R3500 (page 40)
யோவான் 5:1-15
“”அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள்” (யோவான் 6:2).
பெதஸ்தா என்ற வார்த்தை “”இரக்கத்தின் வீடு” என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்றது. இது எருசலேமின் சுவர்களுக்கு அருகாமையில் காணப்பட்ட பெரிய ஒரு குளத்தைச் சூழ்ந்து கட்டப்பட்டுள்ள பெரிய மண்டபங்கள் உடைய இடமாகும். இக்குளத்திற்குத் தண்ணீர் வழங்கி கொண்டிருந்ததான நீர்த்தேக்கங்கள் சில குறிப்பிட்ட வாயுகள் குடிப்புகும் இடமாகக் கூடக் காணப்பட்டது. இந்த நீர்த்தேக்கங்களில் வாயு, திரண்டு குவிந்து வரும்போது, வாயுகள் தண்ணீரை வெளியேற்றுகின்றது; இவ்விஷயம் இன்றுள்ள எண்ணெய் கிணறுகளின் விஷயங்களிலும் நடக்கின்றது. வாயுகள் கலந்த தண்ணீர்; வெளியேறும் விஷயம் அவ்வப்போது நடந்தது, மேலும் இப்படியான சமயங்களில் குளத்தில் உள்ள தண்ணீர் கலங்குகின்றது அல்லது வாயுகளின் காரணமாக தண்ணீர் கொப்பளித்துப் பொங்குவது போன்று காணப்படும்.
இந்த விஷயத்தைப் புரிந்துக்கொள்ள முடியாததால், சிலர் குளத்தின் தண்ணீர் கலக்கப்படும் காரியத்தைப் பரலோகத்திலிருந்து தேவதூதன் வந்து அற்புதவிதமாய்க் கலக்குகின்றார் என்று எண்ணிக்கொண்டார்கள். விசுவாசம் அளிக்கும் உற்சாகமும் மற்றும் வாயுகளின் காரணமாக தண்ணீரில் காணப்படும் சில மருத்துவ தன்மைகளும், வியாதி சொஸ்தமடைவதற்கான காரணங்களாய் இருந்தன. இப்படிச் சொஸ்தப்படுத்தும் தன்மை இந்தக் குளத்தில் கலக்கப்படும் தண்ணீருக்கும் இருப்பதினால், அவ்வூர் முழுவதும் இக்குளம் பிரபலமாய்ப் பேர்ப்பெற்றதாய் விளங்கினது. தண்ணீர் கலக்கப்படும் மாத்திரத்தில், உடனே தண்ணீருக்குள் இறங்குகிறவருக்கு மாத்திரமே அவ்வாயுகளிடமிருந்து வரும் நன்மையை அடைய முடிகின்றது என்று தெரிகின்றது. வாயுகள் தண்ணீருடன் கலந்து வெளியே வரும்போது, வாயு உடனடியாக வாயு மண்டலத்தில்/ஆகாய மண்டலத்தில் சென்றுவிடுகின்றது, ஆகவேதான் உடனடியாக வாயு கலந்த தண்ணீரில் இறங்குகிறவர்கள் நன்மை அடைவதோடு கூட, சில வாயுகளையும் கூட மூச்சில் உள்வாங்குகின்றனர். இதே போன்ற நீர் ஊற்றுகள் இன்றும் கூட, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றது, அவைகளில் பெரும்பான்மையானவைகள் மருத்துவ தன்மை உடையவைகளாகவே இருக்கின்றது; மேலும் இவ்வூற்றுகள் அற்புதங்கள் என்று கருதப்படுவதில்லை.
“”மருத்துவக் குணம் உள்ள மூலிகை தண்ணீர்கள் உலகத்தின் பல பகுதிகளில் காணப்படும் பொதுவான ஒன்றாகும். அவைகள் மூலம் சொஸ்தமடையும்படிக்கு ஜனங்கள் நீண்ட பிரயாணம் செய்து வருவதுண்டு. விசேஷமாக ஆயிஸ்கல்பியஸின் இப்படிப்பட்ட மருத்துவ ஆசாரியர்கள், தண்ணீரண்டையில் மண்டபங்களைக் கட்டி அமைத்தனர். பைலேடிரிக்கஸ் என்பவர் காயூஸில் நடந்த யுத்தத்தில் காயமடைந்த கிரேக்க வீரர்கள், சிமிர்னாவுக்கு அருகாமையில் காணப்பட்ட அகமனான் என்ற ஊற்றின் தண்ணீர் மூலம் சுகமடைந்தார்கள் என்று கூறுகின்றார்” – “”இதனை அமெரிக்க சைக்கிளோபீடியா விளக்குகின்றது.”
நம்முடைய பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊற்றைப் போன்று ஒன்று கிஸ்ஸிங்கெனில் உள்ளது. இங்குத் தினந்தோறும், அநேக நேரத்தில் தண்ணீரில் இரைச்சல் ஒலி ஏற்பட்டு, பின்னர் குமிழ்கள் ஏற்படுகின்றது, மேலும் வாயு வெளியேறும் போது தண்ணீரில் இறங்கினால், நன்கு பயன் ஏற்படுகின்றது. ஐஸ்லாந்தில் வெந்நீர் ஊற்றுகள் காணப்படுகின்றன. வியோமிங்கிலும் வெந்நீர் ஊற்றுகள் கலங்குதல்கள் ஏற்படுகின்றன.
ஐந்து மண்டபங்களை உடைய இரக்கத்தின் வீடானது, கலக்கப்படும் குளத்தைப் பயன்படுத்த விருப்பப்படுபவர்களின் நன்மைக்கு ஏதுவாகவும், சௌகரியத்திற்கு ஏதுவாகவும் பொது மருத்துவ இல்லமாகக் கட்டப்பட்டது; இதனால்தான் பெரும் திரளான வியாதியஸ்தர்களும், கண் குருடாயப்போனவர்களும், வாடி வதங்கிப் போனவர்களும் கலக்கப்படும் தண்ணீரின் மூலம் நன்மை அடையலாம் என்று வாய்ப்புக்காக இந்த மண்டபங்களில் காத்துக்கிடந்தனர் என்று நாம் பார்க்கின்றோம். பழைய மூல கிரேக்க பிரதிகளில் யோவான் 5:4-ஆம் வசனத்தின் முதற்பகுதி தவிர்க்கப்பட்டுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். இவ்வார்த்தைகள் தேவனுடைய ஆவியினால் ஏவப்பட்டவைகளாகவும், அப்போஸ்தலனாகிய யோவானால் எழுதப்பட்டவைகளாகவும் இருக்கவில்லை. மாறாக பிற்காலங்களில் யோவான் எழுதின காரியங்களோடு சேர்க்கப்பட்ட வார்த்தைகளாகும். அநேகமாக ஜனங்கள் கொண்டிருக்கும் கண்ணோட்டத்தை விளக்கும் ஓரக்குறிப்பாக (marginal Note) இருக்க வேண்டும். அல்லது ஓரக்குறிப்பை எழுதின (வேதாகம மூலப்பிரதியைப் பார்த்து எழுதும்) எழுத்தாளரின் கருத்தாகக் கூட இருக்கலாம். இன்னும் சில வருடங்களுக்குப் பின்னர் வந்த வேறு ஒரு மூலப்பிரதியைப் பார்த்து எழுதும் எழுத்தாளரே (copyist) இந்த ஓரக்குறிப்பானது, வசனத்தில் விடப்பட்டுள்ளது என்று எண்ணி அதை, தான் பார்த்து எழுதிக் கொண்டிருக்கும் மூலப்பிரதியில் இடம்பெறும் வசனத்தோடு சேர்த்து விட்டார்; மீண்டும் இதே மூலப்பிரதி மீண்டும் மீண்டுமாக அப்படியாகவே பார்த்து எழுதப்பட்டு, இன்று நம்மிடத்தில் வந்துள்ளது. கடந்த 50 வருடங்களுக்கு முன்பு வரையிலும், அதாவது மிகப் பழமையான கிரேக்க மூலப்பிரதி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு வரையிலும் இந்த வார்த்தை தெய்வீக வார்த்தைகளின் [R3501 : page 40] பாகங்களாய் இராமல், அநேகமாக தற்செயலாய்ச் சேர்க்கப்பட்ட பாகம் என்று யாராலும் அறிந்துக்கொள்ள முடியவில்லை.
கடந்த பாடங்களில், நமது கர்த்தர் கலிலேயாவில் இருந்ததைக் குறித்தும், கானாவூரில் அவர் செய்திட்ட இரண்டாம் அற்புதம் குறித்தும் பார்த்தோம். இந்தப் பாடத்தில் யூதர்களின் வழக்கத்தின்படி மாபெரும் பண்டிகைகளில் ஒன்றை அனுசரிப்பதற்கெனக் கர்த்தர் மீண்டுமாக எருசலேமுக்கு வருவதைப் பார்க்கின்றோம். அவர் “”இரக்கத்தின் வீடு” எனும் பெதஸ்தாவுக்கு வந்த போது, இப்பாடத்தில் நாம் பார்க்கப் போகின்ற அற்புதத்தைச் செய்யும்படிக்கு அவர் நின்றார். சூழ்நிலையை நமது மனங்கள் நன்கு கிரகித்துக்கொள்ளத்தக்கதாக, இன்றைய கால எழுத்தாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ள இப்படியான இரண்டு மருத்துவ பொது இல்லங்களைக்குறித்து நாம் இங்குக் குறிப்பிடுகின்றோம். போவட் அவர்கள் கலிலேயாவின் கடல் அருகே உள்ள திபேரியாவிலுள்ள இப்ராஹிம் எனும் குளிக்கும் இடம் குறித்துப் பின்வருமாறு கூறுகின்றார்:-
“”தண்ணீர் ஊற்றுக் காணப்படும் குழியைச் சூழ்ந்து பல மண்டபங்கள்/அறைகள் உள்ளது. இந்த மண்டபங்களில் மிகுந்த வேதனை மற்றும் உபத்திரவங்களுடன் திரளான ஜனங்கள் படுக்கைகளில் கிடத்தப்பட்ட நிலையில் அல்லது போர்வைகளினால் மூடப்பட்ட நிலையில் மிகவும் நெருங்கி, நெருங்கி காணப்படுவதை நாம் பார்க்கலாம்.
சோலா அவர்கள் லூர்துஸில் உள்ள கிணற்றைச் சூழ்ந்து காணப்படும் மக்கள் கூட்டத்தைக் குறித்துப் பின்வருமாறு கூறுகின்றார்:-
“”அங்கு எவ்விதமான ஒழுங்கும் காணப்படுவதில்லை; அனைத்து வகையான வியாதியஸ்தர்களும் மற்றும் நம்மை நடுங்க வைக்கும் அளவுக்கு மிகவும் அரிதானதாயும் மற்றும் மிகவும் பயங்கரமாயுள்ள வியாதிகளை உடையவர்களும் ஒன்றாய்க் கூடிக் கிடக்கும் நரகம் போன்று அவ்விடம் காட்சியளிக்கின்றது.
இப்படிப்பட்டதான ஒரு காட்சியையே, நமது அருமையான மீட்பர், இந்த இரக்கத்தின் வீட்டிற்கு அருகாமையில் வந்த போது கண்டார். அவருக்கு முன் காணப்பட்ட அந்தப் பாவப்பட்ட வியாதியஸ்தர்களை அவர் பார்த்த போது, அவருக்கு எந்த அளவுக்கு அனுதாபம் ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் விவரித்துக் கூறுவதைக் காட்டிலும், கற்பனை செய்து புரிந்துக்கொள்ளலாம். இவ்விதமான துன்பமும், வேதனையும் உடைய காட்சிகளை நாம் பார்க்கையில், நம்முடைய [R3501 : page 41] விழுந்துபோன இருதயங்களே ஆழமாகத் தொடுமாயின், இப்படிப்பட்டக் காட்சியைப் பார்க்கும்போது, நமது கர்த்தருக்கு எத்துணை ஆழமான அனுதாபம் ஏற்பட்டிருக்க வேண்டும். முழு உலகத்தையும் அன்புகூர்ந்தபடியால், பிதாவோடு தமக்குக் காணப்பட்ட மகிமையைத் துறந்து, மனித சுபாவம் எடுத்து, மரிக்கவும், நம்மை மீட்பதற்கும், இறுதியில் பாவம் மற்றும் அதன் தண்டனையான நோய் மற்றும் மரணத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்கும் என வந்தவர், கலக்கப்படும் தண்ணீரிலிருந்து நன்மை பெற்றுக்கொள்ளலாம் என்ற வாய்ப்பிற்காக கும்பல் கும்பலாக தமக்கு முன் காணப்பட்ட, பாடுபடுகிற ஜனக்கூட்டத்தைக் கண்டு அனுதாபப்பட்டிருப்பார் என்பது நிச்சயமே. இப்படியாக அவருக்கு மிகுந்த அனுதாபம் ஏற்பட்ட போதிலும், அக்கூட்டத்தாரில் ஒருவரையே நமது கர்த்தர் சொஸ்தப்படுத்தினதாக பதிவுகள் நமக்குத் தெரிவிக்கின்றன. ஆனால் இப்படிச் செய்வது அவருடைய வழக்கமே; மேலும் இவ்வழக்கமானது அவருடைய பிரசங்கங்களிலும் விளக்கப்பட்டுள்ளது; அதாவது பஞ்சக் காலத்தில் இஸ்ரயேலில் எத்தனையோ விதவைகள் இருந்த போதிலும், சாறிபாத் ஊரிலுள்ள விதவையினிடத்திற்கு எலியா அனுப்பி வைக்கப்பட்டார் என்றும், இஸ்ரயேலில் எத்தனையோ குஷ்டரோகிகள் இருக்க, சீரியாவைச் சேர்ந்த நாகமான் மாத்திரமே குஷ்டரோகத்திலிருந்து எலிசாவினால் சொஸ்தமாக்கப்பட்டார் என்றும் நம் கர்த்தர் சுட்டிக்காட்டியுள்ளார் (லூக்கா 4:27). இதைப்போலவே, இரக்கத்தின் வீட்டில் திரளான, ஜனக்கூட்டம் இருந்தாலும் கூட இயேசு, ஒருவரை மாத்திரமே சொஸ்தப்படுத்தினார்.
இதற்கான காரணத்தை அறிந்துகொள்வது கடினமான காரியமல்ல நமது கர்த்தர், தம்முடைய முதலாம் வருகையின் போது உலகத்தைப் பாவம், மரணம் மற்றும் சாத்தானின் வல்லமையின்று விடுவிக்கும்படிக்கு வராமல், மாறாக உலகத்தை மீட்டுக் கொள்ளும்படிக்கே வந்தார்; இன்னுமாக முதலாம் வருகையின் போது, அவர் அளித்த விடுதலைகள் எதுவாயினும், அவைகள் முழுமையான விடுதலையாய் இராமல், பகுதியளவிலான விடுதலையாகவும், அவருடைய வல்லமைக்கான விளக்கமாகவும் மாத்திரமே இருந்தது, அதாவது பார்ப்பதற்கு விசுவாச கண்களும், கேட்பதற்கு விசுவாச செவிகளும் உடையவர்கள் சார்பாக அவர் செய்யப் போகும் மீட்பினுடைய வேலையின் மீதும், அவர் மீதும் விசுவாசத்தைத் தூண்டி விடுவதற்கென நோக்கம் கொண்டுள்ள அவருடைய வல்லமைக்கான விளக்கங்களாக மாத்திரமே இருந்தது. இந்தக் கேட்கும் செவிகளையும், பார்க்கும் கண்களையும் உடையவர்களாகிய சொற்பமான பேர்களே அவருடைய வார்த்தைகளைக் கேட்டார்கள், மீதமானவர்கள் அனைவரும் குருடான நிலையிலேயே காணப்பட்டு விட்டார்கள்; அவர்கள் இன்று வரையிலும் கூட மாபெரும் மேசியாவை அறிந்துக்கொள்ளவில்லை. இந்தக் குருட்டு நிலையிலிருந்து தேவனுடைய ஏற்றவேளையில் அனைத்து இஸ்ரயேலர்களும் இரட்சிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற பாக்கியமான வாக்குத்தத்தத்திற்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்வோமாக. “மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஓர் இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில் புறஜாதியாருடைய நிறைவுஉண்டாகும்வரைக்கும் இஸ்ரயேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும். இந்தப்பிரகாரம் இஸ்ரயேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு, விலக்குவார்” (ரோமர் 11:25-26). இஸ்ரயேலர்கள் மாத்திரமல்லாமல், பூமியின் குடிகள் அனைத்தும் குருடான நிலையிலிருந்து இரட்சிக்கப்பட்டுவிடுவார்கள், “”அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்” (ஏசாயா 35:5).
நமது ஆதி பெற்றோர்களிடம் சாத்தானால் நடப்பிக்கப்பட்ட ஆதி வஞ்சனையே மன ரீதியிலும், சரீர ரீதியிலும், ஒழுக்க ரீதியிலும் முழு மனுக்குலத்திற்கும் உள்ள பிரச்சனைக்குரிய காரணமாக உள்ளது என்று நாம் மனப்பூர்வமாய் ஒப்புக்கொண்டாலும் வியாதி விஷயத்தில், அவைகள் எதிராளியானவனுடைய நேரடி அல்லது மறைமுகமான வேலை என்பதை நாம் மனப்பூர்வமாய் ஒப்புக்கொண்டாலும், வியாதிப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் சாத்தானால் கட்டப்பட்டுள்ளார்கள் என்று நாம் கூறினாலும் சாத்தான் கட்டப்படுவதற்கும், அவனுடைய கைதிகளை விடுவிப்பதற்குமான வேளை/காலம் (இப்பொழுது) வந்துள்ளது என்று புரிந்துக் கொள்பவர்களில் நாம் ஒருவராக இருப்பதில்லை. இதற்கான வேளை தெய்வீக ஏற்பாட்டின்படி எதிர்க்காலத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதாவது ஆயிரம் வருஷம் அரசாட்சியில் நடக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. நமது கர்த்தர் அனைத்து வியாதியஸ்தர்களுக்கும் அற்புதம் பண்ணாததினால், இன்றைய நாட்களிலும் கூட ஏதாகிலும் இயற்கையான விதத்திலோ அல்லது அற்புதமான வல்லமையினாலோ அனைத்து வியாதியஸ்தர்களும் சொஸ்தமாக்கப்படுவார்கள் என்று நாமும் எதிர்பார்க்கக்கூடாது. சாத்தானுடைய ஒவ்வொரு தீமையின் ஆற்றலும் சர்வ வல்லமையுள்ளவருடைய வல்லமையின் கட்டுப்பாட்டிற்குள் காணப்படுகின்றது என்பதையும், கர்த்தருக்கு தங்களை அர்ப்பணம் பண்ணியுள்ளவர்களின் விஷயத்தில் அவர்களின் நலன் கருதி, அவர் அனைத்துத் தீமையின் ஆற்றல்களை நன்மைக்கு ஏதுவாக மாற்றிப்போட சித்தமும், வல்லமையுள்ளவராய் இருக்கின்றார் என்பதையும், அவர்களுக்கு அவர் அனுமதிப்பது எதுவாயினும் அது அவர்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாகவே முடியும் என்பதையும் நாம் நினைவில்கொள்ளும்போது, நமக்கு ஆறுதலாய் இருக்கின்றது.
நமது கர்த்தருடைய அற்புதங்கள், வரவிருக்கின்ற அவருடைய மகிமையை வெளிப்படுத்தினது என்றும் நமக்குக் கூறப்பட்டுள்ளது. வெகு சீக்கிரத்தில் அதாவது அவருடைய ஆயிரவருட ஆளுகையின்போது, நமது அருமையான மீட்பர் உலகத்திற்காக நிறைவேற்றப் போகும், பாவம், வியாதி மற்றும் மரணத்திலிருந்துள்ள மாபெரும் சீர்த்திருத்துதலின் வேலைக்கான காட்சிகளாக அல்லது விளக்கங்களாக அல்லது படிப்பினைகளாகவே இந்த அற்புதங்கள் காணப்பட்டன. அவருடைய சபைகளாகிய நாம் (ஆயிரம் வருஷம் அரசாட்சியின்போது) அவரோடு சேர்ந்து, அவருடைய வல்லமையிலும், மகா மகிமையிலும், சிலாக்கியங்களிலும் பங்கடைவோம். கர்த்தருடைய முதலாம் வருகையின்போது, அச்சமயத்தில் காணப்பட்ட ஒட்டுமொத்த வியாதியஸ்தர்கள், குருடர்கள் மற்றும் உடல் செயலிழந்த நிலையில் காணப்படுபவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அவருடைய அற்புதமான வல்லமையினால் பயன்/நன்மை அடைந்தவர்கள் சொற்பமானவர்களாகவே இருந்தார்கள். கர்த்தருடைய எதிர்க்கால வல்லமையினை இந்த அற்புதங்கள் விளக்குவதோடல்லாமல், புதிய யுகத்தை அதாவது சுவிசேஷ யுகத்தை ஸ்தாபிக்கும் விஷயத்தில் பிதாவினுடைய பிரதிநிதிகளாகக் கர்த்தரும், அவருடைய அப்போஸ்தலர்களும் இருக்கின்றார்கள் என்பதற்குச் சாட்சி பகருகின்றதாயும் இருந்தது. இந்தச் சுவிசேஷ யுகமானது, யூத யுகம் மற்றும் மோசேயின் மூலம் வழங்கப்பட்ட அதன் நியாயப்பிரமாணத்தினிடமிருந்து மிகவும் வேறுபட்டதாய் இருந்தது.
கர்த்தர் தம்முடைய வல்லமையையும், வரவிருக்கின்ற தமது மகிமையையும் வெளிப்படுத்தும் பொருட்டு அந்தத் திரளான வியாதியஸ்தருடைய கூட்டத்திலிருந்து, அவரால் தெரிந்துக்கொள்ளப்பட்ட அந்த ஒரு மனுஷனைக் குறித்து இங்குப் பேசுவது ஏற்றதாய் இருக்கும். மற்றவர்களையெல்லாம் விட்டுவிட்டு, இந்த ஒரு மனுஷனை மாத்திரம் ஏன் கர்த்தர் தெரிந்துக்கொண்டார் என்று பதிவுகள் நமக்கு எதுவும் தெரிவிக்கவில்லை; எனினும் 38 வருடங்களாய் வியாதிப்பட்டிருந்த இந்த மனுஷன் தனக்குள் ஓரளவு பாவத்திற்கு மனம் நொந்து வருத்தம் அடைந்திருக்க வேண்டும் என்றும், நீதியின்பால் ஓரளவுக்கு விருப்பம் கொண்டிருந்திருக்க வேண்டும் என்றும், துன்பம் எனும் கரத்தின் கீழ், கடந்து போன 38 வருடங்களாக சில விலையேறப்பெற்ற படிப்பினைகளைப் பெற்றிருந்திருக்க வேண்டும் என்றும், இவ்விதமாய் இவர் சொஸ்தமாக்கப்படும் சலுகையை/உதவியைப் பெற்றுக்கொள்ளும் நிலைக்குள் வந்திருக்க வேண்டும் என்றும் நாம் எண்ணுகின்றோம். இக்காரியங்கள் இந்த யுகத்தின் மாம்சீக ஆசீர்வாதங்களைக் காட்டிலும் மிக விலையேறப் பெற்ற ஆசீர்வாதங்கள் எனக் கர்த்தரால் பரிமாறப்பட்டு வரும் கிருபையின் சலுகைகள் விஷயத்திலும் உண்மையாகவே இருக்கின்றன.
கர்த்தர் தமது சத்தியம் மற்றும் கிருபை குறித்த அறிவு வழங்கும் விஷயத்தில், ஏன் அவர் சிலரைக் காட்டிலும் வேறு சிலருக்கு அதிகமாய்ச்சலுகைக் காட்டுகின்றார் என்பது நமக்குத் தெரியவில்லை, எனினும் இவ்விஷயத்தில் ஒரு படிப்பினை உள்ளது என நாம் அனுமானிக்கின்றோம்; அதென்னவெனில் இருதயத்தின் நேர்மை, பாவத்திற்காக மனவருத்தங்கொள்ளுதல் மற்றும் தேவனுக்கடுத்தக் காரியங்களில் ஈடுபடுவதற்கு விருப்பங்கொள்ளுதல் ஆகியவைகளைக் கர்த்தர் பார்க்கின்றார் என்பதேயாகும். தேவன் விசேஷமான சலுகையை/கிருபைகளை அளிக்க வேண்டும் என்று விரும்பும் போது, அதை அவர் மனம்போனப் போக்கில் வழங்குவதில்லை, மாறாக சின்னஞ்சிறிய விசுவாசம் (அ) தகுதியின் அடிப்படையிலேயே வழங்குகின்றார் என்று நாம் அனுமானிக்கின்றோம். ஆனால் இங்குச் சொஸ்தமாக்கப்பட்ட இந்த மனுஷனுடைய விஷயத்தில், இந்த மனுஷனுக்கு மிகுந்த விசுவாசம் காணப்பட்டது என்று எவ்விதமான பதிவுகளும் இல்லை. மாறாக அம்மனுஷனிடத்தில் எவ்விதமான விசுவாசமும் இல்லை என்றும், அம்மனுஷனுக்கு கர்த்தர் யார் என்பது தெரியாது என்றும், தன்னை அவர் சொஸ்தப்படுத்தின பிற்பாடே அவரை யார் என்று அம்மனுஷன் அறிந்துக்கொண்டார் என்றுமே நாம் அப்பதிவுகளிலிருந்து அறிந்துக்கொள்கின்றோம்.
“”நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்” என்று நமது கர்த்தர் தம்முடைய பின்னடியார்களை நோக்கி, ஏற்கெனவே கூறின வார்த்தைகளானது, இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதும் நிறைவேறியுள்ளது (யோவான் 14:12); மாம்ச கண்களினுடைய பார்வையை மீண்டும் கொடுப்பதைப் பார்க்கிலும், புரிந்துக்கொள்ளுதலின் கண்களைத் திறப்பது மாபெரும் கிரியை ஆகும்; சுபாவத்தின்படியான செவியின் கேட்கும் திறனைத் திரும்பக் கொடுப்பதற்குப் பதிலாக, புரிந்துக்கொள்ளுதலின் செவிகளைத் திறப்பது என்பது மாபெரும் கிரியையாய் இருக்கும். பாவத்திற்கு அடையாளமாய் இருக்கும் குஷ்டரோகத்தைச் சொஸ்தப்படுத்துவதைப் பார்க்கிலும் பாவத்திலிருந்து சொஸ்தப்படுத்துவது மாபெரும் கிரியை ஆகும்; மாம்ச கால்களுக்குப் பெலத்தைத் திரும்பிக் கொடுப்பதைப் பார்க்கிலும் விழுகையின் காரணமாக முழு மனுக்குலத்திற்கும் ஏற்பட்ட பலவீனத்தையும், முடமாய்ப் போன நிலையையும் சரிச் செய்வது என்பது மாபெரும் கிரியை ஆகும். மேற்கூறிய இக்கருத்துக்களுக்கு இசைவாக நமது கர்த்தர் தாம் சொஸ்தப்படுத்தின மனுஷனை நோக்கி, “”நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று கேட்டு, அக்காரியத்தை அம்மனுஷனுடைய விருப்பத்திற்கே விட்டுவிட்டது போன்று, இன்று ஒழுக்க ரீதியிலான குறைபாடுகளிலிருந்து சொஸ்தப்படுத்தப்படுபவர்களின் விஷயத்திலும், இப்பொழுது ஆவிக்குரிய விஷயங்களில் வெளிச்சமூட்டப்படுபவர்களின் விஷயத்திலும் அப்படியாகவே விட்டுவிடுகின்றார்; அதாவது அவர்களுக்கான உதவி, அவர்களுக்குள்ளாகவே காணப்படுகின்றது. ஒருவேளை அவர்களுக்குக் கேட்கக்கூடிய செவிகளும், புரிந்துக்கொள்ளக்கூடிய கண்களும் இருந்தால், அதாவது கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய ஈவை அவர்களால் புரிந்துக்கொள்ள முடிந்ததெனில், அவர்களுக்கான கேள்வி என்னவெனில், “”நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்பதேயாகும்.
தேவனுடைய கிருபை குறித்த காரியங்களினால் கொஞ்சம் கேட்கவும், காணவும், புரிந்துக்கொள்ளவும் முடிகின்றவர்களில் அநேகர் ஒழுக்க ரீதியில் குஷ்டரோகிகளாகவும், மன ரீதியில் குருடாகவும், பாதிச் செவிடாகவும் இருக்கின்றார்கள், மேலும் இத்தகையவர்கள் தங்களால் புரிந்துக்கொள்ள முடிந்த அந்தக் கொஞ்சமான காரியங்களை ஏற்றுக்கொண்டு, [R3501 : page 42] சொஸ்தமடைய/முழுமையடைய விரும்பினால், அதன் மூலம் அவர்கள் கிருபை மேல் கிருபை அடைந்து, அறிவு மேல் அறிவு அடைந்து, ஜெயம் மேல் ஜெயம் அடைந்து, இறுதியில் கர்த்தர் தமது “”சிறு மந்தையினருக்கு” அளித்துள்ள மாபெரும் ஆசீர்வாதம் முழுவதையும் அடைவார்கள்; தேவனுடைய சுதந்திரர்கள் ஆகுவதும், நாம் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு, அவருடைய இராஜ்யத்தில் உடன் சுதந்திரர்கள் ஆகுவதும் அவரோடு கூடப் பாடுபட்டால், அவரோடு கூட மகிமை அடைவதுமானவைகளே சிறுமந்தையினருக்குக் கொடுக்கப்படும் மாபெரும் ஆசீர்வாதங்கள் ஆகும்.
மேற்கூறப்பட்டுள்ள இக்கருத்துகளுக்கு இசைவாக, நாம் அனைவரும், நம்முடன் தொடர்புக்குள் வரும் அனைவரையும் மற்றும் தேவனுடைய கிருபையைப் புரிந்துக்கொள்ளவோ (அ) உணர்ந்துக்கொள்ளவோ (அ) பார்க்கவோ (அ) கேட்கவோ வல்லமை இல்லாத அனைவரையும், நாம் அனுபவித்த அதாவது, “”ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையாகிய” தெய்வீக உவியை ஏற்றுக்கொள்ளத்தக்கதாகப் பரிந்துரைக்கும்படிக்கு நமது செல்வாக்கைப் பயன்படுத்துவோமாக. கர்த்தர் கேட்ட கேள்விக்கு உறுதியாக பதில் கொடுப்பவர்கள் மாத்திரமே, நாம் பிரயாசம் எடுப்பதற்குப் பாத்திரமாய் இருப்பார்கள். கர்த்தரிடத்தில் ஒருவரது விருப்பம் தெரிவிக்கப்பட வேண்டும், இல்லையேல் அவரது ஆசீர்வாதம் இருதயத்திலும், ஜீவியத்திலும் கடந்து வரமுடியாது; பாவ நோயில் காணப்படுபவர்கள் “”நீ சொஸ்தமாக வேண்டும் என்று விரும்புகிறாயா?” என்ற கேள்விக்கு உறுதியான பதில் அளிக்க ஆயத்தமாக்கப்படுவதற்கு ஏதுவாக, அவர்களுடைய இருதயங்களில் ஒரு கிருபையான அற்புதத்தைக் கர்த்தர் செய்வார் என்று நாம் எதிர்ப்பார்க்க முடியாது. சொஸ்தமடைய இவ்விதமாய் விருப்பம் உடையவர்கள் மாத்திரமே, இந்த யுகத்தில் நன்மை அடைய முடியும், ஏனெனில் இதுவே தெய்வீக ஏற்பாடாகக் காணப்படுகின்றது; ஏனெனில் கர்த்தர் இப்படிப்பட்ட விருப்பம் உள்ளவர்களையே தேடுகின்றார் மற்றும் இப்படிப்பட்டவர்கள் மாத்திரமே தம்மை ஆவியிலும், உண்மையிலும்/சத்தியத்திலும் தொழுதுகொள்ள வேண்டும் என்று விரும்புகின்றார். மேற்கூறப்பட்ட காரியங்களுக்கு இசைவாகவேதான், நமது கர்த்தர், தம்முடைய முதலாம் வருகையின்போது, தம்முடைய பிரசங்கத்தைக் கேட்டவர்கள் அநேகரிடம் அவர், “”வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை” (திருவிவிலியம்; யோவான் 3:40) என்று கூறியுள்ளார். கர்த்தரிடத்தில் வருவது என்பது, அவருடைய ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்வதையும் மற்றும், “”ஆம் கர்த்தாவே, சொஸ்தமாக வேண்டுமென நான் விரும்புகின்றேன்” என்று அவரது கேள்விக்குப் பதிலளிப்பதையும் குறிக்கின்றது.
இவர்கள் சொஸ்தமாக்கப்படும் காரியமானது உடனடியாக நடைப்பெறாமல், படிப்படியாக [R3502 : page 42] நடைப்பெறும் காரியமாகும். இவர்கள் கிருபையிலும், அறிவிலும், அன்பிலும் வளர்ந்து கொண்டிருப்பார்கள், மேலும் தற்காலத்தில் கேள்விக்கு உறுதியான பதில் அளித்துக் கொண்டு, மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படி நடக்க முற்படுவதின் மூலம், தங்களின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துபவர்கள் அனைவருக்கும், கர்த்தர் வாக்களித்துள்ள முதலாம் உயிர்த்தெழுதலுக்குரிய மாற்றத்தில், இவர்களிடத்தில் கிருபையின் வேலையானது நிறைவடையும். இவர்கள் நல்ல வைத்தியனுடைய பராமரிப்பின் கீழ் வந்து, பின்னர் இறுதியில் அவர் இவர்களைத் தமக்கு ஒப்பான சாயலில் பூரணமும், நிறைவும், முழுமையும் படுத்துவார்.
சபையின் தற்காலத்துத் தெரிந்துக்கொள்ளுதலும், சொஸ்தமடைவதற்கான/ முழுமையடைவதற்கான தற்கால சலுகைகள் மற்றும் சிலாக்கியங்களும், முதலாம் உயிர்த்தெழுதலில் நிறைவடையும். இதற்குப் பின்னர் உலகத்திற்கு ஒரு பொதுவான ஆசீர்வாதம் கடந்து வர போகின்றபடியால், தேவனுக்கு நன்றி. தேவனுடைய ஏற்றவேளையில், தேவனுடைய வாசஸ்தலமானது மனுஷர் மத்தியில் காணப்படும் என்றும், அவர் அவர்கள் மத்தியில் வாசம் பண்ணுவார் என்றுமே வேத வாக்கியங்கள் வாக்களிக்கின்றன. இது இன்னமும் வரவில்லை. மனுக்குலம் இன்னமும் சாபத்தின் கீழேயே காணப்படுகின்றனர்; சாத்தான் இன்னமும் “”இவ்வுலகத்தின் அதிபதியாகவே” காணப்படுகின்றான்; நாம் இன்னமும் “”உம்முடைய இராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செயல்படுவது போல, பூமியிலும் செயல்படுவதாக என்று ஜெபம் பண்ணி காத்துக் கொண்டிருக்கின்றோம். தேவனுடைய வாசஸ்தலம் அல்லது வீடு, ஆயிரம் வருஷம் யுகத்தின் போதே உலகத்தில் ஸ்தாபிக்கப்படும். அது இரக்கத்தின் வீடாகக் காணப்படும்; அதாவது தெரிந்து எடுக்கப்பட்ட சிலருக்கு மாத்திரம் இரக்கத்தின் வீடாக இராது, மாபெரும் உடன்படிக்கைக்கு இசைவாக ஆபிரகாமின் நிஜமான சந்ததியாகிய அவருடைய தெரிந்துக்கொள்ளப்பட்ட சபை, கிறிஸ்து மூலம் அதாவது தலையாகிய கிறிஸ்து மற்றும் சரீரத்தின் மூலம் தேவன் “”பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதிப்பார்” (கலாத்தியர் 3:29).
ஆ, உண்மை; அது எத்தகைய மகத்துவமுள்ள நாளாய்க் காணப்படும்! “”தேவன் அனைவருடைய கண்ணீரைத் துடைத்து விடுவார்.” ஆம், அவருடைய ஜனங்களுக்கு எதிரான நிந்தனை எடுத்து மாற்றப்படும். கர்த்தருடைய ஜனங்களுக்கு அப்போது நிந்தனைகள் காணப்படாது; “”நீங்கள் தேவனுடைய அன்பையும், அவருடைய இரக்கத்தையும் மற்றும் மகா பெரும் பாவ நிவாரணத்தின் முக்கியத்துவத்தையும் குறித்துக் கூறுகின்றீர்கள், ஆனால் நாங்கள் இன்னமும் உலகத்தின் மீது பாவமும், துக்கமும், கவலையும், மரணமும் ஆளுகை செய்வதையே பார்க்கின்றோமே” என ஜனங்கள் அப்போது கர்த்தருடைய செய்தியைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்களை நோக்கி கேள்விக் கேட்க முடியாது. நிந்தனை முடிந்துவிடும், அப்போது சாத்தான் கட்டப்படுவான், மற்றும் கர்த்தரைப் பற்றின அறிவானது முழுப் பூமியையும் நிரப்பி, அனைவருடைய கண்ணீர்களையும், துக்கங்களையும், வலியையும், நோவுகளையும் துடைத்துப் போடுவதற்கு ஆரம்பிக்கும். இந்தத் தயவுகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்றாற்போல் காணப்படும் அனைவருக்கும், ஆயிரவருட அரசாட்சியின் முடிவின்போது பூரணமான திரும்பக்கொடுத்தலின் வாயிலாக அவர்களுக்குரிய ஆசீர்வாதங்களை அடைவார்கள்; ஆனால் இந்தத் தெய்வீக ஏற்பாடுகளை அக்காலத்தில் ஏற்க மறுப்பவர்களுக்கு, “”இரக்கத்தின் அடிப்படையிலான அறுப்புண்டு போகுதல்” ஏற்பாடு பண்ணப்பட்டுள்ளது (அப்போஸ்தலர் 3:23).
நமது கர்த்தர் அற்புதத்தை நிகழ்த்தின பிற்பாடு, சொஸ்தமாக்கப்பட்டவனை நோக்கி, அவன் தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லுமாறு கட்டளையிட்டார், அம்மனுஷனும் அப்படியே செய்தான். அக்காலத்தின் வழக்கத்தின்படி பயன்படுத்தப்பட்ட படுக்கையானது மிகவும் எடை குறைவானதாய்க்காணப்பட்டபடியால், அதை எடுத்துச் செல்வதற்கு கர்த்தர் கொடுத்த கட்டளையைச் செய்வதில் எவ்விதமான சிரமமும் இல்லை. ஆகவே கர்த்தர் கட்டளையிட்ட இக்காரியமானது யூதர்களின் பிரமாணத்தின்படியான ஓய்வுநாளுக்குரிய கட்டுப்பாடுகளை மீறும் விஷயமாக இருக்கவில்லை; நமது கர்த்தர் யூதனாக இருந்தபடியாலும், மற்ற யூதர்களைப் போல அவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவராக இருந்தபடியால், நமது கர்த்தரும் பிரமாணத்தை மீறினதுமில்லை, மற்றவர்கள் மீறும்படிக்குக் கற்றுக்கொடுக்கவுமில்லை. படுக்கையை எடுத்துக்கொண்டுப் போகும்படிக்கு அம்மனுஷனுக்குக் கர்த்தர் கட்டளையிட்டதற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன் அவை பின்வருமாறு:-
(1) அம்மனுஷன், தனது படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும் காரியமானது, அவ்வற்புதத்திற்கு நேரடி சாட்சியாய் இருந்தது. இதுமாத்திரமல்லாமல்…
(2) இப்படிச் செய்வது என்பது மறைமுகமாக, நியாயசாஸ்திரிகள், மற்றும் வேதபாரகர்களுடைய கவனத்தை ஈர்க்கின்றதாய் இருக்கும், ஏனெனில் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கூறாத சில கட்டுப்பாடுகளை, அவர்கள் ஓய்வுநாளின் கட்டுப்பாடு விஷயத்தில் தொகுத்துள்ளனர். நமது கர்த்தர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமது வல்லமை தொடர்பான படிப்பினையைப் புகட்டினதோடல்லாமல், நியாயப்பிரமாணத்தின் சரியான அனுசரிப்பு குறித்ததான படிப்பினையையும் புகட்டினர்; அதாவது நியாயப்பிரமாணம் மனுக்குலத்திற்கான நன்மைக்கே தேவனால் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய, ஒழுக்கத்திற்கான விலங்கு சங்கிலியாகக் கொடுக்கப்படவில்லை என்ற படிப்பினையையும் புகட்ட இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தினார். நியாயப்பிரமாணத்தின் விளக்கங்களைப் பரிசேயர்களும், வேதபாரகர்களும், ஜனங்களுக்கு பாரமானதாகக் காட்டுகின்றார்கள் என்று வேறு ஒரு தருணத்தில் பரிசேயர்களிடமும், வேதபாரகர்களிடமும் கூறினார்; அதாவது அவர்கள் நியாயப்பிரமாணத்தின் மிகச் சிறிய அம்சங்களைத் தவறான விதத்தில் மிகவும் மிகைப்படுத்தி, ஜனங்களுக்குக் காட்டுகின்றார்கள் என்றும், நியாயப்பிரமாணத்தின் நீதி, நியாயம், அன்பு மற்றும் இரக்கம் தொடர்புடைய பெரிய கோட்பாடுகளை அவர்கள் ஜனங்களுக்கு விளக்குவதை முற்றிலும் தவிர்த்து விட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
இச்சம்பவத்தின் பதிவுகளை நாம் பார்க்கும் போது, மேற்கூறிய பலனே வந்தது. அம்மனுஷன் தனது படுக்கையைச் சுமந்து கொண்டு போனதற்காக, அம்மனுஷன் மேல் பரிசேயர்களும், வேதபாரகர்களும் குற்றம் சுமத்தினார்கள்; ஆனால் அம்மனுஷனோ தனக்கு 38 வருடங்களாக இருந்த வியாதியைச் சொஸ்தப்படுத்தினவர் இந்த விஷயத்திலும் கூடப் போதுமானளவு ஞானமும், அதிகாரமும் கொண்டிருப்பார் என்று நம்பி, தான் அவருடைய வழிநடத்துதலின்படி செயல்படுவதால், தான் இப்படி படுக்கையை எடுத்துக்கொண்டு செல்வதில் தவறில்லை என்று தன் செய்கையை நியாயப்படுத்தி அவர்களுக்கு மறுஉத்தரவு அளித்தான். இவ்விதமாக அவரை ஏற்றுக்கொள்கின்றார்களா அல்லது இல்லையா என்ற பரீட்சைக்குள் அக்கால கட்டத்தில் காணப்பட்ட அந்த வகுப்பார், அதிலும் விசேஷமாக அந்தச் தேசத்தின் பிரதிநிதிகளும், தலைவர்களும் கர்த்தரை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என அவர் விசேஷமாக விரும்பினதையும் நமது கர்த்தருடைய இவ்வற்புதம் தெளிவாக அவர்களுக்குக் காட்டியது; இரண்டாவதாக இவ்வற்புதத்தின் மூலம் கர்த்தருடைய போதனைகள் மற்றும் அவருடைய நல்ல கிரியைகளுக்கும், பரிசேயர்களுடைய போதனைகள் மற்றும் கிரியை அற்ற தன்மைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் தெளிவாகக் காட்டியது.
சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் தனக்கு நடந்த சம்பவங்கள் மற்றும் தான் அடைந்த விடுதலைக்குறித்த விஷயங்களினால் மிகவும் அதிர்ச்சியடைந்தபடியால், தன்னிடம் இப்படியான அற்புதத்தைப் பண்ணினவர் யார் என்று விசாரிக்கவோ (அ) அவர் யார் என்று பார்ப்பதற்கோ ஒரு கணம் மறந்துப் போய்விட்டான்; அவ்விடத்தில் பெரும் திரளாய்க் கூடியிருந்த வியாதியஸ்தர்களின் விண்ணப்பத்திற்கு நமது கர்த்தர் மறுப்புத் தெரிவிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பாததால், அமைதியாக அவ்விடத்தை விட்டு கடந்து போய்விட்டார். ஆகவே அற்புதம் நிகழ்ந்துள்ளதை அனைவரும் உணர்ந்துக்கொண்ட தருணத்தில், சொஸ்தமாக்கினவர் மறைந்துப் போய்விட்டார். இயேசு இந்த அற்புதத்தைத் தேவனுக்கு மகிமையாகவும், புதிய யுகத்தின் பிரதிநிதி, தாமே என்பதை கவனத்திற்குக் கொண்டு வருவதற்காகவும் செய்தார். மேலும் திரளான வியாதியஸ்தர்களின் கூட்டத்தாரில் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன், அக்கூட்டத்தாருக்குள் சொஸ்தமாக்கப்படுவதற்கு மிகவும் பாத்திரவானாய் இருந்திருக்கிறான் என்று நாம் அனுமானிக்கின்றோம். இம்மனுஷன் தான் [R3502 : page 43] சொஸ்தமடைந்ததற்காக கர்த்தருக்கு தனது நன்றியையும், துதியையும் அளிக்குமாறு ஆலயத்திற்குச் சென்றபோது, இயேசு விசேஷமாக இம்மனுஷனை மீண்டும் சந்தித்தக் காரியமானது, இம்மனுஷனிடத்தில் சராசரியான குணங்களைக் காட்டிலும் அதிகமாக ஏதோ ஒன்றைக் கர்த்தர் பார்த்தபடியாலேயே அவர், இம்மனுஷனைச் சொஸ்தப்படுத்தினதோடல்லாமல், இம்மனுஷனுக்குத் தம்மை வெளிப்படுத்தவும் செய்தார் என்பதைக் காட்டுகின்றது.
நமது கர்த்தர், சொஸ்தமாக்கப்பட்ட மனுஷனை, தேவாலயத்தில் கண்டு, அவரிடத்தில் கூறின வார்த்தைகள் மிகவும் முக்கியத்துவம் உடையதாகும்; அவ்வார்த்தைகள் கர்த்தருக்குச் சொஸ்தப்படுத்துவதற்கான வல்லமை இருந்தது என்பதை மாத்திரமல்லாமல், இந்த வியாதி வருவதற்கு ஏதுவாக 38 வருடங்களுக்கு முன்பு செய்யப்பட்ட பாவங்கள் குறித்த அறிவும் கர்த்தருக்கு இருந்தது என்பதையும் காட்டுகின்றது. “”நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனி பாவஞ்செய்யாதே” என்று கர்த்தர் அம்மனுஷனிடம் கூறினார் (யோவான் 5:14). நம்முடைய மீட்பருடைய இந்த ஆலோசனையான வார்த்தைகளில் மிக விலையேறப்பெற்ற படிப்பினைகள் உள்ளது; இப்படிப்பினைகள் அந்தப் பாவப்பட்ட மனுஷனுக்கு மாத்திரம் உதவியாய் இராமல், கர்த்தருடைய கிருபையினால் பாவ வியாதியினின்று சொஸ்தமாக்கப்பட்டவர்களுக்கும், நீதிமான்களாக்கப்பட்டவர்களுக்கும், தேவனுடைய குடும்பத்திற்குள், தேவனுடைய புத்திரர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்கும் அதிக விலையேறப்பெற்ற படிப்பினையாகவும் உள்ளது. ஆதி பாவத்திற்கான தண்டனை மிகவும் கடினமானதாய் இருந்தது, மேலும் இத்தண்டனையானது ஆதாமின் சந்ததியிலுள்ள ஒவ்வொருவருக்கும் காணப்பட்டது; ஆனாலும் கூட இந்த ஆதி பாவத்திற்குத் தேவன் ஒரு மாபெரும் பாவநிவாரணத்தை அருளியுள்ளார்; ஆகவே இதன் காரணமாக இறுதியில் இப்பாவத்திற்கான அனைத்துத் தண்டனைகள் மற்றும் கூலிகளிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்கான முழு வாய்ப்பும், ஒவ்வொரு மனுஷனுக்கும் இறுதியில் வழங்கப்படும். ஆனால் இப்படியாக விடுவிக்கப்படும்போது, விடுவிக்கப்படும் நம் ஒவ்வொருவரின் மேலும் ஒரு புதிய பொறுப்பு வருகின்றது. அப்போஸ்தலர் அறிவிக்கிற பிரகாரமாக நாம் சத்திய அறிவைப் பெற்றுக்கொண்ட பிற்பாடு, துணிகரமாய்ப் பாவம் செய்வோமானால் அப்பாவங்களுக்காக எவ்விதமான பலியும் இனிச் செலுத்தப்படாது என்பதினால் நமக்கு “”நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்ப்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்” (எபிரெயர் 10:27). ஆதி பாவத்திற்கான கூலியாகிய மரணத்தையும், அதனோடு கூடத் துக்கத்தையும், வலியையும், மரித்துக் கொண்டே இருக்கும் தன்மையையும் முழு மனுக்குலமும் ருசிப்பார்த்துள்ளது. நம்முடைய அனைத்துப் பாவங்களிலிருந்தும் நாம் நீதிமானாக்கப்பட்ட பின்னர் நாம் துணிந்து, வேண்டுமென்றே, விருப்பத்துடன் செய்யும் பாவங்களுக்கான கூலி, அதாவது தண்டனை மிகவும் கேடானதாகக் காணப்படும், அதாவது ஆதி பாவத்திற்கான தண்டனையைக் காட்டிலும், மிகக் கேடானதாய்க் காணப்படும்; அது இரண்டாம் மரணமாகும்; இந்த இரண்டாம் மரணத்திலிருந்து மீட்டுக் கொள்வதற்கெனத் தேவன் எவ்விதமான ஏற்பாடுகளையும் பண்ணவில்லை என்று தேவன் நமக்கு நிச்சயத்துடன் தெரிவித்துள்ளார்; அதாவது கிறிஸ்து மீண்டுமாக ஒருபோதும் மரிக்கப் போவதில்லை. பாவ வியாதியிலிருந்து நாம் சொஸ்தமாக்கப்பட்டு, நாம் நீதிமான்களாக்கப்பட்ட பின்னர், நாம் துணிந்து பாவம் செய்தால், அதிலும் பாவம் செய்த விஷயத்தில் நம்முடைய பெலவீனமும், பூரணமற்ற தன்மையும் நம்மைச் சோதனைக்குள் விழுவதற்குக் காரணமாய் ஓரளவிற்கு இருக்கும் பட்சத்தில், நமக்கான அடிகளை (தேவன் கரத்திலிருந்து) எதிர்ப்பார்க்கலாம்; ஆனால் ஒருவேளை எவ்விதமான குறிப்பிட்ட பெலவீனம் காரணமாக இல்லாமல், நாம் துணிந்து விருப்பத்துடன் பாவம் செய்திருப்போமானால், தெய்வீக இரக்கத்தையும், மன்னிப்பையும் நாம் எதிர்ப்பார்க்க முடியாது, ஏனெனில் மன்னிக்க முடியாத அளவுக்கு நீதிக்கு எதிராக மீறுதல் செய்யப்பட்ட காரணத்தின் நிமித்தம் ஒரு புதிய மற்றும் தனிப்பட்ட விதத்தில் குற்றவாளி எனும் நிலைக்கு ஆளாகுகின்றபடியால், விடுதலையின் நம்பிக்கை இல்லாத மரணமே தண்டனையாக அளிக்கப்படுகின்றது.”