R3300 – போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R3300 (page 11)

போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது

THE TEACHER AND HIS MESSAGE REJECTED

லூக்கா 4:16-30

“”அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” (யோவான் 1:11).

நமது கர்த்தர் தமது ஊழியத்தை யூதேயாவில் ஆரம்பித்தார், அவர் தம்முடைய வாழ்க்கையின் பெரும்பகுதி கழிந்துபோன கலிலேயா மாகாணத்திற்குப் (திரும்பி) போவதற்கு முன்பு, அநேகமாக அவர் ஒரு வருட காலம் யூதேயாவில் செலவிட்டிருக்க வேண்டும் என்று அநுமானிக்கப்படுகின்றது. அவர் தம்முடைய சொந்த மாகாணத்திற்குப் போகையில், தம்முடைய சொந்த ஊருக்குப் போகும் முன் கப்பர்நகூமுக்குப் போனார். இச்செயல்பாடானது, ஒரு தீர்க்கத்தரிசி தொலைவில் இருப்பவர்களைக் காட்டிலும், சொந்த வீட்டாரால் பொதுவாகவே குறைவாக மதிப்பிடப்படுவார் என்ற உண்மையைக் கருத்தில்கொண்டு சிந்திக்கையில் ஞானமுள்ள செயல்பாடாக உள்ளது. யூதேயாவிலும், கப்பர்நகூமிலும் அவருக்கு உண்டான கீர்த்தியானது, அவருடைய மூன்றாம் வயது தொடங்கி, 30 வயது வரையிலும் அவர் வாழ்ந்து வந்த நாசரேத்தூரின் ஜனங்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. அவர் நிமித்தம் அவருடைய ஊரைச் சார்ந்த நபர்களுக்குக் கொஞ்சம் பெருமை ஏற்பட ஆரம்பித்தது; மேலும் நமது கர்த்தர் நாசரேத்துக்கு வந்த பிற்பாடு முதல் ஓய்வு நாளன்று, ஜெப ஆலயத்தில் பெரும் திரளான ஜனக்கூட்டம் கூடியிருந்திருக்க வேண்டும் என்பதில் நமக்கு ஐயமில்லை.

தம்மிடத்திற்கும், தாம் கொடுக்கப்போகும் செய்தியினிடத்திற்கும் பாலஸ்தீனியாவின் ஜனங்களை ஈர்க்கவும், அவர்களை விழிக்கப்பண்ணுவது நமது கர்த்தருடைய ஊழியத்தின் நோக்கமாக இருந்தாலும், சகல ஜனங்களையும் சேர்த்துக்கொள்வது அந்தச் செய்தியின் நோக்கமாயிராமல், பதரிலிருந்து கோதுமையைப் பிரித்தெடுப்பதே நோக்கமாயிருந்தது, அதாவது கோதுமைகளை இயேசுவினிடத்திற்குச் சேர்த்துக் கொள்ளவும், எதிர்ப்பாயிருக்கும் பதர் வகுப்பாரை வரிசைப்படுத்தவுமேயாகும். கர்த்தருடைய ஊழியத்தின் பலனைக்குறித்து முன்னுரைக்கப்பட்டிருந்த காரியங்கள் முழுமையாக நிறைவேறினதை நம்மால் பார்க்க முடிகின்றது. “”அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” யோவான் 1:11-12. அதாவது மோசேயை தலையாகக் கொண்டிருந்த பணிவிடைக்காரர்களின் வீட்டிலிருந்து, நமது கர்த்தராகிய இயேசுவைத் தலையாகப் பெற்றிருக்கும் புத்திரர் வீட்டாருக்குள் ஒருவராக மாறும் வாய்ப்புக் கொடுத்தார். நமது கர்த்தருடைய ஊழியத்தின் நாட்களில், உண்மையுள்ள ஊழியர்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், பெந்தெகொஸ்தே நாள் வரையிலும் அவர்கள் மீண்டுமாக ஜெநிப்பிக்கப்படவில்லை. பெந்தெகொஸ்தே நாளானது, அன்றைய நாளில் ஆயத்தமாயிருந்தவர்கள் மீது ஆவியின் ஜெநிப்பித்தலைக் கொண்டு வந்தது, அதாவது முதலாம் உயிர்த்தெழுதலின் மூலம் இறுதியில் ஆவியில் பிறப்பதற்கு அவசியமான ஆவிக்குரிய குணலட்சணங்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஜெநிப்பித்தலைக்கொண்டு வந்தது.

நமது பாடத்தின் முதலாவது வசனமானது, ஒவ்வொரு ஓய்வு நாளிலும் ஜெப ஆலயங்களின் கூடுகைகளில் கலந்துகொள்வது நமது கர்த்தருடைய வழக்கமாக இருந்தது என்றும், சபையாருக்காக வாசிப்பது அவருக்கு வழக்கமாக இருந்தது என்றும் தெளிவாகக் காட்டுகின்றது. (synagogue) ஜெப ஆலயங்களின் ஆசரிப்புகள், (temple)ஆலயங்களின் ஆசரிப்புகளுக்கு ஒத்ததாக இருப்பதில்லை. ஆலயம் என்பது ஜெபவீடாகவும், ஜனங்களின் பாவத்திற்காக காளை, வெள்ளாடு முதலியவற்றின் இரத்தத்தைக்கொண்டு நிழலான பாவநிவாரணம் செய்யப்படுகின்ற ஸ்தலமாகும். ஜெப ஆலயம் என்பது இன்றைய காலக்கட்டத்தின் வேதாகம வகுப்புகள் போன்று காணப்பட்டது, அங்கு வேதவாக்கியங்கள் வாசிக்கப்படும், மேலும் வழிநடத்தும் தலைவரினால் மாத்திரம் அல்லாமல், அவ்விடத்தில் கூடியுள்ள அனைவராலும் விரும்பும் பட்சத்தில் வேதவாக்கியங்களைச் சுதந்திரமாக விவாதம் (discuss) பண்ணலாம். ஜெப ஆலயத்தில் இவ்வொழுங்குமுறையில் சில சிறப்பு அம்சங்கள் உள்ளன, அது என்னவெனில், எந்த ஒரு வேதவாக்கிய தலைப்பின் கீழ் விவாதம்/ஆராய்ச்சி பண்ணுவதற்கான வாய்ப்பும் கொடுக்கப்படுவதேயாகும். கர்த்தருடைய ஜனங்களுக்கு அவர்கள் இன்னமும் சத்தியத்தில் தெளிவடையத்தக்கதாக, அவர்கள் வேத ஆராய்ச்சி பண்ணவும், வேதாகம வகுப்புகள் நடத்தவும் நாம் பரிந்துரைக்கின்றோம்.

சத்திய வார்த்தையை நிதானமாய்ப் பகுத்து ஆராய்தல்

ஜெப ஆலயங்களில் வேதவாக்கியங்கள் வாசிப்பதில் யூதர்கள் சில ஒழுங்குமுறைகள் வைத்திருந்தார்கள், மேலும் அன்றைய தினம் ஏசாயாவின் புஸ்தகத்திலிருந்து வாசிக்க வேண்டியிருந்தது. கர்த்தர் ஏசாயாவின் புஸ்தகத்தில் இப்பொழுது நாம் 61-ஆம் அதிகாரம் என்று கூறும் பகுதிகளை எடுத்துக்கொண்டு முதல் வசனத்தையும், இரண்டாம் வசனத்தின் ஒரு பாகத்தையும் வாசித்துவிட்டு, புஸ்தகத்தை மூடி, கீழே அமர்ந்து, தாம் வாசித்த பாகங்களுக்குச் சில விளக்கவுரைக் கொடுத்தார். நமது கர்த்தர் இங்கு அப்போஸ்தலர் விவரிக்கிற பிரகாரமாக, “”சத்திய வார்த்தையை நிதானமாய்ப் பகுத்து ஆராய்ந்து” வாசித்தார் என்று நாம் பார்க்கின்றோம். அக்காலத்திற்கு ஏற்ற பாகத்தை மாத்திரம் அவர் வாசித்தார், ஆனால் நீதியைச் சரிக்கட்டும் நாள் குறித்த பாகத்தை அவர் வாசிக்கவில்லை. அவருடைய போதனைகள், ஜனங்களைப் பரீட்சிக்க வேண்டியதாய் இருந்தது, அதாவது ஒருவேளை அவருடைய செய்தி ஏற்றுக்கொள்ளப்படுமாயின், நீதியைச் சரிக்கட்டும் நாள் அவசியமில்லை; ஒருவேளை அவருடைய செய்தி ஏற்றுக்கொள்ளப்படவில்லையெனில், நீதியைச் சரிக்கட்டும் நாள் அவர்களைப் பின்தொடருக்கின்றதாய் இருக்கும்; அவர்கள் அவரைப் புறக்கணித்தப்போது, நீதியைச் சரிகட்டும் நாளானது அவர்களைப் பின்தொடர்ந்தது. இதில் கர்த்தருடைய ஜனங்களுக்கு ஒரு பாடம் உள்ளது, அதென்னவெனில், நாம் ஆச்சாரமான முறையில் கர்த்தருடைய வார்த்தைகளை அதிகாரம் வாரியாக வாசித்துக்கொண்டு மாத்திரமே செல்வதைக் காட்டிலும், நாம் ஒரு வசனத்தைப் புரிந்துக்கொண்டும், உணர்ந்துக்கொண்டும் வாசிப்பது நலமாயிருக்கும் என்பதேயாகும்.

“”உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று” என்று நமது கர்த்தர் கேட்டுக்கொண்டிருப்பவர்களிடம் கூறினார் (லூக்கா 4:21). இவ்வேத வாக்கியம் [R3300 : page 12] (ஏசாயா 61:1-2) பல நூற்றாண்டுகள் முன்பு எழுதப்பட்டதும், பல நூறு முறைகள் வாசிக்கப்பட்டதுமாயிருக்க, அவர்களுடைய (யூதர்) அறுவடையின் காலத்தில் முதல் முறையாக “”நிறைவேறிற்று” என்று சொல்லப்பட்டது. கர்த்தர் யோர்தானில் தம்மை அர்ப்பணித்து, பரிசுத்த ஆவியானது அவர்மேல் இறங்கி சுமார் ஒரு வருடமாகிவிட்டது. பரிசுத்த ஆவி அவர்மேல் வந்தது என்பது, அவர் அபிஷேகம் பண்ணப்பட்டதைக் குறிக்கின்றது. பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது என்பது, அபிஷேகம் பண்ணப்படுதலைக் குறிக்கும் என்பதை யூதர்கள் அறிந்தவர்களாய் இருந்தார்கள்; யூதர்களுடைய பிரதான ஆசாரியர்களும் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தார்கள் என்பது பலிகள் செலுத்துவதற்கும், தேவனுக்கும் ஜனங்களுக்கும் இடையே மத்தியஸ்தர் வேலை செய்வதற்கும் அங்கீகாரம் வழங்கும் விதமாக ஆசாரியன் மேல் கர்த்தருடைய வல்லமை (அ) ஆவி இருப்பதைக் குறிக்கின்றது. யூதர்களுடைய இராஜாக்கள் அபிஷேகிக்கப்படுவது என்பது, இராஜாக்கள் ஜனங்களை ஆளும் விஷயத்தில் கர்த்தருக்கு அடையாளமாக இருக்கத்தக்கதாக விசேஷமாக அங்கீகரிக்கப்படுவதையும், தெய்வீக வல்லமையும், வழிநடத்துதலும் இராஜாக்கள் மீது இருக்கின்றது என்று காண்பிக்கப்படுவதையும் குறிக்கின்றது.

தேவனுடைய அபிஷேகம் பண்ணப்பட்டவராகிய மேசியா வந்து, பூமியில் நீதியின் ஆளுகையை ஸ்தாபிப்பார் என்றே வாக்குத்தத்தம் காணப்பட்டது, மேலும் இப்பொழுது நமது கர்த்தர் தம்மைப் பிதாவின், அபிஷேகம் பண்ணப்பட்டவராக அறிவித்தார். இதை அவர், “”நான்தான் மேசியா, நான்தான் தேவனுடைய அபிஷேகம் பண்ணப்பட்டவர், என்னிடத்தில் ஆசாரியன் மற்றும் இராஜாவிற்குரிய அதிகாரம் உள்ளது” என முரட்டுத்தனமான விதத்தில் ஒன்றும் கூறவில்லை, மாறாக, அந்தத் தீர்க்கத்தரிசனத்தின் நிறைவேறுதல் இப்பொழுது சம்பவித்துள்ளது என்பதன் மீதும், மற்றும் அந்தத் தீர்க்கத்தரிசனத்தின் மீதும் அவர்களது கவனத்தைத் திருப்பும்விதமாக ஆணவத்துடன் அல்லாமல், அமைதலுடனே கூறினார். தேவன் தம்மை ஆளுகை செய்யும்படிக்கு அபிஷேகம் பண்ணியுள்ளார் என்ற அறிவிப்புக் காணப்படவில்லை, ஆனால் அவருடைய ஊழியத்தின் முதல் பாகமானது அவர் பிரசங்கம் பண்ணுவதாகக் காணப்பட்டது, அதாவது மனுக்குலத்திற்குத் தேவனுடைய வாயாக இருந்து அறிவிப்பது அவருடைய ஊழியத்தின் முதல் பாகமாக இருந்தது. இறுதியில், சகல ஜனங்களிடமும் சென்றடைந்து சேரத்தக்கதான மாபெரும் செய்தி அவரிடத்தில் இருந்தது. ஆனால் அத்தருணத்திலோ கேட்கச் செவியுள்ளவர்களுக்கு மாத்திரமே அச்செய்தி உரியதாயிருந்தது.

இராஜரீக அம்சங்கள் இல்லை என்றும், தீர்க்கத்தரிசியினால் கோடிட்டுக் காட்டப்பட்டதும், கர்த்தரால் அறிவிக்கப்பட்டதுமான மேசியாவின் வேலையானது, ஒரு மாபெரும் சேனையை எழுப்புவதற்குப்பதிலாக, நற்செய்தியைப் பிரசங்கிப்பதாகவும் இருந்தது என்றும், ஐசுவரியவான்களையும், ஞானமுள்ளவர்களையும், பெருமையுள்ளவர்களையும் தமக்கு ஆதரவு கொடுக்கக் கூட்டுவதற்குப்பதிலாக, ஏழைகளுக்கும், எளிமையுள்ளவர்களுக்கும் பிரசங்கிப்பதாகவும் இருந்தது என்றும் உணரும்போது, இது அநேகருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மேசியா இருதயம் நறுங்குண்டவர்களைக் கட்டிச் சுகமாக்கப் போகிறார் என்ற அச்செய்தியினுடைய பாகத்தின் நிமித்தமும் அவர்களுக்கு ஏமாற்றம் உண்டாயிருக்கும். மற்றத் தேசங்களில் காணப்பட்ட மாபெரும் தலைவர்கள் மற்றும் யுத்த வீரர்கள் போன்றே தங்களுடைய இரட்சகரும், அநேக உயிர்களைக் கொன்றுபோடுகிறவராகவும், துன்பம் மற்றும் துக்கத்தினால் அநேகருடைய இருதயங்களை உடைத்துப் போடுகிறவராகவும் இருப்பார் என்றுதான் அவர்கள் அநேகமாக எதிர்ப்பார்த்திருந்திருக்க வேண்டும். ஏதோ விதத்தில் நறுங்குண்ட நிலையில் இருதயம் பெற்றிருந்தவர்கள் கூட, தங்களுடைய தவறான எதிர்ப்பார்ப்பின் காரணமாக அநேகமாக ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும்.

சிறைபட்டவர்களின் விடுதலைக்குறித்தும், கட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறவர்களுக்கு சிறையின் கதவுகள் திறக்கப்பட்டுச் சுதந்திரம் கொடுக்கப்படுவதைக்குறித்தும் அறிவித்தவைகளை, அங்குக் கர்த்தர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுடைய எண்ணங்கள் அப்போது சிறையில் காணப்பட்ட யோவான் ஸ்நானன் மீது கடந்துசென்றது, மேலும் யோவானை விடுவிக்கும்படி, இயேசு ஏதேனும் முயற்சிகள் எடுக்கப்போகிறாரோ என்று கூட அவர்கள் யோசித்திருக்க வேண்டும். இவ்வசனத்தின் உண்மையான அர்த்தத்தைக்குறித்து அவர்கள் புரிந்துக்கொள்ளவேயில்லை; இவ்வசனமானது, பாவத்தின் அடிமைத்தனத்தினின்று சாத்தானின் சிறை கைதிகள் விடுவிக்கப்படுவதையும், இறுதியில் மரணத்தினின்றும், அதன் கட்டிலிருந்தும், கல்லறையாகிய இந்த மாபெரும் சிறைக்குள் போயிருந்த மில்லியன் கணக்கான ஜனங்கள் விடுவிக்கப்படுவதையுமே குறிக்கின்றது. கர்த்தருடைய சீஷர்களும் கூட, அதாவது அவருடைய செய்தியைக் கேட்கச் செவியும், உணர்வடையும் இருதயமும் கொண்டிருந்து, எதையும் இழக்கத் தயாராகி, அவருடைய பின்னடியார்கள் ஆனவர்கள் கூட, அச்சமயத்தில் கர்த்தருடைய வேலையின் மகத்துவத்தைப் புரிந்துக்கொள்ள முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குத் தீர்க்கத்தரிசனங்களின் அர்த்தத்தை அவர் புரிய வைக்க வேண்டியிருந்தது, மேலும், பிரேதக்குழிகளில் இருப்பவர்கள் அனைவரும் மனுஷகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம்வரும் என்று அவர்களுக்கு விளக்கினார்.

[R3301 : page 12]

அநுக்கிரகக் காலம்

தீர்க்கத்தரிசியினால் குறிப்பிடப்பட்டுள்ள இந்த அநுக்கிரக்காலம் குறித்தும், அவர்கள் புரிந்துக்கொள்ளவில்லை. முழுச் சுவிசேஷ யுகமே, இந்த அநுக்கிரகக் காலம் (அ) அநுக்கிரக வருஷம் என்று இன்று நாம் காணமுடிகின்றதினால், நம்முடைய கண்கள் பாக்கியமானவைகள் ஆகும். இந்தச் சுவிசேஷ யுகத்தில்தான் கிறிஸ்து மூலம் தேவனிடத்தில் வரும் யாவரையும் ஏற்றுக்கொள்ள அவர் சித்தமுள்ளவராக இருக்கின்றார். அதாவது, இயேசுவுடன் கூட உடன் பலிச் செலுத்துகிறவர்களாகவும், மாபெரும் இராஜரிக ஆசாரியக் கூட்டத்தின் அங்கங்களாகவும் கிறிஸ்து மூலம் தேவனிடத்தில் வரும் யாவரையும் ஏற்றுக்கொள்ள, அவர் சித்தமுள்ளவராக இருக்கின்றார். உண்மைதான், ஆயிரம் வருஷம் யுகத்தின் முடிவில் மாபெரும் மீட்பரானவர் மனுக்குலம் முழுவதையும் சீர்த்திருத்தலின் முறைமையின் மூலம், மீண்டுமாக தேவனுடைய சாயலில் கொண்டு வந்து, தேவனுக்கு இசைவான இருதய நிலையில் அவர்களைக்கொண்டு வந்திருக்கும்போது, மனுக்குலத்தையும் ஏற்றுக்கொள்ள தேவன் சித்தம் உள்ளவராகக் காணப்படுவார். ஆனால் கிறிஸ்துவினால் சீர்ப்பொருத்தப்பட்ட பிற்பாடு, உலகம் ஏற்றுக்கொள்ளப்படும் காரியமானது, தற்காலத்திலே சபை ஏற்றுக்கொள்ளப்படும் காரியத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாகும்.

நாம் (இப்பொழுது) ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது, நம்முடைய சுபாவ மாற்றத்தைக் குறிக்கின்றது; புதிய சுபாவத்திற்கு, அதாவது ஆவிக்குரிய சுபாவத்திற்கு நாம் ஜெநிப்பிக்கப்பட்டுள்ளோம்; மேலும் இந்த ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் அப்போஸ்தலர் விவரித்தப் பிரகாரமாக, தேவனுடைய கிருபையினால், கிறிஸ்து இயேசுவுக்குள்ளான மீட்பின் மூலமாய் இலவசமாக முதலாவதாக நாம் நீதிமானாக்கப்பட்டிருக்க, இரண்டாவதாக நாம், “”புத்தியுள்ள ஆராதனை செய்யத்தக்கதாக நம்முடைய சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக” ஒப்புக்கொடுக்க வேண்டும். இந்த “”அநுக்கிரக நாள்” என்பது, நம்முடைய பரம பிதா அபிஷேகம் பண்ணப்பட்டவரின் பலிகளை ஏற்றுக்கொள்வதற்குச் சித்தமாயிருக்கும் நாளைக் குறிக்கின்றதாய்க் காணப்படுகின்றது. பிற்பாடு சிலுவையில் நிறைவேற்றி முடிக்கப்பட்ட இயேசுவின் அர்ப்பணிப்புக்குரிய ஆரம்பப் பலியை மாத்திரமே பிதா ஏற்றுக்கொண்டவராய்க் காணப்பட்டார். இதன் அடிப்படையிலேயே பரமபிதாவானவர் முதலாம் உயிர்த்தெழுதலின் ஆசீர்வாதங்களாகிய கனம், மகிமை மற்றும் அழியாமைத் தொடர்புடைய மகா மேன்மையான பரிசைக்கொடுத்தார். இப்படியாகவே, இரட்சகரின் இரத்தத்தினால் நீதிமான்களாக்கப்பட்டு, அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்ற அவருடைய சரீர அங்கங்கள் யாவரின் பலிகளும் இந்த நிஜமான பாவ நிவாரண நாள் அன்று பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகின்றது. மேலும் இந்த “”மேன்மையான பலிகள்” முடிந்த பிற்பாடு, அதாவது நிழலான காளை மற்றும் வெள்ளாட்டின் பலிகள் கொடுக்கப்பட்டு முடிந்து, ஏற்றுக்கொள்ளப்பட்டப் பிற்பாடு, எந்தப் பலிகளும் தேவைப்படுவதுமில்லை (அ) ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை.

நமது கர்த்தர் அறிவித்த இந்த ஆச்சரியமான தீர்க்கத்தரிசனம் அவரிடத்திலும் நிறைவேற்றப்பட்டு, அவருடைய சரீரத்தின் அங்கங்களாகிய, அவருடைய உண்மையாக அர்ப்பணிக்கப்பட்ட பின்னடியார்களிடத்திலும் இன்னமும் நிறைவேறிக்கொண்டிருக்கின்றது. [R3301 : page 13] இதுவுங்கூட நிழலில் காட்டப்பட்டுள்ளது. ஆரோன் சிரசில் ஊற்றப்பட்ட பரிசுத்த அபிஷேகத் தைலமானது, அவருடைய வஸ்திரங்களிலும் வழிந்து ஓடினதாய்க் காணப்பட்டு, இப்படியாக சொல்லர்த்தமான அவருடைய சரீரத்தின் ஒவ்வொரு அங்கங்களையும் அபிஷேகம் பண்ணுகிறதாகக் காணப்படுகின்றது. இப்படியாகவே நமக்கும் உள்ளது. நாம் அபிஷேகம் பண்ணப்பட்டவரின் சரீர அங்கங்களாகவும் இருக்கின்றோம், மேலும் நமது தலையினுடைய விஷயத்தில் நடந்தவைகள், நம் ஒவ்வொருவரின் விஷயத்திலும் அப்படியாகவே காணப்படும். நாம் அனைவரும் பிரசங்கம் பண்ணுவதற்காக அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கின்றோம், மேலும் சாந்தமும், இருதயம் நறுங்குண்ட யாவருக்கும் வரவிருக்கின்ற இராஜ்யத்தைக்குறித்த நற்செய்தியை அறிவிக்க நாம் அனைவரும் கர்த்தரிடமிருந்து அதிகாரம் பெற்றுக்கொண்டவர்களாய் இருக்கின்றோம். மனுஷர்களுடைய இருதயத்தை நொறுக்குவதற்கே கர்த்தர் நோக்கம் கொண்டவராக நமக்குச் சுவிசேஷ செய்தியையும், பணியையும் கொடுத்திருக்கின்றார் என்று யூகிப்பது தவறாகும். அற்பமாய் இருக்கிறவர்களிடத்திலேயே நாம் விசேஷமாகப் போகும்படிக்கு நமக்குப் பணிகொடுக்கப்பட்டுள்ளது என்று அனுமானிப்பதும் தவறேயாகும். நம் மூலமாக வெளிப்படுத்தப்படும் செய்தியானது, சாந்தமுள்ளவர்களையும், இருதயம் நறுங்குண்டவர்களையும் தவிர வேறு எவரையும் ஈர்க்கும் என நாம் எதிர்ப்பார்க்கக் கூடாது. உண்மைதான், இருளின் மத்தியில் பிரகாசிக்கும் வெளிச்சமானது, இருளைக் கண்டிக்கிறதாகவும், பாவம், நீதி மற்றும் வரவிருக்கிற நியாயத்தீர்ப்புக் குறித்துக் காட்டுகிறதாகவும், நீதி மற்றும் அநீதிக்கு இடையிலான வித்தியாசத்தை வேறுபடுத்திக் காட்டுகிறதாகவும் இருக்கின்றது. ஆயினும் இவைகள் அனைத்தும் அச்செய்தியினால் நிகழக்கூடிய இதர அம்சங்களேயாகும். சுவிசேஷத்தின் உண்மையான பணி சாந்தமுள்ளவர்களையும், இருதயம் நறுங்குண்டவர்களையும் ஈர்ப்பதேயாகும்.

உலகத்திற்கான நம்முடைய பொதுவான செய்தியானது, அதாவது அவர்களால் கேட்க முடிந்த அளவிற்கு நாம் கூறுவது, சிறைப்பட்டவர்களின் விடுதலை மற்றும் இறுதியில் மரணத்தின் சிறைக்கதவுகள் திறக்கப்படும் என்றுமுள்ள பொதுவான செய்தியே ஆகும்; இன்னுமாக ஏற்றகாலத்தில் தேவனிடமிருந்து அவருடைய அபிஷேகம் பண்ணப்பட்டவர் மூலம், பூமியின் சகல குடிகளும் சத்தியத்தின் அறிவாகிய மாபெரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் அவர்கள் தேவனை அறிந்துக்கொள்ளவும், பரிசுத்தமான பெரும்பாதையான வழியில் திரும்பச் செல்லத்தக்கதாகவும் அவர்களுடைய செவிடான செவிகள் திறக்கப்படும் என்றும், புரிந்துக்கொள்ளுதலின் கண்கள் திறக்கப்படும் என்றும், ஆயிரம் வருஷம் அரசாட்சியின் திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்கள் இறுதியில் அவர்களுக்கே உரியது என்றுமுள்ள பொதுவான செய்தியே ஆகும். ஆனால் இன்று கேட்கும் செவிகளை உடையவர்களுக்கு இன்னும் அதிகமான விஷயங்களை நாம் கூறலாம். சாத்தான், பாவம் மற்றும் மாம்சத்தின் பெலவீனத்தினுடைய ஆளுகையிலிருந்து அவர்களின் விடுதலையைக்குறித்து நாம் அவர்களுக்குக் கூறலாம். இன்னுமாக ஒருவேளை அவர்கள் இயேசுவை விசுவாசித்து, தங்களால் முடிந்தமட்டும் மாம்சத்தின்படி நடக்காமல், ஆவியின்படி நடக்க நாடுவார்களானால், நம்முடைய இரட்சகரினால் பாவங்களுக்காகச் செலுத்தப்பட்ட மாபெரும் பலியின் புண்ணயத்தினால் அவர்களுடைய கடந்தகால பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும், அவர்களுடைய தற்கால பெலவீனங்களும், குறைவுகளும் மூடப்படும் என்றும், நாம் அவர்களுக்குத் தேவனுடைய நாமத்தில் நிச்சயம் கொடுக்கலாம். விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படும் காரியமானது, இப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்கும், ஊழியக்காரிகளுக்குமே உரியதாகும், ஆனால் உலகத்திற்கான உண்மையான நீதிமானாக்கப்படுதல் (அ) பாவம் மற்றும் சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுதலாகிய மகிமையான ஏற்பாடானது, சாத்தான் கட்டப்பட்டு, ஜனங்கள் இனி மோசம் போக்க முடியாத வரவிருக்கிற யுகத்திற்கே உரியதாகும்.

கிருபையற்ற இருதயங்களுக்குக் கிருபையான வார்த்தைகள்

நமது கர்த்தருடைய உரையாடல் பதிவு செய்யப்படவில்லை, எனினும் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வசனத்தை அடிப்படையாகக்கொண்டிருப்பதினால், அவருடைய உரையாடல் சிறப்பாய்க் காணப்பட்டிருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அவருடைய வாயிலிருந்து, கிருபை நிறைந்த வார்த்தைகள், சமாதானம், ஆறுதல், ஆசீர்வாதம் மற்றும் தயவுள்ள வார்த்தைகளாய் இருந்தது என அங்கிருந்த அனைவரும் அவருக்கு நற்சாட்சிகொடுத்தனர். தம்முடைய ஆயிரம் வருஷம் அரசாட்சியில், தம்முடைய மீட்பின்/பலியின் வேலையின் நிமித்தம் சுதந்தரிக்கப்பட்ட, உலகத்தின் மீது வரவிருக்கிறதான ஆசீர்வாதங்களைக்குறித்து எந்த அளவிற்குக் கர்த்தர் விளக்கினார் என்பது நமக்குத் தெரியவில்லை. அவருடைய வயதான அயலகத்தாரும், நண்பர்களும், அவரைக்குறித்து மிகவும் உயர்வான அளவில் எண்ணத் துவங்கினார்கள், மேலும் தீர்க்கத்தரிசியானவன் தன்னுடைய சொந்த ஊரிலும், உறவினர்கள் மத்தியிலும் அங்கீகரிக்கப்படமாட்டான் என்று முன்னொரு காலத்தில் பேசப்பட்ட பழமொழியானது மறுக்கப்பட வேண்டிய நிலை உருவாகி உள்ளது என்பது போன்று தோன்றியது. இன்னுமாக அவருடைய சொந்த ஊரார் அவரை உண்மையில் மாபெரும் தீர்க்கத்தரிசியென ஏற்றுக்கொள்வது போன்றும், அவரினால் மகிழ்ச்சிகொள்வது போன்றும், அவர் தங்களுடைய ஊரானாக இருந்ததினால், அதாவது நாசரேத்து ஊராராகிய இயேசுவாக இருப்பதினால் அவர் நிமித்தம் பெருமை கொள்வது போன்றும் தோன்றிற்று.

ஆனால் அவரைக்குறித்த அவர்களுடைய பாராட்டு சிறு கணங்களே நீடித்ததாகக் காணப்பட்டது! அவர்களுடைய சுபாவத்தின்படியான மனதும், விபரீதமான யோசனைகளும், அனைத்தையும் தலைகீழாக்கிப் போட்டுவிட்டதோடல்லாமல் அவருடைய ரசிகர்களை, அவருடைய சத்துருக்களாகவும் மாற்றி, அவரை வெறுத்து, அவருடைய ஜீவனைக் கொன்றுபோடும்படியாக நாடவும் செய்தது! அவர்களோ, “”இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா?” என்று கூற ஆரம்பித்தார்கள். மேலும் யூதேயாவிலும், அருகாமையிலுள்ள பட்டணமாகிய கப்பர்நகூமிலும் அவரால் மாபெரும் அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது என்று கேள்விப்பட்டிருந்ததினால், தங்கள் மத்தியில் இயேசு எவ்விதமான வல்லமையான கிரியைகளைச் செய்யப்போகிறாரோ என்று யோசிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். அவர்களுடைய எண்ணங்களை அறிந்துக்கொண்டவராக, “”அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்” என்றார் (லூக்கா 4:23).

நாசரேத்தில் ஏன் நமது கர்த்தர் அற்புதங்கள் செய்ய மறுத்துவிட்டார் என்று நமக்குத் தெரியவில்லை. ஆயினும் நாம் அனுமானிப்பது என்னவெனில், “”நாசரேத் அவருடைய சொந்த ஊராய் இருந்தபடியினால், அவர் அனைவருக்கும் அறிமுகமானவராக இருந்தார்; மேலும் ஜெப ஆலயத்தில் அவர் அவர்கள் மத்தியில் முன் நாட்களிலும் கூட வேத வாக்கியங்கள் வாசித்திருந்திருப்பார் என்பதிலும் ஐயமில்லை, ஆகவே அவ்வூர் ஜனங்கள், அற்புதம் என்னும் சான்று (attestation) அளிக்கப்படாமலேயே நற்செய்தியை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாய் இருந்திருக்க வேண்டும்; ஆனால் கர்த்தரை யார் என்று தெரியாத மற்றப் பட்டணங்களில், இயேசுவை நம்புவதற்கான சான்றாக அற்புதங்கள் தேவைப்பட்டது. இன்னுமாக அவரோடு தனிப்பட்ட விதத்தில் பழக்கமோ (அ) அற்புதங்களோ, இவைகளில் ஏதேனும் ஒன்று சான்றாகக் கொடுக்கப்படாமல், அவரையும், அவருடைய போதனைகளையும் ஜனங்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட முடியாது. நமது கர்த்தருடைய அற்புதங்களானது, திரும்பக்கொடுத்தலின் காலங்கள் இன்னமும் வராததினால், திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்களாக இருப்பதற்கு நிகழ்த்தப்படாமல், நமது கர்த்தருடைய போதனைகளுக்குச் சான்றாகவும், சாட்சியாகவும், மதிப்புச் சேர்ப்பதாகவும், வலுகொடுப்பதாகவும், உறுதி கொடுக்கிறதாகவும் அமைவதற்கே அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டது. நாசரேத்தின் ஜனங்கள் அற்புதங்களை எதிர்ப்பார்த்திருக்கக் கூடாது, அவர்களுக்கு அற்புதங்கள் அவசியமும் இல்லை, ஏனெனில் இயேசுவோடு அறிமுகம்/பழக்கம் எனும் மற்றொரு சான்று அவர்களிடத்தில் இருந்தது என்பதேயாகும்.

உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா

மத்தேயு 7:22-23
(திருவிவிலிய மொழிப்பெயர்ப்புச் சரியானது)

நம்முடைய நாட்களில் பொருந்தக்கூடிய ஒரு படிப்பினையை இந்தச் சம்பவத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்ளலாம். இன்று கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் அற்புதங்கள் செய்யப்படுவது அவசியமாய் இராதபடியினால், அற்புதங்கள் மறைந்து போயின. அற்புதங்கள் கடந்து/மறைந்து போய்விட்டதற்கான காரணம், கர்த்தர் வல்லமையில் குறைவுபட்டுப் போய்விட்டார் என்பதினால் அல்ல, மாறாக திரும்பக்கொடுத்தலின் காலங்கள் இன்னும் வரவில்லை என்பதினால், சுவிசேஷ செய்திக்கான [R3301 : page 14] அறிமுகமாக இருக்க அவசியப்பட்ட அற்புதங்கள் பின்னர் தொடர்ந்துக் காணப்படவில்லை. ஆகவே இன்று காணப்படக்கூடிய சகலவிதமான நோய்களைச் சொஸ்தப்படுத்துவதற்குரிய தெய்வீக வல்லமையை, நாம் கண நேரங்கூட சந்தேகிக்கவில்லை என்றாலும், தற்காலத்தில் நடத்தப்படும் அற்புதவிதமான சொஸ்தமாக்குதல்களையே நாம் சந்தேகிக்கின்றோம், இவைகள் மோர்மான்ஸ் (யோசேப் ஸ்மித் என்பவரினால் ஸ்தாபிக்கப்பட்ட சபை பிரிவு) அல்லது கிறிஸ்தவ விஞ்ஞானிகள் அல்லது கிறிஸ்தவக் கூட்டணி மக்கள் அல்லது ஆவி உலக ஊடகர்கள் (அ) திரு. டவுகி மற்றும் அவர் சீஷர்கள் (அ) மற்றவர்களால் செய்யப்படுகின்றதா என்றே நமக்கு சந்தேகம் எழுகின்றது. “”உங்களை நான் என்னுடைய உண்மையுள்ள சீஷர்களாக அறியேன்” என்று கர்த்தர் சொல்லப்போகிறவர்கள் செய்த “”வல்ல செயல்களில்” சில என்றே இந்த அற்புதங்களை நாமும் பார்க்கத்தக்கதாக மனம் சாய்கின்றது.

சாத்தானும், அவனுடைய வேலைகளும் சந்தேகத்திற்கிடமின்றி, ஜீவனுக்கும், சொஸ்தப்படுத்துதலுக்கும் எதிர்மாறானதேயாகும். எனினும், தன்னுடைய வசதிக்கேற்ப அவன் தனது வழிமுறைகளை மாற்றி, பிரசங்கிப்பவனாகவும் (அ) சொஸ்தப்படுத்துகிறவனாகவும் ஆகுவதற்கு விருப்பம் கொண்டவனாகவும், இப்படிச் செய்வதற்கு நன்கு வல்லமையுள்ளவனாகவும் காணப்படுகின்றான். இவ்விஷயத்தைக் குறித்துக் கர்த்தர் பேசுகையில், சாத்தானுடைய இத்தகைய போக்கு/நடைமுறையானது அவனுடைய இராஜ்யத்தின் வீழ்ச்சிக்கே வழிநடத்துகின்றதாய் இருக்கும் என்றும், சாத்தான் மனுக்குலத்தின் மீது செயல்படுத்திக் கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகள் மற்றும் குருட்டு நம்பிக்கைகளை நிலைநிறுத்த வேண்டுவதற்கு இத்தகைய பிரயாசங்கள் ஏறெடுப்பது அவனுக்கு அவசியமாய் இருக்கும் என்றும், கர்த்தருடைய உண்மையான அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களின் மனங்களுக்குள்ளும், இருதயங்களுக்குள்ளும் தற்கால சத்தியத்தின் மகிமையான ஒளியானது படிப்படியாகப் பிரவேசிப்பதிலிருந்து, கவனத்தைத் திருப்புவதற்கு இத்தகைய பிரயாசங்கள் ஏறெடுப்பது அவனுக்கு அவசியமாய் இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றார்.

கர்த்தருடைய ஜனங்களைப் பொறுத்தமட்டில், தற்கால வேளையானது, பலிச் செலுத்துவதற்கான வேளையாய் இருக்கிறதே ஒழிய, சீர்த்திருத்தித் திரும்பக்கொடுத்தலுக்கான/ திரும்ப அனைத்தையும் பெற்றுக்கொள்வதற்கான வேளையாய் இல்லை, அதாவது தங்களைக் காத்து இரட்சித்துக்கொள்வதற்கான வேளையாய் இராமல், தங்கள் ஜீவனை ஒப்புக்கொடுக்கின்ற வேளையாய் இருக்கின்றது, அதாவது தங்களின் அழிந்துபோன சரீரங்களைச் சீர்ப்படுத்துவதற்கான வேளையாய் இராமல், தங்களுடைய நறுங்குண்ட இருதயங்களைக் கட்ட வேண்டிய வேளையாய் மாத்திரம் இருக்கின்றது. அதாவது நிஜமான/உண்மையான விடுதலைக்குரிய வேளையாய் இராமல், பாவம் மற்றும் மரணத்தினின்று விடுவிக்கப்பட்டவர்களாய்க் கருதப்பட வேண்டிய வேளையாய் மாத்திரம் இருக்கின்றது. உலகத்தைப் பொறுத்தமட்டில், மேசியாவின் மகத்துவம் குறித்தும், போதகருக்கு உரியதான அவருடைய ஆற்றல் குறித்தும் எப்பக்கத்திலும் தற்போது போதுமான அளவு சாட்சிப் பெற்றிருப்பதினால், மேசியாவின் மகத்துவம் பற்றி அறிய உலகத்திற்குத் தற்காலிகமான நோய் சுகமாக்கும் விஷயங்கள் அவசியமில்லை, மேலும் உலகத்தின் நோய்கள் நிரந்தரமாக சொஸ்தமாக்கப்படப்போகிற வேளையும் இன்னமும் அவர்களுக்கு வரவுமில்லை. மேலும் அப்போஸ்தலர் பேதுரு சுட்டிக்காட்டுவது போன்று, கர்த்தருடைய இரண்டாம் வருகையில், அவருடைய ஆயிரம் வருஷம் இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுகையிலேயே, நிரந்தரமாக நோய்களைச் சொஸ்தமாக்கும் அந்த வேளைவரும்; “”ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும்” (அப்போஸ்தலர் 3:19).

சுயநலத்தின் அடிப்படையில் நாசரேத்தின் ஜனங்கள் இயேசுவின்மேல் விருப்பமுள்ளவர்களாய் இருந்தார்கள், அதாவது தங்களுடைய பட்டணத்தை அவர் சார்ந்தவர் என்ற விதத்தில் பெருமைகொண்டிருந்தனர்; இன்னுமாக மற்றப் பட்டணங்களில் அவர் செய்த மாபெரும் அற்புதங்களைக்காட்டிலும் தமது சொந்த ஊரில் இரண்டு மடங்குக்கும் மேலாக செய்வார் என்று எதிர்ப்பார்க்கவும், செய்தார்கள். ஆனால் அப்படிப்பட்ட அற்புதங்களை, தாம் செய்வதில்லை என அவர்களுக்கு அவர் அறிவித்தபோது, ஏமாற்றமடைந்து கோபம் கொண்டார்கள். அவர்களுடைய கோபத்தைத் தணிக்க முடியவில்லை. கோபத்தினால் நிரம்பினவர்களாக அவர்கள் எழுந்து [R3302 : page 14] அவரைக்கொன்று போடும்படிக்கு (அ) கீழே தள்ளி, அவரை முடமாக்கும் நோக்கத்திற்காக ஊருக்குப் புறம்பே தள்ளி, சுமார் 40 (அ) 50 அடி உயரமுள்ள செங்குத்தான மலை இருக்கும் திசையை நோக்கி அவரைக்கொண்டு சென்றனர்.

உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்

விழுந்துபோன நிலையில் காணப்படும் மாம்ச சுபாவத்தின்படியான மனுஷனுடைய நிலையைப் பற்றின காட்சியை நம்மால் இங்குப் பார்க்க முடிகின்றது! ஒரு நிமிடம் ஆண்டவரின் கிருபையான வார்த்தைகளின் நிமித்தம் களிக்கூருகின்றனர், ஆனால் தங்களுடைய சுயநலமான நம்பிக்கைகளும், எதிர்ப்பார்ப்புகளும், இலட்சியங்களும் ஏமாற்றமடையும்போது, அடுத்த நிமிடமே அவரை அழித்துவிட வேண்டும் என்று விரும்புகின்றனர். அந்தக்காலம் முதல் கர்த்தருடைய ஜனங்களின் விஷயத்திலும் இப்படியாகவே காணப்படுகின்றது; குறிப்பாக இந்தச் சுவிசேஷ யுகத்தின் அறுவடை காலமாகிய தற்காலத்திலும் கூட இது உண்மையாகவே இருக்கின்றது. சகல ஜனங்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை அநேகர் கேட்கின்றனர். மேலும் அது ஏற்றுக்கொள்ள தகுந்த மாபெரும்/மகத்துவமான சுவிசேஷச் செய்தி என அவர்கள் அறிக்கையிட்டாலும், சுயநலமான நோக்கங்கள் காரணமாக, அதாவது தனி மதப் பிரிவு ஏற்படுத்தும் விருப்பமும், இந்தச் சுவிசேஷச் செய்திக்குப்பதிலாகத் தங்களுக்குப் பிரியமான ஒரு பிரிவை, கூட்டத்தாரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வும், அவர்களையே களங்கத்திற்குள்ளாக்கி விடுகின்றது. அதாவது கொஞ்சம் முன்பு கிருபையான அச்செய்தியில் களிக்கூர்ந்தவர்கள், தங்களின் சுயநோக்கம் காரணமாக தீமை செய்ய ஏவப்படுகின்றனர்.

கர்த்தர் தம்மை எதிர்ப்பவர்கள், தங்களுடைய உண்மையான ஆவியை வெளிப்படுத்தும் அளவுக்குச் செல்லத்தக்கதாக, காரியங்களை அனுமதித்தார்; பின்னர் தம்முடைய கண்ணின் பார்வையினால் அவர்களைப் பயமுறுத்தி பணியவைத்து, அவர்கள் மத்தியிலிருந்து தொல்லைப்படுத்தப்படாமல் கடந்து போய்விட்டார். இவ்வல்லமையை அவர் தம்முடைய வேளை இன்னமும் வராதபடியினால், செயல்படுத்தினார். இப்படியாகவே அவருடைய சரீரத்தின் அங்கமாகிய நம் அனைவரின் விஷயத்திலும் கூடப் பொருந்தும். குமாரன் தம்முடைய வேலையை நிறைவேற்றி முடிப்பதற்கெனப் பிதா ஒரு ஏற்றவேளை கொண்டிருந்தது போல, கிறிஸ்துவின் சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினுடைய விஷயத்திலும் தெய்வீக முன்னேற்பாடானது காரியங்களை நடத்திக்கொண்டிருக்கின்றது என்பதில் ஐயமில்லை; ஆகையால் தெய்வீகக் கவனத்தை மீறி, அவர்களுடைய தலையிலிருந்து ஒரு முடிக் கூடக் கீழே விழுவதில்லை; இன்னுமாக அவர்களுடைய வேளை வரும்வரையிலும், அதாவது பிதா அவர்களுக்கென்று கொடுத்திருக்கும் வேலையை அவர்கள் நிறைவேற்றி முடிப்பதுவரையிலும், அதாவது இராஜ்யத்திற்கு அவர்கள் தகுதியடையத்தக்கதாக அவர்களுக்குத் தேவைப்படும், செதுக்குதல்களையும், மெருகூட்டுதல்களையும் அவர்கள் அனுபவிப்பதுவரையிலும் அல்லது தங்களுடைய சுயசித்தத்தின்படி அவர்கள் தங்களையே கர்த்தரின் கரத்தினின்று எடுத்துப் போடுவதுவரையிலும் அல்லது அவருடைய அடிச்சுவடுகளில் நடக்க அவர்கள் மறுப்பதுவரையிலும், அவர்களது ஜீவன் பிதாவின் பார்வையில் விலையேறப்பெற்றதாய் இருந்து; அவர்களுக்கான வேளை வருவது வரையிலும், எந்த ஒரு விதத்திலாகிலும் அவர்களிடமிருந்து ஜீவன் எடுக்கப்பட முடியாது.

அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால்…

நமது பாடத்தின் ஆதார வசனமானது, நாம் இப்பாடத்தில் அவர் நாசரேத்தில் புறக்கணிக்கப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் நிறைவேறாமல், ஒட்டுமொத்த இஸ்ரயேல் தேசத்தாராலும் அவர் புறக்கணிக்கப்பட்டதிலேயே நிறைவேறினது. ஓட்டுமொத்த தேசமும் கர்த்தரைப் புறக்கணித்தாலும், தனிப்பட்ட நபர்கள் அவரை ஏற்றுக்கொண்டார்கள் என அப்போஸ்தலர் இங்குச் சுட்டிக்காட்டுகின்றார். ஆகவே இஸ்ரயேல் தேசத்தாரை அவர் ஒரு தேசமாக புறக்கணித்தாலும், அவருடைய சீஷர்களான இந்த உண்மையுள்ள தனிப்பட்ட நபர்கள் அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, புத்திரர் வீட்டாரின் அங்கங்கள் ஆகுவதற்கான சுயாதீனம் அளிக்கப்பட்டனர்; மேலும் பெந்தெகொஸ்தே நாளன்று இவர்கள் புத்திர சுவிகாரத்தின் ஆவியை, அதாவது புதிய சுபாவத்திற்குள் ஜெநிப்பிக்கப்படும் ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள்.

மாம்சீக இஸ்ரயேலர்களின் இந்த அனுபவத்திற்கு இணையானதை நாம் நிஜமான இஸ்ரயேலர்கள், அதாவது பெயரளவிலான ஆவிக்குரிய இஸ்ரயேலர்களிடத்திலும் காணலாம். நமது கர்த்தருடைய இரண்டாம் வருகையின்போது, அவருடைய ஜனங்கள் என்று அறிக்கை செய்துகொள்ளும் கிறிஸ்தவ மண்டலத்தாரிடம் வரும்போது, தீர்க்கத்தரிசிகளின் மூலம் உரைக்கப்பட்டதற்கு இசைவாகவே அவர் மீண்டுமாகப் புறக்கணிக்கப்பட்டார், எனினும் அனைவராலும் அவர் புறக்கணிக்கப்படவில்லை. யூதர்களில் சிலர் அன்று அவரை ஏற்றுக்கொண்டு, அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற ஆயத்தமாய் இருந்ததுபோன்று இன்றும் கூட, “”உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும் நீங்கள் பாக்கியவானாய் [R3302 : page 15] இருக்கிறீர்கள்” என்ற அவருடைய வார்த்தைகள் பொருந்தக்கூடிய சிலர் காணப்படுகின்றனர். கர்த்தரை ஏற்றுக்கொண்டு, இன்று ஆவிக்குரிய வீட்டாரில் ஒருவராகக் காணப்படுகிறவர்கள் இன்னமும் ஏற்றவேளையில் மாபெரும் ஆசீர்வாதமாகிய, நிஜமான பெந்தெகொஸ்தே ஆசீர்வாதமாகிய மகிமையடைதலைப் பெற்றுக்கொள்வார்கள். சீக்கிரமாக இந்தச் சுவிசேஷ யுகத்தின் கோதுமை வகுப்பார் ஆசீர்வதிக்கப்பட்டு, “”தங்களுடைய பிதாவின் இராஜ்யத்தில் சூரியனைப்போன்று பிரகாசிக்கத்தக்கதாக” மாற்றப்படுவார்கள் (மத்தேயு 13:43). இவ்விதமாக, கர்த்தர் இஸ்ரயேலின் இரு வீட்டாருக்கும் தடுக்கலின் கல்லாகவும், உண்மையுடன் இரு வீட்டாரிலும் காணப்படும், சிலருக்கு ஆசீர்வாதமுமாகவும் இருக்கின்றார் என நாம் பார்க்கின்றோம். இவர்கள் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களாகவும், அவருடைய சரீர அங்கங்களாகவும், அவருடைய மணவாட்டிகளாகவும் இருப்பார்கள், மேலும் தற்காலத்தில் இவர்கள் அவரோடு கூட அபிஷேகம் பண்ணப்படுவதிலும், பாடுபடுவதிலும் மாத்திரம் பங்கடையாமல், பூமியின் சகல குடிகளையும், கர்த்தரை அறிகிற அறிவினாலும், உலகிலுள்ள மனுக்குலம் விரும்பும் பட்சத்தில் மீண்டும் தேவனுடைய தயவிற்குள் வருவதற்கான வாய்ப்பினாலும், ஆசீர்வதிக்கும் எதிர்க்கால வேலையின் மகிமையிலும் அவர்கள் அவரோடு கூடப் பங்கடைவார்கள்.”