R5587 – சபையின் ஏற்படுத்துதல்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R5587 (page 363)

சபையின் ஏற்படுத்துதல்

THE CHURCH’S ORDINATION

மத்தேயு 28:16-20; லூக்கா 24:36-49

“”இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” மத்தேயு 28:20.

இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலைப் பின்தொடரும் நாற்பது நாட்களளவும் கொடுத்திட்ட செய்திகள் மூலம், தம்முடைய சபையிடம் அவர் பணியை ஒப்படைப்பதுப்பற்றியே நம்முடைய இப்பாடம் அமைகின்றது. முதலாவதாக எருசலேமுக்கு அருகாமையிலான எம்மாவு என்னும் கிராமத்திற்குச் சீஷர்களில் இருவர் போய்க் கொண்டிருக்கும்போது, அந்தச் சாயங்கால வேளையில் ஆண்டவரினால் கொடுக்கப் பெற்ற வார்த்தைகளை நாம் பெற்றிருக்கின்றோம். அடுத்ததாக இயேசு தம்முடைய சீஷர்களை விட்டுப்பிரிந்து, எடுத்துக்கொள்ளப்படுவதற்குச் சற்று முன்னதாக இயேசுவினால் கூறப்பட்ட பணியின் காரியங்களையும் நாம் பெற்றிருக்கின்றோம்.

எம்மாவுக்குப் போகிற வழியிலும், அடுத்து வந்து இயேசு காட்சியளித்துத்தோன்றின தருணங்களிலும் கொடுக்கப்பட்ட படிப்பினைகள், அவ்வேளையில் காணப்பட்ட கிறிஸ்துவின் பின்னடியார்கள் யாவருக்கும் மிகவும் விலையேறப்பெற்றதாய் இருந்திருக்க வேண்டும். “”அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கத்தரிசிகளின் ஆகமங்களிலும், சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துக்கொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி: எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது” என்று கூறினார் (லூக்கா 24:44-47).

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தை எடுத்திருக்க வேண்டிய சம்பாஷணைகளையும், வேதவாக்கியங்களின் விளக்கங்களையும், சுவிசேஷகன் சில வார்த்தைகளுக்குள்ளாக அடக்கி கூறியுள்ளார். அவர்களுடைய புரிந்துக்கொள்ளுதலின் கண்கள் திறக்கத்தக்கதாக, என்ன விளக்கங்களெல்லாம் கொடுக்கப்பட்டது என்பது நமக்குச் சொல்லப்படவில்லை என்றாலும், அதை நாம் அனுமானிக்கலாம். இயேசு அநேகமாக வருடந்தோறும், அக்குறிப்பிட்ட காலத்தில் அடிக்கப்படும் பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய அர்த்தத்தை அவர்களுக்கு விளக்கி, தாம் அந்த ஆட்டுக்குட்டியினுடைய, நிஜமாக இருப்பதைக் காண்பித்துக் கொடுத்திருந்திருக்கலாம்; பஸ்காவினுடைய அர்த்தத்தை அநேகமாக அவர் விளக்கி இருக்கலாம்; அதாவது நிழலில் இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள் மரணத்திலிருந்து கடக்கப் பெற்றார்கள் என்றும், இந்த முதற்பேறானவர்கள் ஆசாரியர்களையும் உள்ளடக்கின லேவி கோத்திரத்தாரினால் அடையாளப்படுத்தப்படுகின்றார்கள் என்றும், இந்த முதற் பேறானவர்களுக்கான நிஜமாக, (பரலோகத்தில் பெயர் எழுதப்பட்டவர்களாகிய முதற்பலனான) சபை காணப்படுவார்கள் என்றும், இயேசுவின் பின்னடியார்களாகிய பரிசுத்தவான்கள் இராஜரிக ஆசாரியக்கூட்டத்தினராகவும் மற்றும் நிஜமான லேவியர்கள் என்பவர்கள், மேசியாவின் இராஜ்யத்தில் மனுக்குலத்தின் உலகமானது உயர்த்தப்படும் வேலையில், இராஜரிக ஆசாரியக்கூட்டத்தாருக்கு வேலைக்காரர்களாகவும் இருப்பார்கள் என்றும் விளக்கியிருந்திருக்கலாம்.

ஆண்டவர் நிஜமான பாவ நிவாரண நாள் குறித்தும், விசேஷித்த பலிகள் குறித்துங்கூடச் சில விளக்கங்களைச் சீஷர்களுக்குக் கொடுத்திருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை; அதாவது, தாமே இந்த விசேஷித்தப் பலிகளை ஆரம்பித்ததாகவும், அது தம்முடைய சீஷர்களினால் தொடரப்படும் என்பதாகவும், பலிகள் நிறைவடையும்போது பிரதான ஆசாரியனிடமிருந்து, ஒப்புரவாகுதலின்/பாவ நிவாரண ஆசீர்வாதங்கள் ஆயிரம் வருடங்கள் கொண்ட மேசியாவின் இராஜ்யத்தில் கடந்துவரும் என்பதாகவும் ஆண்டவர் விளக்கம் கொடுத்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

“உன்னதத்திலிருந்து வல்லமை வாக்களிக்கப்பட்டது”

ஆண்டவருடைய மாபெரும் திட்டங்களில் எவைகளெல்லாம் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், ஆண்டவர் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அவைகளைக் கேட்பதில் ஆழமான ஆர்வத்தை அடைந்திருப்பார்கள் என்பதில் நமக்கு உறுதியே. அவர்களுடைய கவலை மறைந்துவிட்டது. ஆரம்பத்தில் அவர்கள் தங்கள் ஆண்டவரையும், அவருடைய ஆலோசனைகளையும், அவருடைய அறிவுரைகளையும் இழந்துவிட்டதாக எண்ணிக்கொண்டிருந்தனர்; ஆனால் இப்பொழுதுதோ இந்தப் பிரகாசிப்பித்தலின் வாயிலாக, அவர்களுடைய இருதயங்கள் அறிவினுடைய புதிய ஏவுதலினால் கொளுந்துவிட்டு எரிந்தது. அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத தெய்வீகத் திட்டத்தினுடைய உயரங்களையும், ஆழங்களையும், நீளங்களையும், அகலங்களையும் கண்டார்கள். தேவனுடைய வாக்குத்தத்தங்களினால் தூண்டப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் நடைபெறுவதற்கு, இயேசுவின் மரணம் அவசியமாய் உள்ளது என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். தங்களுக்கு அவரோடு கூடப் பாடுபடுவதற்கு மாத்திரமல்லாமல், மகிமையடைவதற்குமான சிலாக்கியம் உள்ளதையும், அவர்கள் கண்டுகொண்டார்கள்.

அக்கடைசி தருணத்தின்போதான் ஆண்டவருடைய செய்தியின் நிறைவு பகுதியானது, “”என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்” என்பதேயாகும் (லூக்கா 24:49). கிறிஸ்துவின் மணவாட்டிhகிய சபை, அவர்களுடைய தலையாகிய இயேசுவிடமிருந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதைப் பிதா பல்வேறு நிழல்களில் வாக்களித்துள்ளார். உதாரணமாக, இக்காரியத்திற்கு ஆரோனின் தலையில் ஊற்றப்பட்ட பரிசுத்த தைலம் நிழலாகக் காணப்படுகின்றது; ஆரோன் இயேசுவுக்கு நிழலாய் இருக்கின்றார்; மற்றும் ஆரோனின் சரீரத்தில் தைலம் வழிந்தோடின காரியமானது, சபையினுடைய அபிஷேகித்தலுக்கு நிழலாய் இருக்கின்றது.

இப்படியாகச் சபையினுடைய தெய்வீக ஏற்றுக்கொள்ளப்படுதல்/அங்கீகரிக்கப்படுதல் குறித்ததான இந்த வாக்குத்தத்தமானது மிகவும் முக்கியமான காரியமாகும். இது இல்லாமல், சீஷர்களுக்கு எந்தப் பணியும் இருக்காது, மற்றும் சீஷர்களால் தேவனுடைய ஸ்தானாபதிகளாகவும் இருக்க முடியாது. இயேசு முதலாவதாக 12-பேரையும், பிற்பாடு எழுபது பேரையும் அனுப்பி வைத்தது உண்மைதான்; ஆனால், இவர்கள் அவருடைய தனிப்பட்ட பிரதிநதிகளாகக் காணப்பட்டனர்; அவர் தம்முடைய சொந்த ஆவியையே, தம்முடைய சொந்த வல்லமையையே இவர்களுக்குக் கொடுத்திருந்தார்; மேலும் இதை வைத்துதான் இவர்கள் அற்புதங்களைச் செய்து, பிசாசுகளைத் துரத்தினார்கள். இவர்கள் அப்போது பிதாவினால் அங்கீகரிக்கப்படவில்லை. “”இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை” (யோவான் 7:39). இந்தப் பரிசுத்த ஆவியினுடைய ஜெநிப்பித்தலுக்காகவும், அபிஷேகத்திற்காகவும் இவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தப் பரிசுத்த ஆவியினால் மாத்திரமே இவர்கள் தெய்வீக ஊழியத்திற்கும், தேவனுடைய ஸ்தானாபதிகளாகவும் மற்றும் பிரதிநிதிகளாகவும் இருப்பதற்கும் தகுதிப்படுத்தப்பட முடியும்.

“இதோ உங்களுடனேகூட இருக்கிறேன்”

நமது கர்த்தர் தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்திட்ட ஆசியும், தம்முடைய நற்செய்தியைத் தெரிவிப்பதற்கான பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்ததும் பற்றியதான பரிசுத்தவானாகிய மத்தேயு அவர்களின் பதிவானது, நம்மை வெகுவாய் ஈர்க்கின்றது. கர்த்தர் சந்திப்பேன் என்று கூறியப் பிரகாரமாகமே, பதினொரு பேரும் அவரைக் கலிலேயாவிலுள்ள மலை ஒன்றில் சந்தித்தார்கள். அவர் கொஞ்சம் நேரந்தான் அவர்களுக்குக் காட்சியளித்துத் தோன்றினார். அவர்கள் அவரைப் பணிந்துகொண்டனர், சிலர் முழுமையாய் நம்பிக்கொண்டனர், சிலர் தடுமாற்றத்திலேயே காணப்பட்டனர். இப்படியாக தடுமாற்றத்தில் இருப்பவர்களை நம்ப செய்வதற்கே, இயேசு நாற்பது நாட்கள் பூமியில் காணப்பட்டார். பதினொரு பேரையும் நம்ப வைக்கும் தமது வேலையை, கர்த்தர் முழுமையாய் நிறைவேற்றினார் என்பதில் நமக்கு உறுதியே; ஏனெனில், அவர்கள் மேல்வீட்டறையில், பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதங்களுக்காகக் காத்திருக்கும்போது, ஒரே இருதயமும், ஒரே மனமும் கொண்டவர்களாய்க் காணப்பட்டார்கள் என்று பார்க்கின்றோம்.

இயேசு அவர்கள் அருகாமையில் வந்து, பூமிக்குரிய காரியங்கள் மற்றும் பரலோகத்திற்குரிய காரியங்கள் தொடர்புடைய விஷயத்தில், தமக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இவ்விஷயத்தை அவர்கள் உணர்ந்துக்கொள்ளாதது வரையிலும், அவர்களால் சரியான விதத்தில், உலகத்திற்கு முன்னதாக அவரை அடையாளங்காட்ட முடியாது. இந்த ஓர் அதிகாரத்தையும், வல்லமையையும் அவர் தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின் காலத்தில் கொண்டிருக்கவில்லை. அவர் தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தினுடைய காலப் பகுதியில், மரணம் வரையிலுமான அதாவது சிலுவையின் மரணம் பரியந்தமுமான தம்முடைய உண்மையுடன்கூடிய நேர்மைக்கான பரீட்சையின் கீழ்க் காணப்பட்டார். ஆனால் அவர் தம்முடைய நேர்மையை நிரூபித்துக் காட்டின பிற்பாடு, பிதா அவரை மரணத்திலிருந்து மகிமையான பூரண வல்லமைக்கான நிலைமைக்கு எழுப்பினார். இப்படியாக அவர் மரணத்திலிருந்ததான தம்முயை உயிர்த்தெழுதல் வாயிலாக, வல்லமையுள்ள தேவனுடைய குமாரனாக அழைக்கப்பெற்றார். தாம் இனி ஒருபோதும் மனிதனுக்கான எல்லைகளின் கீழ் அல்லது மரண உடன்படிக்கையினுடைய எல்லைகளின் கீழ்க் காணப்படுவதில்லை என்பதை, கர்த்தர் தம் சீஷர்கள் அறிய வேண்டுமென விரும்பிட்டார். அந்த வேலையைக் கர்த்தர் நிறைவேற்றிவிட்டார். அவர் ஆசீர்வாதத்திற்குள், பலனுக்குள் இப்பொழுது பிரவேசித்திட்டார். அவர் சுபாவ மாற்றத்தை அடைந்துவிட்டார் மற்றும் இப்பொழுது அவர் பூமிக்குரிய காரியங்களில் மாத்திரமல்லாமல் பரம காரியங்களிலும் அனைத்து வல்லமையையும் பெற்றுள்ளார்.

வானோர் மற்றும் பூதலத்தார் அனைவரும் அவருக்கு முன்பாக வணங்கிடுவார்கள் என்பதாகத் தீர்க்கத்தரிசனம் உரைக்கப்பட்டிருக்கின்றது. இந்தத் தீர்க்கத்தரிசனமானது நிறைவேற ஆரம்பிக்கும் நிலைக்கு அவர் வந்திருக்கின்றார். அவர் பரத்திற்கு ஏறிச்சென்றார்; அங்குத் தேவதூதர்கள் அனைவரும் அவரைப் பணிந்துக்கொண்டு, அவர் பிதாவினால் உயர்த்தப்பட்டவரென அவருக்குச் செவிக்கொடுக்கின்றனர். தீர்க்கத்தரிசனத்தின்/வாக்குத்தத்தத்தின் ஒரு பாகம் இன்னமும் நிறைவேறவில்லை. அதாவது, பூலோகத்தார் யாவரும் அவர் முன் வணங்கிட வேண்டுமென்ற பாகம் இன்னமும் நிறைவேறவில்லை. இப்படியாகச் சம்பவிப்பதற்கான காலம், ஆயிர வருடங்கள் கொண்ட அவருடைய மேசியாவின் இராஜ்யத்திலேயே ஆகும். ஆனால் தற்காலத்தில் இயேசு, தேவனுடைய குமாரன் என்ற அறிவிற்குள்ளாக வருபவர்கள் அனைவரும், அவர் பிதாவின் பிரதிநிதி என்ற விதத்தில், தங்கள் முழங்கால்களை அவருக்கு முன்பாக மகிழ்ச்சியுடன் முடக்குகின்றனர். இப்படியாகவே உலகமும் அவரை ஒரே பேறான குமாரன் என்று அடையாளம் கண்டுகொண்டு, அவருக்குக் கீழ்ப்படிவார்கள்.

இறுதியில் எல்லா முழங்கால்களும் முடங்கும், எல்லா நாவுகளும் அறிக்கைப் பண்ணும்; தெய்வீக ஏற்பாட்டின்படி, தேவனுடைய மகிமைப்படுத்தப்பட்ட குமாரனை ஏற்றுக்கொள்ள தவறுபவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்; அதாவது, தேவன் கிறிஸ்து மூலமாய் விழுந்துபோன சந்ததிக்கு வடிவமைத்திட்ட ஆசீர்வாதங்களையும், தேவக் கிருபைகளையும், இன்னமும் தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கு அபாத்திரர்களாகக் கருதப்படுவார்கள்.
R5588 : page 364

“ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய், உபதேசம் பண்ணுங்கள்”

இங்குதான் உருவாகின்றது, ஊழிய பொறுப்பு ஒப்படைக்கப்படும் காரியம். முதலாவது இந்தப் பணி பதினொரு அப்போஸ்தலர்களுக்கு உரியதாய் இருந்தது; பின்னர், இதனுள் யூதாசுக்குப் பதிலாக வந்த பரிசுத்தவானாகிய பவுலும் இடம்பெறுகின்றார். “”மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்” என்று பவுல் குறிப்பிடுகின்றார் (2 கொரிந்தியர் 11:5). அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், அவருடைய சபைக்குமான வாய்க்கருவிகளாக, உலகத்திற்கு காணப்படுவதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. பன்னிரண்டு அப்போஸ்தலர்களுக்கு வாரிசாக, அப்போஸ்தல கண்காணிகள் காணப்படுகின்றார்கள் எனச் சொல்லப்படுவது அனைத்தும் தவறான காரியமாகவும், வேதவாக்கியங்கள் அங்கீகரிக்காததுமாக இருக்கின்றது. அப்போஸ்தலர்களுக்குப் பின்வரும் அப்போஸ்தலர்கள் என்று எவரும் இல்லை; அப்போஸ்தலர்கள் இன்னமும் நம்முடன் காணப்படுகின்றனர்; இவர்கள் மூலமான ஆண்டவருடைய செய்தியானது, நமக்குப் புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. “”வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்த்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (2 தீமோத்தேயு 3:16-17). அப்போஸ்தலர்களிடமே சபையை ஆரம்பித்து வைப்பதற்கான மாபெரும் வேலை ஒப்படைக்கப்பட்டது. அப்போஸ்தலர்கள் பெந்தெகொஸ்தே நாளன்று வல்லமையினைப் பெற்றுக்கொண்டார்கள்.

இயேசு 12-அப்போஸ்தலர்களைச் சபைக்கான வாய்க் கருவிகளாக/ பிரதிநிதிகளாக விசேஷமாய் நியமித்தது, அவர்கள் பூமியிலே எதைக் கட்டுகிறார்களோ, அது பரலோகத்திலும் கட்டப்படும் என்றும், அவர்கள் பூமியிலே எதை அவிழ்க்கின்றார்களோ, அது பரலோகத்திலும் அவிழ்க்கப்படும் என்றும் தெரிவித்திருந்தாலும், சபையினுடைய ஒவ்வொரு அங்கமும் தம்முடைய பிரதிநிதியாக இருக்கத்தக்கதாகவும், அவரவருடைய வாய்ப்பு மற்றும் திறமைக்குத் தக்கதாக சுவிசேஷச் செய்தியை அறிவிக்கும் வேலையில் பங்கடையத்தக்கதாகவும் கர்த்தர் ஏற்பாடு பண்ணியுள்ளார். பரிசுத்த ஆவியினுடைய அபிஷேகத்தையும், ஜெநிப்பித்தலையும் அடைந்தவர்கள், ஏசாயா 61:1-3-ஆகிய வசனங்களின்படி, அபிஷேகிக்கப்பட்ட தலையாகிய இயேசுவின் கீழ், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்திற்குள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

“”கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டவும் . . . அவர் என்னை அனுப்பினார்” (ஏசாயா 61:1-3). பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டுள்ள அனைவரும் இப்படியாக அவன் (அ) அவளுடைய வாய்ப்பு (அ) வரம்பு (அ) சூழ்நிலைகளுக்கு ஏற்ப பிரசங்கிப்பதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளனர். சகோதரிகள் பொதுவிடங்களில் போதிக்கக்கூடாது என்பது அப்போஸ்தலர் கொடுத்திட்ட ஒரு கட்டுப்பாடாகும் (1 தீமோத்தேயு 2:12). எனினும் அனைவருக்கும், அநேகமான வாய்ப்புகள் உள்ளது.

ஆனால் கிறிஸ்தவ மண்டலத்தின் குருமார் வகுப்பார் (clergy class) அதாவது தாங்கள் மாத்திரமே தேவனுடைய செய்தியைப் போதிப்பதற்கு (அ) பிரசங்கிப்பதற்கு அதிகாரம் உடையவர்கள் என்று தங்களைக் குறித்துக் கூறிக்கொள்பவர்களாகிய குருமார்கள், மாபெரும் தவறை செய்துள்ளனர். இயேசுவும் சரி, அப்போஸ்தலர்களும் சரி, குருமார் வகுப்பாரை (clergy) (அ) கிறிஸ்தவ பொதுமக்கள் வகுப்பாரை (laity) தங்கள் மத்தியில்கொண்டிருக்கவில்லை. மாறாக, நமது கர்த்தர், “”நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். . . கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்” என்றே கூறியுள்ளார் (மத்தேயு 23:8-10). ஆண்டவரும், அவரது பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் ஆண்டவருடைய சீஷர்கள் மத்தியில் குறிப்பிட்ட வகுப்பாரை, மாபெரியவர்கள் போல் நாடுவதையும் மற்றும் குருமார் வகுப்பார் போன்ற காரியத்தையும் தடை பண்ணுகிறவர்களாகவே காணப்பட்டனர்.

“சபைக்கான பணி”

“”ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளிலிருந்தும் சீஷர்களை உருவாக்கிடுங்கள்” (சரியான மொழிப்பெயர்ப்பு) என்ற செய்தி அப்போஸ்தலர்களுக்கு வழங்கப்பட்டது. ஜாதிகளை/தேசங்களைச் சீஷராக்க வேண்டும் என்பதாக பணி கொடுக்கப்படவில்லை; மாறாக, அனைத்துத் தேசங்களிலிருந்தும், கிறிஸ்துவின் சீஷர்களாகும்படிக்கு விரும்புபவர்கள் ஐசுவரியவான்களாகவோ (அ) தரித்திரர்களாகவோ, கல்வியறிவு உடையவர்களாகவோ (அ) கல்வி அறிவு இல்லாதவர்களாகவோ, இழிவானவர்களாகவோ (அ) மேன்மையானவர்களாகவோ இருந்திட்டாலும், அவர்களைச் சேர்த்துக் கொள்வதே பணியாகும். கிறிஸ்துவின் சீஷன் என்பவன் அவருடைய பின்னடியானவனாகவும், கற்றுக்கொள்கிறவனாகவும், பின்பற்றுகிறவனாகவும் இருக்கின்றான். இந்தச் சீஷத்துவத்தை இயேசு பின்வருமாறு விளக்குகின்றார்; அதாவது, “”ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், (என்னுடைய சீஷனாக இருக்கவிரும்பினால்) அவன் தன்னைத் தான் வெறுத்து, (தன்னையும், தனது தாலந்துகளையும், தனது சித்தத்தையும், தனது ஆஸ்தியையும், தன்னுடைய அனைத்தையும் தள்ளிவைத்துவிட்டு, சீஷத்துவத்தை முதலாவதாக நிறுத்தி) தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (மத்தேயு 16:24).

கிறிஸ்துவின் உண்மையான பின்னடியார்களாகவும், உண்மையான சீஷர்களாகவும் காணப்படும் அனைவரும், கர்த்தர் தங்களை வழிநடத்துகின்ற பாதை கடினமான ஒன்று என்றும், இப்பாதையில் தங்கள் சொந்த சித்தங்கள் தொடர்ந்து சிலுவையில் அறையப்பட்டு, கீழ்ப்படுத்தப்பட வேண்டும் என்றும், இப்பாதையில் தங்களுக்கு மாம்சத்தின் விஷயத்தில் எப்போதும் சிரமம்/பிரச்சனை காணப்படும் என்றும் உணர்ந்துக்கொள்வார்கள். எனினும் இறுதியில் நான் எங்கே இருக்கின்றேனோ (பரலோகத்தில் (அ) மகிமையின் இராஜ்யத்தில்) அங்கே என் சீஷர்களும் இருப்பார்கள்” என்று வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவினுடைய சபையின் தண்ணீர் ஞானஸ்நானமானது, உலகத்திற்கு மரித்திருக்கிற காரியத்திற்கும், சுயத்திற்கு மரித்திருக்கிறதற்கும், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினராக, புதிதான ஜீவனுக்குள் எழுந்திருக்கிறதற்குமுரிய அடையாளமாகப் பார்க்கப்பட்டாலும், தண்ணீர் ஞானஸ்நானமானது வெறும் ஓர் அடையாளமே. ஆகையால் நமது பணி தண்ணீர் ஞானஸ்நானம் வழங்குவதாக இல்லாமல், மாறாக பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்திற்குள்ளாக கொடுக்கப்பட வேண்டிய ஞானஸ்நானமாய் இருக்கின்றது என நமக்குக் கூறப்பட்டுள்ளது. “”பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திற்குள்ளாக ஞானஸ்நானம் கொடுங்கள்” (சரியான மொழிப்பெயர்ப்பு) எனும் வசனத்தில் இடம்பெறும் “”நாமத்திற்குள்ளாக” எனும்போது, இது ஐக்கியத்திற்குள்ளாக ஞானஸ்நானம் கொடுக்கப்படுவதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. கிறிஸ்துவின் சீஷர்கள் அனைவரும், பிதாவினுடைய நாமம், நீதியின் சார்பில் உள்ளது என்பதை அங்கீகரிக்கின்றவர்களாய் இருக்க வேண்டும்; மற்றும் அவரது நாமத்தை முன்வைக்கும் கொள்கையைத் தவிர, மற்ற அனைத்துக் கொள்கைகளுக்கும் அவர்கள் மரித்தவர்களாய் இருக்க வேண்டும்; மற்றும் நீதியின், நியாயத்தின், உண்மையின் நாமத்திற்குள்ளாக அவர்கள் முற்றும் முழுமையாய் மூழ்கிக் காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவின் சீஷர்கள் மற்ற நாமங்களாகிய லுத்தரன்ஸ் (Lutherans) (அ) கல்வீனிஸ்ட் (Calvinist) (அ) ரோமன் கத்தோலிக்கம் (அ) கிரேக்க கத்தோலிக்கம் (அ) ஆங்கிலிக்கன் கத்தோலிக்கம் (Anglical Catholic) (அ) வெஸ்லியன்ஸ் (Wesleyans) ஆகியவைகளைப் புறக்கணித்துவிட்டு, கிறிஸ்துவின் நாமத்திற்குள்ளாக மூழ்கிட வேண்டும்; மற்றும் அவருடைய நாமத்தையும் அங்கீகரித்திட வேண்டும்; மற்றும் அவருடைய சரீரமாகவும், அவருடைய சபையாகவும், அவருடைய அங்கத்தினர்களாகவும் காணப்பட வேண்டும். இன்னுமாக அவர்கள் பரிசுத்த ஆவியின் நாமத்திற்குள்ளாகவும் மூழ்கிட வேண்டும்; மற்றும் பரிசுத்த ஆவியை அங்கீகரித்திட வேண்டும்; அதாவது, தங்கள் சொந்த ஆவியையும், தங்கள் சொந்த சித்தத்தையும் மரிக்கப்பண்ணி, அவர்கள் பரிசுத்த ஆவியினை அங்கீகரித்திட வேண்டும். அவர்களுடைய சொந்த இலட்சியங்களும், நம்பிக்கைகளும், எதிர்ப்பார்ப்புகளும் புறக்கணிப்பட வேண்டும். தேவனுடைய பரிசுத்தமான சித்தமும், தேவனுடைய மனதும், தேவனுடைய பரிசுத்தமான நோக்கமுந்தான் அவர்களுடைய சித்தமாகவும், நோக்கமாகவும் காணப்பட வேண்டும்.

இப்படியாக எல்லா தேசங்களிலுமுள்ள, எல்லா ஜனங்கள் மத்தியில் நமது செய்தியைக் கேட்கிறதற்குச் செவியுடையவர்களிடத்தில், நமக்கான பணி காணப்படுகின்றது. நாம் அப்படிப்பட்டவர்களைச் சீஷராக்கி, அவர்களைப் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியினுடைய நாமத்திற்குள்ளாக முழுகப் பண்ணிட வேண்டும். இயேசு கட்டளையிட்டவைகளையெல்லாம் கடைப்பிடிக்கும்படிக்கு நாம் அவர்களுக்கு உபதேசத்திட வேண்டும். இதுவே நம்முடைய அதிகாரத்தினுடைய எல்லையாக இருக்கின்றது. நாம் மனித அமைப்புகளை உருவாக்கவுங்கூடாது; மற்றும் உருவாக்கிக் கொண்டு, அதனை இராஜ்யங்கள், சபைகள் என்றோ (அ) வேறு நாமத்திலோ அழைக்கக்கூடாது. நாம் இயேசுவின் பின்னடியார்களை ஆயத்தம் மாத்திரமே பண்ணவேண்டும்; தேவனோடு ஒத்தழைக்க மாத்திரமே வேண்டும்; தமது தயவுள்ள திருவுளத்தின்படி விருப்பத்தையும், செய்கையையும் உண்டு பண்ணுபவராகிய தேவனோடு, நாம் ஒத்துழைக்க மாத்திரமே வேண்டும்.

“உலகத்தின் முடிவு பரியந்தம்”

“”இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” இயேசுவின் இந்த வார்த்தைகளானது, உலகம் ஒரு முடிவிற்கு வரும் என்பதைத் தெரிவிப்பதாகப் புரிந்துக்கொள்ளப்படுகின்றது; ஆனால் கிரேக்க மொழி அர்த்தத்தின்படி பார்க்கும் போது, ஆண்டவர் யுகத்தின் முடிவு வரையிலும் தம்முடைய ஜனங்களோடு இருப்பார் என்பதே ஆண்டவர் உண்மையிலேயே கூறினவைகளாகும்; அதாவது தெய்வீக நோக்கம் நிறைவேற்றப்படத்தக்கதாக, போதுமான எண்ணிக்கையில் கிறிஸ்துவின் சீஷர்கள் சேர்க்கப்படுவதாகிய தெய்வீக நோக்கத்துடன் கூடிய பணியைச் சுவிசேஷ யுகமானது முடிப்பது வரையிலும், சுவிசேஷச் செய்தியானது, இராஜரிக கூட்டத்தாராகிய, மகிமையிலுள்ள கிறிஸ்துவின் மணவாட்டிக்கான எண்ணிக்கை நிறைவடையத்தக்கதாக, (சீஷர்களை) சத்தியத்திற்குக் கீழ்ப்படியப் பண்ணுவதன் மூலமாக (அவர்களிடத்தில்) பரிசுத்தமாக்கப்படுதலை நிறைவேற்றி முடிப்பது வரையிலும், அவர் தம்முடைய ஜனங்களோடுகூடக் காணப்படுவார். பின்னர் யுகத்தினுடைய முடிவுவரும். பின்னர் ஆண்டவர்தாமே, தம்முடைய தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களைத் தம்மிடத்தில் சேர்த்துக்கொள்வதற்கும், அவர்களைத் தம்மோடுகூட மகிமைப்படுத்துவதற்கும், தம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கும், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் அல்லாத மனுக்குலத்தின் உலகத்தாரை ஆசீர்வதிப்பதற்குமென வருவார்.