R2764 – அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R2764 (page 58)

அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக

TO EVERY MAN ACCORDING TO HIS SEVERAL ABILITY

மத்தேயு 25:14-30

“”ஆதலால், நம்மில் ஒவ்வொருவனும், தன்னைக் குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.”―ரோமர் 14:12.

எரிகோவிலிருந்து, எருசலேமுக்குப் போகிற வழியில்தான், நமது கர்த்தர், பத்து ஊழியக்காரர்களுக்கு ஒன்றாகக்கொடுக்கப்பட்ட பத்து இராத்தல் பற்றின உவமையைக் கொடுத்திட்டார். (லூக்கா 19:11-12). நாம் இப்போது பார்க்கின்ற தாலந்துகள் பற்றின உவமையானது இராத்தல் உவமை போலவே காணப்பட்டாலும், அது அநேக விஷயங்களில் வேறுபட்டதாகவே இருக்கின்றது. இந்த உவமையானது, நமது கர்த்தர் தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதான சில நாட்களில், தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்திட்ட அவருடைய போதனைகளின் ஒரு பாகமாக இருக்கின்றது; அநேகமாக சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு வந்த செவ்வாய்க் கிழமையன்று எருசலேமிலிருந்து, பெத்தானியாவுக்கு மாலையில் பிரயாணம் பண்ணும்போது, இந்த உவமை கொடுக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். இந்த உவமையானது, தேவனுடைய ஊழியம் தொடர்புடைய விஷயத்தில், தேவனுடைய ஜனங்களுக்கு இருக்கும் பல்வேறு திறமைகள் குறித்தும், எவ்வாறு ஒவ்வொருவரும் தங்களது திறமைகளுக்குக் கணக்கு ஒப்புக்கொடுக்க வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள் என்பது குறித்தும், அனைவரிடமும் ஒரே பலன் எதிர்ப்பார்க்கப்படுவதில்லை என்பது குறித்தும், ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் அந்தத் திறமையையும், வாய்ப்பையும் பயன்படுத்துவதில், உண்மையே எதிர்ப்பார்க்கப்படுகின்றது என்பது குறித்தும் நமக்கு விவரிக்கின்றது.

மத்தேயு 25:14-ஆம் வசனத்தில் இடம்பெறும், “”பரலோக இராஜ்யம்” எனும் வார்த்தையானது, பழைய மூலப்பிரதிகளில் காணப்படுவதில்லை; இவ்வார்த்தை இங்கு இடம்பெறவில்லை என்பதற்காக, இங்குக் கருநிலையிலான பரலோக இராஜ்யமே (சபை) விவரிக்கப்பட்டு, தாலந்துகளைப் பெற்றுக்கொண்டுள்ள இந்த ஊழியக்காரர்களுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது எனும் கருத்தை மறுக்க முடியாது; ஏனெனில் இந்த உவமையானது, இராஜ்யத்தை விவரிக்கும் பத்துக் கன்னிகைகள் பற்றின உவமையை உடனடியாகப் பின்தொடர்ந்துவரும் உவமையாக இருக்கின்றது என்பது நினைவில்கொள்ளப்பட வேண்டும். ஆகையால் தாலந்துகள் பற்றின உவமையானது, இராஜ்ய வகுப்பாரைப்பற்றின கருத்தைத் தொடர்வதாக மாத்திரமே காணப்படுகின்றது.

(பத்து) அநேகம் எண்ணிக்கையிலான ஊழியக்காரர்கள் உவமையில் குறிப்பிடப்பட்டாலும், மூன்று பேர் மாத்திரமே உதாரணங்களாகக் காண்பிக்கப்படுகின்றனர்; ஆகவே மீதமானவர்களும் இந்த மூன்று பேருக்குள் அடங்குகின்றார்கள் என்று எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். எந்த வகுப்பார் உயர்ந்திருப்பார்கள் என்பதைக் காட்டுவதற்கோ, போதிப்பதற்கோ இவ்வுவமை முயற்சிப்பதில்லை. இந்த விதத்தில் இது இராத்தல் பற்றின உவமை போன்று காணப்படுகின்றது. இந்த உவமையும் மற்ற உவமை போன்று, நமது கர்த்தர் தற்கால ஜீவியிலிருந்து, தூரதேசமாகிய பரலோகத்திற்குப் புறப்பட்டுப் போகும் விஷயத்தில், அப்போஸ்தலர்களுடைய மனங்களை ஆயத்தப்படுத்துவதற்கே கொடுக்கப்பட்டது; அதாவது, தாம் கல்வாரியில் நிறைவேற்றப் போகின்ற பாவங்களுக்கான மனுக்குலம் சார்பிலான பலியை, பிதாவின் சந்நிதியில் வைப்பதற்கென, பிதாவின் சந்நிதியில் பிரசன்னமாகுவதற்கும், பின்னர் முடிசூட்டப்படுவதற்கும், தூதர்களுக்கும், துரைத்தனங்களுக்கும், அதிகாரங்களுக்கும் மேலாக கனப்படுத்தப்படுவதற்கும், உயர்வாய் உயர்த்தப்படுவதற்கும், தெய்வீகத் தயவின் வலது பாரிசத்தினிடத்திற்கு உயர்த்தப்படுவதற்கும், மற்றுமாக தேவன் சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படத்தக்கதாக, தமது இராஜ்யத்தை முழுமையாய்க் கையில் எடுத்து, வானங்களின் கீழ் அனைத்தையும் தெய்வீக அரசாங்கத்திற்கு முழு இசைவுடன் கொண்டு வருதவதற்கான நியமிக்கப்பட்ட வேளை வரும் வரையிலும், தாம் தேவனுடைய வலது பாரிசத்திலேயே காத்திருப்பதற்குமென, நமது கர்த்தர் தற்கால வாழ்க்கையயை விட்டு, தூர தேசமாகிய பரலோகத்தினிடத்திற்குச் செல்லும் விஷயத்தில் அப்போஸ்தலர்களுடைய மனதைத் தயார்படுத்தும் வண்ணமாகவே, இவ்வுவமை கொடுக்கப்பட்டுள்ளது.

“”தூர தேசம்” எனும் வார்த்தையானது, ஆண்டவர் பூமியிலிருந்து போவதற்கும், பின்னர் தம்முடைய ஆயிர வருட இராஜய்த்தை ஸ்தாபிக்க திரும்பி வருவதற்கும் இடையே நீண்ட காலப்பகுதி இருப்பதைத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. இதற்கிடையில் அப்போஸ்தலர்கள், தாங்கள் அவருடைய சொத்துகள் ஒப்படைக்கப்பெற்ற அவருடைய ஊழியக்காரர்களாய் இருக்கின்றார்கள் என்றும், அவருக்கடுத்த காரியங்கள் மற்றும் நன்மைகளைப் பாதுகாப்பதில் தாங்கள் உண்மையாய் இருந்து, இந்த அவருடைய காரியங்களை, நன்மைகளை அவர்களுடைய பல்வேறு திறமைகளைக் கொண்டு வளர்ச்சியுற செய்ய வேண்டுமென அவர் தங்களிடம் எதிர்ப்பார்ப்பார் என்றும் புரிந்துக்கொள்ள வேண்டியவர்களாய் இருந்தார்கள். ஆனால் இந்த உவமையானது, பதினெட்டு நூற்றாண்டுகளுக்குரிய காலப்பகுதியை உள்ளடக்குவதினாலும், ஆண்டவர் திரும்பிவரும்போது வாழ்ந்துக்கொண்டிருக்கும் சில ஊழியர்களையும் உள்ளடக்குவதினாலும், இவ்வுமையானது அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமல்லாமல், நமது கர்த்தர் ஜெபம் பண்ணினதுபோன்று, அப்போஸ்தலர்களுடைய வார்த்தைகள் மூலமாக கர்த்தரை விசுவாசிக்கின்றவர்கள் அனைவருக்காகவும் கூடக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகுகின்றது. இவ்வுவமையானது [R2764 : page 59] உலகத்திற்கானதல்ல என்பதை நாம் கவனிக்க வேண்டும்; நமது கர்த்தருடைய இரண்டாம் வருகையின்போது, எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்த விதத்திலும் உலகத்தைப்பற்றின தீர்மானங்களாய் இராமல், சபையைப்பற்றின தீர்மானங்களாய் மாத்திரமே இருக்கின்றது என்பதையும் நாம் கவனித்துக்கொள்ள வேண்டும். உவமையானது பொதுவான “”விசுவாச விட்டாரை” உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது என்றும் நாம் புரிந்துக்கொள்ளக்கூடாது; மாறாக, கர்த்தரால் குறிப்பிட்ட பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்ட அவருடைய விசேஷித்த அர்ப்பணம் பண்ணப்பட்ட ஊழியக்காரர்களையே உள்ளடக்குகின்றது என்றே நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்; அதாவது, பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களை மாத்திரமே உள்ளடக்குகின்றது, என்றே நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி பொழியப்பட்ட பிற்பாடு, ஆதி திருச்சபையில், ஒவ்வொரு அர்ப்பணம் பண்ணப்பட்ட விசுவாசியும் வரங்கள் (அ) தாலந்துகள் பெற்றுக்கொண்டனர். சிலர் அநேகம் பெற்றுக்கொண்டனர். “”(ஒரு தாலந்தாகிலும்) ஆவியினுடைய அநுக்கிரகம் (அர்ப்பணிக்கப்பட்ட சபையிலுள்ள) அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப் பட்டிருக்கின்றது” (1 கொரிந்தியர் 12:7). ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்டிருக்கும் தாலந்துகள் (அ) ஆவியின் வரங்களுக்குத்தக்கதாகப் பொறுப்பை உடையவர்களாய் இருக்கின்றனர்; அப்போஸ்தலனாகிய பவுல், மற்றவர்களைக் காட்டிலும் அதிகமான தாலந்துகளை/வரங்களைப் பெற்றிருந்து, அதிகம் வாய்ப்புகளை உடையவராய் இருந்தபடியினால், அதிகம் பொறுப்புடையவராகக் காணப்பட்டார்; மேலும் ஆண்டவருடைய பார்வையில் பவுல் மிகவும் அங்கீகரிக்கப்படத்தக்க விதத்தில் தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்றினார் என்று நாம் எண்ணுகின்றோம் (1 கொரிந்தியர் 14:18). ஆனால் இந்த வரங்கள் கொஞ்சம் காலத்திற்குள்ளாக, அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப் பிற்பாடு ஓய்ந்துவிட்டது; ஏனெனில், ஆவியின் வரங்களானது அப்போஸ்தலர்கள் விசுவாசிகள்மேல் கைகள் வைத்த போதுதான், விசுவாசிகளுக்கு இந்த வரங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது என்றும், இந்த வரங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட வண்ணமாகத் தேவனிடத்திலிருந்து ஒவ்வொரு நபருக்கும் வரவில்லை என்றும், அப்போஸ்தலர்களாலேயே அல்லாமல், வேறெவராலும் இந்த வரங்களை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்க முடியாது என்றும் நம்மால் தெளிவாய்க்காணமுடிகின்றது. (அப்போஸ்தலர் 8:12-20).

ஆதி சபையை ஸ்தாபிக்கும் நோக்கத்திற்காகவே இந்த வரங்கள் கொடுக்கப்பட்டது என்பதை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கின்றோம்; மற்றும், சபை ஸ்தாபிக்கப்பட்ட பிற்பாடு வரங்களின் அவசியம் முடிந்தது, ஆகையால் வரங்கள் இந்த விதத்தில்/வடிவத்தில் ஓய்ந்துவிட்டது; மற்றும் இவ்விதத்தில் ஓய்ந்தது முதல், வரங்களானது இன்றுவரை கர்த்தருடைய ஜனங்களுக்கு வேறே விதத்தில்/வடிவத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது; அதாவது ஓய்ந்தது முதல், ஒவ்வொருவனும் பிறப்பின் மூலமாகவும், கல்வி அறிவின் மூலமாகவும், பயிற்சியின் மூலமாகவும், பெற்றிருக்கும் இயல்பான தாலந்துகளானது, அவன் தன்னைக் கர்த்தருக்கு அர்ப்பணம் பண்ணி, கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படும்போது, பரிசுத்த ஆவியினுடையதாய்க் கருப்படுகின்றது; ஆகையால் இந்தத் தாலந்துகள் (அ) திறமைகள் அவனுடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது; மேலும், அதைப் பயன்படுத்தும் விஷயத்தில் மற்றும் பலன் கொடுப்பதில் அவன் பொறுப்பாளியாக வைக்கப்படுகின்றான். ஒருவேளை அவன் உலகத்தானாகவே இருந்திருந்தால், அவனுக்கு வேறே பொறுப்புகள் காணப்பட்டிருந்திருக்கும்; ஆனால் இப்படிப்பட்டதான உலகத்தாரைக் குறித்து இந்த உவமையில் சொல்லப்படாமல், மாறாக அர்ப்பணம் பண்ணியுள்ள ஊழியக்காரர்கள், தங்கள் ஆண்டவருடைய ஆவிக்குரிய ஆஸ்திகளைப் பயன்படுத்துவது தொடர்புடைய விஷயத்தில், கொண்டிருக்கும் பொறுப்பு மாத்திரமே இவ்வுமையில் குறிப்பிடப்படுகின்றதாய் இருக்கின்றது.

கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் ஐந்து தாலந்து உடையவர்கள், சொற்பமானவர்களாகவே காணப்படுவார்கள் என்பது நமக்கு உறுதியே. பெரும்பான்மையான பரிசுத்தவான்கள் ஒரு தாலந்தும், இரண்டு தாலந்தும் உடையவர்களாகத்தான் காணப்படுவார்கள். உலகத்திலுங்கூட ஐந்து தாலந்துகள் உடையவர்கள் அநேகரில்லை; மேலும், இப்படியாக ஐந்து தாலந்துகள் கொண்டுள்ளவர்களை உலகமும், மாம்சமும், பிசாசும் அதிகமாய் அதற்கே ஊழியஞ்செய்யத்தக்கதாக வைத்துள்ளப்படியால், இப்படிப்பட்டவர்களில் மிகச் சொற்பமானவர்களே கர்த்தருடைய ஊழியக்கரர்கள் ஆகும்படிக்கும், தங்களுடைய ஐந்து தாலந்துகளை முற்றும், முழுமையாகக் கர்த்தருடைய வேலைக்கு என அர்ப்பணம் பண்ணும்படிக்கும் முன் வருபவர்களாக இருக்கின்றனர். “”அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.”

கர்த்தருடைய ஊழியக்காரர்கள் மத்தியில், ஐந்து தாலந்துடையவர்களாய் இருக்கின்றவர்கள், தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுக்கொண்டு, “”நான் போதுமானளவுக்குச் செய்துள்ளேன்; நிச்சயமாய் ஒரு தாலந்துடைய சகோதரன் “”A” அவர்களைக் காட்டிலும் அதிகமாய்ச் செய்துள்ளேன்; இரண்டு தாலந்துகளையுடைய சகோதரன் “”B” அவர்கள் அளவுக்கும் நான் செய்துள்ளேன்” என்று சொல்லக்கூடாது என்பதை இந்த உவமை நமக்குக் காட்டித்தருகின்றதாய் இருக்கின்றது. மாறாக ஒவ்வொரு சீஷனும், ஆண்டவர் தன்னிடம் கொடுத்துள்ள இயல்பான திறமைகளின் தாலந்துகளையும், வாய்ப்புகளையும் உண்மையாய் அறிந்திட நாடவேண்டும்; மற்றும் இந்தத் தாலந்துகளையும், வாய்ப்புகளையும் கொண்டு, கர்த்தருக்கு அதிகமான கனிகளையும், அதிகமான துதிகளையும், அதிகமான ஊழியங்களையும், அதிகமான கனத்தையும் விளைவிக்கத்தக்கதாக முற்றும் முழுமையாகவும், முடிந்தமட்டும் ஓயாமல் பயன்படுத்தவும் நாட வேண்டும் என்று உவமை நமக்குக் காண்பிக்கின்றதாய் இருக்கின்றது. ஐந்து தாலந்துகளை உடையவர்கள், காரியங்களைச் சோம்பலான கண்ணோட்டத்தில் பார்க்காதபடிக்கு, இச்சோம்பலைத் தடைபண்ணும் வண்ணமாக, இவ்வுமையானது ஐந்து தாலந்துடைய ஊழியர்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை வைக்கிறது. இவ்வுமையானது, பெரிய வாய்ப்புகளையும், பெரிய இயல்பான தாலந்துகளையும் கொண்டவர்களிடத்தில், கர்த்தர் பெரிய காரிங்களை எதிர்ப்பார்ப்பது போன்று, சிறிய தாலந்துகளையும், வாய்ப்புகளையும் உடையவர்களிடத்தில் கர்த்தர் பெரிய காரியங்களை எதிர்ப்பார்ப்பதில்லை என்று காண்பிப்பதன் மூலமாக, கொஞ்சம் தாலந்து உடையவர்களுக்கு இவ்வுவமை உற்சாகமளிக்கின்றதாயும் இருக்கின்றது. சிறிய தாலந்துகளையும், வாய்ப்புகளையும் உடையவர்கள், தங்களுடைய கைக்கு அகப்படுவது எதுவோ, அதைத் தங்கள் முழுப்பலத்துடன் செய்யவேண்டும் என்றும், இந்தப் புத்தியுள்ள ஆராதனையே கர்த்தர் எதிர்ப்பார்க்கிறதும், பலன் கொடுப்பதாகக் கூறியதுமாகிய காரியமாக இருக்கின்றது என உணரவும் வேண்டும் என்றும் இவ்வுவமையானது கற்றுக்கொடுக்கின்றது. ஒரே ஒரு தாலந்தையும், வாய்ப்பையும் கொண்டிருந்த ஊழியக்காரன், தன்னுடைய தாலந்திற்கு ஏற்ப (அதாவது மற்றவர்கள் தங்களுக்குரிய தாலந்திற்கு ஏற்ற பொறுப்பைக் கொண்டிருப்பது போன்று) பொறுப்புடையவனாய் இருக்கின்றதை உணர்ந்திருக்க வேண்டும்; மேலும், அவன் உண்மையுள்ளவனாய்க் காணப்பட்டிருப்பானானால், அவன் சரிசமமான ஆண்டவருடைய அங்கீகரிப்பையும் பெற்றிருப்பான்; மேலும், அவன் உண்மையுள்ளவனாய் இருந்திருந்தானானால் அவனுடைய ஒரு தாலந்து, இரண்டு தாலந்தாக அதிகரித்திருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

உவமையில் ஒரு தாலந்தைப் பெற்ற மனுஷனே நிலத்தைத் தோண்டி, அதைப் புதைத்துப் போட்டவனாக கர்த்தர் கூறிய காரியத்தை வைத்து, அதிகம் தாலந்துகள் உடையவர்களைப் பார்க்கிலும் குறைவான/ஒரு தாலந்துடையவர்களே, இப்படியாகத் தாலந்துகளைப் புறக்கணிப்பவர்களாகவும், அவைகளைத் தவறாய்ப் பயன்படுத்துபவர்களாகவும் அதிகம் இருப்பார்கள் என்ற விதத்தில் நாம் புரிந்துக்கொள்ளக்கூடாது. நாம் பார்த்தது வரையில், ஒரே ஒரு [R2765 : page 59] தாலந்துடையவர்கள் புதைப்பதுபோல, இரண்டு தாலந்தும், ஐந்து தாலந்தும் உடையவர்களாகிய அநேக பேர்க்கூட, நிலத்தைத் தோண்டி, தங்கள் தாலந்துகளைப் புதைத்துப் போட்டவர்களாக இருக்கின்றனர்; மேலும் இப்படியாகச் செய்ததற்காக, ஒரு தாலந்துடைய மனுஷனைக் காட்டிலும், அதிகம் தாலந்துடைய மனுஷன் அதிகமாய் குற்றம் சாட்டப்படுவதற்குரியவனாய் இருக்கின்றான். பின்னர் ஏன் ஒரு தாலந்தையுடைய மனுஷன், தாலந்துகளைப் புதைத்துப் போடுவதற்காக உவமையில் தெரிந்துக்கொள்ளப்பட்டவனாய் இருக்கின்றான்? குறைவான தாலந்துகளை உடையவர்களின் பொறுப்பைக் காண்பிப்பதற்கே உவமையில் ஒரு தாலந்துடைய மனுஷன், தாலந்துகளைப் புதைத்துப் போட்டவனாகக் காண்பிக்கப்படுகின்றான்; அதாவது, கர்த்தருடைய அர்ப்பணம் பண்ணின ஜனங்களில் சிறியவர் கூட, தன் தாலந்துகளை அறிந்து, தன்னிடத்திலுள்ள தாலந்துகளைப் பயன்படுத்த வேண்டுமெனக் கர்த்தர் எதிர்ப்பார்க்கின்றார் என்றும், தமக்கும், சகோதர, சகோதரிகளுக்கும், சத்தியத்திற்கும் ஊழியம் புரிவதற்குச் சிறிய திறமைகள் கொண்டிருந்து அதைப் பயன்படுத்தாமல் புறக்கணிப்பவர்களைக்கூடக் கர்த்தர் குற்றமற்றவர்களாய் விட்டுவிடுவதில்லை என்றும் காண்பிப்பதற்கே ஒரு தாலந்துடைய மனுஷன், தாலந்துகளைப் புதைத்துப் போட்டவனாக உவமையில் காண்பிக்கப்படுகின்றான். அதிகமான தாலந்துடையவர்களின் பொறுப்பானது அதிகமாய் இருப்பதுபோல, அவர்களின் விஷயத்தில் இழப்புகள் என்பதும் அதிகமாய் இருக்கும்; மற்றும் இப்படியாகத் தண்டனையும் அதிக கடுமையானதாகக் காணப்படும்.

“”வெகுகாலமான பின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்” (மத்தேயு 25:19). இந்த வார்த்தைகள் மூலமாக நமது கர்த்தர், [R2765 : page 60] தம்முடைய சீஷர்கள் வெகு சில நாட்களுக்குள், சில மாதங்களுக்குள் (அ) சில வருடங்களுக்குள் தாம் திரும்பி வந்து, கணக்குக் கேட்பார் என்று எதிர்ப்பார்க்கக்கூடாது என்ற உண்மையைத் தெளிவாய்த் தெரிவித்துள்ளார்; ஆனால் சீஷர்கள் அந்தக் குறிப்பிட்டக் காலத்தைக் குறித்து, அவரிடம் கேட்ட போதோ, காலங்களையும், வேளைகளையும் அறிவது சீஷர்களுக்கடுத்த காரியமாய் இராமல், அது பிதாவுக்கு அடுத்த காரியமாய் இருக்கின்றது என்று கூறி, சீஷர்களுக்குப் பதில் கொடுக்க கர்த்தர் மறுத்துவிட்டார். ஆகவே பதினெட்டு நூற்றாண்டுகள் காலமாக, கர்த்தருடைய ஜனங்கள் இக்காரியத்தில், தெளிவான தகவல் இல்லாத நிலைமையிலேயே விடப்பட்டுள்ளனர். எனினும் இவ்விஷயம், இப்போதைய காலத்தில், காலங்களையும், வேளைகளையும் பற்றிக் கொஞ்சம் அறிந்துக்கொள்வது என்பது தேவனுடைய ஜனங்களின் சிலாக்கியமாய் இருக்கின்றது என்ற கருத்தை எதிர்ப்பதில்லை; ஏனெனில், தேவனுடைய ஜனங்களுக்குத் தேவன் காரியங்களைத் தெரியப்படுத்த விரும்புவதற்கான ஏற்றவேளையாக இப்போதைய காலப்பகுதிக் காணப்படுகின்றது. “”ஞானவான்களோ உணர்ந்துக்கொள்ளுவார்கள்” (தானியேல் 12:10; 1 தெசலோனிக்கேயர் 5:4; யோவான் 16:13).

அநேகரால் விசுவாசிக்கப்பட்டு வருவது போன்று, சீஷர்கள் மரித்துப்போய், பின்னர் தங்களுடைய கர்த்தரினிடத்திற்குச் சென்று, கணக்குக் கேட்கப்பட்டு, பலன் அளிக்கப்படுவார்கள் என்பதான எந்தக் குறிப்பும் உவமையில் காணப்படவில்லை. வேதவாக்கியங்களானது, “”தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லை” என்றும், இயேசுவைத் தவிர, “”பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனுமில்லை” என்றும் தெரிவிப்பதோடல்லாமல், நமது கர்த்தர் தம்முடைய ஜனங்களைத் தம்மிடத்திற்கு ஏற்றுக்கொள்ளவும், பின்னர் பலனளிக்கவும் தக்கதாக இரண்டாம் முறை வருவார் என்றும் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. ஐந்து தாலந்துகளைக் கொண்டவர்களில் ஒருவரான அப்போஸ்தலனாகிய பவுலும், “”நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது (காத்திருக்கின்றது), நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார் எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்” என்ற வார்த்தைகளையே கூறுகின்றார். (2 தீமோத்தேயு 4:7-8; யோவான் 3:13; 14:3; அப்போஸ்தலர் 2:34).

நம்முடைய புரிந்துக்கொள்ளுதலின்படி, நாம் இப்பொழுது, “”மனுஷகுமாரனுடைய நாட்களில்” வாழ்ந்து கொண்டு வருகின்றோம், மற்றும் அவருடைய இந்த வந்திருத்தலின் நாளில், அவர் தம்முடைய ஊழியக்காரர்களிடம், இப்பொழுது கணக்குக் கேட்டுக் கொண்டிருக்கின்றார். நித்திரையில் காணப்படுகின்ற ஊழியக்காரர்களிடம் இந்தக் கணக்குக் கேட்குதல் ஆரம்பமாக வேண்டியிருக்கின்றது என்றும், கணக்குக் கேட்கப்படும் விஷயத்திலும், பலனளிக்கப்படும் விஷயத்தில், இவர்களை, “”கர்த்தருடைய வருகையின் போது, உயிரோடிருக்கும் நாம்” தடைப்பண்ணவோ, முந்திகொள்ளவோ கூடாது என்றும், வேதவாக்கியங்களின்படி (தரிசித்ததினால் அல்லாமல், விசுவாசத்தினால்) நாம் புரிந்து இருக்கின்றோம். (1 தெசலோனிக்கேயர் 4:15-17). நம்முடைய புரிந்துக்கொள்ளுதலின்படி 1878-ஆம் வருடமானது நமது கர்த்தர் தம்முடைய இராஜரிக அதிகாரத்தை எடுத்துக்கொண்ட வருடமாகவும், மகா பாபிலோனின் மீதான அவருடைய நியாயத்தீர்ப்பானது, “”அவள் விழுந்தாள்” என்று சொல்ப்பட்டதன் மூலமாகவும், தேவனுடைய ஜனங்களனைவரும் அவளைவிட்டு வெளியே வரும்படியாக அழைக்கப்பட்டதன் மூலமாகவும், வெளிப்பட்டதின் வருடமாகவும் இருக்கின்றது. இன்னுமாக இந்த வருடமே, கடந்த காலத்து உண்மையுள்ள ஜெயங்கொண்டவர்கள், முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைவதற்கான வருடமாகவும், அவருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கின்ற வருடமாகவும், “”நல்லது உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே” என்ற அவருடைய வார்த்தைகளைக் கேட்பதற்குமான வருடமாகவும் இருக்கின்றது. இதற்கு இசைவான நம்முடைய புரிந்துக்கொள்ளுதல் என்னவெனில், இந்த வகுப்பாரில் அனைவரும், இப்பொழுது உண்மைள்ளவர்களுக்கென்று வாக்களிக்கப்பட்டுள்ள மகிமையையும், கனத்தையும், அழியாமையையும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். ஊழியக்காரர்களுக்கான இந்த நியாயத்தீர்ப்பு என்பது, உலகத்திற்கான நியாயத்தீர்ப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட காரியமாகும்; உலகத்திற்கான நியாயத்தீர்ப்பு என்பது, அனைத்து விதத்திலும் வேறுபட்டதாகவும், ஆயிர வருட யுகத்தின்போது நடக்கிறதாக இருந்து, வெள்ளாடு மற்றும் செம்மறியாட்டின் உவமையினால் அடையாளப்படுததப்படுகின்றதாய் இருக்கின்றது; இந்த வெள்ளாடு, செம்மறியாடு உவமையில், இப்போது, தற்காலத்தில் பரீட்சையில் காணப்படுபவர்களாகிய உண்மையுள்ள ஊழியக்காரர்கள், அதாவது தாலந்து உவமையில் கணக்குக்கேட்பது தொடர்பாகவும் பலனளிக்கப்படுவது தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த உண்மையுள்ள ஊழியக்காரர்கள், அப்போது, கர்த்தர் வாக்களித்துள்ள பிரகாரமாகவே, அவரோடு கூட அவருடைய சிங்காசனத்தில் உட்கார்ந்திருப்பார்கள். (வெளிப்படுத்தல் 3:21).

மற்ற வேதவாக்கியங்கள் தெரிவிப்பது போன்று, “”கர்த்தருடைய பிரசன்னத்தின் காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம்” மகிமையடைந்தவர்களை முந்திக்கொள்ள முடியாவிட்டாலும், நாம் மகிமையடையும் வகுப்பாரிலிருந்து தவிர்க்கப்படுவதில்லை. கர்த்தருடைய ஊழியக்காரர்களிடம் கணக்குக் கேட்கும் விஷயமும், பலன் வழங்கப்படும் விஷயமும், மரணத்தில் நித்திரைப் பண்ணிக்கொண்டிருக்கும் ஊழியர்களைப் பொறுத்தமட்டில் 1878-ஆம் வருடத்தில் ஆரம்பமாகி, உயிரோடு இருப்பவர்கள் தொடர்புடைய விஷயத்தில் தொடர்ந்து, நீடித்துக்கொண்டிருக்கின்றது; கர்த்தருடைய பிரசன்னத்தின் காலத்தில் ஜீவித்துக்கொண்டிருப்பவர்கள் தங்களுடைய அர்ப்பணிப்பின் ஒப்பந்தத்தின்படி, அனைத்தையும் முடிப்பதற்கும், முதிர்ச்சியடைந்த கோதுமை மணிகளாக ஆகுவதற்கும், தங்கள் கணக்குகளை ஒப்புவிக்கத்தக்கதாகவும் போதுமான காலம் வழங்கப்படுகின்றனர். இப்பொழுது அதாவது, அவருடைய பிரசன்னத்தின் காலங்களில் தங்களது ஓட்டத்தை நிறைவுசெய்பவர்கள், உடனடியாக தங்கள் கணக்கை ஒப்புவிக்கலாம்; மற்றும், மரண நித்திரையில் காணப்பட வேண்டிய அவசியமில்லை; மற்றும், இராஜாவின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை; மாறாக, மரிக்கும் தருணத்திலேயே ஒரு இமைப்பொழுதிலே மறுரூபமாக்கப்பட்டு, உடனடியாக முதாலம் உயிர்த்தெழுதலின் ஆசீர்வாதமாகிய மகிமை, கனம் மற்றும் அழியாமையை, முழுமையாய் அனுபவிப்பவர்களாய் இருப்பார்கள்.

உவமையின் இந்தக் கண்ணோட்டத்தின்படி, இன்றுள்ள கர்த்தருடைய ஜனங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றார்கள் என்பதை உணரும்போது, அர்ப்பணிக்கப்பட்டவர்களில் ஒவ்வொருவரும் (பகற்காலமாய் இருக்கும்பொழுதே, இரவு . . . வருவதற்கு முன்னதாக) தன்னை முற்றும் முழுமையாய் ஆராய்ந்துகொள்வானாக அதாவது கர்த்தருக்கு ஊழியம் புரியத்தக்கதாக எந்தளவுக்குத் தன்னிடம் தாலந்துகளும், திறமைகளும், சிலாக்கியங்களும், வாய்ப்புகளும் காணப்படுகின்றது என்றும், எந்தளவுக்கு தான் அதைப் பயன்படுத்துகின்றான் என்றும் உறுதிப்பண்ணிக்கொள்ளத்தக்கதாகவும், தான் தனது தாலந்துகளைப் பயன்படுத்துவதில் காண்பிக்கும் உண்மையின் மீது, தான் அடையப்போகும் பலன் சார்ந்துள்ளது என்பதை நினைவில் கொள்ளத்தக்கதாகவும் தன்னை முற்றும் முழுமையாய் ஆராய்ந்துகொள்வானாக. ஐந்து தாலந்துகள் கொண்டிருப்பவர்களில் சிலர், கர்த்தருடைய ஊழியத்திற்கென, ஐந்தில் மூன்றை உண்மையாய்ப் பயன்படுத்துபவர்களாய் இருந்து, மற்ற இரண்டையும் ஜீவியத்தின் கவலைகளிலும், தொழில்களிலும், அதாவது பூமியில், பூமிக்குரிய காரியங்களில் புதைத்துப் போடுபவர்களாய்க் காணப்படலாம். இன்னுமாக, இரண்டு தாலந்துடையவர்களில் சிலர், ஒரு தாலந்தைக் கர்த்தருக்கான ஊழியத்தில் பயன்படுத்தி, மற்றொன்றைப் புதைத்துப் போடுகின்றவர்களாய்க் காணப்படலாம்; இப்படியாக கர்த்தர் உதாரணம் கொடுக்காத காரணத்தினால், இப்படியாகச் சிலர் நடக்க வாய்ப்பு உண்டோ என்று கேள்வி எழும்பலாம். சிலர் இரண்டு தாலந்துகளைப் பரம காரியங்களுக்குப் பயன்படுத்தலாமென்றும், மீதி மூன்றைப் பூமிக்குரிய காரியங்களுக்குப் பயன்படுத்தலாமென்றும் திட்டமிடுகிறவர்களாகக் காணப்படலாம்; சிலர் ஒன்றைப் பூமிக்குரிய காரியத்திற்கும், மற்றொன்றைப் பரம காரியத்திற்கும் பயன்படுத்தலாமென்றும் திட்டமிடுகிறவர்களாகக் காணப்படலாம்; இதன் விளைவாக ஒன்றில் அவன் பூமிக்குரிய காரியங்களில் முழுமையாக மூழ்கிப்போய், பூமியில் தன்னுடைய அனைத்துத் தாலந்துகளையும் புதைத்து விடுகிறவனாய் இருப்பான், இல்லையேல் அவனது இருதயம் [R2765 : page 61] கர்த்தருடைய ஆவியில் முழுமையாய் நிரம்பப்பெற்று, கர்த்தருடைய நோக்கங்களுக்காக, தன்னுடைய தாலந்துகளனைத்தையும் பயன்படுத்துவதற்கு வாஞ்சிப்பவனாய் இருப்பான். இக்காரியம் தொடர்பாகவே, நமது கர்த்தர் வேறொரு இடத்தில், “”தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது” என்றும் “”இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது” என்றும் கூறியுள்ளார் (லூக்கா 16:15) . இதற்கு அனுபவமும், கவனித்துப் பார்த்து உணர்ந்த விஷயமும் இசைவாகவே காணப்படுகின்றது; ஆகவேதான், சிலர் ஆவிக்குரிய காரியங்களில் ஒன்றில் குளிரானவர்களாக (அ) அனலானவர்களாகக் காணப்படுவதை நம்மால் பார்க்க முடிகின்றது; ஒன்றில் பரலோக இராஜ்யமே முதன்மையானதாகவும், அனைத்தையும் விட மேன்மையானதாகவும், நம்முடைய சிறந்த நேரத்தையும், ஆற்றலையும், செல்வாக்கையும் எதிர்ப்பார்க்கிறதாகவும், எடுத்துக்கொள்கிறதாகவும் காணப்படும்; இல்லையேல், பரலோக இராஜ்யமானது புறக்கணிக்கப்பட்டு, மறந்து போகப்பட்டும், நாம் நேரமும், செல்வாக்கும், பணத்தைச் சம்பாதிப்பதற்கோ அல்லது சுயநலமான காரியத்திற்கோ பயன்படுத்தப்பட்டும், மனமும் சரீரமும் பூமிக்குரிய தொழில்களில் ஈடுபட்டும் காணப்படும்.

கர்த்தருடைய அர்ப்பணம் பண்ணியுள்ள ஜனங்கள் ஒவ்வொருவருக்குமான பாடம் . . . நாம் தேவனுடைய இராஜ்யத்தையே முதலாவதாக (பிரதானமானதாக) நாட வேண்டும் என்பதேயாகும். இதுவே நம்முடைய பிரதானமான அக்கறையாகக் காணப்பட்டு, நம்முடைய நேரத்தையும், கவனத்தையும், எண்ணங்களையும், ஆற்றலையும், செல்வாக்கையும், தற்கால ஜீவியத்திற்கு அவசியமானவைகள் தவிர மற்றபடி நம்மிடத்திலுள்ள வளமைகளையும், நம்மிடத்திலிருந்து கவர்ந்து போடுகிறதாயும் இருக்கவேண்டும்; மேலும் தற்கால ஜீவியத்திற்கு நமக்கு அவசியமானவைகளைக்கூட, நாம் பரலோக காரியங்களுக்கடுத்த நன்மைகளுக்கெனப் பலிச் செலுத்த விரும்பும் அளவுக்குத்தக்கதாக, நமது அன்பும், வைராக்கியமும் வெளிப்படுகிறதாகவும் இருக்கும்.

உவமையில் உண்மையுள்ள ஊழியக்காரர்களுக்கென வழங்கப்படும் பலனானது, ஒவ்வொருவரின் விஷயத்திலும் ஒன்றாகவே காணப்படுகின்றது; அதாவது, கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசித்தலாகும்; இதன் அர்த்தமாவது, ஒவ்வொருவருக்குமான சந்தோஷத்தினுடைய பாத்திரம் நிரம்பி இருப்பதைக் குறிப்பதாக இருக்கும். இதிலுங்கூட, நம் அனைவருக்கும் மாபெரும் உற்சாகம் அளிக்கப்படுகின்றது; மேலும் இது ஒன்றோ, இரண்டோ வாய்ப்புகளுக்கான தாலந்துகளை உடையவர்களாகிய, பெரும்பான்மையான கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்கு விசேஷமாய் அவசியமான ஒன்றாகும். ஐந்து (அ) பத்துத் தாலந்துகளை உடையவர்கள் போன்று, குறைவான தாலந்து உடையவர்களுக்கும், கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பதற்கான சரிசமமான நல்ல வாய்ப்பு உள்ளது; “”நல்லது, உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே” எனும் பலனானது, அநேகம் தாலந்து உள்ளவர்களுக்கும், குறைவான தாலந்து உள்ளவர்களுக்கும், முற்றும் முழுமையாய்ப் பொருந்துகின்றதாய் இருக்கின்றது.

இந்த ஊழியக்காரர்களுக்கு வழங்கப்படும் பலனானது, உவமையில் விவரிக்கப்பட்டுள்ளவைகளுக்கு இசைவாகவே காணப்படுகின்றது; ஆயிர வருட யுகத்தின்போது, இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களாகிய, உண்மையுள்ள ஊழியக்காரர்கள், உலகத்தை ஆளுபவர்களாகவும், கிறிஸ்துவின் இராஜ்யத்தில் இயேசு கிறிஸ்துவுடன் உடன் சுதந்தரர்களாகவும், ஆளுகையில் அவருடைய சிங்காசனத்தில் உட்காருகிறவர்களுமாய் இருப்பார்கள். ஏனெனில், “”கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய்; அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்” என்பதாகவே பலன் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த உவமையானது, உலகத்தின் நியாயத்தீர்ப்பை அடையாளப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தைக் கொண்டிருக்குமானால், உவமையின் இந்த முடிவானது பொருத்தமற்றதாகக் காணப்பட்டிருக்கும்; ஏனெனில், உலகத்தின் நியாயத்தீர்ப்பானது முடிவுபெறும்போது, இப்படியான விதத்தில் ஆளுகைத்துவத்திற்கான அவசியம் காணப்படாது; “”ஏனெனில், கிறிஸ்து, அனைத்து அதிகாரங்களையும் பரிகரித்துப் போடும் வரைக்கும், அவர் (ஆயிர வருடத்தின் போது) ஆளுகை செய்து, தேவனுடைய இராஜ்யத்தைத் தேவனும், பிதாவுமாயிருக்கிறவருக்கு ஒப்புக்கொடுப்பார்” என்று அப்போஸ்தலர் குறிப்பிட்டுள்ளார் (1 கொரிந்தியர் 15:24-25). இப்பொழுது மனுஷர்கள் மத்தியில் காணப்படுகின்ற அநீதியின் ஆளுகையைக் கவிழ்த்துப் போடுவதற்கும், மனுக்குலத்தைத் தற்போதைய பாவம் மற்றும் மரணத்தின் நிலைமையினின்று தூக்கிவிடுவதற்கும், சாத்தானுடைய வல்லமையினின்று, தேவனுடைய குமாரர்களுடைய சுயாதீனத்திற்குள் விடுவிக்கப்பட விருப்பம் உள்ளவர்களை விடுவிப்பதற்குமென, ஆயிர வருட யுகத்தின்போது நீதியின் ஆளுகை, மத்தியஸ்தரின் இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும். மேலும், இந்த வேலைகள் அனைத்தும் நிறைவேற்றி முடியும்போது, இப்படியாக ஆளுகை செய்வதும் முடிவிற்கு வரும்; ஆகவே இந்த உவமையானது, ஆயிர வருட யுகத்திற்கு முன்னதான நமது கர்த்தருடைய வருகைக்கும், அவருடைய உண்மையுள்ளவர்களாகிய, தெரிந்துக்கொள்ளப்பட்ட சபையின் உயர்த்தப்படுதலுக்கும் பலத்த ஆதாரமாய்க் காணப்படுகின்றது. [R2766 : page 61]

தனது தாலந்தை நிலத்தில் புதைத்துப்போட்டு, அதைப் பயன்படுத்த தவறிவிடுகின்ற ஊழியக்காரன், எஜமான் மிகவும் கடுமையானவர் என்றும், கொடுமையானவர் என்றும் அவர்மேல் பழிச் சுமத்திக்கொண்டு, தன்னுடைய செயலை நியாயப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றவனாய்க் காணப்படுகின்றான். இப்படியாகவே கர்த்தருக்கு அர்ப்பணிப்பின் வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு, அவைகளை நிறைவேற்றுவதில் தவறிப்போய்விடுபவர்களாக நடந்துக்கொள்பவர்களாய் இருக்கின்றனர். இவர்கள் தங்களைக் குற்றஞ்சாட்டுவதற்குப் பதிலாக, கர்த்தரைக் குற்றஞ்சாட்டுபவர்களாய்க் காணப்படுகின்றனர்; மேலும் இப்படியாக நடந்துக் கொள்வதென்பது, இவர்கள் உண்மையில் அன்பின் விஷயத்தில் குறைவுபட்டிருப்பதைச் சுட்டிக்காண்பிக்கின்றதாய் இருக்கின்றது. இவர்கள் கர்த்தரைப் போதுமானளவுக்கு முழுமையாய் அன்புகூருவதில்லை; மேலும், இந்த உண்மையை இவர்களது செயல்பாடானது வெளிப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. ஒருவேளை இவர்கள் கர்த்தரை அன்புகூர்ந்தார்களானால், இவர்கள் தங்களால் முடிந்த மட்டும் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் மகிழ்ச்சிக்கொள்பவர்களாய் இருப்பார்கள்; மற்றும் இப்படிப்பட்டவர்களே பலன்களினால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

தங்களுடைய உடன்படிக்கைக்கு ஏற்ப, ஊழியக்காரர்களாய்ச் செயல்படுவதற்குத் தவறிவிடுபவர்களுக்கு, இந்த உடன்படிக்கையின் கீழ்க்கொடுக்கப்பட்ட தாலந்துகளைப் பயன்படுத்த தவறிவிடுபவர்களுக்கு உரிய தண்டனையானது, மிகப்பெரிய இழப்பாகக் காண்பிக்கப்பட்டுள்ளது; ஆனால் இந்த இழப்பு என்பது, ஜெயங்கொள்பவர்கள் தவிர மற்றபடி அனைவருக்கும் பாவத்தின் சம்பளமாக நித்திய காலமாய்ச் சித்திரவதைக் கொடுக்கப்படும் எனும் கூற்றினால் குருடாக்கப்பட்ட மனங்களை உடையவர்களின் அனுமானத்தின்படியான இழப்பாகக் காணப்படுவதில்லை.

குருடாக்கப்பட்டவர்கள், இந்த உண்மையற்ற ஊழியக்காரன் சாத்தானிடம் ஒப்புக்கொடுக்கப்பட்டு, எரிகிற நெருப்பில் சித்திரவதைப்படுத்தப்படுவான் என்று கூறுகின்றனர்; இப்படியான கூற்றுகளைக்கொண்டு வந்தவர்கள், மிகவும் குருடர்களாய்க் காணப்படுவதினால், இப்படியாகவே கர்த்தருடைய உவமைக்கு அர்த்தம் எடுத்துக்கொள்கின்றனர். நெருப்பு இருக்கும் வெளிச்சமுடையதான இடத்தைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக இயேசுவோ, அந்த ஊழியக்காரனைப் புறம்பான இருளில் தள்ளப்படுவதாகக் குறிப்பிடுகின்றார். பிசாசுகள் எனும், சித்திரவதைப்படுத்துபவர்களைக் குறித்து நமது கர்த்தர் எதுவும் குறிப்பிடவில்லை.

நமது கர்த்தருடைய வார்த்தைகளுக்கு நியாயமான மற்றும் பொருத்தமான விளக்கத்தை நாம் வழங்குகின்றோம். அர்ப்பணம், ஊழியம் மற்றும் பலிச்செலுத்துதலுக்கான தற்கால சிலாக்கியங்களைப் பயன்படுத்த தவறுகின்ற ஊழியக்காரனிடமிருந்து, அந்த வாய்ப்பு எடுக்கப்பட்டுவிடும். அது இவனுக்கு இனிமேல் கிடைக்காது; ஜெயங்கொள்பவர்களுக்கான பலனில், இவனுக்கு எந்தப் பங்கும் கொடுக்கப்படாது; இவன் இந்த மாபெரும் இழப்பை அனுபவிப்பவனாக இருப்பான். இவன், “”புறம்பான இருளுக்குள்” தள்ளப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளான் என்பது, இவன் ஏற்கெனவே தெய்வீகக் கிருபையின் வெளிச்சத்தில், தெய்வீகக் காரியங்களின் ஆசீர்வாதத்தில், சிலாக்கியத்தில், அறிவில் காணப்பட்டிருந்திருக்கிறான் என்பதையும், இந்தப் பிரகாசிப்பித்தலை இவன் இழந்துவிடுவான் என்பதையும், ஆவிக்குரிய காரியங்கள் தொடர்புடைய இவனுடைய புரிந்துக்கொள்ளுதல் அந்தகாரப்பட்டுப் போகும் என்பதையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது. இது, “”புறம்பான இருள்” காரணம், இது மனுக்குலத்தின் உலகத்தின் மீது காணப்படும் பொதுவான இருளாகும். கர்த்தரைபற்றியும், இப்பொழுது பிரகாசித்துக்கொண்டிருக்கிறதுமான அவருடைய திட்டத்தைப் பற்றியுமான அறிவின் தெளிவான வெளிச்சத்திற்குள், கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அர்ப்பணம் பண்ணியுள்ளவர்கள் மாத்திரமே வரும்படிக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த ஒளி தற்காலிகமாக வீசப்படப் பெற்றிருக்கும் மற்றவர்களோ, ஒளியின் பிம்பத்தை மாத்திரமே காண்கின்றவர்களாய் இருக்கின்றனர். [R2766 : page 62] உண்மையற்ற ஊழியக்காரன் அனைத்துக் கிருபைகளினின்று முழுமையாய்த் தள்ளிவிடப்படுபவனாக இருப்பான்; ஒளியின் பிம்பம்/பிரதிபலிப்புக்கூட இவன் பார்வையினின்று மறைக்கப்பட்டிருக்கும்; இவன் சீக்கிரத்தில் தெய்வீகத் திட்டம், வேலை, முதலானவைகளில் தானும் உலகத்திற்கு இருக்கும் இருளிலேயே காணப்படுவதை உணருவான். மேலும் இந்த யுகத்தை முடிக்கிறதான மகா உபத்திரவக் காலத்தில், உலகத்தோடு பங்கடைகின்றவனாக இவன் காணப்படுவான்; இந்த மகா உபத்திரவக் காலமானது உவமையில் அழுகையும், பற்கடிப்பும் என அருமையாய்ப் பொருந்துகிற விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.