R2562 – யோவான்ஸ்நானனின் பிரசங்கம்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R2562 (page 21)

யோவான்ஸ்நானனின் பிரசங்கம்

PREACHING OF JOHN THE BAPTIZER

லூக்கா 3:1-17

“கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்.”

அநேக வேதாகம விளக்கவுரையாளர்கள், யேவான் ஸ்நானனின் ஊழியம் கி.பி. 26-இல் ஆரம்பமானது என்று கூறுகின்றனர்; மேலும் இதற்கான ஆதாரமும் அவர்களிடத்தில் இல்லை. ஆதலால், இப்படியான யோவானின் ஊழியத்தின் ஆரம்ப வருடத்தைக் குறித்துக் கணிப்பது முற்றிலும் நியாயமற்றக் காரியம் என்பதை எல்லோரும் மனதில் கொள்ளக்கடவோம். நமது கர்த்தர், அவருடைய உறவினராகிய யோவான் ஸ்நானனைக் காட்டிலும், ஆறு மாதத்திற்கு இளையவர் என்று வேதவாக்கியங்களிலிருந்து தெளிவாகப் புரிந்துக்கொண்டாலும், திபேரியுராயன் இராஜ்யபாரம் பண்ணின 15-ஆம் வருஷத்திலே, யோவான் ஸ்நானன் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தார் என்ற வேதாகம பதிவுகள் போன்று, வேறு எந்த வேதவாக்கியங்களும் நமது கர்த்தருடைய மற்றும் யோவான் ஸ்நானனின் வரலாற்றைப் பொதுவான வரலாற்றோடு இணைப்பதில்லை என்ற விஷயம் மறக்கப்படக்கூடாது. இயேசு தமது ஊழியத்தை கி.பி. 29-ஆம் வருடத்தில் ஆரம்பித்தார் என்பதற்குப் பதிலாக, கி.பி. 27-ஆம் வருடத்தில் ஆரம்பித்தார் என்று கூறுபவர்கள், யோவன் ஸ்நானனின் ஊழியம், கி.பி. 26-ஆம் வருடத்தில் ஆரம்பமானது என்று கூறுகின்றனர், மேலும் தங்களுடைய இந்தக் கூற்றை, லூக்கா 3:1-ஆம் வசனத்திற்கு இசைவாகக் கொண்டுவர வேண்டுமானால், இவர்கள் வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள, [R2562 : page 22] திபேரியுராயனின் இராஜ்யபாரத்தின் வருடம், 15-ஆம் வருடமாக இராமல், மாறாக 13-ஆம் வருடம் எனக் குறைத்துக் கூற வேண்டிய கட்டாயத்திற்குள் ஆகிவிடுகின்றனர். இந்தப் பாடத்தைக் குறித்ததான விவாதத்திற்கு இரண்டாம் தொகுதியில் பக்கம் 47 (தமிழில்) பார்க்கும்படிப் பரிந்துரைக்கின்றோம்.

யோவானைக் குறித்துப் பார்க்கையில், அவர் பிறப்பின் போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார் என்று எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் அதற்கென்று, கிறிஸ்தவர்கள் ஜெநிப்பிக்கப்பட்டது போன்று, இவரும் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டார் என்று நாம் தவறாய்ப் புரிந்துக்கொள்ளக்கூடாது; காரணம் யோவான், பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பித்தல் நடைபெறும் சுவிசேஷ யுகத்தில் வாழாமல், யூத யுகத்தில் வாழ்ந்தவராய்க் காணப்பட்டார். ஆகையால்தான் நமது கர்த்தர், இவரைக் குறித்துக் கூறுகையில், யோவானை விடப் பெரிய தீர்க்கத்தரிசி எழும்பவில்லை என்றாலும், தேவனுடைய இராஜ்யத்தில் சிறியவனாய் இருப்பவன் யோவானைக் காட்டிலும் பெரியவனாய் இருப்பான்; அதாவது, புத்திரர் வீட்டாரில் சிறியவனாய் இருப்பவன், பணிவிடைக்காரர் வீட்டாரில் உள்ள பெரியவனைக் காட்டிலும் உயர்வான தளத்தில் காணப்படுவான் என்று கூறினார் (மத்தேயு 11:11; எபிரெயர் 3:5,6). “”இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை” என்று அப்போஸ்தலர் விவரிக்கின்றார் (யோவான் 7:39).

மேற்கூறப்பட்டவைகளுக்கு இசைவாக, யூத யுகம் முழுவதும் காணப்பட்ட மற்றத் தீர்க்கத்தரிசிகள் பரிசுத்த ஆவியின் கீழ்க்காணப்பட்டதுபோல, யோவானும் தன்னுடைய பிறப்பு முதல் பரிசுத்த ஆவியினால், பரிசுத்த வல்லமையினால் அல்லது தேவனிடத்திலிருந்து வந்த தாக்கத்தினால் நிரப்பப்பட்டவராக இருந்தார் என்றே நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். யோவான், இயேசுவைப் போன்று பரிசுத்தமாகப் பிறக்காவிட்டாலும், அவர் பரிசுத்த ஆற்றலின் கீழ்ப் பிறந்ததால், இவர் செய்ய வேண்டும் என்று தேவன் நோக்கம் கொண்டுள்ள ஊழியத்திற்குத் தேவையாக இயல்பான பண்புகள் அவரிடத்தில் வளர்வதற்கு ஏதுவாயிற்று. ஆனால் அதற்கென்று ஒரு மனுஷனுடைய தனிப்பட்ட சித்தங்களில்/விருப்பங்களில் தெய்வீகக் குறுக்கிடுதல் காணப்படும் என்று நாம் எண்ணிவிடக்கூடாது; காரணம், பவுலும், தான் விசேஷமான வேலைக்கென்று, விசேஷமான ஊழியக்காரனாக தன்னுடைய பிறப்பு முதல் தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டதாக நமக்குக் கூறுகின்றார் (கலாத்தியர் 1:15). எனினும், பவுல் தன்னுடைய சொந்த சித்தத்தின்படி நடக்கும் சுயாதீனத்தில், கர்த்தர் குறுக்கிடவில்லை. அவர் குருடாக்கப்பட்டு, சபையைத் துன்பப்படுத்தும் நிலைக்கும் கூட அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும், தமஸ்குவுக்குப் போகிற வழியில், கர்த்தர் அவரைக் கடிந்துகொண்டாலும், இச்சம்பவம், கர்த்தர், பவுலின் சித்தத்தில் குறுக்கிட்டதாக இராமல், அவருடைய குருட்டுதன்மையை, அறியாமையை மாத்திரம் மாற்றிவிடுவதாகவும், தன்னுடைய உண்மையான சித்ததை/விருப்பத்தை பவுல் செயல்படுத்துவற்கு அனுமதிப்பதாகவே இருந்தது. இதைப் போலவேதான் ஒவ்வொரு காலக்கட்டத்தில் காணப்பட்ட கர்த்தருடைய ஜனங்களும், ஆரம்ப குழந்தை பருவம் முதல், அவர்களுடைய சித்தங்கள் குறுக்கிடப்படாமல் தெய்வீக நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான விசேஷமான கருவிகள் ஆகுவதற்கே தெய்வீகப் பராமரிப்பின் கீழ் விசேஷமாக வைக்கப்பட்டும், வழிநடத்தப்பட்டும் அவர்களின் அனுபவங்கள் வனையப்பட்டும் காணப்படுகின்றனர்.

“”அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு இஸ்ரயேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்” என்ற பதிவுகளைத் தவிர, குழந்தை பருவம் முதல் வாலிப பருவம் வரையிலான யோவானின் வாழ்க்கையைக் குறித்து நமக்கு எவ்வத பதிவுகளும் இல்லை (லூக்கா 1:80). யோவான், மணற்பாங்கான பாலைவனத்தில் காணப்படாமல், வனாந்தர பகுதிகளில் அதாவது, விவசாயத்திற்கென்று பண்படுத்தப்படாத பகுதிகளில் காணப்பட்டார். அநேகமாக, அவருடைய பிறப்பின்போது, அவருடைய பெற்றோர்கள் காணப்பட்ட “”மலைநாட்டில்” அவர் காணப்பட்டிருக்க வேண்டும். யோவான் தனது ஊழியத்திற்குப் பயிற்சி எடுக்கும் வண்ணமாக, கர்த்தருடைய ஏற்பாடு, யோவானுடைய பெற்றோர்களின் வாழ்க்கையில் சில ஒழுங்குகளைச் செய்து; சில சூழ்நிலைகளின் நிமித்தமாக அவர்கள் இப்படியான வனாந்தர பகுதியில் வீடு குடியிருக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டும். இந்தச் சூழ்நிலைகளில் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் நிலை குறைவாகக் காணப்பட்டாலும், யோவானுக்கு நியமிக்கப்பட்டுள்ள பணிக்கு அவர் தகுதியாவதற்கான அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கு வனத்தில் தங்குவது யோவானுக்கு ஏற்றதாக இருந்தது. “”தேவனை அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும்” என்பது கிறிஸ்துவுக்குள் காணப்படும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.

விசேஷமான வாக்குத்தத்தத்தை நினைவுகூர்ந்து, அனைத்துக் கிறிஸ்தவர்களும் பரம பிதாவின் வழிநடத்துதலின்மேல் நம்பிக்கை வைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், இவர்கள் தங்களுக்குத் தெய்வீக ஏற்பாடுகள் கொடுக்கும் விஷயங்களில் திருப்தியாய் இருக்க வேண்டும் என்பதையும் நினைவுகூர வேண்டும். மேலும், தங்களுடைய கைக்குக் கிட்டியதையெல்லாம் செய்து முடித்த பின்னர், அமைதியற்றவர்களாகவோ, எரிச்சலை உடையவர்களாகவோ, திருப்தி இல்லாதவர்களாகவோ, தேவனுக்கும், அவருடைய முன்னேற்பாடுகள்/பராமரிப்பிற்கும் எதிராக முறுமுறுக்கிறவர்களாகவோ இராமல், மனநிறைவோடு காணப்பட வேண்டும். “”கர்த்தரை நம்பி நன்மை செய்” (சங்கீதம் 37:3). கர்த்தர் நம்மை சில விசேஷமான பணிகளுக்காகத் தனிப்பட்ட விதத்தில் ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கலாம், மேலும், அந்த அனுமதிக்கப்பட்ட அனுபவங்கள் மாத்திரமே, நம்மை அந்தப் பணிக்காக ஆயத்தம் பண்ணவும் முடியும். மகிமையான ஆயிரம் வருட அரசாட்சியில் நம்முடைய அருமையான மீட்பரோடு, உடன் சுதந்திரர்கள் ஆகுவதற்கென்று “”தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களை” தேவனே ஆயத்தம் பண்ணுகின்றார் என்று வேதவாக்கியங்களிலிருந்து நாம் அறிந்திருக்கின்றோம். மேலும் “”ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு” ஏதுவாக நம்முடைய பரிபூரணமற்ற தன்மைகளின் நிமித்தம், நமக்கு அதிகமான வனைதல்கள், செதுக்குதல்கள் மற்றும் மெருகூட்டுதல்கள்தேவைப்படுகின்றது (கொலோசெயர் 1:12). மேலும், நம்முடைய சொந்த பூரணமற்றத் தன்மைகளையே நம்மால் அறிய முடியாதபோது, நமக்கு உதவியாய் இருக்கும் அனுபவங்களையும் கூட நம்மால் அறிந்துக்கொள்ள முடியாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிலசமயம், நம்மை மற்றவர்கள் பார்க்கிற விதத்தில், நம்மை நாம் பார்ப்பது கூடக் கடினமாக இருக்கும்போது, தெய்வீகக் கண்ணோட்டம் நம்மைப் பார்க்கும் விதத்தில் நாம் நம்மைப் பார்ப்பது, மிகவும் கடினமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தேவன் மீதான விசுவாசம் இங்கு வர வேண்டும். “”நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” (1 யோவான் 5:4).

யோவான், தன்னை இஸ்ரயேலுக்கு “”காண்பிக்கும்” காலமானது, அவர் தமது 30-வது வயதை அடைந்தபோது வந்தது. அப்போது யோவானுக்குத் தேவனுடைய வார்த்தை [R2563 : page 22] உண்டாயிற்று; இதன் விளைவாக அவருடைய ஊழியம் ஆரம்பமானது. இவ்விஷயத்தை, சுவிசேஷ யுகத்தில் வாழும் நமக்குப் பொருத்துவது போன்று, யோவானின் விஷயத்தில் நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. தீர்க்கத்தரிசிக்கு வருவதுபோன்று தேவனுடைய வார்த்தை யோவானுக்கு வந்தது. “”யோவானைக் காட்டிலும் பெரிய தீர்க்கத்தரிசி எழும்பினதில்லை” என நமது கர்த்தர் அவரைத் தீர்க்கத்தரிசியெனக் குறிப்பிடுகின்றார். அனைத்துத் தீர்க்கத்தரிசிகளின் விஷயத்திலும் நடந்ததுபோல, யோவானின் ஊழியம் ஆரம்பிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று தேவன், யோவானுக்குத் தெளிவாகவும், உறுதியாகவும் உணர்த்தினார். இந்தத் தன்னுடைய ஊழியத்திற்கு இசைவாக யோவான், யோர்தான் நதிக்கு அருகே உள்ள அடர்த்தியான இடங்களில் தங்கி, மனந்திரும்புதலைப் பிரசங்கித்து வந்தார்; அதாவது ஜனங்கள் மனந்திரும்ப வேண்டும் என்று பிரசங்கித்தார்; மேலும் மனந்திரும்புதலை அறிக்கை பண்ணினவர்களுக்கு, யோர்தானில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தார். இதன் காரணமாகவே, யோவான் ஞானஸ்நானத்திற்குப் போதுமான ஆழம் உடைய தண்ணீர்களுக்காகத் தேடினார். உதாரணத்திற்கு, “”சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்” (யோவான் 3:23).

[R2563 : page 23]
ஜனங்கள் மனந்திரும்பி, ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டால், அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று யோவான் பிரசங்கித்ததாக, பதிவுகளிலிருந்து நாம் தவறாக யூகித்து விடக்கூடாது. இப்படியாக அர்த்தம் கொள்வது என்பது வேதவாக்கியங்களின் ஒட்டுமொத்த சாட்சிக்கும் எதிர்மாறாகக் காணப்படும். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்பதே வேதவாக்கியங்களின் சாட்சியாக இருக்கின்றது.

ஆனால், பொதுவாக இவ்விஷயங்கள் தவறாய்ப் புரிந்துக்கொள்ளப்படுகின்றது. மாறாக, பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக ஆயத்தம் பண்ணுதலை அல்லது மனம் வருந்துதலை அடையாளப்படுத்தும் ஞானஸ்நானத்தைக் குறித்தே யோவான் பிரசங்கித்தார் என்று நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். பாவங்கள் நீக்கப்படுவதற்கான காலம் இன்னும் வரவில்லை. மேலும், மனந்திரும்புதலின் மூலமும், ஞானஸ்நானத்தின் மூலமும், பாவங்கள் மன்னிக்கப்படும் என்று அறிவிப்பதற்கு யோவானுக்கு அதிகாரமும் இல்லை, அதிகாரம் கொடுக்கப்படவும் இல்லை. யோவானால் இப்படிப்பட்ட விஷயங்களைக் கூற முடிந்திருந்தால், நமது கர்த்தர் இயேசு உலகத்தில் வந்து, இஸ்ரயேலர்களுக்காகவும், பூமியின் குடிகளுக்காகவும் தம்மை ஈடுபலியாக கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நிரூபணம் ஆகியிருக்கும். மனந்திரும்புதலும், தண்ணீரில் மூழ்குவதும், பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு, ஒருவேளை போதுமானதாய் இருந்தால், இஸ்ரயேலர்களுக்குத் தேவன் நீண்ட காலமாக வாக்களித்துள்ள மாபெரும் இரட்சகர் அவசியமேயில்லை. மாறாக, ஜனங்கள் தங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு விருப்பம் கொள்வதற்கும், தேவனுடன் முழுமையாக ஒப்புரவாகிக்கொள்ள விருப்பம் கொள்வதற்கும், மேலும் இவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் இரட்சகரை எதிர்ப்பார்ப்பதற்கும் ஏதுவாக, ஜனங்களை மனந்திரும்ப ஆயத்தம் பண்ணும் ஆரம்பக்கட்ட வேலையே யோவானின் பணியாகவும், பிரசங்கமாகவும் இருந்தது என்று நாம் எடுத்துக் கொண்டால், எல்லாம் இசைவாய்க் காணப்படும்.

பாவத்தை மன்னிக்கும் இவ்வேலையானது, யோவானுடைய நாட்களுக்குப் பின்னாக உள்ள எதிர்க்காலத்திற்குரியதாகவும், கிறிஸ்துவினால் நிறைவேற்றப்படக் கூடியதாகவும் உள்ளது. இவ்வேலை, ஆயிரம் வருடத்திற்குரிய வேலையாக இருக்கின்றது. இந்த ஆயிரம் வருட காலத்தில் பாவம் மன்னிக்கப்படுகின்றது; மேலும், பாவம் அகற்றப்படுகின்றது; மேலும் புதிய உடன்படிக்கையின் கீழ், கிறிஸ்துவுக்குள்ளான தேவக் கிருபையை ஏற்கிற யாவரும் முழுமையாக ஒப்புரவாக்கப்படுவார்கள் (அப்போஸ்தலர் 3:19-21). அக்காலத்தில், அதாவது சாதகமான சூழ்நிலைகள் காணப்படும்போது, “”மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்” என்ற வேதவாக்கியம் நிறைவேறும்; அக்காலத்திற்கு முன்பு இது நிறைவேறுவதில்லை (லூக்கா 3:5).

யோவான் ஸ்நானனுடைய வேலை இஸ்ரயேலர்களுக்கு உட்பட்டதாக இருந்ததே ஒழிய, புறஜாதியாருக்கு உரியதாய் இல்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இஸ்ரயேலர்களுக்கு யோவான், மாம்சத்தில் வரும் மேசியாவிற்குரிய முன்னோடியாக அல்லது எலியாவாக இருந்து, அந்தத் தேசத்தார் இயேசுவை இராஜாவாக ஏற்றுக்கொள்வதன் மூலம் தேவனுடைய இராஜ்யத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக, அவர்களின் அறுவடை காலத்தில் அவர்களைத் தூண்டிவிடுபவராகக் காணப்பட்டார். ஆனால், யோவான் தன்னுடைய தேசத்தாருக்குப் புரிந்த ஊழியத்தில், அதிகம் வெற்றிக் காணவில்லை; மிகச் சொற்பமானவர்களே பலன் அடைந்தார்கள். யோவானின் சாட்சியை நம்பி, அச்சாட்சியை நல்லதும், உண்மையும், மனம்திரும்புதலும் கொண்டுள்ள தங்களுடைய இருதயங்களில் ஏற்றுக்கொண்ட அந்தச் சொற்ப ஜனங்களால் மாத்திரமே, இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கும், அவர் மூலம் தேவன் அளிக்கும் பாவமன்னிப்பை உணரவும், ஏற்றுக்கொள்ளவும் முடிந்தது. யோவானுடைய போதகத்தைப் புறக்கணித்த மீதமுள்ள தேசத்தார், மனந்திரும்பாத இருதய நிலையில் காணப்பட்டப்படியால், அவர்கள் இயேசுவிற்காக ஆயத்தமாக இல்லை, மேலும் அவருடைய இரத்தத்தின் மூலம் வந்த பாவ மன்னிப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளாததால், ஒரு தேசமாக அவர்கள் புறக்கணிக்கப்பட்டு, முற்றிலுமாகத் தள்ளப்பட்டுவிட்டனர்.

மாம்சத்தில் வந்த இயேசுவை, மாம்சீக இஸ்ரயேலர்களுக்கு, எலியாவைப் போன்று யோவான் அறிமுகப்படுத்தி, இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கும், அவரால் ஆசீர்வதிக்கப்படுவதற்கும் ஆயத்தமாயிருக்கும் ஒரு குறிப்பிட்ட வகுப்பாரைச் சேர்த்துக் கொண்டது போன்று, தெய்வீகத் திட்டத்தில் யோவானைக் காட்டிலும் மாபெரும் நிஜமான எலியா இருக்கின்றார் எனவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவைக் காட்டிலும் (மாம்சம்), மாபெரும் (ஆவிக்குரிய) கிறிஸ்து இருக்கின்றார் என்று நாம் பார்க்கின்றோம். மாபெரும் கிறிஸ்து, ஆவிக்குரியவர் ஆவார். அதாவது, “”வானத்திலிருந்து வந்த கர்த்தர்” ஆவார் – “கர்த்தரே ஆவியானவர்.” மேலும், இந்த மகிமையடைந்த ஆவியின் ஜீவியாக இருக்கும் கர்த்தர், தமது சரீரமாகிய சபைக்குத் தலையாக இருக்கின்றார். மேலும் இந்தச் சரீரத்தின் அங்கங்கள், முதலாம் உயிர்த்தெழுதலில், அவரைப்போல் ஆக்கப்பட்டு, அவருடைய மகிமையிலும், அவரிலும் பங்கடைவார்கள். மேலும் அவரும், இவர்களும் மகாபெரும் மேசியாவாகக் காணப்பட்டு, மாபெரும் வல்லமையையும், ஆளுகையையும் எடுத்துக் கொண்டு, மனுஷர் மத்தியில் தேவனுடைய இராஜ்யத்தை ஸ்தாபித்து, பரலோகத்தில் எப்படிப் பிதாவின் சித்தம் நிறைவேற்றப்படுகின்றதோ, அப்படியே பூமியிலும் நிறைவேற்றப்பட செய்வார்கள் (மத்தேயு 6:10). மனுக்குலத்திற்கு, (தலை மற்றும் சரீரம் உள்ளடங்கிய) ஆவிக்குரிய கிறிஸ்து, மாபெரும் கிறிஸ்து அதிகாரத்தில் வருவதே, இரண்டாம் வருகையாக இருக்கும்; அதாவது, தவிக்கும் சிருஷ்டிகளை விடுவிப்பதற்கான, தேவபுத்திரர்களின் வெளிப்படுதல் ஆகும் (ரோமர் 8:17-19). நமது கர்த்தர், மாம்சத்தில் வந்த முதலாம் வருகை மிக முக்கியமானதுதான். பாவத்திற்காகப் (முதலாம் வருகையில் வந்து) பலிச் செலுத்தப்படவில்லை என்றால், தலையாகிய இயேசு மகிமையான இராஜ்யத்தின் வல்லமையோடு இரண்டாம் வருகையில் வருவதும் மற்றும், அவரோடுகூட அவருடைய சரீரமும் மகிமையடைந்த அங்கங்களாக இருப்பதும் முடியாது என்றாலும், முதலாம் வருகையைக் காட்டிலும் (சரீரமாகிய சபையோடு) தலையாகிய கிறிஸ்துவின் இரண்டாம் வருகை என்பது மிக உன்னதமான தளத்திலேயே காணப்படுகின்றது.

இவ்விரண்டு சம்பவங்களுக்கும் இடையே உள்ள தொடர்பைப் புரிந்துக்கொண்ட பின்னர், மற்றொரு அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது, முதலாம் வருகையின் ஆசீர்வாதங்கள், பெயரளவிலான மாம்சீக இஸ்ரயேலர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்று, இரண்டாம் வருகையின் ஆசீர்வாதங்களும் பெயரளவிலான ஆவிக்குரிய இஸ்ரயேலர்களுக்கே (கிறிஸ்துவ மண்டலம்) கொடுக்கப்பட்டது. மாம்சீக இஸ்ரயேலர்களை ஆயத்தம் பண்ணும் விதமாக அவர்களுக்கு ஒரு முன்னோடி அனுப்பப்பட்டதுபோன்று, அனைத்து பெயரளவிலான ஆவிக்குரிய இஸ்ரயேலர்களை இரண்டாம் வருகைக்கு ஆயத்தம் பண்ணும் விதமாக, இரண்டாம் வருகைக்கு முன்னதாக ஒரு மாபெரும் முன்னோடியானவர் வர வேண்டும். ஆவிக்குரிய கிறிஸ்துவின் முன்னோடியாக இருக்கும் இந்த மாபெரும் எலியா, அநேக அங்கங்களை உள்ளடக்கியவர் என்று ஏற்கெனவே பார்த்திருக்கின்றோம். இந்த எலியா வகுப்பினருக்கு, மாம்சத்தில் இருந்த இயேசு தாமே தலையாகக் காணப்பட்டார். ஆனால், இந்த உண்மையான பின்னடியார்கள், அவரோடு மகிமையடையும்போது, மகிமையடைந்த கிறிஸ்துவின் அங்கங்களாகக் காணப்படுவார்கள். இவர்கள் மகிமையடைந்த கிறிஸ்துவின் அங்கங்கள் ஆகுவதற்கு முன்பும், தங்களுடைய பூமிக்குரிய ஜீவியத்திலும் எலியா வகுப்பாரில் அங்கங்களாக இருந்திருக்கின்றார்கள். நீதியின் கோட்பாடுகளையும், உண்மையான பரிசுத்தத்தின் கோட்பாடுகளையும் முன்வைத்து, நடத்தை மற்றும் வார்த்தையின் மூலம் சகல மனுஷரையும் மனந்திரும்புதலுக்கு நேராக நடத்துவதற்கு ஏதுவான புத்திமதிகளைக் கொடுத்து, அனைவரையும் இரண்டாம் வருகைக்கு ஆயத்தம் பண்ணுவது, அதாவது மேசியாவின் [R2563 : page 24] இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதற்கும், பாவங்கள் நிஜமாய் அகற்றப்படுவதற்கும், ஒவ்வொரு வளைந்த பாதைகள் நேராக்கப்படுவதற்கும், குணலட்சணங்களின் பள்ளத்தாக்கைச் சமப்படுத்துவதற்கும், பெருமையின் மலைகள், தாழ்மை எனும் சமவெளிகள் ஆக்கப்படுவதற்கும் அதாவது, மாம்சமான யாவரும் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாக்குவதுமே இந்த எலியா வகுப்பாரின் ஊழியமாகும்.

நிழலான எலியாவாகிய யோவான் ஸ்நானனின், சாட்சி தோல்வியைத் தழுவினதைப் போன்று, இந்த மாபெரும் நிஜமான எலியாவின் சாட்சியும் தோல்வியைத் தழுவும் என வேதவாக்கியங்கள் தெளிவாகக் குறிப்பிடும் விஷயங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மாம்சத்தில் காணப்படும் சபையானது, கர்த்தர் பூமியின் மீதான இராஜ்யத்தில் வருவதற்கென, அவருக்குச் செம்மையான பாதைகளை ஏற்படுத்துவதில் வெற்றிக் கொள்ளவில்லை. மிகச் சொற்பமானவர்களே செவிசாய்த்துள்ளனர்; மீதமுள்ள பெரும்பான்மையான ஜனங்களிடத்திலும், இராஜ்யத்திற்குக் காத்திருக்கின்றோம் என்று அறிக்கைப் பண்ணுகிற (கிறிஸ்துவ) ஜனங்களிடத்திலும, இச்செய்தி தோல்வியையே சந்தித்தது. இரட்சகருக்காகவும், முதலாம் வருகையின் மூலம் அவர் அவர்களைச் சந்திக்கும் காலத்தை அறியாமலும், ஆயத்தமாய் இராமலும் காணப்பட்ட மாம்சீக இஸ்ரயேலர்கள் மீது வந்தது போன்று, இந்த யுகத்தின் முடிவில், அல்லது அறுவடையின் காலக்கட்டத்தின்போது கிறிஸ்துவ மண்டலத்தின் மீது உபத்திரவங்கள், நாசங்கள், அழுத்தங்கள் வந்திட்டாலும், இறுதியில் தேவனுடைய அனைத்து நல்நோக்கங்களும் நிறைவேறித் தீரும். இந்த ஆயத்தமில்லாத நிலைகள் ஒன்றும், மேசியாவின் வேலையைத் தடைப்பண்ணுவதில்லை. முதலாம் வருகையின்போது, அவர் உண்மையுள்ள அனைத்து இஸ்ரயேலர்களையும் சேர்த்து, புதிய யுகத்திற்குள்ளாக நடத்தினார். அதைப்போலவே, இப்பொழுதும் அவர் தெரிந்துக்கொள்ளப்பட்ட “”சிறுமந்தையினரை” தம்மிடத்தில் சேர்த்துக் கொண்டு, தமது இராஜ்யத்தை ஸ்தாபிப்பார். இந்த இராஜ்யம் முழுமையாக எல்லாவற்றையும் ஆளும். இந்த இராஜ்யமானது, ஒவ்வொரு வளைந்த நெளிந்த பாதைகளைச் செம்மையாக்கி, நீதி மற்றும் பரிசுத்தத்தின் பாதையைச் சமப்படுத்தி, இந்தப் பாதையை, சாத்தானின் வஞ்சனை மற்றும் தப்பறைகள் எனும் தடுக்கலின் கற்கள் அற்ற “”பெரும்பாதையான” வழியாக ஆக்குகின்றது (ஏசாயா 35:8,9). சத்தியத்தின் அறிவிற்குள்ளாகக் கொண்டு வரப்பட்ட முழு மனுக்குலமும், திரும்பக்கொடுத்தலின் காலங்களில் இந்த மகிமையான கீழ்ப்படிதலின் பெரும்பாதையில் பிரவேசித்து, தகப்பனாகிய ஆதாமின் மீறுதலினால் அவரும், அவருடைய சந்ததியும் இழந்துபோனதும், கிறிஸ்து தம் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் ஆதாமுக்காகவும், அவருடைய சந்ததிக்காகவும் மீட்டுக் கொண்டதுமானவைகளைப் பெற்றுக்கொள்ளும் சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்வார்கள். மாம்சமான யாவரும், நமது தேவனின் இரட்சிப்பைக் காண்பார்கள்; ஏனெனில், உண்மையான ஆவிக்குரிய ஆபிரகாமின் சந்ததியாராகிய கிறிஸ்து மற்றும் அவருடைய தெரிந்துக்கொள்ளப்பட்ட சபையின் மூலம், தேவன் பூமியின் குடிகளுக்கு அளித்த ஆசீர்வாதம் இதுவே ஆகும் (கலாத்தியர் 3:16,29).

யோவானிடம், விநோதமான தோற்றமும், மிக எளிமையான பேச்சுகளும் காணப்பட்டாலும், ஆரம்பத்தில், அவருடைய ஊழியம் மிகப் பிரபலமாகக் காணப்பட்டது. அவரிடம் திரளான ஜனக்கூட்டம் வந்தது. அப்படி வந்தவர்கள் மத்தியில், சிலர் சரியான நிலையில் இல்லாததால், அவர்கள் மனந்திரும்பினதற்கான அடையாளம் வெளிக்காட்டாத வரையிலும் அவர்களை ஏற்றுக்கொள்ள, யோவான் மனதாய் இருக்கவில்லை. இத்தகையவர்களை அவர் “”விரியன் பாம்புக்குட்டிகளே” அன்று அழைக்கின்றார்; இது மிகவும் கடினமான வார்த்தையாகும். இன்றைய காலத்துக் கர்த்தருடைய ஜனங்கள், இவ்விதமான வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. மாறாக, அந்தக் காலக்கட்டத்தில் இவ்விதமான கடினமான கடிந்துக் கொள்ளுதலைக் கொடுக்கும்படி, தீர்க்கத்தரிசியான யோவான், தெய்வீக விதத்தில் வழிநடத்தப்பட்டார் என்றே நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். சுவிசேஷ யுகத்தில் கர்த்தருடைய ஜனங்கள் சாந்தத்துடனும், பொறுமையுடனும், நீடிய பொறுமையுடனும் பேச வேண்டும் என்று போதிக்கப்பட்டிருக்கின்றார்கள்; “”எதிர்ப்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்” (2 தீமோத்தேயு 2:25,26). “”சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு” (2 தீமோத்தேயு 4:2). முற்காலத்துத் தீர்க்கத்தரிசிகள் இவ்வாறு பேச அனுமதிக்கப்பட்டது போன்று, கர்த்தருடைய ஜனங்கள் இப்படியாகப் பேசுவதற்கு விசேஷமான வழிநடத்தல் இல்லாதது வரையிலும், சாந்தத்துடனேயே பேச வேண்டும். முற்காலத்துத் தீர்க்கத்தரிசிகள் இவ்வாறு பேசுவதற்கு அனுமதிப் பெற்றது [R2564 : page 24] போன்று, தற்காலத்தில் எவருக்கும் அனுமதிக் கொடுக்கப்படவில்லை என்பதை நாம் அறிவோம்.

“”வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?” என்று யோவான் தனக்குச் செவிசாய்ப்பவர்களுக்குக் கூறினதை, நாம் நித்தியத்திற்குரிய சித்திரவதை பற்றின உபதேசத்தை அவர் போதித்தார் என்றோ அல்லது அதை ஜனங்கள் விசுவாசித்திருந்தார்கள் என்றோ புரிந்துக்கொள்ளக்கூடாது. அவருடைய வார்த்தைகள் இதைப் பற்றினது என்றும் நாம் எண்ணக்கூடாது. வேதவாக்கியங்களில் ஒன்றும் இவ்விதமாகப் போதிப்பதில்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் வெளிப்படப்போகும் மேசியாவை, இஸ்ரயேல் ஜனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையெனில், உண்மையான மனந்திரும்புதலுடனும், ஞானஸ்நானத்தினாலும் அவருக்கு ஆயத்தமாகவில்லையெனில், அவர்கள்மேல் வரவிருக்கிற உபத்திரவத்தைக் குறித்தே, யோவான் “”வருங்கோபம்” என்று தீர்க்கத்தரிசனமாக உரைத்தார். நமது கர்த்தரும், அப்போஸ்தலனாகிய பவுலும் கூறினதுபோல, இஸ்ரயேல் ஜனங்கள், மேசியாவைப் புறக்கணித்த காரணத்தினால் அந்தத் தேசத்தார் மீது “”கோபம்” வந்தது (லூக்கா 21:23; ரோமர் 9:22; 1 தெசலோனிக்கேயர் 2:16). அக்கோபம் அவர்கள் மேல் கொழுந்து விட்டு எரிந்து; கி.பி. 69 முதல் கி.பி. 70-இல் தேசமே குலைந்துப் போயிற்று, மேலும் அவர்கள் அக்கோபத்தின் கீழே காணப்படுவதால், அவர்கள் மீண்டுமாகத் தங்களை ஒரு தேசமாக ஸ்தாபிக்க முடியவில்லை.

யோவான் பிரசங்கிக்கும் போது, அவருக்கு ஒரு கஷ்டம் இருந்தது; அதென்னவெனில், யோவானுடைய வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், தாங்கள்தான், தீர்க்கத்தரிசிகளால் முன்னுரைக்கப்பட்ட மகிமையடைதலுக்கு உரியவர்களும், தேவனால் விசேஷமாகத் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களுமானவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தனர். மேலும், உலகத்தில் வேறெந்த சிறந்த ஜனங்களும் இல்லாததால், சிறந்தவர்களாகிய தங்களைவிட்டு, வேறு எவரையும் தேவன் தெரிந்தெடுக்க மாட்டார் என்ற அனுமானமும் காணப்பட்டது. தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதற்கு அவர் சிலரைத் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும், தாங்கள் நியாயப்பிரமாணத்திற்கு வெளிப்புறமாக அதிகம் கீழ்ப்படிபவர்களாக மாத்திரம் இராமல், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆபிரகாமின் மாம்ச சந்ததியாயும் இருக்கின்றோம் என்றும் இவர்கள் எண்ணினார்கள். இதைப் போலவே பரிசுத்தத்திற்கடுத்த உபதேசத்திற்கும், கர்த்தருக்கு முழுமையாய் அர்ப்பணித்தலுக்கடுத்த போதனைக்கும் எதிரான கோட்பாடுகளே இன்றைய கிறிஸ்துவமண்டலம் முழுவதும் காணப்படுகின்றது. இஸ்ரயேல் ஜனங்களிடம் காணப்பட்ட அதே தவறுதான், கிறிஸ்துவமண்டலத்திடமும் காணப்படுகின்றது. கிறிஸ்துவ ஜனங்களின் மனதில் ஒரு தவறான கோட்பாடு ஏற்பட்டு, அது கர்த்தரின் தயவைப் பெற பரிசுத்தம் அவசியப்படாது என்று அவர்களைச் சிந்திக்க நடத்தினது. இவர்களுடைய கோட்பாடின் விஷயமாவது:- “”உலகத்தில் உள்ள ஆயிரத்து 600 மில்லியன் ஜனத்தொகையில், – 300 மில்லியன் ஜனங்கள் மாத்திரமே கிறிஸ்துவர்கள் என்று அறிக்கை பண்ணியுள்ளனர்; இந்த 300 மில்லியன் ஜனங்களில் கிரேக்க, ரோம கத்தோலிக்கர்களும், குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர். தேவன், நிச்சயமாக சிலரை ஏற்று/எடுத்துக்கொள்ள [R2564 : page 25] விரும்புவார். ஒருவேளை அவர் எல்லா வகை கிறிஸ்துவர்களை எடுத்துக்கொண்டாலும், அவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படும். ஒருவேளை பிசாசிடம் இருப்பவர்களைக் காட்டிலும் அதிகம் எண்ணிக்கை வேண்டும் என்பது மாத்திரம் தேவனுடைய நோக்கமாக இருக்குமாயின், தங்களைக் கிறிஸ்துவர்கள் என்று அறிக்கை பண்ணியும், கொஞ்சம் மாத்திரமே நல்லவர்களாக இருப்பவர்களையும் கூட அவர் புறக்கணியாமல், ஏற்றுக்கொள்வார். இப்படியாகக் கர்த்தருக்கு முன்பு பரிசுத்தம் கொண்டிருப்பதும், வார்த்தையிலும், எண்ணத்திலும், கிரியையிலும் பரிசுத்தம் கொண்டிருப்பதும் தெய்வீகத் தயவைப் பெற அவசியப்படாது என்று அனுமானித்து, இவர்கள் எல்லையை/வரம்பை மீறுகின்றனர்”. “”இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” என்றும், “”பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்கக் கூடாது” என்றதுமான வாக்கியங்கள், இத்தகையவர்களுக்கு மிதமிஞ்சினதாய்த் தோன்றுகின்றது; மேலும் இவ்வசனங்கள் புறக்கணிக்கப்படவும்படுகின்றது, இல்லையேல், “”பரிசுத்தம்” என்ற வார்த்தையின் அர்த்தம் இவர்களைப் பொறுத்தமட்டில், வெளிப்படையாக அல்லது கொடூரமான தீங்குச் செய்யாமையைக் குறிக்கின்றதாகும்.

ஆகவே, நிஜமான எலியா, பெயரளவிலான ஆவிக்குரிய இஸ்ரயேலர்களுக்கு ஊழியம் புரியும்போது சந்தித்த அதே பிரச்சனைகளையே, யூதர்களின் நிஜமான எலியாவும் சந்தித்தார் என்று நாம் பார்க்கின்றோம். ஆனால், யோவானின் பதிலைக் கவனித்துப் பாருங்கள்; அவர் நிபந்தனைகளை மிகவும் கண்டிப்புடன் கூறினார்; அதாவது, தேவன் உங்களை ஏற்றுக்கொள்ளும் கட்டாயத்தில் இருக்கின்றார், இல்லையேல் அவர் உரைத்த வார்த்தைகள் விருதாவாய்ப்போய்விடும் என்று எண்ணி, நீங்களே உங்களை ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்; மேலும், உங்களைக் காட்டிலும் பரிசுத்தமான ஆபிரகாமின் பிள்ளைகளை, தேவனால் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் காரணத்தினால், அவர் உங்களைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, நீங்கள் எண்ணிக்கொள்ள வேண்டாம். தேவன் வல்லமையிலும், ஆதாரத்திலும் எல்லையில்லாமல் விளங்குபவர் ஆவர். ஒருவேளை தேவைப்படுமாயின், இந்தக் கல்லுகளிலிருந்தும் கூட, அதாவது, ஆபிரகாமின் சந்ததியாகும் வாய்ப்புக்குத் தூரமாயும், ஆபிரகாமின் சந்ததியின் பாதங்களுக்கு கற்கள் போன்றும் இருப்பவர்கள் மத்தியிலிருந்து, ஆபிரகாமுக்கு பிள்ளைகளை எழுப்ப தேவனால் கூடும் என்று யோவான் ஸ்நானன் கூறினார். மேலும், இதே பதிலைத்தான் நாமும் இன்று, “”கிறிஸ்துவ மண்டலத்தாருக்கு” அளிக்கின்றோம்; அதாவது, இவ்வுலகத்தின் அதிபதியினால் இன்னமும் குருடாக்கப்பட்டவர்களும், தேவனையும், அவர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும், அவர்களின் உண்மையான குணலட்சணங்களையும் அறியாதவர்களுமாய்க் காணப்படுகின்ற தங்களைக் கிறிஸ்துவர்கள் என்று அறிக்கை பண்ணுகிறவர்களான மாய்மாலமான கிறிஸ்தவர்களை, தேவன் முழுமையாகப் புறக்கணிக்கின்றார்; காரணம், அவர்களுடைய இருதயத்தில் பரிசுத்தமும் இல்லை, கர்த்தருக்கென்று தங்களை முழுமையாக அர்ப்பணிக்கவும் இல்லை என்பதினாலேயே ஆகும் என்று நாமும் பதிலளிக்கின்றோம். நமக்கு எக்காளம் போன்ற சத்தம் இருக்குமாயின், நாம் மில்லியன் கணக்காகக் காணப்படும் பெயரளவிலான கிறிஸ்துவ மண்டலத்தாருக்கு, அவர்களது உண்மையான நிலைமையை எடுத்துக் கூறியிருப்போம்; அவர்களும் கேட்பதற்கென்று தங்கள் செவிகளை, விருத்தசேதனம் பண்ணி, மனந்திரும்பி, மகா உபத்திரவக் காலத்திற்குள் பிரவேசிக்கக் கட்டாயப்படுத்தப்படாமலேயே, வரவிருக்கின்ற மகிமையான விஷயங்களுக்கு ஆயத்தப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு நாம் பின்வருமாறு நிச்சயமளித்திருக்க முடிந்திருக்கும்; அதாவது தேவன், தாம் நிர்ணயித்துள்ள தெரிந்துக் கொண்டவர்களைக் கண்டுபிடிப்பார் என்றும், அந்த முழுமையான எண்ணிக்கை நிறைவடைய இப்பொழுது அண்மையில் உள்ளது என்றும், இந்தத் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களாகிய “”சிறுமந்தையிடமே” இராஜ்யத்தைக் கொடுப்பது, பிதாவுக்குப் பிரியமாய் இருக்கின்றது என்றும், இவர்கள் தங்கள் மகிமையடைந்துள்ள கர்த்தராகிய தலையோடு சேர்ந்து மகிமை அடையும்போது, பூமியின் குடிகளை ஆசீர்வதிப்பதற்கென, ஸ்தாபிக்கப்பட்ட இராஜ்யம் வெளிப்படும் என்றும் நாம் நிச்சயமளித்திருக்க முடிந்திருக்கும். ஆனால், ஒரு ஜாதியாரும் பார்த்திராத மகா உபத்திரவக் காலத்தின் மூலமே அவர்களுக்கு இராஜ்யம் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய நிலையில் அவர்கள் காணப்படுவதினால், நாம் அவர்களுக்காக, ஆழ்ந்த அனுதாபம் கொள்கின்றோம் (தானியேல் 12:1, மத்தேயு 24:21).

யோவான் ஸ்நானன் இப்படியாக பேசிக் கொண்டிருக்கையில், தான் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த யூதர்களுக்கு, அவர்கள் தேசம் மீது நியாயத்தீர்ப்பு வர சமீபித்துள்ளது என்று கூறினார். கோடாரியானது, மரத்தினுடைய வேர்களின் மீது வைக்கப்பட்டுள்ளது. உத்தம இஸ்ரயேலன் அல்லாத எவனும்/ஒவ்வொரு இஸ்ரயேலனும் வெட்டப்பட்டு, அந்த யுகத்திற்கு வரப்போகிற உபத்திரவமாகிய அக்கினியில் போடப்படுவான். தேசமே அழிவுக்குள்ளாகப் போய்விடும். யூத ஜனங்கள் மத்தியில் நமது கர்த்தரின் 3½ வருட ஊழியமும், இறுதியில் அவர், அவர்களைப் புறக்கணிக்கும் விஷயங்களும், கனிகொடாத அத்திமரத்தின் உவமையில் வெளிப்படுகின்றது; மேலும், இது யோவான் ஸ்நானகன் மேலே கூறியுள்ள விஷயங்களுக்கு இசைவாய்க்காணப்படுகின்றது. “”அப்பொழுது அவர் ஓர் உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்: அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்” (லூக்கா 13:6-9).

யோவான், சரியான விதத்தில் பயத்தை ஏற்படுத்தினார். மீறுபவர்கள் முன், சத்தியத்தை முன்வைப்பதற்குச் சரியான விதமும், தேவன் மீதான சரியான பயத்தை ஏற்படுத்துவதற்கும், அவர்களுக்குரிய தண்டனையை முன்வைக்கும் விதமும் உள்ளது. ஆனால், இந்தப் பயம், பயமுறுத்தும் நித்தியத்திற்குரிய சித்திரவதையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். இந்தத் தவறான உபதேசங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இன்று அனைத்து இறையியல் போதனைகளிலும் காணப்பட்டு, சிலரைப் பைத்தியமாகவும், சிலரை நாத்திகராகவும் மாற்றியுள்ளது, அநேக பரிசுத்தவான்கள் நமது தேவனுடைய திட்டத்தையும், உண்மையான குணலட்சங்களையும் உணர்ந்து கொள்ள முடியாத நிலைக்குப் போகவும் செய்துள்ளது. வரவிருக்கிற கோபத்தைக் குறித்து முன்வைக்கும்போது, நமது தேவனுடைய குணலட்சணங்களைத் தவறாய்க் காட்டாத வண்ணம் முன்வைப்போமாக. தேவனுடைய பரிசுத்தமான நாமத்தைத் தூஷிப்பவர்களை, அவர் தவறு செய்தவர்களாகவே பார்க்கின்றார்.

யோவானின் பிரசங்கத்தைக் கேட்ட ஜனங்கள், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தபோது, அவர்கள் நீதி, இரக்கம், அன்பு, தாராளம் முதலியவற்றைக் காட்ட வேண்டும் என்றும், வன்செயல், பயமுறுத்திப் பிடுங்கும் விஷயங்களைத் தவிர்த்து, தங்களிடத்தில் உள்ளவைகளில் திருப்திக்கொள்ளவேண்டும் என்றும் போதித்தார். இது அருமையான ஆலோசனையாகும்; மேலும், இவைகளைப் பின்பற்றினவர்கள், கர்த்தராகிய இயேசுவையும், அவருடைய இரத்தத்தின் மூலம் வரும் பாவமன்னிப்பு மற்றும் இதன்மூலம் பிதாவுடன் ஒப்புரவாகுதல் குறித்ததான நற்செய்தியையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதான, சரியான இருதயம் மற்றும் மனநிலையில் காணப்பட்டிருந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இதுபோல இந்த யுகத்தின் முடிவில், “”கிறிஸ்துவ மண்டலத்தின்” மீது வரப்போகும் கோபத்தைக் குறித்து நம்மிடம் எவராகிலும் கேட்டால், நாம் என்ன செய்ய வேண்டும்? நீதியை, உண்மையை, அன்பை, இரக்கத்தை நடப்பித்து, கர்த்தரிடத்தில் நம்பிக்கைகொண்டு, அவருடைய வழிகளில் நடக்க நாடுங்கள் என்பதே அவர்களுக்குரிய நமது பதிலாகும் அல்லது “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள், நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள் அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்” என்று அவர்களுக்குக் கூறுவோம் (செப்பனியா 2:3). மேலும் இப்படியாக நீதியானவைகளை நாடுபவர்கள் நமது இராஜாவையும், அவருடைய இராஜ்யத்தையும் ஏற்றுக்கொள்ள/வரவேற்க ஆயத்தமாய் இருப்பார்கள் என்று நாம் நம்புகின்றோம். மேலும், இந்த அறுவடையின் காலத்தில் சிலர் தங்களுடைய அழைப்பையும், தெரிந்துக்கொள்ளுதலையும் உறுதிப்படுத்தாமல், கிரீடத்திற்கு அபாத்திரமாய்ப் போகிறவர்களாக இருப்பார்கள். கர்த்தரோ, தமது தெரிந்துக்கொள்ளப்பட்ட சபையின் எண்ணிக்கை நிறைவடையத்தக்கதாக இப்படி அபாத்திரமாய்ப் போனவர்களின் இடத்தில், அவர்களுக்குப் பதிலாக, மேற்கூறிய நீதியைத் தேடுபவர்களில் சிலரைத் தெரிந்துக்கொள்ளப் பிரியப்படுவார்.

யோவான், சத்தியத்தை முன்வைத்த விதம் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக [R2564 : page 26] இருந்தபடியால், இவர்தான் வரவிருக்கிற மேசியாவாக இருப்பாரோ, இல்லையோ என்று ஜனங்கள் சிந்திக்கத் தொடங்கினர். ஆனால் யோவானோ, தான் மேசியாவுக்கு மிகவும் கீழானவர் என்றும், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கும் சிறு வேலைக்குரிய கனத்தைப் பெறுவதற்குக் கூட, தான் பாத்திரவான் அல்ல என்று கூறி, அவர்களின் சிந்தனையை மாற்றிப்போட்டார். மேசியாவின் அம்சத்தைச் சிறிதளவில் அவர்களுக்கு அவர் வெளிப்படுத்தின பின்பு, மேசியாவின் வேலை குறித்தும், தன்னுடைய வேலையைக் காட்டிலும், மேசியாவின் வேலை பெரியது என்றும், அவரை ஏற்றுக்கொள்பவர்கள், பெரிதான ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வார்கள் என்றும் கூறினார். “”மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்” (மத்தேயு 3:11).

அவர்கள் அவருடைய யுகத்திற்குரிய அறுவடை காலத்திற்கு வந்துள்ளனர் என்றும், இப்பொழுது ஒரு பிரித்தெடுத்தலை அதாவது, உண்மையான கோதுமை, பதரிலிருந்து பிரித்தெடுக்கப்படுதலை எதிர்ப்பார்க்கலாம் என்றும், அவர்களுக்கு யோவான் விளக்கினார். கோதுமையைப் பதரிலிருந்து பிரிக்கத்தக்கதாக, தூற்றுக்கூடையினால் புடைத்து எடுப்பதற்கு, இஸ்ரயேலுடனான நமது கர்த்தரின் வேலையை, யோவான் அடையாளப்படுத்திக் காட்டினார். எவ்வளவு அழுத்தம் மிக்கதாக அந்த உதாரணம் காணப்பட்டது! எவ்வளவு அருமையான உண்மை! நமது கர்த்தர் அந்த ஜனங்களிடமிருந்து, அனைத்து உண்மையான கோதுமையையும் சேகரித்துக் கொண்டார் என்பது உண்மையே. எந்த ஒரு கோதுமை மணியும் தொலைந்துப் போகவில்லை என்பதில் நாம் நிச்சயம் கொள்ளலாம். அனைத்துக் கோதுமை மணியும் அவருடைய களஞ்சியமாகிய பாதுகாப்பான இடத்தில், அதாவது, இன்னுமொரு மேலான யுகத்திற்குள் சேர்க்கப்பட்டுவிட்டது. இவர்களே, சுவிசேஷ யுக சபையின் முதல் அங்கங்கள் ஆவர். இந்தக் கோதுமை வகுப்பார் மீதே, பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி வந்து, அது முதல், உண்மை சபையோடு பரிசுத்த ஆவிக் காணப்பட்டது. கோதுமை புடைக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்டு, களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட பின்னர், காலம் வந்தபோது அணைக்க முடியாத அக்கினியால், பதர் சுட்டெரிக்கப்பட்டது. ஒன்றினாலும் தடுக்க முடியாத உபத்திரவக் காலமாக அவர்களுக்கு அது இருந்தது. இஸ்ரயேல் தேசத்தின் அழிவைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அவைகள் அனைத்துமே தோல்வியையே தழுவினது என்றும் நினைவில் கொள்ளப்பட வேண்டும். ரோம சக்கரவர்த்தி, [R2565 : page 26] அந்தத் தேசத்தைப் பாதுகாக்கவும், அங்கு ஒழுங்குகளை ஏற்படுத்தவும் விரும்பி, ரோம படைகள் அவர்களை அழிப்பதற்கு அல்லாமல், அவர்கள் மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்த அங்குச் சென்ற போதும் கூட, தோல்வியே வந்தது. கர்த்தர் தாம் கொழுத்தி விட்ட அக்கினியானது எந்த வல்லமையினாலும் அணைக்கப்படாமலும் இருக்க வேண்டும் என்றும், அக்கினியானது அதன் முழு வேலையையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கட்டளையிட்டபடியால், அது அப்படியே செய்திற்று.

இப்படியாகவே, இந்தச் சுவிசேஷ யுகம் முடிவடையும் போது வரும் மகா உபத்திரவத்தின் அக்கினியும் காணப்படும். இந்த அக்கினிக்குள், கிறிஸ்துவ மண்டலத்தாரின் “”களை” வகுப்பாரும் போடப்படுவார்கள். மகா உபத்திரவமாகிய இந்தக் கோபத்தின் நாளில் அநேகர் மரித்துப் போனாலும், அனைத்து ஜீவன்களின் அழிவாக அது காணப்படுவதில்லை. எனினும், அது குழப்பம் என்ற அக்கினியின் மூலம், பூமிக்குரிய அரசாங்கத்தையும், சபை அமைப்புகளையும் முழுமையாக அழித்துப்போடும். தற்கால அமைப்பின் முழு அழிவைக் கொண்டு வரும் இந்த அக்கினியை எதுவும் அணைத்துப் போட்டுவிட முடியாது. ஆனால் இந்த அக்கினியானது, தற்கால அமைப்புகளின் வஞ்சனைகளையும் மற்றும் தப்பறைகளையும் முழுமையாகப் பட்சித்துப் போட்ட பின்னர், இது தேவன் தமது வரவிருக்கிற இராஜ்யத்தின் மூலம் வரும் மாபெரும் ஆசீர்வாதங்களுக்குரிய ஆயத்தங்களைச் செய்து காணப்படுவதினால், தேவனுக்கு ஸ்தோத்திரம். இந்த அக்கினியும், அதைத் தொடரும் ஆசீர்வாதங்களும் விசேஷமாகச் செப்பனியா 3:8,9-ஆம் வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. “”ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிர கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும். அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.”