R1695 (page 271)
யோவான் 2:13-25
“”என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்” – யோவான் 2:16.
நமது கர்த்தர் செய்த இந்தக் காரியத்தைக் குறித்துப் பதிவு செய்த மற்றச் சுவிசேஷகர்கள், இந்தச் செயல்பாட்டின் பல்வேறு பதிவுகளை அவருடைய ஊழியத்தின் முடிவு காலத்தில் நிகழ்ந்ததாக [R1695 : page 272] தெளிவாகப் பொருத்தியுள்ளனர். அதேசமயம் யோவான் இங்கு இதை அவருடைய பொது வேலையின் (public work) துவக்க காலத்தில் நடந்த சம்பவங்களோடு தொடர்புபடுத்திக் கூறியுள்ளார்; இருந்தபோதிலும் அந்த ஒரு சம்பவம் அனைவராலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றச் சுவிசேஷங்களைப் போலவே, யோவான் சுவிசேஷ புஸ்தகத்தின் கடைசி வசனம், அவரைத் தேடிக்கொண்டிருந்த பகைமை உணர்வுகொண்ட ஏராளமான எதிரிகளைக் காண்பித்து, இப்படிப்பட்ட மனநிலை அவருடைய ஊழியத்தின் துவக்க காலத்தில் காணப்படவில்லை என்பதாகக் காட்சியளிக்கிறது.
இயேசுவின் அதிகாரப்பூர்வமான இந்தச் செயல்பாடு, அவருடைய ஊழியத்தின் இறுதியில் நிழல் போன்ற ஒரு புதுமையான பொருத்தத்தைக் கொண்டிருந்தது. இச்சம்பவமானது, “”இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்…” என்ற தீர்க்கத்தரிசனத்தின் நிறைவேறுதலாக, அவர் எருசலேமுக்குள் வெற்றி ஆரவாரத்தோடு நுழைந்ததைத் தொடர்ந்து உடனடியாக நிகழ்ந்தது (சகரியா 9:9). மேலும், தேவாலயத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், இஸ்ரயேலின் இராஜா என்ற நியாயமான உரிமையின் அடிப்படையிலான அதிகாரத்தின் விளைவாகவே நிகழ்ந்தது என்பது ஓர் ஊகமாக இருந்தது; ஆயினும், அந்த உரிமை யூதர்களால் நிராகரிக்கப்பட்டது. “”அவர் தமக்குச் [R1696 : page 272] சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” (யோவான் 1:11). பின்பு, அவர்கள் தங்களிடத்திலிருந்த தேவனுடைய கிருபையைப் புறக்கணித்து, அதற்குத் தங்களைத் தகுதியற்றவர்களாக்கினதைப் பார்த்த அவர், புறஜாதிகளிடமாகத் திரும்பி, தம்முடைய நாமத்திற்கென்று ஒரு ஜனத்தை அவர்கள் மத்தியிலிருந்து தெரிந்தெடுத்தார். இந்தத் தெரிந்தெடுத்தலுக்குச் சுவிசேஷ யுகத்தின் பதினெட்டு நூற்றாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. மேலும், அந்த மாம்சீக இஸ்ரயேல் வீட்டாரும், இந்த ஆவிக்குரிய இஸ்ரயேல் வீட்டாருமாகிய சுவிசேஷ சபை ஒன்றுக்கொன்று நிழலும், பொருளுமாகக் காணப்படுகின்றனர்; அதாவது, சூழ்நிலைகள் மற்றும் காலம் விஷயத்தில், தொடர்புடையவர்களாக இருக்கின்றார்கள். அவருடைய சிலுவை மரணத்திற்குச் சற்றுமுன் நடந்த சம்பவமாகிய இந்த ஆலயத்தைச் சுத்திகரித்தல், நிஜத்தில் அதற்குச் சரிநிகரான சுவிசேஷ யுகத்தில் 1878-ஆம் வருஷம் துவங்கியதாக ஆராய்ந்துக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது (ஆங்கிலத்தில் பார்க்கவும் Vol 2, பக்கம் 239). அதாவது, சரீரத்தின் அங்கங்களாவதற்குத் தகுதியற்றவர்கள் ஆவிக்குரிய ஆலயத்திலிருந்து, அதாவது, அவருடைய சரீரமாகிய அர்ப்பணிக்கப்பட்ட சபையிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர். மேலும், தகுதியும், உத்தம இருதயமும் உள்ளவர்கள் இதற்கு ஏற்றவர்களாக ஆசீர்வதிக்கப்பட்டனர்.
சிறு கயிறுகளினால் உண்டாக்கப்பட்ட சாட்டையானது, இங்குச் சுத்திகரிப்பின் வேலையை நிறைவேற்றக்கூடிய கிறிஸ்துவின் இசைவான போதனைகளைக் குறிக்கும் பொருத்தமான சின்னமாக இருக்கின்றது.
எந்த அதிகாரத்தினாலே அவர் இவைகளைச் செய்தார் என்பதற்கான அடையாளம் என்ன என்று கேட்கப்பட்டபோது, இயேசு தம்முடைய எதிர்க்கால வல்லமையை அதாவது அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பின்னான அதிகாரத்தைச் சுட்டிக்காண்பித்தார் (வசனங்கள் 18-21). அத்தருணத்திலேயே அந்த வேலையின் நிஜத்தை ஆரம்பிக்க, அவருக்கு அதிகாரம் இல்லாதிருந்தது. அவர் செய்த காரியம் வெறும் நிழலானதே. அது சபையுடைய பிரயோஜனத்திற்கே அல்லாமல் மற்றவர்களுடைய பிரயோஜனத்திற்காக அல்ல.
வசனங்கள் 23-25 (Diaglott). இந்தச் சமயத்தில் ஜனங்கள் அவருடைய அற்புதங்களினால் பெருமளவில் கவரப்பட்டவர்களாகக் காணப்பட்டு, அவருக்கு முன்பாக ஓசன்னா! என்று ஆர்ப்பரித்து, அவரை மேசியாவாக ஏற்றுக்கொள்வதற்கும், உடனடியாக அவரை இராஜாவாக அறிக்கை செய்வதற்கும் தயாராக இருந்ததாகக் காணப்பட்டாலும், இயேசு அவர்களை நம்பவில்லை (மத்தேயு 21:9-11). காரணம், அவர் அவர்களுடைய இருதயத்தின் நிலையில்லா தன்மையை அறிந்திருந்தார். மேலும், அவர் ஆவிகளைப் பகுத்தறியும் திறன் பெற்றிருந்தபடியால், எந்த மனுஷனும், தன்னை அவருக்கு நிரூபித்துக் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. காரணம், அவர்களுக்குள் இருந்ததை அவர் அறிந்திருந்தார் (லூக்கா 20:41-47).
“”என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்” என்ற இந்தப் பொன்னான வசனமானது, உண்மை ஆலயமாக, அதாவது அவருடைய அர்ப்பணிக்கப்பட்ட வீட்டாராக இருப்பதாக அறிக்கையிடுகிற அனைவராலும் அதிக கவனம் கொடுக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. தேவனுடைய ஆலயம் சுத்திகரிக்கப்பட்டு, புடைக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்படக்கூடிய இக்காலத்தில், தேவனுடைய பரிசுத்த காரியங்களை எவ்விதத்திலாவது வியாபாரமாக்கும்படி நோக்கங்கொண்டிருக்கும் எவரும் தேவனுடைய ஆலயத்தில் தரித்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.”