R1937 (page 30)
“இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்” (மத்தேயு 12:34-37).
தற்காலத்தில் தம்முடைய இராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும், அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்ப்பதற்கும் மற்றும் தம்முடைய சம்பத்தாகிய தம்முடைய மணவாட்டியைத் தம்மிடத்தில் கூட்டிச் சேர்ப்பதற்கும் என்று இப்பொழுது வந்துள்ள இராஜரிக மணவாளனுடைய கண்காணிப்பின் கீழ், தற்காலத்தில் சபை காணப்படுகின்றது என்பதை நாம் உணருகையில், இந்த நியாயத்தீர்ப்பு மற்றும் தேர்ந்தெடுத்தலின் கொள்கைகளைக் கவனிப்பதில் நாம் ஜாக்கிரதையற்றவர்களாக இருக்கமுடியாது (மத்தேயு 22:11; 13:41; மல்கியா 3:17).
மேற்கூறப்பட்டுள்ள நமது கர்த்தருடைய வார்த்தைகளானது, இருதயமும், வாயும் விசேஷமான கவனிப்பின் கீழ் இருப்பதைச் சுட்டிக்காண்பிக்கின்றது. இருதயம் என்பது தனித்தனியான குணலட்சணங்களையும், வாய் என்பது, குணலட்ணத்தினுடைய அட்டவணையையும் குறிக்கின்றது. இதே கண்ணோட்டத்தில்தான் ஞானியுடைய வார்த்தைகளும் எழுதப்பட்டுள்ளது; “”எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து” (நீதிமொழிகள் 4:23-24). சரியான வார்த்தைகள் வாயிலிருந்து வெளிவருவதற்கு, சரியான இருதய நிலைமை அவசியமாய் உள்ளது தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏனெனில், இருதயத்தின் நிறைவினால் வாய் பேசுகின்றது. மேலும், இதை ஒவ்வொரு மனுஷனும் அனுபவத்தில் புரிந்திருக்கின்றான். ஆகவே, கர்த்தர் சொல்லியிருப்பது போன்று, நமது வார்த்தைகளே கர்த்தருடைய கணிப்பில் நியாயத்தீர்ப்பதற்கான அடிப்படைக் காரியமாக இருக்கின்றது. தேன் போன்ற வார்த்தைகள், சில சமயம் பயங்கரமான மாய்மாலத்தை மறைப்பதற்கான முகமூடியாக இருப்பதும் உண்மையே. ஆனாலும், சுயநலமான காரியங்கள் நிறைவேறுவதற்குக் கையாளும் திறமையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்போது, சில காலத்திற்குப் பின்னர் நிச்சயமாக, தேன் போன்ற இனிமையான வார்த்தைகள் எனும் முகமூடி விலக்கப்படும். ஆகவே, வார்த்தைகள், சம்பாஷணைகள் மற்றும் நடத்தைகள் இருதயத்தின் அட்டவணையாக இருக்கின்றது.
ஆகவே, நமது முதல் கவனம் இருதயத்திற்காகக் காணப்பட வேண்டும்; அதாவது, அதன் ஆசைகள் மற்றும் பண்புகள், தெய்வீகக் கிருபையினுடைய முழுமையான கட்டுப்பாட்டிற்குள் இருக்கத்தக்கதாகவும், சத்தியம் மற்றும் நீதியின் ஒவ்வொரு கொள்கையும் இருதயத்தில் குடிக்கொண்டிருக்கத்தக்கதாகவும், நீதி, இரக்கம், சகோதர சிநேகம், அன்பு, சாந்தம், இச்சை அடக்கம், கிறிஸ்து மற்றும் தேவனுக்கு உன்னதமான பயபக்தி மற்றும் பரிசுத்த சகல அலங்காரத்திற்கும் உரிய தீராத அன்பும் ஜீவியத்தை ஆளும் கொள்கைகளாக உறுதியாக இருக்கத்தக்கதாகவும் கவனிக்கப்பட வேண்டும். ஒருவேளை இந்தக் கொள்கைகள் இருதயத்தில் நிலைநிறுத்தப்பட்டு, ஸ்திரப்படுத்தப்பட்டால், அப்பொழுது இருதயமாகிய நல்ல பொக்கிஷ சாலையிலிருந்து, வாயானது சத்தியம், ஞானம், கிருபை மற்றும் தெளிவான வார்த்தைகளைப் பேசுகின்றதாய் இருக்கும்.
பூரணமான இருதயமும், பாவம் மற்றும் வஞ்சனை இல்லாத வாயையுடைய நமது கர்த்தர் இயேசுவைக்குறித்து, “”உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது;” “”எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு; இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்” (சங்கீதம் 45:2; லூக்கா 4:22) ஆகிய வசனங்களில் பேசப்படுகின்றது. கர்த்தருடைய வார்த்தைகளின் ஆசீர்வாதமான செல்வாக்குக்குறித்து, மோசே கிறிஸ்துவை அடையாளப்படுத்தும் விதத்தில், “”மழையானது இளம்பயிரின்மேல் பொழிவது போல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்” என்று கூறியுள்ளார் (உபாகமம் 32:2). இயேசுவும், “”நான் [R1937 : page 31] உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது” (யோவான் 6:63) என்ற வார்த்தைகளைக் கூறுகின்றார். கர்த்தருடைய வார்த்தைகள் ஞானமுள்ளவைகளாகவும், நியாயமானவைகளாகவும், உண்மையுள்ளவைகளாகவும் இருந்தது. மேலும், அவருடைய சத்துருக்கள் அவரிடத்தில் ஏதாகிலும் குற்றம் கண்டுபிடிப்பதற்குத் தொடர்ந்து நாடினாலும், அவரைக்குறித்து, “”அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்” (லூக்கா 20:26). “”சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்”; என்று வாசிக்கின்றோம் (யோவான் 7:46).
இவ்விதமாக, கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு மாதிரியை விட்டுச்சென்றார். மேலும், இதை நாம் பின்பற்றும்படிக்கு அப்போஸ்தலர், அனைவருக்கும் வலியுறுத்துகின்றார். “”உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” “”ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்;” “”உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்;” “”தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்;” “”ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும்;” “”அவன் வாய்மொழிகளின் துவக்கம் மதியீனமும், அவன் வாக்கின் முடிவு கொடிய பைத்தியமுமாம்;” “”தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக” (கொலோசெயர் 4:6; 1 பேதுரு 4:11; சங்கீதம் 34:13; நீதிமொழிகள் 21:23; பிரசங்கி 10:12-13; 5:2).
யோபு தன்னுடைய கஷ்டமான சூழ்நிலைகள் அனைத்தின் மத்தியிலும், தன் உதடுகளினால் பாவம் செய்யாதபடிக்கு மிகவும் ஜாக்கிரதையுடன் காணப்பட்டார் (யோபு 2:10; 31:30; 1:21-22). கர்த்தர் தன்னுடைய வார்த்தைகளை, தனது இருதயத்தின் அட்டவணையாக எடுத்துக்கொள்வார் என்பதை யோபு அறிந்திருந்தார்; மற்றும், “”தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் (புடமிடப்படுவதற்காக (அ) சிட்சிக்கப்படுவதற்காக உபத்திரவங்களும், பிரச்சனைகளும்) பெற வேண்டாமோ?” “”கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்று கூறி இருதயத்தையும், வார்த்தைகளையும் சரியானவிதத்தில் தக்க வைத்துக்கொள்வதில் ஜாக்கிரதையாகவும் காணப்பட்டார். கடுமையான சோதனைகளின் கீழ், அதிலும் எதற்காக தெய்வீக ஞானம் இந்தப் பிரச்சனைகளை அனுமதித்ததற்கான காரணத்தைத் தெளிவாகப் புரிந்துக்கொள்ள முடியாத நிலையில், எந்த இருதயத்தின் நிறைவினால், வாயானது கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுத்துள்ளதற்குரிய, பொறுமைக்குரிய, விசுவாசத்திற்குரிய வார்த்தைகளைப் பேசுகின்றதோ, அந்த இருதயத்தில் கலகத்தின்/எதிர்ப்பின் ஆவி இருக்கவில்லை என்பதாகும்.
“”என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் (நீதிமானைச் சோதிக்கிறவன்) எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன்” என்ற உறுதியான தீர்மானத்தின் வார்த்தைகளைச் சங்கீதக்காரன், தேவனுக்கென்று அர்ப்பணம் பண்ணி, பரீட்சிக்கப்பட்ட ஜனங்களின் வாயில் வைக்கின்றார் (சங்கீதம் 39:1).
இந்தத் தீர்மானம் மற்றும் இந்தத் தீர்மானத்தினால் வளர்ச்சியடையும் சுயகட்டுப்பாடு, கிறிஸ்தவனுடைய குணலட்சணம் உறுதியாய்க் காணப்படுவதற்கு எவ்வளவு அவசியமாய் இருக்கின்றது. அன்பற்ற உலகத்திடமிருந்து, கர்த்தரைப் போன்று நிந்தனைகளையே நாம் எதிர்ப்பார்க்க முடியும், ஏனெனில் ஊழியக்காரன் தன்னுடைய எஜமானினும் பெரியவன் அல்ல. உலகம், மாம்சம் மற்றும் சாத்தான் நம்முடைய வழியை எதிர்க்கின்றனர்; நம் உள்ளுக்குள்ளே யுத்தங்களும் நடக்கின்றன மற்றும் அநேக அம்புகளும், அக்கினியாஸ்திரங்களும் நீதிமான் மீது எய்யப்படுகின்றன. ஆனால், இத்தகைய பிரச்சனைகள் மற்றும் கடுமையான பரீட்சைகளின் கீழ் ஆத்துமாவிடம் காணப்பட வேண்டிய பாதுகாப்பான மனநிலை என்ன? ஆத்துமாவானது, அதிகமான பிரச்சனைகளைக் கொண்டுள்ள ஒன்றில் இறங்குவதற்குத் துணியும் முன்பு, தேவனுக்கு முன்பு அமைதியுடன் காணப்பட்டு, காத்திருந்து, அவருடைய வழிநடத்துதலையும் அவருடைய சித்தத்தையும் பார்ப்பதற்கென முதலாவது கவனிப்பதும்தான் பாதுகாப்பான மனநிலை அல்லவா. ஆகவேதான் சங்கீதக்காரன், “”நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் (என்னுடைய சொந்த பார்வைக்கு நலமானதாக தோன்றினதைப் பேசுவதிலிருந்து (அ) செய்வதிலிருந்தும்) பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது; என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது (தாவீது இவ்விதமாய் கடுமையான சோதனையை விவரிக்கின்றார்); அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் (திட்டுகின்றவர்களிடத்திலோ, மற்ற எவரிடத்திலோ ஏறெடுக்காமல் மாறாக கர்த்தரிடத்தில்) செய்தேன்” என்று கூறுகின்றார் (சங்கீதம் 39:2-3). நம்முடைய துக்கங்களையும், ஏமாற்றங்களையும், கர்த்தரிடத்தில் எடுத்துச்செல்வது என்பது எப்பொழுதும் நமக்கான பாக்கியமான சிலாக்கியமாக இருக்கின்றது.
சங்கீதம் 39:4-6 வரையிலான வசனங்களிலுள்ள கருத்தின்வாயிலாக, ஆத்துமாவின் விருப்பங்களைத் திருப்திச் செய்வதற்கோ அல்லது காயப்பட்ட மனதை/ஆவியை ஆறுதல்படுத்துவதற்கோ பூமிக்குரிய விஷயங்கள் முற்றிலும் ஆற்றல் அற்றவைகள் என்றும், அவைகள் பயனற்றவைகள் என்றும் தேவன் நமக்குக் காட்டித் தருகின்றார். அடுத்ததாக தற்கால ஜீவியமும், அதன் கவலைகள், ஏமாற்றங்கள் மற்றும் துக்கங்கள் கடந்து போகக்கூடியவைகள் என்றும், நம்முடைய நாட்கள் நாலுவிரற்கடையளவுதான் என்றும், நம்முடைய அனுபவங்கள் எவ்வளவு வேதனையானவைகளாக இருப்பினும், அவைகள் சீக்கிரம் முடிந்துவிடும் என்றும், நாம் கஷ்டமான அனுபவங்களைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில், அவைகள் நம்மிடத்தில் நீதிக்கு ஏதுவான சமாதான கனிகளையே உண்டுபண்ணி நமக்குள் பலமான, அருமையான குணலட்சணங்களையும் வளர்க்கும் மற்றும், முழுமையான சுயக்கட்டுப்பாடு கொள்ளத்தக்கதாகவும், ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதாகவும், துன்பங்களைப் பொறுமையாய்ச்சகிக்கத்தக்கதாகவும், அன்புடன் நேர்மையாக இருக்கத்தக்கதாகவும், உண்மையாய் இருக்கத்தக்கதாகவும், தேவனிடத்தில் விசுவாசமாய் இருக்கத்தக்கதாகவும் நெறிமுறைப்படுத்துகின்றது என்றுமுள்ள விஷயத்தையும் தேவன் காட்டித்தருகின்றார். அடுத்ததாக, வரவிருக்கின்ற ஜீவியத்தில் நீதிமான்களுக்குரிய பாக்கியமான பலன்கள் குறித்த வாக்குத்தத்தங்களை ஆழமான மற்றும் புதிய முக்கியத்துடன் நமக்குத் தேவன் தோன்றச் செய்கின்றார். மேலும், இது நமக்கு நிரந்தரமான பட்டணம் இல்லை என்றும் மாறாக, வரவிருக்கின்ற ஒன்றையே நாடுகின்றோம் என்றும், நாம் தேவனால் உணர வைக்கப்படுகின்றோம். இவ்விதமாக இருதயமானது, பூமிக்குரிய காரியங்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, பரம காரியங்களுடைய உன்னதமான மதிப்பை உணர வைக்கப்படுகின்றது. மாறிமாறி புரட்டப்பட்டு, சோதிக்கப்பட்டு வரும் ஆத்துமாவின் ஏக்கங்களைக் கர்த்தரைத் தவிர வேறு எதுவாலும் திருப்திச் செய்ய முடியாது.
இப்படியாகத் தண்டிக்கப்பட்டு, ஆறுதல்படுத்தப்பட்டு நாம் விசுவாசம் உள்ளவர்களுக்கு மாத்திரமே வெளிப்படுத்தப்பட்டுள்ள பரிசை நாடி, மாறுபாடுள்ள சந்ததி மத்தியில் பொறுமையுடன் தொடர்ந்து நற்கிரியை நடப்பிக்கிறவர்களாகிய, உண்மையாய் ஜெயங்கொள்பவர்களிடத்தில் போகப்போக வெளிப்படுத்தப்படும் மகிமையைத் தற்காலத்திற்கப்பால் நோக்கக் கற்றுக்கொள்கின்றோம். கடுமையான சோதனைகளில் உதவிக்காகவும், ஆறுதலுக்காகவும் கர்த்தரிடத்தில் கடந்துசென்று, இப்படியாக ஆசீர்வதிக்கப்பட்டு, நெறிமுறைப்படுத்தப்பட்ட தேவனுடைய பிள்ளை, உலகத்திற்கு மரிப்பது பற்றியும் அவருடைய அன்பு, ஈவு மற்றும் கிருபை குறித்த கூர்மையான புரிந்துக்கொள்ளுதலுடன் கூடத் தேவனுக்கென்று ஜீவிப்பது பற்றியும் உணர்ந்துக்கொள்ள ஆரம்பிக்கின்றார். மேலும், இப்படியாக உலகத்திடமிருந்து பிரிக்கப்பட்டு, மிக உறுதியாக கர்த்தரிடத்தில் இணைந்துள்ள இருதயத்தின் வார்த்தைகள், “”இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்ப்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை” என்ற வார்த்தைகளாகவே இருக்கும் (சங்கீதம் 39:7).
இதுவே சோதனை மற்றும் ஏமாற்றமான சூழ்நிலைகளில் நாவுக்குக் கடிவாளம் இட்டுக்கொண்டு, நமது அனைத்துக் கவலைகளையும், கர்த்தரிடம் ஜெபத்தில் தாழ்மையுடன் எடுத்துச் சென்றதற்கான பாக்கியமான விளைவாகும். இந்த விளைவின் காரணமாக நாம் பேசும்போது, நம்முடைய பேச்சு, கிருபையினாலும், உப்பினால் சாரமேற்றப்பட்டதாகவும் [R1937 : page 32] காணப்படுகின்றது மற்றும் அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாம் தேவனுடைய வாக்கியங்களையே [R1938 : page 32] பேசுகின்றவர்களாகவும் இருப்போம்.
“”பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும்” என்ற கர்த்தருடைய வார்த்தைகளையும், மற்றும் தற்காலமே (சபையாகிய) நம்முடைய நியாயத்தீர்ப்பு நாள் என்ற உண்மையையும் குறித்து நாம் சிந்திக்கும்போது, நம்முடைய வார்த்தைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருப்பதை நாம் பார்க்கின்றோம். நம்முடைய அனைத்து வார்த்தைகளும், நம்முடைய இருதயத்தினுடைய அட்டவணையாகக் கர்த்தரால் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஒருவேளை நம்முடைய வார்த்தைகள் இரக்கமற்றதாக, நன்றியற்றதாக, பரிசுத்தமற்றதாக (அ) தூய்மையற்றதாக (அ) மரியாதையற்றதாக (அ) விளையாட்டுத்தனமாக/அற்பத்தனமாக (அ) நேர்மையற்றதாக (அ) கலகத்திற்குரியதாய் இருக்குமானால், “”இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” என்ற கொள்கையின் அடிப்படையிலேயே இருதயம் நியாயம் தீர்க்கப்படுகின்றது. இப்படியாக, நம்முடைய அன்றாட ஜீவியத்தில் பல்வேறு விதமான சூழ்நிலைகளில் பேசப்படும் நம்முடைய வார்த்தைகள், அச்சூழ்நிலைகளில், நம்முடைய இருதயத்தின் நிலைமையைக் குறித்துத் தொடர்ந்து தேவனுக்கு முன்பு சாட்சி பகர்ந்து கொண்டிருக்கின்றது. இவைகளுக்கு இசைவாகத்தான் பின்வரும் வசனம் இடம்பெறுகின்றது. “”தேவன் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதையும் பேசாதே, மனம்பதறி எண்ணிப்பாராமல் வாக்குக் கொடாதே இரு (மற்றும் நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய அவருடைய கண்களுக்கு முன்பாக சகலமும் நிர்வாணமாயும், வெளியரங்கமாயுமிருக்கிறது என்பதை ஞாபகத்தில் கொண்டிரு). ஏனெனில், (நம்முடைய நியாயாதிபதியாகிய) தேவன் (சிங்காசனத்தில்) வானத்திலிருக்கிறார். நீ (தேவனுடைய கூண்டிற்கு முன்பு விசாரணையின் கீழ்) பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக” (பிரசங்கி 5:2; எபிரெயர் 4:13 திருவிவிலியம்). ஆகையால், தேவன் முன்னிலையில், சிந்தித்து வார்த்தைகள் பேசப்பட வேண்டுமே ஒழிய, துணிகரமாகவோ, எண்ணிப் பார்க்காமலோ, சிந்திக்காமலோ பேசக் கூடாது.
இன்னுமாக நம்முடைய வார்த்தைகளுக்குரிய பொறுப்புத் தொடர்பாக கர்த்தர் பேசின வார்த்தைகளுக்கு நீதிமொழிகள் 13:3-ஆம் வசனமும் இசைவாக இருக்கின்றது; “”தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்.” தேவனுக்கு அவமதிப்பாய் இருக்கும் அளவுக்குக் கூடப் பொல்லாத விதத்தில் கேலி அல்லது மரியாதையற்ற விதத்தில் கேலி செய்யக் கூடிய நாவுக்கு, எவ்வளவு பயப்படக் கூடிய பொறுப்பு இருக்கின்றது! மேலும் 1 பேதுரு 4:7-ஆம் வசனத்தில் இடம்பெறுகிறபடி, “”தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்” என்ற அப்போஸ்தலர் பேதுருவின் கட்டளைகளும் எத்துணை அவசியமானவைகள் (1 பேதுரு 1:13; 5:8).
இந்த ஒரு பொறுப்பை உணர்கின்றவர்கள் அனைவருடைய உதடுகளிலும், சங்கீதக்காரன், பின்வரும் இந்த ஜெபத்தின் வார்த்தைகளை வைக்கின்றார். “”கர்த்தாவே, என் வாய்க்குக்காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். அக்கிரமஞ்செய்கிற மனுஷரோடே ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கும்படி என் இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இணங்கவொட்டாதேயும்.” “”என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.” “”உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும். உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச்சொல்லும். நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துக்கொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக. கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி” (சங்கீதம் 141:3-4; 19:14; 119:171-174).
நாம் பூரணமற்ற ஜீவிகளாக இருக்கின்றபடியினால், நாம் வார்த்தையிலும், கிரியையிலும் எப்பொழுதும் பூரணமாய் இருப்பது முடியாத காரியமாகும். நம்மால் முடிந்த சிறந்த பிரயாசங்களை எடுத்தாலுங்கூட, சில சமயம் நாம் வார்த்தையிலும், கிரியையிலும் தவறு செய்துவிடுகின்றோம். எனினும் பூரணமான வெற்றியை நம்முடைய வார்த்தைகளிலும், வழிகளிலும் அடைவதற்குக் கடுமையான, உண்மையான, விடாமுயற்சியுடன் கூடிய முயற்சியின் மூலம் நாடப்பட வேண்டும், எனினும் ஒவ்வொரு வீணான வார்த்தைக்கும், இந்த நம்முடைய நியாயத்தீர்ப்பின் நாளில் நாம் கணக்குக் கொடுக்க வேண்டியுள்ளது. ஒருவேளை ஒவ்வொரு கிறிஸ்தவனுக்குரிய கடமையின்படி, நாம் நம்முடைய வழிகளைத் தினந்தோறும் ஆராய்ந்து பார்க்கையில், ஏதோ குறிப்பிட்ட நம்முடைய வார்த்தைகள் கர்த்தரைக் கனவீனப்படுத்துகின்றதாக நாம் கண்டுபிடிப்போமானால், “”ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்துப் பேசுகிறவராயிருக்கிறார்” என்ற வசனத்தின் வார்த்தைகளை நாம் நினைவுகூர்ந்து, நமக்குப் பரிந்துப் பேசுபவருடைய நாமத்தினால் கிருபையின் சிங்காசனத்தை நாம் அணுகி, நாம் தவறை உணர்ந்துக் கொண்டதையும், பரிசுத்தமான நடக்கை மற்றும் சம்பாஷணையின் மூலம் அவருடைய நாமத்தையும், அவருடைய நோக்கத்தைக் கனப்படுத்தவதற்கு நாம் தவறிப் போனதினிமித்தம் நாம் துக்கம் கொள்வதையும் நமது பரம பிதாவினிடத்தில் விவரித்து, நம்முடைய கணக்கில் பாவம் சேர்த்து வைக்கப்படாமல், அவருடைய கிருபையான ஏற்பாடாகிய கிறிஸ்து மூலமான நம்முடைய சுத்திகரிக்கப்படுதலின் மூலம், பாவம் அகற்றப்படும்படிக்குத் தாழ்மையாக விண்ணப்பிக்க வேண்டும்; மற்றும் கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தமே தங்களுடைய நம்பிக்கையாக இருக்கின்றது எனவும் தாழ்மையுடன் தெரிவிக்க வேண்டும் (1 யோவான் 2:1).
இவ்விதமாக, ஒவ்வொரு வீணான வார்த்தைக்கும் நாம் நம்முடைய கணக்கை ஒப்புவிக்க வேண்டும்; மற்றும் மனவருத்தத்தைத் தெரிவிக்கும் நம்முடைய வார்த்தைகளினாலும், விசுவாசத்தின் மூலமாய்க் கொடுக்கப்படும் கிறிஸ்துவினுடைய புண்ணியத்தின் பலனினாலும் நாம் குற்றவாளி நிலையினின்று விடுவிக்கப்படுகின்றோம். இல்லையேல் கர்த்தரைக் கனவீனப்படுத்துகின்ற நம்முடைய வீணான வார்த்தைகள் நமக்கு எதிராய்க் காணப்பட்டு, நம்மைக் குற்றவாளியாக தீர்க்கும்; மற்றும் நாமும் பின்விளைவுகளை அனுபவித்தாக வேண்டிய நிலையிலும் காணப்படுவோம். முதலாம் பின்விளைவு சுயபாதிப்பாகும். ஏனெனில், இடம்கொடுக்கப்படும் ஒவ்வொரு தீமையான எண்ணம் (அ) வார்த்தை குணலட்சணத்தைக் கடினப்படுத்தி விடுகின்றது மற்றும் அநீதியானவைகளிடத்திற்கு நேராக இன்னமும் நடத்திவிடுகின்றது. இரண்டாம் பின்விளைவு மற்றவர்களுக்கு மோசமான மாதிரியாக இருந்து, மற்றவர்களுக்குள் பொல்லாங்கைத் தூண்டி விடுவதாகும். “”மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” (நீதிமொழிகள் 15:1). இப்படியாக ஞானமற்ற (அ) அன்பற்ற வார்த்தைகளின் விளைவாக நாம் நமக்கு பிரச்சனைகளைத் தூண்டிவிடுவோம்; இந்தப் பிரச்சனைகள்/கஷ்டங்கள்/இடர்பாடுகளானது சுயகட்டுப்பாடு பற்றியும், மற்றவருடைய உணர்வுகளையும், கருத்துக்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்வது பற்றியுமான படிப்பினைகளை நமக்குப் போதிக்கும், தவறுக்கான தண்டனை அளிக்கும் நியாயத்தினுடைய பிரதிநிதிகளாக மாறிவிடுகின்றன. நம்முடைய சொந்த தவறுகளினால் இயல்பாக வரும் விளைவுகளானது, பெரும்பாலும் கர்த்தரால் அல்லது சாத்தானால் அனுப்பப்படுகின்ற சோதனைகள்/பிரச்சனைகள் என்று குற்றம் சாட்டப்படுகின்றன. பிரச்சனைக்கான வேர் தங்களிடத்தில்தான் இருக்கின்றது எனக் கண்டுபிடிக்கத் தவறுகின்றவர்கள், கடுமையான சுய நெறிமுறைப்படுத்துதலினாலும் மற்றும் வசனங்களுக்குக் கீழ்ப்படிவதினாலும் தங்களாலேயே அப்புறப்படுத்த முடிகின்றவைகளை, அற்புதகரமான விதத்தில் கர்த்தர் எடுத்து மாற்றும்படிக்கு வீணாக ஜெபம் ஏறெடுக்கின்றவர்களாக இருக்கின்றனர். “”நம்மை நாமே நிதானித்து அறிந்தால் (மற்றும் சரிச்செய்து கொண்டால்) நாம் நியாயந்தீர்க்கப்படோம்; நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே (நம்முடைய தவறுகள் நம்மைக் கொண்டு செல்லும் அனுபவத்தினால் பெரும்பாலும்) சிட்சிக்கப்படுகிறோம்” (1 கொரிந்தியர் 11:31-32). இடர்பாடுகள்/கஷ்டங்கள்/பிரச்சனைகள் நேரடியாக தேவனாலோ, அல்லது சாத்தானாலோ உண்டாக்கப்படவில்லை, “”அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்” (யாக் 1:14). ஆனால், மற்ற ஒருவர் மேல் குற்றத்தைப் போட்டு விடுவதும், நாம் பொறுமையை இழந்ததற்கும், நாம் யோசிக்காமல் வார்த்தை பேசினது அல்லது கிரியை செய்தது இன்னொருவருடைய தவறினால் என்று எண்ணிக்கொள்வதும் இயல்பாகக் காணப்படுகின்றது. நம்மில் எத்தனை பேர், பின்வரும் எண்ணங்களினால் நம்மையே ஊக்குவித்துக் கொண்டு, நம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம்………..அதாவது “”அனைவருமே நியாயமாகயும், நல்லவர்களாயும் நடந்துக்கொள்வார்களானால், பூமி சௌர்க்கம் போல் காணப்படுமே” என்பதேயாகும். அன்பானவர்களே, நாம் ஒருவேளை சத்தமாக உச்சரித்துப் பேசாவிட்டாலும், நம்முடைய இருதயங்களுக்குள் நாம் கொண்டிருக்கும் சுய பாராட்டுதல் மற்றும் சுயதிருப்தியின் வார்த்தைகள், நம்மைக் குற்றவாளியாக்கி விடாதபடிக்கு, நாம் நம்மையே ஆராய்ந்து பார்ப்போமாக, மிகவும் தாழ்மையாகவும் இருப்போமாக. “”உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன?” (லூக்கா 6:33-38). “”அநியாயமாய்ப் பாடுபட்டு, உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகிக்கிறவர்களாய்” நாம் காணப்பட்டால் மாத்திரமே, நம்முடைய பாடுகள் தேவன் [R1938 : page 33] அங்கீகரிக்கத்தக்கதாக இருக்கும், மற்றும் சுகந்த வாசனையுள்ள பலியாகவும் காணப்படும். “”நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்” (1பேதுரு 2:19-21). அன்பிற்குரியவர்களே நாம் நீதியினிமித்தமாக மாத்திரம் நம்முடைய பாடுகள் காணப்படத்தக்கதாகப் பார்த்துக்கொள்ளக்கடவோம் மற்றும், நாம் சுதந்தரித்துக் கொண்ட அல்லது வளர்த்து, விருத்திச் செய்த தவறுகளுக்கு நாம் இடம்கொடுத்தக் காரணத்தினால் உண்டாகும் உபத்திரவங்களுக்கான பழியைத் தேவன் மீது (அ) நம்முடைய அயலார் மீது சுமத்தாமல் இருப்போமாக.
“”நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக் கூடியவனுமாயிருக்கிறான்” (யாக்கோபு 3:2). ஆனால், இப்படிப்பட்ட மனுஷன் எவனும் இல்லை. ஒவ்வொரு எண்ணங்களைக் கிறிஸ்துவின் சித்தத்தின் கீழ்ச் சிறைப்படுத்துவதற்கும், கர்த்தருக்குரிய பயபக்தியில் பூரண பரிசுத்தத்திற்குக் கொண்டு வருவதற்கும் நாம் அன்றாடம் முயற்சிக்கையில், நாம் நமக்குப் பரிந்துபேசுபவராகிய, நம்முடைய மீட்பருடைய புண்ணியத்தின் பலனுக்காக நாம் அனைவரும் தொடர்ந்து வேண்டி கொண்டிருப்பவர்களாகவும் காணப்பட வேண்டும்.
இந்தக் கண்ணோட்டத்தின்படி, நாம் அனைவரும் இப்பொழுது நியாயத்தீர்ப்பின் கூண்டிற்கு முன்பு காணப்படுகின்றோம் என்பதை அதிகமதிகமாய் உணர்ந்துக்கொள்ள கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் முயற்சிக்கின்றனர் என நாம் நம்புகின்றோம். அப்போஸ்தலர் பேதுரு, “”இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்” என்ற கேள்வியை நாமும் கேட்கின்றோம் (2 பேதுரு 3:11). பாதகமான வதந்திகள்/வீண்பேச்சு, கெட்ட (அ) பரிசுத்தமற்ற சம்பாஷணைகள், நேர்மையற்ற (அ) எதிர்ப்பின் வார்த்தைகள் அடங்கிய பேச்சுகள் எதுவும், தேவபக்திக்குள் நிச்சயமாக அடங்காது. கிறிஸ்துவின் நாமத்தை உண்மையாகவும், நேர்மையாகவும் தரித்துள்ளவர்கள், மேற்கூறியவைகளை அகற்றிவிடுவார்களாக. கர்த்தருடனான நம்முடைய கணக்குகளை நாம் தினந்தோறும் சரிச்செய்து முடித்துவிட வேண்டும் என்றும், எந்த வீண் வார்த்தைகளும் மனவருந்தப்படாமல், மன்னிப்புப் பெற்றுக்கொள்ளப்படாமல் சேர்த்து வைத்து, நமக்கு எதிராய்க் குற்றப்படுத்தும் நிலையில் கணக்குகளை வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் நாம் நினைவில்கொள்வோமாக. “”எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளுங்கள்.” “”கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்” (பிலிப்பியர் 1:27; 4:8). இவ்விதமாக இருதயமாகிய நல்லப் பொக்கிஷத்திலிருந்து, நம்மால் சத்திய வார்த்தைகளைப் பேசமுடியும்; மற்றும் தேவபக்தியான நடத்தை மற்றும் சம்பாஷணை மூலம் நமது கர்த்தரைக் கனப்படுத்த முடியும்; மற்றும் நம்முடைய விழுந்துபோன சுபாவத்தின் பொல்லாத தன்மைகளைக் கீழ்ப்படுத்தவும் முடியும்; மற்றும் “”புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்” (1 பேதுரு 2:12) என்ற வசனத்தின்படியும் காணப்பட முடியும்.
ஒருவேளை தினந்தோறும் தேவனிடத்தில் நம்முடைய கணக்குகளை நாம் ஒப்புவித்து, ஒவ்வொரு நாளும், அதிகமான ஜெயங்கொள்ளுவதற்குரிய வல்லமைக்கான அவரது கிருபையை நாடுவோமானால், நாம் குற்றமற்றவர்களாகத் தீர்க்கப்பட்டு, கிறிஸ்து மூலம் தேவனால் அங்கீகரிக்கப்படும் நிலையில் நிற்க முடியும், மற்றும் நாம் அவருக்கு அங்கீகரிக்கத்தக்கதாகவும், பிரியமாகவும் இருக்கின்றோம் என்பதை நம்முடைய ஆவியுடன் அவருடைய ஆவி கொடுக்கும் சாட்சியை உடையவர்களாகவும் இருப்போம்.