R3363 – கடைசி இராபோஜனம்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R3363 (page 141)

கடைசி இராபோஜனம்

THE LAST SUPPER

மத்தேயு 26:17-30

பரிசுத்த நகரத்தில் பஸ்கா போஜனத்தை இயேசுவும் மற்றும் அப்போஸ்தலர்களும் புசிக்கத்தக்கதாகவும், இயேசு தம்முடைய சீஷர்களுக்கு முன்னறிவித்தப் பிரகாரமாய்த் தம்முடைய சத்துருக்களின் கரங்களில் பாடுபடத்தக்கதாகவும், ஜனங்களுடைய பாவத்திற்கான பாவநிவாரணபலியைத் தாம் நிறைவேற்றத் தக்கதாகவும், எருசலேமுக்கு அருகாமையிலுள்ள பெத்தானியாவுக்கு இயேசுவும், அப்போஸ்தலர்களும் வந்தார்கள். தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே அவர் பெத்தானியாவிற்கு வந்தார். அடுத்தநாளின் இராப்போஜனத்தின் வேளையில் மரியாள் அவரை (தைலத்தினால்) அபிஷேகித்தாள். இதற்கு அடுத்த நாளில் அவர் எருசலேமுக்குக் கழுதையின்மீது ஏறிவந்தார். அவர் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர் பட்டணத்திற்காகக் கண்ணீர்விட்டழுது, “”உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்”” என்று கூறினார். இதற்கு அடுத்தநாளில் அவர் ஆலயத்திற்குவந்து, கயிற்றினாலான சவுக்கைக்கொண்டு காசுக்காரர்களைத் துரத்தினார். இதற்கு அடுத்தநாளில் அவர் தம்மை உலகத்திற்கான ஒளியென அறிவித்து, தம்முடைய பொதுவிடத்திலான கடைசிப் போதனையை ஆலயத்தில் பண்ணினார். ஒவ்வொருநாள் இரவும் லாசரு, மார்த்தாள் மற்றும் மரியாளின் வீட்டிற்கு அவர் திரும்பினதாகத் தெரிகின்றது. இவ்விடத்திற்கு அருகாமையிலுள்ள இடங்களில் எப்போதெல்லாம் இயேசுவும், அப்போஸ்தலர்களும் காணப்படுகின்றார்களோ, அப்போதெல்லாம் லாசரு மற்றும் மார்த்தாள் மற்றும் மரியாளின் வீடே, அவர்களுக்கான வீடாக இருந்தது. இதற்கு அடுத்தநாளாகிய புதன்கிழமையன்று கர்த்தர் பெத்தானியாவிலேயே ஓய்ந்திருந்தார்; மற்றும் வியாழக்கிழமையன்று, “”அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட அதே இரவில்”” அவரும், அவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் புசிக்கத்தக்கதாக, பஸ்காவை ஆயத்தம் பண்ணும்படிக்கு, தம்முடைய சீஷர்களில் இரண்டுபேரை அனுப்பிவைத்தார்.

பஸ்கா பண்டிகையானது ஒரு வாரமளவுக்கு நீடிக்கக்கூடியது; மற்றும் அது யூதர்களுடைய ஒழுங்கின்படி கைக்கொள்ளப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். அந்த வாரத்தில் கர்த்தருடைய ஜனங்களுடைய புளிப்பற்ற தன்மை, பரிசுத்தம் மற்றும் தூய்மையைக் குறிப்பாய்த் தெரிவிக்கத்தக்கதாக, பாவத்திற்கு நிழலாயிருந்த புளிப்பானது அனைத்து உணவுகளிலும் ஜாக்கிரதையாகத் தவிர்க்கப்பட்டு, ஒவ்வொரு வீடுகளிலும் அழிக்கப்படுகின்றது. மாம்சீக இஸ்ரயேலர்கள் நிழலில் ஆவிக்குரிய இஸ்ரயேலர்களுக்கு அடையாளமாக இருக்கின்றனர். முழு வாரமும் சந்தோஷத்தின் பண்டிகையாக இருந்தது. காரணம், தேவன் இஸ்ரயேலை, எகிப்தின் அடிமைத்தனத்தினின்று விடுவித்தார். பண்டிகை வாரமானது, யூதர்களுடைய முதலாம் மாதத்தின், 15-ஆம் தேதியன்று ஆரம்பிக்கின்றது. ஆனால், அதற்கு முந்தின நாளாகிய 14-ஆம் தேதி அன்று ஆட்டுக்குட்டிக் கொல்லப்பட்டு, அதன் இரத்தம் வீட்டின் நிலைக்கால்களின் மீது தெளிக்கப்படுகின்றது. இது இரத்தத்தின் கீழ்க்காணப்பட்டு இஸ்ரயேலர்களின் முதற்பேறானவர்களைக் கர்த்தர் தப்புவித்து, எகிப்தியரின் முதற்பேறானவர்களைச் சங்கரித்துப்போட்டு, இவ்விதமாக எகிப்தியர்கள் கர்த்தருடைய ஜனங்களைப் போக சம்மதித்ததாகிய, எகிப்தில் இரவுவேளையில் நடந்திட்ட விஷயங்களை நினைவுகூருவதாகச் செய்யப்பட்டது. பஸ்கா பண்டிகை வாரம் ஆரம்பிப்பதற்குரிய முந்தினநாள் இரவில், இந்த நினைவுகூருதலின் ஆட்டுக்குட்டியைப் புசிப்பதற்கான, ஆயத்தங்களைச் செய்யும்படிக்கு, தம்முடைய சீஷர்களைக் கர்த்தர் அனுப்பிவைத்தார்.

ஆயத்தம்பண்ணும் வேலைக்கு எனப் பேதுருவும், யோவானும் அனுப்பி வைக்கப்பட்டார்களென லூக்கா அவர்கள் நமக்குத் தெரிவித்துள்ளார். மேலும், தண்ணீர் குடத்தை யார் கொண்டுசெல்கின்றாரோ, அவருடைய வீட்டில்தான் விருந்து ஏற்பாடு பண்ண வேண்டுமென்று அவர்கள் அறிந்துகொள்ளலாம் என்று, கர்த்தர் தெரிவித்ததாக மாற்கு அவர்கள் நமக்குத் தெரிவித்துள்ளார். மாற்குவினுடைய தாயாராகிய மரியாளுக்குச் சொந்தமானதுதான் அந்த வீடு என்றும், அப்பொழுது பயன்படுத்தப்பட்ட மேல்வீட்டறைதான் பிற்பாடு அப்போஸ்தலர்கள் ஒன்று கூடின இடம் என்றும், அவர்கள் மீது பெந்தெகொஸ்தே நாளின் ஆசீர்வாதம் பொழிந்த இடம் என்றும், சிலரால் அனுமானிக்கப்படுகின்றது. பேதுரு சிறையிலிருந்து விடுவிக்கப்படும்படிக்கு ஜெபம் பண்ணுவதற்கென, அநேகர் ஒன்றுகூடியதும் இந்த மரியாளின் வீட்டில்தானா என்பது நமக்குத் தெரியவில்லை. அது பெரிய மேல்வீட்டறையாகும் மற்றும் அது ஏற்கெனவே உணவு உட்கொள்வதற்குரிய மஞ்சத்தினால் ஏற்பாடு பண்ணப் பட்டிருந்தது. கர்த்தரைக் கைது செய்யும்படிக்கு நாடுகின்றவர்கள் சார்பில், எவ்விதத்திலும் பஸ்கா அனுசரிப்பும், யோவான் 14:17-ஆம் வசனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நமது கர்த்தர் பிற்பாடு கொடுத்ததான சொற்பொழிவும் குறுக்கிடப்படாதப்படிக்கு, இயேசுவும், சீஷர்கள் அனைவரும் ஒன்றுகூடுவது வரையிலும், பஸ்கா அநுசரிக்கப்படுகின்ற இடம்பற்றின தகவல் யூதாசுக்குத் தெரியாத வண்ணம், இயேசு இப்படியாக மறைமுகமாக மேல்வீட்டறையைக்குறித்துக் கூறினார் என்று அனுமானிக்கப்படுகின்றது. ஆட்டுக்குட்டியை ஏற்பாடுபண்ணுதல், புளிப்பில்லா அப்பங்கள், கசப்பான கீரைகள், திராட்சரசம் ஆகியவற்றிற்கு ஏற்பாடுபண்ணுதல் எனும், விதத்தில்தான் பேதுருவும், யோவானும் பஸ்காவிற்காக ஆயத்தம்பண்ணினார்கள். சாயங்காலத்தில், ஏற்றவேளையில் அநுசரிப்பிற்காக அனைவரும் ஒன்று கூடினார்கள்.

தாழ்மைக்கான ஒரு பாடம்

இவ்வேளையில் அப்போஸ்தலர்கள் மத்தியில் வாக்குவாதம் எழும்பினதாக லூக்காவும், யோவானும் பதிவு செய்துள்ளனர் (லூக்கா 22:24-30; யோவான் 13). அப்போஸ்தலர்கள் முற்றும் முழுமையாகச் சுயநலத்தினாலும், பேராசையினாலும் தூண்டப்பட்டிருந்தார்கள் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. கர்த்தராகிய ஆண்டவர் மீதான அவர்களுடைய அன்பினிமித்தமே, அவருக்கு அருகாமையில் இருக்கும் ஸ்தானத்தையடைய வேண்டுமென்று, அவர்களுக்குள் வாக்குவாதம் [R3364 : page 141] காணப்பட்டது என்று, நாம் எடுத்துக்கொள்ளலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களுடைய ஜீவியம் முழுவதுமாக, நினைவில் காணப்படக்கூடிய மிகுந்த அருமையான செய்தியைக்கொடுக்க கர்த்தர் முற்பட்டார். அவர்கள் புழுதி நிறைந்த சாலையில் பிரயாணம்பண்ணி நண்பகல் வேளையில் வந்தடைந்தார்கள்; மற்றும் அவர்கள் செல்வந்தர்களாய் இராதபடியினால், அவர்களை வரவேற்பதற்கும், அவர்களது பாதங்களைக் கழுவுவதற்கும் வேலைக்காரர்கள் அவர்களுக்கு இல்லை. மேலும் அவர்களுடைய பரஸ்பரமான சௌகரியத்திற்கென, ஒருவருக்கொருவர் இதைச் (பாதங்கழுவுதலை) செய்வதை விட்டுவிட்டு, பந்தியில் சிறப்பிற்குரிய ஸ்தானம் அடைவதற்கென ஒருவரோடொருவர் போராடிக்கொண்டிருந்தனர். யோவான் ஆண்டவருக்கு அருகாமையில் உட்காரும் மிகவும் விரும்பப்படும் ஸ்தானத்தை அடைந்திருந்தார்… இதற்குக் காரணம் யோவான் அவருக்கு உறவினனாகவும், இயேசு விசேஷித்த விதத்தில் அன்புகூர்ந்தவர்களில் ஒருவராகவும் இருந்ததினால் மாத்திரமல்லாமல், அப்போஸ்தலர்கள் மத்தியில் இவர் வயதில் சிறியவராகவும் இருந்ததினாலாகும்.

முற்காலங்களின் பழக்கவழக்கமானது, அநேக விதங்களில் இன்றைய பழக்கவழக்கத்திலிருந்து வித்தியாசப்படுகின்றது. அவர்கள் உணவு உண்கையில் பந்தியைச்சுற்றி வளைந்துள்ள மஞ்சத்தில், ஒரு பக்கமாய்ச்சாய்ந்து கிடப்பது வழக்கமாகும். அவர்கள் தங்களது இடது முழங்கையில் (elbow) சாய்ந்து காணப்பட்டு, வலது கையைக்கொண்டு உணவை வாய்க்கு எடுத்துச் செல்வர். ஆகவே, அவர்களது தலைகள் ஒருவரோடொருவர் நெருங்கிக் காணப்படுகின்றது. ஆனால், அவர்களுடைய பாதங்களோ பின்னால் வெளியே நீட்டப்பட்ட நிலையில் காணப்படும். வாக்குவாதமானது அதன் போக்கிலேயே தொடரும்படி விடப்பட்டது. இராப்போஜனம் [R3364 : page 142] ஆரம்பித்தது. இயேசு எழுந்துநின்று அவர்கள் ஒவ்வொருவரின் பாதங்களை, ஒன்றன்பின் ஒன்றாகக் கழுவ ஆரம்பித்தார். அவருடைய பாதங்களைக் கழுவ வேண்டுமென்றும் ஒவ்வொருவருடைய பாதங்களைக் கழுவ வேண்டுமென்றும், தங்களுக்குள் அவர்கள் எண்ணி, கழுவியிருக்க வேண்டும். ஆனால் அதற்குப்பதிலாக ஒவ்வொருவரும், தான் மற்றவரைக்காட்டிலும் தாழ்ந்தவனல்ல எனும் கருத்தை ஏற்படுத்துவதற்குரிய நோக்கத்தைக்கொண்டிருந்தனர். இப்படியாக, ஆண்டவரால் அவர்களுக்குச் செய்யப்பட்ட ஊழியமானது, கடுமையான கடிந்துகொள்ளுதலாய் இருந்தது. கொஞ்சம் முன்பு கொடுக்கப்பட்டதான பாடத்தை அதாவது, “”அவர்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன்” என்ற பாடத்தை அவர்கள் அவ்வளவு சீக்கிரமாய் மறந்துவிட்டனர். இக்காரியத்தை விவரிப்பதற்குரிய வாய்ப்பு இங்கு நமது கர்த்தருக்குக் கிடைத்தது. அவர்களனைவருக்கும் அவர் ஊழியம் புரிந்திட விரும்பினார்; மற்றும் ஆவிக்குரிய காரியங்கள் அனைத்திலும் அவர் அவர்களுக்கு ஊழியம் தொடர்ந்து புரிந்துக்கொண்டிருக்கின்றார். ஆகவேதான் அவரை அவர்கள் தங்களுடைய ஆண்டவரென உண்மையில் கருதினார்கள். இப்பொழுதோ மிகவும் மதிப்புக்குறைந்த ஊழியமும் அவர்களுக்குப் புரிந்திட, தாம் விரும்புமளவுக்குத் தம்முடைய தாழ்மையை அவர்களுக்குக் காட்டினார். எத்துணை விலைமதிப்புள்ள பாடம்! இதன் முக்கியத்துவம் கர்த்தருடைய உண்மையான பின்னடியார்கள் மத்தியில் இழந்துப்போகாமல் இருப்பதாக! ஆனால், இதுவும் கர்த்தருடைய இராப்போஜனம் மற்றும் ஞானஸ்நானம் போன்று, செய்யத்தக்க முறைமையென (அ) கட்டளையென இருக்கின்றது எனச் சிலர் அனுமானிப்பதின் மூலமாக, தவறிழைத்துள்ளனர். நம்முடைய புரிந்துக் கொள்ளுதலின்படி இந்த அடையாளத்தின் மூலமான பாடமும், அப்பாடமானது எந்த நேரத்திலும், எவ்விடத்திலும் நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் என்ற காரியமும் தெரிவிப்பது என்னவெனில்… எவ்வளவுதான் மதிப்புக்குறைவான ஊழியமாக இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல், அந்தப் பயனுள்ள ஊழியத்தைச் சகோதரர்களுக்குச் செய்ய நாம் நாடுகின்றவர்களாய் இருக்க வேண்டும்; மற்றும் இப்படியாகச் செய்யப்படும்போது, அதைக் கர்த்தர் தமக்கே செய்ததாகக் கருதுகின்றார் என்பதுமாகும்.

அந்த மனுஷன் பிறவாதிருப்பானானால் அவனுக்கு நலமாயிருக்கும்

அவர்கள் இராப்போஜனத்தின்போது காணப்படுகையில், மிகவும் துக்கங்கொண்டவராக இயேசு, தம்மால் தெரிந்துக்கொள்ளப்பட்ட 12 பேரில் ஒருவன்தான் தம்மைக் காட்டிக்கொடுப்பான் என்றும், இப்படியாக தம்முடைய மரணத்திற்குத் துணை கருவியாக ஆகப்போகிறான் என்றும் விவரித்தார். அதாவது இதே இராப்போஜனத்தில், இதே அப்பத்தில், இதே சுடப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாம்சத்தில் தம்முடன் கூடப் புசிக்கிறவனும், தம்முடன் கூடத் தாலத்தில் கையிடுகிறவனே தம்மைக்காட்டிக்கொடுத்து, தம்முடைய மரணத்திற்குத் துணையாகப் போகிறான் என்று விவரித்தார். இவைகள் அனைத்தும் எழுதப்பட்டிருந்தாலும், தெய்வீகத் திட்டம் தொடர்பான எந்தக் காரியங்களிலும், எவ்விதமான மாற்றமில்லாமல் இருந்தாலும், இப்படியாகத் தம்மைக் காட்டிக்கொடுத்து, தம்முடைய மரணத்திற்குத் துணையாகிறது என்பது, தோழமையில் மிகவும் பயங்கரமான பிளவை ஏற்படுத்துகின்றதாய் இருக்கும், அதாவது எண்ணுவதற்கே வேதனையானதாக இருக்குமென்று சுட்டிக்காட்டினார். காட்டிக்கொடுக்கப்படாமலேயே அவர் அதிகாரிகளால் கைதுச் செய்யப்படுவதாய் இருந்தாலும் அல்லது முன் பின் தெரியாத நபர் மூலமாகவோ அல்லது ஒரு சீஷன் வாயிலாகவோ அவர் காட்டிக்கொடுக்கப்பட்டு அதிகாரிகளால் கைதுச் செய்யப்படுவதாய் இருந்தாலும், இது கர்த்தருடைய நோக்கம் மற்றும் அர்ப்பணிப்பைப் பொறுத்தமட்டில் அவருக்கு ஒன்றும் வித்தியாசமாகக் காணப்படப்போவதில்லை; அதாவது இது தெய்வீக ஏற்பாட்டில் எவ்விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. எனினும் அவரைக் காட்டிக்கொடுப்பவர் அவருடைய உயிர் நண்பனாகவும், சீஷனாகவும் இருப்பதுதான் மிகுந்த துக்கத்திற்கான காரணமாகும்.

“”அம்மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும்” என்ற வார்த்தைகள் நமக்குத் தெரிவிப்பது என்னவெனில், கர்த்தருடைய கண்ணோட்டத்தின்படி, யூதாஸ் அதிகளவிலான அறிவையும், மேலான காரியங்களுக்கான வாய்ப்புகளையும் ஏற்கெனவே அனுபவித்துள்ள காரணத்தினால், அவருடைய கிரியைக்கு அவரே பொறுப்பு வகிக்கின்றார், மற்றும் அவருக்கு எதிர்க்காலத்தில் எந்தவொரு நம்பிக்கையும் இல்லை என்பதாகும். ஒருவேளை யூதாஸ் அவருடைய குணலட்சணத்தைச் சரி செய்வதற்கென, இன்னும் ஒரு வாய்ப்பை அருளுவதற்குரிய ஏதேனும் காரணத்தைக் கர்த்தர் காண்பாரானால், அதற்கு நாம் நிச்சயமாய் மறுப்புத் தெரிவிப்பதில்லை. ஆனால், அப்படியாக இன்னுமொரு வாய்ப்பு யூதாசுக்கு அருளப்படும் என்று எண்ணுவதற்கு, நம்மால் எந்த வேதவாக்கியங்களின் அடிப்படையிலான காரணத்தையும் பார்க்கமுடியவில்லை. நம்முடைய கண்ணோட்டத்திலிருந்து பார்க்கையில், கர்த்தருடன் தொடர்புவைத்தவரும், பரிசுத்த ஆவியினுடைய வல்லமையின் கீழ்க்காணப்பட்டவரும், கர்த்தருடைய நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவதற்கும் மற்றும் வியாதிகளைச் சொஸ்தப்படுத்துவதற்கும் அனுப்பப்பட்டவர்களில் ஒருவராகவும், அவருடைய பிரதிநிதியாகவும், அவருடைய வல்லமையைப் பயன்படுத்துபவராகவும் இருந்த யூதாஸ் மாபெரும் வெளிச்சத்திற்கும், அனுபவத்திற்கும் மற்றும் அறிவிற்கும் எதிராகப் பாவம் செய்தவராகக் காணப்படுகின்றார். யூதாசினுடைய முடிவு சோகமானதே. தற்கொலை பண்ணுகின்ற ஒவ்வொருவனும், தான் பிறவாமல் இருந்தால் நலமாயிருக்கும் என்பதை, தற்கொலை பண்ணுவதன் மூலம் ஒப்புக்கொள்பவனாக இருக்கின்றான்.

கர்த்தாவே, நானோ?

மற்றொரு பதிவானது, சீஷர்கள் ஒவ்வொருவரும் கர்த்தரை நோக்கி நானோ? என்று கேட்டதாகவும், இறுதியில் யூதாசும் கேட்டார் என்றும் நமக்குத் தெரிவிக்கின்றது. சீஷர்கள் தங்களுக்கு இதில் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதில் நிச்சயமாய் இருந்தார்கள்; மற்றும் தங்களுடைய குற்றமில்லா நிலைமையைக் கர்த்தர் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினார்கள். பதினொரு பேரும் இப்படியாகக் கர்த்தரிடத்தில் கேட்க, அவர்களுடைய குற்றத்தைச் சுட்டிக்காட்டும் விதத்தில் கர்த்தர், விடை எதுவும் கொடுக்காமல் இருந்தது, யூதாஸ்தான் அந்நபர் என்பதைத் தெரிவிப்பதாக இருந்தது. ஆண்டவரே நானோ? என்று யூதாசும் கேட்டதில், அவருடைய தைரியம் தெரிகின்றது. இதற்கு, “”நீ சொன்னபடிதான்” அல்லது “”நீதான்” என்று இயேசு யூதாசுக்கு விடையளித்தார். கர்த்தருடைய குற்றம் சாட்டுதல்/கடிந்துரை எத்துணை பெருந்தன்மையுடன் காணப்படுகின்றது. கர்த்தருடைய வார்த்தைகள் பயமுறுத்துகின்றதாகவும், பழித்துரைப்பதாகவும், கசப்பின் வெளிப்படுத்தலாகவும் இராமல், மாறாக கவலை மற்றும் அனுதாபத்தின் வெளிப்படுத்தலாக மாத்திரமே இருந்தது என்பது எத்துணை பாடமாய் நமக்கு உள்ளது! நம்முடைய சத்துருக்கள்மீது நாம் அனுதாபம்கொள்ள வேண்டுமே ஒழிய பகைக்கக்கூடாது. சபிக்காமல் நம்மால் முடிந்தமட்டும், நம்முடைய சத்துருக்களை ஆசீர்வதிக்க வேண்டும். பணத்திற்காகவோ அல்லது வேறு சுயநலமான காரியங்களுக்கெனக் கர்த்தரையோ (அ) அவரது சத்தியத்தையோ (அ) அவரது சகோதரர்களை விற்றுப்போடும் யூதாசுக்கு ஒத்த மனப்பான்மைக்கு எதிராக, இயேசுவினுடைய சீஷர்கள் அனைவரும் விழித்திருந்து, ஜெபம்பண்ணுவது நல்லது. யூதாஸ் வகுப்பார் உண்டு என்பதை நாம் அறிந்து வைத்தவர்களாக, நமது இருதயங்களை நாம் காத்து, “”ஆண்டவரே நானோ?”” என்று கேட்போமாக.

யூதர்களுடைய நியாயப்பிரமாணத்தின்படியாக பஸ்கா இராப்போஜனத்தை அவர்கள் புசித்துக்கொண்டிருக்கையில் அல்லது இராப்போஜனம் புசித்து முடித்து அவர்கள் பந்தியில் இன்னமும் காணப்படுகையில், மீதமிருந்த அப்பத்தில் சிலவற்றை இயேசு எடுத்து, அதை ஆசீர்வதித்து, அதைப்பிட்டுத் தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்து, “”நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கின்றது” என்று கூறினார். “”உங்களுக்காகப் பிட்கப்படுகிற” எனும் வார்த்தைகளை வேறொரு சுவிசேஷகர் பதிவு செய்துள்ளார். “”என்னுடைய சரீரமாயிருக்கின்றது”” மற்றும் “”என்னுடைய இரத்தமாயிருக்கின்றது”” என்ற வார்த்தைகளின் காரணமாக, எப்போதெல்லாம் நினைவுகூருதலின் அப்பமும், இரசமும் படைக்கப்படுகின்றதோ, அப்போதெல்லாம் அப்பமும், இரசமும், கிறிஸ்துவின் நிஜமான சரீரமாகவும், அவருடைய நிஜமான இரத்தமாகவும் மாறும் என்று நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் எனக் கத்தோலிக்கர்களும், சில புரொட்டஸ்டண்டினரும் கூறுகின்றனர். இது காரணகாரியத்திற்கு உட்பட்டதல்ல என்றும், மிகவும் உண்மையற்றது என்றும் நாம் கருத்துத் தெரிவிக்கின்றோம். அப்பமும், இரசமும், நமது கர்த்தருடைய சரீரத்திற்கும், இரத்தத்திற்கும் அடையாளமாக மாத்திரமே இருக்கின்றது. இது அடையாள வார்த்தைகள் என்பதற்கான நிரூபணமானது, இவ்வார்த்தைகளை நமது கர்த்தர் பேசின/பயன்படுத்தினபோது, அவருடைய சரீரம் இன்னமும் பிட்கப்படவும் இல்லை, அவருடைய இரத்தம் இன்னமும் சிந்தப்படவும் இல்லை என்பதேயாகும். ஆகவே அப்பமும், இரசமும், அவருடைய சரீரத்தையும், இரத்தத்தையும் அடையாளப் படுத்துவதற்கெனப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் என்ற அர்த்தத்தில் அல்லாமல், வேறு ஏதாகிலும் விதத்தில் எடுத்துக்கொள்ளப்படுமாயின், அப்பொழுது உண்மை திரித்துக்கூறப்பட்டதாக, பொய்யுரைத்ததாக ஆகிவிடும். மேலும், கர்த்தராலோ, அவருடைய பின்னடியார்களாலோ பொய்யுரைக்கப்பட்டதாக நம்மால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
[R3364 : page 143]

நமது கர்த்தரினால் விவரிக்கப்பட்டுள்ள அப்பமானது, வானத்திலிருந்து வந்த அப்பத்தை அதாவது, உலகத்தின் பாவத்திற்காக அவரால் பலிச்செலுத்தப்பட்ட அவருடைய மாம்சத்தை அடையாளப்படுத்துகின்றது. இதைப் புசிக்கும்படிக்குத் தம்முடைய பின்னடியார்கள் அனைவரையும் அழைக்கின்றார். மேலும் அவருடைய சரீரம் பிட்கப்படுவதன் மூலமாக, கிடைக்கப்பெற்ற ஆசீர்வாதங்களையும், இரக்கத்தையும், கிருபையையும் நாம் நமக்கெனச் சொந்தமாக்கிக்கொள்ளும்போது, அவருடைய மாம்சத்தைப் புசிக்கின்றவர்களாய் இருப்போம். இப்படியாகப் பாவங்களுக்கான மன்னிப்பையும், பிதாவுடன் ஒப்புரவாகுதலையும் பெற்றுத்தந்த பலியினுடைய நன்மைகளை நாம் நமக்கெனச் சொந்தமாக்கிக்கொள்கின்றோம்.

புது உடன்படிக்கையின் இரத்தம்

“”இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது” (மத்தேயு 26:28). “”இது (பாத்திரம்) என்னுடைய இரத்தத்தை அடையாளப்படுத்துகின்றது. இது எப்பொழுதும் உங்களுக்கும், என்னுடைய அன்பார்ந்த பின்னடியார்கள் அனைவருக்கும் என்னுடைய இரத்தத்தை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கும். மேலும், இது இப்படியான தருணங்களிலெல்லாம் என்னுடைய மரணத்தையும், தேவனுக்கும் மற்றும் மனுஷனுக்கும் இடையிலான மாபெரும் மத்தியஸ்தராகிய என்னாலேயே தேவனுக்கும், பாவிகளுக்கும் இடையிலே முத்திரிக்கப்பட்ட உடன்படிக்கையையும் உங்களுக்கு நினைப்பூட்டுவதாக இருக்கும்” என்ற விதத்தில் இயேசு கூறினார்.

கிறிஸ்துவின் இரத்தத்தினால் முத்திரையிடப்பட்டுள்ள புது உடன்படிக்கையானது, பழைய ஏற்பாட்டில் எங்கும் மற்றும் எபிரெயர்களுக்கு அப்போஸ்தலர் எழுதியுள்ள நிரூபத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது (எபிரெயர் 8:6-13; 10:29; 12:20). இந்தப் புது உடன்படிக்கையானது, நியாயப்பிரமாண உடன்படிக்கையைத் தள்ளிவைத்துவிட்டது. மோசேயை மத்தியஸ்தராகக் கொண்டிருந்த நியாயப்பிரமாண உடன்படிக்கையானது, யாரெல்லாம் நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளையெல்லாம் கைக்கொள்வார்களோ, அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வார்களெனத் தெரிவித்தது. ஆனால், புது உடன்படிக்கையானது, இரக்கத்தைக் காட்டுகின்றது; மற்றும் புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தர், ஜனங்களின் சார்பிலான தம்முடைய மரணத்தின் மூலமாக, மனுக்குலத்தையும் படிப்படியாகச் சீரழிந்த நிலையிலிருந்து, உண்மையான மற்றும் நேர்மையான இருதயத்தின் நல்ல வாஞ்சைகள் அனைத்தையும், அவர்கள் பூரணமாய்ச் செய்யத்தக்கதான நிலைக்கு உயர்த்திவிடுவார்.

இந்த அப்பம் மற்றும் பாத்திரத்திற்கு இன்னும் ஆழமான அர்த்தம் இருப்பதை அப்போஸ்தலர் பவுல் நமக்குக் காட்டுகின்றார். “”கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்”” என்பதைப்பற்றின தெளிவான புரிந்துக்கொள்ளுதலைப் பெற்றிருந்தவர் அப்போஸ்தலர் பவுலேயாவார். அதாவது நாம் கிறிஸ்துவின் சரீரத்தினுடைய அங்கமாய் இருக்கின்றோம் என்றும், இப்பொழுது அவருடைய பாடுகளில் பங்காளிகளாக இருக்கின்றோம் என்றும், ஒருவேளை உண்மையுள்ளவர்களாய் இருப்போமானால், அவருடைய மகிமையின் சரீரத்தினுடைய அங்கங்களாகவும், அவருடைய மகிமையில் பங்கடைகின்றவர்- களாகவும் இருப்போம் என்றுமுள்ள இரகசியத்தைக்குறித்த தெளிவான புரிந்துகொள்ளுதலை அப்போஸ்தலர் பவுலே பெற்றிருந்தார். இக்கண்ணோட்டத்தின் படி பார்க்கையில், அப்போஸ்தலர் விவரித்துள்ள பிரகாரமாக, பிட்கப்பட்ட அப்பம் என்பது கர்த்தர் இயேசு தனிப்பட்ட விதத்தில் பிட்கப்படுவதை மாத்திரம் குறிக்காமல், இந்தச் சுவிசேஷயுகம் முழுவதுமுள்ள அவருடைய மறைப்பொருளாயிருக்கும் அங்கங்கள் பிட்கப்படுவதையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது; மற்றும் பாத்திரத்தில் பானம்பண்ணுவது என்பது, அவர் மனுக்குலத்தின் சார்பாக புது உடன்படிக்கையை முத்திரைப்பண்ணத்தக்கதாக, அவர் மரணத்தில் பங்கடைவதை மாத்திரம் உள்ளடக்கவில்லை, இன்னுமாக பாத்திரத்தில் அவரோடுகூட நாம் பங்கடையத்தக்கதாக, “”நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்” என்ற அவரது அழைப்பானது, தற்காலத்தில் அவரோடுகூட உபத்திரவப்படுவதிலும், மரிப்பதிலும் நாம் பங்கடையலாம் என்பதையும், ஆயிரவருட யுகத்தின்போது, புது உடன்படிக்கைக்கான சூழ்நிலைகளை ஆரம்பித்துவைப்பதிலும் நாம் பங்கடையலாம் என்பதையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது. இக்கருத்து எத்துணை பிரம்மாண்டமாகவும், எத்துணை ஆழமாகவும், எத்துணை பரந்தமனப்பான்மையுடனும் காணப்படுகின்றது! கிறிஸ்துவின் பாடுகளில் குறைவானதை நிறைவேற்றுவதற்கு நாம் அனுமதிக்கப்படுவதும், எதிர்க்காலத்தில் அவருடைய மகிமையில் பங்கடைவதற்கு எதிர்நோக்குவதும், எத்துணை அருமையான சிலாக்கியமாகும். இக்கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, “”நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா? ”என்ற சீஷர்களுக்கான அவருடைய [R3365 : page 143] வார்த்தையிலுள்ள முக்கியத்துவத்தை நம்மால் காண முடிகின்றது (மத்தேயு 20:22). இப்படிப் பங்குகொள்வதற்கென அழைக்கப்படுவதற்கு அனைவரும் பாத்திரமாய் இராததுபோல, அழைக்கப்பட்டவர்களில் அனைவரும்கூட இப்படிப் பங்குகொள்வதற்குரிய சிலாக்கியத்தை மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் உணர்ந்துகொள்ளமாட்டார்கள். நம்மில் ஒவ்வொருவரும் உறுதியுடன் யாக்கோபையும், யோவானையும் போன்று, கர்த்தரிடம், “”கர்த்தாவே கூடும்,”” நாங்கள் விருப்பத்துடன் இருக்கின்றோம் என்றும், உம்முடைய உதவியினால் நாங்கள் ஜெயங்கொண்டவர்களாகவும், முற்றிலும் ஜெயங்கொண்டவர்களாகவும் வருவோம் என்றும், சொல்வோமாக.

புதிய திராட்சரசம் – இராஜ்யத்தின் சந்தோஷங்கள்

நமது கர்த்தர் இராஜ்யத்தில் நவமானதாய்ப் பானம் பண்ணுவதுவரையிலும், தாம் திராட்சரசம் பருகுவதில்லை என்று கூறினார். இதன் அர்த்தம் கர்த்தர் அவர்களுடன் இராஜ்யத்தில் புதிய அல்லது புளிக்காத இரசத்தைப் பானம்பண்ணுவார் என்பதாக இராமல், மாறாக இராஜ்யம் வருவதுவரையிலும் திராட்சரசம் அடையாளப்படுத்தும் நவமான (அ) நிஜமான காரியங்கள் நிறைவடைவதில்லை என்பதேயாகும். இராஜ்யம் வரும்போது, தற்காலத்தின் அனைத்து உபத்திரவங்களும், சோதனைகளும் கடந்துபோய்விடும்; மற்றும் திராட்ச ஆலையின் மிதிக்கப்படுதலும், இரசம் உருவாக்குதலும் அனைத்தும் முடிந்துவிடும்; மற்றும் திராட்சரசம் சந்தோஷத்திற்குரியதாகவும், மகிழ்ச்சிக்குரியதாகவும் காணப்பட்டு, கற்பனைசெய்து பார்ப்பதற்கு அப்பாற்பட்ட சந்தோஷங்கள் மற்றும் ஆசீர்வாதங்களை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கும்; மற்றும் இச்சந்தோஷமானது, தற்காலத்தில் நம்முடைய மீட்பருடன் அவருடைய பாடுகளிலும், பின்வரும் மகிமைகளிலும் உண்மையாய் ஐக்கியம் கொண்டிருந்தவர்கள் அனைவரின் பங்காக இருக்கும். இராஜ்யத்தின் காலம் இப்பொழுது சமீபித்துள்ளது. அதாவது, கர்த்தர் இவ்வார்தைகளைப் பேசின காலங்களைக்காட்டிலும், 1800 வருடங்கள் கடந்துள்ள இப்பொழுது, மிகவும் சமீபித்துள்ளது; மற்றும் இதன் ஆரம்பத்திற்கான ஆதாரங்கள் அனைத்துத் திசைகளிலும் பெருகிக்கொண்டு வருகின்றது. அதை எதிர்ப்பார்த்த வண்ணமாக நம்முடைய இருதயங்கள் களிகூர்ந்திருக்க வேண்டும்; மற்றும் தற்காலத்தில் துக்கத்தின், அவமானத்தின், பாடுகளின், பாத்திரத்தில் பானம் பண்ணுவதில் நாம் உண்மையாயிருந்து, இவ்விதமாக நம்முடைய அன்பையும், நம்முடைய நேர்மையையும் வெளிப்படுத்துவோமாக.

இதற்குப் பின்வரும் சம்பாஷணையாக, யோவானால் (15, 16, 17-ஆம் அதிகாரங்களில்) பதிவு செய்யப்பட்டுள்ள காரியங்கள், கர்த்தருடைய ஜனங்கள் அநேகருக்கு பல நூற்றாண்டுகளாக ஆசீர்வாதமாய் இருந்துவருகின்றது. பின்னர், அவர்கள் ஸ்தோத்திர பாட்டைப்பாடி, ஒலிவ மலைக்கு, கெத்செமனே தோட்டத்திற்குப் போனார்கள். சீஷர்கள் அனைவரின் மீதும் சோதனைகள் கடந்துவந்தது. ஒவ்வொரு நினைவுகூருதலின் காலங்களிலும், கர்த்தருக்கான நம்முடைய வாக்குறுதியை அடையாளமாய்த் தெரிவிக்கும் ஒவ்வொரு முறையும், கர்த்தருடைய ஜனங்களுக்குப் புதிய சோதனைகள், புதிய பரீட்சைகள், புதிய சலித்தெடுத்தல்கள் வருகின்றது. யாரால் நிலைநிற்க முடியும்? நம்முடைய இரட்சகராகிய நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியைப் பற்றிக்கொண்டிருப்போமாக! மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொண்டிருப்போமாக! உண்மையுள்ள வார்த்தைகளைப் பற்றிக்கொண்டிருப்போமாக! நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாக!

இயேசு கூறுவதை நான் கேட்டேன் [விடியல் துதிப்பாடல்கள், # 108]

இந்த அருமையானப் பாடலானது முன்வைக்கும் – தனிமையின் உணர்வுகள், வெறுமையின் உணர்வுகள், நிலைவரமான நண்பனின் அவசியம் என்ற உணர்வுகள் – குறித்த அனுபவங்களானது கிட்டத்தட்ட ஒவ்வொரு மனித இருதயத்திலும் ஏதோ ஒரு தருணத்தில் கடந்துவருகிறதாகவே இருக்கும். (இவ்வனுபவங்கள் காணப்படுகையில்) ஒருவேளை ஒருவன் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்திருப்பானானால் – அவன் மனமானது இயல்பாகவே இயேசுவினிடத்திற்குத் திரும்பிடும். ஆனால் அந்தோ பரிதாபம்! இயேசுவிடம் வருவதோ அல்லது அவரது சீஷர்கள் ஆகுவதோ என்னவென்று அறியாதவர்களாக அநேகர் காணப்படுகின்றனர். பெரும்பாலும் உச்சக்கட்டம் அடைவதற்கு முன்னதாகவும், மாபெரும் நிகழ்வுகள் நிறைவடைவதற்கு முன்னதாகவும், மன அழுத்தம் கடந்துபோய்விடுகின்றது மற்றும் அந்நபர் மீண்டுமாக தனது பழைய சிந்திக்கும் முறைமைக்கும், செய்கைக்கும் திரும்பிவிடுகின்றான்.

இயேசுவிடம் வருதல் என்பது, நம்மை நமது விழுந்துபோன, பாவமான, மரிக்கும் நிலையினின்று மீட்கத்தக்கதாக, பரம பிதாவின் பிரதிநிதியென, பரம பிதாவினால் நியமிக்கப்பட்டு, அனுப்பிவைக்கப்பட்டதான மாபெரும் மற்றும் வல்லமையுள்ள இரட்சகர் என்று ஏற்றுக்கொள்வதைக் குறிக்கின்றதாய் இருக்கும். இயேசுவிடம் வருகையில் நாம் முதலாவதாக எந்த நிபந்தனைகளின் கீழ், அவர் நம்மை ஏற்றுக்கொள்வார், நமக்குப் பரிந்துபேசுபவர் ஆவார் மற்றும் பரம பிதாவின் குடும்பத்திற்குள் கொண்டுவருவார் என்பதுபற்றி உறுதிப்படுத்திக் கொள்கின்றோம். “”ஒருவன் என்னைப் பின்பற்றி வரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” என்றுள்ள வார்த்தைகளை நாம் கேட்கின்றோம். (1 யோவான் 2:1; மத்தேயு 16:24)

சுயத்தை வெறுத்தல் எனும் முதலாம் படியானது, தெய்வீகச் சித்தத்திற்கு முரணான நமது மனுஷீக சித்தத்தைக் கைவிட்டுவிடுவதைக் குறிக்கின்றாய் இருக்கும். கர்த்தருக்கே ஒழிய, மற்றபடி வேறு எவருக்கும் என்று நமது சித்தங்களைக் கையளிப்பதற்கு நாம் துணிந்திடக்கூடாது. சித்தம் என்பது, நாம் பெற்றிருக்கின்ற மிகவும் விலையேறப்பெற்ற ஒன்றாகும். நமது சித்தத்தை, நமது பூமிக்குரிய சிறந்த நண்பன் வசத்திலோ, பெற்றோர்கள் வசத்திலோ, கணவன் வசத்திலோ, மனைவி வசத்திலோ கையளிப்பது என்பது பாதுகாப்பானதல்ல. ஆனால் நம்முடைய சித்தங்களை நாம் துணிந்து தேவனிடத்தில் கையளித்துவிடலாம்; ஏனெனில் அவருக்குத் தங்களை ஒப்புக்கொடுத்துள்ளவர்கள் அனைவருக்குமான ஆசீர்வாதத்தின் விஷயத்திலுள்ள அவரது தெய்வீக ஏற்பாட்டினையும், அவரது மகா அன்பையும், இரக்கத்தையும் மற்றும் ஞானத்தையும் அறிந்திருக்கின்றோம்.

ஆனால் நம்முடைய சித்தத்தைக் கையளிப்பது/ஒப்புக்கொடுப்பது என்பது, முதலாம்படி மாத்திரமேயாகும். அடுத்து வருவது – தினந்தோறும் சிலுவையை எடுத்துக்கொண்டு நம்முடைய சொந்த சித்தத்தையும், நம்முடைய நண்பர்களுடைய சித்தத்தையும் மற்றும் பல்வேறு எதிர்க்கும் செல்வாக்கையும் எதிர்த்து, கர்த்தருடைய சித்தத்தின்படி செய்வதாகும். கிறிஸ்தவனாய் இருப்பது என்பது, ஆட்டுக்குட்டியானவரின் பின்னடியாராக இருப்பதாகும். இயேசு பிதாவின் சித்தத்தைச் செய்யத்தக்கதாக, தம்முடைய சித்தத்தை ஒப்புக்கொடுத்து விட்டதுபோலவே, அவரது பின்னடியார்கள் அனைவரும் கூடக் காணப்பட வேண்டும். (யோவான் 6:38)

இப்படியாக இயேசுவினிடத்தில் வந்து, அவரது சித்தத்தையும், பிதாவின் சித்தத்தையும் ஏற்றுக்கொள்ளும்போது, நாம் பரிசுத்த ஆவியினுடைய ஜெநிப்பித்தலை அடைகின்றோம் மற்றும் அதுமுதல் தேவனுடைய பிள்ளைகளாக, தேவனுடைய சுதந்தரவாளிகளாக, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு உடன்சுதந்தரர்களாகக் காணப்படுவோம்; நாம் அவரோடுகூடப் பாடுபடுவோமானால், அவரோடுகூட மகிமையும் படுத்தப்படுவோம். (ரோமர் 8:17)

அதுமுதற்கொண்டு வேதாகமத்தின் மூலமாகக் கர்த்தருடைய குரலானது நம்மிடம் பேசிக்கொண்டிருப்பதை நாம் கேட்க ஆரம்பிப்போம் மற்றும் மாபெரும் வெளிச்சமானது நம்முடைய ஜீவியங்களுக்குள் கடந்துவருகின்றதாய் இருக்கும். நம்முடைய புதிய கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, அனைத்துமே வித்தியாசமாய்த் தோன்ற ஆரம்பிக்கும். பரம ஆசீர்வாதங்கள், பரம நம்பிக்கைகள், பரம விருப்பங்களோடு ஒப்பிடுகையில், பூமிக்குரிய வெற்றிகள், பூமிக்குரிய சோதனைகள், பூமிக்குரிய சந்தோஷங்கள் மற்றும் பூமிக்குரிய துக்கங்கள் ஒரு பொருட்டானவைகளல்ல. “”நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே.”” (எபிரெயர் 10:32)

– Angelophone Hymn Book.