R4668 (page 265)
“R 4668 (page 265)
THE GREATEST – THE SERVANT
பெரியவன்-ஊழியக்காரன் – MAIN HEADING
மத்தேயு 20:17-34
“”அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.” (வசனம் 28)
குறிக்கோள், அதாவது சுயநலமான குறிக்கோள் உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கின்றது. தேவனைப் பிரியப்படுத்துவதும், அவருடைய பலன்களைப் பெற்றுக்கொள்வதுமாகிய ஒருவகையான குறிக்கோளுக்கு/ஆசைக்குத் தேவனுடைய வார்த்தைகளிலுள்ள மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள் ஊக்கமூட்டுகின்றன. இயேசுவின் அர்ப்பணம் பண்ணியுள்ள மற்றும் சுயத்தைப் பலிச்செலுத்துகிறதுமான பின்னடியார்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தத்தைச் சிந்தித்துப் பாருங்கள்; அதென்னவெனில் அவர்கள் மரணம் வரை உண்மையுள்ளவர்களாய் இருந்தால், ஜீவகிரீடத்தையும், அழியாமையையும், அவருடைய இராஜ்யத்தின் மகிமையையும், [R4669 : page 265] கனத்தையும் அவர்கள் பங்கடைகின்றவர்களாக, தங்களுடைய ஆண்டவரோடு கூட அவருடைய சிங்காசனத்தில் ஓர் இடத்தையும் பெற்றுக்கொள்வார்கள் என்பதேயாகும். சிருஷ்டிகரிடமிருந்து, விசுவாசத்தின் கேட்கும் செவிகளை உடையவர்களிடத்தில் வரும் இந்தக் காரியத்தைக் காட்டிலும், குறிக்கோள் கொள்ளத்தக்கதாக இதுபோல் மிகப் பலமாய், வேறு எந்தப் பூமிக்குரிய காரியத்தினாலும் நமது கவனத்தை ஈர்க்க முடியாது. எனினும் இந்த வாக்குத்தத்தங்களினால் எழுப்பப்பட்ட இந்தக் குறிக்கோள்கள்/ஆசைகள், நமக்குக் கண்ணிகளாகக்கூட மாறலாம் என்று நாம் எச்சரிக்கப்பட்டிருக்கின்றோம். அவமானம், தவறாய்ப் புரிந்துக்கொள்ளப்படுதல் மற்றும் இகழ்ச்சியை நாம் உண்மையாய் சகித்து முன்னேறுதல் மற்றும் இறுதிவரையிலும் தாழ்மையை, தேவனிடத்திலான முழுமையான நேர்மையை, அவருடைய வழிநடத்துதல்களுக்கு நாம் முழுமையாய் ஒப்புக்கொடுத்தலை நிரூபித்தல் ஆகிய நிபந்தனைகளின் கீழ்தான் நாம் இராஜ்யத்தை அடைய முடிகின்றவர்களாய் இருப்போம். “”உம்முடைய இராஜ்யம் வருவதாக, உமது சித்தம் பரமண்டலத்தில் செயல்படுவது போன்று பூமியிலும் செயல்படுவதாக” என்று நாம் ஜெபம் பண்ணுகிறதான வரவிருக்கின்ற இராஜ்யத்தில் மேசியாவோடு கூட ஆள வேண்டுமெனில், ஒருவர், “”ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” என்ற வசனத்தின்படிக் காணப்பட வேண்டும் (1 பேதுரு 5:6).
இயேசு தம்முடைய அவமானத்துடன் கூடிய பாடுகளையும், மரணத்தையும் பற்றி முன் அறிவித்த போதிலும், அப்போஸ்தலர்களுடைய மனங்களுக்கு முன்னதாக இராஜ்யத்தைப்பற்றின [R4669 : page 266] நம்பிக்கை பிரகாசமாகவே காணப்பட்டது; ஆகையால்தான் இயேசுவுக்குப் பிரியமாய் இருந்த பின்னடியார்களில் இருவரான யாக்கோபும், யோவானும், தங்களுடைய தாயார் வாயிலாக, அவருடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்போது, மாபெரும் இராஜாவாகிய அவருடைய வலது பக்கத்தில் ஒருவரும், இடது பக்கத்தில் இன்னொருவரும் உட்காரத்தக்கதாக ஒரு வாக்கை அடையும்படிக்கு வேண்டிக் கொண்டார்கள்.
இந்த ஒரு விண்ணப்பத்தின் மூலமாய், இப்படிப்பட்ட உயர்வான நிலையை அடைவதற்குரிய விலையைக் குறித்து அன்பும், குறிக்கோளும் கொண்டுள்ளவர்களாகிய சீஷர்கள் முழுமையாய்க் கணக்குப் பார்க்கவில்லை என்று மாபெரும் போதகர் கருத்துத் தெரிவிக்க ஏதுவாயிற்று. அவர்கள் தம்முடைய அவமானம் மற்றும் நிந்தனையின் பாத்திரத்தில் பானம் பண்ணுவதற்கு விரும்புகின்றார்களா என்றும், அவர்கள் தம்முடைய மரணத்திற்குள்ளான ஞானஸ்நானத்தில் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள விரும்புகின்றார்களா என்றும், அனைத்துப் பூமிக்குரிய நன்மைகளையும் பலிச்செலுத்திட விரும்புகின்றார்களா என்றும் கர்த்தர் அவர்களிடம் கேட்டார். அவர்கள் விலையைக் கணக்குப்பார்த்து விட்டனர்; மற்றும் உடனடியாக தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர். அவர்கள் மாபெரும் போதகருடைய பாடங்களை நன்கு கற்றிருந்தனர். அவர்கள் இத்தகைய மனவிருப்பம் கொண்டதினால், அவருடைய அவமானத்திலும், அவருடைய மரணத்திலும் பங்கடைவதற்கும் மற்றும் அவரோடு கூட அவருடைய சிங்காசனத்தில் உட்காருவதற்கும் உரிய சிலாக்கியம் அவர்களுடையதாய் இருக்குமெனக் கர்த்தர் அவர்களுக்கு நிச்சயம் அளித்தார். அவருடைய ஜனங்களின் பரீட்சைகள் நிறைவடையும்போது, பிதா ஆயத்தம் பண்ணினதும், ஏற்படுத்தினதுமான நியாயமான நியமனத்தின்படி /அளவுகோலின்படி/கொள்கையின்படி, கர்த்தருடைய வலது, இடது பக்கத்தில் இருக்கும் இராஜ்யத்தின் உயர்வான கனத்திற்குரிய ஸ்தானம் அருளப்படும். அப்போஸ்தலர்களோடு கூட நாமும், அவர்களுடைய முழுமையான அர்ப்பணிப்பிலும், ஆண்டவருடைய நிச்சயத்திலும்/வாக்கிலும் எவ்வளவாய்க் களிக்கூரலாம்! ஆண்டவரோடு கூட, அவருடைய சிங்காசனத்தில் அவருடைய சரீரமாகிய சபையின் அங்கத்தினராக இடம் பெற்றுக்கொள்ளத்தக்கதாக நாமும் உண்மையாய் நாட வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.
யாக்கோபு மற்றும் யோவானுடைய குறிக்கோளானது/ஆசையானது, கர்த்தரிடம் மிகவும் விசேஷித்த நெருக்கமான இடத்தை அடைய வேண்டுமென்றதான அவர்களது விருப்பத்தைக் காட்டுகின்றதாய் இருக்கின்றது. கர்த்தர் இயேசு அவர்களைக் குறிப்பாய்க் கடிந்துக்கொள்ளாமல், மறைமுகமாகக் கடிந்துக்கொள்கின்றார். இந்த இருவரும் எவ்வாறு கனத்திற்குரிய பிரதான இடங்களை அடைய நாடினார்கள் என்பதை, மற்றவர்கள் கேட்டபோது மிகவும் எரிச்சலடைந்தார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மனிதனுடைய கணிப்பிலிருந்து, தேவனுடைய கணிப்பு எவ்வளவு வேறுபாடாக இருக்கின்றது என்பதை ஆண்டவர் காட்டினார். மனுஷர்கள் மத்தியில், ஆக்கிரமிக்கிறவர்களும், வல்லமையுள்ளவர்களுந்தான் மற்றவர்கள்மேல் ஆளுகையையும், அதிகாரத்தையும் கொண்டிருக்கின்றனர், ஆனால் தெய்வீக ஏற்பாட்டிலோ, இது முற்றிலும் தலைக்கீழாக இருக்கின்றது. தேவன் தாழ்மையுள்ளவர்களையும், சாந்தமுள்ளவர்களையும், கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுப்பவர்களையுந்தான், மிகவும் கனப்படுத்தி, உயர்வான ஸ்தானத்தில் அமர்த்துவார்;. இந்தச் சம்பவத்தில், தாழ்மையின் அவசியத்தைக் குறித்துத் தம்முடைய பின்னடியார்களுக்குப் போதித்தார்; நாமும் தெய்வீகக் கண்ணோட்டத்தின்படிச் செயல்படுகிறவர்களாய் இருந்து, சபையில் யார் அதிகமாய் ஊழியம் புரிகிறார்களோ, அவர்களையே நாம் மிகவும் கனப்படுத்த வேண்டுமே ஒழிய, ஊழியம்கொள்வதற்கும், கனங்களை அடைவதற்கும், தன்னைத்தான் உயர்த்துவதற்கும் நாடுபவர்களுக்கும் அல்ல. “”அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்,” அதாவது தேவனுடைய ஏற்ற வேளையாகிய, மேசியாவின் இராஜ்யத்தில் ஜனங்கள் பாவம் மற்றும் மரணத் தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்படுவதற்குத் தம்முடைய ஜீவனை ஈடுபலியாகக் கொடுக்க வந்தார் (மத்தேயு 20:28).
குருடர்களையும், ஏழைகளையும் ஆசீர்வதித்தல் – SUB HEADING
பிரயாணம் பண்ணிக்கொண்டு போகையில், ஆண்டவருக்குத் தம்மை வேலைக்காரனாக முன்மாதிரிப்படுத்துவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. இயேசு அவ்வழியாய்ப் போய்க் கொண்டிருக்கின்றார் என்பதை அறிந்துக் கொண்ட இரண்டு குருடர்கள், அவர் தாவீதின் குமாரனாகிய மேசியா என்று விசுவாசித்து, இரக்கத்திற்காக, உதவிக்காகக் கூக்குரலிட்டனர். நீங்கள் குருடர்களாகப் பிச்சை எடுப்பவர்கள்தானே என்று கூறி, பொருட்படுத்தாமல் செல்வதற்குப்பதிலாக, ஆண்டவர் நின்று, அவர்களைத் தம்மிடம் கொண்டு வரச்சொல்லி, அவர்களுடைய விண்ணப்பத்தின்படி, அவர்களுடைய கண்களைத் தொட்டார், மற்றும் அவர்கள் உடனடியாகப் பார்வை அடைந்தார்கள். அவருக்கு இழப்பு இல்லாமல், அவர் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை என்று மற்ற வேதவாக்கியங்களும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. “”அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கிற்று” (லூக்கா 6:19).
ஐசுவரியவானாய் இருந்த அவர், மிகவும் தரித்திரரும், கீழானவர்களுமான நமக்கு ஊழியம் புரியும்படிக்கு, நமக்காக தரித்திரர் ஆனார்! இங்கு நம்முடைய இருதயத்தில் காணப்பட வேண்டிய சாந்தத்தின் ஆவிக்கும், ஊழியம் புரிவதற்கான ஆவிக்கும் எடுத்துக்காட்டைப் பெற்றிருக்கின்றோம்; இது ஓரளவுக்கு, மாபெரும் போதகருடைய சீஷர்களாகிய, உண்மையான பின்னடியார்களின் ஜீவியங்களைக் கட்டுப்படுத்துகின்றதாய்/ஆளுகின்றதாய் இருக்க வேண்டும். ஒருவேளை மாம்ச குருடான கண்களைத் திறப்பதற்கான வல்லமை நமக்கு இராவிட்டாலும், மாம்ச கண்கள் காணாததும், மாம்ச காதுகள் கேட்டிராததும், தேவன் தம்மை அன்புகூருகிறவர்களுக்கும், தம்மை அன்புகூர்ந்து, இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கும் வைத்திருக்கிறதுமான காரியங்களை அநேகர் தெளிவாய்ப் பார்க்க உதவுவதற்கான வல்லமை, நமக்குக் கொடுக்கப்பட்டதாய் இருக்கின்றது (1 கொரிந்தியர் 2:9). இந்த உண்மையான குறிக்கோளை அடைய நாடுவேமாக் பரலோகத்தில் இருக்கும் நம்முடைய பிதாவின் சித்தத்தை அறிவதற்கும், செய்வதற்கும் நாம் விசேஷமாக நாடுவோமாக!
“