R3337 (page 87)
மாற்கு 7:24-37
“”விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்.” – எபிரெயர் 11:6
இப்பாடத்திலிருந்து நாம் கிறிஸ்துவினுடைய பூமிக்குரிய வாழ்க்கைப்பற்றின ஆராய்ச்சியில் ஒரு புதிய பாகத்தை ஆரம்பிக்கின்றோம்.
விலையேறப் பெற்ற இரத்தத்தினால், இழப்பிலிருந்து மீட்கப்பட்ட உலகத்தினுடைய ஜீவனுக்கான உரிமைகள் – SUB HEADING
இக்கண்ணோட்டத்திலிருந்து நாம் பார்க்கும்போது, பாவத்தின் தீர்ப்பாகிய மரணத்திலிருந்து ஆதாமையும், அவருடைய சந்ததியையும் மீட்கும்படிக்கு, மனிதர் சார்பாக மரிக்கும்படி இயேசு [R3337 : page 88] உலகத்திற்கு வந்தபோது, அவர் இன்னும் இரண்டு மற்ற முக்கியமான வேலைகளைச் செய்தார் என்பதை நாம் புரிந்துக்கொள்கின்றோம். மீட்பின் வேலை பிரதானமானதாகும்; இது இல்லாமல் எவ்விதமான எதிர்க்கால வாழ்க்கையும் இருக்கமுடியாது. கல்வாரியில் பலி நிறைவடையும் வரையிலும் தினந்தோறும் ஜீவனை ஒப்புக்கொடுத்தது என்பது நமது கர்த்தரால் நிறைவேற்றப்பட்ட பிரதானமான (அ) அஸ்திபாரமான வேலை என்று பெயரிடலாம். இது இல்லாமல், வேறு எதுவும் உபயோகப்படாது. மேலும், இந்த அஸ்திபாரத்தின் மேல்தான், மற்ற இரண்டு வேலைகளும் நடைபெற முடியும். ஜீவனும், அழியாமையும் சுவிசேஷத்தின் மூலம், காத்தரால் வெளியரங்கமாக்கப்பட்டது என்று அப்போஸ்தலர் தெரிவிக்கின்றார். இதன் அர்த்தம் என்னவெனில், நித்தியஜீவன் தொடர்புடைய தெளிவான மற்றும் உறுதியான நம்பிக்கையும் இதற்கு முன்னதாக எவருக்கும், யூதர்களுக்குக்கூடக் கொடுக்கப்படவில்லை என்பதேயாகும். மற்ற ஜாதியார்கள் தேவனற்றுக் காணப்பட்டபடியால், நம்பிக்கையில்லாமல் இருந்தாலுங்கூட, யூதர்கள் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொள்ளத்தக்கதாக போதுமானளவுக்கு தெய்வீக வெளிப்படுத்தல்களைப் பெற்றிருந்தனர்; எனினும், அதன் தத்துவ ஞானத்தை அவர்கள் / யூதர்கள் அறிந்திருக்கவில்லை; அதாவது, தேவன் நீதியுள்ளவராக இருக்கும் அதேவேளையில், அவர் நீதியாய் மரண ஆக்கினைக்குள்ளாக தீர்த்திட்டவர்களை எப்படி விடுவிக்க முடியும் என்பதை அறியாது இருந்தார்கள்; அவர்களால்/யூதர்களால் இதனையறிய முடியவில்லை. காரணம், அதற்குரிய வேளை இன்னும் வராததினால், அது வெளிப்படுத்தப்படவில்லை.
“”அநேகருக்கான மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க” வேண்டி, தாம் உலகத்திற்குள் வந்திருப்பதாக, கேட்கும் செவியுடையவர்களுக்கு விவரிப்பதன் வாயிலாக, கிறிஸ்து ஜீவனை வெளியரங்கமாக்கினார் (மாற்கு 10:45). இன்னுமாக இராஜ அதிகாரத்திலுள்ள தமது குரலை, பிரேத குழிகளில் இருப்பவர்கள் கேட்பதற்கும், மரண நித்திரையினின்று விழித்தெழுவதற்கும், அதாவது கல்லறை எனும் சிறைச்சாலையிலிருந்து வெளிவருவதற்குமான காலம் வரும் என்றும் விவரித்தார். இப்படியாகக் கல்லறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டும், ஒருவேளை ஜனங்கள் தொடர்ந்துத் தற்காலத்திலுள்ள வலிகள், வேதனைகள் மற்றும் பிசாசுகளின் எதிர்ப்புகளுக்குக் கீழ்த்தான் காணப்படுவார்களானால், என்ன நன்மை இருக்கும் என்று அவரைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்கள் யோசித்திருக்கக்கூடும். ஆயிரம் வருஷம் யுகமானது உலகளாவிய ஆசீர்வாதத்தின் காலமாக இருக்கும் என்றும், பரிசுத்த இராஜ்யம் எங்கும் தீங்குச் செய்வதற்கோ, அழிப்பதற்கோ எதுவும் இராது என்றும், ஆயிரம் வருஷம் யுகம் தொடர்பாக தீர்க்கத்தரிசிகளால் அருளப்பட்ட சாட்சியங்களை, நமது கர்த்தர் வலுவூட்டினார். இது எவ்வாறு செய்யப்படும் என்பதை, தாம் செய்த பல்வேறு அற்புதங்கள் வாயிலாகக் காட்டினார்; ஏனெனில், அவர் தேவனுடைய இராஜ்யத்தைப் பிரசங்கித்து, அதற்காக எதிர் நோக்கி இருப்பதற்கும், அதன் வருகைக்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும், வல்லமைக்காகவும் ஜெபிப்பதற்கும் தம்முடைய சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தது மாத்திரமல்லாமல், அவரால் நிகழ்த்தப்பட்ட பல்வேறு அற்புதங்கள் வாயிலாக, இராஜ்யத்தின் வல்லமைகளானது, மனுஷர்களின் ஆசீர்வாதத்திற்காக, மனுஷர்கள் மத்தியில் காணப்படும் என்றும் விவரித்துக்காட்டினார்.
அவர் அனைத்து விதமான வியாதிகளையும் சொஸ்தமாக்கினார், மற்றும் பிசாசுகளைத் துரத்தினார்; இவ்விதமாக தேவனுடைய ஏற்ற வேளையில் மாபெரும் வைத்தியனாக, தாம் மனித [R3338 : page 88] குடும்பம் தொடர்பான விஷயத்தில் தீமையான கிரியைகள் செய்யாதபடிக்குச் சாத்தானையும், அனைத்து விழுந்துபோன ஆவிகளையும் முற்றிலும் கட்டுப்படுத்துவதற்குரிய அளவுக்கு மிகுதியாய் வல்லமை கொண்டிருப்பார் என்றும், அப்பொழுது தாம் ஏழைகளையும், முடவர்களையும், செவிடர்களையும், ஊமையர்களையும், குருடர்களையும், தற்காலத்து உபத்திரவங்களிலிருந்து தூக்கி விடுவார் என்றுமுள்ள காரியங்களுக்குச் சான்று பகர்ந்தார். இதோடுக் கூட விசுவாசத்தின் மூலம் அவருடைய தயவை ஏற்றுக்கொண்டவர்களுக்குக் (பிணியாளிகளுக்குக்) கிடைத்திட்ட இந்தத் தற்காலிகமான (பிணிகள் மற்றும் பிசாசுகளிடமிருந்ததுமான) விடுதலை என்பது, இன்னும் மேலான ஆசீர்வாதங்களுக்கும், வேலைகளுக்கும் மற்றும் சிலாக்கியங்களுக்கும் விளக்கமாயிற்று. அதாவது, புரிந்துக்கொள்ளுதலின் கண்கள் திறக்கப்படுதல், பாவமாகிய குஷ்டரோகம் சொஸ்தப்படுதல், சூம்பினவைகளுக்குச் சக்திகள் திரும்புதல், மரித்தவர்களை விழித்தெழுப்பப்பண்ணுதல் ஆகியவற்றிற்கு விளக்கமாயிற்று; இப்படியாக, புரிந்துக்கொள்ளுதலின் கண்கள் திறக்கப்படும்போதுதான் அனைவரும் தேவனால் அங்கீகரிக்கப்படும் நீதியையும், அதன் பலனாகிய நித்தியஜீவனையும் பார்க்க, கேட்க மற்றும் அறிந்துக்கொள்ள முடியும்; மற்றும் இப்படியாக அனைவரும், பாவம், பூரணமின்மை முதலான தற்போதைய அடிமைத்தனத்தினின்று, தேவனுடைய குமாரர்களுக்குரிய முழுச் சுதந்திரத்திற்குள் வரத்தக்கதாக உதவப்படமுடியும். இப்படியாக, இராஜ்யம் தொடர்பான அவருடைய செய்தியைப் கேட்டவர்களுக்கு, கர்த்தர், ஜீவனை, அதாவது நித்தியஜீவனைப் பற்றியும், அதன் ஆசீர்வாதங்களையும் வெளிப்படுத்தினார்.
அவர் அழியாமையையும் வெளியரங்கமாக்கினார். உலகத்திற்கான நித்தியஜீவனுடன் கூட, தம்முடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றும் பின்னடியார்களாகிய விசேஷித்த வகுப்பார், தம்முடன் கூடத் திவ்வியச் சுபாவத்தின் கனம், மகிமை மற்றும் அழியாமையில் பங்கடையத்தக்கதாக ஒரு வழியையும் திறந்து வைத்தார். பொதுவாயுள்ள மனுக்குலமானது இதனை புரிந்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படவில்லை. “”எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” (1 கொரிந்தியர் 2:9). தேவனை அன்புகூருகின்றவர்களாகிய புதுச் சிருஷ்டிகளுக்கு, அதாவது பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களுக்கு, அதாவது இராஜ்யத்தில் கர்த்தருடன் உடன் சுதந்தரராய் இருக்கும்படிக்குத் தங்களது அழைப்பையும், தெரிந்துக்கொள்ளுதலையும் உறுதிப்படுத்துகின்றவர்களுக்கு மாத்திரமே இது ஆயத்தம் பண்ணப்பட்டவையாகும்.
பின் குறிப்பிடப்படும் மூன்று கண்ணோட்டங்களின்படிப் பார்க்கப்படும் போதுதான், நமது கர்த்தருடைய ஊழியமும், போதனைகளும் சரியாய்ப் புரிந்துக்கொள்ளப்பட முடியும். அவை, (1) ஆதாம் மற்றும் அவருடைய சந்ததிக்கான மீட்கும்பொருளாக வழங்கப்பட்ட அவருடைய சொந்த பலி, அதாவது, “”எல்லாம் முடிந்தது” என்று அவர் உரக்கக் கடைசியில் கூறும்வரை, நாளுக்கு நாள் அவர் தமது ஜீவனை ஒப்புக்கொடுத்ததின்படியான கண்ணோட்டம். (2) அவருடைய பொதுவான போதனைகள்; அதாவது, ஏற்றவேளையில் முழு உலகத்திற்கும் பொருந்தக்கூடிய பொதுவான போதனைகள். அதாவது, மீட்பின் வேலைக்கான, பலன் தொடர்பான அவருடைய போதனைகள். அதாவது, உலகம் தேவனோடு ஒப்புரவாகுதல், உலகத்தின் பாவங்கள் முழுமையாக மன்னிக்கப்படுதல், இராஜ்யத்தின் மூலமாக உலகத்திற்கு வரவிருக்கும் வாய்ப்பு (அ) மாபெரும் பரீட்சை (அ) நியாயத்தீர்ப்பு; மற்றும் இந்த இராஜ்யத்தில் மீட்பர், தேவனுக்கும் மனுஷனுக்குமிடையே மத்தியஸ்தராகக் காணப்பட்டு, மனுக்குலத்தை உள்ளும், புறமுமான சகல எதிரிடையான சூழ்நிலைகளிலிருந்து விடுவித்து, சிருஷ்டிகரோடு, இசைவாக வரவிரும்பும் அனைவருக்கும் உதவுவது என்பதான மீட்பின் வேலைக்கான பலன் தொடர்பான அவருடைய பொதுவான போதனைகளின் கண்ணோட்டம். (3) இடுக்கமான வழியில் நடப்பதற்கும், அவருடைய மரணத்திற்குள்ளான ஞானஸ்தானத்தில் முழுகுவதற்கும், இப்படியாக, தெய்வீகக் கிருபையின் மூலமாக, இந்த ஏற்பாட்டின் வாயிலாகப் பரலோக இராஜ்யத்தில் பங்கடைவதற்கென ஆயத்தம் பண்ணப்பட்டுத் தகுதியடைவதற்கு, அதாவது கிறிஸ்துவுடன் அவருடைய சிங்காசனத்தில் உட்கார்ந்து, பூமியின் குடிகள் அனைத்திற்கும் ஆயிரம் வருஷம் யுகத்திற்கான, ஆச்சரியமான ஆசீர்வாதங்கள் யாவற்றையும் அருளுவதில் பங்கடைவதற்குமென ஆயத்தம் பண்ணப்பட்டு, தகுதியடைவதற்கும் என்றுமுள்ள விசேஷமான சீஷத்துவத்திற்குரிய அழைப்புப்பற்றின கண்ணோட்டம் என்பவைகளேயாகும்.
இந்தக் கருத்துக்களினடிப்படையில்தான் இந்தப் பாடத்தை நாம் பார்க்கப்போகின்றோம். ஐயாயிரம் பேருக்குப் போஷித்தப் பிற்பாடு, கலிலேயா கடலின் புயலில் கழித்திட்ட இரவிற்குப் பிற்பாடும், இயேசுவும், அவருடைய சீஷர்களும், சில காலத்தைக் கப்பர்நகூமில் செலவிட்டார்கள். அப்பொழுதுதான் தம்மால் ஜனங்களுக்கு அளித்திட்ட அப்பங்களையும், மீன்களையும் குறித்து அதிகம் சிந்தனை செய்யாமல், மேலானவைகளைக் குறித்துக் சிந்திக்க வேண்டும் என்று தாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜனங்களுக்குப் பிரசங்கம் பண்ணினார். தம்மை வானத்திலிருந்து இறங்கி வந்த ஜீவ அப்பமாகக் கருத வேண்டும் என்றும், தம்முடைய வார்த்தைகளைப் புசித்து, இவ்விதமாக நித்தியஜீவனை அடையும்படிக்கு அவர்களுக்கு அவர் பிரசங்கம் பண்ணினார். எனினும், இந்த நித்தியஜீவனைப் பரவலாகவும் வழங்குவதற்கான வேளை இன்னமும் வரவில்லை; இந்த வேலையானது ஆயிரம் வருஷம் யுகத்திற்குரியதாகும். ஆகவே, நீதியின் மீது விசேஷமாகப் பசியும், தாகமும் கொண்டுள்ளவர்களையே, அவர் விசேஷமாய்த் தேடிக் [R3338 : page 89] கொண்டிருந்தார். இவ்வகுப்பாரில் உள்ளவர்கள்தான் அப்போஸ்தலர்கள்; பெந்தெகொஸ்தே நாள் முதல் ஆரம்பிக்கவிருக்கும் புதிய யுகத்தில், இந்த அப்போஸ்தலர்கள் வாயிலாகக் கர்த்தர் நிறைவேற்ற வேண்டிய எதிர்க்கால வேலைக்கென, இப்பொழுது அவர்களை அவர் பயிற்றுவித்துக் கொண்டிருந்தார்.
நமது கர்த்தர் தம்முடைய சீஷர்களுடன் தீரு மற்றும் சீதோன் எனும் பட்டணங்களுடைய எல்லைகளுக்கு நேராக வடக்கிலிருந்து, மேற்கை நோக்கி பிரயாணம் பண்ணினார். அங்கிருந்த ஜனங்களிடம் அவர் தம்மை வெளியரங்கமாக அறிவிக்கவில்லை. ஆனால், அவருடைய வந்திருத்தலானது வேகமாக அனைவராலும் அறிந்துக்கொள்ளப்பட்டது; ஏனென்றால் அவருடைய அற்புதங்கள் மற்றும் போதனைகளின் கீர்த்தியானது, பாலஸ்தீனியா முழுவதும் பரவியிருந்தது. அவருடைய வந்திருத்தலை முதலில் கேட்டவர்களில், ஒருவள் கிரேக்கத்தியர்களாக வாழ்ந்திருந்த கானானிய ஸ்திரீயாகக் காணப்பட்டாள்; மேலும், இவள் தன்னுடைய மகளுக்கு உதவி புரிந்திடும்படியாக, அவர் முன் வந்து ஓலமிட்டாள். நமது கர்த்தர் அவருடைய வழக்கத்திலிருந்து மிகவும் வேறுப்பட்டவராக, இத்தருணத்தில் நடந்துக் கொண்டார்; ஒரு பாடத்தைப் புகட்டுவதற்கெனவே இப்படியாக நடந்திருப்பார் என்பதிலும் ஐயமில்லை. வழக்கமாகக் கேட்பதற்கும், அனுதாபம் கொள்வதற்கும், சொஸ்தப்படுத்துவதற்கும் உடனே தயாராகக் காணப்படும் கர்த்தர், இத்தருணத்தில் அந்த ஸ்திரீக்கு எவ்விதமான கவனமும் செலுத்தாதவராகக் காணப்பட்டார்; மத்தேயுவின் பதிவின்படி, அந்த ஸ்திரீயை அனுப்பிவைத்துவிடும்படிக்கு, அதாவது ஒன்றில் அவளது விண்ணப்பத்திற்கு அருளி அவளை அனுப்பி வைத்து விடும்படிக்கு, அல்லது அவளது விண்ணப்பத்தை நிராகரித்து, அவள் போய்விட கட்டளையிடும்படிக்குச் சீஷர்கள் கர்த்தரிடத்தில் வந்து அவரை வற்புறுத்தினார்கள் என்பதாகக் காணப்படுகின்றது.
அந்தப் பாவப்பட்ட ஸ்திரீயானவள் தனக்காக அல்லாமல், பிசாசு, அசுத்தமான ஆவி பிடித்திருந்த தனது மகளுக்காகவே விடாப்பிடியுடன் காணப்பட்டாள்; நாம் புரிந்துள்ளவரைக்கும் இந்த விழுந்துபோன ஆவிகளில் பெரும்பாலானவைகள் அசுத்தமானவைகளும், சீர்க்கேடடைந்ததுமானவைகளாகும். இன்னுமாக, இவைகள் குடிக்கொண்டிருப்பவர்கள் மீதிருக்கும் இவைகளுடைய செல்வாக்கும், அசுத்தமானதும், பாதிப்பிற்கு ஏதுவானதுமாகும். சிலசமயம் இவைகள் தூய்மையையும் தூண்டுகின்றது; மேலும், அநேக தருணங்களில் இவைகள் பரிசுத்தமானவர்களைப்போல், கர்த்தரைப் போல் கூட, ஆள்மாறாட்டம் பண்ண முயற்சி எடுத்துள்ளதையும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்; எனினும் இந்தப் பொல்லாத ஆவிகளின் முழு நோக்கமும், இவைகள் ஆட்கொண்டிருப்பவர்களின் விஷயத்திலும் மற்றும் ஆட்கொண்டிருப்பவர்கள் வாயிலாக மற்றவர்கள் விஷயத்திலும், அசுத்தமான எண்ணம் மற்றும் நடத்தைக்கு நேராகவே காணப்படுகின்றது.
இறுதியாக ஸ்திரீயின் அழுகைக்கும், சீஷர்களுடைய வற்புறுத்தலுக்கும் இணங்கி, நமது கர்த்தர் பதில் கொடுத்தார். ஆயினும், வழக்கத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமாகப் பதில் கொடுத்தார். அவருடைய அற்புதங்களும், ஊழியங்களும், தேவனுடைய உடன்படிக்கைக்கு உட்பட்ட ஜனங்களாகிய யூதர்களுக்கே ஒழிய, பொதுவான உலகத்திற்காக அல்ல என்று மாத்திரம் கர்த்தர் கூறிவிட்டார். அக்காலத்தில் நிலவின யூதர்களுடைய வழக்கமாகிய புறஜாதிகளை நாய்கள் என்று கூறும் விதத்தைக் கர்த்தர் பின்பற்றினார். எனினும், கொஞ்சம் மாற்றிப்பயன்படுத்தினார்; நாய் என்று பயன்படுத்துவதற்குப்பதிலாக, குடும்பத்தில் காணப்படும் சிறு செல்லப்பிராணியாகிய நாய்க்குட்டி எனும் வார்த்தையைப் பயன்படுத்தினார். கர்த்தருடைய வல்லமையில் பலமான விசுவாசம் கொண்டிருந்த ஸ்திரீயானவளோ, கர்த்தரிடமிருந்து வந்த சாதகமில்லாத பதிலையும், தன்னுடைய சொந்த நன்மைக்கு ஏதுவாக மாற்றுவதிலும் பலமிக்கவளாக இருந்தாள்; இன்னுமாகப் பிள்ளைகளின் மேஜையிலிருக்கும் திரளான உணவிலிருந்து, செல்லப் பிராணியான நாய்க்குட்டிகள் பெற்றுக்கொள்வது போன்று, நமது கர்த்தர் விசேஷமாக ஊழியம் செய்யும்படிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள யூதர்களுக்கு எவ்விதமான நன்மையும் குறைவுப்படாதவிதத்தில், புற இனத்தாளாகிய தனக்கும், கர்த்தருடைய தயவுகளில் சிலவற்றை அருளலாமே என்று வலியுறுத்தினாள்.
இது அந்த ஸ்திரீயினுடைய உண்மையையும், விசுவாசத்தையும் காட்டுகின்றது. இப்படியான விசுவாசத்தின் வெளிப்பாடானது, நிச்சயமாய்க் கர்த்தரைப் பிரியப்படுத்துகின்றதாய் இருக்கும். நமது விசுவாசத்தை வளர்ப்பதிலும், பரீட்சிப்பதிலுமான காரியங்களினடிப்படையில்தான், நம்மைக் கர்த்தர் அநேகந்தரம் கையாளுவதை, கிறிஸ்தவனாக உள்ள நம்முடைய அனுபவங்களில் நாம் பார்த்திருக்கின்றோம். நாம் எவ்வளவுதான் முற்காலங்களில் அவரைத் தவறாய்ப் புரிந்துக்கொண்டிருந்தாலும் மற்றும் அவருடைய குணலட்சணமும், திட்டமும் எவ்வளவுதான் எதிராளியானவனால் அவதூறாகவும், தவறாகவும் காண்பிக்கப்பட்டிருந்தாலும், அவர் நல்லவரும், கிருபையுள்ளவருமாக இருக்கின்றார். அவருடைய நற்குணத்திலும், அவருடைய வல்லமையிலும், அவருடைய ஞானத்திலும், அவருடைய அன்பிலும் மற்றும் அவரிலும் நாம் விசுவாசமும், நம்பிக்கையும் வைக்காமல், கர்த்தர் அண்டைக்கு நாம் செல்வது என்பது நம்மால் கூடாத காரிமாகும். நம்ப மாத்திரம் செய்யுங்கள், அனைத்தும்கூடும் என்பதையே இன்றுள்ள ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் தொடர்ந்துக் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும். அதாவது முற்காலங்களில், “”ஆண்டவரே எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்” என்று அப்போஸ்தலர்கள் ஜெபம் பண்ணினது போன்று நாமும் காணப்பட வேண்டும். இப்படியாகவே நாமும் ஜெபம்பண்ண வேண்டும் மற்றும் இக்கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் வாழ்க்கையின் பாடங்களை, விசுவாசத்திற்கான பாடங்கள் (அ) அறிவுரைகள் என்று ஏற்றுக்கொள்ள நாம் தொடர்ந்து நாடுகின்றவர்களாக இருக்க வேண்டும். இங்குத் தெய்வீக வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதன் அவசியத்தை நாம் புறக்கணிக்கவில்லை. மாறாக, எங்கு விசுவாசம் காணப்படுகின்றதோ, அதற்கு ஏற்ப கொஞ்சமாகவோ, அதிகமாகவோ கிரியைகள் காணப்படும் என்பதையே நாம் தெரிவிக்கின்றோம். ஆகவே, நம்முடைய விசுவாசம் அதிகமாகக் காணப்படும்போது, நம்முடைய கிரியைகளும், திவ்விய ஒழுங்கிற்குக் கீழாகவே காணப்படும் என்பது நிச்சயமேயாகும். விசுவாசம் இல்லாமல் கர்த்தரைப் பிரியப்படுத்துவது என்பது கூடாத காரியம் என்று கூறும் நமது ஆதார வசனம் சரியாகவே உள்ளது.
விசுவாசம் விருத்திச் செய்யப்பட வேண்டும், வளர வேண்டும். கலிலேயாக் கடலில் வீசின புயலின் காரணமாகப் பயத்தில் சத்தமிட்ட அதே அப்போஸ்தலர்கள்தான், கர்த்தர் இல்லாதபோதும், அவர் இருப்பதை உணரமுடியாத தருணத்திலும் அவரை விசுவாசிக்குமளவுக்கு, அவர்களுடைய விசுவாசமானது படிப்படியாகப் பலப்பட்டது. இதுபோலவே கர்த்தர் மீதான விசுவாசத்தை விருத்திச் செய்வதும், அவர் மீதான, நமது விசுவாசம் வேரூன்றத்தக்கதாக, அவருடைய வார்த்தைகளிலுள்ள படிப்பினைகளையும், நமது ஜீவியத்தின் கடந்தகால அனுபவங்களையும் எண்ணிப்பார்ப்பதும் நம்முடைய அனுதின பாடங்களின் ஒரு பகுதியாகும்.
கர்த்தர் அவளுக்குப் பிரதியுத்தரமாக “ஸ்திரீயே உன் விசுவாசம் பெரியது” என்று கூறினார். இவளது விசுவாசமானது, இவளுடைய மகளின் மீதான இவளது அன்பிலும் மற்றும் இவளின் தாழ்மையிலும், விடாமுயற்சியிலும், உறுதியிலும் பலமாய்க் காணப்பட்டது. மேலும், இவளது விசுவாசமானது, கர்த்தர் பார்க்கிற விதத்திலேயே இருந்ததே ஒழிய, கிரேக்கர்கள் மற்றும் புறஜாதிகளுடைய பொதுவான எண்ணங்களின் அடிப்படையில் காணப்படவில்லை. அதாவது, யூதர்கள் பாசாங்கு மாத்திரமே பண்ணுகின்றார்கள் என்றும், யூதர்களும், மற்ற ஜனங்களைப்போன்று தெய்வீகத் தயவிற்குள் இல்லை என்றுமுள்ள கிரேக்கர்கள் மற்றும் புறஜாதிகளுடைய எண்ணங்கள் இவளுக்கு இல்லை. மாபெரும் இடர்பாடுகளையும் அதாவது, நமது கர்த்தருடைய வெளிப்படையான மறுப்புகளையும் ஜெயங்கொள்ளுமளவுக்கு, இவளுடைய விசுவாசம் பலமாய்க் காணப்பட்டது. இந்த அந்நிய ஸ்திரீயின் ஒவ்வொரு நடத்தையும், கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் பிரகாசிக்கப்பட்ட ஜனங்களுக்கான மாதிரியாக நாம் கருதிக்கொள்வதில்லை. இவளுடைய விசுவாசத்திற்கு இருந்த பலமே, நாம் பின்பற்ற வேண்டிய ஒரே விஷயமாக உள்ளது. கர்த்தருடைய ஜனங்களாக ஆகியுள்ள நாம், அதாவது அந்நியர்களாகவும், பரதேசிகளாகவும், நாய்களாகவும் [R3338 : page 90] இராமல், பிதாவினுடைய குடும்பத்திற்குள்ளாகத் தத்தெடுக்கப்பட்டு, கர்த்தரினால் “”சகோதரர்கள்” என்று அழைக்கப்படும் நாம், கர்த்தர் நமக்கு அருளுவதில் பிரியப்படாத விஷயங்களுக்காக, அழுவதோ (அ) கெஞ்சுவதோ (அ) மன்றாடுவதோ நமக்குத் தகுதியாய் இராது.
அழிந்துப்போகும் உணவுக்காக மாத்திரமே நமது நாடுதலும், வேண்டுதலும் காணப்படக்கூடாது என்று ஆண்டவர் கூறினதின் மூலமாக, புறஜாதிகள் நாடும் விஷயங்களுக்கும், அவருடைய சீஷர்களாக நாம் நாட வேண்டிய விஷயங்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் கொடுத்தார்; ஏனெனில் புறஜாதிகள், பூமிக்குரிய விஷயங்களுக்காக மாத்திரமே விடாப்பிடியாக நாடுவார்கள்; இன்னுமாக முதலாவதாகத் தகுதியாய் இருக்கும் தேவனுடைய இராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள் என்றும், நம்முடைய நன்மைக்கு ஏதுவான இந்தப் பூமிக்குரிய அனைத்தும் நமக்குக் கூடக்கொடுக்கப்படும் என்றும் ஆண்டவர் கூறியுள்ளார். இருதயம் பரிசுத்தமாக்கப்படுவதற்கும், அவருடைய ஆவியினால் நிரப்பப்படுவதற்கும், ஆவிக்குரிய உணவிற்கும், புத்துணர்விற்கும் மற்றும் பலத்திற்காகவே, கர்த்தரிடத்தில் நம்முடைய விண்ணப்பங்களும், நம்முடைய வேண்டுதல்களும், நம்முடைய கூக்குரல்களும் காணப்பட வேண்டும்; மேலும் மாம்சத்திற்குரிய விஷயங்களைப் பொறுத்தமட்டில், புதிய சிருஷ்டிகளாக நம்முடைய நன்மைக்கடுத்த விஷயங்கள் எது என்பதை அவர் அறிவார். இவைகளை நாம் அவரிடத்தில் விட்டுவிட வேண்டும்; அவர் நமக்குக் கொடுத்திடாத காரியங்களுக்காக நாம் அவரை [R3339 : page 90] விடாப்பிடியாக வருந்தி கேட்பதில் அவர் பிரியப்படுவதில்லை. காரணம், இப்படியாக நாம் நடந்துக்கொள்வது என்பது அவரிடத்திலான விசுவாசத்தை வெளிப்படுத்துவதாக இராமல், மாறாக சந்தேகத்தை வெளிப்படுத்துகிறதாகவும், நமக்குத் தேவையானவற்றை அருளுவதாக அவர் கொடுத்துள்ள வாக்குத்தத்தத்தை, அவர் புறக்கணித்து விடுவாரோ (அ) மறந்துப் போய்விடுவாரோ என்ற நமது பயத்தை வெளிப்படுத்துகிறதாகவும்தான் இருக்கும்.
அவளிடத்தில் வெளிப்பட்ட விசுவாசம் போதுமானது என்றும், அவளுடைய விண்ணப்பத்திற்குப் பதில் அருளப்பட்டுள்ளது என்றும், அவளுடைய மகளிடமிருந்து பிசாசு போய்விட்டது என்றும் நமது கர்த்தர் அந்த ஸ்திரீயிடம் கூறினார். இதைக் கேட்ட உடனே அவள் வீட்டிற்குக் கடந்துப்போனது என்பது, இன்னுமாக அவளுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தினது. அவள் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசத்துடன் ஏற்றுக்கொண்டாள்; அவர் தம்மை மேசியா என்று அறிவித்த பிரகாரம், மேசியாவாகவே இருந்தாரானால், அவரிடம் இருப்பதாக அவள் நம்பின வல்லமை அவரிடம் இருந்ததானால், அவர் தன்னிடம் சொஸ்தப்படுத்தியுள்ளேன் என்று பொய்யாகக் கூறமாட்டார் என அவள் நம்பிக்கைக் கொண்டிருந்தாள். இவ்விஷயத்தில், இன்றுள்ள கர்த்தருடைய ஜனங்களில் அநேகர் விசுவாசமில்லாமல் காணப்படுகின்றனர். அதாவது, இந்தப் பாவப்பட்ட அந்நிய ஸ்திரீயைக்காட்டிலும், குறைவான விசுவாசம் பெற்றிருக்கின்றனர். கர்த்தரிடத்தில் வருபவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது என்று அநேகருக்குக் கர்த்தருடைய வார்த்தைகள் நிச்சயம் அளித்தாலுங்கூட, இவர்களுக்குள் இருக்கும் குறைவான விசுவாசமானது, இவர்களுக்குள் சந்தேகத்தை எழுப்பி, அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதே மன்னிக்கப்பட்டுவிட்டது என்று கர்த்தர் உறுதியளித்துள்ள, இவர்களுடைய பாவங்களுக்காக இவர்களைத் தொடர்ந்து புலம்பச்செய்து, மன்னிப்புக் கேட்டுக்கொண்டே இருக்கச்செய்கின்றது. இவர்கள் விசுவாசத்தைச் செயல்படுத்தத் தவறிவிடுகின்றனர், மற்றும் இதற்கேற்ப ஆசீர்வாதத்தையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும் அடைவதிலும் தவறிவிடுகின்றனர்.
இந்தப் பாவப்பட்ட (புறஜாதி) ஸ்திரீக்குத் தவிர, வேறு யாருக்கும் எதுவும் நமது கர்த்தர் செய்ததாகப் பதிவுகள் இல்லை; இன்னுமாக, இங்கு ஆவிக்குரிய படிப்பினைகள் சீஷர்களுக்கே தவிர, அந்த ஸ்திரீக்கு இல்லை; ஏனெனில், அந்த ஸ்திரீக்காகிலும் அல்லது அவ்விடத்தில் காணப்பட்ட வேறு எவருக்காகிலும் அவர் போதித்ததாகப் பதிவுகள் எதுவும் இல்லை. இங்கிருந்து நமது கர்த்தர் புறப்பட்டு, கிழக்கு நோக்கி, பாலஸ்தீனியாவின் வடக்கு எல்லை வழியாகப் பிரயாணம் பண்ணி, யோர்தான் நதியைக் கடந்து, தெற்கு நோக்கி, கலிலேயா கடலுக்கு நேராக வந்தார். இதற்கிடையில் ஒரு மலையில் கர்த்தர் கொஞ்சம் வாசம் பண்ணினார் என்றும், அங்குதான் ஜனக்கூட்டத்தார் தங்களது வியாதியஸ்தர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள் என்றும், முடவர்களும், குருடர்களும், ஊமையர்களும், சப்பாணிகளும், இயேசுவின் பாதத்தண்டைக்கு ஜனங்களால் கொண்டுவரப்பட்டார்கள் என்றும், இவர்களை இயேசு சொஸ்தப்படுத்தினார் என்றும், ஜனக்கூட்டத்தார் ஆச்சரியப்பட்டு இஸ்ரயேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள் என்றும் மத்தேயு தெரிவிக்கின்றார்.
நம்முடைய இந்தப் பாடத்தில், திரளான சொஸ்தப்படுத்துதல்களில், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைப் பார்க்கலாம். ஊமையனாகவும், செவிடனாகவும் இருந்த ஒரு மனுஷன் இயேசுவினினடத்திற்குக் கொண்டுவரப்பட்டான். மேலும், அவனைக் கையாண்ட விஷயம் விநோதமாக இருக்கின்றது; கர்த்தர் அம்மனுஷனைத் தனியே கூட்டிக்கொண்டு போனார். அநேகமாக பாடத்தை அம்மனுஷனிடத்தில் பதிய வைப்பதற்காகவே, இப்படியாகச் செய்திருக்க வேண்டும். அம்மனுஷனுக்குக் கேட்கும் திறன் இல்லை. ஆகவே, செய்கைகள் மூலம், படிப்பினையைப் புகட்டினார். அவனது நாவையும், அவனது செவிகளையும் தொட்டு, வானத்தை அண்ணாந்துப்பார்த்து, பெருமூச்சு விட்டதின் மூலம், அம்மனிதனுக்கு உதவி செய்யும்பொருட்டு, பரலோக அனுதாபம் கடந்து வந்தது என்று தெரியப்படுத்தினார்; உடனே அம்மனுஷன் மேல் ஆசீர்வாதம் கடந்து வந்தது, அவன் சொஸ்தமடைந்தான். அநேகமாக அந்த வட்டாரத்தில் இதுதான் முதலாவது அற்புதமாக இருந்திருக்க வேண்டும். மேலும், மத்தேயு அவர்கள் பதிவு செய்துள்ளது போல, ஜனக்கூட்டத்தார் இதனால் கவரப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள். இவ்வற்புதத்தை அமைதலாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நமது கர்த்தர் கொடுத்திட்ட உத்தரவானது, கட்டளையாக இராமல், தாம் விளம்பரப்படுத்தப்படுவதை விரும்பவில்லை என்ற கருத்தைத் தெரிவிப்பதாகவே உள்ளது. எனினும், விசுவாசம் வெளிப்படுத்தப்படும் போதும், கஷ்டப்படுகின்றவர்கள் அவருக்கு முன்பாகக் காணப்படும் போதும், ஆசீர்வாதம் கொடுத்திட அவர் ஒருபோதும் மறுத்ததே இல்லை. ஆகவே, பூமியின் குடிகளை ஆசீர்வதிப்பதற்கென ஏற்றவேளை வரும்போது, கர்த்தர் யாரிடமிருந்தும், எந்த ஓர் ஆசீர்வாதத்தையும் விலக்கி வைப்பதில்லை என்றும், ஆசீர்வதிக்கப்பட விரும்புகின்ற அனைவரும், அவருடைய தயவைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் நாம் கற்பிக்கப்பட்டுள்ளோம்.
கிறிஸ்துவுடன் கூடப் புதிய ஜீவனுள்ளவர்களாய் நடப்பதற்கும், அவருடைய அடிச்சுவடுகளில் நடப்பதற்குமென, அடையாளமானவிதத்தில் முன்னமே உயிர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சிருஷ்டிகளாகிய நமக்கு, நம்முடைய கண்களும், செவிகளும் திறக்கப்பட்டுள்ளபடியாலும், நமது நாவுகள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளபடியாலும், நாம் தேவனுடைய கிருபையைப் பார்ப்பதும், அனுபவிப்பதும் மாத்தரமல்லாமல், மற்றவர்களிடம் அவருடைய அன்பையும், தயவையும் குறித்துப் (நாம்) பேசவும் செய்யலாம். இப்பொழுது, அதாவது தற்காலத்தில் கர்த்தர் அருளும் சத்தியத்தைப் பற்றின விசேஷமான அறிவைப் பெற்றிருப்பவர்கள் சிலர், சத்தியம் அனைவருக்கும் உரியது அல்ல என்றும், சத்தியத்தை வழங்குவதற்கான நம்முடைய பிரயாசங்களில் நாம் யார் யாருக்கு தனிச் சிறப்புக் காண்பிக்க வேண்டும் என்பதைக் கவனிக்க வேண்டும் என்றும், நமக்கு முத்துக்கள் போன்றிருக்கும் கர்த்தருடைய இந்த மாபெரும் ஆசீர்வாதங்கள் அனைவருக்கும் உரியது அல்ல என்றும், நாம் பன்றிகளுக்கு முன்பாக, அதாவது கர்த்தருடைய தயவுகளை அறிவதற்கோ, ஏற்றுக்கொள்வதற்கோ உரிய பண்புகளை வெளிப்படுத்தாதவர்கள் முன்பாக நாம் முத்துக்களைப் போடக்கூடாது என்றும் கருத்துக்கள் கொண்டிருக்கின்றனர். ஆனால், இப்பாடத்தில் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷனுக்கு இருந்ததுபோல, இது நம்மால் அடக்கி மறைத்து வைத்துக்கொள்ள முடியாதளவுக்கு மிகவும் நல்ல செய்தியாகும்; இதைப் பற்றி (சத்தியத்தை) நாமும் அறிவிக்க விரும்புகின்றோம். ஏனெனில், இது அவ்வளவுக்கு அதிகமானவைகளை நமக்குச் செய்துள்ளது; குருடர்களாகவும், செவிடர்களாகவும் இருக்கும் அனைவரும் மாபெரும் வைத்தியனிடம் வந்து, சொஸ்தமடைய வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்; நற்செய்தியைச் சொல்வதற்கான தங்களுடைய பிரயாசங்களில் திக்கித் தடுமாறிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தினுடைய மகிமையான காரியங்களைத் தெளிவாகப் பேசத்தக்கதாக, ஆண்டவரினால் இவர்ளுடைய உதடுகளையும் தொடப் பெற்றிருக்க நாங்கள் (இப்பாடத்தின் ஆசிரியர்) விரும்புகின்றோம். இப்பாடத்தில் சொஸ்தமடைந்ததாக நாம் பார்த்துள்ள மனுஷனை ஆண்டவர் கடிந்துக்கொள்ளாதது போன்று, கேட்பதற்குச் செவிகள் இல்லாதவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கத்தக்கதாக நாம் செல்லும்பொழுதும் அல்லது பன்றி போன்றுக் காணப்பட்டும், ஆவிக்குரிய காரியங்கள் மீது விருப்பமற்றவர்களுமாய்க் காணப்பட்டும் அல்லது ஆட்டுக்குட்டியானவர் போகும் இடமெல்லாம் போகாதவர்களாய்க் காணப்பட்டும் இருப்பவர்களை, சீஷர்களாக்கிட நாம் முயற்சிக்கும் பொழுதும், அதாவது இப்படியாக நாம் செய்யத்தக்கதாக நம்முடைய வைராக்கியம் ஒருவேளை காணப்பட்டாலுங்கூட நம்மை ஆண்டவர் கடிந்துக்கொள்வதில்லை.
[R3339 : page 91]
நாம் இந்த அழியக்கூடிய சரீரத்தில் காணப்பட்டாலும், மனுஷர்கள் மத்தியில் காணப்பட்டாலும் கிறிஸ்துவுடன், நம்முடைய மனதின் ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டுள்ள நாம் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதும், நாம் கர்த்தருக்கு ஒப்பாக, காணப்பட்டு, அவர் இருக்கிற வண்ணமாக அவரைத் தரிசித்து அவருடைய மகிமையில் பங்கடைந்து, மகிமையான இராஜ்யத்தின் கிருபைகளை ஏற்றுக்கொள்கிறவர்களுக்குக் குணமாக்குதலையும், ஜீவனுக்கான ஆசீர்வாதங்களையும் அளிப்பதில் அவரோடு இணைந்துக் காணப்படத்தக்கதாக, முதலாம் உயிர்த்தெழுதலின் மகிமையான மாற்றத்தை நாம் எதிர்நோக்கினவர்களாக இருக்க வேண்டும் என்பதும்தான் இப்பாடத்தின் முக்கியப் பகுதியாகும்.