R5047 (page 200)
மத்தேயு 13:44-53
“”முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” – மத்தேயு 6:33
இப்பாடத்தில் மாபெரும் போதகர், தம்முடைய இராஜ்யம் தொடர்பாகக் கொடுக்கும் இன்னும் விலையேறப்பெற்ற படிப்பினைகளைக்குறித்து நாம் பார்க்கப் போகின்றோம். “”நிலத்தில் புதைக்கப்பட்டப் பொக்கிஷம்” பற்றின உவமையும், “”விலையுயர்ந்த முத்து” பற்றின உவமையும், உலகத்தின் ஆசீர்வாதத்திற்கென இறுதியில் மனுஷர் மத்தியில் ஸ்தாபிக்கப்படவிருக்கும் மகிமையின் இராஜ்யத்தினுடைய மகா முக்கியத்துவத்தை நமக்குக் காட்டித் தருகின்றதாய் இருக்கின்றது. இன்னுமாக, இந்த இராஜ்யத்தில் பங்கடையத்தக்கதாக எதை இழக்க வேண்டும் என்பது தொடர்பான படிப்பினைகளையும் இந்த உவமைகள் அளிக்கின்றன. மூன்றாவதாக ஓர் உவமை, கருநிலையிலுள்ள இராஜ்யத்தைக் குறித்துத் தெரிவிக்கின்றது; அதாவது, “”கடலில் வீசப்படும் வலை” பற்றின உவமையானது, தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் (அ) இராஜ்யத்தின் வகுப்பாராகிய மணவாட்டி கண்டடையப்பட்டு, கர்த்தருடைய ஏற்பாட்டின்படிச் சேர்க்கப்படும் இந்தத் தற்கால யுகத்தின் நிலைமையைக் காட்டுகின்றது.
இது இயேசுவால் விளக்கம் அளிக்கப்பட்ட உவமைகளில் ஒன்றல்ல. ஆகையால், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலினாலும், இவ்வுவமையின் மீது மற்ற வேதவாக்கியங்கள் செலுத்தும் வெளிச்சத்தினாலும், கர்த்தருடைய ஜனங்கள் இவ்வுவமையின் அர்த்தத்தைக் கணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். இதற்குப் பல கோணங்களில் விளக்கம் கொடுக்கலாம் என்பது உண்மையே. உதாரணத்திற்கு, இந்த உவமையை நமது கர்த்தர் இயேசுவுக்குக்கூட பொருத்தி பார்த்துவிட்டு, இயேசு தம்முடைய எல்லாவற்றையும் விலையாகக் கொடுத்து முழு உலகத்தை வாங்கினார் என்றும், உலகத்தில் காணப்படும் “”பொக்கிஷத்திற்காக” இயேசு உலகத்தை வாங்கினார் என்றும் கூறலாம். மேலும், அந்தப் பொக்கிஷமானது பல்வேறு மதிப்புள்ள பல்வேறு பொக்கிஷங்களாகும். உதாரணமாக, சபையாகிய மணவாட்டி வகுப்பார் கர்த்தருடைய விசேஷமான பொக்கிஷமாக இருக்கின்றனர், மற்றும் மேசியாவின் இராஜ்யத்தினால் இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆசீர்வதிக்கப்படப் போகும் உலகத்தாருங்கூட ஒரு பொக்கிஷமாவார்கள்.
ஆனால், மாபெரும் போதகர் தம்மைக்குறித்து இந்த உவமையில் குறிப்பிடாமல் மாறாக, தாம் அறிவுரைக் கொடுத்தவர்களைப் பற்றியே குறிப்பிடுகின்றார் என்பது நமது எண்ணமாக இருக்கின்றது. கர்த்தர் தாம் பண்ணியிருந்த பலியின் உடன்படிக்கைக்கு உண்மையாய் இருந்தபடியால், அவருக்கு ஏற்கெனவே இராஜ்யம் வாக்களிக்கப்பட்டது. மேலும், கர்த்தர் இயேசுவோ பிதாவின் நாமத்தில் கேட்கும் செவியுடையவர்களையும், உணர்ந்துக்கொள்ளும் இருதயம் உடையவர்களையும் தம்முடைய மணவாட்டி வகுப்பாரில் அதாவது, தம்முடைய இராஜ்யத்தின் வகுப்பாரில் அங்கங்களாகும்படிக்கு அழைக்கின்றார்.
இப்படியாக, அழைக்கப்படுபவர்கள் இந்த உவமையில் விவரிக்கப்பட்டுள்ளபடி இராஜ்யத்தைக் கண்ணோக்குகிறவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் பிரயாணம் பண்ணிக் கொண்டிருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட நிலம், ஒரு குறிப்பிட்ட விலைக்கு விற்கப்படுவதற்கு உள்ளது என வைத்துக்கொள்ளுங்கள். மேலும், அந்த நிலத்தைக்குறித்து விசாரித்துப் பார்த்ததில், அந்த நிலத்தில் ஒரு மாபெரும் பொக்கிஷம் இருக்கின்றது என நீங்கள் காண்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பொக்கிஷம் ஒருவேளை உங்கள் நோக்கத்திற்கு மிகவும் பொருத்தமாய் இருக்கும், மிகச் சிறந்த மண் வளமாக இருக்கலாம் அல்லது ஏதோ விலையேறப்பெற்ற [R5048 : page 200] உலோகங்கள் அந்த நிலத்திற்குள் காணப்படலாம் அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, பணம் அந்நிலத்தில் புதைத்து, பின்னர் மறந்துப் போகப்பட்டதாகவும் இருக்கலாம். இப்படியான சந்தர்ப்பத்தில் சராசரி அறிவுள்ள எவரும் இந்நிலத்தைப் பெற்றிட தன்னிடத்திலுள்ள அனைத்தையும் முதலீடு பண்ணுவதற்கு விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள் என்ற கருத்தை இந்த உவமை முன்வைக்கின்றது.
ஆகவே, அன்று கர்த்தர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கும், இன்று அதே அவருடைய வார்த்தைகள் வரும்போது, அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நமக்கும், ஆண்டவர் ஒரு மாபெரும் பொக்கிஷம் அதாவது, மிகுந்த பிரயாசத்தினாலும், முக்கியத்துவம் வாய்ந்தது எனச் சொல்லப்படும் யாவையும் முதலீடு செய்வதினாலும் மாத்திரமே அடைய முடிகின்ற ஒரு விலையேறப்பெற்ற பொக்கிஷம் குறித்த தகவலை வைத்திருக்கின்றார் எனக் கூறுகின்றார். மேசியாவின் இராஜ்யத்தில் பங்கடைவது அதாவது, சீஷத்துவத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், நாம் தேவனுடைய புத்திரர்களாக மாத்திரம் இல்லாமல், புத்திரர்களானால் தேவனுடைய சுதந்தரர்களாகவும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் அவருடைய பரலோக சுதந்தரத்தில் உடன் சுதந்தரர்களாயும் இருப்பதே அந்த மாபெரும் பொக்கிஷமாகும். இந்தச் சுதந்தரம் ஆபிரகாமின் சந்ததியாருக்கு வாக்களிக்கப்பட்டிருந்த அதே விஷயங்களே; மேலும் நாம் சொல்லர்த்தமாக/உண்மையாக (சுபாவத்தின்படி) ஆபிரகாமின் சந்ததியாகவும், இராஜ்யத்தின் உண்மையான சுதந்தரர்களாகவும் இருந்தபடியினால் இல்லாமல், மேசியாவின் மணவாட்டியாகவும், உடன் சுதந்தரர்களாகவும் நாம் மாறினபடியினாலே அந்தச் சுதந்தரத்தில் நமக்கும் பங்குக் கிடைத்தது.
சில சிறு விஷயங்களுக்காக, முக்கியத்துமற்ற உலகப் பிரகாரமான புகழ்ச்சிக்குரிய, பூமிக்குரிய கனத்தை அடைவதற்காக எவ்வளவு நேரமும், பெலனும் பிரயோகிக்கப்படுகின்றது என்பதையும், எவ்வளவு பணமும், செல்வாக்கும் செலவழிக்கப்படுகின்றது என்பதையும் நாம் எண்ணிப் பார்ப்போமானால் மற்றும், இவைகள் அதிகபட்சமாக சில வருடங்கள் மாத்திரமே நீடிக்கின்றது என்பதையும், முழுத் திருப்தியை அளிக்காதது என்பதையும் நாம் சிந்தித்துப் பார்ப்போமானால், “”அழைக்கப்பட்டு, தெரிந்துக்கொள்ளப்பட்டு மற்றும் உண்மையுள்ளவர்களாகிய” மணவாட்டியாகிய, ஆட்டுக்குட்டியானவரின் மனைவிக்காக தேவன் வைத்துள்ள மகிமை, கனம் மற்றும் அழியாமையைக்குறித்து நம்மால் நன்கு உணர்ந்துக்கொள்ள முடியும்.
நம்முடைய இரட்சகருடைய நாட்களில், மிகவும் விலையேறப்பெற்ற மற்றும் மிகவும் விரும்பத்தக்க சம்பத்துகளில் ஒன்று முத்தாகக் காணப்பட்டது; மேலும் எந்தளவுக்கு முத்துப் பெரியதாகவும், கிட்டத்தட்ட பூரணம் உடையதாகவும் இருக்கின்றதோ, அந்தளவுக்கு முத்தினுடைய மதிப்பும் அதிகமாகக் காணப்படும். இந்தப் பிரபலமாய் இருந்த முத்தை, இராஜ்யத்தின் முக்கியத்துவம் தொடர்பான பாடத்திற்காக மாபெரும் போதகர் பயன்படுத்துகின்றார். [R5048 : page 201] இவ்வுவமையில் வரும் வியாபாரி, மற்ற அனைத்து முத்துக்களுக்கும் எல்லாவிதத்திலும் மிகவும் மேலான ஒரு முத்தைக் கண்டுபிடித்தபடியினால் இந்த முத்தை அடைவதற்கென, தான் கொடுக்கும் தன்னிடத்திலுள்ள யாவும் அற்பமானது என்று கருதினார்.
இதுவே தெரிந்துக்கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களாகிய சிறுமந்தையினர் தம்மோடு கூட பங்கடையும்படி தாம் அழைக்கும் இராஜ்யம் மற்றும் அதன் மகிமை, கனம் மற்றும் அழியாமையின் முக்கியத்துவம் என ஆண்டவர் கூறுகின்றார். யார் இதன் மதிப்பைச் சரியாகக் கணிக்கின்றார்களோ, அவர்கள் இதற்கான விலையை அளிப்பதிலுள்ள தங்களுடைய விருப்பம் மற்றும் மகிழ்ச்சியின் அளவின் மூலம் தங்களின் உணர்ந்துக்கொள்ளுதலை வெளிக்காட்டுகின்றவர்களாக இருப்பார்கள். ஒரு மனிதன் பணக்காரனாகவோ (அ) ஏழையாகவோ, படித்தவனாகவோ (அ) கல்வியறிவு இல்லாதவனாகவோ, செல்வாக்கு உள்ளவனாகவோ (அ) அற்றவனாகவோ இருந்தாலும் சரி மிகவும் விலையேறப்பெற்ற முத்தாகிய இந்த இராஜ்யத்தின் விலையானது, அவனிடத்திலுள்ள அனைத்தையும் கேட்கின்றதாய் இருக்கும். இதைவிட குறைவான விலைக்குக் கிடைக்காது.
உலகத்தில் ஐசுவரியவானோ (அ) மிகவும் திறமை உள்ளவனோ, ஒருவேளை அவன் தன்னுடைய உடமைகளில் ஒரு சிறியதை, தனக்கென வைத்துக்கொள்வானானால், அவனால் அந்த இராஜ்யத்தில் பங்கடைய முடியாது. இராஜ்யத்திற்கான விலை என்பது, மரணம் வரையிலான சுயத்தைப் பலிச் செலுத்துதல் ஆகும். இதை விட குறைவான எதுவும் இராஜ்யத்தைப் பெற்றுத்தராது. அதேசமயம் நமது மீட்பரால் கல்வாரியில் நிறைவேற்றப்பட்ட பலியினுடைய விலையேறப்பெற்ற புண்ணியத்தின் மூலம், நமது பலியானது முதலாவதாக தேவனுடைய பார்வையில் அங்கீகரிக்கப்படாதது வரையிலும், நாம் ஏறெடுக்கும் எந்தப் பலியும் இந்த இராஜ்யத்தில் நமக்குப் பங்கைப் பெற்றுத்தராது.
இராஜ்யம், வலையைப் போன்று இருக்கும் என நாம் எண்ணக்கூடாது. மாறாக, கரு நிலையிலுள்ள இராஜ்யமே, சகலவிதமான மீன்களையும் வாரிக் கொள்ளப்பட்டு, கரைக்குக் கொண்டு வரப்பட்டு, பிரித்தெடுக்கப்படும் வலையுடனான மீன் பிடிக்கும் அனுபவத்திற்கே ஒத்தது என நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இது கரு நிலையிலுள்ள இராஜ்யம் பற்றின உவமையாகும். ஏனெனில், மகிமையிலுள்ள இராஜ்யத்திற்குரியவர்களாக இருக்கப்போகின்ற “”சிறுமந்தையினர்” கண்டுபிடிக்கப்படுவது தொடர்பான, இந்த யுகத்தில் நடைபெறும் வேலையை விவரிக்கின்றதாய் இருக்கின்றது. கர்த்தர் இந்த யுகத்தில் சகலவிதமான மீன்களுக்காக, மீன்பிடிக்கவில்லை; அவர் சகல ஜனங்களையும் நாடித் தேடவில்லை. அவர் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களை மாத்திரமே, பரிசுத்தவான்களை மாத்திரமே கையாளுகின்றார், அழைக்கின்றார் மற்றும் விசேஷமாக தம்மிடத்தில் சேர்த்துக்கொள்கின்றார்.
ஆனால், தற்செயலாகப் பல்வேறுவிதமான மீன்களும், சுவிசேஷத்தின் வலைக்குள் வந்துவிட்டன. சிலர் உலகப்பிரகாரமான பேராசைகளினாலும், சிலர் மத அமைப்புகளைத் திருமணம் புரிவதற்கான நல்ல களம் எனக் கருதினதாலும், சிலர் சமுதாயச் சிலாக்கியங்களையும், புகழையும் கருதினதாலும், சிலர் ஒழுக்கமாக வாழ விரும்புவதினாலும், சிலர் தொழிலுக்கென மதம் எனும் போர்வையைப் போர்த்திக்கொள்ள விரும்பியதினாலும், இவ்வலைக்குள் வந்துள்ளனர். ஆனால், கர்த்தர் தேடுகிறதும், இராஜ்யத்தின் அங்கங்களாக இருப்பதுமாகிய பொருத்தமான மீன் என்பது அவருடைய செய்தியை மகிழ்ச்சியுடன் கேட்டு, விலையைக்குறித்து சிந்தித்து, சூழ்நிலையை உணர்ந்தவர்களாக, “”கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய அடிமை வேலைக்காரர்களாக” ஆகுவதற்கு விரும்புபவர்களைக் குறிக்கின்றது. இவர்கள் அவரோடு கூட சேர்ந்து அவருடைய இராஜ்யத்தில் மகிமையடையத்தக்கதாக, இப்பொழுது அவரோடு கூட பாடுப்பட விருப்பம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.
“”வலை நிறைந்தபோது, அது கரையில் இழுக்கப்பட்டு,” மீன்கள் பிரிக்கப்பட்டன என்று உவமை நமக்குக் கூறுகின்றது. இது கர்த்தர் தம்முடைய நோக்கத்திற்காக போதுமான எண்ணிக்கையில் பரிசுத்தவான்களைச் சேர்த்திருக்கும் ஒரு காலம், அதாவது, மகிமையிலுள்ள தெரிந்துக்கொள்ளப்பட்ட சபையின் அங்கங்களாக இருக்க வேண்டுமென பிதாவின் முன்குறிக்கப்பட்ட எண்ணிக்கை நிறைவடையும் ஒரு காலம், இந்த யுகத்தின் முடிவில் வரும் என்பதைத் தெரிவிக்கின்றது என்பது உறுதியே. அப்பொழுது மீன் பிடித்தல் முடிவு பெறும். கர்த்தர் நாடிக் கொண்டிருக்கின்ற உண்மையான “”மீன்” வகையில் ஒருவராக, “”வலைக்குள்” பிரவேசிப்பதற்கான வாய்ப்பு நிறைவடையும் நிலையில் இல்லை என யாரால் சொல்ல முடியும்? பலவகையான கிறிஸ்தவர்களால் நிரம்பியுள்ள சுவிசேஷத்தின் வலையானது, தகுதியான மாணவர்களை இராஜ்யத்திற்குள் சேர்த்துக்கொள்ளத்தக்கதாக, சீக்கிரத்தில் வலை கரைக்கு இழுக்கப்படாது என்று யாரால் சொல்லக் கூடும்?
இந்த உவமையில் இடம்பெறும் தகுதியற்ற “”மீனானது” நாம் முந்தின பாடத்தில் பார்த்திட்ட “”களைகளுக்கு” ஒத்ததாகும். “”அக்கினி சூளை” என்பது சீக்கிரத்தில் மனுக்குலத்தின் உலகத்தின் மீது வரவிருக்கும் “”மகா உபத்திரவக் காலத்தையே” குறிக்கின்றது. வலையில் காணப்படும் தகுதியற்ற மீன்கள் அனைத்தும் (பெயர்) சபை அங்கத்தினர்கள் ஆவார்கள். உலகத்தார் இவ்வுவமையில் குறிப்பிடப்படவே இல்லை.
“”பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துக்கொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துக்கொண்டோம் ஆண்டவரே, என்றார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், பரலோக ராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும், பழையவைகளையும் எடுத்துக் கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.” (மத்தேயு 13:51-52)
நமது பாடத்தின் ஆதார வசனம், இந்தப் பாடத்திற்கு முக்கியத்துவம் சேர்க்கின்றது. ஆண்டவர் சுட்டிக்காட்டுகிற பிரகாரமாக ஒருவேளை இராஜ்யமே முத்தாகவும், பொக்கிஷமாகவும் இருக்குமானால், ஒருவேளை நாம் அவருடைய சாட்சியை நம்புவோமானால், அப்பொழுது நம்மால் முடிந்தமட்டும் நமது விசுவாசத்தைக் காட்டுவோமாக, அதுவும் வெறும் அறிக்கையாயிராமல் மாறாக, ஒவ்வொரு கிரியையிலும், வார்த்தையிலும் காட்டுவோமாக. இராஜ்யத்தையே நமது ஜீவியத்தில் பிரதானமான விஷயமாக நாம் நாடுவோமாக. இதனோடு ஒப்பிடுகையில், மற்ற அனைத்தும் பரிசுத்தவானாகிய பவுல் “”ஒப்பிடத்தக்கவைகள்” அல்ல என்று கூறுவது போல், அற்பமானதாகக் கருதுவோமாக. ஒருவேளை இராஜ்யத்தை நாடும் விஷயமானது, நமது சில பூமிக்குரிய காரியங்களுக்குத் தடையாக இருக்குமானால், அது மிகவும் நல்லதே. நம்முடைய அனைத்தையும் இழக்க வேண்டியுள்ளது என்று ஆண்டவர் கூறியுள்ளார். நமது பூமிக்குரிய தேவைகளை நாம் அவருடைய கரங்களில் விட்டிருக்கின்றோம். இராஜ்யத்தில் நாம் இடம் பெறத்தக்கதாக, நமது “”அழைப்பையும், தெரிந்துக்கொள்ளுதலையும்” நாம் உறுதிப்படுத்திக்கொள்ளத்தக்கதாக நமக்கு மிகவும் உதவியாக இருக்கும் என அவருடைய ஞானத்தில் அவர் காண்பதற்கு ஏதுவான பூமிக்குரிய ஆசீர்வாதங்களை அவரே பங்கிட்டுக் கொடுப்பாராக.