R5128 (page 344)
மாற்கு 9:14-29
“”இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்”- மாற்கு. 9:23.
இயேசுவும், அவருடைய அபிமான மூன்று அப்போஸ்தலர்களும் மறுரூப மலையில், மகிமையின் விஷயங்களைக் கண்டுவிட்டு, மலையிலிருந்து இறங்கி வந்தபோது, மலையின் அடிவாரத்தில் திரளான ஜனக்கூட்டம், அவருடைய மீதமுள்ள ஒன்பது அப்போஸ்தலர்களைச் சூழ்ந்திருக்கக் கண்டார்கள். ஒரு தகப்பன், தன்னுடைய குமாரனிடத்தில் காணப்பட்ட அசுத்த ஆவியை வெளியே அனுப்பும்படிக் கேட்க வந்தபோது, அப்போஸ்தலர்கள் அதைத் துரத்த முயற்சித்தும், கூடாமற்போயிற்று.
இப்படியே சில கர்த்தருடைய ஜனங்களின் விஷயத்திலும் நடக்கின்றது. அதாவது, அவர்கள் அடிக்கடி விசுவாசத்தில் மலைகளுக்கு அதாவது, இராஜ்யத்திற்குப் போவதுண்டு. மேலும், விசுவாசத்தில் அவர்கள் மகிமையின் கர்த்தரைத் தரிசித்து, அவருடைய மகிமையில் பங்கடைய வேண்டுமெனில், அவரோடு கூடப் பாடுபட வேண்டும் என்ற வார்த்தைகளைக் கேட்பதுண்டு. அவர்கள் மகிமையான விஷயங்களைக் குறித்த சிந்தனையின் உச்சக்கட்டத்திற்குப் போய்விட்டு, கீழே இறங்கி, தற்காலத்திலுள்ள (நிஜவாழ்க்கையின்) உண்மைகளை எதிர்க்கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது; அதாவது, எதிராளியானவன் இன்னும் உலகத்தை தன் வசத்திலேயே வைத்திருக்கின்றான் என்றும், அநேகர் அவனுக்கு அடிமைகளாகவும், அவனுடைய ஏமாற்றத்துக்கு ஆளானவர்களாகவும் காணப்படுகின்றார்கள் என்றும், அவனை வெளியேற்றுவதற்கு எந்தப் பூமிக்குரிய வல்லமைகளும் போதுமானதாக இல்லை என்றுமுள்ள நிஜவாழ்க்கையின் உண்மைகளை எதிர்க்கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது. ஒருவேளை போதகர் சபையோடு காணப்படும்போது, இறுதியில் அனைத்திலும் வெற்றிக் கிடைக்கும்.
[R5128 : page 345]
சிலரில் அசுத்த ஆவி எப்போதும் குடிக்கொண்ட நிலையில் காணப்பட்டாலும், இச்சம்பவத்தில் வரும் சிறுவன் அவ்வப்போது, ஒரு தீய ஆவியினால் ஆட்கொள்ளப்படுகின்றான். தீய ஆவி இந்தப் சிறுவனுக்குள் வரும்போது, அவனை அலைக்கழித்து, நுரைத்தள்ளச் செய்து, அவனைக் கொல்லும்படி, சில சமயம் தீயிலும், தண்ணீரிலும் தள்ளிப் போட்டது. அவனுடைய பெற்றோர்கள், அவன் சுகம் பெறுவதற்கென, இயேசுவினிடத்தில் கொண்டு வந்தார்கள். ஆனால், இயேசு இல்லாத காரணத்தினால் அவர்கள், அங்கிருந்த மீதமுள்ள ஒன்பது அப்போஸ்தலர்களின் உதவியை நாடினார்கள். ஆனாலும், அப்போஸ்தலர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. தீய ஆவியை அவர்களால் துரத்தக் கூடாமற்போயிற்று.
துரத்த முடியாத சீஷர்கள் தடுமாறினார்கள். அதுவரையிலும் தங்களுடைய போதகரின் நாமத்தினால், தீய ஆவிகளைத் துரத்துவதில் முடியாமற்போனதில்லை. வேதபாரகர்களும் அவர்களுடன் தர்க்கித்துக் கொண்டிருந்தார்கள். இயேசுவும், மூன்று சீஷர்களும் மலையிலிருந்து கீழே இறங்கி வருகிறதைக் கண்டு, திரளான ஜனங்கள், இயேசுவுக்கு வந்தனஞ் சொல்லி, அவரைச் சூழ்ந்துக் கொண்டார்கள். இயேசு அப்போஸ்தலர்களுக்கு உதவும்படி, அவர்களுடைய பிரச்சனையை வினவினார். “”அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைத்தள்ளி, பல்லைக் கடித்து, சோர்ந்துப்போகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார். அவனை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைத்தள்ளிப் புரண்டான். அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது; இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்” (மாற்கு 9:17-22).
“”இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்” (மாற்கு 9:23). தெய்வீக வல்லமையின் மேலுள்ள விசுவாசத்தைச் செயல்படுத்தும்/காட்டும் விஷயத்தில் கர்த்தர் எவ்வளவு அழுத்தம் கொடுக்கின்றார். “”விசுவாசமில்லாமல், தேவனுக்குப் பிரியமாய் இருப்பது கூடாத காரியமாகும்.” விசுவாசத்தைச் செயல்படுத்தாதவர்களுக்கு, ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள முடியாது. அதாவது, விசுவாசத்தைச் செயல்படுத்துகிறவர்கள் பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதத்தை, விசுவாசிக்காதவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது. நம்முடைய விசுவாசத்தை எந்தளவுக்குச் செயல்படுத்துகின்றோமோ, அந்தளவுக்கு ஆசீர்வாதங்கள் பெருகுகின்றது. இவ்விதமாக, இந்தக் குணலட்சணங்களுக்கு உயர் மதிப்பைக்கொடுத்து, தம்முடைய தயவைப் பெற்றுக்கொள்ள இது அவசியமானது என்று கர்த்தர் காட்டுகின்றார்.
[R5129 : page 345]
தற்போது விசுவாசத்தைச் செயல்படுத்தாத ஜனங்கள், ஒருபோதும், எவ்வித ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நாம் புரிந்துக்கொள்ளக் கூடாது. மாறாக, இவர்களுக்கும் சில மகா மேன்மையான வாக்குத்தத்தங்களை அருளியுள்ளார். இத்தகையவர்களுக்கு மேசியாவின் இராஜ்யத்தில் விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலின் பாதை மிக எளிமையாகக் காணப்படுவதால், இவர்கள் அனைவரும், அதில் பிரவேசித்துப் பலனை அதாவது, தற்காலத்திலேயே விசுவாசமும், கீழ்ப்படிதலும் காட்டுகிறவர்களைக் காட்டிலும் குறைவான பலனை அடைவார்கள்.
இதற்கான காரணம் வெளிப்பட்டுள்ளது. இயேசுவுடன் உடன்சுதந்தரவாளிகளாக இருப்பதற்கும், அவருடைய மகிமையான மேசியாவின் இராஜ்யத்தில் பங்கடைவதற்குமென, உண்மையும், கீழ்ப்படிதலுமுள்ள ஒரு விஷேசித்த வகுப்பாரைத் தேவன் இப்பொழுது தேடிக் கொண்டிருக்கின்றார். உலகம் முழுவதும் தம்முடைய ஆசீர்வாதத்தைப் பரப்புவதற்கு, தேவன் இக்காலத்தில் ஒரு வகுப்பாரைத் தெரிந்தெடுத்துக் கொண்டிருக்கின்றார். மேலும், தம் மீது முழுமையான விசுவாசம் காட்டக் கூடியவர்களை மாத்திரம், இவ்வகுப்பாரின் அங்கங்களாகத் தெரிந்துக்கொள்ள தேவன் விரும்புகின்றார். “”உன்னுடைய விசுவாசத்தின்படியே உனக்கு ஆகக்கடவது” எனும் விதமே, சபையினிடத்தில் தேவன் கையாளுகிறவிதமாக உள்ளது.
இந்த அற்புதத்திலும் சரி, மற்ற அற்புதங்களிலும் சரி, சுகம் கொடுப்பதற்கு, கர்த்தர் விசுவாசத்தையே எதிர்ப்பார்த்தார். இவ்விதமாகத் தமக்கு வரவிருக்கிற மகிமையையும், தமது இராஜ்யத்திற்குரிய வல்லமையையும், வெளிப்படுத்தினார். இராஜ்யத்தின் காலகட்டத்தில், சாத்தானையும் மற்றும் பாவத்தின் ஒவ்வொரு வல்லமையையும் வெளியேற்றுவதற்கும், தங்களுடைய மாம்சத்தில் சுகமாக்குதலை அனுபவிக்கிறதற்கும் ஏதுவாக, தங்கள் விசுவாசத்தைச் செயல்படுத்த விரும்புகிற யாவருக்கும் உதவி கொடுக்கப்படும் மற்றும் தெய்வீக வல்லமை செயல்படுத்தப்படும்.
இயேசுவின் வார்த்தைகளிலிருந்து அந்த ஏழை தகப்பன், பிரச்சனை தன்னிடத்தில் இருக்கின்றது என்றும், தான் விசுவாசம் காட்டவில்லையெனில், தன்னுடைய குமாரன் சுகம்பெற முடியாது என்றும் உணர்ந்துக் கொண்டு, “”உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்” (மாற்கு 9:24). அவருடைய விசுவாசத்துக்குரிய பலனைப் பெற்றுக்கொண்டார். அந்தத் தீய ஆவி, அவனிடத்திலிருந்து வெளியேறவும், அவனிடத்தில் இனி ஒருபோதும் பிரவேசிக்கக் கூடாது என்றும் இயேசு கட்டளையிட்டார். இதுவே சுகம் பெற்றதற்கான விசேஷமான அறிகுறியாகும். அந்தத் தீய ஆவி, அவனைவிட்டு அநேகந்தரம் வெளியே போனாலும், மீண்டும் அவனுக்குள் திரும்பி வந்தது. அவனை விட்டு வெளியேறவும், மீண்டும் ஒருபோதும் வரக்கூடாது என்பதே கர்த்தருடைய கட்டளையாக இருந்தது.
தீய ஆவி வெளியேறும்போது, அது அவனை அழ வைப்பதற்கும், அவனுக்கு வலி முதலியவற்றை ஏற்படுத்துவதற்கும் போதகர் ஏன் அனுமதித்தார் என்று யோசிக்கலாம். அதை வெளியேற்றுவதற்கே கர்த்தருக்கு வல்லமை இருக்குமாயின், அது வெளியேறும் விதத்தை, கட்டுப்படுத்தும் வல்லமையும் அவரிடத்தில் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்தத் தீய ஆவியானது எவ்வளவு வன்மமும், தீமையும் கொண்டது என்று விவரித்துக் காட்டுவதற்கு, அது வெளியேறும் விதத்தைத் தெரிந்துக்கொள்வதற்கு இயேசு அனுமதித்தார் என்று நாம் அனுமானிக்கின்றோம்.
சிறுவன் செத்த நிலையிலிருப்பதுபோன்று காணப்பட்டான். இயேசு, அவன் கையைப் பிடித்து அவனைத் தூக்கிவிட்டார். எதிராளியானவனும், அவனுடைய வல்லமையும் உலகத்திலிருந்து துரத்தப்படுவதோடல்லாமல், உலகமானது பாவம் மற்றும் மரணத்திலிருந்து தூக்கி எடுக்கப்படுவதற்கு, தெய்வீக வல்லமையின் கரங்கூட அவசியப்படுகின்றது என்ற பாடம் நமக்கு இங்குள்ளது. வேத வாக்கியங்களின் அடிப்படையில் நாம் பார்க்கும்போது, சாத்தான் கட்டப்படும் காலத்திற்கும், மனுகுலத்தின் மீதான அனைத்துத் தீமையின் ஆதிக்கங்களும் எடுத்து மாற்றப்படுவதற்குமான காலம் சமீபித்துள்ளது. வேத வாக்கியங்களின் அடிப்படையில் நாம் பார்க்கையில், இந்தச் சாத்தான் கட்டப்படுங்காலம், மகா உபத்திரவக் காலத்தில் அதாவது, ஒரு ஜாதியாரும் பார்த்திராத உபத்திரவக் காலத்தில் நிறைவடையும். மேலும், மனுக்குலம் அப்பொழுது செத்த நிலையில் விடப்பட்டிருக்கும். மனுஷருடைய பெருமை, நம்பிக்கை, இலட்சியங்கள், அந்தப் பயங்கரமான உபத்திரவக் காலத்தில் மறைந்துவிடும். ஆனால், அப்போது அவர்களைத் தூக்கி விடும்படிக்கு, போதகர் தமது இராஜ்யத்தில் காணப்படுவார்.
மேசியாவின் இராஜ்யமானது எதிராளியானவனைக் கட்டி, அவன் மீண்டும் மனுக்குலத்திற்குள் பிரவேசியாதே என்று கட்டளையிடுவதோடல்லாமல், விழுந்துபோனவர்களை ஆதாமுக்குக் கொடுக்கப்பட்ட தெய்வீக நியமங்களுக்கு ஒத்த நிலையில் திரும்பக் கொண்டு வரத்தக்கதாக படிப்படியாக உயர்த்துவதற்கு ஏதுவாகவும், இராஜ்யத்தின் வல்லமையானது செயல்படும்.
சீஷர்கள் தங்களால் ஏன் அந்தத் தீய ஆவியை, வெளியேற்ற முடியாமற் போயிற்று என்று இயேசுவினிடத்தில் கேட்டார்கள். இதைப்போலவே, அநேக தேவனுடைய ஜனங்கள் அநேகந்தரம் தங்களிடத்திலேயே சில கேள்விகள் கேட்டிருக்கின்றார்கள். அதாவது, சாத்தானையும், பாவத்தையும், அதன் ஆளுகையையும் எதிர்க்கிற விஷயத்தில், ஏன் எங்களால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியவில்லை என்று கேட்கலாம். இயேசு அன்று அவர்களுக்குக் கூறிய பதில், நம் கேள்விகளுக்கும் பதிலாக அமைகின்றது. அதாவது, “”இவ்வகை பிசாசு ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப் போகாது” என்றார் இயேசு (வசனம் – 29). பாவம் மற்றும் சாத்தானைத் தாங்கள் எதிர்த்துப் போராடுகிற விஷயத்திலும், மற்றவர்களைப் பாவத்தின் வல்லமையினின்று விடுவிக்க உதவுகிற விஷயத்திலும், தேவனுடைய ஜனங்கள் அதிகம் செய்ய முடியும் என்பதில் ஐயமில்லை. எப்படியெனில், நாம் ஒருவேளை எப்போதும் முழுமையான விசுவாசத்தைச் செயல்படுத்தினவர்களாகவும், மாம்சத்தில் குறைவாகவும், ஆவியில் அதிகமாகவும் தொடர்ந்து ஜீவிக்கிறவர்களாகவும் இருப்போமானால், நம்மால் அதிக விஷயங்களை நிறைவேற்ற முடியும். அதாவது, உபவாசத்தில் அல்லது சுயத்தை வெறுத்தல் மற்றும் தேவனிடத்தில் ஜெபம் அல்லது ஐக்கியம் கொள்வதினால் ஆகும். விசுவாசிக்கிறவர்களுக்கு, தேவன் உண்மையுள்ளவர்களுக்கென்று வாக்குத்தத்தம் பண்ணியுள்ள அனைத்து ஆசீர்வாதங்களும் கிடைக்கும். ஆனால், நமக்கு ஒரு நிபந்தனையும் உள்ளது. அதென்னவெனில், “”நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” என்பதேயாகும்.