R4160 – நான் அவனை எழுப்பப்போகிறேன்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R4160 (page 102)

நான் அவனை எழுப்பப்போகிறேன்

I GO THAT I MAY AWAKE HIM

யோவான் 11:1-57

“”நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்” (வசனம் 25).

நமது கர்த்தருடைய ஊழியக்காலங்களுடைய இறுதி பகுதிகளில், யூதர்களுடைய ஆலயத்தின் அதிகாரிகளுடைய எதிர்ப்பானது மிகவும் கசப்பாய்ப் போனபடியினால், இயேசு, யூதேயாவை விட்டு, பெரோயாவுக்குப் போக நேரிட்டது. இயேசு தாம் ஞானஸ்நானம் எடுக்கும்போது, யோவான் ஸ்நானனால் பிரசங்கம் பண்ணி வந்த இடங்களுக்கு அருகாமையிலான இடங்களில், கொஞ்சக் காலம் இயேசு காணப்பட்டார். இப்படியாக இயேசு அங்குக் காணப்படும் போதுதான், “”ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான்” என்று மார்த்தாள் மற்றும் மரியாளிடமிருந்து, இயேசுவுக்கு செய்தி வந்தது. இதிலிருந்து, மார்த்தாள் மற்றும் மரியாளுடைய இளைய சகோதரனாகிய லாசரு, இயேசுவின் மிக நெருங்கிய நண்பனாக இருந்ததை நாம் அறிகின்றோம். தூது செய்தி மிகச் சுருக்கமாய் இருந்தது; இயேசு வரவேண்டும் என்றோ, ஏதாகிலும் அற்புதம் செய்யவேண்டும் என்றோ, வற்புறுத்தும் வண்ணமாக எதுவும் தூது செய்தியில் சொல்லிவிடப்படவில்லை; லாசரு வியாதியாய் இருக்கின்றான் என்பது மாத்திரமே சொல்லி அனுப்பப்பட்டது. [R4160 : page 103] ஒரு சில விஷயங்களில், இது கிறிஸ்தவனுடைய ஜெபத்திற்கான சிறந்த மாதிரியாகக் கூட விளங்குகின்றது. கர்த்தருடைய ஜனங்கள் பூமிக்குரிய மற்றும் ஆவிக்குரிய தங்களுடைய ஜீவியத்தின் அனைத்து விஷயங்களிலும் கர்த்தர் இரக்கத்துடனும், அன்புடன் கூடிய அக்கறையுடனும் காணப்படுகின்றார் என்ற முழு நிச்சயத்துடன் எப்போதும், கர்த்தரிடத்தில் செல்லலாம். பரலோகத்தில் இல்லை என்றாலும், பூமியிலாகிலும் தங்களுடைய சொந்த சித்தம் நடைபெறத்தக்கதாக வேண்டிக்கொள்ளும் நிலையில் கர்த்தருடைய ஜனங்கள் ஆரம்பக்காலங்களில் காணப்படுவார்கள்; ஆனால் பிற்பாடு, அவர்களுடைய அர்ப்பணிப்பின் ஆவியானது, கிருபையில் வளர ஆரம்பிக்கையில், அவர்கள் மார்த்தாள் மற்றும் மரியாள் போன்று தங்களுடைய பிரச்சனைகளைக் கர்த்தரிடத்தில் தெரிவிப்பதிலும், கர்த்தருக்காய்க் காத்திருப்பதிலும், அவர் அருளுவதற்குச் சிறந்தது என்றும், ஞானமானதென்றும் விரும்பும் எதையும் பெற்றுக்கொள்வதில் நன்றியுள்ளவர்களாக இருப்பதிலும் திருப்தியாய் இருப்பார்கள்.

நமது கர்த்தர் இயேசு தூது அனுப்பப்பட்டு வந்தவர்களிடம், “”இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது” என்று கூறினார் (யோவான் 11:4). லாசரு மரிக்க மாட்டார் என்று நமது கர்த்தர் தவறாய்க் கணக்குப் போட்டுவிட்டார் என்று நாம் அனுமானித்துவிடக்கூடாது, மாறாக லாசரு மரித்தாலும், தாம் அவரை எழுப்பப்போவதினால், அது நிரந்தரமான மரணமாய் இருக்காது என்பதை இயேசு அறிந்திருந்தபடியினாலே, இப்படிக் கூறினார் என்று பார்க்கின்றோம். இரண்டு நாளுக்குப் பிற்பாடு, இயேசு யூதேயாவிலுள்ள பெத்தானியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று கூறினபோது, சீஷர்கள் பயப்பட்டார்கள், ஆனால் எந்த ஆபத்தும் நிகழாது என்று நமது கர்த்தர் அவர்களுக்குச் சுட்டிக்காண்பித்தார். இயேசு சூழ்நிலைகள் அனைத்தையும் முன்கூட்டியே அறிந்தவராக இருந்தபடியால், தாம் நிகழ்த்த சித்தமாயிருக்கும் அற்புதமானது, தாம் யூதேயாவிலிருந்து, கொஞ்சம் காலத்திற்குப் பின்னர் மீண்டுமாகப் பெரோயாவுக்குத் திரும்பி வருவதை அனுமதிக்கத்தக்கதாக, தம்முடைய சத்துருக்கள் குழப்பத்தில் அலங்கோலப்படுவார்கள் என்று இயேசு கிரகித்துக் கொண்டார். இப்படிச் செல்வதற்கு, அதாவது பெத்தானியாவிற்குச் செல்வதற்கான காரணத்தை, “”நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன்” என்ற வார்த்தைகள் மூலம், இயேசு சீஷர்களுக்கு விவரித்துக் கொடுத்தார். இப்படியாக தாம் 11-ஆம் வசனத்தில் குறிப்பிட்ட வார்த்தைகளைச் சீஷர்கள் புரிந்துக்கொள்ளத்தக்கதாக, “”லாசரு மரித்துப்போனான்” என்று இயேசு வெளிப்படையாகக் கூறினார்.

ஒவ்வொரு காரியத்திற்கும் அநேகம் கண்ணோட்டங்கள் காணப்படுகின்றது. இரக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகிய தெய்வீக நோக்கத்தைத் தள்ளி, யதார்த்தத்தின் / உண்மையின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கப்படும்போது, ஒரு மிருகம் மரித்துப்போய்விட்டது என்று சொல்லும் அதே விதத்தில், லாசரு மரித்துப்போனதைக் கூறுவது சரியே. ஆனால் தேவன் மீதும், ஆபிரகாமிடம் பண்ணப்பட்ட வாக்குத்தத்தமாகிய, அவருடைய சந்ததிக்குள் பூமியின் குடிகள் அனைத்தும் ஆசீர்வதிக்கப்படும் என்பதின் மீதுமான விசுவாசத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கையில், லாசரு, ஒரு விலங்கு மரித்தது போன்று மரித்துப்போகவில்லை, மாறாக லாசரு ஒரு குறிப்பிட்ட காலம்வரை உயிரற்றவனாகவும், கர்த்தருடைய ஏற்றவேளையில், அவரால் அழைக்கப்படுவதற்கும், உயிர் மீண்டும் பெறுவதற்கும், மரணமாகிய நித்திரையினின்று விழித்தெழும்பப் பண்ணுவதற்கும் எனக் காத்திருப்பவனாகவுந்தான் இருக்கின்றான். சதுசேயர்கள் எதிர்க்கால வாழ்க்கையையும், உயிர்த்தெழுதலையும் மறுத்துப் பேசின வேறொரு தருணத்தில் மேற்கூறியக் கண்ணேட்டத்தை இயேசு கொண்டவராக, “”அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்” என்றார் (லூக்கா 20:37). ஒருவேளை ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும், விலங்கு மரித்துப்போவது போன்று, உயிர்த்தெழும்புவதற்கும், விழித்தெழுவதற்குரிய நம்பிக்கை எதுவும் இல்லாமல் மரித்துப்போனவர்களாக இருந்திருப்பார்களானால், இவர்களுடைய தேவனாக, தாம் இருப்பதாக தேவன் சொல்லியிருந்திருக்க மாட்டார் என்பதே நமது கர்த்தருடைய வாதமாய் இருந்தது. தேவனுடைய கண்ணோட்டத்தின்படி, “”எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே” அதாவது ,அனைவரும் அவருக்குள் பிழைத்தவர்களாக இருக்கின்றார்கள் என்று கூறி நமது கர்த்தர் தம்முடைய வாதத்தை நிறைவு செய்ததை நாம் பார்க்கின்றோம் (லூக்கா 20:38).

நம்முடைய கண்ணோட்டமானது, தெய்வீகக் கண்ணோட்டமாகவே இருக்க வேண்டும்; இந்தத் தெய்வீகச் சாட்சிக்கு இசைவாகவே நாம் சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே கிறிஸ்தவர்களுக்காக, அதாவது கிறிஸ்துவுக்குள் மரித்திருக்கும் பரிசுத்தவான்களுக்காக, மாத்திரம் அல்லாமல், இயேசுவுக்குள் நித்திரையாய் இருக்கும் உலக மனுக்குலத்திற்கும், நமக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தேவன், இயேசுவில் மனுக்குலத்திற்கான உயிர்த்தெழுதலின் ஏற்பாடு பண்ணியிருக்கவில்லையென்றால், மனுக்குலத்தின் மரணமானது, மிருகங்களின் மரணம் போன்று உண்மையான மரணமாகவே இருந்திருக்கும். ஆனால் இப்படியான ஏற்பாட்டைப் பண்ணப்பட்டுள்ளபடியால், மனுக்குலத்தின் உலகமானது முற்றிலும் அழிந்துப்போகாமல், மாறாக நித்திரையில் மாத்திரமே காணப்படுகின்றனர் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகையால் தெய்வீக வார்த்தைகளினுடைய போதனைகளை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும், “”நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கிக்கக்கூடாது; காரணம் நாம் இயேசு மரித்து, உயிரோடே மீண்டும் எழுந்துள்ளார் என்று விசுவாசித்தோமானால், இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் (அவருடைய பலியின் பலனுக்குள் அடங்குபவர்களும், அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ள ஆதாமின் சந்ததியார் அனைவரும்) தேவன் அவரோடுக் கூடக் கொண்டு வருவார்” (1 தெசலோனிக்கேயர் 4:13-14) சபையானது, அவருடைய உயிர்த்தெழுதலில், முதலாம் உயிர்த்தெழுதலில், பிரதான உயிர்த்தெழுதலில் பங்கடையத்தக்கதாகவும், அவருடைய மகிமை, கனம் மற்றும் அழியாமையிலும் பங்கடையத்தக்கதாகவும் அவரால் முதலாவது உயிர்த்தெழுப்பப்படுகின்றனர். பின்னர் ஆயிர வருட யுகத்தில் அவர் மூலமாய்ப் பூமியின் குடிகள் அனைத்தும் விழித்தெழுப்பப்பட்டு, ஷீயோலிலிருந்து, ஹேடிசிலிருந்து, சத்தியத்தின் அறிவிற்குள்ளாகக் கொண்டு வரப்படுவார்கள்; ஒருவேளை அவர்கள் சத்தியத்தின் செய்தியை நல்லதும், உண்மையுமான இருதயத்திற்குள்ளாக ஏற்றுக்கொண்டால், அவர்கள் அவர் மூலமாய்ப் பாவம் மற்றும் மரணத்தின் நிலையினின்று முழுமையாய்த் தூக்கியெடுக்கப்பட்டு, நித்திய ஜீவனுக்கும், முழுமையான பூரணத்திற்கு நேராகவும் கொண்டுவரப்படுவார்கள். இயேசுவில் விசுவாசம் வைக்கிற யாவரும் அவருக்குள் களிக்கூர்ந்து, மற்றவர்களைப்போல, மரணத்தைக்கண்டு துக்கியாதிருப்பார்களாக.

நண்பர்கள் துக்கிக்க, இயேசு மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்

பிரசித்திப்பெற்ற சார்லஸ் ஸ்பர்ஜியன் (Charles Spurgeon) அவர்கள் இப்பாடத்தைக் குறித்துப் பிரசங்கிக்கையில், “”நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள்” என்ற வசனத்திலிருந்து, (யோவான் 11:15) தன்னுடைய சத்திய உரைக்கு, “”நண்பர்கள் துக்கிக்க, இயேசு மகிழ்ச்சியுடன் கணப்பட்டார்” என்ற தலைப்பை வழங்கினார். கர்த்தருடைய ஜனங்கள் துக்கத்தின், வேதனையின், வியாதியின், வலியின் தருணங்களில், தங்களுடைய கண்ணீர்களும், உபத்திரவங்களும், கர்த்தருடைய வழிநடத்துதலின் கீழ் மாபெரும் ஆசீர்வாதமாய்த் தங்களுக்கு அமையும் என்று நினைவுகூர்ந்து, விசுவாசத்துடன் கர்த்தரை நோக்கிப்பார்ப்பது நலமான காரியமாகும். இப்பாடத்தில் நாம் ஓர் உதாரணத்தைக் காணலாம்: தங்களுடைய வியாதிப்பட்டிருந்த சகோதரனுக்குப் பணிவிடை புரிந்துக்கொண்டிருந்த மார்த்தாளும், மரியாளும், தங்கள் சகோதரனைக் கர்த்தர் எவ்வளவு சிநேகித்தார் என்பதை எண்ணினவர்களாக, லாசருவின் நிலைமையைக் குறித்த செய்தியைக் கர்த்தருக்கு அனுப்பி வைத்து, அவருடைய ஞானத்தையும், கிருபையையும் நம்பினவர்களாக, காரியத்தை கர்த்தர் கரத்தில் விட்டுவிட்டார்கள்; எனினும் அவர்கள் இருளான சூழ்நிலைகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். லாசரு மரித்துப்போய், அடக்கம் பண்ணப்பட்டார். அவர்கள் மேசியா என்று நம்பியிருந்த ஆண்டவராகிய இயேசு, [R4161 : page 103] வியாதியை நிவர்த்திப் பண்ணவும் இல்லை; லாசரு மரிப்பதிலிருந்து தடுக்கவும் இல்லை; இன்னும் அவர்களுக்கு ஒரு செய்திகூட இயேசு சொல்லி அனுப்பவும் இல்லை; நாட்களும் கடந்துச் சென்றன. இயேசு இவைகளையெல்லாம் குறித்துச் சொல்லுகையில், “”நான் சந்தோஷப்படுகிறேன்” என்று கூறியுள்ளார். இவைகளை நாம் எப்படிப் புரிந்துக்கொள்வது? “”உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்” என்பதே பதிலாகும். இப்படியாகவே நம் நிமித்தமாக, நமக்குச் சோதனைகளையும், துக்கங்களையும், கண்ணீர்களையும், இன்னல்களையும் அனுமதிப்பதிலும், இதன் மூலமாய் நாம் வேறு வழிகள் மூலமாய்க் கற்றுக்கொள்ள முடியாத முக்கியமான சில படிப்பினைகளை அடைவதிலும் கர்த்தர் சந்தோஷப்படுவது உண்மையே. அவருடைய தடையங்களை நம்மால் பார்க்க முடியாதபோது, அவரை நாம் விசுவாசிக்க வேண்டும் என்பதும், “”அவரை அன்புகூருகின்றவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும்” என்ற அவரது வாக்குத்தத்தத்தை நினைவுகூர வேண்டும் என்பதும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகளில் ஒன்றாய் இருக்கின்றது. மார்த்தாள், மரியாள் சம்பவத்தில், அவர்களுடைய சகோதரனுடைய வியாதியும், மரணமும், அந்த இரண்டு சகோதரிகளுக்கு மர்மமான வழிநடத்துதல்களாகவே இருந்தது என்பதில் ஐயமில்லை. எனினும் இந்த அனுபவங்களானது, விலையேறப்பெற்ற படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது என்பதிலும், கர்த்தருடன் நெருக்கமான ஐக்கியத்திற்கும், நித்தியத்திற்குரிய காரியங்களுக்கும் ஆயத்தமாக்குதலாய் இருந்தது என்பதிலும் ஐயமில்லை.

அப்போஸ்தலர்கள் மத்தியில் ஒருவரான தோமாவின் வார்த்தையானது, கர்த்தருடைய அப்போஸ்தலர்களிடம் இருந்த பயபக்தியை விவரிக்கின்றது; தாங்கள் ஆண்டவரைத் தனித்துவிடக்கூடாது என்றும், அவர் ஒருவேளை யூதேயாவிற்குப் போக விரும்பினாரானால், தாங்களும் அவரோடு கூடச் செல்ல வேண்டும் என்றும் தோமா, தன்னுடைய உடன் சீஷர்களிடம் வலியுறுத்திக் கூறுகின்றார். அதாவது, “”அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்.” (யோவான் 11:16) இந்த ஒரு தைரியத்தின் ஆவியையே, பன்னிரண்டு அப்போஸ்தலர்களும், கர்த்தரோடு கூடச் சென்றபோது கொண்டிருந்தார்கள். மேலும் கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில் அப்போஸ்தலர்களிடம் வெளிப்பட்ட கோழைத்தனமானது, [R4161 : page 104] உதவியை ஏற்க மறுத்த நமது கர்த்தருடைய வார்த்தைகளினாலேயே, அவர்களுக்குக்உண்டானது என்று புரிந்துக்கொள்ள நமக்கு உதவுகின்றது. ஜனங்களின் ஆதரவற்ற தீர்க்கத்தரிசியாகிய இயேசுவைப் பின்பற்றுவதில் தங்கள் ஜீவனை மரணம் வரையிலும் பணயம் வைத்த இவர்கள்தான், பிற்பாடு அவரைத் தனியே விட்டுவிட்டு ஓடிப்போய்விட்டார்கள். கர்த்தருக்காகவும், அவருடைய காரணங்களுக்காகவும் தைரியமாகச் செயல்படுவோம் என்று எண்ணுகிறவர்களும், அவருக்காக மரிக்க வேண்டுமென்று எண்ணுகிறவர்களுமான நம்மில் சிலர், இந்த ஒரு பண்பை நாம் தக்க வைத்துக்கொள்வதற்கும், சோதனையான வேளைகளில், ஆற்றல் இழந்து, தணிந்து போகாதபடிபடிக்கும், விழித்திருந்து, ஜெபம் பண்ணவேண்டும் என்பதே இதிலுள்ள நமக்கான படிப்பினையாக இருக்கின்றது.

யூதர்கள் அழுது புலம்பினார்கள், இயேசு கண்ணீர் விட்டார்

அன்றைய நாட்களில், ஏழு நாட்கள் துக்கம் அநுசரிக்கும் வழக்கம் காணப்பட்டது. அநேகமாக மார்த்தாள், மரியாள் மற்றும் லாசரு ஐசுவரியவான்களாகவும், செல்வாக்கு மிக்க குடும்பத்தினராகவும் காணப்பட்டிருக்க வேண்டும்; மேலும் அவர்களது இழப்பில், அவர்களோடு துக்கம் அநுசரிப்பதற்காக அநேக நண்பர்கள் வந்திருந்தார்கள். துக்கிக்கிறவர்களால் நிரம்பி இருக்கும் அவர்களது வீட்டிற்குச் சென்றுவிட்டு, பிற்பாடு கல்லறைக்குச் செல்வது ஞானமாய் இருக்காது என்று எண்ணின இயேசு, பெத்தானியாவுக்கு முன்பாக கொஞ்சம் தொலைவில் நின்று கொண்டு, செய்தி அனுப்பினார். இயேசு அருகாமையில் வந்துகொண்டிருப்பதாகச் செய்தி வந்தவுடன், அவரைச் சந்திப்பதற்கு மார்த்தாள் வெளியே வந்தாள்; ஆனால் மரியாளோ துக்கத்தினால் துவண்டுப் போனவளாகவும், அநேகமாக, “”இந்த வியாதி மரணத்திற்கு ஏதுவாக இராமல், தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாக இருக்கிறது” என்ற ஆண்டவரின் வார்த்தை நிறைவேறாமல் போனதால் ஏமாற்றமடைந்தவளாகவும், வீட்டிலேயே அமர்ந்து விட்டாள், அவரைச் சந்திக்க மரியாள் போகவில்லை; அதாவது, “”ஆண்டவரே கடைசிவரை உம்மை எதிர்ப்பார்த்தோம்; ஆனால் இப்பொழுது எல்லாம் முடிந்துவிட்டது. நீர் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டீர். நாங்கள் எங்கள் துக்கத்தின் மத்தியில் காணப்படுகின்றோம். இப்பொழுது எங்களுக்கு என்ன இலாபம்? லாசரு மரித்துவிட்டான்” என்று தன்னுடைய நடவடிக்கைகள் மூலமாய் மரியாள் சொல்லுகிறவளாய் இருந்தாள். மார்த்தாள், கர்த்தரைச் சந்தித்தப்போது, “”ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள்.” (யோவான் 11:21-22) இப்படியாக அவள் கூறிய வார்த்தைகளுக்குள்ளாக, அவளுடைய கோபமும் மறைந்திருந்தது; அதாவது, “”ஏன் நீர் வரவில்லை? ஆனால் இன்னமும் எனக்கு உம்மிடத்தில் விசுவாசம் இருக்கின்றது. நீர் மேசியா என்று உணர்கின்றேன்” என்ற விதத்தில் மார்த்தாள் கூறினாள். இயேசுவினுடைய பதில், “”உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்” என்பதாக இருந்தது.

உன் சகோதரன் மீண்டும் உயிர்வாழ்வான்

நமது கர்த்தர், “”உன் சகோதரன் நித்தரைப்பண்ணிக்கொண்டிருக்கவில்லை,” “”உன் சகோதரன் மரிக்கவில்லை” என்று கூறாததைக் கவனிப்போமாக; மாறாக அவளுடைய மனதை அவர் உயிர்த்தெழுதலுக்கு நேராக திருப்பினார். நாம் அவரைக் காட்டிலும் ஞானிகளா? அவர் கூறினவைகளுக்கு, நேர்மாறானவைகளை நாம் அவருடைய சீஷர்களாகப் போதிக்கலாமா? மார்த்தாளுடைய பதிலானது, அவள் இயேசு கூறினதை நன்கு புரிந்துக்கொண்டிருந்ததையும், அந்நாட்களில் காணப்பட்ட யூதர்கள் அனைவரும், விசுவாசித்தவைகள் பற்றின பொதுவான கண்ணோட்டத்தை மார்த்தாள் கொண்டிருந்ததையும், யுகத்தின் முடிவில், மகா கடைசி நாளாகிய, மகா ஏழாவது ஆயிர வருடத்தின்போது, மரித்தவர்களாகிய நீதிமான்களுக்கும், அநீதிமான்களுக்கும் உயிர்த்தெழுதல் எனும் காரியம் உள்ளது என்று மார்த்தாள் உணர்ந்திருப்பதையும் வெளிப்படுத்துகின்றது. நமது கர்த்தர் அவளுடைய கருத்தை மறுக்காமல், அத்தருணத்தில் தாம் செய்ய விரும்புவதைப் பற்றின உணர்ந்துக்கொள்ளுதலுக்கு நேராக அவளைப் படிப்படியாகக்கொண்டுவர விரும்பி, ஏற்றகாலத்தில் அனைவரும் விழித்தெழுப்பப் பண்ணும் உயிர்த்தெழுதலின் வல்லமையானது தம்மிடத்தில் இருக்கின்றது என்று விளக்கி, “”நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாய் இருக்கின்றேன்” என்று கூறினார், மற்றும் தம்மை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்றும், உயிரோடிருந்து தம்மை விசுவாசிக்கிறனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான் என்றும் கூறினார். இப்படியான தம்முடைய வல்லமை மற்றும் எதிர்க்கால வேலை பற்றின கண்ணோட்டத்தை மார்த்தாள் விசுவாசிக்கின்றாளா? என்று நமது கர்த்தர் அவளிடம் கேட்டார். அதற்கு மார்த்தாள், “”ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று பதில் கூறினாள் (யோவான் 11:27). “”இவைகளைச் சொன்னபின்பு, அவள்போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாய் அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள்” (யோவான் 11:28).

தங்களுடைய விஷயத்தில் கர்த்தரிடமிருந்த அக்கறையற்ற தன்மை மற்றும் அலட்சியம் பற்றி என்னதான் மரியாள் கோபங்கொண்டிருந்தாலும், தன்னை ஆண்டவர் அழைக்கின்றார் என்று மரியாளுக்குச் சொல்லப்பட்டபோது, இந்தக் கோபங்கள் அனைத்தும் பறந்து போய்விட்டது. கல்லறைக்குப் போகிற வழியில் கர்த்தர் இருந்த இடத்திற்கு மரியாள் போனபோது, வீட்டில், அவளோடு துக்கங்கொண்டாடிக்கொண்டிருந்த யூதர்கள், “”மரியாள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்னே போனார்கள்.” பின்னர், “”ஆண்டவர் அவனை எங்கே வைத்தீர்கள்” என்று கேட்டதிநிமித்தம் கர்த்தருக்கு, லாசரு வைக்கப்பட்ட இடம் தெரியவில்லை என்பது அர்த்தமாக இராமல், மாறாக அவர் மரியாதையான விதத்திலேயே, “”நாம் இப்பொழுது கல்லறைக்குப் போகலாமா?” என்று கேட்டதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அத்திமரத்தின் கீழ் நாத்தான்யேல் இருந்ததை அறிந்திருந்த கர்த்தர், லாசரு மரித்துப் போய் நான்கு நாட்கள் ஆகின்றது என்பதை மாத்திரமல்ல, லாசரு எங்கே வைக்கப்பட்டுள்ளார் என்பதையும் அறிந்திருப்பது உண்மையே. “”மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்க வேண்டியதாயிருக்கவில்லை” என்பதினால், அவர் முக்கியத்துவமற்ற காரியங்களை எளிதில் அறிந்துக்கொள்வார் என்பது நிச்சயமே“ (யோவான் 2:25).

மரியாள் கர்த்தரைக் கண்டபோது கோபங்கள் அனைத்தும் பறந்துப் போயின. அவள் அவருடைய பாதங்களில் விழுந்து, பாதங்களை அணைத்துக்கொண்டு, கண்ணீருடன், “”ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்” என்று மாத்திரம் கூறினாள். அது உணர்ச்சிகளைத் தூண்டுகிற தருணமாய் இருந்தது. நமது கர்த்தருடைய பிரியமான தோழி கண்ணீரில், பாதத்தில் விழுந்துகிடந்தாள், அநேகம் யூதர்களும் அவளோடுகூட அழுது, புலம்பிக்கொண்டிருந்தனர். இவைகள் என்ன தாக்கத்தை நமது கர்த்தரிடத்தில் ஏற்படுத்தியது? அவர் இரக்கமற்று நின்றாரா? இல்லை. “”நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல்” என்ற வசனத்தின்படி அவர் காணப்பட்டார் (எபிரெயர் 4:15). அவர் அனுதாபத்தினால் முழுக்க நிரம்பினவராக இருந்தார்; அவர் மரணத்தின் உண்மையான அர்த்தத்தையும் அது ஒரு சாபம் என்றும், மனுக்குலத்தின் மீது காணப்படும் பயங்கரமான சாபம் என்றும், அவர் முழுமையாய் உணர்ந்துக்கொண்டார். லாசரு பரலோகத்தில் காணப்படுகின்றார் என்று மரியாளை ஆறுதல்படுத்தும் வண்ணமாக இயேசு எதுவும் கூறவில்லை, காரணம், அவர் உண்மையையே பேசுகிறவராய் இருந்தார். வேறொரு தருணத்தின்போது அவர் “”பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை” என்று கூறியுள்ளார் (யோவான் 3:13).

மாறாக நம்முடைய சந்ததியின் மீது காணப்படுவதும், சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவிக்கிறதுமான, துன்பத்தை ஆழமாய் அனுபவித்தவராக, இயேசு கண்ணீர் விட்டார். வேதாகமத்தில் மிகச் சிறிய வசனமாகிய, “”இயேசு கண்ணீர் விட்டார்” என்பதானது, நமது கர்த்தர் அனுதாபம், இரக்கம் மிக்கவர் என்றும், அவர் நம்முடைய உருவம் இன்னதென்று அறிந்திருக்கிறார் என்றும், நாம் மண் என அவர் நினைவுகூருகின்றார் என்றுமுள்ள ஐசுவரியமான நிச்சயத்தைக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. நாம் அவருடையவர்களாய் இருந்து, நம்முடைய சோதனைகளின் கீழ்ச் சரியாய்க் காணப்படுவோமானால், நமக்கான சோதனைகள் நம்முடைய நன்மைக்கு ஏதுவாகவே நடைப்பெறும் என்பதாக அவர் வாக்களித்து, அறிவித்துள்ளவைகளாகிய அனைத்தையும் அவர் உணர்ந்தவராகவே இருக்கின்றார் என்பதே சிறந்த நிச்சயங்களில் ஒன்றாக இருக்கின்றது. இங்கு மற்றவர்களாகிய யூதர்கள் அழுததற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையானது, அழுது புலம்புதல் எனும் அர்த்தத்தைக் கொடுத்தாலும், நமது கர்த்தர் கண்ணீர் விட்டார் என்பதற்கான கிரேக்க வார்த்தையானது, அழுது புலம்புதல் எனும் அர்த்தத்தைக் கொடுக்கிறதாக இல்லை; அவர் கண்ணீர் விட்டார்; ஆனால் துக்கத்தில் தம்முடைய சத்தத்தை உயர்த்தி அவர் அழவில்லை, அவர் ஆவியில் கலக்கமடைந்தார், தவித்தார், பெருமூச்சுவிட்டார், மற்றும் தம்முடைய நண்பர்களுடைய துக்கத்திற்குள்ளாக முழுமையாய்ப் பிரவேசித்தார். இது அழுவாரோடு அழுவதற்கும், சந்தோஷப்படுவாரோடு சந்தோஷப்படுவதற்கும் அவருடைய பின்னடியார்களுக்குப் படிப்பினையாக இருக்கின்றதல்லவா?

இயேசுவுடன் காணப்பட்ட யூதர்கள் அவருடைய அனுதாபத்தைக் கவனித்து, “”இதோ இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார்” என்று பாராட்டினார்கள், ஆனால் மற்றவர்களோ, “”இவர் அற்புதம் பண்ணுகிறவராயிற்றே. இவர் இவருடைய நண்பனை உண்மையாய் சிநேகித்திருந்தாரனால், இவர் அவருக்கு உதவியிருக்கலாமல்லவா?” என்று குறை கூறினார்கள்.

இன்றும் கர்த்தர் வியாதியையும், துக்கத்தையும், மரணத்தையும் அனுமதிப்பதற்காக, சிலர் அவரைக் குறை கூறிக்கொண்டிருக்கின்றனர்; இன்னுமாக இவைகளையெல்லாம், அதாவது மனித குடும்பத்தைப் பாடுபடுத்தும், எதிரான காரியங்களை/தீமைகளை அவர் அப்புறப்படுத்தாதற்கான காரணம், தேவன் வல்லமையில் குறைவுப்பட்டிருப்பதினாலோ அல்லது தேவன் விருப்பமற்று இருப்பதினாலோ என்று இவர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். விசுவாசத்தினுடைய அர்த்தம் பின்வருமாறு:-

“”தெளிவின்மையுடன் கர்த்தரை நியாயம் தீர்த்திடாதே
ஆனால் அவருடைய கிருபைக்கென அவரை நம்பிடு;
கடுமையான ஏற்பாட்டின் பின்தனிலே (பின்னால்)
அவர் மறைத்துள்ளார் அவர்தம் புன்னகைக்கும் முகத்தை.”

கல்லறை என்பது, வாயிலில் பெரிய கல்லினால் அடைக்கப்பெற்ற கல்லறையாகும். இந்தக் கல்லை அகற்றும்படிக்கு இயேசு கட்டளைக்கொடுத்தார். மரித்தவரை உயிரோடு விழிக்க [R4161 : page 105] செய்வதற்கான அதே வல்லமையானது, கல்லைப் புரட்டித் தள்ளுவதற்கும் வல்லமையுள்ளதுதான். ஆனால் மனிதனால் செய்ய முடிகின்ற எதையும், அற்புத வல்லமையினால் செய்யக்கூடாது என்ற வரையறையைக் கர்த்தர் கொண்டிருந்தார். இந்த ஒரு படிப்பினையை, நம்முடைய ஜீவியத்தின் அனைத்து விஷயங்களிலும் நாம் பொருத்துவதும் நன்மைக்கு ஏதுவாய் இருக்கும். மேலும் இதற்கு இசைவாகவே நாம் நம்முடைய துக்கங்களுடனும், பிரச்சனைகளுடனும், வேதனைகளுடனும் கர்த்தரிடத்தில் வந்து, அவருடைய ஆசீர்வாதங்களையும், நன்மைக்கு ஏதுவாய் மாற்றும் அவருடைய வழிநடத்துதல்களையும் கேட்கும்போது, நம்மால் செய்யச் சாத்தியமான காரியங்களில் நாம், விசேஷித்த குறுக்கீடுகளை எதிர்ப்பார்க்கக்கூடாது. இப்படி ஒருவேளை எதிர்ப்பார்த்தோமானால், நாம் சந்தேகத்திற்கிடமின்றி ஓர் ஆசீர்வாதத்தை இழக்கின்றவர்களாய் இருப்போம். கல்லறையின் வாயிலினின்று கல்லைப் புரட்டிப்போட்ட மனிதர்கள், அற்புதத்திற்குப் பிற்பாடு, இவைகளையெல்லாம் சிந்தித்துப் பார்க்கையிலும், மற்றவர்களிடத்தில் சொல்லும்போதும், தாங்கள்தான் கல்லைப் புரட்டிப் போட்டார்கள் எனச் சொல்வது தொடர்புடைய ஆசீர்வாதத்தைப் பெற்றிருப்பார்கள் என்பதில், யாருக்குத்தான் சந்தேகம் வரும். இவ்விஷயமானது, அற்புதத்தின் முக்கியத்துவத்தை இவர்களுடைய மனதில் பதிய வைத்திட உதவியிருக்கும் என்பதில் யாருக்குத்தான் சந்தேகம் வரும். நம்மால் முடிந்த யாவற்றையும் நம்முடைய முழுப் பலத்தினால் செய்துவிட்டு, நமது கரம் நிகழ்த்துவதற்கு வலுவற்றதாய் இருக்கும் காரியங்கள் தொடர்புடைய விஷயத்தில், கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருப்போமாக.

அவன் மரித்து நாலு நாளாயிற்றே

“”இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன்” (யோவான் 11:22) என்று கூறின அதே மார்த்தாள், இப்பொழுது கல்லறையினின்று கல்லைப் புரட்டிப்போடும் விஷயத்தில், “”ஆண்டவரே இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே” என்று மறுப்புத் தெரிவித்தாள். யவீருவின் மகளையும், நாயீன் ஊர் [R4162 : page 105] விதவையின் மகனையும் இயேசு உயிரோடு எழுப்பியிருந்ததை மார்த்தாள் அறிந்திருக்க வேண்டும்; ஆனால் இந்த இரண்டு சம்பவங்களிலும், மரித்தவர்கள், மரித்துப்போன கொஞ்சம் நேரத்திற்குள்ளாகவே உயிரோடே எழுப்பப்பட்டவர்களாய் இருந்தார்கள். ஆனால் லாசருவின் விஷயத்திலோ, அழுகிப்போக ஆரம்பித்த பிற்பாடு, மரித்தவனை உயிரோடு கொண்டுவருவதற்கான வல்லமை சாத்தியமற்றதாக மார்த்தாளுக்கும், மற்றவர்களுக்கும் தோன்றியது. இதன் காரணமாகவே நமது கர்ததர் முன்னமே, “”நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்” என்று கூறினார். இச்சம்பவமானது அவருடைய அன்புக்குரிய நண்பிகளாகிய மார்த்தாளுக்கும், மரியாளுக்கும் மட்டுமல்லாமல், அவருடைய அருமை சீஷர்களுக்கும், ஓர் அருமையானப் படிப்பினையாக இருக்கப் போகின்றது; இன்னுமாக அவருடைய வார்த்தைகள் மூலம் விசுவாசிக்கப் போகிற அனைவருக்குங்கூட, அருமையான படிப்பினையாக இருக்கப்போகின்றது. இது மிகவும் பிரம்மிக்க வைக்கின்றதான அற்புதமாகும்.

லாசருவை வெளியே வரும்படிக்கு அழைப்பதற்கு முன்னதாக, நமது கர்த்தர் தம்முடைய சீஷர்கள் முன்னிலையிலும், துக்கிக்கிறவர்களாகிய திரளான ஜனங்கள் முன்னிலையிலும் சத்தமாய் ஜெபம் பண்ணினார். பொருத்தமற்ற இடங்களிலும், நேரங்களிலும் ஜெபம் செய்யப்படுவதின் காரணமாக கர்த்தர், தெருச்சந்திகளில் பரிசேயர்கள் ஏறெடுக்கும் ஜெபத்தைக் கண்டித்தாலும், இங்கு அவர் பொது இடங்களில் ஜெபம் பண்ணுவதற்கு ஒப்புதல் கொடுக்கின்றார். பரிசேயர்கள் தங்கள் ஜெபம் பண்ணுவது, மனுஷர்களால் பார்க்கப்பட வேண்டுமென்றும், கேட்கப்பட வேண்டுமென்றும் ஜெபம் பண்ணுகிறவர்களாய் இருந்தார்கள். ஆனால் இயேசுவின் விஷயத்திலோ, தம்முடைய வல்லமையினால் அல்லாமல், பிதாவின் வல்லமையினால், தேவனின் விரல்களினாலேயே, தாம் இந்த அற்புதங்களை நிகழ்த்தியதாகச் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அறிந்துக்கொள்ளத்தக்கதாக, பிதாவை வெளிப்படுத்தினவராக இருந்தார்.

“”பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார். இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.” இயேசு முணுமுணுக்கவோ, மந்திரங்கள் ஓதவோ, மாயமந்திரமோ செய்யாமல், உரக்க சத்தத்தில் கூப்பிட்டார். இந்த அற்புதத்தினுடைய அநேக அம்சங்களை வைத்துப்பார்க்கும்போது, கர்த்தர் அவருடைய மகிமையடைந்த சபையுடன் கூடச் செய்யவிருக்கும் மகிமையான வேலைக்கு நிழலாய் இருக்கின்றது; அப்போது கல்லறைகளில் இருப்பவர்கள் அனைவரிடத்திற்கும், “”வெளியே வாருங்கள்” என்ற செய்தி உன்னதத்திலிருந்து வரும் (யோவான் 5:28). லாசரு கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டவராகவும், சீலைகளினால் கட்டப்பட்டவராகவும் வெளியே வந்தார். அங்கிருந்தவர்கள் ஆச்சரியமடைந்ததைக் குறித்து விளக்குவதைக் காட்டிலும், நம்மால் நன்கு கற்பனை செய்து பார்க்க முடியும். இயேசு அவர்களை நோக்கி, “”இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள்” என்று சொல்ல வேண்டிய அளவுக்கு, சுற்றியிருந்தவர்களைச் சுயநினைவுக்குக்கொண்டு வர வேண்டியிருந்தது. லாசரு மரித்தபோது, அவருடைய தாடைகள், கைக்கால்கள் அனைத்தும் சீலையினால் கட்டப்பட்டிருந்ததினால், இயேசு கட்டவிழ்க்கக் கூறினார். அற்புதமானது சரியான சந்தர்ப்பத்தில் நடைபெற்றது; இது துக்கித்திருந்த சகோதரிகளுக்கு மாத்திரமல்லாமல், சுற்றி நின்ற அச்சகோதரிகளின் யூத நண்பர்களுடைய நன்மைக்கும் ஏதுவாய் இருந்தது; சுற்றி நின்ற இந்த யூத நண்பர்களில் அநேகர், இந்த அற்புதத்தைக் கண்டதினால், அவரை விசுவாசித்தார்கள்; இந்த அற்புதம் அப்போஸ்தலர்களுக்குக்கூட நன்மைக்கு ஏதுவாய் இருந்தது; இது இன்னும் கொஞ்சம் நாட்களுக்குப் பின்பாகக் கர்த்தர் சிலுவையில் அறையப்படுதல் தொடர்புடையதாய், அப்போஸ்தலர்களுக்கு வரவிருக்கின்ற பரீட்சைகளுக்கு அவர்களை ஆயத்தப்படுத்துகிறதாயும் இருந்தது.

இதற்கிடையில் அற்புதத்தைக் கண்ட சிலர், தங்கள் வழிகளில் போகையில், காரியங்களைப் பரிசேயர்களுக்கும் அறிவித்தார்கள்; இதினிமித்தம் நமது கர்த்தர் மரிக்க வேண்டும் என்று பரிசேயர்கள் மிகுந்த தீர்மானத்துடன் காணப்பட்டார்கள்; இயேசு தீமையான கிரியைகளைச் செய்திட்டார் என்பதினால் அல்லாமல், அவர் ஒரு மோசமான மனுஷன் என்று பரிசேயர்கள் நம்பினதாலும் அல்லாமல், மாறாக பரிசேயர்கள் தங்கள் ஜனங்கள் தொடர்புடைய விஷயத்தில், தங்களுடைய சொந்த நோக்கங்களுக்குள்ளும், சொந்த திட்டங்களுக்குள்ளும் மிகவும் மூழ்கி இருந்தபடியால், கர்த்தர் மரிக்க வேண்டும் என்று தீர்மானமாய் இருந்தார்கள். ஒருவேளை இயேசு இப்படியாகவே தம்முடைய வேலையைச் செய்துகொண்டிருப்பாரானால், சீக்கிரத்தில் ஜனங்கள் அனைவரும் இயேசுவுக்குப் பின்னாகப் போய்விடுவார்கள் என்பதும், தங்களுடைய தேசம் மற்றும் மத விஷயங்களில், தங்களுக்கு அதிகமான சுதந்திரத்தைக் கொடுத்துள்ள உரோம அரசாங்கமானது அதிகாரங்கள் அனைத்தையும் தங்களிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளும் என்பதும், இப்படியாகத் தங்களுடைய ஆட்சி முற்றிலுமாய்க் கவிழ்ந்துப் போய்விடும் என்பதும்தான் பரிசேயர்களுடைய வாதமாக இருக்கின்றது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆபத்தான கட்டம் வந்துள்ளது எனப் பரிசேயர்கள் எண்ணினார்கள். இப்படியாகவே இந்தத் தற்கால அறுவடையின் காலத்தில், இன்னும் கொஞ்சம் காலத்திற்குள்ளாக, கிறிஸ்துவின் சரிரத்தினுடைய கடைசி அங்கத்தாரிடத்தில், கிறிஸ்தவ மண்டலத்தாருடைய மனப்பான்மை காணப்படும். அன்று இயேசுவை எதிர்க்க வேண்டும் என்று ஆலோசனை சங்கம் தீர்மானித்தது போன்று, இன்று சபை கூட்டமைப்பானது (FEDERATIONS) முற்றிலும் ஒழுங்குப்படுத்தப்பட்டு, உயிரடையும்போது, சபைகளின் கூட்டமைப்பானது, “”தற்கால சத்தியத்தை/ஏற்றக்கால சத்தியத்தை” எதிர்ப்பதற்குத் தீர்மானம் எடுக்கும். (வெளிப்படுத்தல் 13:15). இவைகளையெல்லாம் நன்மை கருதி செய்யவேண்டும் என்று வாதமும் காணப்படும். பரலோக இராஜ்யமானது எப்படியாக ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பது, தொடர்புடைய தங்கள் சொந்த கூற்றுகளின் மீதான அதிகப்படியான சார்ந்திருத்தலும், அதிகப்படியான சுயநம்பிக்கையுந்தான் கிறிஸ்தவ மண்டலத்தின் தவறாய் இருக்கின்றது. “”உம்முடைய இராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக” என்று பல நூற்றாண்டுகள் காலமாக இவர்கள் ஜெபம் ஏறெடுத்தும், இவர்கள் இவ்வார்த்தைகளினுடைய அர்த்தத்தை முற்றிலுமாக தவறாய்ப் புரிந்துக்கொண்டபடியால், இவர்களுக்கு இராஜ்யத்திற்கான சம்பவங்கள் அனைத்தும் இசைவற்றதாகவும், அழிவிற்குக் காரணமானதாகவும் தோன்றுகின்றது.

லாசரு எங்கே இருந்தார்?

லாசரு பரலோகத்திற்குச் செல்லவில்லை என்பதற்கு, நமது கர்த்தருடைய வார்த்தைகள் ஆதாரமாய் உள்ளது; ஏனெனில், “”பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனுமில்லை” என்று கர்த்தரே கூறியுள்ளார்; இதற்கு இசைவாகவே அப்போஸ்தலனாகிய பேதுருவின் சாட்சி மறைமுகமாகக் காணப்படுகின்றது; “”தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே” (அப்போஸ்தலர் 2:34). லாசரு எங்கே இருந்தார்? இதைக் குறித்து லாசரு என்ன கூறியுள்ளார்? இது குறித்து லாசரு எதுவும் சொல்லவில்லை. லாசரு சொல்வதற்கு எதுவும் இல்லை, ஏனெனில் அவர் எங்கேயும் செல்லவில்லை, அவர் மரித்துப்போயிருந்தார். நமது கர்த்தர் பரலோகத்தில் உள்ள பிதாவிடம் தமது கண்களை ஏறெடுத்து, ஜெபம் பண்ணி, பின்னர் லாசருவை அழைக்கும்போது அவர் கல்லறையை நோக்கிப் பார்த்தே, “”லாசருவே வெளியே வா” என்று கூறினார் மற்றும் மரித்தவன் கல்லறையினின்று வெளியே வந்தான். இது இறுதியில் முழு உலகத்திற்குமான உயிர்த்தெழுதலின் வல்லமையாக எவ்வாறு அவர் இருக்கப் போகின்றார் என்பதை முன்கூட்டியே காட்டுவதற்கான, கர்த்தருடைய வல்லமையின் காட்சி என்று நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். “”இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்” (யோவான் 5:28). சிலர் முதலாம் உயிர்த்தெழுதலில் முழுமையான பூரணத்திற்கும், மீதியானவர்கள் பாவம் மற்றும் மரணத்தின் நிலைமையினின்று முழுமையான பூரண [R4162 : page 106] மனுஷீக சுபாவத்திற்கு வருவதற்கான வாய்ப்பிற்கும் உயிர்த்தெழுந்து வருவார்கள்; நியாயத்தீர்ப்பின் (அ) ஒழுங்குப்படுத்துதல்களின் மூலமாக, பலன்கள் மற்றும் அடிகள் வாயிலாக, உயிர்த்தெழுதலில் பாவம் மற்றும் மரணத்தின் நிலைமையினின்று, முழுயைமான பூரண மனுஷீக சுபாவத்திற்கு, மீதமான மனுக்குலம் கொண்டுவரப்படுவார்கள்.

இயேசுவின் விசேஷித்த நண்பனும், அவரால் நேசிக்கப்பட்டவனுமான லாசரு, உத்தரிக்கும் ஸ்தலத்திற்கோ, அல்லது நரகத்திற்கோ செல்லாமல், பரலோகத்திற்குதான் போயிருக்க வேண்டும் என்ற தப்பறையான கண்ணோட்டம், கிறிஸ்தவ மண்டலம் முழுவதும் பிரபலமாய்க் கிடக்கின்றது. ஆனால் ஒருவேளை லாசரு பரலோகத்தில் சில நாட்கள் காணப்பட்டிருந்திருப்பாரானால், அவரை இயேசு மீண்டுமாக பூமிக்குரிய ஜீவியாக வாழ அழைப்பது என்பது இயேசு அவரிடம் அன்பற்ற விதத்தில் நடந்துக் கொள்வதாக அல்லவா இருக்கும்; மேலும் லாசரு கிரீடத்தை (அ) குருத்தோலையை (அ) இசைக் கருவியைப் போட்டுவிட்டு, எவ்வளவு அவசர அவசரமாய்ப் பூமியில் வந்திருக்க வேண்டும்! இல்லை! இல்லை! இவை அனைத்தும் முட்டாள்தனமான கற்பனைகளாகும், மற்றும் இவை நம்முடைய பாடத்தின் ஆதார வசனத்தினுடைய விலையேறப்பெற்ற படிப்பினைக்கு, முற்றிலும் இசைவற்றும் காணப்படுகின்றது. இயேசு தம்முடைய மரணத்தின் மூலமாக ஆதாமுக்காகவும், அவருடைய சந்ததியாருக்காகவும், மீண்டும் வாழ்வதற்கான உரிமையைப் பெற்று வைத்திருக்கின்றார்; மேலும் உயிர்த்தெழுதலுடைய வல்லமையின் மூலமாகவே அவர் மனுக்குலத்தை, மரணத்தின் பிடியிலிருந்து கொண்டுவருவார். லாசரு தன்னுடைய மரணத் தருவாயில் தன்னுடைய சுயநினைவை இழந்துப்போனார், மேலும் அவர் விழித்தெழுந்த தருணத்தில் மீண்டுமாக சுயநினைவைப் பெற்றுக்கொண்டு விட்டார். இடைப்பட்ட நான்கு நாட்களில், அவர் மரணத்தில் நித்திரைப் பண்ணிக்கொண்டிருந்தார்; “”நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான்” என்று இயேசு கூறியபடியே, லாசரு நித்திரையாய் இருந்தார். லாசரு விழித்திருக்கவில்லை, ஆகவேதான், இயேசு, “”நான் அவனை எழுப்பப்போகிறேன்” என்று கூறினார்; இப்படியாகவே வேதவாக்கியங்கள் எங்கும் காணப்படுகின்றது. “”மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே” (பிரசங்கி 9:5-10).

முழு உலகமும் எழுந்திருப்பதைக் கற்பனைப் பண்ணிப்பாருங்கள், அது எத்துணை மகிழ்ச்சியான தருணமாக இருக்கும்; ஒருவர் பின் ஒருவராக, மரணம் எனும் மாபெரும் சிறைச்சாலையிலினின்று வெளியே வருவதும், அவரவர்களுடைய நண்பர்களினால் வரவேற்கப்படுவதும், எத்துணை மகிழ்ச்சிகரமான தருணங்களாக இருக்கும்; இன்னுமாக பூமியானது திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்களை அனுபவிப்பதையும், படிப்படியாக ஏதேனில் காணப்பட்ட முழுமையான பூரணத்தை நோக்கி முன்னேறுவதையும், இராஜ்யம் அளிக்கும் ஆசீர்வாதங்கள், சிலாக்கியங்கள் மற்றும் வாய்ப்புகளால் சூழப்பட்டுள்ள மனுக்குலமானது பூமி முழுவதும் நிரம்பிக் காணப்படும் தேவனைப் பற்றின அறிவாகிய வெளிச்சத்தினால், பூரணத்தை நோக்கி முன்னேறுவதையும் காண்பது எத்துணை மகிழ்ச்சிகரமாய் இருக்கும். ஓ! இவைகளெல்லாம், புறமதத்தார் போதித்தவைகளுக்கும் மற்றும் விலங்குகளாக மறுஜென்மத்தில் அவதாரம் எடுப்பது தொடர்பாக கற்பனை பண்ணியுள்ளவைகளுக்கும், எவ்வளவு மாறுபட்டதாய் இராஜ்யத்தில் மனுக்குலத்தாருக்குத் தோன்றும்! ஓ இவைகளெல்லாம், நித்திய சித்திரவதை (அ) உத்தரிக்கும் ஸ்தலத்தின் வேதனைக் குறித்த தவறான உபதேசங்களைக் கேட்டவர்களாகவும், இப்படியான சித்திரவதைக்குள் போகக்கூடாது என்று பயத்தோடே மரித்தவர்களாகவும் காணப்பட்ட மனுக்குலத்திற்கு, இராஜ்யத்தில் எவ்வளவு மாறுபட்டதாய்த் தோன்றும்! மனுக்குலத்தார் எவ்வளவு நன்றியுள்ள இருதயத்தை இராஜ்யத்தில் கொண்டிருப்பார்கள்! அநேகமாகச் சாத்தானுடைய பொய்யானது, இறுதியில் தேவன் மகிமைப்படவே உதவும்; மேலும் அநேகமாக இந்தக் காரணத்தினால்தான், தேவன் இவ்வளவு காலம் அமைதியாய் இருந்து, தம்முடைய பரிசுத்த நாமம், தீமையாய்ப் பேசப்படுவதற்கும், குற்றமாய்ப் பேசப்படுவதற்கும், தம்முடைய குணலட்சணங்கள் பழிதூற்றப்படுவதற்கும் அனுமதித்திருக்க வேண்டும்!

உயிர்த்தெழுதலும், ஜீவனும்

நம்முடைய ஆதார வசனம் குறித்து, இன்னும் ஆழமான கருத்துக்களும் காணப்படுகின்றது; அதை நாம் பார்க்காமல் விட்டுவிடக்கூடாது. அதென்னவெனில்:- கர்த்தரில் இப்பொழுது விசுவாசம் கொண்டு, அவருடைய இரத்தத்தின் மீதான விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டு, மகிமைக்கும், கனத்திற்கும், அழியாமைக்குமான அழைப்பைக் கேட்டு, கர்த்தருக்கு முழுமையான அர்ப்பணம் பண்ணுவதின் மூலமாக, அவ்வழைப்பை ஏற்றுக்கொண்டவர்களாகிய நாம், சிலசமயம், ஏற்கெனவே புதிய ஜீவனை, உயிர்த்தெழுந்த ஜீவனைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், ஏற்கெனவே மரணத்திலிருந்து, ஜீவனுக்குள் கடந்து வந்தவர்களாகவும் பேசப்படுகின்றோம். இவை உயிர்த்தெழுதலுக்கும், ஜீவனுக்குமான அடையாள வார்த்தைகளாகும். பரிசுத்த ஆவியினுடைய ஜெநிப்பித்தல் மூலமாக, நாம் பழைய சுபாவத்தைக் களைந்துப் போட்டவர்களாகவும், கர்த்தரிடத்திலிருந்து புதிய சுபாவத்தைப் பெற்றுக்கொண்டவர்களாகவும் கருதப்படுகின்றோம்; மேலும் இந்தப் புதிய சுபாவமே, முதலாம் உயிர்த்தெழுதலில் பூரணமடைய போகின்றதாய் இருக்கின்றது. நாம் ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்ட மாத்திரத்தில், நம்முடைய மனுஷீக சுபாவம் மரித்துப்போனதாகக் கருதப்படுகின்றபடியால், நம்முடைய தற்போதைய நிலைமையை, உயிர்த்தெழுப்பப்பட்ட நிலைமையாக வேதவாக்கியங்கள் தெரிவிப்பது நியாயமாகவும், சரியானதாகவும் இருக்கின்றது; இன்னுமாக நாம் ஜீவனுக்கான புதிய வழியில் ஆரம்பித்துவிட்டோம் என்றும், தற்போதைய அனுபவங்கள் மறுரூபமடைதல் என்றும், இந்த மறுரூபமாகுதலின் முடிவில், பெலவீனத்திலிருந்து வல்லமைக்கும், மாம்ச சரீரத்திலிருந்து ஆவிக்குரிய சரீரத்திற்கும், கனவீனத்திலிருந்து மகிமைக்குமான நிஜமான மாறுதல் நடைபெறும். அப்போது நாம் கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் மகிமையான மாறுதலில், நிஜமாகப் பங்கெடுக்கின்றவர்களாய் இருப்போம்.

இந்த இளைப்பாறுதலுக்குள், இந்த ஆசீர்வாதத்திற்குள் பிரவேசிக்க முயற்சிப்போமாக! இப்படியான ஓர் உயர்வான ஸ்தானத்திற்கும், சிலாக்கியத்திற்கும் நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவராய் இருக்கின்றார்; மேலும் நாம் கேட்பதற்கும், எண்ணிப்பார்ப்பதற்கும் மேலாக அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படி, நமக்கு மேன்மையாகவும், அதிகமாகவும் அவர் செய்வார். “”எல்லாம் உங்களுடையதே; நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்” (1 கொரிந்தியர் 3:21-23). இதற்கிடையில் இந்த அடையாளமான உயிர்த்தெழுந்த ஜீவியத்தை ஜீவிக்கும் நமக்கும், அப்போஸ்தலருடைய வார்த்தைகள் பொருந்துகின்றதாய் இருக்கின்றது, அதாவது “”நான் ஜீவிப்பது என்பது கிறிஸ்து ஜீவிப்பதாகும்.” ஏனெனில் நாம் அவரை அடையாளப்படுத்துகின்றோம்; நாம் அவருடைய ஸ்தானாதிபதிகளாக இருக்கின்றோம். இதற்கிடையில் நம்முடைய (நிஜமான) உயிர்த்தெழுதலுக்கான நம்பிக்கை அவருக்குள் காணப்படுகின்றது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். “”உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடே கூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்” (கொலோசெயர் 3:3-4).