R4686 (page 301)
மத்தேயு 22:15-22; 34-46
“”இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.”―வசனம் 21.
நம்முடைய கர்த்தருடைய நாட்களில் காணப்பட்ட பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள், மதத்தின் தலைவர்களாய்க் காணப்பட்டனர். இவர்கள் ஒரு கூட்டுச் சமுதாயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்; மேலும் இவர்கள் இருவரின் உபதேசங்களும் எதிரிடையாக இருப்பினும், இவர்கள் மிகவும் அபூர்வமாகவே ஒருவர்மேல் ஒருவர் தாக்குதல் பண்ணுபவர்களாகக் காணப்பட்டனர். பரிசேயர்கள் தேவனையும், தீர்க்கத்தரிசிகளையும், நியாயப்பிரமாணங்களையும் அங்கீகரிக்கின்றவர்களாக இருந்து, மரணத்திலிருந்து உயிர்த்தெழுதலின் மூலம் எதிர்க்கால வாழ்க்கை இருக்கின்றது என்று நம்பி, தங்கள் தேசத்தை உயர்த்துவதற்கும், தங்கள் தேசம் மூலம் உலகம் ஆசீர்வதிக்கப்படுவதற்குமென, மேசியா வருவார் என்றும் நம்பினவர்களாகக் காணப்பட்டனர். இவைகளையெல்லாம் சதுயேர்கள் நம்புவதில்லை; சதுசேயர்கள் கடவுள் உண்டு [R4687 : page 301] என்பதைக் கண்டறிய/முழுமையாய்ப் புரிந்துக்கொள்ள முடியாது என்ற கொள்கை உடையவர்களாகவும், விமர்சனம் பண்ணுபவர்களாகவும் காணப்பட்டனர். இவர்கள் எதிர்க்கால வாழ்க்கையைப் பற்றி ஐயம் கொள்வதினால், தற்கால ஜீவியத்தை நன்கு அனுபவிக்கிறவர்களாய் இருந்தனர். இயேசு பரிசேயர்களை அங்கீகரியாமலும், அவர்களுடைய குறைகளைச் சுட்டிக்காண்பித்ததினாலும், அவர்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும் விஷயத்தில் பூரணமாயும், பரிசுத்தராயும் இருக்கின்றார்கள் என அவர்கள் கூறிக்கொள்ளும் விஷயத்தில், அவர்கள் மாய்மாலக்காரர்கள் என்று சுட்டிக்காண்பித்ததினாலும், அவர்களுக்கு நடிக்காதவர்களிடத்திலும், ஏழைகளிடத்திலும் அனுதாபம் இல்லை என்று அவர்களைக் கடிந்துகொள்வதினாலும், பரிசேயர்கள் இயேசுவை எதிர்த்தனர்.
சதுசேயர்களுடைய நம்பிக்கையின் கண்ணோட்டத்தின்படி இயேசு மோசடிக்காரராக / ஏமாற்றுப் பேர்வழியாக இருந்தபடியினால், சதுசேயர்கள் இயேசுவை எதிர்த்தனர். இவர்கள் பார்வையில், இயேசு ஏமாற்றும் பேர்வழிபோல் இருந்த விஷயம், இயேசுவை எதிர்க்கும் அளவுக்கு ஒரு பொருட்டான காரியமாக இல்லாமல் இருந்தபோதிலும், இயேசு ஜனங்கள் மத்தியில் பெற்றுக்கொண்டு வந்த செல்வாக்கானது, சமாதானத்தைக் குலைக்கும் ஏதோ காரியத்திற்கு வழிநடத்திவிடும் என்றும், இதினிமித்தம் உரோம சாம்ராஜ்யமானது, யூதர்களிடத்தில் பாதகமாய் நடக்க வழிநடத்திவிடும் என்றும் அஞ்சினதினால், இவர்கள் இயேசுவை எதிர்த்தனர். ஆக பரிசேயர்களும், சதுசேயர்களும் இருவரும் இயேசுவை எதிர்த்திட்டாலும், இவர்கள் இருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக இயேசுவை எதிர்த்தவர்களாக இருந்தனர். எருசலேமுக்குள்ளான இயேசுவின் பிரவேசித்தலும்/விஜயமும், “”தாவீதின் குமாரனுக்கு,” மேசியாவிற்கு “”ஓசன்னா” என்ற ஜனங்களின் ஆரவாரக் கூக்குரலும், பரிசேயர்களுடைய மனதில் பொறாமையைத் தூண்டினது. ஆனால் சதுசேயர்களோ, உரோம சாம்ராஜ்யத்துடன் ஏதேனும் பிரச்சனையில் பொதுஜனங்கள் இறங்கிவிடுவார்களோ என அச்சம் கொண்டனர். மாபெரும் போதகரிடமிருந்து ஜனங்களுடைய ஆதரவைத் திசைத்திருப்பிட பரிசேயர்கள் முயற்சித்தனர். மேலும் இதற்காக அவரிடம் கேள்வி கேட்டு, அவரை அகப்படுத்த நாடினார்கள்.
ஒருவேளை இக்கேள்விக்கு இயேசு, நியாயம் இல்லை என்று பதிலளிப்பாரானால், அவரைக் கலகத்தின் தலைவனாகக் கைதுச் செய்து, அவரைக் கொன்றுபோடும்படிக்குப் பிலாத்துவை வற்புறுத்துவது சுலபமாய் இருக்குமென்று எண்ணினார்கள். ஒருவேளை இயேசு, இராயனுக்கு வரிக்கொடுப்பது நியாயமானது என்று சொல்வாரானால், அக்காரியம் அவருக்கு “”ஓசன்னா!” கூறின ஜனங்களுக்கு மனமுறிவு ஏற்படுத்துகிறதாக இருக்கும் என்று இவர்கள் எண்ணினார்கள்; யூதர்கள், தாங்கள் தேவனுடைய இராஜ்யமாக இருப்பதினால், எந்தப் பூமிக்குரிய இராஜ்யத்திற்கும் வரிக் கொடுக்கக்கூடாது என்றும், இப்படியாக வற்புறுத்தலின் காரணமாகச் செய்வதுங்கூடப் பயபக்தியற்றது என்றுமுள்ள மூடநம்பிக்கையான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். “”போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்று…அறிந்திருக்கிறோம்” (மத்தேயு 22:16-17) என்ற வசனத்தின் வார்த்தைகளை இவர்கள் எவ்வளவு தந்திரமாய்ப் பயன்படுத்தினார்கள் என்று நம்மால் கவனிக்க முடிகின்றது; அதாவது அவருடைய உண்மையைப் பாராட்டும்படியாக, “”நீர் சத்தியமுள்ளவரென்றும் அறிந்திருக்கின்றோம்” என்றும், அவரைப் போதகர் என்று தாங்கள் அங்கீகரிப்பதைத் தெரிவிக்கும் வண்ணமாகவும், அவர் என்ன நேர்ந்தாலும் ஒளியை, சத்தியத்தைப் போதிப்பார் என்பதைத் தாங்கள் அங்கீகரிப்பதைத் தெரிவிக்கும் வண்ணமாகவும், “”நீர் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும் அறிந்திருக்கிறோம்” என்றும், தங்கள் நிலைப்பாட்டினை வலுப்படுத்தும் வண்ணமாக, “”நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக் குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம்” என்றும் கூறினார்கள்.
இயேசுவைச் சிக்க வைக்க வேண்டுமென்று இந்த நயவஞ்சகமான பாராட்டுகள் எல்லாம் கூறப்பட்டது; ஆனால் இயேசு உடனடியாக, “”மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்,” “”உங்கள் உள்ளான நயவஞ்சகங்களை, ஏன் உண்மை பேசுபவர்கள்போல் திரையிட்டு மூடுகின்றீர்கள்?,” “”வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள்” என்று கூறினார். வரிக்காசு என்பது, அவர்கள் கட்டவேண்டிய வரிக்கான காசாக இருந்தது. ஒருநாளுக்கான வழக்கமான கூலியாகிய ஒரு பணத்தை (நம்முடைய கணக்கின்படி கிட்டத்தட்ட 17 cents) அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். “”அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.” (மத்தேயு 22:20-21). இயேசுவை அவருடைய வாயின் வார்த்தைகளினால் எப்படிச் சிக்க வைக்க முடியும் எனும் விஷயத்தில் தந்திரமான பரிசேயர்கள் குழம்பிப் போயிருந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை! அவரைச் சிக்க வைப்பதற்குப் பதிலாக, இவர்களே மாட்டிக்கொண்டனர்; ஏனெனில் இவர்கள் கூறின பாராட்டுதல்கள் அனைத்தும், இயேசுவுக்கு ஆதரவானதாக, ஜனங்களின் மனதில் பதிந்துவிட்டது.
அடுத்ததாக, கடவுள் உண்டு என்பதைக் கண்டறிய முடியாது எனும் கொள்கையை உடையவர்களாகிய சதுசேயர்கள், தங்களுடைய கேள்வியினால், மாபெரும் போதகரைச் சிக்க வைத்திட முயன்றனர். “”ஏழுச் சகோதரர்கள் ஒருவர் பின் ஒருவராக, ஒரே ஸ்திரீயை மணந்து, அவள் மரித்துப்போவதற்கு முன்னாக, இந்த ஏழுச் சகோதரர்களும் மரித்துப்போனவர்களாகக் காணப்பட்டனர். உயிர்த்தெழும்போது, இவர்கள் ஏழு பேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள்?” என்பது இவர்களின் கேள்வியாக இருந்தது. அவள் எவனுக்குப் பரலோகத்தில் (அ) உத்தரிக்கும் ஸ்தலத்தில் (அ) நித்திய காலமான சித்திரவதையின் ஸ்தலத்தில் மனைவியாக இருப்பாள்? என்று இவர்கள் கேட்கவில்லை, ஏனெனில் இயேசுவும் சரி, யூதர்களும் சரி, இப்படியான போதனைகளைக் கொண்டவர்களாக இருக்கவில்லை. பரிசேயர்களும், இயேசுவும், மரணத்திலிருந்து இருக்கும் உயிர்த்தெழுதலைப் போதித்தவர்களாகக் காணப்பட்டனர்; மேலும் இந்தப் போதனைக்கு எதிராகவே, சதுசேயர்களின் ஏளனப்படுத்தும் கேள்வி காணப்பட்டது.
“”நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்” (மத்தேயு 22:22,29) என்ற ஆண்டவருடைய பதிலின் மகத்துவத்தைக் கவனியுங்கள்; அதாவது, “”இப்படிப்பட்ட கேள்வி தொடர்புடைய வேதவாக்கியங்களின் போதனையை நீங்கள் புரிந்துக்கொள்ளவில்லை. உங்களுடைய இந்தக் கேள்வியில், நீங்கள் மாபெரும் தெய்வீக வல்லமையைப் பொருட்படுத்தாமல் காணப்படுகின்றீர்கள். இந்த மாபெரும் தெய்வீக வல்லமையானது, உயிர்த்தெழுதலின் காலங்களில் செயல்பட்டு, அச்சூழ்நிலைகளின் அனைத்து இடர்பாடுகளையும் செம்மைப்படுத்துகின்றதாய் இருக்கும்,” என்ற விதத்தில் இயேசு பேசினார். உயிர்த்தெழுதலை (படிப்படியாக) அடைபவர்கள், பாவம் மற்றும் மரணத்தின் நிலையிலிருந்து முற்றிலுமாக எழும்புபவர்கள் என்றும், “”திருமணம் செய்து கொள்வதில்லை” மற்றும் ஆண் பால்-பெண் பால், வேறுபாடின்றி தேவதூதர்களைப்போல் இருப்பார்கள் என்றும் மாபெரும் போதகர் தெரிவித்தார். இப்படியாக மாபெரும் கேள்வி என்றும், பதில் கொடுக்கவே முடியாத கேள்வி என்றும் எண்ணிக்கொண்டு, வரப்பட்ட சதுசேயர்களின் கேள்வியானது தோல்வியுறப்பண்ணப்பெற்றது, மற்றும் இவர்களின் அறியாமையும் வெளிப்படுத்தப்பட்டது.
தெய்வீகக் கற்பனைகளின் முக்கியத்துவம் தொடர்புடைய கேள்வியினால், கர்த்தரைச் சிக்க வைக்கும்படிக்கு அடுத்து நியாயசாஸ்திரிகளில் ஒருவன் முயற்சித்தான். இயேசு எந்தக் கற்பனையைப் பிரதானமாக கருதுகின்றதாக இயேசுவிடம் நியாயசாஸ்திரி கேட்டார். பத்துக்கற்பனைகளை (உபாகமம் 6:5), நியாயப்பிரமாணத்தின்படி, மாபெரும் போதகர், இரண்டாகப் பிரித்துக்கூறினார். “”இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக, இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும், தீர்க்கத்தரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்” (மத்தேயு 22:37-40). இப்படியாக அருமையாய் நியாயப்பிரமாணத்தைச் சுருக்கமாய்க் கூறுபவரிடம், நியாயசாஸ்திரி என்ன பதில் கூற முடியும்? இவரால் எதுவும் சொல்ல முடியாமல் போய்விட்டார். இதுவரையிலும் இல்லாத அளவுக்கு, நியாயசாஸ்திரிக்குப் பதில் கொடுக்கப்பட்டது.
“”மெசியாவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்” (மத்தேயு 22:42-45).
ஆம் இக்கேள்வி, பரிசேயர்களுக்கு மிகவும் ஆழமான கேள்வியாக இருந்தது. இவர்களுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் மாபெரும் போதகரினால் பதில் கொடுக்க முடிந்தது, ஆனால் இவர்களால் அவருடைய கேள்விக்குப் பதில் கொடுக்க முடியவில்லை. மேசியா மாம்ச பிரகாரமாக தாவீதின் வம்சத்தில் பிறந்தார் என்றும், மாம்சத்தில் காணப்பட்ட மேசியாவினடத்தில் தேவனுடைய நோக்கங்கள் முழுமையாய் நிறைவு பெறவில்லை என்றும், மேசியா பலியாகத் தம்முடைய மாம்சத்தை ஒப்புக்கொடுத்து மகிமை, கனம் மற்றும் அழியாமையின் தளத்தினிடத்திற்கு, மரணத்திலிருந்து உயர்த்தப்பட்டார் என்றும், தேவதூதர்கள், அதிகாரங்கள் மற்றும் துரைத்தனங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டார் என்றும், நாம் தெளிவாய்க்காணமுடிகின்றது. அவர் மாம்சத்தில் இருந்த நாட்களில் அவர் தாவீதின் குமாரனாய் இருந்தார் என்றும், அவர் மகிமைப்படுத்தப்பட்டபோது, அவர் தாவீதின் ஆண்டவராய் இருக்கின்றார் என்றும், ஏற்றவேளையில் அவர் மூலமாய் தாவீது மரணத்திலிருந்து உயிர்த்தெழுதலை மாத்திரமல்லாமல், மேசியாவின் இராஜ்யத்தில் பங்கடையத்தக்கதான ஆசிர்வாதத்தையும் பெற்றுக்கொள்வார் என்றும் நாம் புரிந்துக்கொள்கின்றோம். மாம்சத்தில் வந்த மேசியாவிற்கு தகப்பனாய்/முற்பிதாவாய் [R4687 : page 302] காணப்பட்டவர், இவ்வாறாக மகிமையடைந்த மேசியாவின் குமாரனாய் இருப்பார்; மேசியாவின் பூமிக்குரிய ஜீவியமானது, தாவீதையும் உள்ளடக்கின முழு உலகத்திற்குரிய திரும்பக்கொடுத்தலுக்கான விலையாக வழங்கப்பட்டது. “”உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாகவைப்பீர்.” (சங்கீதம் 45:16).
பெர்லினில் நடைப்பெற்ற ஜெர்மானிய நிகழ்ச்சி ஒன்றில், தளபதி ஒருவன், ஒரு அறிமுகமற்ற வாலிப உத்தியோகஸ்தன் ஒருவனைச் சந்தித்தான்; அந்த வாலிபன் பெரிய பதக்கமாகிய சின்னம் ஒன்றை மாத்திரம் தரித்தவனாகக் காணப்பட்டான். “”ஆயுத படை அதிகாரியே, நீ தரித்திருக்கின்ற இச்சின்னம் என்ன என்று தளபதி கேட்டான். வாலிபன் தன்னடக்கத்துடன், தளபதியே இது ஒரு பதவி என்றான். இது புரஷிய நாட்டு பதவி இல்லையே, இதுபோன்று நான் பார்த்ததில்லையே” என்றான் தளபதி. “”இது ஒரு ஆங்கில பதவி” என்றான் வாலிபன். “”இதை யார் உனக்குத் தந்திட்டார்கள்?” என்று வினவினான் தளபதி. “”என்னுடைய பாட்டி” என்றான் வாலிபன். வாலிபன் தன்னை முட்டாளாக்கப் பார்க்கின்றான் என்று தளபதி எண்ண தொடங்கி, “”உன்னுடைய பாட்டி யார்?” என்று கேட்டான். தளபதி வியக்கத்தக்கதாக, “”இங்கிலாந்தின் மகாராணி விக்டோரியா அவர்கள் என் பாட்டி ஆவார்” என்று வாலிபனிடமிருந்து பதில் வந்தது. மாறுவேடத்தில் இளவரசன் அங்குக் காணப்பட்டான், இப்படியாகவே மகிமையின் மாபெரும் இராஜாவாகிய இயேசு மாறுவேடத்தில் காணப்பட்டார். “”அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை” (யோவான் 1:10).