R2623 – அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R2623 (page 134)

அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது

KNOWLEDGE INCREASES RESPONSIBILITIES

மத்தேயு 11:20-30

“”வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”

நமது கர்த்தர் தமது ஊழியத்தின் பலனைக்குறித்து, விசேஷமாக தாம் அதிகமான காலம் தங்கியிருந்த கப்பர்நகூமில் தமது ஊழியத்தின் பலனைக் குறித்துக் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்ததுபோன்று தோன்றுகின்றது. இயேசு, மேசியா என்பதற்கான அநேக சாட்சிகளையும், அநேக பலத்தச் செய்கைகளையும் பார்க்கும் வாய்ப்புக் கப்பர்நகூம், கோராசின் மற்றும் பெத்சாயிதா ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டது என்றும், இராஜ்யம் முதலியவைகள் அவர்களுக்கு முன்வைக்கப்பட்டது என்றும், கொடுக்கப்பட்டதற்கு ஏற்ப அவர்கள் பொறுப்பாளிகளாக இருக்கின்றார்கள் என்றுமுள்ள எச்சரிக்கையுடன் நம்முடைய இப்பாடம் ஆரம்பமாகின்றது. கப்பர்நகூம் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டு, உயர உயர்த்தப்பட்டிருந்தபடியால் அல்லது அடையாள வார்த்தைகளில் சிலாக்கியங்களிலும், வாய்ப்புகளிலும் வானபரியந்தம் உயர்த்தப்பட்டிருந்தபடியால், (ஆனால் மனந்திரும்பாத காரணத்தினால்) பின்விளைவு என்பது மிகுந்த கீழான நிலையை அடைதலாகவும், இறுதியில், “”பாதாளப் பரியந்தம் தாழ்த்தப்படும்” வண்ணமாக அழிவை அடைதலாகவும் இருந்தது. “”பாதாளப் பரியந்தம் தாழ்த்தப்படுதல்” என்பது, யூதர்கள் மீது வந்த உபத்திரவத்தில் இந்தத் தேசத்தார் அழிக்கப்பட்டதின் மூலம் நிறைவேறினது. இவர்கள் மேசியாவையும், அவர் ஸ்தாபிக்கப் போவதாக முன்வைத்த இராஜ்யத்தையும் ஏற்றுக்கொள்ள தவறினதால், அழிக்கப்பட்டார்கள்.

நமது கர்த்தர் புறக்கணிக்கப்பட்டது, அவருக்கு ஏமாற்றமாக இருப்பினும், தம்மை அனைத்து ஜனங்களும் ஏற்றுக்கொண்டு வரவேற்பார்கள் என அவர் எதிர்ப்பார்த்திருக்கமாட்டார். தாம் இஸ்ரயேலர்களால் புறக்கணிக்கப்படுவார் என்றும், இராஜ்யத்திற்கான அழைப்பு அவர்களிடமிருந்து கடந்து போய்விடும் என்றும் கர்த்தர் தீர்க்கத்தரிசனங்களிலிருந்து எடுத்துச் சீஷர்களுக்கு கூறியிருந்தபடியால், இவ்விஷயங்களையெல்லாம் அவர் அறிந்திருக்கவே செய்தார். இஸ்ரயேலர்கள் அவரைப் புறக்கணித்தபடியால், இராஜ்யத்தின் கனத்திற்குரிய மகிமையான அழைப்பு, புறஜாதிகள் மத்தியிலிருந்த விசுவாசிகளிடத்திற்குக் கடந்துபோனது. இவ்விதமாகவே, இக்காலத்தில் இருக்கும் நாம் தயவு பெற்றிருக்கின்றோம்.

கோராசின், பெத்சாயிதா மற்றும் தீரு, சீதோன் ஆகிய தேசங்களுக்கிடையே ஆண்டவர் வேறுபடுத்திக் காட்டும் விஷயம் அர்த்தம் உடையதாகும். தீருவும், சீதோனும் செழிப்பான புறஜாதி பட்டணங்களாகும்; மற்றும், இவைகள் பொல்லாங்கினாலும், ஒழுக்கக்கேட்டினாலும் நிரம்பியுள்ளபடியினால், இவ்விரு பட்டணங்களுடைய பெயர்களும்கூட பரிசுத்தமற்ற, தூய்மையற்ற, கட்டுப்பாடற்ற என்பதான ஒரே அர்த்தம் கொண்டவைகளாகக் காணப்படுகின்றன. ஆகவே, ஒருவேளை நமது கர்த்தருடைய பலத்தச் செய்கைகள் இந்தப் பரிசுத்தமற்ற பட்டணங்களில் செய்யப்பட்டிருந்தால், இவர்கள் என்றோ இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, பாவத்திற்காக ஆழமாக வருந்தி, மனந்திரும்பியிருப்பார்கள் என்று நமது கர்த்தர் கூறுவது என்பது, புறஜாதிகளைக் காட்டிலும், மிக மோசமான இருதயநிலையில் பெத்சாயிதா மற்றும் கோராசின் ஜனங்கள் காணப்படுகின்றார்கள், அதாவது தேவன் ஆசீர்வதிப்பதற்குக் கூடாத மோசமான இருதய நிலையில் காணப்படுகின்றார்கள் என்பதைத் தெரிவிக்கின்றது.

இதிலிருந்து நாம், பெரும்பாலான ஜனங்கள் கொண்டிருக்கும் கண்ணோட்டத்திலிருந்து, தேவன் வித்தியாசமான கண்ணோட்டத்தில் இப்படியான காரியங்களைப் பார்க்கின்றார் என்று அறிந்துக்கொள்கின்றோம். இந்தப் பட்டணம் ஒழுக்கமுள்ள (அ) ஒழுக்கமற்ற பட்டணமா? என்றும், இந்த ஜனங்கள் நல்நடத்தை உள்ளவர்களா (அ) இல்லையா? என்றும் வெறுமனே தேவன் கேட்பதில்லை. இந்த ஜனங்களுடைய (அ) அந்த ஜனங்களுடைய, இந்த நபருடைய (அ) அந்த நபருடைய மனநிலை என்ன? அவனுடைய நோக்கம் என்ன? அவன் எதை நாடுகின்றவனாகக் காணப்படுகின்றான்? ஒருவேளை தெய்வீகச் சித்தம் தொடர்பான, தெளிவான வெளிச்சம் அருளப்பட்டால், இவன் எப்படிச் செயல்படுவான்? என்ற கேள்விகளின் அடிப்படையிலேயே கர்த்தர் ஆராய்கின்றவராகக் காணப்படுகின்றார். ஒருவேளை நாம் நம்மையே சீர்த்தூக்கிப் பார்த்து, நாம் ஒழுக்கக்கேடு இல்லாதவர்களாகவும், கீழ்த்தரமாக இல்லாதவர்களாகவும், சிற்றின்ப நாட்டம் இல்லாதவர்களாகவும், முரட்டுத்தனம் இல்லாதவர்களாகவும் இருக்கின்றோம் என்று காண்போமானால், மற்ற அநேகரைக்காட்டிலும் மிகவும் நாகரிகமானவர்களாகவும் காண்போமானால், இவைகளெல்லாம் நல்லதுதான்; மற்றும், நாம் இப்படிக் காணப்படுவது என்பது சிலாக்கியங்கள், இரக்கங்கள், தயவு பெற்றுக்கொள்வதற்கு அவசியமானதே. ஆனால், அதேசமயம் [R2623 : page 135] இவைகள் இருந்தும் கூட, கர்த்தருக்குப் பிரியமாய் இருக்கும் நிலையில், நாம் இன்னமும் மிகக் குறைவுபட்ட நிலையிலும் காணப்படலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்; இன்னுமாக ஒருவேளை தேவன் நமக்குச் சில குறிப்பிட்ட சிலாக்கியங்கள், வாய்ப்புகள் மற்றும் ஆசீர்வாதங்களைக் கொடுக்கையில், அவைகளை நாம் புறக்கணிப்போமாகில், நம்முடைய இச்செயல்பாடானது, ஒழுக்கம் கெட்டவர்களைக் காட்டிலும், அவருடைய பார்வையில் கேடானதாகக் காணப்படலாம் என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

இருப்பதிலேயே அதிகமான தயவைப் பெற்ற கப்பர்நகூமை, நமது கர்த்தர் சோதோமோடு ஒப்பிடுகின்றார். இந்தச் சோதோமினுடைய பொல்லாப்பு மிகவும் பெரியதாய் இருந்தபடியால், அது கர்த்தரிடமிருந்து கடுமையான அழிவைப் பெற்றுக்கொண்டது. சோதோமின் ஜனங்களைப் பார்க்கிலும், கப்பர்நகூமின் ஜனங்கள் கர்த்தருடைய கண்ணோட்டத்தின்படி மிகவும் பொல்லாங்கானவர்கள் என்றும், தெய்வீகத் தயவிற்கு அபாத்திரர்கள் என்றும், தண்டனைப் பெறுவதற்கு அதிக பாத்திரவான்கள் என்றும் தெளிவாகக் கூறப்பட்டது. இது கடுமையான கண்டனமாயினும், இது நீதியானதென்று நம்மால் காணமுடிகின்றது. ஏனெனில், தேவனை அறியாத நிலையில், பாவத்தின் வழியில் நடந்து கொண்டிருந்த பாவப்பட்ட சோதோம் ஜனங்கள், விழுகையின் சுபாவத்தினுடைய போக்கிற்கு ஏற்ப படிப்படியாகக் கீழ்த்தரமாகப் போய்க்கொண்டிருந்தனர்; ஆனால், யூதர்களாகிய கப்பர்நகூமின் ஜனங்கள் சகலவிதத்திலும் அதிக அனுகூலமுடையவர்களாகக் காணப்பட்டார்கள்; மேலும், இவர்கள் கர்த்தரைப் பற்றின அறிவினால், ஆசீர்வதிக்கப்பட்டிருந்தனர். இப்பொழுதோ, தேவன் இவர்களிடத்தில் மேசியாவை அனுப்பிவைத்தார். இன்னுமாக, இவர்கள் மேசியாவின் அற்புதங்களை அடிக்கடி கண்டும் வந்தார்கள். இன்னுமாக, அவர் இவர்கள் மத்தியில் அதிக காலம் வாசம் பண்ணினபடியினால், அவருடைய அருமையான குணலட்சணம் மற்றும் போதனைகளுக்கு இவர்கள் நன்கு அறிமுகமாகியும் இருந்தனர்.

இந்த இரக்கங்கள் மற்றும் சிலாக்கியங்களின் விஷயத்தில் இவர்கள் மேசியாவைப் புறக்கணித்து, தங்களுக்கு வந்த வாய்ப்புகளைப் பற்றிப் பிடித்துக்கொள்ள தவறின விஷயமானது, சத்தியம் மற்றும் நீதியைப் புரிந்துக்கொள்வதில், இவர்கள் சோதோம் ஜனங்களைக்காட்டிலும் கீழ்த்தரமானவர்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், சோதோம் ஜனங்களுக்கு இதே இரக்கங்களும், சிலாக்கியங்களும் அருளப்பட்டிருப்பின், சோதோம் ஜனங்கள், கப்பர்நகூம் ஜனங்கள் போன்று நடந்து கொண்டிருக்க மாட்டார்கள் என்று நமது கர்த்தர் கூறுகின்றார்.

நமது கர்த்தர் கப்பர்நகூமின் ஜனங்களுக்கு அருளின நல்ல வாய்ப்புகளை ஏன் சோதோம் ஜனங்களுக்கு அவர் அருளவில்லை? என்றும், கோராசின் மற்றும் பெத்சாயிதா ஜனங்களுக்கு அவர் அருளின வாய்ப்பை, அக்காலத்திலே ஜீவித்துக் கொண்டிருந்த தீரு மற்றும் சீதோன் [R2624 : page 135] ஜனங்களுக்கு அவர் ஏன் அருளவில்லை? என்றுமுள்ள கேள்விகள் இயல்பாகவே தோன்றலாம். இந்த ஜனங்களில் எவருக்கும் நித்திய ஜீவனுக்கான எவ்விதமான பரீட்சையும் அருளப்படவில்லை என்பதே நமது பதிலாகும். சோதோம் ஜனங்களுக்கு இவ்விதமான எந்தப் பரீட்சையும் இருக்கவில்லை. தீரு, சீதோன் ஜனங்களுக்கும் இவ்விதமான எந்தப் பரீட்சையும் இருக்கவில்லை. பாலஸ்தீனியாவிலுள்ள ஜனங்களுக்கும் கூட நித்திய ஜீவனுக்கான எவ்விதமான பரீட்சையும் காணப்படவில்லை. யூதர்கள் தங்கள் கர்த்தருக்காகவும், நீதிக்காகவும், அன்பு கொண்டிருப்பது தொடர்பாகவும், அவருடைய ஜனங்களாக இருப்பதற்கும், அவருடைய இராஜ்யத்திற்கு ஆதரவு கொடுப்பதற்கும் ஆயத்தமாய் இருப்பது தொடர்பாகவுமே, யூதர்கள் பரீட்சைப் பெற்றிருந்தனர். மேலும் பரீட்சையின் முடிவானது, இவர்கள் கர்த்தருடைய இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளத்தக்கதாகப் போதுமானளவுக்கு நீதியின்பால் அன்பு கொண்டிருக்கவில்லை என்பதாகவும், இராஜ்யத்தின் நண்பர்களாகவும், ஊழியக்காரர்களாகத்தக்கதாக நீதியின்மேல் போதுமானளவுக்கு அன்பு கொண்டிருக்கவில்லை என்பதாகவும் விளங்கினது; பின்னர் இதன் விளைவாக இந்த இவர்களுடைய பட்டணமும், இவர்களுடைய தேசமும், ஜனங்களாகிய இவர்களும் கர்த்தரால் ஸ்தாபிக்கப்படப் போகும் இராஜ்யத்தோடுத் தொடர்புடைய பிரதிநிதிகளாக இருப்பதிலிருந்து, கர்த்தரால் புறக்கணிக்கப்பட்டனர்.

நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்குரிய எவ்விதமான தனிப்பட்ட விதமான பரீட்சையும் இந்த ஜனங்களில் எவருக்கும் வரவில்லை என்பது, அப்போதிருந்த பின்வரும் பல காரியங்களினால் உறுதிப்படுத்தப்படுகின்றது: (1) முழு உலகமும் ஆதாமின் மீறுதலின் மூலம் கண்டனத்திற்குக் கீழாகவே காணப்படுகின்றது; (2) ஈடுபலி அதுவரை கொடுக்கப்படாததால், அது கொடுக்கப்படாதது வரையிலும் எவரும் குற்ற கண்டனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, ஜீவனுக்கான தனிப்பட்ட புதிய பரீட்சையைப் பெற்றுக்கொள்ள முடியாது; (3) லூக்கா 11:24-ஆம் வசனத்தின் வார்த்தைகள் மூலம் எதிர்க்காலத்தில் ஒரு நியாயத்தீர்ப்பின் நாள் உள்ளது என்று, அதாவது யார் நித்திய ஜீவனுக்குப் பாத்திரவான்கள் மற்றும் யார் அபாத்திரர்கள் எனக் காண்பதற்கு, பரீட்சிக்கிற ஒருநாள் உள்ளது என்று தெரிகின்றது (அப்போஸ்தலர் 17:31). அந்த நியாயத்தீர்ப்பின் நாளாகிய ஆயிரம் வருஷம் யுகத்தில், நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை அனைவரும் பெற்றுக்கொள்வார்கள். ஆதாமின் சந்ததி முழுவதற்கும் இந்த வாய்ப்பை அருளுவதே நம்முடைய மீட்பருடைய மரணத்திற்கான நோக்கமாகும். இதற்கிடையில் கப்பர்நகூம், கோராசின் மற்றும் பெத்சாயிதா ஜனங்கள் கர்த்தரைப் புறக்கணித்தபடியால், அவரும் அவர்களைப் புறக்கணித்தார். ஆயிரவருஷ அரசாட்சியின்போது கர்த்தரோடு உடன்சுதந்திரர்களாய் இருக்கும்படிக்குக் கர்த்தர் அழைத்துக்கொண்டிருக்கும் விசேஷமான வகுப்பாருக்கு கப்பர்நகூம், பெத்தசாயிதா, கோராசின் மத்தியிலும் சிலரைக் கர்த்தர் கண்டுப்பிடித்தார், மற்றும் மீதமான மற்றவர்களையும் தேர்ந்தெடுத்துக்கொண்டு வருகின்றார். கர்த்தர் மற்றும் இந்த விசேஷமான வகுப்பாருடைய நீதியின் ஆளுகையின் கீழ், அனைவருக்கும் முழுமையான மற்றும் நியாயமான நியாயத்தீர்ப்பு (அ) நித்திய ஜீவனுக்கான பரீட்சை அருளப்படும். இப்பொழுது அநேக சிலாக்கியங்களைப் பெற்றுக்கொண்டு, தாங்கள் கண்டவைகளுக்கும், அறிந்துக்கொண்டவைகளுக்கும் எதிராக தங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்திக் கொண்டவர்களைக் காட்டிலும், எதிர்க்காலப் பரீட்சையில் தீரு, சீதோன் மற்றும் சோதோமின் ஜனங்கள், அதிகமான கவனம் செலுத்தப்பட்டு, அதிகமான சலுகைகளுடன் கையாளப்படுவார்கள் என்ற விதத்தில் கர்த்தர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்குக் கர்த்தர் புரியவைத்தார். “”நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (மத்தேயு 11:22,24).

பொல்லாப்பிற்கும், சிற்றின்ப பற்றிற்கும், கெட்ட பெயரெடுத்துக் கொண்ட சோதோமின் ஜனங்களுக்கு, மனுக்குலத்தை நியாயந்தீர்க்கும் வேலையைக் கர்த்தர் ஆரம்பிக்கையில், (தேவனுடைய தயவைப் பெற்றுக்கொண்டும், அந்தத் தயவை ஏற்றுக்கொள்ளாமல், அந்தத் தயவை இகழ்ந்த) கப்பர்நகூமின் ஜனங்களைக் காட்டிலும் கர்த்தருடைய கரங்களிலிருந்து அதிக தயவு கிடைக்கும் என்றும், அதிக இலகுவாயிருக்கும் என்றுமுள்ள இந்த வார்த்தைகளினுடைய கடிந்துக்கொள்ளுதல் எவ்வளவு காயப்படுத்துகின்றதாய் இருக்கின்றது! ஆனால், அதற்கென்று ஆயிரம் வருஷம் யுகத்தின் போதினிலான ஜீவனுக்கான பரீட்சையின்போது, கப்பர்நகூமின் ஜனங்கள் அன்பற்றவிதத்தில் கையாளப்படுவார்கள் என்று எவரேனும் அர்த்தம் எடுத்துக்கொண்டால், அது மிகுந்த தவறான அர்த்தமாகிவிடும். ஏனெனில், கர்த்தருடைய வார்த்தைகள் தெளிவாக உலகமானது, “”நீதியோடு நியாயம் தீர்க்கப்படும்” என்றே தெரிவிக்கின்றது. கோபத்தோடும், வன்மத்தோடும், பாதிப்புக்குள்ளாக்க வேண்டும் என்ற விருப்பத்தோடும் அல்லாமல், மாறாக நன்மையான சகலவற்றையும் உலகத்தார்க்குச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடனே, உலகத்தார் நியாயந்தீர்க்கப்படுவார்கள். ஆகவே, கப்பர்நகூமின் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்பின் நாளில் “”இலகுவாகவே,” அதாவது வெகு இலகுவாகவே காணப்படும். கர்த்தரைப் பற்றின தெளிவான மற்றும் முழுமையான அறிவிற்குள் கப்பர்நகூமின் ஜனங்கள் வருவது, அவர்களுக்கு பிரம்மாண்டமான மற்றும் ஆசீர்வாதமான வாய்ப்பாகவே காணப்படும். ஆனால், இவர்களைக் காட்டிலும் சோதோம், கொமோராவின் ஜனங்களுக்கு, இன்னும் அதிகம் இலகுவாயிக்கும். ஏனெனில், இவர்களுடைய பாவங்கள் சில விதத்தில் பெரியவைகளாய் இருந்தாலும் கூட, தேவனுடைய பார்வையில் குறைவாகவே வெறுக்கத்தக்க நிலையில் காணப்படுகின்றது; இவர்களுடைய பாவங்கள் அதிகம் அறியாமையினால் செய்தவைகளாகக் காணப்படுகின்றது மற்றும், குணலட்சணங்களுக்கு எதிராக குறைவாகவே காணப்படுகின்றது.

ஆகவே தீரு, சீதோன் மற்றும் சோதோம் போன்ற பட்டணத்தின் ஜனங்கள் தேவனை எவ்வளவேனும், ஒருபோதும் அறிந்திராததாலும், அவருடைய பிரமாணங்களை ஒருபோதும் அறிந்திராததாலும், மற்றவர்களைக் காட்டிலும், அதாவது தேவனை அதிகமாய் அறிந்திருந்த கப்பர்நகூம், கோராசின் போன்றவர்களைக் காட்டிலும் ஆயிரவருஷ யுகத்தின் அராசாட்சியின்போது, அக்காலத்திற்குரிய செல்வாக்கிற்கும், நிபந்தனைகளுக்கும் அதிசீக்கிரமாக இணங்கி வரக்கூடிய இருதய நிலைமையில் காணப்படுவார்கள். அதாவது, தேவனை அதிகமாய் அறிந்தும், தற்கால ஜீவியத்திலேயே கிடைத்திட்ட வாய்ப்புகளைத் தவறவிட்டு, குணலட்சணங்களை வளர்த்துக்கொள்வதற்குப் பதிலாக, குணலட்சணங்களைத் தகர்த்துப் போட்டவர்களாகிய கப்பர்நகூம், கோராசின், பெத்சாயிதா போன்றவர்களைக் காட்டிலும் உடனடியாக இணங்கி வரக்கூடிய இருதய நிலையில் காணப்படுவார்கள் என்று நாம் அனுமானிக்கின்றோம்.

இவைகளெல்லாம் உதாரணங்களே. ஏனெனில், யோவான் 5:28-29 ஆம் வசனத்தின் காரியங்களை நாம் அறிவோம். “”அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.”

நமது கர்த்தர் இப்பாடத்தில் தெரிவித்தவைகளுக்கு இசைவாக, தற்கால ஜீவியத்தில் தேவனைப் பற்றின அறிவு இல்லாமலும், வாய்ப்புகள் எதுவும் இல்லாமலும் காணப்படுபவர்களுக்கு இதனால், நியாயத்தீர்ப்பின் காலத்தில் எவ்விதத்திலும் அனுகூலமில்லாமல் இருப்பதில்லை [R2624 : page 136] என்பதைக் காண்கின்றோம். இன்னுமாக இவர்கள், தற்கால ஜீவியத்திலேயே வெளிச்சத்தோடு தொடர்புக்குள் வந்தும், அதனை ஏற்க மறுத்துவிட்ட சிலரைக் காட்டிலும், இராஜ்யம் மற்றும் அதன் பிரமாணங்களுடைய நல்ல செல்வாக்கிற்கு மிகவும் தாக்கம் அடைந்தவர்களாகக் காணப்படுவார்கள். எதிர்க்கால நியாயத்தீர்ப்பு (அ) பரீட்சைத் தொடர்பான எத்துணை ஆசீர்வாதமான வாக்குத்தத்தம் இது! ஆதாமின் வீழ்ச்சியின் காரணமாகத் தேவனால் வழங்கப்பட்டதும், மனுக்குலத்திற்குத் தனிப்பட்ட பரீட்சை எதுவும் கொடுக்காமலேயே, முழுச் சந்ததி மீதும் தேவனால், அனுமதிக்கப்பட்டதுமான, இந்த முதலாம் தீர்ப்பினின்று அனைவருக்கும் ஒரு மீட்பை அருளி, இச்சந்ததியின் ஒவ்வொரு அங்கமும், இயேசுவின் கரங்களினின்று, ஏற்றவேளையில், தனிப்பட்ட விதத்தில் (ஜீவனுக்கான) பரீட்சையைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஏற்பாடு பண்ணப்பட்டுள்ளக் காரியமானது, தவிக்கும் சர்வ சிருஷ்டிக்கும் எத்தகைய அருமையான விஷயமாய் உள்ளது. அருளப்படப் போகும் அந்தத் தனிப்பட்ட பரீட்சையின் கீழ், சூழ்நிலைகள் அப்பொழுது எத்துணை சாதகமாய்க் காணப்படும்! சாத்தான் கட்டப்படப் போகிறான் மற்றும் கர்த்தரை அறியும் அறிவினாலும், அவருடைய நல் ஈவுகளினாலும், விழுந்துபோன அவருடைய சிருஷ்டிகளின் சார்பிலான அவருடைய கிருபையான ஏற்பாடுகளினாலும் பூமி நிறைந்துக் காணப்படப்போகின்றது. இந்தத் தம்முடைய விழுந்துபோன சிருஷ்டிகள் கெட்டுப்போய்விட வேண்டும் என்று தேவன் விரும்பாமல் மாறாக, அவர்கள் ஒருவேளை விரும்பினால், கிறிஸ்து மூலம் நித்தியஜீவனை அடையவே விரும்புகின்றார்.

இன்னுமாக, ஆதாமினுடைய சந்ததியிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினருக்கும் கொடுக்கப்படும் ஆசீர்வாதமான வாய்ப்புகள் மற்றும் வரவிருக்கின்ற நியாயத்தீர்ப்புத் தொடர்பான காரியங்கள் பெரும்பாலானவர்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதிலும் விசேஷமாக ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என நமது கர்த்தர் மத்தேயு 11:25-ஆம் வசனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஞானிகளும், கல்விமான்களும், இந்தக் கிருபையான திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, பாவப்பட்ட சோதோமியர்களுக்கு வாய்ப்பு ஒருபோதும் கொடுக்கப்படாமலேயே நித்தியமான சித்திரவதைக்குள் கடந்து சென்றுவிட்டனர் என்றும், (ஒருவேளை சோதோமியருக்கு, கப்பர்நகூமின் ஜனங்களுக்குக் கிடைத்தது போன்று வாய்ப்புக் கிடைத்திருக்குமாயின்) இவர்கள் மனம் திரும்பியிருப்பார்கள் என நமது கர்த்தர் கூறியிருந்தபோதிலும், சோதோமியர்களுக்கு எதிர்க்காலத்திலும் வாய்ப்புக் கிடையாது என்று ஜனங்களுக்குப் போதிக்கின்றவர்களாய் இருக்கின்றனர். இதுவுமல்லாமல் தீரு மற்றும் சீதோன் ஜனங்கள் கர்த்தருடைய ஆசீர்வாதத்தைத் தற்காலத்தில் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாய் இருந்தும் கூட, ஒருவேளை இவர்களும் பாலஸ்தீனியாவில் உள்ளவர்களைப் போன்று, நல்வாய்ப்புப் பெற்றிருப்பார்களானால், மனந்திரும்பி இருப்பார்கள் எனக் கர்த்தர் கூறி இருந்தாலுங்கூட, இவர்களும் நித்தியமான சித்திரவதைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றே, ஜனங்களிடம் இந்த ஞானிகளும், கல்விமான்களும் கூறுகின்றனர். இறுதியாக, பாலஸ்தீனியாவிலுள்ள யூதஜனங்களும் நமது கர்த்தரைப் புறக்கணித்துவிட்டபடியால், இவர்கள் இராஜ்யத்தை இழப்பதோடல்லாமல், நிச்சயமாய் நித்தியமான சித்திரவதையை அனுபவித்தாக வேண்டும் என ஞானிகளும், கல்விமான்களும் நம்மிடம் கூறுகின்றனர். இந்த ஞானிகள் மற்றும் கல்விமான்கள் சத்தியத்தைப் பார்க்கத் தவறிவிட்டனர். இவர்கள் சத்தியத்திற்குக் குருடர்களாக இருக்கின்றனர். இந்த ஞானிகளும், கல்விமான்களும் யூதர்களைப் போன்று, இவர்களுடைய மதபோதகர்களுடைய பாரம்பரியத்தினால் குருடாக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் இவர்கள் குழம்பத்தக்கதாக, நியாயத்தீர்ப்பு நாள் தொடர்பான கர்த்தருடைய வார்த்தைகளுக்கு வியாக்கியானம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அந்நாளை பரீட்சைக்கான நாள் என்றுள்ள அர்த்தத்தில் விவரிப்பதற்குப் பதிலாக, தண்டனைக்குரிய நாள் என்ற அர்த்தத்தில் விவரிக்கின்றனர். இவர்களோ நமது கர்த்தர் இவ்வார்த்தைகளை உரைத்தது முதல், சுமார் 2000 ஆண்டுகள் சோதோம் ஜனங்கள் ஏற்கெனவே நரகத்தில் இருக்கின்றார்கள் என்றும், கடுமையான சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றுமுள்ள தங்களுடைய அறிக்கையைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். இப்பொழுது சோதோம் ஜனங்கள் சித்திரவதை அனுபவிக்கின்றார்கள் என இவர்கள் விவரிப்பதைக் காட்டிலும் அதிகமாக, நியாயத்தீர்ப்பின் நாளுக்குப் பின்னர் சோதோம் ஜனங்கள் அனுபவிப்பார்கள் என இவர்கள் எண்ணுகின்றார்களோ? “”நியாயத்தீர்ப்பின் நாள்” என்ற வார்த்தைகளை இவர்கள் எப்படிதான் புரிந்துவைத்துள்ளனர்? இவர்கள் எவ்விதத்திலும் இவ்வார்த்தைகளுக்கான அர்த்தத்தைச் சரியாகப் புரிந்துக்கொள்ளவில்லை என்பது உறுதியே. இவர்கள் நமது கர்த்தர் எதிர்க்காலத்தையே குறிப்பிட்டார் என்று காண்கின்றனர். ஆயினும், இவர்கள் அனைத்தையும் குழப்பிக் கொண்டதால், இவர்களால் தேவனுடைய குணலட்சணத்திற்கு இசைவாக, இக்காரியத்திற்கு நியாயமான விளக்கத்தைக் கொடுக்கமுடியவில்லை. அதேசமயம், தேவனைக் கனவீனப்படுத்தும் இவர்களுடைய ஈனமான கூற்றுகளுக்கு இசைவாகவும, இக்காரியத்திற்கு நியாயமான விளக்கத்தைக் கொடுக்க முடியவில்லை. வேதாகம பாடங்கள் (STUDIES IN SCRIPTURES), தொகுதி-1, (ஆங்கிலத்தில்) பக்கம் – 137 பார்க்கவும்.

இந்த உலகத்தினுடைய வழக்கத்திற்கு ஏற்ப ஞானிகள் அல்லாதவர்களும், பிரபுக்கள் அல்லாதவர்களும், பாலகராய் இருக்கும் சிலருக்கும் இக்காரியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்ற நமது கர்த்தருடைய வார்த்தைகளானது எத்துணை ஆறுதலாய் உள்ளது. அதாவது, தாழ்மையான மனங்கொண்டவர்களுக்கும், கர்த்தருக்குப் போதிக்க ஆசைக் கொள்வதற்குப்பதிலாக, கர்த்தரால் போதிக்கப்படுவதற்கு ஆயத்தமாய் இருப்பவர்களுக்கும் இக்காரியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்ற கர்த்தருடைய வார்த்தைகள் எத்துணை ஆறுதலாய் உள்ளது. இந்த மாபெரும் ஆசீர்வாதமானது, அன்பானவர்களே நமக்குரியதாகும். மேலும், நாம் தொடர்ந்து தேவனால் போதிக்கப்படுவதற்கும், “”தேவனால் அருளப்பட்டவைகளை அறியும்படிக்கும்,” நாம் எளிமையையும், குழந்தைத் தன்மையையும் தக்கவைத்துக்கொள்வதில் மிகவும் ஜாக்கிரதையாய் இருக்கக்கடவோம். நாம் சத்தியத்தில் களிகூர்ந்து, அதைப் பயன்படுத்துவோமாக மற்றும், அதன் வெளிச்சத்தை மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கடவோம். கல்விமான்கள் மற்றும் இறையியல் பட்டதாரிகள் முதலான பெரும்பாலனாவர்களிடமிருந்து தெய்வீகத் திட்டம் மறைக்கப்பட்டுள்ள உண்மையின் விளக்கமானது, “”இவர்கள் தங்களுடைய தந்திரத்திலே பிடிக்கப்படுவதற்கு” அனுமதிப்பதும், தாழ்மையான மனம் உடையவர்களுக்குத் தம்முடைய திட்டங்களை வெளிப்படுத்துவதும் பிதாவுக்குப் பிரியமாய் இருந்ததேயாகும். “”இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்” (1 கொரிந்தியர் 3:19). குமாரனுடைய முதலாம் வருகையின்போது, குமாரனிடத்திற்குப் பிதாவானவர், வேதபாரகர்களையும், பிரபலமானவர்களையும், நியாயசாஸ்திரிகளையும் ஈர்க்காமல் மாறாக, சொற்பமான கபடற்ற மற்றும் தாழ்மையுள்ள, குறிப்பிட்ட “”உத்தம இஸ்ரயேலர்களையே” ஈர்த்தார். இதே வகுப்பாரே யுகம் முழுவதிலும் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளனர்.

ஆண்டவர் தம்முடைய விசேஷமான போதனைகள், தம்முடைய சாட்சியை ஏற்றுக்கொள்வதற்குரிய சரியான இருதய நிலையைக் கொண்டிராத ஆயத்தமற்றவர்களுக்கும், விருப்பமற்றவர்களுக்கும் கொடுக்கப்படுவதைவிட, பிதா தம்மிடத்தில் தந்தவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்பதை அறிந்திருந்தார். இந்தத் தம்முடைய உண்மையுள்ள சீஷர்களுக்கும், இந்தச் சீஷர்கள் வகுப்பாரிலுள்ள அனைவருக்கும் ஆண்டவர், தம்முடைய போதனைகள் அனைத்தையும், தாம் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டது என அறிவித்தார்; தாம் சுயமாய் எதையும் பேசவில்லை என்றும் கூறினார்; இன்னுமாக, தம்மைப் பிதா தவிர, வேறு எவரும் உண்மையாக, முழுமையாக, நெருக்கமாக அறிந்திருக்கவில்லை என்றும் கூறினார். இன்னுமாக, குமாரனாகிய தம்மைத் தவிர, வேறு எந்த மனிதனும் பிதாவை அறியான் என்றும், குமாரனாகிய தமக்குத்தான் பிதா, தம்மை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் கூறினார். இவைகளைக் குறித்து ஒரு சராசரி வாசகன் முதன்முறையாகப் படிக்கும்போது, கொஞ்சமாகவே புரிந்துக்கொள்கின்றான். [R2625 : page 136] ஆனால், வருடங்களாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவன் கிருபையிலும், கர்த்தரைப் பற்றின அறிவிலும் வளருகையில் நன்கு புரிந்துக்கொள்ளுவான். கிறிஸ்தவ அனுபவத்தின் ஆரம்ப காலத்தில், ஒருவன் இயேசுவையும், பிதாவையும் குறித்துக் கொஞ்சம் அறிவு கொண்டிருந்திருந்தாலும், பிதாவையும், குமாரனையும் நெருக்கமான விதத்தில் அறிந்துக்கொள்வது என்பது அதாவது, அவர்களோடு நன்கு பழகின நிலையில், அவர்களை அறிந்துக்கொள்வது என்பது அதாவது, நெருக்கமான நண்பனுடைய மனதையும், இருதயத்தையும் ஒருவர் அறிவதுபோல பிதாவையும், குமாரனையும் அறிந்துக்கொள்வது என்பது, முற்றிலும் வேறுபட்ட காரியமாக இருக்கின்றது என்பதை உணர்ந்துக்கொள்கின்றான். இப்படியான நெருக்கத்தைப் பெற்றுக்கொண்டிருப்பது என்பது சிலாக்கியமாகும். இந்த நெருக்கம் அனைவருக்கும் இருப்பதில்லை; இதற்காக தேடி நாடவேண்டும், (கதவு) தட்டப்பட வேண்டும்; மேலும், இப்படித் தேடி நாடி, தட்டுதல் என்பது நெருக்கமான ஐக்கியம் மற்றும் உறவுகொள்வதற்கான உண்மையான வாஞ்சையைக் குறிக்கின்றது. இப்படியாக, கிருபையில் வளருதல் என்பது, இராஜ்யத்தில் கர்த்தரோடு உடன் சுதந்திரர்களாகுவதற்கு நாடும் கர்த்தருடைய உண்மையான அனைத்துப் பின்னடியார்களால் உண்மையாய் நாடப்பட வேண்டும்; இது இல்லையெனில், இவர்கள் முன்னேற முடியாது. நாம் எந்தளவுக்குப் பிதாவையும், குமாரனையும் அறிந்துக்கொள்கின்றோமோ, அந்தளவுக்கு நாம் அவர்களில் அன்புகூருகின்றவர்களாகவும், அவர்களுடைய பார்வைக்குப் பிரியமானவைகளைச் செய்வதற்கு அதிகமதிகமாக நாடுகின்றவர்களாகவும் காணப்படுவோம்.

வருத்தப்பட்டு, பாரஞ்சுமக்கிறவர்களே, வாருங்கள்

தாம் பேசுவதை, அங்கு நின்று கேட்டுக்கொண்டிருந்தவர்கள் மத்தியில்சிலர் சரியான நிலைமையில் காணப்பட்டும், இன்னமும் தம்முடைய சீஷர்களாகவில்லை என்பதை மறைமுகமாகச் சொல்லும் விதத்தில், “”வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” எனத் தாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்குத் தனித்தனியே பொருந்தும் வண்ணம் இயேசு கூறினார். பெரும்பான்மையான ஜனங்கள் விஷயத்தில் இருந்த சிக்கல், அவர்கள் வருத்தப்படுகின்றவர்களாகவும் இல்லை, பாரஞ்சுமக்கிறவர்களாகவும் இல்லை. மாறாக, நன்கு சுயதிருப்தியுடன் காணப்படுபவர்களாக இருப்பதினாலேயேயாகும். இவ்வார்த்தைகளை நமது கர்த்தர் பேசுகையில், அவர் சரீரப்பிரகாரமான வருத்தத்தை அல்லது சரீர பிரகாரமான பாரத்தையோ, மனதில் கொண்டவராகப் பேசினார் என்று நாம் எண்ணுவதில்லை. மாறாக, [R2625 : page 137] இருதயத்தின் பாரம் மற்றும் பாவத்தைப் பற்றின வருத்தம் பற்றியே ஆகும். உண்மையுள்ள இஸ்ரயேலர்கள் தங்களுக்கே உண்மையாக இருந்திருப்பார்களானால், அவர்கள் இப்படியான இருதய பாரத்தையும், பாவம் பற்றின வருத்தத்தையும் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள்.

இஸ்ரயேலர்கள் நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ்க் காணப்பட்டார்கள் என்றும், நியாயப்பிரமாணமானது இம்மியும் பிசகாத நிலையை எதிர்ப்பார்க்கின்றது என்றும், பெலவீனங்களுக்கும், பூரணமின்மைகளுக்கும், தப்பறைகளுக்கும் நியாயப்பிரமாணமானது எவ்விதமான சலுகையும் காட்டுவதில்லை என்றும், சீனாயில் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தின் பாரத்தைச் சுமக்க முயற்சிக்கையில், தாங்கள் எப்பொழுதும் குற்றவாளிகளாகக் கண்டிக்கப்படுவதை யூதர்கள் உணர்ந்திருக்கின்றனர் என்றும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். நியாயப்பிரமாணத்தைப் பின்பற்ற முடியாததற்கான காரணம், நியாயப்பிரமாணம் அநீதியானதாக இருந்ததினாலோ அல்லது நியாயப்பிரமாணம் பூரண மனிதனால் கைக்கொள்ளப்பட முடியாது என்பதினாலோ இல்லை மாறாக, அனைவரும் பூரணமற்றவர்களாகவும், விழுந்துபோனவர்களாகவும் காணப்படுவதினாலேயே நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள முடியாமல் போயிற்று. ஆகவே, அக்காலத்தில் வாழ்ந்த யூதர்கள் மத்தியில் பெரும்பான்மையானவர்கள், தாங்கள் பரிசுத்தமாய் இருப்பதாகவும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதாகவும், பாவம் செய்யவில்லை எனவும் அறிக்கைப்பண்ணி வந்தாலும், சிலர் தங்களுக்குள்ளும், மற்றவர்களிடத்திலும் தாங்கள் நியாயப்பிரமாணத்தைப் பூரணமாய்க் கைக்கொள்ளவில்லை எனவும், கைக்கொள்ள முடியவுமில்லை எனவும் நேர்மையாய் ஒப்புக்கொண்டவர்களாகவும் இருந்து, தங்களுடைய பயனற்ற பிரயாசங்களினிமித்தம் வருத்தமும், பாரமும் கொண்டிருந்தார்கள் என நாம் புரிந்துக்கொள்கின்றோம். இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கெனச் சுமை தாங்குபவர் அவசியம் என்பதை உணர்ந்துக்கொண்டிருந்தனர். மேலும், இவர்கள் தங்களுடைய ஆத்துமநோயை உணர்ந்தவர்களாகவும், ஒரு நல்ல வைத்தியனுடைய அவசியத்தையும் உணர்ந்தவர்களாகவும் காணப்பட்டனர். மேலும், இவர்களையே இயேசு தம்மிடத்தில் வந்து இளைப்பாறுதலையும், விடுதலையையும் பெற்றுக்கொள்ளும்படி அழைத்தார்.

இப்படியாக, இளைப்பாறுதலுக்கெனக் கிறிஸ்துவினிடத்தில் வருவது என்பது கிறிஸ்தவ ஜீவியத்திற்கு நேரான முதல் படியாகும். அது நீதிமானாக்கப்படுதலாகும். நமது பாவங்களுக்கான பலியாக அவரை ஏற்றுக்கொள்ளுதலாகும். மேலும், அவரை இவ்விதமாக ஏற்றுக்கொள்வது முதல், அவரை விசுவாசிப்பதின் மூலம் நமக்கு அப்போஸ்தலர் கூறியுள்ளது போன்று சந்தோஷமும், சமாதானமும் கிடைக்கின்றது. (ரோமர் 5:1; 15:13). ஆனால், இவ்வாறாக நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்டப் பின்னர், நாம் செய்யவேண்டியவைகள் இன்னும் சில உள்ளன. அதாவது, நாமே விரும்பி நம்மேல் ஏற்றிக்/ஏற்றுக்கொள்ள வேண்டிய வேறொரு பாரமும், வேறொரு நுகமும் இருக்கின்றது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

நுகம் என்பது அடிமைத்தனத்திற்கான அடையாளமாகும். ஆகவே, நியாயப்பிரமாணத்தின் உடன்படிக்கை எனும் நுகத்தினின்று விடுவிக்கப்பட்டவர்களாகிய விசுவாசிக்கின்ற யூதர்கள் அல்லது சாத்தானுடைய நுகத்தினின்று விடுவிக்கப்பட்டவர்களாகிய விசுவாசிக்கின்ற புறஜாதிகள், கர்த்தருடைய வேலைக்காரர்களாகி, அவருடைய நுகத்தை எடுத்துக்கொண்டு, அவருடைய சித்தம் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நமது கர்த்தர் குறிப்பிடுகின்றார். நுகம் இரண்டு நபர்களுக்கும் பொதுவாக ஏற்பாடு பண்ணப்படுகின்றது. மேலும், நமது கர்த்தர், “”தமது நுகம்” என்றும் குறிப்பிடுகின்றார். இதிலிருந்து கர்த்தர் இயேசுவும் கூட ஒரு வேலைக்காரர் என நாம் புரிந்துக்கொள்கின்றோம். பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு வந்துள்ள அவர், வேலைக்காரரின் நுகத்தைத் தரித்துக்கொண்டு/தம் மீது ஏற்றுக்கொண்டு, பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு, அவரோடு கூட நாம் உண்மையுள்ள சக நுகம் சுமப்பாளியாக இருப்பதற்கும், பாவம் மற்றும் மரணத்தினின்று உலகத்தை விடுவிக்கும் மாபெரும் வேலையில் கிறிஸ்துவாகிய அவரோடு உடன் வேலையாட்களாக இருப்பதற்கும், நம்மை வரவேற்கின்றார்/ அழைக்கின்றார்.

இந்த நுகத்தை தரித்துக்கொள்வதற்குரிய ஆற்றலுக்கான இரகசியம், மற்றும் கிறிஸ்துவோடு அவருடைய வேலையில் கூட்டாளியாக முடிவதற்கான இரகசியம், இப்படியெல்லாம் செய்வதின் விளைவாகிய மாபெரும் ஆசீர்வாதத்தை நம்முடைய சொந்த இருதயத்தில் பெற்றுக்கொள்வதற்கும், நமது ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் பெற்றுக்கொள்வதற்குமுள்ள இரகசியம், கர்த்தர் விவரிக்கிற பிரகாரம், அவர் இருப்பது போல நாமும் சாந்தமும், மனத்தாழ்மையும் உள்ளவர்களாக இருப்பதற்குக் கற்றுக்கொள்வதேயாகும். பெருமையுள்ளவர்களாலும், அகம்பாவம் உள்ளவர்களாலும், சுயசித்தம் கொண்டவர்களாலும், பேராசை கொண்டவர்களாலும், உலக ஞானிகளினாலும், இயேசுவோடு ஒரே நுகத்தில் வேலை புரிவது, கூடாத காரியமாகும் அல்லது நாம் சரியாய் நாடித் தேடிக்கொண்டிருக்கும் ஆத்துமாவிற்கான உண்மையான இளைப்பாறுதலையும் கண்டடைய முடியாது. ஆனால், ஒருவேளை நாம் சாந்தமுள்ளவர்களாகவும், போதிக்கப்படத்தக்கவர்களாகவும், மனத்தாழ்மையுள்ளர்வகளாகவும், காத்தருடைய சித்தத்தை அறிந்துக்கொள்ளவும், என்ன சம்பவித்தாலும் அச்சித்தத்தை நிறைவேற்றுவதற்கு ஆயத்தமானவர்களாகவும் காணப்படுவோமாகில், அப்பொழுது நிச்சயமாக நமது ஆத்துமாவிற்கான இளைப்பாறுதலைக் கண்டடைவோம்; அதாவது, எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் நம்முடைய இருதயங்களை ஆளும்.

மத்தேயு 11:28-29 ஆம் வசனங்களில் இடம்பெறும் இரண்டு இளைப்பாறுதல்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளதை நாம் கவனிக்கின்றோம். விசுவாசத்தின் மூலம் கர்த்தரிடத்தில் வருபவர்களுக்குக் கொடுக்கப்படும் இளைப்பாறுதலே முதலாவது குறிப்பிடப்பட்டுள்ள இளைப்பாறுதலாகும். இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஆத்துமாவிற்கான இளைப்பாறுதலையோ ஒருவன் இயேசுவுடன் நுகத்தை சுமப்பவன் ஆகும்போது கண்டடைகின்றான். இவைகள் இரண்டு ஆசீர்வாதங்களாகும்; முதலாம் ஆசீர்வாதமானது நீதிமானாக்கப்படுதலாகும் அதாவது, நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டதினாலும், இனிமேல் நமது பரம பிதாவுக்கு நாம் அஞ்ஞானிகளாய், அந்நியர்களாயிராமல் மாறாக, கிறிஸ்துவின் இரத்தத்தினால், பிதாவுக்குச் சமீபமாக்கப்பட்டு இருக்கிறோம் என உணர்ந்துக்கொள்ளுவதினாலும் ஏற்படும் சந்தோஷமாகும். இரண்டாவது ஆசீர்வாதமோ, படிப்படியாக இருதயத்தில் வளர்ந்து வரும் சந்தோஷமாகவும், வளர்ந்து நிலைத்திருக்கும் பரிசுத்தஆவியின் சமாதானமும், சந்தோஷமாகவும் காணப்படுகின்றது. ஆனால், இந்த இரண்டாம் ஆசீர்வாதமானது மிகவும் சொற்பமானவர்களாலேயே அடையப்படுகின்றது. பெயர்க்கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இதைக் குறித்தும் எதுவும் தெரியாமலேயே காணப்படுகின்றனர். இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதே இந்தச் சுவிசேஷ யுகத்திற்குரிய, அழைப்பிற்குரிய முக்கியமான நோக்கமாகும். மேலும், கர்த்தரிடத்தில் வருவதற்கும், அவருடைய நுகத்தைச் சுமப்பதற்கும், அவரைக் குறித்துக் கற்றுக்கொள்வதற்கும், இவ்வாறாகத் தேவனுடைய நேசகுமாரனுடைய சாயலைப் போலாகுவதற்கும் தவறுகின்றவர்கள், இந்தச் சுவிசேஷ யுக அழைப்பிற்கும், அதன் விசேஷமான நோக்கத்திற்கும் தவறிவிடுகின்றவர்களாக இருப்பார்கள்; மற்றும், இராஜ்யத்தின் வேலையில் பங்குவகிக்கப் போவதுமில்லை. விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்கப்படும் ஆசீர்வாதமானது, நாம் நுகத்தை எடுப்பதற்கும், பிதாவின் வேலையில் கர்த்தரோடு உடன்வேலையாட்களாக ஆகுவதற்கும், நம்மை ஆயத்தப்படுத்துவதற்கும் மற்றும் தகுதிப்படுத்துவதற்குமேயாகும்.

தம்மோடு கூட நுகத்தின் கீழ், நாம் வரும்படிக்கு நம்மை இயேசு வரவேற்கும் இந்த நுகமானது உலகத்தின் பார்வைக்கு மிகவும் அச்சம் தரக்கூடிய விஷயமாகக் காணப்படுகின்றது. ஜீவனை, நேரத்தை, மற்றும் எல்லாவற்றையும் தேவனுக்கான ஊழியத்திற்கென ஒப்புக்கொடுப்பது என்பது/அர்ப்பணம் பண்ணுவது என்பது மிகவும் பயங்கரமான பாரமாகவும், மிகவும் நியாயமில்லாத நுகமாகவும் உலகத்தாருக்குத் தோன்றுகின்றது. ஆனால், இயேசுவினிடத்தில் வந்தவர்களுடைய மற்றும் நீதிமானாக்கப்படுதல் வாயிலாக சமாதானத்தையும், இளைப்பாறுதலையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளவர்களுடைய கண்ணோட்டத்தில், இந்த நுகம் பற்றின விஷயம் முற்றிலும் வேறுபட்ட காரியமாகும். இவர்களுக்கோ இந்த நுகமானது, “”புத்தியுள்ள ஆராதனையாக” தோன்றும். நமது ஜீவியங்களையும், நமக்கான எல்லாவற்றையும் கர்த்தர் கிருபையாக மீட்டுக்கொண்டபடியினால், அவர் மீட்டுள்ள அந்த ஜீவியத்தின் அனைத்தையும், அவருடைய மகிமைக்காகவும், துதிக்காகவும் பயன்படுத்த வேண்டும். நாம் நுகத்தை நம்மீது ஏற்றுக்கொண்ட/நம்மீது இணைத்துக்கொண்ட பிற்பாடு, அது மெதுவானது எனக் காண்கின்றோம். மற்றும், இந்த நுகத்தினிமித்தம் நமக்கு வரும் எந்தச் சுமையும், எந்தக் கடமையும், எந்தப் பரீட்சையும், எந்தக் கஷ்டமும், எவ்விதமான மனவேதனையும், உண்மையில் இலகுவாகவே காணப்படும்.

ஏன்? ஏனெனில், இந்த நுகத்தைத் தரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, சகலமும் அவர்களுடைய நன்மைக்கு ஏதுவாகவே நடக்கும் என்ற தெய்வீக வார்த்தையினுடைய வாக்குத்தத்தம் காணப்படுகின்றது. சுமை அதிகமாயிருப்பின் ஆசீர்வாதமும், நற்பலனும் கூட அதிகமாக இருக்கும். தற்காலத்திலுள்ள அனுபவங்கள் மிகவும் கடுமையாக இருக்குமாயின், இவர்களுக்கான மகிமை மிகவும் பிரகாசமாகவும், இவர்களுக்கான குணலட்சணம் மிகப் பிரகாசமாகவும் இருக்கும் மற்றும் பரலோக இராஜ்யத்திற்கென இவர்கள் பொருத்தமானவர்களாகவும், மெருகூட்டப்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பது அதிக நிச்சயத்துடனும் இருக்கும். இந்தக் கண்ணோட்டத்தின்படி அனைத்துச் சுமையும் இலகுவாயிருக்கும். ஏனெனில், நமது நுகத்தைப் பற்றி நாம் உணர்ந்துள்ளோம். ஆகையால், அது மிக மெதுவானதாகவும், மிகவும் நியாயமானதாகவும் காணப்படும். இது இலகுவாயிருப்பதற்கு இன்னொரு காரணம், இந்த நுகத்தில், கர்த்தர் இயேசு நம்மோடு கூட இருப்பதாகும். அவர் மாபெரும் சுமைத்தாங்கி. மேலும், நம்மால் சகிக்க முடியாத ஜீவியத்தின் சுமைகளால் நாம் அதிகமதிகமாய் அழுத்தப்படுவதற்கும், சோதிக்கப்படுவதற்கும் அவர் அனுமதிக்க ஒட்டார். அவரது நுகத்தைத் தங்கள் மேல் ஏற்றுக்கொள்கின்றவர்கள் அனைவருடைய, நலனுக்கடுத்த காரியங்களைப் பார்த்துக்கொள்கின்றார். அவர்களுடைய சுமைகள், அவருடைய சுமைகளாக இருக்கின்றது, அவர்களுடைய பரீட்சைகள், அவருடைய பரீட்சைகளாக இருக்கின்றது, அவர்களுடைய நலம், அவருடைய நலமாக இருக்கின்றது. ஆம், இவர்கள் அவரை அன்புகூருவதினால், இவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கின்றது.

கர்த்தர் இந்த வழியில் எந்த அடிமைகளையும் அவராகவே எடுத்துக்கொள்வதில்லை என்றும், அவர் யார் மீதும் இந்த நுகத்தைக் கட்டுவதில்லை / இணைப்பதில்லை என்றும், நாம் வருவதற்கும், இந்த அவருடைய நுகத்தை நம்மீது நாம் கட்டிக்கொள்வதற்கும்/இணைத்துக் கொள்வதற்கும் அவர் அழைக்க மாத்திரமே செய்கின்றார், அதாவது அவருக்கும், அவருடைய ஊழியத்திற்குமென நாம், நம்மையே முழுமையாய் அர்ப்பணம் பண்ணத்தக்கதாக அழைக்க மாத்திரமே செய்கின்றார் என்றும் நினைவில் வைத்துக்கொள்வோமாக.