R5405 – ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R5405 (page 56)

ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்

LAWFUL ON THE SABBATH

லூக்கா 13:10-17

“”மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது.” – மாற்கு 2:27

ஓய்வுநாள் பற்றின பெரும் குழப்பம், கிறிஸ்தவ ஜனங்கள் மத்தியில் காணப்படுகின்றது. இந்தக் குழப்பத்திற்கு அருமையான ஒரு காரணம் என்னவெனில், வெகு சிலரே நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ்க் காணப்பட்ட மாம்சீக இஸ்ரயேலர்களுக்கு தேவன் பண்ணின ஒழுங்கிலிருந்து, இயேசுவின் பின்னடியார்களுக்கெனத் தேவனால் பண்ணப்பட்ட ஒழுங்கானது முற்றிலும் வேறுபட்டது என்று உணர்ந்திருப்பதேயாகும். (நியாயப்பிரமாண) உடன்படிக்கையின் கீழ்க் காணப்பட்ட அனைத்தும் நிழல்களாகவும், கிறஸ்தவர்களுக்கு விலையேறப்பெற்ற படிப்பினைகளைக் கொண்டவைகளாகவும் இருக்கின்றன. ஆனால் நிழலை நிஜமாக எடுத்துக்கொள்வது என்பது, நம்முடைய மனங்களைக் குழப்புகின்றதாகவும், நிஜத்தின் அழகையும், ஆற்றலையும் இழந்துவிடுவதாகவும் இருக்கும்.

யூதர்களுக்கான நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பு வரையிலும் ஓய்வுநாள் என்ற ஒன்று இருக்கவில்லை; ஓய்வு என்னும் வார்த்தையானது இளைப்பாறுதல் எனும் பொருளை மாத்திரம் கொடுக்கின்றதாய் இருந்தது; மேலும் தேவன் மகா ஏழாம் நாளில் அல்லது சிருஷ்டிப்பின் வாரத்தினுடைய ஏழாம் நாளில் ஓய்ந்து இருந்தார் என்று நமக்குக் கூறப்பட்டுள்ளது. தேவனோடு சஞ்சரித்த ஏனோக்கும், தேவனுடைய நண்பனாய் இருந்த ஆபிரகாமும் மற்றும் கர்த்தருக்குப் பிரியமாய் இருந்த அநேகரும் பாவநிவாரண நாளையும், அதன் பலிகளையோ அல்லது இஸ்ரயேலுடைய நியாயப்பிரமாண உடன்படிக்கையோடு தொடர்புடைய எந்த ஒரு காரியத்தையோ அறிந்திராதது போலவே, ஓய்வுநாளைப் பற்றியும் ஒன்றும் அறிந்திருக்கவில்லை.

இஸ்ரயேலர்கள் மோசேயின் கீழ், பணிவிடைக்காரர் வீட்டாராக இருந்தார்களென, அப்போஸ்தலனாகிய பவுல் விவரிக்கின்றார்; மேலும் சபை கிறிஸ்துவின் கீழ், புத்திரர் வீட்டாராக இருக்கின்றனர் என்றும் விவரிக்கின்றார் (எபிரெயர் 3:1-6). பணிவிடைக்காரர் வீட்டாரைத் தேவன் கையாளும் முறை என்பது, அவர் புத்திரர் வீட்டாரைக் கையாளும் முறையிலிருந்து வேறுபட்டதாக இருக்கும். ஏன், எதற்கு என்ற விவரங்கள்/விளக்கங்கள் இல்லாமல் பணிவிடைக்காரர்களுக்குக் கட்டளைகள் கொடுக்கப்பட்டன. ஆனால் தேவன் நம்மைப் புத்திரர்கள் போல் கையாளுகின்றார் என்று அப்போஸ்தலர் விவரிக்கின்றார்.

பரம பிதாவானவர் தம்முடைய ஆவியையுடைய புத்திரராகிய உண்மை கிறிஸ்தவன் கட்டாயத்தினால் அல்லாமல், மாறாக பிதாவின் சித்தத்தைச் செய்வதிலுள்ள மகிழ்ச்சியினால், சுயத்தைப் பலிச் செலுத்திக் கீழ்ப்படிவதின் மூலம், தம்முடைய திட்டங்களுக்குள் அவன் ஈடுபடத்தக்கதாக, அவனுக்கு தம்முடைய திட்டத்தையும், தம்முடைய நோக்கத்தையும், தம்முடைய ஏற்பாடுகளையும் தெரியப்படுத்துகின்றார்.

இயேசுவும், அப்போஸ்தலர்களும் யூதர்களாய் இருந்தார்கள், மேலும் (இயேசு) தம்முடைய மரணத்தின் மூலமாய், “”விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாக கிறிஸ்து நியாப்பிரமாணத்தின் முடிவாகுவது” வரையிலும் இயேசுவும், அப்போஸ்தலர்களும் நியாயப்பிரமாண உடன்படிக்கையினுடைய கடமைகளுக்குக் கீழாகவே காணப்பட்டனர். இயேசுவினுடைய மரணத்திற்குப் பிற்பாடு, இயேசுவின் பின்னடியார்கள், எந்த விதத்திலும் யூதர்களுடைய பிரமாணத்திற்குக் கட்டுப்பட்டவர்களாய் இருக்கவில்லை. இவர்கள் பத்துக்கட்டளைகளின் மீது விருப்பம் கொண்டிருந்தனர், காரணம் இந்தக் கட்டளைகள், மேலோட்டமாக தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்துகின்றதாக இருக்கின்றது; தேவனுடைய புத்திரர்கள் அனைவரும் தாங்கள் விரும்பி வந்து செய்யத்தக்கதாக, பிதாவின் சித்தத்தை அறிய ஆவலாய் இருந்தனர். ஆனால் தேவன் புத்திரர் வீட்டாரிடம், “”நீ கொலை செய்யாதிருப்பாயாக,” “”நீ களவு செய்யாதிருப்பாயாக” என்று கூறுவதில்லை; ஏனெனில் இவர்கள் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டபடியால், இவர்கள் கொலை செய்வதற்கும், களவு செய்வதற்கும் நிச்சயமாய் விரும்புவதில்லை.

புத்திரர்கள் வீட்டரைக் கையாளும் விஷயத்தில், தேவன் வீட்டாரின் தலை மூலமாக ஒரு புதிய பிரமாணத்தை ஏற்படுத்தியுள்ளார்; இந்தப் புதிய பிரமாணமானது, முன்பு கொடுக்கப்பட்ட மோசேயினுடைய பிரமாணங்கள் தெரிவிக்கும் காரியங்களைக் காட்டிலும் அதிகமானதும், விரிவானதுமான அர்த்தங்களைக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. இது அன்பின் பிரமணாமாகும். அப்போஸ்தலர் கூறினது போன்று, “”அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாய் இருக்கின்றது;” நியாயப்பிரமாணமானது, அன்பு எனும் ஒரு வார்த்தைக்குள் அடங்குகின்றது, அதாவது தேவனுக்காக மேன்மையான அன்பு, மற்றும் நம்முடைய சக மனுஷருக்கான அன்பு. இறுதியில் இயேசு, ‘நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்” (யோவான் 13:34) என்று கூறினார். இதை அவர் ஒருவருக்கொருவர் ஜீவனை ஒப்புக்கொடுத்துக்கொண்டிருக்கும் நமக்காகக் கூறினார்.

ஏழாம் நாள்-முதலாம் நாள்

சுவிசேஷ யுகத்தினுடைய ஆரம்ப காலத்தில், இயேசுவினுடைய பின்னடியார்கள், வாரத்தின் முதலாம் நாளில், கூடுகைக் கூடிக் கொள்ள ஆரம்பித்தார்கள். இந்த ஒரு வழக்கமானது, இயேசு வாரத்தின் முதலாம் நாளில் உயிர்த்தெழுந்ததும் மற்றும் அதே நாளில் அநேகம் தரம் தம்முடைய பின்னடியார்களுக்கு அவர் தோன்றிக் காட்சியளித்ததும் மற்றும் பின்வந்த மறுவாரத்திலும் அவர் வாரத்தினுடைய முதலாம் நாளில் தோன்றி, காட்சியளித்ததுமான உண்மையின் அடிப்படையில்தான் ஆரம்பமானது. ஆகவே, இந்த வாரத்தின் முதலாம் நாளில் சீஷர்கள் தங்களுடைய ஐக்கியங்களைக் கொண்டிருந்தது, சீஷர்கள் மத்தியில் வழக்கமாயிற்று; இந்த வழக்கம் கர்த்தரினால் கட்டளையிடப்பட்டதினால் வராமல், மாறாக ஆண்டவரை நினைவுகூர்ந்து, ஒருவரோடொருவர் ஐக்கியங்கொள்ள வேண்டும் என்ற அவர்களுடைய ஆசையினாலேயே இப்படிச் செய்தார்கள். இப்படியாகவே இவர்கள் கொஞ்சக்காலம் ஓய்வு நாளையும், முதலாம் நாளையும் அநுசரித்து வந்தார்கள். மோசே மற்றும் அவருடைய நியாயப்பிரமாணத்தினுடைய கட்டுப்பாட்டின் கீழிலிருந்து, தாங்கள் எவ்வாறு முழுமையாக, இயேசுவினுடைய தலைமை மற்றும் அவருடைய வழிநடத்துதலின் கீழ் அதாவது, “”கிறிஸ்துவினால் உண்டாக்கப்பட்ட சுயாதீன நிலைமைக்கு” வந்தார்கள் என்பதை உணர்ந்துக்கொள்வதில் இவர்களுக்குச் சிரமம் இருந்தது.

கிறிஸ்தவர்கள் இன்று வாரத்தினுடைய முதலாம் நாளிலுள்ள அனுகூலத்தின் நிமித்தமாக, ஏழாம் நாள் கைக்கொள்வதை விட்டுவிட்டாலும், இந்த மாற்றம் தேவனுடைய அங்கீகரிப்பில் உண்டானது என்று அநேகர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்படியாக இல்லை; கிறிஸ்தவன் நியாயப்பிரமாணத்தின் கீழ்க் காணப்படாமல், கிருபையின் கீழ்க் காணப்படுகின்றான். தேவனுடைய அறிவுரையின்படி இல்லாமல் மாறாக, சிலாக்கியத்தின் அடிப்படையிலேயே, ஆதி கால சீஷர்கள், முதலாம் நாளில் ஒன்று கூடினார்கள். இப்படியாகவே இன்னமும் சிலருடைய விஷயத்தில் காணப்படுகின்றது. பரம பிதாவினுடைய வார்த்தைகளைக் கற்றுக்கொள்வதற்கும், தங்களுடைய இருதயங்களின் ஆராதனைகளையும், வணக்கங்களையும் அவருக்குச் செலுத்துவதற்கும் என்று ஐக்கியங்கொள்வதற்கான அதிகமான வாய்ப்புகள் உண்மை கிறிஸ்தவர்களுக்கு இருப்பதில்லை.

உண்மை கிறிஸ்தவர்கள் தங்களை முழுமையாய், ஜெபத்திலும், ஆராதனையிலும், துதிச் செலுத்துதலிலும், வேதாகம ஆராய்ச்சியிலும், நற்கிரியைகளைச் செய்வதிலும் ஈடுபடுத்திக் கொள்வதற்கு என்று வாரத்தில் ஒருநாள் விசேஷமாய் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டால், சந்தோஷம் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை; இப்படியாக ஒரு ஞாயிற்றுக்கிழமை மனித சட்டத்தினாலோ அல்லது தவாறன கருத்து நிலவும் காரணத்தினாலோ ஒதுக்கிக் கொடுக்கப்பட்டலோ, உண்மைக் கிறிஸ்தவர்கள் சந்தோஷமாய்த்தான் காணப்படுவார்கள். ஒரு வாரத்தில் இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட ஞாயிற்றுக்கிழமைகள் கிடைக்கத்தக்கதாக, கர்த்தருடைய ஜனங்களின் பூமிக்குரிய வேலை காரியங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தாலுங்கூட, கர்த்தருடைய ஜனங்களில் அநேகர் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் ஞாயிற்றுக்கிழமையைச் சரியாக அனுபவிக்க வேண்டுமெனில், பொதுவாய் நிலவும் தவறான கருத்துக்களிலிருந்து, கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்கள் விடுவிக்கப்பட்டாக வேண்டும்.

இளைப்பாறுதலுக்கான ஒய்வு

இஸ்ரயேலர்களுடைய பிரமாணத்தின்படி இரண்டு ஓய்வுகள் காணப்பட்டது. ஒவ்வொரு ஏழாவது வருடமும் ஏழு தடவை பெருக்கப்பட்டு, பின்வரும் ஐம்பதாம் வருடமாகிய யூபிலியின் வருடம் ஓர் ஓய்வாக இருந்தது; ஒவ்வொரு ஏழாம் நாளும், ஏழு தடவை பெருக்கப்பட்டு, பின்வரும் ஐம்பதாம் நாளாகிய பெந்தெகொஸ்தே நாள் மற்றொரு ஓய்வாகும்; இந்தப் பெந்தெகொஸ்தே நாள் என்பது, தேவனுடைய ஜனங்கள் இன்றும் பிரவேசிக்கும் இளைப்பாறுதலுக்கு நிழலாய் இருக்கின்றது.

இந்த இரண்டு ஓய்வுகளையும் எபிரெயர் 4:1-11 வரையிலான வசனங்களில் அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார். ஓய்வுநாளானது, நிஜமான இஸ்ரயேலர்களால் அனுபவிக்கப்பட்ட இருதயத்தின் சமாதானத்திலும், இளைப்பாறுதலிலும் அதன் நிறைவேறுதலை அடைந்தது. அது இவர்களுக்கு [R5405 : page 57] நிரந்தரமான ஓய்வாக இருந்தது. இவர்கள் இளைப்பாறுதலில் பிரவேசித்துள்ளனர். இவர்கள் தங்களுடைய இருதயங்களில் தேவ சமாதானம் ஆளும் கட்டத்தை அடைந்துள்ளனர். இவர்கள் தங்களுடைய சொந்த கிரியைகளிலிருந்தும், அதாவது ஓய்வுநாளையோ (அ) வேறு எதையாகிலும் கைக்கொள்வதாகிய கிரியைகள் மூலமாய் தாங்கள், தங்களுக்காக தேவனிடத்தில் பரிந்துப்பேசலாம் என்பதான அனைத்து நம்பிக்கைகளிலிருந்தும் ஓய்வு அடைந்துள்ளனர். இவர்களுக்குத் தேவையான அனைத்தையும் இயேசுவுக்குள் தேவன் கொடுத்துள்ளார் என்பதையும் இவர்கள், “”அவருக்குள் பூரணமுள்ளவர்களாக” இருக்கின்றார்கள் என்பதையும் இவர்கள் காண்பதினால், இவர்கள் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தவர்களாய் இருக்கின்றார்கள். இந்தச் சமாதானத்தை (அ) இளைப்பாறுதலை எந்த மனுஷனும் இவர்களிடத்திலிருந்து எடுத்தப்போடுகிறதில்லை. இவர்கள் தேவனிலும், கிறிஸ்துவிலுமுள்ள விசுவாசத்தில் நிலைத்திருப்பது வரையிலும் இந்த இளைப்பாறுதல்/சமாதானம் இவர்களுடையதே.

ஆனால் அப்போஸ்தலர், “”தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது” (எபிரெயர் 4:9) என்று சுட்டிக் காண்பிப்பது போன்று எதிர்க்காலத்தில் ஓர் இளைப்பாறுதல் இருக்கின்றது. சபையானது தங்களுடைய உயிர்த்தெழுதலின் மாற்றத்தை அடையும்போது, தங்களுடைய இரட்சகர் போல் ஆக்கப்பட்டு, தங்களுடைய கர்த்தருடைய சந்தோஷங்களுக்குள் பிரவேசிக்கும்போது, அந்த இளைப்பாறுதலுக்குள்ளாகப் பிரவேசிப்பார்கள். அது முழுமையான இளைப்பாறுதலாக இருக்கும். உலகத்தைப் பொறுத்தமட்டில், மாபெரும் மேசியாவின் ஆயிரவருட ஆளுகையானது, உலகத்திற்கான ஓய்வாக இருக்கும்; அக்காலத்தில் எல்லா விதத்திலும் பூரணமடைவதற்குரிய சிலாக்கியத்தை உலகமானது அடைந்து, இப்படியாக தேவனோடு இசைவுக்குள் வருகையில் இளைப்பாறுதலில் பிரவேசிப்பார்கள்.

இயேசு ஓய்வுநாட்களிலேயே தம்முடைய அநேகமான அற்புதங்களைச் செய்தார்; இதற்கான காரணம் மாபெரும் ஓய்வாகிய, ஆயிர வருடமாகிய, பூமியின் சரித்திரத்தினுடைய ஏழாம் நாளானது, அவருடைய இராஜ்யத்திற்கான வேளை என்றும், அக்காலத்தில் பாவம், வியாதி, துக்கம் மற்றும் வலியிலிருந்து ஒட்டுமொத்த மனுக்குலமும் சொஸ்தமாக்கப்பட்டு, ஆதாமினால் இழந்துபோகப்பட்டதும், கல்வாரியில் மீட்கப்பட்டதுமான அனைத்தையும் அடைவதற்கும், மற்றும் மனுஷீக சுபாவத்தில் முழுமையான பூரணம் அடைவதற்கான சிலாக்கியம் மனுக்குலத்திற்குக் கிடைக்கும் என்றுமுள்ள உண்மையை வலியுறுத்துவதற்கேயாகும்.

ஒய்வுநாட்களில் நன்மை செய்வது

இயேசு மாம்சத்தின்படி யூதனாக இருந்தபடியால், யூதப் பிரமாணத்தினுடைய கட்டளைகள் அனைத்திற்கும் உட்பட்டவரானபடியால், அவரால் நியாயப்பிரமாணத்திற்கு எதிராக எதையும் செய்ய முடியாது. அவரால் அதைத் தள்ளியும் வைக்கமுடியாது. அதேசமயம் ஓய்வின் உண்மையான அர்த்தத்தை, அவர் யூதர்களுக்கு விளக்குவதும் சரியாக இருக்காது. இந்த உண்மையான அர்த்தங்கள் அனைத்தும் பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிற்பாடு, ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட பிற்பாடு, பரிசுத்த ஆவியினுடைய வழிகாட்டுதலின் கீழ் வெளிவரும், ஏனெனில் “”ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்” (1 கொரிந்தியர் 2:14). ஆனாலும் இயேசுவினால், இஸ்ரயேலின் ரபிகளினாலும், நியாய சாஸ்திரிகளினாலும், பரிசேயர்களினாலும் போதிக்கப்பட்ட போதனைகள் மூலம் உள்வந்த நியாயப்பிரமாணம் தொடர்பான சில தவறான புரிந்துக்கொள்ளுதல்களைச் சரிச் செய்யவும் முடியும் மற்றும் அப்படியாகவும் செய்தார்.

இவர்கள் நியாயப்பிரமாணத்தினுடைய ஆவியைப் புறக்கணித்தவர்களாக, நியாயப்பிரமாணத்தின் சில விஷயங்களைப் பகட்டிற்காக மிகைப்படுத்தினார்கள். ஆகவேதான் இயேசுவின் சீஷர்கள், வயல் வழியாகப் போய்க்கொண்டிருந்து, சாப்பிடுவதற்கெனக் கதிர்களில் சிலவற்றைக் கொய்து, உமி நீக்க உள்ளங்கைகளுக்கு இடையே தேய்த்த போது, இவர்கள் ஓய்வுநாளை மீறினார்கள் என்றும், அதாவது கதிரடித்து, புடைத்துவிட்டார்கள் என்றும் பரிசேயர்கள் குற்றம்சாட்டினார்கள். இது நியாயப்பிரமாணத்தினுடைய நோக்கமல்ல என்று இயேசு காண்பித்துக்கொடுத்தார். அவசியமான (அ) நல்ல கிரியைகளைத் தடைப்பண்ணுவதற்காக இ;ல்லாமல், மாறாக ஜனங்களுடைய நன்மைக்காகவே ஓய்வுநாள் உண்டாக்கப்பட்டது. நியாயசாஸ்திரிகளைப் பொறுத்தமட்டில் ஓய்வுநாளில், கடிக்கும் கொசுவை விரட்டுவது கூடப் பாவமாக இருந்தது, [R5406 : page 57] ஏனெனில் அப்படிச்செய்வது அவர்களைப் பொறுத்தமட்டில் “”வேட்டையாடுவதற்கு” சமமாய் இருந்தது. இப்படியாக பல்வேறு விதங்களில், இவர்கள் தேவனுடைய நியாயமான பிரமாணத்தை ஜனங்களுக்கு நியாயமற்றதாக ஆக்கினார்கள்; மேலும் அற்ப விஷயங்களில் கவனமாய் இருந்த இவர்கள், நீதி, அன்பு மற்றும் இரக்கம் தொடர்புடைய நியாயப்பிரமாணத்தினுடைய முக்கியமான காரியங்களைப் புறக்கணித்தார்கள்.

ஓய்வுநாளின் போது, அவர் சொஸ்தப்படுத்தின இரண்டு சம்பவங்களை இப்பாடத்தில் நமக்கு முன்பாகப் பெற்றிருக்கின்றோம். பதினெட்டு வருஷமாய் நிமிரக்கூடாத கூனியாக ஒரு ஸ்திரீ காணப்பட்டார். இயேசு அவளை ஓய்வுநாளன்று விடுவித்தார். அவள்மேல் அவர் கைவைத்து, “”உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய்” என்றார்; அவள் நிமிர்ந்து நின்று, தேவனை மகிமைப்படுத்தினாள். ஜெப ஆலயத்தலைவனோ, கோபமடைந்து, ஜனங்களை நோக்கி, “”வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்” (லூக்கா 13:14).

இயேசு ஓய்வுநாளின் விஷயத்தில் இருக்க வேண்டிய அளவுக்குப் பரிசுத்தமாயும், கவனமாயும் இருக்கவில்லை, மாறாக அவர் நியாயப்பிரமாணத்தை மீறுகின்றவராக இருக்கின்றார் என்பதைச் சுட்டிக்காண்பிக்கும் வண்ணமாக அவரை விசேஷமாய்க் கடிந்துக்கொள்ளும் விதத்தில் லூக்கா 13:14-ஆம் வசனத்தின் வார்த்தைகள் பேசப்பட்டது; “”கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா? இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார். அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்” (லூக்கா 13:15,16,17).

இன்னொரு தருணத்தில், ஒரு மனுஷன் நீர்க்கோவை வியாதியுடையவனாக இருந்தான். இந்தச் சம்பவத்தில், இயேசு பரிசேயர்கள் மற்றும் நியாயசாஸ்திரிகளின் மனப்பான்மையை அறிந்தவராக, சொஸ்தப்படுத்துவதற்கு முன்பாக, இக்காரியத்தைக்குறித்து விவாதிக்கும் வண்ணமாக, லூக்கா 14:3-6 வரையிலான வசனங்களின் காரியங்கள் நடைப்பெற்றது; “”இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வுநாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு, அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார். அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.”

ஓய்வு, அதாவது தேவன் தம்முடைய ஜனங்களுக்கு ஏற்படுத்தியுள்ள இளைப்பாறுதலைப் பற்றிச் சரியாய்ப் புரிந்துக்கொள்வது என்பது மாபெரும் ஆசீர்வாதமாகும். விசுவாசிக்கிற நாம் இளைப்பாறுதலுக்குள், நிலையான நிரந்தரமான ஓய்வுக்குள் பிரவேசிப்போம். இப்படிப்பட்டவர்கள் அனைவரும், ஆராதிப்பதற்கும், துதிப்பதற்கும் படிப்பதற்கும், ஐக்கியம் கொள்வதற்குமெனக் கர்த்தருடைய நாமத்தில் ஒன்றுகூடுவதற்கான விசேஷித்த வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியாய் இருப்பார்கள். நாளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ‘சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம் நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்” (எபிரெயர் 10:25) என்ற வார்த்தைகள் மூலம் அப்போஸ்தலர் நமக்குக் கூறுவதைச் செய்வோமாக.