R4148 – நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R4148 (page 76)

நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்

I WAS BLIND, I NOW SEE

யோவான் 9:1-41

“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்” – (வசனம் 5)

நமது கர்த்தர் தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக, தம்முடைய ஊழியத்தின் மூன்றாம் வருடத்தில், நிகழ்ந்த கூடாரப்பண்டிகையின் போது, எருசலேமில் காணப்பட்டார். இப்பொழுதும் காணப்படுவதுபோல, அன்றும் வழி ஓரங்களில் அநேக குருடர்கள் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தனர்; அதிலும் விசேஷமாக வருடத்தின் இந்தக் காலகட்டத்தில், தொழுதுகொள்வதற்கெனத் திரளான ஜனக்கூட்டத்தார் கூடியிருக்க, அதுவும் இரக்க உணர்வுடன் காணப்படும் காலகட்டத்தில் அநேக குருடர்கள் வழி ஓரங்களில் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தனர். நமது கர்த்தர் இந்த அனைத்துக் குருடர்களையும் சொஸ்தப்படுத்தவில்லை; ஆறுமுறை மாத்திரமே சொஸ்தப்படுத்தினதாகப் பதிவுகள் காணப்படுகின்றது. அவருடைய வேலை, வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்துவதாய்க் காணப்படாமல், மாறாக சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படிக்கும், சுவிசேஷச் செய்தியைச் சுட்டிக்காண்பிப்பதற்கும் மாத்திரமே சொஸ்தப்படுத்துவதற்குரிய வல்லமை அவரால் செயல்படுத்தப்பட்டது.

நமது கர்த்தரும், அப்போஸ்தலர்களும் இந்தக் குருடர்களில் ஒருவரைக் கடந்துப்போகையில், ஒருவன்பிறந்தது முதல் குருடனாக இருந்தது கவனிக்கப்பட்டது. அந்தக் குருடன் பிச்சைக் கேட்ட காரியமானது அநேகமாக மிக முக்கியமான கேள்வி ஒன்றைப்பற்றின விவாதத்திற்குள் வழி நடத்தியிருக்க வேண்டும்; அப்போஸ்தலர்களால் எழுப்பப்பட்ட கேள்வி, “”ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ?” என்பதாகும் (வசனம் 2). அப்போஸ்தலர்கள் இந்தத் தங்களுடைய வாதத்தைக் குறித்த விஷயத்தில், பொதுவாய்க் காணப்படுவதைக் காட்டிலும், இத்தருணத்தில் மிகவும் தெளிவில்லாமல் காணப்பட்டனர்; இல்லையேல் அந்த மனுஷன் பிறப்பதற்கு முன்னதாகவே பாவம் செய்ய முடியாது என்ற விஷயத்தை அறிந்திருப்பார்கள்; ஆத்துமாக்கள் கூடுவிட்டுக் கூடுச் செல்லும் என்பதான அந்நியர்களின் கருத்துக்கள் சீஷர்களுடைய கவனத்திற்கு வந்திருப்பதற்குக் குறைவான வாய்ப்புகளே உள்ளன. அந்நிய மதத்தினர், தாங்கள் முன்பு ஏதோ ஒருவிதத்தில் அல்லது சூழ்நிலையில் வாழ்ந்ததாகவும், உலகில் தாங்கள் பிறந்துள்ளபடியால், முன்பைக் காட்டிலும் ஒன்றில் மேலான (அ) கீழானதுமான மாறுபட்ட சூழ்நிலைகளில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஜீவியத்தைப் பெற்றுள்ளதாகவும் அனுமானித்துக்கொள்ளத்தக்கதாக, சாத்தான் அந்நிய மார்க்கத்தினர் அனைவரையும் வஞ்சித்துள்ளான். இதே கருத்து, மில்லியன் கணக்கிலான புத்தர்களினாலும், மோர்மோனியர்களினாலும் நம்பப்படுகின்றதாய் இருக்கின்றது. ஆனால் ஆதாம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டார் என்றும், மனுக்குலம் முழுவதும் இயல்பான பிறப்பின் முறை மூலமாக ஆதாமிடமிருந்து தோன்றினது என்றும் வேதவாக்கியங்கள் போதிக்கின்றன.

அது இம்மனுஷன் செய்த பாவமும் இல்லை, இவனுடைய பெற்றோர் செய்த பாவமும் இல்லை என்ற நம்முடைய கர்த்தருடைய பதிலானது, அம்மனுஷனும், அவனுடைய பெற்றோர்களும் பாவம் இல்லாதவர்கள் என்றும், தகப்பனாகிய ஆதாமின் மீது வந்ததும், அவர் மூலமாய் அவருடைய சந்ததி முழுவதின் மீது வந்ததுமான குற்றத் தீர்ப்பில் இவர்கள் பங்கடையவில்லை என்றும் புரிந்துக்கொள்ளபடக்கூடாது. ஆதாமின் குற்றத்தீர்ப்பைக் குறித்து, “”ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று” என அப்போஸ்தலர் கூறுகின்றார் (ரோமர் 5:12). நம்மையும், மற்றவர்களையும் போல இந்தக் குருடான மனுஷனும், அவனுடைய பெற்றோர்களும், ஆதாமின் சந்ததியினுடைய அங்கங்களாக மரணத் தீர்ப்பின் கீழ்க் காணவேபடுகின்றனர். இம்மனுஷனால் செய்யப்பட்ட ஏதேனும் விசேஷித்த பாவத்தினாலோ, இவனுடைய பெற்றோரினால் செய்யப்பட்ட ஏதேனும் விசேஷித்த பாவத்தினாலோ, இம்மனுஷன் குருடனாய்ப் பிறக்கவில்லை என்ற விதத்திலேயே நமது கர்த்தருடைய வார்த்தைகள் புரிந்துக்கொள்ளப்பட வேண்டும். இதேபோல் வேறொரு தருணத்தில் சீலோவாமிலே கோபுரம் விழுந்து செத்தவர்களைக் குறித்துப் பேசுகையில், “”சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?” என்று கர்த்தர் பேசினார் (லூக்கா 13:4), அதாவது இதே விதத்தில் அனைவரும் கெட்டுப்போவதில்லை, மாறாக அனைவரும் மரித்துப்போவார்கள்; அனைவர் மீதும் மரணத்தீர்ப்பு உள்ளது. ஜீவன் அளிப்பவருடன் உறவிற்குள் [R4148 : page 77] வரும் போதுதான், இதனின்று தப்பித்துக்கொள்வதற்குரிய நம்பிக்கை காணப்படும்.

துன்பங்கள் என்பது தேவனுடைய உக்கிரத்திற்கான ஆதாரம் அல்ல

இக்கட்டுகள் என்பது கண்டிப்பாக, தெய்வீக நிராகரிப்பிற்கான குறிப்பாக எப்போதும் இருக்க வேண்டும் என்பது இல்லை என்பதே இப்பாடத்தினுடைய முக்கியமான கருத்தாகும். இச்சம்பவத்தில் இடம்பெறும் இந்த மனுஷனுடைய விஷயத்திலும், தெய்வீக நிராகரிப்பு எதுவும் இல்லை; இப்படியாக யோபுவின் சூழ்நிலையிலும், சீலோவாம் கோபுரம் விழுந்து இறந்துப் போனவர்களின் விஷயத்திலும் இல்லை. யூதர்களுடைய விஷயத்தில், அவர்களுக்கு விசேஷித்த விதமாய் வரும் வியாதிகள் என்பது, தனிப்பட்ட பாவத்திற்கான தண்டனைகளை (அ) அடிகளைப் பெரும்பாலும் குறிக்கின்றது என நமது கர்த்தர் குறிப்பிட்டும் இருக்கின்றார்; ஆகவேதான் பெதஸ்தா குளத்தண்டையில் காணப்பட்ட வியாதியாய் இருந்த மனுஷனை நமது கர்த்தர் சொஸ்தப்படுத்தின தருணத்தில், “”நீ போ, அதிகக் கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.” மனுக்குலத்தைத் தாக்கும் பெரும்பாலான வியாதிகளுக்கு, அவர்கள் சார்பில் அல்லது அவர்களுடைய முன்னோர்களின் சார்பில் சரியற்ற ஒரு வாழ்க்கை வாழ்ந்ததே காரணம் என்பதில் ஐயமில்லை. தைராய்டு வீக்கம் அடைதல் எனும் நோயானது, பல்வேறு தலைமுறைகள் தொடர்கிற நோயாக இருக்கின்றது; இப்படியாகவே முடக்குவாதமும் காணப்படுகின்றது. ஆகவே நாம் வியாதிப்பட்டிருக்கும்போது, அதிகமாக புசித்ததன் மூலமாக அல்லது அதிகமாக பானம் பண்ணினதன் மூலமாக அல்லது நம்முடைய நிலைக்குப் பொருந்தாத உணவுகளைப் பயன்படுத்தினதன் மூலமாக, அஜாக்கிரதையாய் வாழ்ந்ததன் காரணமாக, நாம் எந்தளவுக்கு வியாதிப்பட்டதற்குப் பொறுப்பாளியாக இருக்கின்றோம் என்பதைக் கவனமாய் ஆராய்ந்துப் பார்ப்பது சரியானக் காரியமாய் இருக்கும். இக்காரணத்தினால்தான் ஒருவேளை நாம் வியாதிப்பட்டிருப்போமானால், நாம் மனந்திரும்பி, நம்மால் முடிந்தமட்டும் முன்பைவிட மாறான விதத்தில் அடிகள் எடுத்து வைப்பது சரியானதாக காணப்படும்; இன்னுமாக எதிர்க்காலத்தில் நாம் அதிக உறுதியாய் இருப்போம் என்றும், அவருடைய மகிமைக்காகவும், நாம் அவருடைய ஊழியத்திற்கென அர்ப்பணம் பண்ணியுள்ள அழியக்கூடிய சரீரத்தைப் பாதுகாப்பதற்காகவும் சரீரத்திற்குரிய பிரயோஜனத்திற்காகவும் மட்டும்தான், நம்முடைய [R4149 : page 77] புசித்தலும், பானம் பண்ணுதலும் காணப்படும் என்றும், ஜெபத்துடன் தீர்மானம் எடுத்துக்கொள்வதும் சரியானதாகக் காணப்படும்.

ஆனால் ஒருவேளை நமக்கு ஏற்பட்டுள்ள அனுபவமும், வியாதியும், சுயத்தைத் திருப்திப்படுத்தினதன் காரணமாக அல்லது நம்முடைய கட்டுப்பாட்டிற்கு மிஞ்சி பரம்பரை வழியாக வந்த நோயாக இல்லை என நாம் ஆராய்ந்துப் பார்த்ததில் கண்டுப்பிடிப்போமானால், கர்த்தருடைய ஊழியங்களிலுள்ள நம்முடைய ஈடுபாட்டின் காரணமாக, நமக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள் வந்துள்ளனவா எனக் கவனமாய் ஆராய்ந்துப் பார்ப்பது சரியானதாக இருக்கும். ஒருவேளை கர்த்தருடைய ஊழியங்களில் ஈடுபட்ட காரணத்தினால்தான் இவ்விளைவுகள் நேர்ந்துள்ளதெனில் நாம் அவைகளில் மேன்மை பாராட்டிக்கொள்ள வேண்டும்; நமக்கு மாபெரும் காரியங்களைச் செய்தவருக்கான ஊழியத்தில் ஜீவனிலும், ஆரோக்கியத்திலும் கொஞ்சத்தை ஒப்புக்கொடுக்க நம்மால் முடிந்ததற்கு நாம் களிகூர வேண்டும். எனினும் விவேகமுள்ள ஊழியக்காரர்களென, நாம் இதே நற்பலன்களை அல்லது இதைக் காட்டிலும் மேலான பலன்களை, வேறுவழியின் மூலம், அதாவது குறைவான உடல் சோர்வையும், குறைவான தளர்வையும்/பலவீனத்தையும் கொடுக்கக்கூடிய வேறு வழியின் மூலம் அடையலாமோ என்றும் கவனிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். இதிலுங்கூட நம்மைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் நம்முடைய மனங்களுக்கு முன்பாகக் காணப்படக்கூடாது. ஏனெனில் அதிகப்படியான அளவில் தன்னுடைய ஜீவனைச் சிநேகிக்கிறவன், அதை இழந்து போவான். அவருடைய பார்வையில் மிகவும் பிரியமாகவும், அங்கீகரிக்கப்படத்தக்கதாகவும் இருப்பவைகளை, நம்முடைய சரீரங்களில், உக்கிராணக்காரர்களாக நாம் நிறைவேற்றுவதற்குரிய நமக்கான பொறுப்பைப் பற்றியே நம்முடைய எண்ணங்கள் காணப்பட வேண்டும். ஒருவேளை இந்தக் கருத்துக்களில் எதுவும், நம்முடைய சூழ்நிலைக்குப் பொருந்தவில்லையெனில், நாம் ஆராய்வதற்கு இன்னும் இரண்டு காரியங்கள் காணப்படுகின்றது:-

(1) நம்முடைய வியாதி, ஒருவேளை, கர்த்தருக்குப் பிரியமற்ற நடத்தைக்கான சிட்சையா? நம்முடைய வியாதி, அடிகள் போன்று இருக்கின்றதா? ஒருவேளை நம்முடைய மனங்களில், நம்முடைய இருதயத்தின் வாசலில் பாவம் கிடப்பதை, அதாவது ஜீவியத்தின் தவறான நடத்தையை நாம் கண்டுபிடிப்போமானால், நமக்கு வந்திருக்கும் அனுபவத்தைப் சிட்சை என ஏற்றுக்கொண்டு, அதில் நன்மையை அடைய நாடுவதே சரியானக் காரியமாக இருக்கும்.

(2) ஆனால் ஒருவேளை இவைகளில் எதுவும் நம்முடைய நிலைமைக்குப் பொருந்தவில்லையெனில், இப்பாடத்தில் இடம்பெறும் நபரின் நிலைமை போன்று, நமக்கு வந்துள்ள துன்பமும், நம்முடைய நன்மைக்கு என்றும், சில விலையேறப் பெற்ற ஆவிக்குரிய படிப்பினைகளை நாம் கற்று, செயல்படுத்துவதில் நமக்கு உதவுவதற்கு என்றும், இல்லையேல் இப்பாடத்தில் நமது கர்த்தர் குறிப்பிட்டிருக்கின்றது போல, தேவனுடைய கிரியைகள் வெளிப்படுத்துவதற்கு என்றும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நமக்கென்று நாம் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலமாக அல்லது மற்றவர்களுக்கு நல்ல படிப்பினைகளைச் சுட்டிக்காண்பிப்பதன் மூலமாக, அவருக்குச் சொந்தமான நம்முடைய ஆவிகளிலும் (மனங்களிலும்), நம்முடைய சரீரங்களிலும் தேவனை மகிமைப்படுத்துவது நமக்கான பாக்கியமாகும். இப்படியாகவே குருடான மனுஷனுடைய அனுபவமும் காணப்பட்டது; குருடான மனுஷனுடைய சந்தர்ப்பமானது அவனுக்கு ஆசீர்வாதமாகவும், கர்த்தருடைய நாட்களில் காணப்பட்ட பரிசேயர்களுக்கும், மற்றவர்களுக்கும் கர்த்தர் இயேசுவையும், அவருடைய வல்லமையையும் வெளிப்படுத்துகிறதாகவும், பரீட்சையாகவும், அந்நாள் முதல் தற்காலம் வரையிலுமான கர்த்தருடைய ஜனங்களுக்கு விலையேறப்பெற்ற அறிவுரையாகவும் அமைந்தது.

தேவனுடைய கிரியைகள்

தேவனுடைய கிரியைகள் என்பது, ஆயிரக்கணக்கிலான வியாதியஸ்தர்கள் மற்றும் குருடர்களில் ஒருவரைச் சொஸ்தப்படுத்துவதாக மாத்திரம் இல்லாமல், மாறாக இயேசுவை உலகத்தின் ஒளியாக வெளிப்படுத்துவதும், இதனால் யூத ஜனங்களுக்கு ஏற்படும் தாக்கமும், பரிட்சையுமே தேவனுடைய கிரியையாக இருக்கின்றது; அதாவது அவர்கள் மத்தியில் சில உத்தம இஸ்ரயேலர்கள், மணவாட்டி வகுப்பாரில் அங்கத்துவத்திற்குச் சேர்க்கப்பட்டனர் மற்றும் அந்தத் தேசத்தின் திரளானவர்கள் பரலோக இராஜ்யத்தில் பங்கடைவதற்கு அபாத்திரர்கள் எனப் புறக்கணிக்கப்பட்டனர். இந்தக் கிரியையை/வேலையை நமது கர்த்தர், “”பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும். ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” என்று கூறி இந்தக் குருடனான மனுஷனைச் சொஸ்தப்படுத்தினதில் செய்யத் தொடங்கினார் (யோவான் 9:4). (கிரியை புரிவதற்கான பகற்காலமாகிய) நமது கர்த்தருடைய நாட்களானது, சீக்கிரமாய் நிறைவை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த அற்புதமும், மற்றவைகளும், அதில் விசேஷமாக லாசருவை எழுப்பினதும், ஜனங்களுடைய கண்களின் கவனத்திற்கு அவரை வெகுவாய் ஈர்த்தது; இதினிமித்தம் ஜனங்கள் மத்தியில் பிரிவினையும் ஏற்பட்டது, சிலர் அவரை ஏற்றுக்கொண்டவர்களாகவும், சிலர் அவரை புறக்கணித்தவர்களாகவும் காணப்பட்டனர் மற்றும் இந்தப் பிரிவு முழுத் தேசத்திலும் தொடர்வது அவசியமாய் இருந்தது. அது ஒரு பரீட்சையாக இருந்தது மற்றும் அது, இஸ்ரயேலர்களுக்கு முன்பாக, பிலாத்துவுக்கு முன்பாக, கல்வாரியில், உலகத்தின் ஒளியாகிய இயேசு, ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் முற்றிலுமாய் அணைந்துப்போகக் கூடிய இரவு வேளையின் உச்ச நிலையை அடைய வேண்டும். இப்படியாகவே கர்த்தருடைய பின்னடியார்கள் ஒவ்வொருவரின் விஷயத்திலுங்கூட அனைவருடைய நேரமும், தாலந்தும், வைராக்கியமும் கர்த்தருக்குத் துதிச் சேர்க்கும் வண்ணமான பலன்களை கொணர்வதற்கான வாய்ப்புகளுள்ள பகற்காலம் உள்ளது மற்றும் இந்தப் பகற்காலத்தில் கொடுக்கப்படும் வாய்ப்புகள் முழுமையாய்ப் பயன்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவனுக்கும், அவன் மரணத்திற்குள் கடந்துச் செல்கையில், அவனிடமிருந்து வாய்ப்புகள் கடந்துப் போகக்கூடிய இராக்காலம் வரும்.

இதற்கு இசைவாகவே “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய் நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே” (பிரசங்கி 9:10) என்று காணப்படுகின்றன. ஒட்டு மொத்த சபையும் பல்வேறு அனுபவங்களைக் கொண்டிருக்கின்றது என்பதும் மறந்துவிடப்படக்கூடாது. பெந்தெகொஸ்தேயில் ஆரம்பித்த ஆதி சபையின் மீது, குறைவில்லாமல் வெளிச்சம் காணப்பட்டது; எனினும் அப்பொழுது காலை வேளையாய் இராமல், சாயங்கால வேளையாய் இருந்தது. அஸ்தமனமாகும் சூரியனிடமிருந்த ஒளியே அவர்கள் மீது வீசியது; படிப்படியாக இருள் வந்தது, மற்றும் இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய நீண்டகால பகுதியில், கடினமான இருள் நிலவினது; மற்றும் இதில் கர்த்தருடைய ஜனங்களால், “”உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” என்று எழுதியிருக்கிறபடி, ஒரு குறிப்பிட்ட காலம்வரையிலும், நடைப்பாதையில் கொஞ்சத்தையே பார்க்க முடிந்தது (சங்கீதம் 119:105). அந்தக் காலபகுதி “”இருண்ட யுகம்” என்று பொதுவாக அழைக்கப்படுகின்றது, மற்றும் இப்பொழுது நாம் காலையின் விடியலை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் மற்றும் பாதையும் அதிகமதிகமாய்ப் பிரகாசம் அடைந்து வருகின்றது.

[R4149 : page 78]

இப்பொழுது அதிகமாய்ப் பிரகாசித்துக்கொண்டிருக்கிறதான வெளிச்சமானது, கிட்டதட்ட, ஆதிகால திருச்சபையின் மீது பிரகாசித்த வெளிச்சத்தைப் போன்றே காணப்படுகின்றது; மேலும் இரண்டு காலங்களிலும் மனுஷ குமாரனுடைய பிரசன்னத்தின் (parousia) ஒளிதான் காணப்பட்டது. ஆனால் விடியற்காலையின் இந்த வெளிச்சத்திலும் கூட, நாம் இன்னொரு ஆழ்ந்த இருளின் காலத்தை எதிர்ப்பார்த்து இருக்கின்றோம்; இந்த இராக்காலம் என்பது, தீர்க்கத்தரிசியினால், “விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது” என்று குறிப்பிட்டிருக்கின்றபடி, வானங்களில் இருள் பரவுகின்ற விதத்திலும், காலை வேளையின் கடுமையான புயல் என்ற விதத்திலும் உள்புகுவதாகக் காணப்படும் (ஏசாயா 21:12). காலைவேளை இப்பொழுது காணப்படுகின்றது, எனினும் இது ஆயிரவருட அரசாட்சிக்குரிய முழுமையான பிரகாசத்துடன் வருவதற்கு முன்னதாக, உபத்திரவக் காலத்தின் மாபெரும் புயல், அதாவது, “யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்கால மட்டும் உண்டாயிராத ஆபத்து காலம்” வரும் (தானியேல் 12:1). ஆகவே தனிப்பட்ட விதத்திலும், கிறிஸ்துவின் சரீரமென ஒட்டுமொத்தமாகவும் நாம் நமக்கே சொல்ல வேண்டியது என்னவெனில், “”நாம், நம்மை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்ய வேண்டும்;” அதாவது பகற்காலமாய் இருக்கும்பொழுதே, நம்மீது சூரியனுடைய ஒளி வீசும்பொழுதே, நம்மிடம் பணியை ஒப்படைத்தவருடைய கிரியைகளை நாம் செய்ய வேண்டும், ஏனெனில் எந்த மனுஷனும் கிரியை செய்ய முடியாத இராக்காலம் வருகின்றது, அப்பொழுது அவருடைய நோக்கத்திற்கும், சகோதர சகோதரிகளுக்கும், சத்தியத்தை பொது ஜனங்கள் மத்தியில் பரப்புவதற்குரிய ஊழியங்களுக்கான நம்முடைய வாய்ப்புகள், நிலவிக்கொண்டிருக்கும் சக்திகளினால்/அதிகாரங்களினால் வலுக்கட்டாயமாக நெருக்கப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

உலகத்தின் ஒளி

“நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” (யோவான் 9:5) என்று நமது கர்த்தர் கூறினார். இவ்வார்த்தைகளைக் கூறினதிலிருந்து இன்னும் ஓர் ஆறு மாத காலங்கள், அதாவது நமது கர்த்தர் சிலுவையில் அறையப்படுவது வரையிலும் தீமையைக் கண்டிக்கத்தக்கதாகவும், நல்லவற்றை ஊக்குவிக்கத்தக்கதாகவும், உலகத்தின் மீது இந்த ஒளி பிரகாசித்துக்கொண்டிருந்தது; ஆனால் அவர் போன பின்னர், ஒளி மற்றும் தம்முடைய ஆவியின் செல்வாக்கினை/ஆதிக்கத்தை ஏற்கவல்ல கூடிய சிலரை விட்டுச் சென்றார்; இவர்கள் பெந்தெகொஸ்தே நாளின் ஆசீர்வாதத்தினால் பிரகாசிக்கப்பட்டனர். இவர்களைக் குறித்துக் கர்த்தர், “”நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” என்றும், “”இவ்விதமாய் மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” என்றும் கூறினார் (மத்தேயு 5:14,16). ஆகவேதான் அப்போஸ்தலனும், “”அவர் இருக்கிற பிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்” என்று குறிப்பிடுகின்றார்; அதாவது இருளில் பிரகாசிக்கும் வெளிச்சங்களாக நாம் இவ்வுலகத்தில் காணப்படுகின்றோம்; அதேசமயம் திரளான ஜனங்களினாலும், தேவனுடைய ஜனங்கள் என்று தங்களைக் குறித்துக் கூறிக்கொள்கின்றவர்களினாலும், அதாவது பரிசுத்த ஆவியினுடைய பிரகாசிப்பித்தலை அடையத்தக்கதாக, வெளிச்சத்தைத் தங்களுக்குள் அனுமதிக்க இருதயத்தில் விருப்பமற்று தேவனுடைய ஜனங்களெனத் தங்களைக் குறித்து அறிக்கை செய்து கொள்பவர்களினாலும் நாம் உணர்ந்துக்கொள்ளப்படாதவர்களாக, புரிந்துக்கொள்ளப்படாதவர்களாக, ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாக, மறுக்கப்படுபவர்களாக, தாக்கித் துரத்தப்படுபவர்களாக, இவ்வுலகத்தில் காணப்படுகின்றோம் (1 யோவான் 4:17). நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்து, நமது வெளிச்சத்தைப் பிரகாசிக்கப் பண்ணத்தக்கதாக, நாம் அந்தப் பரிசுத்த ஆவியினால் பிரகாசிப்பிக்கப்படுதலுக்கும், இப்படியான வெளிச்சமானது, வீசி விழும் நபர்களில் ஒருவராக நாம் இருப்பதற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். நமது கர்த்தர் அநேகர் மீது தம்முடைய ஒளியைப் பிரகாசிக்கச் செய்தார், இப்படியே நாமும் நம்முடைய வெளிச்சத்தை அநேகர் மீது பிரகாசிக்கப் பண்ணுவதற்குரிய வாய்ப்பைப் பெற்றிருக்கின்றோம். எனினும் ஒருவன் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படவில்லையெனில், அவனுக்குள் வெளிச்சமிராது (எபிரெயர் 10:32).

குருடனுடைய கண்களில் சேறு பூசப்படுதல்

இந்தச் சிறு சம்பாஷணையானது, அநேகமாக குருடான மனுஷன் கேட்கத்தக்க தொலைவில்தான் நடந்து கொண்டிருந்தது; இன்னுமாக இச்சம்பாஷணையானது, அந்தக் குருடான மனுஷனுக்கு மாத்திரமல்லாமல், சீஷர்களுக்கும், கர்த்தருடைய வார்த்தைகள் மூலமாக அவரை விசுவாசித்த அனைவருக்கும் கூட கொடுக்கப்பட்டது. பின்னர் நமது கர்த்தர் மண்ணில் உமிழ்ந்து, புழுதி மற்றும் உமிழ் நீரினால் ஒரு களிம்பை/சேற்றை உண்டாக்கி, அதை வைத்து குருடான மனுஷனுடைய கண்களில் பூசினார். இவையனைத்தும் அந்தக் குருடான மனிதனுடைய சார்பிலிருந்து கொஞ்சம் ஒத்துழைப்பும் தேவை என்பதைத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. சீலோவாம் குளத்தின் தண்ணீரிலே போய்க் கழுவும்படியான நமது கர்த்தருடைய கட்டளைக்குக் குருடான மனுஷன் புறப்பட்டுப்போனது என்பதில், அம்மனுஷனுடைய சம்மதமும் தெரிகின்றது. விசுவாசமானது, முதலாவதாகக் கிரியைகளினால் பின்தொடரப்படுகின்றது, மேலும் இது ஓரளவுக்கு வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. ஒருவேளை அம்மனுஷன் நம்பிக்கைக்கொண்டிருக்கவில்லையெனில், அம்மனுஷன் தன் கண்களில் சேறு பூசுவதற்கும் அனுமதித்திருக்கமாட்டான், இன்னமும் பிச்சைக்கேட்டுக்கொண்டிருந்த அவனுடைய இடத்தையும் விட்டுவிட்டு, கழுவும்படிக்கு எழுந்து போயிருந்திருக்கமாட்டான். நமது கர்த்தர் உண்டுபண்ணி பயன்படுத்தின சேற்றின் விஷயத்தில், சேற்றிலும், தண்ணீரிலும் எவ்விதமான குறிப்பிட்ட நன்மையும் இல்லை என்று நாம் கூறுகின்றோம்; மேலும் இப்படியாக இல்லை என்பது, முழுச் சம்பவத்தைப் பார்க்கும்பொழுது அடையாளம் கண்டுகொள்ளப்படலாம்; மாறாக அந்தச் சேறானது குருடான மனுஷனுடைய விசுவாசத்திற்கு உதவுவதாக மாத்திரமே இருந்ததே ஒழிய, மாறாக அம்மனுஷனுடைய மனதில் குணமாக்குதலை ஏற்படுத்தவில்லை; பரிசேயர்கள் போன்று, அம்மனுஷனும் அதை அற்புதம் என்றே எடுத்துக்கொண்டான். இம்மனுஷன் பிறவியிலேயே குருடாய் இருந்த காரியமே, இந்த அற்புதத்திற்கு அதிக முக்கியத்துவத்தைச் சேர்த்தது, இன்னுமாக அம்மனுஷன் கூறின பிரகாரமாக, பிறவிக்குருடனாய்ப் பிறந்த எவனுடைய கண்களும் திறக்கப்பட்டதாக, அதுவரையிலும் எவரும் கேட்டதில்லை. உண்மையில், அறிவியல் துறையில் உள்ள இவ்வளவு முன்னேற்றத்திற்குப் பிற்பாடும் கூட, பிறவியிலேயே குருடாய்ப் பிறந்தவர்களுக்கு எதுவும் சரிச் செய்திட முடியாது என்றும், கண் படலம் (cataract) நோய்க்கு மாத்திரமே விடுதலை இருக்கின்றது என்றும், இன்றுள்ள கண் மருத்துவர்கள் நமக்குத் தெரிவிக்கின்றனர். அதுவும் கண்படலம் விஷயத்திலும் சிகிச்சையும் பகுதியாகவே இருக்கின்றது, அதுவும் அறுவை சிகிச்சை மூலமாக லென்ஸ் மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக செயற்கை லென்ஸ் வைக்கப்படுகின்றது.

அம்மனுஷனுடைய வீடு காணப்பட்ட இடத்திலுள்ள அனைவர் மத்தியிலும், இந்த அற்புதம் பற்றின பேச்சே போய்க்கொண்டிருந்திருக்க வேண்டும்; அயலார்களும், நண்பர்களும் அம்மனுஷனுக்கு வாழ்த்துதல் தெரிவித்தார்கள்; ஆனால் சிலரால், இம்மனுஷன்தான் குருடாய் இருந்த மனுஷன் என்பதை நம்ப முடியாமலும், பிறவியிலேயே குருடாய்ப் பிறந்த ஒருவர் பார்வையடைதல் என்பதை நம்ப முடியாமலும் காணப்பட்டனர். இது இயேசுவுக்கு நல்லதொரு விளம்பரமானது; ஏனெனில், எப்படிப் பார்வையடைந்தான் என்று அம்மனுஷனிடத்தில் கேட்கப்பட்ட போது, இயேசு என்னும் பெயர்க்கொண்ட ஒரு மனுஷன் இந்த அற்புதத்தைச் செய்தார் என்று தெரிவித்தார். நமது கர்த்தர் மீது ஏற்கெனவே பொறாமைக்கொண்டிருந்து, அவரைக் கொன்றுப்போடுவதற்கு வகை தேடின பரிசேயர்கள், ஒருவேளை எவரேனும் இயேசுவை மேசியா என்று கூறும் பட்சத்தில், அவர்களைத் தேவாலயங்களிலிருந்தும், அதன் சிலாக்கியங்களிலிருந்தும், அதாவது உண்மை யூதனுக்குரிய கனம், சுயாதீனம் மற்றும் சிலாக்கியங்களிலிருந்தும், பாத்திரமற்றவன் என ஒதுக்கி வைக்கவேண்டும் என்று முடிவு பண்ணியிருந்தனர். அற்புதம் பற்றின சங்கதி பரவி விடும் என்ற பயத்தினால், விஷயத்தை மடக்கி, ஒன்றுமில்லாமல் ஆக்கிப்போடுவதற்கென, அவர்கள் (பரிசேயர்கள்) விசாரணை நடத்தினார்கள். பரிசேயர்கள் குருடான மனுஷனுடைய தகப்பனிடத்திற்கும், தாயினிடத்திற்கும் சென்றபோது, பெற்றோர்கள் சுருக்கமாக உண்மையைத் தெரிவித்துவிட்டு, விலகிவிட்டனர்; அதாவது அம்மனுஷன் தங்களுடைய குமாரன்தான் என்றும், அம்மனுஷன் பிறவியிலேயே குருடாய்ப் பிறந்தான் என்றும், இப்பொழுது பார்வையடைந்துள்ளான் என்றும், தாங்கள் நடந்ததைப் பார்க்காத காரணத்தினால் எப்படிப் பார்வை வந்தது பற்றித் தங்களுக்கு எதுவும் சொல்ல இயலாது என்றும், அம்மனுஷன் வயதுள்ளவனாய் இருக்கிறபடியால் அம்மனுஷனே தனக்காகப் பேசிக்கொள்ள முடியும் என்றும் பெற்றோர்கள் கூறி விலகிவிட்டனர். [R4150 : page 78] மீண்டுமாக, குருடாய் முன்பு காணப்பட்டிருந்த அந்த மனுஷனிடத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன் எப்படி? எப்பொழுது? எங்கே? என்று அம்மனுஷன் பொய்ச் சொன்னதாக அவரை மடக்கி, சிக்க வைப்பதற்கெனக் கேள்விகள் கேட்கப்பட்டன. இருதயத்தில் உண்மைக்கொண்டிருந்த அம்மனுஷனோ, பரிசுத்தமானவர்களெனத் தங்களைக் குறித்துக் கூறிக்கொள்ளும் பரிசேயர்களாகிய இந்த மனிதர்கள், இயேசுவை எதிர்ப்பவர்கள் என்றும், நடந்த அற்புதத்தை மறுப்பதற்கு அல்லது இழிவாய்ப் பேசுவதற்கென அனைத்து விதத்திலும் முயற்சி எடுக்கின்றவர்கள் என்றும் உணர்ந்துக்கொண்டார்.

சொஸ்தப்பட்ட மனுஷனை நோக்கிப் பரிசேயர்கள் பின்வரும் விதத்தில் பேசினார்கள்… “”உனக்குத் தவறான வழியின் மூலமாகப் பார்வைக் கிடைத்திருந்தாலும், உனக்குப் பார்வைக் கிடைத்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகின்றோம்; ஏனெனில் உன்னைச் சொஸ்தப்படுத்தின மனுஷனாகிய இயேசு ஒரு பாவி என்பதையும், மாய்மாலக்காரன் என்பதையும், மேசியா எனத் தன்னை அறிக்கைப் பண்ணும் மோசடியாளர் என்பதையும் நாங்கள் அறிவோம்; இயேசு ஒரு மோசமான மனுஷன்.” இவைகளை முன்பு குருடாய் இருந்து, இப்பொழுது சுகமடைந்துள்ள அம்மனுஷனால் சகிக்க முடியாமல் இருந்தது; தன்னுடைய அருமை நண்பன் (இயேசுவினுடைய) குணலட்சணங்கள் திரித்துக் கூறப்படுவதை, எதிர்த்துப் பேசாமல் அம்மனுஷனால் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை; ஆகவே பின்வருமாறு கூறினார்… “”இதுவரையிலும் நிகழ்ந்ததாக, கேட்டிராத இப்படிப்பட்டதொரு அற்புதம் நிகழ்த்தப்பட்டிருப்பது வியக்கத்தக்கதாக இருக்கின்றது; இன்னமும் தேவனால் தொடர்பு வைக்கப்படாத ஒரு பாவியினால் இந்த அற்புதம் செய்யப்பட்டிருப்பது, வழக்கத்திற்கு மாறாக இருக்கின்றது; உண்மையில் வியக்கத்தக்கதாகவே இருக்கின்றது. தேவன் பாவிகளுடைய ஜெபத்தைக்கூட கேட்பதில்லை என்ற போதனை யூதர்களாகிய நம் மத்தியில் காணப்படுகின்றதே; அப்படியானால் (உங்களால்) பாவியென்று சொல்லப்படும் இந்த மனுஷனால் (இயேசுவினால்) எப்படி, இப்படியொரு வியக்கத்தக்க அற்புதத்தைச் செய்ய முடியும்?” பின்னர் மீண்டுமாக, எப்படி, எங்கு, எப்பொழுது எனப் பரிசேயர்கள் அம்மனுஷனிடத்தில் குறுக்குக் கேள்விகள் எழுப்பினார்கள். ஆனால் அவர்களுடைய இருதயத்தின் உண்மையற்ற தன்மையை அம்மனுஷன் உணர்ந்தவராக, “”ஏன் மீண்டும் மீண்டுமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்? நான் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இல்லையா? [R4150 : page 79] நீங்கள் அவருடைய சீஷர்களாக ஆக ஆவல் கொண்டிருப்பதினாலா, என்னை இன்னும் விவரித்துக்கூற சொல்கின்றீர்கள், இல்லையேல் உங்கள் நோக்கம்தான் என்ன?” என்று கேட்டார். தங்களுடைய மாய்மாலமான திட்டங்கள் வெளியாகிவிட்டன என்று உணர்ந்தவர்களாக, “”நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர்” என்றும், மோசேயுடனே தேவன் பேசினார் என்றும் அறிவோம், இவரைக் குறித்து யார் அறிந்துள்ளார்கள்? இவர் நாசரேத்திலிருந்து வந்ததாகக் கூறப்படுகின்றார்; இவருடைய பெற்றோர்கள் அரண்மனையிலுள்ளவர்களுமல்ல மற்றும் நம்முடைய நாட்டை ரோமர்களின் கரங்களிலிருந்து விடுவிப்பதற்குரிய வல்லமையையும், மகா மகிமையையும், திறமையும் கொண்டவராக நாம் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் மேசியா போன்றவர் இவரல்ல. நீ வேண்டுமானால் இவரைப் பின்பற்று; உன்னோடும், இயேசுவோடும் எங்களுக்கு சம்பந்தம் இல்லை; மீண்டுமாக இனி எங்களுடைய தேவாலயத்திற்கு நீ வராதே, உன்னுடைய சொந்த தேசத்திலுள்ள பக்தியுள்ள ஜனங்களிடமிருந்து நீ விலக்கப்படுவதைக் கொஞ்சம் யோசித்துக்கொள்” என்றும் அம்மனுஷனை வைதார்கள்.

இம்மனுஷன் புறம்பாக்கப்பட்டான் என்பதை இயேசு கேள்விப்பட்டு, அம்மனுஷனைக் கண்டு, “”தேவனுடைய குமாரனை நீ விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார். கர்த்தரைக் குறித்து அதிகம் அறிந்துக்கொள்வதற்கான அம்மனுஷனுடைய வாஞ்சைக்குப் பதிலளிக்கும் வண்ணமாக, நமது கர்த்தர் தம்மை மேசியா என்று அம்மனுஷனுக்கு வெளிப்படுத்தினார். அம்மனுஷன் கர்த்தரைத் தொழுதுகொண்டான். இம்மனுஷன் மீதும், இவனுடைய நலனுக்கடுத்த விஷயங்கள் மீதும், விவேகமான பராமரிப்பைக் கர்த்தர் செயல்படுத்துவதைக் கவனியுங்கள். அம்மனுஷன் தேவலாயத்திலிருந்து தள்ளப்படுவதிலிருந்து, கர்த்தர் இவனைக் காக்கவில்லை, ஆனால் அந்தத் தள்ளப்படுதலை, அம்மனுஷனுக்கு அனைத்து விஷயத்திலும் நன்மைக்கு ஏதுவான போதனை அருளப்படுவதற்குரிய விசேஷித்த ஆசீர்வாதமாக மாற்றிப்போட்டார்.

இந்தச் சம்பவத்தில் நமக்கு மேன்மையான படிப்பினைகள் காணப்படுகின்றது. நம்மில் சிலர் குருடர்களாகவே பிறந்திருக்கின்றோம், அதாவது கர்த்தருக்கும், அவருடைய உண்மையான குணலட்சணத்திற்கும், தெய்வீக வார்த்தையினுடைய சத்தியத்திற்கும் குருடர்களாகவே பிறந்திருக்கிறோம். இந்த நம்முடைய குருட்டுத்தன்மையானது, நம்முடைய சொந்த தவறினாலும் அல்ல, நம்முடைய பெற்றோர்களுடைய தவறினாலும் அல்ல நம்முடைய பெற்றோர்களும், நாமும் கர்த்தரிடத்தில் உத்தம இருதயத்துடனே காணப்பட்டிருந்தோம். ஆனால் இந்த நம்முடைய குருட்டுத்தன்மையானது, பாவங்களுக்கான சிட்சைகள் அல்ல. கிறிஸ்தவ மண்டலத்தில் பரவிக் கிடக்கும் இருளும், குருட்டுத்தன்மையும், நம்மையும், மற்றவர்களையும் சிக்க வைத்திருந்தது, ஆனால் கர்த்தர் நம்மீது இரக்கங்கொண்டு, நம் பக்கமாகக் கடந்துவந்து, நமக்காக கலிக்கத்தையும், களிம்பையும் உண்டு பண்ணினார். மனித பிரதிநிதியாகிய மண்ணை எடுத்து, அதில் தம்முடைய உதடுகளின் கனியாகிய தம்முடைய வார்த்தைகளைச் சேர்த்து, அதை புரிந்துக்கொள்ளுதலின் கண்களுக்கான களிம்பாக நமக்குக்கொடுத்து, சத்தியம் மற்றும் கிருபை எனும் தம்முடைய வார்த்தையாகிய சீலோவாம் குளத்தின் தண்ணீரில் நாம் கழுவிக்கொள்ளும்படிக்கு நமக்குக் கட்டளையிட்டார். அவர் சொன்னதை நாம் பின்பற்றினோம், இப்பொழுது நாம் காண்கின்றோம். நமக்கு முன்பு ஒரு புதிய உலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது; “”வேதாகமத்தின் ஆச்சரியமானக் காரியங்களை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்!” நம்முடைய நாட்களிலுள்ள பரிசேயர்களும், வேதபாரகர்களும், நமக்கு வந்துள்ள ஆசீர்வாதத்தைக் குறித்து வியக்கின்றனர், விமர்சிக்கின்றனர், காரணம் காட்டுவதற்கும்/பதில் சொல்லுவதற்கும் முயற்சிக்கின்றனர்; இன்னுமாக நம்முடைய ஆசீர்வாதம் தொடர்புடைய விஷயத்தில், கர்த்தரால் பயன்படுத்தப்படும் அனைத்துப் பிரதிநிதிகளிலும்/கருவிகளிலும் குற்றம் கண்டுபிடிப்பார்கள், காரணம் தேவனுடைய கிருபையின் வெளிச்சத்தைப் புரிந்துக்கொள்வதற்குரிய சரியான நிலையில் அவர்களுடைய இருதயம் இல்லை என்பதேயாகும்.

சத்தியத்தை ஒப்புக்கொள்வதிலும், வெளிச்சத்தை ஒப்புக்கொள்வதிலும், நாம் நம்முடைய இருதயங்களைக் கர்த்தருக்குக் கொடுப்பதிலும், நம்முடைய புரிந்துக்கொள்ளுதலின் கண்களிடத்தில் கர்த்தர் பண்ணிட்ட அற்புதத்தை ஒப்புக்கொள்வதிலும், நாம் இப்பொழுது அந்தக் குருடான மனுஷன்போல் செயல்படுகின்றவர்களாய்க் காணப்பட வேண்டும். இன்னுமாக இப்படியெல்லாம் செய்வது என்பது, நம்முடைய நாட்களிலுள்ள பரிசேயர் மற்றும் வேதபாரகரரின் வன்மத்தையும், கோபத்தையும், எரிச்சலையும், நமக்கு எதிராக கொண்டுவரும் என்பதையும் நாம் பார்க்கிறவர்களாய் இருப்போம். இது நம்மை இன்றைய வேதபாரகர் மற்றும் பரிசேயரின் கூட்டத்திலிருந்து பிரித்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களிலிருந்து நம்மை விலக்கி வைக்கத்தக்கதாக வழிநடத்துகின்றதாய் இருக்கும் என்பதையும் நாம் பார்க்கின்றவர்களாய் இருப்போம். இதைத் தீர்க்கத்தரிசி மூலம் கர்த்தர் முன்னுரைத்துள்ளார், அதாவது, “”என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகின்ற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே (நாங்கள் கர்த்தரை மகிமைப்படுத்தத்தக்கதாக, கர்த்தருடைய நோக்கத்திற்கு நன்மையாக விளங்கும்படிக்கு நாங்கள் இந்த அப்புறப்படுத்தல்களைப் பண்ணுகின்றோம்); அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள்” (ஏசாயா 66:5). கர்த்தருடைய ஜனங்களில் எத்தனை பேர், தாங்கள் சத்தியத்தை ஒப்புக்கொண்ட பிற்பாடு, சத்தியத்திற்காக நின்ற பிற்பாடு, மற்றும் சத்தியத்தினிமித்தம் சில துன்பங்களை அனுபவித்தப் பிற்பாடுதான், தங்களுக்கான ஆசீர்வாதத்தின் பெரும்பான்மையான பகுதி தங்களுக்கு வந்ததைக் கண்டிருக்கின்றனர்! இப்படிப்பட்டவர்களைக் கர்த்தர் கண்டுப்பிடிக்கின்றார், இவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதையும், இவர்களைப் பற்றின அனைத்தையும், எப்பொழுதும் அறிந்திருக்கிறார்; பின்னர் இவர்கள் தம்மைப்பற்றி அறிந்துக்கொள்வதற்கு என்றும், இவர்கள் தம்முடன் ஐக்கியம்கொள்வதற்கு என்றும், இந்தக் குருடான மனுஷனின் விஷயம் போலவே இவர்களும் தம்மிடத்திலிருந்து ஓர் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு என்றும், தம்மைப் பற்றி இவர்களுக்கு விசேஷித்தவிதமாய் வெளிப்படுத்துகின்றார்.

நாங்களும் குருடரோ?

நம்முடைய பாடத்திற்கு ஆதாரமான வேதபகுதியின் அதிகாரத்திலுள்ள கடைசி இரண்டு வசனங்கள், பரிசேயர்களுடைய வேதசாஸ்திரங்கள் தொடர்பான பெருமையை நம்முடைய கவனத்திற்குக்கொண்டு வருகின்றது. இவர்கள், ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் மத்தியில், ஆவியில் பெருமையுள்ளவர்களாகிய இவர்களுடைய வாரிசுக்குச் சரியான அடையாளமாய் இருக்கின்றனர். நமது கர்த்தர் தாம் உலகத்திற்கு வந்தது என்பது, குருடரான சிலர் பார்வையடையத்தக்கதாகவும், பார்வைகொண்டிருந்தவர்களில் சிலர் குருடாய்ப் போகத்தக்கதாகவும் பரீட்சையாக (அ) நியாயத்தீர்ப்பாக அமையும் என்று தெரிவித்தார். அதாவது, சத்தியம் அநேகரைப் பரீட்சிக்கின்றதாய் காணப்படும், சிலர் இருளிலிருந்தும், அறியாமையிலிருந்தும், குருட்டுத் தன்மையிலிருந்தும், மூட நம்பிக்கையிலிருந்தும், வெளியே வந்து, தேவனுடைய பிரம்மாண்டமான ஆசீர்வாதங்களை உணர்ந்துக்கொள்கின்றவர்களாய் ஆவார்கள், மற்றும் முன்பு அதிக அளவிலான கிருபைகளைப் பெற்றிருந்த மற்றவர்களோ, குருடான நிலைக்குள் போய்விடுபவர்களாக ஆகிவிடுவார்கள். கர்த்தரை ஏற்றுக்கொண்டவர்கள், பெந்தெகொஸ்தே நாளில் பிரகாசிப்பித்தலை அடைவார்கள்; மீதமானவர்கள் குருடர்களாகி, இந்தச் சுவிசேஷ யுகத்தின் நிறைவு காலம் வரையிலும் குருடர்களாகவே காணப்படுவார்கள் என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார்.

இப்படிக் குருடர்கள் பார்வையடைவார்கள் என்றும், பார்வையுள்ளவர்கள் குருடர்கள் ஆவார்கள் என்றும் கர்த்தர் குறிப்பிடுவதைக் கேட்ட பரிசேயர்கள், கர்த்தரை நோக்கி, “”எங்களை எந்தப் பட்டியலின் கீழ் வைக்கின்றாய்? குருடர்களின் பட்டியலில் இல்லை என நாங்கள் எதிர்ப்பார்க்கலாமா?” என்று கேட்டார்கள். இதற்குப் பிரதியுத்தரமாக, இயேசு அவர்களை நோக்கி, “”முழுமையான அறியாமையின் காரணமாக, ஒருவேளை இவர்களுடைய பாதைகள் நடத்தப்பட்டதினிமித்தம் இவர்கள் குருடர்களாய் இருந்திருப்பார்களானால், இவர்களுக்கு நலமாயிருந்திருக்கும், ஆனால் இவர்களது சூழ்நிலையே வேறு. இவர்களுக்குப் போதுமானளவு பிரகாசிப்பித்தல்/வெளிச்சம் இருந்துள்ளபடியால், இதற்கேற்ப இவர்களுக்குப் பொறுப்பும் உள்ளது; ஆனால் பெருமையும், சுய திருப்தியும் இவர்களிடத்தில் மேலோங்கியிருப்பதினாலும், கர்த்தருடைய உண்மையான செய்தியை இவர்கள் புறக்கணிப்பதினாலும், இவர்கள் வெளிச்சத்திற்கும், சத்தியத்திற்கும் எதிராக தங்களையே கடினப்படுத்திக்கொள்பவர்களாகவும், இருந்து, தங்களுடைய பாவம், தங்களைக்கட்டிப் போடுவதற்கும், ஏற்றகாலத்தில் வந்த வெளிச்சத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு இவர்களை ஆக்கத்தக்கதாகவும், இவர்களை விலங்கிடுவதற்கும் அனுமதித்துவிட்டனர்; இவர்கள் வந்த ஒளியையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதே நிலையில் இன்று எத்தனை பேர்கள் காணப்படுகின்றனர்; முன்னிலை வகிக்கும் கிறிஸ்தவ ஜனங்கள் தாங்கள் பிரகாசிக்கப்பட்டுள்ளதாகப் பெருமையடித்துக்கொள்கின்றனர், ஆனால் தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தைக் குறித்து அச்சமடைகின்றனர்; மற்றும் ஒன்றில் தங்களுடைய சொந்த அறியாமையைக் குறித்து அல்லது கர்த்தருடைய பிரசன்னத்தின் நாட்களில், இக்காலத்திற்குரிய வெளிச்சத்தைப் பரப்புவதற்கென அவர் பயன்படுத்திக்கொண்டிருக்கும் கருவிகளையும், இப்பொழுது பிரகாசித்துக்கொண்டிருக்கும் வெளிச்சத்தையும் குறித்து ஒப்புக்கொள்வதற்கு வெட்கப்படுகின்றனர். நமக்கு எவ்விதமான சொந்தமான வெளிச்சமோ, ஞானமோ இல்லை என்பதை உடனடியாக ஒப்புக்கொள்பவர்களாக இருப்போமாக, மற்றும் பரத்திலிருந்து வரும் மெய்யான ஞானத்தை, மெய்யான பிரகாசிப்பித்தலைக் கர்த்தருடைய கரங்களினின்று பெற்றுக்கொள்வோமாக. இப்படியான நிலையில் அனைவரும் வருவார்களானால், சத்தியம் வேகமாகப் பரவி விடும். எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று கூறியும், உண்மையில் எதையுமே தெரிந்திராதவர்களிடமிருந்தே மாபெரும் எதிர்ப்பு வருகின்றது; இப்படிப்பட்டவர்களுடைய பெருமையும், பெருமையடித்துக்கொள்ளுதலும் இவர்கள் வெளிச்சத்துக்குள் பிரவேசிக்காதபடிக்கு இவர்களை மாத்திரம் தடைப்பண்ணுகிறதாய் இராமல், மற்றவர்கள் வெளிச்சத்தை உணர்ந்துக்கொள்வதை இவர்கள் தடைப்பண்ணுவதற்கும் ஏதுவாக இவர்களை வழிநடத்துகின்றதாயும் இருக்கும்.