R3544 – மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R3544 (page 121)

மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி

THE TRUE VINE AND ITS FRUIT

யோவான் 15:1-12

“”நீங்கள் மிகுந்த கனிகளைக்கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார்.”யோவான் 15:8

நினைவுகூருதலின் இராப்போஜனத்தை நிறுவின பிற்பாடு, கர்த்தரைக் காட்டிக்கொடுப்பதற்கு எனப் புறப்பட்டுப் போய்விட்ட யூதாஸ் தவிர, கர்த்தரும், அவருடைய சீஷர்களும் மேல் வீட்டு அறையிலிருந்து புறப்பட்டுப்போய், கெத்செமனே தோட்டத்திற்குப் போனார்கள். கர்த்தர் தம்முடைய சீஷர்களிடம் கூறின பல்வேறு காரியங்களினிமித்தமும், சமீபித்திருக்கிற தம்முடைய மரணத்தைக் குறித்து அவர் பேசினவைகளினிமித்தமும், சீஷர்களின் இருதயம் கலங்கியிருந்ததினாலும் மற்றும் தாம் சீஷர்களை விட்டுப் பிரியவேண்டியிருந்தது குறித்தும், அவர்களுடைய எதிர்க்கால அனுபவங்கள் குறித்தும் கர்த்தரும் மனதில் கொண்டிருந்ததினாலும், அவர் திராட்சச்செடியின் உவமையை அவர்களுக்குக் கூறினார். கர்த்தருடைய மற்ற உவமைகளைப் போலவே, இதுவும் அவர்கள் அனைவராலும் ஏதோ ஒன்றை வழியில் பார்த்து, இந்த உவமையின் காரியங்களைக் கூறினார் எனச் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். போகும் வழியில் காணப்பட்ட திராட்சத்தோட்டங்களானது, இவ்வுவமை பேசப்படுவதற்குத் தூண்டியிருக்கலாம் எனச் சிலர் எண்ணுகின்றனர். இன்னும் சிலர், கர்த்தரும், சீஷர்களும் மாபெரும் பொன்னினால் செய்யப்பட்ட திராட்சச்செடியை உடைய ஆலயத்தின் பொன்னினாலான நுழைவாயிலை அநேகமாய்க் கடந்துப் பிரயாணித்திருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். இந்த நுழைவாயிலில் காணப்படும் பொன்னினாலான திராட்சச்செடி குறித்து யோசப்பஸ் அவர்கள்: “”அதன் குலைகள் மனிதனுடைய உயரத்திற்குரிய உயரம் கொண்டிருந்தது” என்று விவரிக்கின்றார். வேறொரு யூத எழுத்தாளர் பின்வருமாறு கூறுகின்றார் “”இலைகளும், மொக்குகளும் மங்கலான செந்நிற பொன்னினாலும், அதன் குலைகள் மஞ்சள் நிற பொன்னினாலும், அதன் திராட்சப்பழங்கள் விலையேறப்பெற்ற கற்களினாலும் செய்யப்பட்டிருந்தது.”” இன்றைய நாட்களில் ஐசுவரியவான்களால், ஆலயங்களுக்கு ஜன்னல்கள் காணிக்கையாக வழங்கப்படுவதுபோன்று, அன்று ஐசுவரியவான்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன்னினாலான இலை (அ) கொடி (அ) குலை காரணமாக, நுழைவாயிலில் காணப்பட்ட பொன்னினாலான திராட்சச்செடியானது வளர்ந்துகொண்டிருந்தது என யூத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாம் மெய்யான திராட்சச்செடியாக இருப்பதாகவும், தம்முடைய பிதா மெய்யான திராட்சச்செடியை நட்ட மெய்யான திராட்சத்தோட்டக்காரராக இருப்பதாகவும் மற்றும் தம்முடைய பின்னடியார்கள் அந்தத் திராட்சச்செடியின் மெய்யான கொடிகளாக இருப்பதாகவும் கர்த்தர் கூறுகின்றார். “”மெய்யான திராட்சச்செடி” என்ற வார்த்தையானது, பொய்யான திராட்சச்செடி ஒன்றிருக்கின்றது எனும் கருத்தைக்கொடுக்கின்றதாய் இருக்கின்றது. மேலும் இந்தக் கருத்தானது வெளிப்படுத்தின விசேஷத்தில் அடையாளங்கள் வாயிலாகக் கர்த்தருடைய ஜனங்களுக்கு, நம்முடைய கர்த்தர் அளித்திட்ட கடைசி செய்தியில், அழுத்தத்துடன் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்தின விசேஷத்தில், “”பூமியின் திராட்சப்பழங்கள்” அறுக்கப்படுவதையும், அதை இந்த யுகத்தின் முடிவில் தேவனுடைய கோபாக்கினை எனும் பெரிய ஆலையில் போடப்படுவதையும் குறித்துக் கர்த்தர் பேசியுள்ளார் (வெளிப்படுத்தல் 14:19). ஆகவே “”மெய்யான திராட்சச்செடி” என்ற கர்த்தருடைய வார்த்தையை, அப்போஸ்தலர்களால் கிரகித்துக்கொள்ள முடிந்ததைக்காட்டிலும் ஆழமான அர்த்தம் காணப்பட்டிருக்க வேண்டும். பூமிக்குரிய பொய்யான பூமியின் திராட்சச்செடியும், பிதாவினால் நடப்பட்ட மெய்யான திராட்சச்செடியும், இரண்டும் வளர்ந்திருக்கிற காலப்பகுதியில் நாம் வாழ்ந்துக் கொண்டிருப்பதினால், இந்த இரண்டு திராட்சச்செடிகளுக்கு இடையிலான வித்தியாசத்தைப் பார்ப்பதற்கும் மற்றும் பூமியின் திராட்சச்செடி என்பது, பரம திராட்சச்செடிக்கான போலி என்பதைப் பார்ப்பதற்கும் உரிய வாய்ப்பை நாம் பெற்றிருக்கின்றோம். இந்த விஷயத்தை நாம் எந்தளவுக்குத் தெளிவாகப் புரிந்துக்கொள்கின்றோமோ, அவ்வளவுக்குக் கர்த்தருடைய (இந்தத் திராட்சச்செடி பற்றின) உவமையைப் புரிந்துக்கொள்ள நாம் உதவப்படுகின்றவர்களாய் மாத்திரமல்லாமல், அதனை நம்முடைய அன்றாட ஜீவியத்தில் செயல்படுத்தவும் நாம் உதவப்படுகின்றவர்களாய்க் காணப்படுவோம். பொய்யான திராட்சச்செடியானது, தெய்வீகமான தோட்டக்காரருடைய பராமரிப்பின் கீழ்க் காணப்படாததால், பொய்யான திராட்சச்செடி (அ) பொய்யான கொடிகள் மற்றும் பொய்யான கொள்கைகள் மூலம் நாம் வஞ்சிக்கப்பட்டுவிடுவதற்கும், தவறாய்ப் புரிந்துகொள்வதற்கும், தவறாய்ப் பொருள் கொள்வதற்குமுரிய அபாயத்தில் நாம் இல்லை.

பூமியின் திராட்சச்செடி

பூமியின் திராட்சச்செடி என்பது, பூமிக்குரிய ஞானத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட பெயரளவிலான கிறிஸ்தவ அமைப்பாகும். இதன் கொடிகள், கிறிஸ்தவ மண்டலத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் கூட்டத்தினரைக் குறிக்கின்றது. இதன் கனிகளானது, ஆலயங்கள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், சிறிய ஆலயங்கள், தலைமை கிறிஸ்தவ ஆலயங்கள், ஜெபக் கூடாரங்கள் முதலியவைகளையும், அரசியல் வல்லமை, மனுஷர் மத்தியில் கனம், ஆஸ்தி மற்றும் சமுதாய அந்தஸ்து என்பவைகளையும் குறிக்கின்றது. பொய்யான திராட்சச் செடியானது உலகத்தில் மகா பெரியதாகவும், செல்வாக்குமிக்கதாகவும் காணப்படுகின்றது; மற்றும் அதன் கொடிகளில், உலகத்தின் ஆவி ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த உலகத்தின் ஆவியானது, அதன் சகல காரியங்களை வழிநடத்துகின்றதாயும், முற்றிலும் மோசமானதாக இல்லை என்றாலும், முற்றிலும் உலகப்பிரகாரமாக இருக்கும் கனிகளைக் கொடுப்பதற்கு உதவுவதாகவும் இருக்கின்றது. இந்த கனிகள் உலகப்பிரகாரமாக இருப்பதினாலும், பரத்துக்குரியதாய் இருப்பதைப்பார்க்கிலும் நடைமுறை சார்ந்ததாக இருப்பதினாலும் விரும்பவும்படுகின்றது, அங்கீகரிக்கவும்படுகின்றது. இந்தப் பொய்யான திராட்சச்செடியானது அருமையாக வளர்ந்துள்ளது, 300 கொடிகளைக் கொண்டுள்ளது மற்றும் 400 மில்லியன் ஆதரவாளர்கள் இருப்பதாகவும் கூறிக்கொள்கின்றது. மேலும், அதன் கணக்கற்ற சொத்துக்களை வைத்தும், அதன் ஆதரவாளர்களை வைத்தும் பார்க்கையில், உலகத்தின் ஆஸ்திகள் மீது, அதற்கு அதிகாரம் இருக்கின்றது எனச் சொல்லப்படலாம்.

பூமியின் திராட்சச்செடியானது, மகா பெரியதாகவும், அருமையானதாகவும் மனுஷருடைய கண்களுக்குக் காணப்படுகின்றது. ஆனால், அறுவடை காலமோ, இந்தப் பெயரளவிலான அமைப்புகள், பிதாவின் வலது கையினுடைய கிரியையாகிய திராட்சச்செடி அல்ல என்பதைக் காண்பித்து விடும்; மேலும், அறுவடை காலமானது, இந்தப் பெயரளவிலான அமைப்புகள்தான், கர்த்தரால் (வெளிப்படுத்தின விசேஷத்தில், படத்தோற்றமாக விவரிக்கப்பட்டுள்ளப்படி) வேரோடு பிடுங்கப்பட்டு, அழிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ள அமைப்பு என்பதைக் காண்பித்து விடும். சமீபித்துக் கொண்டிருக்கும் மகா உபத்திரவக் காலத்தில் அதாவது, வேத வாக்கியங்கள் போதிக்கின்றன என நாம் நம்புகின்றபடி, இப்பொழுது துவங்கி உலகத்தின் மீது பத்து வருடங்கள் முழுமையாய்க் காணப்படும் எனச் சொல்லப்படும் மகா உபத்திரவக் காலத்தில், அதாவது தேவனுடைய கோபாக்கினை எனும் பெரிய ஆலையிலிருந்து வரும் பாபிலோனின் திராட்சப்பழங்களுடைய இரத்தம் என்பது, உலகத்திற்கான உபத்திரவம் மற்றும் கடுந்துயரத்தின் பெரும் வெள்ளத்தைக் குறிக்கின்றதாய் இருக்கும். எனினும் அக்கால கட்டத்தில் மெய்யான திராட்சச்செடியும், அதன் கொடிகளும் மகிமையடைந்துவிடுவார்கள் மற்றும் அவர்கள் சரியான கனிகளைக் கொடுத்ததின் விளைவுகள் என்பது, பூமியின் குடிகள் அனைத்திற்கும் ஆசீர்வாதங்களைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது.

“”மெய்யான திராட்சச்செடியைக்” குறித்தும், அதன் கொடிகளாக நமக்கு அதனோடு இருக்கும் உறவைக் குறித்தும், மாபெரும் தோட்டக்காரர் எதிர்ப்பார்த்திடும் கனியாகிய குணலட்சணத்தைக் குறித்துமுள்ள, நம்முடைய கர்த்தருடைய உவமைகளில் கடைசி உவமையான இது, நமக்கு மிகுந்த நன்மையைத் தரத்தக்கதாகவும், நம்மைப் பெலப்படுத்தத்தக்கதாகவும், நம்மை உற்சாகப்படுத்தத்தக்கதாகவும், அதன் நோக்கத்திற்கு ஏற்ப நமக்கு உதவத்தக்கதாகவும் நாம் கவனமாய்க் கவனிப்போமாக.

மெய்யான திராட்சச்செடி

மெய்யான திராட்சச்செடியின் கொடிகள் என்பது, பிரிவுகள் கூட்டத்தாரில்லை. மேலும் கர்த்தருடைய ஜனங்களாக இருப்பவர்கள், மனுஷர்களுடைய இந்த அமைப்புகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது, எதிராளியானவனுடைய வஞ்சனையாக மாத்திரமே இருக்கின்றது. அப்போஸ்தலர்கள் லுத்தரன்களாக, மெத்தடிஸ்டுகளாக, பிரஸ்பெட்டேரீயர்களாக இராததுபோல, கர்த்தருடைய பின்னடியார்களில் எவரும் கூட இப்படியாகக் (பிரிவினர்களாக) காணப்படக்கூடாது. மேலும் எதிராளியானவனுடைய தவறான போதனைகளில் நாம் குருடாக்கப்பட்டிருந்தபடியினால், இப்படிப்பட்டதான தவறில் தேவனுடைய உண்மையான பிள்ளைகள் (நாம்) காணப்பட்டிருந்தோம். அப்போஸ்தலர்கள் ஒருவரோடொருவர் இணைந்து கொள்ளவில்லை. மாறாக ஒவ்வொரு அப்போஸ்தலரும் இருதயத்திலும், விசுவாசத்திலும், அன்பிலும் கர்த்தருக்கான பக்தியிலும் ஒன்றுபட்டு இருந்தார்கள். அதுபோலவே நாமும் அப்போஸ்தலர்களுடன் இணைந்துகொள்ளவுங்கூடாது. நான் பவுலைச் சார்ந்தவன், நான் பேதுருவைச் சார்ந்தவன் என்றும் கூறவுங்கூடாது. மாறாக ஒவ்வொருவரும் ஓர் அங்கமாக, ஒரு கொடியாகத் தனிப்பட்ட விதத்தில் கர்த்தருடன்தான் இணைந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் கனிக்கொடுக்கத்தக்கதாகத் திராட்சச்செடியின் உயிர்சாற்றைப் பெற்றிருக்க வேண்டும். கர்த்தர் பிரியப்படும் உண்மையான கனிகளைக் கொடுக்கும் விஷயத்திற்கு சபைப் பரிவு எனும் உயிர்ச்சாறு உதவுவதாக இராமல், மாறாக இடையூறாக மாத்திரமே இருக்கிறது. இதனால் மெய்யான திராட்சச்செடியின் எந்தக் கொடிகளும், தவறுதலாகப் பூமியின் திராட்சச்கொடியாகிய பெயரளவிலான சபை அமைப்புடன் இணைந்து இருக்காது என்று நாம் சொல்லவரவில்லை. இப்படியாகவும் கொடி இருக்கின்றது என்பதையும் நாம் ஒப்புக்கொள்கின்றோம்; மற்றும், “”என் ஜனங்களே, [R3544 : page 122] நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படி, அவளைவிட்டு வெளியே வாருங்கள்”” என்று கர்த்தருடைய குரல் அழைப்பதையும் நாம் ஒப்புக்கொள்கின்றோம். தாய் மற்றும் மகள்கள் மீது வரவிருக்கும் மாபெரும் உபத்திரவத்தை, இவ்வழைப்பில் கர்த்தர் பேசுகின்றார்.

கொடிகள் என்பது சபை பிரிவுகளையும், கூட்டத்தினரையும் குறிக்காமல் மாறாக, கர்த்தருடன் ஒன்றுப்பட்டுள்ள தனிநபர்களைக் குறிக்கின்றபடியால், இந்த உவமை போதிப்பது என்னவெனில் நமது கர்த்தர் சபை பிரிவுகளையும், கூட்டங்களையும் கிள்ளிவிடாமல், மாறாக தனிப்பட்ட கிறிஸ்தவர்களையேதான் கிள்ளிவிடுகின்றார். அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, எங்கெல்லாம் காணப்பட்டாலும் சரி, அவர்களை அவர் கிள்ளிவிடுகின்றார். “”கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்” (2 தீமோத்தேயு 2:19). இவ்விஷயம் தொடர்பாக, “”என்னில் கனிக்கொடாதிருக்கிற கொடி எதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிக்கொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக்கொடுக்கும்படி அதைச் சுத்தம் பண்ணுகிறார்”” (கிள்ளிவிடுகின்றார்) என்று கர்த்தருடைய வார்த்தை காணப்படுகின்றது (யோவான் 15:2). நம்முடைய இரட்சிப்பும், கர்த்தருடனான நம்முடைய உறவு நிலையும் தனிப்பட்ட விதத்தில் மற்றும் தனிப்பட்ட காரியங்களாகவே இருக்கின்றது என வேத வாக்கியங்கள் அனைத்தும் நமக்குப் போதிக்கின்றன. நாம் சபையோராகவும், கூட்டங்களாகவும், சபை பிரிவாகவும், குடும்பங்களாகவும் இரட்சிக்கப்படுவதில்லை என்றும், மாறாக நாம் உயிர்சாற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனில், நாம் ஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனில், நாம் கர்த்தருடைய சரீரமாகிய சபையின் அங்கத்தினராகக் கருதப்பட வேண்டுமெனில், நாம் தனிப்பட்ட விதத்தில் திராட்சச்செடியுடன் இணைந்திருக்க வேண்டுமென்றும் வேதவாக்கியங்கள் நமக்குப் போதிக்கின்றன.

நம்முடைய ஒற்றுமைக்கான அநேக உதாரணங்கள்

தமக்கும், தம்முடைய அர்ப்பணிக்கப்பட்ட பின்னடியார்களுக்கும் இடையிலுள்ள ஒற்றுமையை விவரிப்பதற்கென, அனைத்து ரகமான உதாரணங்களையும் கர்த்தர் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இயற்கையின் கனிப்பொருள் பெரும் பிரிவிலிருந்து (Mineral Kingdom) அவர் உதாரணத்தை வழங்குகின்றார். அதாவது நாம் தேவனுடைய ஆலயமாக இருக்கத்தக்கதாக, அஸ்திபாரமும், மூலைக்கல்லாகவும் இருக்கும் தம் மேல், நாம் ஜீவனுள்ள கற்களாக ஒன்றாய்க் கட்டப்பட்டுள்ளதைக் குறித்துக் கூறியுள்ளார். மிருகங்கள் பிரிவிலிருந்தும் (Animal Kingdom) நமது கர்த்தர் இந்த ஒற்றுமைக்கான உதாரணத்தை எடுக்கின்றார். அதாவது, தம்மை நல்ல மேய்ப்பனுக்கு ஒப்பிட்டு, தம்முடைய உண்மையான பின்னடியார்களை, தம்முடைய பராமரிப்பின் கீழ், தம்முடைய ஐக்கியத்தில் ஒன்றுபட்டிருக்கும் ஆடுகளுக்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். இந்த ஒற்றுமை குறித்த உதாரணத்தை அவர் தாவரங்களின் பிரிவிலிருந்தும் (Vegetable Kingdom) எடுக்கின்றார். அதாவது தம்மைத் திராட்சச்செடி என்றும், தம்முடைய உண்மையான சீஷர்கள் கொடிகள் என்றும் கூறியுள்ளார். குடும்ப உறவிலிருந்து, உண்மையான கணவன் மற்றும் உண்மையான மனைவி குறித்தும் இருதயத்திலும் மற்றும் அனைத்து விஷயத்திலும் அவர்களது முற்றும் முழுமையான ஒன்றுப்பட்ட நிலையைக் குறித்தும் உதாரணமாக எடுத்துக் கூறியுள்ளார். அதே குடும்ப உறவிலிருந்து, தகப்பன் சிருஷ்டிகரைக் குறிக்கின்ற விதத்திலும், மூத்தக் குமாரன் தம்மைக் குறிக்கின்ற விதத்திலும், சகோதரர்கள் தம்முடைய அனைத்துப் பின்னடியார்களையும் குறிக்கின்ற நிலையிலும் இருக்கும் மற்றுமொரு உதாரணத்தை எடுத்துக்கூறியுள்ளார். மனித சரீரத்திலிருந்து நமக்கு இன்னுமொரு உதாரணமும் இருக்கின்றது. அதாவது கிறிஸ்துதாமே தம்முடைய சரீரமாக இருக்கும் சபைக்குத் தலையாக இருக்கின்றார். ஏனெனில் அப்போஸ்தலர் கூறுவதுபோல, நாம் கிறிஸ்துவின் சரீரத்தில் தனித்தனி அங்கங்களாக இருக்கின்றோம். இவைகளையெல்லாம் நமது [R3545 : page 122] விசுவாசமானது, எந்தளவுக்குக் கிரகித்துக்கொள்கின்றதோ மற்றும் இவைகளின் உண்மைத்தன்மையை நாம் எந்தளவுக்கு உணர்ந்துக் கொள்கின்றோமோ, அதேயளவுக்கு நம்மில் நற்கிரியையை ஆரம்பித்தவர், அதை நிறைவேற்றுவதற்கு விருப்பமும், வல்லமையையும் கொண்டிருக்கின்றார் என்பதில் நாம் உறுதியான விசுவாசமும், நம்பிக்கையும் கொண்டிருப்போம். நேர்மையான மற்றும் கீழ்ப்படிதலுள்ள இருதயம் கொண்டவன் விசுவாசம் வைக்கும்போது, தேவையானபொழுதெல்லாம், சோதனையான ஒவ்வொரு வேளையிலும் பிரச்சனையான மற்றும் குழப்பமான ஒவ்வொரு வேளையிலும், ஜீவியத்தின் சகல விஷயங்களிலும் தனக்குப் பலத்தையும், கிருபையையும் பெற்றிருக்கின்றான். அதாவது சமநிலையில் இருப்பதற்கெனப் (கப்பலில், இரயில் பாதையடியில்) போடப்பட்டிருக்கும் பாரம்/சரளைக்கல்லை நாம் பெற்றிருப்போம்; மற்றும் ஜீவியத்தின் சகல அனுபவங்களிலிருந்து, கசப்பிலும், தித்திப்பிலும் நன்மையை அடைய நமக்கு உதவிடும்.

தம்முடைய நாமத்தில், தம்முடைய சீஷர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் ஒன்றுகூடினால், அவர்கள் சபையாக (அ) கிறிஸ்துவின் சரீரமாக இருக்கின்றனர் என்றும், அவர்களுடைய இருதயங்கள் எந்தளவுக்கு நேர்மையாகக்காணப்பட்டு, தம்முடைய வழிநடத்துதலை நாடுகின்றதோ, அந்தளவுக்கு அவர்களை ஆசீர்வதிக்கத்தக்கதாக (தலையாக), தாம் அவர்களோடு காணப்படுகின்றார் என்றுமுள்ள நமது கர்த்தருடைய வார்த்தைகளானது பின்வருமாறு எண்ணிக்கொள்ள வழிநடத்துகின்றது; அதாவது எங்கெல்லாம் அவருடைய அங்கங்கள் இரண்டு அல்லது மூன்று பேர் காணப்படுகின்றார்களோ, அங்குத் திராட்சச்செடியின் உருவகத்தை நாம் பார்க்கலாம்; மேலும் அந்த இரண்டு அல்லது மூன்று பேருக்குக் கொடிகளுக்கான ஆசீர்வாதங்கள் அனைத்தும், கனிக்கொடுப்பதற்கான சிலாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும். எனினும் கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துள்ளவர்கள் அடங்கிய ஒவ்வொரு சிறு கூட்டத்தார் மத்தியிலும், மெய்யான கொடிகள் மாத்திரம் காணப்படத்தக்கதாக முழுமையான கிள்ளிவிடுதல்களும், முழுமையாய் எரிக்கப்படுதலும் காணப்படும் என்று நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் எனக் கர்த்தர் விரும்பவில்லை. நம்மைத் தனித்தனியாகவும், ஒட்டுமொத்தமாகவும் கையாளுகின்றார் என்றும், அவருடனான நமது தனிப்பட்ட உறவைத் தக்கவைப்பது என்பது அவருடனான ஐக்கியம் மற்றும் உறவின் பலன்களில் ஒன்றாகிய பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதன் முலமாக, அதாவது திராட்சச்செடியின் உயிர்சாற்றைப் பெற்றுக்கொள்வதன் மூலமாக மாத்திரமே என்பதும்தான், அவர் தெரிவிப்பவைகளாகும்.

பரிசுத்த ஆவியை நாம் நல்லதும், உத்தமுமான இருதயத்திற்குள் பெற்றுக்கொள்ளும்போது, விளைவு கனிக்கொடுப்பது என்பதாக இருப்பினும், நமது கர்த்தர் கொடுத்துள்ள உதாரணமானது, சிலர் திராட்சச்செடியின் மெய்யான கொடிகளாக ஆகியும், கவனிக்கத் தவறிப்போய், கனிக்கொடுக்கும் தன்மை இல்லாமல் காணப்படுகின்றனர் என்று போதிக்கின்றது. சில சமயம் நல்ல அடித்தண்டு மற்றும் வேரிலிருந்து வளரும் ஆரோக்கியமான மற்றும் திடகாத்திரமான கொடியானது, கனிகொடுக்கும் தன்மை இல்லாமல் காணப்படுகின்றது. அனுபவமிக்க கண்களையுடைய தோட்டக்காரர், திராட்சக்குலைகளைக் கொணரும் மொக்குகளுக்கும், இலைகளை மாத்திரம் கொணரும் மொக்குகளுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் அறிகின்றார். கனிக்குரிய மொக்குகள் அற்றவைகள் “”உறிஞ்சிகள்”” என்று அழைக்கப்படுகின்றன; காரணம் இவைகள் திராட்சச்செடியின் சாற்றை மாத்திரம் உறிஞ்சிக்கொள்கின்றது மற்றும் தோட்டக்காரரால் நாடப்படும் எவ்விதமான கனிகளைக் கொடுப்பதுமில்லை. இவைகள் கிள்ளிவிடப்படுகின்றன அல்லது வெட்டிவிடப்படுகின்றன, அதாவது வெளிப்புறமான அழகு தோற்றத்திற்கெனத் திராட்சச்செடியின் சாறு வீணடிக்கப்படாமல், மாறாக கனிக்கொடுக்கும் நோக்கத்திற்கெனச் சேமித்து வைக்கப்படத்தக்கதாகக் கிள்ளிவிடப்படுகின்றன அல்லது வெட்டிவிடப்படுகின்றன. உண்மையில் இந்த உறிஞ்சிகள் போன்று, கிறிஸ்தவர்களென அறிக்கைப் பண்ணிக்கொள்ளும் வகுப்பார் காணப்படுகின்றனர். இவர்கள் தங்களால் முடிந்தமட்டும் திராட்சச்செடியின் நீதியைச் சுயநலத்துடன் தங்களுக்குரியதாக்கிக் கொண்டு, இலைகள் அல்லது அறிக்கைகள் பண்ணுவதன் மூலமாக, உலகத்தில் வெளிவேஷமிட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் கர்த்தரால் எதிர்ப்பார்க்கப்படுகின்றதும், பலிச் செலுத்துவதன் மூலமாக மாத்திரமே உண்டாக்கப்படுகின்றதுமான கனிகளைக் கொடுக்கும், எண்ணம் கூட இல்லாதவர்களாய்க் காணப்படுவார்கள்.

கிள்ளிவிடப்படுவதற்குரிய நோக்கம்

உறிஞ்சிகள் தவிர, கனிக்கான மொக்குகளைக்கொண்டிருக்கும் சில கொடிகளானது, ஒருவேளை அதன் போக்கின்படியே விடப்பட்டு, கொடிகளாக மாத்திரம் வளரும்படி விடப்பட்டால், நன்கு கனிந்த அளவிலுள்ள கனிகளை ஒருபோதும் கொடுப்பதில்லை. ஆகவே ஞானமுள்ள தோட்டக்காரர் கனிக்கான மொக்கினைக் கண்டு, அதில் மகிழ்ச்சியடைந்து, கொடிக்குப் பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்றில்லாமல், மாறாக அதனை அதிகமான கனிக்கொடுக்கத்தக்கதாக, ஆக்கத்தக்கதாக, கனிக்கான மொக்குகளுக்கு மேலாகக் காணப்படும் முளைகளைக் கிள்ளி எறிந்துவிடுகின்றார். இதுபோலவே விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பின் மூலமாகக் கர்த்தருடன் இணைந்து கொடிகளென ஏற்றுக்கொள்ளப்பட்டு, கர்த்தர் எதிர்ப்பார்க்கும் நற்கனிகளைக் கொடுப்பதற்கு வாஞ்சிக்கும் கொடிகளாகிய நம் விஷயத்திலும் காணப்படுகின்றது. நாம் அதிகமான கனிக்கொடுக்கத்தக்கதாகவும், நாம் கொடுக்கின்ற கனிகள் அவருக்கு மிகவும் பிரியமாகவும், பெரிய கனியாகவும், நல்ல கனியாகவும், விலையேறப்பெற்ற கனியாகவும், மனதிற்கினிய கனியாகவும் இருக்கத்தக்கதாகவும், நமக்குத் தோட்டக்காரரின் பராமரிப்பு அவசியமாய் இருக்கின்றது. கர்த்தருடைய கிள்ளிவிடுதலின் முறைகளை, அனைத்துக் கொடிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும்; இல்லையேல் கொடிகள் சோர்வடைந்து வாடி வதங்கி, சரியான கனிகளைக் கொடுக்கத் தவறிவிடும்.

மாபெரும் தோட்டக்காரர், சிலசமயம் பூமிக்குரிய ஆஸ்தி (அ) சொத்தை எடுத்துவிடுவதன் மூலமாக அல்லது சிலசமயம் மனதில் பேணி சீராட்டின திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளைத் தடைப்பண்ணுவதன் மூலமாக, கிறிஸ்துவின் கொடிகளைக் கிள்ளிவிடுகின்றார். சிலசமயம் துன்பங்களை அனுமதிப்பதன் மூலமாகவும், நற்பெயரையும், நற்கீர்த்தியையும் இழக்கச் செய்வதன் மூலமாகவும் அவர் நம்மை கிள்ளிவிடுகின்றார். சிலசமயம் அவர் விரும்பும் அதிகமான கனிகளைக் கொடுப்பதற்குத் தடையான விதத்திலுள்ள, நம்முடைய இருதயத்தின் கொடிச்சுருள்கள் பலமாய்ப் படர்ந்திருக்கும் பூமிக்குரிய தோழமைகளை இழக்கச் செய்வதன் மூலம் அவர் நம்மைக் கிள்ளிவிடுகின்றார். “”நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்” எனத் தீர்க்கத்தரிசி கூறியுள்ளது போன்று, சில சமயம் நம்மை உபத்திரவத்திற்குள்ளாக்கும் நோய்களை அவர் அனுமதிப்பதும், இந்தக் கிள்ளிவிடுதல்களில் ஒன்றாகும். கர்த்தருடைய அருமையான ஜனங்களில் அநேகர், உபத்திரவத்தின் படுக்கையில்தான், மிகவும் விலையேறப்பெற்றதான தங்களுக்குரிய படிப்பினைகளை அடைந்திருக்கின்றனர்.
[R3545 : page 123]

சிலர் தாங்கள் எவ்வாறு பூமிக்குரிய விஷயங்களிலும், கவனத்தை ஈர்க்கும் காரியங்களிலும் மூழ்கிக் காணப்பட்டப்படியினால், யுகங்களைக் குறித்த தெய்வீகத் திட்டத்தைப் படிப்பதற்கும், தங்களுடைய சொந்த இருதயங்களைச் செம்மைப்படுத்துவதற்கும், ஆவியின் கனிகளைக் கொணர்வதற்கும், தங்களுக்கு நேரமில்லாமல் காணப்பட்டது பற்றியும் மற்றும் எவ்வாறு கர்த்தர் அதிகமான இரக்கத்துடன் தங்களைக் கொஞ்ச காலம் ஓய்ந்திருக்கப்பண்ணி, சிந்திப்பதற்கும், கிறிஸ்தவ வளர்ச்சியை அடைவதற்கும், தாங்கள் கிருபையில் வளரத்தக்கதாக, அறிவின் வளர்ச்சியை அடைவதற்கும் தங்களுக்கு அவசியமாய் இருந்த வாய்ப்புகளைக் கொடுத்தார் என்பது பற்றியும் நமக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். தோட்டக்காரரின் இந்தக் கிள்ளிவிடுதல்கள் காயப்படுத்துவதாகவும், பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், உண்மையான கொடிகள் எண்ணிக்கொள்ளாமல் மாறாக அவரை அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் என்ற வேதவாக்கியங்களின் நல்ல வாக்குத்தத்தத்திற்கு ஏற்பவே எண்ணிக்கொள்ள வேண்டும். அதாவது, மெய்யான கனிகளைக் கொடுக்கும் திராட்சச்செடியின் கொடிகளாக ஆக்குவதற்கே என்று எண்ணிக்கொள்ள வேண்டும். இப்படியான கிள்ளிவிடுதல்கள், சோர்வுகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, உற்சாகத்திற்குரிய ஊற்றுகளாகவே நம்மால் சரியான விதத்தில் புரிந்துக்கொள்ளப்பட வேண்டும். உலகமானது அதன் போக்கிலேயே விட்டுவிடப்பட்டுள்ளது என்றும், பூமியின் திராட்சச்செடிகளுக்குக் கர்த்தருடைய விசேஷித்த கிள்ளிவிடுதல்கள் இல்லை என்றும், நமக்கு இந்த விசேஷித்த கிள்ளிவிடப்படுதல்கள் காணப்படுவது என்பது பிதா நம்மை அன்புகூர்ந்து, நம்முடைய மேலான நன்மைக்கு ஏதுவாக நமக்காகப் பராமரித்துக் கொள்கின்றார் என்பதற்கான ஆதாரமாய் உள்ளது என்றும் நாம் உணர்ந்துக்கொள்கின்றோம்.

நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்

இந்தப் பாடத்தைத் தம்முடைய சீஷர்களுக்குப் பொருத்தி நமது கர்த்தர், அந்தச் சரியான கிள்ளிவிடுதல் ஏற்கெனவே அந்நாள்வரையிலும் அவர்களிடத்தில் நடந்துக்கொண்டு வருகின்றது என்றும், கனியற்ற கொடியாகிய யூதாஸ் கர்த்தருடைய வழிநடத்துதலின்படி அவர்களிடமிருந்து அகற்றப்பட்டுள்ளான் என்றும் சுட்டிக்காட்டினார். ஆகவேதான் அவர், “”நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்” என்று கூறினார்; அதாவது, “”உங்களுடைய விசுவாசம், கீழ்ப்படிதல் மற்றும் நேர்மைக் காரணமாக, நீங்கள் நீதிமான்களாக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளபட்டுள்ளீர்கள்”” என்ற விதத்தில் கூறினார் (யோவா 15:3). இந்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் 11 அப்போஸ்தலர்களும் எத்துணை சந்தோஷம் அடைந்திருக்க வேண்டும்; மற்றும் அதே வார்த்தைகளின் உண்மையை நமக்குப் பொருத்திப்பார்க்கும்போது, நாமும் எத்துணை சந்தோஷத்தை அடைவோம். கிறிஸ்து மூலமான தேவனுடைய தயவாகிய இந்த மாபெரும் ஈவுக்காகக் கர்த்தருக்கு நன்றி. அதாவது பாவங்களுக்கான மன்னிப்பும், அவருடைய நீதியின் வஸ்திரத்தினால் மூடப்படுதலும் மாத்திரம் அவருக்குள் நமக்கு இருக்காமல், இன்னுமாக நமக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை (அ) உபதேசத்தை ஏற்றுக்கொண்டதன் மூலமாக, சுத்தமானவர்களாக, மெய்யான திராட்சச்செடியின் கொடிகளாக அவருக்குள் நாம் பிதாவானவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கின்றோம். இத்தோடு எல்லாம் முடியவில்லை, இது வெறும் ஆரம்பம்தான். திராட்சச்செடியுடன் கொடிகள் கொண்டிருக்கும் இந்த ஆசீர்வாதமான உறவில் நாம் தொடர்ந்து நிலைத்திருப்பதையே, இறுதியிலுள்ள நமக்கான ஆசீர்வாதமும், பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்படுதலும் சார்ந்துள்ளது என்ற காரியமே நினைவில் கொள்வதற்கு அவசியமானதாகும்.

ஒருவேளை நாம் கனிக் கொடுக்கவில்லையெனில், நம்மால் இந்த உறவில் நிலைத்து நிற்க முடியாது. ஒருவேளை நாம் கனிக்கொடுப்போமானால், ஒருவேளை கனிக்கொடுப்பதற்குரிய ஆவியும், மனப்பான்மையும் நாம் பெற்றிருப்போமானால் மற்றும் கர்த்தருடைய கிருபையையும், பலத்தையும், உதவியையும் வாஞ்சிப்போமானால், தேவையான பொழுதெல்லாம் அவருடைய கிருபை நமக்குப் போதுமானதாகக் காணப்படும் மற்றும் நம்மை அன்புகூர்ந்து நம்மைத் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் வாங்கிக்கொண்டவர் மூலமாக நாம் ஜெயங்கொள்கின்றவர்களாகவும், முற்றிலும் ஜெயங்கொண்டவர்களாகவும் காணப்படுவோம். கிறிஸ்துவுடன் இணைக்கப்படும் உறவின் காரணமாகவும், அவருடைய திருவுள்ளத்தின்படிச் செய்யத்தக்கதாக, அவருடைய ஆவி மற்றும் அவருடைய வார்த்தையின் வல்லமையானது, நம்மில் விருப்பத்தையும், செய்கையையும், உருவாக்குவதன் காரணமாகவும், அவருடைய கனி நம்மில் உருவாகுகின்றது. ஆகையால் இப்படியாகக் கிறிஸ்துவுடன் நாம் இணையவில்லையெனில், பிதா விரும்பும் கனிகளையும் நாம் கொணரமுடியாது மற்றும் நாம் அவருக்குப் பிரியமாகவும் இருக்க முடியாது. நாம் அவரில் நிலைத்திருந்தால் நாம் அதிகமான கனிக்கொடுப்போம் என்றும், அவரில்லாமல் நம்மால் எதுவும் செய்ய முடியாது மற்றும் பிதா அங்கீகரிக்கத்தக்கதான எவ்விதமான கனியும் பெற்றிருக்க முடியாது என்றும்தான் வாக்குத்தத்தம் காணப்படுகின்றது.

இந்தக் கனிக்கொடுத்தலின் தன்மை என்ன? பிதா நாடும் கனியை நாம் எப்படி அறிந்துக்கொள்ளலாம்? பூமியினுடைய திராட்சச்செடியின் தவறான வழிகாட்டுதல் மற்றும் தவறான முன்னுதாரணம் காரணமாக, கர்த்தர் நன்கு வளர வேண்டும் என விரும்பும் கனிகளானது, மாபெரும் பூமிக்குரிய ஆலயங்கள், அநாதை இல்லங்கள் முதலானவைகளைக் கட்டுதல் என எண்ணிக்கொள்ளும் நிலைக்கு அநேகர் ஆளாகியுள்ளனர் என்று நாம் பதிலளிக்கின்றோம். இல்லை, ஒருவேளை மேற்கூறியவைதான் கனிகள் என்றால், இயேசுவும், அப்போஸ்தலர்களும் கனிகள் கொடுக்கவில்லை என்பதாகிவிடும். அவர்கள் ஆலயங்கள் (அ) சிறிய ஆலயங்கள் (அ) பெரிய ஆலயங்கள் கட்டவில்லை. அவர்கள் அநாதை இல்லங்கள் (அ) மனநோயாளிக் காப்பகங்கள் (அ) மருத்துவமனைகள் கட்டவில்லை (அ) ஸ்தாபிக்கவில்லை. ஒருவேளை மேற்கூறியவைகள்தான் பிதா நாடும் கனிகள் என்றால், அப்பொழுது கர்த்தரும், அப்போஸ்தலரும் முற்றிலும் தவறு செய்துவிட்டவர்களாக இருப்பார்களே. ஆனால், இயேசுவும், அப்போஸ்தலரும் தவறு செய்யவில்லை என்றும், தவறு வேறு இடத்தில்தான் உள்ளது என்றும் நாம் கூறுகின்றோம். உலகத்தின் ஆவியினால் வழிநடத்தப்பட்ட பூமியின் திராட்சச்செடியானது, பயனுடைமை கொள்கையைப் (utilatarian) பின்பற்றி, உலகம் அங்கீகரிக்கும் வகையான, கனிகளைக் கொணர்ந்துள்ளது என்று நாம் கூறுகின்றோம்.

உலகம் ஏற்பாடு செய்துள்ளது

மருத்துவமனைகள், காப்பகங்கள் முதலியவற்றிற்கு எதிராக, ஒரு வார்த்தைக்கூட நாம் சொல்வதில்லை. இவைகளெல்லாம் மிகவும் நல்லவைகள், மிகவும் விரும்பத்தக்கவைகள், சமுதாயம் மற்றும் நாகரிகத்திற்கு ஏற்றவைகள் என்றே நாம் நம்புகின்றோம். ஆனால் இவைகளையெல்லாம் ஏற்பாடு பண்ணிட, உலகம் கூட முழுத்திறமையுடன் உள்ளது என்றும், இவைகளை ஏற்பாடு பண்ணிட உலகம் கூட ஆயத்தமாயும் இருக்கின்றது என்றும், இன்னும் சொல்லப்போனால் உலகம் கூட உண்மையில் இவைகளை ஏற்பாடும் பண்ணியுள்ளது என்றும் நாம் நம்புகின்றோம். உதாரணத்திற்குத் தூய பிரான்சிஸ், தூய யாக்கோபு, தூய ஆக்நிஸ் மருத்துவ மனைகள், காப்பகங்கள் முதலியவைகள், புரட்டஸ்டண்டும் சரி, கத்தோலிக்கமும் சரி அனைத்தும், அதன் பராமரிப்பிற்கு, அரசாங்கத்தின் நன்கொடையினால் ஆதரவு பெற்றிட நாடுகின்றது மற்றும் பெற்றுக்கொள்ளவும் செய்கின்றது; மற்றும் சில கோணங்களில் பார்க்கும்போது இவைகள் அனைத்தின் மீது அரசாங்கத்திற்குப் பொறுப்பும்/அதிகாரமும் காணப்படலாம். ஆனால் இப்பொழுது எந்தளவுக்கு முற்றும் முழுமையாக இவைகள் மீது, இன்று அரசாங்கம் அதிகாரம் அடைந்துள்ளது என்பது நமக்குத் தெரியவில்லை. மெய்யான திராட்சச்செடியின் மெய்யான கொடிகளில் எதுவும், இந்தப் பூமிக்குரிய அமைப்புகளில் ஏதேனும் ஒன்றுடன் தொடர்புக்குள் இராது என்று சொல்ல நாம் வரவில்லை. அதேசமயம் இப்படியாக மருத்துவமனைகள், காப்பகங்கள் உருவாக்கிடுவது, கர்த்தருடைய உவமையின்படியான கொடிகளின் கனிகள் இல்லையென்றும், ஒருவேளை கொடிகள் சரீரத்தின் அங்கங்களாகவும், அதேசமயம் பாபிலோனின் அங்கங்களாகவும் இருப்பினும், பிதா விரும்பும் கனிகளையும், மற்ற நல்ல கனிகளையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் நாம் முன்வைக்கின்றோம்.

சத்தியத்திற்கான ஊழியங்கள் அதாவது சத்தியத்தைப் பரப்புதல், சத்தியத்தை எடுத்துக் கூறுதல், சிலரை இருளினின்று சத்தியத்தின் வெளிச்சத்திற்கும் மற்றும் அறிவிற்கும் கொண்டுவருதல், சத்தியத்தை வெளிப்படுத்துவதற்கெனப் பணத்தைச் செலவிடுதல் என்பது [R3546 : page 123] சிலசமயம் ஆவியின் கனிகள் என்றும், கொடிகள் கொடுக்கவேண்டும் என்று கர்த்தரால் எதிர்ப்பார்க்கப்படும் கனிகள் என்றும் கருதப்படுகின்றது. கனி இதுவல்ல! இவைகளைக்காட்டிலும் மேன்மையானதாகவும், உயர்ந்ததாகவும் இருப்பவைதான் கனிகள். மேலும், இந்தக் கனிகள், அப்போஸ்தலரால் ஆவியின் கனிகள் என்று விவரிக்கப்படுகின்றது. திராட்சச்செடியின் ஆவியானது, அனைத்துக் கொடிகளிலும் ஊடுருவிட வேண்டும் மற்றும் திராட்சச்செடியின் கனிகளானது, ஒவ்வொரு கொடியிலும் காணப்பட வேண்டும். இந்த ஆவியின் கனிகள், சாந்தமாகவும், பொறுமையாகவும், நற்குணமாகவும், நீடிய பொறுமையாகவும், சகோதர சிநேகமாகவும், அன்பாகவும் பட்டியலிடப்படுகின்றது. ஒருவேளை இவைகளெல்லாம் நம்மில் காணப்பட்டு, பெருகும்போது, இவைகள் நம்மை நமது கர்த்தரும், இரட்சகருமானவர் பற்றின அறிவில் வீணரும், கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார்.

இந்தக் கனிகள் அனைத்தும் ஏதோ சிலவிதத்தில் ஒன்றாகத்தான் உள்ளது. அதாவது கிறிஸ்தவனுடைய பொறுமையின் சாரம் அன்பாக இருக்கின்றது. நம்பிக்கை மற்றும் விசுவாசம் மற்றும் சந்தோஷத்தின் சாரம், நம்முடைய பிதாவுக்காகக் கொண்டிருக்கும் அன்பாகவும், நமக்கான அவருடைய வாக்குத்தத்தத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்ற அவருடைய அன்பின் மீதான நமது நம்பிக்கையாகவும் இருக்கின்றது. ஆகையால் ஆவியின் இந்த அனைத்துக் கனிகளும், கிருபைகளும், அன்பு என்னும் ஒரே வார்த்தையின் மூலம் சொல்லப்படலாம். ஒவ்வொரு கொடியும், கொடிக்கான தன்னுடைய ஸ்தானத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், பிற்பாடு மகிமையடைந்த திராட்சச்செடியின் கொடியாகவும் வேண்டுமெனில், இந்தக் கனிகள் ஒவ்வொரு கொடியினிடத்திலும் காணப்பட வேண்டும். இவைகளில்லாமல் இருந்தும், மற்ற நல்ல விஷயங்கள் நம்மில் இருப்பதினால், தெய்வீகப் பரிசோதனையில் தப்பித்துக்கொள்ளலாம் என எண்ணிக்கொண்டு, நாம் நம்மையே வஞ்சித்துக் கொள்ளாமல் இருப்போமாக. மற்றவைகள் அதாவது, நல்ல கிரியைகள், அதாவது சத்தியத்தை நாடுவது, (volumes) வேதாகம ஆராய்ச்சிப்பாடங்களின் தொகுதிகளை விநியோகித்தல் என்பவைகள், நம்முடைய இருதயத்தின் கனிகளின் விளைவாக இருப்பதற்கேற்பவே, பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றதாய் இருக்கின்றது. இதை அழுத்தமாக அப்போஸ்தலர், “எனக்கு உண்டானயாவற்றையும் நான் [R3546 : page 124] அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை” என்று கூறுகின்றார் (1 கொரிந்தியர் 13:3).

இதே கருத்துக் கர்த்தருக்கான ஊழியத்தின் விஷயத்திலும் உண்மையாகவே காணப்படுகின்றது. ஒருவேளை நாம் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு மணி நேரத்தையும் அறுவடை வேலைகளில் செலவிட்டாலும், ஒருவேளை பிரதிகள் மற்றும் புத்தகங்கள் அச்சிடப்படுவதற்கென நம்முடைய பணம் அனைத்தையும் கொடுத்துவிட்டாலும் அல்லது கர்த்தருடைய நோக்கத்திற்கடுத்த ஊழியங்களுக்காக ஏதாவது விதத்தில் நம்மையே நாம் பயன்படுத்திக்கொண்டாலும், இவைகள் நம்முடைய இருதயத்தினுடைய அன்பின் விளைவாக இல்லையெனில், இவைகளினால் நமக்குப் பிரயோஜனம் எதுவும் இராது. ஆகவே நம்முடைய இருதயத்தில், பரிசுத்த ஆவியின் வரங்களாகிய சாந்தம், நற்குணம், பொறுமை, அன்பு முதலியவைகளை நாம் வளர்க்க வேண்டும்; மற்றும் இவைகள் கர்த்தருக்குப் பிரியமாக இருக்கத்தக்கதாகவும், *அதிகமான கனிகளைக்”” கொடுக்கத்தக்கதாகவும், நாம் பெருகப் பண்ணவும் வேண்டும் என்பதே காரியமாகும். பல்வேறு வழிகளில், ஒருவேளை ஏழைகளுக்கு உதவி பண்ணுவதன் மூலமாகவும், ஒருவேளை இரத்தச் சாட்சியாக நாம் மரிக்கத்தக்கதாக, நமது சரீரங்கள் சுட்டெரிக்கப்படத்தக்கதாக, சத்தியத்தை முன் வைப்பதில் அப்படிப்பட்ட ஓர் உண்மையைக் காட்டுவதன் மூலமாகவும் சந்தேகத்திற்கிடமின்றி இந்தக் கனிகளுடைய வெளிப்படுத்தல்கள் காணப்படும். ஒருவேளை நீதியின் கொள்கைக்கான நமது உண்மையின் காரணமாகவும், கர்த்தருக்கான நமது அன்பு மற்றும் நேர்மையின் காரணமாகவும் இப்படியாக நமக்குப் பொருள் இழப்புகள் (அ) சரீரம் சுட்டெரிக்கப்படுதல் சம்பவிக்குமாயின், அப்பொழுது நாம் சந்தோஷப்பட வேண்டியதுதான்.

வாடின கொடிகள் சுட்டெரிக்கப்படுதல்

திராட்சச்செடியின் கனிகளைக் கொடுக்காமல் இருப்பவர்கள் கொடிகள் நிலையிலிருந்து வெட்டப்பட்டு, வாடிப்போய், இறுதியில் சுட்டெரிக்கப்படுமென்று சொல்லப்பட்டுள்ள காரியமானது, இரண்டாம் மரணத்தை, அதாவது அவ்வகுப்பாரின் முழுமையான அழிவைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. இது உலக வகுப்பார் அல்ல, ஏனெனில், உலகம் ஒருபோதும் கிறிஸ்துவுடன் இணைக்கப்படவில்லை. உலகம் ஒருபோதும் திராட்சச்செடியின் கொடிகளாக இருந்ததில்லை. ஆகவே உலகம் ஒருபோதும் இவ்விதமாகப் பரீட்சையின் கீழ்க் காணப்படவுமில்லை. கர்த்தருக்கு முழுமையான அர்ப்பணிப்பைப் பண்ணிக்கொண்டவர்கள், அவருடன் முழுமையான உறவிற்குள் கடந்துவந்தவர்கள், பரிசுத்த ஆவியினால் ஜெநிபிக்கப்பட்டவர்களே இங்குப் பேசப்படுகின்றார்கள். இவர்களைப் பற்றிப் பேசப்படும் வார்த்தைகள் எபிரெயர் 10:31-ஆம் வசனத்தில் அப்போஸ்தலரால் கூறப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு இணையாக உள்ளது; “”ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே.”

உலகமானது ஜீவனுள்ள தேவனுடைய கரத்தில் காணப்படவில்லை. மாறாக உலகமானது தற்காலத்தில் ஆதாமுக்குள் மரித்துப்போனதாகவும், ஆதாமிற்குரிய தீர்ப்பின் கீழ்க்காணப்படுவதாகவும் கருதப்படுகின்றது; மற்றும் உலகம் கர்த்தரால், இப்பொழுது நியாயம் தீர்க்கப்படவில்லை. சபை மாத்திரமே ஆதாமின் தண்டனை தீர்ப்பினின்று விடுதலையடைந்தவர்களாகக் கருதப்படுகின்றனர் மற்றும் நியாயத்தீர்ப்பிலும் காணப்படுகின்றது. ஆகவே சபை மாத்திரமே கிறிஸ்துவின் கரங்களிலிருந்து விழுந்து, பிதாவினுடைய கரத்திற்குள் விழுவதற்குரிய வாய்ப்பில் இருக்கின்றனர். கிறிஸ்துவிடமிருந்து அறுப்புண்டுப் போகிறவர்களுக்கு, எவ்விதமான நம்பிக்கையும் இல்லை. ஏனெனில் இப்படிப்பட்டவர்களுக்கு இரண்டாம் மரணத்தைக் காட்டிலும் வேறு எதுவும் நன்மையாக இருக்க முடியாது. இன்னுமாக நித்திய காலத்திற்குமான சித்திரவதைக் கொள்கை உண்மை இல்லை என்பதிலும் நாம் மகிழ்ச்சிக்கொள்கின்றோம். இப்படிப்பட்டவர்கள் முழுமையான அழிவிற்குள் போகும்போது, இவர்கள் தேவனால் அருளப்படும் என அறிவிக்கப்பட்ட அனைத்தையும் இழந்துவிடுகின்றவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களது இந்த இழப்பானது, நித்திய ஜீவனை அடைவோரின் கணிப்பில் பயங்கரமானதொரு இழப்பாகத் தோன்றும். இப்படியாகக் கொடிகள் வெட்டப்பட்டு, வாடிப்போய், சுட்டெரிக்கப்படுவது பற்றின இவ்வார்த்தைகளானது, விசுவாச வீட்டாரிலுள்ளவர்களை, அதாவது இயேசுவை விசுவாசித்தும், ஒருபோதும் கிறிஸ்துவின் அங்கங்களாக (அ) கொடிகளாக ஆகாதவர்களைக் (பெயர்க்கிறிஸ்தவர்களை) குறிப்பதில்லை. இவ்வார்த்தைகள் திரள்கூட்டத்தாரையும் குறிப்பதில்லை. இந்த (இரண்டம் மரணம்) வகுப்பார் பற்றி வெகு சொற்பமான வேதவாக்கியங்களே பேசுகின்றன. இந்த வகுப்பாராகும்படிக்கு எவரும் அழைக்கப்படவில்லை என்று கர்த்தர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றார். இன்னுமாக சிலரைக் குறித்து, “”அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்” (1 கொரிந்தியர் 3:15) என்று அப்போஸ்தலர் கூறுகின்றார்; மற்றும் இது தொடர்பான சிறு கருத்து, கொடிகள் நிலையிலிருந்து வெட்டப்பட்டு, வாடிப்போய், சுட்டெரிக்கப்படுதல் பற்றின ஆண்டவருடைய வார்த்தைகளிலிருந்து எடுத்துக்கொள்ளப்படலாம். அதாவது 1 கொரிந்தியர் 3:15-ஆம் வசனத்தில், அப்போஸ்தலரால் குறிப்பிடப்படும் (திரள்கூட்டம்) வகுப்பார், கொடிகள் என்ற விதத்தில் சுட்டெரிக்கப்படுவார்கள்; அவர்கள் உடன்படிக்கையின் மூலம் இணைந்து கொண்டிருந்த அங்கத்துவம் அழிந்துவிடும்; ஆனால், அந்நபர் தனிப்பட்ட விதத்தில் நித்திய காலத்திற்குமென அழிந்துவிடுவதில்லை. 1 கொரிந்தியர் 3:15-ஆம் வசனத்தில் இடம்பெறும் வகுப்பார் (திரள்கூட்டத்தினர்) அக்கினியால் இரட்சிக்கப்படுவார்கள்; ஆனால் அவர்கள் கட்டினது வெந்துபோகும் என்று அப்போஸ்தலர் தெரிவிக்கின்றார்.

திராட்சச்செடியில் அங்கத்துவத்திற்கான பலன்

இப்படியாக, தம்முடன் இணைந்திருப்பதினால் விளங்கும் பலன்கள் குறித்து, நமக்குக் கர்த்தர் சொல்லுகின்றார்:
இவர்கள் எதையும் அவரிடத்தில் கேட்கலாம் என்பதும், இவர்கள் கேட்பது இவர்களுக்கு அருளப்படும் என்பதும்தான் முதலாம் பலனாகும். ஒரே ஒரு நிபந்தனை உள்ளது. அதென்னவெனில், இப்படியாக இவர்கள் கேட்பதற்கு/விசாரிப்பதற்கு ஆயத்தப்படுகிறதற்கு முன்னதாக, கர்த்தருடைய சித்தம் என்னவென்பதையும், அவருடைய சித்தத்திற்கேற்ப தாங்கள் கேட்க வேண்டியது என்னவென்பதையும் தாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளும்படியாக, கர்த்தருடைய வார்த்தைகளுக்குத் தாங்கள் கவனம் செலுத்தத்தக்கதாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவுக்குள் நிலைத்திருப்பவர்களுக்குச் சொந்த சித்தம் என்ற ஒன்று இருக்கக்கூடாது; மற்றும் தங்களுடைய தலையின் சித்தத்தையே, தங்களது சித்தமாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும் இவர்களுடைய (இயேசு) தலை, பிதாவின் சித்தமே, தமது சித்தமாக இருக்கின்றது என ஏற்கெனவே அறிவித்துள்ளார். நாம் பிதாவின் சித்தத்தை நம்முடைய இருதயங்களில் கொண்டிருக்க வேண்டும் என்பதும், பிதாவின் வாக்குத்தத்தங்களை நம்முடைய இருதயங்களில் கொண்டிருக்க வேண்டும் என்பதும்தான் நிபந்தனைகள் (அ) வரையறைகளாகும். இவைகளுக்கேற்ப நம்முடைய விண்ணப்பங்கள் காணப்படும்போது, அவைகளையெல்லாம் அருளிடுவதற்கு கர்த்தர் பிரியமாய் இருப்பார்.

இரண்டாவது பலன் என்னவெனில், நம்முடைய கனி பெருகுகின்றதற்கு ஏற்ப, பிதாவும் அதிகமாய் மகிமைப்படுத்தப்படுவார். பிதாவின் சித்தத்தை அறிந்துக் கொள்வதற்கும், அதன்படிச் செய்வதற்கும், அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவதன் மூலம், நமது ஜீவியங்கள் வாயிலாகப் பிதாவை மகிமைப்படுத்துவதற்கும், கனப்படுத்துவதற்கும் வழக்கமாகவே நாடுவதாகிய நிபந்தனைகளின் அடிப்படையில்தான் நம்முடைய சீஷத்துவம் தொடர முடியும். மேற்கூறியுள்ள நிபந்தனைகளில் குறைவுபடுவது என்பது நம்முடைய சீஷத்துவத்தைப் பறிகொடுப்பதாகிவிடும். நம்மிடமிருந்து அது உடனடியாகப் பறிமுதல் பண்ணப்படுவதில்லை. அதாவது ஏதோ நம்மைத் தள்ளிவிடத்தக்கதாகக் கர்த்தர் உடனடியாகச் செயல்படுவார் என்றில்லை. மாறாக நாம் கிருபையில் வளர்வதும், நாம் அறிவில் வளர்வதும் தேவனுடனான இசைவில் வளர்வதும், ஆவியின் கனிகளில் வளர்வதும், நம்முடைய உடன்படிக்கை உறவின் ஒரு பாகமாக இருக்கின்றதினால், ஒருவேளை இந்த ஒப்பந்தத்திலிருந்து நாம் பின்வாங்குவோமானால், சீஷர்களாக, அங்கங்களாக நமது உறவை, நாம் தக்கவைத்துக்கொள்பவர்களாக கருதப்படுவதில்லை.

திராட்சச்செடியுடனான இந்த அங்கத்துவம் மற்றும் கொடிகளாக நம்முடைய தொடர்சியான வளர்ச்சியின் பலனாகிய மூன்றாவது பலன், ஒன்பதாம் வசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது திராட்சச்செடியாகிய கர்த்தர் இயேசுவைப் பிதா அன்புகூருவது போன்று, நம்முடைய மீட்பரும் அவருடைய கொடிகள் (அ) அங்கங்களாகிய நம்மை அன்புகூருகின்றார். பிதா நம்முடைய ஆண்டவர் மீது கொண்டிருந்த அதே அன்பை, நமது ஆண்டவர் நம் மீதும் கொண்டிருக்கின்றார் என்பது எத்துணை ஆச்சரியமான கருத்தாய் உள்ளது! இந்தக் கருத்தை நமது விசுவாசத்தினால் எப்பொழுதும் பற்றிக்கொண்டிருக்க முடியுமானால், அதுவும் பற்றிக்கொண்டிருப்பதைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமானால், உண்மையில் நாம் பயப்படுவதற்கோ (அ) ஆசைப்படுவதற்கோ எதுவும் இராது. அதாவது நமக்கு வருடம் முழுவதும் கோடை காலமே. அடுத்தக் கருத்து என்னவெனில், கர்த்தருடைய தயவை/அன்பை அடையும் இந்த உயர்வான நிலையை எட்டிய பிற்பாடு, ஒருவேளை நாம் அவருடைய சீஷர்களாகவே இருந்து, அவர் நமக்குச் செய்துள்ளவைகளை உண்மையாய் உணர்ந்துக்கொள்வோமானால், அவருடைய அன்பில் நிலைத்திருக்க நாம் வாஞ்சிக்கிறவர்களாய் இருப்போம் என்பதேயாகும். அடுத்ததாக, இந்த அன்பில் நாம் நிலைத்ததிருப்பதற்கான நிபந்தனைகளை, அதாவது நாம் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வது பற்றி வருகின்றது.

இது நியாயமற்ற கூற்றல்ல/கருத்தல்ல என்று நமக்குக் காண்பிக்கும் பொருட்டு, இதே நிபந்தனைகளின் பேரில்தான், தம்மையும் பிதா கையாண்டார் என்று தெரிவிக்கும் விதத்தில், “”நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல”” (யோவான் 15:10) என்ற வார்த்தைகளைக் கூறினார். நாம் கர்த்தருடைய அன்பில் நிலைத்திருந்து, அதேசமயம் அவருடைய கட்டளைகளுக்கு அஜாக்கிரதையுடன் இருக்கலாம் என்று நாம் எதிர்ப்பார்க்கக்கூடாது. பிதாவுக்கு அவர் காண்பித்தக் கீழ்ப்படிதலானது, அவர் பிதாவின் மீது கொண்டிருந்த அன்பின் அளவாய் இருந்தது போன்று, கர்த்தருக்கு நாம் கீழ்ப்படிவது என்பது, நாம் அவருக்கு உண்மையாய் இருப்பதற்குரிய அளவாய் இருக்கும். இதே கருத்தும், இன்னும் கொஞ்சம் சேர்த்து, அப்போஸ்தலர், “”நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம் அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல”” (1 யோவான் 5:3) என்று [R3546 : page 125] கூறுகின்றார். நாம் கற்பனைகளைக் கைக்கொள்வது மாத்திரம் போதாது. இன்னுமாக, நாம் அன்புடனும் உண்மையுடனும், மனப்பூர்வத்துடனும் கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும்; மற்றும் கற்பனைகளைப் பாரமானவைகளாக எண்ணாமல், மாறாக கர்த்தருடைய நீதியான அனைத்து ஒழுங்குகள் மற்றும் ஏற்பாடுகளுக்கு ஏற்ப செயல்படுவதிலும் மகிழ்ச்சியுடன் காணப்பட வேண்டும். நம்முடைய கர்த்தராகிய இயேசுவினால் கொடுக்கப்பட்ட நீதியான கொள்கைகள் அனைத்துடன், அதாவது அவருடைய கற்பனைகள் அனைத்துடன், முழு இருதயப்பூர்வமான இசைவுடன் இருக்கும் இந்த ஆவியை நாம் அனைவரும் அதிகமதிகமாக நாடுவோமாக.

நமது கர்த்தருடைய கற்பனைகள் என்பது, மோசேயினுடைய பத்துக் கற்பனைகள் அல்ல. ஆனால் கர்த்தருடைய கற்பனையானது ஏறக்குறைய எதிர்ப்பார்ப்பின் கண்ணோட்டத்தில் தான் காணப்படுகின்றது. (கர்த்தருடைய கற்பனைகள்) இக்கற்பனைகள் என்பது நமது மாம்சத்திடம் எதிர்ப்பார்க்கப்படும் கண்ணோட்டத்தில் அல்லாமல், நம்முடைய இருதயத்திடம் எதிர்ப்பார்க்கப் படுபவைகளாக இருக்கின்றது. சுருக்கமாக அவருடைய கற்பனை என்பது, நம்முடைய முழு இருதயத்தோடும், மனதோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும் பிதாவை அன்புகூருவதும், நாம் நம்மை அன்புகூருவது போன்று நம்முடைய அயலானை அன்புகூருவதுமாகும் என்று நம்மிடம் கூறுகின்றார். இது நம்முடைய பூரணமற்ற மாம்சத்திற்கு முடியாத காரியமாக இருப்பினும், நம்முடைய புதுப்பிக்கப்பட்ட இருதயங்களுக்கு முடிகிற காரியமாகவே இருக்கின்றது. இந்தத் தேவனுடைய கற்பனைக்கு நம்முடைய இருதயங்கள் ஊழியம் செய்வதும், நம்முடைய மாம்சத்தைக் கொண்டு முடிந்தமட்டும் செய்வதும்தான், கர்த்தர் எதிர்ப்பார்ப்பதாகும்; மற்றும் உயிர்த்தெழுதலில் நாம் முற்றும் முழுமையாய், திருப்தியாய்க் கர்த்தருக்கு ஊழியம் செய்யத்தக்கதான புதிய சரீரங்கள் நமக்கும் இருக்கும் என்ற வாக்குத்தத்தம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும்,
உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும்

ஏன் இந்தச் சிறியதும், அதேசமயம் மிகவும் ஆழமான பாடத்தைக் கொடுத்தார் என்பதைக் கூறி நிறைவு செய்யும் வண்ணமாக, “”என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன். நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே [R3547 : page 125] என்னுடைய கற்பனையாயிருக்கிறது” என்று பேசினார் (யோவான் 15:11,12). ஜீவனுக்கேதுவான அற்புதமான இந்த வார்த்தைகள் பல நூற்றாண்டுகள் கடந்துவந்து, இடுக்கமான வழியில் காணப்படும் கர்த்தருடைய பின்னடியார்கள் அநேகரை உற்சாகமும், தைரியமூட்டியும் உள்ளது.

தூய்மையும், மாசற்றதுமான இந்த மார்க்கத்தை அநேகர் எதிர்த்துப் பேசுகின்றனர். சிலர் இது சந்தோஷமற்றது என்றும், வருத்தத்தைக் கொடுக்கின்றது என்றும், இருதயம் மற்றும் மூளையை விலங்கிடுகின்றது என்றும், இன்பம் எனும் ஒவ்வொரு கோயிலிருந்தும் மனுஷனைச் சாட்டையினால் அடித்துத் துரத்திவிடுகின்றது என்றும், சந்தோஷத்திற்குரிய ஒவ்வொரு களத்திற்கு முன்பாக, “”இங்கு மீறி நுழையாதே” எனும் (notice post) பலகைத் தூணை நாட்டியுள்ளது என்றும், குற்றம்/குறை கூறுகின்றனர். இது தவறு என்பது நமது பதிலாக இருக்கின்றது. அதாவது இப்படியெல்லாம் கூறுகின்றவர்கள், வசனத்தில் உள்ளவைகளை அறியாதவர்கள், புரியாதவர்கள் ஆவர். கர்த்தருக்கு உண்மையாய் உடன்படிக்கைப் பண்ணியுள்ளவர்களும், அவரை உண்மையாய் ஏற்றுக்கொண்டவர்களும், அவருடைய பாதத்தில் தங்களுடைய ஜீவியங்களை உண்மையில் ஒப்புக்கொடுத்துவிட்டு, உண்மையில் அவருடைய பின்னடியார்களாக ஆகியுள்ளவர்களும், அவர் வாக்களித்துள்ளபடியே அவருடைய சந்தோஷத்தினால் நிரப்பப்பட்டுள்ளனர்; மற்றும் நாளுக்குநாள், வருடம் செல்லச்செல்ல, அச்சந்தோஷம் பெருகிக்கொண்டிருந்து கிட்டத்தட்ட முழுமையடையப் போகின்றது. நிறைவானது வந்து குறைவானது ஒழியும் போதும், உயிர்த்தெழுதலின் நிலைமையில் நாம், “”உங்களுடைய கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசியுங்கள்”” என்ற அவரது வரவேற்பை கேட்கும் போதும்தான், அது (சந்தோஷம்) முழுமையடையும்.

இப்பொழுது விசுவாசத்தின் மூலமாகவும், எதிர்ப்பார்ப்பின் மூலமாகவும், இருதயத்தின் இளைப்பாறுதல் மூலமாகவும், அந்தச் சந்தோஷங்களுக்குள்ளாக நாம் பிரவேசிக்கின்றோம். ஆனால் பிற்பாடே நாம் நிஜமாகவே அந்தச் சந்தோஷங்களுக்குள் பிரவேசிப்போம். இதற்கிடையில் உலகம், அதனை கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. உலகம் கர்த்தருடைய சந்தோஷங்களை உணர்ந்துக்கொள்ளவில்லை. உலகம் சுயநலத்தினாலும், பொறாமையினாலும், இலட்சியங்களினாலும், வாக்குவாதத்தினாலும் நிறைந்துள்ளது. உலகம் அவரை அறியாததுபோல, நம்மையும் அறிந்துக்கொள்ளவில்லை. நமது கர்த்தர் தம்முடைய ஜீவியத்தையும் பலிச்செலுத்தி, பிதாவின் சித்தத்தை நிறைவேற்றியதில் அனுபவித்த சந்தோஷங்களை உலகம் அறியாததுபோல, ஆண்டவருடைய ஊழியத்தில் இருக்கும் நம்முடைய சந்தோஷங்களையும் உலகம் அறியாது.

நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல

நாம் ஒருவரையொருவர் அன்பு செய்ய வேண்டுமென்று, கர்த்தர் கட்டளையிட்டது நம்மை வியப்படையச் செய்யவில்லை; ஆனால் “”நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல”” என்ற வார்த்தைகளில் அடங்கியிருக்கும் கருத்துதான் நம்மைத் திகைக்கவைக்கின்றது. கர்த்தர் நம் ஒவ்வொருவர் மீதும் கொண்டிருந்த அன்பைப்போன்று, எவ்வாறு நாம் ஒருவரையொருவர் அன்பு செய்ய முடியும்? என்பதுதான் நமது முதல் கேள்வி. ஆரம்பத்தில் இது சாத்தியம் அற்றதுதான். ஆனால் நாம் அதிகமதிகமாகக் கர்த்தருடைய ஆவியினால் நிரப்பப்படும் போது, அவருடையவர்களாய் இருக்கும் அனைவரிடத்திலுமான பூரணமான அன்பின் இந்தக் கொள்கைக்கு/அளவுக்கோலுக்குக்கிட்ட நெருங்குவோம். மற்றவருக்குப் பாதகம் செய்வதற்கு மறுக்கக்கூடிய அன்பாய் மாத்திரம் இராமல், சகோதரனுக்கு நன்மை செய்வதில் நம் சொந்த நேரத்தையும், சௌகரியத்தையும் தியாகம் பண்ணி நன்மை செய்வதில் சந்தோஷமடையக்கூடிய அன்பாகிய, பூரணமான அன்பின் இந்த அளவுக்கோலுக்குக்கிட்ட நெருங்கிடுவோம். இப்படியாகவே, இயேசுவும் நம் அனைவரையும் அன்புகூர்ந்து, தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நம்மை மீட்டுக்கொண்டார். மேலும், நாம் எந்தளவுக்கு அவரைப்பற்றின கிருபையிலும், அறிவிலும், அன்பிலும் வளர்கின்றோமோ, அந்தளவுக்கு நாம் கிறிஸ்துவைப்போல இருப்போம்; மற்றும் கிறிஸ்துவின் அன்பை ஒத்த அன்பைப் பெற்றிருப்போம். இந்த அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாய் இருக்கின்றது. மேலும் சகோதர சகோதரிகளுக்காக இப்படிப்பட்ட அன்பைக் கொண்டிருப்பவர்கள், சந்தேகத்திற்கிடமின்றித் தவிக்கும் சர்வ சிருஷ்டியின் மீதும், அனுதாப அன்பை முழுமையாய்க் கொண்டிருப்பார்கள்; மற்றும் அவர்கள் சார்பில் இப்பொழுது உலகத்திற்குச் செய்ய முடிகின்ற சொற்பமானவைகளைச் செய்வதில் மகிழ்ச்சிக்கொள்வார்கள்; மற்றும் கர்த்தருடைய ஏற்ற வேளையில் ஆதாமின் சந்ததியிலுள்ள ஒவ்வொருவருக்கும், மாபெரும் அற்புதமான ஆசீர்வாதங்களைக் வைத்திருக்கின்றார் என்பதில் இரட்டிப்பான மகிழ்ச்சியும் கொள்வார்கள்.

இவைகளையெல்லாம் நாம் அறிந்திருப்பதும், கர்த்தருடைய திட்டங்களைப் புரிந்துக்கொள்வதும், அவருடைய வார்த்தைகளில் அடங்கியிருக்கும் கொள்கைகளைப் புரிந்துக்கொள்வதும், மிக முக்கியமானதுதான். ஆயினும் நமக்குச் சகல அறிவு இருந்தாலும், அதனை பயன்படுத்தாதது வரையிலும், நமக்கு நன்மை கிடைக்காது. எப்படி அடைய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலமாக மாத்திரம், நாம் கர்த்தருடைய கிருபையான ஏற்பாடுகளிலிருந்து நன்மை பெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணாதிருப்போமாக. மாறாக தேவையான படிகளை எடுத்து வைப்போமாக… அதாவது நாம் முழுமையாய் அவருடையவர்களாக இருக்கத்தக்கதாகவும், நாம் அவரை நெருங்கி வாழத்தக்கதாகவும், நாம் கனிக்கொடுக்கின்றவர்களாக இருக்கத்தக்கதாகவும், அவருடைய அன்பிலும், பிதாவினுடைய அன்பிலும், அவர் இணைத்துள்ளவர்கள் மீதான அன்பிலும் நாம் நிலைத்திருக்கத்தக்கதாகவும் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.