R1710 (page 309)
அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.” -யோவான் 6:66-68
இங்குப் பதிவு பண்ணப்பட்டுள்ள நமது ஆண்டவருடைய வார்த்தைகளில் சிறிதளவு ஏமாற்றமடைந்த உணர்வுகள் வெளிப்படுகின்றது. “”அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்” (யோவான் 6:67). ஒவ்வொரு செய்கைக்கும், வார்த்தைக்குமான காரணம் என்ன என்று பார்ப்பதில் நாம் பழக்கப்பட்டிருப்பதினிமித்தம், பின்னடியார்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவு ஏன் நமது கர்த்தரைத் துக்கங்கொள்ளச் செய்தது? என்று நமக்குள் கேள்விகள் எழும்புகின்றது; இன்னுமாக, அநேகர் அவரைப் பின்பற்ற வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தாரா? எண்ணிக்கையின் மீது அவரது நம்பிக்கை இருந்ததா? நான் மூன்று வருடங்கள் போதித்தப் பிற்பாடு, என்னுடைய பின்னடியார்களில் அநேகர் என்னை விட்டு விலகிப் போவதைக் கண்டு, இப்பொழுது பரிசேயர்கள் என்ன சொல்வார்களோ?” எனத் தமக்குள்ளாகக் கூறிக்கொண்டாரோ? பின்னடியார்கள் தம்மிடமிருந்து விலகி செல்வதென்பது, அவருடைய வருமானங்களைக் குறைத்துவிடும் என்று அஞ்சினாரா? இவைகள் எதற்காகவும் அவர் துக்கம் அடையவில்லை; ஏனெனில், அவர் ஏற்கெனவே தமக்கெனப் புகழ்ச்சியைச் சேர்த்துக்கொள்ளவில்லை; அவர் முன்னதாகவே/ஏற்கெனவே தம்முடைய சீஷர்களிடம் “”எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்” (லூக்கா 6:26) என்று கூறியிருக்கின்றார். ஐயாயிரம் மக்களுக்கு மூன்று வாற்கோதுமை அப்பங்களையும், இரண்டு சிறு மீன்களையும் கொண்டு போதுமானளவுக்குப் போஷிக்கும் வல்லமையும் அவரிடம் இருந்தது. இன்னுமாக, தம்முடைய உண்மையுள்ள பின்னடியார்கள், “”சிறு மந்தையினராகத்தான்” இருக்கப் போகின்றார்கள் என்றும், திரளானவர்கள் அவரை விசுவாசிப்பதில்லை என்றும் அவர் முன்னதாகவே அறிந்திருந்தார்.
பின்னர் ஏன், தம்முடைய பின்னடியார்களின் எண்ணிக்கை குறைந்ததினிமித்தம், அவருடைய வார்த்தைகளில் துக்கம் வெளிப்பட்டது? அவர் உண்மையுள்ளவராகவும், பரந்த மனப்பான்மையுள்ளவராகவும், அனுதாபம் உள்ளவராகவும், தம்முடைய நண்பர்களை நேசித்தவராகவும் இருந்தபடியால், மேய்ப்பன் வெட்டப்பட்டு, ஆடுகள்/மந்தைகள் சிதறிப்போவதற்கான வேளை நெருங்குவதை அவர் கண்டபோது, தனிமையின் துயரம் அவரைச் சூழ்ந்துக்கொள்ள, “”நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?” என்று கேட்டார் என்பதே காரணமாகும். அனுதாபத்தை விரும்புதல், நண்பர்களின் ஐக்கியத்தை விரும்புதல் முதலானவைகள் பெலவீனங்களல்ல. மாறாக, இவை உண்மையான குணலட்சணத்தினுடைய அம்சங்களேயாகும். ஆனால், ஒருவேளை நமது கர்த்தருடைய சீஷர்கள் அவரை விட்டு விலகிச் சென்ற காரியமானது, பிதாவின் திட்டத்தில் அவருக்கெனக் குறிக்கப்பட்டுள்ள பலியின் பாதையினின்று, அவரது போக்கைத் திசை மாற்றியிருக்குமாயின், அது பெலவீனமாயிருந்திருக்கும். இப்படிப்பட்டதான பெலவீனங்கள் கர்த்தரிடத்தில் ஒருபோதும் வெளிப்படவில்லை. மாறாக, சில நாட்களுக்குப் பிற்பாடு, பலிச் செலுத்துவதிலிருந்து, நமது கர்த்தருடைய மனதை மாற்றுவதற்கெனப் பேதுரு பேசினபோது, [R1710 : page 310] கர்த்தர் உடனடியாக “”எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்” (மத்தேயு 16:23).
[R1711 : page 310]
“”ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே” என்ற அப்போஸ்தலனாகிய பேதுருவின் வார்த்தைகள், பிரம்மாண்டமான அர்த்தம் கொண்டவைகள் ஆகும் (யோவான் 6:68). நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதன் மூலமாகத் தேவனுடைய கிருபையை நாடுவதும், நித்தியஜீவனை நாடுவதும் என்பது என்ன என்றும், தாழ்மையுள்ள யூதர்கள் பெரும்பான்மையானவர்களைப் போன்று பரிசேயர்களின் உபதேசங்களினாலும், தங்களுடைய சொந்த மனசாட்சியினாலும் குற்றவாளியாக்கப்பட்டுச் சோர்ந்துப் போவது என்ன என்றும், பேதுரு நன்கு அறிந்திருந்தார். எதிர்க்கால வாழ்க்கை குறித்த அந்நிய ஜாதிகளின் பல்வேறு தத்துவ ஞானங்கள் பற்றியும் கொஞ்சம் பேதுரு அறிந்திருக்க வேண்டும்; ஒருவேளை இதை அறிந்திருப்பாரானால், இவைகள் மனித யூகங்கள் மாத்திரமே என்றும் அறிந்திருந்திருப்பார்.
ஆனால், மூன்று வருடங்களாகப் பேதுரு இயேசுவை அறிந்திருந்தார். இன்னுமாக, நித்தியஜீவன் தொடர்பான இந்தப் பாடத்தைக்குறித்த இயேசுவின் வார்த்தைகளையும் பேதுரு கேட்டிருந்தார். இயேசுவின் போதனைகள், யூகங்கள் அல்ல. “”அவர் வேதபாரகரைப் போல் போதியாமல், அதிகாரமுடைவராய் அவர்களுக்குப் போதித்தார்” என்று பார்க்கின்றோம் (மாற்கு 1:22). நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதன் மூலமாக, நித்தியஜீவனை எதிர்ப்பார்க்கலாம் என்று இயேசு அவர்களுக்குப் போதிக்கவில்லை. (நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதும், அதினால் நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வதும் கூடாத காரியம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்). மாறாக, இயேசுவினுடைய போதனைகள், மற்றப் போதனையாளர்களின் போதனையிலிருந்து வேறுபட்டுக் காணப்பட்டது. தாம் உலகத்திற்கு வந்ததற்கான காரணம், ஊழியம் கொள்வதற்கும் (அ) கனம் பெற்றுக்கொள்வதற்கும், மதிப்புப் பெற்றுக்கொள்வதற்கும் அல்லாமல், ஊழியம் செய்வதற்கும், இறுதியில் ஆதாமின் பரீட்சை காரணமாகவும், கீழ்ப்படியாமையின் காரணமாகவும் ஜீவனுக்கான உரிமைகளை இழந்துள்ள அனைவருக்கும், ஈடுபலிக் கிரயமாக தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுப்பதற்கும் என்று சீஷர்களுக்கு அவர் கற்றுக்கொடுத்தார் (மத்தேயு 20:28). தெய்வீக அன்பு மற்றும் ஏற்பாட்டின் மூலமான இந்த ஈடுபலியின் காரணமாக, புதிய உடன்படிக்கையினுடைய கிருபையான இரக்கங்களின் கீழ்க் காண்பிக்கும் கீழ்ப்படிதல் வாயிலாக, நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை, அனைவரும் பெற்றுக்கொள்வார்கள் என்று இயேசு போதித்தார். அதோடு கூட, “”பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் மனுஷகுமாரனுடைய சத்தத்தைக் கேட்டு (கீழ்ப்படிந்து), பிழைப்பார்கள் (பூரண ஜீவனை அடைவார்கள்)” என்றும் கூறினார் (யோவான் 5:25,28,29). இந்த எளிமையான மற்றும் அருமையான சுவிசேஷத்தை, அதாவது நித்தியஜீவன் பற்றின ஒரே உண்மையான நற்செய்தியைப் பேதுரு கேட்டிருந்தார்; இயேசுதான், உலகத்திற்கு ஜீவன் கொடுக்கும்படிக்குத் தேவனால் அனுப்பப்பட்ட மேசியா என்றும், உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி என்றும் பேதுரு அடையாளம் கண்டுக் கொண்டார் (யோவான் 1:9).
இந்தக் கண்ணோட்டத்தின் காரணமாகவே, “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம்? நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே” என்று பேதுரு பதிலளித்தார். வேறெங்கும் பெற்றுக்கொள்ள முடியாத, அஸ்திபாரத்தையும், நங்கூரத்தையும் பேதுருவின் விசுவாசமும், நம்பிக்கையும், கிறிஸ்துவின் உபதேசத்தில் கண்டடைந்தது.
இன்றுள்ள புத்தியுள்ள விசுவாசிகள் அனைவரின் விஷயத்திலும் இப்படியாகவே உள்ளது; கிறிஸ்துவின் மரணத்தையும் மற்றும் தேவனுடைய அன்பையும், தயவையும், அவருடைய மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்களையும் உள்ளடக்கியுள்ள ஜீவனுக்கான அருமையான வார்த்தைகளை எந்தளவுக்கு இன்றுள்ள புத்தியுள்ள விசுவாசிகள், கேட்டு, புரிந்துக்கொள்கின்றார்களோ, அவ்வளவாய் அவர்களது விசுவாசமும், நம்பிக்கையுங்கூட, பேதுரு விஷயம் போன்று அஸ்திபாரத்தையும், நங்கூரத்தையும் அடைகின்றது. சத்தியத்தை ஒருமுறை உணர்ந்த பிற்பாடு, நற்செய்தியை ஒருமுறை கேட்ட பிற்பாடு, நித்தியஜீவனுக்கான வார்த்தைகளைக் கேட்ட பிற்பாடு, இதற்காக புத்தியுள்ள இந்த விசுவாசிகள் எதைக் கொடுப்பார்கள்? (exchange)
நாம் ஏறெடுத்துப் பார்க்கையில் புத்தா, பிரம்மா, சொராஸ்டர், கன்பூசியஸ் (confucious) என்பவர்களின் தத்துவங்கள் இன்னமும் காணப்படுகின்றது. ஆனால், அவைகள் நம்மைத் திருப்திப்படுத்துவதில்லை. இந்த உலகத்தின் ஞானமானது, ஒரு பரிணாமம் பற்றின யூகத்தைத் தெரிவிப்பதை நாம் கேட்டுள்ளோம்; இந்த யூகமானது ஓர் உயிரணு, தலைப்பிரட்டையாக வளர்ச்சி அடைந்தது என்றும், தலைப்பிரட்டையிலிருந்து குரங்கு வந்தது என்றும், குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றும், காணப்படுகின்றது. பின்னர் மனிதனிலிருந்து, மனிதனைக் காட்டிலும் உயர் தளத்திற்கு வளர்ச்சி காணப்படும் என்ற பரிணாமம் பற்றின இந்த யூகமானது அதனையே தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொண்டும் இருக்கின்றது. ஆரம்பத்தில் தேவன் என்ற ஒருவர் இருந்திருந்தாலும், இல்லாமல் இருந்திருந்தாலும், போகப்போக ஞானமுள்ள மற்றும் வல்லமையுள்ள தேவர்கள் படிப்படியாகத் தோன்றும்போது, மில்லியன் கணக்கான வல்லமையும், ஞானமுமுள்ள தேவர்கள் இருப்பார்கள் என்று இந்தப் பரிணாம யூகம் நமக்கு உறுதியளிக்கின்றது. ஆனால், இத்தகைய பயங்கரமான யூகங்களிலிருந்து, நம்முடைய இருதயங்கள், எந்த மனிதனும் பேசினது போல் அல்லாமல் இயேசுவினால் பேசப்பட்ட ஜீவனுக்கான அருமையான வார்த்தைகளை நோக்கித் திரும்புகின்றது. அந்த வார்த்தைகளில்தான் உலகத்தால் தரமுடியாததும், எடுத்துப்போட முடியாததுமான இளைப்பாறுதலும், சமாதானமும் காணப்படுகின்றது.
இந்த மாபெரும் போதகரின் அறிவுரைகளைப் பின்பற்றுகையில், இவர் அனைவருக்குமென அளித்துள்ள இந்த நித்தியஜீவனை அதிகமதிகமாக நாம் கற்றுக்கொண்டு வருகின்றோம். நித்தியஜீவனாகிய இந்த ஈவு, அவரை அன்புகூருகின்றவர்களுக்கு மாத்திரமே என்றும், ஈடுபலிச் செலுத்தப்பட்ட உலகத்திலிருந்து, சுவிசேஷ யுகத்தில் ஒரு சிறு மந்தையினர், அழைக்கப்பட்டு, அவர்களுடைய அன்புடன்கூடிய கீழ்ப்படிதல் காரணமாகப் பாத்திரவான்களென நிரூபிக்கப்பட்டு, திவ்வியச் சுபாவத்தின் மகிமை, கனம் மற்றும் அழியாமையில் அவரோடுக் கூட உடன் சுதந்தரர்களாக இருக்கப்போகின்றார்கள் என்றும் நமக்கு இந்தப் போதகர் கற்றுக்கொடுத்துள்ளார்; இன்னுமாக ஈடுபலியின் இரத்தத்தினால், முத்திரிக்கப்படும் புதிய உடன்படிக்கையின் இருதயப்பூர்வமான கீழ்ப்படிதல் மற்றும் விசுவாசம் எனும் நிபந்தனைகளின் கீழ், மனித பூரணத்தை, நித்தியஜீவனோடு திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பைக்கொண்டும், அறிவைக் கொண்டும், இவர்கள் கர்த்தருடன்கூட அடுத்த யுகமாகிய ஆயிரம் வருஷ அரசாட்சியில், பூமியின் குடிகளை ஆசீர்வதிப்பார்கள் என்றும் நமக்கு இந்தப் போதகர் கற்றுக்கொடுத்துள்ளார். நாம் இங்கு விவரித்துள்ளது, முற்காலத்தில் உரைக்கப்பட்ட அதே சுவிசேஷம், நித்தியஜீவனுக்கான அதே [R1711 : page 311] வார்த்தைகள்தான்; ஆனால், இவைகளின் பிரம்மாண்டமான நிறைவேறுதலின் அண்மையில் நாம் காணப்படுவதினால், அதே சுவிசேஷத்தை விரிவாக உரைத்துள்ளோம்.
யூத யுகத்தினுடைய அறுவடையில் “”நித்தியஜீவனுக்கான வார்த்தைகளை” நமது கர்த்தர், தம்முடைய பின்னடியார்களிடம் பேசின பிற்பாடுதான், “”இடறல்கள் வருவது அவசியம்” என்று கூறி, அவர்களைக் கோதுமையைப்போல் புடைக்கிறதற்கென “”இடறல்களை” அனுமதித்தார். “”இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!” (மத்தேயு 18:7). இந்தப் பரீட்சைகளானது, யார் யார் முதிர்ந்த கோதுமை மற்றும் வளர்ச்சியுறாத கோதுமை மற்றும் பதர் என்று நிரூபிக்கப்படுவதற்கேயாகும். இரண்டு வகுப்பார்கள் விசேஷமாகப் புடைக்கப்படுகின்றனர். அதாவது, அரும்பொருள்களை அறிந்துக்கொள்ள வேண்டும் என்றிருப்பவர்களும் (curious), அதிகம் விருப்பம் இல்லாதவர்களும் அடங்கிய ஒரு வகுப்பார் மற்றும், அர்ப்பணம் பண்ணியும் ஆழமான குணலட்சணம் கொண்டிராதவர்கள் அதாவது, நமது கர்த்தருடைய உவமையில் வசனத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டிருந்தும், இருதயம் எனும் நிலம் ஆழமாக இல்லாமலும், உண்மையான அன்பு மற்றும் சத்தியத்திற்கான அர்ப்பணம் இல்லாமலும் இருக்கும் கற்பாறை நிலம் போன்ற மற்றொரு வகுப்பார்; இந்த இரண்டாம் வகுப்பார் உபத்திரவங்கள் (அ) துன்பங்கள் வரும்போது, இவர்கள் உடனடியாக இடறல் அடைந்து, பின்னிட்டுத் திரும்பி, கர்த்தரிடமும், அவருடைய உண்மையுள்ளவர்களிடமும் இருந்து விலகிப் போய்விடுவார்கள்.
சுவிசேஷ யுகத்தினுடைய தற்போதைய அறுவடையாகிய இப்பொழுதும் இப்படியாகவே இருக்கின்றது. யுகங்களைக் குறித்ததான தெய்வீகத் திட்டத்தின் “”ஆழமான காரியங்கள்” அநேகவற்றைக் கண்டுள்ளதால், நமது கண்கள் பாக்கியமுள்ளவைகள்; மாபெரும் போதகரின் பாடங்களையும், மகிமை, கனம் மற்றும் அழியாமையின் வார்த்தைகளையும், நித்தியஜீவனுக்கான வார்த்தைகளையும், ஆச்சரியத்திற்குரிய தெளிவுடன் கேட்டுள்ளதால், நமது காதுகள் பாக்கியமுள்ளவைகள். கர்த்தருடைய ஏற்பாட்டின்படி இப்பொழுது நாம் பரீட்சைகளுக்காகவும், புடைக்கப்படுவதற்காகவும் ஆயத்தத்துடன் காணப்பட வேண்டும். இப்பொழுதும், மீண்டுமாக அனைவரையும் நிரூபித்துக் காட்டுவதற்கும், அர்ப்பணம் பண்ணாதவர்களையும், குணலட்சணங்களை ஆழமாகப் பெற்றிராதவர்களையும், கிறிஸ்துவின் நிமித்தமான நிந்தைகளையும், அவமானங்களையும் சகிப்பதற்கு விருப்பம் இல்லாதவர்களையும் விலகச் செய்வதற்கும் என இடறல்கள் அவசியமாய் உள்ளது. இப்படியாகவே, நிழலான கிதியோனின் சேனை விஷயத்திலும் நடந்தது. கிறிஸ்துவின் உடன் சுதந்தரர்களாக, தேவனுக்குச் சொந்தமாய் உள்ளவர்கள் அனைவரும், வைராக்கியத்தில் விசேஷமாய் இருக்கும் ஜனங்களாக, ஒரு தெரிந்துக்கொள்ளப்பட்ட வகுப்பாராய்க் காணப்பட வேண்டும். “”பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்;” “”உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே” (1 பேதுரு 4:12; 1 கொரிந்தியர் 11:18-19).
இங்குப் பரீட்சையில் நிலைநிற்கின்றவர்கள், முந்தின அறுவடையின் பரீட்சையில், பேதுரு பேசினது போன்றுக் காணப்படுவார்கள். இவர்களைச் சோர்வு மேற்கொள்ளும் போது, இவர்களும், “”ஆண்டவரே, யாரிடத்தில் போவோம்?” என்றே கேட்பார்கள். இவர்கள் தங்களைச் சுற்றிலும் பிசாசுகளின் பல்வேறு உபதேசங்களும், ஆவியுலகக் கோட்பாட்டின் வஞ்சனைகளும், நாத்திகர்களும், கிறிஸ்தவ மண்டலத்தின் பல்வேறு பிரிவுகளும், வேதவாக்கியம் மற்றும் பகுத்தறிவிற்கு எதிரானவைகளும், குருட்டுத்தன்மைகளும் இருப்பதைக் காண்கின்றனர். இந்தக் கணநேர கண்ணோட்டம் என்பது, கர்த்தர் தெரிந்துக்கொள்ள விரும்பும் வகுப்பாருக்குப் போதும். இதற்கு மேல் இவர்களால் விலகிப் போக முடியாது; கர்த்தருடைய சேனையை விட்டு விலகிப் போகும்படிக்கு இவர்களைக் கட்டாயமும் படுத்தமுடியாது. உண்மைதான், நாம் எங்கே போவோம்? நம்முடைய தலைவரிடம், ஆம் அவரிடம் மாத்திரமே, நித்தியஜீவனுக்கான வார்த்தைகள் இருக்கின்றது. நாம் அவருடைய வார்த்தைகளைக் கேட்டுள்ளபடியினால், மற்ற விசேஷ செய்திகள் அனைத்தின் மீதுமான ஈர்ப்புப் போய்விட்டது. நம்முடைய மாபெரும் இரட்சிப்பின் அதிபதியில் நாம் நிலைத்திருந்து, அவரைப் பின்தொடர்வோம்; அவருடைய வார்த்தைகளிலும், அவருடைய அன்பிலும், அவருக்கான ஊழியத்திலும் நாம் ஜீவித்து, இயங்கி, தேவனுடைய தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களாக நிலைத்திருப்போம்.
“”கர்த்தருடைய பரிசுத்தவானே!
அவருடைய சிறப்பான வார்த்தைகள் மீதுள்ள
உன் விசுவாசத்தின் அஸ்திபாரம் எவ்வளவு உறுதியாய் உள்ளது?
அடைக்கலத்திற்காக நீ புகுந்துள்ள இயேசு கூறியுள்ளதைக் காட்டிலும்
அதிகமாய் வேறென்ன உனக்குக் கூறிடுவார்.”