R2589 (page 73)
மத்தேயு 7:1-14
“”ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”
இந்தப் பாடத்தில், கர்த்தருடைய மாபெரும் மலைப்பிரசங்கத்திலுள்ள இன்னொரு விஷயத்தை நாம் பார்க்கப் போகின்றோம். இந்தப் பிரசங்கம் பாவிகளுக்காக இராமல், கர்த்தருடைய அர்ப்பணம் பண்ணியுள்ள ஜனங்களுக்காகப் பண்ணப்பட்ட பிரசங்கமாகும். நம்முடைய கர்த்தருடைய இந்தப் பிரசங்கத்தைத் திரளான ஜனக்கூட்டத்தார் கூடிநின்று கேட்டாலும், அதிலும் அவர்கள் அனைவரும் நிழலாக அர்ப்பணம் பண்ணப்பட்ட தேசத்தாராகிய இஸ்ரயேலர்களாக இருந்தாலுங்கூட, நமது கர்த்தர் இவ்வார்த்தைகளை விசேஷமாக தாம் தெரிந்துக்கொண்ட 12-சீஷர்களிடத்திலேயே கூறினார். இந்த 12-சீஷர்களும் சீக்கிரத்தில் தொடங்கவிருக்கும் ஆவிக்குரிய யுகத்தின் கீழ், வெளிப்படுத்தின விசேஷத்தில் புதிய எருசலேம் எனும் அடையாள வார்த்தை அடையாளப்படுத்தும் பரலோக இராஜ்யத்திற்கான 12-அஸ்திபாரங்களாக இருக்கத்தக்கதாக குறிப்பாகவும், முழுயைமாகவும் போதிக்கப்பட்டுள்ளார்கள். (வெளிப்படுத்தல் 21:14).
இந்த இராஜரிக பிரமாணத்தின் பல்வேறு அம்சங்களை அன்றும், இன்றும் ஏற்றுக்கொள்கின்ற அனைவருக்கும், அது ஆரோக்கியமான ஆலோசனையாக விளங்குவது என்பது உண்மையே. ஆனால், சத்தியத்தினுடைய இந்தப் பரிசுத்தமான முத்துக்களைப் புரிந்துக்கொள்ளத்தக்கதாக வெகு சிலரது கண்கள் திறக்கப்படுவதினாலும், செவிகள் திறக்கப்படுவதினாலும், அதனால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்ததும் உண்மையே. இவைகளை ஏற்றுக்கொள்பவர்களுக்கே, இவைகள் பேசப்பட்டதும் உண்மையே ஆகும். சீக்கிரத்தில் நிறைவேறப் போகின்ற நல்ல நம்பிக்கைகளுக்காகவும், இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட போகிறதற்காகவும், குருடாயுள்ள கண்கள் யாவும் திறக்கப்படப் போகிறதற்காகவும், செவிடான அனைத்துக் காதுகளும் திறக்கப்படப்போகிறதற்காகவும், தேவனுடைய ஏற்றவேளையில் அன்பு எனும் பொன்னான சட்டத்தின் கட்டளைகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவரும் அந்தக் கட்டளைக்குச் செவிசாய்க்கப் போகிறார்களா அல்லது புறக்கணிக்கப் போகிறார்களா என்று அறிவதற்கு அனைவர் மத்தியிலும் அக்கட்டளை/சட்டம் அமுல்படுத்தப்படப் போகிறதற்காகவும் தேவனுக்கு நன்றி.
நமது கர்த்தருடைய மாதிரியையும், உத்தரவையும் நாம் பின்பற்றி, “”பழையதும், புதியதுமான” ஏற்றக்கால சத்தியத்தை விசுவாச வீட்டாருக்கு அதாவது, இராஜ்யத்தினுடைய பிள்ளைகளுக்கு முன்பாக வைப்பதற்கு நாம் முயற்சி எடுக்கின்றோம். ஆனால், அதை “”நாய்களுக்கு” முன்பாக வைக்கப்போவதில்லை. அதாவது, தெய்வீகத் தயவிற்கு வெளியே காணப்படுபவர்களும், தேவனுடைய கிருபையை இன்னமும் பெற்றுக்கொள்ளாதவர்களும், அவருடைய குடும்பத்திற்குள் குமாரர்களாக தத்தெடுக்கப்படாதவர்களுமாகிய “”நாய்களுக்கு” முன்பாக வைக்கப்போவதில்லை. கேட்கும் செவிகளை உடையவர்களுக்கும், புரிந்துக்கொண்டு ஏற்றுக்கொள்ளும் இருதயம் உடையவர்களுக்கும், ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களுக்கும், கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக புதிய சிருஷ்டிகளாக இருப்பவர்களுக்கும் புதிய வாழ்க்கை வாழ நாடுபவர்களுக்கும் இந்த விலையேறப்பெற்ற சத்தியங்கள் மகா மதிப்பும், மகா விலையுமுள்ள முத்துக்களாக இருக்கின்றது. பன்றி போன்றவர்களிடமும், முரடர்களிடமும் நாம் இச்சத்தியத்தை முன்வைத்தால், அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது மாத்திரம் காரணமாக இராமல், இன்னுமாக அவர்கள் ஏமாற்றமடைந்த உணர்வையடைந்து, நமக்குப் பாதிப்பு உண்டாக்குவதற்கு ஏதுவாக, நம்முடைய நல்ல நோக்கங்களின்மேல் எரிச்சல் அடைவார்கள் என்ற காரணத்தினாலும் நாம் சத்தியத்தை அவர்கள் முன்வைக்கவில்லை. இதைக் குறித்து நமது கர்த்தர், “”பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள். உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள். போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்” என்று பேசுகின்றார் (மத்தேயு 7:6). மேலும், அவருடைய வார்த்தைகள் “”பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான். துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் sதன்னைக் கறைப்படுத்திக் கொள்ளுகிறான். பரியாசக்காரனைக் கடிந்து கொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான். ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்” என்ற வசனங்களுக்கு முழு இசைவாகவே உள்ளது (நீதிமொழிகள் 9:7-8).
ஆகையால் விசுவாச வீட்டாருக்கே, கர்த்தர் “”நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” என்ற வார்த்தைகளைப் பேசினார் (மத்தேயு 7:1). இந்த ஆலோசனையைக் கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் மாணாக்கர்களாக இல்லாதவர்களுக்கு வழங்குவது பயனற்றதாகும். ஆனால், அனைத்து உண்மையான சீஷர்களும் (மாணாக்கர்களும்) இந்த ஆலோசனைக்கு உண்மையாய்ச் செவிசாய்க்க வேண்டும். மேலும், இவ்வாலோசனையில் மிக முக்கியமான பாடமுள்ளது என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும். மேலும், இந்தப்பாடத்தைக் கற்றுக்கொள்ளவில்லையெனில், நாம் மாபெரும் பரீட்சைக்கு ஆயத்தமற்றவர்களாகக் காணப்படுவோம் என்றும், தேர்ச்சிப் பெறுவதற்கு ஆயத்தமற்றவர்களாகவும், இராஜ்யத்திற்கு ஆயத்தமற்றவர்களாகவும் காணப்படுவோம் என்றும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். தேர்ச்சிப் பெறுவதற்கு ஆயத்தமற்றவர்களாகக் காணப்படுவதற்கான காரணம் என்னவெனில், தங்களுடைய பரீட்சையில் இப்படிப்பினையானது ஒரு பரீட்சையாகக் காணப்படுவதை புரிந்துக்கொள்ளாமல் இருப்பதேயாகும். ஒருவேளை இவர்கள் குற்றம் கண்டுபிடிப்பவர்களாகவும், சந்தேகிப்பவர்களாகவும், மற்றவர்களை அன்பற்றவிதத்திலும், கடுமையானவிதத்திலும் நியாயந்தீர்ப்பவர்களாகவும் இருப்பார்களானால், இது இவர்கள் முழுமையான அன்பும், கனிவுமுள்ள கிறிஸ்துவின் ஆவியாகிய அன்பின் ஆவியை வளர்த்துக் கொள்ளாததற்கான தெளிவான அடையாளமாகும். மேலும், இப்படியாகக் காணப்படுபவர்கள் இராஜ்யத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று நியாயந்தீர்க்கப்படுவார்கள் அல்லது குற்றம் தீர்க்கப்படுவார்கள். ஏனெனில், நாம் மற்றவர்களை நியாயந்தீர்க்கிறபடியே, நாமும் நியாயந்தீர்க்கப்படுவோம். ஏனெனில், இதைக்காட்டிலும் நம்முடைய உண்மையான ஆவிக்குரிய நிலைமையை அதாவது அன்பு நம்மிடத்தில் இருக்கின்றதா அல்லது இல்லையா என்பதை விவரித்துக் காட்டுவதற்குச் சிறந்தவழி வேறெதுவும் இல்லை.
எந்தளவுக்கு மற்றவர்களிடத்தில் நாம் இரக்கமும், தயாளத்தையும் பாராட்டுகின்றோமோ, அவ்வளவாகவே தெய்வீக இரக்கம் நம்மிடத்தில் பாராட்டப்படும். மாபெரும் ஆண்டவரின் உதடுகளிலிருந்து புறப்பட்டு வெளியே வந்த இந்தப் பாடத்தை, கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் தங்களுடைய இருதயங்களில் நன்கு பதிய வைக்கப்பெற்றிருப்பார்களானால், இந்தப் பாடமானது மற்றவர்களைப்பற்றியதான இவர்களுடைய எண்ணங்களிலும், மற்றவர்கள் விஷயத்தில் நடப்பிக்கும் இவர்களுடைய கிரியைகளிலும் எத்துணை அருமையான செல்வாக்கு உடையதாய் இருக்கும்; இன்னுமாக இவர்கள் எவ்வளவு தயாளம் கொண்டவர்களாகவும், எவ்வளவு மன்னிக்கின்றவர்களாகவும், மற்றவர்களுடைய பெலவீனங்களுக்காக எவ்வளவு இரக்கப்படுகின்றவர்களாகவும் இருப்பார்கள்; இன்னுமாக, இவர்களுடைய இருதயத்தில் அன்பின் ஆவி எவ்வளவாய் வளர்ந்து பெருகி, இவர்களுடைய வார்த்தைகளிலும், கிரியைகளிலும் வெளிப்படுகின்றதாய்க் காணப்படும்.
தங்களைப்போன்று இடுக்கமான வழியில் நடப்பதற்கு நாடிக்கொண்டிருக்கும் “”சகோதரர்களிடத்தில்” எப்போதும் குற்றங்கண்டுபிடிப்பவர்களும், கர்த்தருக்கு ஒத்த சாயலை அடையும்படிக்கு நாடிக்கொண்டிருக்கும் “”சகோதரர்களுடைய” உண்மையான பிரயாசங்களை ஒருபோதும் பார்க்க முடியாதவர்களும், எப்போதும் சகோதரர்களைக் குத்திக்கொண்டே இருப்பவர்களும்தான் தவறுகளிலேயே பெரிய தவறுகளைக் கொண்டிருப்பவர்களாகவும், அன்பில்லாதவர்களாகவும் காணப்படுவார்கள் என்ற கருத்தைக் கர்த்தர் தெரியப்படுத்துகின்றார். இந்த வகுப்பரைக் கடிந்துகொள்ளும் விஷயத்தில், நமது கர்த்தர் பயன்படுத்தும் மிகைப்படுத்தின வார்த்தைகள் ஏளனத்தை வெளிப்படுத்துகின்றது. ஏனெனில், “”உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல், உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்களில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?” என்று சொல்லர்த்தமான வார்த்தைகளிலேயே பேசுகின்றார் (மத்தேயு 7:3; திருவிவிலியம்). அனைத்துச் சகோதரர்களுக்கும் ஏதோ ஒருவிதத்தில் மாம்சத்தின் பெலவீனங்கள் காணப்படவே செய்கின்றன. ஏனெனில், அனைவரும் புதிய சுபாவமாகிய பொக்கிஷத்தை ஆதி பாவத்தினால் கெடுக்கப்பட்ட பூரணமற்ற மண்பாண்டங்களிலேயே பெற்றிருக்கின்றனர். “”நீதிமானாக ஒருவனாகிலும் இல்லை,” முழுமையான பூரணத்துடன் எவரும் இல்லை. எனினும் இருதயத்தில் அன்பினால் முழுமையாய் நிரப்பப்பட்ட நிலையில் காணப்படும் சகோதர சகோதரிகள், அவர்களுடைய விசுவாசத்தின் அல்லது ஆவிக்குரியவைகளைப் புரிந்துக்கொள்ளும் கண்களில் துரும்பைக் கொண்டிருந்தாலும், அல்லது அவர்களுடைய ஜீவியத்தின் அனைத்துக் கிரியைகளையும் பாதித்து, பூரணமற்ற நிலையில் அவர்களுடைய கிரியை காணப்படத்தக்கதாக அவர்களுடைய கரங்களில் சிறு கண்ணாடித்துண்டு குத்தியிருந்தாலும், மேலும், அவர்கள் விருப்பம் கொண்டாலுங்கூட, அவர்களால் பூரணமாய் நடக்க முடியாதளவுக்கு, அவர்களுடைய பாதங்களில் சிறு கண்ணாடி துண்டுகள் குத்தியிருந்தாலும், அவர்களிடத்தில் ஒருவேளை விசுவாசத்தின் ஆவியும், அன்பின் ஆவியும், அனுதாபத்தின் ஆவியும், கிறிஸ்துவின் ஆவியும் காணப்படும் பட்சத்தில், அவர்கள் அன்பின், இரக்கத்தின் ஆவி இல்லாதவர்களைக்காட்டிலும் அதிகமாய்த் தேவனுடைய பார்வையில் அங்கீகரிக்கப்படுவார்கள். [R2589 : page 74] இப்படியான அன்பின் ஆவியும், இரக்கத்தின் ஆவியும் இல்லாதவர்கள் கர்த்தருடைய ஆவியை மிகச் சிறிய அளவிலும், “”சகோதரரைக் குற்றம் சாட்டும்” மாபெரியவனாய் இருக்கும் எதிராளியானவனின் ஆவியை மிக அதிகமான அளவிலும் கொண்டிருக்கும் காரணத்தினால், மற்றவர்களை நியாயந்தீர்க்கும் தவறான வழியைத் தெரிந்துக்கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.
அன்பற்ற, குற்றம் கண்டுபிடிக்கின்ற, சகோதரரைக் குற்றம் சாட்டும் வகுப்பாரை, கர்த்தர் மாய்மாலக்காரர்கள் என்று அழைக்கின்றார். ஏன்? ஏனெனில், இவர்கள் மற்றவர்களிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கையில், தாங்கள் அவர்களைப் போல் பாவத்தின் பிணியினால் நோய்வாய்ப் படவில்லை எனும் எண்ணத்தை மற்றவர்களுக்கு அளிக்க விரும்பவது தெளிவாகின்றது. இன்னுமாக, தாங்கள் பரிசுத்தமாய்க் காணப்படுபவர்கள் என்ற எண்ணத்தை மற்றவர்களுக்குக் கொடுக்கவும் இவர்கள் விரும்புகின்றார்கள். இது பொய் என்றும், தங்களிடத்தில் அநேக குறைவுகளும், பெலீவனங்களும் இருக்கின்றது என்றும் இவர்கள் தங்கள் இருதயத்தில் அறிந்திருக்கும் நிலையிலும், தாங்கள் பரிசுத்தமாய்க் காணப்படுபவர்கள் என்ற எண்ணத்தை மற்றவர்களுக்குக் கொடுக்க விரும்புகின்றனர். இப்படியாக, இவர்கள் காணப்படுவதினால் இவர்களது போக்கானது மாய்மாலமாகவும், ஏமாற்றுத்தனமாகவும், தவறானதாகவும், தேவனுக்குப் பிரியமற்றதாகவும் காணப்படுகின்றது. பாவத்தின் மீதான வெறுப்பின் காரணமாகவும், தவறு செய்பவர்கள் மீதான அன்பின் காரணமாகவுந்தான், தாங்கள் குற்றம் கண்டுபிடிப்பதாக இவர்கள் கூறுவது, நமது கர்த்தருடைய வார்த்தைகள் சுட்டிக்காண்பிப்பதுபோன்று ஏமாற்றுத்தனமும், வஞ்சனையுமாகக் காணப்படுகின்றது. இவர்கள் தங்களுடைய சொந்த பாவங்கள் மற்றும் பெலவீனங்களுக்கு எதிராக யுத்தம் பண்ணுவதற்கும், பகைப்பதற்கும், குற்றஞ்சாட்டுவதற்கும், அதாவது, தங்களிடத்திலிருந்து மாய்மாலம் மற்றும் போலித் தற்பெருமை எனும் மரக்கட்டைகளை வெளியேற்றுவதற்குரிய அநேக வேலைகளை இவர்களுக்குள் பெற்றிருக்கின்றார்கள். இப்படியாக, இவர்கள் செய்வார்களானால், இவைகளால் வரும் அனுபவங்கள், இவர்களை மற்றவருக்கு உதவி செய்யும் விஷயத்தில் இரக்கத்துடனும், அன்புடனும், இனிமையுடனும் இருப்பதற்கு ஏதுவாக இவர்களை உருவாக்கியிருக்கும்.
நமது கர்த்தர் இங்கு முன்வைத்துள்ள விஷயத்தை அனைத்துச் “”சகோதரர்களும்” கவனமாய்ப் பார்க்க வேண்டும். மேலும், தங்களிடத்தில் இருதயத்தில் ஏதேனும் தீயப் பண்புகள் இருக்கின்றதா அல்லது இல்லையா என்பதை நன்கு கவனிக்க வேண்டும். அதாவது, குற்றம் கண்டுபிடித்துத் திட்டுதல், கடுமையாகக் குற்றத்தை விமர்சித்தல் மற்றும் தீவிரமாய்க் குற்றத்தைப் பலர் அறிய தாக்கிப் பேசுதல் போன்றதான தவறான/தீய பண்புகள் நம்மிடத்தில் இருக்கின்றனவா எனக் கவனிக்க வேண்டும்… மேற்கூறப்பட்டவைகள் அனைத்தும் ஒரு தவறின் பல்வேறு நிலைகளாகும். ஒருவேளை எவரேனும் தங்களுடைய ஆவிக்குரிய கண்களில் போலி தற்பெருமை மற்றும் அன்பின்மை எனும் மரக்கட்டையின் ஏதேனும் தடயத்தைக் காண்பார்களானால், அவர்கள் உடனடியாக மாபெரும் (இயேசு) வைத்தியனிடம் சென்று, அவர்கள் “”சகோதரருக்கு” மென்மையான மற்றும் இரக்கமுள்ள உதவியாளர்களாக உடனடியாக ஆகுவதற்கும், ஆயிரம் வருஷம் யுகத்தின் மாபெரும் வேலைக்காக மருத்துவர்களாகவும், அறுவை சிகிச்சையாளர்களாகவும் அவர்கள் ஆயத்தமாகிக்கொள்வதற்கும், மரக்கட்டையை முழுமையாக நீக்கிப்போட்டுக்கொள்ள வேண்டும். மனுக்குலத்தின் குருடாக்கப்பட்டுள்ள கண்களை இரக்கத்துடனும், அன்புடனும் திறந்து வைப்பதும், பாவத்தின் அனைத்துப் புண்களைச் சொஸ்தப்படுத்துவதும்தான் ஆயிர வருஷ யுகத்தின் மாபெரும் வேலையாகும்.
நம்மைப்போன்று நமது ஆண்டவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் பிரயாசம் எடுப்பவராகிய நமது “”சகோதரரை” நாம் நியாயந்தீர்க்கக் கூடாது. எனினும், பொதுவான மனுக்குலத்தின் விஷயத்திலும் நாம் ஒரு குறிப்பிட்ட விதத்தில் நியாயந்தீர்க்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். “”அவர்களுடைய கனிகளினாலே,” அதாவது “”முட்செடிகளிலிருந்து திராட்சப் பழங்களையும், முட்பூண்டுகளிலிருந்து அத்திப்பழங்களையும் நம்மால் வேறுபடுத்தி அறிந்துக்கொள்ள முடியும் என்று வேறொரு இடத்தில் கர்த்தர் தெரிவிக்கின்றார். இதே பிரசங்கத்தில் சகோதரர்களுக்கும், “”நாய்களுக்கும்” மற்றும் சகோதரர்களுக்கும், “”பன்றிகளுக்கும்” இடையேயுள்ள வித்தியாசம் என்னவென்பதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும் அல்லது நியாயந்தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் சுட்டிக்காட்டுகின்றார். “”பன்றிகள்” சுயநலமுள்ளவர்கள், சிற்றின்பம் நாட்டம் கொண்டவர்கள், பூமிக்குரிய காரியங்கள் மீது நாட்டம்கொண்டவர்கள், தேவனுடைய ஆவியினால் ஒருபோதும் ஜெநிப்பிக்கப்படாதவர்கள் ஆவார்கள். இப்படிப்பட்டவர்களை, இவர்களுடைய வெளிப்புற சாட்சிகளினாலே நாம் அறிந்துக்கொள்ளலாம். ஏனெனில், “”கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றிராத எவனும், அவருடையவன் அல்ல.” மேலும், ஒருவேளை ஒருவன் கிறிஸ்துவினுடையவன் அல்லாதவனானால், ஒருவன் திரட்சச் செடியின் கொடி அல்லாதவனானால், அப்படிப்பட்டவனிடத்தில் திராட்சப் பழங்களின் கொத்தைக் கட்டுவதற்கென நமது நேரத்தை, வீணாக நாம் செலவழிக்கக்கூடாது. சுயநலத்திலும், ஜெநிப்பிக்கப்படாத/புதுப்பிக்கப்படாத நிலையிலுமுள்ள உலகத்தாரிடம், உண்மையான பரிசுத்த ஆவியைப் போலித்தனமாக விளங்கச்செய்வதற்கு உதவி நாம் புரிவதின் மூலம் மற்றவர்களையோ அல்லது நம்மையோ வஞ்சிப்பதற்கு நாமே முயலுகின்றவர்களாய்க் காணப்படக்கூடாது. பூமிக்குரியவைகளை மாத்திரம் புரிந்துக்கொள்ள முடிகின்ற வகுப்பார், இறைச்சிகடையிலிருந்து வரும் இறைச்சிக்கும், ஆசாரியர்களால் மாத்திரமே புசிக்கப்படும் பலிக்குரிய இறைச்சிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை அறிந்துக்கொள்ள முடியாததுபோன்று, இவ்வகுப்பார் பரிசுத்தமான, பரலோகத்திற்குரியவைகளை உணரார்கள். பணத்தையும், இந்த ஜீவியத்திற்குரியவைகளையும் மாத்திரம் கருத்தில் கொள்ளும் பேராசை பிடித்தவர்களாகிய பன்றி போன்றவர்கள், ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டுள்ள சகோதரர்களின் பார்வையில் மிகவும் விலையேறப்பெற்றதாய்க் காணப்படும் சத்தியம் எனும் முத்துக்களை, உணர்ந்து ஏற்றுக்கொள்வார்கள் என நாம் எதிர்ப்பார்க்கக்கூடாது.
ஆனால், கர்த்தருக்கென்று தங்களை அர்ப்பணம் பண்ணிக்கொள்ளாத ஜனங்களின் கவனத்திற்கு நாம் பரிசுத்தமானவைகளை ஒருபோதும் கொண்டு வரக்கூடாது என்பது கருத்தாக இராமல் மாறாக, நீதி மற்றும் சத்தியத்தின் அடிப்படையான கொள்கைகளை மாத்திரமே முன்வைக்கையிலே, ஒருவரிடம் சத்தியத்திற்குச் செவிசாய்க்கும் செவிகள் இருக்கின்றதா அல்லது இல்லையா என்பது தெரிந்துவிடும். ஒருவேளை கேட்கும் செவி இருப்பதை நாம் கண்டால், நாம் ஊழியம் புரிவதில் கடும் முயற்சி ஏறெடுக்கலாம். ஆனால், ஒருவேளை அடைத்திருக்கும் செவியைக் காண்போமேயானால், அத்தகையவர்களிடம் இந்தச் சுவிசேஷ யுகத்தின் அழைப்பு, பரிசுத்தவான்கள் ஆகுதவற்கான அழைப்பு, தெய்வீகச் சுபாவம் மற்றும் இராஜ்யத்தில் உடன் சுதந்திரர் ஆகுவதற்கான அழைப்புத் தொடர்பான முயற்சிகள் எடுப்பது பலனளிக்காது என்று அறிந்தவர்களாக நாம் நமது நேரத்தை விரயமாக்குவதை விட்டுவிடலாம் என்பதே கருத்தாகும். கடினமான இருதயங்களை உடைப்பதற்கும், குருடான கண்களைத் திறப்பதற்கும், செவிடான செவிகளைத் திறப்பதற்கும் தேவனுடைய ஏற்றவேளையாகிய ஆயிர வருஷ யுகமானது சீக்கிரத்தில் வரும்.
[R2590 : page 74]
“”நாய்கள்,” “”பன்றிகளிடத்தில்” சில விஷயங்களில் ஏறெடுக்கப்பட்ட பிரயாசங்கள் அதாவது, முட்செடிகளிலும், முட்பூண்டுகளிலும், கிறிஸ்துவின் ஆவியினுடைய கனிகளைப்போன்ற போலியான பல்வேறு கனிகளைக்கட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் இப்படிப்பட்டவர்களுக்கு, விசுவாச வீட்டாருக்குரிய அப்பத்தை/போஜனத்தை சுவையாய் இருக்கச் செய்வது, உண்மையில் கர்த்தருடைய நோக்கத்திற்குப் பாதிப்பையே உண்டுபண்ணியுள்ளது. “”நாய்” வகுப்பாரைப் போஷிப்பிப்பதற்கு ஏறெடுக்கப்படும் பிரயாசத்தில், “”சகோதரர்கள்” கவனிக்கப்படத் தவறிப் புறக்கணிக்கப்பட்டுவிடுகின்றனர். “”பன்றிகளுக்கு” முத்துகள் மீதும் விருப்பத்தைத் தூண்டுவதற்கான பிரயாசத்தில் மணவாளனுக்காக, மணவாட்டி ஆயத்தம் செய்யப்படும் விஷயமும், மணவாட்டியைச் சத்தியத்தின் முத்துக்களைக்கொண்டு அலங்கரிக்கும் விஷயமும் புறக்கணிக்கப்பட்டுப் போய்விடுகின்றது. முட்புதரில், திராட்சச் செடியின் இயற்கையான கனிகள் கட்டி வைக்கப்படும்போது, முட்புதருக்கும் மற்றும் நல்ல கனிகளைக்கொடுக்கும் உண்மையான திராட்சச் செடியின் உண்மையான மதிப்பிற்கும், சுபாவத்திற்கும் இடையேயுள்ள மாபெரும் வித்தியாசமும் அதிகமாக மறைக்கப்பட்டுவிடுகின்றன. எழுதப்பட்டிருக்கும் காரியங்களைவிட நம்மை நாம் ஞானவான்கள் எனக் காட்டாதிருப்போமாக. இந்த யுகத்திற்கெனத் தேவனால் நியமிக்கப்பட்டுள்ள தற்காலத்திற்குரிய வேலையில் நாம் ஈடுபட்டு, மனுக்குலத்தின் உலகத்திற்கான பொதுவான வேலைகளைத் தேவனுடைய நியமிக்கப்பட்ட காலத்திற்கு விட்டுவிடுவோமாக.
இப்பொழுது “”சகோதரர்கள்” கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களுக்கு நாம் வரலாம். ஒருவரையொருவர் நியாயந்தீர்க்கும் விஷயத்தைச் சரி பண்ண வேண்டும் என்பதை விசேஷமாக மனதில் கொண்டவராக நமது கர்த்தர், இந்தத் தவறான பண்பை எப்படி அகற்றிப்போடுவது என்பதற்கான போதனைகளை அளிக்கின்றார். மற்றவர்களை நாம் நியாயத்தீர்ப்பு செய்வதிலிருந்து நம்மைத் தடைப்பண்ணுவதற்கும், நம்முடைய சொந்த குறைவுகளை நாம் சரிச் செய்துகொள்ள நமக்கு உதவுவதற்கும் நமக்குத் தேவையான அன்பையும், அனுதாபத்தையும் நாம் கர்த்தரிடத்தில் கேட்க வேண்டும். நாம் உண்மையாய்க் கேட்போமானால், இதற்கான அவருடைய கிருபையையும், உதவியையும் நாம் பெற்றுக்கொள்வோம். நாம் அவரிடத்தில் கேட்கையில், நாம் குறைவுபட்டுள்ள அன்பின் பரிசுத்த ஆவியானது நம்முடைய இருதயங்களை நிரப்பும்படி நாடுவது நமக்குரிய கடமையாகும். ஒருவேளை இதை நாம் நாடினால் நாம் அதைக்கண்டடைவோம். தொடர்ச்சியான பிரயாசங்கள் மூலமாகவும், இடைவிடாத ஜெபத்தின் மூலமாகவும், கிருபை மற்றும் ஆசீர்வாதத்தினுடைய கர்த்தரின் களஞ்சியத்தை நாம் தட்டிக்கொண்டிருக்க வேண்டும். இதன் விளைவாக, அது நமக்கு நிச்சயமாகத் திறக்கப்படும். தட்டுதல், கேட்டல், நாடுதல் ஆகியவைகள் கர்த்தருடைய பார்வையில் பிரியமாய்க் காணப்படும். மேலும் இது அவரிடத்திலான நமது விசுவாசத்தைக் குறிக்கின்றது; மற்றும் நம்மிடத்தில் காணப்படும் உண்மையையும், கர்த்தருடைய சித்தத்திற்கு முழுமையாய் இசைவுடன் காணப்பட வேண்டும் என்ற நமது விருப்பத்தையும் குறிக்கின்றது. மேலும், நம்முடைய இருதயத்தின் இந்த நல்ல விருப்பங்கள் நிறைவேற்றப்படும், ஏனெனில், பூமிக்குரிய உணவைக் கேட்கும் குழந்தைக்குப் பூமிக்குரிய பெற்றோர் கொடுப்பது [R2590 : page 75] போன்று, தேவனும் தம்முடைய பிள்ளைகளுக்குத் தேவையான எல்லா நேரங்களிலும், அவர்களுக்குச் செவிச்சாய்த்துக் கிருபையை அருளுவார். நாம் நல்லவைகளுக்காக விருப்பம் கொள்ளும்போது, அவர் நம்மை ஏமாற்றுவதுமில்லை; தீமையானவைகளையும் நமக்குக் கொடுப்பதுமில்லை. மாறாக, நாம் கேட்டதை அல்லது எண்ண முடிவதைவிட மிக அதிகமாய்த், திரளானதாய், மேன்மையானதாய் நமக்குக் கொடுத்தருளுவார். ஏனெனில், பூரணமற்ற மனுஷ தந்தையினால் செய்ய முடிகின்றதைப் பார்க்கிலும் நமது பரம பிதா மிகச் சிறப்பானதைச்செய்ய வல்லவராய்க் காணப்படுகின்றார்.
“”பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்” (லூக்கா 11:13). இங்குக் கேட்கிறவர்களுக்கும், தேடுகின்றவர்களுக்கும், தட்டுகின்றவர்களுக்கும், தேவன் கொடுக்கப் பிரியப்படும் நல்ல விஷயம், அவருடைய பரிசுத்த ஆவியே என்று கூறப்பட்டுள்ளது. இதுவே நாம் வெளியேற்ற வேண்டிய மாம்சத்தின் பரிசுத்தமற்ற, அன்பற்ற, சுயநலமுள்ள, நியாயந்தீர்க்கும், குற்றம் கண்டுபிடிக்கும் ஆவியை அணைத்துப் போடுவதற்கு அவசியமானதாகும். விஷத்திற்கு எதிரான மருந்து, நாம் பரிசுத்த ஆவியினாலும், அன்பின் ஆவியினாலும் நிரப்பப்படுவதேயாகும். ஏனெனில், அன்பு தனது அயலானுக்குத் தீங்கு விளைவிக்காது. “”அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது.” மற்றவர்களுடைய தவறுகளைப்பார்ப்பதற்கும், சொந்த தவறுகளைப்பார்ப்பதில் குருடாய் இருப்பதற்கும் “”அன்பு இறுமாப்பாய் இராது.” குற்றம் கண்டுபிடித்து, சகோதரரைக் குற்றம் சாட்டுகின்றவராய் இருப்பதற்கு அன்பு தன்னைப் புகழுவதில்லை. தேவனுடைய ஆவியாகிய அன்பும், அனுதாபமும் உதவி செய்கின்றதாயும் காணப்படுகின்றது. (1 கொரிந்தியர் 13:4; ரோமர் 13:10)
“”ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” (மத்தேயு 7:12). இவ்வசனத்தில் இடம்பெறும் “”ஆதலால்” என்ற வார்த்தையானது இவ்வசனத்திற்கும், இப்பாடத்தில் நாம் முன்பு பார்த்துள்ள விஷயங்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதைக்காட்டுகின்றது. இவ்வசனத்தின் காரியங்களானது, நாம் எப்போதெல்லாம் மற்றும் எவ்வளவாய் மற்றவர்களுடைய நோக்கங்களைத் தவறாய் நியாயம் தீர்த்துக்கொண்டு, அவர்களிடத்தில் (கைகளிலும், பாதங்களிலும்) காணப்படும் சிறு கண்ணாடித் துண்டுகளை மாற்றிப்போடுவதற்கு மிகவும் கவனமாக, அறுவை சிகிட்சைச் செய்வதற்கு முயற்சிகள் எடுப்பதற்கு அநாவசியமாகத் தலையிடுகின்றோம் என்பதை அறிந்துக்கொள்வதற்குப் பரீட்சையாக அல்லது கோட்பாடாக அல்லது அளவுகோலாகக் காணப்படுகின்றது. ஆகவே இவ்வசனமே, “”பொன்னான சட்டமாகும்/கோட்பாடாகும்.” அதாவது, தேவனுடைய ஜனங்கள் அவர்களுடைய ஜீவியத்தின் அனைத்து விஷயத்திலும் மற்றும் விசேஷமாக அவர்கள் “”சகோதரர்களுடன்” கொண்டிருக்கும் உறவிலும், அவர்கள் “”சகோதரர்களைக்” கையாளும் விஷயத்திலும் பயன்படுத்த வேண்டிய சட்டமாகும்/கோட்பாடாகும். மற்றவரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கவோ அல்லது குற்றத்தைத் தேடுவதற்கோ நாம் உந்தப்படும்போதும், மற்றவரைக் குற்றம் சாட்டுவதற்கோ அல்லது மற்றவருடைய குறைகளை விமர்சிக்க நாம் உந்தப்படும்போதும் அல்லது அவரை வெறுப்பதற்கு உந்தப்படும்போதும் இப்படி எண்ணுவது அல்லது செய்வது ஏற்புடையதா அல்லது ஏற்புடையதாக இல்லையா என்பதை நாம் அறியும் பொருட்டு, “”ஒருவேளை நான் அந்தச் சகோதரனுடைய இடத்திலும், அந்தச் சகோதரன் என்னுடைய இடத்திலும் இருந்தால், என்னைக்குறித்து அந்தச் சகோதரன் இப்படியாக எண்ணுவதையோ, பேசுவதையோ நான் விரும்புவேனோ?” என்ற கேள்வியை நம்மிடத்திலேயே நாம் கேட்டுப்பார்க்க வேண்டும்.
இந்தப் பிரமாணத்தை/சட்டத்தை/கொள்கையைப் பின்பற்றினால், இப்பிரமாணம் ஒரு வழிகாட்டியாகக்காணப்படும். கர்த்தருடைய ஜனங்கள் இப்பிரமாணத்தை நினைவில் கொண்டிருந்தும், இதற்குக் கீழ்ப்படிய இருதயத்தில் விருப்பம் கொண்டிருந்த போதிலும், புறங்கூறும் விஷயத்திலும், தீமைப்பேசும் விஷயத்திலும், வதந்திகள் பரப்பும் விஷயத்திலும், தாங்கள் இந்தப் பொன்னான பிரமாணத்தை மீறும் விஷயத்தில், தங்களைக் குற்ற பழியினின்று விலகிக்கொள்வதற்கான காரணத்தைக்காட்ட வாய்ப்புத் தேடுகின்றனர். இந்தக் கர்த்தருடைய பிரமாணத்தைக்கையாளும் விஷயத்தில் ஜாக்கிரதையாய் இருக்கக்கடவோம். அதாவது, தேவனுடைய வார்த்தைகளை ஏமாற்றுத்தனமாகக் கையாளாதபடிக்கு அதாவது, இந்தப் பிரமாணத்தினுடைய உண்மையான முக்கியத்துவம் தொடர்பான விஷயத்தில், நம்மையே நாம் குருடாக்கி, ஏமாற்றிக்கொள்ளாதபடிக்கு அதாவது, இவ்விதமாய் நம்மையே நாம் ஏமாற்றி, நம்முடைய மனசாட்சியை நாம் சிறைப்படுத்தி, பலவீனப்படுத்தாதபடிக்கு, அதாவது, பரிசுத்த ஆவி வேண்டும் என்பதான நம்முடைய ஜெபங்களை நாமே தடைபண்ணிப் போடாதபடிக்கு ஜாக்கிரதையாய் இருக்கக்கடவோம். ஏனெனில், வழி திறந்திருக்கும் பட்சத்திலேயே பரிசுத்த ஆவியானது நம்முடைய இருதயங்களுக்குள் பாய்ந்து வரமுடியும்; இந்தப் பொன்னான பிரமாணத்தை முழுமையாகக் கைக்கொள்ளும்போது மாத்திரமே, வழி திறந்து காணப்பட முடியும். இந்தப் பொன்னான பிரமாணமும், இந்த அனைத்துப் படிப்பினைகளும் புதியவைகள் போன்று தோன்றுவதற்கான காரணம், இவைகள் முன்பு இல்லாத அளவுக்கு மாபெரும் போதகரினால், தெளிவான மற்றும் துல்லியமான வெளிச்சத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளதினாலேயாகும். இன்னுமாக, இவைகள் மோசேயினுடைய நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கத்தரிசிகள் வாயிலான தேவனுடைய போதனைகள் ஆகியவைகளின் சாரமாக உள்ளது.
நம்முடைய கிரியைகளின் விஷயத்தில் மாத்திரமல்லாமல், நம்முடைய வார்த்தைகள் மற்றும் நம்முடைய எண்ணங்கள் (வார்த்தைகளையும், கிரியைகளையும் உதிக்கப்பண்ணும் எண்ணங்கள்) விஷயத்திலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டிய ஜீவியமானது மிகவும் “நெருக்கமான பாதை” என்று அதாவது, கஷ்டமான பாதை என்று நமது கர்த்தர் சுட்டிக்காட்டியுள்ளார் என்றபோதிலும், இந்தப் பாதை இப்பொழுது நம்முன் வைக்கப்பட்டுள்ள சுவிசேஷ யுக அழைப்புக்கு வாக்களித்துள்ள சந்தோஷமுள்ள இராஜ்யம் மற்றும் ஜீவனுக்குள் பிரவேசிப்பதற்குரிய ஒரே வழியாகவும் உள்ளது. சுலபமான பாதை, சுயநலமான பாதை, உலகப்பிரகாரமான பாதை இராஜ்யத்திற்கு வழிநடத்தாமல், மரணத்திற்கு… இரண்டாம் மரணத்திற்கு… முழுமையான அழிவுக்கு நேராகவே வழிநடத்தும். அநேகர், இப்பொழுது விசாலமான வழியில் போய்க்கொண்டிருக்கின்றனர். வெகுசிலரே இராஜ்யத்திற்கும், அதன் மகிமை, கனம் மற்றும் அழியாமைக்கும் வழிநடத்தும் இடுக்கமான மற்றும் நெருக்கமான பாதையைக் கண்டுபிடித்து அதில் பிரவேசிக்கின்றனர். தற்காலத்தில் இடுக்கமான வழி மாத்திரமே திறந்திருந்தாலும், விசாலமான மற்றும் உலகப்பிரகாரமான வழியானது நடத்திச் செல்லக்கூடிய அழிவினின்று தப்புவதற்குத் தற்காலத்தில் மாத்திரமே வாய்ப்புக் காணப்படுகின்றது என நாம் எண்ணிவிடக்கூடாது. தெரிந்துக்கொள்ளப்பட்ட சிறுமந்தையினர் அதாவது, கிறிஸ்துவின் சரீரமாகிய, மணவாட்டியாகிய, சபைவகுப்பார் அதாவது, இடுக்கமான வழியைநாடி, அதில் நடப்பவர்களுமாகிய வகுப்பார், மனுக்குலத்தின் மத்தியிலிருந்து மகிமையடைந்துவிட்ட பிற்பாடு, ஆயிர வருஷ யுகத்தில், மனுக்குலத்தின் உலகத்திற்காக, பெரும்பாதையான பரிசுத்தமான வழி திறக்கப்படுவதற்கான காலம் வரும். பெரும்பாதையான வழி, கீழ்நோக்கிச் செல்லும் பாதையாக இராமல், மேல் நேக்கிச் செல்லும் பாதையாக இருப்பதினால், அப்பாதையில் நடப்பதற்கும், முடிவில் முழுமையான சீர்ப்பொருந்துதலை அடைவதற்கும் பிரயாசம் எடுக்கப்பட வேண்டும். எனினும், இப்பொழுது தேவனுடைய ஜனங்களாகிய தெரிந்துக்கொள்ளப்பட்ட சபைக்கு முன்பு, திறந்து வைக்கப்பட்டுள்ள கடுமையான, நெருக்கமான பாதையினின்று, இந்தப் பெரும்பாதையான வழி முற்றிலும் வேறுபட்டதாகும். இந்தப் பெரும்பாதையான வழியானது, தற்போதுள்ள இடுக்கமான வழிக்குரிய பலிச் செலுத்தும் பாதையாயிராமல், நீதியின் பாதையாகக் காணப்படும். தற்கால இடுக்கமான வழியானது, இராஜரிக ஆசாரியக்கூட்டத்தாரைத் தெரிந்தெடுக்கின்றதாய் இருக்கின்றது. இவர்கள் தங்களுடைய அழைப்பையும், தெரிந்துக் கொள்ளுதலையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்கென, இவர்களில் ஒவ்வொருவரும் தங்களுடைய சரீரத்தை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.
ஆயிர வருஷத்திற்குரிய பெரும்பாதையான வழியில் எந்தச் சிங்கங்களும் இருப்பதில்லை. நன்மை செய்வதிலிருந்து தடைபண்ணப்படுவதற்கோ (அ) அழிப்பதற்கோ (அ) தாக்கப்படுவதற்கோ [R2590 : page 76] அப்பொழுது எதுவும் இருப்பதில்லை. நீதியின்படி நடக்க நாடுபவர்களையும் வஞ்சிப்பதற்கோ (அ) விழுங்கிப்போடுவதற்கோ எதுவும் அப்பொழுது காணப்படுவதில்லை. ஆனால், இவைகள் நம்மை இப்பொழுது சூழ்ந்து நிற்கின்றன. ஏனெனில், இவ்வுலகத்தின் பிரபுவாகிய சாத்தான் இன்னமும் கட்டப்படவில்லை (ஏசாயா 35:8-9; வெளிப்படுத்தல் 20:2). “”இடுக்கமான வழி” மூலமாய் இப்பொழுது பிரவேசிக்கின்ற அனைவரும், நல்லதொரு போராட்டத்தைப் போராட வேண்டும்; மற்றும், விசுவாசத்திற்காக உண்மையுடன் போராட வேண்டும் மற்றும் பிசாசை எதிர்க்க வேண்டும்……. இவர்கள் தங்களுடைய பரம அழைப்பிற்கான பரிசை அடையவேண்டுமெனில் இவைகளைச் செய்தாக வேண்டும். நாம் சுதந்தரித்துள்ள மாம்சத்தின் பெலவீனங்களுடன் மாத்திரம் நாம் போராட வேண்டியதாயிராமல், வானமண்டலத்தின் பொல்லாத ஆவிகளுடன் நாம் போராட வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம். (எபேசியர் 6:12). ஆனால், கர்த்தர் அதிகமான கிருபையை நமக்கு அளிப்பதினால், நம்மில் அன்புகூர்ந்து, நம்மைத் தம்முடைய விலையேறப்பெற்ற சொந்த இரத்தத்தினால் வாங்கிக்கொண்டவர் மூலமாய் நாம் ஜெயங்கொண்டவர்களாக ஆகுவோம் (1 தீமோத்தேயு 6:12; யூதா 1:3; யாக்கோபு 4:7; ரோமர் 8:37).”