் சத்துருக்கள் கையில் விடப்பட்டிருக்க மாட்டார் என்றும், தம்முடைய இராஜ்யம் இன்னும் வரவில்லை என்றும், இயேசு விளக்கினார். இப்படிப்பட்ட மாபெரும் இராஜா இவ்வளவு எளிமையான சூழ்நிலையில் காணப்படுகின்றார் என்ற அனுதாபத்தினாலும், அதிர்ச்சியினாலும், நீர் உம்மை இராஜா என்று கூறுகின்றீரோ என்று பிலாத்துக் கேட்டார். அதற்கு இயேசு நீர் கூறினபடியே நான் இராஜாதான் என்றார். “”நீர் கூறுவது சரியே, நான் இராஜாதான்”” என்ற விதத்தில் இயேசு பதிலளித்தார். “”சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்”” என்று இயேசு கூறினார்.

இப்படியாகப் பிலாத்துவுக்கு முன்பு இயேசு நல்ல அறிக்கையிட்டார் என்று அப்போஸ்தலர் கூறுகின்றார் (1 தீமோத்தேயு 6:13). இயேசு தமது இராஜ உரிமையையும், தெய்வீக அதிகாரத்தையும் அறிக்கையிட்டார். நமது கர்த்தர், தாம் ஒரு இராஜா என்று கூறினதைப் பிலாத்து நம்பவில்லை என்றும், இயேசுவை மதவெறி கொண்டவராகப் பார்த்தார் என்றும் நாம் எண்ணி விடக்கூடாது. இயேசுவைக் குறித்துக் கேள்விபட்டவர்களில் சிலர் மாத்திரமே, அவர் தம்மை இராஜா என்று கூறின வார்த்தையின் உண்மையை அறிந்திருந்தனர். பெயர்க்கிறிஸ்தவ மண்டலங்களிலும் கூட, சிலர் மாத்திரமே நமது கர்த்தருக்குரிய இராஜ ஸ்தானத்தை உணர்ந்துள்ளனர்! இயேசுவைப் பாடுள்ள மனுஷனாக அடையாளம் கண்டு கொண்ட அனைவரும் மற்றும் இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்று உணர்ந்துக் கொண்ட சிலரும், இயேசு மனுஷனை மாத்திரம் அல்ல, முதல் ஆதாமுக்குக் கொடுக்கப்பட்ட சாம்ராஜ்யத்தையும் மீட்டுக் கொண்டார் என்பதைப் புரிந்துக் கொள்ளவில்லை. நமது கர்த்தரை ஆசாரியராகக் காண்கின்ற அநேகர், அவர் ஒரு இராஜா என்பதைக் காணத் தவறி விடுகின்றனர்; மேலும், ஆயிர வருட அரசாட்சியில், மெல்கிசெதேக்கின் முறைமையின்படியான ஆசாரியராகச் சிங்காசனத்தில், வீற்றிருப்பார் என்பதையும் காண தவறிவிடுகின்றனர். மணவாட்டியாகிய சபை இயேசுவோடு, அவருடைய ஆசாரிய மற்றும் இராஜ பணியிலும்/ஸ்தானத்திலும் பங்கடைவார்கள்.

அவருடைய ஆசாரிய பணி என்பது இரக்கம், மன்னிப்பு மற்றும் கிருபை பாராட்டுவதைக் குறிக்கின்றது. அவருடைய இராஜ பணியும், உலகத்தின் இரட்சிப்புக்கு இன்றியமையாதது. மனுஷர்கள் பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்தினின்று விடுவிக்கப்பட்டு, அவர்கள் நித்திய ஜீவனைப் பெற தகுதியடையும் பொருட்டு, இருப்புக் கோல் ஆட்சியினால் ஆளப்பட வேண்டும். தம்முடைய விலையேறப் பெற்ற இரத்தத்தினால் நம்மை மீட்டுக் கொண்டவருக்கே, இவ்வேலைகள் அனைத்தும் உரியதாகும். நமது கர்த்தருடைய உவமையில் பெரும்பாலானவைகள், பல்வேறு நிலைகளிலுள்ள இராஜ்யத்தைப் பற்றியதாகும்; அதாவது இராஜ்யம் முதலாவது கருவாக இருந்து, படிப்படியாக வல்லமையிலும் மற்றும் அதிகாரத்திலும் உயர்ந்து, தீமையை அப்புறப்படுத்தி, பின்னர் என்றென்றும் நிலைத்திருக்கும் நீதியானது இந்த இராஜ்யத்தில் கொண்டுவரப்படுவது பற்றியதாகும்.

இந்த இராஜ்யம் சத்தியம், நீதி மற்றும் அன்பின் இராஜ்யமாக விளங்கி, அதன் பிரஜைகளின் நன்மைக்கு ஏதுவாக செயல்படும். சத்தியத்திற்குச் சாட்சிக் கொடுப்பதின் மூலம் அந்த இராஜ்யத்திற்கு அஸ்திபாரம் போடுவதே, முதலாம் வருகையின் போது நமது கர்த்தரின் ஊழியமாக இருந்தது; அதாவது தேவன் அன்பும், நீதியும் உள்ளவராக இருக்கின்றார் என்பதும், யாரெல்லாம் சத்தியத்தையும், நீதியையும் விரும்புகின்றார்களோ, அவர்களைத் தம்முடன் மீண்டும் சேர்த்துக் கொள்ள விருப்பம் உள்ளவராக இருக்கின்றார் என்பதுமே அந்தச் சத்தியமாக இருந்தது. நமது கர்த்தர் இந்தச் சத்தியத்திற்கு உண்மையாய் இருந்தபடியால், எதிராளியானவனினால் குருடாக்கப்பட்டவர்களிடமிருந்து அவருக்கு எதிர்ப்பு வந்தது. ஆகவே நான் சத்தியத்திற்குச் சாட்சி கொடுக்க வந்தேன் என்ற அறிக்கையானது, அவரது ஊழியத்தின் சுருக்கமாக இருந்தது. இந்தச் சத்தியத்திற்குச் சாட்சி கொடுக்க அவர் ஜீவனை இழக்க வேண்டியிருந்தது. மேலும் சத்தியத்திற்காக [R2472 : page 123] அவர் தமது ஜீவனைக் கொடுத்தது என்பது, மீட்பின் கிரயமாக இருந்தது. இதைப்போல் அனைத்துக் கர்த்தருடைய பின்னடியார்களும் சத்தியத்திற்கு, அதாவது தேவனுடைய குணம் மற்றும் திட்டம் தொடர்பான சத்தியத்திற்கு, அதாவது உலகத்தின் மீட்பின் விஷயத்தில் முதலாம் வருகையின்போது நிறைவேறின அந்தத் திட்டத்தின் அம்சங்களைக் குறித்ததான சத்தியத்திற்கும், பாவம் மற்றும் அழிவிலிருந்து உலகம் மீட்கப்படுவதன் மூலம், இரண்டாம் வருகையின் போது நிறைவேறப் போகிற அந்தத் திட்டத்தின் அம்சங்களைக் குறித்ததான சத்தியத்திற்கும் சாட்சிக் கொடுக்க வேண்டும். இப்படியாகச் சத்தியத்திற்குச் சாட்சிக் கொடுக்க வேண்டுமெனில், இயேசுவின் அனைத்து உண்மையான பின்னடியார்களும் தங்களுடைய ஜீவனை, கிறிஸ்து இயேசுவின் மூலம் தேவன் ஏற்றுக் கொள்ளத்தக்கதான பரிசுத்தமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். இராஜ்யத்தில் ஜீவாதிபதியோடு உடன் சுதந்தரர்கள் ஆக விரும்பும் ஒவ்வொருவரும், சத்தியத்திற்குச் சாட்சிக் கொடுக்க வேண்டும். அதாவது இராஜ்யம் மற்றும் அதன் அஸ்திபாரம் மற்றும் முடிவில் அதன் மகிமையின் அம்சங்களைக் குறித்து, நாம் நல்ல அறிக்கை பண்ண வேண்டும்.

இப்படியான சுருக்கமான பேச்சு, பிலாத்துவுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. மத ரீதியிலான விவாதத்திற்குள் பிரவேசிக்க பிலாத்துவுக்கு விருப்பமில்லை. ஏனெனில், பேச்சு தொடர்ந்தால், தன்னுடைய கடந்த கால வாழ்க்கையின் குற்றங்கள் நினைவிற்கு வந்துவிடும் என்பதாலே, பேச்சு வார்த்தைகளைச் சடுதியாக நிறுத்தி, “”சத்தியமாவது என்ன?” என்று கேட்டார்; [R2472 : page 124] அதாவது, “”யார் உண்மையாய் இருக்கின்றார்கள்? எங்கு உண்மையான நீதி, உண்மையான சத்தியம், உண்மையான நேர்மை காணப்படுகின்றது?”” என்ற விதத்தில் கேள்வி கேட்டார். பதிலை எதிர்ப்பார்க்காமலேயே பிலாத்து, இயேசுவை விசாரணை அறையிலேயே விட்டுவிட்டு, ஆலோசனை சங்கத்தாரையும், அவர்களுடைய திரளான ஊழியர்களையும் பார்க்க புறப்பட்டு வெளியேறினார்.

தான் அவரிடத்தில் எந்தக் குற்றத்தையும் காணவில்லை என்ற தனது முடிவைப் பிலாத்து அறிக்கையிட்டார். தங்களுடைய இரை (இயேசு) தங்களைவிட்டுப் போய்விடுமோ என்று பயந்த யூதர்கள், யோசித்துக் குற்றச்சாட்டுகளை உருவாக்கினார்கள். இயேசுவின் மேல் தாங்கள் தேவதூஷணம் என்று சாட்டின குற்றத்தை இப்பொழுது கூறவில்லை. ஏனெனில் இக்குற்றச்சாட்டு, ரோம ஆளுநரின் கண்களுக்கு முன்பாக ஒரு குற்றமாக இருப்பதில்லை. மாறாக மூன்று குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள். அதாவது, 1) அப்போது இருக்கும் ஒழுங்குகளுக்கு எதிராக ஜனங்களைக் கலகம் செய்யத் தூண்டினார், 2) அந்நிய அதிகாரிகளுக்கு ஜனங்கள் வரிக்கொடுப்பது சரியல்ல என்று போதித்தார் மற்றும் 3) தன்னை இராஜாவாக அறிவித்தார் என்பவைகளே ஆகும் (லூக்கா 23:2).

பிலாத்து, இயேசு கலிலேயாவைச் சார்ந்தவர் என்று அறிந்த மாத்திரத்தில், இவ்விஷயத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் பொருட்டு, கலிலேயா பகுதிக்குப் பொறுப்பேற்றுள்ள ஏரோதிடம் இவ்விஷயத்தை விசாரிக்கும்படி கூறினார். ஏரோது அப்போது எருசலேமுக்கு வந்திருந்தார். இந்த ஏரோதுதான், யோவான் ஸ்நானகனைக் கொன்று போட்டார். (லூக்கா 23:8-ஆம் வசனத்தின்படி) இயேசுவைச் சந்திப்பதில் ஏரோது மிகவும் மகிழ்ச்சியடைந்தார் என்று வாசிக்கின்றோம். ஏரோது, இயேசுவைக் குறித்து அநேக விஷயங்களைக் கேள்விப்பட்டிருந்தபடியால், இயேசு தனக்கும் ஏதாகிலும் அற்புதம் செய்து காண்பிப்பார் என்று எண்ணினார். நமது கர்த்தரிடம் ஏரோது அநேக கேள்விகளைக் கேட்டார். ஆனால் எதற்கும் இயேசு பதில் பேசவில்லை. பிரதான ஆசாரியர்களும், வேதபாரகர்களும் இயேசுவின் மீது அநேக குற்றச்சாட்டுகளைக் குவித்தார்கள். அதற்கு இயேசு எதையும் மறுக்காமல், பதில் கூறாமல் இருந்தபடியால், இன்னும் நிரூபிக்க ஆதாரம் தேவையில்லையென்று தங்களுக்குச் சாதகமாகக் கூறினார்கள். நமது கர்த்தர் நடந்துக் கொண்ட விதத்தினாலும், தான் எதிர்ப்பார்த்த சந்தோஷம் கிடைக்காததினால் ஏரோது சினம் அடைந்தார், ஏமாற்றமும் அடைந்தார் என்பதிலும் ஐயமில்லை. பின்னர் ஏரோதும், அவர் சேவகர்களும், மீட்பர் தம்மை இராஜா என்று கூறின விஷயத்தைப் பரியாசம் பண்ணி, களிகூர்ந்தார்கள்.

பிலாத்துக் கொடுத்த மரியாதைக்காகவும், யோவான் ஸ்நானனைக் கொன்று போட்டதினிமித்தம் ஏற்பட்ட குற்றமனசாட்சியின் காரணத்திற்காகவும், ஏரோது நமது கர்த்தரைப் பிலாத்துவிடமே அனுப்பிவிட்டார். நமது கர்த்தர், பிலாத்துவின் நியாயவிசாரணை அறைக்குக் கொண்டு வரப்பட்ட தருணமானது, யூதர்களை இறுதியாக சாந்தப்படுத்தும் தருணமாகவும், நாட்டின் சமாதானத்தைத் தக்கவைக்கும் தருணமாகவும், மேலும் தன்னால் குற்றமற்றவர் என்று கண்டுபிடிக்கப்பட்ட ஒருவரை விடுவிக்க வேண்டிய தருணமாகவும் பிலாத்துவுக்கு இருந்தது. மேலும் இயேசுவிடம் எவ்விதமான குற்றத்தை, தான் காணாதிருந்தும் அவரைக் குற்றச்சாட்டுகள் நிமித்தமாக, சவுக்கினால் அடிக்க பிலாத்துக் கட்டளையிட்டார். சவுக்கடியினால் உண்டாகும் காயத்தினாலும், இழிவினாலும் குற்றச்சாட்டுகிறவர்களிடம் காணப்பட்ட கசப்பின் ஆவி திருப்திப்பட்டு இயேசுவை விடுவிக்க சம்மதித்துவிடும் என்று பிலாத்து உறுதியாக எதிர்ப்பார்த்தார். இயேசு ரோம சேவகர்களால் உள் அறையில் சவுக்கினால் அடிக்கப்பட்டு, இராஜ வஸ்திரமும், முள்முடியும் பிலாத்துவின் கட்டளையின் பேரில் தரிபிக்கப்பட்டார். இப்படிச் செய்வது இரக்கமற்ற போர்ச் சேவகர்களுக்குக் குதூகலமாகவும், இயேசுவுக்கு மிகவும் அவமானமாகவும் இருக்கும்; மேலும் இப்படிச் செய்வதினால் குற்றம் சுமத்தி, துன்பப்படுத்துபவர்களுக்குள் அனுதாபம் எழும்பவில்லை என்றாலும், திருப்தியாகிலும் அடைவார்கள் என்றே பிலாத்து எதிர்ப்பார்த்தார்.

இரவு நேரத்தில் அலைக்களிக்கப்பட்ட பெலவீனத்தினாலும், சவுக்கடியினாலும் பெலவீனப்பட்டுப் பரிதாப தோற்றத்தில் காணப்பட்ட இயேசுவை, பிலாத்து வெளியே கொண்டு வந்தார். முள்முடியுடனும், இரத்தம் தோய்ந்த இரத்தாம்பர வஸ்திரத்துடன் இயேசு நின்ற காட்சி அனுதாபத்திற்குரியதாக இருப்பினும், பரிபூரண மனிதனுக்குரிய உயரிய அம்சங்கள் இன்னும் இயேசுவிடம் காணப்பட்டதினாலேயே பல நூற்றாண்டுகளாக எதிரொலிக்கும், “”இதோ இந்த மனுஷன்”” என்ற வார்த்தைகளைப் பிலாத்துக் கூறினார். (யோவான் 19:5). நமது கர்த்தரின் தோற்றத்தினால் பிலாத்துக் கவரப்பட்டார். இப்படியாக ஒரு பிரமாண்டமான மனிதனை அவர் ஒருபோதும் கண்டதில்லை. அவரை யாரும் இராஜாவாக்கிவிடும் தோற்றம் அவருக்கு இருந்தது. இந்த விதமான எண்ணம்/தாக்கம், குற்றம் சாட்டுகிறவர்களிடமும் ஏற்படும் என்று பிலாத்து எதிர்ப்பார்த்தார். ஆனால் பிலாத்து எதிர்ப்பார்த்தது தவறு; கலகம் இன்னும் பெருகினது; சிலுவையில் அவரை அறையும்! சிலுவையில் அவரை அறையும்! என்று சத்தங்கள் அதிகம் எழும்பின. இதற்கிடையில் பிலாத்துவின் மனைவி தனக்கு வந்த சொப்பனத்தினிமித்தம், அந்த நீதிமானை எதுவும் செய்யாதீர்கள் என்ற ஆலோசனையைச் சொல்லி அனுப்பினாள் (மத்தேயு 27:19).

சிலுவையில் அறைவது உங்கள் நியாயப்பிரமாணமாக இருந்தால், நீங்களே அவரைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள் என்று பிலாத்து உடனடியாக யூதர்களிடம் கூறினார். ரோம ஆளுநர் இதில் தலையிட விரும்பாமல், விலகும் விதமாக இப்படிச் சொன்னதால், பரிசேயர்கள் தடுமாறினார்கள். அவர்கள் ரோம ஆளுநர் மற்றும் போர்ச்சேவகரின் கரங்களினால்தான் இயேசு சிலுவையில் அறையப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். ஏனெனில் இயேசுவின் நண்பர்களும், அவரால் சொஸ்தமாக்கப்பட்டு மற்றும் போதிக்கப்பட்டுள்ள திரளான ஜனங்களும் இயேசுவுக்கு உதவத்துணிந்து தங்களை மேற்கொண்டு விடுவார்கள் எனக் கருதினார்கள். இயேசு தம்மைத் தேவனுடைய குமாரன் என்று கூறினபடியால், அவர் நியாயப்பிரமாணத்தின்படி சாக வேண்டும் என்று பிலாத்துவிடம் கூறினார்கள். ஆனால் ஒருவர் தன்னைத் தேவனுடைய குமாரன் என்று கூறினால், அதற்கு நியாயப்பிரமாணம் மரணம் கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. நமது கர்த்தர் தம்மைப் பிதா என்று கூறியிருந்தால், அது தேவ தூஷணமாய் இருந்திருக்கும்; அவர் மரணத்திற்குப் பாத்திரமாகவும் இருந்திருப்பார். ஆனால் இயேசு தம்மை, தேவனுடைய குமாரன் என்று கூறினதில் எந்தத் தேவதூஷணமும் இல்லை. ஆனால் தங்களுடைய பிரயாசம் நிறைவேற வேண்டும் என்பதினால் நியாயப்பிரமாணத்தைத் திரித்தும் கூறிவிட்டார்கள்.

இதைக் கேட்ட மாத்திரத்தில், பிலாத்து இன்னும் எச்சரிப்பானார். இப்படிப்பட்ட தோற்றத்தை உடைய இயேசு, தேவனுடன் தமக்கு உறவு உள்ளது என்று கூறும்போது, பிலாத்துவைப் பயமடைய செய்தது. நமது கர்த்தரை விடுவிக்கும்படி, பிலாத்து இன்னும் வகை தேடினார். கடைசியில், [R2472 : page 125] “”இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டு,” கூறிப் பிலாத்துவை மிரட்டினார்கள் (யோவான் 19:12). பிலாத்து ஒருவேளை தங்களுடைய திட்டங்களைத் தடைபண்ணி, இயேசுவைச் சிலுவையில் அறையும் தங்களுடைய கோரிக்கையை மறுதலித்தால், சீசருக்கும், அவருடைய சாம்ராஜ்யத்துக்கும் பிலாத்து எதிரி என்று இராயனுக்கு அறிவிப்போம் என்றார்கள். இதற்குப் பிலாத்துவினால் ஒன்றும் சொல்ல முடியாமல், திரளான ஜனங்களுக்கு முன்பாக, “”இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்”” என்று கூறி கையைத் தண்ணீரினால் கழுவினார். மேலும், “”இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக”” என்று யூதர்கள் கூக்குரலிட்டபோது, பிலாத்து இயேசுவைச் சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தார்.

பிலாத்துவை நாம் குற்றஞ்சாட்ட முடியாது. அவர் ஒரு சாம்ராஜ்யத்தின் ஊழியனாக இருந்து, தனது கீழ் உள்ள ஜனங்களிடம் சமாதானத்தைக் காத்துக் கொள்ளும்படி தன்னால் முடிந்த நியாயமான விஷயங்களைச் செய்தார். ஒருவேளை முழுமையாக வெளிச்சமூட்டப்பட்டு, முழுமையாக அர்ப்பணித்த நிலையில் உள்ள பரிசுத்தவான், பிலாத்துவின் ஸ்தானத்தில் இருந்தால், இயேசுவை விடுவிக்கும் விஷயத்தில், பிலாத்துச் செய்ததைக் காட்டிலும் அதிகமாய்ச் செய்ய எதிர்ப்பார்க்கப் பட்டிருந்திருக்கும். நமது கர்த்தர் பிலாத்துவைக் குற்றஞ்சாட்டவில்லை. யூதர்களே இதற்குப் பொறுப்பானவர்கள். இதற்கான தண்டனை யூதர்கள் மேலும், அவர்களுடைய பிள்ளைகள் மேலும் பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இருக்கின்றது. அவர்களின் துக்க பாத்திரம் இன்னும் முழுமையாக நிரம்பி முடியவில்லை. வரவிருக்கிற மகா உபத்திரவக் காலத்தில், “”யாக்கோபின் இக்கட்டு காலம்”” என்பது மிகவும் முக்கியமானதாகும். அவர்களுடைய இரட்சிப்பும், பெரு மூச்சுவிடுகிற சர்வ சிருஷ்டிப்பின் இரட்சிப்பும் அருகாமையில் இருப்பதினால், அவர்கள் சார்பில் தேவனுக்கு நன்றி செலுத்துகின்றோம். “”நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும், விண்ணப்பங்களின் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஆவியையும் ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்” என்ற வசனத்தின் கருத்து மற்றும் சம்பவம் எவ்வளவு ஆசீர்வாதமாக இருக்கும் (சகரியா 12:10).