R4556 – கலிலேயாவின் தீர்க்கத்தரிசி

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R4556 (page 54)

கலிலேயாவின் தீர்க்கத்தரிசி

THE PROPHET OF GALILEE

மத்தேயு 4:12-25

“”இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்.” மத்தேயு 4:15.

முதலாம் வருகையின்போது, பாலஸ்தீனியா (palestine) நான்கு மாகாணங்களை உள்ளடக்கியதாகக் காணப்பட்டது. அதில் யூதர் சீமை/மாகாணம், வரிசையில் முதலாவதாக வடக்கிலும், அதைத் தாண்டி சமாரியா வடக்கிலும், பெரியா (Perea) கிழக்கிலும், கலிலேயா சமாரியாவைத் தாண்டி வடக்கின் தொலைதூரத்திலும் காணப்பட்டது. இயேசு யூதர் சீமையில் (Judea) பிரசங்கித்தும், இவ்விடத்திலும், பெரியாவிலும் (Perea) சில வல்லமையான கிரியைகளை நிகழ்த்தினாலும், இவருடைய பிரதானமான ஊழியம் கலிலேயாவில் காணப்பட்டது; ஆகவே இவரும், இவருடைய சீஷர்களும் கலிலேயர்கள் என்று அழைக்கப்பட்டனர். இயேசு, பெத்லகேமில் பிறந்திருந்தாலும், “”நசரேயன் என்னப்படுவார்” என்று அவர் அழைக்கப்படத்தக்கதாக, அதாவது அவர் தாவீதின் ஊரில் பிறந்ததற்குரிய கனம் அவருக்கு வழங்கப்படாமல், மாறாக “”ஓர் இழிவான பட்டணத்திற்குரிய கனத்தின் குறைவு அவருக்கு உண்டாகத்தக்கதாக அவர் நாசரேத்தில் வளர்க்கப்பட்டார். லூக்கா 23:5,6,49,55 – ஆகிய வசனங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும். ஆகவே நமது கர்த்தருடைய பெரும்பான்மையான அற்புதங்கள் மற்றும் போதகங்கள், கலிலேயர்கள் மத்தியிலேயே சம்பவித்தது. அவருடைய தலையான ஊழியங்கள் யூதர் சீமையில் சம்பவித்தது, அதாவது, இவ்வூழியங்கள் பஸ்கா மற்றும் கூடாரப் பண்டிகைக்காக அவர் வருடந்தோறும் இச்சீமைக்குப் பிரயாணித்தபோது சம்பவித்தவையாகும். சமாரியாவின் ஜனங்கள், யூதர்களின் இரத்தம் கலந்திருந்த புறஜாதிகளாக இருந்தார்கள். இந்தச் சமாரியா சீமையில் பிரசங்கிக்க வேண்டாம் என்று இயேசு தம்முடைய சீஷர்களை எச்சரித்தார்…. “”இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரயேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்” (மத்தேயு 10:5-6). யூதர்கள் தங்கள் ஜாதியாருக்குள், கலிலேயர்களைக் கீழ் ஜாதியாராகக் கருதினார்கள். ஆகவே, “”நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” என்ற வாக்கியம் கலிலேயா முழுவதற்கும் கூடப்பொருந்தும் (மாற்கு 1:9; மத்தேயு 21:11 பார்க்கவும்).

சுவிசேஷத்தின் ஒளியானது முதலாவது கலிலேயாவில் வீச வேண்டும்/வீசப்படும் என்பது ஏசாயாவின் தீர்க்கத்தரிசனத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதாவது,… “”இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கத்தரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி [R4557 : page 55] நடந்தது” (மத்தேயு 4:15-16). கலிலேயாவின் கடற்கரை அருகிலுள்ள இஸ்ரயேலின் 12 கோத்திரத்தாரில், இருவரான செபுலோன் மற்றும் நப்தலியின் எல்லைகளைத் தீர்க்கத்தரிசி குறிப்பிடுகின்றார். கலிலேயா என்ற வார்த்தையின் அர்த்தமாவது வட்டம் (Circle) ஆகும்; எனவேதான் இந்தப்பட்டணம், புறஜாதியார்களால் சூழப்பட்டிருக்கும் என்று தீர்க்கத்தரிசனம் சுட்டிக்காட்டுகின்றது. உண்மையில் இப்படியாகத்தான் காணப்பட்டது; அதாவது சமாரியா, கலிலேயாவின் தெற்குத் திசையிலும், சமாரியா கலிலேயாவை யூதர் சீமையிலிருந்து பிரித்த விதத்திலும் காணப்பட்டது. இவ்விதமாக கலிலேயர்கள் அன்றைய நாட்களில் காணப்பட்ட மாபெரும் மதத்தின் மையப்பகுதியிலிருந்து (யூதர் சீமை) பிரிந்த நிலையில் காணப்பட்டு, தங்களுடைய சகோதரர்களைக் காட்டிலும் மிகுந்த இருளிலும், புறஜாதியார்மேல் காணப்பட்ட அதே மரண இருளின் நிழலின் கீழாகக் காணப்பட்டார்கள். எனினும் இக்குறிப்பிட்ட சம்பவப்பதிவின்படி, அதிகளவில் மத நம்பிக்கை கொண்டும், அதிகளவில் வெளிச்சமூட்டப்பட்டும், அதிகளவில் ஆசாரியர்களால் வழிநடத்தப்பட்டுமிருந்த சகோதரர்களாகிய யூதர்களைக்காட்டிலும், கலிலேயர்கள் இயேசுவின் போதனைக்கு இணக்கம் காண்பித்தவர்களாகக் காணப்பட்டார்கள்.

கலிலேயாவின் பிரதான பட்டணங்களாகிய நாசரேத், கோராசின், பெத்சாயிதா மற்றும் கப்பர்நகூம் மேல் வீசப்பட்டதான மாபெரும் ஒளியானது, மாபெரும் கனத்தையும், சிலாக்கியத்தையும் இப்பட்டணத்தின் ஜனத்தார் மீது கொண்டு வந்தபடியால், இப்பட்டணங்கள் வானப்பரியந்தம் உயர்த்தப்பட்டதாக அடையாள வார்த்தைகளில் கூறப்பட்டது. ஆனால், இவர்கள் (சுவிசேஷ) செய்தியை ஏற்றுக்கொள்ளாததினால், இவர்கள் (hades) பாதாளத்திற்குத் தள்ளப்பட்டார்கள்/தாழ்த்தப்பட்டார்கள் (மத்தேயு 11:20-24). ஒளியானது இருளில் பிரகாசித்து, சிலரை அதாவது, தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச்சேர்த்து ஆசீர்வதித்து விட்டு, பின்னர் மற்றவர்களைக் கூட்டிச்சேர்த்து, ஆசீர்வதிக்கும்படி கடந்து சென்று கொண்டே இருந்தது; அவ்வொளியானது இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதும் இப்படியாகவே கூட்டிச் சேர்த்து, ஆசீர்வதிக்கும்படி கடந்து சென்று கொண்டே இருக்கின்றது. முழு உலகமும் மாபெரும் வெளிச்சமூட்டுதலுக்குள் கடந்து செல்வது இன்னும் எதிர்க்காலத்தில்தான் உள்ளது. ஆயிரம் வருஷம் அரசாட்சியின் விடியலில் மீட்பரும், அவருடைய தெரிந்துக்கொள்ளப்பட்ட சபையும், இஸ்ரயேல் மற்றும் முழு மனுக்குலம், அதாவது (hades) பாதாளத்தின் (சவக்குழியின்) இருளுக்குள் கடந்து சென்றுள்ள மில்லியன் கணக்கானவர்கள் உட்பட அனைவரையும் ஆசீர்வதிக்கவும், பிரகாசிப்பிக்கவும் நீதியின் சூரியனாக, ஆரோக்கியத்தின் செட்டைகளுடன் பிரகாசிப்பார்கள்.

இராஜ்யம் சமீபித்திருக்கிறது

யூதர் சீமையிலுள்ள யூதர்களைக்காட்டிலும், புறஜாதிகளுக்கு அருகாமையில் காணப்பட்ட கலிலேய யூதர்கள், நீண்ட காலமாக வாக்களிக்கப்பட்டிருந்த தேவனுடைய இராஜ்யத்தின் அவசியத்தை உடனடியாகப் பார்க்க முடிந்தபடியால், இவர்கள் அதற்குச் செவிசாய்ப்பதற்காக மிகுந்த ஆயத்தத்துடன் காணப்பட்டார்கள். யூதர் சீமையிலுள்ள யூதர்களோ ஆலயத்திற்கடுத்தப் பணிகளில் சடங்காச்சரமான பகட்டுத்தனத்துடனும், பூமிக்குரிய ஆசாரியனுக்குரிய ஆடம்பரமான வஸ்திரங்களுடன், சாலொமோனைக் காட்டிலும் மிகப் பிரம்மாண்டமான ஆலயத்துடனும் காணப்பட்டபடியால், ஆவிக்குரிய இராஜ்யம் முன்வைக்கப்பட்டபோது அதற்குச் செவிசாய்க்க இவர்கள் மறுத்தார்கள். யூதர் சீமையிலுள்ள யூதர்களுக்கு அவர்களுடைய அமைப்பின் செழிப்பினுடைய பகட்டான வெளித்தோற்றமானது, பார்வையை மூடிப்போட்டக் கண்ணியாகவும், மாயையாகவும் இருந்தது. இந்நிலை இன்றளவும் இப்படியாகவே காணப்படுகின்றது. எளியவர்கள் மற்றும் அற்பமானவர்கள் மத்தியிலேயே தேவனுடைய கிருபையான சுவிசேஷமானது/செய்தியானது சில மிக உண்மையுள்ள நண்பர்களைக் கண்டுபிடிக்கின்றது. எனினும் எருசலேமைக் காட்டிலும் கப்பர்நகூமானது, நல்ல விஷயங்களிலும் சரி, தீய விஷயங்களிலும் சரி புறஜாதி உலகத்தோடு அதிகம் நெருக்கத்தில் காணப்பட்டது.

ஆபிரகாமின் மாம்சீக சந்ததியிடம், இராஜ்யத்திற்கான விதிமுறையின்படியான ஒப்பந்தத்தை (formal tender) ஏற்படுத்தவே, இயேசு வந்திருந்தார் என்ற விதத்திலேயே, பரலோக இராஜ்யம் சமீபித்திருந்தது. அவர்கள் இராஜாவை நிராகரித்தபோது, இராஜ்யத்தையும் நிராகரித்தவர்களானார்கள். எனினும், அவரை ஏற்றுக்கொண்ட அனைவரையும் அவர் ஆசீர்வதித்தார்; மேலும், முன்குறிக்கப்பட்டதின்படியும், வாக்களிக்கப்பட்டதின்படியும், அவர்கள் அவருடைய ஆவிக்குரிய இராஜ்யத்தின் கருவாக ஆனார்கள்; பின்னர் சபையின் எண்ணிக்கை நிறைவடையத்தக்கதாக அதுமுதல் புறஜாதியார் மத்தியிலிருந்து அர்ப்பணிக்கப்பட்ட விசுவாசிகள் வரும்படி அழைப்புச் சென்றது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் இயேசுவோடு, அவருடைய இராஜ்யத்தில் சேர்ந்து வேலை செய்யும்படிக்கு முதலாவதாக ஓர் ஆவிக்குரிய வகுப்பாரை, “”இராஜரிக ஆசாரியக்கூட்டத்தாராக” தெரிந்துக்கொள்வதும், பின்னர் இந்த யுகத்தின் முடிவில் அந்த ஆவிக்குரிய இராஜ்யத்தை வல்லமையிலும், மகா மகிமையிலும் ஸ்தாபிப்பதும், மகா ஒளியினாலும், வாய்ப்பினாலும் இஸ்ரயேலை ஆசீர்வதிப்பதும், மேலும் அவள் (இஸ்ரயேல்) மூலம் பூமியன் சகல குடிகளை ஆசீர்வதிப்பதுமே தேவனுடைய ஏற்பாடாகும்.

பேதுரு, அந்திரேயா, யாக்கோபு மற்றும் யோவனாகிய மீனவர்கள் இந்த மாபெரும் தீர்க்கத்தரிசியினால், அவருடைய பின்னடியார்களாகவும், “”தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களை” அழைக்கும் வேலையில் தம்மோடுகூடச் சேர்ந்து பணி புரிபவர்களாகவும், பின்னர் ஒருவேளை உண்மையுள்ளவர்களாக இருக்கக்கண்டால், தம்மோடுகூட, தமது சிங்காசனத்தில் உட்காரும்படியாகவும் அழைக்க/வரவேற்கப்பட்டார்கள். அவரைப் பின்பற்றிச் செல்லும்படி அனைத்தையும் விட்டுவிட்டுச் சென்றார்கள். “”ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” என்ற வசனமே அவருடைய நிபந்தனைகளாக இருந்தது (மத்தேயு 16:24). இவ்விதத்தில் இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதிலுமுள்ள தம்முடைய அனைத்துச் சீஷர்களுக்கும் சத்தியத்தின் பிரதான ஊழியர்களாகும் (அப்போஸ்தலராகும்) வாய்ப்பின் கதவுகளைக் கர்த்தர் திறப்பதில்லை. தம்மைப் பின்பற்றுவதற்கான தங்களுடைய அனைத்தையும் விட்டுவிடாத எவரையும், அவர் தமது சீஷராக ஏற்றுக்கொள்வதில்லை. எனினும் அவர்கள் தங்கள் இருதயத்தில் அனைத்தையும் விட்டுவிட வேண்டும். சீஷத்துவம் மற்றும் சுயத்தைப் பலிச்செலுத்தும் ஆவியுடையவர்களுக்கு, வாய்ப்பின் கதவு ஒருவேளை திறக்கப்படும் பட்சத்தில், இவர்கள் தங்களுடைய அனைத்தையும் தியாகம் செய்ய/விட்டுவிட வாஞ்சையுடன் காணப்படுவார்கள்.

இயேசு மற்றும் அவருடைய அப்போஸ்தலர்களின் பிரசங்கம், “”இராஜ்யத்தைப் பற்றின சுவிசேஷமாக” இருந்தது. இயேசு, நோய்கள் மீது தமக்கு இருந்த அதே அதிகாரத்தையும், பிசாசுகளைத் துரத்தும் தமக்கிருந்த அதே அதிகாரத்தையும் தம்முடைய அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தார். தீர்க்கத்தரிசி மற்றும் அவருடைய செய்தியின் மீது கவனத்தை ஈர்ப்பதற்கு மாத்திரமே இந்த அற்புதங்களாகும். அனைத்து வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்தவும், அனைத்து மரித்தவர்களை எழும்பப்பண்ணுவதும் (அன்றைய) நோக்கமாக இருக்கவில்லை. அந்த அற்புதங்கள் மனுஷர் மத்தியில் ஸ்தாபிக்கப்படும் இராஜ்யத்தின் மகிமையான ஆசீர்வாதங்களின் வெளிப்பாடுகளே ஆகும். (யோவான் 2:11)

இவ்விதமாக, இயேசுவின் கீர்த்தி பரவினது. வியாதியஸ்தர்கள் அவரிடத்தில் கொண்டு வரப்பட்டுச் சொஸ்தமாக்கப்பட்டனர். மேலும், பாலஸ்தீனியாவின் அனைத்து/ஒவ்வொரு சீமையிலிருந்தும்/மாகாணத்திலிருந்தும் அர்ப்பணச் சிந்தையுள்ள மனுஷர்கள் அவருடைய பின்னடியார்கள் ஆனார்கள். அஞ்ஞான இருளில் சிக்கியிருந்த கலிலேயர்கள் மத்தியில் பிரகாசித்த மாபெரும் ஒளியினால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். ஆனால் எப்போதும்போல, சத்தியமும், ஒளியும் அவர்களைப் பரீட்சித்துப்பார்த்தது. சொற்பமான வெளிச்சத்தின் பிள்ளைகள் வெளிப்படுத்தப்பட்டு, இருள் மற்றும் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்திலிருந்து பிரிக்கப்பட்டனர். அன்றுபோல், இன்றும் அதாவது தேவனுடைய வார்த்தைகளின் மீது மாபெரும் ஒளியானது பிரகாசித்துக்கொண்டிருக்கும் நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாமும் நம்மை வெளிச்சத்தின் பிள்ளைகளாக ஒளிக்கு ஆதரவு காட்டுபவர்களா? அல்லது இருளின் பிள்ளைகளாக ஒளியை எதிர்த்துக் கொண்டிருப்பவர்களா? என்று முடிவெடுத்து, நிரூபித்துக் காட்டுவதற்கான கடமையுடன் காணப்படுகின்றோம்.”