R3831 – பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R3831 (page 246)

பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்

THE GREAT TEACHER’S TABLE-TALKS

லூக்கா 14:1-14

“”தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”

ஓய்வுநாள் என்பது யூதர்கள் மத்தியில் காணப்பட்ட விருந்தின் நாளாக இருந்தது; எனினும் நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டவைகளுக்கு இணங்க, உணவுகள் முந்தின நாளே சமைக்கப்பட்டு, ஓய்வுநாளில் சூடு இல்லாமல் குளிர்ந்துப் போன ஆகாரமாகவே பரிமாறப்படுகின்றது. இப்படியான ஓய்வுநாளின் விருந்து உபசரிப்புகளுக்கு, கர்த்தர் எவ்விதமான மறுப்பும் தெரிவித்ததில்லை, ஏனெனில், அவரே பல தருணங்களில் இப்படியான விருந்துகளில் கலந்துக் கொண்டவராகக் காணப்படுகின்றார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக பெத்தானியாவில் நடைப்பெற்ற விருந்தானது, ஓய்வுநாளில் இடம்பெற்ற ஒன்றாகவே இருந்தது; இப்படியாகவே நம்முடைய இப்பாடத்தில் நாம் பார்க்கின்ற விருந்துங்கூட, ஓய்வுநாளிலேயே நிகழ்நத ஒன்றாக இருக்கின்றது. மிக முக்கியமான பரிசேயனும், அதிகாரிகளில் ஒருவரிடமிருந்தே இந்த அழைப்பு வந்தது. இந்த அழைப்பானது இயேசுவுக்கும், அவருடைய சீஷர்களுக்கும், அந்தப் பரிசேயனுடைய [R3831 : page 247] மிக முக்கியமான நண்பர்களாகிய அநேக பரிசேயர்களுக்கும், நியாயசாஸ்திரிகளுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது.

இயேசுவைப் பற்றின கீர்த்திப் பரவிக்கிடந்தது, மேலும் அவருடைய குணலட்சணம், போதனைகள் மற்றும் அற்புதங்கள் தொடர்புடைய விஷயத்தில், அவரைத் தங்களுடைய சொந்த கணிப்பின்படி கணிக்கத்தக்கதாக, அவருடன் நெருங்கி வருவதற்கான இந்த வாய்ப்பில் இந்த மனுஷர்கள் (மற்றப் பரிசேயர்களும், நியாயசாஸ்திரிகளும்) ஆர்வமாய் இருந்தார்கள் என்பதில் ஐயமில்லை; அதாவது இயேசு மதத்தில் வைராக்கியம் கொண்டவரா அல்லது இல்லையா என்றும், அவர் தம்மைத்தாமே பெருமைப்படுத்திப் பேசுகிறவரா (அ) இல்லையா என்றும், ஏன் அவரிடத்தில் பொதுஜனங்கள் மிகவும் ஈர்க்கப்படுகின்றனர் என்றும், ஏன் அவர் ஐசுவரியவான்கள் மற்றும் செல்வாக்கு மிகுந்தவர்களிடத்திலும் ஐக்கியம் வைத்துக்கொள்ள விசேஷமாய் நாடவில்லை என்றும் கணிக்கத்தக்கதாக, அவருடன் நெருங்கி வருவதற்கான இந்த விருந்தில் கிடைக்கும் இந்த வாய்ப்பில், இந்த மனுஷர்கள் ஆர்வமாய் இருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. இயேசு ஐசுவரியவான்கள் மற்றும் செல்வாக்கு மிகுந்தவர்களிடம் ஐக்கியம் வைத்தக்கொள்ளவில்லை என்றாலும், நாம் அறிந்தது வரையிலும், இயேசு ஒருபோதும் விருந்திற்கான அழைப்பை மறுக்காமல், இம்மாதிரியான தருணங்களை, சத்தியத்தை முன்வைப்பதற்கும், பரலோகத்தில் உள்ள பிதாவை மகிமைப்படுத்துவதற்கும், தம்முடன் தொடர்புக்குள் வருபவர்கள் நன்மை அடைவதற்கும், போதிக்கப்படுவதற்கும், உதவப்படுவதற்கும் என எப்போதும் பயன்படுத்தினார்.

விருந்தாளிகள் அவரை அன்புடன்/அனுதாபத்துடன் பார்ப்பதற்குப் பதிலாக, குற்றம் காணத்தக்கதாக கவனித்தார்கள். நல்லப் பண்புகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, குற்றம் தேடினார்கள். ஆனால் மற்றவர்களைப் போன்று அவரிடத்தில், இவர்களால் குறை ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அநேகமாக தற்செயலாக, அல்லது அநேகமாக திட்டமிட்டபடி, இவர்களுடன் நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் காணப்பட்டான். இம்மனுஷன் அவ்வீட்டாரின் (அ) குடும்பத்தாரின் ஓர் அங்கமாக இருக்கலாம்; வியாதியுள்ள இந்த மனுஷனைச் சொஸ்தப்படுத்தத்தக்கதாக வேண்டிக்கொள்ளும் நோக்கத்தில் கூட நமது கர்த்தர், இங்கு அநேகமாக வரவேற்கப்பட்டிருக்கலாம்.

நமது கர்த்தர் வியாதியஸ்தர் மீது அனுதாபத்தின் உணர்வை விசேஷமாய்க் கொண்டிருந்ததாகத் தெரிகின்றது; அவர் உடனடியாக நீர்க்கோவை வியாதியுள்ள மனுஷனைக் கண்டார். பரிசேயர்கள் கூட மற்றவர்களைப் போன்று அற்புதத்தைக் காண ஆர்வத்தில் இருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. இன்னுமாக ஓய்வுநாளில் இப்படியாக ஓர் அற்புதம் நிகழ்த்தப்படுவது என்பது, இவர்களுடைய சடங்காச்சாரத்தின்படி தவறான செயலாக இருந்தது. நமது கர்த்தர் இவ்விஷயத்தைக் கையாளுவதற்கு ஆர்வமாய் இருந்தது என்பது, தெளிவாகத் தெரிகின்றது. அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவரிடமும், சூழ்ந்து இருக்கும் விருந்துக்கு அழைக்கப்பட்ட மற்றப் பரிசேயர்களாகிய கல்விமான்களிடமும், ஓய்வுநாளில் வியாதியஸ்தனைச் சொஸ்தப்படுத்துவது நியாயமானதா (அ) இல்லையா என்று முதலாவதாகக் கேள்விக் கேட்டார். இப்படியான கேள்விகள் எந்த நேரத்திலும், ஜனங்களால் கேட்கப்படும்போது, அவைகளுக்குப் பதிலளிக்க நியாயசாஸ்திரிகள் வல்லவர்களாகவும், விருப்பமுள்ளவர்களாகவும் இருந்தனர்; எனினும் மாபெரும் போதகருக்கு முன்னதாக இவர்கள் அமைதிக் காத்துக்கொண்டனர்; இவர்கள் பதில் சொல்லவில்லை; அவர் என்ன முடிவு எடுத்து, செயல்படப் போகின்றார் என்பதைப் பார்க்கவேண்டும் என்றிருந்தார்கள். அவரைக் குறுக்கிட, அவர்கள் விரும்பவில்லை; இவ்விஷயத்தில் அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். ஓய்வுநாளில் சொஸ்தப்படுத்தக் கூடாது என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்ட எந்தக் காரியமும் நியாயப்பிரமாணத்தில் இல்லை; நமது கர்த்தர் அற்புதத்தை நிகழ்த்தினார். “”அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி அனுப்பிவிட்டார்.” இவ்வார்த்தைகளானது, ஏதோ ஒரு விதத்தில் நமது கர்த்தர் வியாதியஸ்தனைச் சொஸ்தப்படுத்தினார் என்றும், இவ்விதமாக அவர் மூலமான தெய்வீக வல்லமையினாலேயே அற்புதம் நிகழ்ந்தது என்றும் குறிக்கின்றதாய் இருக்கின்றது.

வாய்ப்பேசா விலங்குகளுக்கு உதவி செய்திடுவார்கள்

அற்புதத்தை நிகழ்த்தின பிற்பாடு, நியாயப்பிரமாணமானது ஓய்வுநாளில் வியாதியஸ்தனைச் சொஸ்தப்படுத்த தடைப்பண்ணுவதில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு, நமது கர்த்தர், தாம் செய்ததைக் கூட்டத்தாருக்கு முன்னதாக நியாயப்படுத்தும் வண்ணமாக, “அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ” என்று வினவினார் (லூக்கா 14:5). இக்கேள்விக்குப் பதிலளிக்கப்பட முடியவில்லை. தங்களுடைய சொந்த தேவை/நன்மை/அவசியம் என்றால், ஓய்வுநாளில் உதவி அளிப்பதற்குத் தடைப்பண்ணும் வண்ணமாய், நியாயப்பிரமாணத்தில் ஒன்றும் இல்லை என்ற முடிவுக்குத் தாங்கள் வருவார்கள் என்பது இவர்களுக்கு நன்றாய்த்தெரியும்.. இப்படியாக ஓய்வுநாளில் மனுக்குலத்தைச் சொஸ்தப்படுத்தும் விஷயத்தில் இவர்கள் கொண்டிருந்த எண்ணங்கள்/கருத்துக்கள் தவறானது என்றும், வேதவாக்கியங்கள் அங்கீகரிக்காதது என்றும் தெளிவாக நம்முடைய கர்த்தர் காட்டிக்கொடுத்தார்.

சீனாய் மலையில் நியாயப்பிரமாணங்கள் கொடுக்கப்பட்டது முதல் எப்படி ஒவ்வொரு யூதனும் காணப்படுகின்றானோ, அப்படியே நமது கர்த்தரும் நியாயப்பிரமாண உடன்படிக்கையினுடைய நிபந்தனைகளுக்குக் கீழாகக் காணப்பட்டு, நியாயப்பிரமாணத்தினுடைய ஒவ்வொரு காரியத்திற்கும் கட்டுப்பட்டிருந்தார் என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும். கிறிஸ்து நியாயப்பிரமாணத்தைச் “”சிலுவையின்மேல் ஆணியடிப்பது” வரையிலும் நியாயப்பிரமாண உடன்படிக்கையானது முடிந்தும்/கடந்தும் போகவில்லை என்று பார்க்கின்றோம் (கொலோசெயர் 2:14). ஆகவே நமது கர்த்தர் ஓய்வுநாளில் செய்த வியாதியஸ்தர்களின் சுகமாக்குதல், முதலானவைகள் எதுவும் நாலாம் கற்பனையையோ, அல்லது நியாயப்பிரமாணத்தின் வேறு ஏதாகிலும் அம்சத்தையோ மீறினதாகக் கருதப்பட முடியாது.

சீனாயில் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாண உடன்படிக்கையானது, யூதர்களுக்கு வழங்கப்பட்ட காலத்திற்கு முன்பாக அமலாக்கப்படவில்லை என்றும், இது (யூதர்களையல்லாமல்) வேறு எந்த ஜனங்களுக்கும் கொடுக்கப்படவில்லை என்றும், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களைப் பொறுத்தமட்டில் நியாயப்பிரமாண உடன்படிக்கையானது சிலுவையில் முடிவடைந்தது என்றும் நாம் ஏற்கெனவே வேதாகம பாடங்கள் வெளியீட்டின் (VOLUME) தொகுதி 6-இல், அத்தியாயம் 8-இல் உங்களுக்குக் காண்பித்துள்ளோம். ஆகவே யூதருக்கான ஓய்வுநாளுக்குரிய கடமைகளும் கூட சிலுவையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய இயேசுவின் பின்னடியார்களோ மேன்மையான ஓய்வை, நிஜமான ஓய்வாகிய, “”தேவனுடைய ஜனங்களுக்கான இளைப்பாறுதலை” அனுபவித்தவர்களாய் இருக்கின்றார்கள்; அதாவது தங்களது சொந்த கிரியைகளிலிருந்துள்ள இளைப்பாறுதலை, பயத்திலிருந்துள்ள இளைப்பாறுதலை, தேவனை அன்புகூருகின்றவர்களுக்குத் தேவன் கிறிஸ்து மூலமாய் ஏற்பாடு பண்ணியுள்ள மகிமையான காரியங்களின் மீதான நம்பிக்கையில் உள்ள இளைப்பாறுதலை, உலகத்தார் ஏற்றக்காலத்தில் கர்த்தருடைய அறிவிற்குள்ளாக வருவார்கள் என்றிருக்கும் உலகத்தாருக்கான நம்பிக்கையில் உள்ள இளைப்பாறுதலை அனுபவித்தவர்களாய் இருக்கின்றார்கள். இந்தச் சமாதானத்தின் நிரந்தரமான இளைப்பாறுதலானது நம்மிடம் ஒவ்வொரு நாளும் காணப்படுகின்றது.

இனி ஒருபோதும் பணிவிடைக்காரர்கள் அல்ல, மாறாக குமாரர்கள் ஆவர்

வாரத்தின் முதல்நாளை கிறிஸ்துவனுக்கான ஓய்வுநாளாக அனுசரிப்பதை, நாம் கட்டளை (அ) பிரமாணம் என்று எண்ணாமல், மாறாக அந்த நாளில், நாம் பூமிக்குரிய காரியங்களைவிட்டு, புதுச் சிருஷ்டிக்கான ஆவிக்குரிய காரியங்களை சிந்திப்பதற்கும் மற்றும் ஒருவரோடொருவர் ஐக்கியங்கொள்வதற்குமான மாபெரும் சிலாக்கியத்தை அடைவதை உணர்ந்துக்கொள்ள வேண்டும்; இன்னுமாக நமது கர்த்தர் மரித்தோரிலிருந்து எழுந்து, புதிய சிருஷ்டியின் வேலையை ஆரம்பித்த நாளாகவும், அந்நாள் நினைவில் கொள்ளப்பட வேண்டும். தேவனுடைய ஜனங்களுக்காக, வரும் மகிமையான இளைப்பாறுதலுக்காகவும், நாம் மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டு, நமது கர்த்தருடைய சாயலில் விழித்தெழும்போது, நாம் எதிர்ப்பார்க்கும் நித்திய காலத்திற்குமுரிய பாக்கியமான பூரணத்திற்காகவும் நாம் எதிர்நோக்கி இருக்கின்றோம். இந்தச் சுவிசேஷ யுகத்தில், நம்முடைய பரம பிதா, நம்மைப் பணிவிடை வீட்டாராக அல்லாமல், மாறாக புத்திரர் வீட்டாராகவே, அதாவது கிறிஸ்து இயேசுவுக்குள்ளான புதிய சிருஷ்டியாகவே நம்மிடம் தொடர்புகொள்கின்றார். பணிவிடைக்காரர் வீட்டாராகிய யூதர்களுக்குக் கொடுத்திட்ட நியாயப்பிரமாணங்களை, இந்தப் புதுச் சிருஷ்டியாகிய, அவருடைய ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டவர்களுக்குக் கொடுப்பது பிதாவுக்கு ஏற்றதாய் இராது.

பத்துக்கட்டளைகளில் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு காரியங்களை நினைப்பூட்டுவதன் மூலம் கூட கர்த்தர் புதிய சிருஷ்டிகளைக் குறைவாக நடத்தமாட்டார். கிறிஸ்து இயேசுவுக்குள்ளான புதிய சிருஷ்டிகள் கொலை, விபச்சாரம், விக்கிரக ஆராதனை, பெற்றோர்களைக் கனவீனப்படுத்துதல், பொய்ச்சாட்சி, பொருளாசை, அவிசுவாசத்தின் அமைதியின்மை, தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குதல் முதலியவைகளை விரும்புவதே இல்லை. இவைகளையெல்லாம் நோக்கி இருதயங்களைப் பெற்றிருப்பவர்கள், ஆவியினால் ஜெநிப்பிக்கப்படாதவர்களாகவும், கிறிஸ்துவின் ஆவி இல்லாதவர்களாகவும், அவருடையவர்கள் அல்லாதவர்களாகவுமே காணப்படுகின்றனர். அன்பின் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டு, கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக புதிய சிருஷ்டிகளாக இருப்பவர்களுக்கான, கர்த்தருடைய கட்டளை என்பது, அவர்கள் கிருபையிலும், அறிவிலும், அன்பிலும் வளர்ந்து, தாங்கள் ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்ட தருணத்தில் மரித்ததாகக் கருதப்பட்ட, தங்களுடைய அழியக்கூடிய சரீரங்களின் பெலவீனங்கள் அனைத்தையும் தினந்தோறும் கீழ்ப்படுத்த நாடுவதும் ஆகும். இப்படியாகவே கர்த்தருடைய ஜனங்கள் செய்யவேண்டும் என்று அப்போஸ்தலர்கள் வலியுறுத்தும் வண்ணமாக, “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், துஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது” (எபேசியர் 4:31) என்று கூறியுள்ளனர்; இப்படியாக அப்போஸ்தலர்கள் புதுச் சிருஷ்டிக்கு வலியுறுத்துகையில், அவர்கள் இந்தத் தவறான செய்கைகளை விரும்புகின்றது போன்று கூறாமல், மாறாக மரித்ததாக ஏற்கெனவே கருதப்படும் தங்களின் இந்த மாம்சத்தின் கிரியைகளை நீக்கிப்போட, கொன்று போட, அழித்துப்போடவே வலியுறுத்துகின்றார்கள்.

நமது பிதாவின் கையாளுதல்களும், கட்டளைகளும் ஒருபோதும் நம்முடைய மாம்சத்திற்கு இராமல், [R3832 : page 248] மாறாக நம்முடைய புதிய சிருஷ்டிக்கே கொடுக்கப்பட்டுள்ளது. “”தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல” “ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம் நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.” “”இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர்முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது” (ரோமர் 8:9; 2 கொரிந்தியர் 5:16; 1 பேதுரு 4:6). நாம் மாம்சத்தின்படி நடவாமல், ஆவிக்கேற்றபடி நடக்கின்றபடியால், நாம் தேவனிடத்திலும், மனுஷரிடத்திலும் தெய்வீகப் பிரமாணத்தின் உயர்வான கோரிக்கைகளை நிறைவேற்றுபவர்களாகக் கருதப்படுகின்றோம்.

தாழ்த்துகிறவர்கள், உயர்த்தப்படுவார்கள்

அநேகமாக ஏதோ ஒரு கேள்விக்குப் பதில் கொடுக்கும் வண்ணமாகவே, கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்ட விருந்தாளிகள் பற்றின உவமையைப் கூறி, முதன்மையான ஸ்தானங்களை நாடும் வழக்கத்திற்கு எதிராக எச்சரித்து, பிற்பாடு அதிக கனமுள்ள விருந்தாளி வருகையில், முதன்மையான ஸ்தானங்களில் இருந்தவர்கள், தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதைக் குறித்து நமது கர்த்தர் பேசியிருக்க வேண்டும். இந்த ஒரு சுயநலத்தை, தம்மோடு கூடப் பந்தியமர்ந்தவர்களின் மத்தியில் நமது கர்த்தர் கவனித்தார்; ஆனாலும் இக்காரியம் குறித்து, தாம் பேசத்தக்கதாக எந்தக் கேள்வியும் எழுப்பப்படாமல், தாம் கடிந்துக்கொள்ளத்தக்கதாக, கர்த்தர் இவ்விஷயத்தில் கடுமையாகக் குறுக்கிடவில்லை என்றே நாம் எண்ண வேண்டும்.

இந்த உவமையின் முழுப்பாடமும், தெய்வீகக் கண்ணோட்டத்தின்படியான, மனுஷர்கள் மத்தியிலான சரியான நடந்துக்கொள்ளுதலை விவரிக்கின்றதாகவே இருக்கின்றது, ஆகவே இது நிஜமான கலியாண விருந்தில், தேவன் அழைப்பவர்கள் விஷயத்தில், அவர் கையாளும் விதத்தை அனைவருக்கும் விவரிக்கின்றதாகவும் இருக்கின்றது. மிகுந்த தைரியமுள்ளவர்களுக்கும், அதிகாரத்தை எடுத்துக்கொள்வதற்கு நாடுபவர்களுக்கும் பிரதானமான இடங்கள் கொடுக்கப்படுவதில்லை; மாறாக தன்னைக் குறித்துச் சிறிதாக எண்ணியும், நன்றியுள்ளவர்களாக இருந்தும், தெய்வீகச் சந்நிதானத்தில் மிகவும் தாழ்ந்த இடத்தை நன்றியுடன் நாடும் தாழ்மையான மனதையுடைய மனுஷனையோ (அ) ஸ்திரீயையோ கர்த்தர் மறந்துவிடுவதில்லை.

பேராசை/புகழ் முதலியவற்றை அடையவேண்டும் என்ற ஆர்வம் மனித மனதிற்கு அவசியமான ஒன்றாகும்; இது இல்லையெனில் உலகம் இன்று இவ்வாறு முன்னேற்றமே அடைந்திருக்காது; எனினும் இது கிறிஸ்தவ குணலட்சணம் உருவாகுதல் தொடர்புடைய விஷயத்தில், மிக ஆபத்தான அம்சமாக இருக்கின்றது. “”தன்னைத்தான் தாழ்த்துகிறவன், உயர்த்தப்படுவான், தன்னைத்தான் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்” என்று நம்முடைய ஆண்டவரால் கூறப்பட்டிருக்கும் விஷயமே, இராஜ்யத்தின் மகிமைகளையும், கனங்களையும் வழங்குவதில் தேவனால் கையாளப்படும் கொள்கையாகக் காணப்படும் என்று நமக்கு முன்வைக்கப்பட்டுள்ள வேதவாக்கியங்கள் அனைத்தும் நமக்கு நிச்சயமளிக்கின்றது.

நன்மை செய்வதற்கு அதிகாரத்தை விரும்புதல்

மற்றவர்கள் கர்த்தருடைய கரங்களிலிருந்து பெற்றுக்கொள்வதைக் காட்டிலும் ஏதோ ஓர் உயர்வான இராஜ்யத்தின் மகிமையையும், கனத்தையும், அழியாமையையும் நாம் சுயநலமாய் நாடுவதாகவும், இராஜ்யத்தின் சுவிசேஷத்தினுடைய மகிமையைக் குறைவாய் மதிப்பிடுகின்றவர்களாகிய குருடாக்கப்பட்டவர்களால் நாம் அடிக்கடி குற்றம் சாட்டப்படுகின்றோம். இது முற்றிலும் நியாயமற்ற ஒரு குற்றச்சாட்டாகும்; ஏனெனில் “”தற்கால சத்தியத்தில்” ஆர்வம் அடைந்துள்ளவர்கள், மாபெரும் கலியாண விருந்தில் ஏதோ இடம்பெற்றுக்கொள்ளவும், மகிமையான மணவாட்டி வகுப்பாரின் ஏதோ அங்கத்துவம் பெற்றுக்கொள்ளவும், பூமியின் குடிகளை ஆசீர்வதிக்கும் மாபெரும், பிரம்மாண்டமான வேலையில் பரம மணவாளனுடன் பங்கடைவதற்கான ஏதோ வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவும் நாடத்தக்கதாக, இராஜ்யத்தின் மரியாதைகள் மீது மிகவும் ஆசை கொண்டதாக நமக்குத் தெரியவில்லை. இப்படியான உயர்ந்த கனங்களுடனும், மகிமைகளுடனும், மரியாதைகளுடனும், அழியாமையுடனும் தொடர்புடையவர்களாய் நாங்கள் இருக்கின்றோம் என எங்களைக் குறித்து நாங்கள் எண்ணிக்கொள்ள, இது எங்களுக்குத் தோன்றின காரியமல்ல இப்படியாக எல்லாம் தெய்வீக வார்த்தைகளில் கொடுக்கப்பட்டுள்ளபடியால், இவைகளுக்கு நாம் பாத்திரவான்களாகக் கருதப்படுவதை ஏற்றுக்கொள்வதும், இது நம்மில் கர்த்தருடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும், நடக்கையையும், உண்டுபண்ணத்தக்கதாக அவர் விரும்பின வண்ணமாக அனுமதிப்பதும், விசுவாசத்தின் கடமையாக இருக்கின்றது.

இராஜ்யத்தின் மகிமை, கனம் மற்றும் ஸ்தானம் தொடர்புடைய விஷயத்தில் பேராசை காணப்படாமல், தற்கால ஜீவியம் தொடர்புடைய விஷயத்திலேயே, அதாவது திரைக்கு இந்தப் பக்கத்தில் யார் பெரியவராக இருப்பார்கள் என்பது தொடர்புடைய விஷயத்திலேயே பேராசை காணப்படுகின்றது என்பதே நம்முடைய அனுபவத்தைப் பொறுத்தமட்டில் பிரதான பிரச்சனையாக இருக்கின்றது. கர்த்தருடைய பின்னடியார்களிலுள்ள மிகுந்த தாலந்து உடையவர்களிலும், மிகுந்த திறமை மிக்கவர்களிலும், கடமை உணர்ச்சிமிக்கவர்களிலும் சிலர், இந்த அபாயத்தில் காணப்படுகின்றார்கள் என்றும் நாம் கவனிக்கின்றோம்; மேலும் இந்தக் காரியத்தை அனைவரின் கவனத்திற்குக் கொண்டுவருவது, நமது கடமையில் ஒரு பாகமாக இருக்கின்றது என்று நாம் எண்ணுகின்றோம்; அதாவது இப்படியாக தாலந்துகள் உள்ள ஸ்தானத்தில் காணப்படுபவன், தற்காலத்தில் மகிமைக்காகவும், கனத்திற்காகவும், மதிப்பிற்காகவும், ஸ்தானத்திற்காகவும் பேராசையுடன் நாடுவது என்பது, அவன் கர்த்தருடைய தயவை இழந்துப்போவதற்கும், (ஒருவேளை பெருமையானது, அவனைச் சிறுமந்தையின் அங்கமாக ஏற்றுக்கொள்ளுவதற்கு முற்றிலுமாய்த் தடைப்பண்ணிப்போடாத நிலையில் அவன் காணப்பட்டால்) இராஜ்யத்தில் மிகுந்த தாழ்வான ஸ்தானத்தையாகிலும் இறுதியில் பெற்றுக்கொள்வதையும் இழந்துப்போகப் பண்ணுவதற்கும் ஏதுவாயுள்ளதை அவனுக்கு உணர்த்தும் வண்ணமாக, ஒவ்வொரு கர்த்தருடைய அருமையான ஜனமும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும். “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” (1 பேதுரு 5:6).

ஏழைகளையும், நண்பர்களற்றவர்களையும் நினைவில் கொள்ளுங்கள்

அநேகமாக இன்னும் எழுப்பப்பட்ட கேள்விக்கே, நமது கர்த்தர் விருந்து ஏற்பாடு பண்ணப்படுவதும், அதில் யார் அழைக்கப்பட வேண்டும் என்பதும் தொடர்பான விளக்கத்தை கொடுத்திருக்க வேண்டும். அவர் ஒரு புதிய கருத்தை முன்வைத்தார். பதில் விருந்து எவர்களுடைய வீட்டில் அழைத்துக் கொடுக்கப்படுமோ, அவர்களையே விருந்துக்கு அழைக்கப்படும் வழக்கம் இருந்தது. கைம்மாறு என்ற கருத்தானது, இவ்விஷயத்தில் சுயநலமான கருத்தாக இருந்தது. ஆனால் இப்படியாக நம்மையும் வீட்டிற்கு அழைப்பார் என்று எண்ணி, ஒருவரை நாம் அழைப்பது தவறு என்று காண்பிக்கும் வண்ணமாக நமது கர்த்தருடைய கருத்து இருந்தது என நாம் எண்ண வேண்டியதில்லை. இப்படியாக அழைத்துக்கொள்வது நன்மையான கைம்மாறாக இருப்பினும், கர்த்தருடைய பார்வையில் இப்படிச்செய்வதின் மூலம் எந்தப் பலனும் இருப்பதில்லை, ஏனெனில் ஒவ்வொருவனும், தனக்கான பலனை ஒருவருக்கொருவரிடமிருந்து பெற்றாகிவிட்டது.

தம்மையும், தம்முடைய சீஷர்களையும் விருந்துக்கு அழைத்த வீட்டாருக்கு பிரதி விருந்து செய்யமுடியாதவராக தாம் இருக்கையில், தம்மை அழைத்து விருந்துக்கொடுத்தவர், உண்மையில் இரக்கத்துடன் செயல்பட்டிருக்கின்றார் என்றும், இரக்கமான நோக்கத்தைக் கொண்டிருக்கின்றார் என்றும், தம்மை விருந்துக்கு அழைத்தவருக்குக் காண்பிக்க அநேகமாக கர்த்தர் விரும்பியிருக்கலாம். ஏழைகளுக்கும், உதவியற்றவர்களுக்கும், ஊரார்களுக்கும், சப்பாணிகளுக்கும், குருடர்களுக்கும், விருந்தளிப்பது என்பது, அவர்களுக்கு இரக்கம் காட்டுவதாகவும், தர்மம் பண்ணுவதாகவும், தற்கால ஜீவியத்தில் எவ்விதமான கைம்மாறு கிடைக்காததாகவும், எதிர்க்கால ஜீவியத்தில் நிச்சயமாய் ஆசீர்வாதம் கிடைக்கின்றதாகவும் காணப்படும். விருப்பத்துடனும், அறிந்தும், சரியான நோக்கத்துடனும் செய்யப்படும், ஒவ்வொரு நல்ல செய்கைகளுக்கும் நிச்சயமாய் ஆசீர்வாதம் உண்டு என்றும், தவறான நோக்கத்துடனும், தீமையான உணர்வுகளுடனும் செய்யப்படும் ஒவ்வொரு தீமையான செய்கைகளும், ஒவ்வொரு பாதகமான காரியங்களும் தற்காலத்திலோ (அ) எதிர்க்காலத்தின் ஜீவியத்திலோ நிச்சயமாய் ஏதோ வகையிலான தண்டனையைக் கொண்டுவரும் என்றும் நமது கர்த்தர் சுட்டிக்காண்பிக்கின்றார்.

இப்படிப்பட்டதான நற்கிரியைகளுக்கு, நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் பதில் செய்யப்படும் என்று நமது கர்த்தர் கூறியுள்ளார்; ஆனால் இந்த வார்த்தைகளை அவர் தம்முடைய சீஷர்களாகிய நீதிமானாக்கப்பட்டவர்களிடம் கூறாததினால், இப்படியாக தரித்திரர்களுக்கு விருந்து பண்ணுகிறவர்கள், முதலாம் உயிர்த்தெழுதலில், பரிசுத்தர்களும், பாக்கியவான்களாகவும், தேவனுடைய இராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும், மணவாளனுடன் மணவாட்டி வகுப்பாராகவும், இராஜரிக வகுப்பாராகவும் இருப்பவர்கள் மத்தியில் உன்னதமான ஸ்தானத்தை அடைவார்கள் என்று புரிந்துக்கொள்ளப்பட முடியாது. இது நியாயமாய் இருக்கமுடியாது, ஏனெனில் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைவதற்கு, பரிந்துப்பேசுபவராகிய இயேசுவின் மேல் விசுவாசம் [R3832 : page 249] வைப்பது மாத்திரம் அல்லாமல், இடுக்கமான வழியில் உண்மையாய் நடப்பதும் அவசியம் என்று மற்ற வேதவாக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அப்படியானால் இயேசுவினுடைய வார்த்தைகளின் அர்த்தம் என்ன? மகிமையான தலை மற்றும் மணவாளனுடனான மணவாட்டிகளாகிய, பரிசுத்தவான்களை மாத்திரம் உள்ளடக்கும் முதலாம் உயிர்த்தெழுதலானது, நமது கர்த்தரால் பிரசங்கிப்பட்டதும், “உம்முடைய இராஜ்யம் வருவதாக் உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுவது போல, பூமியிலும் செயல்படுவதாக” என நாம் ஜெபிக்கும்படிக் கற்றுக்கொடுக்கப்பட்டதுமான இராஜ்யத்தினுடைய ஆரம்பித்தலைக் குறிக்கின்றதாக இருக்கும் என நாம் பதிலளிக்கின்றோம். முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குக்கொள்பவர்கள் உலகத்திற்கு இராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும், நியாயாதிபதிகளாகவும் இருப்பார்கள். (1 கொரிந்தியர் 6:2; வெளிப்படுத்தல் 20:6). முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பிற்பாடு, உலகத்திற்கான ஆசீர்வாதமும், அனைத்தையும் திரும்பக்கொடுக்கும் காலங்கள் ஆரம்பமாகும்! அப்பொழுது முழு உலகமும், உதவி பெறத்தக்கதாக ஆயிர வருடங்கள் இந்த நியாயாதிபதிகள் முன்பு நிற்பார்கள்; ஒருவேளை உலகத்தார் உதவி பெற விரும்பினால், மனுஷீக பரிபூரணத்தை அடைவார்கள் (அ) ஒருவேளை தங்களுக்கான மகிமையான வாய்ப்புகளுக்கு இணங்க மறுப்பார்களானால், இரண்டாம் மரணத்தில் அழிக்கப்படுவார்கள்.

உலகத்தாருடைய நியாயத்தீர்ப்பின் நாளில், ஏழைகளுக்கு இரக்கத்தினால் செய்யப்பட்ட ஒவ்வொரு கிரியைகளும், அவனவன் குணலட்சணத்தின் விஷயத்தில் சில ஆசீர்வாதம் கொண்டு வந்துள்ளதைக் காண்பான், அதாவது அவனவன் எந்த இடத்திலிருந்து பரிசுத்தத்திற்கு நேரான பெரும்பாதையான வழியில் நடக்க ஆரம்பிக்க வேண்டும் என்பது தொடர்புடைய விஷயத்தில் ஆசீர்வாதத்தைக் கொண்டு வந்துள்ளதைக் காண்பான். மிகவும் சீர்க்கெட்டவர்கள், அதாவது குணலட்சனத்தினுடைய வளர்ச்சியின் விஷயத்தில், தற்கால ஜீவியத்தில் எதையுமே செய்யாதவர்கள், பெரும்பாதையான வழியின் ஆரம்ப எல்லையிலிருந்தே நடக்க வேண்டியிருக்கும், இன்னுமாக நெடுந்தொலைவில் இருக்கும் பரிபூரணத்தை நோக்கி, நீண்ட பயணமும் மேற்கொள்ள வேண்டியிருக்கும்; ஆனால் தற்காலத்திலேயே நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்து, தங்களுடைய சக மனிதர்களுக்கு உதவியும், ஆறுதலும் அளிக்க நாடியுள்ளவர்கள், இன்னும் விசேஷமாக கர்த்தருடைய சீஷனுக்குக் குடிக்க ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தவர்கள், இராஜ்யத்தில் நன்மை அடைவார்கள். ஆகவே ஊராருக்காக, ஏழைக்காக, குருடனுக்காக ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தவர்கள் (அ) உதவி செய்தவர்கள் நீதிமான்களுடைய உயிர்த்தெழுதலைப் பின்தொடரும் ஆயிர வருட யுகத்தில் பலனையும், ஆசீர்வாதத்தையும் அடைவார்கள் என்பதே கர்த்தருடைய வார்த்தைகளின் அர்த்தமாகும்.

பந்திக்கு முன்பாகவும், பின்பாகவும் பேசப்படும் சம்பாஷணைகளின் முக்கியத்துவம்

இப்படியாக பந்திக்கு முன்பாகவும், பின்பாகவும் பேசப்படும் சம்பாஷணையின் (table talks) விஷயத்தில் நமது கர்த்தர் முன்வைத்த மாதிரியானது, நம்முடைய பைபிள் ஹவுசில் (bible house) பல வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு, மிகுந்த நன்மையைக் கொடுத்து வருகின்றது. ஒழுங்குமுறை கடைபிடிக்கப்படும் பொழுது மிகுந்த நன்மை உள்ளதை நாங்கள் கண்டுபிடித்தோம். எல்லா நாள் காலையிலும் சரியாக ஏழு மணிக்கு, துதியும், ஜெபமும் ஏறெடுக்கப்படுகின்றது (ஞாயிறு அன்று எட்டு மணிக்கு ஏறெடுக்கப்படுகின்றது). பின்னர் நாங்கள் மேஜையைச் சுற்றி அமர்ந்துக் கொண்டு, உணவுக்காக நன்றி செலுத்திக்கொண்டு, இந்த எங்களுடைய ஐக்கியத்தின் நிமித்தம் ஆசீர்வாதம் கிடைக்க ஜெபம் ஏறெடுக்கப்படுகின்றது; பின்னர் எங்களில் ஒருவர் அன்றைய நாளுக்கான பரலோக மன்னாவின் வசனத்தை வாசிக்கின்றார். காலை உணவு நடந்துக்கொண்டிருக்கையில் கேள்விகள் கேட்கப்பட்டு, வசனம் முழுமையாய் விவாதித்து ஆராயப்படுகின்றது. மேஜையிலிருந்து எழும்பும் நேரத்தில், மன்னா வசனத்திற்கான விளக்கவுரை வாசிக்கப்படுகின்றது. இரவு நேரம் உணவு உண்ணப்படும்போதும், அங்கு அமர்ந்து இருக்கும் யார் ஒருவராலும் கேள்வி எழுப்ப்பட்டு, பொதுவாய்க் கருத்துகள் தெரிவிக்க, பொதுவாய் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றது; [R3833 : page 249] அதாவது யாரேனும் கேள்வி கேட்க, பின்னர் பதில் கூறுவதற்கான வாய்ப்புப் பொதுவாக வைக்கப்படுகின்றது. மேஜையில் தலைமை வகுப்பவர், இறுதியில் கேள்விக்கான இறுதி பதிலைக்கொடுக்க எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இம்மாதிரியான சம்பாஷணைகள், அனைத்து விதமான தேவனுடைய வார்த்தைகள் பற்றியும் இருப்பதினால், இப்பதில்கள் அங்கிருப்பவர்கள் ஏற்கெனவே கற்றுக்கொண்டுள்ளது பற்றின ஞாபகங்களைப் புத்துயிர் பெறச்செய்கின்றது. இந்த ஓரு முறையை நாம் தேவனுடைய அருமையான ஜனங்கள் அனைவருக்கும் பரிந்துரைக்கின்றோம். இம்மாதிரியான நேரங்களில் உட்கொள்ளப்படும் உணவும் நன்றாயிருக்கின்றது, அதேவேளையில் ஆவிக்குரிய புத்துணர்வும் மிகுந்த நன்மைக்கு ஏதுவாய் இருக்கின்றது. இம்மாதிரியான வேளையில் தர்க்கங்கள் எழும்புவதற்கு நாம் ஆதரியாமல், மாறாக ஒவ்வொருவரும் அந்த வசனம் (அ) அந்தக் கேள்வி தொடர்புடைய விஷயத்தில், தான் புரிந்துக்கொண்டுள்ளதை தெரிவிப்பதையே நாம் ஆதரிக்கின்றோம். நம்முடைய சுறுசுறுப்பான மனங்களை, இப்படியான பயனுள்ள திசைகளில் திருப்பி, சுறுசுறுப்பாய் வைத்துக்கொள்வது நன்மைக்கு ஏதுவாய் இருக்கும். நம்முடைய கர்த்தரால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த மாதிரி, மிகவும் ஒரு நல்ல மாதிரியாகவே இருக்கின்றது.