R5455 (page 149)
லூக்கா 17:20-37
“”இதோ தேவனுடைய இராஜ்யம் உங்கள் மத்தியில் இருக்கிறதே.” (வசனம் 21; திருத்தப்பட்ட வசனம்).
நமது ஆண்டவருடைய இந்த வார்த்தைகளைப் புரிந்துக்கொள்வதற்கு, இது பேசப்பட்ட சூழ்நிலையை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இயேசுவுக்கு முன்னதாக யோவான் ஸ்நானன் வந்து, தேவனுடைய இராஜ்யம் சமீபித்துள்ளது என்று பிரசங்கித்தார். ஏற்றவேளையில், இயேசுவே, வரவிருக்கின்ற மேசியா என்றும், தேவனுடைய ஆட்டுக்குட்டி என்றும் சுட்டிக்காண்பித்தார். இயேசு தம்மைப் பூமியின் இராஜாவாக நிலைப்படுத்துவார் என்று, பல மாதங்களாகக் காத்துக்கொண்டிருந்த யோவான் ஸ்நானன், இப்படியாக நடப்பதற்குப் பதிலாக, தன்னுடைய வேலை நிறைவடையப் போவதைக் கண்டார்; மேலும் இவர் ஏரோதினால் சிறையிலே போடப்பட்டார். இயேசுதான் வரவிருக்கின்ற மேசியாவா அல்லது வேறொருவருக்காகக் காத்திருக்க வேண்டுமா என்று விசாரிக்கும்படிக்கு, யோவான் இயேசுவினிடத்திற்கு ஆள் அனுப்பினார். யோவான், தான் எதிர்பார்த்த பிரகாரமாக இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதற்கான ஆதாரங்களைக் காணமுடியாததினால் ஏமாற்றம் அடைந்தார்.
இயேசுதான் மேசியாவின் இராஜ்யத்தை ஸ்தாபிக்கப்போகிற, நீண்ட காலமாய் வாக்களிக்கப்பட்ட இராஜா என்று கூறப்படும் காரியங்களைப் பரிசேயர்களும், வேதபாரகர்களும் கேள்விப்பட்டு, அவரைப் பரியாசம் பண்ணினார்கள். நகைப்பிற்கு இடமான இயேசுவினுடைய பின்னடியர்களின் கூட்டத்தைப் பரிசேயர்கள் மற்றும் வேதபாரகர்கள் கவனித்தார்கள்; இயேசுவின் பின்னடியார்களில் ஆயக்காரர்கள், பாவிகள் மற்றும் கனமிக்க ஜனங்கள், (அதாவது செல்வாக்கிலோ, ஆஸ்தியிலோ, விசேஷித்த ஸ்தானத்திலும் இல்லாத கனமிக்க ஜனங்கள்) காணப்பட்டனர். இயேசு ஓர் ஏமாற்றுக்காரர் என்றும், அவருடைய பின்னடியார்கள் அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் என்றும் பரிசேயர்களும், வேதபாரகர்களும் எண்ணினார்கள். இயேசுவைக் குறித்து அவருடைய பின்னடியார்கள் எண்ணிக்கொண்டிருந்தது, இயேசுவின் ஒரு வஞ்சனை என்று வெளிப்படுத்துவதன் மூலம், அவருடைய பின்னடியார்களை வஞ்சனையிலிருந்து வெளிக்கொண்டு வருவதற்குப் பரிசேயர்களும், வேதபாரகர்களும் எப்படி முயன்றார்கள் என்பதையே இந்தப் பாடம் நமக்குக் காண்பிக்கப் போகின்றது. ஆகவேதான் ஜனங்கள் முன்னிலையில், “”தேவனுடைய இராஜ்யம் எப்போது வரும்? என்றும், நீர் அதை ஸ்தாபிப்பதற்கு இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்?” என்றும் இவர்கள் இயேசுவினிடத்தில் கேள்விக் கேட்டார்கள்.
இயேசுவைச் சிக்க வைக்கவேண்டும் என்பதே இவர்களது நோக்கமாய் இருந்தது என்பதில் ஐயமில்லை; ஏனெனில் ஒருவேளை நீண்டகாலம் எடுக்கும் என்று இயேசு சொல்வாரானால், அவருடைய பின்னடியார்கள் மனம் தளர்ந்துப் போய்விடுவார்கள்; ஒருவேளை கொஞ்சக்காலந்தான் என்று இயேசு கூறுவாரானால், “”உமக்குச் சேனையை நீர் எங்கிருந்து பெற்றுக்கொள்வீர் என்றும், உம்முடைய போர்ச்சேவகர்களுக்கு நீர் எப்படி ஊதியம் கொடுப்பீர்? என்றும், எப்படி நீர் அவர்களுக்கு உணவு கொடுப்பீர்? என்றும், நம்முடைய முழுத் தேசத்தாலும் எதிர்க்க முடியாத உரோமின் அரசியல் வல்லமையுடன் எதிர்த்து யுத்தம் பண்ணுவதற்கு நீர் உரோமிற்குச் செல்வீரா?” என்றும் கேள்வி கேட்க வேண்டுமென்று திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் முதலாம் கேள்வியை மாத்திரமே பரிசேயர்களால் கேட்க முடிந்தது, காரணம் அதற்கு அவர் கொடுத்திட்டதான பதில் இவர்களைத் தடுமாறப் பண்ணிற்று. தேவனுடைய இராஜ்யம் வெளிப்படையாக வராது, அதாவது தேவனுடைய இராஜ்யம் வரும்போது, ஜனங்களால் அதைக் காண [R5455 : page 141] இயலாது என்று இயேசு பதிலளித்தார். இன்னும் விரிவாகச் சொல்லும் வண்ணமாக, தேவனுடைய இராஜ்யமானது ஸ்தாபிக்கப்படும்போது, இதோ இங்கே இருக்கின்றது (அ) இதோ அங்கே இருக்கின்றது என்று ஜனங்களால் பார்க்க இயலாது என்றும் இயேசு கூறினார்; காரணம் தேவனுடைய இராஜ்யமானது ஜனங்கள் மத்தியில் எங்கும் ஸ்தாபிக்கப்படும், தேவனுடைய வல்லமையாக இருக்கின்றது.
“”இதோ தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே” என்ற வசனத்தின் மொழிப்பெயர்ப்பானது தவறாய்க் காணப்படுகின்றது (வசனம்-21); ஆனால் இது வேண்டுமென்றே செய்யப்படாத தவறாகவே இருக்கின்றது (லூக்கா 17:21). ஒருவேளை மொழிப்பெயர்ப்பாளர்கள் கவனமாய்க் கவனித்திருப்பார்களானால், இயேசுவால் மாய்மாலக்காரர்கள் என்றும், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என்றும், சொல்லப்பட்ட பரிசேயர்களுக்குள், தேவனுடைய இராஜ்யம் இருக்கின்றது என்று மொழிப்பெயர்ப்பதிலிருந்து / சொல்வதிலிருந்து தங்களைக் காத்துக்கொண்டிருந்திருப்பார்கள். “”தேவனுடைய இராஜ்யம் உங்கள் நடுவில் இருக்கிறதே” என்பதே சரியான மொழிப்பெயர்ப்பாகும்.
ஓர் இராஜ்யமானது, அதன் இராஜாவினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது. இயேசு ஓர் இராஜாவாக இவர்கள் நடுவில் காணப்பட்டார், ஆனால் இவர்களோ அவரை அடையாளங் கண்டுகொள்ளவில்லை. “”நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்” (யோவான் 1:26). இப்படியாகவே சுவிசேஷ யுகம் முழுவதிலும் கிறிஸ்துவின் சபையாகிய, அவருடைய சரீரமானது, உலகத்தினால் அடையாளங்கண்டு கொள்ளப்படவில்லை. “”உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை” (1 யோவான் 3:1). இது 18 நூற்றாண்டுகளாக உண்மையாய் இருந்து வருகின்றது; ஆனால் மாம்சத்தில் காணப்பட்ட கிறிஸ்துவும், சபையும், வேதாகமம் வாக்களிக்கிற பிரகாரமான வல்லமையிலும், மகா மகிமையிலுமான இராஜ்யம் என்ற விதத்தில், முழுமையான தேவனுடைய இராஜ்யமாகக் காணப்படவில்லை. கிறிஸ்துவும், சபையும், அப்போது தொடக்க நிலையிலுள்ள இராஜ்யமாக, கருநிலையிலான இராஜ்யமாக, தேவனுடைய ஏற்றவேளையில் அதிகாரத்தில் அமர்த்தப்படுவதற்கென ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இராஜ்ய வகுப்பாராகக் காணப்படுகின்றனர். அந்த ஏற்ற வேளையானது இப்பொழுது அண்மையில் உள்ளது என நாம் நம்புகின்றோம்.
இந்த இராஜ்யமானது ஆவிக்குரிய ஒன்றாக இருக்கப் போகின்றது; ஆகையால் இதில் ஆளுகைப் பண்ணப் போகிறவர்கள், தேவதூதர்கள் மற்றும் பரம பிதா போன்று கண்களுக்குப் புலப்படாதவர்களாக இருப்பார்கள். “”இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது” என்று இயேசு கூறியுள்ளார். தலையின் விஷயம் எப்படியாக இருக்கின்றதோ, அப்படியாகவே கிறிஸ்துவின் சபையாகிய தெரிந்துக்கொள்ளப்பட்ட சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினருடைய விஷயத்திலும் ஆகும். “”ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே நாம் மறுரூபமாக்கப்படுவோம்;” இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் இவர்களையும் காணாது, ஏனெனில், “”மாம்சமும், இரத்தமும் தேவனுடைய இராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை;” மற்றும் மாம்சமும் இரத்தமுமானவர்களினால், ஆவிக்குரியவர்களைக் காணவும் முடியாது.
ஆயிர வருட யுகத்தில், இராஜ்யத்தின் அதிகாரமும், தேவனுடைய வல்லமையும் கிறிஸ்து மற்றும் சபை மூலமாக, மனுஷர்கள் நடுவில்/மத்தியில் செயல்படுத்தப்படும்; எனினும் அதை அவர்கள் மாம்ச கண்களினால் காணாமல், புரிந்துக்கொள்ளுதலின் கண்களினால் மாத்திரமே காண்கின்றவர்களாய் இருப்பார்கள். குருடாக்கப்பட்ட கண்கள் யாவும் அப்போது திறக்கப்படும். இவ்வாறாக இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்பதை அனைத்துக் கண்களும் காணும்; இன்னுமாகப் பாடுகள் பட்டவராகிய அவர், தம்முடைய மகிமையில் பிரவேசித்துள்ளார் என்பதையும், அவருடைய மணவாட்டியாகிய சபை, அவரோடு கூட மகிமையில் காணப்படுகின்றார்கள் என்பதையும், கிறிஸ்து மற்றும் சபை மூலமாகவே, ஆயிர வருட அரசாட்சியின் ஆசீர்வாதம் தங்களுக்கு வருகின்றது என்பதையும் அனைவரும் புரிந்துக்கொள்வார்கள் (வெளிப்படுத்தல் 20:6).
பரிசேயர்களது வாயை அடைத்த பின்னர், இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி, “”மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள்” என்று கூறினார் (லூக்கா 17:22). இது உண்மையுள்ளவர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாகும். எனினும் தங்களால் புரிந்துக்கொள்ள முடியாத விஷயங்களை ஆண்டவர் கூறுவதைக் கேட்பது, அவர்களுக்குப் பழகிப்போன காரியமாய் இருந்தது; உதாரணத்திற்கு அவருடைய மாம்சத்தையும், அவருடைய இரத்தத்தையும் பானம் பண்ண வேண்டும் என்று கூறினதும், அவர் தாம் சிலுவையில் அறையப்பட வேண்டும் என்று கூறினதும் ஆகும். இவைகளையெல்லாம் சீஷர்கள் அடையாளங்கள் என்று புரிந்துக்கொண்டு, அவைகளின் உண்மையான அர்த்தம் என்னவாக இருக்கும் எனச் சிந்தித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எதிர்ப்பார்த்திருந்த பிரகாரமாகவே, இயேசு எப்படி மாபெரும் இராஜாவாக இருக்க முடியும், அதே வேளையில் தாங்கள் அவரையும், அவருடைய நாட்களையும் எப்படிக் காணாதிருக்கவும் முடியும்? என்று சீஷர்கள் யோசித்தார்கள்.
இன்னுமாக, “”இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்” என்று இயேசு கூறினார் (லூக்கா 17:22). சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் “”இப்படியாக என்னுடைய இரண்டாம் வருகையைக் குறித்து யாராகிலும் சொல்வார்களானால் நம்பாதிருங்கள். நான் இப்படியான விதத்தில் வருவேன் என்று நம்பி வஞ்சிக்கப்படாதிருங்கள். நான் எப்படி வருவேன் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி, மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்” என்ற விதத்தில் இயேசு சொன்னார் (வசனம் 24).
“”மின்னல்” என்று மொழிப்பெயர்க்கப்பட்ட 24-ஆம் வசனத்திலுள்ள இவ்வார்த்தைக்கான கிரேக்க வார்த்தையாகிய “”astrape” என்பதை “”பிரகாசித்தல்” என்று மொழிப்பெயர்த்தால், இவ்வசனத்தை நம்மால் நன்கு புரிந்துக்கொள்ள முடியும்; அதாவது மின்னலுக்குப் பதிலாகப் பிரகாசித்தலைக்குறிக்கும் சூரியன் இடம்பெற்றால் இவ்வசனம் நன்கு புரியும்; கிழக்கில் உதித்து, மேற்கில் அஸ்தமிக்கிறது சூரியன். ஆனால் இது எவ்வாறு மனுஷகுமாரனை, அவருடைய நாட்களில் அடையாளப்படுத்தப்பட முடியும்? அவர் எப்படிச் சூரியன் போன்று இருப்பார்? கிறிஸ்துவின் நாள் என்பது ஆயிர வருடங்கள் அடங்கியது என்றும், நம்முடைய கர்த்தரின் இவ்வார்த்தைகளானது, “”இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்” (யோவான் 16:12) என்ற இயேசுவின் மறைப்பொருட்களுள் ஒன்றாய் இருக்கின்றது என்றும், அவருடைய வார்த்தைகள் அனைத்தையும் தெளிவாய்ப் புரிந்துக்கொள்ளத்தக்கதாக, ஏற்ற வேளையில் பிரகாசிப்பித்தலை அருளும் பரிசுத்த ஆவியை இயேசு வாக்களித்துள்ளார் என்றும் நாம் பதிலளிக்கின்றோம். இந்த வசனமானது புரிந்துக்கொள்வதற்கான ஏற்றவேளை வந்துவிட்டபடியால், இப்பொழுது ஆவிக்குரிய புரிந்துக்கொள்ளுதலை உடையவர்களுக்குத் தெளிவாகிக்கொண்டு வருகின்றது.
இவைகள் எல்லாம் நீண்ட காலத்திற்குப் பிறகு சம்பவிப்பவைகள் என்று, சீஷர்கள் படிப்படியாக அறிந்துக்கொள்ளத்தக்கதாக, இயேசு தாம் முதலாவது அநேகம் பாடுப்பட்டு, இஸ்ரயேல் தேசத்தால் புறக்கணிக்கப்பட வேண்டுமென்று விளக்கினார். அவருடைய வந்திருத்தலுக்கான அடையாளங்கள் பற்றின அவர்களுடைய கேள்விக்கு அவர் கொடுத்திட்ட விவரத்தை (மத்தேயு 24) மீண்டும் சொல்லும் வண்ணமாக “”நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்” என்று கூறினார் (லூக்கா 17:26).
இங்குத் திட்டவட்டமான காரியங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் காலத்தில், நீதியின் சூரியனானது வானத்தின் ஒரு எல்லை துவங்கி, மறு எல்லை வரை பிரகாசிக்க ஆரம்பிக்கும் காலத்தில், நாம் எவைகளை எதிர்ப்பார்க்கலாம், என்பது நமக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. காலங்களுக்கான அடையாளங்களானது, உலகத்தில் பகிரங்கமாய்க் காணப்படாது, மாறாக ஜலப்பிரளயம் வருவதற்கு முன்னதான நோவாவின் நாட்களில் இருந்தது போன்று, சோதோம் அழிக்கப்படுவதற்கு முன்னதாக லோத்தினுடைய நாட்களில் இருந்தது போன்று, உலகம் அமைதியாக, எப்போதும் போல் இயங்கிக்கொண்டிருக்கும். ஜனங்கள் புசித்தும், குடித்தும், திருமணம் பண்ணியும், வீடுகள் கட்டியும், விதைத்தும், நட்டும், எப்போதும்போல் செய்துகொண்டிருப்பார்கள். ஜனங்கள் இப்படியாக எப்போதும்போல் இருப்பது என்பது பொல்லாப்புத்தனத்தின் அடையாளங்கள் என்று குறிப்பிடப்படாமல், மாறாக உலகத்தைக் கையாளுவதற்கும், தம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்குமெனக் கிறிஸ்து, ஆரம்பிக்கும் தம்முடைய இரண்டாம் பிரசன்ன காலத்தை உலகத்துக்குச் சுட்டிக்காண்பிப்பதற்கென எவ்விதமான வெளியரங்கமான அடையாளங்கள் இருக்காது என்பதைக் கூறுவதற்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகத்தை ஆசீர்வதிக்கப் போகிறதான மேசியாவின் இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுதலைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கையில் ஏன் ஜலப்பிரளயம் மற்றும் சோதாமின் அழிவாகிய இரண்டு அடையாளங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது? உலகத்தின் மீதான சாபத்தை எடுத்துப்போட்டு, அதை ஆசீர்வதிக்கப் போகிறதான மேசியாவின் இராஜ்யமானது, தேவனுடைய மாபெரும் ஏற்பாடாக இருந்தாலும், இந்த இராஜ்யமானது, நம்முடைய தற்கால அமைப்புகளின் அழிவுகளின் மீதே ஸ்தாபிக்கப்படும் என்று வேதாகமம் எங்கும் குறிப்பிடப்பட்டிருப்பதே பதிலாக இருக்கின்றது. தற்காலத்தின் இந்த மதம், சமுதாயம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் அமைப்புகளுடைய அழிவே, இயேசுவினால் ஜலப்பிரளயத்தினாலும், சோதோமின் அழிவினாலும் சித்தரிக்கப்படுகின்றது. மகா உபத்திரவத்திற்கான கொந்தளிப்புச் சடுதியாக நிகழ்வது வரையிலும், [R5456 : page 141] மகா உபத்திரவம் வருவதற்கு முன்னதாக, அவர் வந்திருக்கும் காரியத்தை உலகம் காணாது, உலகம் அறியாது, மற்றும் உலகம் யோசித்தும் பார்க்காது, மற்றும் நம்பவும் செய்யாது.
இது ஒரு மகிழ்ச்சியூட்டும் அடையாளமல்ல. ஒவ்வொரு மேகத்திலும் வெள்ளி சரிகை உள்ளது. நமது மனித தோல்விகளாகிய அழிவுகளின் மீது, இராஜ்யமானது ஸ்தாபிக்கப்பட்ட பிற்பாடு, உடனடியாக மகிமையான ஆசீர்வாதங்கள் பின்தொடரும் என்பதினால் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
உலகத்தின்மேல் பெரும் துன்பமானது சடுதியாய் வெடிப்பதை வலியுறுத்தும் வண்ணமாக “”லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்தது,” என்று இயேசு கூறினார் (லூக்கா 17:29). “”மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.” (வசனம் 30). கிரேக்க வார்த்தைகளானது, மகா உபத்திரவத்திற்கு முன்னானது கிறிஸ்துவின் பிரசன்னம் (அ) Parousia என்றும், உபத்திரவத்திற்குப் பின்னானது வெளிப்படுத்துதல் (அ) Epiphania என்றும் வேற்றுமைப்படுத்திக் காண்பிக்கின்றது. [R5456 : page 142]
கிறிஸ்துவின் வெளிப்படுதலானது, “”அவர் ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படுவார்” என்று கூறப்பட்டுள்ளது (2 தெசலோனிக்கேயர் 1:7-8). மகா உபத்திரவமானது பெரும்பாலும் உலகத்தை எரிக்கக்கூடிய ஒன்றாய் வேதாகமத்தில் வெளிப்படுத்தப்படுகின்றது . . . இதற்குப் பெயர்க் கிறிஸ்தவ மண்டலத்தின் விசுவாசப் பிரமாணங்களானது, பூமி எரிக்கப்படும் என்ற கருத்தை வழங்குகின்றது. பரலோகங்களும் / வானங்களும் எரிக்கப்படும் என்று வரும் வார்த்தைகளை இவர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.
வேதாகமத்தில், அடையாள வார்த்தையான பூமி, மனித காரியங்களிலுள்ள சமுதாய ஒழுங்கை அடையாளப்படுத்துகின்றது; கடலானது அமைதியற்ற, திருப்தியற்ற திரளான ஜனக்கூட்டத்தரை அடையாயப்படுத்துகின்றது. வானங்கள் என்பது, மத சம்பந்தமான ஆவிக்குரிய வல்லமைகளை அடையாளப்படுத்துகின்றது. இவைகளெல்லாம் மகா குழப்பத்துடன் அழிந்துபோய், இவைகளுக்குப் பதிலாகத் தேவனால் வாக்களிக்கப்பட்டுள்ள புதிய வானங்களும், புதிய பூமியும் வரும் என்று பரிசுத்தவானாகிய பேதுரு நமக்குக் கூறுகின்றார் (2 பேதுரு 3:10-13). புதிய வானங்கள் என்பது, கிறிஸ்துவின் இராஜ்யத்திலுள்ள மகிமையில் இருக்கும் கிறிஸ்து மற்றும் அவருடைய உடன் சுதந்தரர்களாகிய மகிமையடைந்த சபை உள்ளடக்கின புதிய ஆவிக்குரிய குழுவை அடையாளப்படுத்துகின்றது. புதிய பூமி என்பது, மேசியாவின் இராஜ்யமானது ஸ்தாபிக்கும் புதிய சமுதாய ஒழுங்கை அடையாளப்படுத்துகின்றதாக இருக்கும்.
தாம் ஜுவாலிக்கிற அக்கினியாக வெளிப்படுவதற்கு முன்பு, தாம் வந்திருக்கும் காலத்தை மீண்டுமாக நினைவுபடுத்தின பிற்பாடு, மாபெரும் உபத்திரவத்திற்கு அடையாளமான நெருப்பானது, தற்கால அமைப்புகளைப் பட்சிப்பதற்கு முன்னதாக, அவருடைய உண்மையுள்ளவர்கள் அனைவரும் மரிப்பார்கள் என்றும், மரிக்கும் அக்ஷணமே மறுரூபமடைவார்கள் என்றும் கர்த்தர் நமக்கு உறுதியளிக்கின்றார். அடையாள வார்த்தையில், அவருடைய நாளில் (Epiphania வெளிப்படுதலுக்கு முன்னதான, பிரசன்ன நாட்களில்) தங்களுடைய பொருட்களை வீட்டிற்குள் வைத்திருக்கும், வீட்டின்மேல் இருப்பவர்கள், பொருள்களை எடுப்பதற்கென, வீட்டின்மேலிருந்து இறங்காமல் இருக்கக்கடவன் என்று கூறுகின்றார் (வசனம் 31). இதன் அர்த்தம் என்ன?
வீடு என்பது தேவனுடைய வீட்டாரை அடையாளப்படுத்துகின்றது என்றும், வீட்டின்மேல் இருப்பவர்கள், தேவனுடைய ஜனங்களிலே மிகவும் பரிசுத்தவான்களாய் இருப்பவர்களை அடையாளப்படுத்துகின்றது என்றும் நாம் நம்புகின்றோம். இவர்கள் அவருடைய பிரசன்னத்தின் நாட்களில், ஓடுவதற்கான அவசியத்தை அறிந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய பொருட்களில், விலையேறப் பெற்றவைகளில், இவர்கள் எவ்வளவுக்குக் காப்பாற்ற நாட வேண்டும்? என்ற கேள்வி எழும்பலாம். இவர்கள் தங்களுடைய பொருட்களில் எவற்றையும் தக்கவைத்துக்கொள்ள/ காப்பாற்றிக்கொள்ள நாடக்கூடாது என்றும், இவர்கள் எச்சரிக்கப்படுகின்றனர்; அதாவது சமுதாயத்தின் சில சிலாக்கியங்கள், மனுஷர் மத்தியில் கனம், சில பட்டங்கள் அதாவது உதவியாளர், மூப்பர், ஊழியக்காரர் போன்றதான சிறு பதவி ஸ்தானங்களின் பெயர்கள் முதலானவைகளை இவர்கள் தக்கவைத்துக்கொள்ள நாடக்கூடாது. இவைகளையெல்லாம் தக்க வைக்க/காத்துக்கொள்ள முற்படுவது என்பது ஏமாற்றத்தை அளிக்கின்றாகவே இருக்கும். அனைத்தையும் நாம் விட்டுவிட வேண்டும், இல்லையெனில் அக்காலத்தின் பரீட்சைகளை நாம் வெற்றிகரமாய்க் கடந்துச் செல்ல முடியாது.
இதுபோலவே வயலில் இருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமல் இருக்க வேண்டும். வயலானது, உலகத்தை அடையாளப்படுத்துகின்றது. உலகத்தை விட்டு வெளியேறின, அதாவது பெயர்ச் சபைகளை விட்டு வெளியேறின எந்தக் கர்த்தருடைய ஜனங்களும், திரும்பிப்போகக் கூடாது; மாறாக சூழ்நிலையின் உண்மையை அவர்கள் அறிந்துக்கொண்டு, வயலிலிருந்து, கர்த்தரிடத்திற்கு ஓடிவிட வேண்டும்.
பிள்ளைகளை உடையவர்களுக்கும், பால் கொடுக்கிறவர்களுக்கும் மேல் அக்காலத்தில் வரும் விசேஷித்தப் பிரச்சனைகளைக் குறித்துப் பரிசுத்தவானாகிய மத்தேயு அவர்களின் பதிவானது தெரிவிக்கின்ற காரியமானது, அடையாளமான வார்த்தைகள் என்றும், உலகத்தை மாற்றுவதற்கும், புதிதாய் வருபவர்களுக்குப் போதிப்பதற்குமென நாடும் கிறிஸ்தவ ஜனங்களை அடையாளப்படுத்துகின்றது என்றும் நாம் நம்புகின்றோம். இவர்கள் விசேஷித்த ஆத்துமாவின் வருத்தத்தில் காணப்படுவார்கள்; அதாவது யுக மாற்றத்தின் நிமித்தமாகவும், “”என் ஜனங்களே, அவளை விட்டு வெளியே வாருங்கள்” என்ற அழைப்பினாலும் வருத்தத்தில் காணப்படுவார்கள். அழைப்பைக் கேட்டு, அதற்குக் கீழ்ப்படிவது என்பது இப்படிப்பட்டவர்களுக்குக் கடினமானதாக இருக்கும்.
சோதோமிலிருந்து, லோத்தும், அவருடைய குடும்பத்தாரும் தப்பி ஓடும்போது, அவர்கள் துரிதமாய் ஓடும்படியாகவும், அழியப் போகிறவைகளைத் திரும்பிப் பார்க்காதப்படியும் எச்சரிக்கப்பட்டார்கள். ஆகவே கர்த்தருடைய ஜனங்களும் அழிந்துப் போவதற்குரியவைகளைத் திரும்பிப்பார்க்கக்கூடாது. அவைகள் மீது கவனம் செலுத்தக் கூடாது. “”பாபிலோனை விட்டு ஓடி விடுங்கள்!” “”அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்பிவியுங்கள்!” (எரேமியா 51:6); லோத்தின் மனைவி கீழ்ப்படியத் தவறி, அழியப் போகிறவைகளை ஏக்கத்துடன் திரும்பிப்பார்த்து, தப்பிக்கொள்ள முடியாதவள் ஆனாள். இந்த உதாரணத்தை கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்குக்கொடுத்து, அவர்கள் தற்காலத்தின் காரியங்கள் அனைத்தையும் முழுமையாகத் துறந்து ஓடும்படியாக வலியுறுத்துகின்றார். தன்னுடைய ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன், அதை இழந்துபோவான்; தன் ஜீவனை இழந்துபோகிறவன், நித்தியத்திற்குரிய ஜீவனைக் கண்டடைகிறவனாக இருப்பான்.