R1794 – நமது கர்த்தருடைய நிழலான வெற்றி

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R1794 (page 85)

நமது கர்த்தருடைய நிழலான வெற்றி

OUR LORD’S TYPICAL TRIUMPH

மத்தேயு 21:1-17; லூக்கா 19:29-48; யோவான் 12:12-19; மாற்கு 11:1-11

“”ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.”” மாற்கு 11:9

இப்பாடம் நம்முடைய மனங்களை, நமது கர்த்தருடைய மாம்ச ஜீவியத்தின் கடைசி நாட்களில் நடந்திட்ட வேதனையான சம்பவங்களுக்கும், அவருடைய மனுஷீக ஜீவன் அவர் சிலுவையில் அறையப்படுவதன் மூலமாய் முடிவடைந்ததற்கும், பின்னர் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை உடையவராகவும், இரட்சிப்பதற்கும் வல்லமையுள்ளவராகவும் காணப்பட்ட உயிர்த்தெழுந்த கர்த்தரிடத்திற்கும் படிப்படியாகக் கொண்டு செல்கின்றது. முந்தின பாகத்தில் அவருடைய அற்புதங்களினால் ஈர்க்கப்பட்டு, அவருடைய போதனைகளைக் குறித்து ஆச்சரியமடைந்து, அவருடைய போதனைகளினால் கவரப்பட்டுக் காணப்பட்ட ஜனங்கள் மத்தியில் அவர் பிரபலமடைந்து வருவது அதிகரித்து வருவதைப் பார்த்தோம். ஜனங்களோடுகூட, அவருடைய வாயினின்று புறப்பட்டு வந்த கிருபையான வார்த்தைகளினிமித்தம் நாமும் ஆச்சரியமடைந்து இருந்தோம், மற்றும் அவருடைய வார்த்தைகளை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தோம்; மேலும் தேவனுடைய ஆவியானது, நமக்கு அவருடைய ஆலோசனையாகிய தைலத்தை அளித்தபோது, நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளாகக் கொழுந்துவிட்டு எரிந்தன. இப்பொழுது நாம் அவருடைய மனுஷீக ஜீவியத்தின் கடைசி சில நாட்களுக்குள்ளாக, அவரோடுகூட மனதளவில் பிரவேசிக்கையில் அந்த வேதனையான சம்பவங்கள் நம்முடைய இருதயங்களை, நமக்காக அனைத்தையும் இலவசமாய்ப் பலியாக்கின அவருடைய ஐசுவரியமான அன்போடும், பரிவோடும் நெருங்கின உறவிற்குள்ளாகவும், புரிந்துகொள்ளுதலுக்குள்ளாகவும் கொண்டுவருவதாக.

[R1795 : page 85]

மேசியா என்று உரிமைப்பாராட்டின விஷயத்தின் உண்மைக்குச் சாட்சி பகர்ந்திட்ட அவருடைய 31/2 வருடக் காலப்பகுதிக்கொண்டதும், லாசருவை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பினதோடு நிறைவடைந்ததுமான, அவருடைய பொதுப்படையான போதனைகளும், வேலைகளும், வெற்றிகரமாய் முடிந்தது போன்று காணப்பட்ட தோற்றமானது, அவருடைய சீஷர்கள் மற்றும் இஸ்ரயேலர்களில் பலரின் நம்பிக்கைகளை உயிரோட்டம் அடையச் செய்தது; அதாவது இப்பொழுது தங்கள் இராஜா, தங்கள் மேசியாவாக உண்மையாய் வந்துள்ளார் என்றும், தீர்க்கத்தரிசிகளால் முன்னுரைக்கப்பட்டிருந்த இஸ்ரயேலின் மகிமை சீக்கிரத்தில் உணரப்படும் என்றும் எண்ணினார்கள். இப்படியாகப் பொது ஜனங்களுடைய மனநிலை இருக்கையில், தாம் இராஜ ஸ்தானத்தை எடுக்க பொதுப்படையாக முயற்சிப்பதன் மூலம், சகரியா 9:9-ஆம் வசனத்தின் தீர்க்கத்தரிசனத்தை நிறைவேற்றுவதற்காக தமக்கு வாய்ப்பு இருப்பதைக் கர்த்தர் கண்டார். சூழ்நிலைகள் சாதகமாய் இருந்தது மாத்திரமல்லாமல், வேளையும் வந்திருந்தது.

தேவன் அவர்களுடைய பிதாக்களுடன் பண்ணின உடன்படிக்கையின்படி, இராஜ்யத்தின் சுவிசேஷமானது முதலாவதாக யூதர்களுக்கே கொடுக்கப்பட்டது. எனினும் அவர்கள் தேசமாகவே சுவிசேஷத்தை உணர்ந்துகொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ மாட்டார்கள் என்பதை முன்னமே தேவன் அறிந்திருந்தார்; மற்றும் ஜனங்களில் கொஞ்சமானவர்கள் மாத்திரமே கிருபையின் உடன்படிக்கைக்குத் தகுதியானவர்களாக இருப்பார்கள் என்றும், மீதமானவர்கள் (அவர்களுடைய தவறானக் கருத்துக்களினாலும், இருதயக் கடினத்தினாலும்) குருடாக்கப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்றும், மாபெரும் உடன்படிக்கையின் ஆசீர்வாதமானது புறஜாதியார்களில் சிலரால் உணர்ந்துகொள்ளப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படுகையில், இந்தப் புறஜாதியார்கள் ஆபிரகாமின் சந்ததியாராகக் கருதப்படுவார்கள் என்றும், தேவன் தம்முடைய தீர்க்கத்தரிசி மூலமாய் முன்னறிவித்துள்ளார். இந்தப் புறஜாதியிலிருந்து வந்தவர்கள், மாம்சத்தின்படி ஆபிரகாமின் பிள்ளைகளாய் இராமல், மாறாக ஆவியின்படி, ஆபிரகாமின் விசுவாசத்தைப் பெற்றிருப்பதினால் ஆபிரகாமின் பிள்ளைகளாய் இருப்பார்கள்; ஏனெனில் தேவன் கல்லிலிருந்துக்கூட ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை எழுப்ப வல்லவராக இருக்கின்றார் என்று இயேசு கூறினார். ரோமர் 9:27; ஏசாயா 10:22,23; ரோமர் 11:7,11,12; அப்போஸ்தலர் 13:46; கலாத்தியர் 3:9,16,28,29; மத்தேயு 3:8,9-ஆம் வசனங்களைப் பார்க்கவும்.

தேவன் இஸ்ரயேல் ஜனங்களுடைய பிதாக்களுடன் பண்ணின இந்த உடன்படிக்கையின் காரணமாகவும், மற்றும் மற்றத் தீர்க்கத்தரிசனங்களுடைய அறிவுறுத்தலின் காரணமாகவும், இயேசு தம்மை மாம்சீக இஸ்ரயேலர்களுக்கு முன்னதாக, அவர்களுடைய இராஜாவென முன்வைத்தார்; ஆயினும் ஜனக்கூட்டத்தார் அவருக்கு இராஜரிகமான வரவேற்புக் கொடுத்து, ஓசன்னாக்கள் கூறி, வந்தனம் சொல்லி வரவேற்றாலும், அவர்களுடைய தவறான போதகர்களால், அவர்களுடைய நிலையற்ற மனங்கள் தடுமாறும் என்றும், எதிர்ப்பு வரும்போது, ஜனங்கள் தாங்கள் கூறின வந்தனங்களுக்கு ஏற்ப நடக்க விருப்பமற்று இருப்பார்கள் என்றும், இன்னும் சில நாட்களுக்குள்ளாக, “”இவரைச் சிலுவையில் அறையும்! இவரைச் சிலுவையில் அறையும்!” என்று கூக்குரலிடுவார்கள் என்றும் இயேசு அறிந்திருந்த போதிலும், தம்மை அவர்களுக்கு முன்பாக இராஜாவென முன்வைத்தார். (யோவான் 12:1,12,13; 19:6,7,14,15)

விளைவு/முடிவு என்னவாக இருக்கும் என்று அறிந்திருந்த போதிலும், ஏன் இப்படி இயேசு இராஜரிக அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும், இந்தச் செயல்பாட்டைச் செய்தார்? என்று கேள்வி [R1795 : page 86] கேட்கப்படலாம்; வரவிருக்கிற நன்மையான காரியங்களுக்கான மாபெரும் நிழல்களின் ஒரு பாகமாகவே, இச்செய்கை செய்யப்பட்டது என்று நாம் அப்போஸ்தலர்களுடைய போதனைகளை வைத்துக்கொண்டு பதில் தெரிவிக்கின்றோம்.

இப்படியாக இயேசு எருசலேமுக்குள் வெற்றி விஜயம் கொடுத்ததும், அதன் காலக்கணக்குக் காரியமும், யூத யுகத்திற்கான நிஜமாய்க் காணப்படும் இந்தச் சுவிசேஷ யுகத்தின் முடிவில், கிறிஸ்து இராஜாவாக வருவதைச் சித்தரித்துக் காண்பிக்கின்றது; யூத யுகமும், சுவிசேஷயுகமும், காலங்கள் மற்றும் சம்பவங்கள் விஷயத்திலும் இணையானவைகளாக இருக்கின்றன (தொகுதி 2, அத்தியாயம் 7 பார்க்கவும்). இந்த இணையின்படி கி.பி. 1878 எனும் வருடமானது, இந்த யுகத்தின் இராஜாவாகிய நம்முடைய உயிர்த்தெழுந்த கர்த்தர், தம்முடைய மாபெரும் வல்லமையை எடுத்துக்கொள்வதற்கும், தம்முடைய ஆளுகையை ஆரம்பிப்பதற்குமான காலமாக இருக்கின்றது.

இது நிறைவேறியுள்ள உண்மையாக இருக்கின்றபடியினால் இதை நாம் தயக்கம் இல்லாமல் தெரிவிக்கின்றோம். தேவனுடைய அபிஷேகம் பண்ணப்பட்டவர் மற்றும் சபையின் கீழ், பூமியில் தேவனுடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதற்கான காலம் சமீபித்துள்ளது என்பதற்கு, அதிக உறுதியான தீர்க்கத்தரிசனங்களில், நமக்கு மிகுதியான நிரூபணங்கள் காணப்படுகின்றன (தொகுதி 2 மற்றும் 3 பார்க்கவும்). இந்த உண்மைக்குக் கிறிஸ்தவர்கள் மாத்திரமல்லாமல், முழு உலகத்தாரும்கூட, கேட்பதற்கும், செவிசாய்க்கும் அளவுக்கும் ஞானமுள்ளவர்களாய்க் காணப்படுவார்களானால், இன்னும் திரளான சத்தியங்களுக்கு வழி நடத்தப்படுவார்கள்.

அநேகர் அவரது வருகை பற்றின தவறான கருத்துக்கள் கொண்டிருப்பதினால், கர்த்தருடைய பிரசன்னம் பற்றின உண்மைக்குக் குருடர்களாய் இருக்கின்றார்கள் என்பது வேதவாக்கியங்களில் தெளிவாய்ச் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது. அவரை மாம்சத்தில் பார்க்கலாம் என்றும், மாம்ச கண்களுக்குப் புலப்படும் விதத்தில் சொல்லர்த்தமான மேகங்களில், சொல்லர்த்தமான எக்காளத்தின் சத்தத்தினால் அவரது வருகை அறிவிக்கப்பட்டு, அவர் வருவார் என்றும் அநேகர் எதிர்ப்பார்த்திருப்பதினால், அவர் மாம்சத்தில் இல்லாமல், மாறாக மாம்ச கண்களுக்குப் புலப்படாத ஆவியின் ஜீவியாகவும், அதே வேளையில் அதிக உறுதியான தீர்க்கத்தரிசன வார்த்தைகள் மூலமாக, விசுவாசக் கண்களுக்குத் தெளிவாய்ப் புரிந்துகொள்ளத்தக்கதாகவும், வந்து இப்போது இருக்கின்றார் என்பதையும் அவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை; மற்றும் முழு உலகத்தின் மீது இருளை இப்பொழுது மிக விரைவாக அளித்துக்கொண்டிருக்கும் உபத்திரவமாகிய மேகங்கள் மத்தியில், அவரது வந்திருத்தலையும், வல்லமையும் உணர்ந்துகொள்ள முடியாமலும் காணப்படுகின்றனர். எனினும் இவைகள் அனைத்தும் கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துக்கொண்டவர்கள் யாவருக்கும், மிக முக்கியமான உண்மைகளாக இருக்கின்றது. “”உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்” என்ற வார்த்தைகள் உண்மையுள்ளவர்களாகிய உங்களுக்கே சொல்லப்பட்டுள்ளது (லூக்கா 21:28). அனலுமின்றி, குளிருமின்றிப் போயுள்ள, கிறிஸ்தவர்கள் என்று தங்களை அறிக்கைப் பண்ணிக்கொள்பவர்களுக்கும், மற்றும் ஒடுக்கப்படுபவர்களின் கூக்குரல்களையும், துன்பப்படுபவர்களின் துயரத்தையும் பொருட்படுத்தாமல், உலக இன்பங்களினால் தங்கள் ஆத்துமாக்களுடைய ஆசைகளைத் திருப்திப்பண்ண நாடுபவர்களாகிய உலகப்பிரகாரமானவர்களுக்கும், “”யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்”” என்ற வார்த்தைகள் சொல்லப்பட்டுள்ளது. (தானியேல் 12:1)

“”என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்” (மத்தேயு 21:13) என்று சொல்லி, ஆலயத்தில் காசுக்காரர்களுடைய பலகைகளைக் கவிழ்த்துப்போட்டதான கர்த்தருடைய அதிகாரப் பூர்வமான செய்கையானது, நிழலான செய்கையாகும்; இது இந்த யுகத்தினுடைய முடிவில், தேவனுடைய வீட்டார் என்று அறிக்கைப் பண்ணுகிறவர்களிடத்தில் ஆரம்பிக்கும் நியாயத்தீர்ப்பையும், சத்தியத்தை வியாபாரம் பண்ணுபவர்களுக்கு எதிரான அவருடைய மாபெரும் கோபத்தையும், சுட்டிக்காண்பிக்கின்றதாய் இருக்கின்றது. (மத்தேயு 21:12,13; 1 பேதுரு 4:17)

பின்னர் ஆலயத்திற்கு அவரோடு வந்திருந்த குருடர்களையும், சப்பாணிகளையும் அவர் சொஸ்தப்படுத்துகின்ற காரியமானது, எவ்வாறு சபையில் ஆவிக்குரியவற்றில் குருடர்களாயும், சப்பாணிகளாயும் இருந்திட்டவர்கள், அவருடைய சுகமாக்கும் தொடுதலினால் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்பதைச் சுட்டிக்காண்பிக்கின்றதாய் இருக்கின்றது. “”குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார்.”” (மத்தேயு 21:14; வெளிப்படுத்தல் 3:18,19)

(இன்றும் கர்த்தரினால் சொஸ்தப்படுத்தப்பட்ட குருடர்களுக்கும், சப்பாணிகளுக்கும் எதிராக பிரதான ஆசாரியர்கள் போன்றதான தலைமை குருக்கள் இருப்பது போன்று) பிரதான ஆசாரியர்கள், புதிய இராஜாவை மகிமைப்படுத்தினவர்களுக்கு எதிராக, தங்களது எரிச்சலை வெளிப்படுத்தினபோது, இயேசு: “”இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்”” என்று கூறினார். (லூக்கா 19:40) ஏன்? காரணம், சகரியா தீர்க்கத்தரிசியானவர் இந்தக் கெம்பீரிப்பையும், களிகூருதல்களையும் பற்றி முன்னமே கூறியுள்ளார். (சகரியா 9:9) மற்றும் இப்பொழுது வேளை வந்துள்ளது, மற்றும் தீர்க்கத்தரிசனமும் நிறைவேறினது; “”சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்;”” இது அப்போது நிழலாய் இருந்தது மற்றும் இப்பொழுது நிஜமாய் இருக்கின்றது. கெம்பீரிப்பும், களிகூருதலும் அப்போது இருப்பது அவசியமாய் இருந்ததானால், இப்போதும் அவசியமானதேயாகும். இராஜாவை இப்பொழுது தங்கள் மத்தியில் காணப்படுபவராக, அடையாளம் கண்டுகொள்பவர்களாகிய பரிசுத்தவான்கள் மத்தியில் இப்பொழுது காணப்படும் சந்தோஷம் மாபெரியதேயாகும்; மற்றும் அவருடைய வந்திருத்தலையும், இராஜ்யத்தையும் குறித்ததான அவர்களது பறைச்சாற்றுதலானது கெம்பீரிப்பாக இருக்கின்றது; இந்தக் கெம்பீரித்தலானது விசுவாசிக்கப்படவில்லை என்றாலும், தொனித்துக்கொண்டிருக்கின்றது. ஆண்டவர், “”குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா”” (மத்தேயு 21:16) என்று கூறினார். இதன் நிஜமும் இப்படியாகவே இப்பொழுது காணப்படுகின்றது. ஏனெனில் இராஜாவின் வந்திருத்தல் குறித்தும், அவருடைய வல்லமை குறித்துமான அடையாளம் கண்டுகொள்ளுதலினால் எழும்பும் ஓசன்னா, இன்றுள்ள பிரதான ஆசாரியர்கள் மற்றும் மத குருமார் வகுப்பாரிடமிருந்து எழும்பாமல், மாறாக சாதாரணமான ஜனங்களாகிய குழந்தைகள் மற்றும் பாலகருடைய வாயிலிருந்தே துதிக் கேட்கப்படுகின்றது; “”தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! ஆளுகை செய்வதற்கும், இப்பொழுது தம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபித்துக் கொண்டிருப்பவருமாகிய தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா!”” என்று துதிக் கேட்கப்படுகின்றது.