R2606 – செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R2606 (page 101)

செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை

PARABLE OF THE SHEEP AND THE GOATS

மத்தேயு 25:31-46

“”அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.”―மத்தேயு 25:46.

வேதவாக்கியங்களானது, நித்தியமான சித்திரவதை எனும் தேவதூஷணமான உபதேசத்தை எங்கும் போதிக்கவில்லை என்றாலும், உவமையில் வரும் “”வெள்ளாடு“ வகுப்பாரை அடையாளப்படுத்தும் பொல்லாங்கான வகுப்பாருக்கான நித்தியமான தண்டனை குறித்து வேதவாக்கியங்களானது அழுத்தம் கொடுத்துப் போதிக்கவே செய்கின்றன. இந்த உவமையையும், இறுதியில் வழங்கப்படும் தண்டனை தீர்ப்பையும் ஆராய்ந்துப்பார்க்கலாம்.

“”ஒழுக்கம் என்பதே பரலோகத்தின் முதல் பிரமாணம்” என்று கூறப்படும் காரியம் உண்மையே; எனினும், சிலர் மாத்திரமே இது எந்தளவுக்கு உண்மையாய் இருக்கின்றது என்பதை உண்மையாய் உணர்ந்திருக்கின்றனர். யுகங்களுக்கடுத்த தெய்வீகத் திட்டத்தினைப் பார்க்கையில் விளங்கும் ஒழுங்கினை வேறெங்கும் பார்க்க முடியாது.

தேவன் தம்முடைய ஒவ்வொரு வேலையின் பாகத்திற்கும் திட்டவட்டமான காலங்களையும், வேளைகளையும் கொண்டிருக்கின்றார்; மேலும், இந்த ஒவ்வொரு காலங்களுடைய முடிவிலும் வேலை நிறைவடைவதும், பின்வரும் யுகத்தில் புதிய வேலையை ஆரம்பிப்பதற்கான ஆயத்தமாக, பயனற்றவைகளை அகற்றுவதும் நடைபெற்றது. இவ்வாறாக யூத யுகத்தினுடைய முடிவில் ஒழுங்குக் கடைப்பிடிக்கப்பட்டது; அதாவது ஓர் அறுவடையும், பதரிலிருந்து கோதுமை வகுப்பார் முற்றிலுமாகப் பிரிக்கப்படுவதும், பதர் வகுப்பார் தேவனுடைய கிருபையினின்று முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுவதும் நடைபெற்றது. யூத யுகத்தில் பாத்திரமானவர்களெனத் தீர்க்கப்பட்டுள்ள சிலரை வைத்து, ஒரு புதிய யுகமாகிய, சுவிசேஷ யுகம் ஆரம்பமானது. இப்பொழுது, நாம் இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய அறுவடையாகிய நிறைவடைதலின் காலப்பகுதியில் காணப்படுகின்றோம்; அதாவது, இந்த யுகத்தின் போது வளர்ந்திட்ட “”கோதுமைகளையும்,” “”களைகளையும்” பிரிக்கும் காலத்தின் மத்தியில் நாம் காணப்படுகின்றோம். நமது கர்த்தர் இயேசுவைத் தலையாகக்கொண்டிருந்த, இந்தக் கோதுமை வகுப்பாரை வைத்து, ஒரு புதிய யுகம் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது; இந்தப் புதிய யுகத்தில் இந்தக் “”கோதுமைகள்,” ஆசாரியர்களாகவும், இராஜாக்களாகவும் ஆளுகை செய்வார்கள்; ஆனால், களை வகுப்பாரோ இந்தக் கிருபைக்குப் பாத்திரமற்றவர்களென நியாயந்தீர்க்கப்படுவார்கள்.

யூத யுகத்திலும், நிறைவடையப் போகிற சுவிசேஷ யுகத்திலும் கைக்கொள்ளப்படும் இதே ஒழுங்கானது, இந்தச் சுவிசேஷ யுகத்தைப் பின்தொடரும் யுகத்திலும் கைக்கொள்ளப்படும் என்று நமது கர்த்தர், நாம் ஆராய்வதற்கு எடுத்துக்கொண்ட இந்த உவமையின் மூலமாக நமக்குத் தெரிவிக்கின்றார்.

யூத யுகத்தினுடைய அறுவடையானது, பதிரிலிருந்து கோதுமையைப் பிரித்தெடுக்கப்படுவதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது; இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய அறுவடையானது, களைகளிலிருந்து கோதுமையைப் பிரித்தெடுக்கப்படுவதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது; ஆயிர வருட யுகத்தின் அறுவடையானது, வெள்ளாடுகளிலிருந்து, செம்மறியாடுகள் பிரித்தெடுக்கப்படுவதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் பற்றின உவமையானது, ஆயிர வருட யுகம் தொடர்புடையதாய் இருக்கின்றது என்பது, “”அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரிப்பார்” என்ற வசனங்களுடைய வார்த்தைகள் மூலம் தெளிவாய்ச் சுட்டிக்காட்டப்படுகின்றதாய் இருக்கின்றது (மத்தேயு 25:31-32). தற்கால யுகத்தில் பரீட்சையில் காணப்படுகின்றவர்களுடைய (சபை) ஒவ்வொரு கிரியையும், நியமிக்கப்பட்ட காலத்தில் நீதிபதியினுடைய இறுதித் தீர்ப்பைத் தீர்மானிக்கத்தக்கதாக, அவர்களுடைய குணலட்சணங்களின் விஷயத்தில் பங்கு வகிக்கின்றதுபோலவே, இனிவரும் யுகத்திலுள்ள மனுக்குலத்தின் விஷயத்திலும் காணப்படும். தற்கால யுகத்தில், யுகம் முடிவதற்கு முன்னதாகவே சபையிலுள்ள தனிப்பட்ட அங்கத்தினர் அநேகரின் பரீட்சைகள் முடிவுபெற்று, அவர்கள் விஷயத்தில் தீர்மானமும் எடுக்கப்பட்டுக் காணப்படுவது போலவே (2 தீமோத்தேயு 4:7-8), ஆயிர வருட அரசாட்சியிலும், யுகம் முடிவதற்கு முன்னதாகவே சில தனிப்பட்டவர்களுடைய விஷயத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில் காணப்படும் (ஏசாயா 65:20). எனினும் ஒவ்வொரு யுகத்திலும், யுகத்தினுடைய முடிவு காலப்பகுதியில் ஒரு பொதுப்படையான பிரித்தெடுத்தலும் நடைபெறும்.

மகா உபத்திரவக் காலத்திற்குப் பின்பு, ஆயிர வருட யுகத்தின் விடியலில், உயிரோடிருப்பவர்களாகிய ஜாதியார்கள் கிறிஸ்துவுக்கு முன்பாகக் கூட்டிச்சேர்க்கபடுவார்கள்; மற்றும், மரித்தவர்களுக்கான நியமிக்கப்பட்ட நேரத்திலும், வரிசையிலும், மரித்த ஜனங்கள் அனைவரும் கிறிஸ்துவினுடைய நியாயசனத்திற்கு முன்பாக, உடனடியான தீர்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக இல்லாமல், மாறாக மிகவும் சாதகமான சூழ்நிலையின் கீழ் நியாயமான, பாரபட்சமற்ற தனிப்பட்ட பரீட்சைகளை / ஒத்திகைகளைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக அழைக்கப்படுவார்கள்; இந்தப் பரீட்சையின் / ஒத்திகையின் விளைவாக நித்திய ஜீவனுக்குப் பாத்திரவான்கள் (அ) பாத்திரவான்கள் இல்லை எனும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் (எசேக்கியேல் 18:2-4,19,20).

இந்த உவமையின் சம்பவமானது, மகா உபத்திரவக் காலம் முடிந்து, ஜாதிகள் கீழ்ப்படுத்தப்பட்டு, சாத்தான் கட்டப்பட்டு, கிறிஸ்துவினுடைய இராஜ்யத்தின் அதிகாரம் ஸ்தாபிக்கப்பட்ட பிற்பாடு நடைபெறுகின்றதாய் இருக்கின்றது (வெளிப்படுத்தல் 20:1-2). இச்சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்னதாக (ஜெயங்கொள்ளுகிற சபையாகிய) கிறிஸ்துவின் மணவாட்டி, அவருடைய ஆவிக்குரிய வல்லமையாகிய சிங்காசனத்தில், அவரோடு கூட [R2606 : page 102] உட்கார்ந்திருப்பார்கள், மற்றும் கோபாக்கினையின் மகா நாளினுடைய நியாயத்தீர்ப்புகளை வழங்குவதிலும் பங்குக்கொள்ளுகிறவர்களுமாய் இருப்பார்கள். அப்போது மனுஷகுமாரனும், அவருடைய மகிமையடைந்த சபையும் வெளிப்படுத்தப்பட்டு, மனுஷர்களுடைய புரிந்துக்கொள்ளுதலின் கண்களினால் பார்க்கப்படுவார்கள்; மற்றும் இவர்கள், “”தங்கள் பிதாவின் இராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்” (மத்தேயு 13:43).

இதுவே யோவான் பார்த்த புதிய எருசலேமாகும் . . . “”(அரசாங்கத்திற்கு அடையாளமாக) பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்” (வெளிப்படுத்தல் 21:2). மகா உபத்திரவத்தின்போது, இந்தப் இறங்கி வந்துகொண்டிருக்கும், ஆனால் (உபத்திரவக் காலம்) அது முடிவு பெறுவதற்கு முன்பாக, புதிய எருசலேம் பூமியையே வந்து தொட்டிருக்கும். புதிய எருசலேம் (தேவனுடைய வல்லமையினாலே அல்லாமல், மற்றபடி) கைகளினால் பெயர்க்கப்பட முடியாத மலையிலிருந்து பெயர்க்கப்பட்டு வரும் கல்லாக இருந்து, பெரிய பர்வதமாகி, முழுப் பூமியையும் நிரப்புகின்றதாய் இருக்கும்; மற்றும் இது வரும்போது, இருளின் அதிபதியினுடைய பொல்லாத இராஜ்யங்களைச் சுக்குநூறாக உடைத்துப்போட்டு வருகின்றதாய் இருக்கும் (தானியேல் 2:34-35).

இதுவே, “”தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்படும் மகிமையான நகரமாகும் (அரசாங்கமாகும்). மேலும் ஆயிர வருட அரசாட்சியினுடைய விடியலில், ஜாதிகள் இந்நகரத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள் (வெளிப்படுத்தல் 21:24). “”இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். புமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்“ (வெளிப்படுத்தல் 21:27). “”ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; . . . இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” (வெளிப்படுத்தல் 22:17). இப்படியாக உலகத்திற்கான மாபெரும் நியாயத்தீர்ப்பின் நாளாகிய, (ஆயிர வருடங்களான) தகுதிக்காண் பருவக்காலம் ஆரம்பிக்கும்.

இப்படியாக ஜாதியார் குணமாக்கப்பட்டு, ஆசீர்வதிக்கப்படும் அந்தக் கிருபையான காலத்திலும் கூட, அதாவது சாத்தான் கட்டப்பட்டு, தீமைகள் அடக்கி வைக்கப்பட்டு, மனுக்குலமானது மரணத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் ஏற்பாடு நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலத்திலும் கூட, அதாவது கர்த்தரைப்பற்றின அறிவினால் பூமி நிரம்பிக் காணப்பட்டிருக்கும்போது கூட, இரண்டு வகுப்பார்கள் காணப்படுவார்கள்; இந்த இரண்டு வகுப்பாரை, நமது கர்த்தர் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு என ஒப்பிட்டுக் கூறுகின்றார். இந்த இரண்டு வகுப்பாரை, கர்த்தர் பிரிப்பார் என்று கர்த்தர் நமக்குத் தெரிவித்துள்ளார். ஆயிர வருடத்தின்போது சாந்தமுடையவர்களாகவும், போதிக்கப்படத் தக்கவர்களாகவும், வழிநடத்தப்படுவதற்கு விருப்பமுள்ளவர்களாகவும் காணப்படும் செம்மறியாடு வகுப்பார், நியாயாதிபதியின் அங்கீகரிப்பிற்கும், தயவிற்கும் அடையாளமான அவருடைய வலது கரத்தினிடத்திற்குக் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள். ஆனால், இப்படியாகச் செம்மறியாடுகள் நல்ல ஆயனால் ஏற்பாடு பண்ணப்பட்ட சத்தியம் எனும் பசுமையான புற்களில் மேயும்போது, குப்பைகளை மேய்பவர்களாகவும், சுயசித்தம் உடையவர்களாகவும், இணங்காதவர்களாகவும், மனுஷர் மத்தியில் அங்கீகரிப்பையும் மற்றும் முதன்மை வகுத்தலையும் நாடுபவர்களாகவும், பாறைகள்மேல் ஏறிச்செல்லுகிறவர்களாகவும் இருக்கும் வெள்ளாடு வகுப்பார், நியாயாதிபதியினுடைய தயவிற்கு எதிரான, இடது கரத்தில் கூட்டிச் சேர்க்கப்படுபவர்களாய்க் காணப்படுவார்கள்; அதாவது அவரது தயவற்றவர்களாகவும், அவருடைய கண்டனத்திற்குரியவர்களாகவும் இந்த வெள்ளாடு வகுப்பார் காணப்படுவார்கள்.

இப்படியாக வெள்ளாடுகளையும், செம்மறியாடுகளையும் பிரிக்கும் வேலையானது நிறைவடைவதற்கு, ஆயிர வருட யுகமும் தேவைப்படுகிறதாய் இருக்கும். அந்த யுகத்தில் ஒவ்வொருவரும், தேவன் மற்றும் அவரது சித்தம் பற்றின அறிவில் படிப்படியாக வரும்போது, அந்தப் பொன்னான யுகத்தினுடைய வாய்ப்புகளை ஒவ்வொருவரும் நன்றாய்ப் பயன்படுத்துவதற்கு (அ) தவறாய்ப் பயன்படுத்துவதற்கு ஏற்ப, அவருடைய தயவின் வலது கரத்தில் (அ) அவருடைய தயவின்மையின்/வெறுப்பின் இடது கரத்தில் தங்கள் ஸ்தானத்தைக் கொள்பவர்களாய்க் காணப்படுவார்கள். யுகம் முடியும்போது, உவமையில் சொல்லப்பட்டதுபோன்று, மனுக்குலத்தின் உலகத்திலுள்ள அனைவரும், இந்த இரண்டு வகுப்பிலும் இணைந்துக் கொண்டவர்களாக/சேர்ந்துக் கொண்டவர்களாகக் காணப்படுவார்கள்.

அந்த யுகத்தின் முடிவு என்பது, உலகத்திற்கான நியாயத்தீர்ப்பினுடைய (அ) பரீட்சையினுடைய முடிவாக இருக்கும். இந்தச், “”செம்மறியாடு” வகுப்பாருக்கான பலன் அவர்களுக்கு வழங்கப்படும்; ஏனெனில், இவர்கள் பரீட்சையின் மற்றும் நெறிப்படுத்துதலின் காலத்தில், தேவனுடைய நியாயப்பிரமாணத்தினுடைய நிறைவேறுதலாக அப்போஸ்தலர் பவுலினால் விவரிக்கப்பட்டுள்ள அன்பு எனும் அருமையான குணலட்சணத்தை வளர்த்து, வெளிப்படுத்தினவர்களாய் இருந்தனர். “”அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது” (ரோமர் 13:10). இந்த அன்பை இவர்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய அவசியமான நேரங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்; மேலும் இவர்கள் ஒருவருக்கொருவர் செய்வதை, கர்த்தர் தமக்கே செய்ததாக எண்ணுவார்; ஏனெனில், இவர்கள் மனித சுபாவத்திலும், அவர் தெய்வீகச் சுபாவத்திலும் காணப்பட்டாலுங்கூட, இவர்களனைவரையும் தேவனுடைய பிள்ளைகளாகவும், தம்முடைய சகோதரர்களாகவும் எண்ணுகின்றார்.

“”வெள்ளாடு” வகுப்பார் கண்டிக்கப்படுவதற்கான காரணம், இந்த அன்பின் ஆவியில் இவர்கள் குறைவுபட்டிருப்பதினாலாகும். செம்மறியாடுகளைப்போலவே சாதகமான சூழ்நிலைகளில் காணப்பட்ட இந்த வெள்ளாடு வகுப்பார், கர்த்தருடைய நெறிப்படுத்துதலுக்கான வனைந்தெடுக்கும் செல்வாக்கைத் துணிகரமாய் எதிர்க்கின்றவர்களாயிருந்து, தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்துகின்றவர்களாய்க் காணப்படுவார்கள். தேவனுடைய தயவுகள், இவர்களை உண்மையான மனந்திரும்புதலுக்கு நேராக வழிநடத்துவதில்லை; மாறாக, இவர்கள் பார்வோனைப் போன்று அவருடைய தயவைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு, தீமையைச் செய்கிறவர்களாய்க் காணப்படுவார்கள். தேவனுடையதும், இராஜ்யத்தினுடையதுமான பிரமாணமாகிய அன்பு எனும் அம்சத்தை வளர்த்திக்கொள்ளாத வெள்ளாடு வகுப்பார், நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கு அபாத்திரர்களாய்க் கருதப்பட்டு, அழிக்கப்படுவார்கள். தேவனுக்கொத்த சாயலாகிய அன்பை வளர்த்துக்கொண்டவர்களாகவும், அந்த அன்பைத் தங்களுடைய குணலட்சணங்களில் வெளிப்படுத்துபவர்களாகவும் காணப்படும் “”செம்மறியாடு” வகுப்பார், யுகா யுகங்களில், கீழ்த்தளத்தில் பூமியை ஆளுபவர்களாக ஆக்கப்படுவார்கள்.

ஆயிர வருட யுகத்தினுடைய முடிவின்போது, இறுதியாக மனிதர்களுடைய காரியங்களை ஒழுங்குப்படுத்தும் வண்ணமாக, கிறிஸ்து, “”செம்மறியாடு” வகுப்பாரை நோக்கி, “”என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிடுகின்றார் (மத்தேயு 25:34) .

இங்குக் குறிப்பிடப்படும், ஆயிர வருட யுகத்தின் கடைசியில் வரும் “”செம்மறியாடுகள்,” சுவிசேஷ யுகத்தினுடைய, சுவிசேஷச் சபையினுடைய செம்மறியாடுகளாய் இராமல், மாறாக நமது கர்த்தரினால் யோவான் 10:16-ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “”வேறே ஆடுகளாய்” இருக்கின்றது என்பது தெளிவாய்த் தெரிகின்றது. உலகம் உண்டானது முதல், தெய்வீகத் திட்டத்தில் (ஆயிர வருட யுகததின் முடிவில் வரும் இந்த) செம்மறியாடுகளுக்கான இராஜ்யம் என்பது, சுவிசேஷ யுக சபைக்கென ஆயத்தம் பண்ணப்பட்ட இராஜ்யமல்ல. ஆயிர வருட யுகத்தினுடைய ஆரம்பப் பகுதியிலேயே சபை, தன்னுடைய இராஜ்யத்தைப் பெற்றுக்கொள்வாள்; ஆனால் இங்குக் (மத்தேயு 25:34) குறிப்பிடப்படும் இராஜ்யமானது, ஆயிர வருட யுகத்தினுடைய இந்தச் செம்மறியாடுகளுக்கு உரியதாகும். இவர்களுக்கான இராஜ்யம் என்பது, ஆதாமினால் ஆதியில் பெற்றிருக்கப்பட்டதும், பாவத்தினால் இழந்துப் போகப்பட்டதும், மனிதன் பூரணத்திற்கு நேராகக்கொண்டு வரப்படும்போதும், ஏற்றுக்கொள்வதற்கும், அனுபவிப்பதற்கும், பாத்திரமாகும்போதும் மீண்டுமாக திரும்பக்கொடுக்கப் பெற்றதுமான, பூமியின் மீதான ஆளுகையாய் இருக்கின்றது. இந்த ஓர் ஆளுகை என்பது ஓர் இனத்தார், இன்னொரு இனத்தார் மீது பண்ணும் ஆளுகையாய் இராமல், மாறாக ஒரு கூட்டு ஆளுகையாயிருக்கும்; இந்த ஆளுகையில் ஒவ்வொரு மனிதனும் இராஜாவாக இருப்பான்; மற்றும் அனைவரும் அனைத்துப் பூமிக்குரிய நன்மைகளையும் அனுபவிக்கும் விஷயத்திலும், உரிமை கொண்டாடும் விஷயத்திலும், சரிசமமான உரிமைகளையும், சிலாக்கியங்களையும் பெற்றிருப்பார்கள். அவர்கள் இராஜரிக உரிமையுடைய ஜனங்களாய் இருப்பார்கள்; பூரணமான நீதியை அடிப்படையாகக் கொண்டுள்ள மாபெரும், பிரம்மாண்டமான குடியரசாகக் காணப்படும்; அங்கு அனைத்து மனுஷர்களுக்குமான உரிமைக்கு முக்கியத்தும் கொடுக்கப்படும்; ஏனெனில், பொன்னான சட்டமானது ஒவ்வொருவரின் இருதங்களிலும் பொறிக்கப்பட்டிருக்கும்; மற்றும் ஒவ்வொரு மனுஷனும் தன்னைத்தான் நேசிப்பதுபோன்று, தன்னுடைய அயலானையும் அன்புகூருகின்றவனாய் இருப்பான். அனைவரின் ஆளுகையும், ஐசுவரியமான மற்றும் திரளான ஆசீர்வாதங்களைக்கொண்டிருக்கும் ஒட்டுமொத்த பூமியின் மீதே காணப்படும் (ஆதியாகமம் 1:28; சங்கீதம் 8:5-8). ஆயிர வருட யுகத்தின் முடிவில் பூரணமாக்கப்பட்ட, தகுதியாக்கப்பட்ட, மீட்கப்பட்ட சந்ததியாருக்கு வழங்கப்படும் [R2607 : page 102] உலகத்திற்கான இராஜ்யமானது, மற்றவர்களுக்கு வழங்கப்படும் இராஜ்யத்திலிருந்து, தெளிவாய் வேறுபடுத்தி காண்பிக்கப்படத்தக்கதாக, ’உலகம் உண்டானது முதல் ஆயத்தம் பண்ணப்பட்ட இராஜ்யம்” என்று கூறப்பட்டுள்ளது; பூமியானது பூரண மனிதனுக்கான நித்தியமான வீடாகவும், இராஜ்யமாகவும் இருக்கின்றது. ஆனால் கிறிஸ்துவுக்கு அளிக்கப்பட்டதும், அவருடைய சபையாகிய மணவாட்டி உடன் சுதந்தரத்துவம் அடையப் போகிறதுமான இராஜ்யமானது, ஓர் ஆவிக்குரிய இராஜ்யமாகும்; அது “”தேவதூதர்களுக்கும், துரைத்தனங்களுக்கும், வல்லமைகளுக்கும் மேலானதாகும்,” மற்றும் அந்த இராஜ்யத்திற்கு முடிவு இருப்பதில்லை; முடிவு பெறக்கூடிய கிறிஸ்துவினுடைய ஆயிர வருட அரசாட்சி என்பது, கிறிஸ்துவினுடைய வல்லமை மற்றும் ஆளுகைக்கான ஆரம்பமாக மாத்திரமே இருக்கின்றது (1 கொரிந்தியர் 15:25-28). முடிவில்லாத பரலோக, ஆவிக்குரிய இராஜ்யமானது, உலகம் உண்டாவதற்கு முன்னதாகவே ஆயத்தம் பண்ணப்பட்டதாக இருக்கின்றது; இதன் ஆரம்பமானது, “”தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியாய் இருக்கிற” கிறிஸ்து இயேசுவில் காணப்படுகின்றது. இந்த இராஜ்யமானது முதற்பேறான கிறிஸ்து இயேசுவுக்காக நோக்கம் கொண்டு ஆயத்தம் பண்ணப்பட்டது; ஆனால் சபையாகிய அவருடைய மணவாட்டியும், உடன் சுதந்தரமுமானவளும், அவருக்குள்/கிறிஸ்துவுக்குள்ளாக உலக தோற்றத்திற்கு முன்னதாகவே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றாள் (எபேசியர் 1:4).

பூமியின் ஆளுகை (அ) இராஜ்யமானது, உலகம் உண்டானது முதல் மனுக்குலத்திற்காக ஆயத்தம் பண்ணப்பட்ட இராஜ்யமாக இருக்கின்றது. மனிதன் ஆறாயிரம் ஆண்டுகளாக தீமையினுடைய ஆளுகையின் கீழ்ப் பாடுபடுவதும், துயரம் மற்றும் மரணத்தினுடைய விளைவுகளைக் கற்றுக்கொள்வதும், இதன் வாயிலாக தேவனுடைய அன்பின் பிரமாணத்தினுடைய நீதி, ஞானம் மற்றும் காருணியத்தை வேறுபடுத்திக் கண்டுகொள்வதும் நலமானதாகும். பின்னர் கிறிஸ்துவின் [R2607 : page 103] ஆளுகையின் கீழ் மனிதனைச் சீரழிவிலிருந்தும், மரணத்திலிருந்தும் திரும்பக்கொண்டுவந்து, “”உலகம் உண்டானது முதல் அவனுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற இராஜ்யத்தை அவன் சுதந்தரித்துக் கொள்ளத்தக்கதாக,” அவனைத் தகுதிப்படுத்துவதற்கு, ஏழாவது ஆயிர வருடக்காலம் அவசியப்படுகின்றது.

அனைவரும் இராஜாக்களாய் இருக்கப்போகின்ற அந்த (பூமிக்குரிய) இராஜ்யமானது, பிரம்மாண்டமான, உலகளாவிய குடியரசாகக் காணப்படும்; இப்பொழுது பாவத்தின் காரணமாகச் சாத்தியமற்றுக் காணப்படும் சமநிலையும், ஆசீர்வாதமான செல்வாக்கும், அப்போது ஒவ்வொரு குடிமகனுடைய பரிபூரணத்தினால் காணப்படும். ஆயிர வருட காலத்திலுள்ள கிறிஸ்துவினுடைய இராஜ்யமோ, முற்றிலும் வேறுபட்டதாக, ஆசாரியர்களினால் செலுத்தப்படும் ஆட்சியாகக் காணப்படும்; இந்த ஆட்சியானது உலகத்தினுடைய சம்மதத்தையோ (அ) உடன்பாட்டையோ பொருட்படுத்தாமல், உலகத்தை (அதன் பூரணமற்ற நிலை காணப்படும்போதும், அனைத்தும் திருப்பக் கொடுக்கப்படும் காலங்களின் போதும்) ஆளுகை செய்யும் ஆட்சியாகக் காணப்படும்.

சுவிசேஷச் சபையினுடைய சகோதர சகோதரிகள் மாத்திரமே, கிறிஸ்துவின் சகோதர சகோதரிகளாய் இருப்பதில்லை. அக்காலத்தில் பூரண நிலைக்குத் திரும்பி வருபவர்கள் அனைவரும் தேவனுடைய புத்திரர்களாக, அதாவது ஆதாம் தேவனுடைய குமாரனாக இருந்ததுபோன்று, மனித குமாரர்களாக அடையாளம் கண்டுக்கொள்ளப்படுவார்கள் (லூக்கா 3:38). தேவனுடைய குமாரர்கள் மனித தளத்திலோ, தேவ தூதர் தளத்திலோ (அ) தெய்வீகத் தளத்திலோ, எத்தளத்தில் காணப்பட்டாலும், அவர்கள் அனைவரும் சகோதரர்களேயாவார்கள். இங்கு நமது கர்த்தருடைய மனித சகோதரர் மீதான, அவருடைய அன்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சீக்கிரத்தில் தேவனுடைய தெய்வீகக் குமாரர்களாகவும், கிறிஸ்துவினுடைய சகோதரர்களாகவும் இருக்கப் போகிறவர்களுக்கு ஊழியம் புரிவதற்கான வாய்ப்பு, இப்பொழுது உலகத்தாருக்கு இருப்பது போன்று, இனிவரும் யுகத்தில் இதே உலகத்தார்தான் மனித சகோதரர்களாகிய தங்களுக்குள், ஒருவருக்கொருவர் ஊழியம் புரிவதற்கான திரளான வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வார்கள்.

மரித்த ஜாதிகள், மீண்டுமாக உயிருடன் கொண்டு வரப்படும்போது, உணவும், வஸ்திரமும், உறைவிடமும் அவர்களுக்கு அவசியமாய் இருக்கும். ஜனங்கள் தற்கால ஜீவியத்தில் எவ்வளவு திரளானவைகளைக் கொண்டிருந்தாலும், மரணமானது அனைவரையும் சரிசமமான நிலைக்குக் கொண்டு வருகின்றது. அனைவரையும் என்பது சிறுபிள்ளையாயினும் சரி, முதிர்ச்சியடைந்த மனுஷனாயினும் சரி, கோடிஸ்வரனாயினும் சரி, ஏழையாயினும் சரி, கல்வியறிவுடையவனாயினும் சரி, கல்வி அறிவு இல்லாதவனாயினும் சரி, நாகரிகமானவனாயும், நாகரிகமற்றவனாயினும் சரி, எல்லாரையும் சரிசமமான நிலைக்குக் கொண்டு வருகின்றது. அனைவரும் இரக்கம் காட்டுவதற்கான திரளான வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வார்கள்; மற்றும் இப்படியாக அனைவரும், தேவனுடன் ஒத்துழைக்கும் துணை வேலையாட்களாக இருப்பதற்கான சிலாக்கியத்தைப் பெற்றுக் கொள்பவர்களாக இருப்பார்கள். இங்கு லாசருவின் சம்பவத்தின் உதாரணம், நமக்கு நினைவிற்கு வருகின்றது; இயேசு லாசருவை மரணத்திலிருந்து விழித்தெழுப்பப் பண்ணினார்; பின்னர் அவனைக் கட்டி வைத்திருந்த சீலைகளை அவிழ்ப்பதற்கும், அவனுக்கு வேறு வஸ்திரம் கொடுப்பதற்கும், அவனுக்குப் போஜனம் கொடுப்பதற்கும், கல்லறையைச் சுற்றிக் காணப்பட்ட அவனோடு கூடச் சந்தோஷமடைந்த நண்பர்கள், இந்த உதவிகளைச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

இன்னுமாக இவர்கள், “”வியாதியுள்ளவர்களாகவும், காவலிலடைக்கப்பட்டவர்களாகவும்” அதாவது படுக்கையில் (அ) பார்வையின் கீழ் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்லறைக் குழி என்பதுதான், மில்லியன் கணக்கான மனுக்குலம் உணர்வற்ற நிலையில், காவல் வைக்கப்பட்டுள்ள மாபெரும் சிறைச்சாலையாக இருக்கின்றது; ஆனால் இவர்கள் கல்லறையிலிருந்து விடுவிக்கப்படும் போது, பூரணத்திற்குத் திரும்புதல் என்பது உடனடியாக நடக்கும் காரியமல்ல. இவர்கள் இன்னமும் பூரணமடையாதபடியால், இவர்கள் வியாதியுற்றவர்கள் என்று அழைக்கப்படுவது சரியே; இவர்கள் மரணத்தில் இல்லை, ஆனாலும் ஜீவனிலும் பூரணமடையவும் இல்லை; இப்படியாக இரண்டிற்கும் இடையே காணப்படும் நிலைமை என்பது, வியாதிப்பட்டிருக்கும் நிலை என்று கூறப்படுவது பொருத்தமானதேயாகும். இவர்கள் மனதளவிலும், சரீரத்திலும், ஒழுக்கத்திலும் பூரணமடைவது வரையிலும், இவர்கள் படுக்கையில் (அ) பார்வையின் கீழ்த் தொடர்ந்து காணப்படுபவர்களாய் இருப்பார்கள். அப்போது ஒருவருக்கொருவர் உதவி செய்வதற்கும், அனுதாபங்கொள்வதற்கும், அறிவுரைக் கூறுவதற்கும், உற்சாகமூட்டுவதற்கும், திரளான வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்பவர்களாக இருப்பார்கள்; மேலும் இப்படியாக உதவி புரிவதற்குத் தவறுவது என்பது, கர்த்தருடைய அன்பின் ஆவி குறைவுபட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும்.

மனுக்குலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக மரணத்திலிருந்து எழுப்பப்படாமல், மாறாக ஆயிர வருடக் காலப்பகுதியில் படிப்படியாக எழுப்பப்படுவதினால், ஒவ்வொரு கூட்டத்தார் எழுந்து வரும்போது, இவர்களுக்கு முன்பு எழுந்து வந்த கூட்டத்தார் அடங்கிய உதவியாளர்களின் சேனை (உதவி புரிவதற்கென) காணப்படும். (கிறிஸ்துவின் சகோதரராகிய) மனுஷர்கள் ஒருவருக்கொருவர் அப்போது காண்பிக்கும் அன்பையும், இரக்கத்தையும், இராஜா தமக்கே செய்ததாகக் கருதிக்கொள்வார். எந்த மாபெரும் சாகசங்களும், அப்போது நீதிமான்களுக்கு அளிக்கப்படும் கனங்களுக்காகவும், தயவுகளுக்காகவும் எதிர்ப்பார்க்கப்படுவதில்லை; இவர்கள் தேவனுடைய அன்பின் பிரமாணத்திற்கு இசைவாக வந்து, அந்த அன்பை தங்களுடைய கிரியைகளினால் நிரூபித்துக் காட்டுகிறவர்களாய் இருக்க மாத்திரமே வேண்டும். “”அன்பு நியாயப்பிரமாணததினுடைய நிறைவேறுதலாய் இருக்கின்றது;” “”தேவன் அன்பாகவே இருக்கின்றார்;” ஆகையால் மனிதன், மீண்டுமாகத் தேவனுடைய சாயலில் கொண்டு வரப்படும்போது, மனிதன் அன்பின் ஜீவனுள்ள உருவமாக இருப்பான்.

“”உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற இராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” எனும்போது, தெய்வீக நியாயப்பிரமாணம் மற்றும் அதன் உயர்வான கொள்கைகளைச் சார்ந்திராத ஒரு தனிப்பட்ட விதமான ஆளுகையைக் குறிக்கிறதாக இல்லை; பூமியின் மீதான ஆளுகையை மனிதனுக்குத் தேவன் ஆதியில் கொடுத்திருந்திருந்தார்; ஆனால் மனிதன் இந்த மாபெரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக தேவன் அவனை (இராஜ்யத்தில்) ஆயத்தம் பண்ணின பிற்பாடு, அந்த ஆளுகையை அவனுக்குத் திரும்பக்கொடுக்கத்தக்கதாக திட்டமிட்டிருந்த போதிலும், தம்முடைய உயர்வான பிரமாணங்களுடன் இசைவாகவே அல்லாமல் மற்றபடி, மனிதன் பூமியை ஆளுகைச் செய்வதற்குத் தேவன் நோக்கம் கொண்டுள்ளார் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. “”பரலோகத்தில் செய்யப்படுவதுபோல, பூமியிலும் செய்யப்படுவதாக” என்பதே அரசாங்கம் பண்ணுவதற்கான கொள்கையாக, என்றென்றும் காணப்பட வேண்டும். அப்போது மனுஷன், பரலோகத்தினுடைய பிரமாணத்திற்கு இசைவாக, தன்னுடைய பூமியை ஆளுகை செய்வான்; அதாவது “”வலது பாரிசத்தில் நித்திய பேரின்பம்” கொண்டிருப்பவரும், ஜீவனைக் கொடுப்பவருமானவரின் சித்தத்தைச் செய்வதில் தொடர்ந்து மகிழ்ச்சிக்கொள்பவனாக இருப்பான். “”உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு” (சங்கீதம் 16:11). ஒ! முழுமையான ஆசீர்வாதங்களை அள்ளி வழங்கும் அன்பான திட்டங்களை உடையவருக்குக் கனமும், மகிமையும் செலுத்துங்கள் என யார்தான் சொல்லாமல் இருப்பார்கள்?

இடது பக்கத்தில் நிற்பவர்களுக்கு, “”சபிக்கப்பட்டவர்களே என்னைவிட்டுப் போங்கள்” என்று கூறப்பட்ட வார்த்தைகளை நாம் இப்பொழுது ஆராயலாம்; இவர்கள் தெய்வீக அன்பினுடைய வனைந்தெடுக்கும் மற்றும் வடிவமைக்கும், ஆதிக்கங்களுக்கு இணங்காதவர்களாய்க் காணப்பட்டு, ஜீவனுக்கு தகுதியற்றப் பாத்திரங்களாகத் தீர்ப்பு வழங்கப்படுகின்றனர். சகோதரர்கள் பசியாய், தாகமாய் இருந்தபோது, வஸ்திரமில்லாமல் இருந்தபோது, வியாதிப்பட்டிருந்த போது, காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, அவர்களுடைய இந்தத் தேவைகளுக்கு, இடது பக்கத்தில் காணப்பட்டவர்கள் உதவிகள் புரிந்திடவில்லை; இவ்வாறாக இவர்கள் பரலோக இராஜ்யத்திற்குத் தாங்கள் இசைவாய் இல்லை என்று, தங்களை நிரூபித்து காண்பிக்கின்றவர்களாய் இருப்பார்கள்; ஏனெனில், “”தீட்டுள்ளது ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை” (வெளிப்படுத்தல் 21:27). இந்த வகுப்பாருக்கான தீர்ப்பு என்பது . . . “”சபிக்கப்பட்டவர்களே என்னைவிட்டு பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே (இது அழிவிற்கான அடையாள வார்த்தை) போங்கள்” ஆகும். “”மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்” என்றும் நாம் வாசிக்கின்றோம் (எபிரெயர் 2:14).

“”அந்தப்படி, இவர்கள் (வெள்ளாடுகள்) நித்திய (கிரேக்க வார்த்தை aionios – இதன் அர்த்தம் நித்திய காலமாகும்) ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ (செம்மறியாடுகள்) நித்திய (கிரேக்க வார்த்தை aionios – இதன் அர்த்தம் நித்திய காலமாகும்) ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்” (வசனம் 46). பலனைப் போன்று, தண்டனையும் நித்தியக் காலத்திற்கு உரியதாகும், அதாவது இரண்டுமே நித்திய காலத்திற்கும் உரியதாகும்.