R5588 (page 365)
லூக்கா 24:50-53; அப்போஸ்தலர் 1:1-11
“”மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?” – யோவான் 6:62.
நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து, அவர் பூமியில் நாற்பது நாட்கள் காணப்பட்ட காரியம், தெய்வீக நோக்கம் நிறைவேற்றப்படுவதற்குப் போதுமான காலமாய் இருந்தது. இஸ்ரயேலையும், உலகத்தையும் ஆளத்தக்கதாக, சிங்காசனத்தில் இருக்கப்போகிறவர் என்று சீஷர்களால் அனுமானிக்கப்பட்டவர், சிலுவையில் அறையப்பட்டதினிமித்தமாக, ஆரம்பத்தில் சீஷர்களுக்கு ஏற்பட்ட குழப்பம் இப்போது நீங்கிவிட்டது. உண்மைகளை சீஷர்களுக்குத் தெரிவித்தக்காரியத்தில், தெய்வீக ஞானம் விளங்குவதை நம்மால் காணமுடிகின்றது. இயேசு பிற்பாடு, தர்சு பட்டணத்தானாகிய சவுலுக்குக் காட்சியளித்ததுபோல, ஒருவேளை உயிர்த்தெழுந்த காலகட்டத்தின்போது, சூரியனுடைய பிரகாசத்திலும் மேலான ஒளியில் காட்சியளித்திருந்தால், சீஷர்கள் எப்படிப் பயமுறுத்தப்பட்டிருப்பார்கள்; ஆனால் இயேசு காட்சியளித்த விதத்தில், சீஷர்கள் இப்படியாகவெல்லாம் பயமுறுத்தப்படவில்லை. சீஷர்கள் தங்களுடைய கர்த்தர் இனி ஒருபோதும் மரித்தவர் அல்ல என்றும், அவர் உயிரோடு இருக்கின்றார் என்றும், அவர் இனி ஒருபோதும் ஒரு மனித ஜீவியாக இராமல், மாறாக ஆவிக்குரிய ஜீவியாக இப்பொழுது காணப்படுகின்றார் என்றும், அவர் இனி மனிதன் போல் நடக்க வேண்டியதில்லை என்றும், மாறாக தேவதூதர்கள்போல், காற்றைப்போன்று வரலாம், போகலாம் மற்றும் விரும்பினால் தோன்றலாம், மறையலாம் என்றும் படிப்படியாகக் கற்றுக்கொண்டார்கள்.
அது மெதுவாகப் புகட்டப்பட்ட பாடமாகும். முதலாம் நாளில் மூன்றுமுறை அவர் காட்சியளித்த பிற்பாடு, அடுத்த ஓய்வுநாளில் அவர் நாலாம்முறைக் காட்சியளிப்பது வரையிலும், இடைப்பட்ட ஒவ்வொரு நாட்களிலும் அவருக்காக எதிர்ப்பார்த்துச் சீஷர்கள் காத்திருந்தனர். இந்தத் தாமதமானது, அவரைப்பற்றின அறிவிற்கான அவர்களது பசியை, தாகத்தையே தூண்டினது. இதற்கிடையில், இயேசு தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின்போது, தங்களிடம் கூறியக் காரியங்களைக் குறித்து, சீஷர்களால் சிந்தித்துப்பாக்க முடிந்தது, மற்றும் சிந்திக்கவுஞ்செய்தார்கள். தாங்கள் பரலோக இராஜ்யத்திற்குப்பதிலாக, பூமிக்குரிய இராஜ்யத்தை எதிர்ப்பார்த்ததில் தவறு செய்துள்ளார்கள் அல்லது மேசியாவின் இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் காலத்தைத் தவறாய்ப் புரிந்துக்கொண்டுள்ளார்கள் என்று சீஷர்கள் உணர்ந்துகொண்டனர்.
எம்மாவு எனும் ஊருக்குப் போகிற வழியில் கொடுக்கப்பட்ட பாடமானது, மிகவும் மனதில் பதியப் பெற்றதாய்க் காணப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பாடமானது இயேசுவைப்பற்றின தீர்க்கதரிசனங்களைக் கையாளுகிறதாய் இருந்து, எப்படி இந்தத் தீர்க்கத்தரிசனங்கள் ஏற்கெனவே நிறைவேறிவிட்டது, அதாவது இந்தத் தீர்க்கத்தரிசனங்களில் சில எற்கெனவே நிறைவேறிவிட்டது என்பதையும், சில இன்னும் எதிர்க்காலத்தில் நிறைவேறும் என்பதையும் அவர்களுக்கு விளக்கிக் கொடுத்ததாய் இருந்தது. அவர் இந்த விளக்கங்களையெல்லாம் கொடுத்தபோது, அவர்கள் தங்கள் இருதயங்கள் கொழுந்துவிட்டு எரிந்தது என்று சரியாகத்தான் சொல்லியிருக்கின்றனர்!
நான்கு முறை அவர் காட்சியளித்துத் தோன்றின பிற்பாடு, அவர் இரண்டு வாரமளவும் எவ்விதமாகவும் காட்சியளித்துத் தோன்றவில்லை. அப்போது அவர்களது பதற்றமான நிலைமை தணிந்தது; மற்றும் பூமிக்குரிய காரியங்கள் (தேவைகள்) அவர்களிடத்தில், சிலவற்றை வலியுறுத்தவும் ஆரம்பித்தன. சீஷர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? இயேசு தங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக அழைப்பதற்கு முன்னதாக, தாங்கள் பண்ணிக்கொண்டிருந்த தொழிலுக்குத் திரும்ப வேண்டுமெனச் சீஷர்கள் அவரவர் தங்களுக்குள்ளாக எண்ணிக்கொண்டிருந்தனர்; ஆனால், எவருமே இந்த முடிவை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தத்தக்கதாக பேச்சைத் துவக்கவில்லை. செய்கைக்கும், எண்ணங்களுக்கும் எப்போதும் தலைவனாக இருந்த பரிசுத்தவானாகிய பேதுரு, இறுதியில் தன்னுடைய தீர்மானத்தைத் தெரிவிக்கும் வண்ணமாக, “”மீன்பிடிக்கப் போகிறேன்,” அதாவது நான் மீன் பிடிக்கும் தொழிலுக்கு மீண்டும் திரும்பப்போகிறேன் என்று கூறினார். பேதுருவின் இந்த ஒரு வார்த்தைப் போதுமானதாய் இருந்தது. மற்றவர்களும் இதே மனநிலையில் காணப்பட்டபடியால், பழைய மீன்பிடிக்கும் தொழில் மறுசீரமைக்கப்பட்டது.
இப்படியான ஒரு தீர்மானம் எடுக்கப்படத்தக்கதாகவே, இயேசு தாம் பரமேறிச் செல்வதைத் தாமதித்தார். தாம் இல்லாத போதும், தம்முடைய ஆசியுடன், சீஷர்கள், மனிதர்களைப் பிடிக்கும் வேலையைத் தொடர வேண்டும் என்பதைச் சீஷர்களுக்கு காண்பித்துக்கொடுக்க கர்த்தர் சித்தமாயிருந்தார். ஆண்டவர் அவர்களது நன்மைகளுக்கடுத்த காரியங்களில் கண்ணோக்கமாய் இருந்து, அந்த இரவில், அவர்களுக்கு எந்த மீனும் அகப்படாதபடிக்குப் பார்த்துக்கொண்டார். அவர்களால் எந்த மீனையும் பிடிக்க முடியவில்லை; அவர்கள் சோர்ந்து போனார்கள், எனினும் [R5589 : page 365] இது அவர்களுக்கு நன்மைக்கு ஏதுவானதுதான்; “”அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” என்ற வசனத்தில் சொல்லப்பட்டதுபோல், இவர்களுக்குப் பண விஷயத்தில் ஏற்பட்ட சோர்வுகூட நன்மைக்கு ஏதுவானதுதான் (ரோமர் 8:28).
காலையில் இயேசு கரையில் நின்றுகொண்டு, விற்பதற்கு மீன் வைத்திருக்கின்றார்களா என அவர்களைக் கூப்பிட்டுக் கேட்டார். அவர்கள் தங்களுக்கு எதுவும் அகப்படவில்லை என்றார்கள். “”நீங்கள் படகுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள்” என்று ஆண்டவர் கூறினார். இப்படியான அறிவுரை முட்டாள்தனமானது என்று அவர்கள் கூறியிருந்திருக்கலாம், ஆனால் அவர்களோ இந்தத் தங்களுடைய துரதிர்ஷடத்தை மாற்றுவதற்கு எதையும் செய்யும் மனநிலையில் காணப்பட்டனர். அவர் சொன்னபடியே, அவர்கள் வலையைப் போட்டார்கள்; உடனடியாக வலை பெரிய மீன்களால் நிரம்பிற்று. அப்போது கரையில் நின்று கொண்டிருப்பவர், தங்களுடைய உயிர்த்தெழுந்த கர்த்தரானவர், தங்களுக்குக் காட்சியளிக்க, மறுபடியும் தோன்றியுள்ளார் என்பதை அறிந்துக்கொண்டார்கள்.
அந்த மீனவர்கள் (சீஷர்கள்) கரைக்கு வேகமாய் வந்தனர். இதுபோன்ற மீன் அதிகமாய் அகப்படும் காரியத்தின் அனுபவத்தை, ஆண்டவர் முன்னொரு தருணத்தின்போது கொடுத்ததை, அவர்கள் அறிந்திருந்தனர்; இது போன்றதான அனுபவமானது, இதற்கு முன்பு ஒரே ஒரு முறைதான் அவர்களுக்கு நடந்துள்ளது. பரிசுத்தவானாகிய பேதுருவுக்காக, படகு மிகவும் மெதுவாகவே நகர்ந்தது. ஆண்டவர் மறைந்துவிடுவார் எனப் பேதுரு அஞ்சினார். பேதுரு தன் மேற்சட்டடையைக் கட்டிக்கொண்டு, கடலிலே குதித்து, கரைக்கு நீந்திச் சென்றார். ஆண்டவர் மறைந்து போகவில்லை, அவர் பரிசுத்தவானாகிய பேதுருவையும், மற்றவர்களையும், ஏற்கெனவே நெருப்பில் வைக்கப்பட்டிருந்த மீனை, காலை உணவாகப் புசிக்கும்படிக்கு, (போஜனம் பண்ணுங்கள் என்று கூறி) வரவேற்றார்.
இங்கு மாபெரும் படிப்பினைக் கொடுக்கப்பட்டது. தேவையான போதெல்லாம் தங்களுடைய ஆண்டவரால் தங்களுக்கும் சமைத்த மீனைக்கொடுக்க முடியும் என்றும், தங்களுடைய மீன் பிடிக்கும் தொழிலில், அவர் சிறந்தது/நன்மையானதெனக் காண்பதற்கேற்ப தங்களுடைய தொழிலில் ஜெயத்தை அவரால் கொடுக்க முடியும் என்றுமுள்ள படிப்பினைகள் கொடுக்கப்பட்டது. இந்தத் தருணத்தில் அவர்களுடைய தேவைகளை இவ்விதமாய்ச் சந்தித்த அவரால், இவ்விதமாகவே எதிர்க்காலத்தில் அவர்களைத் தம்முடைய நாமத்தில் பேசும்படிக்கு அதிகாரமளித்து, அனுப்பி வைக்கும் போதும் சந்திக்க முடியும். சீஷர்களில் எவரும், கரையில் நிற்கும் முன்பின் தெரியாக அந்த நபருடைய பெயர் என்ன என்று கேட்கவில்லை; ஏனெனில் கரையில் நிற்கும் நபருடைய தோற்றமும், அணிந்துள்ள வஸ்திரமும் வித்தியாசமாகக் காணப்பட்டாலுங்கூட, இனி ஒருபோதும் மனித ஜீவியாகக் காணப்படாதவரும், பல்வேறு உருவங்களை எடுத்துக் காட்சியளித்துத் தோன்றுவதற்குரிய வல்லமையை உடையவருமாகிய கர்த்தரே, இன்னொருமுறை காட்சியளித்துத் தோன்றியுள்ளார் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.
பாடம் கற்பிக்கப்பட்டது, இயேசுவும் மறைந்து விட்டார். இன்னொரு முறையும், அவர் தம்முடைய பின்னடியார்களைக் கலிலேயாவில் வைத்துச் சந்தித்தார். இந்தச் சந்திப்பானது, முன்கூட்டியே சொல்லி வைக்கப்பட்டு, ஏற்பாடு பண்ணப்பட்ட சந்திப்பாகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில், இயேசு தம்முடைய பின்னடியார்களைச் சந்திப்பதாக முன்னமே தெரிவித்தார். கிட்டத்தட்ட ஐந்நூறு சகோதர சகோதரிகள் அவரைச் சந்தித்தாகவும், அவருடைய உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாக இருந்ததாகவும் பரிசுத்தவானாகிய பவுல் கூறுகின்றார் (1 கொரிந்தியர் 15:6).
நம்முடைய இந்தப் பாடமானது, விசேஷமாக இயேசுவின் பரமேறுதல் பற்றியதாகும். இது எருசலேமுக்கு அருகாமையிலான பெத்தானியாவில் நடைப்பெற்றது. அவர் தம்முடைய பின்னடியார்களை, பரிசுத்த நகரமாகிய எருசலேமில் சொல்லியிருந்தபடியே, மிகவும் அதிகாலமே சந்தித்திருக்க வேண்டுமெனத் தோன்றுகின்றது. அவர், அவர்களைப் பெத்தானியாவுக்குக் கூட்டிக் கொண்டு போகும்போதுதான், அவர்கள் அறிந்திருப்பது அவர்களுக்கு நலமானது என்றுள்ள காரியங்களையும், அவர் அவர்களை விட்டுப் பிரிவதற்கு முன்னதாகவும், அவர் இனிமேல் அனுப்பவிருக்கின்ற ஆசீர்வாதங்களுக்காக அவர்கள் ஆயத்தப்படத்தக்கதாக, சரியான விசுவாசத்தில் அவர்கள் காணப்படுவதற்கு முன்னதாகவும், அவர்கள் முற்றும் முழுமையாக நம்ப அவசியமானவைகளையும் அவர் விவரித்துக்கொண்டு வந்தார்.
அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகத்தை எழுதின பரிசுத்தவானாகிய லூக்கா அவர்கள், நாற்பது நாட்களளவும் காணப்பட்ட இயேசுவின் போதனைகளுடைய சாரம், தேவனுடைய இராஜ்யம் பற்றியதாகும் என்று நமக்குக் கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் இன்னமும் புரிந்துக்கொள்ளவில்லை; அவர்கள் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுவது வரையிலும், அவர்களால் முழுமையாய்ப் புரிந்துக்கொள்ள முடியாது என்பது உண்மையே. ஆகையால்தான், அவர்கள் எருசலேமை விட்டுப்போகாமலும், எவ்விதமான பிரசங்கம் பண்ணும் வேலையில் ஈடுபடாமலும் இருந்து, பிதா வாக்களித்துள்ளதாக இயேசுவினால் ஏற்கெனவே அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட, பரிசுத்த ஆவி எனும் வரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருக்க மாத்திரமே செய்ய வேண்டுமென்ற காரியத்தை இயேசு அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு வந்தார். யோவான் ஸ்நானன் தண்ணீர் ஞானஸ்நானத்தைக் கொடுத்தார் என்றும், ஆனால் தாமோ தம்முடைய பின்னடியார்கள் மேலான ஞானஸ்நானமும், தகுதியும் பெற்றுக்கொள்ள நோக்கமாய் இருக்கின்றார் என்று, அதாவது பெந்தெகொஸ்தே அன்று, ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள நோக்கமாய் இருக்கின்றார் என்று, இயேசு அவர்களுக்கு விவரித்தார்.
இந்தக் கடைசி தருணமாகிய, ஏழாவது காட்சியின் போது, “”ஆண்டவரே, இக்காலத்திலா இராஜ்யத்தை இஸ்ரயேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்” எனும் மிகவும் முக்கியமான கேள்வியைக் கேட்கும் அளவுக்குரிய நிலைமைக்குச் சீஷர்கள் வந்துவிட்டனர் (அப்போஸ்தலர் 1:6). இராஜ்யமானது யூதேயாவின் இராஜாவாகிய சிதேக்கியாவின் காலத்தில் இஸ்ரயேலிடமிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. அப்போது தேவன், “”உரிமைக்காரனானவர் வருமட்டும் அது இல்லாதிருக்கும்; அவருக்கே அதைக் கொடுப்பேன்” என்ற வார்த்தைகளைக் கூறியிருந்தார் (எசேக்கியேல் 21:25-27).
சீஷர்கள் இயேசுதான் மேசியா என்று எண்ணினார்கள் மற்றும் அவருக்கு இராஜ்யத்தை அளிப்பதற்கான பிதாவின் வேளை வந்துவிட்டது என்றும் எண்ணினார்கள். ஆனால் இவைகளுக்கு நேர்மாறாக, பரலோக இராஜ்யமானது ஆளுகிறவர்களின் கையில் பலவந்தஞ் செய்யப்பட்டதையும், சிங்காசனத்திற்குரிய வாரிசானவர் கொல்லப்பட்டார் என்பதையும் அவர் மரித்தோரிலிருந்து எழுந்துள்ளார் என்பதையுந்தான் சீஷர்கள் கண்டார்கள். இராஜா என்று ஒருவர் இருப்பார் என்ற நம்பிக்கையை, அவர்கள் மீண்டும் அடைந்துவிட்டனர் மற்றும் ஆண்டவர் தம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு இக்காலத்திலா (அ) எதிர்க்காலத்திலா வருவார் என்று இப்பொழுது அவரிடம் கேட்கின்றனர். [R5589 : page 366]
“”பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல” (அப்போஸ்தலர் 1:7) என்ற ஆண்டவருடைய பதிலானது அர்த்தமுடையதாகும். தம்முடைய சீஷர்கள் நியமிக்கப்பட்ட வேளையில், காலங்களையும், வேளைகளையும் குறித்து அறிந்துக்கொள்வார்கள் என்று ஆண்டவர் ஏற்கெனவே அவர்களுக்குத் தெரிவித்திருந்தார்; ஆனால் இக்காரியங்களையெல்லாம் அவர்கள் புரிந்துக்கொள்வதற்கு அப்போது ஏற்றவேளையாக இருக்கவில்லை. அவர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அவர்களுக்குள் பொறுமை வளர்வது என்பது, அவர்களுக்கு நன்மையை உண்டுபண்ணுகிறதாகவும், அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறதாகவும், அவர்களுடைய குணலட்சணங்களைப் பலப்படுத்துகிறதாகவும் இருக்கும்.
மேசியாவின் இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னதாக, கிட்டத்தட்ட 19 நூற்றாண்டுகள் காலமான நீண்ட இடைவெளி காணப்படுமெனப் பிதா அப்போது தெரியப்படுத்தியிருப்பாரானால், அது ஞானமான காரியமாக இருந்திருக்காது; இன்னுமாக தங்கள் நம்பிக்கைகள் தொடர்புடைய விஷயத்தில், நீண்டகால இடைவெளி இருப்பது என்பது கர்த்தருடைய ஜனங்களைச் சோர்வடையப் பண்ணிவிடுவதினால், இக்காரியத்தைப் பிதா வெளிப்படுத்துவது, அவர்களுடைய நன்மைக்கு ஏதுவானதாகவும் இராது. அவர்கள் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்க வேண்டும் என்றும், அவர்கள் பரிசுத்த ஆவியினுடைய அபிஷேகித்தலை அடைவது வரையிலும் தேவனுடைய திட்டம் தொடர்புடைய எதையும் புரிந்துக்கொள்ள விசேஷமாய் எதிர்ப்பார்த்திட வேண்டாம் என்றும் மாத்திரமே ஆண்டவர் சுட்டிக்காட்டினார்.
பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்ட பிற்பாடு அவர்கள் தேவனுடைய பிரதிநிதிகளாக இருப்பதற்கும், அவருடைய செய்தியை எடுத்துப் பேசுவதற்கும் முழுமையாய்த் தகுதியடைவார்கள்; மற்றும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களுக்கு, “”ஏற்ற கால சத்தியம்” வழங்கப்படும். இப்படியாக அவர்கள் உலகத்தாரோடு இருளில் காணப்பட மாட்டார்கள்; இன்னுமாக கர்த்தருடைய நாளும், அவர்கள்மேல் இரவில் திருடன் வருகிற பிரகாரமாக (அ) கண்ணியாக வருவதில்லை. பெந்தெகொஸ்தே நாளின் ஆசீர்வாதங்களானது, அவர்களுடைய சுபாவக் குறைவுகளை மூடிப்போடவில்லை என்றாலும், அவர்களை ஊழியத்திற்கு முற்றும் முழுமையாய்த்தகுதிப்படுத்திற்று; ஏனெனில், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்ட பிற்பாடு, “”ஜனங்கள் அவர்கள் படிப்பறியாதவர்களென்றும், பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டார்கள்” என்று நாம் வாசிக்கின்றோம் (அப்போஸ்தலர் 4:13).
நமது கர்த்தருடைய பரமேறுதல் என்பது, உலகத்தைப் பொறுத்தமட்டில் அல்லாமல், மாறாக அவருடைய சபையைப் பொறுத்தமட்டில் கவனத்தை ஈர்க்கும் ஒரு காட்சியாகும். உலகத்தைக் குறித்து, “”இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது” என்று ஏற்கெனவே கூறிவிட்டார் (யோவான் 14:19). கர்த்தர் தம்மைத் தம்முடைய சீஷர்களுக்கு மாத்திரமே வெளிப்படுத்தின அந்த நாற்பது நாட்களின் காலபகுதியில், உலகமானது அவரைக் காணவில்லை; ஏனெனில் அவர் தம்முடைய உண்மையுள்ள அர்ப்பணம் பண்ணிக்கொண்டவர்களுக்கு மாத்திரமே தம்மை வெளிப்படுத்தினாரே ஒழிய மற்றவர்களுக்கல்ல. அவருடைய சீஷர்களுக்கு மிகவும் உதவியாய் இருந்திட்ட, கண்கள் காணத்தக்கதாக மாம்ச சரீரம் எடுத்துக் காட்சியளித்தல் காரியமானது, கர்த்தர் பரமேறிச் சென்றதோடு நின்றுவிட்டது. அவர்கள் இன்னமும் ஆவியில் ஜெநிப்பிக்கப்படாததினால் அவர்களுடைய விசுவாசத்திற்கு உதவியாகவும் மற்றும் தம்முடைய பரிசுத்தவான்களைத் தம்மோடுகூடச் சேர்த்துக்கொள்வதற்கும், உலகத்தை ஆசீர்வதிப்பதற்கும், அவர் மகா வல்லமையுடனும், மகா மகிமையுடனும் திரும்பி வருவது வரையிலும் அவர்களால் இனி ஆண்டவரைப்பார்க்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ளத்தக்கதாக வழிநடத்தப்படுவதற்காகவும்தான், இப்படியான பரமேறுதலின் காட்சி அவசியமாய் இருந்தது.
நம்முடைய பாடத்தின் ஆதார வசனமானது, இயேசு தம்முடைய இந்தப் பரமேறுதலைக் குறித்து முன்னமே கூறியுள்ளதை நமக்கு நினைப்பூட்டுகின்றது. அவர் முன்பிருந்த இடத்திற்குத் திரும்புவது என்பது, அவர் முன்பிருந்த ஸ்தலத்திற்குத் திரும்புவதாக மாத்திரம் புரிந்துக்கொள்ளப்படக் கூடாது; அவர் உலகத்திற்கான ஈடுபலியாகத்தக்கதாக, மாம்சம் ஆகும்படிக்கு, அவர் விட்டுவந்த ஆவிக்குரிய நிலைமைக்கும் திரும்புவதாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
இயேசு தம்முடைய சீஷர்களை விட்டுப்பிரிந்து அவர்கள் பார்வையிலிருந்து மேகங்களுக்குள்ளாக மறைந்த போது, அவர் காட்சியளிக்கத்தக்கதாக உருவாக்கின சரீரம் மறைந்து போயிருக்க வேண்டும். இந்தச் சரீரத்தை அவர் பயன்படுத்தினதற்கான காரணம் சீஷர்களுடைய விசுவாசத்தை ஸ்திரப்படுத்துவதற்காகவும், இயேசு நிரந்தரமாகவே போய்விட்டார் என்பதை உறுதிப்படுத்துவதற்காகவும், அவர்கள் இனிமேல் ஏதாகிலும் விதத்தில் கர்த்தர் காட்சியளித்துத் தோன்றுவார் என்பதை எதிர்ப்பார்க்க வேண்டாம் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்துவதற்காகவும் ஆகும். இது ஒரு நோக்கத்துடன் கூடிய படிப்பினையாகும்.
இயேசு மறைந்துபோன பிற்பாடு, தேவதூதர்கள் தோன்றி, “”கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்” (அப்போஸ்தலர் 1:11) என்று கூறினதாக சுவிசேஷகர்களில் ஒருவர் பதிவு செய்துள்ளார். இவ்வார்த்தைகளினிமித்தமாக இயேசு தம்முடைய இரண்டாம் வருகையின்போது, மாம்சத்தில் வெளிப்படுவார் எனச் சிலர் நம்புகின்றனர்; ஆனால் இப்படியாகப் புரிந்துக்கொள்பவர்கள் மிகப்பெரிய தவறை செய்கின்றார்கள் என்பதே நம்முடைய புர்pந்துக்கொள்ளுதலாய் இருக்கின்றது. உலகம் இனி இயேசுவைக் காண்பதில்லை; சபையானது, யுகத்தின் முடிவில் தங்களின் உயிர்த்தெழுதலின் மாற்றத்தை அடைவது வரையிலும், விசுவாசத்தின் கண்களினால் மாத்திரமே அவரைக் காண்கின்றவர்களாய் இருப்பார்கள். “”இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.” (1 கொரிந்தியர் 15:50-52; 1 யோவான் 3:2).
கர்த்தர் போன விதத்திற்கு, தேவதூதர்கள் அழுத்தம் கொடுப்பதை நாம் கவனிக்க வேண்டும்; அந்த விதத்தில்தான் நமது கர்த்தருடைய இரண்டாம் வருகையும் காணப்படும். அவர் அமைதியாய், இரகசியமாய் உலகத்திற்குத் தெரியாமல் போய்விட்டார்; அவர் இரவில் திருடன் வருகிற விதத்திலேயே திரும்ப வருவார்; மனுஷ குமாரனுடைய பிரசன்னத்திற்கான/ வந்திருத்தலுக்கான அடையாளங்களை உணரத்தக்கதாக, புரிந்துக்கொள்ளுதலின் கண்களைத் திறக்கப் பெற்றவர்களைத் தவிர, மற்றபடி எவரும் அவருடைய இரண்டாம் வருகையை அறிந்திருப்பதில்லை. இப்படியாகப் புரிந்துக்கொள்ளுதலின் கண்கள் திறக்கப் பெற்றவர்கள், அவருடைய உண்மையுள்ள பரிசுத்தவான்களாகிய சிலர் மாத்திரமே ஆவர். ஆகையால்தான் தம்முடைய இரண்டாம் வருகையின்போது, நோவாவின் நாட்களில் காணப்பட்டது போன்று காணப்படும் என்றார்; அதாவது அவருடைய வந்திருத்தலை அறிந்துக்கொள்ளாமல், மனுக்குலமானது புசித்தும், குடித்தும், விதைத்தும், பெண்கொண்டும், பெண் கொடுத்தும் காணப்படும் என்றார் (மத்தேயு 24:37-39)