R2620 (page 125)
லூக்கா 7:18-28
“”எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்.” – மாற்கு 7:37
இயேசு அநேகமான அற்புதங்களைச் செய்தவராகவும், அநேகரை சீஷராக உருவாக்கினவராகவும், அதிகளவிலான எதிர்ப்புகளைச் சந்திக்காத நிலையிலும் காணப்பட்டிருக்க, அவருடைய உறவினனாகிய யோவான் ஸ்நானனுடைய விஷயத்தில் சூழ்நிலைகள் முற்றிலும் வித்தியாசமாக/எதிர்மாறாக காணப்பட்டது. எனினும், இந்த எதிர்மாறான சூழ்நிலைகள் அனைத்தும், “”அவர் பெருகவும், நான் சிறுகவும் வேண்டும்” என்று யோவான்தாமே கூறின தீர்க்கத்தரிசனத்திற்கு இசைவாகவே நடந்தது (யோவான் 3:30). இயேசு வெற்றிகரமாக ஊழியம் புரிந்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து, சுமார் 120 மைல் தொலைவிலுள்ள சிறைச்சாலையில் யோவான் காணப்பட்டார். [R2621 : page 125] அக்காலவழக்கத்தின்படி, இருளான சிறைச்சாலை அறைக்குள் யோவான் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், நமது கர்த்தர் தம்முடைய வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதும், யோவானின் சார்பாக எவ்விதமான கண்டன சத்தத்தை எழுப்பாமலிருப்பதும், மற்றும் யோவானுடைய விடுதலைக்காகக் கர்த்தர் தம்முடைய வல்லமையுள்ள சக்தியைச் செயல்படுத்தாமலிருப்பதும், யோவானுக்கு மிகவும் விநோதமாக இருந்தது. அதிலும் விசேஷமாக, மேசியாவின் பணி தொடர்பான யோவானுடைய எதிர்ப்பார்ப்பின் கண்ணோட்டத்தில், இயேசுவின் செயல்பாடுகள் அவருக்கு மிகவும் விநோதமாகக் காணப்பட்டது. மேசியா பூமியின் மாபெரும் அதிபதியாகவும், இராஜாவாகவும் இருப்பார் என்றிருந்த யூதர்களுடைய எதிர்ப்பார்ப்புப் போலவே யோவான் ஸ்நானனுடைய எதிர்ப்பார்ப்பும் இருந்தது.
யோவானுடைய மனதில் எத்தகைய சந்தேகங்கள் மற்றும் பயங்கள் எழும்பியிருக்குமென நம்மால் உணரமுடிகின்றது. அவர் பின்வருமாறு கூறியிருக்க வேண்டும், “”அனைத்துமே ஏமாற்றுத்தனம்; இயேசுவும், நானும் எங்களையே ஏமாற்றியுள்ளோம்.” யோவான் கடந்த காலங்களிலுள்ள தேவனுடைய வழிநடத்தல்கள் மீதுள்ள விசுவாசத்தையும், தற்காலம் மற்றும் எதிர்க்காலத்திற்குரியவைகள் மீதான நம்பிக்கையையும், விருப்பத்தையும்கூட இழந்திருக்க வேண்டும். யோவானுக்கு மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டாலும், அவருடைய விசுவாசம், கர்த்தரை ஊன்றி பிடிப்பதை விடவில்லை. இதன் காரணமாகவே விசாரிக்கும்படி யோவான், இயேசுவிடம் தன்னுடைய சீஷர்களை அனுப்பி வைக்கின்றார். இன்னுமாக, இவருடைய விசுவாசத்தின் உறுதி, இவருடைய விசாரிப்பின் தன்மையில் சுட்டிக்காண்பிக்கப்படுகின்றது. “”அனைத்தும் வஞ்சனையா, நாம் இருவருமே வஞ்சிக்கப்பட்டுவிட்டோமா?” என்று யோவான் கேட்கவில்லை. மாறாக, இவருடைய கேள்வியானது, ஞானமானதாகவும், இதுவரையிலும் தேவன்தான் வழிநடத்தியுள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறதாகவும் இருந்தது. இன்னுமாக, தான் இயேசுவின் முன்னோடியாக இருந்ததுபோல, இயேசு பெரியவராக இருந்தும், இயேசுவைக் காட்டிலும், பெரியவராகவும், இனிமேல் வரப்போகிறவருமாய் இருக்கும் வேறொருவருக்கு இயேசு முன்னோடியா அல்லது இல்லையா என்பதே தீர்க்கத்தரிசியான யோவானின் மனதில் இருந்த சந்தேகமாகும். உண்மையைச் சொல்லப்போனால், மாம்சத்திலிருக்கும் இயேசு சகல பரிசுத்தமான தீர்க்கத்தரிசிகள் வாயிலாக உரைக்கப்பட்ட அனைத்தையும், மாபெரும் அற்புதமான காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் இரண்டாம் வருகையில் வரப்போகின்ற மாபெரும் மகிமையடைந்த கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தம் பண்ணுகிறவராகவும் முன்னோடியாகவும் இருக்கின்றார் (அப்போஸ்தலர் 3:21-23).
யோவான் ஸ்நானனுக்கு நமது கர்த்தர் நேரடியான பதிலைக் கொடுக்கவில்லை என்பதை நாம் கவனிக்கலாம். அதாவது, வேறொருவர் வரமாட்டார் என்றும், தாம் செய்வதைக்காட்டிலும் இன்னும் பெரிய காரியங்களுண்டு என்றும் கர்த்தர் கூறவில்லை. மாறாக, தீர்க்கத்தரிசிகள் மூலம் முன்னுரைக்கப்பட்ட வேலைகளையே தாம் செய்துகொண்டிருப்பதாகவும், அக்காலக்கட்டத்தில் அவைகள் செய்யப்படுவதற்குத் தகுந்தவைகள் என்பதாகவும் யோவானுக்கு தெளிவாகப் புரியவைத்தார். யோவானுடைய சீஷர்கள், இயேசுவுடன் கூட காணப்பட்டபோது, அவர்களுடைய பார்வைக்கு முன்னதாக அநேக அற்புதங்கள் செய்யப்பட்டன. மேலும், தம்முடைய கரங்களினால் செய்யப்பட்ட வேலைகளைக்குறித்துச் சாட்சியளிக்கும்படிக்கு யோவானுடைய சீஷர்களை, இயேசு யோவானிடத்திற்கு அனுப்பி வைத்தார். இன்னுமாக, இயேசு மற்றும் அவருடைய வேலைகள் மற்றும் அவருடைய வார்த்தைகள் விஷயத்தில் இடறலடைவதற்கு அநேக வாய்ப்புகள் இருக்கின்றது என்பதையும், ஏசாயா 8:14-ஆம் வசனத்தில் தீர்க்கத்தரிசி அறிவித்திருக்கின்ற பிரகாரம், அநேகர் இடறலடைவார்கள் என்பதையும், யோவானிடத்தில் கூறும்படி, யோவானுடைய சீஷர்களை இயேசு [R2621 : page 126] திருப்பி அனுப்பிவைத்தார். இன்னுமாக பூமியைவிட, வானம் உயரமாயிருப்பது போல் மனித புரிந்துக்கொள்ளுதலுக்கு மிகவும் அப்பாற்பட்டதாகக் காணப்படும் தெய்வீக திட்டத்தின் ஆழம், அகலம், நீளம் மற்றும் உயரத்தைச் சரிவர புரிந்துக்கொள்ளாததின் காரணமாக, கர்த்தருடைய வேலைகள் மற்றும் அதன் நிறைவேறுதல் தொடர்பான எதிர்ப்பார்ப்புகளில் பல ஏமாற்றங்களடைந்த நிலையிலும், கர்த்தரிடத்திலான தங்களுடைய விசுவாசத்தில் தொடர்ந்து காணப்பட்டு, இடறல் அடையாதவர்கள் மீது, விசேஷமான ஆசீர்வாதம் தங்கும் என்பதையும் யோவானிடத்தில் கூறவும், யோவானுடைய சீஷர்களை இயேசு அனுப்பிவைத்தார். உதாரணத்திற்கு, பூமிக்குரிய இராஜ்யத்தின் பாகம் ஸ்தாபிக்கப்படப்போவதற்கு முன்னதாக, முதலாவது மேசியாவுடன் அவருடைய மகிமையிலும், கனத்திலும், அழியாமையிலும் பங்காளிகளாக இருக்கத்தக்கதாக, ஆவிக்குரிய இராஜ்யத்தின் வகுப்பார் தெரிந்தெடுக்கப்பட வேண்டும் என்றுமுள்ள இராஜ்யம் தொடர்பான யூதர்களுடைய எதிர்ப்பார்ப்பிற்கு மேலானதாய்க் காணப்படும் காரியத்தை, அறிந்த மாத்திரத்தில் யூதர்கள் என்ன சிந்தித்திருப்பார்கள்.
யோவானுக்குக் கொடுக்கப்பட்ட இந்தப் பாடத்தை, கர்த்தருடைய உண்மையுள்ள ஊழியர்கள் அனைவரும் நினைவுகூர வேண்டும். அதாவது, இவர்கள் எதிர்ப்பார்த்தவைகளுக்கு நேர் எதிர்மாறாக காரியங்கள் சிலசமயம் நடைபெறும்போதும், சத்தியத்திலும், கடமையிலும் உண்மையாய் இருந்ததற்கான பிரதிபலனாகக் காயங்களையும், ஒடுக்குதல்களையும், அவதூறுகளையும் அடையும்போதும், தேவன் தங்களை மறந்துவிட்டார் என்றோ, தாங்கள் அதுவரையிலும் கர்த்தருக்குப் புரிந்து வந்த ஊழியத்தில், தாங்கள் தவறாய் வழிநடத்தப்பட்டுள்ளார்கள் என்றோ, தேவன் தமது திட்டத்தை மாற்றிவிட்டார் என்றோ, தங்கள் விஷயத்தில் தேவன் அக்கறையற்று இருக்கின்றார் என்றோ எண்ணக்கூடாது என்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும். முதலாவதாக, இந்தச் சாதகமற்ற சூழ்நிலைகள், சிட்சைகளாகத் தங்களுக்கு வந்திருக்கின்றதா அல்லது தங்கள் பங்கில் எதேனும் தவறுகள் செய்துள்ளதன் விளைவுகளா அல்லது கர்த்தருக்குச் சித்தமான வழியில் வேலை செய்ய தாங்கள்தவறி போனதால் உண்டான விளைவுகளா அல்லது இல்லையா என்பதை சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால், ஒருவேளை தங்களுடைய நடத்தையானது, தெய்வீகச் சித்தம் மற்றும் வார்த்தைகளுக்கு இசைவாக இருப்பதை உணர்வார்களானால், இவர்கள் உடனடியாக கர்த்தர் மீதான விசுவாசத்தில் அமைதலடைந்து, தங்களைக்காட்டிலும், தேவன் தம்முடைய வேலைகளை ஒழுங்குபடுத்த/கையாள வல்லவர் என்ற முடிவிற்குள் வர வேண்டும். பின்னர், தேவனுடைய வேலையில் ஒரு குறிப்பிட்ட காலளவு தாங்கள் பயன்படுத்தப்பட்டதற்காக இவர்கள் நன்றியுள்ளவர்களாய் இருப்பதோடு கூட, ஒருவேளை மற்றவருடைய நன்மைக்காக அல்லது ஒருவேளை அனுபவம் எனும் பள்ளியில் தங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகவும், விசுவாசம் மற்றும் பொறுமை பற்றின படிப்பினைகளை தாங்கள் கற்றுக்கொள்வதற்குமெனத் தேவன் தங்களைச் சிறிது காலம் தள்ளி வைப்பது, அவருடைய சித்தமாய் இருக்குமாயின், இதிலும் இவர்கள் ரம்மியமாயிருக்க வேண்டும்.
ஆயினும், இப்படியாக கர்த்தரில் இளைப்படைவதும், கர்த்தருக்குள் ஜீவனை மையங்கொள்ளச் செய்வதும், ஓரளவுக்கு வளர்ச்சியடைந்தவர்களால் மாத்திரமே, அதாவது கர்த்தருடைய வழியில், ஓரளவு தூரம் ஓடினவர்களால் மாத்திரமே மற்றும் கர்த்தருடைய வழிநடத்துதலின் கீழ், ஏற்கெனவே அவருடைய பள்ளியின் அநேக படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டிருப்பவர்களால் மாத்திரமே செய்ய முடிகின்ற விஷயமாகும். இப்படி இளைப்பாறுதலுடன் காணப்படுவதே, கர்த்தருக்கு முற்றிலும் பிரியமான ஒரே காரியமாகவும், அனைத்துக் கர்த்தருடைய உண்மையான பின்னடியார்களும், அடைவதற்கு நாட வேண்டிய நிலையாகவும் உள்ளது. குழப்பத்தில் காணப்படும் தேவனுடைய ஊழியக்காரர்கள் அனைவரும் யோவான் ஸ்நானன் மேற்கொண்ட போக்கைப் பின்பற்றுவதே சரியான நடத்தையாகும். அதாவது, குழப்பத்தில் இருக்கும்போது கர்த்தரிடத்திற்குச் செல்ல வேண்டும், அதுவும் சந்தேகத்துடன் அல்லாமல் விசாரிக்கும்படியாகவும், அவருடைய வார்த்தையின் மூலம் இளைப்பாறுதல் அடைவதற்குச் செல்ல வேண்டும். கர்த்தருடைய வார்த்தைகளை நம்முடைய சொந்த செவிகளினால் கேட்க முடியாது. ஆயினும், அதனை யோவான் தன்னுடைய சீஷர்களின் சாட்சி மூலம் பெற்றுக்கொண்டது போன்று, நாம் நம்முடைய அனைத்து நியாயமான கேள்விகளுக்கும் தேவன் முன்கூட்டியே பதிலளித்துள்ளவைகளை எழுதியுள்ள அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கத்தரிசிகளுடைய சாட்சிகள் சத்தியத்திற்கான நம்முடைய ஊழியங்கள் மூலமாகவும், கர்த்தருடையதான நம்முடைய தற்கால பிரயாசங்கள் மூலம் பதிலைப் பெற்றுக்கொள்ளலாம்.
அநாவசியமாக தலையிட்ட காரணத்தினால் யோவான் சிறையில் அடைக்கப்பட்டாரா? அதாவது, ஏரோதின் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட்ட காரணத்தினால், யோவான் சிறையில் அடைக்கப்பட்டாரா? அல்லது தன்னுடைய கடமையை உண்மையாய்ச் செய்ததினிமித்தம் சிறையில் அடைக்கப்பட்டாரா? இராஜாவை யோவான் கடிந்துக் கொண்டதும், ஏரோது தன்னுடைய சகோதரனாகிய பிலிப்பின் மனைவியைத் தனது மனைவியாக எடுத்துக்கொண்டது சட்ட விரோதமானது என யோவான் கூறினதும் சரியா (அ) தவறா? என்ற கேள்விகள் எழலாம். ஏரோது தவறு செய்துள்ளார் என்பதும் உண்மைதான். யோவானும், ஏரோது புரிந்த குற்றத்தையே சரியாக சுட்டிக் காண்பித்துள்ளார். ஏரோது விபச்சாரம் பண்ணியுள்ளதும் சரிதான் ஆனால், ஏரோதைக் கடிந்துக்கொள்வது யோவானுடைய வேலையா? என்பதுதான் கேள்வி. யோவான் இராஜாவினுடைய விஷயங்களில் தலையிட்டுக் கொண்டு, இவ்விதமாக தனக்கே பிரச்சனை வருவித்துக்கொள்வது, யோவானுக்கு அவசியமா? என்பதே கேள்வியாகும். ஒருவேளை இவ்விஷயத்தில் ஏரோதைக் கடிந்துக்கொள்வது யோவானுடைய கடமையாக இருக்குமாயின், இப்படியாகவே ஏரோதைக் கடிந்துக்கொள்வது இயேசுவுக்கும் கடமையாக இல்லையோ? மற்றும் யோவான் சிறையில் அடைக்கப்பட்ட விஷயத்தில் எதிர்ப்புத் தெரிவிப்பதும், பொல்லாத இராஜாவினால் செய்யப்பட்ட அநீதிக்காக ஒரு மாபெரும் அமளியை எழுப்புவதும் இயேசுவின் கடமையாக இல்லையா? இன்னுமாக ஒருவேளை ஏரோதின் விஷயத்தில் யோவான் செய்தது சரி என்றால், இதே விஷயத்தை நமது கர்த்தர் இயேசு செய்யாமல் இருந்தது தவறா? அல்லது ஏரோதைக் கடிந்துக்கொள்ளும் விஷயத்தில் இயேசு, யோவானைப் பின்பற்றாமல் இருந்தது சரி என்றால், கடிந்து கொண்டதின் நிமித்தம் யோவான் தவறு செய்துள்ளாரா?
நம்முடைய பதில் என்னவெனில், இவ்விஷயம் தொடர்புடைய நமது கர்த்தருடைய நடக்கையானது, நிச்சயமாக தவறற்றதாகக் கருதப்பட வேண்டும். ஏனெனில், “”அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை” (1 பேதுரு 2:22). இயேசு தவறு செய்யவில்லை என்பது, வேறுவிதமான வழியைப் பின்பற்றின யோவானிடத்தில் பாவமும், வஞ்சனையும் இருக்கின்றது என்பதாகாது. யோவானும், அவருடைய ஊழியமும், பல்வேறு விதங்களில் நமது கர்த்தர் மற்றும் அவருடைய ஊழியத்தினின்று வேறுபட்டதாய்க் காணப்பட்டதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, யோவான் அணிந்திருந்த ஒட்டகமயிர் உடை மற்றும் வார்க்கச்சையிலிருந்து, நம்முடைய கர்த்தர் அணிந்திருந்த தையல் இல்லாத உடை மிகவும் வேறுபட்டிருந்தது. இன்னுமாக, யோவான் சாதாரணமான உணவுகளைப் “”போஜனபானம் பண்ணாதவராகவும்,” மிகவும் இச்சை அடக்கம் உள்ளவராக, இந்தச் சொகுசுகள் விஷயத்தில் தொடர்ந்து உபவாசம் (அ) சுயத்தை வெறுத்தலை மேற்கொண்டவராகக் காணப்பட்டார்; ஆனால், நமது கர்த்தர் “”போஜனபானம் பண்ணுகிறவராகவும்,” தம்மைக் கனப்படுத்தும் பொருட்டு ஏற்பாடு பண்ணப்பட்ட விருந்துகளிலும், பந்திகளிலும், திருமண விழாக்களிலும் பங்குக்கொண்டவராகக் காணப்பட்டார். பாடம் என்னவெனில், இந்த இரண்டு பிரம்மாண்டமான கதாபாத்திரங்களும், தங்களுக்குரிய ஊழியத்தை, தெய்வீக ஏற்பாட்டிற்கு ஏற்ப நிறைவேற்றினவர்களாகக் காணப்பட்டார்கள்; ஆனால், இவர்கள் இருவரும் வெவ்வேறான ஊழியத்தைப் பெற்றிருந்தனர். சீர்த்திருத்தவாதியாகவும், கடிந்துரைப்பவராகவும் இருப்பதுமே யோவானுடைய பிரதானமான ஊழியமாகும். மேலும், இவர் தீர்க்கத்தரிசியாக இருந்தபடியால், இவர் ஏறெடுத்த பாதையிலுள்ள பல்வேறு அம்சங்கள் தொடர்பான விஷயங்களில் தேவ ஆவியினால்/உலகத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் வழிநடத்தப்பட்டிருப்பார் என்பதையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். மாறாக, நமது கர்த்தருடைய ஊழியம் வேறுபட்டதாகும். யோவானுடைய ஊழியத்தினால் நீதியினிடத்திற்கும், கர்த்தருடைய சித்தத்தை அறிவதற்கும், செய்வதற்குமான வைராக்கியத்திற்கும் வந்தவர்களைத் தம்மிடத்தில் சேர்த்துக்கொள்வதே நமது கர்த்தருடைய ஊழியமாக இருந்தது.
கிறிஸ்துவின் “”சரீரம்” ஆகுவதற்கும், அவரைப் பின்பற்றுவதற்கும் அழைக்கப்பட்டுள்ள நாம், நமக்கான சரியான போக்குத் தொடர்பான விஷயத்தில் ஒரு படிப்பினையை இங்குக் கற்றுக்கொள்ளலாம். நாம் யோவானைப்போல வனாந்தரத்தில் ஜீவிப்பதற்கும், விநோதமாக உடை அணிந்துக்கொள்வதற்கும், எல்லாவற்றையும் மற்றும் எல்லாரையும் குற்றப்படுத்துவதற்கும், கண்டித்துப் பேசுவதற்கும் அனுப்பப்படவில்லை. கர்த்தருடைய அன்பான ஜனங்களில் சிலர் இத்தகைய ஊழியங்களுக்காக அனுப்பப்படுதல் விசேஷமானவைகள் என்றும், மிகவும் அபூர்வமானவைகள் என்றும் கவனிக்கத் தவறி, சிலசமயம் தவறுதலான மாதிரியைப் பின்பற்றி, கர்த்தருடைய நோக்கங்களின் மீது தேவையற்ற பழிகளை/இழிவுகளைக் கொண்டு வருபவர்களாக இருந்துவிடுகின்றனர். நாம் தேவனுடைய அருமையான குமாரனாகிய, நமது கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாகவே இருக்க வேண்டுமேயொழிய, யோவான் ஸ்நானனைப் பின்பற்றுகிறவர்களாக இருக்க வேண்டியதில்லை. மற்றவர்களுடைய விஷயங்களில் தலையிட்டு, நாம் பிரச்சனைகளைத் தூண்டிவிடுபவர்களாக இருக்கக்கூடாது. இந்த உலகத்தின, சகல விஷயங்களைச் சரிச்செய்து கொள்வதற்கோ, அதிபதிகளை, இராஜாக்களை, சக்கரவர்த்திகளை கடிந்துக்கொள்வதற்கோ நாம் நாடக்கூடாது. மாறாக, தேவன் அனுமதிப்பதற்குத் தகுந்தவைகள் எனக் காண்பவைகள் எவைகளோ, அவைகள் நாமும் சகிப்பதற்கு ஏற்றவைகள் என்பதை நினைவுகூர அப்போஸ்தலரால் புத்தமதிக் கூறப்படுகின்றோம்/புகட்டப்படுகின்றோம்.
நம்மால் பாராட்டு அளிக்கமுடியாத அல்லது ஆதரவு அளிக்க முடியாத அநேக காரியங்கள் காணப்பட்டாலும் கூட, அவைகளை நாம் கடிந்துக்கொள்வதைத் தவிர்ப்பதற்கு நம்மால் முடியும். அதிலும் விசேஷமாக முழுமையான புரிந்துக்கொள்ளுதலுக்கும், கர்த்தருடைய வார்த்தையின்படியான கிரியைக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லாதவைகளைக் கடிந்துகொள்வதை நம்மால் தவிர்க்க முடியும். நம்முடைய ஸ்தானத்தைக் குறித்து, “”கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார் (ரோமர் 12:18). மேலும், இதே கருத்தை, “”சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” என்ற வார்த்தைகள் மூலம் கர்த்தரும் வலியுறுத்துகின்றார் (மத்தேயு 5:9).
இந்த விஷயத்தில், கர்த்தருடைய ஜனங்களில் மிகவும் பரிசுத்தமுள்ளவர்களுள் சிலர் கூட, தங்களுடைய சொந்த குடும்பங்களின் காரியங்களில் தவறு செய்து, தேவையில்லாமல் தவறான அபிப்பிராயங்கொண்டு, எதிர்ப்பைத் தெரிவித்துவிடுகின்றனர். மற்றும், பரிசுத்தத்திற்கும் சிலுவை [R2621 : page 127] சுமத்துலுக்குமுரிய அளவுகோலுக்குக் கீழானதும், அதேசமயம் தன்மையில் கூடப் பொல்லாங்காய் (அ) ஒழுக்கக்கேடாய் இல்லாதவைகளுமான காரியங்களில் தொடர்ந்து குற்றம் கண்டுபிடிப்பதின் மூலம், தங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி இல்லாமலும் ஆக்கிவிடுகின்றனர். பெற்றோர்களும், பாதுகாப்பவர்களும், ஒழுக்கக்கேட்டிற்கு நேரான அனைத்து விருப்பங்களுக்கும் எதிராக தங்கள் குடும்பத்தின் அங்கங்களை நிச்சயமாகப் பாதுகாக்க வேண்டும். ஆனால், தாங்கள் அன்புகூருகிறவர்கள் பெயர்க் கிறிஸ்தவர்களாகவும், உலகபிரகாரமான ஆவியைக் கொண்டிருப்பவர்களாகவும் இருப்பதினால் மாத்திரம் அவர்களிடத்தில் குற்றம் கண்டுபிடிப்பது, ஞானமற்ற விஷயமாகும். தேவனுடைய ஜனங்கள் பரிசுத்த ஆவியில் சந்தோஷத்துடனும், சமாதானத்துடனும் ஜீவக்கும் ஜீவியமே, இவர்களால் கொடுக்க இயன்ற உலகபற்றிற்கு எதிரான மிகச் சிறந்த கடிந்துக்கொள்ளுதலும், இவர்கள் அறிவிக்கின்ற மகிமையான சுவிசேஷத்திற்குச் சிறந்த சிபாரிசும் ஆகும். இவர்களுடைய ஜீவியமே, வாசிக்கத்தக்கதான நிரூபமாகவும் மற்றும் இருளைக் கடிந்துக்கொள்ளும் வெளிச்சமும் ஆகும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், அர்ப்பணம் பண்ணாதவர்களிடத்தில், சுயத்தை வெறுக்கும் அம்சங்களை நாம் எதிர்ப்பார்க்கவும் கூடாது, திணிக்கவும் முயற்சிக்கக் கூடாது. அர்ப்பணம் பண்ணாதவர்கள் முழுமையான அர்ப்பணிப்பை, “”புத்தியுள்ள ஆராதனை” என உணர்ந்து, தங்களுடைய சரீரங்களைத் [R2622 : page 127] தேவனுக்கான ஜீவபலிகளாக ஒப்புக்கொடுப்பது வரையிலும் நாம் காத்திருக்க வேண்டும். அநேகமான செல்வாக்குகள் இன்று, பரிசுத்தம் மற்றும் பயபக்தியின் விஷயங்களினுடைய மதிப்பை/நியமத்தைக் குறைத்துப் போடத்தக்கதாகத் தொடர்ந்து கிரியை செய்து வருகின்றது எனப் போதகர்கள் உணர்ந்தவர்களாக, எப்போதும் உன்னதமான வேதவாக்கியத்தின் நியமத்தைக் கர்த்தருடைய அர்ப்பணம் பண்ணியுள்ள மந்தைக்கு முன்வைப்பதற்கு நாட வேண்டும்.
யோவானுடைய சீஷர்கள், இயேசுவினிடத்தில் கொண்டுவந்த கேள்வியைச் சுற்றி கூடியிருந்த ஜனங்கள் கண்டிப்பாகக் கேட்டிருக்க வேண்டும்; மற்றும், சத்தமாகப் பேசிக்கொள்ளவில்லை என்றாலும், சந்தேகத்திற்கிடமின்றி தங்கள் மத்தியில் ஒருவரோடொருவர் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்க வேண்டும்…. “”இயேசுதான் மேசியா என்ற விசுவாசம் யோவானுக்குப் போய்விட்டதா? ஒருவேளை யோவான் தீர்க்கத்தரிசியாய் இருந்திருப்பாரானால், அவர் இயேசுவினிடத்தில் ஆள் அனுப்பிக் கேட்காமலேயே, இவ்விஷயத்தை தேவன் அவருக்கு வெளிப்படுத்தியிருப்பாரே. யோவான் அற்புதம் எதுவும் செய்யாததினால், அவர் தீர்க்கத்தரிசியாயிராமல், சீர்த்திருத்தவாதியாக மாத்திரமே இருப்பாரோ? ஒருவேளை யோவானே தன்னை இப்படி நியமித்துக் கொண்டாரோ?” நமது கர்த்தர் இந்தக் கேள்விகளைப் புரிந்துக்கொண்டவராக, யோவானுடைய சீஷர்கள் போன பிற்பாடு, லூக்கா 7:24-26 வரையிலான வசனத்தின் வார்த்தைகளைப் பேசினார். யோவானுடைய உறுதி தொடர்பான இயேசுவின் வார்த்தைகள் முகஸ்துதி வார்த்தைகளாயிராமல், உண்மையுள்ள அந்த முன்னோடி குறித்த உண்மையான புகழ்ச்சியாக இருந்தது. “”யோவானிடத்தில் என்ன எதிர்ப்பார்த்தீர்கள்… காற்றினால் அசையும் நாணலைப் போன்று, கற்பனைகள் மற்றும் உபதேசம் எனும் ஒவ்வொரு காற்றுகளினாலும், எளிதில் தள்ளாடும் நிலைக்கு ஆளாகுமளவுக்குப் பெலவீனமான மற்றும் வளைந்துக் கொடுக்கும் சுபாவத்தை யோவான் கொண்டிருப்பார் என்று எண்ணிக் கொண்டீர்களோ? இப்படியாக, யோவானைக்குறித்து எண்ணிக்கொள்பவர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கின்றவர்களாக இருக்கின்றனர். மாறாக, யோவான் ஒரு தீர்க்கத்தரிசி ஆவார்; ஆம், அவர் தீர்க்கத்தரிசியிலும் பெரியவர் ஆவார்; இப்பொழுது நான் பிரசங்கித்து வருகின்றதான இராஜ்யத்திற்குத் தொடர்புடைய, ஆயத்தம் பண்ணும் வேலையைச் செய்யும் தேவனுடைய விசேஷமான ஸ்தானாதிபதியாகவும், தேவனுடைய தூதனாகவும் யோவான் இருக்கின்றார். மல்கியா 3:1-ஆம் வசனத்தைக் கர்த்தர் குறிப்பிட்டார். உண்மை என்னவெனில், யோவானைக் காட்டிலும் பெரிய தீர்க்கத்தரிசி தோன்றினதில்லை என்று நான் உங்களுக்கு கூறுகின்றேன்; எனினும் இராஜ்யத்தில் சிறியவனாய் இருப்பவன், யோவானை விட பெரியவனாக இருப்பான், ஏனெனில் யோவான் இராஜ்ய வகுப்பாரைச் சார்ந்தவர் அல்ல, மாறாக முந்தின யுகமாகிய, பணிவிடைக்காரர் வீட்டைச் சார்ந்தவர் ஆவார். “”நியாயப்பிரமாணமும், தீர்க்கத்தரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்” என்ற விதத்தில் இயேசுவின் வார்த்தைகள் காணப்படுகின்றது (லூக்கா 16:16; யோவான் 12:1)
கர்த்தர் ஸ்தாபிக்கும் புதிய அமைப்பு முறைக்கும், மோசேயினால் முன்னால் நிறுவப்பட்டதும், இப்பொழுது முடிவிற்கு வருகிறதும், புதியதிற்கு இடம்விட்டுக் கொடுக்கிறதுமான பழைய அமைப்பு முறைக்கும் இடையேயுள்ள வித்தியாசம் நமது கர்த்தருடைய வார்த்தைகளில் தெளிவாக விளங்குகின்றது. இராஜ்யத்தின் உடன்சுதந்தரர்களாக, இராஜ்ய வகுப்பாரில் அங்கங்கள் ஆகுவதற்கான நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கைக்குச் சொற்பமான யூதர்களே கர்த்தருடைய நிபந்தனைகளின் கீழ் இராஜ்யத்தின் சிலாக்கியங்களை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருந்ததின் காரணமாக, இந்தச் சுவிசேஷ யுகத்தின் அழைப்பானது புறஜாதிகளாகிய நம்மிடத்திற்குக் கடந்து வந்தது என அப்போஸ்தலர் காட்டுகின்றார். “”ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன் சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்” (ரோமர் 11:1-33; கலாத்தியர் 3:16,29).
புதிய யுகத்திற்குரியவர்களாகிய நாம் இராஜ்யத்திற்கான சிலாக்கியங்கள் மற்றும் வாய்ப்புகளை உயர்வாகக் கருதி, “”நம்முடைய அழைப்பையும், தெரிந்துக்கொள்ளுதலையும் உறுதி செய்துகொள்ள” நாடுகின்றவர்களாய் இருக்க வேண்டும் (2 பேதுரு 1:4-11). “”பணிவிடைக்காரரின் வீட்டில்” அங்கங்கள் ஆகுவதற்கான பூமிக்குரிய அழைப்பிற்கு அழைக்கப்பட்டவர்களே (யோவான் ஸ்நானன் செய்தது போன்று) தங்களை வைராக்கியத்துடன் கர்த்தருடைய ஊழியத்தில் ஈடுபடுத்தி, புத்தியுள்ள ஆராதனையைச் செலுத்தி, உண்மையுள்ளவர்களாகக் காணப்பட்டார்களானால், மிகவும் மேலான தயவு பெற்றுள்ள நாம் எவ்வளவு அதிகமான வைராக்கியம் கொண்டவர்களாகவும், ஆற்றலைப் பிரயோகிக்கின்றவர்களாகவும் இருக்க வேண்டும். நாம் எப்படிப்பட்ட பரிசுத்த நடத்தையும், தேவபக்தியும் உள்ளவர்களாய் இருக்கவேண்டும்! இந்தப் “”பரம அழைப்பு,” “”மேலான அழைப்பு” அதாவது, இராஜ்யத்தில் கர்த்தருடன் உடன் சுதந்தரர்கள் ஆகுவதற்கான இந்த அழைப்பு, மிகவும் விசேஷமானது என்றும், மிகவும் குறுகிய எண்ணிக்கைக்கான அழைப்பு என்றும், அது சீக்கிரத்தில் முடிவடைந்துவிடும் என்றும், அது மீண்டும் கொடுக்கப்படாத அழைப்பு என்றும் நாம் நினைவில் கொள்வோமாக. “”ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துக்கொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபிரெயர் 12:1).