R2715 – அநீதியுள்ள உக்கிராணக்காரன்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R2715 (page 315)

அநீதியுள்ள உக்கிராணக்காரன்

THE UNJUST STEWARD

லூக்கா 16:1-13

“”தேவனுக்கும் உலகபொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது” (வசனம் 13).

பரிசேயனுடைய வீட்டில் இயேசு விருந்துக்கு அழைக்கப்பட்டபோது அவர் பேசின முந்தின உவமைகள் எல்லாம் விசேஷமாகப் பரிசேயர்களுக்குப் பேசப்பட்டாலும், இந்த உவமையும், இதனை பின்தொடரும் ஐசுவரியவான் மற்றும் தரித்திரன் (டைவிஸ் மற்றும் லாசரு) பற்றின உவமையும், பரிசேயர்களுக்கு என்று மாத்திரம் பேசப்படாமல், லூக்கா 16:1- ஆம் வசனத்தின்படி பந்தி அமர்ந்திருந்த பரிசேயர்களுக்கும், சீஷர்களுக்கும் பேசப்பட்டது. முதல் மூன்று உவமைகளும் பரிசேயர்களுக்கு மாத்திரமே பேசப்பட்டு, சீஷர்களுக்காகப் பேசப்படாமல் இருந்ததற்கான காரணம், தாங்கள், நல்ல மேய்ப்பனினால் கண்டுபிடிக்கப்படுவதில் மகிழ்ச்சிக் கொள்ளும் “”காணாமற்போனவர்கள்” மத்தியில் காணப்படுவதாக சீஷர்கள் உணர்ந்திருந்ததினால், பாவப்பட்ட வகுப்பாருக்கு எதிராக எவ்விதமான தவறான அபிப்பிராயமும் சீஷர்கள் கொண்டிராததினால், சீஷர்களுக்கு இப்படியான அறிவுரைகள் தேவைப்படவில்லை என்பதேயாகும்.

இந்த உவமையில் இடம்பெறும் உக்கிராணக்காரன் முந்தின உவமையில் இடம்பெற்ற மூத்தகுமாரனுக்கு இணையாகவும், பின்வரும் உவமையில் இடம்பெறும் ஐசுவரியவானுக்கும் இணையாகவும் காணப்படுகின்றான். அதிலும் விசேஷமாக இந்த உக்கிராணக்காரன், பரிசேயர்களுக்கும், வேதபாரகர்களுக்கும் அடையாளமாய் இருக்கின்றான்; இவர்கள் மோசேயையும், மோசேயை மத்தியஸ்தராக பெற்றிருந்த நியாயப்பிரமாண உடன்படிக்கையும், மோசே உக்கிராணக்காரராய் இருந்த நியாயப்பிரமாண உடன்படிக்கையினுடைய ஆசீர்வாதத்தையும் அடையாளப்படுத்தும் “”மோசேயினுடைய ஆசனத்தில்” உட்கார்;ந்திருக்கின்றனர் என்று நமது கர்த்தர் வேறொரு தருணத்தில் கூறினார்; இப்பொழுதும், இந்த மோசேயினுடைய ஆசனத்தில், மோசேயினுடைய பிரதிநிதிகளாக, இந்த உக்கிராணக்காரர்கள் காணப்படுகின்றனர். எவைகள் மீது இந்த உக்கிராணத்துவம் காணப்படுகின்றது? இக்கேள்வியை அப்போஸ்தலனாகிய பவுலும் கேள்விகேட்டு, பதில் கூறுகின்றார் . . . “”யுதனுடைய மேன்மை என்ன? . . . அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே” என்கிறார். தேவனைப் பற்றின அறிவும், நிழலான நீதிமானாக்கப்படுதலும், அவருடன் நிழலான ஒப்புரவாகுதலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களும் இவர்களுக்கே ஒப்புவிக்கப்பட்டது” (ரோமர் 3:1-2).

மோசேக்குள்ளும், அவருக்கு பின் அவர் ஆசனத்தில் வந்தவர்களுக்குள்ளும் அடையாளப்படுத்தப்படும் யூதர்கள், தங்களுடைய உக்கிராணத்துவத்தில் தவறிப்போனார்கள்; இவர்களுடைய பராமரிப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்ட, தேவனுடைய கிருபைகளைத் திருப்திகரமான விதத்தில் பயன்படுத்துவதில் தவறிப்போனவர்களாகிவிட்டனர். இப்படியாக இவர்கள் தவறிப்போனதற்கு, இவர்கள் முற்றிலுமாக குற்றம் சாட்டப்படமுடியாது, ஏனெனில் அப்போஸ்தலர் பவுல் சுட்டிக்காண்பித்துள்ளது போன்று, இவர்களும் விழுகையின் காரணமாக பெலவீனர்களாகவும், இப்படிப்பட்டதான மாபெரும் பொறுப்பை நிர்வகிக்க திராணியற்றவர்களாகவும் காணப்பட்டனர்; இவர்களிடம் உக்கிராணத்துவம் கொடுக்கப்பட்ட போதே இவர்கள் தவறிப்போவார்கள் என்று தேவன் அறிந்திருந்தார்; இவர்கள் நியாயப்பிரமாணத்தை முழுமையாய்க் கைக்கொள்ளுவதில் தவறிப்போவார்கள் என்று தேவன் அறிந்தருந்தார். ஏற்றவேளையில் இவர்களை உக்கிராணத்துவத்திலிருந்து நீக்கிவிட்டு, மேசியாவிற்குக் கொடுக்க வேண்டும் என்று தேவன் நோக்கம் கொண்டிருந்தார்.

இந்தப் பதவிமாற்றம் செய்வதற்கான நேரம் இப்பொழுது வந்துவிட்டது; ஒரு புதிய யுகம் ஆரம்பிக்கவிருப்பதை தெரிவித்து, இஸ்ரயேலின் பிரதிநிதிகள், தங்களுடைய உக்கிராணத்துவம் பற்றின கணக்கினை ஒப்புவிப்பதற்கு, தேவன் இவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் எப்படி ஞானமாய்ச் செயல்பட வேண்டும் என்பது பற்றியே, நமது கர்த்தர் இந்த உவமையின் மூலமாக இவர்களுக்குச் சுட்டிக் காண்பிக்க விரும்பினார். இம்மாதிரியான ஒரு சூழ்நிலையில் ஒரு பூமிக்குரிய உக்கிராணக்காரன் என்ன செய்வான் என்பதைக் கர்த்தர் இவர்களுக்குக் காண்பித்துக் கொடுத்தார்; மற்றும் இப்படியாகச் செயல்படுவதில் ஞானம் விளங்கும் என்பதை, “அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்” என்று கூறி தெரிவித்தார் (வசனம் 8). அதாவது “”தெய்வீகக் குணலட்சணம் மற்றும் திட்டம் பற்றின ஒளியின் விஷயத்தில் மற்றவர்களைக் காட்டிலும் மிகவும் கிருபைப் பெற்றுள்ள நீங்கள், உங்கள் பூமிக்குரிய விஷயங்களில் நீங்கள் உக்கிராணக்காரனாய் இருக்கும்போது ஞானமாய்ச் செயல்படுவதைப் போன்று ஞானமாய் நடந்துக்கொள்ளவில்லை” என்ற விதத்தில் கர்த்தர் கூறினார்.

முற்காலத்து உக்கிராண சிலாக்கியங்களுக்கான வாய்ப்பின் எல்லைகள் பற்றின தெளிவான புரிந்துக்கொள்ளுதல், அநேகமான ஜனங்களுக்கு இல்லை. இப்படிப்பட்டதான ஒரு பணி, இன்று நாகரிகமடைந்த ஜனங்கள் மத்தியில் இல்லை. உக்கிராணத்துவ பணி என்பது, நம்பிக்கைக்குரிய பணியாகும். எஜமானால் தன்னுடைய பொருட்களைக் கொண்டு செய்ய முடிகிற அனைத்தையும் மற்றும் எதையும் செய்வதற்கான சுதந்திரத்தையும், முழு அதிகாரத்தையும் உக்கிராணக்காரன் பெற்றவனாய் இருக்கிறான். அவன் தன்னுடைய பொறுப்பின் கீழ்க் காணப்படும் பொருட்களை அன்பளிப்பாக வழங்கலாம் அல்லது கடன்களை ரத்துச் செய்யலாம் அல்லது வேறு எந்த விதத்திலும் அப்பொருட்களைப் பயன்படுத்தலாம், மற்றும் இப்படியாகச் செய்வதிநிமித்தம் அவன் நியாயப்பிரமாணத்திற்கு முன்பாக குற்றவாளியாகுவதில்லை, காரணம் உக்கிராணத்துவத்தினுடைய பணியின் தன்மையானது, அவன் தன்னுடைய எஜமானுக்கு முற்றும் முழுயைமாய்ப் பிரதிநிதி போல் செயல்படுவதாகும். உக்கிராணக்காரன் உண்மையற்றவனாய் இருந்தால், எஜமான் அவனைப் பணி நீக்கம் செய்யலாம்; இப்படியாகப் பணி நீக்கம் செய்வது மாத்திரமே, அவனுக்கு அளிக்கப்படும் ஒரே தண்டனையாக இருக்கும்; காரணம் அவனை உக்கிராணக்காரனாக்கினபோது, உக்கிராணக்காரன் தன்னுடைய கணிப்பின்படி நடப்பதற்கு, எஜமான் முழுமையான அதிகாரம் கொடுத்தவனாய் இருந்தார்.

அநீதியுள்ள உக்கிராணக்காரன் பற்றின உவமையில் உக்கிராணக்காரன், தன்னுடைய எஜமானுடைய காரியங்களை, தான் அநீதியான விதத்திலும், திருப்திகரமற்ற விதத்திலும், பூரணமற்ற விதத்திலும் பயன்படுத்தினதில் அநீதியுள்ளவனாய் இருக்க, சூழ்நிலையை உணர்ந்துக் கொண்ட மாத்திரத்தில், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கோ அல்லது தான் சரியாக அனைத்தையும் செய்துள்ளதாக சாதிப்பதற்கோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் தன்னுடைய கணக்கை ஒப்புவிப்பதற்கு முன்னதாக, தன்னுடைய எஜமானிடம் கடன்பட்டவர்கள் சிலருக்கு அவர்களுடைய கடன்களின் சில பாகங்களை மன்னித்து விடுவதன் மூலமாக, இரக்கத்துடன் நடந்துக் கொண்டவனாகக் காணப்பட்டான் (இது ஓர் ஞானமான செய்கையாகும்; உதாரணத்திற்குக் கடனாளிகளால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், கடனாளிகளை, [R2716 : page 316] திவால் சட்டமானது கடனிலிருந்து விடுவிக்கின்றது; இதைப் போலவே கடனாளி கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமல் இருப்பதைக் காணும் கடன் கொடுத்தவர்கள், முழுக்கடன் தொகையில், 60%, 50%, 40% தொகையை மாத்திரம் தங்களுடைய நன்மைக்காகப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொள்கின்றனர். யூதர்களுடைய யூபிலி வருடமும், கடனாளிகளை அனைத்துக் கடன்களிலிருந்து விடுவிக்கின்றதாய் இருக்கின்ற காரியங்கூட, இன்றைய திவால் சட்டத்தில் உள்ள ஞானமான வியாபார நுட்பத்திற்கு இசைவாசவே உள்ளது). உக்கிராணக்காரன் கடைசியில் செய்யும் இக்காரியத்தினிமித்தமாக, அவன் உவமையில் அநீதியுள்ள உக்கிராணக்காரன் என்று கூறப்படாமல், மாறாக முற்காலங்களில், அவன் தன்னுடைய எஜமான் எதிர்ப்பார்த்த விதத்தில் உக்கிராணத்துவம் செய்யாததினாலேயே, அநீதியுள்ள உக்கிராணக்காரன் என்று உவமையில் கூறப்பட்டுள்ளான்.

யூத ஜனங்களுக்கு, அதிலும் விசேஷமாக மோசேயினுடைய ஆசனத்தில் வீற்றிருந்து, காரியங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருந்து, நியாயப்பிரமாணத்திற்கான சரியான விளக்கம் எது என்றும், எது இல்லை என்றும் தீர்மானிக்கின்றவர்களுக்கு, இப்பொழுது உவமையைப் பொருத்தும் விதத்தில், ஒருவேளை இவர்கள் பூமிக்குரிய உக்கிராணக்காரர்கள் போன்று ஞானமுள்ளவர்கள் என்றால், இப்படியாகவே தங்களுடைய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நமது கர்த்தர் சுட்டிக்காண்பித்தார். இவ்வாறு இவர்கள் எப்படிச் செய்யக்கூடும்? ஒருவேளை இவர்கள் தாங்கள் நியாயப்பிரமாணத்தின் கீழ், தேவன் எதிர்ப்பார்த்தவைகளை நிறைவேற்றவில்லை என்ற உண்மையை உணர்ந்துக் கொண்டு விட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம்; ஒருவேளை யுக மாற்றத்திற்கான காலமும் வந்துவிட்டது என்றும், இவர்கள் தங்கள் கணக்கை ஒப்புவிக்க வேண்டும் எனத் தேவன் கேட்கின்றார் என்றும், புதிய உக்கிராணக்காரன் காரியங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வார் எனத் தேவன் அறிவிக்கின்றார் என்றும், உணர்ந்துக்கொண்டார்கள் என வைத்துக்கொள்வோம்; இம்மாதிரியான ஒரு சூழ்நிலையின் கீழ், மோசேயின் ஆசனத்தில் இருக்கும் இவர்கள் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும்? இந்த உவமையினுடைய படிப்பினைக்கு இசைவாக, இவர்கள் அவர்களுக்குள்ளாக பின்வருமாறு கூறியிருந்திருக்க வேண்டும் என்று நாம் பதிலளிக்கின்றோம், அதாவது ……….. நாம் தேவனுடைய நியாயப்பிரமாணத்தை முழுமையாய்க் கைக்கொள்ளவில்லை என்பதை நாமே அறிவோம்; உண்மைத்தான் அப்படி முழுமையாய்ச் செய்வது என்பது, நம்முடைய திராணிக்கு அப்பாற்பட்ட காரியமே. யுக மாற்றம் சீக்கிரம் சம்பவிக்கவிருப்பதையும் நம்மால் உணரமுடிகின்றது; மற்றும் நாம் கணக்கு ஒப்புவிக்க அழைக்கப்படுகின்றோம் என்பதையும் நம்மால் உணர முடிகின்றது; தேவனுடைய நியாயப்பிரமாணம் எதிர்ப்பார்க்கும் விஷயத்தைச் செய்வது மற்றும் பிரமாணத்தின் கீழாக இருந்து நித்திய ஜீவனை அடைவது மற்றும் தேவன் நமக்குக் கொடுத்திட்ட நன்மைகள் அநேகவற்றைப் பயன்படுத்துவது தொடர்புடைய விஷயத்தில் நாம் தவறியே உள்ளோம் என்று மாத்திரமே, தேவனுக்கு முன்பாக நம்மால் ஒத்துக்கொள்ள முடியும். நாம் சில விஷயங்களில், நமக்குக் கொடுக்கப்பட்ட நன்மைகளைச் சரியாய்ப் பயன்படுத்தியுள்ளோம்; ஆனால் நமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ (உலகத்தில் எதையாகிலும் சாதிக்கும் விஷயத்திலோ அல்லது) நித்திய ஜீவனைச் சம்பாதிப்பதிலோ முழுமையாய்த் தோல்வியடைந்தே உள்ளோம். எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை என்பதை நம்மால் மறுக்கமுடியாது. நம்முடைய உக்கிராணத்துவம் தோல்வி அடைந்துள்ளது என்பதும், நாம் பதவி நீக்கம் பண்ணப்படப் போகின்றோம் என்பதும், சீக்கிரத்தில் நடைப்பெறப் போவதினால், நாம் இந்தப் பாவிகளிடம் (ஊதாரி மகன் வகுப்பாரிடம்) அன்புடனும், இரக்கத்துடனும், தயாளத்துடனும் நடந்துக்கொள்வதே விவேகமான விஷயமாய் நமக்கு இருக்கும்; அவர்கள் நம்மை விட மிகவும் பாவிகளாக இருக்கின்றனர் என்று தாக்கிப் பேசுவதற்குப் பதிலாக, அவர்களிடம் வெளிப்படையாகப் பேசலாம், அதாவது “”எங்களால் இந்தப் பூரணமான தேவனுடைய நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள முடியவில்லை என்பதையும், உங்களாலும் முடியவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம்; ஆனால் முற்றும் சோர்வடைந்து தளர்ந்துப் போவதற்குப் பதிலாக, உங்களால் முடிந்தமட்டும் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடியுங்கள்; உங்களால் நியாயப்பிரமாணத்தைப் பூரணமாய்க் கைக்கொள்ள முடியாது என்றும், உங்களால் முடிந்த மட்டும், உங்களுடைய சந்தர்ப்ப, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, 50% அல்லது 80% நியாயப்பிரமாணத்தை நீங்கள் கைக்கொள்வதையே நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம் என்றும் ஒத்துக்கொள்ளுவதின் மூலமாக, நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதிலான உங்களுடைய கடனில் ஒரு பகுதியை ரத்து நாங்கள் செய்வோம் எனப் பேசலாம்” என்பதேயாகும்.

பரிசேயர்களும், வேதபாரகர்களும் இப்படியாகச் செய்திருப்பார்களானால், இவர்கள் தங்களுக்கும், ஜனங்களுக்கும் இடையே இருந்த பிளவைச் சரிச் செய்திருப்பார்கள்; மற்றும் இவர்கள் தங்களாலும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள முடியவில்லை என்று ஒத்துக்கொள்வதில் விளங்கும் நேர்மையானது, இவர்களுக்கு நன்மைக்கு ஏதுவாக இருந்திருக்கும், அதாவது புதிய யுகம் தொடர்புடைய விஷயத்தில் நன்மைக்கு ஏதுவாக இருந்திருக்கும். இப்படியாக இவர்கள் வெளிப்படையாய் ஒத்துக்கொள்வதும், மற்றவர்களுக்காய் அனுதாபம் கொள்வதும், மற்றவர்களுடைய பாரம் சுமப்பதில் உதவியளிப்பதுமான விஷயங்களைச் செய்திருப்பார்களானால், இவர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமான இருதய நிலைமையை அடைந்திருப்பார்கள். இன்னுமாக இவர்களால் பாவிகள் என்று ஒதுக்கித் தள்ளப்பட்ட கீழ்மட்ட வகுப்பாரும், இவர்களிடத்தில் அன்பாயிருந்திருப்பார்கள்; மற்றும் இவைகளின் காரணமாக, இவர்களது ஆட்சியைக் கவிழ்த்துப் போடத்தக்கதாக இவர்கள் மீது வரவிருக்கும் உபத்திரவக்காலத்தில், ஜனங்களுடைய அனுதாபத்தையாகிலும் கொஞ்சம் இவர்கள் தக்கவைக்கப் பெற்றிருந்திருப்பார்கள்.

ஆனால் இப்படியாகப் பரிசேயர்களும், வேதபாரகர்களும் செயல்பட்டார்களா? இல்லவே இல்லை. மாறாக இவர்கள் தங்களுடைய காப்பு நாடாக்களை இன்னும் அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கிக் கொண்டு, தங்கள் இருதயம் மற்றும் ஜீவியத்தில் பரிபூரணம் இருக்கின்றது என அதிகமாய் அறிவித்துக் கொண்டும், தங்களைத் தாங்களேயும், மற்றவர்களையும் வஞ்சித்துக் கொள்கின்றவர்களாய் இருந்தார்கள். தாங்கள் என்றென்றும் தேவனுடைய கிருபைகளுக்கு உக்கிராணக்காரர்களாய் இருக்கப் போவதாகப் பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள். பூரணமான நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள முடியவில்லை என்று ஒத்துக்கொள்ளுகிற ஜனங்களுடைய தோள்களிலிருந்து, நியாயப்பிரமாணத்தினுடைய தீர்ப்புகளையும், பாரங்களையும் இறக்கி வைப்பதற்குப் பதிலாக, இந்தப் பரிசேயர்களும், வேதபாரகர்களும், தங்களுடைய சுண்டு விரலினால் கூட உயர்த்துவதற்கு உதவிப் புரியாத கடினமான பாரங்களை, ஜனங்கள் மேல் சுமத்துகிறவர்களாய் இருந்தார்கள்; “”பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்” (மத்தேயு 23:1-4).

இப்படியாகச் செய்வதின் மூலமாக, இவர்கள் இன்னும் இன்னுமாக மாய்மாலக்காரர்களாகவும், கடின இருதயத்தார்களாகவுமாகி, வெளியில் அழகாய் அலங்கரிக்கப்பட்டதும், ஆனால் உள்ளே சகல அசுசிகளையும், நேர்மையின்மையையும், மாய்மாலத்தையும் கொண்டிருக்கும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளென இருந்தார்கள்; இவர்கள் தாங்கள் நியாயப்பிரமாணத்தை மீறுவதாக அறிந்திருந்த போதிலும், வெளியில் தங்களைப் பூரணர்கள் என்று கூறி பெருமையடித்துக் கொண்டிருந்தனர். இது பரிசேயர்களுக்கு மாத்திரம் சொல்லப்படாமல், சீஷர்களுக்கும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது என்பது, இந்த உவமை எவ்வாறு பொருந்துகின்றது என்றும், எவ்வளவு ஞானமற்ற விதத்தில் இந்த உக்கிராணக்காரன் செயல்பட்டுள்ளான் என்றும் சீஷர்கள் கவனிக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. பந்தியில் இருக்கும் போதுகூட, அந்தப் பொருளாசைக்காரரான பரிசேயர்கள் ஓரளவுக்கு உவமையினுடைய போக்கை உணர்ந்தவர்களாக, பரியாசம் பண்ணினார்கள். ஆனால் நமது கர்த்தர் பாடத்தை இவர்களுக்கு வலியுறுத்தும் வண்ணமாக, லூக்கா 16:15-ஆம் வசனத்தினுடைய வார்த்தைகளைக் கூறினார்; அதாவது “”நீங்களே அந்த அநீதியுள்ள உக்கிராணக்காரர்; சீக்கிரத்தில் உங்களுடைய தள்ளப்படுதல் வெளியரங்காமாகும்” என்ற விதத்தில் இயேசு பேசினார்; “”(நீங்கள் பிரதிநிதியாக இருக்கும்) நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன [R2716 : page 317] வாக்கியங்களும் யோவான் வரைக்கும் (தேவனால் அங்கீகரிக்கப்பட்டு) வழங்கி வந்தது; அதுமுதல் தேவனுடைய இராஜ்யம் (புதிய யுகம்) சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது. யாவரும் பலவந்தமாய் அதில் (பிரவேசிக்க வேண்டும்) பிரவேசிக்கிறார்கள்” (லூக்கா 16:16). “”மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் புட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை” (மத்தேயு 23:13). உங்களுடைய அமைப்பானது மனைவி, கணவனுக்குக் கட்டுப்பட்டு இருப்பது போன்று மோசேயுவுக்கும், நியாயப்பிரமாணத்திற்கும், (அதாவது நியாயப்பிரமாணம் காணப்படுவது வரைக்கும்) கட்டுப்பட்டு இருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். நீங்கள் அடையாளப்படுத்தும் நியாயப்பிரமாணம் மரித்துப்போவது என்பது, இஸ்ரயேல் விடுதலையாகுவதற்கும், புதிய உடன்படிக்கையின் மூலம், மேசியாவுடன் இணைவதற்கு (திருமணம் பண்ணிக்கொள்வதற்கும்) ஆயத்தப்படுவதற்கும், அவசியமாய் இருக்கின்றது என்ற விதத்தில் இயேசு கூறினார் (ரோமர் 7:1-4; லூக்கா 16:17-18).

இந்த உவமையானது இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய முடிவு பகுதிக்கு விசேஷமாய் பொருந்துவதாகக் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை; ஆனாலும் மாம்சீக இஸ்ரயேலர்களும், அவர்களின் அறுவடைகாலமும், ஆவிக்குரிய இஸ்ரயேலர்களுக்கும், இந்த யுகத்திற்கும், தற்போதைய அறுவடை காலத்திற்குமான உருவகமாக இருக்கின்றது என்று மற்ற வேதவாக்கியங்கள் மூலமாய் நாம் அறிந்துக்கொள்கின்றோம்; ஆகையால், நமது கர்த்தருடைய நாட்களில் உள்ள அநீதியுள்ள உக்கிராணக்காரனுடைய நிலைமைக்கும், இந்தத் தற்போதைய காலத்தில் அப்படியாக இருக்கும் ஒரு வகுப்பாருக்கும் இடையே உள்ள சில இணைகளைப் பார்ப்பதில் தவறில்லை. மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வகுப்பார் போன்று, இன்று யார் காணப்படுகின்றார்கள் என நாம் பார்க்கையில், சுவிசேஷ யுக சபை தொடர்புடையவர்களாக, கிறிஸ்துவினுடைய ஆசனத்தில் ஒரு வகுப்பார் உட்கார்ந்து கொண்டிருப்பதை நாம் கண்டுபிடிக்கின்றோம். இந்த ஒரு வகுப்பாருக்குள், மூப்பர்கள், ஊழியக்காரர்கள், கண்காணிகள், ஓய்வுநாள் பள்ளி ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள், தலைமைக் குரு முதலானவர்கள் காணப்படுகின்றனர். இவர்களும் தங்கள் மீது ஒரு யுக மாற்றம் வரவிருக்கின்றது என்றும், முற்காலங்களிலுள்ள தங்களுடைய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசப் பிரமாணங்கள் பற்றிக் கேள்வி எழுப்பப்படுகின்றது என்றும், தாங்கள் கணக்கு ஒப்புவிக்க அழைக்கப்படுகின்றார்கள் என்றும், உணர்ந்துக்கொள்கின்றனர். கணக்கு முகஸ்துதிக்கென ஒப்புவிக்க முடியாது என்றும், ஒருவேளை தேவனுக்குத் தெரிந்திருக்கும் முழு உண்மையும் ஜனங்களுக்குத் தெரிந்துவிட்டால், தாங்கள் அநேக விதத்தில் தங்களுடைய உக்கிராணத்துவத்தில் உண்மையற்றவர்களாகவும், கடமையில் தவறிப்போனவர்களாகவும் இருந்த காரியம் கண்டுபிடிக்கப்படும் என்றும் உணர்கின்றனர். இவர்கள் ஆபத்தைக் கண்டு அஞ்சுகின்றனர்; இவர்கள் ஜனங்களுடைய முறுமுறுத்தல்களையும், விசுவாசப்பிரமாணங்கள் பற்றின கேள்விகளையும், அமைதிப்படுத்திட முனைந்து கொண்டிருக்கின்றனர். கர்த்தர் அவருடைய நாட்களில் வாழ்ந்திட்ட உக்கிராணக்காரர்களைக் குறித்துப் பேசிட்டக் காரியங்கள், அதாவது ‘நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார் மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது” என்பது இன்றுள்ள இவர்களுக்கும் பொருந்துகின்றது (15-ஆம் வசனம்).

கர்த்தருடைய ஜனங்கள் திரளானவர்கள் தொடர்புடைய விஷயத்தில் உக்கிராணக்காரர்களாய் இருக்கும் பெயர்ச்சபைகளின் இந்தப் பிரதிநதிகள், பரிசேயர்கள் போலவே, அவர்களுடைய ரூபத்திலேயே, உண்மையை ஒத்துக்கொள்வதற்குப் பதிலாக, துணிவு கொண்டுள்ளனர். உதாரணத்திற்கு விசுவாச பிரமாணங்கள் பற்றிக் கேள்வி எழுப்பபடும் விஷயத்தில், வெஸ்ட் மினிஸ்டர் விசுவாச அறிக்கையை (westminister confession of faith) திருத்தும் நோக்கத்தில் மறுஆய்வு பண்ணும்படிக்கு விண்ணப்பம் வைக்க முயன்றவர்களே, இப்படிச் செய்வது அனைத்தையும் வெளியரங்கமாக்கிவிடும் என்றும், தாங்கள் முற்காலத்தில் தப்பறையில் காணப்பட்டுள்ளதையும், தெய்வீக வார்த்தைக்கான தங்களுடைய விளக்கத்தில் தாங்கள் குறைவுள்ளவர்களாக இருந்ததையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எண்ணினார்கள்; மற்றும் இது ஜனங்கள் மத்தியிலான தங்களுடைய கனத்தைக் குறைத்துவிடும் என்று உணர்ந்தார்கள்; ஆகவே மறுஆய்வு பண்ணவேண்டும் என்று வேண்டிக்கொண்டவர்களே, இப்பொழுது இந்த விசுவாச அறிக்கை சிறப்பாய் இருக்கின்றது என்றும், இதில் தங்களுக்கு முழுமையான திருப்தி இருக்கின்றது என்றும், இதில் எந்த மாற்றமும் செய்ய அவசியமில்லை என்றும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இவர்கள் மனுஷர் மத்தியில் உயர்வாய் மதிக்கப்படுவதற்கு விரும்புகின்றபடியால், இவர்கள் தாங்கள் யாரிடம் இந்த உக்கிராணத்துவத்தைப் பெற்றிருக்கின்றார்கள் என்பதையும், யார் அதைத் தங்களிடமிருந்து எடுத்தக்கொள்ளப் போகிறார் என்பதையும் முற்றிலுமாக மறந்துப்போய்விட்டனர்.

சுவிசேஷ யுகத்தினுடைய இந்த உக்கிராணக்கார வகுப்பாருக்கான, சரியான செயல்பாடு என்னவாக இருக்கும்? யூத உக்கிராணக்காரர்களுக்கு என்ன நமது கர்த்தர் பரிந்துரைத்தாரோ, அதையே இவர்களும் செய்வது சரியான காரியமாக இருக்கும் என்றே நாம் பதிலளிக்கின்றோம்; அதாவது இவர்கள் விசுவாசப் பிரமாணங்களில் உள்ள தப்பறைகளையும், தெய்வீக வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுக்கும் விஷயத்திலுள்ள தங்களுடைய குறைவுகளையும், தேவனுடைய வார்த்தைகளைச் சரியாய்ப் பயன்படுத்துவதிலும், மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களைச் சரியாய்ப் பொருத்திப் பார்ப்பதிலும், கடந்த காலத்தில் தாங்கள் தவறிய விஷயங்களையும் ஜனங்களிடம் ஒத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் இப்படியாக தங்களுடைய [R2717 : page 317] சொந்த தப்பறைகளையும், குறைவுகளையும் ஒத்துக்கொள்வதோடு கூட, இவர்கள் காரியங்களைத் திருத்தம் செய்து, ஜனங்களால் இயன்றதைச் செய்யும் நிலைக்கு, அவர்களைக் கொண்டு வரவேண்டும். உதாரணத்திற்கு, இவர்கள் பின்வருமாறு ஜனங்களிடம் கூற வேண்டும், “”நீங்கள் தேவனுக்கு எவ்வளவு கடன்பட்டுள்ளீர்கள் என்றும், உங்கள் மீது என்ன தண்டனை வருகின்றது என்றும், நாங்கள் உங்களிடம் கூறினோம்? உங்களிடம், நித்திய காலத்திற்குமாகிய சித்திரவதை எனும் தண்டனையை நாம் கூறியிருந்திருந்தோம் என்றால், அது தவறு என்று இப்பொழுது எண்ணிக் கொண்டு, உட்கார்ந்து “”நீதியான பலனே/விளைவே கிடைக்கும்” என்று எழுதுங்கள். ஒருவேளை யூதர்களுக்கான நியாயப்பிரமாணத்தில் இடம்பெறும் பத்துக் கற்பனைகளுக்கு ஏற்பவே, நீங்கள் தேவனுக்குக் கடமைப்பட்டிருப்பதாகவும், இவைகளையும் நீங்கள் முற்றும் முழுமையாகப் பூரணமாய்க் கடைபிடிக்கவில்லையெனில், உங்களுக்கு நித்திய ஜீவனுக்கான வாய்ப்பு இல்லை என்று நாங்கள் தெரிவித்தோமா? உங்கள் விசுவாசத்தினுடைய இந்த அம்சத்தைத் திருத்தம் செய்துகொண்டு, இதற்குப் பதிலாக, புதிய உடன்படிக்கையின் கீழ், தேவனுக்கென்று தங்களை அர்ப்பணித்துள்ளவர்களுடைய மிகுந்த பூரணமற்ற கிரியைகளை தேவன் ஏற்றுக்கொள்கின்றார் என்று எழுதுங்கள்; அதுவும் இந்தப் பூரணமற்ற கிரியைகளே, தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களால் செலுத்த முடிந்த சிறந்த விஷயங்களாகவும், தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் வாங்கிக் கொண்டவரும், அன்பு செய்தவருமானவருடைய நாமத்திலும், அவருடைய புண்ணியத்திலும் ஏறெடுக்கப்பட்டதாகவும் இருக்கும்போது, தேவன் அதை ஏற்றுக்கொள்கின்றார் என்றும் எழுதுங்கள்” என்பதேயாகும்.

ஒரு வேளை இக்காலத்திலுள்ள உக்கிராணக்காரர்கள் இப்படியாகச் செயல்பட்டிருப்பார்களானால், இவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்காலத்தில் மதிக்கப்பட்டிருந்திருப்பார்கள்; ஆனால் இவர்கள் இப்படியாகச் செயல்படாமல் இருப்பதினால், இவர்கள் மாய்மாலக்காரர்கள் என்றும், மகா உபத்திரவக் காலத்திற்குள்ளாகவம், அவநம்பிக்கை எனும் குழிக்குள்ளாகவும் இவர்களை நம்பியிருந்த மந்தைகளை இவர்கள் தவறாய் வழிநடத்தும், குருடான வழிகாட்டிகள் என்றும், இழிவுபடுத்தும் காலம் நிச்சயமாய் வந்து கொண்டிருக்கின்றது.

இந்த உவமையானது 8-ஆம் வசனத்துடன் நிறைவடைகின்றதாக கருதப்படுகின்றது; இதற்குப் பின்னர் இடம்பெறும் அறிவுரைகள் வேறே காரியம் பற்றிப் பேசுகிறதாகவும், விசேஷமாகக் கர்த்தருடைய போதனைகளை ஏற்றுக்கொண்டுள்ள, அவருடைய சீஷர்களுக்குப் பேசப்பட்டதாகவும் இருக்கின்றது.

தேவனுக்கும், உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது

பின்னர் இடம்பெறும் வசனங்கள், இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்வது கூடாத காரியமாக இருக்கின்றது என்பது பற்றியதாகும். உலகப்பொருள் என்பது, பூமிக்குரிய ஐசுவரியங்களையும், ஆஸ்தியையும் மாத்திரம் குறிக்காமல், மனுஷர் மத்தியிலான கனம் முதலியவற்றையும் குறிக்கின்றதாகவும் இருக்ககின்றது; இதுவே பரிசேயர்கள் சரியான நடவடிக்கையை எடுப்பதற்கும், தங்களுடைய தவறை ஒத்துக்கொள்வதற்கும், இரக்கத்தை நாடவும், இரக்கத்தை அடைவதற்கும் அவர்களுக்கு இடையூறாக இருந்தது. உலகப்பொருட்கள் என்பது, கர்த்தருடைய சீஷர்களாகுவதற்கு விரும்பும் அனைவருக்கும் மாபெரும் இடையூறான ஒன்றாகவே இருக்கின்றது. உலகப்பொருள் என்பது, அது சுயமாகவோ (அ) ஆஸ்தியாகவோ (அ) கீர்த்தியாகவோ (அ) அந்தஸ்தாகவோ (அ) மனுஷர் மத்தியிலான கனமாகவோ (அ) இவையனைத்துமாகவோ (அ) இவைகளில் ஒன்றாகவோ இருக்கலாம். இதை வணங்குகிற ஒருவன், ஒரே நேரத்தில் உலகப்பொருளையும் வணங்க முடியாது, அதேசமயம் தேவனை உண்மையாய் வணங்குகிறவனாகவும், கிறிஸ்துவினுடைய உண்மையான பின்னடியானாகவும் இருக்கவும் முடியாது; ஏனெனில் தேவனும், உலகப்பொருளும், நம்முடைய இருதயங்களுக்கு [R2717 : page 318] முன்னதாக எதிரெதிரானதாக இருக்கின்றது. நாம் நமது அன்பையும், கவனத்தையும் கூறுபோட்டு, ஒரு பாதியைத் தேவனுக்கும், அவருடைய ஊழியத்திற்கும், மற்றும் மற்றப் பாகத்தை உலகப்பொருளுக்கும் கொடுக்க முயற்சித்தால், அது தேவனுக்கும் திருப்திகரமாய் இராது, உலகப்பொருளுக்கும் திருப்திகரமாய் இராது, நமக்கும் திருப்திகரமாய் இராது.

ஆகையால் நாம் சுயத்திற்காகவும், பூமிக்குரியவைகளுக்காகவும் வாழப்போகிறோமா அல்லது எல்லாவற்றையும் துறந்து, இவைகளைத் தேவனுக்கான நன்மைக்கேதுவான விஷயங்களுக்கும், பரத்திற்கடுத்த நலனுக்கான விஷயங்களுக்கும் பலிச்செலுத்தப் போகிறோமா என்று நாம் தீர்மானிக்க வேண்டும். உலகப்பொருளை/செல்வத்தை வணங்குகிறவர்களுக்குத் தற்கால ஜீவியம் தொடர்புடைய விஷயத்தில், பூமிக்குரிய செழிப்புச் சார்ந்த சில நன்மைகள் காணப்படலாம், ஆனால் உலகப்பொருளினால்/செல்வத்தினால் நித்திய ஜீவனைக் கொடுக்க முடியாது. நித்திய ஜீவன் என்பது, தேவனுடைய அன்பளிப்பாகும்; மேலும் தேவனுடைய அன்பளிப்பை/ஈவைப் பெற்றுக்கொள்ளப் போகிறவர்கள், தேவனுடைய நண்பர்களாய், தேவனுடைய பிள்ளைகளாய்க் காணப்பட வேண்டும். இப்படிப்பட்டவர்கள் உலகப்பொருட்களைத் துறப்பதன் மூலமாகவும், பூமிக்குரிய பெயரையும், கீர்த்தியையும், நன்மைகளையும், சந்தோஷமாய்ப் பலிச் செலுத்துவதன் மூலமாகவும் தேவன் மீதான தங்களுடைய அன்பையும், பயபக்தியையும் வெளிப்படுத்துகிறவர்களாய் இருந்து, இப்படியாக வரவிருக்கிற ஜீவியத்தில் அவர் அளிப்பதாக வாக்களித்துள்ள மகா மேன்மையும், அருமையுமான காரியங்களையும், அவருடைய கிருபையின் ஐசுவரியத்தையும், அவருடைய அன்பையும், கிருபைகளையும் பற்றியதான தங்களுடைய மேலான உணர்ந்துக்கொள்ளுதலை/மதிப்பிடுதலை வெளிப்படுத்த வேண்டும் என்று தேவன் எதிர்ப்பார்க்கின்றார்.

இவர்கள் “”சிநேகிதர்களைச் சம்பாதிக்க வேண்டும்.” வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், இவர்கள் அநீதியுள்ள உலகப்பொருட்ளைப் பலிச்செலுத்துவதன் மூலம், பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்க வேண்டியவர்களாய் இருக்கவேண்டும்; அதாவது அநீதியான இந்தத் தற்காலத்தின் தீமை நிறைந்த உலகத்தினுடைய, பல்வேறு நலன்களைப் பலிச்செலுத்துவதன் மூலமாக, பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்க வேண்டியவகளாய் இருக்கவேண்டும்.

சிலர் பலிச்செலுத்தத்தக்கதாக மிகவும் குறைவான உலகப்பொருட்களையே/ செல்வங்களையே பெற்றிருப்பார்கள்; ஆனால் கொஞ்சத்தில் உண்மையாய் இருப்பவன், ஒருவேளை அவன் திரளானவற்றைப் பெற்றிருந்தால் எப்படி உண்மையுள்ளவனாய் இருப்பான் என்பதற்குச் சாட்சிக் கொடுக்கிறவனாய் இருப்பான் என்று கூறுவதன் மூலம், கர்த்தர் நம் அனைவரையும் உற்சாகப்படுத்துகின்றார். இன்னுமாக நம்மால் ஏறெடுக்க முடிந்த சிறிய பலிகளை, நாம் பெரிய பலிகளை ஏறெடுத்தது போன்று கர்த்தர் ஏற்றுக்கொள்கின்றார். கொஞ்சம் நாணயங்களாகவோ அல்லது மில்லியன் கணக்கான பணமாகவோ, சிறிய செல்வாக்காகவோ அல்லது பெரிய செல்வாக்காகவோ, எதுவாயினும் கர்த்தருடைய ஊழியமும், தற்போதைய வாய்ப்புகளை நாம் பயன்படுத்துவது தொடர்புடையதுமான சிறந்த சாட்சி . . . “”அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்” என்பதேயாகும். அளவைத் தேவன் பார்ப்பதில்லை, மாறாக குணலட்ணத்தை, இருதயத்தின் நிலைமையையே தேவன் நாடுகின்றார். யார் சரியான இருதய நிலைமையைப் பெற்றிருந்து, தன்னால் முடிந்த மட்டும், தன்னிடத்திலுள்ள யாவற்றினாலும் கர்த்தருக்கு ஊழியம் செய்யத்தக்கதாக ஜீவியத்தின் சிறு காரியங்களில் கூட ஜாக்கிரதையாய் இருக்கின்றானோ, அவனுக்கே உண்மையான ஐசுவரியங்களாகிய பரலோக ஐசுவரியங்கள் கொடுக்கப்படும் அவன் பரம இராஜ்யத்தின் மகிமைகளுக்குள் பிரவேசிப்பவனாய் மாத்திரம் இல்லாமல், தற்கால ஜீவியத்திலுங்கூட அந்த ஐசுவரியத்தின் முதற்பலன்களைத் தன்னுடைய சொந்த இருதயத்திலும், தன்னுடைய சொந்த அனுபவத்திலும் கூடக் பெற்றுக்கொள்ளுகிறவனாயும் இருப்பான்ƒ ஏனெனில் மகிமையின் சுதந்திரவாளிகளாகவும், தேவனுடன் சரியான உறவின் நிலையிலும் காணப்பட்டு, ஓட்டத்தில் உண்மையாய் ஓடுகிறவன், ஓட்டத்தினுடைய முடிவில் பரிசைப் பெற்றுக் கொள்கிறவனாய் மாத்திரம் இராமல், ஓட்டத்தின் முடிவிற்கு முன்னதாகவுங்கூட உலகத்தால் கொடுக்க முடியாததும், எடுத்துப்போட முடியாததுமான ஆசீர்வாதங்களாகிய கர்த்தருடைய சந்தோஷத்தையும், எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தையும் பெற்றிருப்பான் என்ற உண்மை மறுக்கப்பட முடியாததேயாகும். இதனால் இவர்கள் யாத்திரிகர்களாக இருக்கும்போதும், தற்கால திருப்திகரமற்ற கூடார நிலையில் அதன் பெலவீனங்களினால் தவித்துக்கொண்டிருக்கும்போதும் இவர்களால் பாட இயலும்.

ஒருவேளை நாம் நமக்குச் சொந்தமாய் இராததும், நமக்கு உக்கிராணத்துவத்தில் மாத்திரம் கொடுக்கப்பட்டதுமான பொருட்கள், வாய்ப்புகள், தாலந்துகளாகிய சிறிய காரியங்களில், அதாவது கர்த்தருடைய உக்கிராணக்காரர்களென நம்முடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதாக மாத்திரமே காணப்படும் சிறிய காரியங்களில் உண்மையாய் இராவிட்டால், ஒருவேளை கர்த்தருடைய மகிமைக்காக மாத்திரமே இவைகளைப் பயன்படுத்துவதில் நாம் உண்மையாய் இராவிட்டால், எதிர்க்காலத்திலோ அல்லது தற்கால ஜீவியத்திலோ, என்றென்றுமாய் அவர் கிருபையின் ஐசுவரியங்களை நமக்குச் சொந்தமானதாய் வைத்துக்கொள்ள கொடுப்பார் என்று எப்படி நாம் எதிர்ப்பார்க்கக்கூடும்.

எந்த ஒரு மனுஷனாலும், இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்வதும், திருப்திபடுத்துவதும், இரண்டிற்கும் நீதியானதைச் செய்வதும் கூடாத காரியம் என்பதும், தேவனுக்கும், நீதிக்கும், ஊழியஞ்செய்து அதேவேளையில் எதிராளியானவனுக்கும், இந்த யுகத்தை ஆளுகை செய்யும் இவ்வுலகத்தின் அதிபதியானவனுக்கு இசைவாக இருப்பவர்களுக்கும் பிரியமாகவும், ஏற்பவும் நடந்துக்கொள்வது கூடாத காரியம் என்பதும்தான் சீஷர்களுக்கான பாடமாகும். பரலோகத்தில் பொக்கிஷங்கள் சேர்த்தவர்களும், தேவனிடத்தில் ஐசுவரியவான்களாய் இருப்பவர்களுமாகிய, கர்த்தருக்கு அர்ப்பணம் பண்ணயுள்ள அனைவரும், அர்ப்பணம் பண்ணிக்கொள்ளாதவர்கள் மத்தியில் கனமற்றவர்களாக இருக்க விரும்பிட வேண்டும்; இந்த அர்ப்பணம் பண்ணாதவர்கள் எந்த வேலை செய்கிறவர்களாக இருப்பினும், அவர்கள் உண்மையில் உலகப்பொருட்களுக்கும், சுயநலத்திற்கும், தற்கால ஜீவியத்திற்கும் ஊழியம் பண்ணுகிறவர்களாய் இருந்து, பரலோக இராஜ்யத்தை அடைவதற்கடுத்த காரியங்களில் இவைகளைப் பலிச்செலுத்தாதவர்களாய் இருப்பவர்கள் ஆவர்கள்.