R2625 – இரண்டு விதமான பாவிகள்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R2625 (page 138)

இரண்டு விதமான பாவிகள்

TWO TYPES OF SINNERS

லூக்கா 7:36-50

“”உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” (வசனம் 50)

சீமோன் என்னும் பெயரானது, யூதர்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் பெயராகும். ஆகவே, இரண்டு சீமோன்கள் காணப்பட்டார்கள் என்பதிலும், அவர்கள் இருவரின் வீட்டிலும், இயேசு உபசரிக்கப்பட்டார் என்பதிலும் கவனத்தை ஈர்க்கத்தக்கதாக எதுவுமில்லை. எனினும், அந்த இரண்டு உபசரிப்புகளிலும் அநேக அம்சங்கள் ஒற்றுமையாய்க் காணப்படுவது கொஞ்சம் விநோதமாகவே இருக்கின்றது. அதாவது, இரண்டு சம்பவங்களின் போதும், நமது கர்த்தருடைய பாதங்கள் அபிஷேகிக்கப்படுகின்றது (மத்தேயு 26:6-13 வரையிலான வசனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கவும்). இந்த இரண்டு சம்பவங்களுக்குமிடையே சுமார் ஒன்றரை வருடம் இடைவெளி இருக்கும் என அனுமானிக்கப்படுகின்றது. மத்தேயுவால் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவமானது நமது கர்த்தருடைய மரணத்திற்குச் சற்று முன்பு நடந்ததாகும்.

இந்தப் பாடத்தில் நாம் பரிசேயனாகிய சீமோனைப் பார்க்கின்றோம். இவர் நமது கர்த்தருடைய குணலட்சணங்களினாலும், போதனைகளினாலும் கவரப்பட்டவராக, பெரும்பாலான ஜனங்களைக் காட்டிலும் கர்த்தரிடத்தில் ஈர்ப்புக் கொண்டவராக இருந்தார் என்பது நிச்சயமே. இயேசுவைப் போஜனம் பண்ண அழைப்பதும், இவ்வாறாக அவரைக் கனப்படுத்துவதும் நலமானது எனச் சீமோன் எண்ணினார்; மற்றும் இப்படியாகப் பிரபலமான நசரேயனுடன் தனக்குத் தொடர்பு இருக்கின்றது என்பதின் மூலம், தனக்கும் கொஞ்சம் பிரபலம் கிடைக்கும் என்றும் சீமோன் எண்ணியிருக்கக்கூடும்.

நமது கர்த்தர் அழைப்பை ஏற்றுக்கொண்டு, போஜனம் பண்ண வந்தபோது, சீமோன் அவரை அன்புடனும், மரியாதையுடனும் நடத்தினார். ஆனாலும், அவரை உபசரிப்பதில் உச்சக்கட்டமான/அதிகப்படியான மரியாதை எதையும் செய்யும்படி சீமோன் நடந்து கொள்ளவில்லை. [R2626 : page 138] இயேசு விசேஷமான வரவேற்பு உபசரிப்புகளுக்குப் பழக்கப்பட்டவர் அல்ல எனவும், மாறாக இயேசு பொதுவாக மீன்பிடிக்கின்றவர்கள் மற்றும் பொது ஜனங்களின் நண்பராக காணப்படுகின்றார் எனவும் இயேசுவைக் குறித்துச் சீமோன் அநேகமாக எண்ணியிருந்திருக்கக்கூடும். ஆகவே, கனம் வாய்ந்த விருந்தினர்கள் வரும்போது, அவர்களுக்குச் செய்வது போன்று, இயேசு வந்தபோது, சீமோன் அவரை முத்தம் செய்யவில்லை. ஏனெனில், அப்படி இயேசுவை முத்தம் செய்வது, ஒரு சாதாரண நபரை மிக அதிகமாய்க் கனப்படுத்துவது போன்று, அவரை முழுமையாய் ஏற்றுக்கொள்வதற்கு இன்னமும் ஆயத்தமில்லலாமல் காணப்பட்ட பரிசேயனாகிய சீமோனுக்குத் தோன்றினது. இன்னுமாக, அக்காலத்தில் சிறப்பாக உபசரிப்பவர்களின் பழக்கத்தின்படி, இயேசு வந்தபோது, அவருடைய பாதரட்சைகளைக் கழற்றுவதற்கும், அவருடைய பாதங்களைக் கழுவுவதற்குமென, சீமோன் தன்னுடைய வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடவில்லை. சீமோன் பின்வருமாறு தனக்குள்ளே சொல்லியிருக்கக்கூடும், “”இந்த மனுஷனும் அவருடைய சீஷர்களும் இப்படியான உபசரிப்புகளுக்குப் பழக்கப்பட்டவர்களல்ல மற்றும் என்னுடைய வேலைக்காரர்களும் கூட, தங்களுக்கு இந்தச் சீஷர்கள் சமமானவர்களல்ல என்றும் போதகர்தான் கொஞ்சமாகிலும் சரிசமமான மரியாதையில் காணப்படுகின்றார் என்றும் உணர்ந்துக்கொள்வார்கள்.” ஆகவே, மிகுந்த மரியாதையான, வரவேற்ப்பு உபசரிப்பைக் கர்த்தருக்குக் கொடுக்கவில்லை. ஆயினும், பரிசேயன் கர்த்தரை உள்ளன்போடு, தனது மேஜைக்கு வரவேற்றான். இப்படியாக, உள்ளன்போடு கர்த்தரைத் தனது மேஜைக்கு அழைத்த காரியமானது, தான் கர்த்தரைக் கனப்படுத்துகின்றதாக இருக்கின்றது எனச் சீமோன் எண்ணியிருந்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய ஒரு விருந்தாளியை உபசரிக்கும் சிலாக்கியத்தில் தனக்குத்தான் கனம் உள்ளது என்பதைப் போதுமானளவுக்கு சீமோன் உணராதவராகக் காணப்பட்டார். உயிர்த்தெழுதலின் காலங்களில் (ஆயிரம் வருஷம் யுகத்தின்போது) சீமோனுடைய விருந்தாளியாக வந்திருந்தவர், “”தேவனுடைய ஒரே பேறான குமாரனும், கிருபையும், சத்தியமும் நிறைந்தவருமானவர்” எனச் சீமோன் அறிகையில், அவர் நடந்துகொண்ட விதத்தைக்குறித்து அவருக்கு (சீமோனுக்கு) எப்படி இருக்கும்?””

அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் தேவதூதரையும் (தேவனுடைய செய்தியாளர்களையும்) உபசரித்ததுண்டு” என்று அப்போஸ்தலர் நமக்கு வலியுறுத்துகின்றார். இப்படிப்பட்டதான காரியங்களில், கர்த்தருடைய ஜனங்கள் தாராளமுள்ளவர்களாக இருக்க வேண்டும் எனக் கர்த்தர் விரும்புகின்றார் (ஆனால் வீண்பெருமைக்காக, வீண் செலவாளிகளாக இருக்கக்கூடாது); ஆகவேதான், “”வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு. அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு” என்று எழுதப்பட்டுள்ளது (நீதி. 11:24). விழுகையினிமித்தம் நாம் சுதந்தரித்துள்ள இழிவான நம்முடைய சுயநலத்தைக்குறித்தும், படிப்படியாகக் கர்த்தருடைய வார்த்தைகளினுடைய போதனையின் மூலம் சுயநலத்தை மேற்கொண்டு, அதிகம் தாராளமுள்ளவர்களாகுவது, அதாவது பரலோகத்திலுள்ள நமது பிதாவைப் போன்று தாராளமுள்ளவர்களாகுவது குறித்தும் இப்பாடத்தில், ஒரு பகுதியாக நாம் பார்க்கப்போகின்றோம்.

கர்த்தரை உண்மையில் அடையாளப்படுத்துகிறவர்களாகிய “”சகோதரரிடத்தில்” நாம் விசேஷித்த விதமாகத் தாராளமுள்ளவர்களாகவும், விருந்தோம்பல் பண்ணி உபசரிக்கின்றவர்களாகவும் இருப்போமாக. இவர்களை, “”தேவனுடைய ஸ்தானாதிபதிகளாக” மாத்திரமல்லாமல், “”கிறிஸ்துவின் சரீரத்தினுடைய அங்கங்களாகவும்” கருதி, உபசரித்து, இவர்களிடத்தில் தாராளமுள்ளவர்களாகக் காணப்படுவோமாக.

“”ஊரில் உள்ள ஸ்திரீ” எனக் குறிப்பிடப்படும் இவள் சாமான்ய ஸ்திரீயாகவும், அவ்வூரார் அல்லாத இயேசுவுக்கும், சீஷர்களுக்கும் இவளைக்குறித்துத் தெரியவில்லை என்றாலும், இவள் அவ்வூரின் ஜனங்களுக்கு நன்கு அறிமுகமானவளே. இந்த ஸ்திரீயினுடைய கடந்த கால ஜீவியம் எப்படிப்பட்டதாக இருப்பினும், இவளுடைய இருதயமானது பாவத்தைக்குறித்த ஆழமான மனவருந்துதலுக்குள் கடந்து சென்றுள்ளது; மற்றும் நல்ல ஓர் ஜீவியத்தை ஜீவிக்கவும் இவளுக்குள் விருப்பம் ஏற்பட்டுள்ளது. மாபெரும் போதகராகிய இயேசுவைக்குறித்தும், விழுந்துபோனவர்களை உற்சாகப்படுத்துவதற்கும், விழுந்துபோனவர்கள் மீண்டும் எழும்புவதற்கென உதவுவதற்கும், விழுந்துபோனவர்களுடன் பேசுவதற்கும் இயேசு பரிசேயர்கள் போன்று அலட்சியப்படுத்தாமல், வெறுத்து ஒதுக்காமல் காணப்படுகின்றார் என்பது குறித்தும் இவள் கேள்விப்பட்டாள். மன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்காக ஜெபத்துடன் கர்த்தரிடம் செல்ல வேண்டும் என்றும், ஒரு புதிய ஜீவியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும், பிற்பாடு ஓர் உறுதியான ஜீவியத்தை ஜீவிக்க வேண்டும் என்றும் எண்ணினாள். எப்படி இதைச் செய்ய வேண்டும் என்பது அவளுக்குத் தெரியவில்லை; தன்னைக் குறித்து அவரிடம் என்ன சொல்லவேண்டும் என்பதும் அவளுக்கு தெரியவில்லை; தன்னுடைய கரங்களில் சிறு காணிக்கையை மாத்திரம் எடுத்துச்செல்லலாம் என எண்ணினாள் மற்றும் அக்காலத்தின் வழக்கப்படி, அவர் படுத்த நிலையில் ஒரு பக்கமாக சாய்ந்து பந்தியிருக்கையில், அவருடைய பாதத்தைத் தன்னால் சுலபமாக அணுகமுடியும் என்பதினால், தான் கொண்டுவரும் தைலத்தினால் அவருடைய பாதங்களை அபிஷேகம் பண்ணலாம் என எண்ணினாள். அவள் எதுவும் பேசவில்லை. ஆனால், அவளுடைய இருதயம் வார்த்தைகளினால் நிரம்பியிருந்தது, ஆண்டவரின் பாதங்கள் அருகே வந்தாள், அவளுடைய கண்ணீர் அவர் பாதங்கள் மீது விழுந்தன. பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்கும், ஒப்புரவாகுவதற்குமான அவளது இருதயத்தின் உண்மையான ஏக்கங்களை அவள் தனது வார்த்தைகளினால் வெளிப்படுத்துவதைக் காட்டிலும், அவள் தனது கண்ணீர் மூலம் ஆண்டவருக்கு விளக்கினாள்.

நாம் பாவ மன்னிப்பிற்காக உள்ளம் நொந்து அவருடைய பாதத்தண்டையில் வருகையில், கர்த்தருடைய ஏற்பாடுகள் எவ்வளவு இரக்கத்துடனும், நமது தேவைகள் மீது எவ்வளவு கரிசனையுடனும் காணப்படுகின்றது. அதாவது, வேறொருவர் மூலம் நாம் அவரை அணுக வேண்டியதில்லை, அதேசமயம் சில குறிப்பிட்ட வார்த்தைகள் மூலம் நமது விண்ணப்பத்தை முறைப்படுத்திக் கூற வேண்டியதுமில்லை. அவரால் நம்முடைய இருதயங்களை வாசித்து அறியமுடியம், அவர் நமது கண்ணீர்களை ஏற்றுக்கொள்கின்றார். இன்னுமாக, அவருடைய சரீரத்தின் அங்கங்களுக்கு நாம் ஊழியம் புரிவதற்கும், நம்மைத் திருத்தம் செய்துகொள்வதற்கும் நாம் ஏறெடுக்கும் எளிமையான பிரயாசங்களைக்கூட அவர் ஏற்றுக்கொள்கின்றார். மன்னிக்கப்பட்டது குறித்த செய்தியை அவர் நமக்குத் தாமதமாகக் கூடக் கொடுக்கலாம், அதுவும் விசுவாசம் மற்றும் பாவத்திற்கான வருத்தத்தின் வேர்கள் நம்முடைய இருதயங்களில் ஆழமாக ஊடுருவதற்கேயாகும்.

இயேசு கொஞ்சம் நேரம் அவளுக்குச் செவிசாய்க்காமல் இருந்தார், மற்றும் அவளுக்குள், தான் செய்கிற காரியத்திற்கான நோக்கமும், ஜெபங்களும் அவரால் சரியாகப் புரிந்துக்கொள்ள முடிகின்றதா அல்லது இல்லையா என்ற கேள்விகள் எழும்பியிருந்திருக்க வேண்டும். ஆனால், அவளுடைய இருதயத்தில் நிறைந்திருந்த கண்ணீர், இன்னும் அதிகமாக அவள் கண்களிலிருந்து சொரிந்தது மற்றும் அவருடைய பாதங்களை அவள் மென்மையாகத் துடைத்து, அவர் பாதங்களைத் தைலத்தினால் அபிஷேகித்தாள். இதற்கிடையில் பரிசேயன் தனக்குள்ளாக, பின்வருமாறு கூறிக்கொண்டான்… “”இன்று நான் இயேசுவை போஜனம் பண்ணும்படி அழைத்தது நல்லதாகிவிட்டது. மேலும், இந்த ஸ்திரீயும் இங்கு வந்ததும் நல்லதுதான்; இச்சூழ்நிலையானது இயேசுவைச் சுற்றியிருப்பவர்களுடைய இருதயத்தை இயேசுவால் வாசித்தறிய முடிவதற்கான வல்லமை தொடர்பான நிரூபணத்தை வெளிப்படுத்த ஏதுவாயிற்று. ஒருவேளை இயேசு தீர்க்கத்தரிசியாக இருப்பாரானால், ஒருவேளை தேவனுடைய வல்லமை விசேஷித்தவிதத்தில் இவரிடத்தில் இருக்குமாயின், ஒருவேளை இவர் தேவனால் வெளிச்சமூட்டப்பட்டவராக இருப்பாரானால், இவருக்கு இந்த ஸ்திரீயின் குணநலம் தெரிந்திருக்கும். ஆனால், ஒரு வேளை இவளது குணம் பற்றி இயேசுவுக்குத் தெரியாமல், தம்முடைய பாதங்களை அபிஷேகிக்கும்படி இவளை அனுமதித்துக் கொண்டிருப்பாரானால், இது இவர் தீர்க்கத்தரிசி இல்லை என்பதை நிரூபித்துவிடும் என்பதேயாகும்.”

ஆனால், இயேசுவோ என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை முழுமையாக அறிந்தும், தமது பாதம் அருகே காணப்படும் பாவப்பட்ட அந்த ஸ்திரீயினுடைய இருதயம் பற்றியும், தம்மை உபசரித்த சுயத்தில் திருப்திகொள்ளும் பரிசேயனுடைய இருதயம் பற்றியும் தெளிவாக அறிந்தவராக, இருவருக்கும் நன்மை செய்வதற்கான ஒரு வழியைத் திட்டம் பண்ணினார். அதாவது, அனைவருக்கும் முன்பாக ஒரு மாபெரும் சத்தியத்தை முன்வைப்பதற்கான ஒரு வழியைத் திட்டம் பண்ணினார். ஆகவே, அவர் சீமோனுக்கு ஓர் உவமையைச் சொன்னார், அதாவது, ஒரு மனுஷனுக்கு இரண்டு கடனாளிகள் இருந்தார்கள் என்றும், ஒருவன் அதிக தொகைக்குக் கடனாளியாக இருந்தான் என்றும், மற்றொருவன் சிறு தொகைக்குக் கடனாளியாக இருந்தான் என்றும், அவர்கள் இருவராலும் கடனைக் கொடுத்துத் தீர்க்க நிர்வாகமில்லாதபோது அந்த மனுஷன், அவர்கள் இருவரின் கடனையும் மனப்பூர்வமாகவும், உடனடியாகவும் மன்னித்து விட்டார் என்றுமுள்ள உவமையைச் சொன்னார். பின்னர், இப்படியாக மன்னித்து விடப்பட்டவர்களில், எவன் கடன் கொடுத்த மனுஷனுடைய தயவை அதிகம் பெற்றவனாய் இருப்பான் என்ற கேள்வியைக் [R2626 : page 139] கேட்டதின் மூலம் இந்தச் சிறு உவமையினுடைய பாடத்தைக் கர்த்தர் சுட்டிக்காட்டுகின்றார். உவமையின் சாரத்தை அதுவரையிலும் கிரகித்துக்கொள்ளாத நிலையில் காணப்பட்ட சீமோனோ, உடனடியாக எவனுக்கு அதிகமாய் மன்னிக்கப்பட்டதோ, அவனே அம்மனுஷனுடைய தயவை அதிகமாய்ப் பெற்றவனாய் இருப்பான் என்று பதில் கூறினார். மேலும், சீமோனுடைய பதில் சரியானது எனவும் கர்த்தர் ஒத்துக்கொண்டார். பின்னர், சீமோன் கர்த்தரைப் போஜனம் பண்ணும்படி அழைத்ததின் மூலம் சீமோன் அன்பாயிருந்தாலும், மற்றும் சீமோனுடைய உபசரிப்புகளைக் கர்த்தர் ஏற்றுக்கொண்டாலும் கூட, இந்த ஸ்திரீயினுடைய அதிகப்படியான உபசரிப்பும், அவள் வெளிப்படுத்தின அதிகமான மரியாதையும் காட்டுவது என்னவெனில், சீமோனும், ஸ்திரீயும் கர்த்தரை அன்பு செய்தபோதிலும், ஸ்திரீயே அதிகமாய் அன்பு செய்தாள் என்ற விஷயத்தைச் சீமோனுக்குக் கர்த்தர் சுட்டிக்காண்பித்தார். அதாவது, பாவத்தைக் குறித்த அதிகமான உணர்ந்துக்கொள்ளுதலும், பாவத்தினின்று விடுபட வேண்டும் என்ற அதிகமான விருப்பமும், அதிகமான அன்பை உருவாக்குகின்றது என்பதே வெளிப்படுத்தப்பட்ட கருத்தாகும்.

ஒரு கோணத்தில் பார்க்கும்போது, நாம் அனைவரும் பாவிகளே, தேவ மகிமையற்றவர்களே, மற்றும் பாவ மன்னிப்பு அடைவதற்கான வாய்ப்பும் இல்லாமலும் இருந்தவர்களே; எனினும், பரிசேயன் யூதருடைய நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ்க் காணப்பட்டதினால், பரிசேயன் ஏற்கெனவே நிழலான நீதிமானாக்கப்பட்ட ஸ்தானத்தில் காணப்படுவதினாலும் மற்றும், இந்த ஸ்தானத்தை/நிலையைக் கடுமையாக நியாயப்பிரமாணத்தின்படி வாழ முற்படுவதின் மூலம் தக்கவைத்துக்கொள்ள நாடுவதினால், அந்த ஸ்திரீக்கு முற்றிலும் வேறான நிலையில் காணப்பட்டார். இன்னொரு பக்கத்தில், அந்த ஸ்திரீ அதே உடன்படிக்கையின் கீழ் இருந்தாலும், நியாயப்பிரமாணத்தை வெளிப்படையாக மீறினதினிமித்தம், ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ள ஜீவியத்தை ஜீவிப்பதினால், அவள் தேசத்தின் நிழலான நீதிமானாக்கப்படுதல் காரியத்தின் மீதான பற்றை இழந்துவிட்டபடியால், இவள் மிகுந்த பாவியாகக் காணப்படுகின்றாள். சீமோன் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள முயற்சித்தாலும், தன்னால் அதனை பூரணமாய்க் கைக்கொள்ள முடியவில்லை என்பதையும், அவ்வப்போது பல்வேறு விதங்களில் மீறியுள்ளதையும் சீமோன் நன்கு அறிந்திருந்தான். எனினும், ஸ்திரீயைப்போன்று சீமோன் துணிகரமாக நியாயப்பிரமாணத்தை மீறவில்லை. ஆகவே, இப்படியான கண்ணோட்டத்தில் பார்க்கையில் மிகுந்த பாவத்திற்கும், குறைவான பாவத்திற்குமிடையே மிகுந்த வித்தியாசம் உள்ளது. எனினும், இருவருக்குமே இரட்சகர் தேவையே. நியாயப்பிரமாண உடன்படிக்கையானது, தனக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க முடியாது என்ற உண்மையை ஒருவேளை பரிசேயன் உணர்ந்திருப்பானானால், அந்த ஸ்திரீ போன்று தனக்கும், இரட்சகர் தேவை என உணர்ந்திருப்பான். பரிசேயன் நித்திய ஜீவனை அடைய வேண்டுமெனில், அவன் தனது பாவத்தை ஒத்துக்கொள்ள வேண்டும், மற்றும் தன்னுடைய அழைப்பிற்கு இணங்கி, தன்னுடைய விருந்தாளியாக இருப்பதற்குரிய கனத்தை தனக்குத் தந்த இரட்சகரின் ஈவாக பாவ மன்னிப்பையும், பாவம் மற்றும் அதன் தண்டனையாகிய மரணத்தினின்றுமுள்ள இரட்சிப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பின்னர் இயேசு ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, “”உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்று அவளிடத்தில் கூறினார். இந்த வார்த்தைகள் அவளுக்கு எப்படியாக இருந்திக்கும். அவளுடைய ஜெபம் கேட்கப்பட்டது; அதாவது, அவளுடைய இருதயத்திற்குள் எழும்பினதும், அவளது கண்ணீர்கள் மூலமும், பரிமளத்தைலம் மூலமும் வெளிப்பட்டதுமான அவளுடைய ஜெபம் கேட்கப்பட்டது; அவள் மன்னிக்கப்பட்டாள்; மற்றும் அவளுடைய கடந்த காலத்தின் பாவங்கள் அனைத்தும் என்றென்றும் அகற்றப்பட்டது பற்றி எத்துணை நன்றி உணர்வை அவள் அடைந்திருப்பாள்! எனினும் சீமோன் கர்த்தரிடத்திற்கு வந்து, “”ஆண்டவரே நானும் பாவிதான்; இன்னுமாக இந்த ஸ்திரீயைக் காட்டிலும் நான் உம்மைக் குறைவாக அன்புகூர்ந்தவனாக இருப்பினும், எனக்கு மன்னிப்பு தேவை; நான் உம்முடைய பின்னடியார்களில் ஒருவனாகக் கருதப்படத்தக்கதாக, என்னுடைய பாவங்களை மன்னிக்கும்படி நான் உம்மிடம் வேண்டிக்கொள்கின்றேன்” என்று சொல்லும் நிலையில் நாம் அறிந்திருக்கின்றவரை வரவில்லை. பெயரளவிலான சபையார் மத்தியில் சீமோன், கடவுள் பற்றுள்ளவர் என்ற ஸ்தானத்தை வகிக்கும் காரியமும், இவர் தன்னைப் பரிசுத்தமுள்ளவர் என அறிக்கை பண்ணியுள்ள காரியமும், இவர் தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொள்வதற்கும், பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் தடையாக நின்றது. இது இன்றும் உண்மையாகவே காணப்படுகின்றது. கவனமற்ற ஓர் ஜீவியத்தை ஜீவித்து, தங்களுடைய கவலைக்கிடமான நிலைமையைக்குறித்த உணர்விற்கு விழித்து, பாவத்தைக்குறித்த மிகுந்த வேதனையுடனும், உண்மையுடனும் கர்த்தரிடத்தில் வந்து, மிகுந்த விசுவாசத்தை வைத்து, அவர் மேல் மிகுதியான அன்பைக் கொண்டிருக்கும் சிலரைக் காட்டிலும், நல்ல ஒழுக்கமுள்ள ஜீவியத்தை ஜீவிக்கின்றவர்களும், நீதியின் பாதைகளில் நடப்பதற்கு நாடுகின்றவர்களுமாகிய ஜனங்களோ கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமான மன்னிப்பை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லாமலே காணப்படுகின்றனர்.

சீமோன் இப்படியாக மன்னிப்புக் கேட்பதற்கும், இயேசுவின் பின்னடியார்கள் ஆகுவதற்கும் தவறினபடியால், அவர் நரகத்திற்குத் தள்ளப்பட்டார் என்ற எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக, (மனிதருடைய தவறான பாரம்பரியத்தினாலும், தவறான அபிப்பிராயத்தினாலும், குருடான நிலையில் காணப்பட்ட) அவருடைய ஜனங்கள் கடந்துபோன வழியையே, பின்தொடர்ந்து போனவராகச் சீமோன் காணப்பட்டார். இஸ்ரயேலர்கள் இயேசுவைப் புறக்கணித்ததினிமித்தம், கிறிஸ்துவின் இராஜ்யத்தில் உடன் சுதந்திரராகும் சிலாக்கியத்தை இழந்து போனார்கள்; மற்றும் அவர்கள் தேசமாக ஆயிரம் வருஷம் யுகத்தின் ஆரம்பம் வரையிலும் தேவனுடைய தயவினின்று புறக்கணிக்கப்பட்டுப் போனார்கள். பின்னர், அப்போஸ்தலர் தெரிவிக்கின்ற பிரகாரம் அவர்களுடைய குருட்டுத்தன்மை மாற்றிப்போடப்படும். இன்னுமாக, சத்தியம் பற்றின அதிகம் தெளிவான அறிவினால் அவர்கள் அப்பொழுது ஆசீர்வதிக்கப்படுவார்கள். “”நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும், விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்” (சகரியா 12:10). அப்பொழுது இஸ்ரயேலர்கள் தைலம் வைத்திருந்த ஸ்திரீ அழுதது போன்று கண்ணீர் சிந்தும்போது/அழும்போது, தேவன் மகிமையடைந்த கிறிஸ்து மூலம் அவர்கள் மீது இரக்கங்கொண்டு, அவர்களுக்கான பாவங்களை மன்னிப்பார் (ரோமர் 11:25-32). அப்போது நித்திய ஜீவனுக்கான அவர்களுடைய பரிட்சை ஆரம்பிக்கும்.

[R2627 : page 139]

அந்த ஸ்திரீயினுடைய பாவங்கள் அவளுக்கு மன்னிக்கப்பட்டது என்று நமது கர்த்தர் கூறின வார்த்தைகளினிமித்தம், பந்தியில் போஜனம் பண்ணுவதற்குக் கூடவே இருந்த மற்ற விருந்தாளிகள் அதிர்ச்சியடைந்தனர். இவ்வார்த்தைகளைப் பேசினவராகிய இயேசு, மேசியா என்றும், தேவனுடைய குமாரன் என்றும் அறியாமல், இத்தகைய வார்த்தைகளுக்கான அவருடைய அதிகாரத்தைக் குறித்துக் கேள்வி எழுப்பினார்கள். இப்படியான வார்த்தைகள் பயன்படுத்துவது என்பது, தாம் மேசியா என்ற உண்மையினிடத்திற்கும், எதிர்க்காலத்திலும் பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரம் தம்முடைய கரங்களில் இருக்கின்றது என்ற உண்மையினிடத்திற்கும் கவனத்தை ஈர்ப்பதற்கென அவர் கையாளும் பகடற்ற முறைகளில் ஒன்றாகும்.

பின்னர் ஸ்திரீயை நோக்கி, “”உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ” என்றார். அவள் மன்னிப்புப் பெற்றுக்கொள்வதற்கான காரணம் அவளுடைய கண்ணீர்களால் இல்லை என அவள் அறிந்துக்கொள்ள விரும்பினார். அவள் பயன்படுத்தின தைலத்தின் மதிப்பானது, அவளை மன்னிப்பதற்கு, அவரை ஏவவில்லை என்பதை அவள் அறிய வேண்டும் என விரும்பினார். மாறாக, அவளுடைய விசுவாசமே அவருடைய பார்வையில் பிரியமாய்க் காணப்பட்டது என்றும், அவளது விசுவாசத்தின் காரணமாகவே அவளுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றும் அவள் அறிய வேண்டும் என விரும்பினார். அவள், தனது சொந்த பாவ நிலைமையை உணர்ந்துக்கொண்டதோடு கூட, தன்னுடைய பாவங்களை மன்னிப்பதற்கும், தன்னைச் சீர்ப்பொருந்த பண்ணுவதற்கும் இந்த மாபெரும் போதகரிடம் வல்லமை இருக்கின்றதையும் உணர்ந்துக் கொண்டாள். அவள் விசுவாசித்தாள், அதன்படி நடந்தும் கொண்டாள். மேலும், அவள் அடைந்துள்ள பலனானது, இந்த விசுவாசத்தைச் செயல்படுத்தின காரணத்தினாலேயே என அவள் உணர்ந்துக்கொள்ள நமது கர்த்தர் விரும்பினார். இப்படியே கர்த்தருடைய சகல தயவுகள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும், அவருடைய ஜனங்கள் ஒவ்வொருவரின் விஷயத்திலும் காணப்படும். நாமும் பாவத்திற்காக மனம் நொந்து, கண்ணீரோடு கர்த்தரிடத்தில் வரும்போது, நமது கண்ணீர்கள் எதையும் வெல்வதில்லை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். ஒருவேளை நாம் அவருக்கு அன்பளிப்புகளைக் கொடுப்போமாகில், அந்த அன்பளிப்புகள் எதையும் வெல்வதில்லை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். நாம் நமது விசுவாசத்தைக் கர்த்தரிடத்தில் கொண்டு வரும்போது அதாவது, பாவங்களை மன்னிப்பதற்கும், சகல அநீதிகளிலிருந்து நம்மைச் சுத்தகரிப்பதற்கான வல்லமை உடையவர் இயேசு என நாம் விசுவாசித்தாலொழிய கண்ணீர்களும், அன்பளிப்புகளும் நமக்கு உபயோகமாகுவதில்லை. இப்படியான விசுவாசம் கிறிஸ்தவனுடைய பாதையின் ஆரம்பத்தில் மாத்திரமல்லாமல், பாதையின் பிரயாணம் முழுவதும் அவசியமாய் இருக்கின்றது. நாம் விசுவாசத்தில் தொடரவில்லை என்றால் நம்மால் (ஓட்டத்தில்) முன்னேற முடியாது. கர்த்தருடைய சீஷர்களாக இருக்கும் அனைவரையும், அவர்களது கிறிஸ்தவப் பாதை மற்றும் அனுபவங்களுடைய ஆரம்பம் முதல் முடிவுவரைக் கர்த்தர் கையாளும் முறையானது, “”உன் விசுவாசத்தின்படியே உனக்கு ஆகக்கடவது” என்பதேயாகும்.

கர்த்தர் மீதான விசுவாசத்தில் காணப்படுவதே, நம்முடைய பாடத்தின் மையாமாகும். அவர் நம்மைக் கவனிக்காதது போல தோன்றும்போதும், விசுவாசம் வைக்கவேண்டும். நம்முடைய ஆவிக்குரிய காரியங்களும், பூமிக்குரிய காரியங்களும் செழித்து ஓங்கிக் காணப்படும்போதும் அவரிடத்தில் விசுவாசம் வைக்க வேண்டும். ஜீவியத்தில் சகல காரியங்களும் நமக்கு எதிராக காணப்படும்போதும், செழிப்பாய் இருந்த காலங்களில் நம்மிடம் காணப்பட்ட அதே விசுவாசம் [R2627 : page 140] காணப்பட வேண்டும். விசுவாசமே உலகத்தை ஜெயிக்கின்ற ஜெயமாக இருக்கின்றது. மேலும், இந்த விசுவாசமானது அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவருடைய தயவு மற்றும் உண்மையின் மீதான முழுமையான நம்பிக்கையினால் கர்த்தரை ஏறெடுத்துப் பார்க்கும், மற்றும் அவருடைய ஜனங்களுக்குச் சகல காரியங்களும் நன்மைக்கு ஏதுவாக நடைபெறும் என்ற அவருடைய வாக்குத்தத்தத்தையும் உணர்ந்துக்கொள்கின்றது (1 யோவான் 5:5; ரோமர் 8:29).