R3803 (page 200)
லூக்கா 10:25-37
“”இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.” – மத்தேயு 5:7
இயேசு பொது ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தைப் போதித்து விளக்குபவராகக் காணப்பட்டார், எனினும் அவர் தம்மை யூதர்கள் மத்தியிலுள்ள வேதபாரகர்கள் மற்றும் வேத சாஸ்திரிகளுடன் இணைத்துக்கொள்ளவில்லை/காண்பிக்கவில்லை. அவர்களிடமிருந்து நியாயப்பிரமாணத்தைக் குறித்த வேறுபட்ட கண்ணோட்டத்தை இயேசு கொண்டிருந்தார், மற்றும் அவர் வேறுவிதத்தில் கற்றுக்கொடுப்பவராகவும் காணப்பட்டார். பொது/சாமானிய ஜனங்கள் அவர் கூறுவதை மகிழ்ச்சியுடன் கேட்டனர்; ஆனால் யூத வேத சாஸ்திரிகளோ, பொது ஜனங்களின் கவனத்தை ஈர்த்ததுமில்லை அல்லது பொது ஜனங்களுக்குப் போதிக்க முற்பட்டதும் இல்லை, மாறாக அவர்கள், அவர்களைப் போன்றவர்களுடனும், இன்னும் ஜனங்கள் மத்தியில் துறவிகளென காணப்படும் பரிசேயர்களுடனும், தெய்வீக நியாயப்பிரமாணம் தொடர்புடைய மாபெரும் பிரச்சனைகளை விவாதித்தவர்களாய் மாத்திரமே காணப்பட்டனர்.
கர்த்தர் கூறுவதைப் பொது ஜனங்கள் மகிழ்ச்சியுடன் கேட்டாலும், அவருடைய போதனைகளை அவர்கள் தெளிவாகப் புரிந்துக்கொள்ளவில்லை, காரணம் திரளானவர்களாய் இருக்கும் ஜனக்கூட்டத்தாருக்குப் புரியாமல் இருக்கத்தக்கதாகவும், பக்தி வைராக்கிமுள்ள உத்தம இஸ்ரயேலர்கள் இன்னும் அதிகமாய்க் கேட்பதற்கும், விசாரிப்பதற்குமென விசேஷமாய் ஈர்க்கப்படத்தக்கதாகவுமான நோக்கத்திற்கென்று, அவர் ஜனங்களிடம் உவமைகளினாலும், மறைபொருள்களினாலும்தான் பேசினார். இந்தப் பக்திவைராக்கியமுள்ள உத்தம இஸ்ரயேலர்களுக்கே, அவர் மாற்கு 4:11-ஆம் வசனத்தின் வார்த்தைகளைக் கூறி, உவமைகளை விவரித்தார். எனினும் ஆண்டவருடைய பாணியில் (style) ஏதோ ஒன்று மிகவும் கவரும் வண்ணமாக இருந்தபடியினால், அவருடைய போதனைகளை முழுமையாய்ப் புரிந்துக்கொள்ளாதவர்களும் கூட, “”அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை” என்று கூறினார்கள்; இன்னுமாக, “”அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டனர்” என்றும் நாம் வாசிக்கின்றோம்; இன்னுமாக, “”அவர் வேதபாரகரைப்போல் (தெளிவில்லாமல்) போதியாமல், அதிகாரமுடையவராய் (தாம் பேசும் காரியத்தைப் பற்றி முழுவதும் அறிந்தவராய்) அவர்களுக்குப் போதித்தபடியால், ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்” என்றும் நாம் வாசிக்கின்றோம் (யோவான் 7:46; லூக்கா 4:22; மத்தேயு 7:29).
இதன் காரணமாகவேதான், இயேசுவின் மீது பொறாமை, நியாயசாஸ்திரிகள் மத்தியில் எழும்பிற்று. அவர்களைப் பொறுத்தமட்டில் அவர் போட்டிப் போடுகின்ற போதகராக இருந்தார்; ஆகவே கல்லாதவர்களென இவர்களால் அறியப்பட்டிருந்த இயேசுவின் பின்னடியார்கள் முன்பாக, இயேசு கேலிக்கு இடமாகத்தக்கதாக, அவரைச் சிக்க வைக்க இவர்கள் நாடினார்கள். ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் இவர்கள் வெற்றிக் காணவில்லை; பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கர்த்தருடைய ஞானமானது இவர்களை மிஞ்சி காணப்பட்டது; இவர்களுடைய வாக்குவாதத்தில் இவர்களையே இயேசு சிக்க வைத்தார். இதற்கு இந்த நம்முடைய பாடங்கூட ஓர் உதாரணமாகும். நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கண்டிப்பான நீதியின் விஷயங்களுக்கு எதிராக, அன்பு மற்றும் இரக்கம் தொடர்புடைய நம்முடைய கர்த்தருடைய போதனைகள் காணப்படுகின்றது என நியாயசாஸ்திரிகளில் ஒருவர் எண்ணிக்கொண்டு, இயேசுவை ஒரு கேள்வியினால் அகப்படுத்தும்படிக்கு நாடினார். நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகள் என்ன என்று இயேசுவிடம் கேட்க வேண்டுமென அவர் முடிவு பண்ணியிருந்தார். “”தேவனைப் போன்று அன்பான, பரந்த மனப்பான்மையுடன் கூடிய குணத்தை வெளிப்படுத்துகின்றவர்கள் அனைவருக்கும் நித்திய ஜீவன் கொடுக்கப்படும்” என்றோ அல்லது “”என்னுடைய சீஷனாகி, என்னுடைய போதனைகளைக் கைக்கொள்வீரேயானால் நீர் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளலாம்” என்றோ இயேசு பதிலளிப்பார் என்று அந்த நியாயசாஸ்திரி எதிர்ப்பார்த்தார். இப்படியாக இயேசு பதில் கொடுக்கும் தருணத்தில், இயேசுவின் போதனைகள் நியாயப்பிரமாணத்தை இரத்துச் செய்கின்றது என்றும், நியாயப்பிரமாணத்தை அவமாக்கிவிட்டது என்றும், அவர் நியாயப்பிரமாணத்தைப் புறக்கணித்துவிட்டார் என்றுமுள்ள உண்மையின் மீது கவனத்தை ஈர்க்க வேண்டுமென்று நியாயசாஸ்திரி எண்ணியிருந்தார்.
இந்தப் நியாயசாஸ்திரியே, தன் வாயினாலேயே பதிலளிக்க நமது கர்த்தர் பண்ணினார்; “”நீர் நியாயப்பிரமாணத்தைப் போதிப்பவர்; நித்திய ஜீவன் பெறப்படுவது தொடர்புடைய விஷயத்தில் நியாயப்பிரமாணம் என்ன கூறுகின்றது என்று நீரே எங்களுக்குச் சொல்லும்” என்ற விதத்தில் இயேசு அம்மனுஷனிடத்தில் கூறினார். இது கேள்விக்கேட்கும் பதிலாக இருந்தது; மேலும் இதற்கு நியாயசாஸ்திரி பதில் கூற முழு ஆயத்தத்துடன் காணப்பட்டார், காரணம், “”நியாயப்பிரமாணம் சொல்கிறதென்ன?” என்பது நியாயப்பிரமாணத்தைக் குறிப்பிடும் யூதர்கள் மத்தியில் காணப்பட்ட பொதுவான ஒரு கேள்வியாக விளங்கி வந்தது (உபாகமம் 6:5; லேவியராகமம் 19:18). இக்கேள்விக்கான இதே பதிலைத்தான் சற்று முன்பு நமது கர்த்தரால், அவரிடம் வந்த ஐசுவரியமான வாலிபனுக்குக் குறிப்பிடப்பட்டது. “”உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் அன்புகூருவாயாக் உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்று நன்கு அறியப்பட்டிருந்த நியாயப்பிரமாணத்தின் கொள்கையை, நியாயசாஸ்திரி சொன்னார். இயேசு அவரை நோக்கி, “”நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய்; அப்பொழுது பிழைப்பாய்” என்றார்.
ஏன் இயேசு நியாயப்பிரமாணத்தை மேற்கோளிட்டுக் குறிப்பிட்டார்? ஏன் இந்த வாய்ப்பை, அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்குப் பயன்படுத்தவில்லை? “”என் மீது விசுவாசம் வைத்து, பின்னர் என்னுடைய சீஷனாக என்னுடைய அடிச்சுவடுகளில் நடக்கத்தக்கதாக முழுமையான ஓர் அர்ப்பணிப்பைப் பண்ணுவதே நித்திய ஜீவனை அடைவதற்கான ஒரே வழி” என ஏன் இயேசு நியாயசாஸ்திரியிடம் கூறவில்லை? “”மனுஷன் இரட்சிக்கப்படத்தக்கதாக, இயேசுவின் நாமத்தையல்லாமல், வேறே நாமம் வானத்தின் கீழ்க் கொடுக்கப்படவில்லை” என்று ஏன் இயேசு, அம்மனுஷனிடம் கூறவில்லை?; “”குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவனில்லாதவன்” என ஏன் இயேசு அம்மனுஷனிடம் கூறவில்லை?” (அப்போஸ்தலர் 4:12; 1 யோவான் 5:12).
அப்படி ஒருவேளை இயேசு பதிலளித்திருந்திருப்பாரானால், அது அந்த நியாயசாஸ்திரி இருந்த மனநிலைக்கு மிகவும் பலமான ஆகாரமாய் இருந்திருக்குமென நாம் பதிலளிக்கின்றோம். அம்மனுஷன் இயேசுவின் மூலமாக தெய்வீக இரக்கத்தை எதிர்ப்பார்க்க ஆயத்தப்படுவதற்கு முன்னதாக, முதலாவது அம்மனுஷன், தெய்வீக நியாயப்பிரமாணம் முழுவதையும் தன்னால் [R3803 : page 201] கைக்கொள்ள முடியாமல் இருக்கும் இயலாமையை உணர்ந்துக்கொள்வது அவசியமாய் இருந்தது. பரிசேயர்கள் மற்றும் நியாயசாஸ்திரிகளைப் பொறுத்தமட்டில், பிரச்சனை என்னவெனில், இவர்கள் தெய்வீக நியாயப்பிரமாணமானது மிகவும் உயர்வானதாகவும், பிரமாண்டமானதாகவும், பூரணமானதாகவும் இருப்பதை உணர்ந்து, அதன் நிபந்தனைகளைத் தங்களுடைய பெலவீனமான மற்றும் விழுந்துபோன நிலைமையில் பூரணமாய்ச் சந்திக்க இயலாது என்பதை அறிந்திருந்தும் மற்றும் தாங்களும் மற்ற மனிதர்களைப் போலவே மரிக்கின்றனர் என்பதையும் நன்கு அறிந்திருந்தும், இவர்கள் தாங்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வது போன்று நடித்துக்கொண்டிருப்பதும், இன்னுமாக இவர்கள் நியாயப்பிரமாணத்தினால் நீதிமானாக்கப்பட்டுள்ளதுபோல் நடித்துக்கொண்டிருப்பதும் மற்றும் இன்னுமாக நியாயப்பிரமாணத்தினால் தங்களுக்கு நித்திய ஜீவன் கிடைப்பது போன்று நடித்துக்கொண்டிருப்பதுமேயாகும்.
சில ஜனங்கள், தேவன் ஒரு பரிபூரணமான (கொள்கையை) அளவுகோலைக் கொண்டிருக்கின்றார் என்றும், இந்தக் கொள்கைக்கு/அளவுக்கோலுக்கு இசைவாய் வராமல் எவரும் நித்திய ஜீவனை எதிர்ப்பார்க்க முடியாது என்றும், ஒப்புக்கொள்வதற்கு ஆயத்தமாய் இன்னும் காணப்படுகின்றனர்; யூதர்கள் மத்தியில் அன்று காணப்பட்டது போன்று, இன்றும் அநேகர், தாங்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான தெய்வீகக் கொள்கைக்கு/அளவுகோலுக்கு ஏற்ப ஓரளவுக்கு காணப்படுகின்றனர் என நம்புவதன் மூலம், தங்களுக்காக மீட்பின் தொகையை அளிப்பதற்குரிய ஒரு மீட்பருக்காக, ஓர் இரட்சகருக்காக எதிர்நோக்கமாலும், தங்களுடைய கறைகளை மூடிப்போடுவதன் மூலம், பிதாவுடன் தங்களை ஒப்புரவாக்கி, பாவங்களுக்கான மன்னிப்பையும், பாவங்களிலிருந்து பாதுகாப்பையும் தங்களுக்கு அருளக்கூடிய ஒரு மீட்பரை எதிர்நோக்காமலும் காணப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் அனைவரும் தெய்வீக நீதிக்கு ஓர் அளவுகோல்/கொள்கை இருக்கின்றது, அது மிகவும் உயரிய அளவுகோல் என்றுள்ள பாடத்தை முதலாவதாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் தேவனுடைய கொள்கை/அளவுகோல் எவ்வளவு உயர்வானதாக இருக்கின்றது என்றும், அந்தக் கொள்கைக்கு/அளவுகோலுக்கு ஏற்ப தாங்கள் காணப்படத்தக்கதாக தங்களால் ஏறெடுக்கும் சிறந்த பிரயாசங்கள் எவ்வளவு பூரணமற்றது என்றும் காண்கையில், இவர்கள் நித்திய ஜீவனை அடையும் விஷயத்தில் கர்த்தரிடமிருந்து உதவிக்காக நோக்க ஆரம்பிப்பார்கள். இந்த ஒரு பாடத்தைத்தான் அந்த நியாயசாஸ்திரி கற்றுக்கொள்ள வேண்டுமெனக் கர்த்தர் விரும்பினார், ஆகவேதான் நியாயப்பிரமாணம் எதிர்ப்பார்ப்பது என்ன என்பதற்கான பதில் வார்த்தைகளை அம்மனுஷனிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
தேவனை ஒருவன் தன்னுடைய முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் அன்புகூருவது என்பது எவற்றையெல்லாம் உள்ளடக்கும் என வாக்குவாதம் பண்ணிட நியாயசாஸ்திரி முற்படவில்லை. சிலர் தேவனை அன்புகூருவதாகவும், அவருக்கு ஊழியம் புரிவதாகவும் கூறுவதுண்டு. வேறுசிலர் இவர்கள் இப்படிக் கூறும் விஷயத்தில் எதையும் நிரூபிக்க முடியாமல் இருந்தும், அக்கூற்றின் உண்மையைக் குறித்துச் சந்தேக நிலையிலேயே காணப்படுவார்கள்; ஏனெனில் கர்த்தரும், அந்தந்த மனுஷரும்தான் சரியாக தன்தன் இருதயத்தைக் கணிக்க முடியும். இந்த அன்பு பற்றின விஷயம் ஏதோ முக்கியத்துவம் அற்றது போன்றும், அது ஏதோ தெரிந்த விஷயம் போன்றும், அது குறித்த மாபெரும் கேள்வியை நியாயசாஸ்திரி கேட்காமல் விட்டுவிட்டார்; ஆனால் ஒருவேளை நியாயசாஸ்திரி கர்த்தருக்கு அப்படி ஒரு அர்ப்பணிப்புப் பண்ணுவது என்பது குறிப்பது என்ன? எனக் குறைக்காணும் விதத்தில் ஆராய முற்பட்டிருப்பாரானால், அந்தக் கொள்கைக்கு/அளவுகோலுக்கு, தான் மிகவும் குறைவுபட்ட நிலையில் காணப்படுவதைக் கண்டிருப்பார்.
இக்கேள்வியை நாம் தவிர்த்துவிடாமல் காணப்படுவோமாக அல்லது முக்கியத்துவமற்றதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்போமாக கர்த்தருக்காக நாம் கொண்டிருக்கும் நம்முடைய அன்பானது, வீட்டிலும், குடும்பத்திலுமுள்ள பிரியமானவர்கள் மீதான நம்முடைய அன்பைக் காட்டிலும் மற்றும் முழு உலகத்தார் மீதான நம்முடைய அன்பைக் காட்டிலும் மிஞ்சிக் காணப்படத்தக்கதாக, நம்முடைய அன்புகள்/நேசங்கள் அனைத்தும் கர்த்தர்மேல் மையம் கொண்டிருப்பது என்பதே, கர்த்தரை நம்முடைய முழு இருதயத்தோடு அன்பு செய்வதைக் குறிப்பதாக இருக்கும் என்பதை நாம் அறியக்கடவோம். கர்த்தரை நம்முடைய முழு ஆத்துமாவோடு அன்புகூருவது என்பது, நம்முடைய முழு ஆத்துமாவோடும், நம்முடைய வார்த்தைகள், பார்வைகள் மற்றும் நம்முடைய துதிகள் மூலமாக மாத்திரம் நம்முடைய அன்பு வெளிப்படுவோதடல்லாமல், இன்னுமாக நம்முடைய ஊழியங்கள், ஜீவியத்தின் நடத்தைகள் யாவும், நம்முடைய அன்பின் விஷயத்திலும், ஜீவியத்தின் அனைத்துக் காரியங்களிலும் தேவனுக்கே முதலிடம் என்பதை சாட்சிப் பகருவதாக இருப்பதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. மூன்றாவதாக கர்த்தரை நம்முடைய முழுப் பலத்துடன் அன்புகூருவது என்பது, தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தும் விஷயத்திலும், அவருடைய சித்தமென நாம் புரிந்துக்கொள்ளும் அவருடைய நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும் விஷயத்திலும், [R3804 : page 201] எல்லாவற்றிலும் நாம் பயன்படுத்தத்தக்கதாக ஆயத்தமாயிருக்கும் வண்ணமாக நம்முடைய நேரமும், தாலந்தும், செல்வாக்கும், நமது தேவனுக்குப் பயன்படத்தக்கதாகக் காணப்படுவதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. நான்காவதாக நமது கர்த்தரை நம்முடைய முழு மனதுடன் அன்புகூருவது என்பது, கர்த்தரைப் புரிந்துக்கொள்ளும் விஷயத்திலும், அவருடைய தெய்வீகப் பிரமாணங்களைப் புரிந்துக்கொள்ளும் விஷயத்திலும், அப்பிரமாணங்களுடன் இசைவாய் வரும் விஷயத்திலும் அறிவு சார்ந்த பிரயாசம் எடுப்பதின் மூலம், “”தேவனைத் தொழுதுகொள்பவர்கள், ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும்” என்று கர்த்தர் கூறினதற்கு ஏற்ப, நம்முடைய ஊழியமும், தொழுதுகொள்ளுதலும் புத்தியுள்ளதாய் இருப்பதைக் குறிக்கின்றதாய் இருக்கும்.
கர்த்தருக்கு நியாயப்பிரமாணத்தைப் பற்றிப் பதில் கூறுகையில், “”உன்னில் நீ அன்புகூருவது போல, பிறனிலும் அன்புகூருவாயாக” எனும் நியாயப்பிரமாணத்திற்கு, தான் அளித்துள்ள பதிலின் பின் பாகத்தை, தான் மீறுவதாக தன்னுடைய அன்றாட நடத்தையானது தன்னைக் குற்றவாளி எனத் தீர்க்கும் என்று நியாயசாஸ்திரி உணர்ந்துக்கொண்டார். இது, தான் தாக்கப்படுவதற்கு ஏதுவான கட்டம் என்றும், தன்னுடைய பதிலைக்கொண்டே, தன்னைக் கர்த்தர் சிக்கவைத்துவிட்டார் என்றும் நியாயசாஸ்திரி உணர்ந்துக்கொண்டார். நியாயசாஸ்திரி, தான் தன்னில் அன்புகூருவது போன்று தன்னுடைய அயலானை, தான் எவ்வாறு தன்னுடைய அனுதின ஜீவியத்தில் அன்புகூரவில்லை என்பதையும், தன்னைப்போன்ற வகுப்பாரிடமிருந்து, பொது ஜனங்களை, ஆயக்காரர்களை மற்றும் பாவிகளை வேற்றுமையாக, தான் பார்த்ததையும், தற்போது இயேசுவைச் சிக்கவைப்பதற்கு, தான் ஏறெடுத்துள்ள பிரயாசத்திலும், தான் தன்னில் அன்புகூருவது போன்று தன்னுடைய அயலானாகிய இயேசுவில் அன்புகூராமல், இயேசுவை எதிராளி போன்று நடத்துவதையும் நியாயசாஸ்திரி அறிந்திருந்தான். தன்னுடன் காணப்படும் வகுப்பாரிலுள்ள மற்றவர்களைப் போலவே தானும், தன்னுடைய சொந்த இனத்திலுள்ள கீழ்மட்ட ஜனங்களிடம் திமிர்த்தனத்தோடும், வெறுத்து ஒதுக்கும் மனப்பான்மையோடும் காணப்படுவதை உணர்ந்தார். வேதபாரகர் நியாயப்பிரமாணத்தில் கைத்தேர்ந்தவராய்க் காணப்பட்டிருந்தார். தங்கள் வகுப்பாரைச் சேர்ந்தவர்களை, தங்களைப் போன்ற வாழ்க்கை மட்டத்தில் காணப்படுபவர்களைத்தான், நியாயப்பிரணமாணத்தின்படி, தங்களில் அன்புகூருவது போன்று, தாங்கள் அன்புகூரப்பட வேண்டிய அயலார்கள் என்று பரிசேயர்களும், வேதபாரகர்களும் கொண்டிருந்த அதே விளக்கத்தைத்தான் நியாயசாஸ்திரியும் கொண்டிருந்தார். ஆகவே மிகுந்த நம்பிக்கையுடன், “”எனக்குப் பிறன் யார்?” என்று இயேசுவுக்குப் பதில் கூறினார். அதாவது, “”இவ்விஷயத்தில் தான் நாம் வேறுபடுகின்றோம் என நான் எண்ணுகின்றேன். என்னுடைய வகுப்பைச் சேர்ந்தவர்களை நான் அன்புகூர்ந்து, மதித்து, உறவுகொண்டிருந்து, மற்றவர்களை ஏறக்குறைய வெறுத்து ஒதுக்கும்போதுதான், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதாக நான் கருதுகின்றேன். எப்படி நீர் மோசேயின் நியாயப்பிரமாணத்தை வேறுமுறையில் செயல்படுத்துகின்றீர்? ஒவ்வொருவரும் தன்னுடைய வகுப்பில் உள்ளவர்களையே தனது அயலானாகக் கருதி, அவர்களை அன்புகூர்ந்து, அவர்களோடு ஒத்துழைக்க வேண்டுமே ஒழிய, வெளி உலகத்தில் காணப்படும் மற்றவர்களுடன் அல்ல என்றுதான் நியாயப்பிரமாணம் தெரிவிக்கின்றது என்பதை நீர் ஒப்புக்கொள்வீர் என்று நான் எண்ணுகின்றேன்” என்றவிதத்தில் நியாயசாஸ்திரி இயேசுவினிடத்தில் பேசினார்.
பொதுவாய்ச் சம்பவிக்கக்கூடிய காரியம் ஒன்றை வைத்து, அதாவது நியாயசாஸ்திரிகள் அறிந்திருக்கிற ஒன்றைக் கர்த்தர் வைத்து, வியத்தகு ஞானத்துடன் ஓர் உவமையைச் சித்தரித்தார். எருசலேமுக்கும், எரிகோவுக்கும் இடையேயுள்ள ஒரு பாதையைக் காட்சியில் முன் வைத்தார்; அது ஒரு குறுகிய வழிநடைப்பாதையாய் இருந்தது, சில இடங்களில் மிகவும் செங்குத்தாகவும் காணப்பட்டது, பாறை இடுக்குகளும் காணப்பட்டது; இது கொள்ளையர்கள் காணப்படும் பகுதியாம்; இந்தக் கொள்ளையர்கள், மலைகளிலுள்ள திரளான குகைகளில் வாழ்ந்து, வழிப்போக்கர்களைத் தாக்குபவர்களாக இருந்தனர். இன்றும்கூட எரிகோவுக்கு நேராகப் போகும் பிரயாணத்தின்போது, பிரயாணிகள் ஆயுதம் தரித்த அரேபியர்களைத் துணைக்குக்கொண்டு செல்வது வழக்கமாய் இருக்கின்றது. இந்தப் பாதையில் போய்க் கொண்டிருந்த ஒரு பிரயாணியை, கொள்ளையர்கள் தாக்கி, அவனை அடித்து, குற்றுயிராகப் போட்டு, அவனுடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டதாக நமது கர்த்தர் சித்தரித்தார். ஓர் ஆசாரியன் அவ்வழியில் போனதாகவும், அம்மனுஷனைக் கண்டு, தானும் கொள்ளையர்களால் தாக்கப்பட்டுப் போகாதபடிக்கு, விலகிப்போய்விட்டான் என்றும், இதைப் போலவே அவ்வழியே வந்த லேவியன் ஒருவன், உதவியளிப்பதற்கு நேரத்தைச் செலவிட விருப்பம் இல்லாமல் விலகிபோய்விட்டான் என்றும் கர்த்தர் சித்தரித்தார். பின்னர் ஒரு சமாரியன் அவ்வழியாக வந்தான் என்றும், அவன் மனதுருகி, காயமடைந்த மனுஷனுக்கு உதவி, அம்மனுஷனுடைய காயங்களைக் கட்டி, அவனைத் தன்னுடைய சுயவாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அவனை அருகே உள்ள சத்திரத்தில் கொண்டுபோய், இரவு முழுவதும் அவனைப் பராமரித்து, இன்னுமுள்ள பராமரிப்பிற்காக இன்னும் சில ஏற்பாடுகளைச் சமாரியன் பண்ணுவித்தான் என்று நமது கர்த்தர் சித்தரித்தார்.
ஜனங்களுக்குக் கற்பிப்பதற்காகவும், ஜனங்களை, கர்த்தருடைய வழியில் வார்த்தையினாலும், மாதிரியினாலும் வழிநடத்துவதற்காகவும், கர்த்தருடைய பரிசுத்தமான ஊழியத்திற்கென விசேஷமாகப் பிரித்தெடுக்கப்பட்டவர்கள் லேவியர்கள் என்பதும், இதே கோத்திரத்தைச் சேர்ந்த ஆசாரியர்கள் எனப்படுபவர்கள், கர்த்தருக்கென்றும், இஸ்ரயேல் ஜனங்களுக்கென்றும் மிக உன்னதமான ஊழியத்திற்குக் கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட விசேஷித்த குடும்பத்தாராய் இருக்கின்றனர் என்பதும் நினைவில் கொள்ளப்படும்போதுதான், நமது கர்த்தருடைய இவ்வுவமையின் அழுத்தத்தைப் பார்க்க முடிகின்றது. இன்னுமாக சமாரியர்கள் கலப்பின ஜனங்கள் என்பதும், சமாரியர்களை யூதர்கள் இழிவாகக் கருதினார்கள் என்பதும், யூதர்களும், சமாரியர்களும் எவ்விதமான சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை என்பதும் நினைவில் கொள்ளப்படும்போது, இவ்வுவமையானது மிக உயர்வானதாகத் தோன்றுகின்றது (யோவான் 4:9).
[R3804 : page 202]
இவைகளையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, “”இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது” என ஆண்டவரால் கேட்கப்படும் கேள்வியைக் கவனியுங்கள் (லூக்கா 10:36). நியாயசாஸ்திரி சொல்வதற்கு ஒரே ஒரு பதில் இருந்தது. உவமையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள லேவி வகுப்பாரைச் சேர்ந்தவனாக இந்த நியாயசாஸ்திரி காணப்பட்டார். “”அதற்கு அவன்: அவனுக்கு இரக்கம் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படி செய் என்றார்” (லூக்கா 10:37). அதாவது, “”போய் இரக்கம் காண்பி; உலகத்திலுள்ள எந்த மனுஷனும், நண்பனோ, சத்துருவோ அவன் உன்னுடைய அயலான் என்றும், அவன் உன்னால் உனக்கு வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் அன்புகூரப்பட வேண்டும் என்றும், ஊழியம் புரியப்பட வேண்டும் என்றும் போய்ப் புரிந்துக்கொள். அவன் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகின்றாயோ, அதை நீயும் அவனுக்குச் செய்; உன்னில் நீ அன்புகூருவது போலும், உனக்கு நீ செய்வது போலும், உனக்கான கஷ்டமான சூழ்நிலையின் கீழ் அவன் உன்னில் அன்புகூர்ந்து, ஊழியம் புரிந்திட நீ விரும்புவது போன்றும், நீ அவனில் அன்புகூர்ந்து, அவனுக்குச் செய்திடுவாயாக.”
பொன்னான சட்டம் – SUB HEADING
கர்த்தருடைய ஜனங்களில் சிலர் மேற்கூறப்பட்டுள்ளபடி, நியாயப்பிரமாணத்தின் இந்தக் கோரிக்கையிலும், இதற்கான கர்த்தருடைய உவமையிலுள்ள விளக்கத்திலும் காணப்படும் முக்கியத்துவத்தை/அழுத்தத்தைத் தட்டிக்கழித்துவிடுகின்றனர்; அதாவது, “”காயமடைந்த மனுஷனுக்கு இரக்கம் பாராட்டின சமாரியன், உண்மையில் அம்மனுஷனுக்கு அயலானாய் இருக்கின்றான்; ஆனால் அம்மனுஷனுக்கு இரக்கம் காட்டிட மறுத்த ஆசாரியனும், லேவியனும் அம்மனுஷனுடைய அயலானாகக் கருதப்படக்கூடாது; ஆகவே, அம்மனுஷன் காயம் ஆறின பிற்பாடு, தனக்கு உதவின சமாரியனுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள வேண்டும். சமாரியனுக்கு ஊழியம் புரிவதில், தன்னுடைய ஜீவனை ஒப்புக்கொடுத்திடவும் விரும்பி காணப்பட்டிட வேண்டும். ஆனால் அயலான் போன்று செயல்படாத மற்ற இருவரையும் அம்மனுஷன் தன் அயலானாகக் கருதக்கூடாது, மற்றும் தன்னில் அன்புகூருவது போன்று அவர்களையும் அன்புகூர முற்படக்கூடாது” என்று கூறி, கர்த்தருடைய ஜனங்களில் சிலர், கர்த்தர் இவ்வுவமையில் விவரிக்கும் விஷயத்தின் அழுத்தத்தை/முக்கியத்துவத்தைத் தட்டிக்கழித்துவிடுகின்றனர்.
இப்படியாகக் கூறுவது என்பது நமது கர்த்தருடைய வார்த்தைகளைத் திரித்துக் கூறுவதாக இருக்கும். உண்மையில் யூதர்கள் மத்தியில் பரவலாய் இருந்த இந்த ஓர் எண்ணத்தை/கருத்தை எதிர்க்கவே கர்த்தர் நாடினார். ஏனெனில் அயலார்களுக்கு நேர்மையாய் இருக்க வேண்டும் என்றும், சத்துருக்களிடம் வெறுப்புடன் காணப்பட வேண்டும் என்றும்தான், யூதர்கள் மத்தியில் பழமொழியாகக் காணப்பட்டது. அயலான் என்னும் வார்த்தையானது அருகாமையில் காணப்படுபவர்களைக் குறிப்பதினால் அன்பிலும், உணர்விலும், விசுவாசத்திலும், சமய பிரிவிலும் அருகாமையில் காணப்படுபவர்கள்தான் அயலான் எனப் பொருத்திப் பார்க்கும் பழக்கத்தில் வேதபாரகரும், பரிசேயரும் காணப்பட்டனர். ஆகையால் பரிசேயன் ஒருவன் இன்னொரு பரிசேயனையும், வேதபாரகன் ஒருவன் இன்னொரு வேதபாரகனையும், ஒரே குலம் எனும் சுயநலமான ஆவியில் ஒருவரையொருவர் அயலான் என்று கருதி மகிழ்ச்சியுடன் ஊழியம் புரிவான்; இன்னுமாக வேறு வகுப்பாரிலுள்ள மற்றவர்களை ஏறக்குறைய எதிரிகளாகக் கருதிக்கொண்டு, ஒன்றில் அவர்களை அன்பு செய்யாமல் கடந்துச் செல்வான், அல்லது ஒருவேளை அவர்கள் தன்னை எதிர்க்கும் பட்சத்தில், அவர்களைப் பகைப்பவனாய்க் காணப்படுவான்.
இதைக் காட்டிலும் மேலான ஒரு கண்ணோட்டத்தைக் கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டிருக்க வேண்டும். மேற்கூறிய இக்கருத்தை எதிர்க்கும் நமது கர்த்தருடைய வார்த்தைகளை நாம் நினைவுகூருகின்றோம். “”உனக்கடுத்தவனை சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராய் இருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்” (மத்தேயு 5:43-45). நண்பர்களிடத்தில் மாத்திரமல்லாமல், சத்துருக்களிடத்திலும் இந்த ஓர் அன்பின் அளவுகோலை/கொள்கையை அடையாத எவரும், தேவனால் அவருடைய பிள்ளைகளெனக் கருதப்பட முடியாது.
நமது கர்த்தருடைய சீஷர்களாய் இருக்கும் அனைவரையும், ஆள வேண்டிய தெய்வீகச் சித்தத்தின் முழு விவரமாகிய பொன்னான சட்டத்தை நமது கர்த்தர் உருவாக்கினார். நமக்கு இரக்கம் பாராட்டி உள்ளவர்களையே நாம் சகோதர சகோதிரிகளென அன்புகூர வேண்டுமெனப் பொன்னான சட்டம் கூறவில்லை. நமது கர்த்தர், “உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே” என்று கூறினதன் மூலமாக இம்மாதிரியான சுயநலமான அன்பைக் கண்டிக்கின்றார் (லூக்கா 6:32). நமக்காக தங்களுடைய ஜீவியங்களை ஆபத்துக்குள்ளாக்கியவர்களை, நாம் நமது அயலார்களென அன்புகூர வேண்டும் என்று இந்த உவமை போதிப்பதாக விளக்கம் அளிப்பது என்பது, நம்முடைய ஆண்டவருடைய போதனைகளைவிட மிகவும், மதிப்பு இறங்கின விளக்கமாய் இருக்கும், மற்றும் இப்படி எண்ணுவது போன்றே பாவிகளும் எண்ணுகின்றனர் என்று ஆண்டவர் கூறியுள்ளார்.
மீட்பருடைய பின்னடியார்களாய் இருக்கும் நாம், மிகவும் உயர்வான (கொள்கை) அளவுகோலைக் கொண்டிருக்க வேண்டும்; கஷ்டமான நிலைமையிலும், நமது உதவி தேவைப்படும் நிலைமையிலும் இருக்கும் ஒவ்வொருவரையும், நம்முடைய அயலானாக நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்; அதாவது ஒருவேளை நாம் இப்படியாக ஒரு கஷ்டமான நிலைமையில் காணப்படும்போது அவன்/அவள் நமக்குச் செய்திட, நாம் எதையெல்லாம் விரும்புகின்றோமோ, அவற்றை நாமும் அவனுக்கு/அவளுக்குச் செய்யத்தக்கதாக ஆயத்தமாய் இருக்கும் அளவுக்கு அவன்/அவள் மீது அனுதாபத்துடன்கூடிய/இரக்கத்துடன் கூடிய அன்புகொண்டிருக்க வேண்டும். எந்தளவுக்கு அன்பின், இரக்கத்தின், ஒத்துழைப்பின், பெருந்தன்மையின், இரக்க உணர்வின் இந்த உயர்வான அளவுகோலானது/கொள்கையானது, நமது இருதயங்களைக் கட்டுப்படுத்தி, நம்முடைய நடத்தைகளை ஆளுகின்றதோ, அவ்வளவாய் நாமும் நிச்சயமாய்த் தேவனைப்போன்று அதிகமாயும், கிறிஸ்துவைப்போன்று அதிகமாயும் காணப்படுவோம்; காரணம் நன்றியற்றவர்கள் மீதும் கூடத் தேவன் இரக்கமுள்ளவராக இருக்கின்றார் என நமது அருமை மீட்பர் குறிப்பிட்டுள்ளார்.
அயலானை அன்புகூரும் விஷயத்தைக் காட்டிலும், கர்த்தர் தம்முடைய சீஷர்களாகிய நம்மில் எதிர்ப்பார்க்கின்றார். நம்முடைய சத்துருக்கள் மீது நமக்கு அனுதாபத்துடன் கூடிய அன்பாகிலும் காணப்பட வேண்டும்; இதினிமித்தம் நாம் அவர்களை வார்த்தையினாலோ, கிரியையினாலோ காயப்படுத்த முற்படாமல் இருப்பதோடு, நம்மால் முடிந்தமட்டும், அவர்களுக்கு உதவிடவும் நாம் ஆயத்தத்துடனும், மகிழ்ச்சியுடனும் காணப்பட வேண்டும். கர்த்தரை அன்புகூருவது போன்றோ, நமது சகோதர சகோதரிகளை அன்புகூருவது போன்றோ, நாம் நமது சத்துருக்களை அன்புகூர வேண்டும் எனும் அர்த்தத்தையே கர்த்தர் கொடுக்கின்றதாக நாம் எண்ணிவிடக்கூடாது. கர்த்தருக்காகவும், சகோதர சகோதரிகளுக்காகவும் நாம் கொண்டிருக்கும் அன்பு என்பது, மிகவும் உயரிய வகை அன்பாகும்; அது நம்முடைய பரம பிதாவின் குணலட்சணத்தில் விளங்குவதும், அதேசமயம் பிதாவுக்குச் சொந்தமானவர்கள் அனைவரும் வளர்த்துவதற்கு நாடுகிறதுமான கொள்கைகளை உணர்ந்துள்ள/புரிந்துள்ள அன்பின் வகையாகும்.
நமது சத்துருக்கள் மீதும், நம்முடைய அயலார்கள் அநேகர் மீதுமுள்ள நம்முடைய அன்பானது, அவர்களுடைய குணலட்சணங்களின் அடிப்படையில் காணப்பட வேண்டும்; இவர்களுடைய நம்பிக்கைகள் மற்றும் இவர்களுடைய திட்டங்கள் என்பது, நாம் புதிதாய்ப் பெற்றுள்ள நம்பிக்கைகள் மற்றும் திட்டங்களிலிருந்து மிகவும் வேறுபட்டதாகும். நமது கர்த்தர் (இவர்களிடத்தில்) காட்டினதுபோன்று, இவர்களிடத்திலான நம்முடைய அன்பும், அனுதாபத்துடன் கூடிய அன்பாய் இருக்க வேண்டும்; தேவனும் இவர்கள்/உலகத்தின் மீது அனுதாபத்துடன் கூடிய அன்பையே கொண்டிருந்தார். “”தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16). ஐக்கியத்துடன்/உறவுடன் கூடிய அன்புடன் தேவன் உலகத்தை அன்புகூரவில்லை, நாமும் ஐக்கியத்துடன் கூடிய அன்புடன் உலகத்தை அன்புகூர வேண்டியதில்லை. உலகத்தின் விழுந்துபோன மற்றும் சீரழிந்துபோன நிலைமையை உணர்ந்தவர்களாக, அதனை காப்பாற்றுவதற்கும், நீதி மற்றும் இரக்கத்தின் அடிப்படையில் அது ஆறுதல் அடையத்தக்கதாகவும் நம்மால் முடிந்ததைச் செய்வதில் நாம் மகிழ்ச்சிகொள்பவர்களாகக் காணப்பட வேண்டும்.
“”உன்னில் நீ அன்புகூருவது போல், பிறனிலும் அன்புகூருவாயாக” என்று நியாயப்பிரமாணம் கட்டளையிடும் அன்பிலும் கூட வரையறை காணப்படுவதாக இருக்கின்றது; அதாவது, “”உன்னைக் காட்டிலும் அதிகமாய் அன்புகூர” வேண்டும் என்பதாகச் சொல்லப்படவில்லை. ஆகவே நாம் நமது ஜீவனைத் தியாகம் செய்துதான், நம்முடைய அயலானுக்கு நம்மால் உதவிட முடியும் எனும் அளவுக்கு, அயலான் ஒருவனுடைய ஜீவன் ஆபத்தில் காணப்படும் கட்டம் ஒருவேளை ஏற்படுமாயின், நாம் நமது அயலானுக்காக ஜீவனைத் தியாகம் பண்ணிட வேண்டும் என்று அன்பின் தெய்வீகப் பிரமாணம் கேட்பதில்லை… ஒருவேளை அப்படி ஜீவனைத் தியாகம் பண்ணுவது என்பது நம்மில் நாம் அன்புகூருவதைக் காட்டிலும் பிறனில் அன்புகூருவதாகவும், தெய்வீகப் பிரமாணம் கேட்பதைக் காட்டிலும் மிஞ்சினதாகவும் காணப்படும். நம்முடைய அயலானும், அவனில் அவன் அன்புகூருவதைக் காட்டிலும் அதிகமாக நம்மை அன்புகூர வேண்டும் எனவும், நமக்காக அவன் தன்னுடைய ஜீவனைத் தியாகம் பண்ணிட வேண்டும் எனவும், நாமும் எதிர்ப்பார்க்கக்கூடாது. ஒருவேளை நம்முடைய அயலான் இப்படியாக நமக்குச் செய்ய முற்படும் பட்சத்தில், அதைத் தடைப்பண்ணிவிடுவதும், நாம் அவனுக்குச் சம்பவிக்கக் கூடாது என விரும்புபவைகளை, அதாவது அவன் தனக்கு நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்த நாம் அவனை அனுமதியாமல் இருப்பதே நமக்கான சரியான மனநிலையாகும். இந்த ஒரு விஷயத்தில்தான், அதாவது நம் பொருட்டு நம்முடைய கர்த்தர் தம்முடைய ஜீவனைத் தியாகம் பண்ணின அவருடைய நடத்தையானது, நியாயப்பிரமாணம் எதிர்ப்பார்த்ததையும் மிஞ்சியதாய் இருந்தது; அநேகருக்காக தம்முடைய ஜீவனையே ஈடுபலியாக அவர் கொடுத்ததின் வாயிலாக, அவர் நியாயப்பிரமாணம் எதிர்ப்பார்த்ததைக் காட்டிலும் அதிகம் செய்தவராகக் காணப்பட்டார். இந்த ஒரு காரணத்தினால்தான் அது பலி/தியாகப் பலி என்று பெயரிடப்பட்டது. நியாயப்பிரமாணம் முழுவதையும் செய்வது அவருடைய கடமையாக இருந்தது, ஆனால் அவர் இதைத் தாண்டிச் சென்று, தம்முடைய ஜீவனை, மனுக்குலத்திற்கான ஈடுபலி விலைக்கிரயமாகக் கொடுத்திட்டார்; இது ஒரு பலி, மேலும் இந்தப் பலியானது பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நித்தியஜீவனுக்கும் அதிகமானவைகளால் இயேசு விசேஷமாய்ப் பலனளிக்கப்பட்டார். இதே காரியம் நமக்கும் பொருந்துகின்றது, காரணம் அவரைப் போலவே நாமும் இவ்வுலகில் காணப்படுகின்றோம்; மற்றும் அவருடைய அடிச்சுவடுகளில் நாமும் நடக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். (1 யோவான் 4:17).
நம்முடைய அயலான், நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோமோ, அதையே நாம் நம்முடைய அயலானுக்குச் செய்ய வேண்டும் என்பதாகவே இன்னமும் நியாயப்பிரமாணம் எதிர்ப்பார்க்கின்றது. இதைக் காட்டிலும் குறைவாக நாம் யாருக்கும் செய்துவிடக்கூடாது; ஆனால் கர்த்தருடைய பின்னடியார்களாக, அவருடைய பலயின் ஆவியினால் ஊக்குவிக்கப்பட்டுள்ளவர்களாகிய நாம், தெய்வீகத் திட்டத்திற்கு இசைவாக சகோதர சகோதரிகளுக்கென நம்முடைய ஜீவியங்களை சந்தோஷமாக ஒப்புக்கொடுக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம்; தெய்வீகத் திட்டமானது, இயேசுவுடன்கூட பலிச் செலுத்துபவர்களாக, பின்னர் அவருடைய இராஜ்யத்திலும், அதன் மாபெரும் வேலையாகிய உலகத்தை ஆசீர்வதித்தல் மற்றும் மீண்டும் பழைய (பூரண) நிலைக்குக்கொண்டுவருதல் வேலையில் அவருடன் உடன்சுதந்தரர்களாகக் காணப்படத்தக்கதாக இப்பொழுது சிறு மந்தையை, விசுவாச வீட்டாரைத் தெரிந்தெடுத்துக்கொண்டு வருகின்றது. பிரமாணம் எதிர்ப்பார்க்கும் விஷயத்தையும், நமது பலி என்னவாக இருக்க வேண்டும் என்பதையும், எந்த ஒரு சிருஷ்டியின் இடத்திலும் நாம் எப்படி நடக்க வேண்டும் என நீதி எதிர்ப்பார்க்கும் விஷயத்தையும் பற்றின தெளிவான பார்வையை நாம் பெற்றிருப்பது அவசியமாய் இருக்கின்றது.
நம்முடைய இந்தப் பாடத்தின் ஆரம்பத்தில், நமது கர்த்தர் நியாயசாஸ்திரிக்குக் கிருபையின் சுவிசேஷத்தைக் குறித்துப் பிரசங்கிப்பதற்குப் பதிலாக, நியாயப்பிரமாணத்தையே குறிப்பிடுவதைப் பார்த்தோம். கர்த்தர் தம்முடைய பின்னடியார்களுக்கு நியாயப்பிரமாணத்தையும், சுவிசேஷத்தையும், இரண்டையுமே பொருத்துவதை இப்பொழுது கவனிப்போம். தேவன் ஓர் அளவுகோலை/நியமத்தை, ஒரு பிரமாணத்தைக்கொண்டிருக்கிறார், அதை அவர் ஒருபோதும் அழிப்பதில்லை. நியாயப்பிரமாணத்தின் உடன்படிக்கையானது அதன் நோக்கத்தை நிறைவேற்றின பிற்பாடு, அது நின்று போய்விட்டது என்பது உண்மைதான்; ஆனால் உடன்படிக்கைக்கு அடிப்படையான, தேவனுடைய பிரமாணமானது, ஒரு போதும் இல்லாமல் போகப் போவதில்லை. நாமும் சரி, யூதர்களும் சரி, கர்த்தரை நம்முடைய முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும் மற்றும் பலத்தோடும் அன்புகூரவும், மற்றும் நம்மை நாம் அன்புகூருவது போன்று நமக்குப் பிறனை அன்புகூர வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றோம். இதுவே நமக்கு முன்பும், யூதருக்கு முன்பும் வைக்கப்பட்டுள்ள நியமமாகும். யூதனால் இதைக் கைக்கொள்ள முடியவில்லை; யூதன், தான் தன்னுடைய அயலானைக் கையாளும் விஷயத்தில் குறைவுப்பட்டதோடல்லாமல், தன்னுடைய சிருஷ்டிகர் மீதுள்ள தன்னுடைய அன்பிலும், அதாவது மற்ற அன்புகளைக் காட்டிலும் மேலோங்கி காணப்பட்டு, ஜீவியத்தின் நடத்தைகள் அனைத்திலும் வெளிப்பட வேண்டிய சிருஷ்டிகர் மீதுள்ள தன்னுடைய அன்பின் விஷயத்திலும் தான் குறைவுப்பட்டிருப்பதைக் காண்கின்றான்.
நியாயப்பிரமாணத்தின் எழுத்தின்படியும், ஆவியின்படியும் முழுமையான பூரணத்தில் நமது கர்த்தராகிய இயேசுவினால் மாத்திரமே அந்த அன்பைக் கைக்கொள்ள முடியும் (அ) கைக்கொள்ள முடிந்தது. நமது கர்த்தருடைய காலங்களுக்கு முன்பாக வாழ்ந்த யூதன், நியாயப்பிரமாணம் தொடர்புடைய விஷயத்தில் எவ்வளவுதான் சரியான இருதயத்தின் நிலைமையில் காணப்பட்டிருந்தாலும், நியாயப்பிரமாணம் கூறுபவைகளுக்கு ஏற்ப அவனால் வாழ/செய்ய முடியாத காரணத்தினால், அவனால் நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. நம்முடைய நிலைமை முற்றிலும் வேறுபட்டதாகும். நமது கர்த்தர் இயேசு, நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டவராக, ஆதாமுக்காகவும், அவருடைய சந்ததி அனைவருக்குமாகவும், தம்முடைய ஜீவனைப் பலியாகக்கொடுத்தார்; மேலும் இந்த உண்மைப் பற்றின அறிவிற்குள் இப்பொழுது வந்துள்ள நாம், விசுவாசிப்பதின் மூலம் அதை ஏற்றுக்கொண்டுள்ளப்படியால், கிறிஸ்துவுக்குள்ளாக, தேவனிடத்தில் அங்கீகரிப்பைப் பெற்றிருக்கின்றோம்; இதினிமித்தம் பிரமாணத்தைக் கைக்கொள்ளும் விஷயத்தில் நாம் எடுக்கும் சிறந்த பிரயாசங்களுடன், கிறிஸ்துவினுடைய புண்ணியமுங்கூடக் காணப்படுகின்றது, இவ்வாறாக தேவன் ஏற்றுக்கொள்ளத்தக்கதான நிலைமையில் ஆக்கப்படுகின்றது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், தேவனை நம்முடைய முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும், மனதோடும் பிரதானமாக அன்புகூருவதில் நம்மால் முடிந்ததைச் செய்யும்பொழுதும், நம்மில் நாம் அன்புகூருவதுபோல் பிறனில் நாம் அன்புகூரும் விஷயத்தில் நம்மால் முடிந்ததைச் செய்யும்பொழுதும், தேவன் இந்த நல்ல பிரயாசங்களைப் பூரணமானது போன்று ஏற்றுக்கொண்டு, இதிலுள்ள குறைவுகளை, கிறிஸ்துவினுடைய பலியின் புண்ணியத்தினால் சரிச்செய்து கொள்கின்றார். ஆகவேதான் அப்போஸ்தலர் பின்வருமாறு கூறுகின்றார், அதாவது, “”மாம்சத்தின்படி நடவாமல் (நம்மையும், நம்முடைய விழுந்துபோன பண்புகளையும் பிரியப்படுத்த நாடாமல்), ஆவியின்படி நடக்கிற (தெய்வீகப் பிரமாணத்தினுடைய ஆவிக்கு இசைவாக நடப்பதற்கு முடிந்தமட்டும் செய்கிற) நம்மிடத்தில், நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்” (ரோமர் 8:4).
“”தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?” என்ற வசனம் நம்முடைய நினைவுக்கு வருகின்றது (1 யோவான் 4:20). வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் நம்முடைய இருதயங்களில் நிரம்பிக்கொண்டிருக்கும் அன்பின் அளவானது, நமது அனுதாபமும், கவனமும் அவசியப்படும் நம்முடைய சக சிருஷ்டியினிடத்தில் வெளிப்படும் அன்பில் அளவிடப்படலாம், மேலும் ஒருவேளை நாம் நம்முடைய சக சிருஷ்யினிடத்தில் குறைவான அன்பை வெளிப்படுத்துகின்றோமெனில், இது நமது சிருஷ்டிகர் மீதான நம்முடைய அன்பிலுள்ள குறைவையும் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும். மாறாக ஒருவேளை நாம் மற்றவர்களிடத்தில் இரக்கமாய் இருக்கிறோமென்றால், நம்முடைய சக சிருஷ்டிகளுக்காக, அதிலும் விசேஷமாக விசுவாச வீட்டாரிடத்தில் இரக்கத்துடனும், பெருந்தன்மையுடனும் இருந்து, நம்மால் முடிந்ததைச் செய்வதில் மகிழ்ச்சிக் கொள்வோமென்றால், இது நமது கர்த்தரினால் அங்கீகரிக்கப்படும் ஆவி நம்மில் இருப்பதையும் மற்றும் கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தின் மீதான விசுவாசத்தினால் அடையப் பெற்றதே இந்த ஆவி என்பதையும் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும். கர்த்தருடைய பின்னடியார்களிலுள்ள இப்படிப்பட்ட இரக்கமுள்ளவர்கள், கர்த்தருடைய கரங்களிலிருந்து இரக்கத்தைப் பெற்றுக்கொள்வார்கள். அவர் இவர்களைக் கனிவுடன் கையாளுவார்; மேலும் எந்தளவுக்கு தங்களுக்கு எதிராகத் தவறுகள் பண்ணுகிறவர்கள்மேல் இவர்களுக்குப் பெருந்தன்மையின், மன்னிப்பின் இந்த ஆவி காணப்படுகின்றதோ அவ்வளவாய், இவர்களுடைய பெலவீனங்களையும், குறைவுகளையும் கர்த்தர் இவர்களுக்கு மன்னிப்பார்.