R3484 – நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R3484 (page 10)

நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது

FILLED AND TRANSFORMED

யோவான் 2:1-11

“”அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள்.”

கலிலேயாவிலுள்ள கானா ஊரே நாத்தான்யேலின் சொந்த ஊராக இருந்தது. இவர் சமீபத்தில் நமது கர்த்தருடைய சீஷர்களின் எண்ணிக்கைக்குள் வந்திட்ட ஒருவராக இருந்தவர். அச்சமயத்தில் இயேசுவை மேசியாவாக அங்கீகரித்திட்ட ஆறு பேரில் இவரும் ஒருவராக இருந்தார். நாத்தான்யேல், நமது கர்த்தரையும், மற்றச் சீஷரையும் கானா ஊரில் ஒரு கலியாண விருந்துக்கு தன்னுடைய விருந்தினர்களாக அழைத்திருந்தார். இயேசுவின் தாயாகிய மரியாளும் அந்த விருந்துக்கு வந்திருந்தாள். மேலும், மரியாள் திராட்சரசம் குறைவுபட்டதை முன்கூட்டியே அறிந்துக்கொண்ட காரியமானது, மரியாள் அந்தக் குடும்பத்தாருக்கு நெருங்கிய நண்பராக இருந்தாள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது என்பதில் நமக்கு ஐயமில்லை. மேலும், இப்படிப்பட்ட (திருமண) தருணங்களில் யூதர்கள் தங்கள் விருந்தினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் மற்றும் விருந்து சாலைக்குள் வந்து பந்தியில் பங்குக்கொள்ளும்படி மணவாளனுடைய பெயரில் வற்புறுத்தி அழைக்கப்படும் வழியில் போய்க்கொண்டிருப்பவர்களுக்கும் (பற்றாக்குறையின் காரணமாக) போதுமானளவு பந்தியில் உணவு கொடுக்க முடியாமல் போகும் சம்பவமானது, யூதர்களுடைய விருந்தோம்பலின் பாரம்பரியத்தை மீறி விடுவதாகும். இப்படி, விசேஷமான விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களுக்குள் இயேசுவும், அவருடைய சீஷர்களும் அடங்கியிருந்தார்கள்.

நம்முடைய ஆண்டவரின் தாய், திராட்சரசம் குறைவுபட்டதை அவருடைய கவனத்திற்குக் கொண்டுவந்ததின் காரணமாக, மரியாள் ஓர் அற்புதத்தை எதிர்ப்பார்த்தாள் என்ற ஊகம் நிலவிக்கொண்டிருக்கிறது. இக்கருத்தை நம்மால் ஒப்புக்கொள்ள முடியாது. காரணம், அற்புதமான [R3484 : page 11] விதத்தில் திராட்சரசம் உண்டாக்கப்பட்ட இச்சம்பவத்தின் அன்றே இயேசுவின் அற்புதங்கள் ஆரம்பமானது என்று குறிப்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் ஊகிப்பது என்னவெனில் மரியாள் தனது மகனுடனான நீண்டகால நெருங்கிய தொடர்பு மற்றும் அவரைச் சார்ந்து இருந்ததன் விளைவாக அனைத்துச் சம்பவங்கள் மற்றும் அனைத்துத் தருணங்களிலும் அவரிடம் வெளிப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் புத்திகூர்மை/திறமையையும் மற்றும் அருமையான முடிவுகள் எடுக்கும் திறமையையும் ஏற்கெனவே அறிந்திருந்தவளாக இருந்தாள். அன்று திராட்சரசம் பற்றாக்குறையின் பிரச்சனையானது மரியாளால் தீர்வுகாண முடிகிற நிலைக்கு மிஞ்சி/அப்பாற்பட்டதாகக் காணப்பட்டது. மேலும், நடுத்தர வர்க்கத்தில் வாழ்கிற அனைவரின் விஷயங்களும் இப்படியாகவே உள்ளது; மேலும், அநேகமாக, திருமணத்திற்கான ஆயத்தங்களைச் செய்வதற்கென மணவாளன் தன்னால் செலவழிக்க முடிந்த யாவையும் செலவழித்திருக்க வேண்டும். அநேகமாக, கலியாண விருந்தில் நம்முடைய கர்த்தருடைய வருகையை எதிர்ப்பார்த்திருந்தவர்களாகிய பெருமளவிலான அயலகத்தார்களும் கூட அவர் நிமித்தமாக அழைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்; அதாவது, நாத்தான்யேல் மூலமாகவும், மற்றவர்கள் மூலமாகவும், கேள்விப்பட்டிருந்த அந்த விருந்தினரைப் பார்ப்பதற்காக அவர்கள் அழைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்.

குடும்பத்தாரிடத்தில் இயேசுவின் நட்பிணக்கம் (SOCIABLE)

இச்சம்பவத்தின் பதிவானது, நம்முடைய ஆண்டவருடைய சமுதாயப் பழக்கவழக்கம் பற்றின சிறியதொரு கண்ணோட்டத்தை நமக்குத் தருகிறது. மேலும், இது சந்நியாசிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் வாழ்க்கை மூலம் காட்டப்படும் கடுமையான துறவு வாழ்க்கை போன்றவைகள் அவருடைய போதனையிலோ அல்லது வார்த்தையிலோ அல்லது உதாரணத்திலோ காணப்படவில்லை என்பதை நமக்கு உறுதியளிக்கக் கூடியதாய் இருக்கின்றது. ஒழுக்கம் மற்றும் மத/சமயக் கோட்பாடுகளையுடைய ஜனங்கள் (community) மத்தியில் நிலவிக்கொண்டிருக்கும் சாதாரணமான சமுதாயச் சூழ்நிலைகளின் மத்தியில்தான், கர்த்தர் தம்முடைய அர்ப்பணிப்பின் ஜீவியத்தை ஜீவித்தார். மேலும், நமது கர்த்தர் இப்படிப்பட்ட தருணங்களில் பங்குப்பெற்றபோது, அவர் கூத்தாடினார் என்றோ/வரம்புமீறி விருந்தில் களியாட்டம், குடிப்போதை கொண்டார் என்றோ அல்லது கோமாளிக்கூத்து நடத்தினார் என்றோ சொல்வதற்கு எவ்விதமான குறிப்புகளும் இல்லை. மாறாக, இம்மாதிரியான (திருமண விழாவின்) தருணங்களுக்குரிய வரம்பு மீறாத/சரியான/நியாயமான சந்தோஷங்களிலும், தோழமை அனுபவ சந்தோஷங்களிலும் மற்றும் சமுதாயத்தினால் அங்கிகரிக்கப்படும் நடத்தைகளிலுமே அவர் பங்குக் கொண்டார் என்று அனுமானிப்பதே நியாயமாய்த் தோன்றுகின்றது. மேலும், அவருடைய இந்த நடத்தையானது, அவருடைய பின்னடியார்களுக்கென அவர்தாமே கட்டளையிட்ட வார்த்தைகளுக்கு இசைவாகவே உள்ளது. அதாவது, “”சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்” என்பதாகும்.

ஓவ்வொரு வீட்டையும் இயேசு விருந்தினர்போல் சந்தித்துச் செல்வது அவ்வீட்டிற்குச் சிறப்பாயிராமல் அவ்வீட்டை அவர் சொந்த வீடாகக் கருதி தங்குவதே அவ்வீட்டிற்குச் சிறப்புச் சேர்க்கின்றதாய் இருக்கும். ஒருவேளை கர்த்தர் இப்பொழுது மாம்சத்தில் காணப்பட்டிருப்பாரானால் அவர் எப்படிப்பட்ட நிலைமைகளிலுள்ள இடங்களுக்குச் சென்றிருப்பார் என நமக்கு நியாயமாகத் தோன்றுகிறதோ, அப்படியான நிலைமைகளிலுள்ள இடங்களுக்குக் கர்த்தருடைய பின்னடியார்களாகிய நாமும் செல்ல விரும்புவது நம் ஜீவியத்திற்குப் பாதுகாப்பாய் இருக்கும். இன்னுமாக, ஒருவேளை நமக்குப் பதிலாகக் கர்த்தர் ஓரிடத்தில் காணப்பட்டிருந்திருப்பாரானால், அவர் இன்னின்ன வகையில் பேசி இருந்திருப்பார் அல்லது செயல்பட்டிருந்திருப்பாரென நாம் நியாயமாக எதிர்ப்பார்க்கும் விஷயங்களையே, நாமும் பேசுவதும், செயல்படுத்துவதும் நமக்கான சட்டமாக வைத்துக்கொள்வது பாதுகாப்பானதாய் இருக்கும். நமது அருமையான ஆண்டவர் எங்கெல்லாம் கடந்து சென்றாரோ அங்கெல்லாம் விசேஷமாக நாத்தான்யேல் போன்று கபடற்ற உத்தம இருதயமுடைய இஸ்ரயேலர்களுக்கு ஆசீர்வாதங்கள் கடந்து சென்றன என்பதில் நமக்கு நிச்சயமே.

சீஷன் என்ற வார்த்தை மாணாக்கன் (அ) கற்றுக்கொள்பவன் என்ற பொருளைக் கொடுக்கின்றது என்றும், கர்த்தருடைய ஜனங்கள் அனைவருமே, அவருடைய சீஷர்கள் (கர்த்தருடைய ஜனங்கள், எல்லாரும் அப்போஸ்தலர்களாக இல்லாவிட்டாலும்) என்றும் நாம் நினைவுகூரும்போது, ஒவ்வொரு சீஷனும் கர்த்தரை அடையாளப்படுத்துகிறதாக நமக்கு தோன்றுகின்றது; அதாவது, நாம் அவருக்குப் பிரதிநிதிகளாக (அ) “”ஸ்தானாதிபதிகளாக” இருக்கின்றபடியினால், நாம் எங்குப் போகிறோமோ அங்கே அவரும் போகிறார். இக்கருத்தை சிந்தையில் கொண்டவர்களாக நாம் ஒவ்வொருவரும், அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும் விஷயத்தில் அதாவது, நம்முடைய மகிமையின் கர்த்தரை நாம் ஒவ்வொருவரும் சரியான விதத்தில் அடையாளப்படுத்தத்தக்கதாக எத்துணை ஜாக்கிரதையுடன் காணப்பட வேண்டும். இதற்காகவே உதடுகளினால் மாத்திரமல்ல, “”என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக” என்று உள்ளத்திலிருந்தும் ஜெபிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். மெய்யாகவே, “”அவர் இருக்கிற பிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்” (1 யோவான் 4:17). “”உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.” ஆனால், எல்லா தருணங்களிலும் நம்முடைய கடமையோ ஒரே விதமாகவே உள்ளது; மனுஷர் நம்முடைய நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதாவை மகிமைபடுத்தும்படி, நம்முடைய வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்க வேண்டும் என்பதே அவருடைய போதனையாக இருக்கிறது.

இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாக

கர்த்தரிடமிருந்து சீஷர்கள் வாயிலாக கடந்துவரும் செல்வாக்குக் குறித்த ஒரு குறிப்பானது, கர்த்தர் தம்முடைய அப்போஸ்தலர்களை அனுப்பி வைத்தபோது பேசின வார்த்தைகளில் வெளிப்படுகின்றது. வீட்டினுள் நுழையும் முன், “”இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாக” என்று அவர்கள் சொல்ல வேண்டும். ஆனால், அதற்கென்று நாம் ஒரு கட்டிடத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்பதாக வெளிப்படையாகவும், சம்பிரதாயமாகவும் இப்படிப்பட்ட அறிக்கையைச் செய்ய வேண்டும் என்று இதனை ஒரு கட்டளையாக நாம் கருதிவிடக்கூடாது. மாறாக, இது கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனம் ஒவ்வொருவருடைய இருதயபூர்வமான மனோபாவமாக இருக்க வேண்டும் என்றே அறிவுறுத்தப்பட்டுள்ளதென நாம் நம்புகிறோம்; அதாவது, தாங்கள்செல்லும் இடங்களிலெல்லாம், தங்களோடு தொடர்புகொள்ளும் ஏகமாய்த் தவித்துக்கொண்டிருக்கும் பாவப்பட்ட சிருஷ்டியின் இருதயங்களைப் தாங்கள் புத்துயிர் அடையச்செய்து, தூக்கி நிலைநிறுத்தும் போது, சமாதானமும், ஆசீர்வாதமும் தங்களோடுகூடக் கடந்துவர வேண்டும் என்பதே இவர்களுடைய விருப்பமும், முயற்சியும், குறிக்கோளுமாயிருக்க வேண்டும்.

இவ்வுலகில் சண்டைகளை வளர்ப்பதற்கென்றே அநேகம் பேர் உள்ளனர். அத்தகையவர்கள் ஏதாவது ஒரு வீட்டின் வாசலுக்குள் பிரவேசிப்பார்களேயானால், அவர்கள் அதை உணர்கிறார்களோ அல்லது பேசுகின்றார்களோ இல்லையோ, அந்தச் சுவர்களுக்குள் சண்டையே மிஞ்சுகின்றது. கோபம், பகைமை, வெறுப்பு, மற்றும் சண்டை ஆகியவற்றால் அவர்களுடைய இருதயம் நிறைந்திருப்பதால், அதன் மிகுதியிலிருந்து அதிருப்தியும், சந்தோஷமின்மையும் வெளிப்படுகிறது. பகைமையிலும், சண்டையிலும் தங்கள் ஆத்துமாவைக் கசப்பான நிலையில் (ஒரு காலத்தில்) வைத்திருந்தவர்கள், இப்பொழுது அதினின்று மாறி கர்த்தருடைய அடிச்சுவடுகளில் நடக்க அதாவது, மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படி நடப்பதற்குத் தங்கள் மனங்களில் தீர்மானித்திருப்பவர்கள், மாம்சம் மற்றும் பிசாசின் கிரியைகளைக் களைந்து போட்டிருப்பவர்கள், அன்பின் ஆவியினால் நிறையப்படுவதற்கு, நிச்சயமாக சிலகாலம் செல்லும்; இதற்கு இடைப்பட்ட காலத்தில் அதாவது, இவர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் ஆசீர்வாதங்கள் பெருகுவதற்கு ஏதுவாக இவர்கள் சந்தோஷம், சமாதானம் மற்றும் ஆவியின் கனிகளால் நிரப்பப்படுவதற்கு முன்பு இவர்களிடத்தில் சிலகாலம் தீமை பேசுதல், புறங்கூறுதல், தீமையான கட்டுக்கதைகள், முகாந்திரமின்றி தீமையைக் கற்பனை செய்தல், இரக்கமின்மை, வார்த்தையில் மற்றும் நடத்தையில் பணிவின்மை, பொறுமையின்மை, போன்ற காரியங்கள் வெளிப்படும்.

இப்படிப்பட்டவர்களுடைய செல்வாக்கானது, இவர்கள் கிறிஸ்துவுக்குள் மாணாக்கர்களாக இருந்திட்டாலும், அது மாம்சத்திற்குரிய செல்வாக்காய்/தாக்கமாய் இருக்கிறபடியினால், அது ஆவிக்குரிய வளர்ச்சிக்குப் பெருமளவில் தீங்கு விளைவிக்கக்கூடியதாகவும், பல்வேறு கிருபைகளின் வளர்ச்சியைத் தடைசெய்யக்கூடியதாகவும், கர்த்தருடைய சரியான பாதைகளைத் தேடிக்கொண்டிருக்கும் மற்றவர்களுடைய இருதயங்களிலும், தங்கள் சொந்த இருதயங்களிலும், சமாதானம் மற்றும் சந்தோஷத்தைக் குலைத்துப்போடக்கூடியதாகவும் இருக்கும். கர்த்தருடைய பின்னடியார்களாகிய நமக்கான பாடம் என்னவெனில், பாவத்திலிருந்து நீதிக்குத் திரும்புவதும், கோபம், பொறாமை, மற்றும் பகைமையிலிருந்து அன்புக்குத் திரும்புவதும் மாத்திரமல்ல, இருதயம் அன்பினால் நிறைத்து வைத்திருக்கப்பட வேண்டும். அப்பொழுது அன்பு, சந்தோஷம், மற்றும் சமாதானத்தின் நிறைவினால், நம்முடைய வாய் பேசும்; மேலும், நம்முடைய நடத்தை, கர்த்தருடனான நம்முடைய உறவையும், அவருக்கொத்த சாயல் அடைந்ததையும் வெளிக்காட்டக்கூடும்; அதாவது, நாம் இயேசுவோடு இருக்கின்றோம் என்றும், அவரால் போதிக்கப்பட்டிருக்கிறோம் என்றும் மனுஷர் நம்மைக் குறித்து அறிந்துக்கொள்ளக்கூடும்.

உன் தகப்பனையும், உன் தாயையும் கனம்பண்ணுவாயாக

நம்முடைய கர்த்தர் தம்முடைய தாயின் ஆலோசனைக்கு அளித்த மாறுத்தரம், சற்று அன்பற்றதாகவும், கடுமையானதாகவும் காட்சியளிக்கின்றது. காரணம், இது மொழிப்பெயர்ப்பின் விளைவாக ஏற்பட்டதாகும். இது “”ஸ்திரீ” என்று அர்த்தம் கொடுக்கும் மூல கிரேக்க வார்த்தையின், அருமையான தோற்றத்தைக் கொடுக்கவில்லை. வார்த்தை ஒன்றுதான், உதாரணத்திற்கு, எகிப்தின் இராணிக்கு ரோம ஆளுநர் பாராட்டுத் தெரிவிக்கும் பேருரையில் பயன்படுத்தின வார்த்தையாவது, “”ஓ பெண்ணே, திடன்கொள்” என்பதாகும். “”உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” என்ற பிரமாணத்தின் கட்டளையை நம்முடைய கர்த்தர் தம்முடைய வார்த்தையினாலோ அல்லது கிரியையினாலோ ஒருபோதும் மீறவில்லை என்பதில் நாம் உறுதிகொள்ளலாம். அவருடைய வார்த்தைகள் மற்றும் நடக்கைகள் எல்லாவற்றிலும் அவர், தம்முடைய போதனைகள், போதித்த விதமாகவே சாந்தத்திற்கும், பெருந்தன்மையோடு கூடிய இரக்க மனப்பான்மைக்கும், பொறுமை மற்றும் அன்புக்கும் ஒரு மாபெரும் மாதிரியாக இருந்தார்.

“”எனக்கும் உனக்கும் என்ன?” என்ற சொற்றொடரின் சரியான அர்த்தமாவது,… “”எனக்கு கட்டளையிட முயற்சி செய்யாதீர்கள்; ஏற்றச்சமயம் வரும்போது என்ன செய்யவேண்டும் என்பதை நான் அறிவேன்” என்பதாகும். அநேகமாக மரியாள், திராட்சரசம் குறைவுபடும் காரியத்தை (மற்றவர்களிடமிருந்து) மறைக்க எண்ணினாள்; இயேசுவோ இதற்கு நேர்மாறாக, தாம் நிகழ்த்துவதாக இருந்த அற்புதம், விருந்துக்கு அழைத்த மணவாளனுக்கு உதவியாயிராமல், விருந்துக்கு வந்திருந்த ஒட்டுமொத்த ஜனக்கூட்டமும், வேலைக்காரார் மூலம் அறிந்துக்கொள்ளும்போது அது அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு பாடமாக இருக்கும் என்பதையும் உணர்ந்தவராக இருந்தார். ஆகையால், இயேசு புதியதை பழையவையோடு கலப்பதன் மூலமாக [R3484 : page 12] இந்த அற்புதம் குறைத்து மதிப்பிடப்பட்டுப் போய்விடாதிருக்கும்படிக்கு, பரிமாறுதல் குறைவுபடும்வரை மாத்திரமல்லாமல், முற்றிலும் திராட்சரசம் இல்லாமல் தீர்ந்துப்போகும் வரையிலும் காத்திருந்தார்.

“”அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள்” என்று மரியாள் வேலைகாரரிடம் கூறின வார்த்தையிலிருந்து, மரியாள் அந்தக் குடும்பத்தில் மிக நெருங்கின உறவுமுறையாள் என்பது மேலும் தெளிவாகிறது. வேலைக்காரர்களுக்கும், இப்படிப்பட்ட கட்டளைகள் அவசியமாக இருந்திருக்கும்; இல்லையென்றால், அவர்கள் விருந்தினர்களில் ஒருவரிடமிருந்து கட்டளைப் பெறுவதற்கு இடமளித்திருக்கமாட்டார்கள். கர்த்தர், வேலைகாரர்களுக்கு என்ன கட்டளையிடுவார் என்ற அறிவை மரியாள் அநேகமாக பெற்றிருக்கவில்லை. ஆனால், முன்பு குறிப்பிட்டுள்ளபடி தன்னுடைய குமாரனுடைய திறமை மற்றும் ஞானத்தின்மேல் மரியாளுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. விருந்தினர்களின் களிப்பினிமித்தம் திராட்சரசம் தீர்ந்துப்போனபடியாலும், அவ்விருந்தினர்களில் ஒருவராக இயேசு இருந்தபடியினாலும், தேவையைப் பூர்த்தி செய்ய விருப்பமாய் அவர் இருப்பார் என்று மரியாள் எண்ணினாள்.

விருந்துக்கு அழைத்த மணவாளனினால் முன்னேற்பாடு செய்யப்பட்டு, அதில் இயேசுவும் அவருடைய சீஷரும் குடித்த திராட்சரத்தைக் குறித்தும், இதைத் தொடர்ந்து, கர்த்தர் உண்டுபண்ணினதும், பின்னர் அவர் குடித்த திராட்சரசத்தைக் குறித்தும் இங்கு ஒரு கேள்வி எழுகிறது. அது வெறும் புளிப்பில்லா திராட்சரசமே என்று குறிப்பிட நமக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால், (அங்கிருந்த) எல்லா சூழ்நிலைகளும் எதிர்மாறாய்த் தோன்றுகின்றது; அதாவது, கொஞ்சம் மதுபானம் இருந்தது என்று போதிக்கும் வண்ணமாக இருந்தது. திராட்ச ரசத்தைப் புளிக்க வைப்பதின் வாயிலாக உருவாகும் மது “”லைட் வைன்ஸ்” என்று அழைக்கப்படுகின்றது. முதலில் பரிமாறப்பட்ட திராட்சரசத்தைப் பார்க்கிலும், இயேசு உண்டாக்கின திராட்சரசம் நன்றாக இருந்ததாக பந்திவிசாரிப்புக்காரன் தெரிவித்தக் கருத்தானது, இந்தக் கோட்பாட்டை ஆதரிப்பது போன்று நமக்குத் தோற்றமளிக்கிறது. ஆனாலும், சுவையையோ (அ) பகுத்தறிவையோ இழக்குமளவு ஜனங்கள் குடித்து வெறித்து போதையில் இல்லாததையும் சுட்டிக்காட்டுகிறது.

நம்முடைய கண்ணோட்டத்தில், தற்போதைய நிலைகளுக்கும், நம்முடைய கர்த்தர் வாழ்ந்த காலத்திற்குமிடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. வெதுவெதுப்பான சீதோஷண நிலையில் இருக்கும் தேசத்தின் ஜனங்கள், இக்காலத்தில் நாம் தண்ணீர், டீ/தேனீர், காபி,… அருந்துவது போன்று, “”லைட் வைன்ஸ்” அருந்துவதைப் பழக்கமாக வைத்திருந்தனர். இதனால் அவர்களுக்கு [R3485 : page 12] எவ்வித தீங்கு விளைவிக்கும் காரியங்களும் ஏற்பட்டிருக்கவில்லை. இவ்விதமாகவே தற்காலத்திலும், ஐரோப்பாவின் சில பகுதிகளிலுள்ள ஜனங்களைக் குறித்தும் சொல்லப்படுகிறது. இயேசுவின் நாட்கள் பரபரப்புகள் இல்லாத காலம். மேலும், ஜனங்கள் எல்லாவற்றிலும் நிதானமாகவே இருந்தார்கள். நம்முடைய காலங்களில், எல்லாம் (எல்லா வேலைகளும்) அழுத்தங்களின் கீழும், பரபரப்புடனும் செய்யப்படுவதினால் மதுபானங்கள் பல்வேறு விதங்களில் தீமையாகவே இருக்கின்றது. ஆகையால், தற்போது ஜனங்கள் மதுபானத்தை மிதமான அளவிலும் கூடப் பயன்படுத்தக் கூடாமல் இருக்கின்றார்கள்.

வேதவாக்கியங்கள் மதுவைத் தவிர்த்துவிடு என்று சொல்லுவதினால் மாத்திரம் அல்லாமல் மேற்கூறிய காரணங்களுக்காகவும் மதுவைத் தவிர்க்க வேண்டும். அதாவது, தற்கால துயரங்களினாலும், அதிகம் மனஅழுத்தம் ஏற்படுவதினாலும் குடிபழக்கம் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதே மது தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணம் ஆகும். ஒருவேளை கர்த்தர் நம்முடைய சூழ்நிலைகளின் மத்தியில் இன்று மாம்சத்தில் இருந்திருப்பாரானால், அவர் மிக மிதமான உணவு, பான பழக்கம் உடையவராக இருந்திருப்பார். மேலும், எதையும் தவிர்க்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லாதிருந்தும் விழுந்துபோன பெலவீனமான இனத்தின் மீது அவருக்குக் காணப்படும் அன்பு மற்றும் அனுதாபம் காரணமாக, அவர்களுக்கு இடறலின் கல்லாக இருக்கும் எதையும் அவர் தவிர்க்கக்கூடிவராக இருப்பார் என்று நாம் விசுவாசிக்கின்றோம்.

தண்ணீர் ஜாடிகள் முழுமையாக நிரப்பப்பட்டது

முற்காலங்களில் இருந்தவர்கள், நீர்க்குழாய்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள்,… போன்ற சாதனங்களைப் பெற்றிருக்கவில்லை. ஆனால், குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக தண்ணீர் ஜாடிகள் என்று அழைக்கப்படும் பெரிய மண்பாண்டங்களில், தண்ணீர் வைத்திருப்பார்கள். திருமண விருந்தின்போது, கூடுதலான அளவு தண்ணீர் தேவைபட்டிருக்கும் பட்சத்தில், அண்டை வீட்டாரிடமிருந்து அநேகமாக போதுமான ஜாடிகள் இரவலாக வாங்கப்பட்டிருக்க வேண்டும். அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவுகள் கொண்டதாக, ஆனால் அதிக கொள்ளளவு கொண்டதாக இருந்தது. அவைகள் பல்வேறு அளவுகளில் இருந்தாலும், அவைகள் அனைத்தும் பெரிய அளவு கொண்டவைகளாகும்… இரண்டு கற்சாடிகள் என்பது 18 முகத்தலளவையாகும் (gallon – சுமார் 4-1/2 litre) மற்றும் மூன்று கற்சாடிகள் என்பது 27 முகத்தலளவையாகும் அல்லது ஒவ்வொரு கற்சாடியும், ஒன்பது முகத்தலளவு கொண்டதாகும். விசேஷமாக வீட்டுச் சாமான்களைத் துலக்கவும், விருந்தினர்களின் கைகள் மற்றும் பாதங்களைக் கழுவுவதற்கும் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது. ஆகவேதான், இவ்வளவு அதிகமான அளவு தண்ணீர் அவசியமாக இருந்தது.

அற்புதம் நடப்பிப்பதற்கான ஏற்ற சமயம் வந்தபோது, நம்முடைய கர்த்தர், தண்ணீர் கொண்டுவந்து 6 ஜாடிகளின் விளிம்புவரை நிரப்பும்படி கட்டளையிட்டார். சாதாரணமான தண்ணீர் ஜாடிகள் பயன்படுத்தப்பட்டதின் விளைவாக, அற்புதத்திற்கான காரணம் பொடிகள் கலக்கப்பட்டதாக இருக்குமோ என்று எழும்பும் ஐயங்கள் நீங்கிற்று. மேலும், தண்ணீர் ஜாடியின் விளிம்புவரைத் தண்ணீர் நிரப்பப்பட்ட விஷயமும், நமது கர்த்தர் ஏதோ ஒன்றைத் தண்ணீரில் கலந்துவிட்டார் என்ற ஐயங்கள் எவருக்கும் எழும்பாதவண்ணம் ஆக்கிப்போட்டது. அன்றியும், இவ்விதமாக விளிம்புவரைத் தண்ணீர் உயர்ந்திருந்ததினால், அது கலப்படமற்ற தெளிவான தண்ணீராக இருந்ததைக் காணமுடிந்திருக்கும்.

தண்ணீர், திராட்சரசமாக மாறின சம்பவம் கணப்பொழுதில் ஏற்பட்டதென்பது தெளிவாகிறது. இதன் காரணமாகவே, உடனடியாக நம்முடைய கர்த்தர், புதிதான திராட்சரசம் பரிமாறப்படுவதைப் பந்திவிசாரிப்புக்காரன் அறிந்துக்கொள்ளும்படி முதலாவது, திராட்சரசத்தை மொண்டு அவருக்குப் பரிமாறும்படி அவர்களுக்குக் (வேலைக்காரருக்குக்) கட்டளையிட்டார். பந்திவிசாரிப்புக்காரன், விருந்துக்கு அழைத்த மணவாளனிடம்,… நாவானது திராட்சரசத்தின் தரத்தை மிகத் துல்லியமாகக் கண்டுபிடிக்கும் வண்ணம் வழக்கமாக நல்ல தரம் வாய்ந்த இரசமானது முதலாவதாகப் பரிமாறப்பட்டிருக்க வேண்டும் என்றும், முதலில் பரிமாறப்பட்டதைப் பார்க்கிலும் புதிய திராட்சரசமோ மிக உயர்தரமாக இருந்தது என்றும் தன்னுடைய அபிப்பிராயத்தைத் தெரிவித்தார். இயேசு உண்டுபண்ணின மிகச்சிறந்த திராட்சரசத்திற்கு இது ஒரு சாட்சி. சாதாரண விருந்தில் பரிமாறப்படும் சாதாரண திராட்சரசமானது, நல்ல தரம் வாய்ந்த திராட்சரசமாகக் கருதப்படும் என நாம் நினைக்க இயலாது; அல்லது மற்றொருவகையில், இயேசு உண்டுபண்ணின திராட்சரசத்தில் அதிகம் மதுபானம் கலக்கப்பட்டு, அதைப் பயன்படுத்துபவர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருந்திருக்கும் என்றும் நாம் ஆலோசிக்கக்கூடாது.

ஆனால், அந்த ஜாடிகள் சுத்தமான நீரினால் விளிம்புவரை நிரப்பப்பட்டிருந்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு; அவை அடையாளமானவைகள் ஆகும்; அவை, தற்காலத்திலுள்ள கர்த்தருடைய ஜனங்களை அடையாளப்படுத்துகிறது. வேதாகமத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீர், ஜீவனுக்கு (“”ஜீவத்தண்ணீருக்கு”) அடையாளமாக உள்ளது. இது குறிப்பாக இயல்பான வாழ்க்கையை (அ) மனித வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறது. உதாரணத்திற்கு வெளிப்படுத்தல் 22:17-இல், ஆவியும் மணவாட்டியும், ஆயிரவருட யுகத்தின்போது, உலக மனுமக்களிடம், “”வந்து, ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” என்று சொல்வதாக அடையாள பாஷையில் கொடுக்கப்பட்டுள்ளது. இது திரும்பக்கொடுத்தலின் வேலையை அடையாளப்படுத்துகிறது. அதாவது, மரணத்தின் வல்லமையிலிருந்து மனுக்குலத்தை மீண்டும் உயிர்ப்பித்து, திரும்பக்கொடுக்கப்படும் ஜீவனை அடையாளப்படுத்துகிறது.

மண்பாண்டங்களில் பெற்றிருக்கும் நம்முடைய பொக்கிஷம்

இந்த மண்பாண்டங்களில், முதலாவதாக திராட்ச ரசம் பெருமளவில் தீர்ந்துபோனதாக இருந்தது. ஒவ்வொரு பாண்டத்திலும், மீதியாக ஒன்றுமே இருக்கவில்லை. மனித குடும்பத்தின் அங்கங்களான நம்மைப் பொறுத்தவரையில், விழுகையினிமித்தமாக நம்முடைய உயிராற்றல்கள் நன்கு நலிவடைந்ததாக உள்ளது. யூதர்களோ, நிழலான நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ்த் தேவனுடைய கிருபை பெற்ற ஜனங்களாக, ஒரு குறிப்பிட்டளவே நீதிமானாக்கப்பட்டவர்களாக இருந்தனர்; மாறாக முழு அளவில் அல்ல அதாவது, ஜீவனுக்கேதுவாக நீதிமானாக்கப்படவில்லை. ஜாடிகளில் தண்ணீர் விளிம்புவரை நிரப்பப்பட்ட சம்பவம், கர்த்தருடைய பின்னடியார்களாக மாறுபவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டதாக கருதப்படும் அனைத்து மனித உரிமைகளுக்கும், சிலாக்கியங்களுக்கும் மற்றும் ஜீவனுக்கும் ஏதுவான முற்றும், முழுமையான நீதிமானாக்கப்படுதலை அடையாளப்படுத்துகிறது. அப்போஸ்தலர் கூறுவதுபோல, “”நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.”

ஆனால், இந்த உருவகம் இன்னுமாக, இந்த நீதிமானாக்கப்பட்ட வாழ்க்கையின் மறுரூபமாகுதலை, அதாவது, அற்புதவிதமான மாற்றத்தின் மூலமாக ஒரு புதிய சுபாவத்தை அளிப்பதை நமக்குக் காண்பிக்கின்றது. இதைக் குறித்துதான், நம்முடைய மனங்கள் புதிதாக்கப்படுகிறதினாலே மறுரூபமாக்கப்படும் போது, நாம் புதுச் சிருஷ்டியாக மாறுகிறோம் என்று அப்போஸ்தலர் கருத்துத் தெரிவிக்கின்றார்.

ஆகையால், தண்ணீர் திராட்சரசமாக மாறினது, நீதிமானாக்கப்பட்ட நிலைக்கு மாற்றப்பட்டவர்கள், கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புதுச் சிருஷ்டியாக ஆகுவதை அடையாளப்படுத்துகிறது. தண்ணீர் நீதிமானாக்கப்படுதலை அடையாளப்படுத்தும் என்பதால், திராட்சரசம், விசுவாசத்தின் மூலமாகவும், ஒரு முழு அர்ப்பணிப்பின் மூலமாகவும் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களுக்கு, அதாவது ஆவிக்குரிய குடும்பத்திற்குள்ளாக ஏற்றுக்கொள்ளப் படுபவர்களுக்கு அளிக்கப்படும் மேலான ஆவிக்குரிய சந்தோஷங்களை அடையாளப்படுத்துகிறது. [R3485 : page 13] மெய்யாகவே இந்தச் சந்தோஷங்கள், வருங்காலங்களில் நிஜமாகக் கிடைக்கப்போகும் அளவிற்கு தற்போது இருப்பதில்லை; அப்போஸ்தலர் அறிக்கையிடுவதுபோல அவற்றை, நம்பிக்கையின் சந்தோஷங்களாகவும், எதிர்ப்பார்ப்பின் சந்தோஷங்களாகவும் இந்த மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். எனினும் வருங்காலங்களில், நமது கர்த்தருடைய வாக்குத்தத்தங்களின்படி, கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் ஒரு பங்காக, புதிய பாத்திரங்கள், பொற்பாத்திரங்கள் நமக்குக் கொடுக்கப்படும்; அதாவது, நம்முடைய சந்தோஷங்கள், கிருபைகள் யாவும் முழுமையான அளவு உணர்ந்து, புரிந்துக்கொள்ளப்படும் பரிபூரண நிலைமைகள் நமக்குக் கொடுக்கப்படும். கடைசி இராப்போஜனத்தின்போது, நம்முடைய கர்த்தருடைய அறிக்கையில் இதற்கான ஒரு குறிப்பு உள்ளது. அதாவது, தற்போது அவருடைய பாடுகளின் பாத்திரத்தில் பானம் பண்ணி, சுயத்தைப் பலிச்செலுத்துகிறவர்கள், வருங்காலங்களில் நவமான திராட்சரசத்தில், திவ்யச் சுபாவத்தில், இராஜ்யத்தில் ஜீவன் மற்றும் சந்தோஷங்களில் அவரோடுகூடப் பங்குக்கொள்வார்கள்.

யோவான் 2:11… என்ற நமது பாடத்திற்குரிய ஆதார வசனப்பகுதியின் கடைசி வசனத்திற்கு இசைவாக திராட்சரசத்தின் ஆவிக்குரிய அர்த்தம் உள்ளது. மேலும், அந்த நமது கர்த்தரின் அற்புதமானது, வரவிருக்கிற அவருடைய மகிமையையும், அவருக்கு உண்மையாய் இருந்தவர்களுக்கு அவர் அளிக்கப்போகும் ஆசீர்வாதங்களையும் வெளிப்படுத்துகின்றது.”