R4558 – உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R4558 (page 57)

உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல

PERFECT AS YOUR FATHER IS PERFECT

மத்தேயு 5:19-36, 38-48

இருதயத்திலும், நோக்கத்திலும் தவிர மற்றபடி கர்த்தருடைய பின்னடியார்கள் விழுந்துபோன மாம்சத்தை உடையவர்களாக இருக்கின்றபடியால், பிதாவைப்போன்று பூரண சற்குணராக இருக்க முடியாது. ஆனால், கிறிஸ்துவுடன் கூட அவருடைய தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களாக, அவருடைய இராஜ்யத்தின் மகிமைகளில் நாம் பங்கடைவதற்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக நிரூபித்துக் காட்டுவதற்கு இருதயத்தின் நல்ல நோக்கம் மாத்திரம் போதாது. நம்முடைய தூய்மையான இருதயமும், தேவனுக்கு ஒத்த தன்மைகளும் பரீட்சிக்கப்பட வேண்டும். இவைகள் நிரூபிக்கப்பட வேண்டும். இன்னுமாக, அசையாத அளவுக்கு வளர்க்கப்படவும் வேண்டும். இன்னுமாக, இவைகள் சோதனையின் பரீட்சைகளில் நிலைநிற்க வேண்டும். இவைகள் கடுந்துன்பங்களைச் சகித்து, உண்மையுடன் காணப்பட வேண்டும். ஆகவே, கிறிஸ்துவின் சீஷர்களாக ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள், மிகவும் கடுமையான சூழ்நிலைகளில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

யூதர்கள் படிப்படியாக தெய்வீக நியாயப்பிரமாணத்தை மறந்துபோய், இந்த நியாயப்பிரமாணத்துக்கு மாறான குறிப்பிட்ட பாரம்பரியங்களினால், தங்களுடைய மனங்களை நிரப்பிக்கொண்டவர்களாகக் காணப்பட்டார்கள். மாபெரும் போதகர், ரபீகளைப் புறக்கணிப்பதின் மூலம், அவர் நியாயப்பிரமாணத்தை ஒதுக்கிவைப்பதாக சிலர் எண்ணியிருந்திருக்கலாம். மாறாக, அவரோ தாம் மனிதனுடைய பாரம்பரியங்களை ஒதுக்கிவைக்கவும், நியாயப்பிரமாணத்தை நிலைநாட்டவும், அதை அதிகமாய் வெளிப்படுத்தவுமே நாடுவதாக உறுதியளித்தார். பரிசேயர்களும், வேதபாரகர்களும் மிகவும் பரிசுத்தமானவர்கள் என்றும், பயபக்திக் கொண்டவர்கள் என்றும் ஜனங்களினால் கருதப்பட்டார்கள். ஆனால், ஜனங்களோ இந்தப் பரிசேயர், வேதபாரகரைக்காட்டிலும் அதிகமான பரிசுத்தத்தைக்கொண்டிருக்க வேண்டும், இல்லையேல், அவர்கள் ஒருபோதும் பரலோகத்தின் இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கமுடியாது என்று இயேசு கூறினார்.

“”கொலை செய்யாதிருப்பாயாக” என்றும், “”கொலை செய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்;” அதாவது, நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளினால் விசாரணைக்கும், தண்டனைக்கும் ஏதுவாயிருப்பான் என்றும், பாரம்பரியமானது நியாயப்பிரமாணத்தைக் குறிப்பிடுகின்றது. ஆனால், இயேசுவோ, சகோதரனுக்கு எதிராக (இருதயத்திலும், வெளியே வெளிப்படுத்தப்படாத நிலையிலும்) கோபம் கொண்டிருப்பது என்பது மனம், கொலை செய்யும் மனப்பான்மை கொண்டுள்ளது என்றும், உண்மையில் வெளிப்படையான கொலை நிகழ்த்தப்படாவிட்டாலும், கொலைக்குச்சமமான சகோதரனுக்கு எதிரான கோபமானது தேவனுடைய பார்வையில் கண்டனத்திற்கு ஏதுவாய்க் காணப்படும் என்றும் மிகவும் கண்டிப்பான விதத்தில் போதித்தார். இன்னுமாக, சகோதரனை வீணனென்றும், மூடனே என்றும் கூறுவதையும் கண்டித்துப்பேசுகின்றார். இப்படியான வார்த்தைகள் இருதயத்தின் தவறான நிலையைச் சுட்டிக்காண்பிக்கின்றது என்பதையும், இப்படியாக இருப்பது அந்நபரை ஆலோசனை சங்கத்தின் தீர்ப்பிற்கு வழிநடத்தி, பின்னர் அந்நபரை கெஹென்னாவினால் அடையாளப்படுத்தப்படும் இரண்டாம் மரணத்திற்கு வழிநடத்திவிடும் என்பதையும் கர்த்தர் கூறினார்.

இங்கு வரும் எரிநரகம் கெஹன்னாவாகும். அதாவது, குப்பைகளை அழிப்பதற்கும், [R4559 : page 57] தொற்றுநோயை தடுப்பதற்கும், இன்னோம் பள்ளத்தாக்கில் தொடர்ந்து எரிந்துக்கொண்டிருக்கும் நெருப்புதான் இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நெருப்பில் பொல்லாத செய்கைக்காரர்களின் சடலங்களும் அழிக்கப்படுவதற்காகப் போடப்படுகின்றது. இவ்வாறாக, இது இரண்டாம் மரணத்திற்கு அடையாளமாக இருக்கின்றது. (வெளிப்படுத்தல் 20:14).

ஒருவன் மற்றவருக்கு எதிரான பகையைத் தன்னுடைய இருதயத்தில் கொண்டிருக்கும் நிலையில், பலியின் பொருளோடு தேவனுடைய பலிப்பீடத்தை நெருங்குவது, பலனற்றதாய் இருக்கும் என்பது கலிலேயா தீர்க்கத்தரிசியின் கணிப்பாக இருந்தது. ஆகவே, கர்த்தருக்குப் பலிச் செலுத்துவதற்கு முன்பு, கிறிஸ்துவின் சீஷர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய இருதயங்களை ஆராய்ந்துப் பார்த்து, தங்களிடத்தில் காணப்படும் பகைமையை எடுத்துப்போட வேண்டும். அதாவது, இப்படிச் செய்யாதபட்சத்தில் தங்களுடைய பலிகளும், தாங்கள் ஏறெடுக்கும் துதிகளும் வீணாக இருக்கும் என்று உணர்ந்த நிலையில் இவர்கள் தங்களிடத்திலிருந்துப் பகைமையை எடுத்துப்போட வேண்டும்.

25 மற்றும் 26-ஆம் வசனத்தில் இடம்பெறும் ஆலோசனைகள் செம்மையானவைகளாகும். நமக்கு எதிராக ஏதேனும் விஷயங்கள் காணப்படுமாயின், அதனை முடிந்தமட்டும் விரைவாகச் சரிச்செய்து, முடித்துவிட வேண்டும். யூதர்கள் தங்களுடைய நண்பனாக, உதவியாளனாக, கருதிக்கொள்ளும் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தின் உடன்படிக்கையானது, உண்மையில் அவர்களுடைய எதிராளியாக இருந்து, அவர்களைக் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றது என்ற முக்கியமானப் பாடத்தை அனைத்து யூதர்களும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. மாம்சத்தின் பூரணமின்மையினிமித்தம், இவர்களால் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவும் முடியவில்லை. இன்னுமாக, நியாயப்பிரமாணத்தினிடமிருந்து பாராட்டைப் பெற்றுக்கொள்ள முடியாமல், அதன் கண்டனத்தையே பெற்றுக்கொள்கின்றனர். இதனை உணர்ந்துக்கொள்பவர்கள் தங்களால் முடிந்தமட்டும் விரைவாகத் தங்களுடைய பூரணமின்மையை ஒப்புக்கொண்டு, நியாயப்பிரமாணத்துடன் நல்மனம் பொருந்திக்கொள்வதே, இவர்களுக்கு ஏற்ற வழியாகும்.

நமது கர்த்தருடைய ஆலோசனைக்குச் செவிச்சாய்த்தவர்கள் தங்களுடைய பூரணமின்மையை உணர்ந்தவர்களாக, உதவிக்காகக் கூக்குரலிட்டு, இயேசுவினுடைய பலியின் மூலம், அவரிடத்தில் மன்னிப்பையும் கண்டடைந்துள்ளனர். இப்படியாக, மன்னிப்பைக் கண்டடைந்தவர்கள் விசுவாசத்தின் மூலமாகத் தேவனுடைய தயவிற்குள்ளும், பெந்தெகொஸ்தே நாளின் ஆசீர்வாதத்திற்குள்ளும் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், நியாயப்பிரமாணத்தைப் பூரணமாய்க் கைக்கொள்கின்றோம் எனப் போலித்தனமாகக் கூறிக்கொண்ட பரிசேயர்களோ, நியாயப்பிரமாணத்தின் நிபந்தனைகளின்படியும் நடவாமல், மனம் வருந்தினவிதத்தில் தங்களுடைய பாவங்களை ஒப்புக்கொள்ளாமல், இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல், பெந்தெகொஸ்தே நாளிற்குரிய ஆசீர்வாதங்களை அடையாமற்போனார்கள். இயேசுவைப் புறக்கணித்த யூததேசம் முழுவதும், சிறைச்சாலைக்குள் இடறிப்போனார்கள், மேலும், இவர்கள்மேல் கோபம் முழுமையாகக் கடந்துவந்தது. மேலும் நியாயப்பிரமாணங்களிலும், தீர்க்கத்தரிசிகள் எழுதின அனைத்துக் காரியங்களும் நிறைவேறு மட்டும் இவர்கள் இவர்களுடைய சிறைச்சாலையிலிருந்து வெளியே வரப்போவதில்லை. “”இவருடைய இரத்தம் எங்கள் மீதும், எங்களுடைய பிள்ளைகள்மீதும் வரக்கடவது” என்று இவர்கள் கூறினார்கள். மேலும், இவர்களுடைய பிரமாணமானது இவர்களைக் குற்றவாளிகளாக்கியது. இவர்கள் பாவம் மற்றும் மரணத்தின் நிலையிலிருந்து வெளியே வருவதற்கென, இவர்கள் ஆயிர வருஷ அரசாட்சியின் சிலாக்கியங்களைப் பயன்படுத்தி, நன்மை பெற்றுக்கொள்வதற்கு முழு ஆயிர வருஷ யுகமும் தேவைப்படும். ஆயிர வருஷத்தின் முடிவில் கர்த்தருடைய கிருபையினால் இவர்கள், “”ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத்தீர்ப்பார்கள்.” பின்னர், விருப்பமும், கீழ்ப்படிதலும் உள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள். எந்த யூதன் தன்னுடைய பூரணமின்மையையும், இயலாமையும் ஒப்புக்கொண்டு, கிறிஸ்துவின் பலியிலுள்ள பங்கை ஏற்றுக்கொள்கின்றானோ, அவன் நியாயப்பிரமாணத்தின் கடமையினின்று விடுவிக்கப்பட்டவனாவான். ஆனால், வெகு சிலரே நியாயப்பிரமாணத்தை எதிராளி என்று ஒப்புக்கொண்டார்கள். (யோவான் 1:12).

கண்ணுக்குக் கண் – பல்லுக்குப் பல்

“”கண்ணுக்குக் கண்” என்ற கண்டிப்பான நீதியை, இஸ்ரயேலின் நியாயாதிபதிகள் பின்பற்றும்படிக்கு, இந்தத் தெய்வீகக் கொள்கையை, மோசேயின் நியாயப்பிரமாணம் அருளினது. இந்தப் பிரமாணத்தை ஜனங்கள் தங்களுக்குள் தனிப்பட்டவிதமாக உத்தரவின்றி செயல்படுத்தினதால், இதன்விளைவாகக் கடினமான இருதயமும், சிறிய தவறும் காணப்படுவதை விரும்பாத தன்மையும், அனுதாபமற்ற தன்மையும் உண்டானது. நம்முடைய கர்த்தருடைய போதனைகளானது, தவறை வெளிக்காட்டி அன்பு எனும் மிகச்சிறந்த வழியை எடுத்துக்காட்டியது. பரம பிதாவே நியாயப்பிரமாணத்தை ஏற்பாடுபண்ணியிருந்தாலும், அவர் இரக்கத்தையும் ஏற்படுத்தி, அதைப் பாவிகள் அழிந்துபோகாமல், இரட்சகருக்குக் காட்டும் கீழ்ப்படிதல் வாயிலாக நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளத்தக்கதாக, பிதா தம்முடைய குமாரனை, பாவிகளுக்கான மீட்பராக அனுப்பி, தம்முடைய குமாரனை உலகத்திற்குள் அனுப்பினதின்மூலம் வெளிப்படுத்தவும் செய்தார். பூரணமற்ற நிலையில், ஓட்டத்தின்போது பாடுகள் அனுபவிக்கின்ற உடன் அங்கங்கள் ஒருவருக்கொருவர் இரக்கத்துடனும், அனுதாபத்துடனும் இருப்பது சரியான காரியமாகும். “”உங்களைப்போன்று பூரணமற்ற நிலையில் காணப்படும் உடன் மனுஷர்களிடத்தில் துல்லியமான/பிசகாத நீதியைச் சரிக்கட்ட வேண்டுமெனக் கண்ணுக்குக் கண் மற்றும் பல்லுக்குப் பல் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்களானால், உங்களுடைய இருதயங்களில் நீங்கள் சரியில்லாத ஆவியை ஊக்குவிக்கின்றவர்களாய் இருப்பீர்கள்” என்ற கர்த்தருடைய வார்த்தைகளைக் கவனியுங்கள்.

(1) ஒருவேளை உங்கள் சத்துரு உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், சொல்லர்த்தமாக இல்லாமல், உங்கள் இருதயத்தில், உங்கள் மனதில், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடுங்கள். எந்தவிதத்திலும் பழிக்குப்பழி வாங்காதிருங்கள். நம்முடைய கர்த்தருடைய விசாரணையின்போது, அவர் மறுகன்னத்தையும் காட்டி, அடியென்று சொல்லாததிலிருந்து, மத்தேயு 5:39ஆம் வசனத்தைச் சொல்லர்த்தமானவிதத்தில் நம்முடைய கர்த்தர் கூறாதது விளங்குகின்றது. கர்த்தர் அடையாளமான விதத்திலேயே மறுகன்னத்தைத் திருப்பினாரே ஒழிய சொல்லர்த்தமாக அல்ல.

(2) ஒரு மனுஷன் நம்மோடு வழக்காடி, சட்டப்பூர்வமாக நம்முடைய ஆஸ்தியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றிருந்தால், நாம் அம்மனுஷனுக்கு எதிராக உட்பகை கொள்ளக்கூடாது. மாறாக, நீதிமன்றம் கட்டளையிடுவதைக்காட்டிலும், அதிகமாகவே கொடுத்துவிட விருப்பமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நாம் உச்சநிலையில் பிரமாணத்தின்படி நடந்துக்கொள்பவர்களாக இருக்க வேண்டும்.

(3) ஒருவேளை முற்காலத்து வழக்கத்தின்படி அரசாங்க சேவைகளில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டு, ஒரு மைல் தூரம்வரை பாரம் சுமக்க வற்புறுத்தப்பட்டால், கர்த்தருடைய பின்னடியார்கள் துல்லியமாக ஒரு மைல் தூரம் அல்லது ஒரு மைலுக்கு அண்மைவரை அல்லாமல், தேவைப்படுமாயின் இன்னொரு மைல் தூரம் உதவியளித்துத் தங்களுடைய நல்ல மனப்பான்மையைக் காட்ட வேண்டும். அதாவது, முறுமுறுப்பு இல்லாமலும், சட்டப்பூர்வமாக இல்லாமலும், இவர்கள் தேவைப்படும் பட்சத்தில், இவர்கள் இன்னொரு மைல் தூரம்சென்று உதவியளித்துத் தங்களுடைய நல்ல மனப்பான்மையைக் காட்ட வேண்டும்.

(4) கர்த்தருடைய பின்னடியார்கள், பெருந்தன்மையை விருத்திச்செய்ய வேண்டும். பரம பிதா எப்போதும் கொடுப்பவராகவும், ஒருபோதும் திரும்பக் கேட்காதவராகவும் இருப்பதுபோன்று, அவருடைய அனைத்துப் பிள்ளைகளும், இந்தக் குணத்தைப்பெற்றிருந்து, தேவையுடன் காணப்படும் எவருக்கும் கொடுத்து உதவுவதற்கு ஆயத்தமாகக் காணப்பட வேண்டும். தேவை என்று இங்குக் குறிப்பிடப்படுவது, ஊதாரித்தனமான செலவுகளுக்கான தேவைகள் அல்ல, இன்னுமாக வேண்டிக் கேட்பவரின் அனைத்து விருப்பங்களும் தேவைகள் என்று கருதப்படவும் முடியாது. தேவை என்ன என்பதைக் கண்டறிய கணிப்பும், பகுத்தறிவும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், கொடுப்பதற்கும், உதவுவதற்குமான விருப்பம், இயேசுவின் ஒவ்வொரு பின்னடியாரின் இருதயத்திலும் விருத்திச் செய்யப்பட வேண்டும். கடன் கேட்கிறவர்களுக்கு இவர்கள் நன்மை செய்கிறவர்களாகவும், கொடுக்கின்றவர்களாகவும், பிரதிபலன் எதிர்ப்பார்க்காதவர்களாகவும் காணப்பட வேண்டும். மற்றவர்களைப்போன்று, கர்த்தருடைய ஜனங்கள், அதிகமான பணங்களைத் திரட்டிக் குவிப்பவர்கள் அல்ல. இவர்கள் தங்களுடைய பரம பிதாவைக் கனப்படுத்தி, பிரியப்படுத்தி, பரலோகத்தில் தங்களுடைய பொக்கிஷத்தைச் சேர்த்துவைத்து, இராஜ்யத்தில் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும், ஆசீர்வதிக்கப்படுவதற்கும் ஏதுவான நிலையில் தங்களுடைய இருதயத்தைக் கொண்டு வருகின்றவர்களாக இருப்பார்கள்.

உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்

“”உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக” என்று பாரம்பரியம் கூறியுள்ளது. மாறாக, மாபெரும் போதகரோ, சத்துருக்களிடமிருந்து துன்பமும், பாதிப்பும் வருமாயினும், சத்துருக்கள் அன்புகூரப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றார். இப்படியான புதிய மற்றும் மேலான போதனைகளே, நமது மீட்பர், மற்றவர்களைக்காட்டிலும் வித்தியாசமாகப் பேசினார் என்று கூறப்பட்டதற்கான காரணமாகும்.

நண்பர்கள் மேலும், சத்துருக்கள் மேலும் அன்பின் இந்த ஆவியை விருத்திச்செய்வது என்பது, இயேசுவின் பின்னடியார்கள், தேவனுடைய பிள்ளைகளாக, தேவனுடைய ஆவியை, குணலட்சணத்தைப் பெற்றுள்ளதைக் குறிக்கின்றதாய் இருக்கும். தேவன் பாவிகள் மீதும், பரிசுத்தவான்கள் மீதும் சூரியனை உதிக்கப் பண்ணுகின்றார், சூரிய ஒளியை அனுப்புகின்றார். மழையானது நீதிமான்கள் மீதும், அநீதிமான்கள் மீதும் பொழியப்படுகின்றது. தேவன் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களைத் தவிர, மற்றபடி உள்ள தம்முடைய சத்துருக்கள் அனைவரையும் நித்திய காலமாய்ச்சித்திரவதைப்படுத்தும் தேவ நோக்கம் தொடர்பான “”இருண்ட யுகத்தின்” பாரம்பரியங்கள், நம்முடைய மனங்களுக்கு எவ்வளவு தீமை விளைவித்துள்ளது என்பதைக் [R4559 : page 58] கணக்குப்பார்ப்பது கடினமே. இம்மாதிரியான போதனைகள், அவருடைய வேதத்தில் காணப்படாததற்குத் தேவனுக்கு நன்றி! இம்மாதிரியான பாரம்பரிய போதனைகள், நம்முடைய மூதாதையர்களை மதங்களுக்கு எதிரான கொள்கையுடையவர்களாக மாற்றியுள்ளது.

அன்பு, மகிமையான பண்பாகும், அது தேவனுடைய பண்பாகும். ஆனால், திருப்பி அன்பு காட்டுபவர்களிடத்தில் மாத்திரமே அன்பு காட்டப்படுமாயின், அது விசேஷமான பலனைப் பெற்றுக்கொள்வதற்கு எப்படிப் பாத்திரமாகும்? அந்நிய தெய்வங்களை வணங்குகின்றவர்களும், சொல்லப்போனால், எல்லா மனுஷரும் இப்படியாகவேதான், அன்பு செய்கின்றார்கள் அல்லவா? மரியாதையை நம்மிடம் காட்டுபவர்களிடத்தில் மாத்திரம் நாம் மரியாதை காட்டுபவர்களாய் இருப்போமானால், எவ்விதத்தில் நாம் புறஜாதிகள் மற்றும் பாவிகளைக்காட்டிலும் மேலானவர்களாக இருக்கக்கூடும்?

கிறிஸ்துவின் பின்னடியார்களாகிய, அவருடைய பள்ளிக்கூடத்தின் மாணவர்கள், தங்களுடைய அன்பான சிருஷ்டிகராகிய உயர்ந்தவரை தங்களுக்கான மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் பிதாவினுடைய பூரணத்தை/சற்குணத்தையடைய முயற்சிக்க வேண்டும். இதை இவர்கள் தங்களுடைய இருதயத்தில் அடைந்து, முடிந்தமட்டும் தங்களுடைய விழுந்துப்போன மாம்சத்தினுடைய ஒவ்வொரு எண்ணத்திலும், வார்த்தையிலும், கிரியையிலும் செயல்படுத்த வேண்டும்.”