R2433 – இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R2433 (page 44)

இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்

GREATER WORKS THAN THESE

யோவான் 5:17-27

“”அவர் மெய்யாய் கிறிஸ்துவாகிய உலக ரட்சகர்.” யோவான் 4:42.

இயேசு மீண்டும் யூதேயாவில் வந்தார், அநேகமாக அவருடைய வழக்கத்தின்படி அவர் பஸ்கா பண்டிகையில் கலந்துகொள்ளும்படிக்கு வந்திருக்க வேண்டும். பரிசுத்த நகரத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும், நாடுகளிலுமுள்ள பக்தியுள்ள யூதர்களைச் சந்திப்பதற்கான மிகச் சிறந்த வாய்ப்பை இந்தப் பண்டிகைக்கான கூடுகைகள் வழங்கின.

நமது கர்த்தர் எருசலேமில், ஓய்வுநாளின் நிமித்தம் அமைதியாக நடந்து கொண்டிருந்த போது, பெதஸ்தா குளத்தின் அருகே வந்தார்; இக்குளமானது அதன் சுகமளிக்கும் தன்மையின் நிமித்தம் ஆச்சரியமான கீர்த்திப் பெற்றிருந்தபடியால், குளத்தைச் சுற்றியுள்ள மண்டபங்களில் பல்வேறு வியாதிகளினால் அவஸ்தை பட்டுக்கொண்டிருந்த திரளான ஜனக்கூட்டமானது, குளத்தின் அற்புதமான செயல்பாடுகளிலிருந்து நன்மையைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக காத்துக் கொண்டிருந்த நிலையில் குவிந்துக் காணப்பட்டார்கள். அன்றைய நாட்களில் பெதஸ்தா குளம் என்று அழைக்கப்பட்ட இக்குளமானது இன்று விர்ஜின் குளம் (Pool of Virgin) என்று அழைக்கப்பட்டு வருகின்றது, மேலும் விர்ஜின் குளத்தின் தண்ணீரில் ஏற்படும் விநோதமான அசைவுகள் நன்கு அறியப்பட்டவைகளாகவே காணப்படுகின்றது. ஐந்து நிமிடங்களுக்குள் இந்த ஊற்றானது 12, அங்குலம் (inch) அளவுக்கு உயர்ந்து, பின்னர் உடனடியாக தணிந்து விடுகின்றது என்று பார்த்ததாக, நம்பிக்கைக்குப் பாத்திரமான சில பயணிகள் கூறியுள்ளனர். இதே மாதிரியான விநோதமான அசைவுகள் கொண்ட வேறு நீரூற்றுகளும் உள்ளன. அவைகளில் ஒன்று ஜெர்மனியில் உள்ள கிஸ்ஸிங்கென் (Kisingen) ஆகும். இவ்வூற்றில் கூட வாயுகளும் வெளியேறுகின்றது; மேலும் தண்ணீர் சலசலப்புகளினால் கலங்கும்போது, அத்தண்ணீருக்கு மருத்துவ பண்புகள் மிக அதிகமாகக் காணப்படுகின்றது என்ற கீர்த்தி நிலவுகின்றது, அநேகமாக தண்ணீரின் மருத்துவ பண்புகளுக்கு, வெளியேறும் வாயுகளே காரணமாய் இருக்க வேண்டும்.

பெதஸ்தா குளத்தில் தண்ணீரானது அவ்வப்போது கலங்கும் காரியமானது யோவான் 5:3-7-ஆம் வசனங்களில் இடம்பெறுகின்றது. ஆனால் தூதன் வந்து தண்ணீரைக் கலக்குகின்றார் என்பது குறித்த காரியங்கள் பற்றின யோவான் 5:4-ஆம் வசனத்தின் பதிவுகள் பழைய கிரேக்க மூலப் பிரதிகளில் தவிர்க்கப்பட்டுள்ளது. இக்குளத்தில் அற்புதம் எதுவும் இல்லை, மாறாக தண்ணீர் [R2433 : page 45] கலங்குவதற்கான காரணம் வாயுகள் அல்லது குளத்திற்கான நீர்த்தேக்கங்களில் விநோதமான கால்வாய் அமைப்பின் நிமித்தம், தண்ணீர் ஓரிடத்திலிருந்து, அவ்வப்போது வேறு தளத்தில் செல்வதினால் கூட இருக்கலாம். இக்குளத்தின் தண்ணீர் மனதையே சொஸ்தப்படுத்தினது, அதாவது மனம் சொஸ்தமடையும் போது, சரீரத்திற்கு நன்மை ஏற்படுகின்றது.

சொஸ்தமடைவதற்கெனத் தண்ணீர் கலங்கும் தருணத்திற்காகக் காத்துக்கொண்டிருந்த ஜனக்கூட்டம் அனைவரையும் கர்த்தர் சொஸ்தப்படுத்தினாரா என்பதை நாம் அறியோம்; இன்னுமாக 38 வருடங்களாக, வியாதி முற்றிப்போன நிலையில், குணமடைய வாய்ப்பில்லாமலும், அங்கிருந்தவர்களைக் காட்டிலும் மிகவும் உதவியற்ற, பரிதாபத்திற்குரிய நிலையில் காணப்பட்டவர் என்று நம்முடைய பாடத்தில் குறிப்பிடப்படும் இம்மனுஷனைத் தவிர வேறு எவரையாகிலும் கர்த்தர் சொஸ்தப்படுத்தினாரா என்பதையும் நாம் அறியோம். குளத்தில் கலக்கப்படும் தண்ணீர் மூலமும் சொஸ்தப்படுவதற்கு இம்மனுஷனுக்கு வாய்ப்புகள் இல்லாதிருந்தது, இதைக்குறித்து அம்மனுஷனே விவரித்தார்; அதாவது தண்ணீர் கலங்கும்போது, தான் குளத்தில் இறங்குவதற்கு முன்பு வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்று அம்மனுஷன் விவரித்துக் கூறினான். இந்த உதவியற்ற, நம்பிக்கையெல்லாம் முடிந்துபோன, நலிந்துபோன, மனம் உடைந்துபோன மனுஷனிடத்தில், “”சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று கர்த்தர் கேட்டார். அம்மனுஷனோ தான் சொஸ்தப்பட விரும்புகின்றேன் என உடனடியாகத் தெரிவித்தான்; சொஸ்தப்படுவதற்கு முன்னதாக அம்மனுஷன் இயேசுவின் வல்லமையின் மீது விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கூட நமது கர்த்தர் காத்திராமல், மாறாக அம்மனுஷன் தன்னுடைய கீழ்ப்படிதல் மூலம் அம்மனுஷனுடைய விசுவாசம் வெளிப்படும்படிக்குக் கர்த்தர் அனுமதித்தார். மேலும் அம்மனுஷனோ விசுவாசத்தைச் செயல்படுத்தினவனாக, தன்னைச் சொஸ்தப்படுத்தினவர் யார் என்று அறிந்துக்கொள்ளாமலேயே அதிர்ச்சிக்கும், திகைப்புக்கும் உள்ளானவனாக, தனது படுக்கையை எடுத்து நடப்பதின் மூலம் அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தான்.

இப்படியாகவே, இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதிலும் நமது கர்த்தரால் நிகழ்த்தப்பட்ட பெரிய அற்புதங்களும் காணப்படுகின்றது. விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலின் காரணமாகப் பெலவீனர்களில் சிலரும், நன்மை பெற்றுக்கொள்வதற்கு முற்றிலும் திராணியற்றவர்களாய் இருந்த சிலரும், முற்றிலும் நம்பிக்கை தொய்ந்துப் போனவர்களாய் இருந்த சிலரும், ஒழுக்க ரீதியில் சொஸ்தப்படுத்தப்பட்டு, பலப்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு, மறுரூபமாக்கப்பட்டுள்ளனர். ஆனால் இப்படியாகச் சொஸ்தமடைந்தவர்கள், இவர்களைப் போலவே பாவத்தினால் ஏறக்குறைய வியாதிக்குள்ளானவர்களாய்க் காணப்படும் மனுக்குலத்தின் உலகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது சொற்பமானவர்களாகவே இருக்கின்றார்கள். மனுக்குலமானது இறுதியில் (ஆயிரம் [R2434 : page 45] வருஷம் அரசாட்சியின் போது) மாபெரும் வைத்தியனிடம் அறிமுகப்படுத்தப்படுவார்கள்.

இந்த அற்புதமானது, இயேசுவின் மீது, பரிசேயருடைய எதிர்ப்பைக்கொண்டு வந்தது; பரிசேயர்கள் தவறான இருதய மனப்பான்மையைக் கொண்டிருந்தபடியால், ஓய்வுநாளின் உண்மையான நோக்கத்தைத் தவறாய்ப் புரிந்துக்கொண்டு, தெய்வீகக் கட்டளைகளுக்குள், முன்னோர்களின் பாரம்பரியத்தைப் புகுத்தி, ஓய்வுநாளை வெறும் ஆச்சாரமாக அனுசரித்து, அதன் உண்மையான அர்த்தத்தை மறைத்துப் போட்டவர்களாய்க் காணப்பட்டார்கள். மற்ற நாட்களை விட, ஓய்வு நாளிலேயே நமது கர்த்தர் அநேக அற்புதங்களைச் செய்த காரியமானது, ஓய்வுநாளை அவமதிப்பதற்கென்றோ அல்லது பரிசேயர்களைச் சினமூட்டுவதற்கென்றோ, அவரால் செய்யப்பட்டதென நாம் கருதிவிடக் கூடாது. மாறாக ஓய்வுநாளில் அவர் செய்த இந்தக் குறிப்பிடத்தக்க அற்புதங்கள் மாபெரும் ஏழாம் நாளை, மாபெரும் ஓய்வு நாளை, ஆயிரம் வருஷம் அரசாட்சியை, பூமியின் வரலாற்றில் ஏழாவது ஆயிர வருடத்தின் காலப்பகுதியை, அதாவது மனுக்குலத்தின் மீது வரும் நிஜமான மற்றும் மகா பெரிய அற்புதங்கள் வரும் காலப்பகுதியைச் சுட்டிக்காட்டுவதற்கே நிகழ்த்தப்பட்டன. “”இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்” (யோவான் 2:11).

கர்த்தர் எவ்விதமான தவறையும் செய்யாமல் இருந்து, அதிகமான நன்மையை மாத்திரம் செய்தபடியாலும், மற்றும் அவர் வித்தியாசமாக நியாயப்பிரமாணத்திற்கான விளக்கத்தை அளித்தபடியாலும், “”முன்னோர்களின் பாரம்பரியத்தை” அவர் புறக்கணித்தப்படியாலும், அவரைக் கொன்றுபோடும்படிக்கு நாடின யூதர்களின் செயல்பாடானது, தற்கால பெயர்க் கிறிஸ்தவர்களால் இன்றும் சிலசமயம் வெளிப்படுத்தப்படும் எதிர்ப்புக்கு இணையாக உள்ளது. பெயர்க் கிறிஸ்தவர்கள், தங்களுடைய கோட்பாடுகள் மற்றும் பாரம்பரியங்களை எதிர்க்கும் ஒருவரைச் சொல்லர்த்தமாகக் கொன்றுபோட நாடாவிட்டாலும், இவர்கள் தங்களுடைய அமைப்புகளின் தவறுகள் வெளிப்படாமல் மறைக்கப்படுவதற்கென, உண்மை கிறிஸ்தவனுடைய குணலட்சணத்தைக் (பெயரை) கொன்றுப்போடுவதில் கொஞ்சமும் தயக்கம் காண்பிப்பதில்லை.

நமது கர்த்தர், தம்முடைய அதிகாரம் குறித்துக் கூறின பதிலானது, அவர்களை இன்னும் அதிகமாகச் சினமூட்டியது; அநேகர் எண்ணுவது போன்று, இயேசு இங்குத் தம்மைப் பிதா என்று கூறினதற்காக இராமல், மாறாக இயேசு தம்மைப் பிதாவினுடைய குமாரன் என்றும், தாம் செய்யும்படிக்குப் பிதா தமக்கு ஒரு வேலை கொடுத்துள்ளார் என்றும் அறிவித்தப்படியாலே அவர்கள் சினம் கொண்டார்கள். இங்கு இயேசு தம்மைப் பிதா என்று கூறினதாக, யூதர்களும் தவறாகத் புரிந்துக்கொள்ளவில்லை; இயேசு தம்மைத் தேவனுடைய குமரான் என்று கூறும்போது, அவர் பரிசேயர்களைக் காட்டிலும், மிகவும் உயர்ந்த கனமும், ஸ்தானமும் தமக்கு உள்ளது என்றும், பிதாவுடைய சுபாவத்தில், அவருடன் நெருக்கமான உறவுகொள்ளும் ஸ்தானத்தில் தாம் இருப்பதாகக் கர்த்தர் கூறினார் என்றும் அவர்கள் புரிந்துக்கொண்டபடியாலே, அவர் மேல் சினம் கொண்டார்கள்; இப்படியாகக் கூறுவது என்பதைத் தேவதூஷணமாக அவர்கள் கருதினார்கள். நம்முடைய நாட்களில் காணப்படும் பரிசேயர்கள் நமது கர்த்தர் உரிமை பாராட்டின விஷயங்களையும் தாண்டி, அவர் தமக்கென ஒருபோதும் உரிமை பாராட்டிக்கொள்ளாதவைகளை, அவருக்கென உரிமை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர், அதாவது அவர்தான் பிதா என்றும், அவர் எப்போதும் பிதாவாகவும், குமாரனாகவும் இருக்கின்றார் என்றும், அவர்கள் இருவரும் ஒருவர் என்றும், அவர்கள் ஒரே நோக்கம், மனம், சித்தம், உணர்வுடைய இருவராயிராமல் ஒருவர் என்றும், கர்த்தருக்காக உரிமை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக கர்த்தருக்கு உரிமைப் பாராட்டிக் கொண்டிருப்பவர்கள், இன்றைய நாட்களில் வேதவாக்கியங்களின் அடிப்படையில் தேவனுடைய குமாரர்கள் என்று உரிமை பாராட்டிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய சகோதர சகோதரிகளுக்கு எதிராக மிகவும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். 2 பேதுரு 1:4-ஆம் வசனத்தை மையமாகக் கொண்டு, டான் வெளியீட்டில் வந்த சபைக்கான, “”பரம அழைப்பு” தொடர்பான கட்டுரைக்கு, ஓகியோவிலுள்ள முக்கியமான இறையியல் கல்லூரியைச் சேர்ந்த முக்கியமான பேராசிரியரும், டாக்டர் ஆப் டிவைனிட்டியுமானவர் (Doctor of Divinity) கீழ்த்தரமான விதத்தில் விமர்சனம் வெளியிட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

“”மகன் தாமாக எதையும் செய்ய இயலாது” (யோவான் 5:19; திருவிவிலியம்) என்று கர்த்தர் கூறின வார்த்தைகள், குமாரன்தான் பிதா என்ற திருத்துவ கொள்கைவாதிகளுடைய பொதுவான கருத்துக்கு எதிர்மாறாய் உள்ளது; இன்னுமாக பிதாவும், குமாரனும் வல்லமை மற்றும் மகிமையின் விஷயத்தில் ஒன்றாய்/சரிசமமாய் இருக்கின்றார்கள் என்ற கேட்டிசம் (Catechism; வினா விடையாக கற்பிக்கப்படும் பாடம்) கூற்றிற்கும் கூட, இந்தக் கர்த்தருடைய வார்த்தைகள் முற்றிலும் எதிர்மாறாகவே உள்ளது. “”பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருக்கின்றார்” (வசனம் 20). மேலும் பிதா, குமாரன் மீது கொண்ட அன்பின் காரணமாக பெரிய வியப்பிற்குரியவைகளையும்/கிரியைகளையும், பெரிய ஆச்சரியங்களையும் பிதா, குமாரனுக்குக் காட்டியுள்ளார், காட்டிக்கொண்டிருக்கின்றார், இன்னமும் காட்டுவார். சுவிசேஷ யுகத்தின் புத்திரர்களின் மூத்த சகோதரனாகிய நமது கர்த்தர் இயேசுவுக்குப் பிதா எவைகளையெல்லாம் வெளிப்படுத்துகின்றாரோ, அவற்றையெல்லாம், நமக்கு கர்த்தர் இயேசு வெளிப்படுத்துவார் என்று கர்த்தர் இயேசு நமக்கு வாக்களித்துள்ளார். இவ்விஷயம் குறித்து, வெளிப்படுத்தல் புஸ்தகத்தில் [R2434 : page 46] மிகத் தெளிவாக நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. “”இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (யோவான் 15:15). “”சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்” (வெளிப்படுத்தல் 1:1). இன்னும் ஏற்றகாலத்தில், நமது கர்த்தரால், அவருடைய முதலாம் வருகையின்போது நிகழ்த்தப்பட்டவைகளைக் காட்டிலும் மாபெரும் கிரியைகளை அவர் செய்யும்போது, நாமும் அவரோடு கூட அதில் பங்குப்பெறுவோம் என்று நமது மூத்த சகோதரனும், நமது மணவாளனும், நமது அதிபதியுமானவர் வாக்களித்துள்ளார். “”மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்” (யோவான் 14:12).

கர்த்தர் குறிப்பிட்ட மாபெரும் கிரியைகளில் ஒன்று மரித்தோரின் உயிர்ப்பிக்குதல் ஆகும்; மரித்தோரை உயிரோடு எழுப்புவதற்கான வல்லமை பிதாவுக்கு இருந்தது போன்று, இந்த வல்லமை குமாரனுக்கும் அருளப்பட்டுள்ளது. இவ்வார்த்தைகளை நமது கர்த்தர் பேசும்போது, அவர் லாசரு, யவீருவின் மகள் மற்றும் நாயீன் ஊர் விதவையின் மகன் ஆகியவர்களை உயிரோடு எழுப்பப்பட்டது தொடர்பாகவே கூறினார் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. இவர்கள் உயிரோடு மாத்திரமே எழுப்பப்பட்டார்கள் (awakenings); இவர்களின் விஷயத்தில் உயிர்த்தெழுதல் (Resurrection) நடக்கவில்லை; இவர்கள் மரணத்திலிருந்து முற்றிலுமாகப் பூரணமான ஜீவனுக்குள் கொண்டுவரப்படவில்லை. நமது கர்த்தர் எதிர்க்காலத்தின் சம்பவங்களை நினைவில் கொண்டவராக, சபையானது மகிமை, கனம் மற்றும் அழியாமைக்குள் உயிர்த்தெழுப்பப்படுவதையும், பின்னர் ஆயிரம் வருஷம் யுகத்தில் உலகம் (நியாயத்தீர்ப்பிற்காக) உயிர்த்தெழுப்பப்பட போவதையும் கருத்தில் கொண்டவராக இதைக் கூறினார்.

மேற்கூறப்பட்ட இக்கருத்துக்கள் யோவான் 5:22-ஆம் வசனத்தில் வெளிப்படுகின்றது; அதாவது, “”பிதாவானவர், நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்” என்று கர்த்தர் கூறினார். நியாயத்தீர்ப்பில் வெற்றிகரமாக தேறுபவர்களுக்கே உயிர்த்தெழுதலின் ஜீவன், பலனாகக் கொடுக்கப்படுகின்றது. பரம அழைப்பு மற்றும் மகிமை, கனம், அழியாமைக்குரிய இவ்வழைப்புக்கான இடுக்கமான வழியின் நிபந்தனைகளின் கீழ், இந்தச் சுவிசேஷ யுகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பரீட்சையில், “”ஜெயங்கொண்டவர்களாக” வெளிப்படுபவர்களுக்கான பலனாக முதலாம் உயிர்த்தெழுதல் சம்பவிக்கின்றது. இந்தச் சுவிசேஷ யுகத்தில், இப்பொழுது சபையானது, இந்தப் பரம அழைப்பிற்கான நிபந்தனைகளின் கீழ் நியாயத்தீர்ப்பில், பரீட்சையில் உள்ளது. கர்த்தர் தம்முடைய சொந்த பலியினால் மீட்டுக்கொண்ட உலகத்தின் மனுக்குலத்தையும் கூட ஆயிரம் வருஷம் யுகத்தின் போது நியாயந்தீர்ப்பார்; மேலும் உலகம் நியாயம் தீர்க்கப்படும் விஷயத்தில், இப்பொழுது நியாயத்தீர்ப்பு நடந்தேறிக் கொண்டிருக்கும் மணவாட்டி வகுப்பாரும் கர்த்தரோடு இணைந்து செயல்படுவார்கள் எனக் கர்த்தர் வாக்களித்துள்ளார். “”பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா?” (1 கொரிந்தியர் 6:2). ஆயிரம் வருஷம் யுகத்தில் மனுக்குலம் எழுப்பப்பட்டு, (awaken) நியாயத்தீர்ப்பின் பரீட்சையின் கீழ் விடப்படுகின்றனர், மேலும் இவர்களில் யார் யார் நீதிக்கு இசைவான குணலட்சணங்களை வளர்த்தி, நியாயாதிபதியின் அங்கீகரிப்புக்குப் பாத்திரமாய் இருக்கின்றார்களோ, அவர்களே முழுமையான உயிர்த்தெழுதலை (Resurrection) அடைந்து, ஆயிரம் வருஷம் யுகத்தின் முடிவின்போது, நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பார்கள்; மேலும் நியாயத்தீர்ப்பின் நாளினுடைய முடிவின்போது, மீதமானவர்கள் இரண்டாம் மரணத்தில் அறுப்புண்டுப் போவார்கள்.

உலகத்திற்கான நியாயத்தீர்ப்பு நமது கர்த்தருடைய முதலாம் வருகையின்போது ஆரம்பிக்கவில்லை என்பதற்கான சாட்சியாக யோவான் 12:47-ஆம் வசனம் விளங்குகின்றது. “”என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்;” “”மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்” (யோவான் 12:48; அப்போஸ்தலர் 17:31, 1 கொரிந்தியர் 6:2).

இதற்கு இசைவாகவே யோவான் 5:17 மற்றும் எபிரெயர் 4:4,10-ஆம் வசனங்களும் காணப்படுகின்றன. மனிதன் மீறுகிறவனான போது, தேவன் தம்முடைய சிருஷ்டிப்பின் வேலையிலிருந்து ஓய்ந்தார்; இன்னும் அவ்வேலையைத் தொடர்வதற்குப் பதிலாக, அதை அவர் விட்டுவிட்டு, அதன்மேல் சாபத்தை வைத்தார், அதாவது தம்முடைய பிரதானமான கையின் கிரியையின் மீது மரணம் எனும் தண்டனையை வைத்தார். ஒரு கண்ணோடத்தில்/விதத்தில் அவ்வேலையைத் தேவன் விட்டுவிட்டாலும், இன்னொரு விதத்தில் பார்க்கையில் அதன் மீது உள்ள அவருடைய நோக்கத்தை அவர் விட்டுவிடவில்லை; இறுதியில் தீமையானவனை நசுக்கிப் போட்டு, மனுக்குலத்தை அவனுடைய வல்லமையினின்று விடுவிப்பதற்கான ஸ்திரீயின் வித்தை எழுப்பும் நோக்கத்தைத் தேவன் கொண்டிருந்தார், அதை முன்னறிவிக்கவும் செய்தார்; அதாவது மரணத் தண்டனையை ரத்து செய்து, உயிர்த்தெழுதல் அளிக்கப்படுவதை முன்னறிவித்தார். நமது கர்த்தர் இயேசு வாக்களிக்கப்பட்ட ஸ்திரீயின் வித்தாவார்; ஆனால் நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிற வண்ணமாக, தெய்வீகத் திட்டத்தின்படி சபையாகிய, அவருடைய சரீரத்தின் அங்கங்களும் ஸ்திரீயின் வித்தில் அடங்குகின்றனர். கிறிஸ்துவின் தலை மற்றும் சரிரத்தினுடைய பாடுகள் குறித்து, சர்ப்பம் குதிங்காலைக் காயப்படுத்தும் என்று ஏதேனில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சுவிசேஷ யுகம் முழுவதும் நடந்து கொண்டு வருகின்றது; இயேசு, தீமையின் சக்திகளினால்/அதிகாரங்களினால் சிலுவையில் அறையப்பட்டார்; அவரும் தம்மைப் பாவத்திற்கான பலியாக ஒப்புக்கொடுத்துவிட்டார்; அவருடைய சரீரத்தினுடைய அங்கங்களும் அவரோடு கூடப் பாடுபட்டு, கிறிஸ்துவின் பாடுகளில் குறைவானதை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள் (கொலோசெயர் 1:24).

இந்த மாபெரும் வித்தாகிய கிறிஸ்து முழுமையாய் மகிமை அடைவதற்கும், அனைத்து அங்கங்களும் தலையினுடைய மகிமையில் பங்கடைவதற்கும் உரிய வேளை சீக்கிரத்தில் வரவிருக்கின்றது; அப்போது “சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்“ என்ற அப்போஸ்தலரின் வார்த்தைகள் நிறைவேறும் (ரோமர் 16:20). தம்முடைய சொந்த விலையேறப்பெற்ற இரத்தத்தினால் உலகத்தை மீட்டுக்கொண்ட கர்த்தரும், தலையுமானவரும், மாபெரும் இரட்சகருமானவருந்தான், ஆயிரம் வருஷம் யுகத்தில், சாத்தான் கட்டப்பட்டுக் காணப்படும்போது, பரீட்சையின் கீழ்க் காணப்படும் மீட்கப்பட்ட மனுக்குலத்திற்கு நியாயாதிபதியாக, பிதாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்துத் தீமையும் கீழ்ப்படுத்தும் வரையிலும், குமாரனுடைய வேலை நிறைவடைவதில்லை; தீமை அனைத்தும் கீழ்ப்படுத்துவது ஆயிரம் வருஷம் யுகத்தின் இறுதியின் போதே நிறைவடையும். விருப்பமுள்ள அனைவருக்கும் கர்த்தர் சத்திய அறிவையும், சிட்சைகளையும் கொடுத்து, நீதிக்குரிய விஷயங்களில் ஜனங்களைச் சீர்த்திருத்தவும் பண்ணுவார்; மீதமானவர்கள் அனைவரும் ஜனங்கள் மத்தியிலிருந்து அறுப்புண்டுப் போகப்படுவார்கள் (அப்போஸ்தலர் 3:23). கர்த்தர் இப்படியாக அனைத்து எதிர்ப்பின் அதிகாரங்களையும், ஆளுகைகளையும், வல்லமைகளையும் கீழ்ப்படுத்தின பிற்பாடு, தேவனிடத்தில் இராஜ்யத்தை ஒப்படைப்பார் என்று அப்போஸ்தலர் தெரிவித்துள்ளார். இவ்விதமாய் மனிதனுடைய வீழ்ச்சிக்கு முன்னதாகப் பிதாவானவர் கிரியை புரிந்தார், பின்னர் மனுஷனை ஒப்புரவாக்கும் வேலையையும், மனுக்குலத்தை நியாயந்தீர்க்கும் வேலையையும் பிதா, குமாரனிடத்தில் ஒப்படைந்திருந்தார்; பின்னர் தம்முடைய பிரதிநிதியாக குமாரன் செயல்பட்டு, அனைத்தையும் புதிதாக்கின பிற்பாடு அனைத்தையும் பிதா திரும்ப ஏற்றுக்கொள்வார் (1 கொரிந்தியர் 15:24; வெளிப்படுத்தல் 21:5).

ஆகவே சிலர் சொல்லுவது போன்று, “”பிதாவைப் போன்று இயேசு நம்முடைய நியாயாதிபதி” என்று கூறுவது மாபெரும் தவறாகும், ஏனெனில் பிதா ஒருவனையும் நியாயம் தீர்ப்பதில்லை என்றும், நியாயம் தீர்க்கும் காரியத்தை பிதா, குமாரனிடத்தில் ஒப்புவித்துள்ளார் என்றும் நமது கர்த்தர் தாமே கூறியுள்ளார். இந்தச் சுவிசேஷ யுகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சபைக்கான [R2435 : page 47] நியாயத்தீர்ப்பானது, யோவான் 5:24-ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது; இப்பொழுது கேட்டு, விசுவாசித்து, தங்களால் முடிந்தமட்டும் கீழ்ப்படிகிறவர்கள், வெற்றிகரமாக தற்போதைய நியாயத்தீர்ப்பில் கடந்து செல்வதின் காரணமாக நித்தியத்திற்குரிய ஜீவனைப் பெற்றுக்கொள்வார்கள். இவர்கள் (சபை) ஆயிரம் வருஷம் யுகத்தின்போது, உலகத்திற்கு நடைபெறும் பொதுவான நியாயத்தீர்ப்பின் கீழ் வர வேண்டியதில்லை, ஏனெனில் இவர்கள் இந்த யுகத்தில் நடந்து கொண்டிருக்கும் நியாயத்தீர்ப்பின் முடிவாக மரணத்திலிருந்து, ஜீவனுக்குள் பிரவேசிப்பவர்களாய் இருப்பார்கள்.

மனுக்குலத்திற்கான பொதுவான நியாயத்தீர்ப்புக் குறித்து யோவான் 5:25-ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது; அதாவது மரித்தவர்கள் அனைவரும் தேவனுடைய குமாரனுடைய சத்தத்தைக் கேட்கும்போது, அவர்கள் சத்தியத்தின் அறிவிற்குள் கொண்டுவரப்படும்போது அதைக் கேட்டு, அந்தச் சத்திய அறிவிற்குக் கீழ்ப்படிகின்றவர்கள் பிழைப்பார்கள்; அவர்கள் பிரேத குழிகளிலிருந்து மாத்திரம் விடுவிக்கப்படாமல், பாவத்தின் காரணமாக வந்த சரீர பிரகாரமான, மன ரீதியிலான மற்றும் ஒழுக்க ரீதியிலான பூரணமற்ற தன்மைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, பூரணமான ஜீவனுக்கும் கொண்டு வரப்படுவார்கள். “”எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்” (1 தீமோத்தேயு 2:4). இந்த நியாயந்தீர்க்கப்படும் வேலையானது, இந்தச் சுவிசேஷ யுகத்திலேயே சிறுமந்தையிடம் ஆரம்பமாகும் உண்மையானது, “”மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள்” என்ற வசனத்தில் விளங்குகின்றது (யோவான் 5:25). தெய்வீகக் கண்ணோட்டத்தின்படி பார்க்கும்போது முழு உலகமும் மரித்தவர்களாகப் பேசப்படுகின்றது. ஏனெனில் உலகத்தின் பத்தில் ஒன்பது சதவிகிதம் ஏற்கெனவே மரித்துவிட்டது, மேலும் முழுமையான மரணத் தண்டனையின் கீழும் உள்ளது. இதன் காரணமாகவே “”மரித்தோர், தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும்” என்று நமது கர்த்தர் ஒருவனிடம் கூறினார்.

ஒரு மனுஷனாக தம்மால் இத்தகைய மாபெரும் வேலையைச் செய்வதற்குரிய வாய்ப்பைப் பற்றி, தாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களால் புரிந்துக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்துக்கொண்ட நமது கர்த்தர், இன்னும் விளக்கினார்; அதாவது, “”பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராய் இருக்கிறதுபோல (அழியாமை), குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவராய் இருக்கும்படி (அழியாமை) அருள்செய்திருக்கிறார் (வாக்களித்துள்ளார்) என்றும், தீர்க்கத்தரிசிகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட பிரகாரம் தம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட இவ்வேலையை, அதாவது நியாயந்தீர்க்கும் வேலையை அதாவது, தெய்வீகச் சித்தத்தை மனுஷகுமாரனாகிய தாம் செய்ய வேண்டும் என்று பிதா கட்டளைக் (அதிகாரம்) கொடுத்துள்ளார் என்றும் கர்த்தர் இயேசு விளக்கினார். “”பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார். அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்” (யோவான் 5:20,27). மேலும் மனுஷகுமாரனிடத்தில் பிதாவினால் ஒப்புவிக்கப்பட்டுள்ள இந்த உன்னதமான கனத்தின் காரணமாகவே, “”அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்” என்று கூறினார் (யோவான் 5:22). மாபெரும் வேலையை நிறைவேற்றும்படிக்கு குமாரன், பிதாவினால் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதி என்பதே குமாரனுக்குரிய கனமாக இருக்கின்றபடியாலேயே, “”குமாரனை கனம் பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்” என்று தொடர்ந்து கர்த்தர் விளக்கிக் காட்டினார் (யோவான் 5:23).”