R1459 – ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R1459 (page 313)

ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்

THE PRODIGAL’S RETURN

லூக்கா 15:11-32

அநேகர் இவ்வுமையில் வரும் ஊதாரியான மகன் புறஜாதிகளுக்கு அடையாளமாக இருக்கின்றான் என்று கருதி, இந்த உவமையை யூதர்களுக்கும், புறஜாதிகளுக்கும் பொருத்துகின்றனர். ஆனால் இப்படியான அர்த்தமானது நம்மைப் பொறுத்தமட்டில் உண்மைகளுக்கும், வேதவாக்கியங்களுக்கும் பொருந்தாததாகக் காணப்படுகின்றது; ஏனெனில் இந்த உவமை பேசப்பட்ட காலத்திலும், பெந்தெகொஸ்தே நாளுக்கு மூன்றரை ஆண்டுகள் ஆகுவது வரையிலும், புறஜாதிகள் தேவனுடைய புத்திரர்களாக அங்கீகரிப்படாமல், அந்நியர்களாகவும், அஞ்ஞானிகளாகவும், “”நம்பிக்கையில்லாதவர்களாகவும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களாகவும்” காணப்பட்டார்கள் (எபேசியர் 2:11-12). விழுகை முதற்கொண்டே, ஆதாமின் பிள்ளைகளிலேயே ஒரு வம்சா வழி மாத்திரமே தெய்வீகக் கிருபை பெற்றவர்களாக இருந்தார்கள்; அந்த வம்சா வழியிலேயே நோவாவும், ஆபிரகாமும், இஸ்ரயேலும், கிறிஸ்துவும் வந்தார்கள்; அது சேத்தின் வழியாக வந்த வம்சா வழியாக இருந்தது (ஆமோஸ் 3:2). இந்த வம்சா வழியில் வந்த அனைவரும் (கிறிஸ்து தவிர) பாவங்களுக்கான நிழலான பலியின் மூலமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தனர்; கிறிஸ்துவானவர், ஆதாமை அல்லாமல் வேறொரு தந்தையை உடையவராய் இருந்தார்; மேலும் ஆதாமுக்காகவும், அவருக்குள் ஜீவனை இழந்த அனைவருக்காகவும், கிறிஸ்து நிஜமான பாவநிவாரண பலியானார்.

ஆகையால் இவ்வுமையில் வரும் ஊதாரி மகன் புறஜாதிகளுக்கு அடையாளமாய் இருக்க முடியாது, ஏனெனில் புறஜாதிகள் ஒருபோதும் குமாரர்களாக இருந்ததில்லை; மேலும் இவர்கள் ஒருபோதும் பிதாவினுடைய வீட்டில் காணப்படாமல் இருக்க, இவர்கள் பிதாவினுடைய வீட்டை விட்டுப்போனார்கள் என்று சொல்ல முடியாது. ஊதாரி மகன் எந்த வகுப்பாருக்கு அடையாளமாய் இருக்கின்றார் என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த இரண்டு குமாரர்களில் மூத்தவன் “”ஜெயங்கொள்கிறவர்களுக்கு” அடையாளமாக இருக்கின்றான் என்றும், இளையவன் “”திரள்கூட்டத்தாருக்கு” அடையாளமாக இருக்கின்றான் என்றும் சிலரால் கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது; இன்னுமாக தங்களுடைய உடன்படிக்கையை நிறைவேற்ற தவறுகின்றவர்களாகவும், உலகத்தின் இன்பங்களை/அனுகூலங்களை அனுபவிப்பதன் மூலம் ஆவிக்குரிய சிலாக்கியங்களை வீணடிக்கின்ற வேசிகளாகவும், ஆயக்காரர்களாகவும் இருந்து, உடன்படிக்கைக்கு ஏற்ப வழித்தவறி, (ஆண்டவருடைய ஊழியத்தில், தினந்தோறும் மரித்துக் கொண்டிருப்பவர்களாகிய உடன்படிக்கையை உண்மையாய்க் கைக்கொள்ளுகிறவர்கள் மீது வரும்) எதிர்ப்புகள் இல்லாமல் இருப்பவர்களுக்கு ஊதாரி மகன் அடையாளமாய் இருக்கின்றான் என்றும் சிலரால் கருத்து முன்வைக்கப்படுகின்றது. ஆனால் இந்த ஒரு கருத்தானது, ஊதாரி மகன் உலகத்திலிருந்து வரும் அவமானம், பழி மற்றும் எதிர்ப்புகள் அற்றவன் என்றும், எப்பாடும் அனுபவியாத மூத்த மகன், நீதியின் நிமித்தமாய் கிறிஸ்துவுடன் பாடு அனுபவிக்கிறவனுக்கு அடையாளமாய் இருக்கின்றான் என்றும், தலைக்கீழாகக் காட்டப்படுகின்றது. உவமையில் மூத்தமகனே, நன்மையான காரியங்களையும், திரளான உணவுகளையும், உடைகளையும், அனைத்துச் சௌகரியங்களையும் உடையவனாய் இருக்கின்றான்; மற்றும் ஊதாரி மகனே பசியுடையவனாகவும், கிழிந்த வஸ்திரம் உடுத்தியிருந்தவனாகவும், கால்களில் செருப்பு இல்லாதவனாகவும், கஷ்டப்படுகிறவனாகவும், பன்றிகளுடன் வெளியே தள்ளப்பட்டுக் காணப்பட்டவனாகவும் இருக்கின்றான்.

இந்த உவமையினுடைய அனைத்து அம்சங்களுக்கும் பொருந்தும் நியாயமான விளக்கம் பின்வருமாறு:

உவமையில் மூத்த குமாரன் பரிசேயர்களுக்கும், மற்றும் இளைய குமாரன் பாவிகளுக்கும், ஆயக்காரர்களுக்கும் அடையாளமாய் இருக்கின்றனர். தேவனுடைய பிரமாணங்களையும், தங்களுடைய உடன்படிக்கையையும் பொருட்படுத்தாமல், பாவ ஜீவியத்தை ஜீவிக்கும், யூதர்களுடைய கீழ்மட்ட வகுப்பினரை நமது கர்த்தர் ஏற்றுக்கொள்ள விரும்பின காரியமானது, பரிசேயர்களின் கோபத்தைத் தூண்டினதாக இச்சம்பவம் தெரிவிக்கின்றது. பரிசேயர்களோ, தேவனுடைய நியாப்பிரமாணங்களைக் கண்டிப்புடன் கைக்கொள்கின்றவர்களாய் இருந்தார்கள்; மேலும் இது பாராட்டத்தக்கதான ஒன்றேயாகும்; எனினும் இவர்கள் தங்களுடைய பயபக்தியின் விஷயத்தில் பெருமையாய் இருந்ததும், தங்களுடைய நல்ல பண்புகளினிமித்தம் பெருமையடித்துக் கொண்டிருந்ததும், குற்றம் சாட்டப்படத்தக்கதாய் இருந்தது; இன்னுமாக இவர்கள் பயபக்தியற்ற வகுப்பாரை மதிக்கவோ, அவர்களோடு கூடப் பேசவோ, அவர்களோடு கூடப் புசிக்கவோ செய்யாமல், அவர்களை இழிவுபடுத்தியதும், அவர்களை வெறுப்புடன் பார்த்ததும், குற்றம் சாட்டப்படுவதற்கு ஏதுவாய் இருந்தது; இன்னுமாக பரிசேயர்கள் தங்களால் இயன்றமட்டும் சிறப்பாகத் தேவனுடைய நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி வந்தாலும், தங்களிடத்தில் பூரணமான கீழ்ப்படிதல் குறைவுபட்டிருக்கின்றது என்ற உண்மையைத் தங்களுடைய பெருமையினால் உணர்ந்துக்கொள்ள தவறிப்போனார்கள்.

நமது கர்த்தர் யூதனாக, நியாயப்பிரமாணத்தின் கீழ்ப் பிறந்ததினால், நியாயப்பிரமாண உடன்படிக்கையை முடிவிற்குக் கொண்டு வந்த அவரது மரணம் வரையிலும், அந்த நியாயப்பிரமாணத்திற்குக் கட்டுப்பட்டவராக, அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றி வந்தபடியால், அவர் நியாயப்பிரமாணத்தைக் கடுமையாய்க் கைக்கொண்ட காரியமானது, அவர்மேல் பரிசேயர்களை விருப்பம் கொள்ளப் பண்ணியிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை; அதினாலேயே, அவர் சில பரிசேயர்களால் விருந்தாளியாகவும் அழைக்கப்பட்டார் என்று நாம் பார்க்கின்றோம். [R1460 : page 313] (லூக்கா 7:36; 5:17; யோவான் 3:1-2 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்). ஆனால் அவர் பாவிகளையும் ஏற்றுக்கொண்டு, அவர்களோடும் அவர் புசிப்பதைக் கண்டபோது, அவருடைய நீதி, தங்களுடைய நீதியிலிருந்து வித்தியாசமாய் இருப்பதைப் பரிசேயர்கள் உணர ஆரம்பித்தார்கள்; மேலும் இருள், ஒளியை எதிர்க்கின்றபடியால், அவரைப் பகைத்தார்கள். இன்னுமாக அவருடைய போதனைகள், தங்களுக்கு எதிராக தங்களைக் குறித்துத் திரையிட்டு வெளிக்காட்டுபவைகள் என்றும், தங்களால் அறிக்கைப் பண்ணப்பட்டதும், ஆயினும் பூரணமற்றதாய்க் காணப்படுகிறதுமான பரிசுத்தத்தைக் குறித்துக் கடுமையாய்க் கடிந்துக்கொள்ளுகிறதுமாக இருக்கின்றது என்றும் பரிசேயர்கள் உணர ஆரம்பித்தார்கள். ஆகவேதான் இந்த உவமையும், மற்ற சில உவமையும், பரிசேயர்களுக்குக் கடிந்துக்கொள்ளுதலாகப் பேசப்பட்டுள்ளது, காரணம் பாவிகளுடன் இவ்விதமான தொடர்பு வைத்திருந்ததற்கும், பாவிகளுக்காய் அவர் போதித்ததற்கும், பரிசேயர்கள், இயேசுவுக்கு எதிராய் முறுமுறுத்தார்கள். லூக்கா 15:1-3-ஆம் வசனங்களில் பார்க்கவும். [R1460 : page 314]

ஆரம்பத்தில் யூதர்கள் அனைவரும், தேவனுடனான உடன்படிக்கை உறவிற்குள் பிரவேசித்து, இவ்வாறாக நிழலில் அவருடைய குமாரர்கள் ஆனார்கள். புத்திரர் வீட்டார் எனக் கிறிஸ்தவ சபை அழைக்கப்பட்டாலும், இவர்களுக்கு நேர்மாறாக யூதர்கள், பணிவிடை வீட்டார் என்று அழைக்கப்பட்டாலும், இந்த யூதர்கள் ஆவிக்குரிய புத்திரர் வீட்டாருக்கு நிழலாய் இருக்கின்றார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்; இன்னுமாக ஆதாம் பாவம் செய்வதற்கு முன்னதாக, அவர் தேவனுடைய மனித குமாரனாக இருந்தார் என்றும், மன்னிப்புப் பெற்று, தேவனுடன் இசைவிற்குள் வரும் அனைவரும் மீண்டுமாக, பூமிக்குரிய அல்லது பரலோகக் குடும்பத்தில் குமாரர்கள் ஆகுகின்றார்கள் என்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே இந்த உவமையில், நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ்க் காணப்பட்ட இஸ்ரயேலர்கள் அனைவரும், தேவனுடைய (மனித) குமாரர்களாக நடத்தப்படுகின்றனர். இந்த உறவானது, சீனாயில், உடன்படிக்கைச் செய்யப்பட்டது முதல் ஆரம்பமாகின்றது.

ஆரம்பத்தில் அனைவரும், கீழ்ப்படிதலுள்ள குமாரர்களுக்கான உறவை நிறைவேற்றுவதன் மூலமாக, வீடாகிய தேவனுடைய கிருபையில் நிலைத்திருக்க நாடினார்கள்; உவமையில் வரும் மூத்த குமாரன், நம்முடைய கர்த்தருடைய நாட்களில் காணப்பட்ட பரிசேயர்களுக்கு அடையாளமாய் இருந்தான். ஆனால் மற்றொரு வகுப்பாரோ, தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொண்ட பிற்பாடு, பாவத்தின் பாதையில் திரிந்து, தேவனையும், அவருடைய அன்பையும், பராமரிப்பையும் மறந்துப்போய், சிதறிப்போய்விட்டனர்; இப்படியாக உவமையில் இடம்பெறும் இளையக்குமாரன் நம்முடைய கர்த்தருடைய நாட்களில் காணப்பட்ட பாவிகளுக்கும், ஆயக்காரர்களுக்கும் அடையாளமாக இருக்கின்றான்.

பாவம் எப்பொழுதும், ஏதோ விதத்தில் துன்பத்தைக் கொண்டுவரும்; அது பல்வேறு விதங்களில் துன்பங்களைக் கொண்டு வருகின்றதாகவும் இருக்கும்; இளைய ஊதாரி மகன், தன்னுடைய தவறை உணர ஆரம்பிப்பது பற்றின கதையை, ஆயக்காரர்களும், பாவிகளும் கேட்டபோது, அவர்கள் தங்களுடைய கவலைக்கிடமான நிலைமை உவமையில் சித்தரிக்கப்படுவதை உணர்ந்துக் கொள்வதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. எவ்வாறு ஊதாரி மகன் தானாக திரும்பி வந்தான் என்றும், எப்படித் தகப்பன் அவனைத் தொலைத் தூரத்திலே வரக்கண்டார் என்றும், எப்படித் தகப்பன் ஓடிச்சென்று, மகனை வரவேற்றார் என்றும் ஆண்டவர் கூறி முடிப்பதற்கு முன்னதாக, அநேகருடைய கண்கள் கண்ணீரினால் நிரம்பி இருக்கும் என்பதிலும், அநேகருடைய இருதயங்கள் பிசாசுக்கு ஊழியம் செய்வதிலிருந்து, தேவனுடைய அன்பிற்கும், கிருபைக்கும் இளையகுமாரன் போலவே திரும்பிடுவதற்கான ஆசையினாலும், ஏக்கத்தினாலும், உணர்வுகளினாலும் நிரம்பி இருந்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை.

தேவனுடைய அன்பைக் குறித்தும், பாவிகளை மன்னிப்பதற்கும், மீண்டுமாக வீட்டிற்குள்ளாக வரவேற்பதற்கும், தேவன் விருப்பமுள்ளவராக இருக்கின்றார் என்பது குறித்தும், கர்த்தர் இந்தப் பாவப்பட்ட ஊதாரி மகன்களுக்குச் சொல்வதை, எதிர்த்தவர்களாக, இந்தப் பரிசேயர்கள் நிற்கும் உண்மையானது, அருமையாய் உவமையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. உவமையில் வரும் மூத்த குமாரன் “”கோபம் அடைந்தவனாக உள்ளே போக மனதில்லாதிருந்தான்” என்று பார்க்கின்றோம். சுயநீதியுடைய பரிசேயர்கள், கோபம் அடைந்தவர்களாகவும், அப்போது வர சமீபித்திருந்ததும், தெய்வீக வாக்குத்தத்தங்களுக்கு ஏற்ப தங்களுடைய ஜனங்களுக்கு முதலாவதாக அளிக்கப்பட்டதுமான இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மறுத்தவர்களாகவும் இருந்தார்கள். வேறொரு தருணத்தில், “”மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை;” மற்றும் ‘இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார் அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கர்த்தர் கூறினார் (மத்தேயு 23:13; 21:31). பரிதாபத்திற்குரிய சுயநீதிகளைக் கொண்ட பரியேசர்கள்! இவர்கள் இன்று வரையிலும் பொறாமைக் கொண்டவர்களாகவும், உள்ளே பிரவேசிக்க மறுக்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களிடமிருந்து இராஜ்யத்திற்கான அழைப்பும், வாய்ப்பும் எடுக்கப்பட்டு, இவர்களால் ஆயக்காரர்களையும், பாவிகளையும் காட்டிலும் கீழாய் மதிப்பிடப்படும் புறஜாதிகளுக்குக் கொடுக்கப்படுவது வரையிலும், இவர்கள் ஒரு வகுப்பாராக, நிபந்தனைகளின் அடிப்படையிலான இராஜ்யத்தை ஏற்க மறுத்துவிட்டனர்; “”ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்“ (மத்தேயு 21:43); இவர்களால் “”நாய்கள்” என்று மதிப்பிடப்பட்டவர்களாகவும், அஞ்ஞானிகளாகவும், அந்நியர்களாகவும், குமாரர்கள் அல்லாதவர்களாகவும் காணப்பட்ட புறஜாதியார் மத்தியிலிருந்து, மணவாட்டி மற்றும் கிறிஸ்தவினுடைய இராஜ்யத்திற்கான அங்கங்கள் தெரிந்தெடுக்கப்படுகின்றனர்.

புறஜாதிகள் மத்தியிலிருந்து, தேவனுடைய குமாரர்களாக ஆகும்படிக்கு, அதாவது கிறிஸ்துவுடன் உடன் சுதந்திரர்களாகும்படிக்குத் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நம்மாலும், மீட்பருடைய வாயிலிருந்து புறப்பட்டு வந்த இந்தக் கிருபையான வார்த்தைகளை, அன்று முழுமையாய் உணர்வு பூர்வமாய்ப் புரிந்துக்கொண்ட பாவிகள் மற்றும் ஆயக்காரர்கள் போன்று புரிந்துக்கொள்ள முடியும். அஞ்ஞானிகளாகவும், அந்நியர்களாகவும் காணப்பட்டிருந்த நாம், ஆதாமுக்குள் மரணத்தீர்ப்புக்குள்ளாயிருக்கும் அனைவருடைய பாவங்களுக்கு, பிதா மாபெரும் பலி ஒன்றை ஆயத்தப்படுத்தியுள்ளார் என்று அறிந்துக்கொள்கின்றோம். பிதாவினுடைய குடும்பத்தில் அவர் நம்மை அன்புடன் வரவேற்பதை நாம் கேட்டுள்ளோம் மற்றும் ருசித்துள்ளோம்; பாவத்திலும், மீறுதலிலும் மரித்திருந்த நாம், இப்பொழுது கிறிஸ்து இயேசு மூலமாய்த் தேவனுக்குள் பிழைத்தவர்களாய் இருக்கின்றோம். நம்முடைய அநீதியாகிய, அழுக்கான கந்தைகளுக்குப் பதிலாக நாம், கிறிஸ்துவின் நீதி எனும், “”உயர்ந்த வஸ்திரத்தைப்” பெற்றிருக்கின்றோம்; நாம் குமாரர்களும், சுதந்திரர்களுமாய் இருக்கின்றோம் என்பதற்கான ஆவியினுடைய சாட்சியை அடையாளப்படுத்தும் மோதிரத்தைப் பெற்றிருக்கின்றோம்; தற்போதைய தீமையான உலகத்தினுடைய கடுமையான அனுபவங்களுக்கு, நம்மை ஆயத்தப்படுத்தும் பாதரட்சைகளைப் பெற்றிருக்கின்றோம்; எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடைய ஒப்புரவாகுதலுக்கான முத்திரையாக, தெய்வீகக் குடும்பத்திற்குள்ளாக நாம் தத்தெடுக்கப்பட்டுள்ளதற்கான அடையாளமான முத்தத்தை, நாம் பெற்றிருக்கின்றறோம். மற்ற வேதவாக்கியங்களானது ஈடுபலியின் அவசியத்தைச் சுட்டிக்காட்டுவது போன்று, இவ்வுமையில் எந்த அம்சமும் இந்த ஓர் அவசியத்தைக் குறித்து விளக்குவதேயில்லை, எனினும் இது இந்த உவமைக்கான நமது விளக்கத்திற்கு முரண்பாடாக இல்லாமல், இசைவாகவே உள்ளது; ஏனெனில் ஒட்டுமொத்த இஸ்ரயேலர்களும், நிழலான பலிகள் மூலம்; நிழலாக ஒப்புரவாக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர், இந்த நிழலான பலிகள் மூலமாகவே இவர்களுடைய உடன்படிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது, மற்றும் வருடந்தோறும் புதுப்பிக்கவும்பட்டது. இந்த உவமை ஊதாரியாகவும், பின்வாங்கிப் போனவனாகவும் இருந்த குமாரனுடைய திரும்புதல் பற்றின [R1460 : page 315] உவமையாகவே இருக்கின்றதே ஒழிய, குற்றவாளியெனத் தீர்க்கப்பட்ட அந்நியனும், அஞ்ஞானியானவனுடைய மீட்பு பற்றின உவமையல்ல.

பரிசேயர்களுக்கான இந்த உவமையினுடைய பாடமானது, கொள்கைகளில் அடங்குகின்றதாக இருக்கின்றது; அவை பின்வருமாறு: தேவனுடன் இசைவிற்குள் இருக்கும் அனைவரும், பரிசுத்த ஆவியை உடைய அனைவரும், பாவிகள் தெய்வீகக் கிருபையினிடத்திற்குத் திரும்புதலின் நிமித்தம் மகிழ்ச்சிக் கொள்ளவேண்டும். இந்த ஆவி இல்லாமல், வேறே ஆவி கொண்டவர்களுக்கு ஆபத்தே இருக்கும்; அதாவது பரிசேயர்களை, அவர்களுடைய சுயநலத்தின் நிமித்தமாக, தேவன் அளித்த ஆசீர்வாதத்தில் பங்கடைவதற்கு அபாத்திரமாக்கின ஆபத்தானது, வேறே ஆவியைக் கொண்டவர்களுக்கும் ஏற்படும். குருட்டுத்தன்மையை அகற்றுவதற்கான காலம், சீக்கிரத்தில் வரவிருப்பதற்காக தேவனுக்கு நன்றி “”அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்” (ஏசாயா 35:5). இப்பொழுது சுயநலத்தினால் ஆளப்படுபவர்கள், புதிய நிலைமைகளின் கீழ் அன்பின் ஆவியை அதிகமாய்க் கற்றுக்கொள்ளவும், செயல்படுத்தவும் செய்வார்கள் என்று நம்பிக்கைக் கொள்வோமாக. சுயநலமான மனிதன் இராஜ்யத்தில் பிரவேசிப்பது எத்தனை கடினம்; சுயநலத்தைக் குறித்து எச்சரிக்கையாய் இருந்து, தாழ்மை மற்றும் அன்பு எனும் மலர்களை நம்முடைய கலியாண வஸ்திரத்தில் சித்திரத் தையலிடுவோமாக.