R2574 – மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R2574 (page 44)

மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே

NOTHING TO DRAW WITH AND THE WELL IS DEEP

யோவான் 4:5-26

“”தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.” (வசனம் 24).

யூதேயாவுக்கும், கலிலேயாவுக்கும் இடையில் பரந்து விரிந்து காணப்படும் தேசமே சமாரியா ஆகும். அதன் குடிகள் சமாரியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களோடு, யூதர்கள் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தாலும், மத விஷயத்திலோ, சமுதாய விஷயத்திலோ எவ்விதமான தொடர்பும் வைத்திருப்பதில்லை. மேலும் யூதர்கள், புறஜாதியார்களைத் தெய்வீகத் தயவினின்று விலக்கப்பட்டவர்கள் என்றும், இஸ்ரயேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்கள் என்றும், தேவனற்றவர்களென்றும், நம்பிக்கையில்லாதவர்கள் என்றும்கருதினதுபோலவே, சமாரியர்களையும் கருதினார்கள் (எபேசியர் 2:12). இந்தச் சமாரியர்களின் மூதாதையர்கள், புறஜாதியாராக இருந்தனர். மேலும், நேபுகாத்நேச்சாரினால் இஸ்ரயேலர்கள் பாபிலோனுக்குக் கொண்டுவரப்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, இந்தச் சமாரியர்களின் மூதாதையர்களாகிய புறஜாதியார் சமாரியாவுக்குக் கொண்டுவரப்பட்டனர் (2 இராஜாக்கள் 17:24-41). இந்தப் புறஜாதிகள், யூதர்களோடு சம்பந்தங்கொண்டு யூதர் கொள்கைகளைத் துறந்த/மீறின சில யூதர்களோடு கலப்புத் திருமணம் செய்துகொண்டபடியால், கொஞ்சம் யூதர் நம்பிக்கை மற்றும் ஆராதனை முறைமைகளைப் பற்றின அறிவையும், தங்கள் மார்க்கத்திலுள்ள தவறான சில அறிவையும் கலந்து பெற்றிருந்தார்கள். இவர்களைக் குறித்துதான் அப்போஸ்தலர், “”கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார் அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே“ என்று குறிப்பிடுகின்றார் (அப்போஸ். 17:27). ஆனாலும், தேவன் தம்மை உலகத்தாருக்கு வெளிப்படுத்துவதற்கான காலம் இன்னும் வரவில்லை, அல்லது வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் புறஜாதியாரை ஏற்றுக்கொள்வதற்கான காலம் இன்னும் வரவில்லை. அதுவரையிலும் சகல தெய்வீகக் கிருபைகளும் ஆபிரகாமின் சந்ததியாராகிய இஸ்ரயேலர்களிடத்தில் அதாவது, விருத்தசேதனம் மூலம் தங்களின் உடன்படிக்கையின் உறவைக் காத்துக்கொண்டு வந்த இஸ்ரயேலர்களிடத்தில் மையம் கொண்டிருந்தது. ஆகவே, யூதர்கள் சமாரியர்களை ஏற்றுக்கொள்ளாத காரியமும், அவர்களோடு மத ரீதியான விஷயங்களில் தொடர்பு வைத்துக்கொள்ளாத காரியமும், அவர்களோடு கலப்புத் திருமணம் செய்யாமலும், பழகாமலும் இருக்கும் காரியமும் சரியே. இப்படிச் செய்தது மதவெறித்தனத்தின் காரியமாக இராமல், தெய்வீக ஒழுங்குமுறைகளும், தெய்வீகத் தடைச்சட்டங்களுக்கடுத்த காரியமேயாகும் (உபாகமம் 7:1-6).

நமது கர்த்தர், இராஜ்யமானது சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கும்படி தம்முடைய சீஷர்களை அனுப்புவித்தபோது, யூதர்கள் கையாளும் இந்தமுறையைத் தாமும் அங்கீகரிக்கிறார் என்று தெள்ளத்தெளிவாக அவர்களுக்குக் கட்டளையிட்டார் என்பதையும் நாம் நினைவுகூருகின்றோம். “”இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப்போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்” (மத்தேயு 10:5-6). சமாரியா பட்டணம் தொடர்பான இச்சம்பவத்தில் அப்போஸ்தலர் யாக்கோபும், யோவானும் (சினங்கொண்டு) பேசின வார்த்தைகளும் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. சமாரியாவின் வியாதியஸ்தர்களைச் சொஸ்தமாக்கி, அற்புதத்தை இயேசு நிகழ்த்தாததால், சமாரியர்கள் கோபங்கொண்டு, அவரை ஏற்றுக்கொள்ளாமலும், அவர் பிரயாணிக்கையில் தங்கள் பட்டணம் வழியாகக் கடந்து செல்வதற்கு அனுமதியாமலும் இருந்ததையும் நாம் நினைவுகூருகின்றோம் (லூக்கா 9:51-56).

இப்படியாக நமது கர்த்தர், யூதேயாவிலிருந்து, கலிலேயாவுக்குச் சமாரியா வழியாகப் பிரயாணம் பண்ணின அநேக தருணங்களில், ஒரு சமயம் தமது சீஷர்கள் போஜனம் வாங்குவதற்காக ஊருக்குள் சென்றிருக்க, பிரசங்கம் பண்ணினதினிமித்தமாகவும், வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்துவதினால் தமது ஆற்றலை இழந்ததினிமித்தமாகவும், பிரயாணத்தினிமித்தமாகவும் களைப்படைந்தவராக, யாக்கோபின் கிணற்றண்டையில் இளைப்பாறிக்கொண்டிருந்தார்.

அப்பகுதியில் யாக்கோபின் கிணறு மகா கீர்த்தியுடையதாக இருந்தது. காரணம், அதன் தண்ணீர்கள் அவ்வளவு தூய்மையாக இருந்தது. அத்தேசம் சுண்ணாம்புடைய தேசமாக இருந்தபடியால், இவ்விடத்திலுள்ள பெரும்பான்மையான தண்ணீர்கள் உப்புத் தன்மையுடையதாகக் காணப்பட்டது; ஆனால் யாக்கோபின் கிணறானது நூறு அடிக்கு மேல் ஆழமுடையதாகவும், 8 அடி விட்டம் கொண்டதாகவும் (ஆழத்தில்) கன்மலையைப் பிளந்ததாகவும் இருந்தபடியால், சுவையான [R2574 : page 45] தண்ணீரை அதிகளவில் பெற்றிருந்தது. இந்தத் தேசத்தில், இப்பகுதியில், வருடத்தின் சில பருவ காலங்களில் விசேஷமாக தண்ணீர் பற்றாக்குறைக் காணப்பட்டபடியால் நம்முடைய பாடத்தில் நாம் பார்க்கின்ற சமாரியா ஸ்தீரியானவள், என்றென்றும் வற்றிப்போகாததும், நல்ல தண்ணீரைக் கொடுக்கிறதுமான இக்கிணற்றண்டைக்குவர நீண்ட தூரம் பிரயாணித்து வர வேண்டியிருந்தது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த ஸ்திரீ கிணற்றண்டைக்கு வந்த போது, இயேசு கிணற்றண்டையில் உட்கார்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார்; அவள் அவரை யூதன் என்றும், இயேசு அவளைச் சமாரியா ஸ்திரீ என்றும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொண்டனர். அவர்கள் வெறுமனே முகத்தோற்றத்தை வைத்து அடையாளம் கண்டுகொள்ளாமல், ஆடையின் முறைமையை வைத்தும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொண்டனர். யூதர்கள் தங்களுடைய வஸ்திர ஓரங்களின் தொங்கல்களை வெள்ளை நிறத்திலும், சமாரியர்கள் நீல நிறத்திலும் பெற்றிருந்தார்கள்.

ஒரு யூதன், ஒரு சமாரியனிடம், வேண்டுகோள் விடுப்பதும், உபசரிக்கக் கேட்பதும் வழக்கத்திற்கு மாறான காரியமாகும். ஸ்திரீ மொண்டு கொண்டிருக்கும் தண்ணீரைக் குடிப்பதற்காக, இயேசு கேட்டபோது, “”நீர் ஒரு யூதனாக இருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடம் இத்தகைய வேண்டுகோளை எப்படிக் கேட்டீர்” என்று ஆச்சரியம் அடைந்து இயேசுவிடம் துணிவுடன் கேள்வி கேட்டாள். அவளுடைய கேள்வியில் தைரியம் வெளிப்பட்டது. இத்தைரியமானது அவள் தன்னை கற்பற்ற ஸ்திரீ என்று ஒப்புக்கொண்ட காரியத்திலும் வெளிப்படுகின்றது. இந்த ஸ்திரீயுடன் இவ்விதமாகச் சம்பாஷணைக்கொள்ளுமளவுக்கு, நமது கர்த்தர் தம்மைத் தாழ்த்தினதே குறிப்பிடத்தக்க மிக முக்கியமான காரியமாகும். இப்படிப்பினைத் தொடர்புடையதாகவே அப்போஸ்தலர்களின் வார்த்தைகளான, “”தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்” என்பது காணப்படுகின்றது (ரோமர் 12:16). அநேக கிறிஸ்தவ ஜனங்கள் இப்படிப்பட்ட ஸ்திரீகளுடன் பேசுவதைத் தவிர்ப்பதும், வெறுத்து ஒதுக்கி வைப்பதற்குமான காரணம், அவர்கள் தங்கள் மத போதகத்தின் ஆவியினால், அவர்களையும் அறியாமலேயே, தவறான போதனைகளை மனதில் பதிய பெற்றிருக்கிறவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்றே நாம் எண்ணுகின்றோம். அவர்களின் மத போதனையானது, இப்படிப்பட்ட ஸ்திரீயானவள் தேவனால் மிகவும் வெறுக்கப்படுகிறபடியால், அவள் மரணத்தின் பிடிக்குள் செல்லும்போது, அவள் நித்திய காலத்திற்கும் வாதிக்கப்படத்தக்கதாக தேவனால், பிசாசின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவாள் என்பதேயாகும். கர்த்தராலே இழிவாகப் பார்க்கப்படும் ஒருவர், மனுக்குலத்தினாலும் ஒதுக்கி வைத்து வெறுக்கப்பட வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் தங்களையும் அறியாமலேயே எண்ணிக்கொள்கின்றார்கள். பாவிகளிடத்திலான தேவனுடைய மனப்பான்மை பற்றியும், யாவரும் கெட்டுப்போவதில் அவருக்கு இருக்கும் விருப்பமின்மை பற்றியும் மற்றும் தம்முடைய சகல இரக்கங்களையும் நிராகரிக்கும் துணிவுள்ள பொல்லாதவர்களைச் சித்திரவதைக்குட்படுத்தாமல், மாறாக அத்தகையவர்களுக்கு ஜீவனைக் கொடுக்காமல் முற்றிலும் மரணத்தில் மறைந்து போடுவதாகிய அவருடைய ஏற்பாடு பற்றியுமான தெய்வீக வார்த்தைக் குறித்த அறிவின் தெளிவு கிறிஸ்தவர்களுக்குத் தேவை. (2 பேதுரு 3:9; அப்போஸ்தலர் 3:23). தெய்வீகக் குணலட்சணம் மற்றும் திட்டம் தொடர்பான தெளிவான/உண்மையான கண்ணோட்டங்கள், தேவனுடைய ஜனங்கள் தங்கள் வழிமுறைகளைச் சரிச்செய்துகொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

அத்தருணத்தில் இயேசுவோடுகூட யூதர் கூட்டத்தார் காணப்பட்டிருப்பார்களானால், இழிவான சமாரியருக்குப் பதிலாக, தமது சக்தியை யூதர்களுக்கே செலவழித்திருந்திருப்பார் என்று நாம் அனுமானிக்கின்றோம். ஆனால் அச்சமயத்தில் போஷிக்கப்படத்தக்கதாக, “”பிள்ளைகள்” இல்லாதபடியினால், இயேசு ஆசீர்வாதம் மற்றும் அறிவின் துணிக்கைகளை, “”பிள்ளைகளாயிராமல்”, “”நாய்க்குட்டிகளாய்” இருக்கும் புறஜாதிகளுக்கு ஒப்பான சமாரியர்களுக்கு மேஜையிலிருந்து விழப்பண்ணினார் (மத்தேயு 15:27). நம்முடைய கர்த்தரின் இச்செயல்பாடானது, அவருடைய பின்னடியார்களுக்கு ஒரு படிப்பினையாகவும், “”நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாசக் குடும்பத்தார்களுக்கும் நன்மை செய்யக்கடவோம்” என்ற அப்போஸ்தலரின் வார்த்தைகளுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கின்றது (கலாத்தியர் 6:10). இன்னுமாக, பிதாவுக்கடுத்தக் காரியங்களில் ஈடுபடுவதும், பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதுமே தமது போஜனமாகவும், பானமாகவும் இருக்கின்றது என்பதற்கான உதாரணமாக இந்நிகழ்வு அமைகின்றது. இயேசு களைப்படைந்திருந்தபோதிலும், தாம்இன்னும் சம்பாஷணையில் ஈடுபடுவது, தம்முடைய இளைப்பாறுதலையும், புத்துணர்வு அடைதலையும் தடுத்துவிடும் என்று அவர் அறிந்திருந்தபோதிலும், மற்றவருக்கு அதாவது சமுதாயத்தினால் புறக்கணிக்கப்பட்ட ஒருவருக்கு உதவும்படிக்குத் தம்முடைய சொந்த சௌகரியங்களைத் தியாகம் செய்ய ஆயத்தமாயிருந்தார். ஆகவேதான் “”சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தை வாஞ்சையுள்ள செவிகளுக்குப் பிரசங்கம்பண்ணு” என்று கர்த்தருடைய சகல ஜனங்களுக்கும் அப்போஸ்தலர் புத்திச் சொல்லுகின்றார் (2 தீமோத்தேயு 4:2).

நமது கர்த்தர் தம்மை அந்த ஸ்திரீக்கு அறிமுகப்படுத்தின விதத்தில், ஞானம் வெளிப்படுகின்றது. அவள் செய்வதற்குக் கடினமில்லாத விண்ணப்பத்தை அவர் கேட்டார். அதே சமயம் அவளுக்கு நன்றிகள் செலுத்தும் நிலைக்குள், தம்மைக் கீழ்ப்படுத்தவும் செய்தார். இது சகலரையும் அணுகுவதற்கான முறைகளில் “”தலைச் சிறந்தமுறை” என நம்முடைய அனுபவம் எடுத்துக்காட்டுகின்றது; அதாவது நம்மைத் தாழ்த்தி, மற்றவர்களின் பெருந்தன்மையின் மீதான நமது நம்பிக்கையை வெளிப்படுத்துவது, ஏதோ விதத்தில் அவர்களின் தயவுக்கு நாம் திரும்பச் செய்வதற்கு, விருப்பம் கொண்டிருப்பதைக் காட்டுகிறதாய் இருக்கும்.

நமது கர்த்தர் கேட்ட உதவிக்கு ஸ்திரீயிடம் வெளிப்பட்ட கடினத்தன்மையை அவர் பொருட்படுத்தாமல், யாக்கோபின் ஆழமான கிணற்றில் காணப்படும் நல்ல தண்ணீரை ஓர் உதாரணமாக எடுத்துக்கொண்டு, தேவனுடைய கிருபையைக் குறித்ததான ஒரு பாடத்தைப் போதிக்க முற்பட்டு, ஸ்திரீயினிடம் ஒருவேளை அவள் அனுபவிக்கும் சிலாக்கியத்தைக் குறித்து அவள் உணர்ந்துகொண்டாளானால், என்னென்றும் பாய்ந்துகொண்டிருக்கிறதும், தேங்கி நிற்காததும், புத்துணர்வுடையதுமான “”ஜீவத்தண்ணீரை” தம்மிடத்தில் அவள் கேட்டுக்கொண்டிருப்பாள் என்று கூறினார். நமது கர்த்தருடைய வார்த்தைகளில் சில ஆழமான அர்த்தம் காணப்படுகின்றதை அவள் உணர்ந்துகொண்டாள். கர்த்தர் யாக்கோபின் கிணறைக் குறிப்பிட்டிருக்க முடியாது, காரணம் அதினின்று மொண்டு எடுப்பதற்கு அவரிடம் எவ்விதமான கயிறும், தோலினாலான பாத்திரமும் (Leather bucket) இல்லை. ஆதலால் அவள், “”எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்” என்றும், இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே” என்றும் வினவினாள். நமது கர்த்தர் ஆவிக்குரிய காரியங்களை வெளிப்படுத்துவதில் இன்னும் ஒருபடி முன்சென்றவராக, தாம் கொடுக்கப்போகும் தண்ணீரானது வேறுபட்ட வகை என்றும், அது தற்போதுள்ள தண்ணீர்த்தாகத்தைத் தணிப்பதோடல்லாமல், அது தொடர்ந்து உள்ளுக்குள் ஊறுகிற நீரூற்றாய் இருந்து என்றென்றும் திருப்திக் கொடுக்கின்றதாயும் இருக்கும் என்றும் அவளுக்கு உறுதியளித்தார்.

தண்ணீர், ஜீவத்தண்ணீர், தூய்மையான தண்ணீர் என்பது அனைவருக்கும் தெளிவான, அருமையான அடையாளமாகும். மேலும், தாகம் என்பது வேறொரு அடையாமாகும். தாகம் என்பது விருப்பம், வாஞ்சை, ஏக்கம் பேராவலாகும். சரீரப் பிரகாரமான தாகம் என்பது சரீரப் பிரகாரமானப் பசியைக்காட்டிலும் மிக வேதனை அளிக்கின்றதாய்க் காணப்படுகின்றது. பசியின் வீரியமானது, சரிரம் பெலவீனமடைய, அடைய குறைவடையக்கூடியதாய் இருக்கின்றது. ஆனால், தாகம் என்பதோ கடைசி மூச்சுவரையிலும் தொடரக்கூடியதாகவும், கடுமையாகவும் காணப்படக்கூடிய ஒன்றாகும். தண்ணீர் என்பது இந்த இயல்பான தேவையைத் திருப்திச் செய்யக்கூடியதாய் இருக்கின்றது; இதைப் போலவே ஆத்துமாவின் தாகத்தையும், ஜீவத்தண்ணீர் மாத்திரமே தணித்துத் திருப்திச் செய்யக்கூடியதாக இருக்கின்றது.

ஒவ்வொரு இலட்சியமும், விருப்பமும் ஒரு தாகமாகும். ஒரு மனிதனுடைய மகத்துவமும், அவனுடைய தனித்துவமும் மூன்று காரியங்களின் அடிப்படையில் அளவிடப்பட முடியும். அவைகள் பின்வருமாறு, (1) அவனுடைய தாகங்களின்/விருப்பங்களின் எண்ணிக்கைகள்; (2) அவனுடைய தாகங்களின் அம்சங்கள்; (3) அந்தத் தாகங்களின் வீரியம் என்பவைகளே ஆகும். தகுதியான மற்றும் தகுதியற்ற தாகங்கள் பற்றியும், இவைகளில் எவைத் திருப்திப்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றியும், இப்படி மிக ஞானத்துடன் செயல்படுவது எப்படி என்பது பற்றியும், உண்மையான [R2575 : page 46] கல்வியானது, ஓர் ஆசிரியராக மனுஷனுக்குப் பாடம் புகட்டுகின்றது. எவ்விதமான விருப்பங்களும் இல்லாதவனுக்குத் திருப்திச் செய்வதற்கு எதுவும் இருப்பதில்லை. மேலும், உண்மையைச் சொல்லப்போனால் அத்தகையவன் ஜடமாவான். நமக்கென்று விருப்பங்கள் இருக்கக்கூடாது என்றோ, அதிகமாக இருக்கக்கூடாது என்றோ, வாழ்க்கையின் பாடங்கள் நமக்குக் கற்பித்துத்தராமல் மாறாக, இந்த விருப்பங்கள் பாவமான விருப்பங்களிலிருந்து நீதியான விருப்பங்களாகவும், பாவமான பேராவல்களிலிருந்து பரிசுத்தமான பேராவல்களாகவும் மாற்றப்பட/மறுரூபமடைய வேண்டும் என்றே நமக்குக் கற்பித்துத்தருகின்றது. இவ்விதமாக, கர்த்தருடைய பின்னடியார்கள் நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்களாகவும், அவர்களின் விருப்பங்களை இழப்பதினால் திருப்தியடைகிறவர்களாய் இராமல், மாறாக சகல தகுதியான ஏக்கங்களைத் திரளாகவும், தொடர்ச்சியாகவும் திருப்திச் செய்வதற்கு ஏதுவான கர்த்தருடைய முன்னேற்பாடுகளை உணர்ந்து ஏற்றுக்கொள்வதன் மூலம் திருப்தியடைகிறவர்களாகவும் இருக்க வேண்டும். தகுதியற்ற ஏக்கங்கள் எதிர்க்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு, வேருடன் அழிக்கப்படவும் வேண்டும். ஆனால், தகுதியான ஏக்கங்களோ வளர்க்கப்பட்டு, விருத்திச் செய்யப்பட்டு, ஆதரவு அளிக்கப்பட்டு, என்றென்றும் அனுபவிக்கப்படவும் வேண்டும்.

திருப்திப்படுத்தும் இந்த ஜீவத்தண்ணீரானது மீட்பரிடமிருந்து அல்லாமல், வேறு எவரிடமுமிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட முடியாது; மேலும், இதனை பெற்றுக்கொண்ட யாவரும் இதனை நன்கு அறிந்திருக்கிறப்படியால், இதற்கு அவர்களால் நன்றி சொல்லி தீரமுடியாது. காரணம், இதனால் இவர்கள் புத்திக்கு எட்டாத தேவ சமாதானத்தைத் தங்கள் இருதயங்களில் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள். மனுஷர் மத்தியில் கனம்பெற்றுக்கொள்வதற்கு இவர்கள் தாகங்கொள்ளாமல், பரம பிதாவிடத்திலும், மீட்பரிடத்திலும் ஐக்கியமும், கனமும் பெற்றுக்கொள்ளவே தாகங்கொண்டிருக்கின்றனர். பூமிக்குரிய ஆஸ்திக்காகத் தாகங்கொள்ளாமல், இவர்களின் மறுரூபமாக்கப்பட்ட/மாற்றப்பட்ட விருப்பங்களானது, பரலோகப் பொக்கிஷங்களுக்காக இப்பொழுது தாகங்கொண்டுள்ளது. சிற்றின்பங்களுக்காகத் தாகங்கொள்வதற்குப் பதிலாக, இவர்களின் பிரதானமான சந்தோஷங்களும், விருப்பங்களும் ஆவிக்குரிய விருப்பங்களாக/இன்பங்களாக இருக்கத்தக்கதாக, இவர்களின் விருப்பங்கள் மறுரூபமாக்கப்பட்டுள்ளது/மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த அனைத்துத் தாகங்களும் சத்திய வார்த்தைகளினால் உண்டாகும் புத்துணர்வினாலும், சத்தியத்தின் பரிசுத்த ஆவியினாலும் அதிகமாயும், தொடர்ச்சியாகவும் திருப்திச் செய்யப்படுகின்றது. நமது மீட்பரால் நமக்கு அளிக்கப்படும் ஜீவத்தண்ணீரானது நம் ஒவ்வொருவரிடத்திலும் என்றென்றுமுள்ள ஜீவ ஊற்றாகக் காணப்படும்.

அந்தச் சமாரியா ஸ்திரீயானவள், நமது கர்த்தரின் வார்த்தைகளுடைய அர்த்தத்தைப் புரிந்துக்கொள்ளவில்லை. ஒருவேளை நாமும் அதே சூழ்நிலைகளில் காணப்பட்டால், நம்மால் கூடப் புரிந்திருக்க முடியாது. ஏனெனில், நமது கர்த்தர் கொடுப்பேன் என்று கூறின ஜீவத்தண்ணீருடைய கிணறானது ஆழமாக இருந்தபடியினாலும், சமாரியா ஸ்திரீயும் சரி மற்றும் நம்மிடத்திலும் சரி அதனிடத்தினின்று மொண்டு எடுப்பதற்கு எதுவுமில்லாமல் இருந்தபடியினாலுமேயாகும். எனினும் நாம் பரிசுத்த ஆவி கொடுக்கப்பட்டுள்ள புதிய கால யுகத்தில் காணப்படுகிறபடியால், அப்போஸ்தலர்; குறிப்பிடுகிறதுபோல திரளானவற்றினால் அருளப்பட்டிருக்கின்றோம்; “”எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்” (1 கொரிந்தியர் 2:9-10).

உண்மையான ஜீவத்தண்ணீருக்கான, ஸ்திரீயினுடைய விண்ணப்பத்திற்கு நமது கர்த்தர் பதில் கொடுக்காததற்கான காரணங்கள்… (1) சத்தியத்தின் பரிசுத்த ஆவியானது அருளப்படுவதற்கான சமயம் அப்பொழுது வரவில்லை. மேலும் கல்வாரியில் மாபெரும் பலிச் செலுத்தப்பட்டப் பின்பும் பெந்தெகோஸ்தே நாள்வரையிலும் பரிசுத்த ஆவியானது அருளப்படவில்லை; (2) அவள் சமாரியா ஸ்திரீயாக இருந்ததும் ஒரு காரணமாகும். இத்தகையவர்கள் நியமிக்கப்பட்ட வேளை வரையிலும் தெய்வீகத் தயவையும், பரிசுத்த ஆவியையும் பெற்றுக்கொள்ள முடியாது. சகல புறஜாதிகளுக்கும் வாய்ப்பின் கதவுத் திறக்கப்படுவது வரையிலும் அதாவது, பெந்தெகோஸ்தே நாள் தொடங்கி… 3½ வருடங்களுக்குப் பின்புவரையிலும் இவர்களுக்கான நியமிக்கப்பட்ட வேளை வருவதில்லை. எனினும் அந்தச் சமாரிய ஸ்திரீயிடம் காணப்பட்ட ஆவலும், விசுவாசமும் மற்றும் அவளுடைய பட்டணத்து ஜனங்களிடம் காணப்பட்ட விசுவாசமும், கர்த்தருக்குப் பிரியமான, இருதயத்தின் உண்மைநிலை அவர்களிடம் காணப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றது. ஆக, இதன் காரணமாகவே கர்த்தர் சில ஆறுதலளிக்கும் சத்தியத்தின் துணிக்கைகளையும் அவர்களுக்கு விழும்படிக்குச் செய்தார்; மேலும், சகல புறஜாதிகளுக்கும் சுவிசேஷமானது பிற்காலங்களில் முழுமையாகத் திறக்கப்படும்போது, அச்சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இத்துணிக்கைகள் அவர்களை ஆயத்தப்படுத்தியிருக்கும்; (3) அந்த ஸ்திரீ ஜீவத்தண்ணீரை ஏற்றுக்கொள்வதற்கு/ பெற்றுக்கொள்வதற்கு ஏற்ற இருதய நிலையில் இன்னும் காணப்படாமல் இருந்ததுகூட ஒரு காரணமாகும். இந்தக் கடைசி மூன்றாவது காரணமாகிய தடையை அவளால் மிக உடனடியாகப் புரிந்துக்கொள்ள முடியும் என்பதால், முதல் இரண்டு காரணங்களை ஸ்திரீக்கு விவரிக்க அவசியம் ஏற்படவில்லை. ஆகவே, அவள் பாவத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாள் என்ற விஷயத்தின் மீது அவளுடைய கவனத்தைக் கர்த்தர் திருப்பினார். தனக்கு முன்பின் அறிமுகமாகாதவராகிய அவர் (இயேசு) தன்னிடம் விசாரிக்காமலேயே, தன்னுடைய பாவ வாழ்க்கையைக் குறித்து அறிந்திருந்தபடியால் அவர் தீர்க்கத்தரிசன வரம் பெற்றவர் என்று ஸ்திரீ புரிந்துக்கொண்டாள்.

நமது கர்த்தர், தாம் கொடுக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஆயத்தமற்ற ஸ்திரீயிடம் மற்றும் ஒருவேளை அப்போது அவள் ஆயத்தமாய் இருந்தாலும், அவரால் அவளுக்கு (புறஜாதி) கொடுக்க முடியாத ஆசிர்வாதங்களைக் குறித்து அந்த ஸ்திரீயிடம் கலந்து ஆலோசிப்பதற்கான காரணம் என்ன என்று கேள்வி கேட்கப்படலாம். இதற்கான விடை பின்வருமாறு… (1) அச்சமயத்தில் கர்த்தர் தமக்குக் கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தினார்; (2) அவளுடைய வாழ்க்கை பாவநிலையில் காணப்பட்டாலும், அந்த ஸ்திரீயின் குணலட்சணங்களில் நேர்மையின் சுவடுகளைக் கர்த்தர் கண்டுணர்ந்த காரணமாக இருக்கலாம். அவளுடைய நேர்மை தன்மையை நாம், பதிவு செய்யப்பட்ட வசனப்பகுதிகளில் அடையாளம் கண்டுக்கொள்ளலாம்; (3) இந்தச் சம்பாஷணையின் விளைவாக உண்டாகும் செல்வாக்கானது நீதிக்கு ஏதுவாகவும், ஜீவத்தண்ணீருக்கான உண்மையான தாகத்திற்கு நேராகவும் வழிநடத்தும் என்று கர்த்தர் எதிர்ப்பார்த்திருக்கக்கூடும். மேலும், தம்முடைய இந்தச் சம்பாஷணையானது, ஆறு வருடங்களுக்குப் பிற்பாடு (யூதர்களுக்கு மாத்திரம் விதிவிலக்காயிராமல்) சுவிசேஷம் பொதுவாகப் பிரசங்கிக்கப்படும் காலத்தில், இந்தச் சமாரியர்களில் சிலரை, சில உண்மைகளை உணர்ந்துக்கொள்ளும் நிலைக்கு கொண்டுவரும் என்று கர்த்தர் எதிர்ப்பார்த்திருந்திருக்கக்கூடும்; அதென்னவெனில், ஜீவத்தண்ணீருடைய கிணறானது ஆழமாய் இருக்கின்றது என்றும், அதனின்று மொண்டு எடுப்பதற்கு தங்களிடத்தில் எதுவுமில்லை என்றும், இன்னுமாக, ஒருவேளை இந்தத் திருப்திப்படுத்தும் ஜீவத்தண்ணீரில் ஒரு பாகத்தைத் தாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமெனில், விருப்பமுள்ள யாவருக்கும் ஜீவத்தண்ணீரைக் அருளும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக தமது ஜீவனைக் கொடுத்தவராகிய கர்த்தரிடமிருந்து அன்பளிப்பாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றுமுள்ள உண்மையை உணர்ந்துக்கொள்ளும் நிலைக்கு வருவதற்கென, இந்தச் சமாரியர்களில் சிலருக்கு உதவும் என்று கர்த்தர் எதிர்ப்பார்த்திருந்திருக்கக்கூடும். ஒருவேளை அந்த எளிய சமாரியா ஸ்திரீயானவள், சுவிசேஷத்தில் தாக்கமடையவும், ஜீவத்தண்ணீரைப் பருகுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் நிலையை அடையவுமில்லை என்றாலும் அவள், தற்போது வாய்ப்பு பெற்றிராத மற்ற அனைவரோடும் சேர்ந்து எதிர்க்காலத்தில் வாய்ப்பு அருளப்படுவாள் என்று தெய்வீக வார்த்தைகள் நமக்கு உறுதியளிக்கின்றது.

ஜீவத் தண்ணீரானது தற்போது தனித்தனி நபர்களுக்குக் கொடுக்கப்படுகின்றது; இப்பொழுது ஜீவத் தண்ணீரானது “”தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவராலும்” அதாவது, “”தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களால்” மாத்திரமே அனுபவிக்கப்படுகின்றதாய்க் காணப்படுகின்றது; எனினும் இந்த ஜீவத்தண்ணீரனாது, கர்த்தருடைய ஜனங்களுக்குள் கிணறாக இருக்கும் நிலையிலிருந்து, மாறும் காலம் சமீபித்துள்ளது என்றும், ஆயிரம் வருஷம் அரசாட்சியில் அது ஜீவத்தண்ணீரின் நதியாக, திரளாயும், முழுமையாயும், பளிங்குக் கல்லுக்கு ஒப்பாக தெளிவாகவும், தேவன் மற்றும் ஆட்டுக்குட்டி மற்றும் ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டியாகிய உடன்சுதந்தரர்களின் சிங்காசத்தினின்று, பூமியின் குடிகளுக்கெல்லாம் பாயும் என்றதுமான உண்மையை, அவருடைய வார்த்தைகள் நமக்கு அருளியிருப்பதினால் நாம் கர்த்தரைத் துதிக்கின்றோம். அப்பொழுது ஜாதிகளைச் சீர்ப்பொருத்துவதற்கும், சொஸ்தப்படுத்துவதற்குமான இலைகளையுடைய ஜீவவிருட்சங்கள் மாத்திரமிராமல், ஆவியும் (மகிமையடைந்த) மணவாட்டியும் வா என்பார்கள், கேட்கிறவனும் வா என்பானாக் தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன் என்பார்கள்” (வெளிப்படுத்தல் 22:17).

சமாரியா ஸ்திரீயானவள் தனது குணநலன்களைக் குறித்தும், ஜீவியத்தைக் குறித்தும் இன்னும் விவாதிக்கப்படுவதைத் தவிர்க்க விரும்பினவளாக, சாதுரியமாக மத ரீதியிலான கேள்விக்குத் திரும்பினாள். அதாவது, தேவனை ஆராதிப்பதிலும், ஆராதிக்கும் ஸ்தலம் குறித்ததுமான யூதர் கண்ணோட்டம் சரியா? (அ) சமாரியர் கண்ணோட்டம் சரியா? என்று வினவினாள். இவ்விதமான மனித சுபாவமே இன்றும் காணப்படுகின்றது. இன்றைய புருஷர்களும், ஸ்திரீகளுங்கூடத் தங்கள் உள்ளங்களை ஆராய்வதற்கும், தங்களுடைய சொந்த ஜீவியங்களில் [R2575 : page 47] உள்ள முரண்பாடான காரியங்களைக் கவனித்து, அவைகளைச் சீர்த்திருத்தம் பண்ண விருப்பங்கொள்வதற்கும் பதிலாக, மதப்பிரிவுகளிலுள்ள வித்தியாசங்களையும், மதகோட்பாடுகளில் உள்ள பிரச்சனைகளையும் குறித்தே விவாதித்துக் கலந்து பேச விரும்புகின்றனர். அவளைக் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட வைக்கத்தக்கதாக தாம் உடனடியாக கேட்ட அந்த ஒழுக்கரீதியான கேள்வியை, நமது கர்த்தர் இன்னும் அதிகமாக வலியுறுத்தி விமர்சிக்கவில்லை; மேலும், அவரின் இச்செயல்பாடானது அவருடைய பின்னடியார்களுக்கு ஒரு படிப்பினையாக உள்ளது. மற்றவர்களின் தவறுகளின் காரணமாக அவர்களைப் பரிகாசம்பண்ணி, சினப்படுத்தி, இழிவாக/அவமரியாதையுடன் திட்டிக்கொண்டிருப்பதைக்காட்டிலும், அவர்களின் தவறுகளைக் குறித்த கவனத்திற்குள் அவர்களைக் கொண்டுவருவதே போதுமானதாகும்.

தேவனைத் தொழுதுகொள்ளும் சரியான ஒழுங்குமுறைக் குறித்துச் சுருக்கமான வார்த்தைகளில் நமது கர்த்தர் கூறிவிட்டார். சமாரியர்கள் தாங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகின்றார்கள் என்றும், யூதர்களோ தெய்வீக முறைமையின்படியே பின்பற்றுகின்றனர் என்றும், சமாரியா ஸ்திரீயிடம் மிகத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். மேலும், மாபெரும் யுக மாற்றம் சமீபித்துள்ளது என்றும், அந்தக் காலத்தில் இடம் மற்றும் முறைமைகள் குறித்த சகல வேற்றுமைகள் மாறிவிடும் என்றும், இந்தச் சுவிசேஷ யுகமாகிய புதிய காலப்பகுதியில் தேவனுடைய கிருபையைக் காண்பதற்குக் கண்களும், கேட்பதற்குக் காதுகளுமுள்ள சகலரும் ஆவியிலும் (உண்மையான இருதயத்திலும்) சத்தியத்திலும், தெய்வீக ஒழுங்குக்கு இசைவிலும், வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கின்ற கிறிஸ்துவின் மூலம் எவ்விடத்திலிருந்தும் தேவனை ஆராதிப்பதற்கு அனுமதிக்கப்படுவர்கள் என்றும் கூறினார். ஜீவத்தண்ணீரை அளிப்பவரும், அதன்மேல் அதிகாரியான மேசியாவாகிய கிறிஸ்துவின் மூலம் மாத்திரமே பிதாவை அணுகமுடியும்.”