R5389 – பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R5389 (page 26)

பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!

WOE UNTO YOU, PHARISEES!

லூக்கா 11:37-54

“”மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்.” – கலாத்தியர் 6:7

நமது கர்த்தருடைய நாட்களில் யூதர்கள் மத்தியில் காணப்பட்ட பல்வேறு பிரிவினர்கள் மத்தியில், பரிசேயர்கள் சிறந்தவர்களாக, தேவனுக்கும், அவருடைய பிரமாணங்களுக்கும் மிகவும் நேர்மையாய் இருந்தவர்களாக நாம் எடுத்துக்கொள்வதற்கு நமக்கு அநேகக் காரணங்கள் இருக்கின்றது. சதுசேயர்கள் எதிர்க்கால வாழ்க்கைக்குறித்த எவ்விதமான நம்பிக்கையும் கொண்டிராதவர்களாய் இருந்தார்கள். சதுசேயர்கள் நாத்திகர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் காணப்பட்டனர். Essenes (எசினிஸ்) எனும் சிறு பிரிவினர், வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை; இவர்கள் விமர்சகர்களாகவும், குறைவான விசுவாசம் உடையவர்களாகவும், யூத மார்க்கத்தை, புறச்சமயத்துடன் இணைத்துக்கொண்டு, குழப்பத்தில் காணப்படும் வகுப்பினராக இருந்தனர். பரிசேயர்கள் ஆச்சாரமிக்க/வைதீகமான யூதர்கள் என்று சொல்லலாம். இவர்களுடைய பெயரின் அர்த்தம், “”பரிசுத்தமான ஜனங்கள்” என்பதாகும். மற்ற பிரிவினர்கள் அனைவரும், முற்றிலுமாக தேவனை விட்டுப் போய்விட்டனர் என்பதை இங்குக் குறிப்பிடாமல், பரிசேயர்களை மாத்திரம் நோக்கி, அவர்கள் தங்கள் பரிசுத்தத் தன்மையைக்குறித்துப் பெருமை பாராட்டிக்கொண்டாலும், அவர்கள் தேவன் அங்கீகரிக்கத்தக்கதான தகுதியின்றி இருக்கின்றார்கள் என்பதாக இயேசு சுட்டிக்காண்பித்துத் தெரிவிப்பதை இப்பாடத்தில் நாம் பார்க்கின்றோம்.

ஒரு பரிசேயன், இயேசு தன்னுடைய வீட்டில் வந்து பந்தி அமரும்படிக்கு அழைப்பித்தான். அழைப்பை உடனடியாக இயேசு ஏற்றுக்கொண்டவராக, பரிசேயர்களுடைய கழுவுதல் சடங்காச்சாரங்களை அநுசரிக்காமல், மற்றவர்களுடன் பந்தி அமர்ந்துவிட்டார். இயேசு அஜாக்கிரதையுடன்/நிர்விசாரமாய் நடந்துக்கொண்டார் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. மாறாக கைகள் கழுவும் ஆச்சாரமானது, வெளிப்படுத்தின ஆவியிலுள்ள குற்றத்தைச் சுட்டிக்காண்பிப்பதற்குரிய வாய்ப்பை அடைவதற்கே, இயேசு விசேஷமாக, பரிசேயர்களுடைய கைகள் கழுவும் ஆச்சாரத்தைப் புறக்கணிக்க விரும்பினார்.

அந்தப் பரிசேயன், இயேசுவை ஆயக்காரனாகவோ அல்லது பாவி என்றோ எண்ணாமல், அவரை ஒரு பரிசுத்தமான மனுஷன் என்று எண்ணியிருந்தபடியால், இயேசு இப்படிக் கைகள் கழுவும் ஆச்சாரமான வழக்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருந்தது தனக்கு விநோதமாக இருப்பதாகக் [R5389 : page 27] குறிப்பிட்டார். இப்படியாக குறிப்பிட்டதினிமித்தமாக, இவ்விஷயம் தொடர்பாகப் பேசுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. யூதர்களில் பரிசுத்தமாய் இருப்பவர்களால், அநுசரிக்கப்பட்டதான மதத்தின் பெரும்பான்மையான விஷயங்கள் வெறும் சடங்காச்சாரமான அநுசரிப்புகளாக இருக்கிறதே ஒழிய, உண்மையான பயப்பக்தியின் விஷயங்கள் அல்ல என்று இயேசு சுட்டிக்காட்டினார். வெளித்தோற்றத்தில் அவர்கள் சுத்தமாக இருந்தார்கள். ஆனால் இருதயத்தின் உள்ளே அசுத்தமாய் இருந்தனர், அதாவது ஆவிக்குரியவற்றில் பொல்லாப்புடையவர்களாய் இருந்தனர் என்று இயேசு சுட்டிக்காட்டினார். இருதயமே, தேவனுடைய பார்வையில் முக்கியமான காரியமாக இருக்கின்றது என்றும், வெளிப்புற சுத்திகரிப்பெல்லாம் இரண்டாம் பட்சமாகவே இருக்கின்றது என்றும் காண்பிப்பதற்குக் கர்த்தர் நாடினார். பாத்திரத்தின் உள்புறமே முதலாவது கவனிக்கப்பட வேண்டும், வெளிப்புறம் பிற்பாடே கவனிக்கப்பட வேண்டும்.

கர்த்தருடன் இருதய பூர்வமான இசைவிற்குள் வருபவர்கள், அதாவது கர்த்தருடைய செய்திக்கும், அச்செய்தியினுடைய ஆவிக்கும், கீழ்ப்படிவதன் மூலம் சுத்திகரிக்கப்பட்டவர்கள், உள்ளும், புறமும் சுத்தகரிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இருதயத்தில் சுத்தமாய் இருப்பவர்கள், தங்களுடைய சூழ்நிலைகள் மற்றும் வாய்ப்புகளுக்கு ஏற்ப, சரீரத்திலும், பேச்சிலும், எல்லாவற்றிலும் சுத்தமாய் இருப்பதற்கு நாடுவார்கள். இவர்களுடைய இருதயத்தில் கிரியை செய்யும் கொள்கையானது, இவர்களுடைய அனைத்து வார்த்தைகளில், எண்ணங்களில் மற்றும் செய்கைகளில் எல்லா நேரங்களிலும், எல்லா நாட்களிலும் தாக்கம் ஏற்படுத்துகின்றதாய் இருக்கும்.

இவ்விடத்திலும், இன்னும் அநேகம் தருணங்களிலும், நமது கர்த்தர் குறிப்பிடுவதைக் கவனிக்கும் பொழுது பரிசேயர்களுடைய மாபெரும் தவறுகளில் ஒன்று பண ஆசையாக இருந்ததாகத் தெரிகின்றது. கிரேக்கர்களைப் பொறுத்தமட்டில், இயேசு பரிசேயர்களை, “”பண ஆசைக்காரர்களாகக்” கூறினதாகத் தெரிவிக்கின்றார். பணத்தின் மீதான இந்த அவர்களுடைய ஆசையும், பேராசையும், மற்றவர்களுடைய உரிமைகளை நேர்மையற்ற விதத்தில் புறக்கணிப்பதற்கு ஏதுவாக வழிநடத்தினது என்று இயேசு ஒரு தருணத்தில் பரிசேயர்களிடம் கூறினார். “”விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப் போடுகிறீர்கள்” என்று இயேசு பரிசேயர்களிடம் தெரிவித்ததின் அர்த்தம், இவர்கள் விதவைகளின் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, தங்களுக்கெனச் சொத்துக்களைச் சேர்க்கின்றனர் என்பதாகும். இதன் காரணமாக, பரிசேயர்களில் அநேகர் நன்கு ஐசுவரியான்களாக இருந்தனர்.

பரிசேயர்கள், யூதருக்கான நியாயப்பிரமாண வெளிப்புற ஒழுங்குகளை எவ்வளவுதான் கவனமாய் கைக்கொண்டு வந்தாலும், மேற்கூறப்பட்ட இருதயத்தின் தவறான நிலையானது, தேவனுக்குப் பிரியமற்றதாக இருக்கும் என்று இயேசு சுட்டிக்காட்டினார். பத்தில் ஒரு பாகம் கொடுக்க வேண்டிய வெளிப்புறமான விஷயத்தில், இவர்கள் சிறிதளவில் விவசாயம் பண்ணி வரும், சிறு விதைகளின் விஷயத்திலுங்கூட, ஜாக்கிரதையாய் இருக்கின்றனர் என்ற காரியத்தை இவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். எல்லாவற்றிலும் இவர்கள் பத்தில் ஒரு பாகம் கொடுக்க வேண்டும் என்று ஜாக்கிரதையாய் இருந்தனர், ஆனால் நியாயப்பிரமாணத்தினுடைய முக்கியமான காரியங்களையோ இவர்கள் புறக்கணித்துவிட்டனர், அதாவது தாங்கள் கையாளும் விஷயங்களில் நீதியாய் நடந்துக்கொள்வதையும், மற்றவருக்கு இரக்கம் காட்டும் விஷயத்தையும் புறக்கணித்துவிட்டனர். இவர்கள் தங்களுக்குள்ள எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பாகத்தைக் கொடுப்பதற்கு ஆண்டவர் மறுப்புத் தெரிவிக்கவில்லை, மாறாக மிகவும் முக்கியமானவைகளைச் செய்யாமல் விட்டுவிடக்கூடாது என்றே தெரிவித்தார்.

இன்னொரு தருணத்தின்போது, “”நீங்கள் கொசு இல்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்” என்றார்; அதாவது இவர்கள் எந்தளவுக்கு இவர்களுடைய நியாயங்களிலும், செய்கைகளிலும் முன்னுக்குப் பின் முரண்பாடாகக் காணப்படுகின்றார்கள் என்பதைக் கூறினார். கொசு இல்லாதபடி வடிகட்டுதல் என்பது நெரித்துக்கொல்லப்பட்டவைகளைத் தவிர்ப்பதில், இவர்கள் ஜாக்கிரதையாய் இருந்ததைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. ஒட்டகத்தை விழுங்குதல் என்பது, இவர்கள் சிறிய காரியங்களில் ஜாக்கிரதையாய் இருக்க, இவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணத்திலுள்ள முக்கியமானவைகளை முற்றிலுமாகப் புறக்கணித்து விடுவதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. இவர்கள் பண ஆசையுடையவர்களாகவும், சுயத்தை நாடுகிறவர்களாகவும் இருப்பதற்குப் பதிலாக, இரக்கமுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்றும், இப்படியாக இவர்களுடைய இருதயம் இரக்கம் கொண்டதாக இருக்கும் பட்சத்தில், வெளிப்புற சுத்தம் இவர்களுக்கு முக்கியத்துவம் அற்றதாய் இருக்கும் என்றும் இயேசு கூறினார்.

இவர்கள் ஜெப ஆலயங்களில் முதன்மையான இடங்களையும், சந்தை வீதிகளில் வந்தனங்கள் அடையவும் விரும்பினார்கள் என்று இயேசு கூறினார். இவர்களது பண ஆசையானது, பெருமை மற்றும் நேர்மையின்மையின் உருவத்தை எடுத்துக்கொண்டது. மத விஷயங்களில் மிகவும் முக்கியமானவர்களாகவும், மிகவும் பிரபலமானவர்களாகவும் இருப்பதற்கும், ரபீ என்றும் அதாவது ஆண்டவர் என்றும், கல்விமான் என்றும் வாழ்த்தப்படுவதற்கும் விரும்பினார்கள். இவர்கள் வெளிப்புறத்தில் சுத்தமாயும், வெள்ளையடிக்கப்பட்டதும், ஆனால் உள்ளே அசுத்தத்தையும், செத்துப்போனதையும் கொண்டுள்ளதுமான கல்லைறகளாக இருக்கின்றனர் என்று இயேசு கூறினார். இவர்கள் வெளிப்புறத்தில் அல்லது சடங்காச்சாரமான அனுசரிப்பில் மாத்திரம் பரிசுத்தமான ஜனங்களாக இருந்தனர்.

கிறிஸ்தவ மண்டலத்தின் அனைத்துப் பிரிவினர்களை அல்லது ஏதேனும் ஒரு பிரிவினர் நியாயந்தீர்ப்பதும், அவர்களுக்குக் கர்த்தருடைய வார்த்தையைப் பொருத்துவதும் நமக்கு அடுத்த வேலை இல்லை. இயேசுவைப் போன்று, மனுஷர்களுடைய இருதயங்களை அறிவதற்கான வல்லமையோ அல்லது மற்றவர்களை மாய்மாலக்காரர்கள் என்று கூறுவதற்கான அதிகாரமோ நமக்கு இல்லை. “”காலத்துக்கு முன்னே யாதொன்றைக் குறித்தும் தீர்ப்புச் சொல்லாதிருங்கள்” (1 கொரிந்தியர் 4:5) என்பதே நமக்கான கர்த்தருடையச் செய்தியாக இருக்கின்றது. அவருடைய இரண்டாம் வருகையின் போது, அனைத்தும் வெளியரங்கமாகும் என்று கர்த்தர் கூறியுள்ளார். ஒவ்வொருவரின் உண்மையான நிலையானது, அப்பொழுது வெளியரங்கமாக்கப்படும். அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் வந்து, நாங்கள் உம்முடைய நாமத்தினாலே அநேகம் வல்லமையான கிரியைகளைச் செய்தோம் அல்லவா என்று கூறுவார்கள் என்றும், இதற்குப் பதிலாக “”உங்களை நான் அறியேன்; நீங்கள் என் நாமத்தில் செயல்பட்ட அநீதியின், அக்கிரமத்தின் ஊழியக்காரர்கள்” என்றுதான், கூறுவார் என்றும் கர்த்தர் கூறினார். நம்முடைய நாட்களிலுள்ள பெரும்பான்மையான கிறிஸ்தவர்களைக்குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் விவரித்துள்ளார்.

நம்முடைய நாட்களைக் குறித்துப் பேசுகையில், அப்போஸ்தலனாகிய பவுல் “”தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்” என்கிறார் (2 தீமோத்தேயு 3:5). அதாவது வெளித்தோற்றமாய்க் கிறிஸ்தவர்களாகக் காணப்படுகின்றனர், ஆனால் உள்ளுக்குள் நாத்திகர்களாகவும், பண ஆசைக்கொண்டவர்களாகவும், அநீதியுள்ளவர்களாகவும், கொள்ளையடிக்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர். இம்மாதிரியான காரியங்களை, இன்று சரியாக மதிப்பிடுவதற்கு மனுஷனால் முடிகிறதில்லை. கர்த்தருக்கு நேர்மையுடனும், வைராக்கியத்துடனும் காணப்படும் சிலர் மாய்மாலக்காரர்களாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும் பெயரிடப்படுகின்றனர்; ஆனால் நேர்மையற்றவர்களாகவும், வெறும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாகவும் இருக்கும் சிலரோ விக்கிரகங்களாக அல்லது பூமிக்குரிய அமைப்புகளுக்குத் தாராளமாய் நன்கொடை வழங்குபவர்களாக உயர்த்திப் பேசப்படுகின்றனர்.

பரிசேயர்கள் மத்தியில் நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கத்தரிசனங்களின் போதனைகளில் நன்கு கைத்தேர்ந்தவர்களாகவும், கல்விமான்களாகவும் விசேஷமாய்க் காணப்பட்ட சிலர், நியாயசாஸ்திரிகள் என்று அழைக்கப்பட்டனர்; இவர்கள் இன்றுள்ள டாக்டர்ஸ் ஆப் டிவைனிட்டி (Doctors of Divinity) எனும் பட்டம் உடையவர்களுக்குச் சரிசமமானவர்களாய்க் காணப்பட்டனர். இவர்கள், பொது ஜனங்களால் சுமக்க முடியாத கடினமான பாரங்களை, ஜனங்கள் மீது சுமத்தினதாகக் கூறி, இவர்களை இயேசு கடிந்துக்கொண்டார். அதாவது பொது ஜனங்களைச் சோர்வடைய செய்யத்தக்கதாக, தேவனுடைய நியாயப்பிரமாணங்களுக்குக் கடினமான விளக்கங்களை இவர்கள் கொடுத்தார்கள் என்ற விதத்தில் இயேசு கூறினார்; அதாவது முயற்சி செய்யலாமே என்று எண்ணிக்கூடப் பார்க்க முடியாத பூரணமான மற்றும் உயர்வான கொள்கைகளை, ஆயக்காரர்கள் மற்றும் பாவிகள் முன்பாக இவர்கள் வைத்ததை இயேசு கூறினார். இவர்கள் இப்படிச் செய்வதற்கான நோக்கம் என்னவெனில், இவர்களுடைய பரிசுத்த தன்மையை, [R5390 : page 27] பொது ஜனங்களுக்கு அறியப்பண்ணி, இதன் மூலமாக இவர்கள் பொதுமக்களிடையே மிகுந்த பயபக்திக்குரியவர்கள் என்று கருதப்படுவதற்கேயாகும். இவர்களிடம் இருக்கும் அதே ஆவியைப் பெற்றிருந்த இவர்களுடைய பிதாக்கள்தான், தீர்க்கத்தரிசிகளைக் கொன்றுபோட்டார்கள், அதாவது தங்கள் பிதாக்கள் தீர்க்கத்தரிசிகளை மரணத்திற்கு ஏதுவாக துன்பப்படுத்தினார்கள் என்பதை மறந்து, அந்த முற்காலத்துத் தீர்க்கத்தரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டினார்கள்.

ஐயோ! ஐயோ! ஐயோ! ஐயோ! ஐயோ!

பரிசேயர்களுக்கு எதிராக இயேசு, ஐயோ என்று தீர்க்கத்தரிசனம் உரைத்ததினால், இவர்களை நித்தியமான சித்திரவதைக்குரிய தீர்ப்பிற்குள் தீர்க்கின்றார் என்றோ, நித்தியமான சித்திரவதையின் விதத்தில்தான் இவர்கள் மீது வரும் ஐயோவின் தன்மை காணப்படும் என்றோ கர்த்தர் கூறினதாக நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. யூத தேசத்தாருக்கென்று தேவனால் வாக்களிக்கப்பட்ட மாபெரும் ஆசீர்வாதங்களை, அதாவது மேசியாவின் இராஜ்யத்தில் பிரதான பங்காளிகளாக இருப்பதற்கான மாபெரும் ஆசீர்வாதத்தை, பரிசேயர் இழந்துப் போக இருக்கின்றார்கள் என்பதே, பரிசேயர்களுக்கு ஐயோ என்று கர்த்தர் கூறினார் (ஆதியாகமம் 12:3). வாக்குத்தத்தமானது முதன்மையாய் இஸ்ரயேலுக்கே உரியதாய் இருந்தது. இதற்கு இவர்கள் ஆயத்தமற்று இருந்ததின் காரணத்தினாலே, இது இவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு, வேறொரு இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்டது. தேவனால் நிர்ணயிக்கப்பட்ட கிறிஸ்துவின் மணவாட்டிக்கான எண்ணிக்கையை நிறைவு செய்வதற்குப் போதுமான “”கபடற்ற உத்தம இஸ்ரயேலர்கள்” இருந்திருப்பார்களானால், இராஜ்யத்திற்கான வாய்ப்பு, புறஜாதிகளிடம் கடந்துப் போயிருக்காது.

மேசியாவுடன் உடன் சுதந்தரத்தை அடையும் விஷயத்தில், யூதர்கள் மத்தியில் பரிசேயர்கள், மிகவும் அனுகூலமான ஸ்தானத்தில் காணப்பட்டனர்; ஆனால் இவர்கள் தாங்கள் எதை இழக்கின்றார்கள் என்று இயேசு அடையாளம் கண்டது போன்று, இவர்கள் உணர்ந்து/ அடையாளம் கண்டுக்கொள்ளவில்லை. “”உங்களுக்கு ஐயோ” என்ற இயேசுவின் வார்த்தையானது, அனுதாபத்துடனும், பரிதாபத்துடனும் கூடியது என்று கருதப்பட வேண்டும். இயேசு அறிவித்த இவ்வசனத்தின் வார்த்தைகளானது, தெரிவிக்கின்றப் பிரகாரம் இயேசு சிலுவையில் அறையப்படும் காலங்களில், யூத தேசத்தின் மீது கடந்து வரவிருக்கின்ற மாபெரும் உபத்திரவக் காலமானது, இவர்களது தேசமும், அரசாங்கமும் முற்றிலுமாக கிபி 70-இல் அழிக்கப்பட்ட போது நிறைவேறிற்று.

கர்த்தர் அறிவித்தப் பிரகாரமாக, அந்தப் பயங்கரமான உபத்திரவமானது, சிந்தப்பட்ட நீதிமான்களுடைய இரத்தத்திற்காக, அதாவது ஈடுசெய்யப்படாமல் காணப்பட்ட நீதிமான்களுடைய இரத்தம் சிந்தப்பட்ட காரியங்களுக்காக, தேவன் யூத தேசத்தாருடன் கணக்குச் சரிக்கட்டுவதாய் இருந்தது. பரிசேயர்களுடைய இந்த மாய்மாலமானது, மேசியாவின் இராஜ்யத்தில் மேசியாவுடன் உடன் சுதந்தரர்களாகும் விஷயத்தில், தாங்கள் ஆயத்தப்படுவதைத் தடைப்பண்ணுகிறதாய் [R5390 : page 28] மாத்திரம் அல்லாமல், போதனைக்காகத் தங்களைச் சார்ந்திருக்கும் ஜனங்களையும் தடை செய்கின்றது என்பதைப் பரிசேயர்கள் அறியாமல் இருந்தார்கள். இதைக்குறித்து, “”நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள்” என்று இயேசு குறிப்பிடுகின்றார் (லூக்கா 11:52).
யூத யுகத்தை முடிவு செய்த அந்த மாபெரும் உபத்திரவக் காலமானது, இந்தச் சுவிசேஷ யுகத்தை முடிவிற்குக்கொண்டு வருகிறதும், நம்முடைய நாட்களிலுள்ள பரிசேயர்கள் போன்றிருக்கும் அநேகருக்கு, ஐயோவைக் கொண்டு வருகிறதும், மேசியாவின் மகிமையான ஆளுகையில் நீதி ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பு, தற்கால அமைப்புகளைக் கவிழ்ப்பது தொடர்புடைய காரியத்தில், பொல்லாப்புச் செய்கைக்காரர்கள் அனைவர் மீதும் உபத்திரவத்தைக்கொண்டு வருகிறதுமான மாபெரும் மகா உபத்திரக் காலத்திற்கு அடையாளமாக இருக்கின்றது (அ) தீர்க்கத்தரிசனமாக இருக்கின்றது என வேதமாணவர்கள் பரவலாய் நம்புகின்றனர்.