R3508 (page 55)
யோவான் 7:37-46
“”அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை.” (வசனம் – 46)
“”முதலாம் மாதத்தின் 15 முதல் 22 வரையிலான பஸ்கா பண்டிகையும், ஏழாம் மாதமாகிய திஸ்ரியின் 15 முதல் 22 வரையிலான கூடாரப்பண்டிகையும், யூதர்களுடைய இரண்டு மாபெரும் பண்டிகைகளாகும். இந்த இரண்டு மாபெரும் பண்டிகைகளும், யூதர் வருடத்தைப் பிரித்தது; மேலும் ஒன்றாய்க்கூடி வாரத்தைச் செலவிடுவதற்கும், கர்த்தருக்கு நன்றி செலுத்துவதற்கும், அவரிடம் வாக்குறுதி அளிப்பதற்குமென இராஜ்யம் எங்கும் இருக்கும் ஜனங்கள், தலைநகரமாகிய எருசலேமுக்கு வருவார்களென எதிர்ப்பார்க்கப்படும் மாபெரும் தருணங்களாக இந்த இரண்டு பண்டிகைகளும் காணப்பட்டன. வருடத்தின் ஆரம்பத்தை, இந்த இரண்டு பண்டிகைகளும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றன. ஒன்று சிவில் ஆண்டின் துவக்கத்தையும், மற்றொன்று சர்ச்/சமய ஆண்டின் துவக்கத்தையும் குறிக்கின்றது; எனினும் இந்த இரண்டு வருடமும் மத அடிப்படையில் கூறப்படலாம், காரணம் இத்தேசத்தின் அரசாங்கம், மத அஸ்திபாரத்தின் மீது இயங்குகின்றது/காணப்பட்டது. இஸ்ரயேல், தேவனுடைய தேசமாக இருக்கின்றது, மேலும் அதன் பிரமாணங்கள் தேவனிடத்திலிருந்து வந்ததாகும்.
இந்தப் பண்டிகைககள் ஒவ்வொன்றும் சிறப்பிற்குரிய பலிகளைக்கொண்டிருந்து, நமது கர்த்தரையும், அவருடைய பலியையும், அவருடைய சரீரமாகிய சுவிசேஷ யுக சபையையும் சுட்டிக்காண்பிக்கின்றதாய் இருக்கின்றது. வருடத்தின் துவக்கத்திலுள்ள பஸ்கா பண்டிகையானது, எகிப்திலிருந்ததான விடுதலைக்கான ஆண்டு நிறைவு நாளாக (anniversary) இருக்கின்றது; பஸ்கா ஆட்டுக்குட்டி, நமக்கான பஸ்கா பலியாகிய கிறிஸ்துவுக்கு அடையாளமாக இருக்கின்றது; மற்றும் பஸ்காவைத் தொடரும் பண்டிகையானது, அவருடைய இரத்தத்தின் மீதான விசுவாசத்தின் மூலமாக மரணத்திலிருந்து தப்புவிக்கப்பட்ட கர்த்தருடைய ஜனங்கள் அனைவருக்கும் வரும் சுதந்தரம், சந்தோஷம் மற்றும் ஆசீர்வாதத்திற்கு அடையாளமாக இருக்கின்றது. இந்தச் சுவிசேஷ யுகத்திற்குரிய மேன்மையான பலிகளுக்கும், இறுதியில் முழு உலகத்தின் பாவத்திற்கான ஒப்புரவாகுதலுக்கும் மற்றும் மனுக்குலத்தின் உலகத்தின் மீது இன்னமும் நிலைத்திருக்கும் சாபம் இறுதியில் மாற்றப்படுதலுக்கும் நிழலாக இருக்கும், பாவநிவாரண நாள் மற்றும் பாவத்திற்கான அந்நாளுக்குரிய பலிகளுடன் சேர்ந்தே இலையுதிர்கால (fall) பண்டிகையும் நடைபெறுகின்றது. இப்பண்டிகையானது, இஸ்ரயேலர்கள் வனாந்தரத்திலிருந்து, வாக்குத்தத்தத்தின் தேசத்திற்குள் [R3509 : page 55] கடந்து வந்தபோது நிறுவப்பட்டது. இப்பண்டிகையானது, வனாந்தரத்தின் வாழ்க்கையையும், நிலையாக தங்கும் இடத்தை அவர்களால் அனுபவிக்க முடிந்த கானானுக்குள் பிரவேசிப்பதையும் நினைவுகூருவதாக இருந்தது. உண்மையில் இது புதிய வருடத்திற்கான பண்டிகையாகவும், அவ்வருடத்தின் அறுவடைக்காக அல்லது சேர்ப்புக்காலத்திற்காக நன்றி ஏறெடுக்கும் தருணமாகவும் இருந்தது. (யாத்திராகமம் 23:16; லேவியராகமம் 23:33-44)
இத்தருணத்தின்போது ஜனங்கள் செய்யும் காரியத்தைக் குறித்துப் பின்வருமாறு எடர்சேயிம் மற்றும் இன்னும் பலர் விவரிக்கின்றார்கள்:-
“”எருசலேம் எங்கும், முற்றங்களிலும், தெருக்களிலும், வீட்டுக்கூரைகளிலும், சமநிலையான இடங்களிலும் கூடாரங்கள் போடப்பட்டிருக்கும். இந்தக் கொடி வீடு (அ) கூடாரங்கள் பேரிச்சம் மரங்கள், ஒலிவ மரங்கள், ஆற்றலரிகள், தேவதாரு மரங்கள், காட்டத்தி மரங்கள் முதலியவைகளின் ஓலைகளினால்/கிளைகளினால் உண்டாக்கப்படுகின்றது. எவரும் வீடுகளில் தங்குவதில்லை, எல்லோரும் இந்தக் கூடாரங்களிலேயே தங்குகின்றனர். பட்டணத்திலும், நாட்டிலுமுள்ள ஜனங்கள் அனைவருமே கூடாரங்களில் வசிப்பார்கள். அந்தஸ்தில் இருக்கும் வித்தியாசங்கள், ஏழை மற்றும் ஐசுவரியவானுக்கு இருக்கும் வித்தியாசங்கள் கொஞ்சக் காலம் மறக்கப்படுகின்றது, ஏனெனில் ஒவ்வொருவரும், தன்னுடைய அயலானைப் போலவே, கூடாரங்களில் தங்குகின்றவனாய் இருக்கின்றான்.”
“”ஒவ்வொரு நாள் காலையிலும் இசையுடன், சந்தோஷத்துடன் ஓர் ஊர்வலமானது சீலோவாம் குளத்திற்குச் சென்று, பொன்னினாலான பானையில் தண்ணீர் மொண்டுக் கொண்டு வந்து, அல்லேலூயா என்று குரல்கள் தொனிக்கப்படுதலின் மத்தியில் பலிப்பீடத்தின் மீது ஊற்றப்படுகின்றது.”
“”இரவில், வெளிச்சத்திற்காகப் பொன்னினாலான நான்கு அகல்களை உடைய, பொன்னினாலான நான்கு கொத்து விளக்குத் தண்டுகளானாது (candelabra) பிரகாரத்தினுடைய நடுவில் வைக்கப்படுகின்றது; இதிலிருந்து வரும் வெளிச்சமானது முழுப் பட்டணமும் காணத்தக்கதாய் இருக்கும். இந்த விளக்குகளைச் சுற்றி, பயபக்தியுள்ள புருஷர்கள் தங்களது கைகளில் தீவட்டிகளை வைத்துக்கொண்டு, துதிப்பாடல்களைப் பாடிக்கொண்டு, ஜனங்களுக்கு முன்பாக ஆடுவார்கள்; இவர்கள் இப்படியாக ஆடுகையில் லேவியர்கள் 122-134 வரையிலான 15 சங்கீதங்களைக்குறிக்கும் (சங்கீதங்களுக்கு அடையாளமான), ஆலயத்திலுள்ள ஸ்திரீகளுக்கான பிரகாரத்திற்குக்கொண்டுச் செல்லும் 15 படிகளில் நிறுத்தப்பட்டு, இசைக்கருவிகளின் இசையுடன் பாடப்படும் பாடல்களுடன் இணைந்துப் பாடுவார்கள்.”
“”ஆலயத்தின் இந்த வெளிச்சம் என்பது ஆலயத்திலிருந்து, புற சமயத்தாரின் இருளான இரவின் மீது பிரகாசிக்கும் ஒளிக்கு அடையாளமாய் இருந்தது; பின்னர் விடிகையில், தேவனுடைய சேனையாகிய ஆசாரியர்களின் வெள்ளி பூரிகைகளின் தொனியுடன், பண்டிகைக்கான பூரிகையின் தொனிக்கும் ஒலியானது நித்திரைப் பண்ணிக் கொண்டிருப்பவர்களை விழித்தெழச் செய்கின்றது மற்றும் அது அஞ்ஞான மார்க்கத்திற்கு எதிரான, தீர்க்கமான எதிர்ப்பைத் தெரிவிக்கின்றது.”
“”பண்டிகையின் கடைசி சாயங்கால வேளையில்தான், இந்தப் பிரமாண்டமான ஒளியின் வெளிச்சம் அணைய இருக்கையில், கிறிஸ்து, “”நானே உலகத்திற்கு ஒளியாக இருக்கின்றேன்” என்று கூறி தம்முடைய கவனத்திற்கு அனைவரையும் திருப்பினார் என்று எண்ணப்படுகின்றது; அதாவது என்றென்றும் பிரகாசிக்கின்றதும், ஆலயத்திலும், பரிசுத்த பட்டணத்திலும் மாத்திரமல்லாமல், முழு உலகத்திலும் நீதியின் சூரியனாக ஒளியூட்டப் போகின்றதுமான தம்மிடத்தில் யோவான் 8:12-ஆம் வசனத்தின் வார்த்தைகளைக் கூறிக் கவனத்தைத் திருப்பினார்.”
பண்டிகையினுடைய ஏழு நாட்களின் கடைசிநாளானது, பிரதான நாள் என்று அழைக்கப்படுகின்றது. இந்தக் கடைசி நாளில்தான் முழுப் பண்டிகையினுடைய அனுசரிப்பும், மற்றும் சந்தோஷமும் உச்சக்கட்ட நிலையயை அடைகின்றது. மீண்டுமாக எடல்சேயிம் மற்றும் இன்னும் பலர் கூறுவதைப் பார்க்கலாம்:-
“”யூதர்களுடைய பாரம்பரியத்தின்படி, தேவனுடைய பிரசன்னத்திற்கும், வழிகாட்டுதலுக்கும் அடையாளமாய் இருக்கும் காலை வேளையிலுள்ள மேகஸ்தம்பமும், இரவு வேளையிலுள்ள அக்கினி ஸ்தம்பமும், இதே திஷ்ரி மாதம் 15-ஆம் தேதியில்தான் இஸ்ரயேலர்களுக்குத் தோன்றியது. திஷ்ரி மாதம் 15-ஆம் தேதியே, இந்தப் பண்டிகையினுடைய முதலாம் தேதியாகும். அந்த நாளில்தான் மோசே மலையிலிருந்து இறங்கி வந்து, ஜனங்கள் மத்தியில் தேவனுடைய கூடாரம் நிறுவப்பட [R3509 : page 56] வேண்டும் என்று ஜனங்களுக்குத் தெரிவித்ததாக இருக்கின்றது. சாலொமோனின் ஆலயம் பிரதிஷ்டைப் பண்ணப்பட்டதும், ஆலயத்தின் மீது ஷெக்கினா மகிமை இறங்கி வந்ததும் இப்பண்டிகையினுடைய நாட்களில்தான் என்று நாம் பார்க்கின்றோம். (1 இராஜாக்கள் 8; 2 நாளாகமம் 7).
“”பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளே, இந்த அனைத்து அடையாளங்களுக்குமான உச்சக்கட்டமாக இருக்கின்றது. அதிகாலையில் ஜனங்கள் தங்களது இடது கையில் பாரடைஸ் ஆப்பிளுடனும் (ஆரஞ்சு பழத்துடனும்), வலது கையில் ஓலைகளுடனும், ஆலயத்திற்குத் தெற்கே இருக்கும் சீலோவாம் குளத்திலிருந்து தண்ணீர் மொண்டுக்கொள்வதற்குரிய பொன்னினாலான பானையைச் சுமக்கும் ஆசாரியனுக்குப் பின்னாக, இசையின் சத்தத்துடன் ஊர்வலமாகச் செல்வார்கள்; இந்தக் குளத்திலிருந்து ஆசாரியன் பொன்னினாலான பானையில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு, அதை ஜனங்களின் ஆரவாரக் குரல்கள், பூரிகைகள் மற்றும் கைத்தாளங்களின் ஒலியின் மத்தியில் ஆலயத்திலுள்ள பிரகாரத்திற்குக்கொண்டு வருவார். அன்றாட காலை பலிப்பொருட்டு, தகனபலி செலுத்தப்படுவதற்காகத் துண்டுப்பாகங்கள் மாபெரும் பலிப்பீடத்தில் வைக்கையில், தண்ணீரண்டைக்குப் போன கூட்டம் திரும்பத்தக்கதாக, நேரம் சரியாய்க் கையாளப்படுகின்றது.”
“”ஏழு நாட்களும் ஆசாரியன், “”யாவே இப்பொழுது இரட்சிப்புக் கொடுத்தருளும், ஓ; யாவே வளமைக் கொடுத்தருளும்!” என்று கூறி, பலிப்பீடத்தைச் சுற்றி வருவார். ஆனால் ஏழாம் நாள் அன்றோ, ஏழு முறை சுற்றி வந்தபோது, எப்படி எரிகோ மதில் விழுந்தது என்பதை நினைவில் கொண்டவர்களாகவும், தேவனுடைய நேரடியான இடைபடுதலின் காரணமாக, யேகோவாவிற்கு முன்னதாக அந்நிய தேசங்களின் மதில்கள் விழுந்து, அவருடைய ஜனங்கள் போய், சொந்தமாக்கிக்கொள்ளத்தக்கதாக உலகம் தங்களுக்கு முன் திறந்துக்கிடக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பைக்கொண்டவர்களாகவும் ஏழு முறை பலிப்பீடத்தைச் சுற்றி வந்தார்கள்.”
“”பொன்னினாலான பானையில் நிரம்பியிருந்த தண்ணீரானது பலிப்பீடத்தின் மீது ஊற்றப்படுகின்றது. இந்த அனுசரிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பரிசுத்த ஆவி பொழியப்படுவதற்குரிய அடையாளமாகவும் கருதப்படுகின்றது. இந்தத் தண்ணீர் ஊற்றப்பட்ட உடனே மாபெரும் வாழ்த்திப்பாடுதல் நடக்கின்றது. இது 113-118 வரையிலான சங்கீதங்களை உள்ளடக்குகின்றது. இவைகள், இசையுடன் கூட, விடையளித்தலுடன் பாடப்படுகின்றது. லேவியர்கள் சங்கீதத்தின் முதல் வரியை இசையுடன் கூடப் பாடும் போது, ஜனங்களும் அதை அப்படியே திரும்பவும் கூறுவார்கள்; ஆனால் மற்ற வரிகள் பாடப்படும்போது, அவர்கள் அல்லேலூயா என்று விடையளிப்பார்கள். பின்னர் ஆசாரியர்கள் தங்களது வெள்ளியிலான பூரிகைகளை மூன்று மடங்கு வேகத்துடன் ஊதுவார்கள்.”
நம்முடைய பாடம், நமது கர்த்தர் சிலுவையில் அறையப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக அவரால் கலந்துக்கொள்ளப்பட்ட கடைசிக் கூடாரப்பண்டிகை பற்றியதாகும். நம்முடைய கடந்த பாடத்தில், பஸ்கா பண்டிகைக்கென ஜனங்கள் எருசலேமை நோக்கி பிரயாணம் பண்ணிக்கொண்டிருக்கும் வேளையில்தான், ஐயாயிரம் பேர்ப்போஷிக்கப்பட்ட சம்பவம் நடந்தது என்று நாம் பார்த்தோம். ஆகவே நம்முடைய தற்போதைய பாடத்தின் சம்பவமானது சுமார் ஆறு மாதங்களுக்குப் பிற்பாடே நடந்திருக்க வேண்டும். அநேகமாக ஒரு வருடமும், ஆறு மாதமும் கடந்திருக்க வேண்டும். ஏனெனில், “”யூதர்கள் அவரைக் கொன்று போட வகைத் தேடின காரணத்தினால், அவரால் யூதர்கள் மத்தியில் சஞ்சரிக்க முடியாமல் அதிக காலம் இருந்தது.”
இந்தப் பண்டிகையின் போது, இயேசு இதில் கலந்து கொள்வாரா, இல்லையா என அநேகர் எண்ணினார்கள், காரணம் கர்த்தருக்கு எதிராக பிரதான ஆசாரியர்கள் மிகவும் பொறாமைக்கொண்டிருந்தனர் என்றும், மிகவும் வெறுப்புக்கொண்டிருந்தனர் என்றும், மிகுந்த விரோதம்கொண்டிருந்தனர் என்றும், அவருடைய ஜீவனுக்கு அச்சுறுத்தல் காணப்பட்டது என்றும் அநேகர் நன்கு அறிந்திருந்தார்கள் என்பது தெரிகின்றது. கர்த்தர் தம்முடைய வேளை வருவது வரையிலும், தம்முடைய ஜீவன் தெய்வீகப் பாதுகாப்பின் கீழ்க்காணப்படுகின்றது என்பதை உணர்ந்திருந்ததினால், ஆபத்தான பாதையில் அவசியமில்லாமல் சென்று, தெய்வீகப் பாதுகாப்பை அவர் சோதிக்க முற்படாமல், மாறாக சூழ்நிலைகளுக்கு ஏற்ப தம்முடைய வழியை வனைந்துக்கொண்டதைப் பார்க்கின்றோம். இப்படியாகவே தம்முடைய சீஷர்களுக்கும் அவர் புத்திமதி அருளினார், அதாவது, “”ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால், மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்” என்று கூறினார் (மத்தேயு 10:23).
அத்தருணத்தில் நம்முடைய கர்த்தருடைய சகோதரர்களில் சிலர் (அநேகமாக அவருடைய சித்தப்பா/பெரியப்பா பிள்ளைகளாக இருக்க வேண்டும்; ஏனெனில் அக்காலத்தில் சித்தப்பா/பெரியப்பா பிள்ளைகள்/cousins “”சகோதரர்கள்” என்று அழைக்கப்படுவதுண்டு). அவருடைய மேசியாத்துவத்தின் மீது சந்தேகம் உடையவர்களாக அவர் எருசலேமுக்குச் சென்று, அங்கு அவருடைய வல்லமையான கிரியைகளை நடப்பிக்கும்படிக்கு வற்புறுத்தினார்கள், ஏனெனில் எருசலேமில்தான் அவருடைய வல்லமையான கிரியைகளைப் பார்ப்பதற்கும், விமர்சிப்பதற்கும், குற்றம் கண்டுபிடிப்பதற்கும், கூடுமானால் அவர் உரிமைப் பாராட்டிக்கொண்டிருப்பவைகளையும், அற்புதங்களைத் தவறு என மறுத்து வாதிடுவதற்கும், தேசத்தின் கல்விமான்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமென அவருடைய சகோதரர்கள் எண்ணினார்கள். யோவான் 7:8-ஆம் வசனத்தின் வார்த்தைகள், நமது கர்த்தருடைய பதிலாக இருந்தது. ஒருவேளை நமது கர்த்தர் பண்டிகையினுடைய ஆரம்ப நாளிலேயே வந்திருப்பாரானால், அது மதபோதகர்களுடைய பகைமையை இன்னும் அதிகமாய்த் தூண்டி விட்டிருந்திருக்கும். அவர் தாமதமாய்ப் பண்டிகைக்குச் சென்றது, எவ்விதத்திலும் அவருடைய போதனைகள் பிரசித்திப் பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை, ஏனெனில் ஜனங்கள் அவரைக் குறித்து விசாரித்து, அவரைக் குறித்து ஆச்சரியப்பட்டு, அவர் உரிமைப் பாராட்டிக்கொண்டவைகளைக் குறித்து ஆராய்ந்து, ஒவ்வொருவரும் தங்களுடைய பட்டணங்களில், கிராமங்களில் கண்டவைகளையும், கேட்டவைகளையும் ஒருவருக்கொருவர் தெரிவித்தவர்களாகவே காணப்பட்டார்கள். பண்டிகை வாரத்தின் பாதியில்தான் நமது கர்த்தர் காட்சியில் நுழைந்து, நேரடியாக ஆலயத்திற்குச் சென்று, ஜனங்களுடைய பயபக்தியின் உணர்வானது, உச்சக்கட்டமான நிலையில் காணப்படும்போது, நமது கர்த்தர் அவர்களுடைய கவனத்தை வருடந்தோறும் அவர்களால் அனுசரிக்கப்பட்டு வரும் காரியங்கள் அடையாளப்படுத்தும் ஆழமான ஆவிக்குரிய காரியங்களின் மீது திருப்பினார்.
கர்த்தருக்குப் பானபலியாக, பொன்னினாலான பானையிலுள்ள தண்ணீர் பலிப்பீடத்தின் மீது ஊற்றப்பட்டுத் தீரும்போதும், வெப்பமான நிலையில் ஜனக்கூட்டத்தார் அநேகமாக தாகத்துடன் இருக்கையில் மற்றும் தண்ணீரைப்பார்த்த மாத்திரத்தில் தண்ணீருக்கான தாகம் இன்னும் அதிகரிக்கப்பட்ட நிலையில் இருக்கும் போதுதான், “”பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்” என்ற வார்த்தைகளைக் கூறியிருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது (யோவான் 7:37-38).
தீர்க்கத்தரிசி முன்னுரைத்ததுப் போல, நமது கர்த்தர் உவமைகளாகவும், மறைப்பொருள்களாகவும் பேசியுள்ளார் என்று ஜனங்களும் கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. கேட்டுக்கொண்டிருந்த ஜனக்கூட்டத்தாரில் இருந்த எத்தனை பேர், அதாவது எத்தனை சொற்பமானவர்கள் இந்த அவருடைய செய்தியின் அர்த்தத்தைப் புரிந்திருப்பார்கள்! ஆவிக்குரிய யுகத்தின் கீழ் நமக்கு இருக்கும் பாக்கியமான சூழ்நிலைகளிலுங்கூட, எத்தனை சொற்பமானவர்களே அவருடைய இந்த வார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்துக்கொள்பவர்களாகக் காணப்படுகின்றனர்.
சொல்லர்த்தமான தாகம் என்ன என்றும், சொல்லர்த்தமான தண்ணீரைக் குடிப்பதன் மூலம் வரும் புத்துணர்வு எப்படி இருக்கும் என்றும் அனைவருக்கும் தெரியும்; மேலும் கர்த்தர் கொடுக்க இருக்கிறதான ஜீவத்தண்ணீர் தொடர்புடைய அவருடைய வார்த்தைகளைப் புரிந்துக்கொள்ள வேண்டுமெனில், நாம் நிழலை முன்னே கொண்டு நிறுத்தி, திருப்திப்படுத்தப்பட வேண்டிய மனித சுபாவத்தினுடைய மற்றத் தாகங்கள் மற்றும் ஆசைகளும் இருக்கின்றது என்றும், திருப்திப்படுத்தாதப் பட்சத்தில் அமைதியின்மையையும், பெரும் துயரத்தையும் கொடுக்கும் என்றும் நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். இந்த இருதயத்தின் ஆசைகளை நாம் சுருக்கமாக சமாதானம், அமைதி, சந்தோஷம், ஐக்கியத்திற்கான தாகம் என்று குறிப்பிடுகின்றோம். இப்படியான தாகம்கொண்டிருப்பவர்கள் மாத்திரமே, “”பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்று கூறப்படுகின்றனர். நம்முடைய சந்ததியிலுள்ள அநேகர், தற்போதைய காலத்தில் மனரீதியிலும், சரீ ரரீதியிலும் மிகவும் சீரழிந்துப்போய் உள்ளபடியால், அவர்களால் இப்பொழுது அனுபவித்துக்கொண்டிருப்பவைகளைக் காட்டிலும் மேலானதாய் இருக்கும் விஷயங்களுக்காக பசிதாகம் பெற்றிருப்பதில்லை; அதாவது, அவர்கள் பெற்றிருக்கும் பூரணமற்ற விஷயங்களினால் ஏற்கெனவே நிரப்பப்பட்டு, திருப்தியடைந்திருக்கின்றார்கள். இப்படியாக இருப்பவர்களுக்கல்லாமல், மாறாக பசிதாகம் உள்ளவர்களுக்கே, கர்த்தர், “”ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” என்று கூறினார்.
இதுவே இந்தச் சுவிசேஷ யுகத்திற்குரிய அழைப்பாகும். தாகங்கொண்டவர்களையே கர்த்தர் நாடி, கண்டுபிடிக்கின்றார்; மேலும் இப்படிப்பட்டவர்கள் கிருபை மற்றும் சத்தியம் எனும் அவருடைய ஊற்றில் பருகுவார்களானால், அவர்கள் உலகத்தினால் கொடுக்க முடியாததும், எடுத்துப் போட முடியாததுமான ஆறுதலை, சந்தோஷத்தை, சமாதானத்தை, இளைப்பாறுதலை, ஆசீர்வாதத்தை, திருப்தியைக் கண்டடைவார்கள். ஆகவே தாகம் உள்ளவர்கள் பாக்கியவான்களாய் இருப்பார்கள்; மற்றும் அடிக்கப்பட்ட கன்மலையாகிய, நமது கர்த்தரிடமிருந்து வரும் தண்ணீரை இப்பொழுது பருகிக்கொண்டிருப்பவர்கள், தயை பெற்றிருக்கின்றவர்களாய் இருக்கின்றனர் (1 கொரிந்தியர் 10:4).
[R3510 : page 57]
நமது கர்த்தருடைய வார்த்தையை அப்போஸ்தலர் விவரிக்கையில், அவர் முதல் பாகத்தையே விவரிக்கின்றாரே ஒழிய, இரண்டாம் பாகத்தை அல்ல. “”தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக் குறித்து இப்படிச் சொன்னார்” என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார் (யோவான் 7:39). ஆவியைப் பெற்றுக்கொள்வது என்பது, நமது தாகத்தைத் தணிப்பதாகும். ஜீவகாலம் முழுவதும் இந்த ஊற்றில் நாம் பருகுகின்றவர்களாய் இருக்கின்றோம். கர்த்தருடைய சாயலில் நாம் விழிக்கும் வரையிலும் நாம் திருப்தியடைகிறதில்லை; பின்னர் சங்கீதக்காரன் கூறியுள்ள பிரகாரம், “”நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்” என்று இருக்கும்; அதாவது இந்த அழியக்கூடியது, அழியாமையினால் ஜெயமாய் விழுங்கப்படும்போது, நாம் நமது அன்பார்ந்த மீட்பர் போல காணப்பட்டு, அவர் இருக்கிற வண்ணமாக அவரைத் தரிசித்து, அவருடைய சரீரத்தின் அங்கங்களாக, அவருடைய மகிமையில் பங்கடைவோம்.
பரிசுத்த ஆவியானது தீர்க்கத்தரிசிகள் மீது செயல்படுத்தப்பட்டது; மேலும் அதனுடைய செயலாற்றலின் கீழ் அவர்கள் பேசவும், எழுதவும் செய்தார்கள். ஆனால் பெந்தெகொஸ்தே நாள் முதல் சுவிசேஷ யுக சபைக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவி வித்தியாசமானதாகும்; அது தீர்க்கத்தரிசனத்தின் ஆவியாய் அல்லாமல், புத்திரசுவிகாரத்தின் ஆவியாகவும், புரிந்துக்கொள்ளுதலின் ஆவியாகவும் இருக்கின்றது. நம் சார்பாக இயேசு ஈடுபலியாகக் கொடுப்பது நிறைவேறி, அவர் பரத்திற்கு ஏறி, அந்தப் பலியின் புண்ணியத்தை நம் சார்பில் பிதாவிடம் ஒப்படைத்து, அது பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்படுவது வரையிலும், தேவனுடைய புத்திரர்களாக எவரும் ஆவியில் ஜெநிப்பிக்கப்படுவது என்பது கூடாத காரியமாக இருந்தது. பின்னரே புத்திரசுவிகாரத்தின் ஆவியாகிய இந்த ஆசீர்வாதமானது, அப்போஸ்தர்கள் மீது பொழியப்பட்டது. அதுமுதல் கிறிஸ்துவின் சரீர அங்கத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைவரும், உடன் அங்கங்களுடன் சேர்ந்து, இரட்சிக்கப்படும் நாள் வரையிலும், அனைவரையும் முத்திரித்துள்ள அந்த ஒரே ஆவியின் பங்காளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். “”அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்” (எபேசியர் 4:30).
“”அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்” (யோவான் 7:38). இவ்வசனமானது பெந்தெகொஸ்தே நாளில் நிறைவேறவில்லை. பெந்தெகொஸ்தே நாளில், கர்த்தருடைய பின்னடியார்கள் ஆவிக்குரிய சத்தியங்களைப் பருக மாத்திரமே ஆரம்பித்தார்கள்; மற்றும் இந்தச் சத்தியங்கள் மூலம் இயேசுவைத் தலையாகப் பெற்றுள்ள அநேக அங்கங்களுடைய ஒரே சரீரத்திற்குள் இணைக்கப்படுகின்றனர். இந்த ஒரே சரீரத்திலிருந்துதான் இறுதியில், முழு உலகத்திற்கான ஆசீர்வாதத்திற்கென ஆயிரவருட யுகத்தின் போது, ஜீவத்தண்ணீரின் நதிகள் ஓடிவரும். இதைக் குறித்து நமது கர்த்தர் பேசுகையில், “”நான் சொன்ன வசனமே அவனைக் கடைசி நாளில் நியாயந்தீர்க்கும்” (யோவான் 12:48); அதாவது கடைசி நாள் என்பது மாபெரும் நாளாகிய, ஆயிரவருட யுகமாகும்; தேவனுடைய வாயினின்று புறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையினாலும் உலகமானது நியாயந்தீர்க்கப்படும். ஜீவத்தண்ணீர் என்பது சத்தியத்தைக் குறிக்கின்றது; மேலும் கர்த்தருடைய வாயினின்றும், மகிமையடைந்த சபையின் வாயினின்றும் புறப்படும் இந்த ஜீவத்தண்ணீர் (அ) சத்தியத்தின் அளவானது நதிபோன்று இருப்பதினால், அது பூமியின் அனைத்துப் பாகங்களையும் சென்றடைகின்றதாய் இருக்கும். பூமி முழுவதும் தேவனுடைய மகிமைப் பற்றின அறிவினால் நிரப்பப்படும்.
தற்காலத்தில் ஜீவத்தண்ணீரின் ஊற்றில் பருகுகின்றவர்கள், கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகப் பரிசுத்தமாக்கப்படுகின்றனர், மற்றும் நமது கர்த்தர் இவர்களைக் குறித்துப் பேசுகையில், இவர்களுக்குள்ளான தம்முடைய கிருபையும், சத்தியமும் நித்திய காலத்திற்குரியதுமான ஜீவனைக் கொடுக்கும் ஊற்றாக இருக்கின்றது என்று கூறுகின்றார். வெளிப்படுத்தின விசேஷத்தின் 21-ஆம் அதிகாரத்தில் கிறிஸ்துவின் சரீரத்தினுடைய பல்வேறு அங்கங்கள் மகிமையில் ஒன்றுசேர்க்கப்படுவது குறித்தக் காட்சிக் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒட்டுமொத்தமாக புதிய எருசலேம் என்றும், அதினின்று நம்முடைய கர்த்தர் இப்பாடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றபடி, ஜீவத்தண்ணீரின் நதியானது வரும் என்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அது ஜீவத்தண்ணீருள்ள மாபெரும் ஆறு ஆகும், மற்றும் அதன் இரண்டு கரைகளிலும், அதனால் போஷாக்களிக்கப்பட்ட நல்ல கனிகள் கொடுக்கும் ஜீவ விருட்சங்கள் காணப்படுகின்றன மற்றும் அந்த விருட்சங்களின் இலைகளானது, ஜாதிகளுடைய சொஸ்தமாக்குதலுக்காகும்.
இப்படியாக நமது கர்த்தருடைய வார்த்தைகளானது, இந்தச் சுவிசேஷ யுகத்திலுள்ள தம்முடைய பின்னடியார்களின் மீது வரும் ஆசீர்வாதங்களையும், பூமியின் குடிகள் அனைத்தையும் ஆறுதல்படுத்தப்படுவதற்கும், ஆசீர்வதிக்கப்படுவதற்கும், சீர்த்தூக்கப்படுவதற்கும், இழந்ததைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்குமெனத் தம்முடைய பின்னடியார்கள் வாயிலாக அடுத்த யுகத்தில் கடந்து வரும் ஆசீர்வாதங்களையும் சுருக்கமாகத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. அடுத்த யுகத்தில் ஜீவத்தண்ணீரின் ஆறானது இலவசமாய்க் காணப்படும், மேலும் அதனிடத்திற்கு ஆவி மற்றும் மணவாட்டியினுடைய அழைப்பு விடுக்கப்படும்.
சமாதானமும், ஒற்றுமையும், பெரிதும் விரும்பப்பட வேண்டும்; எனினும் இது எப்பொழுதும் சாத்தியம் அல்ல, எப்பொழுதும் நன்மைக்கு ஏதுவானதாயும் இராது. ஒருவேளை அனைவரும் பரிபுரணமாய்க் காணப்பட்டார்களானால், சமாதானமும், ஒற்றுமையும்தான் தகுந்த நிலைமையாக நிச்சயமாய்க் காணப்பட்டிருந்திருக்கும். ஆனால் பூரணமின்மைகளும், தப்பறைகளும் இருப்பது வரையிலும், வேற்றுமைகள் காணப்பட வேண்டும். இதற்கு இசைவாகத்தான் நம்முடைய கர்த்தர், தம்முடைய செய்தி சமாதானத்தைக்கொண்டு வராது என்றும், தற்காலத்தில் பட்டயத்தையே கொண்டுவரும் என்றும் கூறியுள்ளார். அவர் பின்னாட்களின் சமாதானத்தின் பிரபுவாக இருப்பார்; ஆனால் நீதியின் அடிப்படையில், சமாதானமானது நிலைநாட்டப்படாதது வரையிலும் அவர் சமாதான பிரபுவாக இருப்பதில்லை. இப்படி நிலைநாட்டப்படுவதற்கு முன்பு வரையிலும், அவர் நீதியில் ஆளுகை செய்யும் இராஜாவாக இருந்து, இருப்புக் கோலால் தீமையான அமைப்புகளையும், காரியங்களையும் குயவன் கலத்தை நொறுக்குவது போன்று நொறுக்குவார்.
சமாதானம் இல்லாமல் இருக்கும் பொழுதும், சமாதானத்திற்கு வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பொழுதும், சமாதானம், சமாதானம் என்று சொல்லுகின்றவர்கள் இருப்பார்கள்; இப்படிக் கூறுபவர்களில் கர்த்தருடைய ஜனங்கள் காணப்படுவதில்லை. இதனிமித்தம் கர்த்தருடைய ஜனங்கள் கலகத்தைத் தூண்டி விடுபவர்களாக இருப்பார்கள் என்பது அர்த்தமல்ல. மாறாக இவர்கள் சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருக்க வேண்டுமென, வேதவாக்கியங்களில் எங்கும் புத்திமதிக் கூறப்படுகின்றது; சமாதானத்திற்கான பிரயாசங்களை எடுப்பவர்களாகவும், சமாதானத்தை விரும்புகின்றவர்களாகவும், சமாதானம் பண்ணும் தங்களது பண்பைத் தொடர்ந்து பெருக்கிக்கொள்பவர்களாகவும் காணப்பட்டும் கூட, இவர்களுக்குக் கர்த்தர் கொடுத்திட்ட செய்தியானது பிரச்சனையை வளர்க்கின்றது ஏன்? வெளிச்சத்திற்கும், இருளுக்கும் ஐக்கியம் இராததினால், இவை இரண்டிற்கும் நடுவே சமாதானம் இருக்க முடியாது என்றும், எந்தளவுக்கு ஒன்று ஆதிக்கம்கொள்கின்றதோ, அப்பொழுது மற்றொன்று அந்தளவுக்குப் பின்னுக்குத் தள்ளிவிடப்படுகின்றது என்றும், நாம் கர்த்தருடைய வார்த்தைகளின் அடிப்படையில் பதிலளிக்கின்றோம்.
இதற்கு இசைவாகவே இப்பாடத்தில், அவரைக் குறித்த விஷயத்தில் ஜனங்கள் மத்தியில் பிரிவு ஏற்பட்டதை நாம் பார்க்கின்றோம்; சிலர் அவரை அங்கீகரித்தும், சிலர் அவரை எதிர்த்தும் காணப்பட்டனர். இப்படியாகவே நாம் நீதியின் கொள்கைகளை உயர்த்தும் போதும் காணப்படும். நாம் சத்தியத்தின் ஒளியைப் பிரகாசிக்கப்பண்ணும்போது, சத்தியத்தை விரும்புகின்றவர்கள் தங்களுடைய இருதயத்தின் உண்மை மற்றும் சத்தியத்தின் மீதான வாஞ்சைக்கு ஏற்ப, சத்தியத்தினிடத்திற்குக் கொஞ்சமாகவோ, அதிகமாகவோ ஈர்க்கப்படுவார்கள். மேலும் தப்பறையை விரும்புகின்றவர்கள், தங்களிடத்தில் இருக்கும் உண்மை குறைவுக்கு ஏற்ப, சத்தியத்தை எதிர்க்கின்றவர்களாய் இருப்பார்கள். நமது கர்த்தருடைய நிலைமையே இப்படி இருக்குமாயின், அவருடைய பின்னடியார்களுடைய நிலைமை வித்தியாசமாக இருக்கும் என்று நாம் எண்ண முடியுமோ? நிச்சயமாக இல்லை. நம்முடைய பாதங்களுக்கு நாம் சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் எனும் பாதரட்சையைத் தரித்துக்கொண்டிருக்க வேண்டும். நம்முடைய சுவிசேஷமானது, சமாதானத்தின் சுவிசேஷமாகும், எனினும் நாம் அதை மற்றவருக்குச் சுமந்துச் செல்லுகையில், நமக்கான பாதை கடினமான ஒன்றாக இருக்கும்; மற்றும் நாம் என்ன எதிர்ப்பார்க்கலாம் என்பது பற்றிக் கர்த்தரால் முன்னறிவிக்கப்பட்டுள்ளவைகளில் அடங்கும் அனைத்துப் பாதுகாப்புகளும் மற்றும் ஜெயங்கொள்பவர்களுக்கான மகிமை மற்றும் ஆசீர்வாதம் பற்றின அவருடைய வாக்குத்தத்தங்களும் நமக்கு அவசியப்படும்.
நமது கர்த்தர் ஆலயத்தில் போதித்துக்கொண்டிருந்தபோது, அவர் அங்கு இருப்பதை அறிந்திருந்த யூத அதிகாரிகள், அவருடைய ஜீவனை எடுக்க சதித்திட்டம் போட்டனர். ஆலோசனை சங்கத்தார் அழைக்கப்பட்டனர், மேலும் இவர்களின் சேவகர்கள் ஜனங்கள் மத்தியில் ஆலயத்தில் நிறுத்தப்பட்டனர்; இந்தச் சேவகர்கள் அவருடைய போதனையில் குற்றம் கண்டுபிடிப்பதற்கும், அதைக் கலகத்திற்கான சாக்குப்போக்காகப் பயன்படுத்தி, நமது கர்த்தரைக் கைதுச்செய்வதற்குரிய பொறுப்பைப் பெற்றிருந்தார்கள்; அதாவது ஒன்றில் மோசேயின் பிரமாணத்திற்கு எதிராக போதித்தார் அல்லது ரோம சட்டங்களுக்கு எதிராக போதித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவரைக் கைதுச்செய்யத்தக்கதாக, குற்றம் கண்டுபிடிக்கும் பொறுப்புடன் ஆலயத்தில், ஜனங்கள் மத்தியில் சேவகர்கள் நிறுத்தப்பட்டனர். ஒவ்வொரு முறையும், அவருடைய வார்த்தையினால் அவரைச் சிக்க வைக்க முயன்றனர், ஆனால் அதைச் செய்ய முடியாததினால், காரியத்தைத் தெரிவிக்கும்படிக்கு ஆலோசனை சங்கத்தாரிடத்திற்குத் திரும்பினார்கள்.
மனித இருதயத்தின் திருக்குத்தனத்தைக் குறித்து எத்துணை வேதனையான விமர்சனம் காணப்படுகின்றது. [R3510 : page 58] இயேசுவைக் கைதுச்செய்து, கொன்றுப்போடும்படிக்கு நாடின மனிதர்கள், பூமியிலேயே பரிசுத்தமான தேசமாகிய இஸ்ரயேல் தேசத்தின் மிகுந்த செல்வாக்குள்ள மனுஷர்கள் ஆவார்கள். இதுமாத்திரமல்லாமல் இவர்கள் நியாயசாஸ்திரிகளுமாக இருந்தார்கள், அதாவது மோசேயின் நியாயப்பிரமாணத்தினுடைய எழுத்தையும், சாரத்தையும்/ஆவியையும் நன்கு அறிந்தவர்கள் எனக் கருதப்படும் மனுஷர்களாய் இருந்தார்கள்; அதாவது இன்றைய கிறிஸ்தவ மண்டலத்தில் டாக்டர்ஸ் ஆப் டிவைனிடிக்குச் (Doctors of Divinity) சரிசமமான ஸ்தானத்தில் யூத மார்க்கத்தில் காணப்பட்ட மனுஷர்களாய் இருந்தார்கள். பிலாத்துக் கேட்டது போல நாமும், “”ஏன், இவர் என்ன பொல்லாப்புச் செய்தார்?” எனக் கேட்கலாம். உலகத்திலேயே மிகுந்த தாலந்துடையவர்களாகவும், மிகுந்த கல்வியறிவு உடையவர்களாகவும், பெயரளவில் மிகுந்த மத வாதிகளாகவும் இருக்கும் நபர்களுடைய இருதயத்தில்தான் பொல்லாப்பு இருந்ததே ஒழிய, இயேசுவினிடத்தில் இல்லை என்று நாம் பதிலளிக்கின்றோம்.
இவர்களது நோக்கம் என்னவென்று ஒருவேளை இவர்களிடம் கேட்கப்படுகின்றது என்று நாம் கற்பனை பண்ணிக்கொள்ளலாம். இவர்களுடைய பதிலானது, “”நாங்கள் தேவனுக்கு உண்மையாய் இருக்கின்றோம்; மோசே மூலமாய்க் கொடுக்கப்பட்ட அவருடைய நியாயப்பிரமாணத்திற்கு நாங்கள் உண்மையாய் இருக்கின்றோம். தேவன் எங்களை அதிகாரிகளாகவும், போதகர்களாகவும் அமர்த்தியுள்ள, அவருடைய இந்த வல்லமையான ஜனங்களுடைய நலனுக்கடுத்த விஷயங்களில் நாங்கள் உண்மையாய் இருக்கின்றோம், ஆகவே இம்மனுஷன் தேவனுக்குப் பயப்படுகிறவன் போலும், ஏழைகளிடத்தில் அனுதாபம் உள்ளவன் போலும் தோன்றினாலும், இவன் மிகுந்த நாசத்தை உண்டுபண்ணுகிறவன் என்று நாங்கள் நம்புவதினால், இம்மனுஷனைக் கட்டுப்படுத்த நாங்கள் வைராக்கியமாய் இருக்கின்றோம். இவன் தன்னை மேசியா என்று கூறிக்கொள்ளும் விஷயத்தில், இவன் நாசத்தை உண்டாக்குகிறவனாய் இருக்கின்றான்; காரணம் உண்மையில் இவன் திறமை மிக்கவனாகவும், ஜனங்களை ஏமாற்றுகிறவனுமாயும் இருக்கின்றான். இவனை இப்படியே விட்டுவிட்டால், ஒழுக்கம் சார்ந்த விஷயத்திலும், அறிவு சார்ந்த விஷயத்திலும் இந்தத் தேசத்தின் தலைவர்களாக எங்கள் கரங்களில் காணப்படும், தேசத்தைக் கட்டுப்படுத்துகிறதற்கான வல்லமையானது, எங்கள் கையை விட்டு நழுவி விடும்; இம்மனுஷன் தன்னை நிலைநாட்டிவிடுவான்; மேலும் இஸ்ரயேல் தேசத்தின் ஜனங்கள் அனைவரும் எங்களை முட்டாள்களெனப் பார்த்து, தங்களால் மேசியாவை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது என்றும், அறிவில் மேம்பட்டவர்களாகிய எங்களை முட்டாள்கள் அல்லது தெய்வீகக் கிருபையை இழந்துவிட்டவர்கள் என்பதினால், நம்முடைய சந்திப்பின் காலத்தை அடையாளம் கண்டுகொள்ள எங்களால் முடியவில்லை என்றும் முடிவு செய்துவிடுவார்கள்” என்பதேயாகும்.
இப்படியாகவே இவர்கள் கூறுவார்கள்; ஆனால் இச்சூழ்நிலையைக் குறித்த கர்த்தருடைய கண்ணோட்டமானது, நேர்மாறாகக் காணப்படும். அதாவது, “”இவர்கள் மாய்மாலக்காரர்கள் என்பதாகவும், இவர்கள் தாங்கள் உண்மையில் காணப்படாத நிலையில், தாங்கள் இருப்பதாக நடித்துக்கொண்டிருக்கின்றவர்கள் என்பதாகவும், கர்த்தருக்கான இவர்களுடைய துதியும், ஊழியமும், சடங்காச்சாரமான உதட்டின் அளவிலேயே உள்ளவைகளாக இருக்கின்றது என்பதாகவும், இவர்களுடைய பிரயாசங்கள் மற்றும் அறிக்கைகளின் அடித்தளத்தில் பெருமை காணப்படுகின்றது என்பதாகவும், நமது கர்த்தருடைய வெற்றியும், அவருடைய ஞானமும், ஜனங்கள் அவருடைய செய்திக்குச் செவிச் சாய்க்கும் உண்மையும் இவர்களது இந்தப் பெருமையைத் தொட்டது என்பதாகவும், இவர்கள் பொறாமை கொண்டவர்கள் என்பதாகவும், வன்மம் இவர்களுடைய இருதயத்தில் எரிந்துக்கொண்டிருந்தது என்பதாகவும், காரணமின்றி அவரைப் பகைத்தார்கள் என்பதாகவும், இவர்களைக் காட்டிலும் அவர் மேலானவராகவும், பரிசுத்தமானவராகவும், ஞானமுள்ளவராகவும் இருப்பதினாலும், இந்த உண்மையை ஜனங்களும் புரிந்துக்கொண்டு வருவதினாலும் அவரைப் பகைத்தார்கள் என்பதாகவும்” காணப்படும்.
பொறாமை — சுயநலம் எத்துணை ஆபத்தானதாகும்! எத்தனை கர்த்தருடைய ஜனங்கள் இன்று இதனால் தாக்கப்பட்டு இருப்பதினால், அவர்கள் கர்த்தருடைய ஆவியை அடையாளம் கண்டுக்கொள்ள மறுக்கின்றவர்களாகவும், ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்கு நாடி, ஒருவருக்கொருவர் தாங்கி கர்த்தருடைய முழு வேலையும் ஒன்றுதான் என்று உணர்ந்துக்கொள்வதற்குப் பதிலாக, அந்தோ பரிதாபம் கலகத்தின் ஆவியையும், வீண் பெருமையையும் அடிக்கடி வெளிப்படுத்துகின்றவர்களாகவும் காணப்படுகின்றார்கள்! இப்படியான அனைத்தும், கர்த்தருடைய பார்வைக்கு எவ்வளவு பிரியமற்றதாக இருந்திருக்க வேண்டும்!
சேவகர்கள், ஆலோசனை சங்கத்திற்குத் திரும்பினபோது “”கைதி எங்கே? என்றும் நீங்கள் ஏன் அவரைக்கொண்டு வரவில்லை?” என்றும், அவருடைய வார்த்தைகளினால் அவரைச் சிக்க வைக்க உங்களால் முடியவில்லையா? பொதுமக்கள் மத்தியில் பேசுபவர்களாகவும், நுணுக்கமான மனதையுடையவர்களாகவும் இருக்கும் உங்களால், ஜனங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் காரியங்களைப் போதித்த (போதகரான) அவருக்கு எதிராக நீங்கள் குற்றம் சாட்டத்தக்கதாக, அவருடைய வார்த்தைகள் எதிலாகிலும் அவரை உங்களால் சிக்க வைக்க முடியவில்லையா? மோசேயின் பிரமாணம் (அ) ரோமின் சட்டத்திற்கு விரோதமாக அவர் சொன்னார் என்று எதையாகிலும் நீங்கள் சொல்லத்தக்கதாக அவர் ஒன்றும் பேசவில்லையா? என்றும் கேள்விகள் எழும்பியது. இதற்கு அவர்கள் கொடுத்தப் பதில், “”அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை” என்பதாகும் (யோவான் 7:46). இவ்வார்த்தைக்குள் பல ஆயிரக்கணக்கான விஷயங்கள் அடங்கியுள்ளது.
[R3511 : page 58]
கர்த்தருடைய அடிச்சுவட்டில் நடப்பதற்கு நாடும் கர்த்தருடைய ஜனங்கள், உலகமானது இன்னமும் பொறாமையினாலும், வன்மத்தினாலும், பகைமையினாலும் நிரம்பியிருப்பதை எப்பொழுதும் காணவே செய்கின்றனர். “”உலகம் அவரை அறியாதது போல, நம்மையும் அறியவில்லை” என்பது இன்னமும் உண்மையாய் இருப்பதைக் காண்கின்றார்கள்; மேலும் அவர்களுக்கு எதிராய் இருப்பவர்கள் மத்தியில், அவர்களுக்குப் பாதிப்பு உண்டாக்க நாடுபவர்கள் மத்தியில், அவர்களுடைய வார்த்தைகளினால் அவர்களைச் சிக்க வைக்கும்படி நாடி, அவர்களைக் கைதுச்செய்து, அவர்களின் நற்பெயரைக் கெடுக்க நாடுபவர்கள் மத்தியில் சிலர் உலக ஞானிகளாகவும், உலகத்தில் உயர்ந்தவர்களாகவும், மதவாதிகளாகவும் இருப்பதை இன்னமும் பார்க்கின்றனர். அவர்களுக்கான கர்த்தருடைய செய்தி, “”உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்பதாகக் காணப்படுகின்றது (லூக்கா 21:19). அவர்கள் தங்கள் வாயினால் பாவம் செய்துவிடாதபடிக்குத் தங்கள் உதடுகளைக் காவல் காத்துக்கொள்வதும், ஜெபிப்பதும் மாத்திரமல்லாமல், தங்களுடைய இருதயத்தின் தியானங்களும், தங்களின் வாயின் வார்த்தைகளும் கர்த்தர் அங்கீகரிக்கத்தக்கதாகப் பார்த்துக்கொள்ள முயற்சிப்பதும், நேர்த்தியான போக்காக இருக்கும்; மேலும் எந்தளவுக்கு இதில் அவர்கள் உண்மையாய் இருக்கின்றார்களோ, அந்தளவுக்கு அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் தங்களுடைய பேச்சில் ஞானமுள்ளவர்களாகவும், ஜாக்கிரதையுள்ளவர்களாகவும் இருப்பார்கள்; அதாவது ஒருவனும் ஒருக்காலும் பேசாதது போல் பேசின அவரைப் போன்று காணப்படுவார்கள்.
நாவை காத்துக்கொள்வது என்பது எத்தகைய ஒரு பெரிய விஷயமாய் உள்ளது! தன் நாவை அடக்கிக்கொள்ள முடிகிறவனுக்கு, அவனுடைய முழுச் சரீரத்தையும் அடக்க முடியும் என்று அப்போஸ்தலர் சொல்லியிருப்பது உண்மையே. சொல்லக்கூடாத ஏதோ ஒன்றைச் சொல்வது என்பது மிகவும் சுலபமானது; பொல்லாப்பான வதந்தியை, மீண்டும் மீண்டுமாகப் பரப்புவதும், மற்றவருடைய குணலட்சணத்தின் மீது தவறான அபிப்பிராயத்தை வைப்பதும், இப்படியாக தவறான அபிப்பிராயம் வைப்பதன் மூலமாக கொலைச் செய்வதும், மற்றவருடைய நற்பெயரை (அ) உணர்வுகளைக் காயப்படுத்துவதும் மிகவும் சுலபமானதாகும். இவ்விஷயத்தில் நாம் கர்த்தர் போல் காணப்படுவதற்கும், மற்றவர்கள் பேசுகிறது போல் பேசாமல் இருப்பதற்கும், இப்படியாக இருளினின்று, ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைத்தவருடைய புண்ணியங்களைக் காட்டுவதற்கும் நாம் அதிகமதிகமாய் நாடுவோமாக.