R4942 – ஆலயத்தில் அர்ப்பணிப்பு

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R4942 (page 460)

ஆலயத்தில் அர்ப்பணிப்பு

CONSECRATION IN THE TEMPLE

லூக்கா 2:22-39

“”தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின, உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.” – லூக்கா 2:31,32.

இயேசு பிறந்து, நாற்பது நாட்கள் ஆனவுடன், யோசேப்பும், மரியாளும் அவரை ஆலயத்தில் அர்ப்பணிக்கும் பொருட்டாக, எருசலேமுக்குக் கொண்டு வந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள முதற்பிறப்பிற்குச் செய்ய வேண்டிய வழக்கத்தின்படி அவருக்கும் செய்யப்பட்டது. முழுத் தேசத்திலும் உள்ள முதற்பேறானவர்கள் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டபோது முதற்பேறானவர்கள், தேவனுடைய பணிக்கென்று விசேஷமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு கோத்திரமாகிய லேவியர்களுக்கு அடையாளமாக இருப்பதினால், இந்த முறைமை ஒவ்வொரு தாய்க்குப் பிறக்கும் தலைச்சன் பிள்ளைக்கும் பொருந்தும். முதற்பேறான பிள்ளை தேவனுக்கும், அவருடைய பணிகளுக்கும் விசேஷமாக அர்ப்பணிக்கப்பட வேண்டும்.

இந்த முக்கியத்துவம், இந்தச் சுவிசேஷ யுகத்தில் சேர்க்கப்படும் தெரிந்துக்கொள்ளப்பட்ட சபையானது, முதற்பேறானவர்களின் சபை என்று அழைக்கப்படுவதிலிருந்து விளங்குகின்றது. மேலும் நம்மைக் குறித்துத் “”தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பேறானவர்கள்” என்று பரிசுத்தவானாகிய யாக்கோபு கூறுகின்றார் (யாக்கோபு 1:18). சபை முதலாம் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் பரலோக மகிமைக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்ட பின்னர், திரும்பக்கொடுத்தலின் முறை மூலம், பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதித்து, பூமிக்குரிய தளத்தில் தேவனுடைய புத்திரர்களாகும் வாய்ப்பை மனுக்குலத்திற்கு அளிக்கக் கூடிய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் (அப்போஸ்தலர் 3:19-21).

விசுவாசிகளின் முன்னிலையில், சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தேவனுக்கு அர்ப்பணிக்கும் வழக்கத்தை நாம் பார்த்திருக்கின்றோம். இப்படிச் செய்வதினால், பிள்ளைகள் மேல் நன்மைக்கு ஏதுவான செல்வாக்கே காணப்படும். அதாவது, பிள்ளைகள் எதிர்க்காலத்தில் தங்கள் பெற்றோர்கள் கர்த்தருக்கு மிகச் சிறந்ததை அர்ப்பணித்ததின் மூலம் வெளிப்பட்ட அவர்களின் பராமரிப்பு, அன்பு மற்றும் பக்தியை எதிர்க்காலத்தில் உணர்ந்துகொள்வார்கள். இப்படியாகப் பிள்ளைகள் கர்த்தருக்குத் தங்களை அர்ப்பணிப்பது தொடர்புடைய விஷயத்தில் அனுகூலமான தாக்கத்தினை அடையப் பெற்றிருப்பார்கள்.

மேலும் தங்களிடத்திலுள்ள சிறந்ததை கர்த்தருக்கு அர்ப்பணிக்கும் பெற்றோர்களும், மிகப்பெரிய ஆசீர்வாதத்தைத் தங்களுக்கு வருவித்துக் கொள்கின்றார்கள். சோதனைகளும், போராட்டங்களும் நிச்சயமாக வரும். ஆனால், அதன் மத்தியிலும், அவர்களுடைய பிள்ளைகள் தேவனுக்கு உரியவர்களே ஆவார்கள். மேலும் இவர்கள், உம் சித்தமே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினால், மற்றவர்களால் அறிந்துக்கொள்ள முடியாத சமாதானத்தையும், ஆவியில் சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்வார்கள். இது பிள்ளைகள் பகுத்தறிவு மற்றும் தீர்மானம் பண்ணக்கூடிய வயதை அடையும்போது, அவர்களுடைய தனிப்பட்ட அர்ப்பணிப்பிற்கு அவர்களைத் தகுதியாக்கிடாது என்றாலும், பெற்றோர்களுடைய ஆசீர்வாதமான செல்வாக்கானது, [R4942 : page 461] பிள்ளைகள் வயதில் முதிர்ச்சியடைகையில் சத்தியம் மற்றும் நீதியின் விஷயத்தில், தேவனுக்குள் சரியான தீர்மானங்கள் எடுப்பதற்கு உதவியாகக் காணப்படும் என்று நாம் நம்புகின்றோம்.

குழந்தையாய் இருந்த இயேசுவை ஆலயத்தில் அர்ப்பணிக்க வந்தபோது, வயது முதிர்ந்த தீர்க்கத்தரிசி ஒருவர் வந்து குழந்தையைத் தனது கைகளில் எடுத்துக் கொண்டு, தேவனைத் துதித்தார். இவருக்கு, ஆபிரகாமுக்கு அருளப்பட்ட வாக்குத்தத்தம் நிறைவேற சமீபமாயிருக்கிறது என்றும், இஸ்ரயேலின் இரட்சகரைப் பார்க்காமல், தான் மரிப்பதில்லை என்றும் தேவன் ஏதோ விதங்களில் வெளிப்படுத்தியுள்ளார். ஏதோ ஒரு தெய்வீக வல்லமையினால், வயது சென்ற இந்தத் தீர்க்கத்தரிசி, இயேசுவை அடையாளம் கண்டுகொண்டு, “”ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரயேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின, உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” என்றார் (லூக்கா 2:29-32).

“இஸ்ரயேலில் அநேகர் விழுகிறதற்கும், எழுந்திருக்கிறதற்கும் விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், நியமிக்கப்பட்டவர்”

சிமியோன், மரியாளிடம், இக்குழந்தை, “”இஸ்ரயேலில் அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரயேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்று தீர்க்கத்தரிசனமாகக் கூறினார். எத்துணை அருமையான தீர்க்கத்தரிசனம்! இது, “”அநேகர் விழுவதற்கு ஏதுவாக நமது கர்த்தர் இடறுவதற்கான கல்லாகவும், தவறுவதற்கான கன்மலையாகவும் இருக்கின்றார்” என்ற பரிசுத்தவானாகிய பவுலின் வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டுகின்றது. மேலும் இடறினவர்கள் எழுந்திருப்பார்கள் என்றும் பரிசுத்தவானாகிய பவுல் குறிப்பிடுகின்றார். “”அப்படியானால் என்ன? இஸ்ரயேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள்” (ரோமர் 11:7). தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களாகிய கிறிஸ்துவின் சபை முதலாம் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் நிறைவடையும்போது, இந்தத் தெரிந்துக்கொள்ளப்பட்ட ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் வாயிலாக தெய்வீகக் கிருபையானது, மாம்சீக இஸ்ரயேலர்களிடத்திற்குத் திரும்பும் என்றும் பரிசுத்தவானாகிய பவுல் கூறியுள்ளார்; “”…பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள்” (ரோமர் 11:25-33).

முன்குறிக்கப்பட்ட தெரிந்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை நிறைவடைவதற்கு, “”கபடற்ற உத்தம இஸ்ரயேலர்கள்” போதுமான எண்ணிக்கையில் இராதபடியால் அழைப்பானது, ஆபிரகாமின் மாம்சீக சந்ததியைத் தாண்டி, இந்தச் சுவிசேஷ யுகத்தில் ஒவ்வொரு ஜாதிகளிலிருந்தும், பாஷைக்காரரிலிருந்தும் சேர்த்துக்கொள்ளும்படிக்கு கடந்துச் சென்றது. இஸ்ரயேலர்களுக்கு ஆசீர்வாதங்கள் கடந்துபோவதற்கு முன்பும், மீதமுள்ள மனுக்குலம், மனித பூரணத்தை அடையும்பொருட்டுச் சீர்த்தூக்கப்படுவதற்கு முன்பும் சபை முழுமை அடைய வேண்டும்.

பரிசுத்தமான ஸ்தீரியாகிய அன்னாள் என்னும் தீர்க்கத்தரிசியானவள், ஒரு நூற்றாண்டுக்கு மேலாக எருசலேமில் குடியிருந்து, ஆலயத்தின் பிரகாரங்களில் காணப்பட்டாள். பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அவளும், குழந்தையை அடையாளம் கண்டுகொண்டு, தேவனைத் துதித்து, ஆபிரகாமின் வாக்குத்தத்தினுடைய நிறைவேறுதலுக்காக, அதாவது, இஸ்ரயேலின் ஆறுதலுக்காகக் காத்திருக்கும் மற்றப் பரிசுத்தமானவர்களிடம் இதை அறிவித்தாள்.

குழந்தையாய் இருந்த இயேசுவைக் கண்டதற்கே நன்றியும், துதியும் ஏறெடுத்தார்கள் என்றால், இயேசுவை அவருடைய முப்பதாவது வயதில், தம்மை மரணம் வரையிலுமான ஜீவப்பலியாக அர்ப்பணித்ததைப் பார்த்தவர்கள் எவ்வளவு அதிமாய் நன்றியை ஏறெடுத்திருப்பார்கள். இவ்வயதில் தம்மை அவர் அர்ப்பணிக்கும்போது அவர், தாம் திவ்வியச் சுபாவத்திலுள்ள புதுச் சிருஷ்டி ஆகுவதற்குப் பரிசுத்த ஆவியினால், மீண்டும் ஜெநிப்பிக்கப்பட்டுள்ளார் என்பதை உணர்ந்திருந்தார். மேலும், இயேசு தமது 3½ வருட ஊழிய காலத்தின்போது தமது அர்ப்பணிப்பின் பலியை நிறைவேற்றுவதில் காண்பித்த உண்மையைக் கண்டவர்கள் இன்னும் அதிகமாய்த் தேவனைத் துதித்திருப்பார்கள். மேலும், அவர் தமது ஓட்டத்தைக் கல்வாரியில் நிறைவு செய்து, மரண நிலையிலிருந்து மூன்றாம் நாள் உயிர்ப்பிக்கப்பட்டு, தாம் முன்பு சந்தோஷமாய் இருந்த பரத்திற்கு நாற்பது நாட்களுக்கு பின் எடுத்துக் கொள்ளப்பட்டதைப் பார்த்தவர்கள், மனுஷனுக்கான இரட்சிப்பின் தெய்வீகத் திட்டம் நடந்தேறுவதை உணர்ந்து இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.

பெந்தெகொஸ்தே நாளன்று, ஜெநிப்பிக்கும் வல்லமையாகப் பரிசுத்தஆவியைப் பெற்றுக் கொண்டவர்களும், தாங்கள் தேவனுடைய புத்திரராக்கப்பட்டுள்ளதை உணர்ந்து கொண்டவர்களும் அதிகம் பாக்கியவான்கள் ஆவர், “”நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்” (ரோமர் 8:17).

விழுகையும், மீண்டும் எழுந்திருத்தலும்

இயேசுவின் சீஷர்களாகிய சொற்பமானவர்கள் தவிர மற்றப்படி, முழு இஸ்ரயேல் தேசமும், இயேசு, தேவனால் அனுப்பப்பட்டவர் என்று அடையாளம் கண்டுகொள்வதற்குத் தவறி, இடறினார்கள். பத்து அல்லது பதினைந்தாயிரம் பேரே பதிவுகளின்படி அவருடைய சீஷர்களாக இருந்திருக்கலாம். “”ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும்” (ஏசாயா 28:13). பரிசுத்தவானாகிய பவுல், ஏசாயா தீர்க்கத்தரிசியின் வார்த்தையை மேற்கோள் இட்டாலும், பின்னர் சுவிசேஷ யுகத்தில் தெரிந்துக்கொள்ளப்பட்ட வகுப்பாரின் எண்ணிக்கை நிறைவடையும்போது, இஸ்ரயேல் மீண்டுமாக தெய்வீகத் தயவைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் குறிப்பிடுகின்றார். அப்போது இஸ்ரயேல், தெய்வீகத் தயவைப் பெற்றுக்கொள்ளும் காலம் வரும். ஏசாயா 8:15; ரோமர் 11:9-11) வரையிலான வசனங்களைப் பார்க்கவும்.

மேலும் பரிசுத்த பவுல், இஸ்ரயேலுக்கு ஏற்பட்டுள்ள மனக்கடினம், நிரந்தரமானது இல்லை என்றும், புறஜாதிகள் மத்தியிலிருந்து தெரிந்துக்கொள்ளப்படுபவர்களின் எண்ணிக்கை நிறைவடையும் வரையிலுமே காணப்படும் என்றும் கூறியுள்ளார். அப்பொழுது, இடறிப்போன இஸ்ரயேலர்கள் மீட்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். இதுவே, அவர்களுடைய எழுதலாகும். இதுவே, மாம்சீக இஸ்ரயேலோடு தேவன் பண்ணும் உடன்படிக்கை என்றும், அவர்கள் பாவம் அகற்றப்படும் என்றும், சபையின் இரக்கத்தின் மூலம், இஸ்ரயேலர்கள் இரக்கம் பெறுவார்கள் என்றும் பரிசுத்த பவுல் அறிவித்துள்ளார். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், சபை, முதலாம் உயிர்த்தெழுதலில் மகிமை அடையும்போது, பின்னர் தெய்வீக ஆசீர்வாதம் இஸ்ரயேலை நோக்கி வந்து, பின்னர், பூமியின் குடிகள்மேல் கடந்து செல்லும். எல்லார் மேலும் இரக்கமாய் இருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார் (ரோமர் 11:25-32).”