R5444 – ஐசுவரியவான் நரகத்திற்கும்… ஏழை பரலோகத்திற்கும்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R5444 (page 122)

ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்

RICH TO HELL—POOR TO HEAVEN

லூக்கா 16:19-31

“”ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.” – நீதிமொழிகள் 21:13.

அனைத்து ஐசுவரியமான புருஷர்களும், ஐசுவரியமான ஸ்திரீகளும் தினந்தோறும் சம்பிரமமாய் வாழ்கிறதினாலும், இரத்தாம்பரம், விலையேறப்பெற்ற வஸ்திரம் தரிப்பதினாலும், கடுந்துயரில் நித்திய காலத்தைக் களிப்பார்கள் என்ற அர்த்தத்தில் இயேசு கூறியுள்ளாரா? பரலோகத்திற்கு நாம் செல்ல வேண்டுமெனில், நாம் தரித்திரர்களாகவும், பருக்கள் நிறைந்தவர்களாகவும், பருக்களை நாய்களினால் நக்கப்பெற்றவர்களாகவும், ஐசுவரியமான மனுஷனுடைய மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைப் புசிக்கிறவர்களாகவும் காணப்பட வேண்டும் என்பது உண்மையா? எதிர்க்கால நன்மைகளின் பலன்களிலும், தண்டனைகளின் விஷயத்திலும், குணலட்சணத்திற்கு முக்கியத்தும் இல்லையா? இன்னுமாக நித்திய காலமாக அக்கினியில் வாதிக்கப்படும் ஐசுவரியவான்கள், தரித்திரர்கள் பேரின்பத்தில் இருப்பதைக் காண்பதும் மற்றும் கனப்படத்தப்பட்ட தரித்திரர், ஐசுவரியவான்கள் நித்தியமான துயரத்திற்குள் இருப்பதைக் காண்பதும் நடைபெறுமா? இது சர்வ வல்லமையுள்ளவரும், ஆதிமுதல் அந்திவரை அறிந்திருப்பவரும், அன்புமுள்ள சிருஷ்டிகருடைய ஏற்பாடாக இருக்குமா?

அநேக வருடங்களாக, தேவனுடைய ஜனங்களில் மிகவும் பரிசுத்தமாய் இருப்பவர்களுக்கு இந்த உவமையானது, பெரும் மனவேதனையை அளித்து வந்துள்ளது; இருதயமும், தலையும்/சிந்தனையும் இந்த உவமையோடு எதிர்த்ததாகவே காணப்பட்டது. ஆபிரகாம் மிகவும் ஐசுவரியவானாய் இருந்தார் என்றும், ஈசாக், யாக்கோபு, தாவீது இராஜா, சாலொமோன் இராஜா முதலானவர்களும் மிகுந்த ஐசுவரியவான்களாய் இருந்தார்கள் என்றும் நாம் நினைவுகூருகின்றோம். தேவன் தாமே ஐசுவரியமுள்ளவராய் இருக்கின்றார் என்றும் நாம் நினைவுகூருகின்றோம். இன்னுமாக இக்காரியம் தொடர்புடைய வார்த்தைகளை நாம் எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகளில் பார்க்கும்போது, [R5444 : page 123] நம்பிக்கையற்றதும், இரண்டாம் மரணமாகவும் இருக்கிறதான கெஹன்னாவுக்கு ஆபிரகாம் செல்லாமல், மாறாக அக்கினியற்ற மரித்துப்போன நிலைமையாகிய கல்லறைக்கு, ஹேடிசுக்கு, ஷீயோலுக்கு போனார் என்றே நாம் கண்டுபிடிக்கின்றோம்.

நமக்குக் கிடைத்திட்ட அதிகப்படியான சத்தியமானது, இவ்வுமையின் விசித்திரத்தை/இரகசியத்தை அதிகரித்தது; ஏனெனில் ஷீயோல், ஹேடிஸ், கல்லறையானது அழிக்கப்படும் என்றும், அதிலுள்ள அனைவரும் வெளியே உயிர்த்தெழுதலில் கொண்டுவரப்படுவார்கள் என்றும் வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்த உவமைக்கு ஒத்துப்போகிற / இசைந்துப் போகிற வேறு எந்த வசனமும் காணப்படவில்லை. அடையாளமான மிருகமும், அடையாளமான கள்ளத்தீர்க்கதரிசியும் சித்திரவதைக்குள் காணப்படுவதாக வெளிப்படுத்தல் விசேஷத்திலுள்ள ஒரு வசனத்தை மாத்திரமே இவ்வுமைக்கு (நேரடி பொருத்துதலின்) ஆதரவாகச் சொல்லலாமேயன்றி, மற்றப்படி இவ்வுமை தனித்தே மற்றவைகளுக்கு இசைவின்றி காணப்படுகின்றது. இந்த உவமையினுடைய கதையினால், சபையிலுள்ள சிந்திக்கிற ஜனங்களும் இடறிப்போய், குழப்பத்தில் காணப்படுகின்றனர்.

இப்பொழுது அனைத்தும் தெளிவாகியுள்ளது

இப்பொழுது உவமையைப் பார்க்கலாம். நம்முடைய இரட்சகருடைய மற்ற உவமைகள் மற்றும் மறைப்பொருள்கள் போன்று, அதாவது உதாரணத்திற்கு, ‘நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (அ) ‘உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்” என்ற வசனங்களில் இடம்பெறும் உவமை போன்று, இந்த உவமையும், சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது (யோவான் 6:53, மத்தேயு 18:9). “”இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை“ (மத்தேயு 13:34). பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி வந்து தகுதியைக் கொடுப்பது வரையிலும், இயேசுவினுடைய போதனைகளுடைய ஆழத்தைப் புரிந்துக்கொள்வதற்கு எவரும் ஆயத்தமாய் இருக்கவில்லை.

ஆனால் இப்பொழுது அனைத்தும், எத்துணை எளிமையாய் உள்ளது! எத்துணை அருமையாய் உள்ளது! வேதாகமம் பற்றின நம்முடைய தற்போதைய புரிந்துக்கொள்ளுதலின் வெளிச்சத்தில், தெய்வீகக் குணலட்சணத்தினுடைய பிரகாசமானது, அவருடைய நீதியின் மீதும், அன்பு, ஞானம் மற்றும் வல்லமை ஆகியவைகளின் மீதும் அழகாய்ப் பிரகாசிப்பதினிமித்தம், தேவனுடைய ஜனங்கள் அநேகர் களிகூர்ந்து கொண்டிருக்கின்றனர்.

நம்முடைய இந்த ஆதார வசனப்பகுதி, ஓர் உவமை என்று புரிந்துக்கொள்வதில் நமக்குச் சிரமம் இல்லை. இதைச் சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்வது என்பது தரித்திரர்கள் அனைவரும் பரலோகம் செல்வதாகவும், ஐசுவரியவான்கள் அனைவரும் நரகம் செல்வதாகவும் எண்ணிக்கொள்ளும் அர்த்தமற்ற பொருட்களையே கொடுப்பதாக இருக்கும்; ஏனெனில் இவ்வுமையானது, குணலட்சணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக எதுவும் தெரிவிப்பதில்லை. அதாவது தரித்திரன் நல்லவன் என்றோ, ஐசுவரியவான் கெட்டவன் என்றோ உவமையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது உவமையாகவே பார்க்கப்படும்போது, இங்குச் சொல்லப்பட்டுள்ள தரித்திரனையும், ஐசுவரியவானையும் பற்றி எதுவும் கூறப்படவில்லை என்பதை நாம் காணலாம். இப்படியாகவே மற்ற உவமைகளிலும், கோதுமை மற்றும் செம்மறியாடானது தேவனுடைய பிள்ளைகளைக் குறிப்பதாகவும், களைகள் மற்றும் வெள்ளாடு என்பது, இந்த உலகத்தின் பிரபுவானவனாகிய எதிராளியின் தலைமையின் கீழ்க்காணப்படுபவர்களைக் குறிப்பதாகவும் இருக்கின்றது.

உவமையில் வரும் ஐசுவரியவான்

நாம் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டுள்ள இந்த உவமையில், ஐசுவரியவான் ஒரு வகுப்பாரையும், தரித்திரனாகிய லாசரு மற்றொரு வகுப்பாரையும் அடையாளப் படுத்துகின்றவர்களாய் இருக்கின்றனர். இப்போது பார்க்கலாம்: ஐசுவரியவான், 16 நூற்றாண்டுகளுக்கு மேலாக தேவனுடைய கிருபையில் காணப்பட்ட யூத ஜனங்களுக்கு அடையாளமாக இருக்கின்றான். யூதர்களுக்கோ வாக்குத்தத்தங்களும், தீர்க்கத்தரிசிகளும், நியாயப்பிரமாண உடன்படிக்கையினுடைய ஆசீர்வாதங்களும், சிலாக்கியங்களும் கொடுக்கப்பட்டது. இக்காரியங்களே அடையாள வார்த்தைகளில், இவர்களுக்கான இராத்தாம்பரமும், விலையேறப்பெற்ற வஸ்திரமும், சம்பிரமமான மேஜையுமாக இருக்கின்றது. விலையேறப்பெற்ற வஸ்திரமானது, நிழலான பலிகளின் மூலமாக, இவர்களுக்கான நிழலான நீதிமானாக்கப்படுதலுக்கு அடையாளமாக இருக்கின்றது. இவர்களுடைய இரத்தாம்பரம், இராஜரிகத்திற்கு அடையாளமாக இருக்கின்றது; ஏனெனில் இவர்களே நிழலான இராஜ்யமாக இருந்தார்கள். இவர்களுடைய சம்பிரமமான வாழ்க்கையானது, அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 11:9-ஆம் வசனத்தில் குறிப்பிடுகின்றது போன்று தெய்வீக வாக்குத்தத்தங்களுக்கு அடையாளமாக இருக்கின்றது.

இயேசுவின் நாட்களில், யூதர்களுக்கான கிருபையானது படிப்படியாக நலிவுற ஆரம்பித்தது. இவர்கள் கி.பி. 70-இல் முற்றிலும் கிருபையினின்று துண்டிக்கப்பட்டுப் போனார்கள்; இதை யூதர்கள் அனைவருங்கூட ஒப்புக்கொள்கின்றனர். இடைப்பட்ட 40 வருட காலப் பகுதியில், ஐசுவரியவானாகிய யூத ஜனங்கள் வியாதிப்பட்டு, மரித்துப்போய் அடக்கம் பண்ணப்பட்டனர். இவர்கள் ஒரு ஜாதியாக ஹேடிசுக்கு, கல்லறைக்குப் போனார்கள்; இவர்களுடைய உயிர்த்தெழுதல் இன்னும் நடைபெறவில்லை; சீயோனிசம் (Zionism) என்பது இவர்களுடைய உயிர்த்தெழுதலுக்கான ஆரம்பமாக இருப்பினும், இவர்களுடைய உயிர்த்தெழுதல் இன்னும் நிறைவடையவில்லை.

இவர்கள் ஒரு ஜாதியினராக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டாலும், தனித்தனி யூதர்களென இவர்கள் கடந்த 19 நூற்றாண்டுகளாக வாழ்ந்துக்கொண்டே வருகின்றனர். இவர்கள் துன்புறுத்தல்களை அடையும்போது, சிலசமயம் இயேசுவின் நாமத்தை அறிக்கைச் செய்துகொண்டு, தங்களுடைய கிரியைகளில் அவரை மறுதலிக்கிறவர்களாகவும் இருப்பவர்களிடமிருந்து துன்புறுத்தல்களை அடையும்போது, இவர்களுடைய ஆத்துமா துக்கித்தது. இத்தனை நூற்றாண்டுகளிலும், இவ்வுவமையில் விசுவாசத்தின் தந்தையாகிய ஆபிரகாமால் அடையாளப்படுத்தப்படும், தேவனிடம் இந்த யூதர்கள் கூக்குரலிட்டனர். இவர்களுக்கும், தேவனுக்கும் இடையே பெரும் பிளவு உள்ளது என்ற ஒரே பதிலை மாத்திரமே, யூதர்கள் பெற்றவர்களாய் இருந்தார்கள். இது இப்படியாகவே எப்போதும் தொடர்ந்து இருக்கப் போவதில்லை என்பதற்காக தேவனுக்கு நன்றி! புதிய யுகம் விடிந்து கொண்டிருக்கின்றது, இதில் ஐசுவரியவான், ஹேடிசிலிருந்து திரும்பி வருவான். இஸ்ரயேல் ஒரு ஜாதியாக, மீண்டும் பழைய நிலைமைக்குக்கொண்டு வரப்படும்; தேவையான படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளுகிறவர்களிடத்தில் தேவனுடைய கிருபையானது மீண்டும் திரும்பும்.

உவமையில் இடம்பெறும் தரித்திரன்

இவ்வுவமையில் இடம்பெறும் தரித்திரன், புறக்கணிக்கப்பட்ட ஒரு வகுப்பாருக்கு அடையாளமாய் இருக்கின்றான். இவ்வகுப்பாரில், தேவனுடைய கிருபையினின்று அகன்று தூரம் போய்விட்ட பாவிகளும், ஆயக்காரர்களும் அடங்குகின்றனர். இவ்வகுப்பாரில் புறஜாதிகளுங்கூட அடங்குகின்றனர்; புறஜாதிகளிடத்திற்கு ஒருபோதும் தேவக் கிருபை காணப்படவில்லை, மற்றும் இவர்கள் இஸ்ரயேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களாகவும், அந்நியர்களாகவும் காணப்பட்டனர். “”அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரயேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்” (எபேசியர் 2:12). புறஜாதிகளுக்கு நிழலான நீதிமானாக்கப்படுதலாகிய விலையேறப்பெற்ற வஸ்திரங்கள் இருக்கவில்லை; மற்றும் தேவனுடைய இராஜ்யத்தில் பங்காகிய, தேவனுடைய கிருபையில் ஒரு பங்கிற்கு அடையாளமாக இருக்கும் இரத்தாம்பரமும் இவர்களுக்கு இருக்கவில்லை. இவர்களுக்கு எந்த வாக்குத்தத்தங்களும் கொடுக்கப்படவில்லை. ஐசுவரியவானுடைய மேஜையிலிருந்து, விழும் சிறு துணிக்கைகளை மாத்திரமே இவர்கள் பெற்றுக்கொள்ள முடிந்தவர்களாய்க்காணப்பட்டனர்.

இவ்வகுப்பாருக்கு இயேசுவினால் கொடுக்கப்பட்ட இப்படிப்பட்டதான இரண்டு துணிக்கைகளைக் குறித்து வேதவாக்கியங்கள் விவரிக்கின்றன. இயேசு உரோம நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனை, யூதர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்க சலுகையாகச் சொஸ்தப்படுத்தினார்; இந்த அதிபதி யூதர்களுடைய நண்பன் என்றும், ஜெப ஆலயம் முதலானவைகளைக் கட்டிக் கொடுத்ததின் மூலமாக இந்த அதிபதி யூதர்களுக்கு நன்மை செய்துள்ளார் என்றும், யூதர்கள் கூறி, இயேசுவிடம் வேண்டிக்கொண்டார்கள். இந்த அதிபதியினுடைய ஊழியக்காரனைச் சொஸ்தப்படுத்தினது என்பது, ஒரு துணிக்கையாகும். இதைப் போலவே, பிசாசு பிடித்த தன்னுடைய மகளை விடுவிக்கும்படிக்கு, இயேசுவிடம் வேண்டிக் கொண்ட சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயும், ஒரு துணிக்கையைப் பெற்றுக்கொண்டாள். இயேசு அவளிடம், ‘பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்” (மத்தேயு 15:26). இங்குப் புறஜாதியாரை, புறஜாதி நாய்கள் என்று கூறப்படும் யூத சொற்களின் வழக்கத்தையே இயேசுவும் பயன்படுத்தினார். இந்தச் சீரோபேனிக்கியா தேசத்து ஸ்திரீ, யூத ஸ்திரீயல்ல. ஆகையால், இவள் தேவனுடைய கிருபையை உரிமைப் பாராட்டுவதற்கு முடியாதவளாக இருக்கின்றாள். ஆனால் இவளோ ‘மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே” (மத்தேயு 15:27) என்று கூறினபோது, இயேசு அவளுடைய விசுவாசத்தைக் கவனித்து, அவள் வேண்டிக்கொண்ட துணிக்கையைக் கொடுத்தார்.

யூதர்கள் தங்களுக்கான கிருபையின் நிலைமைக்கு மரித்ததுபோல, புறம்பே இருந்தவர்களாகிய ஆயக்காரர்களும், பாவிகளும், புறஜாதிகளும் தங்களுக்கான கிருபையற்ற நிலைமைக்கும் மரித்துவிட்டார்கள்; தேவனுடைய கிருபைகளுக்காக வாஞ்சித்தவர்களும், அவருடைய வாக்குத்தத்தத்தின் வார்த்தைகளுக்குப் பசி தாகம் கொண்டுள்ளவர்களும், அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். பரிசேயர்களால் பாவிகள் என்றும், ஆயக்காரர்கள் என்றும், புறஜாதிகள் என்றும் புறக்கணிக்கப்பட்ட இந்த லாசரு வகுப்பாரை உள்ளடக்கினதாகவே, ஆதிகால திருச்சபை காணப்பட்டது. இவர்கள் தொடர்ந்துத் தேவனிடமிருந்து தொலைவில் காணப்படுவதற்குப் பதிலாக, இவர்கள் தேவனுடைய பிள்ளைகளாகவும், அவருடைய வாக்குத்தத்தத்தின் சுதந்தரர்களாகவும் ஆனார்கள். இந்த உவமையில், இவர்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாக, அவருடைய கரங்களில் இருப்பவர்களாகக் காண்பிக்கப்பட்டுள்ளனர். நிழலில் ஈசாக்கே, சொல்லர்த்தமான ஆபிரகாமினுடைய வாக்குத்தத்தத்தின் பிரியமான குமாரனாகக் காணப்பட்டார். நிஜத்தில் இயேசுவும், அவருடைய பின்னடியார்களும், ஆபிரகாமின் ஆவிக்குரிய சந்ததியாராக இருந்து, தேவனுடைய இருதயத்தினிடத்திற்கும், கிருபையினிடத்திற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக இருக்கின்றனர். “”நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்” (கலாத்தியர் 3:29).

நிர்ணயிக்கப்பட்ட பெரும் பிளவு

யூத மார்க்கத்திற்கும், கிறிஸ்தவ மார்க்கத்திற்கும் இடையிலான மாபெரும் பிளவானது, 18 நூற்றாண்டுகளுக்கும் மேலாக நிர்ணயிக்கப்பட்ட காரியமாக இருக்கின்றது. இவ்வளவு நீண்ட காலமாகவும், எந்த யூதனும் தேவனுக்கு அருகாமையில் வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை, மற்றும் எந்தப் புறஜாதியும், யூதனுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டு, கிறிஸ்துவல்லாத வேறு வழியின் மூலம், கிருபையை நாடுவதற்கு அனுமதிக்கவும் படவில்லை. தெய்வீகத் திட்டத்தில் இந்தப் பெரும் பிளவு ஏற்பாடு பண்ணப்பட்டதாகவும், மாற்ற முடியாததாகவும் இருக்கின்றது. “”அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்” (அப்போஸ்தலர் 4:12). அதாவது தேவனோடு இருதயப்பூர்வமான இருதய நிலைக்குள் நாம் வரத்தக்கதாக, கிறிஸ்துவினுடைய நாமமேயல்லாமல், வேறே நாமம் கொடுக்கப்படவில்லை. கிறிஸ்து வந்து, தம்மை இஸ்ரயேலர்களுக்கு அளித்து, அவரை அவர்கள் புறக்கணித்து, கொன்றுப் போட்டது முதல், இந்தப் பெரும் பிளவிற்கான காலம் ஆரம்பமாகின்றது.

கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகையின்போது இன்னுமொரு யுகமாற்றம் நடப்பதைத் தேவனுடைய வார்த்தைகள் சுட்டிக்காட்டுவதினால் தேவனுக்கு நன்றி! அப்போது லாசரு வகுப்பாராகிய, இன்றைய காலத்தில் தேவனுடைய பிள்ளைகளாக விசுவாசத்தின் மூலம் காணப்படுபவர்கள், திரைக்கு அப்பால் அவருடைய பிள்ளைகளென உண்மையாகவும், மகிமையிலும் இருப்பார்கள். இவர்கள் தங்கள் கர்த்தராகிய இயேசுவுடன் இணையும்போது, இவர்கள் உலகத்தைக் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்வார்கள்ƒ காரணம் இவர்கள் அவருடைய மணவாட்டியாகவும், இராஜ்யத்தில் அவருடன் உடன்சுதந்தரர்களாகவும் இருப்பார்கள். அப்போது ஐசுவரியவானுக்கு என்னவாகும்? ஓ, ஐசுவரியவான் ஹேடிசிலிருந்து உயிர்த்தெழுதலைப் பெற்றுக்கொள்கிறவனாய் இருப்பான்! [R5444 : page 124]

தேவனுடைய இராஜ்யத்தின், ஆவிக்குரிய தளத்தில், லாசரு வகுப்பார் காணப்படும்போது, தேவனுடைய இராஜ்யத்தின் பூமிக்குரிய தளத்தில் காணப்படும் இன்னொரு வகுப்பாரில், யூதர்களே காணப்படுவார்கள். இயேசுவைச் சிலுவையில் அறைந்தவர்கள், மேசியாவின் ஆவிக்குரிய இராஜ்யத்துடன் தொடர்புடைய பூமியில், பிரபுக்களாக வைக்கப்படுவதில்லை; மாறாக இவர்களால் பிதாக்கள் என்று அழைக்கப்படுபவர்களே பூமியில் பிரபுக்களாக வைக்கப்படுவார்கள். இப்படியாகப் பிரபுக்களாக வைக்கப்பட போகிறவர்களைக் குறித்து, பரிசுத்தவானாகிய பவுலினால், எபிரெயர் 11:32-40 வரையிலான வசனங்களில் விளக்கப்பட்டுள்ளது.

யூதர்கள் மீண்டுமாக தெய்வீகக் கிருபைக்குள் கொண்டுவரப்படுவது குறித்துப் பரிசுத்தவானாகிய பவுல் ரோமர் 11:25-33 வரையிலான வசனங்களில் குறிப்பிடுகின்றார். இங்கு, தேவனுடைய ஜனங்களாக இப்போது காணப்படும் நாம், எப்போதும் தேவனுடைய கிருபையைப் பெற்றவர்களாக இருக்கவில்லை என்றும், இஸ்ரயேல் தேவனுடைய கிருபையினின்று துண்டிக்கப்பட்ட போதுதான், நாம் தெய்வீகக் கிருபைக்குள்ளாக ஏற்றுக்கொள்ளப்பட்டோம் என்றும், தேவனுடைய கிருபையினின்று துண்டிக்கப்பட்ட அந்த இஸ்ரயேலர்கள், நம்முடைய கிருபையின் மூலமாக ஏற்றக் காலத்தில் கிருபைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும், அப்போஸ்தலர் சுட்டிக் காண்பிக்கின்றார். அதாவது சபையானது, ஆவிக்குரிய இஸ்ரயேலர்களென மகிமை, கனம் மற்றும் அழியாமையாகிய பரிசைப் பெற்றுக்கொள்ளும்போது, தேவனுடைய கிருபைக்கும், மாம்சீக இஸ்ரயேலர்களுக்கும் இடையிலான பெரும் பிளவு கடந்துப்போய் விடுகிறதாய் இருக்கும். பின்னர் மாம்சீக இஸ்ரயேலர்களுக்குக் கிருபை திரும்பி வருவதாக இருக்கும். மகிமையடைந்த ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் வாயிலாக, [R5445 : page 124] மாம்சீக இஸ்ரயேலர்களிடத்தில் வரும் தேவக் கிருபையானது, மாம்சீக இஸ்ரயேலர்கள் வாயிலாக ஆயிரவருட யுகத்தின்போது, சகல ஜாதியார்களுக்கும், பாஷைக்காரர்களுக்கும், கோத்திரங்களுக்கும் கடந்து வருகிறதாக இருக்கும்.

இதுவே, “”உன் சந்ததியாருக்குள் பூமியின் குடிகள் அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்பதே தெய்வீக வாக்குத்தத்தமாக இருக்கின்றது. ஆபிரகாமுடைய ஆவிக்குரிய சந்ததியாகிய சபையானது, இந்த வாக்குத்தத்தத்தில் முதலாவது பங்கை அடைவார்கள்; மற்றும் ஆபிரகாமுடைய மாம்சீக சந்ததியார்கள் இரண்டாவது பங்கை அடைவார்கள்; ஆனால் இவர்கள் இரு வகுப்பாரும், சாபத்தை அகற்றுவதிலும், மனுக்குலத்திலுள்ள அனைவருக்கும் ஆசீர்வாதங்களையும், கிருபைகளையும் பொழிவதிலும் பயன்படுத்தப்படுவார்கள்.

ஐசுவரியவானாகிய டைவின் (Dive’s) ஐந்து சகோதரர்கள்

ஐசுவரியவான் தன்னுடைய உலர்ந்துபோன நாவை, ஒரு சொட்டுத் தண்ணீரைக்கொண்டு குளிரப்பண்ண வேண்டும் என்று வேண்டிக்கொள்வதாக உவமை தெரிவிக்கின்றது. இது மகா துன்பத்தில் காணப்பட்ட யூத ஜனங்கள், தங்களுடைய உபத்திரவங்களில், ஏதேனும் சில உதவிகளைத் தங்களுக்குக் கிறிஸ்தவர்கள் செய்ய அனுமதிக்க வேண்டுமெனத் தேவனிடம் கேட்பதற்கு அடையாளமாக இருக்கின்றது. இப்படியான உதவிகளை, யூதர்கள் எப்போதாகிலும் தேவனிடம் கேட்டதுண்டா? கடந்த காலங்களில் தங்கள் மீது வந்திட்டதுமான உபத்திரவங்களிலிருந்து தங்களை விடுவிக்கும்படி, யூதர்கள் தேவனிடம் ஜெபம் பண்ணினதுண்டா? ஆம், இவர்கள் ஜெபம் பண்ணியுள்ளார்கள்! இன்னுமாக இவர்கள் லாசரு வகுப்பாருடைய பிரதிநிதியானவர்களிடம், அதாவது கிறிஸ்தவ மண்டலத்தினுடைய (கிறிஸ்தவ மார்க்கத்தினுடைய) பிரதிநிதியானவர்களிடம், வேண்டுகோளும் விடுத்துள்ளனர்; இந்தப் பிரதிநிதியானவர்கள் மூலம் தங்களுக்கான விடுதலை வர வேண்டுமென்று இவர்கள் வாஞ்சித்துள்ளார்கள்.

இதற்கான ஓர் உதாரணத்தை, நம்முடைய நாட்களில், குடியரசு தலைவரான ரூசிவெல்ட் (Roosevelt) அவர்களிடம் யூதர்களால் ஏறெடுக்கப்பட்ட வேண்டுகோளில் நாம் பார்க்கலாம். இந்த வேண்டுகோளில், யூதர்களுக்கான துன்புறுத்தல்களைத் தடைப்பண்ணும் விதத்தில் ரஷ்ய அரசாங்கத்துடனான, குடியரசு தலைவராகிய ரூசிவெல்ட் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தும்படியாக, யூதர்களால் வேண்டுகோளிடப்பட்டது. இந்த ஒரு துளித் தண்ணீரை யூதர்கள் பெற்றார்களா? இல்லை உலக நாடுகளின் பரஸ்பர நல்லுறவு/மரியாதையானது, இப்படிப்பட்ட சம்பாஷணையை, ஒரு நட்பிற்கு உரிய நாட்டிடமிருந்து, வருவதை அனுமதிக்காது என்று ரூசிவெல்ட் அவர்களால் கூறி, மறுக்கப்பட்டது.

ஐசுவரியவான் மீது வந்த உபத்திரவத்தில் பங்கடைவதற்கான ஆபத்திற்குள்ளாகத் தக்கதான நிலையில், அந்த ஐசுவரியவானுக்கு ஐந்து சகோதரர்கள் காணப்பட்டதாக உவமை தெரிவிக்கின்றது. ஐசுவரியவானுடைய இந்த ஐந்து சகோதரர்கள் யார்? இயேசுவின் நாட்களில் பாலஸ்தீனியாவில் காணப்பட்ட யூதர்கள், பிரதானமாக பென்யமீன் மற்றும் யூதா கோத்திரர்களாக இருந்தார்கள் என்றும், மீதி பத்துக் கோத்திரத்தாராகிய பெரும்பாலானோர்கள் பல்வேறு தேசங்களில் சிதறிப்போயிருந்தார்கள் என்றும் நாம் பதிலளிக்கின்றோம். இந்தச் சோதனையான அனுபவங்கள் தேவனுடைய கிருபைகளில் பெரும்பாலானவைகளை அனுபவித்த பாலஸ்தீனியாவிலுள்ள யூதர்களை மாத்திரம் பாதித்ததா (அ) சிதறிப்போயிருக்கும் மற்ற யூதர்களையும் சேர்த்துதான் பாதித்ததா? என்ற கேள்வி எழும்புகின்றது. “”அவர்களுக்கு மோசேயும், தீர்க்கத்தரிசிகளும் இருக்கின்றார்கள் இவர்களுக்கு அவர்கள் செவிக்கொடுக்கட்டும்” என்பதாக பதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது யூதர்களை மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளதை நிரூபிக்கின்றதாக இருக்கின்றது; ஏனெனில் புறஜாதிகளுக்கு மோசேயும், தீர்க்கத்தரிசிகளும் இருக்கவில்லை. ஐந்து என்ற எண்ணும் இசைவாகத்தான் உள்ளது. இரண்டு கோத்திரமாகிய யூதா மற்றும் பென்யமீன், ஓர் ஐசுவரியமுள்ள மனுஷனால் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதினால், மற்றப் பத்துக் கோத்திரங்களும், ஐந்து சகோதரர்களால் அடையாளப்படுத்தப்படுவதும் சரியே.

இப்படியாகவே நடந்தது. பாலஸ்தீனியாவிலுள்ள யூதர்கள் மத்தியில் கொடுக்க ஆரம்பிக்கப்பட்ட சுவிசேஷத்தின் செய்தியானது, ஒவ்வொரு தேசத்திற்கும் கடந்துச் சென்றது. புறஜாதிகள் மத்தியில் இருக்கும் பட்டணங்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் கடந்துப் போகும் போது, முதலாவதாக, யூதர்களுக்குப் பிரசங்கித்து, ‘முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம். நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம்” என்று குறிப்பிடுபவராக இருந்தார் (அப்போஸ்தலர் 13:46-47). வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், இஸ்ரயேலர்கள் அனைவரின் மீதுமான பரீட்சை ஒன்றுபோலவே இருந்தது.

இவ்வாறாக நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறவைகளைக் காட்டிலும் மேலானதாகவே, இயேசுவின் போதனைகளிலுள்ள ஞானத்தின் ஆழம் காணப்படுகின்றது. இன்னுமாக இருண்ட காலங்களின் கொடூரமான உபதேசங்களானது நம்முடைய கணிப்புகளை விஷமேற்றினதாகவும், நம்முடைய ஆவிக்குரிய கண் பார்வையைக் குறைவுப்படுத்தி, கர்த்தருடைய வார்த்தைகளில் இருக்கும் அழகைப் பார்ப்பதிலிருந்து நம்மைத் தடுக்கிறதாய் இருந்துள்ளதையும் நாம் கண்டுபிடித்துள்ளோம். புதிய நாளுக்காகவும், வேதாகமத்தின் மீது வீசும் வெளிச்சத்திற்காகவும் தேவனுக்கு நன்றி!