R5111 (page 312)
மாற்கு 8:11-26
“”மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.” – யோவான் 8:12.
இயேசுவின் நாட்களில் மதவாதிகளாகவும், போதகர்களாகவும் முன்னணியில் காணப்பட்ட பரிசேயர்களும், வேதபாரகர்களும் இயேசுவின் செய்தி, ஜனங்களைச் சென்றடைவதில், இயேசு அடைந்த வெற்றியினிமித்தமாக திகைத்துப்போய் எரிச்சலுடன் காணப்பட்டார்கள். இது உண்மைதான். இயேசுவின் செய்தியை மகிழ்ச்சியுடன் கேட்டவர்கள் பிரதானமாக, பொது ஜனங்களாக இருந்தனர். அதாவது, யூதமத போதகர்களால் இழிவாகப் பார்க்கப்பட்டு, “”ஆயக்காரர்கள் என்றும் பாவிகள் என்றும்” அழைக்கப்படுகின்றவர்களும், சகோதரர்கள் என்று கருதுவதற்கு யூதமத போதகர்களால் மறுக்கப்படுகின்றவர்களுமான பொது ஜனங்கள் ஆவர். பரிசேயரும், வேதபாரகரும், இயேசுவைப் போட்டிப் போடுகிறவராகவும், வெற்றிப் பெற்றவராகவும் கருதினார்கள். மேலுமாக, இயேசுவினுடைய ஜீவனுக்கேதுவான அருமையான வார்த்தைகள், அநேகருடைய இருதயங்களைத் தொட்டிருப்பதினிமித்தம், ஒரு போதகராக இயேசுவிடம் காணப்பட்ட மேம்பட்ட நிலையானது, போதகர்கள் என்று தங்களுக்கு இருக்கும் கீர்த்தியை மங்கச்செய்கின்ற காரணத்தினால், இவர்கள் அச்சம் கொண்டிருந்தனர்.
இயேசுவை “”சோதித்து” அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்றே இந்தப் பரிசேயர்கள், இயேசுவினிடத்திற்கு விசேஷமாக வந்தார்கள். “”வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத்” தங்களுக்குக் கொடுக்கும்படியாக, இவர்கள் இயேசுவினிடத்தில் கேட்டார்கள். வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்தல் முதலியவைகள் மூலம் இயேசு, ஜனங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் அநேக அடையாளங்களைச் சிறுமைப்படுத்துவதே, இவர்களுடைய உண்மையான நோக்கமாக இருந்தது. இந்த அநேகமான அடையாளங்களை இவர்கள் புறக்கணித்துவிட்டு, “”வானத்திலிருந்து வரும் எந்த ஓர் அடையாளத்தை நீர் எங்களுக்குக் கொடுப்பீர்? என்றும், எங்களுக்கு வானத்திலிருந்து ஓர் அடையாளம் வேண்டும், இதை எங்களுக்குக் கொடுத்தருளும், அப்பொழுது நாங்கள் உம்மை நம்புவோம் என்றும் கூறினார்கள்.
மேசியா என்ன செய்வார் என இவர்கள் எண்ணிக் கொண்டிருந்த விஷயங்களிலிருந்து, இயேசு தம்முடைய மேசியாத்துவத்தை நிரூபிக்கத்தக்கதாகச் செய்த காரியங்கள் எவ்வளவு வித்தியாசமாய் இருந்தது என்பதை நாம் நினைவில் கொண்டிருந்தால், அந்நாட்களில் காணப்பட்ட யூதர்களுக்கான பிரதான அதிகாரிகள் மீது நாம் ஓரளவுக்கு அனுதாபங்கொள்ள முடியும். மேசியாவைக் குறித்த அநேக காரியங்களைத் தீர்க்கத்தரிசனங்கள் தெரிவிக்கின்றன. ஆயினும், இவர்கள் தீர்க்கத்தரிசனங்களை வாசிக்கையில், இவர்கள் அவருடைய மகிமையைக் குறித்தும், யூத தேசத்தாருக்கு வரும் வல்லமை/அதிகாரம் குறித்தும், மேசியாவின் இராஜ்யத்தின்போது, உலகத்தை ஆசீர்வதிப்பதற்கென, சகல தேசங்கள் மீது, இறுதியில் யூத தேசமானது வழங்கப் போகும் ஆசீர்வாதங்குறித்தும் பேசப்பட்ட விஷயங்களுக்கே விசேஷமான கவனம் கொடுத்தனர். முற்றிலும் வேறுவகையான மற்ற வேதவாக்கியங்களை இவர்கள் கவனிக்கவும் தவறி, போதுமானளவுக்கு அல்லது ஆழமான கவனத்துடன் கற்கவும் தவறிவிட்டனர்.
இந்த மற்ற வேதவாக்கியங்கள், மேசியா எப்படி “”ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டு போகப்படுவார் என்றும், மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருப்பார் (அவர் தாம் குற்றவாளியாகத் தீர்க்கப்படுவதையும், மரித்துப் போவதையும் தவிர்ப்பதற்கெனத் தம்முடைய வாயைத் திறக்கமாட்டார்)” என்றும் தெரிவிக்கின்றது. இன்னுமாக, எப்படி அவர் சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையைப் பிரசித்தப்படுத்துவார் என்றும், குருடர்களின் கண்களை எப்படித் திறப்பார் என்றும் தெரிவிக்கின்ற வேதவாக்கியங்களானது மகிமையான இராஜ்யத்தோடு தொடர்புடையவைகளாக இருக்கின்றனவே ஒழிய மேசியா, “”மனுஷரால் நிந்திக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு” மற்றும் அவரிடமிருந்து மனுஷர்கள் தங்களது முகத்தைத் திருப்பிக்கொள்ளும் காலப்பகுதி தொடர்புடையதாக இல்லை.
உண்மைதான், இவர்கள் வேதவாக்கியங்களைச் சரியாகப் படித்திருக்க வேண்டும். இந்தத் தவறைச் செய்ததில், இவர்களுடைய தவறு எதுவுமில்லை என்று சொல்லப்படலாம்; ஒருவிதத்தில் இது உண்மையாகக்கூட இருக்கலாம். மற்றொரு விதமாகப் பார்க்கையில், இருதயத்தின் பெருமையும், எல்லாம் தெரியும் என்ற சிந்தையும்தான் உண்மையில் இவர்களுக்கான பிரச்சனை என்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவர்கள் தாழ்மையில்லாமல் காணப்பட்டார்கள்; ஆகவே இவர்கள் கற்பிக்கப்படத்தக்கதான நிலையில் இல்லை. இவர்களைப் போலவே இயேசுவின் செய்தியை ஏற்றுக்கொண்டிருந்த, “”உத்தம இஸ்ரயேலர்களும்” தீர்க்கத்தரிசனங்களைத் தவறாகவே புரிந்திருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்த உத்தம இஸ்ரயேலர்களோ தவறாய்ப் புரிந்திருந்ததை மறைக்காமல் ஒப்புக்கொண்டு, வழிநடத்தப்படுவதற்கும், வழிக்காட்டப்படுவதற்கும் ஆயத்தமாகவும் காணப்பட்டார்கள். மேலும், இத்தகையவர்களுக்கு ஆண்டவரின் போதனைகள் கவருகின்றவைகளாகவும், ஆசீர்வாதமாகவும், அற்புதமானதாகவும் காணப்பட்டது. தெய்வீகத் திட்டம் வெளிப்படுத்துவதற்கான ஏற்ற காலமாய் (அப்போது) இருந்தபடியால், இத்தகையவர்கள் படிப்படியாக, தெய்வீகத் திட்டத்தினுடைய ஒவ்வொரு அம்சத்தையும் சரியாய்ப் புரிந்துக்கொள்ளப்படுவதற்கு ஏதுவாய் வழிநடத்தப்பட்டார்கள். மேலும், இப்படியாக இத்தகையவர்கள் ஏற்றவேளையில் பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதத்திற்கு ஆயத்தமாய்க் காணப்பட்டு, மேசியாவின் மணவாட்டியாகவும், மேசியாவின் இராஜ்யத்தின் உடன் சுதந்தரராகவும் இருக்கும்படிக்குத் தேவன் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் தெரிந்துக்கொள்ளப்பட்ட வகுப்பாரில் தங்களை அங்கங்களாக வெளிப்படுத்திக் கொண்டார்கள்.
“”அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஓர் அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை விட்டு மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார்” (மாற்கு 8:12-13). இவர்களுக்கு அடையாளத்தைக் கொடுக்க இயேசு மறுத்துவிட்டார். பரிசுத்தவானாகிய மத்தேயு, இவர்கள் அடையாளம் கேட்டதையும், அதற்குப் பெற்றுக் கொண்ட பதிலையும் குறித்து விவரமாக பதிவு செய்துள்ளார் (மத்தேயு 16:1-4). இயேசு தாம் அதுவரையிலும் கொடுத்து வந்த அடையாளங்களின் மீது பரியேர்களின் கவனத்தைக் கொண்டு வந்தார். பின்னார் ஒரு மாபெரும் அடையாளம் இந்த ஜாதியாருக்குக் கொடுக்கப்படும் என்று கூறினார்; ஆயினும், கல்வாரியில் காரியங்கள் சம்பவிப்பதுவரையிலும், இவ்வடையாளம் கொடுக்கப்படுவதில்லை. அந்த அடையாளமானது பல ஆயிரக்கணக்கான யூதர்கள் மீது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தினது; இவ்வடையாளத்தின் தாக்கமானது, பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்தவானாகிய பேதுரு, இயேசுவின் மரணத்தைக்குறித்தும், அவர் மூன்று நாள் கல்லறையில் [R5111 : page 313] இருந்ததுகுறித்தும், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததுகுறித்தும் பண்ணின பிரசங்கத்தின் காரணமாக, அன்று பல்லாயிரம் நபர்கள் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டதாக அப்போஸ்தலரின் நடபடிப் புஸ்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள காரியங்களிலிருந்து உறுதிப்படுகின்றது.
யோனாவின் அடையாளத்தை இயேசு மேற்கோள் காட்டினார்; யோனா மூன்று நாள் இரவும், பகலுமாக, மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இதே காலளவு, பூமிக்குள் காணப்படுவார் என்றும், பிற்பாடு யோனா வெளியே வந்ததுபோல, மனுஷகுமாரனும் வெளியே வருவார் என்றும் தெரிவித்தார்.
நமது கர்த்தருடைய இவ்வறிக்கைக்கு எதிராக, உயர் விமர்சகர்கள் எழுப்பும் புதுக் கருத்துக்கள் தொடர்பான விஷயங்களில் அவர்கள், அவர்களுக்குள்ளாகவே சண்டைப் போட்டுக்கொள்ளட்டும் என நாம் விட்டுவிடுகின்றோம். உயர்விமர்சகர்களைப் பொறுத்தமட்டில், இயேசுவும், அப்போஸ்தலர்களும் எல்லா விதத்திலும் மிகவும் வஞ்சிக்கப்பட்டுள்ளவர்களாக இருக்கின்றனர்; ஆனால், இயேசு மற்றும் அப்போஸ்தலர்களைப் பொறுத்தமட்டில், உயர்விமர்சகர்களே மிகவும் மோசமாக வஞ்சிக்கப்பட்டுள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். நாம் தேவனுடைய வார்த்தைகளின் பக்கமாகவே நிற்க விரும்புகின்றோம்; “”மனித ஞானத்தின்” பக்கமாக நிற்க விரும்புகின்றவர்கள் அதன் பக்கமாகவே நிற்கட்டும்.
இயேசு படகில் ஏறின பிற்பாடு, பரிசேயர்களுடைய உபதேசத்தைக்குறித்து எச்சரிக்கையாய் இருக்கும்படிக்குத் தம்முடைய சீஷர்களை எச்சரித்தார்; பரிசேயர்களுடைய உபதேசத்தை அவர் புளித்தமாவுக்கு ஒப்பிட்டுக் கூறினார். புளிப்பு என்பது, அப்பம் பண்ணுவதற்கெனப் பிசைந்துள்ள மாவில் பரவக்கூடிய ஒன்றாகும். தேவனுடைய வார்த்தை என்பது சத்தியமாகும்; அதாவது தேவனுடைய ஜனங்கள் புசிப்பதற்குரிய அப்பமாக இருக்கின்றது. ஆனால், தேவனுடைய ஜனங்கள் புளிப்பில்லாத அப்பத்தை அதாவது, மனித கோட்பாடுகள் என்னும் புளிப்பினால் கலப்படம் பண்ணப்படாத தூய்மையான அப்பத்தைப் பயன்படுத்த வேண்டும். தூய்மையான அப்பமானது தூய்மையான சத்தியமாகும்.
இந்த எச்சரிப்பு அவசியமானது. காரணம், பரிசேயர்கள், யூதர்கள் மத்தியிலே மிகவும் பரிசுத்தமான அமைப்பினராகக் காணப்பட்டு வந்தனர். யூதர்களிலேயே மிகுந்த உண்மையும், மிகுந்த பக்தி வைராக்கியமும், மிகுந்த திறமையும் உள்ளவர்கள் இவ்வமைப்பிடத்திற்குக் கவரப்படுவது இயல்பே. இவ்வமைப்பானது, அது உன்னதமான மற்றும் சிறப்பானவைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது என்று கூறும் காரியங்களும், அதன் போதனைகளும் மிகவும் அபாயமானதாகும். காரணம், அதன் அப்பம், அதன் சத்தியம், மனித பாரம்பரியங்களுடன் கலக்கப்பட்டுள்ளதாக இருக்கின்றது; மேலும், அதன் அப்பம், உடல் நலக்குறைவையும், அஜீரணத்தையும் ஏற்படுத்துகின்றது. மேலும், அதை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவருடைய மனங்களையும் விஷமுமாக்கி விடுகின்றது.
இதே பாடம் இன்றுள்ள நமக்கும் கூடப் பொருந்துகின்றதாய் இருக்கின்றது. கிறிஸ்தவ சபை பிரிவுகளில், ஏதேனும் சபைப் பிரிவானது மிகவும் பரிசுத்தமாய் இருப்பதாக கூறிக்கொண்டாலும் அல்லது ஒருவேளை பரிசுத்தமாய் இருப்பினும் கூட, நாம் அவர்களது புளித்த மாவை, அதாவது தவறான உபதேசத்தைக் குறித்து ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். அதாவது அதற்கு விழிப்பாய் இருந்து, அதனை தவிர்த்துவிட வேண்டும். தேவனுடைய வார்த்தைகளில் உள்ள தூய்மையான சத்தியமே, நம்மை “”இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்கள் ஆக்குவதாக” இருக்கின்றது மற்றும் அப்போஸ்தலர் கூறுவது போன்று தூய்மையான சத்தியமே, நம்மை “”எல்லாவற்றிலும், எப்பொழுதும் சம்புரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயும்” ஆக்குகின்றது (2 கொரி 9:8; தீத்து 3:15).
ஆகவே, அனைத்துப் பிரிவுகளிலும் காணப்பட்ட கிறிஸ்தவர்களாகிய நாம், நமது மனங்களையும், நமது இருதயங்களையும், பரம பிதாவின் சித்தத்தைச் செய்வதற்குமென, நமது கர்த்தரும், மீட்பருமானவருக்கு முழுமையான அர்ப்பணம் பண்ணுவதில் இணைத்துக் கொள்வோமாக. இன்னுமாக, கடந்த காலங்களில் கர்த்தருடைய ஜனங்களை 600 பிரிவினர்களாகப் பிரித்ததில் முக்கிய பங்கு வகிக்கும், பல்வேறு விசுவாசப் பிரமாணங்களாகிய, சகல புளிப்பிலிருந்தும் சுதந்திரமாகவும், தெளிவடைந்தவர்களாகவும் விலகி நிற்போமாக. எங்குமுள்ள தேவனுடைய ஜனங்கள் மத்தியில் காணப்படும் இந்த மார்க்கப்பேதங்களை/பிரிவினைகளை நாங்கள் எதிர்த்துப் பேசுகின்றோம். மற்றும் ஒரே கர்த்தர் கீழும், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம் கீழும், ஒரே தேவனும், ஒரே பிதாவின் கீழும், பரலோகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள முதற்பேறானவர்களாகிய ஒரே சபையின் கீழும் உண்மையான இருதயங்கள் இணைவதையே நாம் அதிகமதிகமாய் வாஞ்சிக்கின்றோம்.
பரிசேயருடைய புளித்தமாவு குறித்த இயேசுவின் உவமையான வார்த்தைகளின் அர்த்தத்தைச் சீஷர்கள் மிகவும் மந்தத்தனமாகத் தவறவிட்டார்கள். சீஷர்கள் உடனடியாகச் சொல்லர்த்தமான புளிப்பையும், சொல்லர்த்தமான அப்பத்தையும் எண்ணிக்கொண்டு, தங்களுடன் ஓர் அப்பத்தை மாத்திரம் எடுத்து வந்துள்ளதைச் சீஷர்கள் கவனித்து, இதன் காரணமாகத்தான் தங்களை ஆண்டவர் கடிந்துக்கொள்வதாக அனுமானித்துக் கொண்டார்கள். சீஷர்களது புரிந்துக்கொள்ளுதலின் கண்களாகிய மனக்கண்கள் மிக அகலமாகத் திறக்கப்படவில்லை. இவ்வளவு போதனைகளைத் தாம் அவர்களுக்குக் கொடுத்தப் பிற்பாடுங்கூட, தம்முடைய வார்த்தைகளின் கருத்தைப் புரிந்துக்கொள்வதில் இவ்வளவுக்கு மெதுவாகக் காணப்படுகின்றார்களே எனச் சீஷர்களை உடனடியாகக் கடிந்துக் கொண்டார்.
ஐந்து அப்பத்தைக் கொண்டு ஐயாயிரம் பேருக்குப் போஷித்த அற்புதத்தைச் சீஷர்களுக்கு நினைப்பூட்டி, மீதியானவைகளை எத்தனை கூடைகளில் சேர்த்துக் கொண்டதாகக் கேள்விக் கேட்டார். அவர்கள் “”பன்னிரண்டு” என்று பதிலளித்தனர். பின்னர் ஏழு அப்பங்களைக் கொண்டு நான்காயிரம் பேருக்குப் போஷித்த அற்புதத்தை நினைப்பூட்டி, மீதியானவைகளை எத்தனை கூடைகளில் சேர்த்துக் கொண்டார்களெனக் கேள்விக் கேட்டார். அவர்கள் “”ஏழு” என்று பதிலளித்தனர். பின்னர் அவர்கள் ஓர் அப்பம் மாத்திரம் கொண்டிருந்ததற்காக, தாம் அவர்களிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கவில்லை என்று ஏன் அவர்கள் புரிந்துக்கொள்ளவில்லை என்றும், அப்பத்தை உண்டுபண்ணுவதற்குத் தமக்கு முன்பு வல்லமை இருந்ததானால், இன்னமும் உண்டுபண்ண வல்லமை தமக்கு உண்டு என்று புரிந்துக்கொண்டு, அவர்கள் குறைவாக அப்பம் வைத்திருப்பதை, தாம் குறிப்பிடவில்லை என்பதை ஏன் புரிந்துக்கொள்ளவில்லை என்றும் இயேசு அவர்களிடம் கேட்டார்.
இதே காரியம் வேத ஆராய்ச்சியில் காணப்படும் கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் இன்று அடிக்கடி பார்க்கப்படலாம்; நமது கர்த்தருடைய போதனைகளின் கருத்தானது, சில சிறு முக்கியத்துவமற்ற விஷயங்கள் மீது மாத்திரம் ஈடுபாடுடைய மனங்களையுடைய சிலரால் முற்றிலும் புரிந்துக்கொள்ள தவறப்படுகின்றது. இதற்கான தீர்வு, தேவனோடு கொஞ்சங்கூட நெருங்கி நடப்பதேயாகும்; கொஞ்சங்கூட கவனமாக தெய்வீக வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு, ஆண்டவரின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் பின்னடியார்களென ஆண்டவருடைய மற்றும் அவரது வேலையினுடைய ஆவியை அடைய வேண்டும். இவ்விஷயத்தில் “”முட்கள்” எனும் பிரச்சனையையும் நாம் மறந்துவிட வேண்டாம்; வேறொரு உவமையானது, “”முட்கள்” எவ்வாறு தேவனுடைய ஜனங்களின், இருதயங்களையும், மனங்களையும் அடிக்கடித் தாக்கி, சத்திய வார்த்தையானது, அதற்குரிய பலனை இவர்களிடத்தில் கொண்டு வருவதைத் தடுக்கின்றது என்று தெரிவிக்கின்றது. இயேசு கூறியுள்ள பிரகாரம், “”முட்கள்” இந்த ஜீவியத்தின் கவலைகளாகவும், ஐசுவரியத்தின் மயக்கங்களாகவும் காணப்படுகின்றது.
“”பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டு வந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக் கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார். அவன் ஏறிட்டுப் பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான். “”பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்” (மாற்கு 8:22-25). இப்படியான ஒருமுறையை இயேசு கையாண்டதற்கான நோக்கம், நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், அநேகமாக அம்மனுஷன் விசுவாசத்தில் குறைவுப்பட்டிருந்தான் என்றும், விசுவாசத்தை, இயேசு படிப்படியாக அம்மனுஷனுக்குள் வளர்த்தினார் என்றும் நாம் எண்ணுகின்றோம். இந்த நமது கருத்தை நாம், அம்மனுஷன் ஏறெடுத்துப் பார்த்து, கொஞ்சம் நேரமாகப் பார்த்துக் கொண்டே இருந்து, பின்னர் அனைத்தையும் தன்னால் தெளிவாகப் பார்க்க முடிகின்றது என்றுள்ள பதிவிலிருந்தே எடுத்துக்கொள்கின்றோம். அம்மனுஷன் அவனது சித்தத்தின் முழு வல்லமையையும் செயல்படுத்த வேண்டும் என்றும், காரியங்களைப் பார்ப்பதற்குப் போராடவும் /முயற்சிக்கவும் வேண்டும் என்றும் கர்த்தர் எதிர்ப்பார்த்தார்.