R611 (page 3)
அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.” – யோவான் 6:53-54,63
சத்தியத்தைப் மறைப்பொருளாக வெளிப்படுத்துவது இயேசுவின் வழக்கமாக இருந்தது. மேலும், அநேகருக்கு நம்முடைய ஆதாரவசனங்களும் மறைப்பொருள்களில் ஒன்றாகவே இருந்தது. இதைக் கேட்ட யூதர்கள், “”இவர் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பார்” என்று கூறினார்கள்; மற்றும் சீஷர்களில் அநேகர் முறுமுறுத்து, “”இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள்?” என்று கூறினார்கள். இயேசுவினுடைய சொல்லர்த்தமான மாம்சத்தை அவர்கள் புசிக்கும்படியான அர்த்தத்தில் இயேசு கூறவில்லை என்பது இன்றும் பரவலாகப் புரிந்துக்கொள்ளப்பட்டாலுங்கூட, அவர் கூறின அர்த்தத்தைக்குறித்துத் தெளிவான கருத்தைச் சிலரே கொண்டிருக்கின்றனர்.
ஆண்டவர் தம்முடைய வார்த்தைகள் ஆவியாக அல்லது ஆவிக்குரியதாக இருக்கின்றது எனக் கூறியுள்ளபடியால், இயேசுவின் இங்குள்ள வார்த்தைகளின் அர்தத்தத்தைப் புரிந்திட, வார்த்தைகளுடைய சொல்லர்த்தமான அர்த்தத்திற்கு நேர் எதிர்மாறான அர்த்தத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமெனச் சிலர் நிதானிக்காமல் அவசரவசரமாய் முடிவிற்கு வந்துள்ளனர்; மேலும் இப்படிப்பட்டவர்கள், “”மாம்சம் மற்றும் இரத்தம்” ஆவிக்குரிய சுபாவத்தைக் குறிக்கின்றது என்ற முடிவிற்குள் வந்துள்ளனர். இயேசு தம்முடைய வார்த்தைகள்தான், ஆவிக்குரியதாக இருக்கின்றது எனச் சொல்லியுள்ளாரே ஒழிய, மாம்சம் ஆவிக்குரியதாக இருக்கின்றது எனச் சொல்லவில்லை என்பதை இப்படிப்பட்டவர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.
கர்த்தர், “”மாம்சம் மற்றும் இரத்தம்” எனும் வார்த்தைகளைப் பயன்படுத்தின இடங்களில் அவர் ஆவிக்குரிய சுபாவத்தைக் குறிப்பிடவில்லை என்பது, அவர் இந்த “”மாம்சம் மற்றும் இரத்தம்” எனும் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ள இடங்களையெல்லாம் நினைவுப்படுத்திப் பார்க்கும் போது எளிதில் கண்டுக்கொள்ளலாம். “”நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம். இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான். நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே” என்ற வார்த்தைகளை அவர் கூறவில்லையா? (யோவா 6:51-ஆம் வசனம்). அவர் தமது ஆவிக்குரிய சுபாவத்தைக் கொடுக்கின்ற அர்த்தத்திலா பேசினார்? ஒருவேளை அப்படி அவர் கொடுத்திருந்திருப்பாரானால், இப்பொழுது அவருக்கு ஆவிக்குரிய சுபாவம் இல்லையென்பதாகிவிடும். ஏனெனில், அவர் தமக்கு உண்டான யாவற்றையும் கொடுத்துள்ளதை நாம் நினைவுகூருகின்றோம் (மத்தேயு 13:44). உலகத்தின் ஜீவனுக்காக, அவர் தம்மிடமிருந்த திவ்வியச் சுபாவம் அனைத்தையும் கொடுத்ததாக எடுத்துக்கொள்ளப்பட முடியாது. இதைக்குறித்து பேசுகையில் வேறொரு இடத்தில், “இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தமாயிருக்கிறது” என இயேசு கூறுகின்றார். இங்கு அவர் திவ்வியச் சுபாவத்தைக் குறிப்பிட்டுள்ளதாக யார்தான் எண்ணக்கூடும்? ஆவிக்குரியது (அ) ஆவி பிட்கப்பட்டு, சிந்தப்பட்டதா? அல்லது மனுஷீகம் அதாவது, பலிக்கென ஆயத்தம் பண்ணப்பட்ட சரீரம் மரணத்தை அனுபவிக்கும்படி எடுத்துச் செல்லப்பட்டதாக? எது என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்? (எபிரெயர் 10:5; 2:9).
இந்த வேதவாக்கியத்தையும், மற்ற வேதவாக்கியங்களையும் வைத்துக்காணும் கண்ணோட்டத்தின்படி, இயேசு தம்முடைய ஆவிக்குரிய சுபாவத்தைப் பிட்கவும், அதை அனைவரும் புசிக்கச் சொன்னதாகவும் எவரும் அர்த்தம் கொள்ளாதிருப்பார்களாக. “”அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே” என யூதர்களில் சிலர் ஒப்புக்கொண்டதைப் போல், நாமும் ஒப்புக்கொள்வது நலமாயிருக்கும் (18-ஆம் வசனம்).
ஆனால், சிலர் இங்கு இடம்பெறும் “”மாம்சம் மற்றும் இரத்தம்” அநேகமாக இயேசுவினுடைய (ஒழுக்கத்திலுள்ள) நன்நெறியிலுள்ள பூரணத்தையே குறிக்கின்றது என்றும், அனைவரும் இயேசுவிடமிருந்து நன்நெறியில் பூரணத்தைப் (Moral Perfection) பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது புசிக்க வேண்டும், இல்லையேல் ஜீவன் பெற்றுக்கொள்ள முடியாது என்றும் கருத்துத் தெரிவிக்கின்றனர். இக்கருத்தும், மற்றக் கருத்துக்களைப் போன்று இயேசுவின் “”மாம்சம் மற்றும் இரத்தம்” எனும் வார்த்தைகளின் அர்த்தத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றது. நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கென அனைவருக்கும் நன்நெறி/ஒழுக்கமாய் இருக்க வேண்டும் என்பது உண்மையாக இருந்தாலுங்கூட, இது இங்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கும் நமது கர்த்தருடைய வார்த்தைகளுக்கான அர்த்தமல்ல. இவ்வர்த்தம் பொருந்துகின்றதா என நாம் சோதித்து, அறியலாம். இயேசுவின் நன்நெறியிலுள்ள பூரணம் நமக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டதா (அ) பிட்கப்பட்டதா? நிச்சயமாக இல்லை. நன்நெறியிலுள்ள பூரணத்தை ஒப்புக்கொடுப்பது (அ) பிட்கப்படுவது என்பது நன்நெறியில் பூரணக் குறைவு ஆகுவதைக் குறிக்கின்றதாய் இருக்கும். ஆகவே, நாம் அவருடைய திவ்விய சுபாவத்தையோ, அவரது நன்நெறி பண்புகளையோ புசிக்க வேண்டும் என்பது இயேசுவினுடைய வார்த்தைகளின் சாரமாக (அ) அர்த்தமாக இல்லை என்பது, தெளிவாகியுள்ளது.
அப்படியானால் இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ள “”மாம்சம் மற்றும் இரத்தம்” எனும் வார்த்தைகளின் சாரம் (அ) அர்த்தம்தான் என்ன? இவ்வார்த்தைகளுக்கு வேறு வேதவாக்கியங்களில், இடம்பெறும் சாரமே (அ) அர்த்தமே பொருந்தும் என்பதே நமது பதிலாகும். அனைத்து வேதவாக்கியங்களும் நிரூபித்துக் காட்டுவது போன்று “”மாம்சம் மற்றும் இரத்தம்” என்பது மனித சுபாவத்தைக் குறிக்கின்றது. (மத்தேயு 16:17; யோவான் 1:14; கொலோசெயர் 1:22; பிலமோன் 1:16; 1 கொரிந்தியர் 15:50; 1 பேதுரு 1:24; 3:18; 4:1).
இப்பொழுது நாம் “”மாம்சம் மற்றும் இரத்தத்திற்கான” இந்த அர்த்தத்தைச் சோதித்துப் பார்த்து, அது பொருந்துகின்றதா எனப் பார்க்கலாம். இயேசுவின் மனித சுபாவம், உலகத்தின் ஜீவனுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டதா, பிட்கப்பட்டதா? ஆம் மெய்யாகவேதான்; நம் அனைவருக்குமான ஈடுபலி ஆகத்தக்கதாக, தேவதூதரிலும் சற்று சிறியதான நம்முடைய மாம்ச சுபாவத்தை இயேசு எடுத்துக்கொண்டார்; நம்முடைய மனித சுபாவத்திற்கான ஈடுபலியாக, அவர் தம்முடைய மாம்சீக சுபாவத்தைக் கொடுத்து, தம்முடைய சொந்த இரத்தத்தினால் நம்மை வாங்கிக் கொண்டார். நமக்காக தமக்கு உண்டாயிருந்த யாவற்றையும் கொடுத்துவிட்டார் (மத்தேயு 13:44). “”மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.” (1 கொரிந்தியர் 15:21). நமக்கான ஈடுபலியாக, மனிதனாகிய கிறிஸ்து இயேசு தம்முடைய மனித சுபாவத்தைக் கொடுத்ததின் மூலமாக நமக்குப் பதிலாள் (Substitute) ஆனார்.
ஒருவேளை இந்த அர்த்தம் இவ்வார்த்தைத் தொடர்புடைய அனைத்திற்கும் பொருந்துமானால், இதுவே ஆண்டவரின் போதனையுடைய சரியான அர்த்தம் (அ) சாரமாகக் காணப்படும். ஆனால், எந்தவிதத்தில் நம்மால் இயேசுவின் மனித சுபாவத்தைப் புசிக்க முடியும்? என்ற கேள்வி எழும்புகின்றது. புசிப்பது என்பதும், “”மாம்சம் மற்றும் இரத்தம்” போன்றே, அடையாள வார்த்தையே ஆகும். புசிப்பது என்பது புசிக்கப்படும் பொருளின், ஜீவன் கொடுக்கும் தன்மைகளைத் தனக்கெனச் சொந்தமாக்கிக்கொள்வதாகும். இவ்வர்த்தம் எப்படிப் பொருந்துகின்றது என்பதைப் பார்க்கலாம். ஓப்புக்கொடுக்கப்பட்டு, பிட்கப்பட்ட இயேசுவின் மனித சுபவாத்தை நீங்கள், உங்களுக்கெனச் சொந்தமாக்கிக்கொள்ளாதது வரையிலும், உங்களுக்குள் ஜீவன் இல்லை என்பதாகிவிடும். இவ்வர்த்தம் முழு இசைவாய்க் காணப்படுகின்றது. மனுக்குலம், ஆதாமின் மூலமாக, ஜீவிப்பதற்கான அனைத்து உரிமையையும் இழந்துவிட்டனர். ஆகவே, மனுக்குலம் இப்பொழுது மரித்துக் கொண்டே இருக்கின்றது; மற்றும் ஜீவிப்பதற்கான உரிமையைத் தங்களுக்குள் கொண்டிராததால் மரித்துப் போயும் காணப்படுகின்றது; மேலும், ஈடுபலிக் கொடுக்கப்பட்டிருந்தாலும், சரீரம் பிட்கப்பட்டிருந்தாலும், மனுஷன் ஈடுபலிக் கிரயத்தை முழுமையாய் உணர்ந்துக் கொண்டு, மனிதனாகிய கிறிஸ்து இயேசு தம்முடைய மாம்சத்தை (மனித சுபாவத்தை) அனைவருக்காகவும் கொடுத்ததின் மூலம் பாதுகாத்திட்ட அந்த உரிமைகளை, விசுவாசத்தின் மூலமாகச் சொந்தமாக்கிக்கொள்ளாதது வரையிலும், அவன் மீண்டுமாக மனித பூரணத்தை (ஜீவனை) அடையமுடியாது என்பது தேவனுடைய திட்டத்தில் ஒரு பாகமாக உள்ளது. எந்தளவுக்கு வேகமாக சொந்தமாக்கிக்கொள்கின்றோமோ, தேவன் அதை நமக்குத் தரிப்பிக்கின்றவராக இருப்பார்; இப்படியாக கிறிஸ்துவின் நீதியும், நித்தியகாலமாய் ஜீவிப்பதற்கான அதன் உரிமையும் நமக்குத் தரிப்பிக்கப்படும்.
இப்படியாக நமக்கெனப் பலியாக்கப்பட்டதை, விசுவாசத்தின் மூலமாக, நாம் நமக்கென உரிமையாக்கிக் கொள்கின்றோம் அல்லது புசிக்கின்றோம். இப்படியாக, நமக்காகப் பலியாக்கப்பட்ட மனிதனாகிய கிறிஸ்து இயேசுவின் புண்ணியங்களையும், உரிமைகளையும் நமக்கென நாம் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை அல்லது புசிக்கவில்லை என்றால் நமக்குள் ஜீவனும் இராது, ஜீவனுக்கான உரிமையும் நமக்குள் இராது. இயேசுவுக்குள்ளாகவே அல்லது இவர் மூலமாகவே, முதலாம் ஆதாமினால் நாம் இழந்துபோன ஜீவனை, மீண்டுமாக நாம் பெற்றுக்கொள்ள முடியும். வேறு எவர் மூலமாகவும் இரட்சிப்பு (ஜீவன்) இல்லை; காரணம், “”அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்போஸ்தலர் 4:12). ஈடுபலியையும், அதன் அவசியத்தையும் மற்றும் முழு மனுக்குலத்திற்கும் ஜீவனைத் திரும்பக் கொடுக்கும் சக்தி என்ற அதன் முக்கியத்துவத்தையும் மறுதலிக்கின்றவர்கள் எத்துணை ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார்கள். பலியாக்கப்பட்டதைச் சொந்தமாக்கிக்கொள்ளாத (அ) புசிக்காத வரையிலும் எவருக்கும் ஜீவன் இராது. ஆகவேதான், இந்தப் பலியை மதிப்புக் குறைந்ததாக எண்ணி, அதன் முக்கியத்துவத்தை மறுதலிப்பது என்பது மிகக் கடுமையான பாவங்களில் ஒன்று என அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார்; “”தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை (சாதாரணம்) அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்” (எபிரெயர் 10:29).
ஆகவே, இயேசுவினுடைய மாம்சம் மற்றும் இரத்தத்தை (மனித சுபாவத்தை) நமக்கென சொந்தமாக்குவதன் (அ) புசிப்பதன் மூலமாகப் பாவத்திலிருந்தும், அதன் மரணத் தண்டனையிலிருந்தும் நாம் நீதிக்கு ஏதுவாகத் தீர்க்கப்பட்டோம். அதாவது, மனித ஜீவனுக்கும், அதன் சிலாக்கியங்களுக்கும் நாம் நீதிக்கு ஏதுவாகத் தீர்க்கப்பட்டோம் (ரோமர் 5:18-19). இது பொதுவான இரட்சிப்பாகும் (யூதா 3). ஆனால், இரட்சிக்கப்பட்ட உலகத்தின் மத்தியிலிருந்து தெரிந்துக்கொள்ளப்பட்ட சிறுமந்தையினருக்கு அதாவது, பரிசுத்தவான்கள் என்றும், இயேசுவின் உடன் சுதந்திரர்கள் என்றும் அழைக்கப்படுகிறவர்களுக்கு, விசேஷமான இரட்சிப்பு உள்ளது என்று அப்போஸ்தலரால் குறிப்பிடப்பட்டுள்ளது (1 தீமோத்தேயு 4:10).
இந்தப் “”பரம அழைப்பிற்கு” அழைக்கப்பட்டவர்களும், “”திவ்விய சுபாவத்தில் பங்கடையும்படிக்கு” அழைக்கப்பட்டவர்களுமாகிய இவர்கள், இயேசுவினுடைய பலியின் முக்கியத்துவத்தை உணர்வதின் மூலம் ஜீவனைச் சொந்தமாக்கிக்கொள்ளுவதோடு (அ) புசிப்பதோடு மாத்திரமல்லாமல், அதிகமாகவே செய்கின்றனர். மனிதனாக ஜீவிப்பதற்கென நீதிக்கு ஏதுவாக தீர்க்கப்பட்டுள்ள இவர்களுக்கான அதாவது, ஆதாமுக்குள் இழந்திட்ட உரிமைகளை (விசுவாசத்தினால்) மீண்டும் பெற்றுக்கொண்டுள்ள இவர்களுக்கான இந்த யுகத்திற்குரிய அழைப்பு (அ) சிலாக்கியம் என்பது, இயேசு செய்ததுபோல தங்களையே இவர்கள் பலிச் செலுத்தி அல்லது தங்களையே பிட்டு, தங்களுடைய ஜீவனை ஒப்புக்கொடுத்துவிடுவதாகும்; இப்படியாக இவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தத்திற்குப் பாத்திரவான்களாகக் கருதப்படுவார்கள் என்றும், தாங்கள் அவரோடு வாழ்ந்து, மனித சுபாவத்தைப் பலிச் செலுத்துவதற்கான பலனாக அவருக்குக் கொடுக்கப்பட்ட திவ்விய சுபாவத்தில் பங்கடைவோம் என்றுமுள்ள நம்பிக்கையில், “”அவரோடு கூட மரித்தவர்கள்” ஆகுகின்றனர்.
இவ்வகுப்பார் இயேசுவின் பலியை, தங்களுக்கெனச் சொந்தமாக்கிக் கொண்டதோடு (அ) புசித்ததோடுகூட, பலியில் அவரோடு கூட இணைந்தும் உள்ளனர் என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார். “”இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன்.” “நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்” (கொலோசெயர் 1:24; 1 கொரிந்தியர் 10:16-17).
ஆகவே, ஒரு ஜீவ அப்பமானது மனுக்குலம் முழுவதற்குமெனப் பரலோகத்திலிருந்து அளிக்கப்பட்டது; கிறிஸ்துவின் சரீரத்தில் சேர்வதற்கும், மனித சுபாவத்தைப் பலிச்செலுத்தும் விஷயத்தில் அவருடன் பங்கடைவதற்கும், அவரோடு திவ்விய சுபாவத்தைச் சுதந்தரிப்பதற்கும் என்றுள்ள வாய்ப்பானது சுவிசேஷ யுகத்தில் சிலருக்கு அருளப்பட்டது.
இப்படியாக, இயேசுவின் சொல்லர்த்தமான மாம்சத்தைப் புசிப்பதில் நன்மை இல்லை என்றாலும், அவர் பெற்றிருந்ததும், மனுஷருக்காக ஒப்புக்கொடுத்திட்டதுமான (மனுஷீக ஜீவனுக்கான) உரிமைகளைச் சொந்தமாக்கிக்கொள்வது என்பது, பூரணமான மனித ஜீவனுக்கும், அதன் சகல சிலாக்கியங்களுக்கும் உரிமை பெற்றுக்கொள்வதுமாக இருக்கும் என்பதை நாம் பார்க்கின்றோம். “”நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார் (யோவான் 6:53).