R3728 – பாவமன்னிப்பு

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R3728 (page 60)

பாவமன்னிப்பு

THE FORGIVENESS OF SINS

மாற்கு 2:1-12

“”பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டு.” – (வசனம் 10)

நம்முடைய கடந்த பாடத்தின் சம்பவத்திற்குப் பின்னர், நமது கர்த்தர் கலிலேயாவிலுள்ள மற்றப் பட்டணங்களுக்குச் சென்று பிரசங்கம் பண்ணின பிற்பாடு மீண்டும் கப்பர்நகூமுக்கு வந்தார். கப்பர்நகூம் இப்பொழுது அவருடைய சொந்த ஊர் ஆகிவிட்டது (மத்தேயு 4:13). அவர் வீட்டில் இருக்கின்றார் என ஜனங்கள் கேள்விப்பட்டபோது, அவ்வீட்டிற்கு வந்து விட்டார்கள். அக்காலக்கட்டத்தில் நடுத்தர நிலையிலுள்ள ஜனங்களின் வீடு ஒரே ஒரு அறையைக் கொண்டதாகக் காணப்பட்டது; மேலும் அதன் அளவு 20×40 அடியாகவும் காணப்பட்டது; மேலும் கூரையானது கனமுள்ள மரத்தண்டுகளினால் அமைக்கப்பட்டிருந்தது; இன்னுமாக இம்மரத்தண்டுகளின் மேல் மரப்பலகைகள் அல்லது கற்பலகைகள் வைக்கப்பட்டு, அவைகள் முற்றிலும் மண் அல்லது புல் கலந்த புல்பத்தைகளால் பூசப்பட்டுக் காணப்படுகின்றது. வெளிபுறத்தில் வைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுகளின் மூலம் இக்கூரை பகுதிக்கு ஏறிப்போய், கோடைக்காலங்களில் அதை உறங்குவதற்கான இடமாகப் பயன்படுத்தவது வழக்கமாயிருந்தது.

இயேசு ஒரு மாபெரும் தீர்க்கத்தரிசி என்றும், அவரிடத்தில் அற்புதமான வல்லமை இருக்கின்றது என்றுமான உண்மைகளினால் சமீப காலத்தில் உணர்வடைந்த ஜனங்களாகிய தமது ஊராருக்கு இயேசு பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தார். இயேசு நீண்ட காலமாய் வாக்களிக்கப்பட்டுள்ள தேவனுடைய இராஜ்யம் குறித்தும், அது சமீபித்துள்ளது, அதாவது வாசலருகே வந்துவிட்டது என்பது குறித்தும், அந்தச் செய்தியையும் அதன் ஆசீர்வாதங்களை ஜனங்கள் ஏற்றுக்கொள்ள விருப்பமாயிருக்கிறார்களா என்றதான கேள்வி குறித்தும்தான் பிரசங்கித்து இருப்பார் என்பதில் ஐயமில்லை. இத்தருணத்தில் முற்றிலும் உதவியற்ற நிலையில் காணப்பட்ட ஒரு முடக்குவாதமுற்றவனை நான்கு பேர் படுக்கையில் எடுத்துக்கொண்டு, அவன் வியாதி சொஸ்தமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் வீட்டிற்கு வந்தார்கள். இவனுடைய இயலாமை மற்றும் உதவியற்ற நிலைமை காரணமாகவே, இயேசு கப்பர்நகூமிலுள்ள அநேக வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்தின முந்தின தருணத்தில் இயேசுவினிடத்தில் வந்து சொஸ்தமடைய இவனால் முடியாமல் போயிற்று. இப்பொழுதோ இவன் நண்பர்களையும், உதவியாளர்களையும் பெற்றிருந்தபடியால், இவனால் இயேசு இருக்கும் இடத்திற்கு வந்த போதிலும், இவனால் அவர் அருகாமையில் போக முடியவில்லை, காரணம் ஜனங்கள் இவனுக்கு இடம் விட்டு ஒதுங்கி வழி கொடுப்பதற்குத் தயாராக இல்லை.

[R3729 : page 61]

இவனை இவ்வளவு தூரம் அழைத்துக் கொண்டு வந்த இவனுடைய விசுவாசமானது, இயேசுவின் அருகாமையில் செல்வதற்கான வழி ஏதாவது கிடைக்கும் என்றும் அவனுக்குள் உறுதியாய்க் காணப்பட்டது. ஒருவழியாக இவன் வீட்டின் கூரைக்கு எடுத்துச்செல்லப்பட்டான், பின்னர் கூரையின் ஒரு பகுதியிலுள்ள மண் தோண்டியெடுக்கப்பட்டு, மரப்பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டு, இறுதியாக ஆங்காங்கே கிடைத்த கயிறுகளைப் பயன்படுத்தி, இவன் இயேசுவுக்கு அருகாமையில் அவருடைய பார்வை படத்தக்கதாக கீழே இறக்கிவிடப்பட்டான். கர்த்தருடைய சொஸ்தப்படுத்தும் வல்லமையின் மீது இவனுக்குப் பலமான விசுவாசம் காணப்பட்டதோடல்லாமல், தான் இவ்விதமாக முரட்டுத்தனமாக உள்ளே நுழைந்ததற்கு இயேசு கோபம் கொள்ளாமல், பொறுமையோடு காணப்பட்டு, தன்னுடைய தேவையின் ஆழத்தை உணர்ந்துக்கொள்வார் என இயேசுவினுடைய பரந்த மனப்பான்மை மற்றும் நற்குணங்களின் மீதும் இவனுக்குப் பலமான விசுவாசம் காணப்பட்டது.

இயேசுவும் அவர்கள்மேல் குற்றம்சாட்டுவதற்குப் பதிலாகவும், கைதுச் செய்வேன் என்று பயமுறுத்துவதற்குப் பதிலாகவும், அவர்களுடைய முரட்டுத்தனமான செய்கைகளுக்காக அவர்கள்மேல் குற்றம் சுமத்துவதற்குப் பதிலாகவும், அவர்களிடத்தில் வெளிப்பட்ட விசுவாசத்தில் மிகவும் உவகைக் கொண்டு அவனுடைய குறுக்கிடுதலைப் பொருட்படுத்தாமல், தமது அழையாத விருந்தாளியாகிய அவனை மிகுந்த இரக்கத்துடன் வரவேற்று, “”மகனே உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன” என்று கூறினார். ஒருவேளை நோயுற்ற அந்த இளைஞன், சொஸ்தமடைவதற்கான எதிர்ப்பார்ப்புக் கொண்டிருந்ததைக் காட்டிலும், அவன் அவனுடைய பாவங்களைக்குறித்தும், அப்பாவத்திற்கான மன்னிப்பைக்குறித்தும் அக்கறைச் செலுத்தாமல் இருந்ததுபோல் தோன்றுகின்றது; எது எப்படி இருப்பினும், இங்கு நமது கர்த்தர் பிரதானமானதும், முக்கியத்துவம் உள்ளதுமான விஷயத்தை முன்வைத்தார். நமது கர்த்தருடைய பிரதானமான வேலை, பாவம் சுமப்பதும், போதிப்பதுமேயாகும், மேலும் தற்காலத்தில் அவர் செய்து கொண்டிருக்கும் சொஸ்தப்படுத்தப்படும் வேலைகளானது, போதிக்கப்படும் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகவே நிகழ்த்தப்பட்டன.

ஞானமுள்ள மற்றும் ஞானமற்ற கவனிப்பு

இயேசு பேசினவைகளையும், செய்கின்றவைகளையும் கவனிப்பதில் அங்கிருந்த ஜனங்கள் கவனமாயிருந்தார்கள். இந்த ஜனங்கள் மத்தியில், ஜனங்களால் அதிகாரமுடையவர்களாக பார்க்கப்படுகின்றவர்களும், நியாயப்பிரமாணம் குறித்து நன்கு அறிந்தவர்களுமாகிய வேதபாரகரில் சிலரும் காணப்பட்டனர். இவர்களும் மற்றவர்களைப் போன்று இயேசுவின் போதனைகள் மேலும், ஆச்சரியமான அற்புதங்கள் மேலும் கவரப்பட்டவர்களாக, இயேசுவின் வார்த்தைகளையும், கிரியைகளையும் கவனித்துக்கொண்டிருந்தனர். இப்பொழுது இவர்கள் அவரிடத்தில் ஒரு குற்றத்தைக் கண்டுபிடித்தார்கள்; அதாவது தேவனுக்கு மாத்திரமே உரியதாகக் காணப்படும் ஓர் அதிகாரத்தையும், ஒரு வல்லமையையும் இயேசு உரிமையின்றி தமக்கென எடுத்துக்கொண்ட குற்றத்தைப் பார்த்தனர். இந்த ஓர் எண்ணத்தைத் தூண்டும் விதமாகவே இயேசு இவ்வார்த்தைகளைச் சொல்லி இருக்க வேண்டும் என நாம் அனுமானிக்கின்றோம். அவர் அவர்களுடைய இருதயங்களை உணர்ந்துக்கொண்டவராக மாற்கு 2:8-9 ஆகிய வசனத்தின் வார்த்தைகளைக் கூறினார். அதாவது “”நீங்கள் நம்புவதற்கு எது எளிதாக இருக்கும்? என்னால் பாவங்களை மன்னிக்க முடியும் என்பது நம்புவதற்கு உங்களுக்கு எளிதாக இருக்கின்றதா? அல்லது இவன் பாவங்கள் காரணமாக இவனுக்கு உண்டானவற்றை என்னால் சொஸ்தப்படுத்த முடியும் என்பது உங்களுக்கு நம்புவதற்கு எளிதாக இருக்கின்றதா? மேலும் பாவங்களை மன்னிப்பதற்கான என்னுடைய அதிகாரத்தை நிரூபிப்பதற்காக நான் இந்தச் சொஸ்தமாக்குதலைச் செய்தேன். மேலும் நான் செய்யும் இக்காரியமானது நான் தேவதூஷணம் சொல்லவில்லை என்பதற்கும், எனக்குக் கொடுக்கப்படாத உரிமையை நான் எனக்கு உரிமையாக்கிக்கொள்ளவில்லை என்பதற்கும், நான் பிதாவின் விசேஷமான பிரதிநிதி என்று சொல்லுவதின் மூலம் நான் என்னையே பிதாவாக தகாதவிதமாய்க் காட்டிக்கொள்ளவில்லை என்பதற்கும் சாட்சியாக விளங்கும் என்ற விதத்தில் இயேசு கூறினார். பின்னர் முடக்குவாதத்துடன் காணப்பட்ட அந்த இளைஞனை நோக்கி “”நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” (மாற்கு 2:11).

அந்த மனுஷன் எழுந்து நின்று, சற்று நேரத்திற்கு முன்னதாக ஜனங்களுக்கு முன்பாக, தான் கிடத்தப்பட்டிருந்த படுக்கையை எடுத்து சென்ற போது, ஜனங்கள் ஆச்சரியமடைந்து, தேவனை மகிமைப்படுத்தும் விதமாக, “”நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லை” என்றார்கள், மேலும் “”அதிசயமான காரியங்களை இன்று கண்டோம்” என ஜனங்கள் கூறினதாக லூக்கா, தனது சுவிஷேசத்தில் பதிவு செய்துள்ளார் (லூக்கா 5:26). அவர்கள் மேசியா தமது இராஜ்யம் குறித்து விவரிப்பதையும், பாவங்களை மன்னிப்பதற்கான தமது வல்லமை குறித்து அறிவிப்பதையும், அந்த வல்லமையை ஓர் அற்புதத்தின் வாயிலாக விளக்குவதையும் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆகையால் தேவனுடைய இராஜ்யம் உடனடியாக ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றும், அதன் விளைவாக முழு உலகத்தின் மீது தெய்வீகத் தயவு வந்தடைந்து, இனிமேல் எந்த நோயும், வலியும், சாவும், அழுகையும், பாவமும், மரணமும் இல்லை என்ற நிலை அடையும் வரையிலும் முழு உலகத்தின் மீது திரும்பக் கொடுத்தலின் ஆசீர்வாதங்கள் பெருக வேண்டும் என்றும் அவர்கள் விரும்புவார்கள் அல்லவா. எனினும் இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு, அதன் சீர்த்திருத்தலின் வேலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக ஒரு குறிப்பிட்ட வேலை நிறைவேற வேண்டியுள்ளது, அதாவது முதல் காரியமாகத் தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களாகிய, சிறுமந்தை, அதாவது கிறிஸ்துவின் மணவாட்டி தெரிந்துக்கொள்ளப்பட வேண்டும். தெய்வீக ஏற்பாட்டின் படியான இவர்களது எண்ணிக்கையை இஸ்ரயேலர்களால் நிரப்ப முடியவில்லை. ஆகவே கபடற்ற உத்தம இஸ்ரயேலர்கள் அனைவரும் தெரிந்தெடுக்கப்பட்ட பிற்பாடு, தேவனுடைய தயவானது, தெரிந்துக்கொள்ளப்பட வேண்டியவர்களின் மீதமான எண்ணிக்கையை நிறைவு செய்யும் வண்ணமாக மாம்சீக இஸ்ரயேலர்களிடமிருந்து, புறஜாதிகளுக்குக் கடந்து போயிற்று.

இந்தத் தெரிந்துக்கொள்ளப்படுதல் காரியமானது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் வந்துள்ளது என்பது நமது எதிர்ப்பார்ப்பாயும், நமது நம்பிக்கையாயும் இருக்கின்றது. இன்னுமாக கிறிஸ்துவின் இரண்டாம் வருகையானது சீக்கிரத்தில், கிறிஸ்துவினுடைய சபையை முதலாம் உயிர்த்தெழுதலின் மூலம் கனம், மகிமை, அழியாமை மற்றும் இராஜ்யத்தில் உடன் சுதந்திரத்துவத்தை அடையச் செய்யும் என்பதும், அதன் பிற்பாடு பூமியின் குடிகள் அனைத்தின் மீதும் இராஜ்யத்தின் திரும்பக் கொடுத்தலின் ஆசீர்வாதங்கள் கடந்துவரும் என்பதும் நமது எதிர்ப்பார்ப்பாயும், நமது நம்பிக்கையாயும் இருக்கின்றது.

பாவமும், அதன் மன்னிப்புச் சார்ந்த விஷயங்களே நமது இந்தப் பாடத்தின் சாராம்சமாக இருக்கின்றபடியால், இப்பொழுது அதன்மேல் நமது கவனத்தை நாம் திருப்புவோமாக.

வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்ற பிரகாரம் பாவம், மனுக்குலம் அனைவரிலும் காணப்படுவது மாத்திரமல்லாமல், பாவத்தைப்பற்றின உள்ளுணர்வும் பரவலாகவே காணப்படுகின்றது. அநீதியான அனைத்தும் பாவம் என்றும், பூரணமற்ற அனைத்தும் பாவம் என்றும் வேதாகமம் முன்னிறுத்தும் காரியங்களை இன்று உலக ஜனங்களும் பொதுவாக உணர்ந்த நிலையிலேயே காணப்படுகின்றார்கள். நியாயப்பிரமாணத்தின் கீழ்க்காணப்படும் யூதர்களும் கூட, நியாயப்பிரமாணம் முன்வைக்கும் விஷயங்களைக் கைக்கொள்ள முடியாததை உணர்கையில், தாங்களும் பாவிகள் என்றும், நியாயப்பிரமாணத்தை மீறினதால் தாங்களும் பாவிகள், அக்கிரமக்காரர்கள் என்றும் நேர்மையாய் ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் காணப்படுகின்றனர். இன்னும் மேலான தளத்திலுள்ள தேவனுடைய பிரமாணங்களைக் கிறிஸ்தவர்கள் அறிந்திருப்பதினால் இவர்கள், “”உன் தேவனாகிய கர்த்தரை உன் முழு உள்ளத்தோடும், முழு இருதயத்தோடும், முழு ஆன்மாவோடும் அன்பு கூருவாயாக என்றும், நீ உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசிப்பாயாக” என்றதுமான இவர்களுக்குரிய பூரண பிரமாணத்தோடு தங்களை ஒப்பிட்டுப்பார்க்கையில், இவர்களால் இன்னும் அதிகமாக மற்றவர்களைக் காட்டிலும், தங்கள் சொந்த பெலவீனங்களையும், குறைபாடுகளையும் உணர்ந்துகொள்ள முடிகின்றது. ஆனால் யூதர்களுடைய பிரமாணமோ அல்லது கிறிஸ்தவர்களுடைய பிரமாணமோ, போதனைகளோ இல்லாதவர்களிடம் போதுமானளவு மனசாட்சியும், மற்றும் மனிதனுடைய சிருஷ்டிப்பின் போது அவனிடத்தில் எழுதப்பட்டு, வீழ்ச்சியின் 6000 வருடக்காலத்தின் விளைவாக அதிகம் தடயம் இல்லாமல் போயிருப்பினும், போதுமானளவுக்கு கொஞ்சம் ஆதி பிரமாணம் இன்னமும் காணப்படுகின்றது; மேலும் இதன் மூலம் அவர்கள் தங்களிடத்தில் பெலவீனங்கள்/குறைப்பாடுகள் இருக்கின்றது என உணர்ந்துக்கொள்கின்றனர்; மேலும் அப்போஸ்தலர் சுட்டிக்காட்டுகின்ற பிரகாரமாக இவர்கள் தங்களுக்கு முன்பாக வைத்திருக்கும் நீதியின் கொள்கைகள் பொறுத்த விஷயத்தில் தாங்கள் பாவிகள் என்றே ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் சிலசமயம் இவர்கள் தங்கள் தவறுகளுக்குச் சாக்குப்போக்குச் சொல்கிறவர்களாய் இருந்தாலும், மற்றப்படி இவர்கள் தங்கள் தவறான பாவ செயல்களைத் தெளிவாய் ஒப்புக்கொள்ளவே செய்கின்றனர்.

கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் நமக்கான படிப்பினைகள், பெருகுகையில், பாவத்தைப் பற்றின நமது உணர்ந்துக்கொள்ளுதல் அதிகரிக்கும் விஷயம் குறிப்பிடத்தக்கதான காரியமாகும். அதாவது தீமை செய்ய நிறுத்தி, நன்மை செய்ய நாம் கற்றுக்கொள்ளும் அளவிற்கு ஏற்ப பாவத்தைப் பற்றின உணர்ந்துக்கொள்ளுதல் நமக்குள் அதிகரிக்கின்றது. இப்படியாக மிகுந்த வளர்ச்சியடைந்த பரிசுத்தவான், மிகவும் சீர்க்கேடான நிலையில் காணப்படும் பாவியைக் காட்டிலும் பாவத்தைக் குறித்த தெளிவான புரிந்துக்கொள்ளுதலும், பாவத்தின் மீது மிகுதியான வெறுப்பும் கொண்டிருப்பான். தேவன் பாவத்தை வெறுக்கின்றவராகவும், அதற்கு இசைவாக இருக்க முடியாதவராகவும் காணப்படுகின்றார். தேவன் பாவத்திற்கு எதிரான தமது ஆணையையும், தமது தீர்ப்பையும், தமது சட்டத்தையும் விதித்துள்ளார்; மேலும் பாவம் முற்றிலும் வேரோடே அழிக்கப்படும் என்றும், பாவத்தை விரும்பி, துணிகரமுடன் பாவத்தைச் செய்பவர்கள் பாவத்தின் கூட்டாளிகளாகக் கருதப்பட்டும், பாவத்தோடு அழிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

[R3729 : page 62]

பாவத்தைக்குறித்து நாம் அதிகமதிகமாய்ப் பார்க்கும்/தியானிக்கும்போது, அதன் மாசுபடுத்தும் தன்மை குறித்தும், அதன் அழிக்கும் தன்மைகள் குறித்தும் அதிகமதிகமாய் உணர்ந்துக்கொள்ள முடிகின்றது, இன்னுமாகப் பாவத்தினிமித்தம் மனுக்குலத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கின தெய்வீக நீதியைக்குறித்தும் நம்மால் அதிகமாக உணர்ந்துக்கொள்ள முடிகின்றது (ரோமர் 8:3). நீதியைக்குறித்தும், சத்தியம், பரிசுத்தம், தூய்மையைக்குறித்தும் நமது புரிந்துக்கொள்ளுதல்கள் மிகுந்த முன்னேற்றத்தில் காணப்படும்போது, பாவம் குறித்ததான தெய்வீகக் கண்ணோட்டத்தை நாமும் அதிகம் புரிந்துக்கொள்ளப்பட உதவப்படுவோம், மேலும் பாவம் மற்றும் பாவிகளுக்கு எதிரான கர்த்தரையும், அவரது தீர்ப்பையும் குறித்து, “”கர்த்தாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள் என்று நாமும் சொல்லுகிறவர்களாய்க் காணப்படுவோம் (வெளிப்படுத்தல் 15:3).

தெய்வீக இரக்கத்தின் செயல்பாடு

நம்முடைய இனத்திற்கு எதிராக மரணத் தண்டனை தீர்ப்பு வழங்கின தெய்வீக நீதியைக் குறித்ததான அதிகமான புரிந்துக்கொள்ளுதலுக்குள் நாம் வர வர, நம் மீதான தேவனுடைய அன்பு மற்றும் இரக்கம் குறித்ததான புரிந்துக்கொள்ளுதலுக்கும் நாம் அதிகமாய்க் கடந்து வருவோம், மேலும் ஒருவரும் கெட்டுப்போகக்கூடாது என்பது தேவனுடைய சித்தமாய் இருக்கின்றது என்பதின் நிமித்தம் நாம் அதிகமதிகமாய் மகிழ்ச்சிக்குள்ளும் கடந்து வருகின்றோம். தேவனும் இப்படி ஒருவனும் கெட்டுப்போகக்கூடாது என்று சித்தம் கொண்டிருப்பதினால், அனைவரும் தம்மிடத்திற்குத் திரும்பி வந்து ஜீவன் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, அதாவது நித்தியஜீவன் பெற்றுக்கொள்ளத்தக்கதாக போதுமான அளவு ஆழமும், போதுமான அளவு உயரமும், போதுமான அளவு அகலமும் உள்ள ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இரக்கத்தினுடைய இந்த ஏற்பாடானது பாவத்தைக் கண்மூடிக் கொண்டு அனுமதித்துவிடுவதுமில்லை, அதேச்சமயம் பாவியும், இந்தப் பாவத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அனுமதிப்பதுமில்லை. மீட்கப்படுகிறவர்கள், தங்கள் விழுந்துபோன நிலைமையையும், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மரணத் தண்டனையில் விளங்கும் நீதியையும், தாங்கள் விடுவிக்கப்படும் காரியமானது தெய்வீக இரக்கத்தினாலே உண்டாகிறது என்பதையும் புரிந்துக்கொண்டவர்களாய் இருப்பது அவசியமாகும். இந்தப் பாடங்களை அவர்கள் (மனுக்குலம்) கற்றுக்கொள்ளாதது வரையிலும், இவர்களால் தேவனால் ஏற்பாடு செய்யப்பட்டவைகளை ஒருபோதும் புரிந்துக்கொள்ள முடியாது. தேவன் அவர்களுக்கு நித்தியஜீவன் கொடுப்பதற்காக முன்வைத்துள்ள நிபந்தனைகளையும் புரிந்துக்கொள்ள முடியாது; அதாவது தேவனுடைய கிருபையை ஏற்றுக்கொண்டு, மன்னிப்பு அடைவதும், அவருக்கும், அவருடைய நீதியின் கொள்கைகளுக்கும் கீழ்ப்படிவதும் ஆகியவைகளே நித்தியஜீவன் பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகள் ஆகும்.

வேறே நாமம் கொடுக்கப்படவில்லை

நமது இனத்தை மீட்பதற்காக, பரம பிதா ஒரு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளார், மேலும் அதை அவர் தமது வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளார்; மேலும் இத்திட்டத்தின் வாயிலாக அவர் அனைவருக்கும் இரக்கத்தை அருளுவார், எனினும் இயேசுவின் மூலம், அதாவது, “”அவருடைய இரக்கத்தின் மீதான விசுவாசத்தின் மூலமே இந்த இரக்கம் வந்தது” என்று அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இப்படி ஏற்றுக்கொள்ளப்படவில்லையெனில் வேறு வழியில்லை (ரோமர் 3:25). மேலும் இது பிதாவினிடத்தில் வருகின்ற ஒவ்வொருவரும், தான் ஒரு பாவி என்றும் தன்னுடைய சொந்த பாவத்திற்கான தண்டனையைத் தன்னால் நிவர்த்தி செய்துகொண்டு ஜீவிக்க முடியாது என்றும் ஒப்புக்கொள்ள வேண்டும்; இன்னுமாக தனக்குண்டான இரட்சிப்பானது கிறிஸ்துவின் வழியாகச் செயல்பட்ட தெய்வீக இரக்கத்தினாலேயே ஆகும் என்றும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதைச் சுட்டிக் காண்பிக்கின்றது; மேலும் இது மீட்பராகிய இயேசு பாவிகளுக்கும், தேவனுக்கும் இடையில் மத்தியஸ்தராக இருந்து நியமிக்கும் நிபந்தனைகள் முழுமையாகப் புரிந்துக்கொள்ளப்பட வேண்டும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் மற்றும் சம்மதிக்கபட வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது. யாரெல்லாம் உண்மையாக பாவத்திற்காக மனம் வருந்தி, தேவனிடத்திற்குத் திரும்பும்படிக்குக் கிறிஸ்து அளிக்கும் உதவிகள், போதனைகள் மற்றும் வழிநடத்துதலிகளின் கீழ்த் தங்களால் முடிந்த மட்டும் பிரயாசம் எடுக்கின்றார்களோ, அவர்கள் எல்லோரையும் பூரண நிலைமைக்கும், தேவனுடன் முழுமையான உறவு நிலைமைக்கும் கொண்டு வருவதற்கு உதவி செய்வதாக கிறிஸ்து முன்மொழிகின்றார். இப்படிப்பட்டவர்களுக்கு மாத்திரமே, அதாவது உண்மையாய்ப் பாவத்திற்காக மனம் வருந்துகிறவர்களுக்கும், அவருடைய உதவி, வழிநடத்துதல் மற்றும் போதனைகளின் கீழ்க்காணப்பட்டு முடிந்தமட்டும் பிரயாசம் எடுப்பவர்களுக்கும் மாத்திரமே, பூரண நிலைமை அருளப்படும். இப்படிப்பட்டப்பட்டவர்கள் மாத்திரமே, விலையேறப்பெற்ற இரத்தத்தினால் வாங்கி கொண்டவர் மூலம் உண்டாகும் மீட்பின் மூலமாகவும், அவருடைய உதவியின் மூலமாகவும் நித்தியஜீவனை அடைவார்கள்.

பாவங்கள் நிவர்த்திச்செய்யப்படுதல் / போக்கப்படுதல்

பாவங்கள் நிவர்த்திச் செய்யப்படுகின்ற விஷயத்தில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது நிறைவேறும் என்று வேத வாக்கியம் நமக்கு நிச்சயம் அளிக்கும் காரியங்களுக்கும், தற்காலத்தில் தேவையான விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் காட்டும் அனைவராலும், தற்காலத்தில் அனுபவிக்கப்படும் பாவங்கள் மன்னிக்கப்படும் காரியங்களுக்கும் இடையில் மாபெரும் வித்தியாசம் இருப்பதை இங்குக் காட்டுவது நலமாயிருக்கும். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது சம்பவிக்கும் பாவ நிவர்த்தியானது, முதலாவது சபைக்குச் செய்யப்படும் காரியமாக இருக்கின்றது; அதாவது சபை முதலாம் உயிர்த்தெழுதலுக்குரிய மகிமையான ஆசீர்வாதங்களில் பங்கடையும் சமயம் முதல், அவர்களிடத்தில் பாவத்திற்கான எவ்விதமான சுவடுகளும் இல்லாமல் ஆக்கப்படும். தற்காலத்தில் சபை ஜனங்கள் உண்மையில் பூரணமற்றவர்களாகவும், குறைபாடு உடையவர்களாகவும், பாவத்தின் தடயங்கள் உள்ளவர்களாகவுந்தான் காணப்படுகின்றனர்; மேலும் இவர்களுக்கு இலவசமாய் அருளப்பட்டுள்ள கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரத்தினால், இவர்கள் தொடர்ந்து மூடப்பட்டுக் காணப்பட வேண்டிய அவசியத்திலும் காணப்படுகின்றார்கள். ஆனால் இவர்களுக்கு உயிர்த்தெழுதலின் மாற்றம் சம்பவிக்கும்போது, பாவத்தின் சகல கறைகளும் இவர்களிடமிருந்து போய்விடும். அப்போஸ்தலரால் விவரிக்கப்பட்டுள்ளது போன்று கனவீனத்தில் விதைக்கப்பட்டது, மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும், பலவீனமுள்ளதாய் விதைக்கப்பட்டது, பலமுள்ளதாய் எழுந்திருக்கும், ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரமாய் எழுந்திருக்கும். பிற்பாடு அவர்களுக்கு நீதி தரிப்பிக்கப்பட்டதாக எண்ணப்பட வேண்டியதில்லை, அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே முற்றிலும் பூரணமுள்ளவர்களாகவும், முற்றிலும் நீதியுள்ளவர்களாகவும் காணப்படுவார்கள் (1 கொரிந்தியர் 15:42-44).

உலகத்தின் பாவங்கள் நிவர்த்திச் செய்யப்படும் காரியமானது உடனடியாகவோ, ஒரு நொடி பொழுதிலோ, கண் இமைக்கும் நேரத்திலோ நடக்காமல், படிப்படியாக ஆயிரம் வருஷம் யுகம் [R3730 : page 62] முழுவதும் தொடர்ந்து நடைபெறும் காரியமாகும். ஓவ்வொரு மனிதனும் பாவத்தை உணர்ந்து, இராஜ்யத்தின் சட்டங்களுக்கு உட்பட்ட நிலையில் செயல்படும்போதும், நீதியின் வழியிலும், பரிசுத்தத்தின் பெரும்பாதையான வழியிலும் அவன் ஏறெடுக்கும் பிரயாசங்களுக்கான பலனாக, அவன் பெலன் அடைவதில் வளர்வதை உணர்ந்துக்கொள்ள முடியும். நாட்கள் செல்ல செல்ல, வருடங்கள் செல்ல செல்ல, அவன் மன ரீதியிலான, ஒழுக்க ரீதியிலான மற்றும் சரீர ரீதியிலான வளர்ச்சியிலும் அதிகரிப்பான்; ஆனால் இத்தகைய இக்காலக்கட்டத்தின் திரளான வாய்ப்புகள் இருந்தபோதிலும், வளர்ச்சியடைய தவறிப் போகிறவர்கள் மீட்பரின் இராஜ்யம் மூலமாக நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கான மீதமான எல்லாவித வாய்ப்புகள் பெறுவதற்கும் பாத்திரமற்றவர்கள் என்று கருதப்பட்டு, இரண்டாம் மரணத்தில் அறுப்புண்டுப் போவார்கள். இராஜ்யத்தின் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களுடைய பாவங்கள் முற்றிலும் நிவர்த்திச் செய்யப்பட்டு காணப்படுகின்றவர்கள், ஆயிரம் வருஷம் யுகத்தின் முடிவில் முழுமையான மனம் மற்றும் சரீரத்தின் பூரண நிலைமையை அடைந்து, வெளிப்படுத்தல் 20:10-ஆம் வசனத்தில் குறிப்பிட்டிருக்கிறபடி நீதியின் கொள்கைகளுக்கு இவர்களுடைய இருதயங்கள் உண்மையாய் இருக்கின்றதா எனச் சோதிக்கப்படுவார்கள். இந்த இறுதி பரீட்சையானது மனுக்குலத்தின் குடும்பத்தின் மீது பொதுவாக வரக்கூடிய ஒன்றாகக் காணப்படும்; மேலும் இந்த இறுதி பரீட்சையானது, ஏதேனில் ஆதாமுக்குக் கொடுக்கப்பட்ட பரீட்சைக்குப் பொருந்தக் கூடியதாய் இருக்கும்; இரண்டு பரீட்சைக்கும் இடையிலுள்ள வித்தியாசம் என்னவெனில், இந்த இறுதி பரீட்சையானது இவர்கள் பாவம் மற்றும் வீழ்ச்சியின் அனுபவத்திற்குள் கடந்து சென்று, இவைகளிலிருந்து விடுதலையடைந்து மற்றும் நீதியின் அரசாட்சிக்குரிய அனுபவத்திற்குள் கடந்து சென்ற பிற்பாடு வருகின்றது. ஆகவே இவர்கள் இந்தப் பரீட்சையில் திருப்திகரமாக வெற்றிக்கொள்ளத்தக்கதான சரியான நிலையில் காணப்படுவார்கள்; ஆனால் இவர்கள் தோற்பார்களானால் இராஜ்யத்தில் இவர்களுக்கு அருளப்பட்ட அனுகூலமான சூழ்நிலைகளின் கீழ் நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமாய் இருக்கும் நிபந்தனைகளுக்கு, அதாவது இவர்களுடைய இருதயம், தேவனுடன் இசைவுக்குள் வரவில்லை என்பதை நிரூபித்துக்காட்டுகின்றது. இப்படிப்பட்டவர்கள் சாத்தானோடு சேர்த்து அழிக்கப்படுவார்கள், ஏனெனில் இவர்களிடம் சாத்தானுடைய பண்புகளில் சில காணப்படுகின்றன.

பாவங்கள் மன்னிக்கப்படுதல் (Forgiveness of Sins)

யாருக்கு விரோதமாய் மீறுதல் செய்யப்பட்டதோ, அவரே பாவத்தை மன்னிக்க அதிகாரமுடையவர் என்பதுதான் நம்முடைய பாடத்தில் நாம் பார்க்கும் சம்பவத்தில், வேதபாரகர்களுடைய எண்ணமாகயிருந்தது. ஒருவேளை “”A” என்ற நபர், “”B” என்ற நபருக்கு விரோதமாகப் பாவங்கள் செய்வரானால், அவரை மன்னிக்கும் அதிகாரம் “”C” என்ற (மூன்றாம்) நபருக்கு இல்லை. “”B” என்ற நபருக்கு மாத்திரமே கோபம் அடைவதற்கான உரிமையும் இருக்கின்றது, மேலும் இவருக்கே மன்னிக்கும் அதிகாரமும் இருக்கின்றது. வேதபாரகர்களின் எண்ணம்/கணிப்புச் சரியாகதான் இருந்துள்ளது. நாமும் கூடச் சில சமயங்களில் ஒருவர் இன்னொருவருடைய சுயாதீனம் மற்றும் உரிமைகளில் குறுக்கிட்டு, ஒருவருக்கொருவர் விரோதமாகப் பாவம் செய்துவிடுகின்றோம், மேலும் நாம் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டிய அவசியமும் உள்ளது, எனினும் செய்யப்படும் சகல பாவங்களும் பிரதானமாகத் தேவனுக்கு எதிராகவே செய்யப்படுகின்றது. பாவங்கள் என்பது அவருடைய நீதியின் பிரமாணங்களை மீறுவதாகும். அனைத்து அநீதியான காரியங்களும் பாவமாகும், அதாவது அநீதியான அனைத்தும் தேவனுக்கும், அவருடைய பிரமாணங்களுக்கும் எதிரான பாவமாகும். தேவன் தம்முடைய சிருஷ்டிகள் நியாயம் தீர்க்கப்படத்தக்கதாகவும், சரி மற்றும் தவற்றிற்கான நிலைப்பாட்டை அவரே நிர்ணயித்துள்ளார்; மேலும் அவரே நீதிபதியாகவும் இருக்கின்றார்.

எப்படி, இயேசுவினால் பாவங்களை மன்னிக்க முடியும்?

பாவம் மற்றும் அதற்குரிய தண்டனைக்குத் தொடர்புடைய விஷயங்களில், இயேசுவால் அல்லது இயேசுவின் மூலம் பரமபிதா பாவங்களை மன்னிக்க முடியும் என்ற விதத்தில் நம்முடைய சிருஷ்டிகராகிய தேவன் நிர்ணயித்துள்ளார் என்பதே நமது பதிலாகும். தெய்வீக ஏற்பாடானது மிகவும் திட்டவட்டமாய்/மாற்ற முடியாததாய் இருந்தபடியால், பாவங்களை மன்னிப்பதற்கான [R3730 : page 63] அதிகாரம் பிதாவினுடைய கரங்களிலிருந்து, பிதாவே எடுத்து போட்டுவிட்டார் ஏனெனில் ஆதாம் மற்றும் அவர் சந்ததியாரின் விஷயத்தில் அவர்களுடைய பாவத்திற்கு எதிரான, உறுதியான, நிச்சயமான மாற்ற முடியாத தண்டனையைப் பிதா தாமே நிர்ணயித்து விட்டார். பிதா வேறுவிதமாக செய்திருந்திருக்கலாம், அதாவது விழுந்துபோன தூதர்களைக் கையாண்டது போன்று, மனுக்குலத்திற்கும் செய்திருக்கலாம், அதாவது நேரடியாக அவர்களுக்கு மரணத் தீர்ப்பை அளிப்பதற்குப் பதிலாக அவர்களுக்குச் சிலவிதமான கட்டுப்பாடுகளை வைத்திருந்திருக்கலாம். ஆனால் ஒருமுறை மரணத் தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்டால், அதை மாற்றவோ அல்லது இல்லாமல் ஆக்கிப்போடவோ முடியாது. தேவனாலும் கூடத் தம்முடைய மாற்ற முடியாத பிரமாணங்களை மாற்றிப்போட முடியாது.

ஆனாலும் கூட மனுக்குலத்திற்கு எதிரான இந்த மாற்றமுடியாத தீர்ப்பானது, சிருஷ்டிகரால் எப்படி ஏற்றக் காலத்தில் தள்ளுபடிச் செய்யப்படும், அதாவது தீர்ப்பைப் பின்வாங்கிக் கொள்ளாமல், மாறாக தள்ளுபடிச் செய்வதற்குத் தேவையானவற்றை ஒரு மீட்பர் மூலம் எப்படிச் சந்திக்கலாம் என்ற முழு அறிவுடனே சிருஷ்டிகரால் அளிக்கப்பட்டது. ஆகவேதான் நமது கர்த்தராகிய இயேசு உலகத்தோற்றத்திற்கு முன்னதாகவே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக தெய்வீகத் திட்டத்தில் காணப்படுகின்றார். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், மீட்பை அவசியமாக்கிய மரணத் தண்டனையைத் தேவன் அளிப்பதற்கு முன்னதாகவே, தேவன் தமது மனதில் மீட்பின் திட்டத்தைக் கொண்டிருந்தார்.

ஆதியில் வெளிப்படுத்தப்பட்ட தெய்வீகக் கிருபை

இயேசு உலகத்திற்கு வந்து, ஈடுபலி விலைக்கிரயம் கொடுப்பதற்கு முன்னதாகவே, தேவன் தமது கிருபை/இரக்கத்தை ஆபிரகாமிடத்திலும், மற்றவர்களிடத்திலும் வெளிப்படுத்தியுள்ளாரே என நீங்கள் கேட்கலாம். தெய்வீகக் கிருபை/இரக்கம் வெளிப்பட்டது உண்மைதான்; ஆனால் ஏற்றகாலத்தில் பாவிகளுக்கான ஈடுபலி கொடுக்கப்படும் என்று இருக்கும் தெய்வீக நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த வெளிப்படுத்தல் காணப்பட்டது என்பதே நமது பதிலாகும். ஆனாலும் அப்பொழுது வெளிப்பட்ட இரக்கமானது, பாவ நிவர்த்திக்குரியதாய் இருக்கவில்லை. ஒருபோதும் இல்லை, பாவ நிவர்த்திச் செய்யும் காரியமானது ஈடுபலி செலுத்தப்படுவதற்கு முன்பு செய்யப்பட முடியாது; மேலும் பாவ நிவர்த்தியானது, மகிமையடைந்த மீட்பர் மூலமாகவே தேவனால் செய்யப்படும். முற்பிதாக்கள் தேவன் மீது வைத்த விசுவாசத்திற்கு ஏற்ப, அவர்கள் அனைவருக்கும் இப்படிப்பட்ட தெய்வீகத் தயவைப் பெற்றுக்கொள்வது நியாயமானதேயாகும். மேலும் மீட்பர் மூலம் தேவன் தாம் அருளவேண்டும் என நோக்கம் கொண்டிருக்கும் காரியங்கள் குறித்த வெளிப்படுத்தல்கள் மாத்திரமே இவர்களுக்கு அருளக்கூடிய இரக்கமாக உள்ளது எனும் காரியம் நியாயமானதாகவே தோன்றுகின்றது.

மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ்ப் பாவம்

இஸ்ரயேல் தேசத்தோடு தேவன் ஏற்படுத்தி இருந்த நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ், அவ்வுடன்படிக்கைக்கு மத்தியஸ்தராக இருந்த மோசே மூலம் ஒரு குறிப்பிட்ட விதத்திலும், அளவிலும் பாவ மன்னிப்பும், ஒப்புரவாகுதலும் காணப்பட்டது. வருடந்தோறும் செலுத்தப்பட்ட இந்தப் பாவ நிவாரண பலிக்கான ஏற்பாடுகள், புதிய உடன்படிக்கையின் கீழ், மத்தியஸ்தராகக் காணப்படப் போகின்ற கிறிஸ்துவின் மூலம் வரப்போகின்ற ஆசீர்வாதங்களுக்கு நிழலாய் அமைகின்றன. முற்பிதாக்கள் போன்று இஸ்ரயேலர்களும் விசுவாசத்தின் மூலமாக ஒரு குறிப்பிட்ட அளவில் தேவனுடைய இரக்கத்தை அனுபவித்தார்கள், ஆனால் முற்பிதாக்கள் போல் இஸ்ரயேலர்களுக்கும் பாவங்கள் நிவர்த்திச் செய்யப்படவில்லை. மாறாக அப்போஸ்தலர் சுட்டிக் காட்டுகின்ற பிரகாரமாக இஸ்ரயேலர்களின் பலிகளும், பாவ நிவாரண பலிகளும் உண்மையில் ஒருபோதும் அவர்களுடைய பாவங்களை எடுத்துப்போடாமல்/நிவர்த்திச் செய்யாமல், பாவங்களை உண்மையில் தள்ளும்படிச் செய்து, பின்னர் இறுதியில் நிவர்த்திச் செய்துவிடும் மேலான பலிகளுக்குரிய நிழலாய் மாத்திரம் இருந்தன. (எபிரெயர் 10:1-4; அப்போஸ்தலர் 3:19).

இயேசுவின் மன்னிப்பினுடைய அளவு

ஒரு வேளை பரம பிதா தம்முடைய சொந்த பிரமாணங்களினால் கட்டப்பட்டவராகக் காணப்பட்டு, ஈடுபலி விலைக்கிரயம் செலுத்தப்படாமல் பாவங்களை நிவர்த்திச் செய்ய முடியாது என்றால், நமது கர்த்தரால் இப்படிச் செய்ய முடியுமா? இந்த விஷயத்தில், பிதாவைக் காட்டிலும், இயேசுவுக்கு மிகுந்த அதிகாரம் உள்ளதா? இல்லை என்பதே நமது பதிலாகும். இயேசு முடக்குவாதமுள்ள மனுஷனிடத்தில் பேசின வார்த்தைகள், அம்மனுஷனுடைய பாவங்களை நிவர்த்திச் செய்து விடுவது எனும் அர்த்தத்தில் பேசப்படாமல், முற்காலங்களில் பிதா ஏற்கெனவே ஆபிரகாம் மற்றும் மற்றவர்களுக்கு அருளின பாவங்களுக்கான மன்னிப்பையே அருளினார். “”உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டுவிட்டன” என இயேசு கூறினபோதும், அம்மனுஷன் இன்னமும் உதவியற்றவனாகவே கிடந்தான். அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டாலும், அவனுடைய பாவங்கள் நிவர்த்திச் செய்யப்படவில்லை. அவன் இன்னமும் பாவத்தின் கொடூரமான தாக்கங்களுக்குரிய உதாரணமாகவே படுத்துக் கிடந்தான். இதற்குப் பிற்பாடு, நமது கர்த்தர் அம்மனிதனிடம், “”எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு போ” எனக் கூறின வார்த்தைகள் சீர்த்திருத்தலின் தன்மை கொண்டது போன்று காணப்பட்டாலும், அது அம்மனுஷனுடைய பாவங்களை நிவர்த்திச் செய்துவிடுவதாக இருக்கவில்லை. அவனுடைய பாவங்கள் முற்றிலும் நிவர்த்திச் செய்யப்படும்/போக்கப்பட்டுவிடும் என்று சொல்லப்பட்டிருக்குமாயின், அது அவனுக்கு விழுகையின் நிமித்தம் உண்டான சகல பூரணமற்ற தன்மைகளிலிருந்தும் அவன் சீர்த்தூக்கப்பட்டு, சரீரத்திலும், மனதிலும், ஒழுக்கத்திலும் பூரண மனிதனுக்குரிய பூரண நிலைக்கு அவன் உயர்த்தப்படுவதைக் குறிக்கும். ஆனால் இப்படியான காரியங்கள் எதையும் இயேசு அம்மனுஷனுக்குச் செய்யவில்லை; மாறாக இயேசு அம்மனுஷனுக்கு இருந்த விசேஷமான பிரச்சனையை (முடக்குவாதத்தை) மாத்திரமே சொஸ்தப்படுத்தினார்.

இன்னுமாக கர்த்தர் இவ்வார்த்தைகளைப் பேசுகையில், அவர் ஆதி பாவத்தையோ, அதன் மரணத் தண்டனையையோ குறிப்பிடவில்லை. அவர் அவனுடைய பாவங்களைக்குறித்துக் குறிப்பிடுகையில் அதனை பன்மையில், அதாவது பாவங்கள் (sins) எனக் குறிப்பிட்டார், அதாவது அம்மனுஷனுக்குப் பிதாவாகிய ஆதாமின் பாவம் மற்றும் ஆதாமின் தண்டனையிலிருந்து வரும் பங்கோடு சேர்ந்து, அவனுடைய சொந்த பாவமும் காணப்படுகின்றது. அந்த மனுஷன் மோசேயின் உடன்படிக்கையின் கீழுள்ள ஒரு யூதனாக இருந்தான். ஆதி பாவத்தில் இம்மனுஷனுக்கு இருக்கும் பங்கிற்கு, அனைத்து யூதர்களுடன் இவனுக்கும் சேர்ந்து வருடந்தோறும் பலிச் செலுத்தப்பட்டு வருகின்றது; மேலும் செலுத்தப்படும் பலியின் நிமித்தம் உண்டாகும் ஒப்புரவாகுதலின் நிமித்தம், யூதனாகிய அவன், கர்த்தருக்கு முன்பு நிற்க முடிந்தவனானான். யூத ஜனங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிதலுடன் காணப்படும் வரையிலும் அவர்கள் வியாதி முதலியவைகளிலிருந்து விடுதலையாய் இருப்பார்களெனக் கர்த்தர் இந்த ஜனங்களோடு பண்ணின உடன்படிக்கையின் ஒப்பந்தத்திற்கும் ஏற்புடையவனாக/பாத்திரவானாக இருப்பான். ஆகவே ஒவ்வொரு யூதனுடைய விஷயத்திலும், அவனுக்கு வியாதிகள் காணப்படுமாயின் அது அவனுடைய தனிப்பட்ட குற்றங்கள் மற்றும் தனிப்பட்ட மீறுதல்களைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது, ஏனெனில் கர்த்தரும் வேறு எந்த ஜனங்கள் மற்றும் ஜாதியாரிடத்திலும் உடன்படிக்கைப் பண்ணாத விதத்தில் இவர்களுடன் பண்ணியுள்ளார்.

நமது கர்த்தர் ஏற்கெனவே பலியாக்கப்பட்டார்

ஆதாமின் பாவம் மற்றும் அதற்கான தண்டனைக்குறித்த விஷயத்தில் நமது கர்த்தர் சமாதானம் மற்றும் மன்னிப்பு அளிப்பதற்கும், இறுதியில் பாவங்கள் நிவர்த்தியாக்கப்படும்/போக்கப்படும் என்பது குறித்த வாக்குறுதி அளிப்பதற்கும் உரிமை கொண்டுள்ளார், ஏனெனில் அவர் நிறைவேற்றும்படிக்கு வந்திருந்ததற்கான வேலையை அவர் இன்னமும் முடிக்கவில்லை என்றாலும், அவர் இன்னமும் ஈடுபலியை நிறைவேற்றவில்லை என்றாலும், அவர் அதனை ஆரம்பித்துள்ளார். அவருடைய ஞானஸ்நானத்தின் போது, அவர் தமது ஜீவியத்தை அர்ப்பணித்துள்ளார், தமது ஜீவனை ஒப்புக்கொடுத்துள்ளார், பலியாக அதனை பிதாவினிடத்தில் ஒப்புவித்தார், மேலும் ஒருவிதத்தில் பிதாவும் அதனை ஏற்றுக்கொண்டு, இந்த ஒப்பந்தத்தை (Contract) தாம் ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்படுத்தும் பொருட்டு, நமது கர்த்தர் தமது உயிர்த்தெழுதலின்போது பெற்றுக்கொண்ட மகிமையான ஆசீர்வாதங்களுக்குரிய முதல் கனியாகிய பரிசுத்த ஆவியை நமது கர்த்தருக்குக் கொடுத்தார்.

இந்தப் பலியை அவர் ஏற்கெனவே பண்ணியிருந்தாலும், அதனை முடிவு பரியந்தம் நிறைவேற்ற கர்த்தர் முழு நோக்கம் கொண்டிருந்ததாலுமே நமது கர்த்தர் தம்மை விசுவாசிப்பவர்களிடம், “”குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான், குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்” என்றும், “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்” என்றும் உள்ள வார்த்தைகளைக் கூறுவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருந்தார் (யோவான் 3:36, 6:54); அதாவது யார் ஒருவன் என்மேல் விசுவாசம் வைத்து, என்னுடைய உண்மையும், நேர்மையும் உள்ள பின்னடியான் ஆகின்றானோ, அவன் புதிய ஜீவனுக்குள் தனக்குள்ளாக ஜெநிப்பிக்கப்பட்டுவிட்டதாக எண்ணக்கடவன்; இன்னுமாக ஆயிரம் வருஷம் அரசாட்சியின் விஷயத்தில் அவன் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடையத்தக்கதாகவும், அதன் பூரணமான சூழ்நிலைகளில் நித்தியத்திற்கான ஜீவனை அடையத்தக்கதாகவும் நான் அதுவரையிலும் அவனை நடத்தி, அவனுக்கு உதவி செய்வேன் என்றும் அவன் அறியக்கடவன் என்ற விதத்தில் இயேசு அவ்வசனத்தில் குறிப்பிடுகின்றார்.

சுவிஷேச யுகம் முழுவதும் சபை, “”தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கின்றவர்களாய்” இருக்கின்றார்கள். விசுவாசத்தின் மூலமாக நாம் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளதை உணர்கின்றோம், மேலும் விசுவாசத்தின் மூலமாக நாம் முதலாம் உயிர்த்தெழுதல் அடைவோம் என்றும், நமது ஆண்டவரின் மகிமையிலும், கனத்திலும், அழியாமையிலும் நாம் பங்கடைவோம் என்றும் எதிர்க்காலத்தை நோக்கிப் பார்க்கின்றோம் மற்றும் நம்பிக்கையும் கொண்டிருக்கின்றோம். மேலும் விசுவாசத்தின் மூலம் நாம் திருப்தி அடைந்து, நம்பிக்கையில் இளைப்பாறுகின்றோம். ஆம், நாம் அவருடைய சாயலில் விழிக்கும்போது உண்மையாகத் திருப்தியடைவோம் (சங்கீதம் 17:15)”