R2651 (page 186)
யோவான் 6:22-40
ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு போஷித்த அற்புதத்தில் பந்தி அமர்ந்து புசித்த திரளான ஜனக்கூட்டத்தாரில் சிலர், அந்த அற்புதத்தினிமித்தமாக ஆழமான தாக்கம் அடைந்தவர்களாக, இயேசுவிடம் மிகுந்த மதிப்புக் கொள்ளத்தக்கதாகவும் ஏவப்பட்டனர். மேலும், இவர்களில் அநேகர் (மிகவும் அதிகமானவர்கள் என்று எண்ண முடியாது) இத்தகைய ஆச்சரியமான வல்லமைகளையுடைய மாபெரும் போதகரின் சீஷர்களாகத் தாங்கள் ஆகுவதன் மூலம், தங்களது தேவைகள் சந்திக்கப்படும் என்றெண்ணி அவரைப் பின்தொடர முடிவு செய்தனர். (வியாதியும், வேதனையுமான) இப்படிப்பட்ட சூழ்நிலைகளின் கீழ்க் காணப்படும் ஜனங்கள் இப்படியாக அவரைப் பின்தொடர முடிவுபண்ணுவதற்கு, அவருடைய வல்லமை ஒரு தூண்டுதலாகக் காணப்பட்டது. கப்பர்நகூமில் அவரை ஜனங்கள் கண்டு, அவருடைய சீஷராக வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை அவரிடம் தெரிவித்து, இந்த விருப்பம் எப்படியாக தங்களை அவரிடத்தில் வழிநடத்தி வந்தது என்று கூறினபோதோ, அவர்களின் இந்த விருப்பம் சுயநலத்தின் அடிப்படையிலே உள்ளது என்றும், தாம் பிரியப்படும் சத்தியத்தின் அடிப்படையிலான விருப்பத்தின் வகையல்ல என்றும் அவர்களிடம் ஆண்டவர் கூறிவிட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, இந்த ஜனங்களுக்கு மாத்திரமல்லாமல், இவர்கள் வாயிலாகத் தம்முடைய சீஷர்களுக்கும், நாடப்பட வேண்டிய சரியான காரியம் தொடர்பான [R2651 : page 187] மிகவும் விலையேறப்பெற்ற பாடம் ஒன்றை நமது காத்தர் கூறினார்; அதாவது, ஜீவியத்தினுடைய பிரதான இலட்சியமும், நோக்கமும், விருப்பமும், அழிந்துப்போகக்கூடிய உணவாகவும், பூமிக்குரிய உணவாகவும், கண நேரத்தில் மறைந்துப் போகக்கூடிய பூமிக்குரிய சொகுசுகள், பூமிக்குரிய இன்பங்களாக இராமல் மாறாக, தற்கால மரிக்கின்ற நிலையையும் தாண்டி, நித்தியஜீவனை அடைவதே அனைவருடைய பிரதானமான இலட்சியமாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். கொஞ்சக் காலம் நம்முடைய மாம்சீக சரீரங்களைத் தக்கவைப்பதற்குப் பூமிக்குரிய உணவுகளை அளிப்பது மாத்திரம் தேவன், தம்முடைய சிருஷ்டிகளுக்குப் பண்ணியிருக்கும் ஏற்பாடாக மாத்திரம் காணப்படாமல் மாறாக, இதிலும் அதிக முக்கியமாக ஆவிக்குரிய உணவில்/போஷாக்கில் நாம் ஒருவேளை பங்குக்கொள்ளும் பட்சத்தில், நாம் நித்தியஜீவனை அடையத்தக்கதாகவும் தேவன் ஏற்பாடு பண்ணியுள்ளார் என்று கர்த்தர் சுட்டிக்காட்டினார்.
தாம் நிகழ்த்தியுள்ள இந்த அற்புதமும், அதன் ஆசீர்வாதமும், தேவனுடைய குமாரனாகிய தம்மால் மாத்திரமே கொடுக்கக்கூடிய மிகவும் விலையேறப்பெற்ற ஜீவ அப்பத்தின் அதாவது, ஒரு மாபெரும் அன்பளிப்பின்/ஈவின் உதாரணம் மாத்திரமே என அன்றிருந்த அவர்களுக்கும் சரி, நமக்கும் சரி மற்றும் அனைவருக்கும் கர்த்தர் புரிய வைத்தார். பூமிக்குரிய உணவைத் தம்மால் வழங்க முடிந்ததுபோல, நித்தியஜீவனுக்குரிய அப்பத்தையும் தம்மால் வழங்க முடியும் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தினதின் மூலம், அவர் தம்மைத் தேவனுடைய குமாரன் என்றும், பரம பிதா தம்மை முத்திரையிட்டு, குறித்துள்ளார் என்றும், தமக்கு அருளப்பட்ட வல்லமைகளில் குமாரத்துவத்திற்கான ஆதாரத்தையும், நிரூபணத்தையும் தமக்குப் பிதா அருளியுள்ளார் என்றும் தம்மைக்குறித்துக் கர்த்தர் அறிக்கைப் பண்ணினார். முத்திரை பரிசுத்த ஆவியாக, தேவனுடைய பரிசுத்தமான வல்லமையாக இருந்தது; மேலும், இந்தப் பரிசுத்த ஆவியானது நமது கர்த்தராகிய இயேசுவின் மேல் செயல்பட்டதின் காரணமாகவே, அவரால் தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றவும் முடிந்தது, மற்றும் வாற்கோதுமை அப்பத் துண்டுகளையும், இரண்டு சிறு மீன்களையும், திரளான மக்கள் கூட்டத்தைப் போஷிக்குமளவுக்குப் பெருக்கவும் முடிந்தது. இந்த வல்லமைகள் கர்த்தருக்குள், தேவனுடைய பரிசுத்த ஆவி இருக்கின்றது என மனிதர்களுக்குச் சாட்சிகளாக (அ) வெளியரங்கமான வெளிப்படுத்தல்களாக இருக்கின்றது; இன்னுமாக, கர்த்தருக்குத் தேவனோடு கூட, அவருடைய கனமிக்க பிரதிநிதியாக/குமாரனாக இருக்கும் உறவிற்கு முத்திரையாகவும் இருக்கின்றது. இந்தச் சாட்சியங்களுடைய பெலத்தினால், இந்தச் சாட்சிகளைப் பார்த்திட்ட சரியான இருதய நிலையிலுள்ள சாட்சியாளர்கள் நமது கர்த்தருடைய வாக்கை, பிதாவிடமிருந்து வந்த செய்தியெனச் செவிசாய்த்திட ஆயத்தப்பட்டிருக்க வேண்டும்.
கர்த்தர் கொடுத்திட்ட சொற்பொழிவிற்குப் பலனில்லாமலில்லை; நித்தியஜீவனைக் கொடுக்கும் அப்பமே நாடப்பட வேண்டிய முக்கியமான உணவு என்ற கருத்தினுடைய தாக்கத்தை, கேட்டுக் கொண்டிருந்தவர்கள் உணர்ந்தார்கள்; மேலும், அவர்கள் யூதர்களாக இருக்கின்றபடியால், தேவன் தங்கள் தேசத்துடன் கிரியைகளின் ஓர் உடன்படிக்கையை, நித்தியஜீவனுக்கான வாக்குத்தத்தத்துடன் அதாவது, மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கையைப் பண்ணியுள்ளார் என்ற எண்ணமும்கூட அவர்களுடைய மனங்களுக்கு முன்பாக இருந்தது. ஆகவேதான் நித்தியஜீவனை அடையத்தக்கதாக, தேவனைப் பிரியப்படுத்தும் எந்தக் கிரியையைத் தாங்கள் நடப்பிக்க வேண்டும்? என்றும் இக்காரியங்கள் தொடர்பான விஷயத்தில் தங்களுக்கு உதவி புரியும் எச்செய்தியையும் தங்களுக்குக் கொடுக்கும்படிக்குக் கேட்டுக்கொண்டார்கள்.
கர்த்தரை விசுவாசிப்பதே கிரியையாகும். அதாவது, தேவனால் மிகவும் அங்கீகரிக்கப்படும் கிரியையாகும்; அதாவது, தேவன் அவர்களை ஏற்றுக்கொள்வதற்குரிய ஒரே கிரியை என்று நமது கர்த்தர் கொடுத்திட்ட பதில் முதலில் நமக்குக் கொஞ்சம் விநோதமாய்த் தோன்றும். இதன் அர்த்தத்தைப் பின்னர் பார்க்கலாம். அவரைக் கேட்டுக்கொண்டு நின்றவர்கள் அவர் கூறினதின் அர்த்தத்தை அப்படியே புரிந்துக்கொண்டார்கள்; அதாவது, தெய்வீக வாக்குத்தத்தங்களின்படி, தேவனுடைய இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கும், பூமியின் சகல குடிகளை ஆசீர்வதிக்க ஆரம்பிப்பதற்கென, உலகத்தில் வரும் மேசியாவாக, தேவனுடைய குமாரனாக இயேசுவைத் தாங்கள் அங்கீகரிப்பதே, தேவனுடைய பார்வையில் மிகவும் பிரியமான காரியமாக இருக்கும் என்ற அர்த்தத்தில் இயேசு கூறினதை, அவர்கள் அப்படியே புரிந்துக்கொண்டனர். ஆனால், அவர்கள் அவருடைய மேசியாத்துவத்திற்கான ஓர் அடையாளத்தைக் கேட்டார்கள்; அதாவது, அவருடைய அன்பின் ஆவியிலும், இரக்கத்திலும், பெருந்தன்மையிலும், தூய்மையிலும், உண்மையிலும் அவருடைய உபதேசங்களிலும், வெளிப்படும் கர்த்தர் இயேசுவின் மீதான தேவனுடைய அடையாளத்தை/முத்திரையைத் தாங்கள் ஏற்கெனவே கண்டிருப்பதை உணர்ந்துக்கொள்வதற்குப் பதிலாக, அவருடைய மேசியாத்துவத்திற்கான ஓர் அடையாளத்தைக் கேட்டார்கள். இன்னுமாக அவரிடத்தில் தெய்வீக வல்லமை இருப்பதற்கான ஆதாரங்களையும், வெளிப்படுத்திய வெளிப்படுத்தல்களையும், (உதாரணத்திற்கு முந்தின நாள் நடந்த அற்புதத்தில் விளங்கின ஆதாரங்களையும்) தாங்கள் கண்டிருப்பதை உணர்ந்துக்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் அவருடைய மேசியாத்துவத்திற்கான ஓர் அடையாளத்தைக் கேட்டார்கள். இதற்குக் காரணம், வேதவாக்கியங்கள் எங்கும் தெரிவிப்பதுபோல, அவர்கள் கடின இருதயமுடையவர்களாய் இருந்தார்கள் (மாற்கு 3:5; யோவான் 12:40); அதாவது, அவர்கள் விசுவாசமற்ற தன்மையிலும், எளிதில் தாக்கம் அடைந்திடாமலும் இருப்பவர்கள் ஆவர்; அதாவது சந்தேகம் கொள்பவர்கள்; ஆகவேதான் இயேசுவின் மீது காணப்பட்ட தேவனுடைய முத்திரைக்கான இந்த அடையாளங்கள் (அ) சாட்சிகள் அவர்களுக்குப் போதுமானதாய் இருக்கவில்லை.
ஒரு வேளை அடையாளங்களுக்கு மேல் அடையாளங்கள் கொடுக்கப்பட்டாலுங்கூட, “”இதே அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயமானது,” ஒன்றல்ல, பத்து அடையாளங்கள் கொடுக்கப்பட்டாலும், அவ்வடையாளங்களைப் புறக்கணிக்கவே செய்யும் என்பதை நம்மால் உணர முடிகின்றது. இப்படியாகவே, பார்வோனின் விஷயமும் காணப்பட்டது; பார்வோன் பிந்தின அடையாளங்களைக்காட்டிலும் மோசேயால் கொடுக்கப்பட்ட முதல் அடையாளத்தினாலேயே உண்மையில் அதிகமாய்த் தாக்கத்திற்குள்ளாக்கப்பட்டார்; இந்த ஒவ்வொரு அடையாளங்களும் சரியற்ற ஆவியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதினால், முடிவுவரை பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினது. இப்படியாகவே, கர்த்தருடைய வாக்குத்தத்தம் தொடர்புடைய காரியத்தில், இன்று சிலருடைய விஷயமும் காணப்படுகின்றது. இப்படிப்பட்டவர்கள், “”நான் கொண்டுள்ள இந்தத் தவறான அபிப்பிராயத்திற்கு எதிர்மாறாக அப்போஸ்தலர் கூறியுள்ளாரா? என்று கேட்கின்றனர்; ஒருவேளை ஆம் என்று நிரூபிக்கப்பட்டால், வேறே அப்போஸ்தலர்கள் இது தொடர்பாகப் பேசியுள்ளார்களா என்றறிய வகைத் தேடுகின்றனர்; அடுத்ததாக, கர்த்தர் இதைக்குறித்துப் பேசியிருக்கின்றாரா என்றும், அடுத்ததாக, தீர்க்கத்தரிசிகள் யாரேனும் பேசியுள்ளார்களா என்றறிய வகைத் தேடுகின்றனர்; இவர்கள் நம்பிக்கை வைப்பதற்காகத் தேடாமல், நம்பாமலிருக்க வேண்டும் என்பதற்காகச் சாக்குப்போக்கைத் தேடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் பொதுவாக, சகல சாட்சியங்களும் கொடுக்கப்பட்டாலுங்கூட, சாட்சியங்களின் திரட்சியினால் நம்பப் போவதும்/நம்புவதும் இல்லை. மாறாக, வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்று உண்மையில் நம்புகின்றவர்கள், அதன் அதிகாரப்பூர்வமான சகல சாட்சிகளையும் நம்புவார்கள். அது கர்த்தரால் (அ) அப்போஸ்தலரால் (அ) தீர்க்கத்தரிசியினால் கொடுக்கப்பட்டிருந்தாலும் சரி, ஒருமுறையோ (அ) பலமுறையோ கூறப்பட்டிருந்தாலும் சரி நம்புவார்கள்.
நமது கர்த்தர் பேசுவதைக் கேட்டுக்கொண்டு நின்றவர்களின் மனதில் கிரியை செய்திட்ட சந்தேகம்/அவநம்பிக்கையானது அவர்களுடைய வார்த்தைகளில் வெளிப்பட்டது. பின்வரும் அர்த்தத்தில் அவர்கள் பேசினார்கள்; அதாவது, “”நீர் தேவனுடைய குமாரன் என்பதைக் குறிக்குமளவுக்கு, உம்முடைய அற்புதம் மிகப் பிரமாண்டமானதாகவோ (அ) மிகவும் ஆச்சரியமானதாகவோ இருந்ததாக எங்களால் ஒத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், இதைப் போன்றதான வல்லமையை, மோசேயும் செயல்படுத்தினார் என்பதை நாங்கள் நினைவில் கொண்டிருக்கின்றோம்; மோசே நம்முடைய பிதாக்களுக்கு அதாவது, முழு இஸ்ரயேல் தேசத்துக்கும், வனாந்திரத்தில் நீண்ட காலம் உணவு வழங்கினார். அதுவும் அப்பமும் மீனும் கொஞ்சமும் இல்லாமலேயே, மன்னாவை வழங்கினார்.”
மன்னா, மோசேயினால் உண்டாக்கப்படவில்லை என்றும், மன்னாவை அனுப்பி வைக்கும் விஷயத்தில் மோசேக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், மன்னா, பரலோகப் பிதாவினுடைய நேரடி ஏற்பாடு/வழங்குதல் என்றும் நமது கர்த்தர் பதில் கொடுத்தார். இவ்விஷயத்தில், மோசே முகவராகக் கூட (agent) இல்லை. மேலும், வனாந்தரத்தில் கொடுக்கப்பட்ட மன்னாவானது, நித்தியஜீவனுக்குரிய மெய்யான அப்பத்திற்கு, அதாவது மெய்யான மன்னாவிற்கு, அதாவது தமக்கும், தம்மால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சத்தியத்திற்கும், தம்முடைய கரங்களினின்று ஜனங்கள் இப்பொழுது [R2651 : page 188] பெற்றுக்கொள்ள வேண்டுமென அவரால் விரும்பப்பட்ட மெய்யான மன்னாவிற்கும் நிழலாக இருக்கின்றது என நமது கர்த்தர் சுட்டிக்காட்டினார்.
கர்த்தர் இயேசு தம்மைத்தான் குறிப்பிடுகின்றார் என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ளவில்லை; ஆனால் தங்களது பிதாக்களுக்கு வனாந்தரத்தில், பரலோகத்திலிருந்து தேவன் மன்னாவைக் கொடுத்துப் பேணினதுபோல, இப்பொழுது இந்த மாபெரும் போதகராகிய இயேசு, உயர்வான ஒருவகை மன்னாவைக் குறித்துத் தங்களுக்குக் கூறிக் கொண்டிருக்கின்றார் என்றும், இந்த உயர்வான மன்னாவகைகளைப் புசிப்பதன் வாயிலாக நித்தியஜீவன் கிடைக்கும் எனக் கூறிக்கொண்டிருக்கின்றார் என்றுமுள்ள மாம்சபிரகாரமான சிந்தை அவர்களுக்கு ஏற்பட்டது; ஆகவே அவர்கள், “”ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும்!” என்று கேட்டார்கள். அப்போது நமது கர்த்தர், “”ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” என்று உவமை பாணியில் கூறினார் (யோவான் 6:35).
“”என்னிடத்தில் வருகிறவன்” என்ற வார்த்தைகளிலிருந்து, கர்த்தர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்குக் கலிலேயா கடலைத் தாண்டி, அவரிடம் வந்து சேர்ந்தவிதம் தொடர்புடைய அர்த்தத்தில் கர்த்தர் பேசவில்லை என்பது தெரிகின்றது. நீதியின் மீதான பசிதாகத்தோடும், நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கான வாஞ்சையோடும், மற்றும் நித்தியஜீவனை அடையத்தக்கதாக ஜீவ அப்பத்தின் மீதான வாஞ்சையோடும் கர்த்தரிடத்தில் வருவதே “”என்னிடத்தில் வருகிறவன்” என்ற வார்த்தைக்கான அர்த்தமாகப் புரிந்துக்கொள்ளப்பட வேண்டும். இப்படியாக, கர்த்தரிடத்தில் வரும் அனைவரும் அதாவது, இப்படியான சரியான இருதய நிலையில் வரும் அனைவரும் அவரிடத்தில் திருப்தியடைவார்கள். இதைப்போலவே, “”என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” என்ற வார்த்தைகள், இயேசு என்ற ஒருவர் ஜீவித்துள்ளார் என்று மாத்திரம் விசுவாசிப்பதைப் பார்க்கிலும் அதிகமான விசுவாசம் வைப்பதை அர்த்தப்படுத்துவதாய்ப் புரிந்துக்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், “”பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன” என்று எழுதப்பட்டுள்ளது; ஆகவே, கர்த்தரை அறிவுப்பூர்வமாக மாத்திரமல்லாமல், “”நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும்” என்று எழுதியிருக்கிறபடி, இருதயப்பூர்வமாகவும் ஏற்றுக்கொள்வதுதான் “”விசுவாசமாயிருக்கிறவன்” என்பதற்கான அர்த்தமாகப் புரிந்துக்கொள்ளப்பட வேண்டும். கர்த்தரைத் தேவனுடைய குமாரன் என்றும், இவருக்குள்ளாகவே தெய்வீக வார்த்தைகளின் மகா மேன்மையும் அருமையுமான சகல வாக்குத்தத்தங்களும் நிறைவேற்றப்படும் என்றும் உணர்ந்து, கர்த்தரை இருதயத்திலிருந்து விசுவாசிக்கின்றவன், இந்த விசுவாசத்தைத் தக்கவைத்துக்கொள்வது வரையிலும் அத்தகைய ஒரு புத்துணர்வையும், அத்தகைய ஒரு தாகத்தணிப்பையும், அத்தகைய ஒரு திருப்தியையும் அடைவான் (ரோமர் 10:10). இப்படிப்பட்டவர்கள், கிறிஸ்துவுக்குள்ளான தெய்வீக முன்னேற்பாடுகள் மிகத் திரளாய் இருப்பதினால், இன்னும் வேண்டும் என்று கேட்பதற்கில்லாமல், “”வேறு எதைக் காட்டிலும் இதுவே என்னுடைய ஏக்கங்களைத் திருப்திப்படுத்துகின்றது” என்று ஆச்சரியத்தில் கூறுவார்கள்.
இப்பொழுது 29-ஆம் வசனத்தில் இடம்பெறும் கர்த்தருடைய வார்த்தைகளை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகின்றது; “”அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற (தேவனுக்குப் பிரியமாய் இருக்கும்) கிரியையாயிருக்கிறது.” விசுவாசத்தோடு தொடர்புடைய ஒரு கிரியை இருக்கின்றது; நமது கைகளால் செய்யப்படும் கிரியையாயிராமல் மாறாக, நம்முடைய தலைகளினாலும், நமது இருதயங்களினாலும் செய்யப்படுகின்ற கிரியையாய் இருக்கின்றது; மேலும், இந்தக் கிரியை கர்த்தருடைய பார்வையில் அங்கீகரிக்கத்தக்கதாய் இருப்பதுபோல, நமது கைகளினால் செய்யப்படும் எந்த ஒரு கிரியையும் அங்கீகரிக்கப்படாது. நம்முடைய விழுந்துபோன நிலையிலும், பூரணமற்ற நிலையிலும், பூரணமான எதையும் நம்மால் செய்வது கூடாத காரியம் என்றும், தேவனும், அவருடைய சகல கிரியைகளும் பூரணமாய் இருப்பதினால் பூரணமற்ற மற்றும் எவ்விதமான பாவத்தன்மையுள்ள எதையும் அவரால் சம்மதிக்க முடியாது என்றும் நாம் உணரும்போது, விசுவாசத்தைத்தவிர நாம் அவருக்கு அளிக்கும் மிகச் சிறப்பான கிரியைகளும், அவரால் அங்கீகரிக்கப்பட முடியாது என்பதை நம்மால் உடனடியாக உணர்ந்துக்கொள்ள முடியும்.
ஆனால், நமக்காக ஒரு மாபெரும் கிரியையை/வேலையைத் தேவன் செய்வதாகத் தெரிவித்துள்ளார்; மேலும், மீட்பரை நமக்குத் தேவன் வழங்கியதின் மூலம், அந்த மாபெரும் கிரியையை/வேலையைத் தேவன் செய்துள்ளார்; இந்த மீட்பர் மூலமாகவே, நம்முடைய சந்ததிக்கான ஈடுபலிச் செலுத்தப்பட்டது; இப்பொழுது தேவனால் நீதியுள்ளவராகவும் இருக்க முடியும், அதேசமயம் இயேசுவில் விசுவாசம் வைக்கிறவர்களை அவர் நீதிமானாக்குகிறவராகவும் இருக்கமுடியும். ஆகவே, நாம் குற்றத்தீர்ப்பின் கீழ்க் காணப்படுவதுவரையிலும், நாம் செய்யும் எந்தக் கிரியையும் தேவன் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்தாலும், அவருடைய சொந்த ஏற்பாட்டின்படி, கிறிஸ்துவின் மீதான நமது விசுவாசத்தை ஏற்றுக்கொண்டு, அந்த விசுவாசத்தினால் நம்மை [R2652 : page 188] நீதிமானாக்கவும் செய்கின்றார்; நம்மால் செய்ய முடிகின்ற இந்த முதலாவது கிரியையைத்தான் தேவன் கேட்கின்றார். இந்த முதலாவது கிரியை வரிசையில் முதலாவதாகவும், அடிப்படையாகவும் கொண்டு, பின்தொடரும் (மற்ற) கிரியை தவிர, மற்றபடி வேறெந்தக் கிரியையும் தேவன் ஏற்றுக்கொள்வதில்லை. கர்த்தருடைய பார்வையில், விசுவாசத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தை, அனைவரும் புரிந்துக்கொள்வது நலம்! “”விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்துவது கூடாத காரியம்.” மேலும், நாம் அதிகமாக விசுவாசத்தைக் காட்டும்பொழுது, நாம் தேவனை அதிகமாகப் பிரியப்படுத்துகின்றவர்களாய் இருப்போம்; எதையும் எளிதில் நம்புகிற கண்மூடித்தனமான விசுவாசம் அல்ல, தேவன் கூறாத ஏதோ ஒன்றின் மீதான விசுவாசம் அல்ல, நம்முடைய சொந்த கற்பனை (அ) மற்ற மனிதர்களுடைய கற்பனையின் மீதான விசுவாசம் அல்ல மாறாக தேவன் சொல்லியுள்ளவைகளின் மீதான விசுவாசமும், அதன் மீதான உறுதியான, நிலையான நம்பிக்கையுமாகும்; இதுவே தேவன் அங்கீகரிக்கும் விசுவாசமாகும். மேலும், இந்த விசுவாசத்தைக் காட்டுகிற யாவருக்கும், இந்த விசுவாசமே, நீதிமானாக்கப்படுதலுக்கான அஸ்திபாரமாக ஆகின்றது. “”இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோமர் 5:1).
இங்குக் கர்த்தர் இந்தச் சுவிசேஷ யுகத்திற்குரிய, பரம அழைப்பிற்குரிய அடுத்த படிகளை விவாதிக்கவில்லை. ஆகையால், நாமும் இப்பொழுது விவாதிக்கவில்லை. தேவனை அணுகுவதற்கு நமக்கு அவசியமாயுள்ள முதல் படியை மாத்திரம் அதாவது, நீதிமானாக்கப்படுதலை மாத்திரம் கர்த்தர் கையாளுகின்றார். நீதிமானாக்கப்படுதலுக்கு அவசியமானது, கிறிஸ்துவை ஜீவ அப்பமாக ஏற்றுக்கொள்வதாகும்; இந்த நீதிமானாக்கப்படுதலுக்கு முன்னதாக, தகப்பனாகிய ஆதாமின் மீறுதல் மூலமாக நமது சந்ததி மேல் மரணம் கடந்து வந்துள்ளதால், நம்மில் ஜீவன் இல்லை என்பதையும், தகப்பனாகிய ஆதாம் மீதும், அவர் காரணமாகச் சந்ததி மீதுமுள்ள தண்டனையைச் சந்திக்கத்தக்கதாகக் கர்த்தராகிய இயேசு மாம்சமாக்கப்பட்டார் என்பதையும், மற்றும் இப்பொழுது கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய இந்த இலவசமான கிருபையை ஏற்றுக்கொள்பவர்களும், கிறிஸ்துவின் பலியினுடைய புண்ணியத்தைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்பவர்களும், உலகத்தின் ஜீவனுக்கான தமது ஜீவனை ஈடுபலியாக வழங்கின அபிஷேகம் பண்ணப்பட்டவரில், தேவன் ஏற்பாடு பண்ணியுள்ள மாபெரும் நன்மைகள் மற்றும் ஆசீர்வாதங்களில் பங்குக் கொள்பவர்களும், புசிக்கின்றார்கள் என்பதையும் உணர்ந்துக்கொள்ள வேண்டும். யாரொருவன் இந்த உண்மையை மனதளவில் ஏற்றுக்கொண்டு, தனது இருதயத்திலே அதனை புசிக்கின்றானோ, அவனே மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசிக்கிறவனாகச் சித்தரிக்கப்படுகின்றான். அதாவது, அவருக்குள் அளிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள், சிலாக்கியங்கள் மற்றும் திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்கள் (அல்லது இந்த யுகத்தில், நீதிமானாக்கப்படுதல்) ஆகியவற்றில் பங்கடைவதாகச் சித்தரிக்கப்படுகின்றான்.
நமது கர்த்தர் பேசுவதைக் கேட்டுக்கொண்டு நின்றவர்கள், அவரை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் காண்பித்த தாமதமும், இஸ்ரயேல் ஜனங்கள் மத்தியில் காணப்பட்ட தாமதமும், தாம் மேசியா அல்ல என்பதற்கான நிரூபணமாக இராமல் மாறாக, மேசியாவை ஏற்றுக்கொள்வதற்கான நிலைமையில் அவர்கள் இல்லை என்பதற்கான நிரூபணமாகவே உள்ளது என்று தம்மைக் கேட்டுக்கொண்டு நின்றவர்களுக்குச் சுட்டிக்காட்டினார். இன்னுமாக, தாம் முழு இஸ்ரயேல் ஜனங்களையும் கவர்வது, தேவனுடைய நோக்கமாயிராமல் மாறாக, பிதா தமக்குக் “”கொடுத்தவர்களை” அதாவது, பிதாவைப் பிரியப்படுத்துகின்றவர்களாய்க் காணப்படுபவர்களை, அதாவது, பிதா வழங்கியுள்ள இந்த வாய்க்கால் வழியாக இன்னும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாய் இருப்பவர்களை மாத்திரம் தம்முடைய வாயினின்று புறப்பட்டு வரும் கிருபையான வார்த்தைகள் வாயிலாகவும், அற்புதங்கள் வாயிலாகவும், அல்லது கர்த்தருக்குள் [R2652 : page 189] விளங்கும் வல்லமைக்கான சாட்சிகள் வாயிலாகவும் தம்மண்டைக்கு இழுத்துக் கொள்வதே தேவனுடைய சித்தமாய் இருக்கின்றது என்று கர்த்தர் சுட்டிக்காட்டினார். எனினும், அனைவரும் தம்மண்டைக்கு இப்படியாக ஈர்க்கப்படுவார்கள் என்பது எதிர்ப்பார்க்கப்படவில்லை; எனினும், பிதா ஈர்த்துக்கொள்ளும் அனைவரையும், ஏற்றுக்கொள்வதில் தாம் மிகுந்த சந்தோஷத்துடன் காணப்படுவார்; காரணம், கர்த்தர் தம்முடைய சொந்த வேலைக்காகப் பூமியில் காணப்படாமல் மாறாக, பிதாவின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே வந்துள்ளார் என்றும், அந்த நோக்கங்களுக்காக தாம் முழு இசைவுடன் காணப்படுகின்றார் என்றும் அவர்களுக்குக் கர்த்தர் உறுதியளித்தார்.
பின்வரும் இரண்டு வசனங்களிலும், நமது கர்த்தர் இரட்சிக்கப்படுகிறவர்களிலுள்ள இரண்டு வகுப்பாரை வித்தியாசப்படுத்திக் காண்பிக்கின்றார். வசனம் 39-இல் இந்தச் சுவிசேஷ யுகத்தில் தெரிந்துக்கொள்ளப்பட்ட வகுப்பாரைக் குறிப்பிடுகின்றார், மற்றும் 40-ஆம் வசனத்தில் இந்தத் தற்கால யுகத்தைப் பின்தொடரும், ஆயிர வருட யுகத்தில் மனுக்குலம் மீது வரும் பொதுவான ஆசீர்வாதங்களையும் மற்றும் நமது கர்த்தரால் தம்முடைய சொந்த ஜீவன் எனும் அதிக விலையைக் கொடுத்து வாங்கப்பெற்ற நித்தியஜீவனென்னும் இந்த மாபெரும் அன்பளிப்பினால் ஆசீர்வதிக்கப்படத்தக்கதாக, ஒவ்வொரு சிருஷ்டிக்கும் ஆயிர வருட யுகத்தில் வழங்கப்படும் வாய்ப்புகளையும் குறித்துக் குறிப்பிடுகின்றார்.
தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல, அடிக்கடித் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் இயேசுவுக்கு விசேஷமாகக் கொடுக்கப்பட்டவர்களாகப் பேசப்பட்டுள்ளனர். ஆனால், முழு மனுக்குலமும் அவருடையதாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். காரணம், மனுக்குலத்தை தமது விலையேறப்பெற்ற சொந்த இரத்தத்ததினால் இயேசு வாங்கியுள்ளார். இந்த யுகத்தில் ஒரு விசேஷமான வகுப்பாரைக் குமாரனிடத்திற்குப் பிதா இழுத்துக் கொள்கின்றார். மேலும், இந்த ஒரு வகுப்பாரை, கர்த்தருடைய ஆயிர வருட இராஜ்யத்தில், கர்த்தரோடு உடன் சுதந்தரர்களாகவும், துணையாளிகளாகவும் காணப்படுவதற்கெனக் கர்த்தருக்குப் பிதா கொடுத்துள்ளார்; இவர்கள் சிலசமயம், அவருடைய “”சகோதரர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர், ஏனெனில் இயேசு, “”அநேக சகோதருக்குள்ளே முதற்பேறானவர்” என்று கூறப்பட்டுள்ளது (ரோமர் 8:29); இன்னுமாக, இவ்வகுப்பார் இயேசுவினுடைய மணவாட்டி என்றும், உடன் சுதந்தரர்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்; ஆனால், இரட்சிக்கப்படும் மனுக்குலமானது கிறிஸ்துவின் பிள்ளைகள் என்றும், இவர்களுக்குக் கர்த்தர் இயேசு, “”நித்திய பிதா” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது (வெளிப்படுத்தல் 21:9; 22:17; ரோமர் 8:17; ஏசாயா 9:6).
கர்த்தர் இயேசுவுக்குக் “”கொடுக்கப்பட்ட” அனைவரும் இரட்சிக்கப்படுவதும், அவர்களை (கடைசிநாளில்) எழுப்புவதும், இவ்வகுப்பாரில் ஒருவரும் இழந்துபோகாமல் இருப்பதும், பிதாவின் சித்தமாக இருக்கின்றது என நமது கர்த்தர் கூறினார். அப்படியானால் இரட்சிப்பு நிச்சயமாயுள்ள இவர்கள் யார்? இது தொடர்பாக அப்போஸ்தலனாகிய பவுல் கொடுத்திட்ட புத்திமதியின் வார்த்தைகளே இக்கேள்விக்கான நமது பதிலாகும்; பிதா முன்குறித்த மற்றும் தெரிந்தெடுத்துக் கொண்ட வகுப்பாரைக்குறித்து அப்போஸ்தலர் பவுல் பின்வருமாறு நமக்குத் தெரிவிக்கின்றார்:- இவர்கள் விசுவாசிப்பதின் மூலமாக இப்பொழுது கர்த்தர் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் ஆவர், மேலும், இவர்கள் இந்தச் சுவிசேஷ யுகத்திற்குரிய, “”பரம அழைப்பினுடைய” அழைப்பைக் கேட்டு, அதினிமித்தம் மிகுந்த தாக்கம் அடைந்தபடியால், சுவிசேஷத்தில் தங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள ஓட்டப்பந்தயத்தில், சகல பாரங்களையும் தள்ளி வைத்துவிட்டு, பொறுமையுடன் ஓடுகின்றார்கள்; மேலும், இப்படியாக இவர்கள் செயல்படும்போது, தெய்வீக வழிநடத்துதல் மற்றும் வழிக்காட்டுதலின் கீழ் இவர்கள், “”தேவனுடைய நேச குமாரனுடைய சாயலை அடையத்தக்கதாக இவர்களது குணலட்சணங்கள் தொடர்பான விஷயங்களில் இவர்கள் வார்க்கப்பட்டு, வடிவமைக்கப்படுகின்றனர்” (ரோமர் 8:29).
பரம பிதா, இந்த வகுப்பார் தொடர்பான தம்முடைய முன்குறித்தலுக்கு எல்லைகளையும், நிபந்தனைகளையும் முடிவு செய்துள்ளார்; (அவர்தான் செய்தியை அனுப்பியிருந்தாலுங்கூட) நற்செய்தியை யார்யார் கேட்பார்கள் என்பது தொடர்பாகவும், எல்லைகளையும், நிபந்தனைகளையும் பிதா ஏற்படுத்தவில்லை; (தற்காலத்தில் பிதா ஒரு குறிப்பிட்ட வகுப்பாரை மாத்திரம் இழுத்துக் கொண்டிருப்பதினாலும் மேலும், அவர்தான் இழுத்துக் கொண்டிருந்தாலுங்கூட) கிறிஸ்துவுக்குள்ளான அவருடைய கிருபையான நற்செய்தியினிடத்திற்கு யார்யார் இழுக்கப்படுவார்கள் என்பது தொடர்பாக எல்லைகளையும், நிபந்தனைகளையும், பிதா ஏற்படுத்தவில்லை; (பிதா இந்த அழைப்பில் அக்கறை கொண்டவராக, இந்த அழைப்பை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரின் காரியங்களை மேற்பார்வையிட்டு, அவர்களுடைய நன்மைக்கு ஏதுவாக சகலமும் செயல்படத்தக்கதாக பண்ணினாலுங்கூட) இயேசுவின் அடிச்சுவட்டில் சுயத்தைப் பலிச் செலுத்தும் ஓட்டத்தை ஓடத்தக்கதாக, இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் அனைவரையும் வரவேற்கும்படிப் போய்க்கொண்டிருக்கும் அழைப்புத் தொடர்புடையதாக எல்லைகளையும், நிபந்தனைகளையும் பிதா ஏற்படுத்தவில்லை, மாறாக, கிறிஸ்துவின் மணவாட்டி வகுப்பாரின் எண்ணிக்கைத் தொடர்பான விஷயத்திலும் மற்றும் இவ்வகுப்பாரில் அடங்குபவர்கள் அனைவரின் குணலட்சணம் தொடர்பான விஷயத்திலுந்தான் பரம பிதா முன்குறித்துள்ளார்; அதாவது, இந்தச் சுவிசேஷ யுகத்தில், கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலுக்கான பாடங்களை முற்றும் முழுமையாகக் கற்றுக்கொண்டு, நம்முடைய மீட்பராக மாத்திரமல்லாமல், நம்முடைய மாதிரியாகவும் இருக்கும்படிக்கு பிதா அனுப்பி வைத்துள்ள இயேசுவினிடத்தில் மிகவும் மகிமையுள்ளதாக வெளிப்பட்ட மாதிரிக்கு ஒத்த குணலட்சணத்தை வளர்த்திக்கொள்பவர்கள்தான், இவ்வகுப்பாரில் அடங்குவார்கள் என்று பரம பிதா முன்குறித்துள்ளார்.
இப்படியாக, தெய்வீக முன்னேற்பாட்டின் வழிநடத்துதல்களுக்குக் கீழ்ப்படிந்து, இருதயத்திலும், சித்தத்திலும், நோக்கத்திலும் (மாம்சத்தின் பூரணத்திலல்ல) கர்த்தர் இயேசுவுக்கு ஒத்த சாயலை அடைகின்றவர்கள் அனைவரும், இந்த மாபெரும் இரட்சிப்பில் இரட்சிக்கப்படுவதும், இயேசுவோடு “”முதலாம் உயிர்த்தெழுதலிலும்” அது வழிநடத்தும் மகிமையிலும், கனத்திலும், அழியாமையிலும் பங்காளிகள் ஆகுவதும்தான் பிதாவின் சித்தமாக இருக்கின்றது. இவர்களில் ஒருவரும் இழந்துப் போகப்படுவதில்லை; இவர்களில் ஒவ்வொருவரும், நியமிக்கப்பட்ட காலத்தில் “”கடைசி நாட்களில்” அதாவது, ஆயிரம் வருஷம் நாளின்போது, அந்த மகிமையான ஸ்தானத்திற்கு எழுப்பப்படுவார்கள். “”தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் (சீயோன்) சகாயம் பண்ணுவார்” (சங்கீதம் 46:5).
குமாரனுக்கு இராஜ்யத்தில் துணையாளர்களாகவும், உடன் சுதந்தரர்களாகவும் இருக்கும்படிக்கு, பிதாவினால் குமாரனுக்கு விசேஷமாகக் கொடுக்கப்பட்டவர்களை அதாவது, இந்த யுகத்தில் தம்முடைய வழிநடத்துதல்கள் மூலம் இழுத்துக் கொண்டவர்களைப் பற்றி 40-ஆம் வசனத்தில் பேசப்படவில்லை; நமது கர்த்தர் இயேசுவினால் ஈடுபலி கொடுக்கப் பெற்றவர்களாகிய மீதமுள்ள மனுக்குலத்தைப் பற்றியே இவ்வசனத்தில் பேசப்படுகின்றது; மேலும், பிதாவினுடைய திட்டத்தின்படி, ஆயிரவருஷம் யுகத்தின்போது நமது கர்த்தர் இயேசு இவர்களைத் தம்மண்டைக்கு இழுத்துக்கொள்ளுவார். “”நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்” (யோவான் 12:32). ஆனால், பிதாவின் இழுத்துக்கொள்ளுதல் வலுக்கட்டாயமாக இராததுப்போல, குமாரனுடைய இழுத்துக்கொள்ளுதலும் வலுக்கட்டாயமாக இராது. பிதாவின் இழுத்துக்கொள்ளுதலை, இன்று பெரும்பாலானவர்கள் எதிர்ப்பதற்குக் காரணம் குருட்டுத்தனம், அறியாமை முதலியவை ஆகும். ஏனெனில், இவ்வுலகத்தின் அதிபதியானவன் இன்று ஆளுகை செய்து, வஞ்சித்துக் கொண்டிருக்கின்றான்; ஆனால், நம்முடைய அருமை மீட்பருடைய ஆயிரம் வருஷம் இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் போதும், இவ்வுலகத்தின் அதிபதியாகிய சாத்தான் “”கட்டப்படும்” போதும் (வெளிப்படுத்தல் 20:2) மற்றும் கர்த்தரை அறிகின்ற அறிவானது பூமி முழுவதையும் நிரப்பும் போதும், மீட்பராலும், அவருடைய சரீரமாகிய மகிமையில் அவரோடு இணைந்துள்ள சபையாலும் மனுக்குலத்தின் மீது செயல்படுத்தப்படும் இழுத்துக்கொள்ளுதலுக்கான செல்வாக்கானது, அதிகமான பலன்களைக் கொடுக்கும் என்றும், இதன் காரணமாக அநேகர் இந்தச் செல்வாக்கிற்கு/தாக்கத்திற்கு இணங்கி, உண்மையாகவும், இருதயப்பூர்வமாகவும் கர்த்தரிடத்தில் வந்து, கர்த்தருக்குள் தேவன் அளித்துள்ள ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும், பாவத்தை வேண்டுமென்று விரும்புகிறவர்களும், இராஜ்யத்தின் நிபந்தனைகளையும், விசுவாசத்தையும், கீழ்ப்படிதலையும் மறுக்கிறவர்களும் தவிர மற்றபடி அனைவரும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் நாம் நியாயமாக அனுமானிக்கின்றோம்.
[R2652 : page 190]
40-ஆம் வசனத்தில், இந்த வகுப்பார் அனைவரும் குமாரனைக் காண்பது பிதாவின் சித்தமாக இருக்கின்றது என நமது கர்த்தர் தெரிவித்துள்ளார் (அதாவது தீர்க்கத்தரிசிகள் மூலம் கர்த்தர் வாக்களித்துள்ள பிரகாரம், ஆயிரவருஷம் யுகத்தில் இவர்களின் குருடான கண்கள் திறக்கப்படும்; சகரியா 12:10). மனுக்குலத்தால் இப்பொழுது உணரமுடியாததை, அவர்களுடைய புரிந்துக்கொள்ளுதலின் கண்கள் திறக்கப்படும்போது உணர்வார்கள். அதாவது, கர்த்தரையும், அவருக்குக் கீழ்ப்படிகின்ற அனைவருக்கும் அவர் அளிக்கும், நித்தியஜீவனுக்கான உடன்படிக்கையையும் உணர்ந்துக்கொள்வார்கள். இவர்களின் புரிந்துக்கொள்ளும் கண்களை இப்பொழுது குருடாக்கி வைத்துள்ள இந்த உலகத்தின் தேவனானவன், ஆயிரம் வருஷம் கட்டப்பட்டு, கர்த்தர் மற்றும் அவருடைய சரீரமாகிய மகிமையடைந்த சபை எனும் மாபெரும் நீதியின் சூரியன் மூலம் உலகத்திற்குப் பிரகாசிக்கப்படும், தேவனைப்பற்றின அறிவாகிய வெளிச்சம், சாத்தானுடைய நச்சுத்தனமான செல்வாக்கை இல்லாமலாக்கிப் போடாதது வரையிலும், மனுக்குலத்தால் இப்படியாகக் கர்த்தரைக் காண முடியாது.
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும், நித்தியஜீவனை அடைவது தேவனுடைய சித்தமாக இருக்கின்றது; மேலும், இவர்கள் பரலோகத்திற்குரிய பூரணத்திற்கல்லாமல், பூமிக்குரிய பூரணத்திற்குக் கர்த்தர் இயேசுவினால் எழுப்பப்படுவார்கள்; மேலும், இவர்களின் எழுப்பப்படுதலும் “”கடைசி நாளில்தான்” காணப்படும், ஆயினும் இவர்களுடைய உயிர்த்தெழுதலானது “”தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களின்” “முதலாம் உயிர்த்தெழுதலுக்குரிய” கடைசி நாளின் ஆரம்பப்பகுதியில் நடப்பதில்லை. இந்தச் சுவிசேஷ யுகத்தில் ஜெயங்கொண்டவர்களாகிய, கிறிஸ்துவின் சபை, கண்ணிமைக்கும் நொடியில், அவருக்கு ஒப்பாகப் பூரணப்படுத்தப்படுவார்கள்; பிற்பாடு அந்த யுகம் முழுவதும் பாவம், சீர்க்கேடு, சீரழிவிலிருந்து மனுக்குலகத்தின் உலகம் எழுப்பப்படும் வேலையானது, படிப்படியாக நடக்கும். இவ்வேலையானது, விருப்பமும், கீழ்ப்படிதலுமுள்ள அனைவரும் பரலோகத்திலிருந்து வந்த அப்பத்தைத் திருப்தியாகப் புசித்து, பாவம் மற்றும் மரணத்திலிருந்து, நித்தியஜீவனுக்கு முழுமையாய் எழுப்பப்படுவதுவரையிலும், அதாவது ஆயிரம் வருஷம் யுகத்தின் முடிவுவரையிலும் தொடரும்; அதாவது, பாவத்திற்கு முன்பு ஆதாம் காணப்பட்ட தேவனுடைய சாயலிலும், ரூபத்திலும், ஆனால் அதேசமயம் அவர்களது ஆயிரம் வருஷம் அனுபவங்களினால் நீதியில் பூரணப்படுத்தப்பட்ட மற்றும் பரீட்சிக்கப்பட்ட குணத்தில் எழுப்பப்படுவதுவரையிலும், இவ்வேலை தொடரும்.