R5473 – திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R5473 (page 171)

திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்

LABORERS IN THE VINEYARD

மத்தேயு 20:1-16

“”அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” – மத்தேயு 5:45

இந்த உவமையின் அனைத்து அம்சங்களும் நிறைவேறியுள்ளது என்று காண்பிக்கத்தக்கதாக, இந்த உவமைக்கு அர்த்தம் கொடுப்பதற்குச் சிரமமாய் உள்ளது. மாபெரும் போதகர் இதை இராஜ்யத்தின் உவமையாகக் கொடுத்துள்ளார்; ஆகையால் இது இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய சபையின் அனுபவங்களுக்குப் பொருந்தக்கூடியது என்பதை நாம் அறிவோம். ஒருவேளை இந்த உவமையை நாம் இந்த யுகத்தினுடைய பல்வேறு காலக்கட்டங்களுக்குப் பொருத்துவோமானால் நமக்குச் சிக்கல் ஏற்படும்; ஏனெனில் யுகத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தில் அழைக்கப்பட்ட அப்போஸ்தலர்களும், மற்றவர்களும், யுகம் முழுவதிலும் வாழவும் இல்லை மற்றும் வேலை புரியவும் இல்லை. இன்னுமாக இப்படியாகப் பொருத்திப் பார்க்கப்படும்போது, யுகத்தின் ஆரம்பத்தில் காணப்பட்டவர்களுக்கு மாத்திரமே பலன்/கூலி தொடர்புடைய விஷயத்தில் திட்டவட்டமான வாக்குத்தத்தம் அருளப்பட்டிருக்கின்றது என்றும், மற்ற அனைவருக்கும், நியாயமாய்க் கூலி வழங்கப்படும் என்ற நிச்சயம் மாத்திரமே அருளப்பட்டிருக்கின்றது என்றுமுள்ள சர்ச்சையை நாம் எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த உவமைக்கு அர்த்தம் வழங்கும் விஷயத்தில், முந்தி வந்து, கடைசியில் கூலி பெற்றுக்கொள்பவர்களாக இருப்பவர்கள் முறுமுறுப்பதை, எவ்வாறு பொருத்திப்பார்க்க வேண்டும் என்பதிலும் மற்றொரு சிக்கல் காணப்படுகின்றது. சுவிசேஷ யுகத்தில் முதலாவதாக அழைக்கப்பட்ட அப்போஸ்தலர்களும், மற்றவர்களும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினுடைய காலப்பகுதியில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னதாக, தங்களின் உயிர்த்தெழுதலின் மாற்றத்தை அடைவார்கள் என்று மற்ற வேதவாக்கியங்கள் நமக்குச் சுட்டிக்காண்பிக்கின்றன. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள் என்றும், பின்பு உயிரோடு வாழும் நாம் மறுரூபமாவோம் என்றும் பரிசுத்தவானாகிய பவுல் தெரிவித்துள்ளார். இன்னுமாக ஆதி சபையின் அப்போஸ்தலர்களும், மற்றவர்களும், தங்களுக்கு அருளப்படும் பலனைக் குறித்து முறுமுறுப்பார்கள் என்பது நினைத்துப்பார்க்கவே முடியாத ஒன்றாகவும் இருக்கின்றது.

இந்த அனைத்துச் சிக்கல்களையும், இந்த உவமையை, சுவிசேஷ யுகத்தினுடைய ஒட்டுமொத்த சபையினுடைய அனுபங்களோடு பொருத்திப் பார்க்க நாம் முற்படும்போது, நினைவில் கொள்ளவேண்டும்.

ஒருவேளை இந்த உவமையைத் தேவனுடைய ஜனங்களின் தனிப்பட்ட அனுபவங்களுடன் நாம் பொருத்திப்பார்க்க முற்பட்டாலுங்கூட, நமக்குச் சிக்கல்கள் ஏற்படுகின்றது. இப்படியாக ஒருவேளை நாம் பொருத்திப்பார்த்தால், வாழ்க்கையின் ஆரம்ப வயதிலேயே கிறிஸ்தவ ஜீவியத்தை ஆரம்பித்து, வாழ்க்கையின் முடிவு தருணமாகிய சாயங்கால வேளை வரை கர்த்தருக்கான ஊழியத்தில், உண்மையுள்ளவர்களாக இருப்பவர்களே, முதலாவதாக/முந்தி அழைக்கப்பட்டு, கூலியைக் குறித்து வாக்களிக்கப்பட்டார்கள் என்று நாம் கூற வேண்டியிருக்கும். இன்னுமாக கிறிஸ்தவ ஜீவியத்திற்குள்ளாக வாழ்நாட்களின் பிந்தைய நாட்களில் வந்து, தங்களுடைய கொஞ்சமான நேரத்தினாலும், பலத்தினாலும், காலங்களினாலும் கர்த்தருடைய நோக்கங்களுக்காக வேலை புரிபவர்கள், பிந்தி அழைப்பைக் கேட்டவர்களாய், அதாவது பதினோராம் மணி வேளையில் அழைப்பைக் கேட்டவர்களாய் இருக்கின்றார்கள் என்று சொல்ல வேண்டியிருக்கும். கர்த்தருடைய வேலையில் செலவிட்ட நேரம் பொருட்படுத்தப்படாமல், இவர்கள் அனைவருக்கும் ஒரே கூலிக் கொடுக்கப்படும் என்று நாம் அர்த்தம் கூறினாலும், ஆரம்பத்திலேயே அழைக்கப்பட்டவர்கள் முறுமுறுத்தார்கள், குறைக்கூறினார்கள், அதிருப்தியடைந்தார்கள் என்ற விஷயத்தில் விளக்கம் கொடுப்பதில் இன்னமும் சிரமமே உள்ளது.

கர்த்தருடைய சித்தத்திற்கு எதிராகவும், அவர் தம்முடைய ஜனங்களுக்குக்கொண்டிருக்கும் அவருடைய நீதியான மற்றும் அன்புடன் கூடிய ஏற்பாடுகளுக்கு எதிராகவும் முறுமுறுப்பவர்கள், திரைக்கு அப்பாலுள்ள பலனாகிய இராஜ்யத்தை ஒருபோதும் அடையமாட்டார்கள் என்பதில் நமக்கு உறுதியே. “”நல்லது” என்று ஆண்டவரிடம் பாராட்டுதலையும், உயிர்த்தெழுதலின் மாற்றத்தையும் அடைகிற எவரும், முறுமுறுக்கும் விஷயத்தில் தொலைவில்தான் இருப்பார்கள் என்பதிலும் நமக்கு நிச்சயமே. இவர்கள் ஒவ்வொரு சிறு ஊழியங்களிலும், பலிச்செலுத்துவதிலும் மகிழ்ந்து, களிகூருகின்றவர்களாய் இருப்பார்கள். இராஜ்யத்தின் வகுப்பாருக்கான பலனைக் குறித்துப் பேசும் மற்ற வேதவாக்கியங்களின் போதனைகளுக்கு இசைவாக, இந்த உவமையை நாம் எவ்வாறு பொருத்திப் பார்க்க வேண்டும்? ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது; அதென்னவெனில் இந்த உவமையை, நாம் இராஜ்ய வகுப்பாருடைய தற்கல ஜீவியத்தின் அனுபவங்களுடன் முழுமையாய்ப் பொருத்த வேண்டும், அதிலும் விசேஷமாக இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய முடிவில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுடைய தற்கால ஜீவியத்தின் அனுபவங்களுடன் பொருத்திப்பார்க்க வேண்டும்.

யூதர்களுக்கும் கொஞ்சம் பொருந்தும்

1600 வருடங்களுக்கும் மேலாக யூதர்கள் மேசியாவினுடைய முதலாம் வருகைக்காகவும், அவருடைய வருகையின்போது வரும் ஆசிர்வாதமான வாய்ப்புகளுக்காகவும் காத்திருந்தார்கள். இயேசு தம்முடைய ஊழியத்தை ஆரம்பித்தபோது, “”பரலோக இராஜ்யம் சமீபித்துள்ளது” என்று பிரசங்கம் பண்ணி, அதில் பிரவேசிப்பதற்கான சிலாக்கியத்தை யூதர்களுக்குக் கொடுத்தார். அந்தச் சிலாக்கியமே “”ஒரு பணம்” அல்லது தங்களுடைய ஜீவியம் முழுவதும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதற்கான, அதாவது அவர்களுடைய உண்மையுள்ள பிரயாசத்திற்கான கூலியாக இருந்தது. இராஜ்யத்திற்கான வாய்ப்புப் பிரகடனப்படுத்தப்பட்ட போது, சில ஆயக்காரர்களும், பாவிகளும் அதனிடத்திற்கு ஈர்க்கப்பட்டார்கள்; அதாவது தேவனுக்கான ஊழியத்தையும், திராட்சத்தோட்டத்தின் வேலையையும் முன்பு புறக்கணித்திருந்த சிலர், அதனிடத்திற்கு ஈர்க்கப்பட்டனர். இந்தப் புதிய வேலையாட்கள் கர்த்தர் இயேசுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவருடைய சீஷர்கள் ஆகுவதற்கான வாய்ப்பினை வழங்கப் பெற்றார்கள்.

சீஷத்துவத்திற்கான வாய்ப்பே அந்த ஒரு பணம் (அ) கூலி ஆகும். தேவனாகிய கர்த்தருக்குத் தங்களுடைய ஜீவியங்கள் முழுவதும் உண்மையாய் இருந்திட்ட பரிசேயர்களும், வேதபாரகர்களும், பாவிகள் மற்றும் ஆயக்காரர்களைக் காட்டிலும் தங்களுக்குச் சில முன்னுரிமை (அ) முக்கியத்தும் கொடுக்கப்பட வேண்டுமென்று எண்ணினார்கள், மற்றும் இராஜ்யத்திற்கான முதல்தரமான வாய்ப்புகளைத் தங்களுக்கு அளிக்காத எந்த ஏற்பாடுகளும் நியாயமற்றது என்று முறுமுறுத்தார்கள். ஒருவேளை பாவிகளும், ஆயக்காரர்களும் கூட மேசியாவின் சீஷராகுவதற்குரிய ஆசீர்வாதமான சிலாக்கியத்தை அடைவார்களானால், நிச்சயமாய் இதனை காட்டிலும் மேலான/உயர்வான காரியம் தங்களுக்கு வரும் என்று பரிசேயர்கள் மற்றும் வேதபாரகர்கள் எண்ணினார்கள். இயேசு பாவிகளையும், ஆயக்காரர்களையும் ஏற்றுக்கொண்டு, அவர்களோடு புசித்ததைக் குறித்து இவர்கள் முறுமுறுத்தார்கள்.

இது தொடர்புடைய விஷயத்தில் பரிசேயர்களுக்கு விசேஷித்த கடிந்துக்கொள்ளுதலாக விளங்கும்படிக்கு, ஆண்டவருடைய உவமைகளில் ஒன்று காணப்பட்டது. கெட்ட குமாரன் தங்களுடைய சிலாக்கியங்களுக்கு ஏற்ப வாழாமல் காணப்பட்ட ஒரு யூத வகுப்பாருக்கு அடையாளமாய் இருந்தான், ஆனால் மூத்த குமாரனோ பிதாவின் வேலையில் காணப்படுவதற்குத் தொடர்ந்து முயன்று கொண்டிருந்த ஒரு வகுப்பாருக்கு அடையாளமாய் இருக்கின்றான். இந்தக் கெட்ட குமாரன் வகுப்பாரில் சிலர், இயேசு மற்றும் அவருடைய சீஷர்களின் உதடுகளிலிருந்து தேவனுடைய அன்பு பற்றின செய்தியைக் கேட்டு, பிதாவின் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, அவர்கள் கிருபையாய்/இரக்கத்துடன் நடத்தப்பட்டு, (வழித்தப்பிப் போகாமலும், உண்மையாய் ஊழியம் புரிந்தவர்களுமாகவும் காணப்பட்ட மூத்தக்குமாரன் வகுப்பாருக்குரிய அதே) புத்திரத்துவத்தின் சிலாக்கியம் வழங்கப்பட்டபோது, மூத்த குமாரன் வகுப்பார் எரிச்சலடைந்தார்கள். இவர்கள் முறுமுறுத்து, விருந்தில் பங்குக்கொள்ள மறுத்தார்கள். இவ்விதமாய் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் சிலர் முந்திக் காணப்பட்டாலும், ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளும் விஷயத்த்pல் பிந்தினவர்களாய்க் காணப்பட்டார்கள், மேலும் மற்றவர்களாகிய பிந்தினவர்கள் சிறந்த விதத்திலும், விரைவாகவும் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினைக் கண்டடைந்தார்கள்.

கிறிஸ்தவர்களுக்குக்கூடப் பொருந்தும்

தேவன் அருளவிருக்கும் எதுவும் அன்பளிப்பு என்ற உண்மையை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்த உவமையினுடைய பொதுவான படிப்பினையாக இருக்கின்றது. கொள்கைக்கும், நீதிக்குமான அன்புடன் கூடிய நேர்மையுடன் நாம் அவருடைய ஊழியத்தில் ஈடுப்பட வேண்டும். ஒருவேளை நாம் பல வருடங்களாக ஊழியம் புரிந்திருந்தோமானால், ஊழியம் புரிவதற்கான அந்தச் சிலாக்கியம் மதிக்கப்பட வேண்டும்; மற்றும் கர்த்தருடைய நோக்கங்கள் மீதான நமது அக்கறையானது நம்மை மகிழ்விக்க வேண்டும். இப்படியாக ஊழியத்திற்கான சிலாக்கியத்தினுடைய உணர்ந்துக்கொள்ளுதலின் கண்ணோட்டத்தின்படி நாம் பார்க்கும்போது, நாம் கர்த்தருடைய வேலைகள் நடந்தேறுவதைக் காண்பதில் மகிழ்கிறவர்களாகவும், மற்றவர்களும் ஊழியத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கையில் மகிழ்கிறவர்களாகவும், நாம் எதிர்ப்பார்த்து நம்பியிருக்கும் அதே பலனை, மற்றவர்களும் அடைவதைப்பார்ப்பதில் மகிழ்கிறவர்களாகவும் காணப்பட வேண்டும். இப்படியாகப் பரந்த மனப்பான்மையுடன் கூடிய ஆவி கொண்டவர்கள் மாத்திரமே, அதாவது திராட்சத்தோட்டத்தின் சிலாக்கியத்தை இப்படியாக உணர்ந்துக்கொண்டவர்கள் மாத்திரமே, [R5474 : page 171] அதாவது “”தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவரிடமும்” இப்படியான அனுதாபம் கொண்டிருப்பவர்கள் மாத்திரமே, இராஜ்யத்திற்குப் பாத்திரவான்களாய் இருப்பார்கள்; மற்றும் இராஜ்யம் அறிவிக்கப்பட ஆயத்தமாகும் போது, அறிவு மற்றும் வாய்ப்பிற்கான விசேஷித்த சிலாக்கியங்களை ஏற்றுக்கொள்வதிலும் ஆயத்தமாய் இருப்பார்கள்.

நிழலான இராஜ்யமானது இயேசுவின் நாட்களில் யூதர்களுக்கு அளிக்கப்பட்டது போலவும், தெய்வீக ஊழியங்களில் நீண்ட காலமாய் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களோடு கூட, இராஜ்யத்தில் பங்கடைவதற்கான அதே வாய்ப்பினை, தெய்வீக ஊழியங்களுக்குப் புதிதாய் இருப்பவர்களும் பெற்றுக்கொண்டது போலவும், இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய முடிவாகிய அறுவடை காலத்திலும் காணப்படும். கர்த்தருக்கு உண்மையாய் இருப்பதற்கும், அவருடைய நோக்கங்களுக்கு ஊழியம் புரிவதற்கும், தங்கள் ஜீவிய காலம் முழுவதையும் பெற்றிருப்பவர்கள், தங்களுக்கு அவ்வளவு அதிகமான சிலாக்கியமும், ஆசீர்வாதமும் இருக்கின்றது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். ஒருவேளை பல வருடங்களுக்குப் பின்னர், சிலர் தெய்வீக ஊழியங்களுக்குள் பிரவேசித்தால், இவர்களை உடன் ஊழியர்கள் என்று கருதி, முந்தி வந்தவர்கள் களிக்கூர வேண்டும்.

ஊழியர்களாக / வேலையாட்களாக இருக்கும் அனைவரும், கர்த்தருடைய வார்த்தைக்கு இசைவாக திராட்சத்தோட்டத்தில் உள்ளே வரும், மற்றவர்களைக் குறித்துப் பொறாமைக்கொள்வதற்குப் பதிலாக, ஆண்டவர் இன்னும் வேலையாட்களைத் திராட்சத்தோட்டத்திற்குள் அனுப்பும்படிக்கு ஜெபம் பண்ண வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். தற்கால சத்தியத்தின் மாபெரும் அறிவானது இப்பொழுது, கர்த்தருடைய திராட்சத்தோட்டத்தில் வேலை புரியும் அனைவருக்குமான கூலியாக வந்து கொண்டிருக்கையில், நீண்ட காலத்திற்கு [R5474 : page 172] முன்னதாகவே ஆண்டவருடைய ஊழியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும், சமீபத்தில்தான் உள்ளே வந்தவர்களுக்கும், ஒருவேளை இந்தக் கூலியானது சரிசமமாக வழங்கப்பட்டால் நாம் ஆச்சரியப்பட வேண்டாம்.

கர்த்தருடைய வழிமுறைகளில் நாம் களிக்கூருவோமாக. பதினோராம் மணி நேரத்தில் கூட வேலைக்கு வந்தவர்களிடத்திலான அவருடைய கிருபையின் காரணமாக, நம் இருதயங்கள் கோபங்கொள்ளாமல் இருப்பதாக. அவர்களும் சகோதரர்கள் அல்லவா? பொன்னான சட்டத்தினுடைய நிபந்தனையின் கீழ் நாம் அனுபவிக்கும் அதே ஆசீர்வாதங்களை, அவர்களும் அனுபவிக்க நாம் விரும்ப வேண்டாமோ? கர்த்தருடைய ஊழியத்தில் நீண்ட காலமாய்க் காணப்படுபவர்களின் சார்பிலிருந்து, ஏதேனும் விலகியிருக்கும் தன்மை அல்லது இவர்கள் தங்களிடத்தில் அதிகமான கர்த்தருடைய தயவு காணப்பட வேண்டுமென்று எண்ணுவது தவறாகும். நாம் கர்த்தரைப் போன்றே காணப்பட வேண்டுமென்றே கர்த்தர் விரும்புகின்றார் “”இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்” (மத்தேயு 5:45).

ஆதார வசனத்தின் படிப்பினைகள்

தேவனுடைய குணலட்சணம் பற்றியும், மனித இரட்சிப்பிற்கான அவருடைய திட்டம் பற்றியும் உள்ள சரியான புரிந்துக்கொள்ளுதலை நம்முடைய முன்னோர்கள் இருண்ட யுகங்களின்போது, இழந்துப் போயுள்ளனர் என்பதை நாம் அதிகமதிகமாய்க் கற்று வருகின்றோம். அவரை அன்புள்ளவராகவும், கிருபையுள்ளவராகவும் சித்தரிப்பதற்கு பதிலாக, விசுவாசப் பிரமாணங்களில், அவரை வித்தியாசமாய் சித்தரித்துவிட்டனர். நமக்கு வழங்கப்பட்ட இருண்ட யுகங்களுடைய விசுவாசப் பிரமாணங்களானது, வேதாகமத்தின் போதனைகளைத் திரித்துக் காட்டுகின்றன. சமீப காலங்களில்தான் இந்த உண்மையை வேத மாணவர்கள் உய்த்துணர ஆரம்பித்துள்ளனர். தேவன் தம்முடைய பெரும்பாலான மனித சிருஷ்டிகளுக்கென, அக்கினி உள்ள நரகத்தையும், நித்தியமான சித்திரவதையையும் ஆதியிலே திட்டம் பண்ணியுள்ளார் என்றும், தெரிந்துக்கொள்ளப்பட்ட சொற்பமான பரிசுத்தவான்களுக்கு மாத்திரமே பரதீஸ் என ஆதியிலே திட்டம் பண்ணியுள்ளார் என்றுமுள்ள போதனைகள் கொண்டுள்ள விசுவாசப்பிரமாணங்கள், பகுத்தறிவிற்குப் புறம்பாக இருக்கின்றதென, கிட்டத்தட்ட புத்தியுள்ள ஜனங்கள் அனைவருமே உணர்ந்து, இப்பொழுது இந்த விசுவாசப்பிரமாணங்களை ஒதுக்கிவிட்டனர்.

ஆனால் அந்தோ, நம்முடைய விசுவாசப்பிரமாணங்களுடைய தப்பிதங்களை நாம் உணர்ந்துக் கொண்டு, அவைகளை நாம் ஒதுக்கி வைத்துக்கொண்டிருந்தாலும், நம்மில் அநேகர் விசுவாசப் பிரமாணங்களுடைய போதனைகளானது எவ்வளவாய் வேதாகமத்தின் போதனைகளிலிருந்து வித்தியாசமாய் இருக்கின்றது என்பதைக் கவனிக்கத் தவறுகின்றனர்! ஆனால் வேதாகமம் மீண்டுமாகத் தேடப்படுகின்றது. நம்முடைய பார்வையை மங்கலாக்கின, விசுவாசப்பிரமாணம் எனும் மூக்குக்கண்ணாடியானது, சுக்குநூறாக உடைக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. வேதாகமத்தை நாம் அதற்கே உரியதான, அதன் வெளிச்சத்தில் கற்றுக்கொள்வதற்காக, வாசிக்கின்றோம்; மேலும் இப்படியாகச் செய்யும் அளவுக்குத்தக்கதாக ஆசீர்வாதமும் நம்மிடத்தில் கடந்து வருகின்றது.

“”இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்” என்பதைக் கவனியுங்கள். பரலோகத்தில் இருக்கின்ற தங்கள் பிதாவைப் போன்று, தாங்கள் செய்வதாக எண்ணிக்கொண்டு, இயேசுவின் நாமத்திலும், பிதாவின் நாமத்திலும், மதத்தின் பெயரிலும் இருண்ட யுகத்தின்போது சகோதரர் கேல்வின் (Brother Calvin), பிளட்டி மேரி (Bloody Mary), மற்றும் இன்னும் பலரால் பயங்கரமான கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டன. அந்தோ பரிதாபம், அவரை இவர்கள் சரியாய்ப் புரிந்துக்கொள்ளவில்லை. மிகவும் மோசமானவராக இவர்களால் சித்தரிக்கப்பட்ட மோசமான பிதாவையே, இவர்களும் பின்பற்றினவர்களாகக் காணப்பட்டார்கள். இப்பொழுது நம்மால், “”இப்படிச்செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்” என்ற வார்த்தையை இயேசு எந்த அர்த்தத்தில் கூறினார் என்பதை பார்க்கின்றோம். “”அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்” (மத்தேயு 5:45).

இயேசுவின் மிகச் சிறந்த சீஷர்களில் இருவர், அவரோடு கூடவே காணப்பட்டப் போதிலும், தவறான கருத்தைக்கொண்டிருந்தனர். அவர்களே இப்படி இருந்தார்களானால், விசுவாசப்பிரமாணங்கள் காணப்பட்ட காலப்பகுதியில், வேதாகம ஆராய்ச்சி தவிர்க்கப்பட்ட நிலையிலும், தெய்வீகக் குணலட்சணம் பற்றின சரியான புரிந்துக்கொள்ளுதல் அனைத்தையும் இழந்த நிலையிலும் காணப்பட்டவர்களை நாம் எவ்வளவாய்ப் பொறுத்துக்கொள்ள வேண்டும்!

இங்கு நாம் குறிப்பிடும் இரண்டு சீஷர்கள் செபதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும், யோவானும் ஆவார்கள். கர்த்தருக்கும், சீஷர்களுக்கும் உணவு குறைவுப்பட்டபோது, யாக்கோபும், யோவானும், அப்பம் வாங்குவதற்கென, சமாரியா பட்டணத்திற்குள் போனார்கள். வியாதிப்பட்டிருக்கின்ற சமாரியர்களையும், யூதர்களையும் சொஸ்தப்படுத்தும்படிக்கு ஏன் இயேசு தங்கள் பட்டணத்திற்கு வரவில்லை என்று இவர்கள் இருவரிடமும் சமாரியர்கள் வினவினார்கள். அச்சமயம் அவருடைய ஊழியம் யூதர்களுக்கு மாத்திரமே உரியது என்று சமாரியர் அறிந்தபோது கோபமடைந்து, “”யூதர்களிடமிருந்தே அப்பம் போய் வாங்கிக்கொள்ளுங்கள்; நாங்கள் உங்களுக்கு எதுவும் விற்பதில்லை” என்று இரு சீஷர்களிடம் கூறினார்கள். அனைத்திற்கும் சுதந்தரவாளியான தங்கள் ஆண்டவர் இப்படியாகக் கனவீனப்படுத்தப்பட்டபடியால் யாக்கோபும், யோவானும் மிகவும் கோபமடைந்து, சமாரியர்களுடைய பட்டணம் அழிக்கப்படத்தக்கதாகச் சமாரியர்கள் மீது அக்கினியை வரப்பண்ணுவதற்கு, இயேசுவிடம் அனுமதிக் கேட்டுக்கொண்டார்கள். இந்தச் சீஷர்கள், தங்களிடத்தில் தேவனுடைய ஆவி இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தார்கள், “”அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார்“ (லூக்கா 9:55-56).

இந்த இரண்டு அருமையான சீஷர்கள் கூடத் திருத்தப்படுவது அவசியமாய் இருந்ததானால், அதாவது சமாரியர்களை அழித்துப் போடும் விஷயத்தில், அவர்களிடத்தில் தவறான ஆவி இருந்தது எனக் காண்பித்துக் கொடுக்கப்படுவது அவசியமாய் இருந்ததானால், எதிர்க்கிறவர்கள் அனைவரும் நித்தியமான சித்திரவதைக்குள் போவார்கள் என்று தேவனுடைய நாமத்தில் கூறுபவர்களுக்கு, எவ்வளவாய் இயேசுவின் இந்தக் கடிந்துக்கொள்ளுதல் பொருத்தமானதாய் இருக்கும்!

இப்படியாகக் காணப்பட்டவர்களில் சிலராகத்தான் நாம் இருக்கின்றோம். அறியாமையிலும், மூடநம்பிக்கையிலும், தவறான உபதேசமாகிய திராட்சரசத்தைப் பருகினதின் காரணமாக விசுவாசப்பிரமாணம் கொடுத்திட்ட போதை மயக்கத்தினாலும் இப்படியாக முன்பு ஒருகாலத்தில் நாமும் காணப்பட்டிருந்தோம். (வெளிப்படுத்தல் 17:1-5; 18:3). விடுவித்ததற்காக தேவனுக்கு நன்றி! தெளிந்த கண்ணோட்டங்கள்/பார்வைகள் அவருடைய ஜனங்களுக்கு வந்துகொண்டிருப்பதற்காக அவருடைய நாமத்தை துதிப்போமாக! புதிய யுகத்தினுடைய காலை விடிந்துக் கொண்டிருப்பது, பிரகாசிப்பித்தலைக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. நீதியின் சூரியன் உதித்துக்கொண்டிருக்கின்றது; அதன் பிரகாசமான கதிர்களினால் கடந்த காலத்தின் குட்டிச்சாத்தான்கள் ஓடி மறைந்துக் கொண்டிருக்கின்றது. இந்த ஆசீர்வாதமான செய்தியை உலகம் அனைத்திற்கும் சொல்லுங்கள்.

தேவனுடைய மகிமையான குணலட்சணம்

நம்முடைய ஆதார வசனமானது, நன்றியற்றவர்களிடத்திலும், அநீதியுள்ளவர்களிடத்திலும், பாவிகளிடத்திலுங்கூட, நமது தேவன் கிருபையுள்ளவராக, இரக்கமுள்ளவராக, கருணையுள்ளவராக இருக்கின்றதுபோல, நாமும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சகல மனுஷருக்கும், அதிலும் விசேஷமாக விசுவாச வீட்டாருக்கு நன்மை செய்கிறவர்களாகவும் மற்றும் இரக்கமுள்ளவர்களாகவும், அன்புள்ளவர்களாகவும், காணப்பட வேண்டும் என்று கூறுகின்றது. இப்படியான தேவனைப்பற்றின ஒரு கண்ணோட்டமே நம்முடைய இருதயங்களின் கவனத்தை ஈர்க்கின்றதாய் இருக்கின்றது; மேலும் இந்த அன்பின் தேவனைப்பற்றி நாம் அதிகமாய்ப் படிக்கையில், இவர் ஒருவரே அன்புள்ளவராகவும், உண்மையான தேவனாகவும் இருக்கின்றார் என்பதையும், முன்பு நாம் கொண்டிருந்த தவறான கருத்துக்கள் அனைத்தும் உண்மையற்றதும், அன்பற்றதும், நிஜமற்றதும், நாம் சொந்தமாய் உருவாக்கின தெய்வங்கள் என்பதையும் நாம் அதிகமதிகமாய் உணர முடிகின்றவர்களாய் இருப்போம். இன்னுமாக கல்லினாலும், மண்ணினாலும், இரும்பினாலும், வெண்கலத்தினாலும் புறமதத்தினர் செய்திருந்த விக்கிரகங்களைக் காட்டிலும், கொடூரமான விசுவாசப்பிரமாணம் எனும் விக்கிரகங்களை, பேனாவினாலும், காகிதத்தினாலும், மையினாலும், அச்சுகளினாலும் நாகரிகமடைந்திருக்கும் தேசங்கள் உண்டுபண்ணப் பெற்றிருக்கின்றனர் என்பதையும் நம்மால் காணமுடியும்.

“”அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கின்றான்.” (நீதிமொழிகள் 23:7). ஒருவன் வணங்கும் தேவன் கொடூரமானவராகவும் பழிவாங்குபவராகவும், பகைக்கிறவராகவும், வெறிகொண்டவராகவும் இருப்பாரானால், இப்படியான கடவுளை வணங்கும் அந்த மனுஷனோ (அ) மனுஷியோ, அந்தத் தெய்வத்தின் கொடூரமான தன்மையின் தாக்கத்தினால் ஆட்கொள்ளப்படாமலும், அதே போன்று எண்ணுவதற்கும், செய்வதற்கும் வழிநடத்தப்படாமலும் இருக்குமாயின், இது அற்புதமாகத்தான் இருக்க வேண்டும். நம்முடைய மனதின் கண்களுக்கு முன்னதாக அன்பான மற்றும் உண்மையான தேவனை, நமது மாதிரியாகக் கொண்டிருப்போமானால், நமது சிருஷ்டிகரின் மகிமையான குணலட்சணத்தை நாம் அறிய அறிய, நாம் மாற்றமடைந்து, நாளுக்கு நாள் மறுரூபமாக்கப்படுவோம். நம்மையும் அறியாமல், இந்த உயர்ந்த மாதிரியை நாம் பின்பற்றுபவர்களாகி, நம்முடைய மனங்கள் புதிதாகிறதினாலே, அதிகமதிகமாய் மறுரூபப்படுவோம்; மற்றும் நம்முடைய அன்றாட ஜீவியங்களில் தேவனுடைய நன்மையும், பிரியமும் பரிபூரணமுமான சித்தமும் இன்னதென்று பகுத்தறிகிறவர்களாகவும் இருப்போம்.

நலமானதை, அதாவது கர்த்தருடைய உறுதியான வார்த்தைகளைப் பற்றிக்கொள்வோமாக. தெய்வீகச் செய்தியை நமக்கு மிகவும் திரித்துக் காண்பித்த இருண்ட யுகத்தினுடைய, மனித கொள்கைகளைப் புறம்பாக்கிடுவோமாக. இப்படிச் செய்வோமானால் நாம், “”சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற ஆண்டவருடைய வார்த்தைகளுக்குச் செவிக்கொடுப்பவர்களாய் இருப்போம். (யோவான் 8:32).